ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?

2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)

1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!

101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்

மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

சனி, 30 அக்டோபர், 2021

கெய்ரோ 1924 குர்‍ஆன், மூல அரபு குர்‍ஆன்களாகிய தாஷ்கண்ட் & இஸ்தான்புல் கையெழுத்துப் பிரதிகளோடு சரிபார்க்கப்படாமல் வெளியிடப்பட்டதா? (நாம் படித்துக்கொண்டு இருக்கும் குர்‍ஆன் நம்பகமானதா?)

கேள்வியை மாற்றிக் கேட்கிறேன்.  1924ம் ஆண்டு கெய்ரோவில் வெளியிட்ட குர்‍ஆனை(ஹப்ஸ் Hafs Quran), "பழமையான கையெழுத்து குர்‍ஆன்களாக" கருதப்படுகின்ற தாஷ்கண்ட் மற்றும் இஸ்தான்புல் குர்‍ஆனோடு ஒப்பிட்டு, அதன்படி தரப்படுத்தினார்களா?

1924ம் ஆண்டு எகிப்து வெளியிட்ட குர்‍ஆன், அல்லது சௌதி அரசு 1985ம் ஆண்டிலிருந்து அச்சடித்து உலகெங்கிலும் அனுப்புகின்ற குர்‍ஆன்கள், அல்லது இன்று 95% உலக முஸ்லிம்களின் வீட்டில் உள்ள குர்‍ஆன்கள் அனைத்தும், 'குர்‍ஆனின் மூலப் பிரதிகளாக கருதப்படுகின்ற இஸ்தான்புல், மற்றும் தாஷ்கண்ட் பிரதிகளோடு' ஒப்பிட்டு, தரப்படுத்தப்பட்டு பிரிண்ட் செய்யப்படவில்லை, என்பது தான் உண்மை.

முஸ்லிம்களின் நம்பிக்கையும், சந்தேக கேள்விகளும்: 

  1. இது எப்படி உண்மையாகும்? உலகில் உள்ள கோடிக்கணக்கான முஸ்லிம்களும், முஸ்லிமல்லாதவர்களும் படித்துக்கொண்டு இருக்கும் 1924ம் ஆண்டு வெளியிடப்பட்ட குர்‍ஆன், மூல அரபி குர்‍ஆன்களோடு சரிபார்க்கப்படாதவைகளா?
  2. எங்கள் இமாம்களும், அறிஞர்களும், நம் கையில் இருக்கும் குர்‍ஆன், புள்ளிக்கு புள்ளி, எழுத்துக்கு எழுத்து, வார்த்தைக்கு வார்த்தை, இஸ்தான்புல் மற்றும் சமர்கண்ட் குர்‍ஆன்களோடு சரியாக இருக்கிறது என்றுச் சொல்வதெல்லாம் பொய்களா?
  3. உலக முஸ்லிம்கள் அனைவரும் படிக்கும் குர்‍ஆன் மூலத்தோடு சரி பார்க்கப்படாத புத்தகமா?
  4. ஏன் எகிப்து, 1924ல் இப்படிப்பட்ட ஒரு பெரிய தவறைச் செய்தது? அவர்களுக்கு மூல குர்‍ஆன்கள் இருப்பது தெரியாதா?
  5. ஒரு தவறான சரி பார்க்கப்படாத குர்‍ஆனை எகிப்து அரசு எப்படி பிரிண்ட் செய்யலாம்,  அல்லாஹ் அவர்களை மன்னிப்பானா?
  6. இதே தவறை, சௌதி அரசாங்கம், 1985ம் ஆண்டிலிருந்து, பல கோடிகளை செலவு செய்து, அச்சகம் அமைத்து, உலகெங்கிலும் அனுப்பிக்கொண்டு இருக்கிறதே, இவர்களுக்காகவாவது ஞானமில்லையா?

ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், மேற்கண்ட கேள்விகளைக் கேட்டு, அவைகளுக்கு பதில்களைத் தேடியிருப்பேன்.

சான்றுகள் ஏதாவது உண்டா?

நாம் அனைவரும் படிக்கும் குர்‍ஆன், மிகவும் பழமையானதாக கருதப்படும் மூல குர்‍ஆன்களோடு சரி பார்க்கப்படாமல் பிரிண்ட் செய்யப்பட்டது என்பதற்கு என்ன சான்றை நீங்கள் கொடுக்கிறீர்கள்? என்று முஸ்லிம்கள் கேள்வி எழுப்பலாம்.

இவ்வளவு பெரிய விஷயத்தை சான்றுகள் இல்லாமல், முன்வைக்கமுடியுமா? நான் என்ன முஸ்லிமா! சான்றுகள் கொடுக்காமல் பொய்களை அள்ளி வீசுவதற்கு, இதோ சான்றுகள்.

சான்று 1: சமர்கண்ட் குர்‍ஆனோடு 1924ம் ஆண்டு வெளியான கெய்ரோ குர்‍ஆனின் ஒப்பீடுதல்:

கீழ்கண்ட கட்டுரையில், சமர்கண்ட் மூல பிரதிகளோடு, 1924ம் ஆண்டின் குர்‍ஆனை (அதாவது உங்கள் கைகளில் இருக்கும் குர்‍ஆனை ) ஒப்பிட்டு, அவைகளில் உள்ள எழுத்துப்பிழைகள், எழுத்து வித்தியாசங்கள் மற்றும் வார்த்தை வித்தியாசங்கள் கொடுக்கப்பட்டுள்ளன‌, மனவலிமையுள்ள முஸ்லிம்கள் அவைகளை சொடுக்கி படிக்கலாம்.

தமிழ் வீடியோ: இதைப் பற்றிய தமிழ் வீடியோவை இங்கு பார்க்கலாம்

1924ம் ஆண்டின் குர்‍ஆனை, மூல புரதிகளோடு ஒப்பிட்டு, அதன் படி பிரிண்ட் செய்திருந்தால், இத்தனை வித்தியாசங்களை, தவறுகளை அவைகள் கொண்டு இருக்குமா?

சான்று 2: முஸ்லிம்களே அங்கீகரித்த ஆய்வுக் கட்டுரைகள்:

குர்‍ஆன்12-21 (quran12-21.org) என்ற தளத்தில், கி.பி. 12ம் நூற்றாண்டிலிருந்து, இன்றுவரை அதாவது 21ம் நூற்றாண்டு வரை, ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகளில் முதன் முதலாக, பிரிண்ட் செய்த, மொழியாக்கம் செய்த, குர்‍ஆன்கள் பற்றிய ஆய்வுகள் கொடுத்துள்ளார்கள்.

தள மூல தொடுப்பு: https://quran12-21.org/en 

கி.பி. 1550 முதல், 1924 வரையில், பல மொழிகளில் ஐரோப்பிய கண்டத்தில்  மொழியாக்கம் செய்யப்பட்ட குர்‍ஆன் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

  1. Introductory note to the Cairo edition (1924)
  2. Introductory note to Muhammad Hamidullah's French translation, as revised by Fode Soriba Camara, Mohamed Ahmed Lo and Ahmad Mouhammad al-Amine al-Chinquity, at the initiative of the King Fahd Complex (2000)
  3. Introductory note to Régis Blachère's French translation (1957).
  4. Introductory note to George Sale's English translation (1734)
  5. Introductory note to the Russian translation (1716)
  6. Introductory note to André Du Ryer's French translation (1647)
  7. Introductory note to Giovanni Castrodardo's Italian translation, as published by Andrea Arrivabene (1547)
  8. Introductory note to Robert of Ketton's Latin translation (1143), as edited by Theodor Bibliander (1550). 
  9. Introductory note to Tafsīr al-Ğalālayn (15th century)

தமிழில்:

  1. அரபி பிரிண்ட் கெய்ரோ குர்‍ஆன் 1924
  2. பிரென்சு குர்‍ஆன் மொழியாக்கம் 2000
  3. பிரென்சு குர்‍ஆன் மொழியாக்கம் 1957
  4. ஆங்கில குர்‍ஆன் மொழியாக்கம் 1734
  5. ரஷ்ஷிய குர்‍ஆன் மொழியாக்கம் 1716
  6. பிரென்சு குர்‍ஆன் மொழியாக்கம் 1647
  7. இத்தாலிய குர்‍ஆன் மொழியாக்கம் 1547
  8. லத்தீன் குர்‍ஆன் மொழியாக்கம் 1550
  9. ஜலலைன் தஃப்ஸீர் அறிமுகம் - 15வது நூற்றாண்டு

மேற்கண்ட ஒவ்வொரு மொழியாக்கத்தைப் பற்றிய அடிப்படை விவரங்கள் அந்தந்த தொடுப்புக்களில் கொடுக்கப்பட்டுள்ளது. நாம் கெய்ரோ 1924ம் ஆண்டு குர்‍ஆன் பற்றிய ஆய்வுக் கட்டுரையை படிக்கும் போது, கீழ்கண்ட விவரங்கள் ஆச்சரியத்தைக் கொடுக்கும், இந்த விவரங்களை முஸ்லிம் ஆய்வாளர்களே எழுதியுள்ளார்கள் என்பது தான் ஆச்சரியத்தின் ஆழம்:

Quote:

The Cairo Edition (1924)

"However, it is worth noting that the variations observed in this case do not have any real impact on the meaning of the text. As for the Quranic script (rasm), the variant readings (qirā'āt) and the counting of the verses (fawāṣil), the commission consulted Quranic science treatises. In particular, they used the works of Abū ʿAmr al-Dānī (d. 444/1053) and his disciple Abū Dāwūd Ibn Naǧāḥ (d. 496/1103). In contrast, the more ancient codices of the Qur'ān, called maṣāḥif in Arabic, and which are preserved in Muslim countries such as Egypt, Syria and Turkey were ignored. Neglecting those maṣāḥif is somehow unfortunate because recent studies show interesting disparities between what these Quranic treatises of science say about the manuscripts, and what the codices at our disposal actually contain. One can notably find in the latter extra-canonic reading variants that preceded the period when the Quranic corpus was standardized."

இருப்பினும், இங்கு காணப்படும் வித்தியாசங்கள், வசனங்களின் அர்த்தத்தை மாற்றுவதில்லை என்பதை இங்கு குறிப்பிடவேண்டும்.  குர்‍ஆனின் எழுத்துக்கள் (rasm), குர்‍ஆனின் பலவகையான வாசிப்பு முறைகள் (qirā'āt), குர்‍ஆன் வசன எண்ணிக்கைகள் (fawāṣil) பற்றிய விவரங்களை, இந்த குழு குர்‍ஆன் சம்மந்தப்பட்ட‌ பல நூல்களை ஆய்வு செய்துள்ளது. முக்கியமாக, இந்த குழு அபு அம்ர் அத்தானி(இறப்பு. ஹிஜ்ரி 444/கி.பி 1053) மற்றும் அவரது சீடர் அபு தாவூத் இப்னு நகஹ் (இறப்பு. ஹி. 496/கி.பி 1103) ஆகியோரின் புத்தகங்களை பயன்படுத்தினர். மாறாக, இந்த குர்‍ஆன் குழு எகிப்து, சிரியா மற்றும் துருக்கி போன்ற முஸ்லீம் நாடுகளில் பாதுகாக்கப்பட்டு வரும், குர்‍ஆனின் மிகவும் பழமையான அரபு கையெழுத்துப் பிரதிகளை (மஸாஹிஃப்) புறக்கணித்தார்கள்இப்படி அவர்கள் பழமையான குர்‍ஆன் பிரதிகளோடு சரி பார்க்காதது ஒரு துரதிர்ஷ்டமான  செயலாகும். ஏனென்றால், சமீப காலமாக இந்த அரபு கையெழுத்துப் பிரதிகள் மீது செய்யப்பட்ட ஆய்வுகளின் படி, கெய்ரோ குர்‍ஆனுக்கும், கையெழுத்துப் பிரதிகளுக்கும் இடையே பல வித்தியாசங்கள் காணப்படுகின்றன. கெய்ரோ குர்‍ஆனில் பல மாற்றங்கள்/வித்தியாசங்கள் காணப்படுகின்றன, முக்கியமாக‌ கையெழுத்துப் பிரதிகளில் காணப்படுபவைகளே பழமையானதாக உள்ளன.

. . .

To sum up, the interpretation of the Qur'ān and the observed differences in its translations implies a study of the nature of the Quranic corpus and the variants on which it was based. The major problem with the Cairo edition lies in the absence of references to manuscripts: consulting them would have probably allowed us to obtain a text elaborated in a specific period of time, and thus to assess to what extent it is faithful or not to a certain reality of the corpus we have at our disposal. 

முடிவுரையாக சொல்வதானால், மூல குர்‍ஆனுக்கும், அதன் பிறகு உண்டான‌ குர்‍ஆன் ஓதும் முறைகளில் (கிராத்துக்களில்) உள்ள வித்தியாசங்களின் வெளிப்பாடு தான், குர்‍ஆனின் மொழியாக்கங்களில் காணப்படும் வித்தியாசங்கள் ஆகும். கெய்ரோ குர்‍ஆனின் முக்கியமான பிரச்சனை என்னவென்றால், "எந்த இடத்திலும், எந்த ஒரு மூல அரபு கையெழுத்துப் பிரதிகள் பற்றிய குறிப்புகளை அது சான்றுகளாக‌ கொடுக்கவில்லை"ஒருவேளை, இப்படிப்பட்ட மூல கையெழுத்துப் பிரதிகளின் குறிப்புக்கள் கெய்ரோ குர்‍ஆனில் கொடுத்திருந்தால், அவைகளின் மூலமாக, குர்‍ஆனின் சரியான பின்னணி/காலங்கள்/அர்த்தங்கள் பற்றி அறிந்துக்கொள்ள‌ வாய்ப்பு கிடைத்திருக்கும், மேலும், அவ்வசனங்களின் நம்பகத்தன்மைக்கு ஒரு சான்று கிடைத்து,  அவைகளை ஏற்றுக்கொள்ளலாமா, இல்லையா என்ற முடிவுக்கு வரலாம்.

மேலேயுள்ள விவரங்களை சரியாக கூர்ந்து படித்துப் பாருங்கள், முக்கியமாக ஆங்கிலத்தில் படியுங்கள், உண்மை புரியும். 

மேற்கண்ட இரண்டு பத்திகளின் சுருக்கம்:

  • கெய்ரோ குர்‍ஆன் தயாரிக்கும் போது, மூல அரபு குர்‍ஆன் பிரதிகளை சரிபார்க்காதது துரதிர்ஷ்டமானது. அவர்கள் மூல பிரதிகளை புறக்கணித்தார்கள்.
  • கெய்ரோ குர்‍ஆனின் மிகப்பெரிய பிரச்சனை (தவறு), மூல அரபு குர்‍ஆன்களோடு சரி பார்க்காதது தான்.
  • இப்படி அவர்கள் செய்யாமல் இருந்திருந்தால், நமக்கு எவைகள் சரியான வசனங்கள் என்று அறிந்துக்கொள்ள வாய்ப்பு உண்டாகியிருந்திருக்கும்.
  • இதனால், இன்று மூல குர்‍ஆன்களை ஆய்வு செய்யும் போது, நம் கையில் உள்ள குர்‍ஆனோடு அனேக வசனங்கள் அவைகள் வித்தியாசப்படுகின்றன.

முடிவுரை:

மேலே கண்ட விவரங்களிலிருந்து அறிவது என்னவென்றால்,  இன்று உலக முஸ்லிம்கலில் 95% பேர் பயன்படுத்தும் குர்‍ஆன் கெய்ரோவில் 1924ம் ஆண்டு வெளியிட்ட குர்‍ஆன் ஆகும், அதையே சௌதி அரசும் 1985ம் ஆண்டு முதல்  அதிகாரபூர்வமான குர்‍ஆனாக‌ பிரிண்ட் செய்து இலவசமாக கொடுத்துக்கொண்டு இருக்கிறது.  ஆனால், இந்த குர்‍ஆனை தரப்படுத்தும் போது 1924ம் ஆண்டு அல் அஜர் பல்கலைக்கழக முஸ்லிம்கள் அறிஞர்கள், இன்று இஸ்தான்புல் மற்றும் சமர்கண்ட் இடங்களில் வைக்கப்பட்டுள்ள 'மூல அரபு குர்‍ஆன்' கையெழுத்துப் பிரதிகளோடு ஒப்பிட்டு, சரிபார்த்து வெளியிடவில்லை என்பது, வேதனையான மற்றும் ஆச்சரியமான விஷயமாகும்.

இந்த விஷயம் எத்தனை முஸ்லிம்களுக்குத் தெரியும்?

இன்று, அந்த மூல அரபு குர்‍ஆன்களோடு, 1924ம் ஆண்டின் குர்‍ஆனை ஒப்பிட்டால், பலப்பல வித்தியாசங்கள், எழுத்து நீக்கங்கள், வார்த்தை நீக்கங்கள் போன்று அனேக வித்தியாசங்கள் காணப்படுகின்றன, இதனை முஸ்லிம் அறிஞர்கள் அறிந்து, நொந்துக்கொள்கிறார்கள்.

ஆனால், நம்முடன் இருக்கும் முஸ்லிம் அறிஞர்கள், நமக்கு இவைகள் தெரியாது என்று நம்பி, "நாம் படிக்கும் குர்‍ஆன் உலக நாடுகள் அனைத்திலும் ஒரே மாதிரியாக இருக்கும், எழுத்துக்குஎழுத்து புள்ளிக்கு புள்ளி, வார்த்தைக்கு வார்த்தை ஒரே மாதிரியாக இருக்கிறது' மேலும், பழைய மூல அரபு குர்‍ஆன்களோடு ஒப்பிட்டுப் பாருங்கள், ஒரே ஒரு வித்தியாசம் கூட இருக்காது என்று பல பொய்களை அள்ளிவீசிக்கொண்டு இருக்கிறார்கள்.

இவர்களை யார் கேள்வி கேட்பது? உண்மையான முஸ்லிம்கள் தான் கேள்வி கேட்கவேண்டும்.

முஸ்லிம்கள் கேட்பார்களா? தங்கள் குர்‍ஆனை சரி செய்துக்கொள்வார்களா? மூல பழைய குர்‍ஆன்கள் நம்மிடம் இருக்கும் போது, அவைகளை பிரிண்ட் செய்து படிப்பார்களா? அல்லது பல தவறுகள் இருக்கின்ற 1924ம் ஆண்டில் குர்‍ஆனை படிப்பார்களா?

சமர்கண்ட், இஸ்தான்புல் குர்‍ஆன் பிரதிகளை கீழ்கண்ட தொடுப்புக்களை சொடுக்கி பார்க்கலாம்:

  1. The "Qur'ān Of ʿUthmān" At Tashkent (Samarqand), Uzbekistan, From 2nd Century Hijra
  2. Samarkand Kufic Quran
  3. Topkapi manuscript
  4. Uthman Quran or Samarkand Kufic Quran (Youtube Video)

தேதி: 30th Oct 2021

குர்‍ஆனின் இதர ஆய்வுக் கட்டுரைகள்

குர்‍ஆன் பக்கம்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/arabic_quran/quran_cairo_istanbul_tashkant.html

சனி, 23 அக்டோபர், 2021

சின்னஞ்சிறு கேள்வி பதில்கள்: தலைப்பு - பிரிண்ட் (1924) குர்‍ஆன் & ஹ‌ஃப்ஸ் குர்‍ஆன், கேள்விகள் 541 லிருந்து 550 வரை - (பாகம் 26)

சின்னஞ்சிறு "இஸ்லாம் கிறிஸ்தவம்" தலைப்பின் முந்தைய 540 கேள்வி பதில்களை படிக்க இங்கு சொடுக்கவும். இந்த கட்டுரையில் "பிரிண்ட் குர்‍ஆன் & ஹ‌ஃப்ஸ் குர்‍ஆன்" சம்மந்தப்பட்ட 10 கேள்வி பதில்களைக் காண்போம்.

கேள்வி 541: ஹ‌ஃப்ஸ் என்பவர் யார்? ஹஃப்ஸ் குர்‍ஆன் என்றால் என்ன?

பதில் 541: அபூ அமர் ஹஃப்ஸ் இப்னு சுலைமான்(Abū ʽAmr Ḥafṣ ibn Sulaymān) என்பவர், குர்‍ஆன் கிராத்துக்களை கொடுத்தவர்களில் இவரும் ஒருவர் ஆவார். சுருக்கமாக, இவரை ஹஃப்ஸ் என்று அழைப்பார்கள்.  இவரது காலக்கட்டம் கி.பி. 706–796 (ஹிஜ்ரி 90–180) ஆகும்.  இஸ்லாமிய உலகில், குர்‍ஆனை அழுத்தமாகவும், அழகாகவும் அரபியில்  ஓதி, அதனை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுப்பவர்களை "காரீ" என்பார்கள். இவருடைய ஆசிரியர் ஆசிம் (Aasim ibn Abi al-Najud) ஆவார். 

இன்றைய உலகில் முஸ்லிம்கள் பயன்படுத்தும் அரபி குர்‍ஆன்களில் 95 சதவிகிதத்திற்கும் அதிகமாக பயன்படுத்துவது, இரவது ஓதல் முறையிலான குர்‍ஆன் ஆகும். இதனை சுருக்கமாக 'ஹஃப்ஸ் குர்‍ஆன்' என்று கூறுவார்கள். சௌதி அரசாங்கம், 1985ம் ஆண்டிலிருந்து, ஒரு அச்சகம் அமைத்து, ஹஃப்ஸ் கிராத் குர்‍ஆன்களை பிரிண்ட் செய்து இலவசமாக கொடுக்கிறது.  எனவே தான் இது உலகளாவிய பயன்பாட்டில் அதிகமாக‌ உள்ளது.

கேள்வி 542: வர்ஷ்(Warsh) குர்‍ஆன் என்றால் என்ன? வர்ஷ் (Warsh) மற்றும் ஹஃப்ஸ்(Hafs) குர்‍ஆன் ஏன் அடிக்கடி ஒப்பிடப்படுகிறது?

பதில் 542:

நாம் ஹஃப்ஸ் பற்றி முந்தைய கேள்வியில் பார்த்தது போன்று, வர்ஷ் என்பவரும் ஒரு "காரீ (குர்‍ஆனை ஓதுபவர்)" ஆவார். இவரது முழுபெயர் அபூ ஸயித் உத்மான் இப்னு ஸயித் அல்குத்பி என்பதாகும், சுருக்கமாக "வர்ஷ்" என்று இவரை அழைப்பார்கள். இவரது காலக்கட்டம் கி.பி. 728 – 812 (ஹிஜ்ரி 110-197) ஆகும். இவரது ஓதுதலின் படி உள்ள கிராத்தை, "வர்ஷ் குர்‍ஆன்" என்று அழைப்பார்கள். இமாம் ஹஃப்ஸ் மற்றும் இமாம் வர்ஷ் என்பவர்களைப் போன்று அனேகர் இன்னும் இருக்கிறார்கள்.  

இஸ்லாமிய அறிஞர்கள், இப்படிப்பட்ட "பல குர்‍ஆன் ஓதுபவர்களை" பட்டியலிட்டுள்ளார்கள். இவர்களில் 10 பேரை முஸ்லிம் அறிஞர்கள் முக்கியமானவர்களாக குறிப்பிடுகிறார்கள். இந்த 10 பேரிலிருந்து, 7 பேரை இன்னும் முக்கியப்படுத்தி தெரிவு செய்துள்ளார்கள். இந்த ஏழு ஓதுதலை அல்கிராத் அஸ்ஸப் (al-qira'at as-sab - The Seven Readings) என்று கூறுவார்கள். 

மேற்கண்ட 10 பேரிடம் பல மாணவர்கள் குர்‍ஆன் ஓதுதலை கற்றுக்கொண்டு, "அதனை தங்கள் சுய ஓதுதலின்படி" எழுத்து வடியில் அடுத்த சந்ததியினருக்கு சேர்த்துள்ளார்கள். இந்த மாணவர்களில் இரண்டு பேருடைய  ஓதுதல் முறையை முஸ்லிம்கள் அங்கீகரித்துள்ளார்கள். ஆக, 10 ஆசிரியர்கள், ஒவ்வொரு ஆசிரியரிடமிருந்து கற்ற இரண்டு மாணவர்கள், மொத்தம் 10 x 2 = 20 குர்‍ஆன்கள் குறைந்தபட்சம் இன்று நம்மிடம் உள்ளன.

குர்‍ஆனை கற்றுக்கொடுத்த ஆசிரியரை "The Reader(ஓதுபவர்)" என்றும், அவரிடமிருந்து கற்று அடுத்த சந்ததிக்கு சேர்த்த‌ நபரை "The Transmitter (நம்மிடம் சேர்த்தவர்கள்)" என்றும் ஆங்கிலத்தில் கூறுவார்கள்.

கீழே தரப்பட்டுள்ள பட்டியலில், பொதுவாக எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓதுபவர்கள் (Readers) மற்றும் அவர்களது Transmistters மற்றும் அவைகள் தற்போது எந்த நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்குகிறது.

ஆக, 20க்கும் அதிகமான அரபி மூல குர்‍ஆன்கள் உள்ளன.

மூலம்: www.answering-islam.org/tamil/images_lessons/twenty_quran_qirats.html

உலகின் முதல் இரண்டு இடங்களில் ஹஃப்ஸ்(95%) குர்‍ஆன் மற்றும் வர்ஷ் (3%) குர்‍ஆன் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கேள்வி 543: உலகின் முதல் பிரிண்ட் செய்யப்பட்ட அரபி குர்‍ஆன் எது? பகனினி குர்‍ஆன் (Paganini Quran) என்றால் என்ன?

பதில் 543:

பகனினி குர்‍ஆன் (Paganini Quran) 

பகனினி குர்‍ஆன் (Paganini Quran) என்பது, இத்தாலியின் வெனிஸ் நகரில், 1537-1538ம் காலக்கட்டத்தில் 'அசையும் அச்சுப்பொறியின் (Movable Type Printer) மூலமாக' பிரிண்ட் எடுக்கப்பட்ட முதல் அரபு குர்‍ஆன் ஆகும்.[1][2]

இதற்கு "வெனிஸ் குர்‍ஆன் - Venice Quran" என்ற பெயரும் உள்ளது. பகனினி மற்றும் அவரது மகன் பகனினோ இருவரும் தங்கள் அச்சகத்தில் இந்த குர்‍ஆனை பிரிண்ட் செய்து, அக்காலத்தின் இஸ்லாமிய தலைமையகமாக இருந்த ஒட்டமன் நாட்டுக்கு (இன்றைய துருக்கி) ஏற்றுமதி செய்து, நிறைய சம்பாதிக்கலாம் என்று நினைத்து, இந்த வேலையை தொடங்கினார்கள்.

ஆனால், அவர்களின் வியாபார கனவு நிறைவேறவில்லை என்று சொல்லப்படுகின்றது.  அக்காலக்கட்டத்தில் வாழ்ந்தவர்கள் இந்த குர்‍ஆன் பற்றி தங்கள் புத்தகங்களில் குறிப்பு எழுதியிருந்தார்கள், ஆனால் 1987வரை, இந்த பிரிண்ட் குர்‍ஆனின் ஒரு பிரதியும் எங்கும் கிடைக்கவில்லை. 

உலகின் முதல் அச்சு செய்யப்பட்ட முழு அரபி குர்‍ஆன்

1987ம் ஆண்டு, பகனினி குர்‍ஆனின் (Paganini Quran) ஒரு பிரிண்ட் பிரதி, வெனிஸ் நகரில் இருக்கும் ஒரு துரவி மாடத்தின் நூலகத்தில் (Isola di San Michele, Venice)  கிடைத்தது. இது தான் உலகின் முதல் அச்சு செய்யப்பட்ட முழு அரபி குர்‍ஆன் ஆகும். 

இந்த குர்‍ஆனின் அனைத்து பிரதிகளும் 1620ம் ஆண்டு எரிந்துவிட்டன, அதிலிருந்து தப்பித்த ஒரு குர்‍ஆன் 1987ம் ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.  இதன் எரிப்பில் கத்தோலிக்க போப்பின் கை உள்ளது என்றும் கூறப்படுகின்றது. இந்த குர்‍ஆனில் பல எழுத்துப் பிழைகள் உள்ளன‌ என்பதை நாம் இன்றும் காணலாம். இதில் 464 பக்கங்கள் உள்ளன.

Quote:

It was possibly the most daring and pioneering enterprise in sixteenth-century Venetian printing, this edition was mentioned by a handful of contemporary witnesses, and was reported as wholly destroyed as early as 1620. The reasons suggested for its destruction ranged from its suppression by the Pope ("Pontifex Romanus exemplaria ad unum omnia impressa suppressit") to the ridiculous (divine intervention would prevent its printing), but without any copies to study, and without any reference in a bibliography or library catalogue, the mysterious edition was regarded as a ghost.

In 1987 Professor Angela Nuovo found a single copy in the library of the Franciscan Friars of Isola di San Michele, in Venice. The copy contains a note of ownership of Teseo Ambrogio degli Albonesi, who died soon after 1540, and the stamp of Arcangelo Mancasula, Vicar of the Holy Office (Holy Inquisition) of Cremona, applied a few years later. Albonesi, an orientalist from Pavia, is the only person known to have handled the first printed edition of the Qu'ran in Arabic, and he referred to it in his Introductio in Chaldaicam linguam, Syriacam atque Armenicam (Pavia, 1539). [1]

அந்த காலக்கட்டத்தில், குர்‍ஆனை அச்சு இயந்திரத்தில் பிரிண்ட் செய்பவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்படும் என்ற ஃபத்வா கூட இருந்ததாக கூறப்படுகிறது.

Fatwa against the printing press

In the year 1515, Shaykh al-Islam of the Ulema (learned scholars) issued a Fatwa that printing was Haram (forbidden). As a result, Ottoman Sultan Selim I issued a decree of a death penalty on anyone using the printing press. The fatwa has been attributed as one of the reasons for the stagnation of knowledge, invention and discovery in the Muslim world, at a time when Europe was in the midst of the Renaissance period. Source 

இந்த பகனினி குர்‍ஆனின் பக்கங்களை காண இந்த தொடுப்புக்களை சொடுக்கவும்:

  1. madainproject.com/content/media/collect/venice_manuscript_2371.jpg
  2. madainproject.com/content/media/collect/venice_manuscript_3870.jpg
  3. madainproject.com/content/media/collect/venice_manuscript_2378.jpg
  4. madainproject.com/content/media/collect/venice_manuscript_3627.jpg (Library)
  5. Al-Fatiha – Image
  6. Qur'an printed by Paganino and Alessandro Paganini, 1537-38, Venice -  
  7. Chapter 1 and start of Chapter 2 - Images

அடிக்குறிப்புக்கள்:

கேள்வி 544: பகனினி குர்‍ஆன்(1538) முதல் கெய்ரோ குர்‍ஆன் (1924) வரையிலான அரபி குர்‍ஆனின் அச்சுப்பயணம் பற்றிய ஒரு சுருக்கத்தைக் கொடுக்கமுடியுமா?

பதில் 544:

உலகளாவிய முஸ்லிம்கள் இன்று பயன்படுத்தும் குர்‍ஆன், கெய்ரோவில் 1924ம் ஆண்டு பிரிண்ட் செய்யப்பட்ட ஹஃப்ஸ் கிராத்தின்படியுள்ள குர்‍ஆன் ஆகும்.

கி.பி. 1538ம் ஆண்டு முதல் 1924ம் ஆண்டுவரை குர்‍ஆனின் அச்சுப்பயணம்

பகனினி குர்‍ஆன் பிரிண்ட் செய்யப்பட்ட  1538ம் ஆண்டு முதல், கெய்ரோ குர்‍ஆன் பிரிண்ட் செய்யப்பட்ட 1924ம் ஆண்டுவரையிலான குர்‍ஆனின் அச்சுப்பயணம் பற்றிய ஒரு சுருக்கத்தை இப்போது காண்போம்.

  1. பகனினி அச்சுக் குர்‍ஆன் – Paganini Quran, Venice (1538) 
  2. பாஸ்டர் அப்ரஹாம் ஹின்கெல்மன் - Pastor Abraham Hinckelmann's Quran (1694)
  3. இத்தாலிய பாதிரியார் லுடொவிகோ மரச்சி - Priest Ludovico Maracci's Quran (1698)
  4. ரஷ்ஷியாவின் கேத்ரீன் அரசியின், செயிண்ட் பீடர்ஸ்பர்க் குர்‍ஆன் - Catherin's sponsor, Saint Peersburg's Quran - (1787, 1790 & 1793)
  5. கஜான் அச்சகத்தின் பிரிண்ட் குர்‍ஆன் - Islamic city Kazan's first Quran (1803) 
  6. ஈரானின் முதல் பிரிண்ட் குர்‍ஆன் - Iran's 1st printed Quran (1828)
  7. கஸ்டவ் ஃப்லூகெல் அரபி குர்‍ஆன் - Gustav Flügel's Arabic Print Quran (1834)
  8. ஒட்டமன் அரசின் முதல் அதிகாரபூர்வமான பதிப்பு, காண்ஸ்டான்டிநோபுலில் பிரிண்ட் குர்‍ஆன் – Ottamon's first official Quran edition (1875-77)
  9. கெய்ரோ குர்‍ஆன் – Egypt, Cairo Quran (1924)

அரபி குர்‍ஆனின் அச்சுப்பயணத்தை பார்ப்பதற்கு முன்பு, ஏன் இஸ்லாமிய நாடுகளில் அரபி குர்‍ஆன் பிரிண்ட் செய்யப்பட, அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகும் 300 ஆண்டுகள் ஆனது, என்பதை சுருக்கமாக காண்போம்.

ஒட்டமன் இஸ்லாமிய அரசின் அரபி எழுத்து (குர்‍ஆன்) பிரிண்ட் தடைச்சட்டம் கி.பி. 1483 - 1726 

(Ottoman's ban on printing Arabic Script - 1483 and 1726)

அச்சு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டும், 300 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாமிய நாடுகளில் ஏன் அரபி குர்‍ஆன்களை பிரிண்ட் செய்ய தாமதித்தன?   அன்றைய இஸ்லாமிய தலைமையகமாக இருந்த ஒட்டமன் அரசு, அரபி எழுத்துக்களை கைகளினால் எழுதவேண்டுமே ஒழிய அவைகளை அச்சு இயந்திரங்களினால் பிரிண்ட் எடுக்கக்கூடாது என்று தடை விதித்து இருந்தது. இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்படும். அரபி எழுத்துக்களில் குர்‍ஆன் மட்டுமல்ல, வேறு விதமான சாதாரண மத‌சார்பற்ற புத்தகங்களும் பிரிண்ட் செய்யப்படக்கூடாது என்பது தான் இந்த சட்டத்தில் உள்ள பிரச்சனை.

இதனால் இஸ்லாமிய நாடுகளில், மற்ற மொழிகளில் அச்சு இயந்திரங்கள் மூலமாக புத்தகங்கள் வெளிவந்தாலும், அரபி மொழியில் குர்‍ஆனோ, அல்லது மற்ற புத்தகங்களோ அச்சடிக்காமல் விட்டுவிட்டனர். 15ம் நூற்றாண்டில் அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டிலிருந்து , பல துறைகளில் புத்தகங்களை பிரிண்ட் செய்து ஐரோப்பிய நாடுகள் முன்னேறிக்கொண்டு இருந்தாலும், இஸ்லாமிய நாடுகள் கிட்டத்தட்ட 2 அல்லது 3 நூற்றாண்டுகள் அரபி மொழியில் அச்சு இயந்திரங்களைக் கொண்டு புத்தக‌ங்களை பிரிண்ட் செய்யாமல், தங்கள் மக்களின் அறிவை பெருக்கிக்கொள்ள வாய்ப்பு அளிக்காமல் பின் தங்கிவிட்டனர்.

இந்த தடையை நீக்கும்படி பலர் எடுத்த முயற்சியினால், 1726ம் ஆண்டிலிருந்து இந்த தடை சட்டம் நீக்கப்பட்டது, அதுவும், அரபி மொழியில் 'குர்‍ஆனை தவிர்த்து' மற்ற புத்தகங்கள் அச்சடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. கடைசியாக, 1875ம் ஆண்டு, ஒட்டமன் இஸ்லாமிய அரசின் அதிகார பூர்வமான அரபி குர்‍ஆன் காண்ஸ்டான்டிநோபலில் பிரிண்ட் செய்யப்பட்டது.

1)  பகனினி அச்சுக் குர்‍ஆன் – Paganini Quran, Venice (1538) 

முந்தைய கேள்வியை (543) பார்க்கவும்.

2) பாஸ்டர் அப்ரஹாம் ஹின்கெல்மன் - Pastor Abraham Hinckelmann's Quran (1694)

ஹிங்கெல்மேன் ஒரு புராட்டஸ்டன்ட் இறையியலாளர் மற்றும் ஓரியண்டலிஸ்ட் ஆவார், 1694 இல் இவர் அரபி குர்‍ஆனை ஹம்பர்க் நகரில் வெளியிட்டார்.  கி.பி. 1537/1538ம் ஆண்டில் வெனிஸ் நகரில் வெளியான பகனினி குர்‍ஆனுக்கு அடுத்தபடியாக, கிறித்துவ ஐரோப்பாவில் அச்சு செய்யப்பட்ட இரண்டாவது முழுமையான அரபி குர்‍ஆன், இந்த ஹிங்கெல்மனின் அரபி குர்‍ஆன் ஆகும்.

இந்த ஹிங்கெல்மேன்  தம்முடைய அரபி குர்‍ஆனுக்கு 80 பக்கங்கள் கொண்ட ஒரு நீண்ட‌ முன்னுரையை கொடுத்தார். ஏன் 'குர்‍ஆனின் மூல மொழியிலே தாம் குர்‍ஆனை வெளியிட்டார் என்றும், ஏன் அரபியை கற்று ஆய்வு செய்யவேண்டும் என்பது பற்றியும் அதில் அவர் எழுதினார்'.

Hinckelmann's edition of the Koran was a milestone in this respect. In an 80-page foreword Hinckelmann justifies not only his publishing of the Koran in its original language – a much contested initiative at the time – but also offers a detailed description of "Arabic Studies," based on his own extensive knowledge, that would be valuable from a scholarly and historical perspective.  . . . Source

அன்றைய முஸ்லிம் நாடுகளின் ஆதிக்கத்திலிருந்து விடுபடவும், அவர்களோடு போராடி வெற்றி பெறவும், வெறும் யுத்த ஆயுதங்கள் போதாது, அவர்களின் வேதம், கலாச்சாரம், மொழியைக் கற்பது இன்றியமையாத‌து என்று, 12ன் நூற்றாண்டிலேயே அழுத்தம் திருத்தமாக கருத்து முன்வைக்கப்பட்டது. ஆகையால், கிறிஸ்தவ ஊழியர்கள், எபிரேய, கிரேக்க மொழிகளோடு கூட, அரபியையும் கற்கவும், அதில் திறமையை வளர்த்துக்கொள்ளவும் தொடங்கினர், அதன் வெளிப்பாடு தான் இந்த ஹம்பர்க் நகரில் வெளியான குர்‍ஆன்.

The first Latin translation of the Koran dates from the 12th century and came from the pen of Robert of Ketton, an English astronomer, translator, priest and diplomat in 1143. He was convinced of the necessity that the battle against the Muslims be carried on, not only with weapons, but also in the form of theological disputation with Islam. In the 14th century, it was resolved at the Council of Vienna (1311) that several European universities would institute the study of Arabic, Hebrew, and Aramaic (which was known as Chaldean at that time). In post-Reformation Europe, especially in the 17th century, numerous professorships were dedicated to the research of Hebrew and other "languages of the Orient.". . .

That Hinckelmann presents himself in his foreword as a decided adversary of Islam seems to have been his way of getting around the criticism of his contemporaries. He likewise argues that one must know the Koran thoroughly in order to effectively fight it. Hinckelmann was a Christian theologian and biblical scholar and as such obliged to hold the received conception of Hebrew as the mother of all languages. Source

2012ம் ஆண்டில், அப்ரஹாம் ஹின்கெல்மேன் அவர்களின் நூலகத்திலிருந்து எடுக்கப்பட்ட பல குர்‍ஆன் கையெழுத்துப் பிரதிகள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டன, அவைகள் பற்றிய தொடுப்பு:  Quran Manuscripts from the Library of Abraham Hinckelmann

3) இத்தாலிய பாதிரியார் லுடொவிகோ மரச்சி - Priest Ludovico Maracci's Quran (1698)

லூயிஸ் (அ) லுடோவிகோ மரச்சி (கி.பி. 1612-1700) என்பவர், ஒரு இத்தாலிய ஓரியண்டல் அறிஞர் ஆவார் மற்றும் ரோமில் உள்ள விஸ்டம் கல்லூரில், அரபு மொழி பேராசிரியராக இருந்தார். இவர் அரபி குர்‍ஆன் பதிப்பகர்  என்ற பட்டப்பெயராலும் அறியப்பட்டார். இவர் லத்தீன் மொழியில் குர்ஆனை மொழிப்பெயர்த்தார், மற்றும் அரபி பைபிளில் இவரது பங்கும் சிறப்பானதாகும். 

வாடிகன் குர்‍ஆன் (Vatican Quran):  

இவர் ஹென்கில்மேனின் அரபி குர்‍ஆனை, லத்தீன் மொழியாக்கத்தோடு 1698ல் வெளியிட்டார். இவரது குர்ஆன் பதிப்பில் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று குறிப்புகளும், மற்றும் முஸ்லீம் கோட்பாடுகளின் மறுப்புகளும் கொடுக்கப்பட்டு இருந்தன என்பது சிறப்பம்சமாகும். இவர் 1691 இல், லத்தீன் மொழியில், "குர்ஆனுக்கு மறுப்பு" என்ற தலைப்பில் ஒரு மறுப்பு புத்தகத்தையும் வெளியிட்டார்.

ஜார்ஜ் சேலின் (George Sale) கி.பி. 1736ல் வெளியான‌ "குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பு", மரச்சியின் 1698 லத்தீன் மொழிபெயர்ப்பின் அடிப்படையில் மொழியாக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது குர்‍ஆனின் முதல் பக்கத்தை பார்க்க இந்த தொடுப்பை சொடுக்கவும்:

4) ரஷியாவின் கேத்ரீன் அரசியின், செயிண்ட் பீடர்ஸ்பர்க் குர்‍ஆன் - Catherin's sponsor, Saint Peersburg's Quran - (1787, 1790 & 1793)

1786 ஆம் ஆண்டில், ரஷ்யாவின் கேத்தரின் த கிரேட் (Catherin the Great) என்ற அரசி, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் "டாடர் (Tatar) மற்றும் துருக்கிய அச்செழுத்து முறையில்" குர்‍ஆனை அரபியில் பிரிண்ட் செய்ய, ஒரு அச்சகத்திற்கு அனுமதி அளித்து, உதவியும் அளித்தார்.  அரபி அச்சு எழுத்துக்களை உருவாக்கும் பொறுப்பை, முல்லா உஸ்மான் இஸ்மாயில் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அரபி குர்‍ஆன் செயிண்ட் பீடர்ஸ்பர்க் நகரின் இந்த அச்சகத்திலிருந்து 1787, 1790 மற்றும் 1793ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

ரஷியாவிலிருந்து வெளியிடப்பட்ட முதல் அச்சு அரபி குர்‍ஆன் இதுவே.

5) கஜான் அச்சகத்தின் பிரிண்ட் குர்‍ஆன் - Islamic city Kazan's first Quran (1803) 

இதுவரை மேலே பார்த்த அரபி குர்‍ஆன்கள் அனைத்தும் 'இஸ்லாமியரல்லாத நகரங்களில்' பிரிண்ட் செய்யப்பட்டவைகளாகும். ஆனால், ரஷ்ஷியாவின் கஜான் என்ற இஸ்லாமிய நகரில் முதன் முதலாக பிரிண்ட் செய்யப்பட்டது, இந்த குர்‍ஆன் தான். 

TEHRAN (IQNA) – The people of the Republic of Tatarstan are proud that the Republic's capital city of Kazan was the first Muslim city where a copy of the Quran was printed, Mufti Kamil Samigullin said. 

Speaking at an event at the Islamic University of Kazan, Samigullin said it was in Kazan in the year 1803 that the first copy of Quran was printed in an Islamic city, an7a.com website reported.

He noted that at that time, printing books in Arabic was very difficult and faced many restrictions under Russian tsars.

The cleric also said that the first printed copy of the Quran was produced in Venice, Italy, in 1537.

Later, copies Islam's Holy Book were printed elsewhere in Europe, including in Hamburg, Germany, in 1694, he noted.

Those copies had many errors in them, including printing errors, Samigullin went on to say.

Kazan is a city in southwest Russia, on the banks of the Volga and Kazanka rivers. It is the capital of the Republic of Tatarstan, a semi-autonomous region of the Russian Federation.

KAZAN QURAN PROPOSED FOR THE UNESCO LIST - கஜான் குர்‍ஆனை யுனெஸ்கோ பண்டைய கலாச்சார பட்டியலில் சேர்க்கவேண்டும்

"In order to enter the UNESCO list it is necessary that our Kazan historical Quran, which has had dozens of editions, went through the international Quranic certification.

It will be passed when the examining sccholars express their opinion and will outline ways to do it," one of the organizers of the forum, an Islamic scholar Farid hazrat Salman, said in an interview with TASS.

The first printed Koran was published in Kazan in 1803 by order of Catherine II. 

Thanks to the joint efforts of the state and the Tatar clergy, printed versions of the Kazan Quran were widely circulated not only among the Muslims of the Russian Empire, but also the neighboring Muslim states, and later all over the world.

The First Edition of the Qur'an Printed by Muslims is Issued in Kazan, Tartarstan

By a decree of December 15, 1800 restrictions on the publication of Islamic religious literature were lifted in Russia, and in 1801 the Arabic typeface of the St. Petersburg press was transferred to Kazan where in 1801 the Qur'an (Koran) was first published in a printed edition issued in 1801 printed by Muslims in Kazan , capital of the Republic of Tartarstan . Prior to this date, and for most of the nineteenth century, the Qur'an was primarily transmitted by manuscript copying.

6) ஈரானின் முதல் பிரிண்ட் குர்‍ஆன் - Iran's 1st printed Quran (1828)

ஈரான் நாட்டில் 1828ம் ஆண்டிலிருந்து பிரிண்ட் செய்யப்பட்ட குர்‍ஆன்கள் வெளிவர ஆரம்பித்தன.இந்த குர்‍ஆன் பற்றி எனக்கு மேலதிக விவரங்கள் கிடைக்கவில்லை.

7) கஸ்டவ் ஃப்லூகெல் அரபி குர்‍ஆன் - Gustav Flügel's Arabic Print Quran (1834)

கஸ்டவ் ஃப்லூகெல் 1834ல் அரபி குர்‍ஆனை பிரிண்ட் செய்து வெளியிட்டார். ஐரோப்பாவில் அடுத்த 100 ஆண்டுகள், அதாவது கெய்ரோ 1924ம் ஆண்டு குர்‍ஆன் வெளியிடும் வரை, இவரது குர்‍ஆனே அதிகார பூர்வமான பயன்பாட்டில் இருந்தது. இந்த குர்‍ஆனின் அரபி எழுத்துக்கள் நீண்ட ஆய்வுகளுக்கு பிறகு தரப்படுத்தப்பட்டதால், இதன் பிறகு வெளிவந்த குர்‍ஆன் பதிப்புக்களுக்கு இது அடித்தளமாக அமைந்தது எனலாம்.

415 பக்கங்கள் கொண்ட இந்த குர்‍ஆனை, இணையத்தில் நாம் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம், அதன் தொடுப்பு இங்கே உள்ளது: 

இவர் இன்னொரு புத்தகத்தையும் எழுதியுள்ளார், அதாவது குர்‍ஆனின் அரபி மொழியின் ஒவ்வொரு மூல வார்த்தையும், அதனிலிருந்து பிறந்த வார்த்தைகளையும் ஆய்வு செய்து எழுதியுள்ளார்(Concordance of the Koran). அதனையும், இங்கு பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். இது அரபி மொழி அகராதி போன்று பயன்படும்.

ஈரானிகா கலைக்களஞ்சியம் இவரைப் பற்றி எழுதியவைகளில் சில வரிகள்:

Quote:

Flügel was an eminent Arabist and Islamologist, who, in addition to his minor works, produced several fundamental studies on Islamic religion, philosophy, and literary history: an edition of the Koran which went through ten printings, writings on Kindī and the Hanafites, a history of the caliphate, editions of Ḥājī Ḵalīfa's Kašf al-ẓonūn and Ebn al-Nadīm's Fehrest (q.v.), as well as his catalogue of the Arabic, Persian, and Turkish manuscripts in Vienna. Flügel was awarded many academic awards and honors for his work including the Albert Decoration in Saxony and a university degree (Lizenz) from Jena in theology. He was a member of the Deutsche Morgenländische Gesellschaft in Halle and Leipzig and of the Altertumsverein of the Kingdom of Saxony; a corresponding member of the academies of Vienna and Turin; an associé étranger of the Société Asiatique in Paris; a corresponding member of the Asiatic Society in London; and a member of the Asiatic Society in Boston.

2015ல், 1750 அமெரிக்கன் டாலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இவரது பிரிண்ட் குர்‍ஆனின் ஒரு பிரதி: 

8) ஒட்டமன் அரசின் முதல் அதிகாரபூர்வமான பதிப்பு, காண்ஸ்டான்டிநோபுலில் பிரிண்ட் குர்‍ஆன் – Ottamon's first official Quran edition (1875-77)

துருக்கியில், ஒட்டமன் இஸ்லாமிய அரசின் அனுமதியுடன் 1875ம் ஆண்டு குர்‍ஆன் பிரிண்ட் செய்யப்பட்டது. இதைப் பற்றி வேறு தகவல்கள் எனக்கு கிடைக்கவில்லை.

கீழ்கண்ட தளத்தில், ஒருவருக்கு இந்த குர்‍ஆன் கிடைத்துள்ளது, அதனை அவர் சில படங்களுடன் பதித்துள்ளார்.

Ancient Manuscript Review 180 : Antique Ottoman Quran with Tajwid Notes 1292 AH ( 1875 C.E )

This is an Ottoman Quran acquired from Istanbul a few years ago. It is incomplete as the first few pages are missing. Many of the pages are torn along the gold frame due to the copper reaction with the paper. The Quran dated 1292 AH on the inner cover which is equivalent to 1875 CE. I purchased this Quran due to its being different than other Ottoman Qurans. This particular Quran has notes on the rules of reading Quran ( Tajwid) on the margin on every page. Check my other Ottoman Quran which has similar feature as below :

9) கெய்ரோ குர்‍ஆன் – Egypt, Cairo Quran (1924)

எகிப்திய அரசு, 1924ல், கெய்ரோவில் ஹஃப்ஸ் கிராத்தில் உள்ள குர்‍ஆனை அரபியில் பிரிண்ட் செய்து வெளியிட்டது, மேலும், 60 ஆண்டுகள் கழித்து அதனையே சௌதி அரசாங்கம் 1985ம் ஆண்டு முதல் பிரிண்ட் செய்து இப்போது உலகமெங்கிலும் அனுப்பிக்கொண்டு இருக்கிறது.

இதர குர்‍ஆன் மொழியாக்கங்களோடு கூட பதிக்கப்படும் அரபி குர்‍ஆன் வசனங்கள், இந்த 1924ம் ஆண்டின் குர்‍ஆனிலிருந்து எடுக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Source

கேள்வி 545: பிரிண்ட் குர்‍ஆன் (Printed Quran), கெய்ரோ குர்‍ஆன் (Cairo Quran), 1924 குர்‍ஆன் (1924 Quran) என்று பல பெயர்களை கேள்விப்படுகிறேன், இவைகள் என்ன?

பதில் 545:

இக்கேள்வியின் பதிலை படிப்பதற்கு முன்பு, முந்தைய கேள்வியின் பதிலை படித்துக்கொள்ளவும்,  அதாவது கடந்த 500 ஆண்டுகளாக, அச்சு இயந்திரங்கள் மூலமாக அரபி குர்‍ஆன் எந்தெந்த ஆண்டுகளில் பிரிண்ட் (அச்சு) செய்யப்பட்டன என்பதைப் பற்றிய ஒரு சுருக்கத்தை அறியலாம். 

முதன் முதலாக 1537/38ம் ஆண்டுகளில் அரபி குர்‍ஆன் பிரிண்ட் செய்யப்பட்டது, அதன் பிறகு, 1924ம் ஆண்டு, 'எகிப்திய அரசு, தன் பள்ளிகளின் பயன்பாட்டிற்காக ஒரு குர்‍ஆனை அதிகாரபூர்வமாக பிரிண்ட் செய்தது'. இந்த குர்‍ஆன் தான், இன்று உலகில் 95%க்கும் அதிகமான மக்கள் படிக்கும் 'அரபி குர்‍ஆனாக வளம்வருகிறது'.

இந்த குர்‍ஆனைத் தான் "கெய்ரோ குர்‍ஆன் என்றும், 1924ம் ஆண்டின் குர்‍ஆன் என்றும், பிரிண்ட் குர்‍ஆன் என்றும், ஹஃப்ஸ் கிராத்தின்படியான குர்‍ஆன் என்றும்' பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

கீழ்கண்ட படைத்தைப் பாருங்கள், இதில் கடைசியாக குறிப்பிடப்பட்ட குர்‍ஆன் தான், கெய்ரோ குர்‍ஆன் ஆகும்.

கேள்வி 546: ஹ‌ஃப்ஸ் குர்‍ஆனை உலகின் 95% முஸ்லிம்கள் பயன்படுத்துகிறார்கள்? ஏன் வர்ஷ் குர்‍ஆனோ இதர குர்‍ஆன்களோ பெரும்பான்மை முஸ்லிம்கள் பயன்படுத்துவதில்லை?

பதில் 546: 

எகிப்திய பள்ளிகளில் பல வகையான அரபி குர்‍ஆன்கள் பயன்பாட்டில் இருந்தன. அவைகளில் பல தவறுகள் இருப்பதை எகிப்திய அரசு கவனித்து, 'அரசு செலவில்  பிழையில்லாத குர்‍ஆனை' பிரிண்ட் செய்யலாம் என்று முடிவு செய்து. 1924ம் ஆண்டு அல் அஜர் பல்கலைக்கழத்தின் உதவியுடன் ஒரு கமிட்டியை உருவாக்கியது. இந்த கமிட்டியின் பரிந்துரையின்படி, ஒரு சுலபமான கிராத்தை தெரிவு செய்து, அதாவது ஹஃப்ஸ் கிராத்தை தெரிவு செய்து, பெருமளவில் குர்‍ஆன்களை பிரிண்ட் செய்தது. தன் நாட்டு மக்களுக்காக பிரிண்ட் செய்யப்பட்ட குர்‍ஆன் பல நாடுகளில் புகழ் பெற்றுவிட்டது.  எகிப்தில் இருந்த முந்தைய குர்‍ஆன்களை நைல் நதியில் போட்டு அழித்துவிட்டது எகிப்து ஆரசாங்கம் என்ற ஒரு செய்தியும் உள்ளது.

அதன் பிறகு இதே குர்‍ஆனையே சௌதி அரசும் 60 ஆண்டுகள் கழித்து, 1985ம் ஆண்டு முதல் பிரிண்ட் செய்து, உலக நாடுகளுக்கு இலவசமாக கொடுத்துக்கொண்டு இருக்கிறது. மேலும், மக்காவிற்கு புனிதப்பயணம் (ஹஜ்) மேற்கொள்பவர்களுக்கு இலவசமாக இந்த குர்‍ஆனையே சௌதி அரசு கொடுத்துக்கொண்டு இருக்கிறது.

எனவே, 1924ம் ஆண்டுக்கு பிறகு, முஸ்லிம்களின் வீடுகளில் இருந்த வேறு வகையான கிராத்துக்கள் ஒதுக்கப்பட்டு, ஹஃப்ஸ் குர்‍ஆன் முன்னுக்கு கொண்டு வரப்பட்டது. 

இது மட்டுமல்ல, இந்த ஹஃப்ஸ் குர்‍ஆன் வந்த பிறகு, ஆப்ரிக்காவின் சில நாடுகளில் உள்ள, மசூதிகளில் இருக்கும் இதர குர்‍ஆன்கள், அதாவது, வர்ஷ் கிராத்தின் குர்‍ஆன்கள், நீக்கப்பட்டு, ஹஃப்ஸ் குர்‍ஆன்கள் வைக்கப்பட்டதாக ஒரு செய்தியும் உள்ளது.

கையெழுத்துக்களில் எழுதப்படும் குர்‍ஆனின் விலையும் அதிகம், மற்றும் இதற்காக அனேக நாட்கள் மாதங்கள் ஆகும். ஆனால், அச்சு இயந்திரங்களில் குர்‍ஆன் பிரிண்ட் செய்யப்படும் போது, அதனை பெருமளவிலும் பிரிண்ட் செய்யலாம், இதனால் அதன் விலையும் குறைவாக இருக்கும். எனவே தான், ஹஃப்ஸ் குர்‍ஆன் புகழ் பெற்றுவிட்டது, அதாவது பெருமளவு பயன்பாட்டில் வந்துவிட்டது. இதுமட்டுமல்ல, சௌதி அரசு இந்த குர்‍ஆனை இலவசமாக கொடுப்பதினாலும், வேறு கிராத்து குர்‍ஆன்களாகிய வர்ஷ் குர்‍ஆன்களின் விலை மிகவும் அதிகம் என்பதாலும், 'ஹஃப்ஸ் கிராத் குர்‍ஆன்' தான் உலகில் 95% முஸ்லிம்கள் பயன்படுத்துகிறார்கள்.

ஹ‌ஃப்ஸ் குர்‍ஆன் ஆதரவாளர்களின் கூற்று:

முஸ்லிம்களில் யாராவது, 'இல்லை, ஹஃப்ஸ் குர்‍ஆனைத் தான் எங்கள் நபி கொடுத்தார், மற்ற கிராத்துக்களில் உள்ள குர்‍ஆன்களை ஒதுக்கவேண்டும், அவைகளை படிக்கக்கூடாது என்று சொல்வார்களானால், இவர்களுக்கு குர்‍ஆனின் சரித்திரம் தெரியவில்லை என்று பொருள், அல்லது அவர்கள் பொய்களைக் கூறிக்கொண்டு இருக்கிறார்கள் என்று பொருள்'.

கேள்வி 547: ஒரு அரபி குர்‍ஆனை பார்த்தவுடன், அது ஹஃப்ஸ் குர்‍ஆனா, வர்ஷ் குர்‍ஆனா என்று எப்படி கண்டுபிடிப்பது?

பதில் 547: இது மிகவும் சுலபம். இதனை கண்டுபிடிப்பது எப்படி என்பதைப் பற்றிய ஒரு தகவலை இங்கு தருகிறோம்.

குர்‍ஆனின் முதல் அத்தியாயம் முதல் வசனத்தை கவனியுங்கள். 

  • 1:1 பிஸ்மில்லா ஹிர்ரஹ் மானிர் ரஹீம் (அரபி)
  • 1:1. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) (தமிழ்)

என்பது முதல் வசனமாக இருந்தால், அது "ஹஃப்ஸ்" குர்‍ஆன் என்று தெரிந்துக்கொள்ளலாம். 

இப்படியில்லாமல், மேலே சொன்ன சொற்றொடர் ஒரு தலைப்பாக கொடுத்துவிட்டு, முதலாவது வசமனாக 

  • 1:1 அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் (அரபி)
  • 1:1 அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். (தமிழ்)

என்று இருந்தால், அது "வர்ஷ்" குர்‍ஆன் என்று தெரிந்துக்கொள்ளலாம். 

ஹ‌ஃப்ஸ் மற்றும் வர்ஷ் குர்‍ஆனின் முதல் அத்தியாயம் முதல் வசனம்:

குறிப்பு: பீஜே அவர்கள் வெளியிட்ட குர்‍ஆனில், வர்ஷ் குர்‍ஆனில் உள்ளது போன்று 'முதல் வசனமாக'  பிஸ்மில்லா ஹிர்ரஹ் மானிர் ரஹீம் என்ற வசனம் இருக்காது, அது தலைப்பாக இருக்கும்  என்பது கவனிக்கத்தக்கது.

பீஜே அவர்களின் மொழியாக்கம்:

  • தலைப்பு: அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
  • முதல் வசனம்: 1:1. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன்.

கேள்வி 548: ஏழு அல்லது பத்து கிராத்துக்கள் உள்ளது என்கிறார்களே! ஏன் முஸ்லிம்கள் வெறும் ஹஃப்ஸ் கிராத்தை மட்டுமே படிக்கிறார்கள்?

பதில் 548:  முதலாவதாக,  கி.பி. 1924ம் ஆண்டுக்கு முன்பு, உலக முஸ்லிம்கள், பல வகையான கிராத்துக்களை படித்துக்கொண்டு இருந்தார்கள். ஆனால், எகிப்து 1924ம் ஆண்டு, ஒரு குர்‍ஆனை ஹஃப்ஸ் கிராத்தின் அடிப்படையில் பிரிண்ட் செய்தது என்று மேலே உள்ள கேள்வியில் படித்தோம் அல்லவா! அதன் பிறகு, இந்த கிராத் மிகவும் புகழ் பெற ஆரம்பித்தது, மக்கள் அனைவரும் ஹப்ஸ் கிராத்தையே படிக்க தொடங்கினார்கள். மேலும், 1985ம் ஆண்டு முதல் சௌதி அரசும் இதே குர்‍ஆனை பிரிண்ட் செய்து, இலவசமாக உலகெங்கும் அனுப்பிக்கொண்டு இருப்பதினால், அனேகருக்கு அரபி குர்‍ஆனில் உள்ள 20க்கும் அதிகமான கிராத்துக்கள் பற்றி தெரிவதில்லை.

இஸ்லாமிய புனித ஸ்தலம் உள்ள மக்கா மதினா நகரங்கள் உள்ள சௌதி அரசாங்கம், தன் வேதத்தை 1985ம் ஆண்டு தான் தரப்படுத்தியது, அல்லது உறுதிப்படுத்தி பிரிண்ட் செய்து அனுப்பிக்கொண்டு இருக்கிறது என்ற செய்து, ஆச்சரியமாக உள்ளதல்லவா?

இரண்டாவதாக, நம்முடைய இமாம்கள், இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரும், மூல அரபி கிராத்துக்கள் பற்றி அதிகமாக மக்களுக்கு சொல்லிக்கொடுப்பதில்லை. அதனால் சராசரி முஸ்லிமுக்கு தன் வீட்டில் இருக்கும் குர்‍ஆன் யாருடைய கிராத்தின்படி உள்ள‌ குர்‍ஆன் என்கின்ற‌ விவரம் தெரிவதில்லை, எனவே படிப்பதில்லை.

மூன்றாவதாக, சில முஸ்லிம் அறிஞர்கள், முஸ்லிம்களிடம் வர்ஷ் போன்ற கிராத்துக்களை படிக்கக்கூடாது என்று போதனையும் செய்கிறார்கள், எனவே முஸ்லிம்கள் அந்த பக்கமே தலைவைத்து படிப்பதில்லை, மன்னிக்கவும் படுப்பதில்லை. ஆனால், குர்‍ஆனை நன்கு கற்று, ஆய்வு செய்யும் இமாம்களுக்கும், அறிஞர்களுக்கும் கிராத்துக்கள் பற்றிய சரித்திரம் தெரியும்.

கேள்வி 549: கலிஃபா உஸ்மான் காலத்திலிருந்து இன்றுவரை வெறும் ஹஃப்ஸ் கிராத்து தான் பயன்படுத்தப்பட்டது, மற்ற கிராத்துக்கள் பயன்படுத்தப்படவில்லை என்று சிலர் சொல்கிறார்களே! இது உண்மையா? 

பதில் 549: இது சுத்தப்பொய், இப்படி சொல்கிறவர்கள் தெரிந்தே பொய்களைச் சொல்கிறார்கள் என்று பொருள், அல்லது அவர்களுக்கு இஸ்லாமின் மற்றும் குர்‍ஆனின் வரலாறு பற்றி ஞானமில்லை என்று பொருள்.

தமிழ் நாட்டில் உள்ள அனைத்து இமாம்களையும், இஸ்லாமிய அறிஞர்களையும் ஒன்று கூட்டி, அவர்கள் மத்தியிலே எழுந்து நின்று "உலகில் ஹஃப்ஸ் கிராத்து தான் இருக்கிறது, வேறு கிராத்து இல்லை என்று" சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்! 

நம் இமாம்களே, இதனை ஒப்புக்கொள்ளமாட்டார்கள், இப்படி சொன்னவருக்கு சரியான "பாடம்" புகட்டி அனுப்புவார்கள்.

கேள்வி 550: கெய்ரோ 1924ம் ஆண்டு வெளியிட்ட குர்‍ஆன், இன்று பழமையான கையெழுத்துப் பிரதி குர்‍ஆன்களாக கருதப்படுகின்ற தாஷ்கண்ட், இஸ்தான்புல் குர்‍ஆனோடு ஒப்பிட்டு, அதன்படி தான் தரப்படுத்தினார்களா?

பதில் 550: இல்லை, நிச்சயமாக இல்லை. 1924ம் ஆண்டு எகிப்து வெளியிட்ட குர்‍ஆன், அல்லது சௌதி அரசு 1985ம் ஆண்டிலிருந்து அச்சடித்து உலகெங்கிலும் அனுப்புகின்ற குர்‍ஆன்கள், அல்லது நீங்கள் இன்று உங்கள் வீட்டில் இருக்கும் அரபி கு‍ர்‍ஆன் 'குர்‍ஆனின் மூலப் பிரதிகளாக கருதப்படுகின்ற இஸ்தான்புல், மற்றும் தாஷ்கண்ட் பிரதிகளோடு' ஒப்பிட்டு பிரிண்ட் செய்யப்படவில்லை, தரப்படுத்தப்படவில்லை என்பது தான் உண்மை.

The Cairo Edition (1924)

"However, it is worth noting that the variations observed in this case do not have any real impact on the meaning of the text. As for the Quranic script (rasm), the variant readings (qirā'āt) and the counting of the verses (fawāṣil), the commission consulted Quranic science treatises. In particular, they used the works of Abū ʿAmr al-Dānī (d. 444/1053) and his disciple Abū Dāwūd Ibn Naǧāḥ (d. 496/1103). In contrast, the more ancient codices of the Qur'ān, called maṣāḥif in Arabic, and which are preserved in Muslim countries such as Egypt, Syria and Turkey were ignored. Neglecting those maṣāḥif is somehow unfortunate because recent studies show interesting disparities between what these Quranic treatises of science say about the manuscripts, and what the codices at our disposal actually contain. One can notably find in the latter extra-canonic reading variants that preceded the period when the Quranic corpus was standardized."

. . .

To sum up, the interpretation of the Qur'ān and the observed differences in its translations implies a study of the nature of the Quranic corpus and the variants on which it was based. The major problem with the Cairo edition lies in the absence of references to manuscripts: consulting them would have probably allowed us to obtain a text elaborated in a specific period of time, and thus to assess to what extent it is faithful or not to a certain reality of the corpus we have at our disposal. 

1924ம் ஆண்டின் குர்‍ஆனை, மூல புரதிகளோடு ஒப்பிட்டு, அதன் படி பிரிண்ட் செய்திருந்தால், நூற்றுக்கணக்கான வித்தியாசங்களை அவைகள் கொண்டு இருக்குமா?

கீழ்கண்ட கட்டுரையில், சமர்கண்ட் மூல பிரதிகளோடு, 1924ம் ஆண்டின் குர்‍ஆனை (அதாவது உங்கள் கைகளில் இருக்கும்) ஒப்பிட்டு, அவைகளில் உள்ள எழுத்துப்பிழைகள், எழுத்து வித்தியாசங்கள், வார்த்தை வித்தியாசங்கள் கொடுப்பட்டுள்ளன, மனவலிகையுள்ள முஸ்லிம்கள் அவைகளை சொடுக்கி படிக்கலாம்.

தேதி: 23rd Oct 2021

சனி, 16 அக்டோபர், 2021

பகனினி குர்‍ஆன்(1538) முதல் கெய்ரோ குர்‍ஆன் (1924) வரையிலான அரபி குர்‍ஆனின் அச்சுப்பயணம்

முதன் முதலில் அரபி குர்‍ஆன் அச்சுப் புத்தகமாக வெளிவந்தது பற்றி கீழ்கண்ட‌ கட்டுரையில் கண்டோம்.

உலகளாவிய முஸ்லிம்கள் இன்று பயன்படுத்தும் குர்‍ஆன், கெய்ரோவில் 1924ம் ஆண்டு பிரிண்ட் செய்யப்பட்ட ஹஃப்ஸ் கிராத்தின்படியுள்ள குர்‍ஆன் ஆகும்.

கி.பி. 1538ம் ஆண்டு முதல் 1924ம் ஆண்டுவரை குர்‍ஆனின் அச்சுப்பயணம்

பகனினி குர்‍ஆன் பிரிண்ட் செய்யப்பட்ட  1538ம் ஆண்டு முதல், கெய்ரோ குர்‍ஆன் பிரிண்ட் செய்யப்பட்ட 1924ம் ஆண்டுவரையிலான குர்‍ஆனின் அச்சுப்பயணம் பற்றிய ஒரு சுருக்கத்தை இந்த கட்டுரையில் காண்போம்.

  1. பகனினி அச்சுக் குர்‍ஆன் – Paganini Quran, Venice (1538) 
  2. பாஸ்டர் அப்ரஹாம் ஹின்கெல்மன் - Pastor Abraham Hinckelmann's Quran (1694)
  3. இத்தாலிய பாதிரியார் லுடொவிகோ மரக்கி - Priest Ludovico Maracci's Quran (1698)
  4. ரஷ்ஷியாவின் கேத்ரீன் அரசியின், செயிண்ட் பீடர்ஸ்பர்க் குர்‍ஆன் - Catherin's sponsor, Saint Peersburg's Quran - (1787, 1790 & 1793)
  5. கஜான் அச்சகத்தின் பிரிண்ட் குர்‍ஆன் - Islamic city Kazan's first Quran (1803) 
  6. ஈரானின் முதல் பிரிண்ட் குர்‍ஆன் - Iran's 1st printed Quran (1828)
  7. கஸ்டவ் ஃப்லூகெல் அரபி குர்‍ஆன் - Gustav Flügel's Arabic Print Quran (1834)
  8. ஒட்டமன் அரசின் முதல் அதிகாரபூர்வமான பதிப்பு, காண்ஸ்டான்டிநோபுலில் பிரிண்ட் குர்‍ஆன் – Ottamon's first official Quran edition (1875-77)
  9. கெய்ரோ குர்‍ஆன் – Egypt, Cairo Quran (1924)

அரபி குர்‍ஆனின் அச்சுப்பயணத்தை பார்ப்பதற்கு முன்பு, ஏன் இஸ்லாமிய நாடுகளில் அரபி குர்‍ஆன் பிரிண்ட் செய்யப்பட, அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகும் 300 ஆண்டுகள் ஆனது, என்பதை சுருக்கமாக காண்போம்.

ஒட்டமன் இஸ்லாமிய அரசின் அரபி எழுத்து (குர்‍ஆன்) பிரிண்ட் தடைச்சட்டம் கி.பி. 1483 - 1726 
(Ottoman's ban on printing Arabic Script - 1483 and 1726)

அச்சு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டும், 300 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாமிய நாடுகளில் ஏன் அரபி குர்‍ஆன்களை பிரிண்ட் செய்ய தாமதித்தன?   அன்றைய இஸ்லாமிய தலைமையகமாக இருந்த ஒட்டமன் அரசு, அரபி எழுத்துக்களை கைகளினால் எழுதவேண்டுமே ஒழிய அவைகளை அச்சு இயந்திரங்களினால் பிரிண்ட் எடுக்கக்கூடாது என்று தடை விதித்து இருந்தது. இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்படும். அரபி எழுத்துக்களில் குர்‍ஆன் மட்டுமல்ல, வேறு விதமான சாதாரண மத‌சார்பற்ற புத்தகங்களும் பிரிண்ட் செய்யப்படக்கூடாது என்பது தான் இந்த சட்டத்தில் உள்ள பிரச்சனை.

இதனால் இஸ்லாமிய நாடுகளில், மற்ற மொழிகளில் அச்சு இயந்திரங்கள் மூலமாக புத்தகங்கள் வெளிவந்தாலும், அரபி மொழியில் குர்‍ஆனோ, அல்லது மற்ற புத்தகங்களோ அச்சடிக்காமல் விட்டுவிட்டனர். 15ம் நூற்றாண்டில் அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டிலிருந்து , பல துறைகளில் புத்தகங்களை பிரிண்ட் செய்து ஐரோப்பிய நாடுகள் முன்னேறிக்கொண்டு இருந்தாலும், இஸ்லாமிய நாடுகள் கிட்டத்தட்ட 2 அல்லது 3 நூற்றாண்டுகள் அரபி மொழியில் அச்சு இயந்திரங்களைக் கொண்டு புத்தக‌ங்களை பிரிண்ட் செய்யாமல், தங்கள் மக்களின் அறிவை பெருக்கிக்கொள்ள வாய்ப்பு அளிக்காமல் பின் தங்கிவிட்டனர்.

இந்த தடையை நீக்கும்படி பலர் எடுத்த முயற்சியினால், 1726ம் ஆண்டிலிருந்து இந்த தடை சட்டம் நீக்கப்பட்டது, அதுவும், அரபி மொழியில் 'குர்‍ஆனை தவிர்த்து' மற்ற புத்தகங்கள் அச்சடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. கடைசியாக, 1875ம் ஆண்டு, ஒட்டமன் இஸ்லாமிய அரசின் அதிகார பூர்வமான அரபி குர்‍ஆன் காண்ஸ்டான்டிநோபலில் பிரிண்ட் செய்யப்பட்டது.

1)  பகனினி அச்சுக் குர்‍ஆன் – Paganini Quran, Venice (1538) 

பகனினி குர்‍ஆன் (Paganini Quran) என்பது, இத்தாலியின் வெனிஸ் நகரில், 1537-1538ம் காலக்கட்டத்தில் 'அசையும் அச்சுப்பொறியின் (Movable Type Printer) மூலமாக' பிரிண்ட் எடுக்கப்பட்ட முதல் அரபு குர்‍ஆன் ஆகும்.[1][2]

இதற்கு "வெனிஸ் குர்‍ஆன் - Venice Quran" என்ற பெயரும் உள்ளது. பகனினி மற்றும் அவரது மகன் பகனினோ இருவரும் தங்கள் அச்சகத்தில் இந்த குர்‍ஆனை பிரிண்ட் செய்து, அக்காலத்தின் இஸ்லாமிய தலைமையகமாக இருந்த ஒட்டாமன் நாட்டுக்கு (இன்றைய துருக்கி) ஏற்றுமதி செய்து, நிறைய சம்பாதிக்கலாம் என்று நினைத்து, இந்த வேலையை தொடங்கினார்கள்.

ஆனால், அவர்களின் வியாபார கனவு நிறைவேறவில்லை என்று சொல்லப்படுகின்றது.  அக்காலத்தவர்கள், இந்த‌ குர்‍ஆன் பற்றி எழுதியிருந்தார்கள், ஆனால் 1987வரை, இந்த பிரிண்ட் குர்‍ஆனின் ஒரு பிரதியும் நம்மிடம் இல்லை. 

உலகின் முதல் அச்சு செய்யப்பட்ட முழு அரபி குர்‍ஆன்

1987ம் ஆண்டு, இந்த பிரிண்ட் குர்‍ஆனின் ஒரு பிரதி, வெனிஸ் நகரில் இருக்கும் ஒரு துரவி மாடத்தின் நூலகத்தில் (Isola di San Michele, Venice)  கிடைத்தது. இது தான் உலகின் முதல் அச்சு செய்யப்பட்ட முழு அரபி குர்‍ஆன் ஆகும்.

இந்த குர்‍ஆனின் அனைத்து பிரதிகளும் 1620ம் ஆண்டு எரிந்துவிட்டன, அதிலிருந்து தப்பித்த ஒரு குர்‍ஆன் 1987ம் ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.  இதன் எரிப்பில் கத்தோலிக்க போப்பின் கை உள்ளது என்றும் கூறப்படுகின்றது. இந்த குர்‍ஆனில் பல எழுத்துப் பிழைகள் உள்ளன‌ என்ற குற்றச்சாட்டும் உண்டு. இதில் 464 பக்கங்கள் உள்ளன. 

இந்த பகனினி குர்‍ஆனின் பக்கங்களை காண இந்த தொடுப்புக்களை சொடுக்கவும்:

  1. madainproject.com/content/media/collect/venice_manuscript_2371.jpg
  2. madainproject.com/content/media/collect/venice_manuscript_3870.jpg
  3. madainproject.com/content/media/collect/venice_manuscript_2378.jpg
  4. madainproject.com/content/media/collect/venice_manuscript_3627.jpg
  5. Al-Fatiha – Image
  6. Qur'an printed by Paganino and Alessandro Paganini, 1537-38, Venice 
  7. Chapter 1 and start of Chapter 2

மூலம்: https://www.answering-islam.org/tamil/authors/umar/arabic_quran/paganini_quran.html 

2) பாஸ்டர் அப்ரஹாம் ஹின்கெல்மன் - Pastor Abraham Hinckelmann's Quran (1694)

ஹிங்கெல்மேன் ஒரு புராட்டஸ்டன்ட் இறையியலாளர் மற்றும் ஓரியண்டலிஸ்ட் ஆவார், 1694 இல் இவர் அரபி குர்‍ஆனை ஹம்பர்க் நகரில் வெளியிட்டார்.  கி.பி. 1537/1538ம் ஆண்டில் வெனிஸ் நகரில் வெளியான பகனினி குர்‍ஆனுக்கு அடுத்தபடியாக, கிறித்துவ ஐரோப்பாவில் அச்சு செய்யப்பட்ட இரண்டாவது முழுமையான அரபி குர்‍ஆன், இந்த ஹிங்கெல்மனின் அரபி குர்‍ஆன் ஆகும்.

இந்த ஹிங்கெல்மேன்  தம்முடைய அரபி குர்‍ஆனுக்கு 80 பக்கங்கள் கொண்ட ஒரு நீண்ட‌ முன்னுரையை கொடுத்தார். ஏன் 'குர்‍ஆனின் மூல மொழியிலே தாம் குர்‍ஆனை வெளியிட்டார் என்றும், ஏன் அரபியை கற்று ஆய்வு செய்யவேண்டும் என்பது பற்றியும் அதில் அவர் எழுதினார்'.

Hinckelmann's edition of the Koran was a milestone in this respect. In an 80-page foreword Hinckelmann justifies not only his publishing of the Koran in its original language – a much contested initiative at the time – but also offeres a detailed description of "Arabic Studies," based on his own extensive knowledge, that would be valuable from a scholarly and historical perspective.  . . . Source

அன்றைய முஸ்லிம் நாடுகளின் ஆதிக்கத்திலிருந்து விடுபடவும், அவர்களோடு போராடி வெற்றி பெறவும், வெறும் யுத்த ஆயுதங்கள் போதாது, அவர்களின் வேதம், கலாச்சாரம், மொழியைக் கற்பது இன்றியமையாத‌து என்று, 12ன் நூற்றாண்டிலேயே அழுத்தம் திருத்தமாக கருத்து முன்வைக்கப்பட்டது. ஆகையால், கிறிஸ்தவ ஊழியர்கள், எபிரேய, கிரேக்க மொழிகளோடு கூட, அரபியையும் கற்கவும், அதில் திறமையை வளர்த்துக்கொள்ளவும் தொடங்கினர், அதன் வெளிப்பாடு தான் இந்த ஹம்பர்க் நகரில் வெளியான குர்‍ஆன்.

The first Latin translation of the Koran dates from the 12th century and came from the pen of Robert of Ketton, an English astronomer, translator, priest and diplomat in 1143. He was convinced of the necessity that the battle against the Muslims be carried on, not only with weapons, but also in the form of theological disputation with Islam. In the 14th century, it was resolved at the Council of Vienna (1311) that several European universities would institute the study of Arabic, Hebrew, and Aramaic (which was known as Chaldean at that time). In post-Reformation Europe, especially in the 17th century, numerous professorships were dedicated to the research of Hebrew and other "languages of the Orient.". . .

That Hinckelmann presents himself in his foreword as a decided adversary of Islam seems to have been his way of getting around the criticism of his contemporaries. He likewise argues that one must know the Koran thoroughly in order to effectively fight it. Hinckelmann was a Christian theologian and biblical scholar and as such obliged to hold the received conception of Hebrew as the mother of all languages. 

2012ம் ஆண்டில், அப்ரஹாம் ஹின்கெல்மேன் அவர்களின் நூலகத்திலிருந்து எடுக்கப்பட்ட பல குர்‍ஆன் கையெழுத்துப் பிரதிகள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டன, அவைகள் பற்றிய தொடுப்பு:  Quran Manuscripts from the Library of Abraham Hinckelmann

3) இத்தாலிய பாதிரியார் லுடொவிகோ மரக்கி - Priest Ludovico Maracci's Quran (1698)

லூயிஸ் (அ) லுடோவிகோ மரச்சி (கி.பி. 1612-1700) என்பவர், ஒரு இத்தாலிய ஓரியண்டல் அறிஞர் ஆவார் மற்றும் ரோமில் உள்ள விஸ்டம் கல்லூரில், அரபு மொழி பேராசிரியராக இருந்தார். இவர் அரபி குர்‍ஆன் பதிப்பகர்  என்ற பட்டப்பெயராலும் அறியப்பட்டார். இவர் லத்தீன் மொழியில் குர்ஆனை மொழிப்பெயர்த்தார், மற்றும் அரபி பைபிளில் இவரது பங்கும் சிறப்பானதாகும். 

வாடிகன் குர்‍ஆன் (Vatican Quran):  

இவர் ஹென்கில்மேனின் அரபி குர்‍ஆனை, லத்தீன் மொழியாக்கத்தோடு 1698ல் வெளியிட்டார். இவரது குர்ஆன் பதிப்பில் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று குறிப்புகளும், மற்றும் முஸ்லீம் கோட்பாடுகளின் மறுப்புகளும் கொடுக்கப்பட்டு இருந்தன என்பது சிறப்பம்சமாகும். இவர் 1691 இல், லத்தீன் மொழியில், "குர்ஆனுக்கு மறுப்பு" என்ற தலைப்பில் ஒரு மறுப்பு புத்தகத்தையும் வெளியிட்டார்.

ஜார்ஜ் சேலின் (George Sale) கி.பி. 1736ல் வெளியான‌ "குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பு", மரச்சியின் 1698 லத்தீன் மொழிபெயர்ப்பின் அடிப்படையில் மொழியாக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது குர்‍ஆனின் முதல் பக்கத்தை பார்க்க இந்த தொடுப்பை சொடுக்கவும்:

4) ரஷியாவின் கேத்ரீன் அரசியின், செயிண்ட் பீடர்ஸ்பர்க் குர்‍ஆன் - Catherin's sponsor, Saint Peersburg's Quran - (1787, 1790 & 1793)

1786 ஆம் ஆண்டில், ரஷ்யாவின் கேத்தரின் த கிரேட் (Catherin the Great) என்ற அரசி, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் "டாடர் (Tatar) மற்றும் துருக்கிய அச்செழுத்து முறையில்" குர்‍ஆனை அரபியில் பிரிண்ட் செய்ய, ஒரு அச்சகத்திற்கு அனுமதி அளித்து, உதவியும் அளித்தார்.  அரபி அச்சு எழுத்துக்களை உருவாக்கும் பொறுப்பை, முல்லா உஸ்மான் இஸ்மாயில் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அரபி குர்‍ஆன் செயிண்ட் பீடர்ஸ்பர்க் நகரின் இந்த அச்சகத்திலிருந்து 1787, 1790 மற்றும் 1793ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

ரஷியாவிலிருந்து வெளியிடப்பட்ட முதல் அச்சு அரபி குர்‍ஆன் இதுவே.

5) கஜான் அச்சகத்தின் பிரிண்ட் குர்‍ஆன் - Islamic city Kazan's first Quran (1803) 

இதுவரை மேலே பார்த்த அரபி குர்‍ஆன்கள் அனைத்தும் 'இஸ்லாமியரல்லாத நகரங்களில்' பிரிண்ட் செய்யப்பட்டவைகளாகும். ஆனால், ரஷ்ஷியாவின் கஜான் என்ற இஸ்லாமிய நகரில் முதன் முதலாக பிரிண்ட் செய்யப்பட்டது, இந்த குர்‍ஆன் தான். 

TEHRAN (IQNA) – The people of the Republic of Tatarstan are proud that the Republic's capital city of Kazan was the first Muslim city where a copy of the Quran was printed, Mufti Kamil Samigullin said. 

Speaking at an event at the Islamic University of Kazan, Samigullin said it was in Kazan in the year 1803 that the first copy of Quran was printed in an Islamic city, an7a.com website reported.

He noted that at that time, printing books in Arabic was very difficult and faced many restrictions under Russian tsars.

The cleric also said that the first printed copy of the Quran was produced in Venice, Italy, in 1537.

Later, copies Islam's Holy Book were printed elsewhere in Europe, including in Hamburg, Germany, in 1694, he noted.

Those copies had many errors in them, including printing errors, Samigullin went on to say.

Kazan is a city in southwest Russia, on the banks of the Volga and Kazanka rivers. It is the capital of the Republic of Tatarstan, a semi-autonomous region of the Russian Federation.

Source: Kazan, First Muslim City Where Quran Was Printed

KAZAN QURAN PROPOSED FOR THE UNESCO LIST - கஜான் குர்‍ஆனை யுனெஸ்கோ பண்டைய கலாச்சார பட்டியலில் சேர்க்கவேண்டும்

"In order to enter the UNESCO list it is necessary that our Kazan historical Quran, which has had dozens of editions, went through the international Quranic certification.

It will be passed when the examining sccholars express their opinion and will outline ways to do it," one of the organizers of the forum, an Islamic scholar Farid hazrat Salman, said in an interview with TASS.

The first printed Koran was published in Kazan in 1803 by order of Catherine II. 

Thanks to the joint efforts of the state and the Tatar clergy, printed versions of the Kazan Quran were widely circulated not only among the Muslims of the Russian Empire, but also the neighboring Muslim states, and later all over the world.

Source: islam.ru/en/content/news/kazan-quran-proposed-unesco-list

The First Edition of the Qur'an Printed by Muslims is Issued in Kazan, Tartarstan

By a decree of December 15, 1800 restrictions on the publication of Islamic religious literature were lifted in Russia, and in 1801 the Arabic typeface of the St. Petersburg press was transferred to Kazan where in 1801 the Qur'an (Koran) was first published in a printed edition issued in 1801 printed by Muslims in Kazan , capital of the Republic of Tartarstan . Prior to this date, and for most of the nineteenth century, the Qur'an was primarily transmitted by manuscript copying.

6) ஈரானின் முதல் பிரிண்ட் குர்‍ஆன் - Iran's 1st printed Quran (1828)

ஈரான் நாட்டில் 1828ம் ஆண்டிலிருந்து பிரிண்ட் செய்யப்பட்ட குர்‍ஆன்கள் வெளிவர ஆரம்பித்தன.இந்த குர்‍ஆன் பற்றி எனக்கு மேலதிக விவரங்கள் கிடைக்கவில்லை.

7) கஸ்டவ் ஃப்லூகெல் அரபி குர்‍ஆன் - Gustav Flügel's Arabic Print Quran (1834)

கஸ்டவ் ஃப்லூகெல் 1834ல் அரபி குர்‍ஆனை பிரிண்ட் செய்து வெளியிட்டார். ஐரோப்பாவில் அடுத்த 100 ஆண்டுகள், அதாவது கெய்ரோ 1924ம் ஆண்டு குர்‍ஆன் வெளியிடும் வரை, இவரது குர்‍ஆனே அதிகார பூர்வமான பயன்பாட்டில் இருந்தது. இந்த குர்‍ஆனின் அரபி எழுத்துக்கள் நீண்ட ஆய்வுகளுக்கு பிறகு தரப்படுத்தப்பட்டதால், இதன் பிறகு வெளிவந்த குர்‍ஆன் பதிப்புக்களுக்கு இது அடித்தளமாக அமைந்தது எனலாம்.

415 பக்கங்கள் கொண்ட இந்த குர்‍ஆனை, இணையத்தில் நாம் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம், அதன் தொடுப்பு இங்கே உள்ளது: 

இவர் இன்னொரு புத்தகத்தையும் எழுதியுள்ளார், அதாவது குர்‍ஆனின் அரபி மொழியின் ஒவ்வொரு மூல வார்த்தையும், அதனிலிருந்து பிறந்த வார்த்தைகளையும் ஆய்வு செய்து எழுதியுள்ளார்(Concordance of the Koran). அதனையும், இங்கு பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். இது அரபி மொழி அகராதி போன்று பயன்படும்.

ஈரானிகா கலைக்களஞ்சியம் இவரைப் பற்றி எழுதியவைகளில் சில வரிகள்:

Quote:

Flügel was an eminent Arabist and Islamologist, who, in addition to his minor works, produced several fundamental studies on Islamic religion, philosophy, and literary history: an edition of the Koran which went through ten printings, writings on Kindī and the Hanafites, a history of the caliphate, editions of Ḥājī Ḵalīfa's Kašf al-ẓonūn and Ebn al-Nadīm's Fehrest (q.v.), as well as his catalogue of the Arabic, Persian, and Turkish manuscripts in Vienna. Flügel was awarded many academic awards and honors for his work including the Albert Decoration in Saxony and a university degree (Lizenz) from Jena in theology. He was a member of the Deutsche Morgenländische Gesellschaft in Halle and Leipzig and of the Altertumsverein of the Kingdom of Saxony; a corresponding member of the academies of Vienna and Turin; an associé étranger of the Société Asiatique in Paris; a corresponding member of the Asiatic Society in London; and a member of the Asiatic Society in Boston.

2015ல், 1750 அமெரிக்கன் டாலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இவரது பிரிண்ட் குர்‍ஆனின் ஒரு பிரதி: 

8) ஒட்டமன் அரசின் முதல் அதிகாரபூர்வமான பதிப்பு, காண்ஸ்டான்டிநோபுலில் பிரிண்ட் குர்‍ஆன் – Ottamon's first official Quran edition (1875-77)

துருக்கியில், ஒட்டமன் இஸ்லாமிய அரசின் அனுமதியுடன் 1875ம் ஆண்டு குர்‍ஆன் பிரிண்ட் செய்யப்பட்டது. இதைப் பற்றி வேறு தகவல்கள் எனக்கு கிடைக்கவில்லை.

கீழ்கண்ட தளத்தில், ஒருவருக்கு இந்த குர்‍ஆன் கிடைத்துள்ளது, அதனை அவர் சில படங்களுடன் பதித்துள்ளார்.

Ancient Manuscript Review 180 : Antique Ottoman Quran with Tajwid Notes 1292 AH ( 1875 C.E )

This is an Ottoman Quran acquired from Istanbul a few years ago. It is incomplete as the first few pages are missing. Many of the pages are torn along the gold frame due to the copper reaction with the paper. The Quran dated 1292 AH on the inner cover which is equivalent to 1875 CE. I purchased this Quran due to its being different than other Ottoman Qurans. This particular Quran has notes on the rules of reading Quran ( Tajwid) on the margin on every page. Check my other Ottoman Quran which has similar feature as below :

9) கெய்ரோ குர்‍ஆன் – Egypt, Cairo Quran (1924)

எகிப்திய அரசு, 1924ல், கெய்ரோவில் ஹஃப்ஸ் கிராத்தில் உள்ள குர்‍ஆனை அரபியில் பிரிண்ட் செய்து வெளியிட்டது, மேலும், அதனையே சௌதி அரசாங்கம் பிரிண்ட் செய்து இப்போது உலகமெங்கிலும் அனுப்பிக்கொண்டு இருக்கிறது.

இதன் அடிப்படையில் தான் இன்று மற்ற குர்‍ஆன்கள் உலகில் பிரிண்ட் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நான் தேடியதில் எனக்கு கிடைத்த பிரிண்ட் குர்‍ஆன்கள் பற்றிய விவரங்களை இங்கு கொடுத்துள்ளேன். வாசகர்களுக்கு ஏதாவது பிரிண்ட் குர்‍ஆன்கள் பற்றிய இதர விவரங்கள் கிடைத்தால், தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

அடிக்குறிப்புக்கள்:

[1] en.wikipedia.org/wiki/Ludovico_Maracci

[2] https://en.wikipedia.org/wiki/Quran

தேதி:  16th Oct 2021

குர்‍ஆனின் இதர ஆய்வுக் கட்டுரைகள்

குர்‍ஆன் பக்கம்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/arabic_quran/paganini_to_cairo_1924_print_quran.html