ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

 1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
 2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
 3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
 4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
 5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
 6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
 7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
 8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
 9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
 10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
 11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
 12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
 13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
 14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
 15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
 16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
 17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
 18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
 19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
 20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
 21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
 22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
 23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
 29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
 30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
 31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
 32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
 33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
 34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
 35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
 36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
 37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
 38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
 39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
 40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
 41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
 42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
 43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
 44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
 45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
 46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
 47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
 48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
 49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
 50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
 51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
 53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
 54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
 55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
 56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
 57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

 1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
 2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
 3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
 4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
 5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
 6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
 7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
 8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
 9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
 10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
 11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
 12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
 13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
 14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
 15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
 16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
 17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
 18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
 19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
 20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
 21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
 22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
 23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
 24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
 25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
 26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
 27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
 28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
 29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
 30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
 31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
 32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
 33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
 34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
 35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
 36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
 37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
 38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
 39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
 40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
 41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
 43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
 44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
 45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
 46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
 47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
 48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
 49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வியாழன், 28 ஜூலை, 2016

Dr. ஜாகிர் நாயக்கை திட்டாதீர்கள் - பாகம் 3: ரசிகன் மாங்காய் தின்றால் தலைவன் பற்கள் கூசுவது ஏன்?

(உமரின் தம்பி சௌதி அரேபியாவில் வேலை பார்க்கிறான். அவன் இஸ்லாமை தழுவியதால் பல சூடான விவாதங்களை தன் அண்ணன் உமரிடம் செய்வான். சமீப கால ஜாகிர் நாயக் விவகாரம் பற்றிய ஒரு சின்ன உரையாடல் இது).

தம்பி: ஹலோ, உமரண்ணா!

உமர்: ஹலோ தம்பி. எப்படி இருக்கிறாய்?

தம்பி: அல்லாஹ்வின் அருளால் நான் நலமாக இருக்கிறேன். நீங்க எப்படி இருக்கீங்க?

உமர்: கர்த்தரின் கிருபையால், சுகமாக இருக்கிறேன்.

தம்பி: ரமளான் மாதத்தில் பாரா அவர்களின் புத்தகம் பற்றி விமர்சனம் எழுதினீங்க! 15 பாகத்திற்கு பிறகு திடீரென்று நிறுத்திட்டீங்க, என்ன காரணம்? உங்க காட்டேரி தாகத்தை தணிக்கும் அளவிற்கு நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்தில் குடிப்பதற்கு தேவையான இரத்தம் கிடைக்கவில்லையா உங்களுக்கு?

உமர்: என் ரமளான் கட்டுரைகளைப் பார்த்து ரொம்ப கோபமாக இருக்கிறாய் போல் தெரிகிறது! சும்மா சொல்லக்கூடாது, பாரா அவர்களின் புத்தகம் ஒரு அமுதசுரபி, எடுக்க எடுக்க சுரந்துக்கொண்டே இருக்கிறது.

தம்பி: சுரப்பது எது, அமிர்தமா?

உமர்: நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்திலிருந்து  அமிர்தமா சுரக்கும்? இரத்தம் தான் சுரக்கும். எனக்கு தேவையான நிறைய சரக்கு  அதில் இருக்கிறது. ரமளான் மாதத்தில் என்னுடைய ராடாரை பாரா அவர்கள் மீது ஃபோகஸ் செய்து ஸ்கான் செய்துக்கொண்டு இருந்தேன். நேரமின்மையின் காரணமாக, ரமளான் மாதம் முடியும் போது என்னால் 15 கட்டுரைகளை மட்டுமே எழுதமுடிந்தது. அதன் பிறகு தொடரலாம் என்று பார்த்தால், ரமளானின் கடைசி வாரத்தில் மதினாவில் ஒரு குண்டு வெடிப்பு பற்றிய செய்தி வந்தது.  உடனே என் ராடாரை மதினாவின் பக்கம் திருப்பினேன்.  ஆனால், மறுபடியும் என் ராடாரை ஜாகிர் நாயக் பக்கம் திருப்பவேண்டிய அவசியம் வந்தது. அடேங்கப்பா! எவ்வளவு செய்திகளை முஸ்லிம்கள் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். உலக ஊடகங்களை பிஸியாக வைத்திருப்பதில் இஸ்லாம் முதலாவது நிற்கிறது என்றுச் சொன்னால், மிகையாகாது. மதினா குண்டு வெடிப்பு, பிரான்ஸ் வன்முறை என்று சரமாரியாக முஸ்லிம் தீவிரவாதிகள் தங்கள் திறமையை பல கோணங்களில் காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். சும்ம சொல்லக்கூடாது, முஸ்லிம்களுக்கிடையில் நிறைய ஒற்றுமை இருக்கிறது. சர்வதேச அளவில் சகோதரத்துவத்தை நேர்த்தியாக நிலைநாட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

தம்பி: போதும் போதும், நிறுத்துங்கள். நான் ஒரு முக்கியமான கேள்வியை உங்களிடம் கேட்க போன் செய்தேன்.

உமர்: என்ன கேள்வி?

தம்பி: டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் பற்றியது தான்.

உமர்: அடடே! இன்னொரு தலைப்பை எனக்கு எடுத்துக்கொடுக்க முடிவு செய்துட்டியா? சரி கேள்.

தம்பி: தாகா தாக்குதலில் ஈடுபட்ட ஒருவன், நான் ஜாகிர் நாயக்கின் ரசிகன் (Fan) என்று சொன்னதை பிடித்துக்கொண்டு, இந்த ஊடகங்கள் ஏன் இவ்வளவு பெரிய பிரச்சனையாக மாற்றினார்கள்? இதற்கு நெத்தியடியாக டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் அப்போதே கீழ்கண்டவாறு பதில் கொடுத்துள்ளார்.

என்னை பாங்களாதேஷில் 90% மக்களுக்கு மேல் தெரியும், மேலும் பாங்களாதேஷில் என் ரசிகர்களாக 50% க்கு மேல் இருக்கக்கூடும். என்னுடைய ரசிகர்களாக இருப்பதினால் மாத்திரம் நான்  அவர்களை தீவிரவாத செயல்கள் செய்ய தூண்டியதாகச் சொல்வது உண்மையாகாது. இதுமட்டுமல்ல, அந்த நபர் இறைத்தூதர் முஹம்மது அவர்களின் தீவிர‌ ரசிகனாகவும் இருப்பான், அதற்காக அவன் தீவிரவாத செயல்கள்  செய்யும் படி முஹம்மது தான் தூண்டினார்/ஊக்குவித்தார் என்றுச் சொல்லமுடியுமா?

மூலம்: Amid Dhaka row, Zakir Naik calls IS 'un-Islamic' & The Daily Star protests Dr Naik's claims

இப்போது உங்களுக்கு என்னுடைய கேள்விகள் என்னவென்றால்:

1) ஒரு தலைவருக்கு ஒருவர் ரசிகனாக இருப்பதினால், அந்த நபர் செய்யும் குற்றங்களுக்கு அந்த தலைவர் பொறுப்பேற்க முடியுமா?

2) ஒருவரின் பேச்சுத்திறமையைப் பார்த்து கவரப்படுவது தவறா?

நீங்களும் ஜாகிர் நாயக் பற்றி கட்டுரைகளையும் எழுதியுள்ளீர்கள். மேற்கண்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.

உமர்: ஒரு நல்ல கேள்வியைத் தான் நீ கேட்டு இருக்கின்றாய். இதுவரை நீ சொன்ன விவரங்களில் எனக்கு "ரசிகன்" மற்றும் "கவரப்படுவது" என்ற‌ இரண்டு வார்த்தைகள் பளிச்சென்று தெரிகின்றது,  ஆங்கிலத்தில் சொல்வதானால், FAN மற்றும் INSPIRE என்பதாகும். உனக்கு நான் பதில் சொல்வதற்கு முன்பு, இந்த கேள்விக்கு பதில் சொல்: ரசிகன் (fan) என்றால் யார்?.

தம்பி: இரசிகன் என்றால் ஒருவருக்கு இன்னொருவரின் திறமை பிடித்திருந்தால், அந்த திறமையை ரசிப்பவன் ரசிகன் ஆவான்.  உதாரணத்திற்கு, நடிகர்களை எடுத்துக்கொண்டால், எம்ஜியாருக்கும் சிவாஜிக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவ்விருவரின் நடிப்பை ரசிப்பவர்கள் ரசிகர்கள் என்றுச் சொல்கிறோம்.  இன்ஸ்ஃபைர் என்றால்...

உமர்: போதும் நிறுத்து, நான் ரசிகன் என்றால் யார்? என்று மட்டுமே கேட்டேன், இன்ஸ்ஃபைர் பற்றி பிறகு கேட்கிறேன். ரசிகன் என்றால்  யார் என்று தெளிவாக விளக்கினாய்.  இப்போது என் கேள்வி என்னவென்றால்: ஒருவன் ஜாகிர் நாயக்கிற்கு இரசிகன் என்று தன்னை அறிமுகம் செய்துக்கொண்டால் அதற்கு என்ன அர்த்தம்?

தம்பி: ... அது வந்து...

உமர்: என்ன யோசிக்கிறாய்...? ஜாகிர் நாயக் நடிகராக இருந்தால், அவரது நடிப்பை ரசிக்கிறார்கள் என்றுச் சொல்லமுடியும். அவர் ஒரு இசை அமைப்பாளராக இருந்தால், அவரது இசையை ரசிக்கிறார்கள் என்றுச் சொல்லமுடியும். கிரிக்கெட்டராக இருந்தாலும், அவரது ஆட்டத்தை இரசிப்பவராக இருக்கிறார் எனலாம். ஜாகிர் நாயக்கின் திறமை என்ன?

தம்பி: அவரது சிறப்பு பேச்சாற்றல், விவாத திறமை,  எப்படி கேள்வி கேட்டாலும், கச்சிதமாக பதில் சொல்லக்கூடியவர்.

உமர்: சரியாகச் சொன்னாய். அவரது வெளிப்புற தோற்றத்தைப் பார்த்து யாரும் ரசிக்கமுடியாது! அவரது பேச்சுத்திறமை தான் அவரது பிளஸ் பாயிண்ட். உனக்கு அடுத்த கேள்வி. அவர் பேச்சுத்திறமையுள்ளவர் என்றால், அவர் எப்படிப்பட்ட பேச்சுக்களை பேசுகிறார்? அதாவது, அவர் ஒரு நகைச்சுவை பேச்சாளரா? அரசியல் பேச்சாளரா அல்லது தென்கச்சி கோ சுவாமிநாதம் போன்று "இன்று ஒரு தகவல்" என்ற நிகழ்ச்சியை தினமும் கொடுக்கும் ரேடியோ பேச்சாளாரா?

தம்பி: அவர் இஸ்லாமை தன் பேச்சுக்களால் பரப்பும் இஸ்லாமிய அறிஞர்.

உமர்: வெரிகுட், இப்போது தான் நீ சரியான வழிக்கு வந்தாய். ஆக, ஜாகிர் நாயக் ஒரு சிறந்த பேச்சாளர், தன் பேச்சுத்திறமையை வைத்துக்கொண்டு இஸ்லாமுக்கு ஊழியம் செய்கிறார் அப்படித்தானே!

தம்பி: ஆமாம், இப்போது இதுவா கேள்வி? நான் கேட்ட கேள்வி வேறு அல்லவா?

உமர்: நானும் அதற்குத்தான் வருகிறேன். இப்போது எனக்கு பதில் சொல்லு. ஜாகிர் நாயக்கின் இரசிகன் அவரிடம் எதனை ரசிக்கிறான்?

தம்பி: அவரது பேச்சு மற்றும் இஸ்லாமிய போதனையை இரசிக்கிறான்.

உமர்: அப்படியானால், ஒருவன் தன்னை ஜாகிர் நாயக்கின் இரசிகன் என்று அடையாளப்படுத்திக்கொண்டால், அவன் அவரது இஸ்லாமிய போதனைகளை இரசிக்கின்றான் என்று அர்த்தம், சரி தானே.

தம்பி: இருக்கட்டும், அவரது ரசிகர்கள் அவரது பேச்சுக்களை ரசிக்கிறார்கள். இதிலென்ன பிரச்சனை உங்களுக்கு?

உமர்: இப்படி அவரது பேச்சுக்களை அதிகமாக ரசிப்பவர்களில் ஒருவன் தீவிரவாதியாக இருந்தால்? இதன் அர்த்தமென்ன?

தம்பி: நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். நீங்கள் நான் கேட்ட கேள்வியை திசை திருப்புகிறீர்கள்? இன்னும் நீங்கள் இன்ஸ்ஃபைர் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை.

உமர்: நான் இன்ஸ்ஃபைர் பற்றிய விளக்கம் அளிப்பதற்கு தான் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டு இருக்கிறேன்.

தம்பி: இது அநியாயம். . .

உமர்: எது அநியாயம். சச்சினின் ரசிகன் சச்சினைப் போல பேட்டிங் செய்ய முயலுவது அநியாயமா? சிவாஜியின் இரசிகன் ஒருவேளை இன்னொரு நடிகனாக இருந்தால், அவரது நடிப்பினால் உந்தப்பட்டு (ஊக்குவிக்கப்பட்டு), அவரைப்போலவே சிறப்பாக நடிக்க முயற்சி செய்வது அநியாயமா?

தம்பி: நீங்க என்னத்தைச் சொல்லவருகிறீங்க...

உமர்: பார் தம்பி. முதலாவது, ஒருவர் இன்னொருவருக்கு ரசிகனாக இருப்பார், அது முத்திப்போச்சுன்னா, அதாவது அவர் இன்னும் அதிகமாக அந்த தலைவரின் திறமையை ரசிக்க ரசிக்க அவரைப் போலவே மாற முயற்சி எடுப்பார். மேலும் தனக்கு ரோல் மாடலாக இருக்கும் தலைவரை பார்த்துக்கொண்டே அவரது வழியில் நடக்க முயலுவார். இதைத் தான் இன்ஸ்ஃபைர் என்றுச் சொல்லுவோம்.

தம்பி: இதனை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன், இரசிகன் (Fan) என்பது வேறு, ஊக்குவித்தல் (Inspire) என்பது வேறு. இரண்டும் ஒன்றல்ல.

உமர்: தம்பி, நான் இவ்விரண்டும் ஒன்று என்றா சொன்னேன்?  இவ்விரண்டும் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக வருபவை. முதல் நிலை ரசிகன், இரண்டாம் நிலை அவரால் அதிகமாக கவரப்படுவதல் ஆகும். சிலர் ரசிகர்களாகவே மட்டுமே நின்றுவிடுவார்கள். ஆனால், சிலர் இரசிகன் என்ற நிலையைத் தாண்டி, அடுத்த நிலைக்கு சென்றுவிடுவார்கள்.

தம்பி: எனக்கு புரியவில்லை.

உமர்: உனக்கு புரியும் படி சொல்கிறேன். ஒரு கிரிக்கெட் வீரர் 'நான் இளையராஜாவின் ரசிகன், அவரது இசையால் ஈர்க்கப்பட்டவன்' என்று சொல்கிறான் என்று வைத்துக்கொள்வோம். இதன் அர்த்தம் என்ன?

தம்பி: அந்த நபர், இளையராஜாவின் இசையை ரசிக்கிறார் என்று அர்த்தம்.

உமர்: ஆனால், இசைத்துறையில் புதிதாக நுழையும் இன்னொரு நபர் 'நான் இளையராஜாவின் ரசிகன், அவரது இசையால் ஈர்க்கப்பட்டவன்' என்றுச் சொன்னால் என்ன அர்த்தம்?

தம்பி: இளையராஜாவின் இசையை ரசிப்பதோடு நின்றுவிடாமல், தான் அமைக்கும் இசையில் இளையராஜாவின் சில யுக்திகளை, டெக்னிக்குகளை பயன்படுத்தி இசை அமைக்க முயற்சி செய்பவர் என்று அர்த்தம், அல்லது  குறைந்தபட்சம், இளையராஜாவைப் போல தானும் ஒரு நாள்  பெரிய இசையமைப்பாளராக வரவேண்டும் என்று விரும்பி அவரை தன் வழிகாட்டியாக வைத்திருப்பவர் என்று அர்த்தம்.

உமர்: சரியாகச் சொன்னாய். இதே போலத்தான்,  ஜாகிர் நாயக்கின் பேச்சை கேட்பவர்கள் பல கோடி பேர். அவர்களில் ரசிகர்களாக மட்டுமே இருப்பவர்கள் சில கோடி இருப்பார்கள். இவர்கள் அவரை நேசிப்பார்கள், அவரது பேச்சுக்களை ஆர்வமாக கேட்பார்கள், அனேகருக்கு சிபாரிசும் செய்வார்கள். இவர்கள் ரசிகர்கள் என்ற நிலையிலேயே நின்றுவிடுபவர்கள். ஆனால், ஒரு சிலர், ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை அதிகமாக நேசிப்பார்கள். அவர் சொல்வதில் ஒரு பிழையும் இல்லை என்று நம்புவார்கள். ஏனென்றால், குர்‍ஆன், ஹதீஸ்கள் மற்றும் முஹம்ம‌து பற்றி ஜாகிர் நாயக் உயர்த்திப் பேசுவதினால் இப்படி நினைப்பார்கள். 

இப்படிப்பட்டவர்களை சில இஸ்லாமிய தீவிரவாத குழுக்கள் தொடர்பு கொண்டு (இதில் ஜாகிர் நாயக்கிற்கு தொடர்பு இல்லை), இஸ்லாமுக்காக தீவிரவாத செயல்களில் ஈடுபடும்படி கேட்டுக்கொண்டால், ஆரம்பத்தில்  ஜாகிர் நாயக்கின் ரசிகர்கள் மறுப்பார்கள். ஆனால், ஜாகிர் நாயக் போன்ற புகழ் பெற்ற அறிஞர்கள் கூட "இஸ்லாமுக்காக‌ தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதை ஆதரிக்கிறார்கள்" என்று அவர்களுக்கு சொல்லப்படும் போது, அவர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். உடனே அவர்களுக்கு ஜாகிர் நாயக் மறைமுகமாக தீவிரவாதிகளை ஆதரிக்கும் வீடியோ பேச்சுக்களை காண்பித்து விளக்கமளிக்கும் போது, இப்படிப்பட்டவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட ஒப்புக்கொள்வார்கள். தாங்கள் ஏற்கனவே ரசிகனாக இருக்கும், ஜாகிர் நாயக் கூட அங்கீகாரம் அளிக்கிறாரே என்று எண்ணி, தங்களை தீவிரவாதத்திற்கு விற்றுவிடுவார்கள்.

தம்பி: நீங்கள் சொல்வது நான்சென்ஸ். இதில் ஒரு லாஜிக்கும் இல்லை. ஜாகிர் நாயக் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு போதும் தீவிரவாதிகளை ஆதரித்தது இல்லை. உங்களால் முடிந்தால் நிரூபிக்கமுடியுமா?

உமர்: நேரடியாக ஜாகிர் நாயக் தீவிரவாதத்தை ஆதரிக்கிறார் என்று நான் சொல்ல‌வில்லை, மறைமுகமாக அதுவும் வாழைப்பழத்தில் ஊசியை நுழைப்பது போல, யாருக்கும் தெரியாமல் அவர் தீவிரவாதத்தை தன் பேச்சுக்களில் ஊக்குவிக்கிறார் என்று தான் குற்றம் சாட்டுகின்றேன்..

தம்பி: சத்தியமாக  இல்லை. அவர் இப்படியெல்லம் செய்யவே இல்லை.

உமர்: தம்பி, முஸ்லிம்களைத் தவிர "மற்றவர்கள் எல்லோரும் முட்டாள்கள்" என்று நினைத்துவிட்டாயா? இந்திய அரசாங்கமும், உளவுத்துறையும், பத்திரிக்கையாளர்களும் ஜாகிர் நாயக்கின் குறிப்பிட்ட பேச்சுக்களில் மறைந்திருக்கும் உண்மைகளை கண்டுபிடிக்கமுடியாத அளவிற்கு அறியாமையில் இல்லை.

தம்பி: ஒரு உதாரணத்தை உங்களால் காண்பிக்கமுடியுமா?

உமர்: தாரளமாகச் சொல்லமுடியும். 9/11 பற்றியும் பின்லாடன் பற்றியும் கேள்வி கேட்கப்பட்டபோது, ஜாகிர் நாயக் அளித்த பதிலைப்பார்:

"ஒசாமா பின் லாடன் இஸ்லாமின் எதிரியுடன் போர் புரிந்தால், நான் அவரோடு இருக்கிறேன். எனக்கும் அவருக்கும் தனிப்பட்ட முறையில் நட்பு இல்லை... இருந்தாலும் நான் அவருக்காக இருக்கிறேன். ஒசாமா அமெரிக்கா என்ற மிகப்பெரிய தீவிரவாதியோடு தீவிரவாதம் புரிந்தால், நான் அவரோடு இருக்கிறேன். ஒவ்வொரு முஸ்லீமும் தீவிரவாதியாக இருக்கவேண்டும்....."

If he is fighting enemies of Islam, I am for him. I don't know him personally. If he terrorizing America, the biggest terrorist, I am with him. Every Muslim should be a terrorist. The thing is that if he is terrorizing a terrorist, he is following Islam.

(இவரது இப்படிப்பட்ட பேச்சுக்கள் இஸ்லாமுக்கு கெட்டப்பெயரை கொண்டுவரும் என்று நான் 2008ம் ஆண்டு, மார்ச் மாதம் ஒரு கட்டுரையை எழுதினேன் -isakoran.blogspot.in/2008/03/ans-tamil-islam.html)

தம்பி: இந்த பதிலில் நீங்கள் ஆயுதங்கள் எடுத்து தீவிரவாத செயல்களில் ஈடுபடுங்கள் என்று ஜாகிர் நாயக் சொல்லியுள்ளார? அவரது இந்த பதில் எப்படி தீவிரவாதத்திற்கு வக்காளத்து வாங்குவதாக அமையும?

உமர்: நீ முஸ்லிம் ஆனதிலிருந்து உன் மூளை சிந்திக்கும் திறமையை இழந்திருக்கிறது என்று நினைக்கிறேன். வன்முறையை தூண்டவேண்டுமென்றால், நீ ஆயுதம் எடுத்து போரிடு என்று நேரடியாக சொல்லவேண்டியதில்லை. ஜாகிர் நாயக் சொன்ன பதிலைப்போல மறைமுகமாக சொன்னாலே போதும் யாருக்கு புரியவேண்டுமோ அவர்களுக்கு சரியாக புரிந்துவிடும்.

இப்போது அவரது கூற்றில் மறைந்திருக்கும் விஷத்தை உனக்கு அடையாளம் காட்டுகிறேன்.

பின் லாடன் யார்:

1) பின் லாடன் ஒரு தீவிரவாதி என்று உலகம் கண்டுக்கொண்டது. முக்கியமாக அமெரிக்காவில் உலக வர்த்தக மையங்கள் தாக்கப்பட்டதிலிருந்து அனைவருக்கு பின் லாடன் பற்றி தெரிந்துவிட்டது.

2) தானே அந்த தீவிரவாத செயலுக்கு காரணம் என்று பின்லாடனே ஒப்புக்கொண்டு விட்டார். இன்னும் பல இடங்களில் தாக்குதல்களை பின்லாடன் நடத்திக்காட்டியுள்ளார்.

3) பின் லாடன் தன்னை முஸ்லிம் என்று அடையாளம் காட்டிக்கொண்டார்.

ஜாகிர் நாயக் யார்:

1) திரு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் புகழ் பெற்ற ஒரு முஸ்லிம் அறிஞர்.

2) தன் பேச்சுத்திறமையால், பீஸ் டீவி மூலமாக இஸ்லாமிய தாவா பணியை செய்பவர். பல கோடி மக்கள் அவரது பேச்சை கேட்கிறார்கள்.

3) முஸ்லிம்கள் இவரது பேச்சுக்கள் மூலமாக தங்கள் இஸ்லாமிய நம்பிக்கையை வளர்த்துக்கொள்கிறார்கள் அதாவது சந்தேகங்கள் தீர்க்கப்பட்டு தங்கள் நம்பிக்கையை திடப்படுத்துக்கொள்கிறார்கள்.

4) இவர் சொல்வதெல்லம் இஸ்லாம் என்றும், உண்மை என்றும் பல கோடி முஸ்லிம்கள் நம்புகிறார்கள் (சில முஸ்லிம் அறிஞர்களைத் தவிர‌). இவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பல கோடி மதிப்பு உள்ளது.

பார்வையாளர்கள்:

1) இவரது பேச்சுக்களை, வீடியோக்களை, புத்தகங்களை படிக்கும் பார்வையாளர்கள் பல வகைகளில் இருப்பார்கள்.

2) முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், நாத்தீகர்கள் மேலும் இதர மக்கள்.

3) இவர்களில் படித்த பட்டதாரிகள், மேதாவிகள், ஓரளவிற்கு படித்தவர்கள், படிப்பறிவில்லாதவர்கள்

4) ஏழைகள், நடுத்தர மக்கள், பணக்காரர்கள், மாணவர்கள்

தம்பி: இதையெல்லாம் ஏன் இப்போது சொல்லிக்கொண்டு  இருக்கிறீர்கள்?

உமர்: கொஞ்சம் பொறுத்திரு தம்பி. மதத்தை சார்ந்த  ஒரு உயர்ந்த மனிதன் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் விலை இருக்கும். இதனை உணராமல், தெருவில் கோலி விளையாடும் சின்ன பையன்கள் போல வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசக்கூடாது.

மேலே கொடுக்கப்பட்ட பார்வையாளர்களில் முஸ்லிம்களை மட்டும் தனியாக பிரித்து எடு.

இவரது பேச்சுக்களைக் கேட்கும் முஸ்லிம் பார்வையாளர்களில் படித்த மேதாவிகள், பட்டதாரிகள், பணம் படைத்தவர்கள்,  ஏழைகள், சரியாக சிந்திப்பவர்கள், சரியாக சிந்திக்க தெரியாதவர்கள் என்று பலர் இருப்பார்கள்.

இவர்களில் சரியாக சிந்திக்கத்தெரியாத, இதர இஸ்லாமிய அறிஞர்களால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள், இவரது மேற்கண்ட பதிலை படித்தால், எப்படிப்பட்ட முடிவுக்கு வருவார்கள்? 99.9% பார்வையாளர்களை விட்டுவிடு, வெறும் 0.1% மக்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள். உலகிற்கு பிரச்சனை இந்த 0.1% மக்களால் தான்.

a) ஜாகிர் நாயக்:  ஒசாமா பின் லாடன் இஸ்லாமின் எதிரியுடன் போர் புரிந்தால், நான் அவரோடு இருக்கிறேன்:

இந்த வரியை படிப்பவன், பின் லாடன் இஸ்லாமின் எதிரிகளோடு போர் புரிகின்றார் என்று நினைப்பான். இஸ்லாமுடைய எதிரிகளுடன் போர் செய்யவேண்டும் என்பது இஸ்லாமின் படி தவறானது அல்லவே! எனவே, பின்லாடன் ஒரு ஹீரோ என்று கருதுவான், இதனை ஜாகிர் நாயக்கின் வாய் மூலமாகவே கேட்டதால், பின் லாடன் செல்லும் வழி இஸ்லாமின் படி நேரான வழி என்று கருதுவான். உலக புகழ்பெற்ற ஜாகிர் நாயக் அவர்களே, பின் லாடனோடு இருக்கிறேன், அவருக்கு என்னுடைய ஆதரவு உண்டு என்றுச் சொல்லும் போது, அதில் ஒரு சராசரி முஸ்லிம் சந்தேகம் கொள்வானா? நிச்சயமாக இல்லை.

b) ஜாகிர் நாயக்:   ஒசாமா அமெரிக்கா என்ற மிகப்பெரிய தீவிரவாதியோடு தீவிரவாதம் புரிந்தால், நான் அவரோடு இருக்கிறேன்.

இதனை படிக்கும் பாமர முஸ்லிம், அமெரிக்கா ஒரு தீவிரவாத நாடு என்றும், அதற்கு எதிராக சண்டைப்போடும் பின்லாடன் இஸ்லாமை காக்க வந்த இரட்சகன் என்றும் எண்ணுவான். மேலும், அமெரிக்காவை பின்லாடன் எதிர்ப்பதை ஜாகிர் நாயக் விரும்புகிறார், அதனால் தன் ஆதரவை தருகிறார். எனவே, ஜாகிர் நாயக்கின் வழியில் நாமும் சென்றால் என்ன தவறு? பின் லாடனை ஆதரித்தால் என்ன தவறு? முடிந்தால், பின் லாடனின் இயக்கத்தோடும், இதர தீவிரவாத இயக்கங்களோடும் சேர்ந்து இஸ்லாமின் எதிரிகளோடு போர் புரிந்தால் என்ன தவறு? என்று எண்ணுவான்.

c) ஜாகிர் நாயக்:  ஒவ்வொரு முஸ்லீமும் தீவிரவாதியாக இருக்கவேண்டும்:

மேற்கண்ட இரண்டு வரிகளின் சாராம்சம் தான் இந்த வரி. இஸ்லாமின் எதிரியோடு ஒவ்வொரு முஸ்லிமும் சண்டை போடவேண்டும். அமெரிக்காவோடு சண்டையிடும் இயக்கத்தோடு சேர்ந்து போராடுவது ஜாகிர் நாயக்கால் அனுமதிக்கப்படுகின்றது என்று முஸ்லிம் எண்ணுவான்.

வன்முறையை தூண்ட வேண்டுமென்றால், "ஆயுதம் எடுத்து சண்டை போடு" என்று ஜாகிர் நாயக் சொல்லத்தேவையில்லை. மேற்கண்ட விதமாக பின் லாடனின் எடுத்துக்காட்டை எடுத்துக்கொண்டு, பின் லாடனை ஆதரித்துக்கொண்டு, ஜாகிர் நாயக் மிகவும் தெளிவாக யாருக்குப்போய் அந்த செய்தி சென்றடையவேண்டுமோ அவர்களிடம் சேர்த்துவிட்டார் (இந்த நச்சுத்தன்மையை கண்டுபிடிக்க, இந்திய சட்டத்திற்கு இத்தனை ஆண்டுகள்  பிடித்தது). இவரின்  பதிலை வீடியோவில் பார்க்கும் ஒவ்வொரு தீவிரவாத குழுவும், தீவிரவாதிகளும், விசில் அடித்து கைகளை தட்டி, சபாஷ், சமுதாயத்தில் மக்களோடு மக்களாக இருந்துக்கொண்டே இப்படி தெளிவாக நம்மை ஆதரிக்க யாரால் முடியும் என்று பெருமைப்பட்டுக்கொள்வார்கள் அல்லவா? "பின் லாடனை ஆதரிப்பது தவறு" என்றுச் சொல்லும் சில முஸ்லிம் வாலிபர்களுக்கு இந்த வீடியோவைக் காட்டி, மூளைச் சலவை செய்வார்கள் அல்லவா? ஜாகிர் நாயக் எவ்வளவு பெரிய அறிஞர், அதுவும் மருத்துவத்துக்கு படித்தவர், இவர் பொய் சொல்வாரா? இவர் தவறான வழியில் நடத்துவாரா என்றுச் சொல்லி, இளம் முஸ்லிம் மூளைகளில் விஷ‌ ஊசிகளை நிதானமாக செலுத்துவார்கள் அல்லவா? 

அடுத்தது என்ன? பாங்களாதேஷில் நடந்தது  போல, தீவிரவாத செயல்களில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் ஈடுபட்டு, பலரைக் கொன்று தாங்களும் கொல்லப்பட்டு மரிப்பார்கள்.

தம்பி: இப்படியும் நடக்குமா?

உமர்: பாரு தம்பி, உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஒரு செய்தியை ஒரே மாதிரியாக புரிந்துக்கொள்வதில்லை. தன்னுடைய அனுபவம், படிப்பு, கலாச்சாரம் போன்றவற்றைப் பொருத்து வெவ்வெறு வகையாக புரிந்துக்கொள்வான். நாம் இருவர் ஒரே குடும்பத்தில் பிறந்திருந்தாலும், உன்னைப் போல நான் சிந்திக்கமுடியாது, என்னைப் போல நீயும் சிந்திக்கமாட்டாய். ஒவ்வொருவருக்கும் அறிவில், அதனை பயன்படுத்துவதில், பயிற்சி கொடுப்பதில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன.

பலவீனமான சிலர் ஜாகிர் நாயக் போன்றவர்களின் இப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய பேச்சுக்களைக் கேட்டு, வழிதப்பி போய்விடுகிறார்கள். தன் பேச்சுக்களைக் கேட்கும் பலவீனமானவர்கள் தவறான வழிக்கு சென்றுவிடுவார்களே என்ற அடிப்படை ஞானம் கூட இல்லாத இப்படிப்பட்டவரை எப்படி முஸ்லிம்கள் பேச்சாளராக அனுமதிக்கிறார்கள். இவர் அறியாமையினால் பேசிய வார்த்தைகள் அல்ல, மறைமுகமாக‌ தீவிரவாதிகளை ஊக்குவிப்பதற்காக பேசிய வார்த்தைகள்.

தம்பி: ஜாகிர் நாயக் அவர்களிடம் பின் லாடன் பற்றி கேட்டால் வேறு எப்படி பதில் சொல்வதாம்?

உமர்: பின் லாடன் ஒரு தீவிரவாதியாவான். அவன் இஸ்லாமுக்கு எதிரி ஆவான் என்று இரண்டு வரிகளில் ஜாகிர் நாயக் பதில் சொல்லி இருக்கவேண்டும். இப்படி சொல்வதை விட்டுவிட்டு, நான் பின் லாடனோடு  இருக்கிறேன், அமெரிக்கா தான் தீவிரவாதம் புரிவது, ஒவ்வொரு முஸ்லிமும் தீவிரவாதியாக இருக்கவேண்டும் என்றுச் சொல்வது, பிள்ளைகள் குடிக்கும் பாலில் விஷத்தை கலப்பதற்கு சமம் ஆகும்.

தம்பி: நான் கேட்ட கேள்வி, ஜாகிர் நாயக்கிற்கு ரசிகனாக இருப்பது குற்றமா என்பது தான்.

உமர்: ஜாகிர் நாயக்கிற்கு ரசிகனாக இருப்பது குற்றமல்ல. அந்த அப்பாவி ரசிகனை தீவிரவாதியாக மாற்றும்படி, புத்தியில்லாமல் பேசுவது தான் குற்றம்.  செய்வதெல்லாம் செய்துவிட்டு, நான் என்ன செய்வேன், என்னுடைய பேச்சை சிலர் தவறாக புரிந்துக்கொண்டால் நான் பொறுப்பாளி அல்ல என்றுச் சொல்வது ஏற்றுக்கொள்ளப்படாதது.

தம்பி: டெய்லி ஸ்டார் பத்திரிக்கை, "ஜாகிர் நாயக் தான் தீவிரவாதிகளை ஊக்குவித்தார் என்று சொல்லவில்லை" என்று சொன்னதாமே!

உமர்: உனக்கு ஒரு முக்கியமான விவரத்தைச் சொல்கிறேன்.

பாங்களாதேஷ் டெய்லி ஸ்டார் பத்திரிக்கை, அந்த தீவிரவாதி ஜாகிர் நாயக்கின் ரசிகன் (Fan) என்றோ, அவரால் ஊக்குவிக்கப்பட்டான் (Inspire) என்றோ சொல்லவில்லை. அது கீழ்கண்ட விதமாகச் சொன்னது:

The Daily Star categorically denies this allegation and wants to say it did not report that any terrorist was inspired by Zakir Naik to kill innocent people. The report said that one of the terrorists had propagated on Facebook last year quoting Peace TV's preacher Zakir Naik urging all Muslims to be "terrorists".

தீவிரவாதிகளில் ஒருவன், சில மாதங்களுக்கு முன்பு முகநூலில், ஜாகிர் நாயக்கின் பீஸ் டீயில் வெளிவந்த ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை மேற்கோள் காட்டி, "ஒவ்வொரு முஸ்லிமும் தீவிரவாதியாக இருக்கவேண்டும்" என்று பிரச்சாரம் செய்தானாம்.

டெய்லி ஸ்டார் பத்திரிக்கை செய்தியில் "ரசிகன், கவரப்பட்டவன்" என்ற வார்த்தைகள் இல்லை, ஆனால், தீவிரவாதிகளுக்கு ஜாகிர் நாயக்கின் பதில்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது என்பது மட்டும் உண்மை. தங்கள் தீவிரவாத செயலில் அனேகரை சேர்த்துக்கொள்ள பயன்படும் கருவியாக ஜாகிர் நாயக் இருந்துள்ளார். ஜாகிர் நாயக்கின் பேச்சால் கவரப்படாமலா (Inspire) அந்த தீவிரவாதி முகநூலில் அவரது வீடியோக்களைக் காட்டி பிரச்சாரம் செய்தான்.

தவறு எங்கே நடந்தது?

தீவிரவாதிகளை மறைமுகமாக ஆதரிக்கும் ஜாகிர் நாயக்கின் பதில்களில் தான் தவறுகள் உள்ளன.

தம்பி, உன்னிடம் சில தனிப்பட்ட கேள்விகளை கேட்கவிரும்புகிறேன் (ஜாகிர் நாயக்கை ஆதரிக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கவேண்டும்).

1) "பின் லாடன் ஒரு தீவிரவாதி"  என்று ஒப்புக்கொள்ள ஜாகிர் நாயக்கிற்கு தடையாக இருப்பது எது? ஜாகிர் நாயக்கின் "முஸ்லிம்" அடையாளமா? அல்லது பின் லாடன் கூட ஒரு முஸ்லிம் தானே என்ற சகோதரப் பாசமா??

2) இஸ்லாமின் எதிரிகள் என்று பொதுவாக ஜாகிர் நாயக் சொல்கிறாரே, அதன் உள்ளார்ந்த அர்த்தமென்ன?

3) உலக மக்களை அழித்த ஒரு தீவிரவாதியை பல கோடி மக்கள் பார்க்கின்ற/பார்க்கப்போகின்ற பொதுமேடையில் ஆதரித்து பேசுவது ஏன்?

4) பொதுவில் தீவிரவாதிகளை ஆதரித்து பேசும் இவரை மக்கள் "தீவிரவாதிகளை ஊக்குவிக்கிறார்" என்று சொல்வதில் தவறில்லையே!

5) புரிந்துக்கொள்வதில் ஏற்றத்தாழ்வுள்ள பலவகையான  மக்கள் சமுதாயத்தில் இருப்பார்கள், அவர்கள் தன் பேச்சை தவறாக நினைக்கக்கூடும் என்ற ஞானம் இல்லாதவர் எப்படி மருத்துவத்துக்கு படித்தார்?

6) பல கோடி மக்கள் பார்க்கும் நிகழ்ச்சியில், தீவிரவாதிகளை வெளிப்படையாக ஆதரிக்கும் இவர், மறைவில் தீவிரவாதிகளுக்கு உதவமாட்டார் என்று எப்படி நம்புவது? நான்கு சுவர்களுக்குள் இவர் தீவிரவாதிகளோடு கை குலுக்கமாட்டார் என்று எப்படி நம்பாமல் இருப்பது? ஏனென்றால், இஸ்லாமுக்கு எதிராக சண்டையிடுபவர்களோடு இவர்  இருப்பாராமே! ஆதரவு அளிப்பாராமே!

7) இவர் பின் லாடனை புகழ்ந்துப் பேசி, இஸ்லாமின் எதிரிகளோடு போரிடுவபர் என்ற பட்டத்தைச் சூட்டி, அவருக்கு ஆதரவாக பேசியதை அப்பாவி சராசரி முஸ்லிம்கள் கேட்கும் பொது,  இப்படிப்பட்ட தீவிரவாத கும்பளுக்கு மறைமுகமாக உதவுவது தவறு இல்லை என்ற எண்ணத்தை  அவர்களின் மனதில் இது விதைக்காதா?

8) ஒருவேளை ஒரு தீவிரவாத இயக்கம், "இந்தியா இஸ்லாமுக்கு எதிரி என்று சொன்னால்", இவர் அந்த இயக்கத்தோடு சேர்ந்துக்கொண்டு, இஸ்லாமின் எதிரியோடு அதாவது இந்தியாவோடு போர் புரிவார் என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? ஏற்கனவே, பல தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவை இஸ்லாமின் எதிரியாக கருதிக்கொண்டு தான் மும்பையை தாக்கினார்கள், பாராளுமன்றத்தை தாக்கினார்கள். இந்த குழுக்களை ஜாகிர் நாயக் ஆதரிப்பார் என்று இவரது பேச்சுக்கள் மூலமாக மக்கள் கருதலாம் அல்லவா?

அடிநாக்கிலே நஞ்சும் நுனிநாக்கில் அமிர்தமும் வைத்துப் மேடையில் பேசினால் முஸ்லிமல்லாதவர்கள் புரிந்துக்கொள்ளமாட்டார்கள் என்று ஜாகிர் நாயக் நினைத்துவிட்டார் போல் தெரிகிறது.

ரசிகன் மாங்காய் தின்றால், ஏன் தலைவனின் பற்கள் கூசாது. வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை.

தம்பி: அண்ணே, லைன் சரியாக இல்லை... உங்க பேச்சு சரியாக கேட்கவில்லை.

உமர்: ஹலோ.. .ஹலோ.. தம்பி கேட்கிறதா?... போனை வெச்சிட்டான்.


Dr. ஜாகிர் நாயக்கை திட்டாதீர்கள்! பாகம் 2 - மதசகிப்புத்தன்மை கிலோ என்ன விலை?

(முஸ்லிம்கள் தங்கள் பிள்ளைகளை ISISக்கு உதவ அனுப்பினால், எதிர்காலத்தில் தொழுதுக்கொள்ள முஸ்லிம்களுக்கு கிப்லா இருக்காது, ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் செய்ய மக்காவில் காபா இருக்காது)

என் முந்தைய கட்டுரையில் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் வெறும் அம்பு தான், எய்தது "இஸ்லாம்" ஆகும் என்ற கருத்தை முன்வைத்தேன்.

தற்போதைய கட்டுரையில், ஜாகிர் நாயக் அவர்களின் சர்ச்சைக்குரிய ஒரு பதிலை ஆய்வு செய்யப்போகிறோம். இவரின் இந்த பதிலுக்கு வித்திட்ட 7ம் நூற்றாண்டின் ஒரு நிகழ்ச்சியை உதவிக்கு அழைப்போம். மேலும், அந்த 7ம் நூற்றாண்டின் நிகழ்ச்சி எப்படி ஐஎஸ்ஐஎஸ் என்னும் தீவிரவாத இயக்கத்தின் நாடித்துடிப்பாக இருக்கிறது என்பதையும் காண்போம். 

1) சௌதி அரேபியாவில் இதர மார்க்கங்களுக்கு ஏன் அனுமதியில்லை என்ற கேள்வியும், ஜாகிர் நாயக் அவர்களின் பதிலும்

திரு ஜாகிர் நாயக் அவர்கள், பீஸ் டீவி மூலமாக பல கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்துகிறார் (மன்னிக்கவும், நடத்திக்கொண்டு இருந்தார்!). இந்துக்கள், கிறிஸ்தவர்கள், நாத்தீகர்கள் என்று பல தரப்பட்ட மக்கள் அவரிடம் கேள்விகளை கேட்பார்கள். அவர்களுக்கு ஜாகிர் நாயக் அவர்கள் கொடுக்கும் சில பதில்கள் புத்திசாலித்தனமாக இருக்கும், சில பதில்கள் புத்தியீனமாக இருக்கும். (ஆனால், இந்த வித்தியாசத்தை கண்டுபிடிக்கும் அளவிற்கு அந்த அரங்கத்தில் அமர்ந்திருக்கும் பெரும்பான்மையான முஸ்லிம்களுக்கு தெரியவில்லை என்பதை அவர்கள் கைத்தட்டும் விதத்தை பார்த்தால் புரிந்துவிடும்).

இப்படி கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த பதிலைத் தான் நாம் இக்கட்டுரையில் ஆய்வு செய்யப்போகிறோம்.

கேள்வி: சௌதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகள், இதர மார்க்க பிரச்சாரங்களை ஏன் அனுமதிப்பதில்லை? இதர மார்க்க வணக்கஸ்தலங்களை (கோயில்கள், கிறிஸ்தவ திருச்சபைகள்) புதிதாக கட்ட அனுமதிப்பதில்லையே ஏன்?

டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்:

நான் முஸ்லிமல்லாதவர்களிடம் கேட்க விரும்பும் கேள்வி இது தான். நீங்கள் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராக இருக்கிறீர்கள் என்றும், மேலும் ஒரு கணக்கு ஆசிரியரை நியமிக்க நேர்க்காணலுக்கு அழைத்துள்ளீர்கள் என்றும், வைத்துக்கொள்வோம். மூன்று பேர் நேர்க்காணலுக்கு வந்தார்கள், அவர்களிடம் 2+2 எவ்வளவு என்று கேட்கிறீர்கள். முதலாவது நபர் 2+2 = 3 என்று பதில் அளிக்கிறார், இரண்டாவது  நபர் 2+2 = 4 என்கிறார், மூன்றாவது நபர் 2+2= 6 என்று பதில் கொடுத்துள்ளார். இப்போது நான் முஸ்லிமல்லாதவர்களிடம் கேட்கவிரும்பும் கேள்வி என்னவென்றால், நீங்கள் யாருக்கு வேலை கொடுப்பீர்கள்? 2+2 = 3 என்று, அல்லது 2+2 = 6 என்று பதில் சொன்னவர்களுக்கு கணக்கு வாத்தியார் வேலையை கொடுப்பீர்களா? "இல்லை" என்று நீங்கள் பதில் சொல்வீர்கள். ஏன் கொடுக்கமாட்டீர்கள்? என்று நான் கேட்டால், "அவர்களுக்கு கணக்கு பாடம் பற்றிய சரியான ஞானம்" இல்லை என்று பதில் சொல்வீர்கள்.

இதே போலத்தான்,  மதத்தை பொருத்தமட்டில், இறைவனின் பார்வையில் இஸ்லாம் தான் உண்மையான மதம் என்று முஸ்லிம்களாகிய நாங்கள் அறிந்திருக்கிறோம். குர்‍ஆன் 3:85ன் படி, இறைவன் இஸ்லாமைத் தவிர வேறு எந்த மதத்தையும் அங்கீகரிக்கமாட்டான். இஸ்லாமிய நாடுகளில் கிறிஸ்தவ சர்ச்சுக்கள் மற்றும் இந்துக்களின் கோயில்கள் கட்டுவதைப் பற்றிச் சொல்லவேண்டுமென்றால், அவர்களின் மதங்கள் தவறாக இருக்கும் பட்சத்தில், அவர்களின் வணக்கவழிபாட்டு முறைகள் தவறாக இருக்கும் போது,  நாங்கள் எப்படி அவர்கள் இஸ்லாமிய மண்ணில் தங்கள் வணக்கஸ்தலங்கள் கட்டுவதற்கு அனுமதி கொடுக்கமுடியும்? எனவே, எங்கள் (இஸ்லாமிய) நாடுகளில் அப்படிப்பட்ட தவறான  மதங்களுக்கு நிச்சயமாக அனுமதி கொடுக்கமாட்டோம்.

Zakir Naik: I ask the non-Muslims, suppose you are the principal of a school and you intend to select a mathematics teacher. Three candidates come and you ask them, what's the total of 2 plus 2? The first replies: 2 plus 2 equals 3. The second answers: 2 plus 2 equals 4. And the third one answers that 2 plus 2 equals 6. Now, I ask these non-Muslims, will you allow the candidate to teach in your school who says that 2 plus 2 equals 3 or that 2 plus 2 equals 6? They'll say, no. I ask, why? They'll say, because he does not have correct knowledge of mathematics. Similarly, as far as matters of religion are concerned we (Muslims) know for sure that only Islam is a true religion in the eyes of God. In the Holy Quran (3:85), it is mentioned that God will never accept any religion other than Islam. As far as the second question, regarding building of churches or temples is concerned, how can we allow this when their religion is wrong and when their worshipping is wrong? Therefore, we will not allow such wrong things in our Islamic country.

மூலம்: Who is responsible for the stereotypes of Islam  

(இந்த மேற்கோள் இன்னும் சில தளங்களில் காணப்படுகின்றது, அவைகளை அடிக்குறிப்பில் பார்க்கவும்.)[1]

2) ஜனநாயகம், மதசார்பின்மை, மதசகிப்புத்தன்மை என்றால் என்னவென்று ஜாகிர் நாயக்கிற்கு தெரியுமா?

ஜாகிர் நாயக்கின் மேற்கண்ட பதிலை படிக்கும் முஸ்லிம்கள், "அவர் சொன்னது உண்மை தானே" என்று சொல்வார்கள்.

மேற்கண்ட பதிலின் மூலமாக, ஜாகிர் நாயக் அவர்கள் நம்மிடம் கேட்கும் கேள்விகள்:

முஸ்லிமல்லாத நாடுகள் தாங்கள் பின்பற்றும் மார்க்கம் உண்மை என்று நிச்சயமாக நம்பினால், ஏன் அவர்கள் இதர மார்க்க வணக்கஸ்தலங்கள் கட்டப்படுவதற்கு அனுமதி அளிக்கவேண்டும்? உதாரணத்திற்கு சொல்வதானால், கிறிஸ்தவ நாடுகள் தங்கள் மார்க்கம் தான் உண்மையானது என்று நம்பினால், ஏன் இதர மதங்கள் பிரச்சாரம் செய்யப்பட‌ தங்கள் நாடுகளில் அனுமதிக்கிறார்கள்? கோயில்கள், மசூதிகள் கட்ட ஏன் அனுமதிக்கிறார்கள்? இது இஸ்லாமல்லாத எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். இது தான் ஜாகிர் நாயக் அவர்கள் கேட்கும் கேள்விகள் (லாஜிக்) ஆகும்.

இதர நாடுகள் எல்லா மதங்களையும் சரி சமமாக பார்ப்பதை இவர் குற்றப்படுத்துகிறார். ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஒரு முக்கியமான விஷயம் தெரியவில்லை, அதாவது மதசார்பற்ற ஜனநாயக நாடுகள் தங்கள் மார்க்கத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இருப்பதினால் தான், மதசார்ப்பற்ற முறையில் நடந்துக்கொள்கின்றன. "நீ வாழு, மற்றவர்களையும் வாழவிடு" என்பதை இஸ்லாமிய நாடுகள் தவிர இதர நாடுகள் அனைத்தும் பின்பற்றுகின்றன. சௌதி அரேபியா இதர மதங்களை அனுமதிக்காததற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு, அதாவது, இதர மார்க்கங்களை அறியும் வாய்ப்பு முஸ்லிம்களுக்கு கிடைத்தால், அவைகளால் ஈர்க்கப்பட்டு முஸ்லிம்கள் இதர மார்க்கங்களை பின்பற்றிவிடுவார்களோ என்ற பயத்தினால் தான் இதர மார்க்கங்களை அனுமதிப்பதில்லை. மேலும், இந்த கட்டுப்பாட்டையும் தாண்டி ஒரு முஸ்லிம் கிறிஸ்தவனாகவோ, நாத்தீகனாகவோ மாறினால், அவனுக்கு மரண தண்டனையும் இஸ்லாமிய நாடுகள் கொடுக்கின்றன.

ஜாகிர் நாயக்கின் கருத்துப்படி இந்தியா நடந்துக்கொண்டால்,  இந்தியா ஜனநாயக மதசார்ப்பற்ற நாடாக இல்லாமல் இருந்திருந்தால், பெரும்பான்மை மக்கள் இந்துக்களாக இருப்பதினால், இந்தியாவில் மசூதிகள் கட்ட அனுமதிக்கக்கூடாது, முஸ்லிம்கள் தங்கள் மத பிரச்சாரம் செய்ய அனுமதிக்கக்கூடாது. இஸ்லாமை பரப்புபவர்களை தண்டிக்கவேண்டும், முஸ்லிம்களாக மாறும் இந்துக்களை கொலை செய்யவேண்டும். இப்படித் தான் இந்தியா நடந்துக்கொண்டு இருந்திருக்கவேண்டும் என்று ஜாகிர் நாயக் சொல்கிறார். இப்படியெல்லாம் நீங்கள் ஏன் நடந்துக்கொள்வதில்லை என்று மறைமுகமாக கேட்கிறார். இப்படி நடந்துக்கொண்டால் தான் இந்து மதம் மீது இந்துக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்று அர்த்தம் என்பது தான் ஜாகிர் நாயக்கின் கருத்து. இதே போல, இலங்கையிலும் முஸ்லிம்கள் மசூதிகள் கட்டாமல் புத்தமத அரசாங்கம் பார்த்துக்கொள்ளவேண்டும். ஜாகிர் நாயக்கின் இப்படிப்பட்ட பதில்கள் தான், நல்லவர்களாக இருக்கும் இதர மக்கள் கூட‌ முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட தூண்டுகின்றன.

ஒரு வேளை ஒவ்வொரு முஸ்லிமல்லாதவனும், "நான் ஜாகிர் நாயக் சொன்னது போல‌ இனி நடக்கப்போகிறேன்" என்று முடிவு செய்தால் என்ன நடக்கும்? ஒரு கிராமத்தின் தலைவன் இப்படி நினைத்தால் என்ன நடக்கும்? இந்தியா ஒரு ஜனநாயக நாடாக இருந்தாலும், தன் கட்டுப்பாட்டில் (அதிகாரத்தில்) இருக்கும் தன் கிராமத்தில் வசிக்கும் இதர மக்களுக்கு எதிராக நடந்துக்கொள்வான் அல்லவா? மசூதிகளையும், சர்ச்சுக்களையும் அழிக்கமுயலுவான் அல்லவா? ஜாகிர் நாயக்கின் இப்படிப்பட்ட பேச்சு நல்லவர்களையும் கெடுத்துவிடும் போல் இருக்கிறது! இஸ்லாமை பின்பற்றாத நாடுகளின் நல்ல குணத்தை, அதாவது ஜனநாயக மதசார்ப்பற்ற ஆட்சியை ஜாகிர் நாயக் குற்றப்படுத்துகிறார். இஸ்லாமிய ஆட்சிமுறையில் இருக்கும் மதசகிப்புத்தன்மையற்ற நிலையை நியாயப்படுத்த, இதர நாடுகளின் ஜனநாயகத்தை, மதசகிப்புத்தன்மையை கேவலப்படுத்துகிறார் இவர். இது எவ்வளவு பெரிய அறிவீனம் என்பதை கவனியுங்கள்.

3) இஸ்லாமுக்கு சரியாக கணக்கு போடத் தெரியுமா (2+2 = 4)?

டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் மேற்கண்ட பதிலைச் சொல்வதற்கு முன்பாக, ஒரு கணக்கைச் சொல்கிறார்.

முஸ்லிம்களுக்கு மட்டும் தான் 2+2 = 4 என்ற சரியான பதில் தெரியுமாம், இதர மக்களுக்கு தெரியாதாம், அதாவது முஸ்லிம்களுக்குத் தான் தங்கள் மதம் உண்மையானது என்று தெரியுமாம், இதர மக்களுக்கு அந்த நம்பிக்கை இல்லையாம், எனவே தான் அவர்கள் எல்லா மதங்களுக்கும் மதிப்பு கொடுத்து, நாட்டில் அனுமதிக்கிறார்களாம். உலக முஸ்லிம்கள் அனைவரும் ஜாகிர் நாயக் முதற்கொண்டு, இஸ்லாம் தான் உண்மை மார்க்கம் என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் உண்மையில், முஸ்லிம்கள் தங்கள் அறியாமையினால் 2+2 = 3 என்பது தான் சரியான பதில் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். முஸ்லிம்களிடம் உள்ள மிகப்பெரிய குறை என்னவென்றால், தாங்கள் தவறான ஒன்றை (இஸ்லாமை) சரியான ஒன்று என்று எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாமல் இருப்பது தான்.

ஜாகிர் நாயக் அவர்கள் சொல்வது போல இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்று கருதினால், ஏன் இஸ்லாமிய நாடுகளில் படிப்பறிவின்மை, படுகொலைகள், தீவிரவாத செயல்கள், விவாகரத்துக்கள், பெண் கொடுமைகள் போன்றவை  மற்ற நாடுகளைக் காட்டிலும் அதிகமாக நடக்கின்றன‌? 2+2 = 4 என்று இஸ்லாம் நம்பினால், உலகில் உள்ள எல்லா மதங்களைக் காட்டிலும் ஏன் இஸ்லாம் மட்டும் அதிகமாக தீவிரவாதிகளை பெற்றுத் தள்ளுகிறது? ஜாகிர் நாயக்கின் படி 2+2=3 என்று நம்பும் இதர மதங்களில் என் இஸ்லாமைப் போல, அதிக அளவில் தீவிரவாதிகள் இல்லை? கடைசியாக, ஜனநாயகத்தின் மீதும், மத சகிப்புத்தன்மை மீதும் நம்பிக்கையில்லாத இஸ்லாமிய ஆட்சியில் கஷ்டங்களை அனுபவிக்கும் முஸ்லிம்கள் இதர நாடுகளுக்கு உயிர் பிழைக்க செல்கின்றார்களே! ஏன்? 

இக்கட்டுரையை வாசிக்கும் வாசகர்களே! உலக இஸ்லாமிய நாடுகளின் பட்டியலை தயாரித்து, இதர நாடுகளோடு ஒப்பிட்டுப்பாருங்கள். இஸ்லாமிய நாடுகள் எந்த வகையில் இதர நாடுகளைவிட பொருளாதாரத்தில், மனித உரிமைகளை பாதுகாப்பதில், பெண்களுக்கு சமஉரிமை கொடுப்பதில், எவ்விதம் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை ஆய்வு செய்துப்பாருங்கள். உண்மையாகவே, இஸ்லாம் 2+2=4 என்பதை நம்புகின்றதா? அல்லது 2+2=3 அல்லது 2+2=6 என்பதை நம்புகின்றதா என்பதை அறிய இஸ்லாமிய நாடுகளில் (முக்கியமாக சௌதி அரேபியா, பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் போன்ற நாடுகளில்) சில ஆண்டுகள் வாழ்ந்துப் பாருங்கள், உண்மை புரியும்.

ஜாகிர் நாயக் அவர்களின் பதிலை கூர்ந்து கவனித்துப் பார்த்தால், 'இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்று முஸ்லிம்கள் மட்டுமே நம்புவதாக' கூறுகின்றார். மேலும், குர்-ஆன் 3:85ன் படி, இஸ்லாம் ஒரு மத சகிப்புத்தன்மையற்ற மதம் என்பதை அவரே ஒப்புக்கொள்கின்றார்.  இதைத் தான் முஸ்லிம் நாடுகளில் நாம் பார்க்கின்றோம்.

என் மதம் தான் உண்மையானது, ஆகையால், மற்ற மதங்கள் வாழ அனுமதிக்கமாட்டோம் என்ற இஸ்லாமிய கோட்பாடு எப்படி இஸ்லாமை அழித்துக்கொண்டு இருக்கிறது என்பதை இப்போது காண்போம்.

4) காபாவை நிச்சயம் தாக்குவோம் - ISISஸின் அடுத்த இலக்கு

கடந்த சில ஆண்டுகளாக, ஐஎஸ் (இஸ்லாமிக் ஸ்டேட்) என்ற இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தின் அட்டூழியங்களை நாம் கண்கூடாக பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இஸ்லாமிய ஹதீஸ்களாகிய புகாரி, முஸ்லிம் தொகுப்புக்களில் மற்றும் இதர இஸ்லாமிய சரித்திர நூல்களில் யுத்தங்கள் பற்றியும், அடிமைகள் பற்றியும் வரும் விவரங்களை படித்தால், தற்போது ஐஎஸ் மூலமாக நடந்துக்கொண்டு இருக்கும் நடபடிகளை செய்திகளில் படிப்பதைப் போன்ற உணர்வு உண்டாகும். அதாவது, இஸ்லாம் தூய வடிவில் செயல்பட்டால் எப்படி இருக்குமோ, அதைத் தான் ஐஎஸ் இன்று செய்துக்கொண்டு இருக்கின்றது என்பதை காணமுடியும்.  உலகில் காணும்  இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் அனைத்தும், தாங்கள் தான் உண்மையான தூய இஸ்லாமை பின்பற்றுகிறார்கள் என்று சொல்கிறார்கள்.

ஏன் ஐஎஸ் தீவிரவாதிகள், காபாவை இலக்கு வைத்து இருக்கிறார்கள்? என்று சிந்திக்கும் போது, இஸ்லாமிய சரித்திரத்தில் காணப்படும் இரண்டு அடிப்படை விவரங்கள் நம் கண்முன் நிற்கும். ஜாகிர் நாயக்கின் பதிலும் இதைத்தான் வெளிப்படுத்துகிறது.

முதலாவது, இஸ்லாம் தான் உண்மை மார்க்கம் என்ற அவர்களின் திடமான நம்பிக்கை,

இரண்டாவது, முஸ்லிம் குழுக்களுக்கு ஆள் பலம் கூடும் போது, அவர்கள் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு இதர மார்க்கங்களை அழிக்க முயற்சி எடுப்பது.

இதன் அடிப்படையில் தான் ஐஎஸ் தீவிரவாதிகள் இதர மார்க்க சின்னங்கள் மற்றும் வணக்கஸ்தலங்களை அழித்துக்கொண்டு இருக்கிறார்கள்

 • ஆப்கானிஸ்தானில் புத்தமத சரித்திர சின்னத்தை, சிலைகளை அழித்தார்கள்.
 • கிறிஸ்தவ தேவாலயங்களை அழித்தார்கள்.
 • ஷியாக்களின் வணக்க ஸ்தலங்கள், சரித்திர சின்னங்களை அழித்தார்கள்.

இந்த பட்டியல் மிகப்பெரியது, இதனை கீழ்கண்ட தொடுப்பில் சென்று படிக்கவும்.

Destruction of Cultural Heritage by ISIL  

அப்பாடா!, நம்முடைய வணக்க ஸ்தலங்களை இவர்கள் விட்டுவிட்டார்களே! என்று பெருமூச்சு விடுகின்றீர்களா சுன்னி முஸ்லிம்களே! உங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.

ஐஎஸ் இஸ்லாமிய தீவிரவாதிகள், சுன்னி மசூதிகளிலும் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளார்கள். அதனை மேற்கண்ட தொடுப்பில் படிக்கவும். இன்னும் ஒரு மிகப்பெரிய ஆபத்து உலக முஸ்லிம்களுக்கு காத்துக்கொண்டு இருக்கிறது. அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் மூலமாக பிரச்சனை வரும் என்று எண்ணுகின்றீர்களா? இல்லை, முஸ்லிமல்லாத நாடுகளால் உங்களுக்கு பிரச்சனை இல்லை. முக்கியமாக இதர இஸ்லாமல்லாத நாடுகளுக்கு காபாவோடு எந்த பிரச்சனையும் இல்லை. உங்களுக்கு வரும் ஆபத்து, உங்களிலிருந்தே வரும். ஐஎஸ் தீவிரவாதிகள் காபாவையும் அழிப்பதாக கங்கணம் கட்டிக்கொண்டுள்ளார்கள். காபாவில் ஒரு மூளையில் உள்ள கருப்புக்கல் என்பது ஒரு விக்கிர ஆராதனைக்கு சமமானது எனவே, அதனையும் நாம் அழிப்போம் என்று ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் பக்தாதி கூறியுள்ளார்:

ISIS LEADER AL-BAGHDADI CALLS FOR DESTRUCTION OF KAABA STONE

Ibrahim Al Kandari, a Kuwaiti Islamist preacher, also demanded the destruction of the stone believed to be of meteoric origin. "The Black Stone should be destroyed to put an end to this ancient pagan ritual and idolatrous worship of images".  "The fact that the prophet Mohammed discarded the 360 idols but did not destroy the Kaaba stone does not mean that we shouldn't do it now" he insisted.

மூலம்: http://worldnewsdailyreport.com/isis-leader-calls-for-destruction-of-kaaba-stone/

எனவே, இந்தியாவில் வாழும் முஸ்லிம்களே, உங்கள் பிள்ளைகளை ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்து சண்டையிட நீங்கள் அனுப்புவீர்களானால், எதிர் காலத்தில் நீங்கள் தொழுதுக்கொள்ள உங்களுக்கு கிப்லா இருக்காது, நீங்கள் ஹஜ் செய்ய மக்காவில் காபாவும் இருக்காது. உங்கள் மார்க்கத்தை உண்மை (2+2=4) என்று நம்பும்   தீவிரவாதிகள் அதனை அழித்துவிடுவார்கள்.

இன்று நான் சொல்லும் வார்த்தைகளை மனதில் பதித்துக்கொள்ளுங்கள், இன்றைய தேதியை உங்கள் டைரியில் எழுதிவைத்துக் கொள்ளுங்கள். உங்கள் புனித நகரமாகிய‌ மக்காவில் இந்த தீவிரவாதிகளால் முதல் குண்டு வீசப்படுமானால் அது காபாவின் மீது தான் வீசப்படும். காபா தாக்கப்படுமானால், அது முஸ்லிம் தீவிரவாதிகளால் மட்டுமே முடியும் . ISஐ முஸ்லிம்கள் ஆதரித்தால், எதிர்காலத்தில் கிப்லாவிற்காக வேறு ஒரு திசையை முஸ்லிம்கள் தேடவேண்டிய‌ நிலைக்கு தள்ளப்படுவார்கள். புதிய கிப்லாவை கண்டுபிடிக்கவும் இப்போது வாய்ப்பு இல்லை, 7ம் நூற்றாண்டில் முஹம்மது உயிரோடு இருந்தார் எனவே, ஜெருசலேமிலிருந்து மக்காவிற்கு கிப்லாவை அல்லாஹ்வின் உதவி கொண்டு மாற்றினார், இன்று அல்லாஹ்விடமிருந்து வஹியைப் பெற்று யார் தருவது? எனவே காபாவை காத்துக்கொள்ளுங்கள் முஸ்லிம்களே! தாலிபான் ஆறு அடி பாய்ந்தால், அல்கெய்தா  பதினாறு அடி பாய்ந்தது. ஐஎஸ்ஸோ 666 அடி பாய்வதற்கு காத்துக்கொண்டு இருக்கிறது. காதுள்ளவன் கேட்கக்கடவன், தன் பிள்ளைகளை ISஸுக்கு உதவ அனுப்பாமல் இருக்கக்கடவன்.

மதினாவில் கால் பதித்த தீவிரவாதிகள்:

"இப்படியெல்லாம் நடக்காது, காபாவையும், மக்காவையும் காப்பதாக அல்லாஹ் வாக்கு கொடுத்துள்ளான். அக்காலத்தில் காபாவை அழிக்க வந்த இராணுவத்தை அல்லாஹ் பறவைகளைக்  கொண்டு, எரிகற்களை வீசி அழித்தான், அது போல இப்போதும் செய்து காப்பாற்றுவான்" என்று முஸ்லிம்கள் சொல்லக்கூடும் (உங்கள் நம்பிக்கையை அல்லாஹ் உண்மைப்படுத்தினால் நன்றாக இருக்குமே!). ஆனால் முஸ்லிம்களே, தீவிரவாதிகள் மதினா வரையில் வந்துவிட்டார்கள். இன்னும் கொஞ்சம் தூரம் தான் உள்ளது மக்காவிற்கு.

இந்த வருடம் (2016) ரமளான் மாதத்தில், மதினாவில் முஹம்மதுவின் மசூதிக்கு அருகே தற்கொலை குண்டு தாக்குதல் நடந்தது. அதே நாள் இன்னும் இரண்டு இடங்களில் குண்டு வெடித்தது.

மதினா வரையில் வந்தவர்கள், மக்காவில் நுழைவதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்? மேலும், மக்காவில் முஸ்லிம்களுக்கு மட்டுமே அனுமதியுண்டு, தீவிரவாதிகளும் முஸ்லிம்கள் தானே! ஹஜ் செய்யவரும் முஸ்லிம்களில் யார் தீவிரவாதி என்று எப்படி கண்டுபிடிப்பீர்கள்? விக்கீபிடியாவின் படி, மதினாவில் முஹம்மதுவின் மசூதிக்கு அருகில் குண்டு வெடித்தது, 1400 ஆண்டுகளில் இது தான் முதல் முறை என்றுச் சொல்கிறது. ஆனால், 1400 ஆண்டுகளுக்கு முன்பே மதினாவில் இருந்த ஒரு மசூதி தீக்கிரையாக்கப்பட்டது என்பது வேறு விஷயம். யார் இப்படி செய்தது? என்று கோபம் கொள்கிறீர்களா? இதனை அறிய இக்கட்டுரையை நீங்கள் தொடர்ந்து படிக்கவேண்டும்.

ஐஎஸ் தீவிரவாதிகள் முஸ்லிம்கள் அல்ல:

ஐஎஸ் தீவிரவாதிகள் இஸ்லாமிய வணக்க ஸ்தலங்களையும் அழிக்க முயன்றுள்ளதால், அவர்கள் இஸ்லாமுக்கு எதிராக நடப்பவர்கள் தானே! என்று சில முஸ்லிம்கள் கேட்கக்கூடும்.

முஸ்லிம்கள்,  முக்கியமாக கவனிக்கவேண்டியது ஒன்று உள்ளது. அதாவது இஸ்லாமின் படி, யாருக்கு ஆள் பலம் அதிகமாக உள்ளதோ, அவர்கள் சொல்லும் கோட்பாடு தான் உண்மையான இஸ்லாமை பிரதிபலிக்கும்.  சுன்னி முஸ்லிம்களுக்கு ஆள் பலம் கூடினால், ஷியாக்களின் நம்பிக்கைகள் தவறானவைகள் என்று கருதப்படும், எனவே, அவர்களின் வணக்கஸ்தலங்களை தாக்கலாம். அதே போல, ஷியாக்கள் அதிகமாக இருந்தால், சுன்னி முஸ்லிம்களின் கோட்பாடுகள் தவறானவை, எனவே அவர்கள் இடங்களை ஷியாக்கள் தாக்கலாம். இவ்விருவர் தனித்தனியாக இருந்தால், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் இருக்கவே இருக்கிறார்கள், அவர்களின் கோயில்களைத் தாக்கலாம், ஏனென்றால் இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள் அல்லவா! ஆக, யாரிடம் பலம் அதிகமாக உள்ளதோ, அவர் சொல்வது தான் உண்மையான இஸ்லாம்.

இதன் அடிப்படையில், ஐஎஸ் தீவிரவாதிகளின் நம்பிக்கையின் படி, உண்மையான இஸ்லாமை பிரதிபலிப்பவர்கள் அவர்கள் தான், எனவே ஷியாக்களின் வணக்கஸ்தலங்களை இடிக்கிறார்கள், சர்ச்சுக்களை இடிக்கிறார்கள், புத்தமத சின்னங்களை இடிக்கிறார்கள். அவ்வளவு ஏன், காபாவில் உள்ள கருப்புக்கல் கூட ஒரு விக்கிரகம் என்றுச் சொல்லி அதையும் இடிக்க திட்டமிட்டுள்ளார்கள். இதனால் தான் சொல்கிறேன், முஸ்லிம்களே, உங்கள் பிள்ளைகளை ஐஎஸ்ஸுக்கு உதவி செய்ய அனுப்பாதீர்கள், உங்கள் காபா தாக்கப்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் விரலைக்கொண்டு உங்கள் கண்களையே குத்திக்கொள்ளக்கூடிய அளவிற்கு தரம் தாழ்ந்துவிடாதீர்கள்.

சரி, முஸ்லிம்களின் அடுத்த துக்கம் இது தான்: இஸ்லாமின் இரண்டாம் புனித பூமியாகிய மதினாவில் மசூதிக்கு அருகில் குண்டு வைத்தவன் வெறியன் ஆவான், அவனை நாம் கண்டிக்கிறோம் என்றுச் சொல்வார்கள். அன்பான முஸ்லிம்களே! கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். மசூதியில் குண்டு வெடிப்பவன் எவனாக இருந்தாலும் அவன் தீவிரவாதி என்றுச் சொல்லி நீங்கள் முத்திரைக் குத்தினால், மிகப்பெரிய தர்ம சங்கடத்தில் மாட்டிக்கொள்வீர்கள்.

இஸ்லாமை பொருத்தமட்டில், இஸ்லாமிய மசூதியாக இருந்தாலும், அதில் சொல்லப்படும் கோட்பாடு இஸ்லாமுக்கு எதிராக இருந்தால், உடனே அதனை இடித்து எரித்துவிடலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? 'இஸ்லாம் என்பது உண்மை, எனவே மற்றவை இருக்கக்கூடாது. இஸ்லாம் என்ற பெயரில் தவறானவை இருந்தாலும், அதனையும் அழிப்போம். அது காபாவாக இருந்தாலும் சரி, முஹம்மது முதன் முதலாக கட்டிய மதினா மசூதியாக இருந்தாலும் சரி, நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று ஒற்றைக்காலில் நிற்கிறார்கள் தீவிரவாதிகள்.

புரியவில்லையா!... அடுத்த தலைப்பை படியுங்கள், எல்லாம் தெளிவாக புரியும்.

5) முஹம்மது அழித்த மதினா மசூதி

இஸ்லாமை பொருத்தமட்டில், தவறான நோக்கத்தோடு கட்டப்படுவது மசூதியானாலும் சரி அதை அழிக்கவேண்டும். இஸ்லாமிய தொழுகை நடத்தப்படும் மசூதிக்கே இந்த கதியானால், இதர மதங்களின் நிலையை சிந்தித்துப் பாருங்கள்.

தாலிபான், கல்கெய்தா, ஐஎஸ் போன்ற இஸ்லாமிய தீவிரவாத கூட்டம் இதர மதங்களின் ஷியாக்களின் வணக்கஸ்தலங்களை அழிக்கிறார்கள் என்று சொல்லும் போது, சராசரி முஸ்லிம்கள் வெகுளித்தனமாக "அவர்கள் முஸ்லிம்கள் அல்ல" என்று நம்மிடம் சொல்வார்கள். இப்போது இந்த எடுத்துக்காட்டுக்கு முஸ்லிம்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? அதுவும் குர்‍ஆனின் கட்டளையிலிருந்தே அந்த அழிவு தொடங்கியுள்ளது:

குர்-ஆன் 9:107-110

9:107. இன்னும் (இஸ்லாம் மார்க்கத்திற்குத்) தீங்கிழைக்கவும், குஃப்ருக்கு (நிராகரிப்புக்கு) உதவி செய்யவும், முஃமின்களிடையே பிளவு உண்டுபண்ணவும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாய்ப் போர்புரிந்தவர்களுக்கு புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை முன்னர் நிறுவியவர்கள்: "நாங்கள் நல்லதையே யன்றி (வேறொன்றும்) விரும்பவில்லை" என்று நிச்சயமாகச் சத்தியம் செய்வார்கள் - ஆனால் அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான்.

9:108. ஆகவே, (நபியே!) அங்கு நீர் தொழுகைக்காக ஒருக்காலும் நிற்க வேண்டாம் - நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது; அதில் நீர் நின்று (தொழவும், தொழ வைக்கவும்) மிகவும் தகுதியானது; அங்கிருக்கும் மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்.

9:109. யார் மேலானவர்? பயபக்தியுடன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு கட்டடத்தின் அடிப்படையை அமைத்தவரா? அல்லது (தானே சரிந்துவிடக்கூடிய) பூமியை ஒட்டி அடிப்படையிட்டு (அந்த அடிப்படையில்) கட்டடத்தை - அதுவும் சரிந்து பொடிப்பொடியாக நொறுங்கி அவருடன் நரக நெருப்பில் விழுந்து விடும் (கட்டடத்தை அமைத்தவரா?) அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர் வழியில் நடத்த மாட்டான்.

9:110. அவர்கள் எழுப்பிய அவர்களுடைய கட்டடம் (இடிக்கப்பட்டது); அவர்கள் உள்ளங்களிலே ஒரு வடுவாக இருந்துக் கொண்டே இருக்கும். அவர்களின் உள்ளங்கள் துண்டு துண்டாக ஆகும்வரை (அதாவது மரணிக்கும் வரை). அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானமிக்கவன். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

மதினாவில் ஒரு குழுவினர் ஒரு மசூதியை கட்டினார்கள். முஹம்மது வந்து அதில் தொழுகையைச் செய்து தொடங்கி வைக்கும்படி கேட்டார்கள், அவரும் வருகிறேன் என்றுச் சொன்னார். ஆனால், அவருக்கு ஒரு வெளிப்பாட்டை அல்லாஹ் இறக்கினான், அதனைத் தான் மேலேயுள்ள வசனங்கள் காட்டுகின்றன. உடனே முஹம்மது தன் ஆட்களை அனுப்பினார், மக்கள் அந்த மசூதிக்குள்ளே இருக்கும் போதே, முஹம்மதுவின் அடியாட்கள் அந்த மசூதியை கொளுத்துவிட்டார்கள். அந்த மசூதி ஏன் அழிக்கப்பட்டது என்பதற்கு பலவகையான காரணங்களை இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகின்றனர், அவைகளை கீழ்கண்ட தொடுப்புக்களில் படிக்கலாம்:

நமக்கு முன்பாக நிற்கும் கேள்விகள் என்னவென்றால், அல்லாஹ்வை தொழுதுக்கொள்ள கட்டப்பட்ட மசூதி, அதை கட்டியர்வர்களின் நோக்கம் எதுவாக இருந்தாலும், அதனை அழித்து இருந்திருக்கக்கூடாது என்பதாகும். ஒரு தலைவராக (யாரிடம் ஆள் பலம் அதிகம் இருந்ததோ அவர் தான் அப்போது தலைவர்), நீதி செலுத்தும் முஹம்மது என்ன செய்து  இருந்திருக்கவேண்டும்? மசூதியை அழிக்காமல், தீவிரமாக விசாரணைச் செய்து, மக்களுக்கு நீதி வழங்கி இருந்திருக்கவேண்டும். தீய நோக்கத்தோடு கட்டியிருந்தால், அவர்களுக்கு தகுந்த தண்டனை கொடுத்திருந்திருக்கவேண்டும். மக்கள் மசூதிக்குள்ளே இருக்கும் போதே, அதனை கொளுத்தினார்கள், முஹம்மதுவின் அடியாட்கள். இது தான் இஸ்லாமின் இரண்டாவது புனித நகரம் மதினாவில் அழிக்கப்பட்ட முதல் மசூதி. அதையடுத்து, இந்த 2016ம் ஆண்டில் ரமளானில், அதே மதினாவில், முஹம்மது கட்டிய மசூதிக்கு அருகாமையில் ஒரு தற்கொலை குண்டு வெடிப்பு நடந்துள்ளது.

மேற்கண்ட நிகழ்ச்சியிலிருந்து கற்றுக்கொடுக்கப்படும் பாடங்கள் என்ன? ஒரு இஸ்லாமிய குழு (ஆள் பலம் உள்ள குழு, அது சட்டப்படியான நாடாக இருக்கவேண்டிய அவசியமில்லை, தாங்கள் பின்பற்றுவது தான் உண்மையான இஸ்லாம் என்று நம்பும் தீவிரவாத குழுவாக இருந்தாலும் சரி), தங்களுக்கு எதிரான பிரச்சாரம் செய்யும் மார்க்கம், அல்லது இவர்களின் படி, தவறான கோட்பாடுகளை பின்பற்றும் மக்களின் வணக்கஸ்தலங்களை தாராளமாக அழிக்கலாம். இதற்கு குர்-ஆனிலிருந்து எடுத்துக்காட்டை மேலே கண்டோம். முஹம்மது குர்-ஆனின் அடிச்சுவடிகளில் நடந்தார், இவரது அடிச்சுவடிகளில் இன்றைய இஸ்லாமிய தீவிரவாத குழுக்கள் நடக்கின்றன.

ஐஎஸ் தீவிரவாதிகள், ஷியாக்களின் தர்காக்களை அழிப்பதற்கு மேற்கண்ட குர்-ஆனின் நிகழ்ச்சி வழிகாட்டுகின்றது. இதர மார்க்க வணக்கஸ்தலங்களாகிய சர்ச்சுக்கள், கோயில்களை தகர்க்க மேற்கண்ட குர்-ஆன் வசனம் தான் ஆதாரம். அவ்வளவு ஏன், மதினாவில் குண்டு வைத்ததற்கும் அதே நிகழ்ச்சி தான் காரணம். கடைசியாக, காபாவில் உள்ள கருப்புக்கல்லை காரணம் காட்டி, மக்காவின் காபாவை தாக்க ஐஎஸ் தீவிரவாதிகள் முடிவு செய்ததற்கும் இதே குர்-ஆன் வசனம் தான் காரணம். இது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகும். முஸ்லிம்களே மசூதிகளை அழிப்பது என்பது சாதாரண உதாரணமா? அல்லாஹ்வால் கட்டளையிடப்பட்ட ஒன்றாகும்.

ஐஎஸ் தீவிரவாதிகள் இஸ்லாமை நம்பினாலும், காபாவில் உள்ள கல் ஒரு விக்கிர ஆராதனைக்கு சம்மமானது என்று அவர்கள் கருதுவதினால் (அன்று முஹம்மது அழித்த மசூதியைப்போல), தன் இன மக்கள், தன் சகோதர்கள் ஒவ்வொரு ஆண்டு மேற்கொள்ளும் ஹஜ்ஜின் போது, முத்தமிடும் அந்த கல்லை அழிக்க முயலுகின்றனர். இது நியாயமா இல்லையா? என்ற கேள்விக்கு இடமில்லை. முஹம்மது காட்டிச்சென்ற வழியின் படி, யாரிடம் ஆள் பலம் அதிகமாக இருக்கின்றதோ அவர் சொல்வது தான் சரியானது. அன்று முஹம்மதுவிடம் ஆள் பலம் அதிகமாக இருந்தது, மதினாவின் மசூதி அழிந்தது, நேற்று தாலிபனிடம் பலம் இருந்தது, பல வணக்கஸ்தலங்கள் அழிந்தன, இன்று ஐஎஸ் இருக்கிறது, எனவே காபாவை இவர்கள் குறிவைத்துள்ளார்கள். "Survival of the fittest" என்றுச் சொல்வார்களே, அது போல இஸ்லாமில் நியாயமில்லை, நிதியில்லை, யாரிடம் பலம் அதிகமாக இருக்கிறதோ, அவர் சொல்வது தான் சட்டம் அவர் செய்வது தான் சரியானது.

முடிவுரை:

ஜாகிர் நாயக்கின் பதிலின் வேர் எங்கு வரை சென்றுள்ளது என்பதை கவனியுங்கள். இன்றிலிருந்து 1400 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் எப்படி வாழ்ந்தார்களோ, அந்த காலக்கட்டத்துக்கு நேராக இஸ்லாம் உலகை கொண்டுச் செல்ல விரும்புகிறது, நம்மை 7ம் நூற்றாண்டிற்கு அழைத்துச் செல்லும் பணியில் தான் ஜாகிர் நாயக் போன்றவர்கள் மக்களோடு மக்களாக வாழ்ந்துக்கொண்டு தீவிரமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார். இதைப்போலவே,  ஐஎஸ் தீவிரவாதிகள் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்க‌ள். ஜாகிர் நாயக் ஞானத்தை மூலதனமாக வைத்துச் செய்கிறார், ஐஎஸ் வன்முறையை மூலதனமாக வைத்துக்கொண்டு செயல்படுகின்றது.  இவ்விருவரும் செய்வது ஒரே செயல் தான், ஆனால், வழிமுறைகள் வேவ்வேறு. அன்று முஹம்மது அந்த மதினாவின் மசூதியை அழிக்காமல் இருந்திருந்தால், முஸ்லிம்களுக்கு இப்படிப்பட்ட எடுத்துக்காட்டுக்களை பின்பற்றவேண்டிய அவசியம் இருந்திருக்காது.

கடைசியாக, முஸ்லிம்களே, உங்கள் இஸ்லாமை அறிந்துக்கொள்ள முயற்சி எடுங்கள், இஸ்லாம் பற்றிய சத்தியத்தை அறிந்துக்கொள்ளுங்கள், அந்த சத்தியமே உங்களை விடுதலையாக்கும். உங்கள் பிள்ளைகளை ஐஎஸ்ஸோடு சேர அனுப்பாதிருங்கள், உங்களுக்கு ஹஜ் செய்ய மக்கா, காபா வேண்டுமல்லவா? தொழுகை செய்ய கிப்லா வேண்டுமல்லவா? எனவே, சிந்தியுங்கள். இந்தியர்களே! டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களை திட்டாதீர்கள்! அவர் என்ன செய்வார் பாவம்? எந்த காலத்திலாவது எய்தவனிடம் 'என்னை எந்த காரணத்திற்காக செலுத்தினாய்?' என்று கேட்க அம்புக்கு அதிகாரம் இருந்ததுண்டா?

அடிக்குறிப்புக்கள்:

[3] Who is responsible for the stereotypes of Islam

[4] Destruction of Cultural Heritage by ISIL  

[5] ISIS leader calls for destruction of Kaaba stone

[6] மதினாவில் முகமது நபி மசூதி அருகே தற்கொலைக் குண்டு தாக்குதல் (BBC) 

[7] சவுதியில் தொடர் குண்டு வெடிப்பு; 7 பேர் பலி (தினமலர்) 

[8] மஸ்ஜித் திராரின் அழிவு (Demolition of Masjid al Dirar) - Wikipedia

[9] Islamic Encyclopedia (மஸ்ஜித் திரார்)

[10] Allah ordered to demolish - QA Islam


Dr. ஜாகிர் நாயக்கிற்கு கொடுக்கப்பட்ட இதர மறுப்புக்கள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/zakirnaik/zakirnaik_at_2016_part2.html

திங்கள், 11 ஜூலை, 2016

Dr. ஜாகிர் நாயக்கை திட்டாதீர்கள்! எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?


கடந்த சில நாட்களாக செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி செய்திகளில் அதிகமாக பேசப்படுபவர் மதிப்பிற்குரிய இஸ்லாமிய அறிஞர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் ஆவார்கள். அப்படி அவர் என்னத்தை சாதித்துவிட்டார்? இதுவரை அவர் உழைத்த உழைப்பிற்கு பரிசாக இரண்டு தீவிரவாதிகள் விசாரனையின் போது இவருடைய பெயரை உச்சரித்தது தான் காரணம் (நாம் நல்லவர்களாக இருப்பது மட்டுமல்ல, நம் ரசிகனும் நல்லவனாக இருக்கவேண்டும் என்பதை இப்போது தான் புரிந்தது).

தினமலர் செய்தியில் டாக்டர் ஜாகிர் நாயக்:

"துடில்லி: இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சூசகமாக தெரிவித்துள்ளார்.

வங்கதேச தலைநகர் தாக்காவில், கடந்த வாரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், இந்தியர் ஒருவர் உட்பட பலர் பலியானார்கள். இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் இரண்டு பேர், மும்பையில் மத போதகர் ஜாகிர் நாயக் பேச்சில் தாங்கள் கவரப்பட்டதாக கூறினர். இதனையடுத்து, ஜாகிர் நாயக் குறித்த விவாதம் எழுந்தது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறுகையில், ஜாகிர் நாயக் குறித்து அனைத்து விவரங்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. அவரது பேச்சு ஆட்சேபனைக்குரியது என்றார். மேலும், வங்கதேச தாக்குதல் கண்டனத்திற்குரியது. பயங்கரவாதத்திற்கு எந்த மதமும் கிடையாது. எந்த பகுதியும் கிடையாது. பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து உலக நாடுகளும் ஒன்று சேர வேண்டும் என்றார்." (மூலம்)

டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் இஸ்லாமிய போதனைகள் ஆபத்தானவை என்று 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு கட்டுரையை எழுதினேன், அதனை இங்கு படிக்கவும்:Dr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு கேள்வி: யார் தேசத் துரோகி?

தற்போதைய கட்டுரையில் ஜாகிர் நாயக் அவர்கள் மீது இந்திய அரசாங்கம் எடுத்துக்கொண்டு இருக்கும் சட்ட ஒழுங்கு செயல்கள் பற்றி சில முக்கியமான விவரங்களை எழுதுகிறேன்.

1) எய்தவன் இருக்க அம்பை நோவானேன்:

இந்திய அரசாங்கம் இவரது "பீஸ் டீவி" மற்றும் இதர நடவடிக்கைகள் மீது ஆய்வை தொடங்கியுள்ளது என்று செய்திகளில் வாசிக்கிறோம். சட்டம் தன் வேலையை செய்யட்டும். ஒருவேளை, இந்திய அரசாங்கம் ஜாகிர் நாயக் அவர்களை முடக்கிவிட்டு, பீஸ் டீவியை மூடிவிட்டாலும் தீவிரவாதிகள் உருவாக்கப்படுவது குறைக்கப்படுமா? ஏற்கனவே, பல ஆண்டுகளாக பல ஆயிர தீவிரவாதிகள் உருவாக்கப்பட்டுவிட்டிருப்பார்களே! இன்னும் சில வாலிபர்களின் மனங்களில் விதைக்கப்பட்ட தீவிரவாத விதைகள் முளைக்காமலா போய்விடும்? பல நாட்கள் மண்ணுக்குள் மௌன போராட்டத்தை அமைதியாக செய்துவிட்டு, சரியான நேரம் பார்த்து மண்ணுக்கு வெளியே தலைக்காட்ட தயாராக இருக்கும்  வாலிப விதைகளை அரசாங்கம் எப்படி அடையாளம் கண்டுக்கொள்ளும்? இன்னொரு முறை தீவிரவாத தாக்குதல் நடந்து, அதில் பிடிபட்டவர்கள் பெயர்களைச் சொல்லும் வரை காத்திருக்கவேண்டுமா? 

'இந்தியாவில் அவருக்கு இடமில்லை' என்று  சொன்னாலும் பிரச்சனை இல்லை, பாகிஸ்தானும், சௌதி அரேபியாவும், இன்னும் இதர இஸ்லாமிய நாடுகளும் உண்டே, அங்கு சென்று செட்டில் ஆகிவிடுவார் ஜாகிர் நாயக், அங்கிருந்து அவர் இஸ்லாமிய தாவா செய்யமாட்டாரா? இந்தியர்களுக்கு ஒரு நாடு தாய் நாடு, முஸ்லிம் அறிஞர்களுக்கோ பல தாய் நாடுகள் (மன்னிக்கவும் தந்தை  நாடுகள்). இவருக்காக பல முஸ்லிம் நாடுகள் சிகப்பு கம்பள வரவேற்பு கொடுக்கமாட்டார்களா?

இந்தியா இன்னும் தாவுத் இப்ராஹீமை தேடிக்கொண்டு தான் இருக்கிறது. அவர் எங்கு ஒளிந்துக்கொண்டு இருக்கிறார் (மன்னிக்கவும், எங்கு வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்) என்று தெரியும், இருந்தாலும் அந்நாடுகள் எங்களிடம் அவர் இல்லை என்றும், இதர சாக்குபோக்குகளையும் சொல்லிக்கொண்டுத் தான் இருக்கின்றன.

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்!

ஊடகங்களில் வெளியே வந்த ஜாகிர் நாயக் போன்றவர்களின் வீடியோக்களின் மூலமாக வெறுப்புணர்வை தூண்டும் ஒரு சிலரை அடையாளம் காணமுடியும், வெளியே வராமல் உள்ளுக்குள்ளே நடக்கும் செயல்களை எப்படி அடையாளம் காணுவது? ஆங்காங்கே சில மசூதிகளிலும் மதரஸாக்களிலும் மூளைச் சலவை செய்யப்படும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை   எப்படி கண்டுபிடிப்பது?  அவர்களுக்கு மறுவாழ்வு கொடுப்பது எப்படி? ஒவ்வொரு மசூதியிலும் சிசி காமிரா வைக்கமுடியுமா என்ன? அப்படியே வைத்தாலும் காமிராவிற்கு முன்பு யார் உண்மை பேசப்போகிறார்கள்? 

ஒரு ஜாகிர் நாயக்கை முடக்குவதினாலும், ஒரு பீஸ் டீவியை முடக்குவதினாலும் தற்காலிக பயன் இருக்குமே தவிர நிரந்தர தீர்வு என்பது காணப்படாது.  இதற்காக அரசாங்கம் தன் கடமையைச் செய்யவேண்டாம் என்று நான் சொல்லவில்லை, நிச்சயம் சட்டம் தன் கடமையைச் செய்யவேண்டும்.

ஜாகிர் நாயக் வெறும் அம்பு மட்டுமே, எய்தவர் வேறு ஒருவர் இருக்கின்றார் அல்லது இருக்கின்றது. இந்த அம்பு (ஜாகிர் நயாக்) இல்லையென்றால் வேறு அம்பு வில்லிலிருந்து புறப்பட்டு வரப்போகிறது. எய்தவன் யார் என்று கண்டுபிடித்தால் தான் வெற்றிக் கிடைக்கும். 

எய்தவன் யார்?

ஜாகிர் நாயக் ஒருவர் செய்த தவறுக்கு ஒட்டு மொத்த முஸ்லிம்களையா குற்றப்படுத்துவது?

'இந்திய முஸ்லிம்களை', நான் எய்தவன் என்றுச் சொல்லவில்லை. 

ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த தவறான இஸ்லாமிய விளக்கங்கள் எப்படி உண்மை இஸ்லாமை பிரதிபலிக்கும்? மேலும் பல ஆண்டுகளாக இந்தியாவில் பல இஸ்லாமிய அறிஞர்கள் அவரை கண்டனம் செய்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்று முஸ்லிம்கள் கேட்கக்கூடும். 

முஸ்லிம்களிடம் நான் கேட்க விரும்பும் கேள்விகள், இதுவரை அவரை கண்டனம் செய்த முஸ்லிம்கள் எந்த காரணத்திற்காக கண்டனம் செய்தார்கள்? அவர் தீவிரவாத செயல்களை ஊக்குவிக்கிறார் என்றா கண்டித்தார்கள்? நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும்படி பேசுகின்றார் என்றா கண்டித்தார்கள்? இல்லையே… உங்கள் மத்தியில் இருக்கும் இஸ்லாமிய கருத்துவேறுபாடுகளுக்காகத் தான் உங்களில் சிலர்  அவரை கண்டித்தீர்கள். சரி கண்டித்தீர்கள் என்றே வைத்துக்கொள்வோம்? பலன் என்ன? அவரை முடக்கினீர்களா? இல்லையே. விளைவு, இன்று தீவிரவாதிகளின் வாயில் ஜாகிர் நாயக் அவர்களின் பெயர். 

சரி, ஜாகிர் நாயக் அவர்கள் வெறும் அம்பு என்றால் எய்தது யார்?

எய்தது இஸ்லாம் ஆகும்:

இஸ்லாமின் இறையியலை புரிந்துக்கொள்ளாமல், எத்தனை ஜாகிர் நாயக்குகளை அரசாங்கம் முடக்கினாலும், எத்தனை பீஸ் டீவிகளை முடக்கினாலும் நிரந்தர தீர்வு என்பது முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டவன் கதை தான்.

2) இஸ்லாமை தவறாக புரிந்துக்கொள்பவர்களால் தான் பிரச்சனை வருகிறது, இஸ்லாமினால் அல்ல

எந்த ஒரு தீவிரவாத செயல் நடந்தாலும் சரி, உடனே இஸ்லாமுக்கு நேராக விரலை நீட்டுவது வழக்கமாகிவிட்டது என்று கொதித்தெழுகின்றீர்களா?

ஒரு சின்ன கணக்கு போடுவோம். உலகத்தில் பல மதங்கள் உள்ளன, யூத மதம், கிறிஸ்தவம், இந்து மதம், புத்த மதம் என்று இன்னும் பல மதங்கள் உள்ளன. ஒவ்வொரு மதத்திலும் தீவிரவாத செயல்களில் வன்முறைகளில் ஈடுபடுபவர்களும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை தீவிரவாத வன்முறைச் செயல்கள், தற்கொலை குண்டு வெடிப்புக்கள் போன்றவை மேற்கண்ட மதங்களால் அரங்கேற்றப்பட்டுள்ளன? என்ற கணக்கை எடுத்து பார்க்கமுடியுமா?

10 ஆண்டுகளை விடுங்கள், ஒரு ஆண்டை எடுத்துக்கொள்ளுங்கள். இதுவும் வேண்டாம், கடந்த ஒரு மாதத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதுவும், கடந்த மாதம் முஸ்லிம்களின் புனிதமான மாதமாகும் (இந்த மாதத்தில் ஷாத்தான் கட்டப்பட்டு இருப்பான் எனவே தீமைகள் குறைவாக நடக்கும் என்று இஸ்லாம் சொல்கிறது). இந்த ஒரு மாதத்தில் எத்தனை தீயசெயல்கள் உலக மதங்களால் அரங்கேற்றப்பட்டுள்ளன, மேலும் யார் முன்னணியில் இருக்கிறார்கள்? இஸ்லாமா? அல்லது இதர மதங்களா?

த ரெலிஜியன் ஆஃப் பீஸ்(www.thereligionofpeace.com) என்ற தளத்தில், உலகமனைத்திலும் நடந்துக்கொண்டு இருக்கும் இஸ்லாமிய  தீவிரவாத செயல்களின் எண்ணிக்கையை சேகரித்து வைத்துள்ளனர். இன்றைய தேதியில் (9 ஜூலை 2016) அத்தளத்தில் காணப்படும் இஸ்லாமிய செயல்களின் எண்ணிக்கை கீழே தரப்பட்டுள்ளது:

கடந்த 30 நாட்களில் (இஸ்லமிய புனித மாதம் ரமளானில்) 207 இஸ்லாமிய தாக்குதல்கள் 32 நாடுகளில் நடந்துள்ளன. இவைகளினால் 1693 மக்கள் கொல்லப்பட்டார்கள், 1885 பேர் காயமடைந்துள்ளார்கள்.

During this time period, there were 207 Islamic attacks in 32 countries, in which 1693 people were killed and 1885 injured. 

மேலும் பார்க்க: 2016 Ramadan attacks -https://en.wikipedia.org/wiki/2016_Ramadan_attacks

ஒருமுறை இந்த பக்கத்தை படித்துவிடுங்கள்: Has Ramadan 2016 been one of the bloodiest in modern history?

கடந்த 30 நாட்களில் இதர மதங்களை பின்பற்றுபவர்களால் நிகழ்ந்த தாக்குதல்களை கணக்கிட்டாலும், மேற்கண்ட இஸ்லாமிய எண்ணிக்கையை விட குறைவாகவே இருக்கும், அதுவும் வெறும் சிறிய சதவிகிதத்திலேயே இருக்கும். இதனை மறுப்பவர்கள் தாராளமாக விவரங்களை சேகரித்துச் சொல்லலாம். அதாவது கடந்த 30 நாட்களில் இந்துக்களினால் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் எத்தனை? மரித்தவர்கள் எத்தனை? கிறிஸ்தவர்களினால் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் எத்தனை? மரித்தவர்கள் எத்தனை? என்று கண்டுபிடியுங்கள், அதன் பிறகு இஸ்லாமிய தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப்பாருங்கள். 

3) ஏன் இஸ்லாமியர்களால் மட்டும் இத்தனை தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படுகின்றது?

 • ஒரு நாட்டில் ஒரு இஸ்லாமிய அறிஞர் இஸ்லாமை சரியாக புரிந்துக்கொள்ளவில்லை என்றுச் சொன்னால், அதனை ஏற்கலாம்.
 • ஒரு நாட்டில் சில இஸ்லாமிய அறிஞர்கள் இஸ்லாமை தவறாக புரிந்துக்கொண்டுள்ளார்கள் என்றுச் சொன்னாலும் அதனை ஓரளவிற்கு ஏற்கலாம்.
 • பல நாடுகளில், பல இஸ்லாமிய அறிஞர்கள் பல்லாண்டு காலமாக இஸ்லாமை சரியாக புரிந்துக்கொள்ளவில்லை என்றுச் சொல்வதை எப்படி எற்றுக்கொள்ளமுடியும்?
 • ஜாகிர் நாயக் அவர்களை எடுத்துக்கொள்ளுங்கள், அவர் ஒரு பாமர மனிதன் அல்ல, அவர் ஒரு மருத்துவர், மற்றும் இஸ்லாமிய இறையியலை கற்றவர், உலக மனைத்திலும் உள்ள படித்த மேதைகளோடு பேசுபவர் மற்றும் விவாதம் புரிபவர். அவருடைய திறமையை குறைத்து மதிப்பிடவேண்டாம். குர்-ஆனை அரபியில் படித்து புரிந்துக்கொள்ளும் திறமையுள்ளவர். இது போல பல ஆயிர அறிஞர்கள் உலகில் இருக்கிறார்கள். வெற்றிபெரும் ஒவ்வொரு ஆணுக்கு பின் ஒரு பெண் இருப்பாள் என்பார்கள், அது போல ஒவ்வொரு இஸ்லாமிய தீவிரவாதிக்கு பின் ஒரு இஸ்லாமிய இமாம் / அறிஞர் நிச்சயம் இருப்பார். தீவிரவாதிகளுக்கு ஞானம் போதி மரத்தின் கீழே தானாக வருவதில்லை, சொல்லிக்கொடுத்தால் தான் வருகிறது, சொல்லித் தருவது யார்? இஸ்லாமிய அறிஞர்கள் தான்.
 • கடந்த மாதத்தில் (ரமளானில்) 32 நாடுகளில் 200க்கும் அதிகமான தாக்குதல்கள் நடந்துள்ளது என்று எண்ணும் போது, இதனை விளங்கிக்கொள்வது எப்படி?  இந்த ரமளான் மாதத்தில் ஷைத்தான் கட்டிவைக்கப்பட்டிருப்பான் என்றுச் சொல்வதை விட, இந்த திவிரவாதிகளின் நிழலைப்போல இருந்துள்ளான் என்றுச் சொல்வது தான் சரியாக இருக்கும். ஏன் பெரும்பான்மையான இமாம்கள், முஸ்லிம் அறிஞர்கள் இஸ்லாமை தவறாகவே புரிந்துக்கொள்கிறார்கள்? தவறு இவர்கள் மீதா அல்லது இஸ்லாம் மீதா? என்ற சந்தேகம் வருவது இயல்பானதே!
 • உலகில் உள்ள பெரும்பான்மையான கிறிஸ்தவ பாதிரியார்கள் ஏன் கிறிஸ்தவத்தை தவறாக புரிந்துக்கொண்டு தீவிரவாத செயல்களில் தங்கள் மக்களை ஈடுபடுத்தவில்லை? முஸ்லிம் அறிஞர்கள் மட்டும் ஏன் இப்படி செய்கிறார்கள்?
 • உலகில் உள்ள பெரும்பான்மையான இதர மார்க்க அறிஞர்கள் ஏன் தங்கள் மார்க்கத்தை சரியாக புரிந்துக்கொள்கிறார்கள்? ஆனால், முஸ்லிம்கள் மட்டும் எப்போதும் ஏன் இஸ்லாமை தவறாகவே புரிந்துக்கொள்கிறார்கள்?

பிரச்சனை மக்கள் அல்ல, பிரச்சனை இஸ்லாமிய மதமாகும். பிரச்சனை ஜாகிர் நாயக் அல்ல, பிரச்சனை இஸ்லாமிய இறையியலாகும். மக்கள் தான் பிரச்சனை என்றால், எல்லா மதத்திலும் அதிக அளவு இஸ்லாமில் நடப்பது போல தீவிரவாத செயல்கள் நடக்கவேண்டுமே! ஆனால், அப்படி நடப்பதில்லையே! ஏன்?

அன்று அல்கெய்தா, நேற்று தாலிபான், இன்று ஐஎஸ்ஐஎஸ். பின் லாடன் போனால் என்ன, அவரை பின் பற்றி லாடம் கட்டிக்கொண்ட  இஸ்லாமிய தீவிரவாத குதிரைகள் உருவாக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றனவே! இன்று உலகில் எதற்கு பஞ்சமிருக்கின்றதோ, இல்லையோ, தீவிரவாத இயக்கங்களுக்கு மட்டும் பஞ்சமில்லை.

ஜாகிர் நாயக்கை முடக்குவது வெறும் தற்காலிக விடுதலை தான், நிரந்தரமானதல்ல. 

இப்போது சிலருக்கு (முஸ்லிம்களுக்கு) கீழ்கண்ட கேள்விகள் எழும்:

அ) குறைந்த சதவிகித முஸ்லிம்கள் செய்யும் தீவிரவாத செயல்களால், இஸ்லாமை குற்றப்படுத்துவது சரியில்லை?

அந்த சிறும்பான்மை மக்கள் எத்தனை ஆயிர மக்களை கொல்கிறார்கள் என்பதை பாருங்கள், விளைவுகளின் வலி அதிகமாக தெரியும். எனவே சிறும்பான்மை சதவிகித முஸ்லிம்கள் தான் இப்படி தவறான காரியங்களில் ஈடுபடுகிறார்கள் என்றுச் சொல்வது ஏற்பதற்கில்லை. ஒரே நபர் பல நூறு மக்களை கொல்வதை சாதாரணமான செயலாக ஏற்றுக்கொள்ளமுடியாது.

ஆ) பெரும்பான்மை முஸ்லிம்கள் அப்படி இல்லையே! அவர்கள் அமைதியாகத் தானே இருக்கிறார்கள்!

உண்மைதான், பெரும்பான்மை முஸ்லிம்களினால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, அதே போல அவர்களால் ஒரு பயனுமில்லை. இவர்களால் அந்த சிறும்பான்மை முஸ்லிம்கள் செய்யும் தாக்குதல்களை தடுக்கமுடிகின்றதா? தடுக்க முடியாது என்பது தானே நிதர்சனம்! அப்பா, அண்ணன், தம்பி, சித்தப்பா, பெரியப்பா என்று அனைவரும் ஐந்து வேளை தவறாமல் இஸ்லாமிய தொழுகை நடத்தியவர்கள் தான், ஒரே வரியில் நின்றுக் கொண்டு காற்று நுழைவதற்கும் இடம் கொடுக்காமல் ஐவேளை தொழுதவர்கள் தான். ஆனால், திடீரென்று எதிர்பாராத விதமாக தம்பி எப்படி தீவிரவாதியானான் என்பது தான் மற்றவர்களுக்கு புரியாத புதிர். ஒரே வரியில் நின்று தொழுதவர்களின் மத்தியில் இமாலய அளவிற்கு வித்தியாசமா? எப்படி நடந்தது? தீவிரவாதியாக முத்திரைக்குத்தப்பட்ட மகனை பெற்றெடுத்த பெற்றோர்களே இந்த ஆய்வை செய்யட்டும்.

எனவே பெரும்பான்மையான அமைதி முஸ்லிம்களால் ஒரு புதிய தீவிரவாதியையும் தடுத்து நிறுத்தமுடியாது. தங்களில் ஒருவன் எப்படி தீவிரவாதியானான் என்பதை அவர்களே சிந்திக்கட்டும்.  

இ) அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளால் தான் முஸ்லிம் தீவிரவாதிகள் உருவாகுவதற்கு காரணம்!

சுன்னி முஸ்லிம் ஷியா மீது குண்டு வீசுவதற்கு அமெரிக்கா, இஸ்ரேல் காரணமா?  ஷியா முஸ்லிம், சுன்னி முஸ்லிம் மீது வீசும் குண்டுகளுக்கு இவர்கள் தான் காரணமா? அதிகபட்சமாக, இரண்டாம் புனித பூமியாக முஸ்லிம்கள் கருதும் மதினாவில் குண்டு வெடித்ததற்கு அமெரிக்கா, இஸ்ரேல் காரணமா? (4 ஜூலை 2016 -https://en.wikipedia.org/wiki/2016_Saudi_Arabia_bombings)

ஈ) ஏழ்மை தான் இப்படிப்பட்ட இஸ்லாமிய தீவிரவாதிகளை உருவாக்குகிறது.

பெரும்பான்மையான இஸ்லாமிய தீவிரவாதிகள் அதிகம் படித்த பட்டதாரிகள், கைநிறைய சம்பளம் வாங்கும் கணினித்துறையில்வேலை செய்பவர்கள் என்பதை கவனத்தில் வைக்கவும்.

உ) மற்ற மதக்காரர்கள் இவர்களை உசுப்பு ஏற்றுவதினால் தான் இவர்கள் தீவிரவாதத்தில் ஈடுபடுகின்றார்கள்!

முஸ்லிம்கள் கூட இதர மார்க்க மக்களை உசுப்பு ஏற்றுகிறார்கள், அதற்காக அவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதில்லையே! ஏன்? யூதர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் தங்கள் உடல்களில் வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு, மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வெடிக்கச்செய்வதை பார்த்திருக்கிறீர்களா? இவர்களில் சிலர் எப்போதாவது செய்யக்கூடும் அதுவும் மதம் மூளைக்கு ஏறும்போது.  ஆனால் இஸ்லாமில் இச்செயல்கள் ஹோல்சேல் மாதிரியாக அல்லவா செய்யப்படுகின்றது! ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற தோரணையில் அல்லவா இஸ்லாமிய தீவிரவாத செயல்கள் நடந்தேறிக்கொண்டு இருக்கின்றன. 

ஊ) 14 நூற்றாண்டுகளால் தொடர்ந்து வரும் ஒரு மதத்தின் மீது இப்படி குற்றம் சுமத்துவது சரியில்லை!

அந்த மதத்தை படித்துப் பார்த்தால் தான் உண்மை புரியும், எத்தனை ஆண்டுகள் இருந்தது முக்கியமல்ல, எப்படி அது நம்மை வாழச்சொல்கின்றது என்பது தான் முக்கியம். சமுதாய மக்களுக்கு எவைகளை கற்றுக்கொடுக்கின்றது என்பது தான் முக்கியம்.

கணக்கெடுத்துக் கொள்ளுங்கள், யூத மதம் – 4000 ஆண்டுகளாக, கிறிஸ்தவம் 2000 ஆண்டுகளாக, இந்து மதம் 3000 ஆண்டுகளுக்கு மேலாக மக்களால் பின்பற்றப்படுகின்றது. ஆனால், நேற்று பெய்த மழையில் முளைத்த காளானைப்போல 1400 ஆண்டுகளாக மட்டும் பின்பற்றப்படும் இஸ்லாமில் மட்டும் ஏன் இவ்வளவு தீவிரவாத இயக்கங்கள், தீவிரவாதிகள், வன்முறைகள். மற்ற மார்க்கங்களில் இல்லாத ஒன்று (தேவையில்லாத ஒன்று), எப்படி இஸ்லாமில் மட்டும் காணப்படுகின்றது. ஆய்வு செய்ய விருப்பமிருப்பவர்கள் செய்யட்டும். கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கண்டடைவீர்கள். 

எ) சிலர் தவறாக புரிந்துக்கொள்வதினால், முழு மார்க்கத்தையும் குற்றப்படுத்துவது எந்த வகையில் நியாயம்?

ஏன் இஸ்லாமில்  மட்டும்  பெரும்பான்மையானவர்கள் இஸ்லாமை எப்போதுமே தவறாக புரிந்துக்கொள்கிறார்கள்? ஆனால், இதர மார்க்கத்தார்கள் ஏன் அவர்களின் மார்க்கத்தை எப்போதுமே சரியாக புரிந்துக்கொள்கிறார்கள்?  ஒருமுறை இருமுறை அல்ல, ஓராயிரம் முறையும் ஏன் இஸ்லாமை இமாம்கள் சரியாகவே புரிந்துக்கொள்வதில்லை?  இஸ்லாமில் மட்டும் ஏன் இத்தனை தீவிரவாத இயக்கங்கள், இத்தனை தீவிரவாதிகள்? மற்ற மார்க்கங்களில் ஏன் இல்லை? சிந்தித்துப் பாருங்கள், பிரச்சனை இஸ்லாமிய அறிஞர்களா, இஸ்லாமா? என்பது புரியும்.  ஒரு இந்து தன் மதத்தை சமஸ்கிருதத்தில் படிக்கிறான், தன்புனித நூலை  சரியாக புரிந்துக்கொள்கிறான், ஒரு யூதன் தன் மதநூலை எபிரேய மொழியில் படிக்கிறான், அதனை சரியான புரிந்துக்கொள்கிறான். ஆனால், முஸ்லிம் இமாம்கள் அறிஞர்கள் மட்டும் ஏன் தங்கள் மதத்தை தவறாகவே புரிந்துக்கொள்கிறார்கள்? அவர்கள் அரபியில் படிப்பதினாலா! 

ஏ) உலகில் 150 கோடிக்கும் அதிகமாக உள்ள மக்கள் தவறானவற்றை பின்பற்றுகிறார்கள் என்றுச் சொல்லமுடியுமா?

பல கோடி மக்கள் பின்பற்றுவதினால், அது உண்மையாகி விடாது. பல கோடி மக்கள் நாத்தீகர்களாக இருக்கிறார்கள், அதற்காக நாத்தீகம் தான் உண்மை, அல்லாஹ் இல்லை என்று ஒப்புக்கொள்வீர்களா?

பல கோடி மக்கள் கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள், அதற்காக கிறிஸ்தவம் தான் உண்மை என்று முஸ்லிம்கள் ஒப்புக்கொள்வார்களா?

பல கோடி மக்கள் இந்துக்களாக இருக்கிறார்கள், எனவே, இந்துக்கள் பின்பற்றுவது தான் சரியானது என்று முஸ்லிம்கள்  ஒப்புக்கொள்வார்களா? எனவே, பெரும்பான்மையை வைத்து மதத்தின் உண்மையை கண்டுபிடிக்கமுடியாது. 

ஐ) ஜாகிர் நாயக் அவர்கள் ஒருவரின் பேச்சு தான் இப்படி, மற்றவர்கள் இப்படி இல்லையே!

இவர் மட்டுமல்ல, இன்னும் பல பேரின் பெயர்கள் வெளிவரப்போகிறது. சிலரது பெயர் வராது காரணம் அவர்கள் பேசுவது அந்தரங்கத்தில் என்பதால் வெளியே வராது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள இமாம்களின் பேச்சுக்களை கேட்டுப்பாருங்கள், எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என்பது புரியும். பிரச்சனை மட்டைகள் அல்ல, குட்டைத் தான். இப்படிப்பட்டவர்களின் பேச்சுக்கள் இஸ்லாமிய புனித நூலாகிய குர்-ஆனிலிருந்து வருகிறது என்பதை சொல்லத்தேவையில்லை.

4) அடுத்தது என்ன? இந்திய அரசாங்கம் என்ன செய்யவேண்டும்?

ஒரு குண்டு வெடிப்பு, ஊடகங்களில் சூடான விவாதங்கள், பல நேர்க்காணல்கள், சிலர் கைது, சிலர் விடுதலை, இவைகள் தான் தற்போது செய்தித்தாள்களில் வரும் சூடான செய்திகள். இந்த நிலை சில நாட்கள் தொடரும், அதன் பிறகு எல்லோரும் இதைப் பற்றி மறந்துவிடுவார்கள். எதுவரைக்கும் மறப்பார்கள்? அடுத்த முறை ஏதாவது தீவிரவாத செயல்கள் நடக்கும் வரை மறப்பார்கள். ஏன் நாம் அடுத்தமுறைக்காக காத்திருக்கவேண்டும்?

அரசாங்கம் என்ன செய்யவேண்டும்?

தற்போதைய சட்ட ஆய்வுகள் ஒரு புறம் நடக்கட்டும், சட்டம் தன் கடமையைச் செய்யட்டும். அதோடு கூட, இஸ்லாமை ஆய்வு செய்யும் படி, குர்-ஆனையும், ஹதீஸ்களையும், உலக இஸ்லாமிய அறிஞர்களின் பேச்சுக்களையும் ஆய்வு செய்யும் படி, இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு அரசாங்கம் அறிவுரை கூறலாம். பல மேதாவிகளைக் கொண்ட இந்திய பல்கலைக்கழகங்கள் மேற்கண்ட ஆய்வுகளை விருப்பு வெறுப்பு இன்றி செய்யவேண்டும். அப்போது தான் உண்மை என்பது வெளியே வரும். அதன் பிறகு, இஸ்லாம் பற்றிய அறிவை எல்லா முஸ்லிம்களுக்கும், இதர இந்தியர்களுக்கும் கொடுக்கவேண்டும்.  

மக்கள் இஸ்லாமின் உண்மை முகத்தை அறியும் வரை, பெரும்பான்மை அமைதி முஸ்லிம்கள் இஸ்லாமை முழுவதுமாக அறிந்துக்கொள்ளாத வரை இப்படிப்பட்ட தீவிரவாத செயல்கள் தொடர்ந்து நடந்துக்கொண்டே இருக்கும்.

முடிவுரை:

திரு ஜாகிர் நாயக் பற்றிய தற்போதைய அரசாங்க ஆய்வு எதை நோக்கிச் செல்லும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்கவேண்டும். அவர் மீது எந்த ஒரு குற்றமும் இல்லை என்று முடிவு வரலாம், அல்லது அவர் மீது சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம்.

அதுவரை, இஸ்லாமை தூய வடியில் அறிந்துக்கொள்ள, அதன் உண்மை முகத்தை அறிந்துக்கொள்ள இக்கட்டுரையை படிக்கும் அனைவரும் குர்-ஆனையும், ஹதீஸ்களையும், இஸ்லாமிய அறிஞர்களின் உரைகளை கேட்கும் படி வேண்டிக்கொள்கிறேன். சத்தியத்தை அறிந்துக்கொள்ளுங்கள், அதுவே உங்களை விடுதலையாக்கும். 

இஸ்லாமை அறிய பயன்படும் தளங்கள்: