"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
"LIFE OF MUHAMMAD" SEMINAR - PART 4
முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு பாகம் 1ஐ இங்கு படிக்கவும்.
முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு பாகம் 2ஐ இங்கு படிக்கவும்.
முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு பாகம் 3ஐ இங்கு படிக்கவும்.
இந்த கட்டுரையில் அதன் தொடர்ச்சியாக நான்காம் பாகத்தை காண்போம்.
தேவையில் இருந்த மனிதர்கள் (The People in Need)
[மக்காவிலிருந்து மதினாவிற்கு: Tabari vol 6 p93-150, LoM p191-218]
இஸ்லாமியர்கள் ஊரை விட்டு போகவேண்டுவதில்லை என்று சொல்லப்பட்டபோது, அவர்களுக்கு நிம்மதி உண்டானது. ஆனால், முஹம்மதுவின் அன்பான மனைவி கதிஜா மரித்துவிட்டார்கள். பிறகு அவரது சித்தப்பாவும் மரித்துவிட்டார்கள். இதோடு முஹம்மதுவிற்கு கிடைத்த பாதுகாப்பு ஒரு முடிவிற்கு வந்துவிட்டது. இப்போது முஹம்மது ஒரு பெரிய ஆபத்தில் இருக்கிறார் என்பதை மட்டும் அறிந்துக்கொண்டார்.
அவர் பழங்குடி நகரமான அல்-தையிபிற்கு (al-Taif) பாதுகாப்பிற்காகச் சென்றார். அவர்கள் அவரை நிராகரித்துவிட்டனர், இந்த தோல்வியை இரகசியமாக வைத்திருக்கும் படி அவர்களுக்குச் சொன்னார். ஆனால், அவர்கள் அவரை துன்புறுத்தி கேலி செய்தனர், இதனால் அவர் அந்நகரத்தை விட்டு வெளியேறினார்.
"அபூ தலிப்பின் மரணத்திற்கு பின்பு, குரைஷி மக்களினால் அதிக வேதனை உண்டானபோது, இறைத்தூதர் தையிபிற்குச் சென்று, தகீப்பின் உதவியை நாடினார், தன் இன மக்களுக்கு எதிராக உதவும் படி கேட்டுக்கொண்டார்.... இதனால், தகீப்பினால் எந்த நன்மையும் இல்லை என்பதினால் இறைத்தூதர் எழுத்து சென்றுவிட்டார். அவர் இப்படி கூறினார் என்று எனக்கு அறிவிக்கப்பட்டது "நீங்கள் உங்களுக்கு விரும்பியபடி நடந்துக்கொண்டீர்கள், எனினும் இதனை இரகசியமாக வைத்திருங்கள்". ஏன் இப்படி சொன்னார் என்றுச் சொன்னால், முஸ்லீம்கள் இதனை கேள்வியுற்றால், தனக்கு அவமானமாக இருக்கும் என்பதால் இப்படிச் சொன்னார்." LoM p192-193.
மக்காவில் முஹம்மது இன்னும் தன் பிரச்சாரத்தை தொடர்ந்துக்கொண்டு இருந்தார். தனக்கு ஆபத்து இருக்கிறது என்பதை தெரிந்தும், முஹம்மது பலவகையான புனிதப் பிராயணத்திற்காக வரும் அரபி இனத்தவர்களிடம் தன் பிரச்சாரத்தை தொடர்ந்தார், தான் ஒரு நபி என்றுச் சொன்னார், அவர்களிடம் தனக்கு பாதுகாப்பு கொடுக்கும் படி கேட்டுக்கொண்டார்.
"அரபி இனத்தவர்களின் புனிதப்பயணத்தின் போது, இறைத்தூதர் அவர்களுக்கு முன்பாக தோன்றி, இறைவனிடம் அனைவரும் சேருங்கள் என்றும், தான் இறைவன் அனுப்பிய நபி என்று பிரகடனப்படுத்திக்கொண்டு, தன் வார்த்தைகளை நம்பும்படியும், தன்னை காப்பாற்றும் படியும் கேட்டுக்கொண்டார். தனக்கு பாதுகாப்பு கிடைத்தால், அவர் இறைவனின் செய்தியை பறைசாற்ற வாய்ப்பு உண்டாகும் என்றுச் சொன்னார்." Tabari volume 6, page 120.
ஒருமுறை மதினாவிலிருந்து வந்த கஜ்ரஜ் இனத்தவர்களான சில மனிதர்களை சந்தித்தார். அவர்கள் அவரிடம் மதினாவில் உள்ள அரபியர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே உள்ள சண்டைகளை அறிவித்தார்கள். இம்மனிதர்கள் யூதர்களுடன் கருத்துவேறுபாடு கொண்டு இருந்தனர். மதினாவின் யூதர்கள் இவர்களிடம், "ஒரு நாள் எங்களிலிருந்து ஒரு நபி (தீர்க்கதரிசி) தோன்றுவார், அப்போது அவருடன் சேர்ந்து உங்களை (அரபியர்களை) நாங்கள் தோற்கடிப்போம்" என்று எச்சரிக்கை கொடுத்துயிருந்தார்களாம்.
முஹம்மது குர்ஆன் பற்றிச் சொல்வதை கேட்டு, இந்த கஜ்ரஜ் இனத்தவர்கள் ஈர்க்கப்பட்டார்கள். யூதர்கள் வருவார் என்றுச் சொன்ன நபி (தீர்க்கதரிசி) இவர் தான் என்று அம்மக்கள் நம்பினர். இதனால், யூதர்கள் இவரோடு சேர்ந்துவிடுவதற்கு முன்பாக, இவர்கள் முஹம்மதுவோடு சேர்ந்துவிட முடிவு செய்தனர். இதனால் இவர் அவர்களுக்கு எதிரியாக இருக்க வாய்ப்பில்லாமல் போகும் என்று நம்பினர். அவர்கள் முஹம்மதுவிடம், "மதினாவில் பிரிவினைகள் உண்டு, அதனை முடிவிற்கு கொண்டுவர உம்மால் முடியும் என்றுச் சொன்னார்கள்".
"இதனை குறித்துக்கொள்ளுங்கள்! இறைவனின் பெயரில், உங்களை பயமுறுத்துகின்ற யூதர்கள் குறிப்பிட்ட நபி (தீர்க்கதரிசி) இவர் தான். யூதர்கள் அவரை அங்கீகரிப்பதற்கு முன்பாக நீங்கள் அவரை ஏற்றுக்கொள்ளுங்கள். இந்த அழைப்பை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள், அவர் சொன்ன செய்தியில் இருக்கும் உண்மையை நம்பினார்கள், அவர்களிடம் சொல்லப்பட்ட இஸ்லாமை ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் கீழ்கண்டவாறு கூறினார்கள்:
"நாங்கள் எங்கள் மக்களை விட்டு வந்திருக்கிறோம், எந்த இன மக்களிடமும் காணமுடியாத அளவிற்கு எங்கள் மக்கள் விரிவினைகளினால் விரோதங்களினால் பிரிந்து இருக்கிறார்கள். உங்களின் மூலமாக இறைவன் எங்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பானாக. நாங்கள் எங்கள் மக்களிடம்(மதினாவிற்கு) சென்று அவர்களை ஒன்று கூட்டி, உங்கள் இஸ்லாமிய அழைப்பைப் பற்றி கூறுவோம். நாங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொண்டது போல, அவர்களும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளும் படி நாங்கள் அழைப்பு விடுப்போம். அவர்கள் மறுபடியும் ஒன்று கூடி ஒற்றுமையாக இருந்தால், உம்மைப் போல பலமுள்ளவர் யாருமே இருக்கமுடியாது" Tabari, volume 6, page 125.
அவர்கள் மதினாவிற்கு திரும்பிச் சென்று, முஹம்மது மற்றும் இஸ்லாம் பற்றி அங்குள்ளவர்களுக்குச் சொன்னார்கள். அவர்களில் 12 பேர் மக்காவிற்கு திரும்பி வந்து முஹம்மதுவிற்கு நம்பிக்கையாளர்களாக இருப்போம் என்று உறுதிமொழி கொடுத்தார்கள். இது தான் "அகபாவின் முதல் உறுதி மொழியாகும் (First Pledge of Aqabah)".
இவ்விதமாக இஸ்லாமுக்கு மாறியவர்கள் மதினாவில் இஸ்லாமை பிரச்சாரம் செய்தார்கள். அவர்களுக்கு இஸ்லாமைப் பற்றி இன்னும் போதிப்பதற்காக முஹம்மது முஸ்லீம்களை மதினாவிற்கு அனுப்பினார். ஓரிரு ஆண்டுகளுக்குள் மதினாவில் அனேகர் இஸ்லாமை தீவிரமாக பின்பற்றுகிறவர்களாக மாறினார்கள். அவர்கள் முஹம்மதுவை காப்பதாக உறுதியளித்தார்கள்.
[மதினா மக்கள் கூறினார்கள்]: "உம்மை சத்தியத்துடன் அனுப்பியவரின் பெயரில் உறுதிகூறுகிறோம், எங்கள் பெண்களை நாங்கள் பாதுகாப்பது போல, உங்களை நாங்கள் பாதுகாப்போம். ஓ இறைத்தூதரே, எங்களுடன் நீங்களும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். நாங்கள் போர் புரியக்கூடிய அளவிற்கு வலிமையுள்ளவர்களாக இருக்கிறோம். இதனை நாங்கள் எங்கள் முன்னோர்களிடமிருந்து பெற்று இருக்கிறோம். Tabari vol 6, page 133
அவருடன் ஒற்றுமையாக இருப்போம் என்று நீங்கள் எடுத்துக்கொண்ட உறுதி மொழியானது, உலக மக்கள் அனைவரிடமும் போர் புரிய நீங்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியாகும். Tabari vol 6, page 134
பிறகு எழுபதிற்கும் அதிகமான மதினா மக்கள் மக்காவிற்கு திரும்பி வந்து முஹம்மதுவை சந்தித்து தங்கள் நம்பிக்கையை உறுதிபடுத்துவதாக சொன்னார்கள். இது தான் "அகபாவின் இரண்டாம் உறுதிமொழியாகும் (Second Pledge of Aqabah)". அவர்கள் மதினாவிற்கு திரும்பி வந்தார்கள், இஸ்லாம் அதிகமாக வளர்ந்தது.
இங்கு முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், இப்போது முஹம்மதுவிற்காக அதிக எண்ணிக்கையில் மக்கள் சேர்ந்தார்கள், இவர்கள் தங்கள் உயிரையும் அவருக்காக தியாகம் செய்யவும் தயாரானார்கள், என்பது தான்.
முஹம்மது மதினாவிற்கு தப்பி ஓடுகிறார் (MUHAMMAD FLEES TO MEDINA)
[முஹம்மது மதினாவிற்கு தப்பி ஓடுதல்: LoM p219-221, Tabari vol 6 p145-150]
"A hard beginning maketh a good ending." John Heywood
"ஒரு கடினமான ஆரம்பம், சுகமான முடிவை உருவாக்கும்"
முஸ்லீம்களுக்கு மக்காவில் துன்பம் அதிகரித்தது, ஒரு நாள் மக்காவினர் தன்னை கொன்றுவிடுவார்கள் என்று முஹம்மது உணர்ந்துக்கொண்டார். முஹம்மது தன்னை பின்பற்றுகிறவர்களின் பாதுகாப்பு கருதி அவர்களை மதினாவிற்கு அனுப்புகிறார். இப்படி மக்காவிலிருந்து மதினாவிற்கு இடம்பெயர்ந்த நிகழ்ச்சியைத் தான் "ஹிஜ்ரா" என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி பற்றிய முக்கியத்துவம் அனேகருக்கு தெரிவதில்லை. இந்த இடம்பெயர்தல் தான் "இஸ்லாமிய சமுதாயம்" உருவாக காரணமாக இருந்தது. இஸ்லாம் ஒரு ஆன்மீக, சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ அமைப்பாகும்.
இந்த "ஹிஜ்ரா" இஸ்லாமில் முக்கியமான மாற்றம் ஏற்பட காரணமாக இருந்தது. இஸ்லாமை உருவாக்க வன்முறை கட்டளைகள் உருவாக்கப்பட்டது.
மதினாவிற்கு இடம் பெயர்வதற்கு முன்பாக, மக்காவில் இருக்கும் போதே, "சண்டையிட கட்டளை வெளிப்பட்டது": குர்ஆன் சூரா 22:39-41 & 2:193
போர் தொடுக்கப்பட்டோருக்கு அவர்கள் அநியாயம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதனால் (அவ்வாறு போர் தொடுத்த காஃபிர்களை எதிர்த்துப் போரிடுவதற்கு) அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது நிச்சயமாக அவர்களுக்கு உதவி செய்ய அல்லாஹ் பேராற்றலுடையவன். (குர்ஆன் 22:39)
இவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; 'எங்களுடைய இறைவன் ஒருவன்தான்' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் சிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான். (குர்ஆன் 22:40)
அன்றியும், இவர்கள் (எத்தகையோரென்றால்) இவர்களுக்கு நாம் பூமியில் இடம்பாடாக்கிக் கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள்; தீமையை விட்டும் விலக்குவார்கள் மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது. (குர்ஆன் 22:41)
ஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்;. ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் - அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது. (குர்ஆன் 2:192)
முஹம்மது மதினாவிற்கு செல்வதற்கு முன்பு "இனி மக்கா மக்களிடம் நீர் சண்டையிடலாம்" என்றுச் சொல்லியிருந்தார். இஸ்லாமியரல்லாதவர்களோடு தீவிரமான மற்றும் பாதுகாப்பு கருதி செய்யப்படும் சண்டைகள் இனி அனுமதிக்கப்படுகிறது, கற்றுக்கொடுக்கப்படுகிறது, உற்சாகப்படுத்தப்படுகிறது மற்றும் பின்பற்றப்படுகிறது. குர்ஆனில் காணப்பட்ட அஹிம்சை வசனங்கள் இப்போது "இரத்து செய்யப்படுகிறது" அல்லது "செல்லாது என்றுச் சொல்லப்படுகிறது".
சூழ்நிலைகள் மாறின,
முஹம்மதுவிற்கு கிடைத்த வாய்ப்புக்கள் மாறின,
சட்டங்கள் மாறின,
கடைசியாக முஹமம்துவின் இஸ்லாமும் மாறிவிட்டது.
(Many of the non-violent verses in the Quran were now "abrogated", or canceled. Circumstances changed, Muhammad's opportunities changed, the rules of the game changed, and thus Muhammad's Islam changed.)
முஹம்மது மிகவும் கஷ்டப்பட்டு மதினாவிற்கு ஓடினார். மதினா 200 மைல்கள் தூரத்தில் வட திசையில் இருக்கிறது. அங்கு அனேக அரபி மற்றும் யூதர்கள் வாழ்ந்துக்கொண்டு இருந்தார்கள்.
ஹிஜ்ராவின் தேதி: கி.பி. 622 (அ) 623 ஆகும். இந்த தேதிலிருந்து தான் இஸ்லாமிய நாட்காட்டி ஆரம்பிக்கிறது (After Hijrah = "AH"). இஸ்லாமிய சமுதாயம் மதினாவில் ஸ்தாபிக்கப்பட்டது.
பாகம் 4 முற்றிற்று
ஆங்கில மூலம்: "LIFE OF MUHAMMAD" SEMINAR
ஐந்தாம் பாகம் அடுத்த கட்டுரையில்....
© Answering Islam, 1999 - 2010. All rights reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக