ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

 1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
 2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
 3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
 4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
 5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
 6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
 7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
 8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
 9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
 10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
 11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
 12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
 13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
 14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
 15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
 16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
 17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
 18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
 19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
 20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
 21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
 22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
 23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
 29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
 30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
 31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
 32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
 33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
 34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
 35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
 36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
 37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
 38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
 39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
 40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
 41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
 42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
 43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
 44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
 45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
 46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
 47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
 48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
 49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
 50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
 51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
 53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
 54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
 55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
 56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
 57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

 1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
 2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
 3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
 4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
 5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
 6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
 7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
 8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
 9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
 10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
 11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
 12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
 13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
 14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
 15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
 16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
 17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
 18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
 19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
 20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
 21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
 22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
 23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
 24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
 25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
 26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
 27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
 28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
 29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
 30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
 31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
 32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
 33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
 34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
 35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
 36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
 37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
 38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
 39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
 40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
 41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
 43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
 44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
 45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
 46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
 47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
 48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
 49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

சனி, 8 பிப்ரவரி, 2014

பாகம் 7 - 101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

பாகம் 7

பாகம் 1பாகம் 2பாகம் 3பாகம் 4பாகம் 5பாகம் 6ஐ படிக்க சொடுக்கவும்..  இந்த ஏழாம் பாகத்தில் 61வது காரணத்திலிருந்து 70வது காரணம் வரை காண்போம்.

61. மூன்றாம் கட்டளை - உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக

முஹம்மது மோசேயின் இந்த மூன்றாம் கட்டளையையும் முறித்துள்ளார். அதாவது, இறைவனின் பெயரில் சத்தியம் செய்துவிட்டு, அந்த சத்தியத்தை நிறைவேற்றாமல் முறித்துவிடுவது இந்த மூன்றாம் கட்டளையை மீறுவதாகும்.  சத்தியம் செய்பவர் அல்லாஹ்வின் பெயரில் மட்டுமே சத்தியம் செய்யவேண்டுமென்று முஹம்மது கூறியுள்ளார். ஒருமுறை ஒரு விஷயத்திற்காக முஹம்மது தம் மனைவியிடம் சத்தியம் செய்தார். ஆனால், அதனை மீறும்படி மறுபடியும் குர்-ஆன் வசனங்களை சொந்தமாக உருவாக்கி, தன் சத்தியத்தை முறித்தார் (குர்-ஆன் 66:1-2). முஹம்மது தன் சத்தியத்தை முறிக்க அவருக்கு ஒரு வழி தேவைப்பட்டது, அதனை அவர் குர்-ஆன் வசனங்களின் மூலமாக நிறைவேற்றினார். இங்கு ஒரு விஷயத்தை குறிப்பிடவேண்டும், அதாவது அல்லாஹ்வின் பெயரில் முஹம்மது சத்தியம் செய்தார், அதனை முறித்தார், இது எப்படி யெகோவா தேவனின் மீது சத்தியம் செய்வதாக கருதப்படும்? அல்லாஹ்வும் யெகோவா தேவனும் ஒருவரே என்று முஹம்மது சொன்னார். எனவே அவரைப் பொருத்தவரையில் அவர் யெகோவா தேவனின் பெயரில் தான் சத்தியம் செய்துள்ளார். ஆனால் கிறிஸ்தவர்கள் அல்லாஹ்வும் யெகோவா தேவனும் வெவ்வெறானவர்கள் என்று நம்புகிறார்கள். சத்தியம் செய்து முறித்த முஹம்மது ஒரு உண்மையான தீர்க்கதரிசியில்லை.[61]

62. நான்காவது கட்டளை - ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக

தோராவை நான் நம்புகிறேன் என்றுச் சொல்லும் முஹம்மது, அந்த தோராவில் தரப்பட்ட சட்டங்களை பின்பற்றவில்லை. 10 கட்டளைகளில் நான்காவது கட்டளை "சனிக்கிழமையை பரிசுத்தமாக அனுசரிக்கவேண்டும்" என்பதாகும். ஆனால், முஹம்மதுவோ சனிக்கிழமைக்கு பதிலாக வெள்ளிக்கிழமையை மக்கள் கூடும் நாளாக கூட்டுத்தொழுகை நாளாக மாற்றினார். இவர் எப்படி பைபிளின் படி வந்த தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? மேலும் ஓய்வு நாள் முழுவதும் வேலை செய்யாமல் இருக்கவேண்டும் என்றும் மோசேயின் சட்டம் சொல்கிறது. இதனையும் முஹம்மது முறித்துள்ளார். சப்பாத் நாள் மிகவும் முக்கியம் என்றும் அதனை மீறியவர்களுக்கு தண்டனை கொடுக்கப்பட்டது என்று குர்-ஆனில் முஹம்மது கூறியுள்ளார், அதே நேரத்தில் அதனை மீறியுள்ளார். [62].

63. ஐந்தாவது கட்டளை – உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக

ஒரு கிறிஸ்தவனின் பெற்றோர்கள் அவிசுவாசிகளாக இருந்தாலும், அவர்களை அவன் நேசிக்கவேண்டும். ஆனால், முஹம்மதுவையும், அல்லாஹ்வையும் நம்பாத பெற்றோர்களை முஸ்லிம்கள் நேசிக்கமாட்டார்கள் என்று முஹம்மது குர்-ஆனில் கூறியுள்ளார். இதுமாத்திரமல்ல, ஒரு உண்மையான முஸ்லிமின் அறிகுறியே தன் நபியை பகைப்பவர்களை நேசிக்காமல் இருப்பது தான் என்று குர்-ஆனில் முஹம்மது கூறியுள்ளார். முஹம்மதுவின் இந்த செயலை பின்பற்றி ஒரு முஸ்லிம் தன் தந்தையின் மரணத்திற்கு காரணமாக இருந்திருக்கிறார்.  முஹம்மதுவின் இந்த போதனையினால், உலக முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக தங்கள் இஸ்லாமியரல்லாத பெற்றோர்களை பகைக்கிறார்கள், யெகோவா தேவனின் ஐந்தாவது கட்டளையை மீறி நடக்கிறார்கள். இப்படிப்பட்ட வெறுப்புணர்வை உண்டாகும் போதனையைச் செய்த முஹம்மதுவை கிறிஸ்தவர்கள் எப்படி ஒரு நல்ல தீர்க்கதரிசி என்று அங்கீகரித்துக் கொள்வார்கள்? இவர் ஒரு கள்ளத்தீர்க்கதரிசியே! [63]

64. ஆறாவது கட்டளை - கொலை செய்யாதிருப்பாயாக

மதினாவிற்கு இடம்பெயர்ந்த பின்னர் தன்னை விமர்சித்தவர்களை முஹம்மது கொன்றார். அபூ அஃபக் என்பவரையும், மர்வானின் மகள் அஸ்மாவையும் முஹம்மது தன் அடியார்களை அனுப்பி கொன்றார். தனிப்பட்ட முறையில் இவரது தீய செயல்களை விமர்சித்தார்கள் என்ற காரணத்தினால் இவர் அவர்களைக் கொன்றார், மட்டுமல்ல, புனிதப்போர் (ஜிஹாத்) என்ற பெயரில் உலகமனைத்திலும் பல்லாயிரகணக்கான மக்கள் அனுதினமும் மரிக்கிறார்கள். இவர்களின் ஆணிவேர் முஹம்மதுவும், அவரது போதனைகளும் தான். முக்கியமாக இஸ்லாமிய நாடுகளில் கிறிஸ்தவ சமுதாயம் அனேக கொடுமைகளை சந்தித்து வருகிறது. இந்த கொடுமைகளுக்கெல்லாம் காரணமான இவர் எப்படி ஒரு உண்மையான தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? தேவனின் ஆறாவது கட்டளையையும் மீறியவர் எப்படி யெகோவா தேவன் அனுப்பிய தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? [64]

65. ஏழாவது கட்டளை - விபசாரம் செய்யாதிருப்பாயாக

முஹம்மது விபச்சாரத்தை நியாயமான செயலாக மாற்றி முஸ்லிம்கள் திருமணம் செய்துக்கொள்ளாமலேயே அடிமைப்பெண்களிடம் உடலுறவு கொள்ளலாம் என்று சொல்லியுள்ளார். திருமணத்திற்கு வெளியே ஒரு பெண் மற்றும் ஆண் உடலுறவு கொள்வது என்பது இஸ்லாமியரல்லாதவர்களை பொருத்தமட்டில் விபச்சாரமாகும். முஸ்லிம்கள் இதனை எப்படி அழைத்துக்கொண்டாலும் இது விபச்சாரமே ஆகும். இப்படிப்பட்ட சட்டங்களை கொண்டுவந்தவர் நிச்சயமாக ஒரு தீர்க்கதரிசியாக இருக்கமுடியாது. இது ஒரு புறமிருக்க கைபர் என்ற ஊர் மீது தாக்குதல் செய்து, யூதர்களை கொன்றுவிட்டு, ஸபிய்யா என்ற பெண்ணின் கணவனையும் கொன்றுவிட்டு, அப்பெண்ணோடு விபச்சாரம் புரிந்தவர் முஹம்மது ஆவார். வேறுவகையில் சொல்லவேண்டுமென்றால், இது ஒரு கற்பழிப்பு ஆகும். ஒரு பெண்ணின் கணவரையும், பெற்றோர்களையும், இதர ஊர் மக்களையும் கொன்றுவிட்டு, அவர்களைக் கொன்ற நபரே அப்பெண்ணோடு மூன்று நாட்களுக்குப்பின் உடலுறவில் ஈடுபட்டால், அது கற்பழிப்பு தானே. உலகில் எந்த பெண்ணாவது தன் கணவனை, தந்தையைக் கொன்ற நபரோடு மூன்று நாளிலேயே கட்டிலில் மனைவியாக வாழ அனுமதிப்பாளா? முஹம்மது அப்பெண்ணை திருமணம் புரிந்து தான் உடலுறவு கொண்டார் என்றுச் சொல்வார்கள். ஆனால், அந்தப் பெண் இதனை எப்படி பார்ப்பாள், விபச்சாரமாகவும், கற்பழிப்பாகவுமே பார்ப்பாள். இந்த செயலில் ஈடுபட்டவர் எப்படி ஒரு தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்?  இவர் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி ஆவார். [65] 

66. எட்டாவது கட்டளை - களவு செய்யாதிருப்பாயாக

முஹம்மது அனேக வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டார், வியாபாரிகளிடமிருந்த பொருட்களை அபகரித்துக்கொண்டார். வழிப்பறி கொள்ளையின் போது, பல உயிர்களையும் கொன்று குவித்தார். மேலும், தன்னை எதிர்த்தவர்கள் மீது போர் தொடுத்தார், பெண்களையும், பிள்ளைகளையும் அடிமைகளாக எடுத்துக்கொண்டார், போரில் பிடிபட்ட பெண்களை முஸ்லிம்கள் கற்பழிக்க அனுமதி அளித்தார், தற்காலிக திருமணம் என்ற ஒன்றை உருவாக்கி விபச்சாரத்தை நியாயப்படுத்தினார். இப்படி போரில் பிடிபட்ட கொள்ளையில் ஐந்தில் ஒரு பாகத்தை தான் எடுத்துக்கொண்டார். இப்படியெல்லாம் களவு செய்தவரை எப்படி கிறிஸ்தவர்கள் ஒரு தீர்க்கதரிசியாக கருதமுடியும்? இவர் கள்ள நபி என்று இந்நிகழ்ச்சிகள் நிருபிக்கின்றன. [66]

67. ஒன்பதாவது கட்டளை - பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக

முஹம்மதுவை எதிர்த்து பேசியதற்காக ஒரு யூதனை கொலை செய்ய முஹம்மது கட்டளையிட்டார். ஒருமுஸ்லிம் கொலை செய்ய சம்மதித்தார். அந்த யூதனை ஏமாற்றி கொலை செய்வதற்கு பொய் சொல்லட்டுமா என்று முஹம்மதுவிடம் கேட்டபோது, முஹம்மது அனுமதி அளித்தார்.  இதர மக்கள் இவரிடம் பொய் சொல்லக்கூடாது, ஆனால், இவர் தன் கொலை வெறியை தீர்த்துக்கொள்ள தன் சகாக்கள் பொய் சொல்ல அனுமதி அளித்துள்ளார். தேவன் பொய் சொல்வதை வெறுக்கிறார். ஆனால், முஹம்மதுவோ பொய் சொல்ல அனுமதி அளித்தார். இவர் எப்படி நபியாக இருக்கமுடியும்?  [67] 

68. பத்தாவது கட்டளை - பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக

மற்றவர்களின் பொருட்களை, மனைவியை, வேலைக்காரனை இச்சியாதிருப்பாயாக என்று மோசேயின் 10வது கட்டளை சொல்கிறது. ஆனால், முஹம்மதுவோ, அனேக வழிப்பறி கொள்ளைகளை நடத்தி, வியாபாரிகளின் பொருட்கள், பெண்கள் என்று எல்லாவற்றையும் இச்சித்து எடுத்துக்கொண்டார். இது மாத்திரமல்ல, தன் வளர்ப்பு மகனின் மனைவியை அதாவது தன் மருமகளை திருமணம் செய்துக்கொண்டார். முஹம்மதுவின் வளர்ப்பு மகன் உயிரோடு இருக்கும் போதே, அவரது மனைவியை முஹம்மதுவிற்கு மனைவியாக கொடுத்தேன் என்று அல்லாஹ் கூறுகின்றார். கணவன்  உயிரோடு இருக்கும் போதே, அவன் மனைவியை அடுத்தவனுக்கு மனைவியாக்குவது இறைவனுக்கு தகுமா? மேலும், முஹம்மது தன் மருமகளை பார்க்கக்கூடாத நிலையில் பார்த்துவிட்டு  இச்சித்ததாக  இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் தபரி கூறுகின்றார், இதனையே குர்-ஆன் 33:37 ம் வசனம் "மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்" என்று கூறுகின்றது. எது எப்படியோ இன்னொருவரின் மனைவியை முக்கியமாக மருமகளை திருமணம் செய்பவர் நிச்சயமாக உண்மை நபியாக இருக்கமுடியாது? மோசேயின் அனைத்து கட்டளைகளையும் மீறியவர் எப்படி நல்ல தீர்க்கதரிசியாக இருக்கமுடியும், கிறிஸ்தவர்கள் எப்படி இவரை நபி என்று நம்பமுடியும்? [68]

69. தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்

இயேசு தேவக்குமாரனாக இருக்கிறார், உலக முறையின்படி அல்லாமல், நித்திய தேவக்குமாரனாக இயேசு இருக்கிறார். இதனை முஹம்மது மறுதலித்தார். கிறிஸ்தவத்தின் அடிப்படையை மறுதலிக்கும் முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசியாவார். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். ஆகையால், இயேசு கொடுக்கும் ஜீவனை பெறாதவர் "முஹம்மது"  ஆவார், அதாவது ஒரு இரட்சிக்கப்படாத நபர் ஆவார், இயேசுவிடம் தன் பாவங்களை அறிக்கையிட்டு, பாவ மன்னிப்பை முஹம்மது பெறவில்லை. எனவே, இவரை ஒரு உண்மையான தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் ஒப்புக்கொள்ளமுடியாது. வேறு வகையில் சொல்லவேண்டுமென்றால், பரலோகத்திற்குள் நுழைந்து, தேவனோடு நித்திய நித்தியமாக வாழும் தகுதியை முஹம்மது இழந்துவிட்டார்.[69]

70. வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்

நம் வேதம் எப்படி முன்னறிவித்துள்ளதோ, அதே போல முஹம்மது வேறு ஒரு சுவிசேஷத்தை பிரசங்கித்தார்.  கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட சிலர் எழும்புவார்கள், அவர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றும், ஒருவேளை ஒரு தூதன் வானத்திலிருந்து வந்து வேறொரு சுவிசேஷத்தைச் சொன்னால், அவனும் சபிக்கப்பட்டவன் என்றும் பைபிள் கூறுகிறது. இதே போல, முஹம்மது தனக்கு வானத்திலிருந்து ஒரு தூதன் வந்து குர்-ஆனை வெளிப்படுத்தினார் என்று கூறினார். பைபிளின் அடிப்படையில் முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார், மேலும் அவர் சபிக்கப்பட்டவராவார். இப்படிப்பட்ட முஹம்மது எப்படி ஒரு உண்மையான தீர்க்கதரிசி என்று பைபிளைப் படிக்கும் கிறிஸ்தவர்கள் நம்புவார்கள்? [70]

அடிக்குறிப்புக்கள்:

அனைத்து குர்-ஆன் வசனங்கள் "முஹம்மது ஜான்" குர்-ஆன் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.

[61] குர்-ஆன் 66:1, 2 & ஸஹீஹ் புகாரி  எண்கள் 2679, 3836, 5201, 5202, 6108 & 6648

66:1. நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.

66:2. அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சில போது தக்க பரிகாரங்களுடன்) முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான்; மேலும் அல்லாஹ் உங்கள் எஜமானன். மேலும், அவன் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.

2679. 'சத்தியம் செய்கிறவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். Volume :3 Book :52

3836. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

"சத்தியம் செய்ய விரும்புகிறவர் அல்லாஹ்வின் மீதே தவிர (வேறெவர் மீதும்) சத்தியம் செய்ய வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஏனெனில், குறைஷிகள் தம் முன்னோர்களின் மீது சத்தியம் செய்து வந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் முன்னோர்களின் மீது சத்தியம் செய்யாதீர்கள்" என்று கூறினார்கள். Volume :4 Book :63 

5201. அனஸ்(ரலி) அறிவித்தார் 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , தம் துணைவியரிடம் செல்லமாட்டேன் எனச் சத்தியம் செய்துவிட்டுத் தம் மாடி அறைக்குச் சென்று அமர்ந்துகொண்டார்கள். இருபத்தொன்பதாம் நாள் (அங்கிருந்து) இறங்கி வந்தார்கள். அப்போது, 'ஒரு மாதம் (துணைவியரை) நெருங்கமாட்டேன் எனச் சத்தியம் செய்தீர்களே, இறைத்தூதர் அவர்களே! (இன்னும் ஒரு நாள் மீதி இருக்கிறதே அதற்குள் வந்துவிட்டீர்களே?)'' என்று வினவப்பட்டது. அதற்கு, 'இந்த மாதம் இருபத்தொன்பது நாள்கள் தாம்'' என்று நபியவர்கள் பதிலளித்தார்கள். Volume :5 Book :67

5202. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார் 

நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியரில் சிலரிடம் ஒருமாதம் செல்லமாட்டேன் எனச் சத்தியம் செய்தார்கள். இருபத்தொன்பதாம் நாள் 'காலையில்' அல்லது 'மாலையில்' துணைவியரிடம் சென்றார்கள். அப்போது அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! அவர்களிடம் ஒரு மாதம் செல்ல மாட்டேன் எனச் சத்தியம் செய்(திருந்)தீர்களே?' என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'மாதம் என்பது இருபத்தொன்பது நாள்களாகவும் இருக்கலாம்'' என்று பதிலளித்தார்கள். Volume :5 Book :67

6108. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

(என் தந்தை) உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்கள் பயணிகள் சிலரிடையே இருந்து கொண்டிருந்தபோது அவர்களை அடைந்தேன். அப்போது உமர்(ரலி) அவர்கள் தம் தந்தையின் மீது சத்தியம்செய்தார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களை அழைத்து, 'அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் தந்தையர் மீது சத்தியம் செய்வதை அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துவிட்டான். சத்தியம்செய்யமுற்படுபவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். அல்லது மெளனமாக இருந்துவிடட்டும்' என்று கூறினார்கள். Volume :6 Book :78

6648. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

உங்கள் தந்தையர் பெயரால் சத்தியம் செய்யாதீர்கள். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். Volume :7 Book :85     

[62] ஸஹீஹ் புகாரி எண்: 3486 & ஸஹீஹ் முஸ்லிம் எண்கள் 1549, 1550, 1551, 1552, 1553 &  குர்-ஆன் 2:65, 4:154 & 16:124

3486. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உலகில்) இறுதிச் சமுதாயமான நாம் தாம் மறுமையில் (தகுதியிலும், சிறப்பிலும்) முந்தியவர்கள் ஆவோம். ஆயினும், சமுதாயங்கள் அனைத்தும் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பட்டுவிட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப்பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபட்ட நாளாகும். எனவே, நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கும் அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்தவர்களுக்குரியதும் ஆகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  Volume :4 Book :60

3211. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

ஜும்ஆ நாள் (வெள்ளிக்கிழமை) வந்துவிட்டால் வானவர்கள் (ஜும்ஆ தொழுகை நடக்கும்) பள்ளிவாசலின் நுழைவாயில்களில் ஒவ்வொரு வசாலிலும் (இருந்த வண்ணம்) முதன் முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். இமாம், உரை மேடையில் (உரையாற்றுவதற்காக) அமர்ந்துவிட்டால் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி வைத்துவிட்டு (அவரின் உபதேச) உரையைச் செவிமடுத்து வண்ணம் (உள்ளே) வருவார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :3 Book :59

ஸஹீஹ் முஸ்லிம் எண்கள் 1549 & 1550, 1551, 1552, 1553 

1549. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நாம்தாம் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாகவும் இருப்போம். எனினும், (நமக்கு முன்வந்த) ஒவ்வொரு சமுதாயத்தாரும் (யூத மற்றும் கிறித்தவர்) நமக்கு முன்பே வேதம் வழங்கப்பெற்றனர். அவர்களுக்குப் பின்புதான் நாம் வேதம் வழங்கப்பெற்றோம். அல்லாஹ் நம்மீது விதியாக்கியுள்ள இந்த (வெள்ளிக்கிழமை) நாளை அல்லாஹ் நமக்காக(த் தேர்ந்தெடுத்து) அறிவித்தான். (வார வழிபாட்டு நாள் தொடர்பாக) மக்கள் நம்மைப் பின்தொடர்பவர்களாகவே உள்ளனர். (வெள்ளிக்கிழமை நமது வழிபாட்டு நாள் எனில்) அடுத்த நாள் (சனிக்கிழமை) யூதர்களின் (வழிபாட்டு) நாளாகும். அதற்கடுத்த நாள் (ஞாயிற்றுக் கிழமை) கிறித்தவர்களின் (வழிபாட்டு) நாளாகும்.  இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றிலும் "நாம் (காலத்தால்) பிந்தியவர்களாவோம்; மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாவோம்" என்றே ஹதீஸ் தொடங்குகிறது.  Book :7

1550. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நாமே (காலத்தால்) பிந்தியவர்களாகவும் மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாகவும் இருப்போம். நாமே சொர்க்கத்தில் முதலில் நுழைவோம். எனினும், (யூதர் மற்றும் கிறித்தவரான) அவர்கள் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பெற்றனர். அவர்களுக்குப் பின்புதான் நாம் வேதம் வழங்கப்பெற்றோம். அவர்கள் கருத்து வேறுபாடு கொண்ட விஷயத்தில் அல்லாஹ் நமக்குச் சத்தியத்திற்கு வழிகாட்டினான். இந்த (ஜுமுஆ) நாள் விஷயத்திலும் (அதை வார வழிபாட்டு நாளாக ஏற்பது தொடர்பாக) அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டனர். அல்லாஹ் நமக்கு அந்த நாளை அறிவித்துத் தந்தான். (இதில் மக்கள் அனைவரும் நம்மைப் பின்தொடரக்கூடியவர்களே ஆவர்.) இன்று (வெள்ளிக்கிழமை) நமக்குரிய (வழிபாட்டு) நாளாகும். நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரிய நாளாகும். மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்குரிய நாளாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. Book :7

2:65. உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக் கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி "சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்" என்று கூறினோம்.

4:154. மேலும், அவர்களிடம் வாக்குறுதி வாங்கும் பொருட்டு, அவர்கள் மேல் தூர் (ஸினாய் மலையை) உயர்த்தினோம்; இன்னும் "இந்த வாசலில் தலை குனிந்து (தாழ்மையாக) நுழையுங்கள்" என்று சொன்னோம்; மேலும் "(மீன் வேட்டையாடி) சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்" என்றும் அவர்களுக்கு கூறினோம்; இன்னும் அவர்களிடமிருந்து மிக உறுதியான வாக்குறுதியும் வாங்கினோம்.

16:124. "சனிக்கிழமை (ஓய்வு நாள்)" என்று ஏற்படுத்திய தெல்லாம், அதைப்பற்றி எவர்கள் மாறுபட்டு(த் தர்க்கித்து)க் கொண்டிருந்தார்களோ, அவர்களுக்குத்தான் - நிச்சயமாக உம் இறைவன் கியாம நாளில் அவர்கள் மாறுபட்டு(த் தர்க்கித்து)க் கொண்டிருந்தவை பற்றி அவர்களுக்கிடையே தீர்ப்புச் செய்வான்.

[63] குர்-ஆன் 58:22, 9:23, 24 & Ibn Sa'ad's Kitab Al-Tabaqat Al-Kabir, Volume II, p. 201

குர்-ஆன் 58:22

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே, (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான், மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்டுத்தியிருக்கிறான். சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான், அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர், அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர்தாம் வெற்றி பெறுவார்கள்.  (58:22)

குர்-ஆன் 9:23, 24

ஈமான் கொண்டவர்களே! உங்கள் தந்தைமார்களும் உங்கள் சகோதரர்களும், ஈமானை விட்டு குஃப்ரை நேசிப்பார்களானால், அவர்களை நீங்கள் பாதுகாப்பளர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களில் யாரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால், அவர்கள் தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.  (9:23)

(நபியே!) நீர் கூறும்; உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.  (9:24)

They (the narrators) said: The Apostle of Allah sent a force under al-Dahhak Ibn Sufyan Ibn 'Awf Ibn Abu Bakr al-Kilabi, against al-Qurara. Al-Asyad Ibn Salamah Ibn Qart was with him. They encountered them at al-Zujj, the Zujj of Lawah and invited them to embrace Islam. They refused, so they attacked them and forced them to flee. Then al-Asyad met his father Salamah who was on his own horse, in a pond of al-Zujj. He invited his father to embrace Islam promising him amnesty. He (father) abused him and his creed. Consequently al-Asyad hamstrung the horse of his father. When the horse fell on his hoofs Salamah reclined on his spear in water. He (al-Asyad) held him till one of them (Muslims) came there and killed him. His son did not kill him. (Ibn Sa'ad's Kitab Al-Tabaqat Al-Kabir, English translation by S. Moinul Haq, M.A., PH.D assisted by H.K. Ghazanfar M.A. [Kitab Bhavan Exporters & Importers, 1784 Kalan Mahal, Daryaganj, New Delhi - 110 002 India], Volume II, p. 201)

[64] இப்னு இஷாக்கின், சீரத் ரஸுல்லல்லாஹ்  பக்கம் 675  மற்றும் ஸஹீஹ் புகாரி எண் 392

Ibn Ishaq, Sirat Rasul Allah, translated as, The Life of Muhammad, (tr. A. Guillaume), Karachi: Oxford University Press, 1998, p. 675 (பார்க்க: http://www.answering-islam.org/tamil/authors/green/assassins.html)

ஸஹீஹ் புகாரி எண் 392

'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை' என்று மக்கள் (சான்று) கூறும் வரை அவர்களோடு போராட வேண்டுமென்று நான் ஏவப்பட்டுள்ளேன். அந்த (லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற) கலிமாவை அவர்கள் கூறி, நம்முடைய தொழுகையைத் தொழுது, நம்முடைய கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுப்பது போல் அறுத்து வருவார்களானால், தக்க காரணமின்றி அவர்களின் உயிர், பொருளுக்குச் சேதம் ஏற்படுத்துவது நமக்கு விலக்கப்பட்டுள்ளது. அவர்களின் விசாரணை அல்லாஹ்வின் நாட்டத்தைப் பொறுத்தாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார். Volume :1 Book :8

[65] குர்ஆன் 4:24 & ஸஹீஹ் புகாரி எண் 371, 4200, 4201 & 4212

371. நபி(ஸல்) அவர்கள் கைபர் போருக்கு ஆயத்தமானார்கள். அங்கே நாங்கள் அதிகாலைத் தொழுகையை அதிகாலையின் வெண்மை தெரியும் முன்னர் தொழுதோம். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் ஏறினார்கள். அபூ தல்ஹா(ரலி) அவர்களும் ஏறினார். அவர்களுக்குப் பின்னால் நான் ஏறி அமர்ந்தேன். நபி(ஸல்) அவர்கள் கைபர் கணவாயினுள் சென்றார்கள். என்னுடைய மூட்டு நபி(ஸல்) அவர்களின் தொடையைத் தொட்டது. பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் தொடையிலிருந்த வேஷ்டியை நீக்கினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் தொடையின் வெண்மையை பார்த்தேன். நபி(ஸல்) அவர்கள் ஊருக்குள்ளே நுழைந்தபோது 'அல்லாஹ் பெரியவன்! கைபர் வீழ்ந்துவிட்டது! நிச்சயமாக நாம் ஒரு (எதிரிக்) கூட்டத்திடம் பகைமையுடன் இறங்கினால் எச்சரிக்கப்பட்ட அம்மக்களின் காலை நேரம் மோசமானதாம்விடும்' என்று மும்முறை கூறினார்கள். அவ்வூர் மக்கள் தங்களின் வேலைகளுக்காக வெளியே வந்தபோது நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், 'முஹம்மதும் அவரின் பட்டாளமும் வந்துள்ளார்கள்' என்று (பதட்டமாகக்) கூறினார்கள். 

நாங்கள் கைபரைப் பலவந்தமாகக் கைப்பற்றினோம். போர்க் கைதிகளெல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டபோது 'திஹ்யா' என்ற நபித்தோழர் வந்து 'இறைத்தூதா அவர்களே! கைதிகளிலுள்ள ஒரு பெண்ணை எனக்குக் கொடுங்கள்' என்று கேட்டார். 'நீர் போய் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் சென்று ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! 'குறைளா' மற்றும் 'நளீர்' என்ற குலத்தின் தலைவி ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணையா திஹ்யாவிற்குக் கொடுத்துள்ளீர்கள். அந்தப் பெண் தங்களுக்கே தகுதியானவள்' என்றார். அப்போது 'அப்பெண்ணையும் திஹ்யாவையும் அழைத்து வாரும்' என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள். அப்பெண் அழைத்து வரப்பட்டார். அப்பெண் வந்ததும் 'நீ கைதிகளிலிருந்து வேறொரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்' என்ற திஹ்யாவிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அப்பெண்ணை விடுதலை செய்து பின்னர் அவரைத் திருமணம் செய்தார்கள். 

இந்த ஹதீஸை அறிவிக்கிற அனஸ்(ரலி) அவர்களிடம் ஸாபித் என்ற தோழர், 'அபூ ஹம்சாவே நபி(ஸல்) அப்பெண்ணுக்கு எவ்வளவு மஹர் கொடுத்தார்கள்?' என்று கேட்டதற்கு 'அவரையே மஹராகக் கொடுத்தார்கள்; அதாவது அவரை விடுதலை செய்து பின்னர் மணந்தார்கள்' எனக் கூறினார். 

நாங்கள் (கைபரிலிருந்து) திரும்பி வரும் வழியில் 'ஸஃபிய்யா' அவர்களை உம்மு ஸுலைம்(ரலி) மணப்பெண்ணாக ஆயத்தப்படுத்தி நபி(ஸல்) அவர்களிடம் இரவில் ஒப்படைத்தார். மறுநாள் காலை நபி(ஸல்) அவர்கள் புது மாப்பிள்ளையாகத் தோன்றினார்கள். அப்போது நபி(ஸல்) ஒரு விரிப்பை விரித்து 'உங்களில் யாரிடமாவது ஏதாவது (சாப்பிடுகிற) பொருள்கள் இருந்தால் கொண்டு வந்து இதில் போடுங்கள்' என்று கூறினார்கள். உடனே ஒருவர் பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார். வேறு ஒருவர் நெய்யைக் கொண்டு வந்தார். ஒருவர் மாவைக் கொண்டு வந்தார். (இப்படி எல்லோரும் கொண்டுவந்த) அவற்றையெல்லாம் சேர்த்து ஒன்றாகக் கலந்தார்கள். அது நபி(ஸல்) அவர்களின் 'வலீமா' எனும் மணவிருந்தாக அமைந்தது" என அனஸ்(ரலி) அறிவித்தார். 

"அவளுடைய உடல் முழுவதையும் மறைக்கும் விதத்தில் ஒரே ஆடையை அணிந்தாலும் அது அவளுக்குப் போதுமானதாகும்" என இக்ரிமா கூறினார். Volume :1 Book :8

4200. அனஸ்(ரலி) அறிவித்தார். 

கைபருக்கு அருகே (ஓரிடத்தில்) நபி(ஸல்) அவர்கள் இருட்டிலேயே சுப்ஹுத் தொழுதுவிட்டு பிறகு, 'அல்லாஹ் மிகப் பெரியவன். கைபர் பாழாகிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்குவோமாயின் எச்சரிக்கப்பட்ட அவர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாக அமையும்" என்று கூறினார்கள். 

கைபர்வாசிகள் (முஸ்லிம் படைகளைக் கண்டதும்) வீதிகளில் ஓடினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் (தம்முடன்) போரிட்டவர்களைத் தாக்கினார்கள். அவர்களின் குடும்பத்தின(ரான பெண்கள், சிறுவர்கள் ஆகியோ)ரைத் கைது செய்தார்கள். கைதியாகப் பிடிக்கப்பட்டவர்களில் ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களும் ஒருவர். அவர்கள் (முதலில்) திஹ்யா அல் கல்பீ(ரஹ்) அவர்களிடம் (அன்னாரின் போர்ச் செல்வத்தின் பங்காகப்) போய்ச் சேர்ந்தார்கள். பிறகு ஸஃபிய்யா அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு சொந்தமானார்கள். அவரின் விடுதலையையே மஹ்ராக ஆக்கி(அவரை நபி -ஸல் - அவர்கள் மணமுடித்துக்) கொண்டார்கள். 

அப்துல் அஸீஸ் இப்னு சுஹைப்(ரஹ்) கூறினார்: 

இந்த ஹதீஸை ஸாபித்(ரஹ்) அறிவிக்கும்போது அவர்களிடம், 'அபூ முஹம்மதே! நபி(ஸல்) அவர்கள் என்ன மஹ்ர் கொடுத்தார்கள் என்று அனஸ்(ரலி) அவர்களிடம் நீங்கள் தான் கேட்டீர்களா?' என்று கேட்டேன். அதற்கு ஸாபித் அவர்கள் தங்களின் கருத்தை உறுதிப்படுத்தும் விதமாக ("ஆம்" என்று கூறுவது போன்று) தம் தலையை அசைத்தார்கள். Volume :4 Book :64

4201. அனஸ்(ரலி) அறிவித்தார். 

(கைபர் போரில்) ஸஃபிய்யா பின்த்ஹுயை அவர்களை நபி(ஸல்) அவர்கள் கைது செய்து, பின்னர் அவர்களை விடுதலை செய்து, தாமே அவர்களை மணமுடித்தும் கொண்டார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸாபித்(ரஹ்) கூறினார்: 

இச்செய்தியைக் கூறுகையில் அனஸ்(ரலி) அவர்களிடம் 'நபி(ஸல்) அவர்கள் என்ன மஹ்ர் கொடுத்தார்கள்" என்று கேட்டேன். '(ஸஃபிய்யா (ரலி) அவர்களின் விடுதலையையே அவர்களின் மஹ்ராக ஆக்கினார்கள்" என்று அனஸ்(ரலி) பதிலளித்தார்கள். Volume :4 Book :64

4212. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களுடன் கைபர் வழியில் ('சத்துஸ் ஸஹ்பா' என்னும் இடத்தில்) மூன்று நாள்கள் தங்கி வீடு கூடினார்கள். ஸஃபிய்யா(ரலி) 'பர்தா' முறை விதியாக்கப்பட்டவர்களில் (-நபியவர்களின் துணைவியரில்-) ஒருவராக இருந்தார்கள். Volume :4 Book :64

[66] புத்தகத்தின் பெயர்: ரஹீக் 

ஆசிரியர்:இஸ்லாமிய பேரறிஞர் ஸஃபிய்யூர்  ரஹ்மான்.

தமிழாக்கம்: மௌலவி முஃப்தி உமர் ஷரீஃப் காசிமி

பக்கம்:  200 மற்றும் 201ம் பக்கங்கள்.

புத்தகத்தின் தனிச்சிறப்பு: உலகளாகிய போட்டியில் முதல் பரிசு பெற்ற நூல். இந்த புத்தகம் இதர 170 புத்தகங்களோடு போட்டியிட்டு, முதல் பரிசை தட்டிச் சென்றது (ஆங்கிலத்தில்: Ar-Raheeq Al-Makhtum - en.wikipedia.org/wiki/Ar-Raheeq_Al-Makhtum)

ஆங்கிலத்தில் இந்த புத்தகத்தை படிக்க:http://www.islamhouse.com/51776/en/en/books/The_Sealed_Nectar

தமிழில் இப்புத்தகத்தை படிக்க: http://www.islamkalvi.com/portal/?p=4989

மூன்று வழிப்பறி கொள்ளைகள் பற்றிய சுருக்கம்:

முதல் வழிப்பறிக் கொள்ளை (First Raid): ஸய்ஃபுல் பஹர்

ஹிஜ்ரி 1, ரமழான் (கி.பி. 623 மார்ச்) மாதம் ஒரு படைப் பிரிவை நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். 30 முஹாஜிர்கள் இந்தப் பிரிவில் இடம்பெற்றனர். அவர்களுக்கு ஹம்ஜா(ரழி) அவர்களைத் தலைவராக ஆக்கினார்கள். ஷாமிலிருந்து மக்காவை நோக்கி வந்து கொண்டிருந்த குறைஷிகளின் வியாபாரக் குழுவை வழி மறிப்பதற்காக இவர்கள் சென்றார்கள். இந்த வியாபாரக் கூட்டத்தில் முந்நூறு நபர்களும் அவர்களுக்குத்  தலைமையேற்று அபூஜஹ்லும் வந்து  கொண்டிருந்தான். 'ஈஸ்' என்ற நகரத்தின் ஓரத்தில்  உள்ள 'ஸய்ஃபுல் பஹ்ர்' எனும் இடத்தை இரு கூட்டத்தினரும் அடைந்த போது  சண்டையிடுவதற்காக அணிவகுத்தனர். ஆனால், இரு கூட்டதினருக்கும் நண்பராக இருந்த மஜ்தி இப்னு அம்ர் அல்ஜுஹனி என்பவர் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி போரைத் தவிர்க்கச் செய்தார்.

இப்போல் நபி (ஸல்) ஹம்ஜாவுக்கு வெள்ளை நிறக் கொடியைக் கொடுத்தார்கள். இதுதான் நபி (ஸல்) அவர்கள் நிறுவிய முதல் கொடியாகும். இக்கொடியை அபூ மர்ஸத் கன்னாஸ் இப்னு ஹுஸைன் அல்கனவி (ரழி) ஏந்தியிருந்தார்கள்.

இரண்டாம் வழிப்பறிக் கொள்ளை (Second Raid):  'ராபிக்'

ஹிஜ்ரி 1, ஷவ்வால் (கி.பி. 623 ஏப்ரல்) மாதம் நபி (ஸல்) அவர்கள் 'ராபிக்' என்ற இடத்தை நோக்கி ஒரு படைப் பிரிவை அனுப்பினார்கள். இதற்குத் தலைவராக உபைதா இப்னுல் ஹாரிஸ் இப்னுல் முத்தலிப் (ரழி) இருந்தார். இப்படையில் 60 முஹாஜிர்கள் கலந்து கொண்டார்கள். இவர்கள் 'பத்தன் ராபிக்' என்ற இடத்தில் அபூஸுஃப்யானைச் சந்தித்தார்கள். இரு கூட்டத்தார்களும் ஒருவரை நோக்கி ஒருவர் அம்பெய்து கொண்டனர். மற்றபடி, உக்கிரமான சண்டை ஏதும் நடைபெறவில்லை.

காஃபிர்களின் படையிலிருந்த அல்மிக்தாத் இப்னு அம்ர் அல்பஹ்ரானி, உத்பான் இப்னு கஸ்வான் அல்மாஜினி ஆகிய இருவர் முஸ்லிம்களுடன் இணைந்து கொண்டனர். இவர்கள் முஸ்லிமாகத்தான் இருந்தனர். என்றாலும், ஹிஜ்ராவிற்காக மக்காவிலிருந்து வெளியேற முடியாத காரணத்தால், காஃபிர்களுடன் சேர்ந்திருந்தனர். எப்பொழுதாவது சந்தர்ப்பம் கிடைத்தால் தப்பித்து முஸ்லிம்களிடம் சேர்ந்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இந்த வியாபாரக் கூட்டத்துடன் வந்திருந்தனர். 

இந்தப் படையின் கொடி வெள்ளை நிறமாக இருந்தது. இதை மிஸ்தஹ் இப்னு உஸாஸா இப்னு அல் முத்தலிப் இப்னு அப்து மனாஃப் ஏந்தியிருந்தார்கள்.

மூன்றாம்  வழிப்பறிக் கொள்ளை (Third Raid):  'கர்ரார்'

ஹிஜ்ரி 1, துல்கஅதா (கி.பி. 623 மே) மாதம் 'கர்ரார்' என்ற இடத்திற்கு ஸஅது இப்னு அபீ வக்காஸ் (ரழி) தலைமையில் படைப் பிரிவு ஒன்றை நபி (ஸல்) அனுப்பினார்கள். 

குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை இடைமறிப்பதற்காகப் புறப்பட்ட இவர்களிடம் 'கர்ரார்' என்ற இடத்தை தாண்டிச் செல்லக் கூடாது என நபி (ஸல்) அவர்கள  வலியுறுத்தினார்கள். இந்தப் படை கால்நடையாகவே சென்றது. பகலில் பதுங்குவதும் இரவில் நடப்பதுமாக வியாழன் காலை கர்ராரை அடைந்தது. ஆனால், அந்த வியாபாரக் கூட்டமோ இவர்கள் சென்றடைவதற்கு ஒரு நாள் முன்னதாகவே அந்த இடத்தைக் கடந்து சென்று விட்டிருந்ததால், இவர்கள் சண்டையின்றித் திரும்பினர். இந்தப் படையின் கொடி வெள்ளை நிறமாக இருந்தது. இதை மிக்தாத் இப்னு அம்ர் (ரழி) ஏந்தியிருந்தார்கள்.

மேலும் இந்த கட்டுரையை படிக்கவும்: http://www.answering-islam.org/Shamoun/antagonizing.htm

[67]  ஸஹீஹ் முஸ்லிம் எண்: 3682

பாடம் : 42 யூதர்களின் தலைவன் கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல்.

3682. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கஅப் பின் அல்அஷ்ரஃபை வீழ்த்துவதற்கு (தயாராயிருப்பவர்) யார்? அவன் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்துவிட்டான்" என்று சொன்னார்கள்.

உடனே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நான் அவனைக் கொல்வதை தாங்கள் விரும்புகிறீர்களா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆம்" என்று விடையளித்தார்கள்.

முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்பவைப்பதற்காக உங்களைக் குறை கூறிப்) பேச என்னை அனுமதியுங்கள்" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பேசு" என அனுமதியளித்தார்கள்.

முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் கஅப் பின் அல்அஷ்ரஃபிடம் சென்று, "இந்த மனிதர் (முஹம்மத் -ஸல்), எங்களிடம் (மக்களுக்குத் தருவதற்காக) தான தர்மத்தை விரும்புகிறார். எங்களுக்குக் கடும் சிரமம் தந்துவிட்டார்" என்று (நபி (ஸல்) அவர்களைக் குறை கூறி சலித்துக்கொள்ளும் விதத்தில்) கூறினார்கள். இதைக் கேட்ட கஅப் பின் அல்அஷ்ரஃப், "அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக நீங்கள் அவரிடம் சலிப்படைவீர்கள்" என்று கூறினான்.

அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரை இப்போது பின்பற்றிவிட்டோம். அவரது விவகாரம் எதில் முடிவடைகிறது என்பதைப் பார்க்காமல் அவரைவிட்டு (விலகி)விட நாங்கள் விரும்பவில்லை. (அதனால்தான் அவருடன் இருந்துகொண்டிருக்கிறோம்)" என்று (சலிப்பாகப் பேசுவதைப் போன்று) கூறிவிட்டு, நீர் எனக்குச் சிறிதளவு கடன் தர வேண்டும் என நான் விரும்புகிறேன்" என்று கூறினார்கள்.

அதற்கு கஅப், "இதற்காக நீ எதை அடைமானம் வைக்கப்போகிறாய்?" என்று கேட்டான். அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நீ என்ன விரும்புகிறாய்?" என்று கேட்டார்கள். அதற்கு கஅப், "உங்கள் பெண்களை என்னிடம் அடைமானம் வையுங்கள்" என்று சொன்னான். முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நீர் அரபுகளிலேயே மிகவும் அழகானவர். எங்கள் பெண்களை அடைமானம் வைக்க வேண்டுமா? (அடைமானம் மூலம்தான் பெண்களை அடைய வேண்டிய அவசியம் உமக்கு இல்லை)" என்று சொன்னார்கள்.

"(அப்படியானால்) உங்கள் குழந்தைகளை என்னிடம் அடைமானம் வையுங்கள்" என்று கஅப் கேட்டான். அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "(எங்கள் குழந்தைகளை எப்படி அடைமானம் வைப்பது?) எங்கள் புதல்வர்களில் ஒருவர் ஏசப்பட்டால், அப்போது "இவன் இரண்டு "வஸ்க்" பேரீச்சம் பழங்களுக்காக அடைமானம் வைக்கப்பட்டவன்" என்றல்லவா ஏசப்படுவான்? (இது எங்களுக்கு அவமானமாயிற்றே?) எனவே, உன்னிடம் (எங்கள்) ஆயுதங்களை அடைமானம் வைக்கிறோம்" என்று கூறினார்கள். "அப்படியானால் சரி" என கஅப் (சம்மதம்) தெரிவித்தான்.

பிறகு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், ஹாரிஸ் பின் அவ்ஸ், அபூஅப்ஸ் பின் ஜப்ர், அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) ஆகியோருடன் பிறகு வருவதாக வாக்களித்துவிட்டுச் சென்றார்கள்.

அவ்வாறே அவர்கள் ஓரிரவில் வந்து அவனை அழைத்தார்கள். கஅப் (தனது கோட்டையிலிருந்து) அவர்களிடம் இறங்கிவந்தான்.

-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: எனக்கு இதை அறிவித்த அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் அல்லாத மற்றொருவரது அறிவிப்பில் "கஅபின் மனைவி அவனிடம், "நான் ஒரு சப்தத்தைக் கேட்கிறேன். அது இரத்தப் பலி கோருபவனின் குரலைப் போன்றுள்ளது" என்று கூறினாள்.

அதற்கு கஅப் "அவர் (வேறு யாருமல்லர்) முஹம்மத் பின் மஸ்லமாவும் அவருடைய பால்குடிச் சகோதரர் அபூநாயிலாவும் தாம். மேன்மக்களில் ஒருவன் ஈட்டி எறிய இரவு நேரத்தில் அழைக்கப்பட்டாலும் அவன் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவே செய்வான்" என்று கூறினான் என இடம்பெற்றுள்ளது.

அப்போது முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் (தம் சகாக்களிடம்), "கஅப் பின் அல் அஷ்ரஃப் வந்தால் நான் அவனது தலையை நோக்கி (அவனது தலையிலுள்ள நறுமணத்தை நுகருவதற்காக) எனது கையை நீட்டுவேன். அவனது தலையை எனது பிடிக்குள் நான் கொண்டு வந்துவிட்டதும் அவனைப் பிடித்து (வாளால் வெட்டி)விடுங்கள்" என்று கூறினார்கள்.

கஅப் பின் அல்அஷ்ரஃப் (தனது ஆடை அணிகலன்களை) அணிந்துகொண்டு நறுமணம் கமழ இறங்கிவந்தான். அப்போது முஹம்மத் பின் மஸ்லமாவும் சகாக்களும், "உம்மிடமிருந்து நல்ல நறுமணத்தை நாங்கள் நுகருகிறோம்" என்று கூறினர். அதற்கு கஅப் "ஆம்; என்னிடம் இன்ன பெண் (மனைவியாக) இருக்கிறாள். அவள் அரபுப் பெண்களிலேயே மிகவும் வாசனையுடைய நறுமணத்தைப் பாவிக்கக்கூடியவள்" என்று கூறினான்.

முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "உமது தலையிலுள்ள நறுமணத்தை நுகர எனக்கு அனுமதியளிப்பீரா?" என்று கேட்டார்கள். அதற்கு கஅப் "ஆம்; நுகர்ந்து கொள்" என அனுமதியளித்தான்.

அவ்வாறே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் அவனது தலையைப் பிடித்துக் கொண்டு நுகர்ந்தார்கள். பிறகு, "மீண்டும் ஒருமுறை நுகர என்னை அனுமதிப்பீரா?" என்று கேட்டார்கள். இவ்வாறு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் அவனைத் தம் வசம் கொண்டு வந்தபோது "பிடியுங்கள்" என்று கூறினார்கள். உடனே அவர்கள் அனைவரும் (சேர்ந்து) அவனைக் கொன்றுவிட்டனர்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. 

[68] குர்-ஆன் 33:37

(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; "அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். 

மேலதிக விவரங்களுக்கு: www.answering-islam.org/Responses/Menj/zaynab.htm

From Tabari - The History of Al-Tabari: The Victory of Islam, translated by Michael Fishbein [State University of New York Press, Albany, 1997], Volume VIII, pp. 2-3

The Messenger of God came to the house of Zayd b. Harithah. (Zayd was always called Zayd b. Muhammad.) Perhaps the Messenger of God missed him at that moment, so as to ask, "Where is Zayd?" He came to his residence to look for him but did not find him. Zaynab bt. Jash, Zayd's wife, rose to meet him. Because she was dressed only in a shift, the Messenger of God turned away from her. She said: "He is not here, Messenger of God. Come in, you who are as dear to me as my father and mother!" The Messenger of God refused to enter. Zaynab had dressed in haste when she was told "the Messenger of God is at the door." She jumped up in haste and excited the admiration of the Messenger of God, so that he turned away murmuring something that could scarcely be understood. However, he did say overtly: "Glory be to God the Almighty! Glory be to God, who causes the hearts to turn!"

When Zayd came home, his wife told him that the Messenger of God had come to his house. Zayd said, "Why didn't you ask him to come in?" He replied, "I asked him, but he refused." "Did you hear him say anything?" he asked. She replied, "As he turned away, I heard him say: 'Glory be to God the Almighty! Glory be to God, who causes hearts to turn!'"

So Zayd left, and having come to the Messenger of God, he said: "Messenger of God, I have heard that you came to my house. Why didn't you go in, you who are as dear to me as my father and mother?Messenger of God, perhaps Zaynab has excited your admiration, and so I will separate myself from her." Zayd could find no possible way to [approach] her after that day. He would come to the Messenger of God and tell him so, but the Messenger of God would say to him, "Keep your wife." Zayd separated from her and left her, and she became free.

While the Messenger of God was talking with 'A'isha, a fainting overcame him. When he was released from it, he smiled and said, "Who will go to Zaynab to tell her the good news, saying that God has married her to me?" Then the Messenger of God recited: "And when you said unto him on whom God has conferred favor and you have conferred favor, 'Keep your wife to yourself .'"- and the entire passage.

According to 'A'isha, who said: "I became very uneasy because of what we heard about her beauty and another thing, the greatest and loftiest of matters - what God had done for her by giving her in marriage. I said she would boast of it over us." (The History of Al-Tabari: The Victory of Islam, translated by Michael Fishbein [State University of New York Press, Albany, 1997], Volume VIII, pp. 2-3)

[69] குர்-ஆன் 6:101 &  1 யோவான் 5:11, 12

6:101. அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

1 யோவான் 5:11 தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். 

1 யோவான் 5:12 குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.

[70] கலாத்தியர் 1:7-9

கலாத்தியர் 1:7 வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. 

கலாத்தியர் 1:8  நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். 

கலாத்தியர் 1:9  முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.

பாகம் 8ஐ படிக்க சொடுக்கவும்

உமரின் இதர கட்டுரைகள்


© Answering Islam, 1999 - 2013. All rights reserved.

கருத்துகள் இல்லை: