காஸா(Gaza): நீதியில்லை, அமைதியில்லை!
நீதியை அறிந்துக்கொள், அமைதியை அறிந்துக்கொள்!
Gaza: No Justice - No peace!
Know Justice – Know Peace!
ஆசிரியர்: ஆஸ்கார்(Oskar)
அறிமுகம்:
ஊடகத் துறைகளாகிய வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையம் போன்றவைகளின் வருகை மற்றும் முன்னேற்றத்தினால், உலகில் ஒரு நிகழ்ச்சி எங்கு நடந்தாலும் அதைப் பற்றிய செய்திகள், உடனே மனிதனின் காதுகளுக்கு எட்டிவிடுகின்றன. அநீதியும் அதனால் விளையும் பயங்கரமான காயங்களும் நம்முடைய நீதியான சிந்தனைகளை எரித்துவிடுகின்றன. தனிமனிதனோ, குழுக்களோ, அரசாங்கங்களோ அல்லது நாடுகளோ "தவறு" என்று தெரிந்தும் தவறுகள் செய்யும் போது அனேகர் அதிகமாக துக்கப்படுகிறார்கள். மனிதர்கள் மாத்திரம் அல்ல, உலகில் இருக்கும் எல்லா பெரிய மதங்களும் "அநீதி நடக்கும் போது அதற்கு தண்டனை வழங்கப்படவேண்டும்" என்பதை ஏற்றுக்கொள்கின்றன. இருந்தபோதிலும், மனிதர்கள் அமைதியை நிலை நாட்ட இப்படிப்பட்ட "அநீதி செய்பவர்களுக்கு தண்டனை கொடுத்த பின்னரும்" அமைதி தொடர்ந்து நிலைத்திருந்ததா என்று கேட்டால், "இல்லை" என்று சரித்திரம் நமக்கு பதில் சொல்கிறது. இந்த கட்டுரையில், இறைவன் இப்படிப்பட்ட அநீதி நடந்த போது "எப்படி அதை சமாளித்தார்?" மற்றும் "எந்த விதமான அமைதியை அவர் கொடுத்தார்?" என்பதை பைபிளின் அடிப்படையில் காணப்போகிறோம்.
நீதி மற்றும் அமைதியின் இறைவன்
God of Justice and Peace
சமாதானத்தின் தேவன் நீதியுள்ளவர்(பிலிப்பியர் 4:9; உபாகமம் 32:4). உண்மையில் அவரை அறிந்தவர்களின் வாழ்க்கை நன்மையான காரியங்களாலும், சமாதான காரியங்களாலும் அடையாளமிடப்பட்டு இருக்கும். ஆதாமும் ஏவாளும் தங்களை உருவாக்கிய தேவனுக்கு கீழ்படியாமல் போன அந்த காலத்திலிருந்து இந்த இணைபிரியாத "நீதியும் சமாதானமும்" உலகத்தில் அதிகமாக மறைந்துக் கொண்டே வருகிறது. எப்படி ஒரு பனிப்பந்து மலை உச்சியிலிருந்து உருண்டு கீழே வர வர பெரியதாக மாறிவிடுகிறதோ அது போல, அநீதியானது தாங்கமுடியாத அளவிற்கு பெருகிவிட்டது. இந்த அநீதியை தடுத்து நிறுத்துவதற்கும் அல்லது அதிக தீங்கு இன்னும் நடைபெறாமல் அநீதிக்கு தடை விதிப்பதற்கும், அதே போல நீதியை நிலை நாட்டுவதற்கும் யாரால் முடியும்? போர் அதிக சூடாக நடந்துக்கொண்டு இருக்கும் போது, யார் செய்தது தவறு, யார் செய்தது சரி என்று பிரித்துக்காட்ட யாரால் முடியும்? ஒருவர் பக்கம் சாய்ந்து அவர் சொல்லும் விவரங்களை நாம் கேட்போமானால், எதிராளியின் பார்வையில் இது அநியாயம் என்று அவருக்கு படுவதை நாம் காண தவறிவிடுவோம்.
தற்போது காஸாவில் நிலவும் சூழ்நிலையை இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக நாம் கொள்ளலாம். இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதலினால் பாதிக்கப்படும் சின்னங்சிறு குழந்தைகள் அனுபவிக்கும் வேதனையை ஊடகங்கள் விவரிக்கின்றன, மற்றும் பாலஸ்தீனா மீது இரக்கம் கொள்ளும் மக்கள் இந்த செய்திகளைக் கண்டு, கோபங்கொள்கின்றனர். அதே நேரத்தில், யூத நாட்டின் பக்கம் உள்ள மக்கள், இரத்தம் சொட்டும் எரிந்த முகங்களோடு காணப்படும் குழந்தைகளைக் கண்டு மனம் வருந்தினாலும், தங்கள் மீது தாக்குதல்(collateral damage) நடத்துபவர்களை எப்படி சமாளிக்க முடியும்? என்று கேட்டு, இஸ்ரேலின் செயலை நியாயப்படுத்துகிறார்கள். இஸ்ரேல் என்ற நாட்டை அழிக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட ஹமாஸ்(Hamas) என்ற இயக்கம் தொடர்ந்து ஏவுகனைகளோடு தாக்கும் போது, அதனிடமிருந்து தப்பிப்பதற்காக நடத்தப்படும் "ஒரு தற்காப்பு போர் இல்லையா இது?". அதே நேரத்தில் தங்கள் நாட்டிலேயே தங்களை சிறைக் கைதிகளாக வைத்திருக்கும் நாட்டிற்கு எதிராக போர் புரியும் "சுதந்திர போர் வீரர்கள்" என ஹமாஸ் இயக்கத்தார்கள் கருதுகிறார்கள். சரி, உண்மையில் அந்த இடம் யாருடையது? குர்ஆனும் பைபிளும் அந்த இடத்தை யூதர்களுக்கு இறைவன் தான் கொடுத்தார் என்றுச் சொல்லவில்லையா(குர்ஆன் சூரா அல்-அரப் 7:133-138, யோசுவா 1:1-5)? இந்த சிக்கலான சூழ்நிலையில் இன்னொரு முக்கியமான விவரத்தைச் சொல்கிறேன், ஹமாஸ் இயக்கத்தை ஸ்தாபித்த ஷேக் ஹசேன் யூசுப்(Sheikh Hassan Yousef) என்பவரின் மகனான முசப் ஹசேன்(Mousab Hassan) என்பவர் சமீப காலத்தில் பைபிளின் இயேசுக் கிறிஸ்துவை பின்பற்றப் போவதாக தன் முடிவை தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் இயக்கம் ஆட்சி செய்துக்கொண்டு இருக்கும் போது, ஹமாஸ் தன் சொந்த மக்களை கொடுமைப்படுத்துவதையும், கொல்வதையும் கண்டு முசப் அதிகமாக பயந்துள்ளார். இவர்கள் எப்படிப்பட்ட சுதந்திரத்தை பிரகடனப்படுத்துகிறார்கள்? தன்னை பின்பற்றுகிறவர்களிடம் "உன் சத்துருக்களை நேசியுங்கள்" என்றுச் சொன்ன இயேசுவின் வார்த்தைகள், காஸாவில் இளைஞர் இயக்கத்திற்கு தலைவராக இருந்த முசப்பை, இந்த வித்தியாசமான மற்றும் வினோதமான போதனையை செய்த இயேசுவைப் பற்றி இன்னும் அதிகம் அறிய கட்டாயப்படுத்தியது(1, 2).
உன் எதிரியை நேசி! இதில் நீதி எங்கேயுள்ளது?
Love your enemy! Where is the justice in that?
நமக்கு எதிராக தீமை செய்பவர்களை மன்னித்து, அவர்கள் மீது அன்பு கூறுங்கள் என்று இயேசு எப்படி தன்னை பின்பற்றுகிறவர்களுக்கு கட்டளை கொடுக்கமுடிந்தது? இப்படி நமக்கு தீமை புரிந்தவர்களை மன்னித்தால், இது முழுவதும் அநீதி இல்லையா? ஆனால், உண்மையில் தௌராத்தில் தேவன் சொல்கிறார்:
பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது; ஏற்றகாலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடும்; அவர்களுடைய ஆபத்துநாள் சமீபமாயிருக்கிறது; அவர்களுக்கு நேரிடும் காரியங்கள் தீவிரித்து வரும் (உபாகமம் 32:35).
'Punishment is mine and reward, at the time of the slipping of their feet: for the day of their downfall is near, sudden will be their fate.'(Deuteronomy 32:35)
நீதியை செய்வதற்காக தண்டனை கொடுக்கப்பட வேண்டும். இதை தேவன் தாமே தன் வழியிலே இந்த தண்டனையை நிறைவேற்றுவார். உண்மையில் சொல்லவேண்டுமானால், தேவன் ஏற்கனவே, அதிகமாகவே தண்டனை அளித்துவிட்டார், எனவே நாம் இப்போது நம் எதிரிகளை நேசிக்கவேண்டும், இனியும் நேசிக்கவேண்டும், தீமை புரிந்தவர்களுக்கு தண்டனை தருவது மஸீஹாவாகிய இயேசு பார்த்துக் கொள்வார்.
மஸீஹா(மேசியா) என்பதின் அர்த்தம்
Meaning of Messiah
குர்ஆன் கூட இயேசுவை "அல்-மஸீஹா"(சூரா அல்-இம்ரான் 3:45) என்று அழைக்கிறது. ஆனால், குர்ஆன் இந்த வார்த்தையின் பொருள் என்ன என்று விளக்குவதில்லை. இது மட்டுமல்ல, இந்த குறிப்பிட்ட பட்டம்/பெயர் ஏன் இயேசுவிற்கு மட்டும் தனிப்பட்ட விதத்தில் கொடுக்கப்பட்டது என்று கூட குர்ஆன் விவரிப்பதில்லை. குர்ஆனின் இந்த தெளிவற்ற விவரத்தின் மத்தியில், "மஸீஹா" என்னும் இயேசுக் கிறிஸ்து பைபிள் வெளிப்பாட்டின் முழுமுதல் நோக்கத்தை நிறைவேற்றியிருக்கிறார். மேசியா/மஸீஹா என்ற எபிரேய வார்த்தையின் அர்த்தம், "அபிஷேகம் செய்யப்பட்டவர்", இதனை ஆங்கிலத்தில் "கிறிஸ்து" என்று மொழி பெயர்த்து இருக்கிறார்கள். இந்த வார்த்தை பல விதங்களில் பயன்படுத்தப்பட்டது, கடைசியாக வருகிறவரான மேசியாவின் செயல்களை குறிப்பிட இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டது. அவர் தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டவர், அவர் தன் மக்களை இரட்சிப்பார், அவர் தேவனின் எதிரிகளை நியாயந்தீர்த்து தண்டிப்பார் மற்றும் அவர் இந்த முழு உலகத்தின் எல்லா நாடுகளையும் நீதியோடும் நியாயத்தோடும் நித்திய நித்தியமாக ஆட்சி புரிவார். அவர் தேவனாக உள்ளவர், அவர் பரலோகத்தில் இருக்கிறார், மனிதனாக வந்து நாம் பெறவேண்டிய தண்டனையை அவர் தன் மேல் ஏற்றுக்கொண்டார் என்று பைபிளில் விவரிக்கப்படுகிறார்(ஏசாயா 9:6-7, 53:1-12, தானியேல் 7:13-14).
நடைமுறைப் படுத்துதல்
Practical implications
Practical implications
ஒரு நல்ல செய்தி என்னவென்றால், "சமாதானம்-Peace" என்பது காஸாவிலும் இன்னும் சண்டைகள் சச்சரவுகள் உள்ள இடங்களிலும் சாத்தியம் தான், ஏனென்றால், நீதியை தேவனே நிலை நாட்டியிருக்கிறார். ஆனால், தேவனின் இந்த "சமாதான திட்டத்தை" நிராகரித்தால் என்ன நடக்கும்? இஞ்ஜில் என்றுச் சொல்லும் நற்செய்தி சொல்கிறது:
"கூடுமானால் உங்களாலான மட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்" (ரோமர் 12:18)'As far as it is possible for you be at peace with all men.'(Romans 12:18)
தேவனுடைய இந்த விலை மதிக்க முடியாத பரிசை எல்லாருக்கும் தருகிறார். ஆனால், இந்த பரிசை யார் யாரெல்லாம் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களே இப்பரிசு மூலம் கிடைக்கும் நன்மைகளை அனுபவிக்க முடியும். தேவனுடைய உதவியுடன் மன்னிப்பையும் அன்பையும் பெற்று யார் யாரெல்லாம் அவைகளை அனுபவிக்கிறார்களோ, அவர்களால் மட்டுமே மன்னிப்பையும் அன்பையும் மற்றவர்களுக்கு தரமுடியும். இப்படிப்பட்டவன் தன் நாட்டின் அரசாங்க சட்டங்களை மக்கள் பின் பற்றும்படி செய்கிறான், சில நேரங்களில் கட்டாயப்படுத்தியாவது செய்யச் செய்கிறான்(ரோமர் 13:1-8). ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பதிலாக அதிகாரிகள் செயல்படுகிறார்கள். ஒரு வேளை அரசாங்க அதிகாரிகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடவில்லையானால், சட்டத்தை நிலை நிறுத்தவில்லையானால், நியாயந்தீர்ப்பு நாளிலே தேவன் அவர்களை நித்திய நரகத்திலே தள்ளி தண்டிப்பார். இதே தண்டனை தேவனது நீதியான வழியை மறுக்கும் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும்.
தேவனுடைய நீதியையும் அவரது சமாதானத்தையும் ஏற்றுக்கொண்டு, அதை சந்தோஷமாக அனுபவிக்கும் மக்கள், இந்த கடினமான காலங்களில் என்ன செய்யவேண்டும்? நாம் முழுமையான மனநிறைவோடு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பது நம்மை சுற்றியுள்ள சூழ்நிலைகளின் மீது ஆதாரப்பட்டு இருக்கவில்லை, அதற்கு பதிலாக நம்முடைய இரட்சகரோடு நாம் கொண்டுள்ள நல்லுறவின் மீது ஆதாரப்பட்டு இருக்கிறது. தனி மனிதனோ, குழுக்களோ அல்லது நாடுகளோ தங்கள் சுயநல வெறுப்பிலிருந்து விடுதலை அடைய விருப்பமில்லாமல் மறுப்பவர்களிடம் நாம் நல்ல சமாதான மற்றும் வெறுப்பில்லா வழிமுறைகளை பயன்படுத்தி சந்திக்கவேண்டும் (உதாரணம்: மார்டின் லூத்தர் கிங்). இது மிகவும் வலியுண்டாக்கும் நீண்ட வழிமுறையாக இருந்தாலும், இதற்கு அதிக காலமானாலும் இயேசுக் கிறிஸ்து அவர்களுக்காக உண்டாக்கியுள்ள பரலோகத்தில் அவர்களை கொண்டுச் செல்லும் வழி இதுவே. இயேசு அவர்களுக்காக உண்டாக்கிய இடம் தான், அவர்களின் நித்திய தாய் நாடு ஆகும். தேவனின் நீதியை அறியும் உங்கள் மீது தேவனின் சாந்தி உண்டாகட்டும்.
கேள்விகள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன, இக்கட்டுரையின் ஆசிரியரோடு தொடர்பு கொள்ள இங்கு சொடுக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக