அத்தியாயம் 1: ஆமீன்
இந்த அத்தியாயத்தை நீங்கள் முடிக்கும் போது, கீழ்கண்டவைகளை கற்றுக்கொண்டு இருப்பீர்கள்:
1) ஆமீன் என்ற அரபி வார்த்தையில் உள்ள நான்கு எழுத்துக்களை படிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்வீர்கள். இவ்வெழுத்துக்களை நெடிலாக மாற்ற கற்றுக் கொள்வீர்கள். 2) அரபி எழுத்துக்கள் எப்படி சேர்த்து எழுதப்படுகின்றன என்பதை அறிந்துக் கொள்வீர்கள். 3) அரபி உயிரெழுத்து குறியீடுகளை கற்றுக் கொள்வீர்கள். 4) இந்த நான்கு எழுத்துக்களில் உருவாகும் அரபி வார்த்தைகளை கற்றுக்கொள்வீர்கள் (ஆமீன், அமீன், மின், மன், மா, அனா). 5) இப்பாடத்தில் கற்றுக் கொள்ளும் நான்கு அரபி எழுத்துக்களை குர்-ஆனின் முதல் அத்தியாயம் மற்றும் பைபிளின் 100வது சங்கீதத்தில் சுலபமாக அடையாளம் காணுவீர்கள். |
ஆமீன்
இந்த முதலாவது பாடத்தில் நாம் "ஆமீன்" என்ற வார்த்தையை கற்றுக் கொள்ளப்போகிறோம். இவ்வார்த்தையில் உள்ள நான்கு அரபி எழுத்துக்களை கற்றுக்கொள்வோம்.
யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தை "ஆமீன்" ஆகும். வெளிப்படுத்தின விசேஷத்தின் கடைசி வார்த்தையும் "ஆமீன்" வார்த்தையாகும். ஆமீன் என்ற வார்த்தை குர்-ஆனில் ஒரு முறை கூட வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் முஸ்லிம்கள் தங்கள் அனுதின தொழுகையில் அதிகமாக இவ்வார்த்தையை பயன்படுத்துகிறார்கள்.
அரபி | தமிழ் | ஆங்கிலம் | பொருள் |
---|
| ஆமீன் | Aameen | ஆம் – Yes அப்படியே ஆகட்டும் |
வலமிருந்து இடம்:
அரபி எழுத்துக்களை வலமிருந்து இடமாக படிக்கவும் எழுதவும் வேண்டும். சிலருக்கு இப்படி வலமிருந்து இடமாக எழுதுவது, படிப்பது கடினமாக இருக்கும். ஆனால், அரபியை தொடர்ந்து கற்றுக்கொள்ளும் போது இது பழக்கமாகிவிடும். எனவே, முதல் பாடத்தில் அரபியை படிப்பது கடினமாக இருக்கிறது என்று நினைத்து சோர்ந்துவிடவேண்டாம்.
சேர்த்து எழுதுதல்:
ஆங்கிலத்தில் நாம் எப்படி சேர்த்து எழுதுகிறோமோ, அது போல, அரபி எழுத்துக்களையும் சேர்த்து எழுதவேண்டும். அப்படி சேர்த்து எழுதும் போது, எழுத்துக்களின் வடிவம் மாற்றமடையும். உதாரணத்திற்கு, மேலே கண்ட "ஆமீன்" வார்த்தையில் நான்கு எழுத்துக்கள் உள்ளன. அவைகளை தனித்தனியாகவும், கூட்டாகவும் நாம் படித்து கற்றுகொள்வோம். ஆமீன் என்ற வார்த்தையில் மூன்று எழுத்துக்கள் தானே உள்ளது, நான்காவது எழுத்து எங்கே இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? இவ்வார்த்தையில் நான்காவது எழுத்தும் உள்ளது, அது 'ய்' என்ற எழுத்தாகும், அதனையும் நாம் இப்பாடத்தில் கற்றுக்கொள்வோம்.
நான்கு எழுத்துக்கள்:
இந்த வார்த்தையில் அ, ம, ன (ந) மற்றும் ய என்ற நான்கு எழுத்துக்கள் உள்ளன.
அரபியில் 29 எழுத்துக்கள் உள்ளன. அவைகளில் உள்ள நான்கு எழுத்துக்களை நாம் இந்த பாடத்தில் கற்றுக்கொள்ளப் போகிறோம். கீழேயுள்ள அட்டவணையில் வட்டமிடப்பட்ட நான்கு எழுத்துக்களை கவனியுங்கள். மீதமுள்ள எழுத்துக்களை அடுத்தடுத்த அத்தியாயங்களில் காண்போம், அவைகளை படிக்க இப்போது முயலவேண்டாம், அதிகமாக குழப்பமடைவீர்கள்.
அட்டவணை 1: அரபி எழுத்துக்கள்
மூலம்: விக்கீபீடியா
(சிலர் அரபியில் 28 எழுத்துக்கள் என்றுச் சொல்வார்கள், அவர்கள் ஹம்ஸா என்ற எழுத்தை கணக்கில் கொள்ளமாட்டார்கள்.)
பெயரும் உச்சரிப்பும்:
ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு பெயர் உண்டு, ஆனால், அதன் உச்சரிப்பு வேறுபடும். உதாரணத்திற்கு: அலிஃப் என்பது எழுத்தின் பெயராகும். ஆனால், அதன் உச்சரிப்பு"அ" என்பதாகும். மேலேயுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்ட நான்கு எழுத்துக்களின் பெயர்களையும், உச்சரிப்புகளையும் பல முறை படித்துப் பார்க்கவும்.
அலிஃப்:
அரபி எழுத்துக்களின் முதலாவது எழுத்தின் பெயர் அலிஃப் ஆகும். "அ" என்ற உச்சரிப்பிற்கு இதனை பயன்படுத்த வேண்டும். (அடுத்த பாடத்தில் ஹம்ஸா என்ற எழுத்தைப் பற்றி சில விவரங்களைக் காண்போம், ஹம்ஸா என்ற எழுத்தும் அ என்ற உச்சரிப்புக்கு பயன்படுகிறது. இது முதலாவது பாடம் என்பதால் ஒவ்வொரு எழுத்தின் அடிப்படை விவரங்களை மட்டுமே பார்க்கப்போகிறோம்.)
'அ' குறிலை 'ஆ' நெடிலாக மாற்றுவது எப்படி?
இது மிகவும் சுலபம். அலிஃப் எழுத்துக்கு மேலே கீழ்கண்ட படத்தில் உள்ளது போல ஒரு குறியீட்டை (Maddah - மத்தாஹ்) எழுதினால், அது "ஆ" என்று மாறிவிடும். இது அலிஃப் என்ற எழுத்துக்கு மட்டுமே பொருந்தும்.
மீம் என்ற எழுத்து:
ஆமீன் வார்த்தையின் இரண்டாவது எழுத்து, "ம" என்பதாகும். அரபியில் இதனை மீம் () என்று அழைப்பார்கள்.
எழுத்துக்களின் இடச்சூழல்:
அரபி எழுத்துக்கள் ஒரு சொல்லின் முதல் எழுத்தாகவும், இடையேயும், கடைசியாகவும் வரும்பொழுது அவைகளின் வடிவங்கள் மாறுபடும். "ம"என்ற எழுத்து ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வரும் போது ஒருவடிவத்திலும், இடையில் வரும் போது வேறு வகையாகவும், கடைசியில் வரும் போது இன்னொரு வகையாகவும் இருக்கும். கீழே தரப்பட்ட அட்டவணையை வலது பக்கத்திலிருந்து படிக்கவும்.
1 | வார்த்தையின் கடைசியில் ம வரும் போது | வார்த்தையின் இடையில் ம வரும் போது | வார்த்தையின் முதலில் ம வரும் போது | 'ம' தனித்து வரும் போது | எழுத்தின் உச்சரிப்பு |
---|
2 | | | | | ம (Ma) |
3 | | | | <-- மஞ்சலில் குறிப்பிடப்பட்டவைகளை மட்டுமே அடையாளம் காணுங்கள். 'ம' என்ற எழுத்து எப்படி தன் உருவத்தை இடத்தைப் பொருத்து மாற்றிக் கொள்கிறது என்பதை கவனியுங்கள். |
4 | லகும் (Lakum) மத்தேயு 6:33 | கலிமதி (Kalimathi) மல்கியா 1:1 | மலாகீ (க்ஹி) (Malaakhi) மல்கியா 1:1 | <-- இவ்வார்த்தைகள் அனைத்தும் அரபி பைபிளிலிருந்து எடுக்கப்பட்டன |
அட்டவணை 2: மீம் எழுத்து - இடச்சூழல் வடிவங்கள்
ஆமீன் () என்ற வார்த்தையில் "மீ" என்பது இரண்டாவது எழுத்தாக (மத்தியில்) வருகிறது, எனவே, என்ற வடிவில் அது வரவேண்டும், முந்தைய எழுத்திலிருந்து ஒரு வால் போல ஒரு கோடு வந்து 'ம' வோடு ஒட்டவேண்டும். ஆனால், முதல் எழுத்து அலிஃப் என்பதால், முதல் வடிவிலேயே ( ) மீ வந்துள்ளது. அடுத்தடுத்த பாடங்களில் இவைகள் பற்றி விவரமாக காண்போம்.
உயிர் எழுத்துக்கள் (குறில்)
ம என்ற எழுத்தை எப்படி மீ என்று மாற்றுவது:
அடுத்த எழுத்துப் பற்றி கற்றுக்கொள்வதற்கு முன்பு, அரபி உயிரெழுத்துக்களில் குறில் உயிரெழுத்துக்கள் (Short Vowels) பற்றி சுருக்கமாக காண்போம்.
அரபியில் முன்று குறில் உயிர் எழுத்துக்கள் (short vowels) உள்ளன, அவை அ, இ, உ என்பவைகளாகும்.
அட்டவணை 3: குறில் உயிர் எழுத்துக்கள்
ஃபதாஹ்: ஒரு எழுத்துக்கு மேலே ஒரு சிறிய சாய்வு கோடு போட்டால், அதை ஃபதாஹ் என்றுச் சொல்வார்கள், எழுத்துக்களை 'அ' என்று உச்சரிக்க இதை பயன்படுத்த வேண்டும்.
உதாரணம்:
ம் + அ = ம
க் + அ = க
கஸ்ராஹ்: ஒரு எழுத்துக்கு கீழே ஒரு சிறிய சாய்வு கோடு போட்டால், அதை 'இ' என்று உச்சரிக்கவேண்டும்.
உதாரணம்:
ம் + இ = மி
க் + இ = கி
தம்மாஹ்: ஒரு எழுத்துக்கு மேலே 9 போல இருக்கும் குறியீட்டை("தம்மாஹ்"வை) எழுதினால், அது "உ" போல உச்சரிக்கப்படவேண்டும். ("தம்மாஹ்" என்பதை "தண்டனை" என்ற வார்த்தையில் வரும் "த" வைப்போல உச்சரிக்கவேண்டும்.)
உதாரணம்:
ம் + உ = மு
க் + உ = கு
இதுவரை கற்றுக்கொண்டவைகளை இந்த அட்டவணையில் காணலாம்.
மேற்கண்ட இலக்கண விதி "ம" என்ற எழுத்துக்கு மட்டுமல்ல, இதர எழுத்துக்களுக்கும் பொருந்தும். அவைகளை தேவைப்படும் இடங்களில் கற்றுக்கொள்வோம்.
நமக்கு 'ம' என்ற எழுத்தை எப்படி 'மி' யாக மாற்றுவது என்று தெரிந்துவிட்டது (ம என்ற எழுத்தின் கீழே கஸ்ராஹ் என்ற குறியீட்டை போடவேண்டும்). இப்போது மி என்ற குறில் எழுத்தை எப்படி மீ நெடிலாக மாற்றுவது என்பதை கற்றுக்கொள்வோம். அரபியில் மீ என்பது எப்படி இருக்கிறது என்பதை இன்னொரு முறை கீழ்கண்ட படத்தில் பாருங்கள்.
அரபி எழுத்து 'ய'
மி என்ற எழுத்தோடு கூட (ய்) என்ற எழுத்தை சேர்த்து எழுதினால், அது மீ என்றாகிவிடும்.
"ய" எழுத்து இடச்சூழலில் எப்படி எழுதப்படும் என்பதை கீழ்கண்ட அட்டவணை காட்டுகிறது (வலமிருந்து படிக்கவும்).
1 | வார்த்தையின் கடைசியில் ய வரும் போது | வார்த்தையின் இடையில் ய வரும் போது | வார்த்தையின் முதலில் ய வரும் போது | 'ய' தனித்து வரும் போது | எழுத்தின் உச்சரிப்பு |
---|
2 | | | | | ய (Ya) |
3 | | | | <-- மஞ்சலில் குறிப்பிடப்பட்டவைகளை மட்டுமே அடையாளம் காணுங்கள். ய என்ற எழுத்து எப்படி தன் உருவத்தை இடத்தைப் பொருத்து மாற்றிக் கொள்கிறது என்பதை கவனியுங்கள். |
4 | யஹ்யா (Yahyaa) குர்-ஆன் 6:85 | ஆமீன் (Aameen) வெளி 22:21 | யஸூஅ (Yashooa or Yashua) மாற்கு 1:1 | <-- இவ்வார்த்தைகள் பைபிள் மற்றும் குர்-ஆனிலிருந்து எடுக்கப்பட்டன |
அட்டவணை 4: யா எழுத்து - இடச்சூழல் வடிவங்கள்
மேற்கண்ட அட்டவணையில் இருக்கும் "ய்" என்ற எழுத்து மி என்ற எழுத்தோடு கூட்டு சேரும் போது மீ என்று மாறுகிறது. கீழ்கண்ட அட்டவணையை பார்க்கவும். இந்த இலக்கண விதி இதர எழுத்துக்களுக்கும் பொருந்தும், தேவையான இடங்களில் அவைகளைக் காண்போம். (ய என்ற எழுத்துக்கு மேலே சுகூன் என்ற ஒரு குறியீடு உள்ளது, அதாவது "ய்" மெய் எழுத்தாக இருக்கிறது. இந்த சுகூன் பற்றி தனி தலைப்பில் விளக்கப்பட்டுள்ளது).
இதுவரை ஆமீன் என்ற வார்த்தையில் வரும் இரண்டாவது எழுத்து 'மீ' என்ற எழுத்தைப் பற்றி பார்த்தோம். 'ம' என்ற எழுத்து எப்படி 'மி' யாக மாறியது என்றும், அதன் பிறகு அது எப்படி 'மீ' யாக மாறியது என்றும் புரிந்துக் கொண்டீர்களா?
இப்போது அடுத்த எழுத்துக்குப் போவோம்.
நூன் என்ற எழுத்து:
தமிழில் மூன்று எழுத்துக்கள் நூன் என்ற எழுத்துக்கு இணையாக உள்ளன. அவைகள்: ந, ன, ண என்பவைகளாகும். அரபியில் ஒரே ஒரு "ந" உள்ளது. கீழ்கண்ட அட்டவணையில் நூன் என்ற எழுத்தின் இடச்சூழல் உருவங்களைக் காண்போம் (வலமிருந்து படிக்கவும்).
1 | வார்த்தையின் கடைசியில் வரும் போது | வார்த்தையின் இடையில் வரும் போது | வார்த்தையின் முதலில் வரும் போது | 'ந' தனித்து வரும் போது | எழுத்தின் உச்சரிப்பு |
---|
2 | | | | | ந / ன / ண (Na) |
3 | | | | <-- மஞ்சலில் குறிப்பிடப்பட்டவைகளை மட்டுமே அடையாளம் காணுங்கள். ந என்ற எழுத்து எப்படி தன் உருவத்தை இடத்தைப் பொருத்து மாற்றிக் கொள்கிறது என்பதை கவனியுங்கள். |
4 | நஹ்னு (Nahnu) யோவான் 1:16 குர்-ஆன் 2:11 | கனீஸஹ் (Kaneesah) அப் 12:1 | நஹம்யா (Nahamyaa) நெகேமியா 1:1 | <-- இவ்வார்த்தைகள் பைபிள் மற்றும் குர்-ஆனிலிருந்து எடுக்கப்பட்டன |
அட்டவணை 5: நூன் எழுத்து - இடச்சூழல் வடிவங்கள்
இதுவரை நாம் ஆமீன் என்ற வார்த்தையில் வரும் எழுத்துக்களை கற்றுக் கொண்டோம். அவைகள், அ, ம, ன, ய என்பவைகளாகும்.
ஆமீன் என்ற அரபி வார்த்தையை இப்போது படித்துப் பாருங்கள், உங்களால் எழுத்துக்களை அடையாளம் காட்டமுடிகின்றதா?
குறில் மெய் எழுத்துக்களை நெடிலாக மாற்றுவது எப்படி?
'அ' என்ற எழுத்தை 'ஆ' வாக மாற்றுவது எப்படி என்பதைப் பார்த்தோம். இப்பாடத்தில் அலிஃப் தவிர இன்னும் மூன்று எழுத்துக்களை நாம் கற்றுக்கொண்டுள்ளோம், அவையாவன: ம, ய, மற்றும் ந. இவ்வெழுத்துக்களை எப்படி நெடிலாக மாற்றுவது என்பதையும் கற்றுக்கொண்டால், இப்பாடம் முழுமை அடைந்துவிடும்.
ஒரு குறில் மெய் எழுத்தை நெடிலாக மாற்றுவது மிகவும் சுலபம். மெய் எழுத்தோடு அலிஃப ஐ சேர்த்துவிட்டால், அது நெடிலாக மாறிவிடும். இந்த விதி எல்லா எழுத்துக்களுக்கும் பொருந்தும். எழுத்துக்கள் நெடிலாக மாறும் போது, சில எழுத்துக்களின் உருவம் மாற்றமடையும் கீழே உள்ள அட்டவணையை பார்க்கவும்:
* நா மற்றும் யா எழுத்துக்கள் ஒரே மாதிரியாக காணப்படுகிறது. எழுத்துக்கு மேலே ஒரு புள்ளி இருந்தால், அது நா ஆகும், எழுத்துக்கு கீழே இரண்டு புள்ளிகள் இருந்தால், அது யா ஆகும், இதனை நினைவில் வைக்கவும்.
சுகூன் (ஸுக்கூன் - Sukoon):
இந்த முதலாவது பாடத்திற்கு இதோடு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று விரும்புகிறேன். சுகூன் என்றால் என்னவென்று இப்போது காண்போம்.
சுகூன் என்பது ஒரு அரபி எழுத்தின் மீது வைக்கும் ஒரு சிறிய வட்டமாகும். ஒரு மெய் எழுத்துக்கு பிறகு உயிர் எழுத்து வரவில்லையென்றால், அதன் மீது ஒரு வட்டம் வைக்கப்படும். தமிழில் மெய் எழுத்துக்களுக்கு மேலே வைக்கும் புள்ளியைப் போலத்தான் இந்த சுகூனும் என்று இப்போதைக்கு தெரிந்துக் கொண்டால் போதுமானது. சிலர் முழு வட்டம் வைப்பதற்கு பதிலாக, அறைவட்டம் கொடுத்திருப்பார்கள்.
அட்டவணை 6: சுகூன் குறியீடு
உதாரணம்: மின் என்ற அரபி வார்த்தையை இரண்டு முறைகளிலும் எழுதப்படுவதை கீழே காணலாம். மீம் எழுத்துக்கு கீழே கஸ்ராஹ் எழுதினால் அது மி ஆகும், அதன் பிறகு நூன் எழுத்துக்கு மேலே ஒரு சுகூன் (ஒரு சிறிய வட்டம்/அறைவட்டம்) எழுதினால், அது 'ன்' என்று உச்சரிக்கப்படும்.
நாம் இதுவரை படித்து தெரிந்துக்கொண்ட எழுத்துக்கள்:
அட்டவணை 7: அத்தியாயம் 1ல் கற்றுக்கொண்ட எழுத்துக்கள்
இவ்வெழுத்துக்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு வார்த்தையை நாம் அரபி குர்-ஆன் மற்றும் பைபிளிலிருந்து அடுத்தடுத்த பாடங்களில் பார்ப்போம். முதல் பாடத்திலேயே அதிக விவரங்களை கற்றுக் கொள்வது சிலருக்கு சலிப்பை உண்டாக்கும்.
அரபி எழுத்துக்களை எழுதும் முறை:
இதுவரை ஆமீன் வார்த்தையில் வரும் நான்கு எழுத்துக்களை எப்படி படிப்பது என்று கற்றுக்கொண்டோம். இப்போது, இவ்வெழுத்துக்களை எப்படி எழுதுவது என்பதைப் பார்ப்போம். சிலருக்கு அரபி எழுத்துக்களை எழுத கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அவர்களுக்கான பகுதி இது.
அரபியை வலது பக்கத்திலிருந்து எழுதவும், படிக்கவும் வேண்டும் என்பதை மனதில் வைக்கவும்.
அரபி எழுத்து | எழுதும் முறை |
---|
| மேலிருந்து கீழாக ஒரு கோடு போடவேண்டும். சிலருக்கு வசதியாக இருக்கும் என்பதால் அல்லது பழக்கம் என்பதால், இவ்வெழுத்தை கீழிருந்து மேலாக எழுத முயலாதீர்கள். இப்படி செய்தால், தொடர்ச்சியாக அரபி எழுதும் போது சிரமம் உண்டாகும். இது எல்லா எழுத்துகளுக்கும் பொருந்தும். எனவே, எழுதும் போது, கொடுக்கப்பட்டபடியே எழுதி பழக்கப்படவும். |
| தமிழில் உள்ள "ம" எழுத்தில் வரும் முதலாவது நேர்க்கோட்டை கீழே இழுத்துவிட்டால், அது அரபியின் மீன் எழுத்து போல தெரியும். அரபியில் எழுத பழகுபவர்கள், கொடுக்கப்பட்டு இருக்கும் வரிசைப் படியே (1 – 4) எழுதி பழகவேண்டும். |
| தமிழில் இருக்கும் "ப்" என்ற எழுத்தைப் போலவே இவ்வெழுத்தை எழுதவேண்டும். எழுதும் முறையில் கொடுக்கப்பட்டு இருக்கும் வரிசைப்படியே எழுதவேண்டும். இவ்வெழுத்தை சேர்த்து எழுதும் போது, மேலேயுள்ள புள்ளியானது (4) நடுவில் இல்லாமல், வலது பக்க கோட்டின் மீது வரும்: நூன் எழுத்தின் முதல் நிலை எழுத்தை கீழே பார்க்கவும்: |
| தமிழில் இருக்கும் "பி" போன்ற உருவம் கொண்டது, ஆனால் எழுத்தின் வலைவுகளை கவனிக்கவும். தமிழில் பி என்ற எழுத்தை எழுதுவது போல எழுதக்கூடாது. எழுதும் போது, கொடுக்கப்பட்ட வரிசை எண்களின் படி எழுதவும். |
அட்டவணை 8: அத்தியாயம் 1ல் கற்றுக்கொண்ட எழுத்துக்களை எழுதும் முறை
அருஞ்சொற்பொருள்:
நாம் இதுவரை கற்றுக்கொண்ட நான்கு எழுத்துக்களை மட்டுமே வைத்துக்கொண்டு, வேறு புதிய வார்த்தைகளை உருவாக்குவோமா? இது தான் இந்த முதலாவது பாடத்தின் கடைசி பகுதி, இதற்கு பிறகு உங்களுக்காக ஒரு அருமையான பயிற்சி உள்ளது, அதனை நீங்கள் செய்யவேண்டும்.
அமீன்:
அமீன் என்றால் நேர்மையான/நம்பிக்கைக்குரிய/உண்மையான என்று பொருள். (இன்னும் பல பொருள்களில் இவ்வார்த்தை சிறிது மாற்றத்துடன் குர்-ஆனில் வருகிறது, அவைகளை பிறகு பார்ப்போம்.)
குர்-ஆன் 26:107ஐ படிப்போம்:
Innee lakum rasoolun ameenun இன்னீ லகும் ரஸூலுன் அமீனுன் | குர்-ஆன் 26:107. நிச்சயமாக நான் உங்களுக்கு (இறைவனால்) அனுப்பப் பெற்ற நம்பிக்கைக்குரியதூதன் ஆவேன். |
பைபிளிலும் இவ்வார்த்தையை பல இடங்களில் காணலாம், நாம் இரண்டு எடுத்துக்காட்டுக்களை காண்போம். முதலாவது தேவன் உண்மையுள்ளவர் என்றுச் சொல்லும் வசனம், அடுத்தபடியாக உண்மையுள்ள மனுஷன் எப்படி ஆசீர்வதிக்கப்படுவான் என்ற வசனம்.
. . . அமீனுன் ஹுவ அல்லாஹு . . . | 1 கொரிந்தியர் 1: 9 (1 Cor 1: 9) . . . தேவன் உண்மையுள்ளவர் . . . God is faithful… |
அர்ரஜூலு அல் அமீனு . . . | நீதிமொழிகள் 28:20 (Proverbs 28:20) உண்மையுள்ள மனுஷன் . . . A faithful man… |
*1 கொரி 1:9ல் அலிஃப் எழுத்துக்கு மேலே ஒரு குறியீடு இருப்பதை கவனியுங்கள். அதனை ஹம்ஸா என்றுச் சொல்வார்கள், அதைப் பற்றி அடுத்த பாடத்தில் நாம் கற்றுக்கொள்வோம்.
மா என்றால் என்ன? (What is Ma?)
அரபியில் "மா" என்றால் "என்ன" என்று பொருள், உதாரணத்திற்கு, "உன் பெயர் என்ன?" என்று கேள்வியை அரபியில் எப்படி கேட்பது? பைபிளிலிருந்து எடுத்துக்காட்டுக்களை காண்போம். மீம் + அலிஃப் இரண்டையும் சேர்த்தால், நமக்கு "மா" கிடைக்கும் என்பதை நாம் ஏற்கனவே இப்பாடத்தில் கற்றுக்கொண்டோம்.
மா ஸ்முக? What is your name? | ஆதியாகமம் 32:27 (Genesis) அவர்: உன் பேர் என்ன என்று கேட்டார்; யாக்கோபு என்றான். இதே கேள்வியை இயேசு ஒரு அசுத்த ஆவி பிடித்தவனிடமும் கேட்கிறார், பார்க்க மாற்கு 5:9. |
மா ஸ்முஹு? What is his name? | யாத்திராகமம் 3:13 (Exodus) அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது,அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான். |
| நீதிமொழிகள் 30:4 (Proverbs) . . .அவருடைய நாமம் என்ன? அவர்குமாரனுடைய நாமம் என்ன? அதை அறிவாயோ? |
Ma alqariAAatu மா அல்காரி அது | குர்-ஆன் 101:2 (Quran) திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன? |
மன் என்றால் யார்? (Who is Man?):
அரபியில் மன் என்றால் "யார்" என்று அர்த்தம். இதற்கும் சில எடுத்துக்காட்டுக்களை குர்-ஆன் மற்றும் பைபிளிலிருந்து காண்போம்.
Waqeela man raqin வகீலா மன் ராகின் | குர்-ஆன் 75:27 (Quran) "மந்திரிப்பவன் யார்?" எனக் கேட்கப்படுகிறது.
|
மன் ஹுவ அர்ரப்பு | யாத்திராகமம் 5:2 (Exodus) அதற்குப் பார்வோன்: நான் இஸ்ரவேலைப் போகவிடக்கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்?
|
மன் ஹுவ அர்ரப்பு | நீதிமொழிகள் 30:9 (Proverbs) நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து,கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; . . .
|
அனா (நான் – I am):
"நான்" என்பதை அரபியில் "அனா" என்று சொல்வார்கள்.
யாத்திராகமம் 6:2ஐ பார்ப்போம், அதில் கர்த்தர் மோசேயிடம் பேசும் போது சொல்லும் வாசகத்தை படிப்போம்.
அனா அர்ரப்பு | யாத்திராகமம் 6:2(Exodus) மேலும், தேவன் மோசேயை நோக்கி: நான் யேகோவா God also said to Moses, "I am the LORD". |
அரபியில் தேவன் பேசிய வாக்கியம்: "அனா அர்ரப்பு" (Anaa Arrabbu) என்பதாகும். அரபியில் ரப் என்றால் "இறைவன், கடவுள், தேவன்" என்று அர்த்தமாகும். "அனா" என்றால் "நான்" என்று அர்த்தம். ஆக, "அனா அர்ரப்பு" என்றால், "நான் தேவன்" என்பதாகும். (எபிரேய மொழியில் யேகோவா என்று இருந்தாலும், ஆங்கிலத்தில் "LORD" என்றும், அரபியில் "ரப்" என்றும் மொழியாக்கம் செய்துள்ளனர். உண்மையில் தமிழில் இவ்வசனத்தை மொழியாக்கம் செய்தது போல, "நான் யேகோவா" என்று அரபியில் மொழியாக்கம் செய்திருக்கவேண்டும்).
குர்-ஆனிலும் இந்த நிகழ்ச்சி கீழ்கண்ட விதமாக வருகிறது.
அனா அல்லாஹு | குர்-ஆன் 28:30 . . . ."மூஸாவே! நிச்சயமாக நானே அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்!" என்று கூப்பிடப்பட்டார். |
மின் (இருந்து – From):
அரபியில் "மின்" என்றால், "இருந்து" என்று ஒரு பொருள் உண்டு. அதனை மட்டும் இப்போது காண்போம்.
. . . இர்மியா மின் அர்ரப்பி எரேமியா 7:1 கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வசனம்: Jeremiah 7:1 The word that came to Jeremiah from the LORD, saying, |
இன்னொரு உதாரணத்தைக் காண்போம். ஒருவரைப் பார்த்து நீங்கள் எந்த நாட்டவர் என்று கேட்கும் போது, அவர் "நான் சைனாவிலிருந்து வந்திருக்கிறேன்" என்றுச் சொல்வாரானால், அதனை அரபியில் கீழ்கண்டவாறு எழுதலாம்.
ana min al-Siin அனா மின் அல்-சீன் I am from China நான் சைனாவிலிருந்து வந்திருக்கிறேன் |
அத்தியாயம் 1 – பயிற்சிகள்
பயிற்சி 1:
குர்-ஆனின் முதல் அத்தியாயம் "அல்-ஃபாத்தியா" கீழே அரபியில் கொடுக்கப்பட்டுள்ளது (7 வசனங்கள்). அதே போல, சங்கீதம் 100ஐ அரபியில் கொடுத்துள்ளேன். நாம் இதுவரை படித்த அ, ம, ந, மற்றும் ய என்ற எழுத்துக்களையும், அவைகளின் இதர வடிவங்களையும் அடையாளம் காணுங்கள்.
குர்-ஆன் அத்தியாயம் 1: அல் ஃபாத்தியா
சங்கீதம் 100
பயிற்சி 2:
கேள்விகளுக்கு பதில் அளியுங்கள்.
1) நீங்கள் கற்றுக்கொண்ட நான்கு அரபி எழுத்துக்கள் எவை?
2) ஃபதாஹ், கஸ்ராஹ் மற்றும் தம்மாஹ் என்றால் என்ன? அவைகளின் பயன்பாடு என்ன?
3) 'அலிஃப் மத்தாஹ்'வின் பயன் என்ன?
4) இப்பாடத்தில் கற்றுக்கொண்ட நான்கு எழுத்துக்களின் மூன்று இடச்சூழல்களை எழுதிக் காட்டவும்.
பயிற்சி 3:
பின்வருபவற்றை பொருத்துக:
பயிற்சி 4
கீழ்கண்ட வாத்தைகளை அரபியில் தனித்தனி எழுத்தாகவும், சேர்த்தும் எழுதி பழகவும். இது எழுதும் பயிற்சிக்காக தரப்பட்டுள்ளது, எல்லா வார்த்தைகளுக்கும் பொருள் இல்லை.
இப்பாடங்களில் பயன்படுத்தப்படும்
அரபி பைபிள் மற்றும் குர்-ஆன் மொழியாக்கங்கள்
இப்பாடங்களில் "Smith & Van Dyke (1865)" அரபி பைபிள் மொழியாக்கத்தை நான் பயன்படுத்தியுள்ளேன். இந்த மொழியாக்கத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ள கீழ்கண்ட தொடுப்புக்களை சொடுக்கவும்:
1) ஆன்லைனில் படிக்க: http://www.arabicbible.com/arabic-bible/text.html
2) Ms-Word document ஆக பதிவிறக்கம் செய்துக் கொள்ள: http://www.arabicbible.com/arabic-bible/word.html
3) உங்களிடம் e-sword மென் பொருள் இருந்தால், அதில் இந்த மொழியாக்கத்தை சேர்த்துக் கொள்ள இங்கு சொடுக்கவும்: http://www.arabicbible.com/arabic-bible/online/e-sword.html
4) PDF Format ஆக பதிவிறக்கம் செய்துக் கொள்ள: http://www.arabicbible.com/arabic-bible/pdf.html
5) அரபி பைபிள் ஒலி வடிவத்தில் (ஆடியோ) பதிவிறக்கம் செய்துக் கொள்ள:http://www.arabicbible.com/arabic-bible/audio.html
6) பைபிள் கேட்வே (www.biblegateway.com) தளத்தில் மேலும் இரண்டு அரபி மொழியாக்கங்கள் உள்ளன.
அரபி குர்-ஆன்:
அரபி குர்-ஆனின் வசனங்கள் அனைத்தையும் நான் பல தளங்களிலிருந்து எடுத்து பயன்படுத்தி இருக்கிறேன். ஏனென்றால், பல அரபி ஃபாண்ட் (Font) களில் அரபி குர்-ஆன்கள் ஒவ்வொரு தளத்திலும் உள்ளது. நம்முடைய பாடங்களை சுலபமாக புரிந்துக் கொள்ளவேண்டுமென்பதால், கீழ் கண்ட தளங்களிலிருந்து நான் குர்-ஆன் வசனங்களை எடுத்துள்ளேன்:
1) தமிழில் குர்-ஆன் தளம் (tamililquran) - http://www.tamililquran.com/
2) ஸர்ச் ட்ரூத் (searchtruth) - http://www.searchtruth.com/
3) குர்-ஆன் புரௌஸர் (quranbrowser) - http://www.quranbrowser.com/
4) குர்-ஆன் கார்பஸ் - http://corpus.quran.com/
5) இதர குர்-ஆன் மென்பொருள்கள்
தமிழ் குர்-ஆன்:
தமிழ் குர்-ஆன் வசனங்கள் அனைத்தும் 'முஹம்மது ஜான் தமிழாக்கத்திலிருந்து' எடுக்கப்படுகின்றன. இதர தமிழாக்கங்கள் பயன்படுத்தப்படும் போது அவைகளின் பெயர்கள் தகுந்த இடத்தில் குறிப்பிடப்படும்.
அரபி பைபிள் சம்மந்தப்பட்ட பயனுள்ள தளங்கள்:
1) Bible Translations into Arabic - https://en.wikipedia.org/wiki/Bible_translations_into_Arabic
2) List of Christian Terms in Arabic - https://en.wikipedia.org/wiki/List_of_Christian_terms_in_Arabic
3) Website and app with six Arabic versions - https://www.bible.com/bible/13/jhn.1.avd
4) Arabic Bible: Book of Life (pdf and audio) - http://www.biblica.com/en-us/bible/bible-versions/arabic-bible/
5) MT. SINAI ARABIC CODEX 151 -- Oldest known translation of the New Testment to Arabic -http://www.arabicbible.com/arabic-bible/codex/15-mt-sinai-arabic-codex-151.html
முன்னுரை பொருளடக்கம் அத்தியாயம் 2 - முஹம்மது
Source: