பகனினி குர்ஆன் (Paganini Quran)
பகனினி குர்ஆன் (Paganini Quran) என்பது, இத்தாலியின் வெனிஸ் நகரில், 1537-1538ம் காலக்கட்டத்தில் 'அசையும் அச்சுப்பொறியின் (Movable Type Printer) மூலமாக' பிரிண்ட் எடுக்கப்பட்ட முதல் அரபு குர்ஆன் ஆகும்.[1][2]
இதற்கு "வெனிஸ் குர்ஆன் - Venice Quran" என்ற பெயரும் உள்ளது. பகனினி மற்றும் அவரது மகன் பகனினோ இருவரும் தங்கள் அச்சகத்தில் இந்த குர்ஆனை பிரிண்ட் செய்து, அக்காலத்தின் இஸ்லாமிய தலைமையகமாக இருந்த ஒட்டாமன் நாட்டுக்கு (இன்றைய துருக்கி) ஏற்றுமதி செய்து, நிறைய சம்பாதிக்கலாம் என்று நினைத்து, இந்த வேலையை தொடங்கினார்கள்.
ஆனால், அவர்களின் வியாபார கனவு நிறைவேறவில்லை என்று சொல்லப்படுகின்றது. அக்காலத்தவர்கள், இந்த குர்ஆன் பற்றி எழுதியிருந்தார்கள், ஆனால் 1987வரை, இந்த பிரிண்ட் குர்ஆனின் ஒரு பிரதியும் நம்மிடம் இல்லை.
உலகின் முதல் அச்சு செய்யப்பட்ட முழு அரபி குர்ஆன்
1987ம் ஆண்டு, இந்த பிரிண்ட் குர்ஆனின் ஒரு பிரதி, வெனிஸ் நகரில் இருக்கும் ஒரு துரவி மாடத்தின் நூலகத்தில் (Isola di San Michele, Venice) கிடைத்தது. இது தான் உலகின் முதல் அச்சு செய்யப்பட்ட முழு அரபி குர்ஆன் ஆகும்.
இந்த குர்ஆனின் அனைத்து பிரதிகளும் 1620ம் ஆண்டு எரிந்துவிட்டன, அதிலிருந்து தப்பித்த ஒரு குர்ஆன் 1987ம் ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதன் எரிப்பில் கத்தோலிக்க போப்பின் கை உள்ளது என்றும் கூறப்படுகின்றது. இந்த குர்ஆனில் பல எழுத்துப் பிழைகள் உள்ளன என்ற குற்றச்சாட்டும் உண்டு. இதில் 464 பக்கங்கள் உள்ளன.
Quote:
It was possibly the most daring and pioneering enterprise in sixteenth-century Venetian printing, this edition was mentioned by a handful of contemporary witnesses, and was reported as wholly destroyed as early as 1620. The reasons suggested for its destruction ranged from its suppression by the Pope ("Pontifex Romanus exemplaria ad unum omnia impressa suppressit") to the ridiculous (divine intervention would prevent its printing), but without any copies to study, and without any reference in a bibliography or library catalogue, the mysterious edition was regarded as a ghost.
In 1987 Professor Angela Nuovo found a single copy in the library of the Franciscan Friars of Isola di San Michele, in Venice. The copy contains a note of ownership of Teseo Ambrogio degli Albonesi, who died soon after 1540, and the stamp of Arcangelo Mancasula, Vicar of the Holy Office (Holy Inquisition) of Cremona, applied a few years later. Albonesi, an orientalist from Pavia, is the only person known to have handled the first printed edition of the Qu'ran in Arabic, and he referred to it in his Introductio in Chaldaicam linguam, Syriacam atque Armenicam (Pavia, 1539). [1]
அந்த காலக்கட்டத்தில், குர்ஆனை அச்சு இயந்திரத்தில் பிரிண்ட் செய்பவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்படும் என்ற ஃபத்வா கூட இருந்ததாக கூறப்படுகிறது.
Fatwa against the printing press
In the year 1515, Shaykh al-Islam of the Ulema (learned scholars) issued a Fatwa that printing was Haram (forbidden). As a result, Ottoman Sultan Selim I issued a decree of a death penalty on anyone using the printing press. The fatwa has been attributed as one of the reasons for the stagnation of knowledge, invention and discovery in the Muslim world, at a time when Europe was in the midst of the Renaissance period. Source
இந்த பகனினி குர்ஆனின் பக்கங்களை காண இந்த தொடுப்புக்களை சொடுக்கவும்:
- madainproject.com/content/media/collect/venice_manuscript_2371.jpg
- madainproject.com/content/media/collect/venice_manuscript_3870.jpg
- madainproject.com/content/media/collect/venice_manuscript_2378.jpg
- madainproject.com/content/media/collect/venice_manuscript_3627.jpg
- Al-Fatiha – Image - historyofinformation.com/images/Screen_Shot_2019-07-20_at_9.58.41_PM.png
- Qur'an printed by Paganino and Alessandro Paganini, 1537-38, Venice - www.researchgate.net/figure/Quran-printed-by-Paganino-and-Alessandro-Paganini-1537-38-Venice_fig1_281686442
- Chapter 1 and start of Chapter 2 - www.researchgate.net/figure/Figure-1-A-Page-from-the-Mushaf-of-Paganini-1537_fig1_330881331
அடிக்குறிப்புக்கள்:
[1] Paganini Quran - madainproject.com/paganini_quran
[2] Paganino Paganini - en.wikipedia.org/wiki/Paganino_Paganini
[3] Paganino & Alessandro Paganini Issue the First Printed Edition of the Qur'an in Arabic, of Which One Copy Survived - www.historyofinformation.com/detail.php
[4] Al-Fatiha – Image - historyofinformation.com/images/Screen_Shot_2019-07-20_at_9.58.41_PM.png
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக