கடந்த சில நாட்களாக செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி செய்திகளில் அதிகமாக பேசப்படுபவர் மதிப்பிற்குரிய இஸ்லாமிய அறிஞர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் ஆவார்கள். அப்படி அவர் என்னத்தை சாதித்துவிட்டார்? இதுவரை அவர் உழைத்த உழைப்பிற்கு பரிசாக இரண்டு தீவிரவாதிகள் விசாரனையின் போது இவருடைய பெயரை உச்சரித்தது தான் காரணம் (நாம் நல்லவர்களாக இருப்பது மட்டுமல்ல, நம் ரசிகனும் நல்லவனாக இருக்கவேண்டும் என்பதை இப்போது தான் புரிந்தது).
தினமலர் செய்தியில் டாக்டர் ஜாகிர் நாயக்:
"துடில்லி: இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சூசகமாக தெரிவித்துள்ளார்.
வங்கதேச தலைநகர் தாக்காவில், கடந்த வாரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், இந்தியர் ஒருவர் உட்பட பலர் பலியானார்கள். இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் இரண்டு பேர், மும்பையில் மத போதகர் ஜாகிர் நாயக் பேச்சில் தாங்கள் கவரப்பட்டதாக கூறினர். இதனையடுத்து, ஜாகிர் நாயக் குறித்த விவாதம் எழுந்தது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறுகையில், ஜாகிர் நாயக் குறித்து அனைத்து விவரங்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. அவரது பேச்சு ஆட்சேபனைக்குரியது என்றார். மேலும், வங்கதேச தாக்குதல் கண்டனத்திற்குரியது. பயங்கரவாதத்திற்கு எந்த மதமும் கிடையாது. எந்த பகுதியும் கிடையாது. பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து உலக நாடுகளும் ஒன்று சேர வேண்டும் என்றார்." (மூலம்)
டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் இஸ்லாமிய போதனைகள் ஆபத்தானவை என்று 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு கட்டுரையை எழுதினேன், அதனை இங்கு படிக்கவும்:Dr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு கேள்வி: யார் தேசத் துரோகி?
தற்போதைய கட்டுரையில் ஜாகிர் நாயக் அவர்கள் மீது இந்திய அரசாங்கம் எடுத்துக்கொண்டு இருக்கும் சட்ட ஒழுங்கு செயல்கள் பற்றி சில முக்கியமான விவரங்களை எழுதுகிறேன்.
1) எய்தவன் இருக்க அம்பை நோவானேன்:
இந்திய அரசாங்கம் இவரது "பீஸ் டீவி" மற்றும் இதர நடவடிக்கைகள் மீது ஆய்வை தொடங்கியுள்ளது என்று செய்திகளில் வாசிக்கிறோம். சட்டம் தன் வேலையை செய்யட்டும். ஒருவேளை, இந்திய அரசாங்கம் ஜாகிர் நாயக் அவர்களை முடக்கிவிட்டு, பீஸ் டீவியை மூடிவிட்டாலும் தீவிரவாதிகள் உருவாக்கப்படுவது குறைக்கப்படுமா? ஏற்கனவே, பல ஆண்டுகளாக பல ஆயிர தீவிரவாதிகள் உருவாக்கப்பட்டுவிட்டிருப்பார்களே! இன்னும் சில வாலிபர்களின் மனங்களில் விதைக்கப்பட்ட தீவிரவாத விதைகள் முளைக்காமலா போய்விடும்? பல நாட்கள் மண்ணுக்குள் மௌன போராட்டத்தை அமைதியாக செய்துவிட்டு, சரியான நேரம் பார்த்து மண்ணுக்கு வெளியே தலைக்காட்ட தயாராக இருக்கும் வாலிப விதைகளை அரசாங்கம் எப்படி அடையாளம் கண்டுக்கொள்ளும்? இன்னொரு முறை தீவிரவாத தாக்குதல் நடந்து, அதில் பிடிபட்டவர்கள் பெயர்களைச் சொல்லும் வரை காத்திருக்கவேண்டுமா?
'இந்தியாவில் அவருக்கு இடமில்லை' என்று சொன்னாலும் பிரச்சனை இல்லை, பாகிஸ்தானும், சௌதி அரேபியாவும், இன்னும் இதர இஸ்லாமிய நாடுகளும் உண்டே, அங்கு சென்று செட்டில் ஆகிவிடுவார் ஜாகிர் நாயக், அங்கிருந்து அவர் இஸ்லாமிய தாவா செய்யமாட்டாரா? இந்தியர்களுக்கு ஒரு நாடு தாய் நாடு, முஸ்லிம் அறிஞர்களுக்கோ பல தாய் நாடுகள் (மன்னிக்கவும் தந்தை நாடுகள்). இவருக்காக பல முஸ்லிம் நாடுகள் சிகப்பு கம்பள வரவேற்பு கொடுக்கமாட்டார்களா?
இந்தியா இன்னும் தாவுத் இப்ராஹீமை தேடிக்கொண்டு தான் இருக்கிறது. அவர் எங்கு ஒளிந்துக்கொண்டு இருக்கிறார் (மன்னிக்கவும், எங்கு வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்) என்று தெரியும், இருந்தாலும் அந்நாடுகள் எங்களிடம் அவர் இல்லை என்றும், இதர சாக்குபோக்குகளையும் சொல்லிக்கொண்டுத் தான் இருக்கின்றன.
எய்தவன் இருக்க அம்பை நோவானேன்!
ஊடகங்களில் வெளியே வந்த ஜாகிர் நாயக் போன்றவர்களின் வீடியோக்களின் மூலமாக வெறுப்புணர்வை தூண்டும் ஒரு சிலரை அடையாளம் காணமுடியும், வெளியே வராமல் உள்ளுக்குள்ளே நடக்கும் செயல்களை எப்படி அடையாளம் காணுவது? ஆங்காங்கே சில மசூதிகளிலும் மதரஸாக்களிலும் மூளைச் சலவை செய்யப்படும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை எப்படி கண்டுபிடிப்பது? அவர்களுக்கு மறுவாழ்வு கொடுப்பது எப்படி? ஒவ்வொரு மசூதியிலும் சிசி காமிரா வைக்கமுடியுமா என்ன? அப்படியே வைத்தாலும் காமிராவிற்கு முன்பு யார் உண்மை பேசப்போகிறார்கள்?
ஒரு ஜாகிர் நாயக்கை முடக்குவதினாலும், ஒரு பீஸ் டீவியை முடக்குவதினாலும் தற்காலிக பயன் இருக்குமே தவிர நிரந்தர தீர்வு என்பது காணப்படாது. இதற்காக அரசாங்கம் தன் கடமையைச் செய்யவேண்டாம் என்று நான் சொல்லவில்லை, நிச்சயம் சட்டம் தன் கடமையைச் செய்யவேண்டும்.
ஜாகிர் நாயக் வெறும் அம்பு மட்டுமே, எய்தவர் வேறு ஒருவர் இருக்கின்றார் அல்லது இருக்கின்றது. இந்த அம்பு (ஜாகிர் நயாக்) இல்லையென்றால் வேறு அம்பு வில்லிலிருந்து புறப்பட்டு வரப்போகிறது. எய்தவன் யார் என்று கண்டுபிடித்தால் தான் வெற்றிக் கிடைக்கும்.
எய்தவன் யார்?
ஜாகிர் நாயக் ஒருவர் செய்த தவறுக்கு ஒட்டு மொத்த முஸ்லிம்களையா குற்றப்படுத்துவது?
'இந்திய முஸ்லிம்களை', நான் எய்தவன் என்றுச் சொல்லவில்லை.
ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த தவறான இஸ்லாமிய விளக்கங்கள் எப்படி உண்மை இஸ்லாமை பிரதிபலிக்கும்? மேலும் பல ஆண்டுகளாக இந்தியாவில் பல இஸ்லாமிய அறிஞர்கள் அவரை கண்டனம் செய்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்று முஸ்லிம்கள் கேட்கக்கூடும்.
முஸ்லிம்களிடம் நான் கேட்க விரும்பும் கேள்விகள், இதுவரை அவரை கண்டனம் செய்த முஸ்லிம்கள் எந்த காரணத்திற்காக கண்டனம் செய்தார்கள்? அவர் தீவிரவாத செயல்களை ஊக்குவிக்கிறார் என்றா கண்டித்தார்கள்? நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும்படி பேசுகின்றார் என்றா கண்டித்தார்கள்? இல்லையே… உங்கள் மத்தியில் இருக்கும் இஸ்லாமிய கருத்துவேறுபாடுகளுக்காகத் தான் உங்களில் சிலர் அவரை கண்டித்தீர்கள். சரி கண்டித்தீர்கள் என்றே வைத்துக்கொள்வோம்? பலன் என்ன? அவரை முடக்கினீர்களா? இல்லையே. விளைவு, இன்று தீவிரவாதிகளின் வாயில் ஜாகிர் நாயக் அவர்களின் பெயர்.
சரி, ஜாகிர் நாயக் அவர்கள் வெறும் அம்பு என்றால் எய்தது யார்?
எய்தது இஸ்லாம் ஆகும்:
இஸ்லாமின் இறையியலை புரிந்துக்கொள்ளாமல், எத்தனை ஜாகிர் நாயக்குகளை அரசாங்கம் முடக்கினாலும், எத்தனை பீஸ் டீவிகளை முடக்கினாலும் நிரந்தர தீர்வு என்பது முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டவன் கதை தான்.
2) இஸ்லாமை தவறாக புரிந்துக்கொள்பவர்களால் தான் பிரச்சனை வருகிறது, இஸ்லாமினால் அல்ல
எந்த ஒரு தீவிரவாத செயல் நடந்தாலும் சரி, உடனே இஸ்லாமுக்கு நேராக விரலை நீட்டுவது வழக்கமாகிவிட்டது என்று கொதித்தெழுகின்றீர்களா?
ஒரு சின்ன கணக்கு போடுவோம். உலகத்தில் பல மதங்கள் உள்ளன, யூத மதம், கிறிஸ்தவம், இந்து மதம், புத்த மதம் என்று இன்னும் பல மதங்கள் உள்ளன. ஒவ்வொரு மதத்திலும் தீவிரவாத செயல்களில் வன்முறைகளில் ஈடுபடுபவர்களும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை தீவிரவாத வன்முறைச் செயல்கள், தற்கொலை குண்டு வெடிப்புக்கள் போன்றவை மேற்கண்ட மதங்களால் அரங்கேற்றப்பட்டுள்ளன? என்ற கணக்கை எடுத்து பார்க்கமுடியுமா?
10 ஆண்டுகளை விடுங்கள், ஒரு ஆண்டை எடுத்துக்கொள்ளுங்கள். இதுவும் வேண்டாம், கடந்த ஒரு மாதத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதுவும், கடந்த மாதம் முஸ்லிம்களின் புனிதமான மாதமாகும் (இந்த மாதத்தில் ஷாத்தான் கட்டப்பட்டு இருப்பான் எனவே தீமைகள் குறைவாக நடக்கும் என்று இஸ்லாம் சொல்கிறது). இந்த ஒரு மாதத்தில் எத்தனை தீயசெயல்கள் உலக மதங்களால் அரங்கேற்றப்பட்டுள்ளன, மேலும் யார் முன்னணியில் இருக்கிறார்கள்? இஸ்லாமா? அல்லது இதர மதங்களா?
த ரெலிஜியன் ஆஃப் பீஸ்(www.thereligionofpeace.com) என்ற தளத்தில், உலகமனைத்திலும் நடந்துக்கொண்டு இருக்கும் இஸ்லாமிய தீவிரவாத செயல்களின் எண்ணிக்கையை சேகரித்து வைத்துள்ளனர். இன்றைய தேதியில் (9 ஜூலை 2016) அத்தளத்தில் காணப்படும் இஸ்லாமிய செயல்களின் எண்ணிக்கை கீழே தரப்பட்டுள்ளது:
கடந்த 30 நாட்களில் (இஸ்லமிய புனித மாதம் ரமளானில்) 207 இஸ்லாமிய தாக்குதல்கள் 32 நாடுகளில் நடந்துள்ளன. இவைகளினால் 1693 மக்கள் கொல்லப்பட்டார்கள், 1885 பேர் காயமடைந்துள்ளார்கள்.
During this time period, there were 207 Islamic attacks in 32 countries, in which 1693 people were killed and 1885 injured.
மேலும் பார்க்க: 2016 Ramadan attacks -https://en.wikipedia.org/wiki/2016_Ramadan_attacks
ஒருமுறை இந்த பக்கத்தை படித்துவிடுங்கள்: Has Ramadan 2016 been one of the bloodiest in modern history?
கடந்த 30 நாட்களில் இதர மதங்களை பின்பற்றுபவர்களால் நிகழ்ந்த தாக்குதல்களை கணக்கிட்டாலும், மேற்கண்ட இஸ்லாமிய எண்ணிக்கையை விட குறைவாகவே இருக்கும், அதுவும் வெறும் சிறிய சதவிகிதத்திலேயே இருக்கும். இதனை மறுப்பவர்கள் தாராளமாக விவரங்களை சேகரித்துச் சொல்லலாம். அதாவது கடந்த 30 நாட்களில் இந்துக்களினால் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் எத்தனை? மரித்தவர்கள் எத்தனை? கிறிஸ்தவர்களினால் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் எத்தனை? மரித்தவர்கள் எத்தனை? என்று கண்டுபிடியுங்கள், அதன் பிறகு இஸ்லாமிய தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப்பாருங்கள்.
3) ஏன் இஸ்லாமியர்களால் மட்டும் இத்தனை தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படுகின்றது?
- ஒரு நாட்டில் ஒரு இஸ்லாமிய அறிஞர் இஸ்லாமை சரியாக புரிந்துக்கொள்ளவில்லை என்றுச் சொன்னால், அதனை ஏற்கலாம்.
- ஒரு நாட்டில் சில இஸ்லாமிய அறிஞர்கள் இஸ்லாமை தவறாக புரிந்துக்கொண்டுள்ளார்கள் என்றுச் சொன்னாலும் அதனை ஓரளவிற்கு ஏற்கலாம்.
- பல நாடுகளில், பல இஸ்லாமிய அறிஞர்கள் பல்லாண்டு காலமாக இஸ்லாமை சரியாக புரிந்துக்கொள்ளவில்லை என்றுச் சொல்வதை எப்படி எற்றுக்கொள்ளமுடியும்?
- ஜாகிர் நாயக் அவர்களை எடுத்துக்கொள்ளுங்கள், அவர் ஒரு பாமர மனிதன் அல்ல, அவர் ஒரு மருத்துவர், மற்றும் இஸ்லாமிய இறையியலை கற்றவர், உலக மனைத்திலும் உள்ள படித்த மேதைகளோடு பேசுபவர் மற்றும் விவாதம் புரிபவர். அவருடைய திறமையை குறைத்து மதிப்பிடவேண்டாம். குர்-ஆனை அரபியில் படித்து புரிந்துக்கொள்ளும் திறமையுள்ளவர். இது போல பல ஆயிர அறிஞர்கள் உலகில் இருக்கிறார்கள். வெற்றிபெரும் ஒவ்வொரு ஆணுக்கு பின் ஒரு பெண் இருப்பாள் என்பார்கள், அது போல ஒவ்வொரு இஸ்லாமிய தீவிரவாதிக்கு பின் ஒரு இஸ்லாமிய இமாம் / அறிஞர் நிச்சயம் இருப்பார். தீவிரவாதிகளுக்கு ஞானம் போதி மரத்தின் கீழே தானாக வருவதில்லை, சொல்லிக்கொடுத்தால் தான் வருகிறது, சொல்லித் தருவது யார்? இஸ்லாமிய அறிஞர்கள் தான்.
- கடந்த மாதத்தில் (ரமளானில்) 32 நாடுகளில் 200க்கும் அதிகமான தாக்குதல்கள் நடந்துள்ளது என்று எண்ணும் போது, இதனை விளங்கிக்கொள்வது எப்படி? இந்த ரமளான் மாதத்தில் ஷைத்தான் கட்டிவைக்கப்பட்டிருப்பான் என்றுச் சொல்வதை விட, இந்த திவிரவாதிகளின் நிழலைப்போல இருந்துள்ளான் என்றுச் சொல்வது தான் சரியாக இருக்கும். ஏன் பெரும்பான்மையான இமாம்கள், முஸ்லிம் அறிஞர்கள் இஸ்லாமை தவறாகவே புரிந்துக்கொள்கிறார்கள்? தவறு இவர்கள் மீதா அல்லது இஸ்லாம் மீதா? என்ற சந்தேகம் வருவது இயல்பானதே!
- உலகில் உள்ள பெரும்பான்மையான கிறிஸ்தவ பாதிரியார்கள் ஏன் கிறிஸ்தவத்தை தவறாக புரிந்துக்கொண்டு தீவிரவாத செயல்களில் தங்கள் மக்களை ஈடுபடுத்தவில்லை? முஸ்லிம் அறிஞர்கள் மட்டும் ஏன் இப்படி செய்கிறார்கள்?
- உலகில் உள்ள பெரும்பான்மையான இதர மார்க்க அறிஞர்கள் ஏன் தங்கள் மார்க்கத்தை சரியாக புரிந்துக்கொள்கிறார்கள்? ஆனால், முஸ்லிம்கள் மட்டும் எப்போதும் ஏன் இஸ்லாமை தவறாகவே புரிந்துக்கொள்கிறார்கள்?
பிரச்சனை மக்கள் அல்ல, பிரச்சனை இஸ்லாமிய மதமாகும். பிரச்சனை ஜாகிர் நாயக் அல்ல, பிரச்சனை இஸ்லாமிய இறையியலாகும். மக்கள் தான் பிரச்சனை என்றால், எல்லா மதத்திலும் அதிக அளவு இஸ்லாமில் நடப்பது போல தீவிரவாத செயல்கள் நடக்கவேண்டுமே! ஆனால், அப்படி நடப்பதில்லையே! ஏன்?
அன்று அல்கெய்தா, நேற்று தாலிபான், இன்று ஐஎஸ்ஐஎஸ். பின் லாடன் போனால் என்ன, அவரை பின் பற்றி லாடம் கட்டிக்கொண்ட இஸ்லாமிய தீவிரவாத குதிரைகள் உருவாக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றனவே! இன்று உலகில் எதற்கு பஞ்சமிருக்கின்றதோ, இல்லையோ, தீவிரவாத இயக்கங்களுக்கு மட்டும் பஞ்சமில்லை.
ஜாகிர் நாயக்கை முடக்குவது வெறும் தற்காலிக விடுதலை தான், நிரந்தரமானதல்ல.
இப்போது சிலருக்கு (முஸ்லிம்களுக்கு) கீழ்கண்ட கேள்விகள் எழும்:
அ) குறைந்த சதவிகித முஸ்லிம்கள் செய்யும் தீவிரவாத செயல்களால், இஸ்லாமை குற்றப்படுத்துவது சரியில்லை?
அந்த சிறும்பான்மை மக்கள் எத்தனை ஆயிர மக்களை கொல்கிறார்கள் என்பதை பாருங்கள், விளைவுகளின் வலி அதிகமாக தெரியும். எனவே சிறும்பான்மை சதவிகித முஸ்லிம்கள் தான் இப்படி தவறான காரியங்களில் ஈடுபடுகிறார்கள் என்றுச் சொல்வது ஏற்பதற்கில்லை. ஒரே நபர் பல நூறு மக்களை கொல்வதை சாதாரணமான செயலாக ஏற்றுக்கொள்ளமுடியாது.
ஆ) பெரும்பான்மை முஸ்லிம்கள் அப்படி இல்லையே! அவர்கள் அமைதியாகத் தானே இருக்கிறார்கள்!
உண்மைதான், பெரும்பான்மை முஸ்லிம்களினால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, அதே போல அவர்களால் ஒரு பயனுமில்லை. இவர்களால் அந்த சிறும்பான்மை முஸ்லிம்கள் செய்யும் தாக்குதல்களை தடுக்கமுடிகின்றதா? தடுக்க முடியாது என்பது தானே நிதர்சனம்! அப்பா, அண்ணன், தம்பி, சித்தப்பா, பெரியப்பா என்று அனைவரும் ஐந்து வேளை தவறாமல் இஸ்லாமிய தொழுகை நடத்தியவர்கள் தான், ஒரே வரியில் நின்றுக் கொண்டு காற்று நுழைவதற்கும் இடம் கொடுக்காமல் ஐவேளை தொழுதவர்கள் தான். ஆனால், திடீரென்று எதிர்பாராத விதமாக தம்பி எப்படி தீவிரவாதியானான் என்பது தான் மற்றவர்களுக்கு புரியாத புதிர். ஒரே வரியில் நின்று தொழுதவர்களின் மத்தியில் இமாலய அளவிற்கு வித்தியாசமா? எப்படி நடந்தது? தீவிரவாதியாக முத்திரைக்குத்தப்பட்ட மகனை பெற்றெடுத்த பெற்றோர்களே இந்த ஆய்வை செய்யட்டும்.
எனவே பெரும்பான்மையான அமைதி முஸ்லிம்களால் ஒரு புதிய தீவிரவாதியையும் தடுத்து நிறுத்தமுடியாது. தங்களில் ஒருவன் எப்படி தீவிரவாதியானான் என்பதை அவர்களே சிந்திக்கட்டும்.
இ) அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளால் தான் முஸ்லிம் தீவிரவாதிகள் உருவாகுவதற்கு காரணம்!
சுன்னி முஸ்லிம் ஷியா மீது குண்டு வீசுவதற்கு அமெரிக்கா, இஸ்ரேல் காரணமா? ஷியா முஸ்லிம், சுன்னி முஸ்லிம் மீது வீசும் குண்டுகளுக்கு இவர்கள் தான் காரணமா? அதிகபட்சமாக, இரண்டாம் புனித பூமியாக முஸ்லிம்கள் கருதும் மதினாவில் குண்டு வெடித்ததற்கு அமெரிக்கா, இஸ்ரேல் காரணமா? (4 ஜூலை 2016 -https://en.wikipedia.org/wiki/2016_Saudi_Arabia_bombings)
ஈ) ஏழ்மை தான் இப்படிப்பட்ட இஸ்லாமிய தீவிரவாதிகளை உருவாக்குகிறது.
பெரும்பான்மையான இஸ்லாமிய தீவிரவாதிகள் அதிகம் படித்த பட்டதாரிகள், கைநிறைய சம்பளம் வாங்கும் கணினித்துறையில்வேலை செய்பவர்கள் என்பதை கவனத்தில் வைக்கவும்.
உ) மற்ற மதக்காரர்கள் இவர்களை உசுப்பு ஏற்றுவதினால் தான் இவர்கள் தீவிரவாதத்தில் ஈடுபடுகின்றார்கள்!
முஸ்லிம்கள் கூட இதர மார்க்க மக்களை உசுப்பு ஏற்றுகிறார்கள், அதற்காக அவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதில்லையே! ஏன்? யூதர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் தங்கள் உடல்களில் வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு, மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வெடிக்கச்செய்வதை பார்த்திருக்கிறீர்களா? இவர்களில் சிலர் எப்போதாவது செய்யக்கூடும் அதுவும் மதம் மூளைக்கு ஏறும்போது. ஆனால் இஸ்லாமில் இச்செயல்கள் ஹோல்சேல் மாதிரியாக அல்லவா செய்யப்படுகின்றது! ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற தோரணையில் அல்லவா இஸ்லாமிய தீவிரவாத செயல்கள் நடந்தேறிக்கொண்டு இருக்கின்றன.
ஊ) 14 நூற்றாண்டுகளால் தொடர்ந்து வரும் ஒரு மதத்தின் மீது இப்படி குற்றம் சுமத்துவது சரியில்லை!
அந்த மதத்தை படித்துப் பார்த்தால் தான் உண்மை புரியும், எத்தனை ஆண்டுகள் இருந்தது முக்கியமல்ல, எப்படி அது நம்மை வாழச்சொல்கின்றது என்பது தான் முக்கியம். சமுதாய மக்களுக்கு எவைகளை கற்றுக்கொடுக்கின்றது என்பது தான் முக்கியம்.
கணக்கெடுத்துக் கொள்ளுங்கள், யூத மதம் – 4000 ஆண்டுகளாக, கிறிஸ்தவம் 2000 ஆண்டுகளாக, இந்து மதம் 3000 ஆண்டுகளுக்கு மேலாக மக்களால் பின்பற்றப்படுகின்றது. ஆனால், நேற்று பெய்த மழையில் முளைத்த காளானைப்போல 1400 ஆண்டுகளாக மட்டும் பின்பற்றப்படும் இஸ்லாமில் மட்டும் ஏன் இவ்வளவு தீவிரவாத இயக்கங்கள், தீவிரவாதிகள், வன்முறைகள். மற்ற மார்க்கங்களில் இல்லாத ஒன்று (தேவையில்லாத ஒன்று), எப்படி இஸ்லாமில் மட்டும் காணப்படுகின்றது. ஆய்வு செய்ய விருப்பமிருப்பவர்கள் செய்யட்டும். கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கண்டடைவீர்கள்.
எ) சிலர் தவறாக புரிந்துக்கொள்வதினால், முழு மார்க்கத்தையும் குற்றப்படுத்துவது எந்த வகையில் நியாயம்?
ஏன் இஸ்லாமில் மட்டும் பெரும்பான்மையானவர்கள் இஸ்லாமை எப்போதுமே தவறாக புரிந்துக்கொள்கிறார்கள்? ஆனால், இதர மார்க்கத்தார்கள் ஏன் அவர்களின் மார்க்கத்தை எப்போதுமே சரியாக புரிந்துக்கொள்கிறார்கள்? ஒருமுறை இருமுறை அல்ல, ஓராயிரம் முறையும் ஏன் இஸ்லாமை இமாம்கள் சரியாகவே புரிந்துக்கொள்வதில்லை? இஸ்லாமில் மட்டும் ஏன் இத்தனை தீவிரவாத இயக்கங்கள், இத்தனை தீவிரவாதிகள்? மற்ற மார்க்கங்களில் ஏன் இல்லை? சிந்தித்துப் பாருங்கள், பிரச்சனை இஸ்லாமிய அறிஞர்களா, இஸ்லாமா? என்பது புரியும். ஒரு இந்து தன் மதத்தை சமஸ்கிருதத்தில் படிக்கிறான், தன்புனித நூலை சரியாக புரிந்துக்கொள்கிறான், ஒரு யூதன் தன் மதநூலை எபிரேய மொழியில் படிக்கிறான், அதனை சரியான புரிந்துக்கொள்கிறான். ஆனால், முஸ்லிம் இமாம்கள் அறிஞர்கள் மட்டும் ஏன் தங்கள் மதத்தை தவறாகவே புரிந்துக்கொள்கிறார்கள்? அவர்கள் அரபியில் படிப்பதினாலா!
ஏ) உலகில் 150 கோடிக்கும் அதிகமாக உள்ள மக்கள் தவறானவற்றை பின்பற்றுகிறார்கள் என்றுச் சொல்லமுடியுமா?
பல கோடி மக்கள் பின்பற்றுவதினால், அது உண்மையாகி விடாது. பல கோடி மக்கள் நாத்தீகர்களாக இருக்கிறார்கள், அதற்காக நாத்தீகம் தான் உண்மை, அல்லாஹ் இல்லை என்று ஒப்புக்கொள்வீர்களா?
பல கோடி மக்கள் கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள், அதற்காக கிறிஸ்தவம் தான் உண்மை என்று முஸ்லிம்கள் ஒப்புக்கொள்வார்களா?
பல கோடி மக்கள் இந்துக்களாக இருக்கிறார்கள், எனவே, இந்துக்கள் பின்பற்றுவது தான் சரியானது என்று முஸ்லிம்கள் ஒப்புக்கொள்வார்களா? எனவே, பெரும்பான்மையை வைத்து மதத்தின் உண்மையை கண்டுபிடிக்கமுடியாது.
ஐ) ஜாகிர் நாயக் அவர்கள் ஒருவரின் பேச்சு தான் இப்படி, மற்றவர்கள் இப்படி இல்லையே!
இவர் மட்டுமல்ல, இன்னும் பல பேரின் பெயர்கள் வெளிவரப்போகிறது. சிலரது பெயர் வராது காரணம் அவர்கள் பேசுவது அந்தரங்கத்தில் என்பதால் வெளியே வராது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள இமாம்களின் பேச்சுக்களை கேட்டுப்பாருங்கள், எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என்பது புரியும். பிரச்சனை மட்டைகள் அல்ல, குட்டைத் தான். இப்படிப்பட்டவர்களின் பேச்சுக்கள் இஸ்லாமிய புனித நூலாகிய குர்-ஆனிலிருந்து வருகிறது என்பதை சொல்லத்தேவையில்லை.
4) அடுத்தது என்ன? இந்திய அரசாங்கம் என்ன செய்யவேண்டும்?
ஒரு குண்டு வெடிப்பு, ஊடகங்களில் சூடான விவாதங்கள், பல நேர்க்காணல்கள், சிலர் கைது, சிலர் விடுதலை, இவைகள் தான் தற்போது செய்தித்தாள்களில் வரும் சூடான செய்திகள். இந்த நிலை சில நாட்கள் தொடரும், அதன் பிறகு எல்லோரும் இதைப் பற்றி மறந்துவிடுவார்கள். எதுவரைக்கும் மறப்பார்கள்? அடுத்த முறை ஏதாவது தீவிரவாத செயல்கள் நடக்கும் வரை மறப்பார்கள். ஏன் நாம் அடுத்தமுறைக்காக காத்திருக்கவேண்டும்?
அரசாங்கம் என்ன செய்யவேண்டும்?
தற்போதைய சட்ட ஆய்வுகள் ஒரு புறம் நடக்கட்டும், சட்டம் தன் கடமையைச் செய்யட்டும். அதோடு கூட, இஸ்லாமை ஆய்வு செய்யும் படி, குர்-ஆனையும், ஹதீஸ்களையும், உலக இஸ்லாமிய அறிஞர்களின் பேச்சுக்களையும் ஆய்வு செய்யும் படி, இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு அரசாங்கம் அறிவுரை கூறலாம். பல மேதாவிகளைக் கொண்ட இந்திய பல்கலைக்கழகங்கள் மேற்கண்ட ஆய்வுகளை விருப்பு வெறுப்பு இன்றி செய்யவேண்டும். அப்போது தான் உண்மை என்பது வெளியே வரும். அதன் பிறகு, இஸ்லாம் பற்றிய அறிவை எல்லா முஸ்லிம்களுக்கும், இதர இந்தியர்களுக்கும் கொடுக்கவேண்டும்.
மக்கள் இஸ்லாமின் உண்மை முகத்தை அறியும் வரை, பெரும்பான்மை அமைதி முஸ்லிம்கள் இஸ்லாமை முழுவதுமாக அறிந்துக்கொள்ளாத வரை இப்படிப்பட்ட தீவிரவாத செயல்கள் தொடர்ந்து நடந்துக்கொண்டே இருக்கும்.
முடிவுரை:
திரு ஜாகிர் நாயக் பற்றிய தற்போதைய அரசாங்க ஆய்வு எதை நோக்கிச் செல்லும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்கவேண்டும். அவர் மீது எந்த ஒரு குற்றமும் இல்லை என்று முடிவு வரலாம், அல்லது அவர் மீது சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம்.
அதுவரை, இஸ்லாமை தூய வடியில் அறிந்துக்கொள்ள, அதன் உண்மை முகத்தை அறிந்துக்கொள்ள இக்கட்டுரையை படிக்கும் அனைவரும் குர்-ஆனையும், ஹதீஸ்களையும், இஸ்லாமிய அறிஞர்களின் உரைகளை கேட்கும் படி வேண்டிக்கொள்கிறேன். சத்தியத்தை அறிந்துக்கொள்ளுங்கள், அதுவே உங்களை விடுதலையாக்கும்.
இஸ்லாமை அறிய பயன்படும் தளங்கள்:
1. ஈஸா குர்-ஆன் - http://isakoran.blogspot.in/
2. ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் - http://www.answering-islam.org/tamil
3. https://www.jihadwatch.org/
4. https://en.wikipedia.org/wiki/Category:Islamic_terrorist_incidents_in_the_21st_century
தேதி: 11 ஜூலை 2016
Dr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மறுப்புக்கள்
Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/zakirnaik/zakirnaik_at_2016.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக