ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

முஸ்லிம்கள் இயேசுவை நேசிக்கிறார்களா?

ஆசிரியர்: ஆலன் ஸ்லெமன்

முஸ்லிம்கள் கூட இயேசுவை நேசிக்கிறார்கள். இந்த விளம்பரப்பலகை  இப்படித் தான் சொல்கிறது. இங்கு ஒரு முக்கியமான கேள்வி என்னவென்றால், 'எந்த இயேசுவை முஸ்லிம்கள் நேசிக்கிறார்கள்?' என்பதாகும்.

இயேசுவின் சீடர்கள் இயேசுவைப் பற்றி நற்செய்தி நூல்களில்  விவரித்துள்ளார்கள். இவர்கள் இயேசுவோடு நடந்தார்கள், அவரோடு உட்கார்ந்து சாப்பிட்டார்கள், அவரோடு பேசினார்கள், அவர் செய்த அற்புதங்களை தங்கள் கண்களால் கண்டார்கள். அவர்கள் இயேசுவை முழுவதுமாக அறிந்திருந்தார்கள்.

இதே போல, இயேசுவிற்கு 600 ஆண்டுகளுக்கு பிறகு வந்த குர்-ஆனிலும் இயேசுவைப் பற்றி சிறிது விவரிக்கப்பட்டுள்ளது. குர்-ஆனின் ஆசிரியருக்கு உண்மையான இயேசு யார் என்று  தெரியாது,  அவர் இயேசுவை பார்த்ததும் இல்லை, இயேசு வாழ்ந்த இடத்திலும் காலத்திலும் அவர் வாழ்ந்தது இல்லை.

இதன் அடிப்படையில் பார்த்தால், குர்-ஆன் சொல்லும் இயேசுவும் பைபிள் விவரிக்கும் இயேசுவும் வித்தியாசமானவர்கள். முஸ்லிம்கள் விளம்பரப்படுத்திய அந்த வாசகம், மக்களை குழப்புவதாக உள்ளது. கிறிஸ்தவர்கள் நம்பும் அதே இயேசுவை நாங்களும் நம்புகிறோம் என்ற பொய்யான அறிக்கையை அவர்கள் பதித்து இருந்தார்கள்.

ஆனால் உண்மையென்ன? பைபிளின் இயேசு 'தேவ குமாரனாக இருக்கிறார், திரித்துவத்தின் இரண்டாம் நபராக இருக்கிறார், அவர் சிலுவையில் அறையப்பட்டார், மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார், மனித இனத்தின் பாவநிவர்த்தியாக இருந்தார்'. குர்-ஆனின் இயேசு எப்படிப்பட்டவர்? குர்-ஆன் இயேசுவின் திரித்துவ தெய்வீகத்தையும், அவரது மரணம்,  உயிர்த்தெழுதல் மற்றும் பாவநிவர்த்தியை மறுக்கிறது. இவைகள் வெறும் மேலோட்டமான வித்தியாசங்கள் என்று கருதக்கூடாது, இவைகள் அடிப்படை வித்தியாசங்களாகும். கிறிஸ்துவின் தெய்வீகத்தை மறுத்தால், நீங்கள் உண்மையான இயேசுவை மறுதலிக்கிறீர்கள் என்று அர்த்தம்.

குர்-ஆன் ஒரு வித்தியாசமான இயேசுவை குறிப்பிடுகிறது என்பது மட்டுமல்ல, அது இஸ்லாமிய சாயம் பூசப்பட்ட இயேசுவை செதுக்கியுள்ளது. புதிய ஏற்பாட்டின் ஆய்வுகளைச் செய்த அறிஞர் 'கிரைக் இவான்ஸ்' கீழ்கண்டவாறு கூறுகின்றார்:

'குர்-ஆனின் விவரங்கள் அனைத்தும் கிறிஸ்தவ யூத மூலங்களின் மீது சார்ந்துள்ளது. . . . மேலும், இஸ்லாமிய சாயம் பூசப்பட்ட விவரங்களை அது வெளிப்படுத்துகிறது. குர்-ஆன் சொல்லும் விவரங்கள் அனைத்தும் ஆதாரபூர்வமான மூல நூல்களிலிருந்து எடுக்கப்படவில்லை'.

என்னை தவறாக புரிந்துக்கொள்ளாதீர்கள். முஸ்லிம்கள் இயேசுவை நேசித்தால், அதனை நான் எதிர்ப்பவனல்ல. முஸ்லிம்கள் உண்மையான இயேசுவை நேசிக்கவேண்டும், அவரது போதனைகளின் படி நடக்கவேண்டும், அவர் கொடுத்த இரட்சிப்பை பெற்றுகொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதற்கு அவர்கள் 'சரித்திரம் பறைசாற்றும் உண்மையான இயேசுவை நேசிக்கவேண்டும், குர்-ஆன் சொல்லும் கிறிஸ்துவை அல்ல'. சரித்திரம் சொல்லும் இயேசுக் கிறிஸ்து உண்மையானவர், குர்-ஆன் சொல்லும் இயேசு ஒரு கற்பனை கதாபாத்திரமானவார்.

முஸ்லிம்கள் பைபிள் சொல்லும் இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு பல காரணங்கள் உள்ளன, அவைகளை அவர்கள் கவனிக்கவேண்டும். அதாவது, முஸ்லிம்கள் அதிகாரமுள்ளது என்று நம்பும் குர்-ஆன், நற்செய்தி நூல்கள் அல்லாஹ்வின் வெளிப்பாடுகள் என்றுச் சொல்கிறது. இதே போல, தோரா மற்றும் சங்கீதமும் தெய்வீக வெளிப்பாடுகள் என்றும் சொல்கிறது. குர்-ஆனுக்கு சமமான இடத்தில் இன்ஜிலை (நற்செய்தி நூல்களை) வைத்து குர்-ஆன் கௌரவிக்கிறது. முஸ்லிம்கள் இரண்டு வெளிப்படுகளையும் நம்பவேண்டும் என்றும் (ஸுரா 29:46), இவைகளுக்கு இடையே வேறுபாடுகளை காட்டமாட்டோம் என்றும் நம்பவேண்டும் என்று குர்-ஆன் சொல்கிறது (ஸூரா 2:136). 

முஸ்லிம்கள் இப்படிப்பட்ட குர்-ஆன் வசனங்களை ஆய்வு செய்யாமல், முந்தைய வேதங்கள் மாற்றப்பட்டுவிட்டது என்று அறியாமையில் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். முஸ்லிம்களின் இந்த நம்பிக்கை, குர்-ஆன் சொல்லும் போதனையல்ல, இது இவர்களின் சுயமான கற்பனையாகும். முஹம்மதுவிற்கு பிறகு, 400 ஆண்டுகள் வரை, எந்த ஒரு இஸ்லாமிய அறிஞர் கூட 'பைபிள் மாற்றப்பட்டுவிட்டது' என்று சொன்னது கிடையாது. அதன் பிறகு வந்த முஸ்லிம் சமுதாயத்தில்,  'முந்தைய வேதங்கள் மாற்றப்பட்டுவிட்டது' என்ற தவறான கருத்து வேரூன்றிவிட்டது. ஆனால், இதற்கு அவர்களின் அதிகார பூர்வமான குர்-ஆனின் அங்கீகாரம் இல்லை. முஸ்லிம்கள் இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக்கொள்வதற்கான காரணங்களை நான் இந்த புத்தகத்தில்  எழுதியுள்ளேன் (The Ambassador's Guide to Islam).

பொதுவாக சொல்வதென்றால், 'யார் வேண்டுமென்றாலும் நான் இயேசுவை நேசிக்கிறேன் என்று சொல்லமுடியும்'.  ஆனால், அவர்கள் எந்த இயேசுவை நேசிக்கிறார்கள் என்பது தான் முக்கியமான கேள்வியாக உள்ளது. யெகோவா விட்னஸ் என்றுச் சொல்லக்கூடியவர்கள் கூட 'நாங்கள் இயேசுவை நேசிக்கிறோம்' என்றுச் சொல்கிறார்கள். ஆனால், அவர்களின் படி 'இயேசு ஒரு தேவதூதன் ஆவார் (archangel Michael)'. மர்மோன்கள் என்ற இன்னொரு கூட்ட மக்கள்கூட நாங்கள் இயேசுவை நேசிக்கிறோம் என்றுச் சொல்கிறார்கள், ஆனால், அவர்கள் 'இயேசு சின்ன கடவுள் (god not God)' என்றுச் சொல்கிறார்கள். இதே போலத்தான்  முஸ்லிம்கள் கூட நாங்கள் இயேசுவை நேசிக்கிறோம் என்றுச் சொல்கிறார்கள், ஆனால் அவர்கள் சொல்லும் இயேசு ஒரு மனிதனாக உள்ளார், மேலும் மோசேயைப் போலவும், முஹம்மதுவைப் போலவும் வெறும் நபியாக இருக்கிறார் என்று மட்டுமே அவர்கள் நம்புகிறார்கள். இவர்களின் இக்கூற்றுக்கள் அனைத்தும் உண்மை இயேசுவை மறுதலித்த நம்பிக்கைகள்.

இயேசுவை நாங்கள் நேசிக்கிறோம் என்றுச் சொல்வது, முஸ்லிம்களுக்கு ஒரு பேஷனாகிவிட்டது. ஆனால், உண்மையான இயேசுவை நேசிப்பது தான் சரியான நம்பிக்கையாகும்.

நான் மேலே குறிப்பிட்ட அந்த விளம்பரப்பலகை மக்களை தவறாக திசை திருப்புவதாக உள்ளது. கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களின் அந்த பொய்யான விளம்பரத்தை அடிப்படையாக வைத்தே தங்கள் உரையாடல்களை புரியலாம். கடைசியாக, இயேசுவை நேசிக்கிறோம் என்றுச் சொல்லக்கூடிய முஸ்லிம்களை, நற்செய்தி நூல்கள் வெளிப்படுத்தும் இயேசுவிடம் கொண்டுவரவேண்டியது கிறிஸ்தவர்களின் கடமையாக உள்ளது.

முஸ்லிம்கள் உங்களுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள்

(ஆலன் அவர்களின் கடிதம் - ஆகஸ்ட் 2009)

அன்பு நண்பரே,

தெருவில் சென்றுக்கொண்டு இருக்கும் ஒரு நபரை நிறுத்தி,  அவரிடம் 'நான் ஒரு கிறிஸ்தவன், உங்களுக்கு பைபிள், இறைவன் மற்றும் மதம் பற்றி' உரையாடுவதற்கு விருப்பமுண்டா? என்று கேட்டுப்பாருங்கள். உடனே அவர் 'இல்லை, எனக்கு விருப்பமில்லை' என்று சொல்லிவிட்டு அமைதியாக நழுவிவிடுவார் (அல்லது திட்டிவிடுவார்).

ஆனால், இதே  கேள்வியை ஒரு முஸ்லிமிடம் கேட்டுப்பாருங்கள், உங்களுக்கு வேறு ஒரு பதில் நிச்சயம் கிடைக்கும். நான் ஒரு முறை, எங்கள் பகுதியில் வாழும் முஸ்லிம்களிடம், இன்னொரு முறை முஸ்லிம்கள் கூடும் சந்தைக்கு (அரப் பஜார்)  சென்று, இரண்டு முஸ்லிம்களிடம் பேச்சு கொடுத்தேன். அவர்களிடம் 'நான் ஒரு கிறிஸ்தவன், நீங்கள் பைபிள், இறைவன், மதம் போன்றவைகள் பற்றி பேச விரும்புவீர்களா?' என்று கேட்டேன். உடனே 'ஓ.. ரொம்ப சந்தோஷம், உட்காருங்கள் நாம் பேசுவோம்' என்று எனக்கு பதில் வந்தது. நானும் அவர்களோடு உட்கார்ந்து இரண்டு மணி நேரம் தேவன், பைபிள், இயேசு மற்றும் இஸ்லாம் பற்றி பேசினேன். ஆக, முஸ்லிம்களிடம் உரையாடலை தொடங்குவது என்பது மிக சுலபமான ஒன்றாகும்.

சமீபத்தில், நான் முஸ்லிம்களுக்கு குர்-ஆனைக் கொண்டு எப்படி சுவிசேஷம் சொல்வது என்பது பற்றி கிறிஸ்தவர்களுக்கு சில வகுப்புக்களை எடுத்தேன். குர்-ஆன் பைபிளைப் பற்றியும், இயேசுவைப் பற்றியும் சொல்லும் உயர்வான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு, எப்படி உரையாடலை தொடருவது என்பது பற்றி கற்றுக்கொடுத்தேன். என்னுடைய இந்த பேச்சை ரிகார்ட் செய்து, எங்கள் திருச்சபை ஈராக் பகுதியில் இராணுவத்தில் (கப்பற்படையில்) வேலை செய்துக்கொண்டு இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு அனுப்பினார்கள். இப்படிப்பட்ட பாடங்களை கற்றுக்கொண்டு, கப்பற்படையில் வேலை செய்யும் கிறிஸ்தவர்கள் மத்திய கிழக்கு பகுதியில் கிறிஸ்துவிற்காக சில ஆத்துமாக்களை இரட்சிப்பிற்குள் நடத்தவேண்டும் என்பது என்னுடைய வேண்டுதலாக இருக்கிறது.

அதே சமயத்தில் அமெரிக்காவில் வாழும் ஐம்பது இலட்சம் முஸ்லிம்களுக்கு சத்தியத்தைச் சொல்வது நம் கடமையாகும்.  அவர்களோடு ஒரு நல்ல உரையாடலை துவக்கி நற்செய்தியைச் சொல்லவேண்டும். நற்செய்தியைச் சொல்ல இதை விட நல்ல வாய்ப்பு நமக்கு கிடைக்காது. ஒன்றை மனதில் வைக்கவேண்டும், இப்படிப்பட்ட உரையாடலை தொடங்கும் போது, அவர்கள் உங்களிடம் 'கிறிஸ்தவமும் பைபிளும் உண்மையானதல்ல' என்று சொல்லக்கூடும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அமைதியாக பதில்களைக் கொடுக்கவேண்டும், மேலும், இயேசுவின் பிரதிநிதியாக சத்தியத்தை அவர்களுக்குச் சொல்லவேண்டும்.

என்னொடு சேர்ந்து இந்த ஊழியத்தில் பங்கு பெற்றமைக்கு உங்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்று கூடி இராஜாதி இராஜாவிற்காக ஊழியம் செய்வது மிகப் பெரிய மகிழ்ச்சியாகும்.

இப்படிக்கு, சத்தியத்திற்காக ஊழியம் செய்யும்

உங்கள் சகோதரன் ஆலன் ஸ்லெமன்

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

சோனு நிகமை எழுப்பும் பாங்கு சப்தங்கள் - வணக்க ஸ்தலங்களிலிருந்து வரும் அதிக சத்தங்களை சகித்துக்கொள்வது மதசகிப்புத் தன்மையை காட்டுமா?

இந்த வாரம் பாடகர் சோனு நிகம் மற்றும் அவருக்காக கொடுக்கப்பட்ட இஸ்லாமிய ஃபத்வா பற்றி நாம் செய்திகளில் வாசித்துக்கொண்டு இருக்கிறோம். முதலில் அந்த செய்திகளில் வந்த விவரங்களை சுருக்கமாக காண்போம், அதன் பிறகு சர்ச்சுக்கள், கோயில்கள் மற்றும் மசூதிகளிலிருந்து வரும் சத்தங்களிலிருந்து நம்மை காத்துக்கொள்ள யார் நமக்கு உதவி செய்வார்கள் என்பதைக் காண்போம்.

செய்தி 1: முஸ்லீம் அல்லாத நான் ஏன் பாங்கு சப்தம் கேட்டு எழுந்திருக்கணும்?: பாடகர் சர்ச்சை ட்வீட்

அனைவரையும் ஆசிர்வதிப்பாராக. நான் முஸ்லீம் அல்ல ஆனால் நான் தினமும் காலை பாங்கு சப்தம் கேட்டு எழுகிறேன். இந்த கட்டாய மத திணிப்பு இந்தியாவில் எப்பொழுது முடியும் என ட்வீட்டியுள்ளார் சோனு நிகம்.

முகமது இஸ்லாத்தை உருவாக்கியபோது மின்சாரம் இல்லை. எடிசனுக்கு பிறகு இந்த சப்த தொல்லைகள் எனக்கு ஏன்? என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சோனு

ஒரு மதத்தை பின்பற்றாதவர்களை எழுப்பிவிட மின்சாரத்தை பயன்படுத்தும் எந்த கோவில் அல்லது குருத்வாரா மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை.

செய்தி 2: Maulvi Issues Fatwa Against Sonu Nigam, Offers Rs 10 Lakh For Shaving His Head!

Syed Sha Atef Ali Al Quaderi, vice president, West Bengal Minority United Council was quoted in the report saying, 

"If anyone can shave his hair, put a garland of old torn shoes around his neck and tour him around the country I personally announce an award of Rs 10 lakh for that person."

At a press conference that was held by the Maulvi, he said that no one has the right to hurt the religious sentiments of people. He said,

"I would have reacted the same way if one had talked ill about the sound of bells coming from a temple as well. If we all become so intolerant about each other's religions, we will soon have a bunch of atheists in our country. People like Nigam should be driven out of the country."

செய்தி 3: யூடியூப் வீடியோ - Sonu Nigam to go for hair cut, asks Maulvi Aatif Ali Kadri to keep Rs.10 lakh

மூலம்: www.youtube.com/watch

1. சோனு நிகமும் பாங்கு சப்தமும்:

மேற்கண்ட செய்தியில் வாசித்தது போல, மசூதிகளிலிருந்து வரும் பாங்கு சப்தம் தன்னை  அதிகாலை எழுப்பிவிடுகிறது என்று சோனு நிகம் தன் கருத்தைச் சொல்லியிருக்கிறார். மசூதி மட்டுமல்ல, இதர இந்துக் கோயில்களிலிருந்து வரும் இப்படிப்பட்ட சப்தமும் சரியானது அல்ல என்றும் சொல்லியுள்ளார். இப்படி சொல்லும் போது, இது ரவுடித்தனம் (ஹிந்தியில்  கூண்டாகிரி) என்றும் குறிப்பிட்டுள்ளார்.  இதனால் கோபம் கொண்ட ஒரு மௌலவி, ஃபத்வா கொடுத்தார். சோனு நிகமை மொட்டை அடித்து, பழைய செருப்பு மாலை அணிவித்து, அவரை ஊர்வலமாக கொண்டுச் செல்பவருக்கு 10 லட்சம் தருவதாக ஃபத்வா கொடுத்தார். இதற்கு பதிலடி கொடுக்க சோனு நிகம், தன் நண்பனை அழைத்து, மொட்டை அடித்துக் கொண்டார். சோனு நிகமை ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் தங்கள் கருத்தைச் சொல்லியுள்ளார்கள். இது தான் செய்தி.

இக்கட்டுரையின் கருப்பொருள் சோனு நிகம் சரியா? அந்த மௌலவி சரியா? என்பது பற்றி ஆய்வு செய்வதல்ல. ஒலி மாசு (Noise/Sounce pollution) எப்படி சர்ச்சுக்கள், கோயில்கள் மற்றும் மசூதிகளிலிருந்து  வருகிறது, அவைகளிலிருந்து தப்பிக்க என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றியதாகும். ஒலி மாசு பற்றி அறிய அடிக்குறிப்பில் கொடுக்கப்பட்ட விக்கீப்பீடியா தமிழ்  தொடுப்பை சொடுக்கி படித்துக் கொள்ளுங்கள்[1].

2. சர்ச்சுக்கள், கோயில்கள் மற்றும் மசூதிகளிலிருந்து வரும் சப்தங்கள்

எங்கள் சபை விசுவாசி ஒருவர், தான் குடியிருந்த தன் சொந்த வீட்டிலிருந்து புதிய வீட்டிற்கு குடும்பத்தை மாற்றினார். சபை போதகரும், இதர சபை நண்பர்களும் சென்று ஜெபம் செய்துவிட்டு வந்தோம். ஏன் நீங்கள் அந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு, இந்த வீட்டிற்கு மாறிவிட்டீர்கள் என்று கேட்டபோது, அவர் சொன்ன காரணம், "தன் பக்கத்து தெருவில் உள்ள மசூதியிலிருந்து வரும் பாங்கு சம்தம் தான்" என்றார். அதிகாலை, அவர்களை தூங்க விடாமல் தொல்லை தருகிறது அந்த பாங்கு சப்தம் என்றும் இதனால் தன் வீட்டில் அனைவருக்கும் தூக்கம் கெடுகிறது, முக்கியமாக தன் பெற்றோருக்கு அதிக தொல்லையாக இருக்கிறது என்றார். (இதை படிக்கும் முஸ்லிம்கள் கோபம் கொள்ளவேண்டாம், கொஞ்சம் பொறுமையாக படியுங்கள், எல்லா மதத்தவரின் வணக்க ஸ்தலங்களிலிருந்தும் இப்படிப்பட்ட சத்தம் வருகிறது, தொடர்ந்து படியுங்கள்). 

நான் வாடகை வீடுகளில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்தேன். வேலையின் காரணமாக வாடகை வீட்டை இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மாற்றும் போது, வீட்டு தரகருக்கு நான் சொல்லும் ஒரு நிபந்தனை, "வீடு பக்கத்தில், அல்லது அதே தெருவில்  சர்ச்சோ(!), மசூதியோ, கோயிலோ, பள்ளிக்கூடமோ, இரயில் தண்டவாளமோ இருக்கக்கூடாது" என்பதாகும். இரவு பத்து மணிக்கு மேலே அமைதியாக தூங்கச் செல்லவேண்டும் என்று விரும்புவது தவறா? விடுமுறை நாட்களில் அமைதியாக வீட்டில் நேரத்தை கழிக்கவேண்டும் என்று விரும்புவது தவறா? 

நான் வளர்ந்த எங்கள் ஊரிலே, எங்கள் வீட்டிற்கு 100 அடி தூரத்தில் ஒரு கோயில் உள்ளது. அந்த கோயிலிலிருந்து அதிகாலையிலும், மாலையிலும், இன்னும் இதர பண்டிகை நாட்களிலும் வரும் மந்திர சத்தங்கள் காதை பிளக்கும். சில நேரங்களில் கோபம் வரும், வேறு வழியில்லாமல் ஜன்னல்களை கதவுகளை சாத்திவிட்டு தூங்குவோம். இதனால் தான் நான் வேலை செய்யும் ஊரிலாவது சத்தமில்லாத வாடகை வீடு வேண்டும் என்று நான் தெரிவு செய்தது.

நான் லண்டனில் இருந்த போது, ஒரு தமிழ் சபைக்கு ஆராதனைக்கு சென்றுக்கொண்டு இருந்தேன். ஒரு நாள் முழு இரவு ஜெபத்தின் போது, சில பாடல்களை பாடி ஆராதிக்கலாம் என்று நான் சொன்ன போது, இசைக் கருவிகளை(டிரம்ஸ்)க் கொண்டு பாடவேண்டாம், என்று அந்த போதகர் தடுத்துவிட்டார். ஏன் என்று கேட்டபோது, சத்தம் சபைக்கு வெளியே வந்தால், ஐந்து நிமிடங்களில், சபைக்கு உள்ளே போலிஸ் வந்துவிடும், நமக்கு வார்னிங் கொடுத்துச் செல்வார்கள், கேட்காத பட்சத்தில் கைது செய்வார்கள் என்றுச் சொன்னார். இப்படி நடந்தும் உள்ளது என்றுச் சொன்னார். சபைக்கு பக்கத்தில் வாழும் மக்களின் தூக்கம் சபையிலிருந்து வரும் சத்தத்தினால் கெடக்கூடாது என்பது அங்குள்ள சட்டம் என்றுச் சொன்னார். இதுவும் சரியானது தானே, இதிலே எந்த  தவறும் இல்லை. 

[இந்தியாவிலும் இந்த சட்டம் (சத்தம்) உள்ளது என்று எனக்குத் தெரியும், ஆனால் யார் இதனை காது கொடுத்து இந்த சட்டத்தை (சத்தத்தை) மதிக்கிறார்கள்? கோயிலிலிருந்து/சர்ச்சிலிருந்து சத்தம் வருகிறது என்று புகார் செய்தால், நீ முஸ்லிம் அதனால் பொய்யான புகார் செய்கிறாய் என்றுச் சொல்கிறார்கள். மசூதிலிருந்து தினமும் ஐந்து வேளை சத்தம் வருகிறது என்றுச் சொன்னால், மொட்டை அடித்து, செருப்பு மாலை போடப்படும் என்று மிரட்டல்கள் வருகிறது. அதனால் தான் யாரும் சத்தம் போடாமல், அமைதியாக! தங்கள் காதுகளை கிழிக்கும் சத்தங்களை சகித்துக்கொண்டு இருக்கிறார்கள்].

சர்ச்சுக்கள், மசூதிகள் மற்றும் கோயில்களுக்கு பக்கத்தில் வாழும் மக்களிடம் கேட்டுப்பார்த்தால் தான், அவைகளிலிருந்து வரும் சத்தங்கள் எப்படி அவர்களின் நிம்"மதி"யை கெடுக்கிறது என்பதைப் பற்றி நாம் சரியாக அறிந்துக் கொள்ள முடியும்.

3. கிறிஸ்தவனாக இருந்தும், சபை பக்கத்தில் வீட்டை தெரிவு செய்யாதது ஏன்?

நான் கிறிஸ்தவன், தவறாமல் ஒவ்வொரு ஞாயிறும் சபைக்குச் சென்று ஆராதித்து வருகிறேன். இதர நாட்களில் நடத்தப்படும் கூட்டங்களுக்கும் என்னால் முடிந்தவரை சென்று வருகிறேன். ஆனால், கிறிஸ்தவ சபைகளுக்கு பக்கத்தில் வீடு கிடைத்தால், நான் அதனை வாடகைக்கு எடுத்துக் கொள்ளமாட்டேன். ஏனென்றால்,  பாடல் மற்றும் இசைச் சத்தம், சில நேரங்களில் சபையை விட்டு வெளியே வரும், எனவே, சபையை விட்டு தூரமாக இருப்பதே நல்லது. சத்தம் வெளியே வராமல் இருப்பதற்கு சில சபைகளில் பல ஏற்பாடுகளை செய்து இருக்கிறார்கள்.  இப்படிப்பட்ட சபைகளின் பக்கத்தில் இருக்கலாம், எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.

இப்படி நான் எழுதுவதினால், நான் என் சபையை நேசிக்கவில்லை என்று அர்த்தமல்ல, சபைகளை நடத்துபவர்கள், தங்கள் சபைகளிலிருந்து அதிக சத்தம் வெளியே சென்று அயலகத்தார்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். 

4. இயேசுவின் பொன் வாக்கு 

கிறிஸ்தவர்களாகிய நாம் எதைச் செய்தாலும், இயேசுவின் அந்த பொன் வாக்கை மனதில் வைத்தவர்களாக செய்யவேண்டும். அது என்ன 'பொன் வாக்கு' என்று கேட்பீர்களாகில், கீழ்கண்ட வசனத்தை படியுங்கள்:

மத்தேயு 7:12  ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.

உன் அயலகத்தான் உன் தூக்கத்தை கெடுக்கக்கூடாது என்று நீ விரும்பினால்,  முதலாவது நீ அவன் தூக்கத்தை கெடுக்கக்கூடாது. நீ முழு இரவு ஜெபம் என்றுச் சொல்லி, சத்தமாக பாட்டு பாடி, ஆராதனைச் செய்து, லௌட் ஸ்பீக்கர் மூலமாக சத்தமாக ஜெபம்/பிரசங்கம் செய்து, மற்றவனின் தூக்கத்தை கெடுத்துவிட்டு சபையை முடித்துக்கொண்டு, அதிகாலை 2 மணிக்கு உன் வீட்டுக்குச் சென்று தூங்கினால், அதிகாலை, உன் தூக்கத்தை கெடுக்க உன் தெருவில் இருக்கும் மசூதியிலிருந்து பாங்கு சத்தம் வரும் என்பதை மனதில் வை. அந்த முஸ்லிம் பாங்குச் சொல்லி, அல்லாஹ்வை தொழுதுவிட்டு, விட்டிற்குச் சென்று தூங்கும் போது, அவன் தெருவில் உள்ள கோயிலிலிருந்து மந்திர சத்தங்கள், கோயில் மணியோசைகள் ஸ்பீகர்கள் மூலமாக அவன் தூக்கத்தை கெடுத்துவிடும்.

உன் தூக்கத்தை மற்றவன் கெடுத்தால் உனக்கு எரிச்சல் வருவது நியாயமென்றால், மற்றவனுக்கு உன் மூலமாக  எரிச்சல் வருவதும் நியாயம் தான். கிறிஸ்தவர்கள் திருச்சபைகளை கட்டும் போது, அதிக சத்தம் வெளியே வராமல் இருக்கும்படியான வசதிகளைச் செய்யவேண்டும்.

முதலாவது முஸ்லிம்கள் மசூதிகளிலிருந்து வரும் சத்தத்தை (பாங்கு சப்தம், மற்றும் ஜும்மா பிரசங்க சத்தம்) குறைக்கட்டும். இரண்டாவது, இந்துக்கள் கோயில்களிலிருந்து வரும் மந்திரச் சத்தங்களை குறைக்கட்டும், அதன் பிறகு நான் என் திருச்சபையின் சத்தத்தை குறைக்கிறேன் என்றுச் சொல்லவேண்டாம். மற்றவர்கள் சரியான வழியில் நடக்கிறார்களா என்பது கேள்வியில்லை, கிறிஸ்தவர்கள் சரியான வழியில் இயேசு காட்டிய வழியில் மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யாத வழியில் நடக்கிறார்களா என்பது தான் கேள்வி. முதலில் நம் கண்களில் இருக்கும் உத்திரத்தை எடுத்துப்போடவேண்டும், அதன் பிறகு மற்றவர்களின் கண்களில் உள்ள துரும்பை எடுத்துப்போட நாம் முயன்றுப் பார்க்கலாம்.

7:3  நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? 7:4  இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? 7:5  மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய். (மத்தேயு 7:3-5)

சபையைச் சுற்றியுள்ள மக்களுக்கு இயேசுவின் மீது நல்ல எண்ணம் வந்தால் தானே, அவரது நற்செய்தியை அவர்கள் காதுகொடுத்து கேட்பார்கள் (நாம் லௌட் ஸ்பீகரில் பேசும் போதல்ல,  நேருக்கு நேர் பேசும் போது)?

5. மௌலவியின் ஃபத்வா சரியா?

பொதுவாக முஸ்லிம் மத தலைவர்கள் ஃபத்வா கொடுப்பதில் இரண்டு நன்மைகள் இஸ்லாமுக்கு மறைமுகமாக கிடைக்கிறது. முதலாவதாக, இவரது ஃபத்வா பற்றி அறிந்து முஸ்லிம்கள் இவருக்கு ஆதரவு கொடுப்பார்கள். இவரது ஃபத்வா நியாயமாக/அநியாயமாக கொடுக்கப்பட்டதா? என்று சிந்திக்கமாட்டார்கள், இஸ்லாமுக்காக இவர் பேசுகின்றார் எனவே இவரை ஆதரிக்கவேண்டும், இது தான் பெரும்பான்மையான  முஸ்லிம்களின் நிலைப்பாடு. இரண்டாவதாக, இப்படிப்பட்ட சின்ன சின்ன விஷயத்துக்கு எதிர்ப்பை தெரிவித்து, ஃபத்வா கொடுத்தால், எதிர் காலத்தில் இஸ்லாமை விமர்சிப்பவர்களுக்கு இதனால் பயமுண்டாகும். எனவே இஸ்லாமை விமர்சிப்பவர்கள் அதிகமாக சிந்தித்து செயல்படுவார்கள்.

ஆனால், இப்படிப்பட்ட ஃபத்வாக்களினால், இஸ்லாம் பற்றிய ஒரு தவறான கருத்து நாட்டு மக்களின் மனங்களில் ஆழமாக பதிந்துவிடுகிறது. இப்படிப்பட்ட மௌலவிகளின் நேர்க்காணல்களை விவாதங்களை தொலைக்காட்சிகளில் பார்க்கும் கோடிக்கணக்கான முஸ்லிமல்லாதவர்களின் மனதில் 'இஸ்லாம் பற்றிய எதிர்மறையான கருத்து விதைக்கப்பட்டுவிடுகிறது'. இது இஸ்லாமுக்கு நல்லதல்ல என்று முஸ்லிம்கள் உணரவேண்டும்.

சோனு நிகம் மீது ஃபத்வா விதித்த மௌலவி, "மொட்டை அடித்தல், செருப்பு மாலை போடுதல், 10 லட்சம் பரிசு கொடுத்தல்" போன்ற ஃபத்வாக்கள் கொடுக்காமல், வேறு வகையான முறையில் தன் எதிர்ப்பை தெரிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இதனை மௌலவிகளால்  செய்யமுடியாது, ஏனென்றால், அவர்களால் 'அமைதியான முறையில் போராடுவது, எதிர்ப்பை தெரிவிப்பது' போன்ற வழிமுறைகளை சிந்திக்க முடியாது என்பது தான் உண்மை.

முடிவுரை:

மசூதியோ, சர்ச்சோ, கோயிலோ கொஞ்சம் சத்தத்தை குறைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும். பல வகையான நம்பிக்கைகளைக் கொண்ட  இந்திய மக்கள் கொஞ்சம் நியாயமான முறையில் சிந்தித்து செயல்படவேண்டும். 

பல ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு வெளியே யாருக்குமே தொந்தரவு இருக்கக்கூடாது என்று கட்டப்பட்ட திருச்சபையைச் சுற்றி, இன்று வீடுகள் வந்துவிட்டால், சத்தம் வெளியே வராமல் பார்த்துக் கொள்ளவேண்டியது, அந்த திருச்சபை போதகரின் கடமையாகும். 

இதர மார்க்க மக்கள் வாழும் இடங்களில் கட்டப்பட்ட மசூதிகளிலிருந்து எழுப்பப்படும் பாங்கு சப்தம் மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்கின்றதா? என்பதை கவனித்து, அதிக சத்தத்தை அவர்களாகவே குறைத்துக் கொண்டால் நல்லது. 

இதே போல இந்து கோயில்களிலிருந்து வரும் சத்தம் மக்களை தூங்கவிடாமல் தொல்லை தருகின்றதா என்பதை கவனித்து நடந்துக் கொண்டால், மிகவும் நல்லது.

கிறிஸ்துமஸ் காலங்களில் விசுவாசிகளின் வீட்டிற்கு கேரல் போகும் போது (பாடல்களை பாடிக்கொண்டு ஊர்வலமாக செல்லும் போது), மாலை ஆறு மணிக்கு முன் முடித்துவிடவேண்டும், மக்கள் தூங்கிவிட்ட பிறகு நாம் சென்று மற்றவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று என் சபை போதகர் எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார். கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் பகுதிகளுக்குச் சென்றாலும்   நாம் இந்த நேரத்தை கடைபிடிக்க வேண்டும் என்பது அவரது கட்டளை.

உன் அயலானின் மனதை துக்கப்படுத்திவிட்டு, அந்த மனதில் இயேசு வரவேண்டும் என்று நீ விரும்பினால் அது நடக்குமா? 

கிறிஸ்தவர்கள் இயேசுவிற்கு முன்பாக நியாயத்தீர்ப்பு நாளில் நிற்கும் போது, 'நான் பசியாக இருந்தேன், எனக்கு நீ உணவு கொடுக்கவில்லை, நான் அதிக சத்தத்தினால் தூங்கமுடியாமல் தவித்தேன், என் உணர்வுகளை புரிந்துக்கொண்டு, நீ சத்தத்தை குறைத்துக் கொள்ளவில்லை' என்று சொன்னால், நாம் அவருக்கு என்ன பதில் கொடுப்போம்? 

"சிந்தியுங்கள், செயல்படுங்கள்" மன்னிக்கவும், "சிந்திப்போம் செயல்படுவோம்". 

அடிக்குறிப்புக்கள்:

[1] ஒலி மாசு - ta.wikipedia.org/s/of8

ஒலி மாசு (அல்லது சுற்றுசூழலில் மிகையான சத்தம்) என்பது மனதிற்கு ஒவ்வாத மனிதன்-, கால்நடைகள்- அல்லது இயந்திரங்கள் பிறப்பிக்கும் இரைச்சல் அல்லது ஓலியாகும், அது மனிதனின் வாழ்க்கை முறைகளையும், விலங்குகளின் வாழ்க்கை முறைகளையும், அவர்களின் செயல்பாடுகளையும் வெகுவாக பாதிக்கின்றது. பொதுவாக நம்மை இக்காலத்தில் வெகுவாக பாதிக்கும் ஓலி மாசு, இன்றைய சூழ்நிலையில் போக்குவரத்தின் காரணமாகும், குறிப்பாக தானுந்து, பேருந்து போன்ற மோட்டார் வாகனங்கள்.[1] ஒலி என்று பொருள் படும் ஆங்கில சொல்லான நாய்ஸ் என்ற வார்த்தை லத்தீன் மொழியில் நாசியா என்ற வார்த்தையை மூலமாக கொண்டது ஆகும், அதன் பொருள் கடலில் வாழ்வதால் ஏற்படும் ஏக்க நோய் ஆகும்.

உலகெங்கும் பரவலாக இரைச்சல் சத்தம் போக்குவரத்து வாகனங்களால் ஏற்படுகின்றன, தானுந்து, பேருந்துகளில் இருந்து வரும் சத்தம் மட்டும் அல்லாமல் இதில் விமானங்கள் பறப்பதாலும், ரயில் வண்டிகள் ஓடுவதாலும் விளையும் சத்தம் அடங்கும்.[1][2][3].குறைகள் நிறைந்த நகரத் திட்டங்களாலும் மிகுந்த இரைச்சல் காரணம் ஒலி மாசு ஏற்படுவதுண்டு, ஏன் என்றால் குடியிருப்பு கட்டிடங்கள் தொழில் செய்யும் பட்டறை கட்டிடங்கள் அருகாமையில் இருந்தால், அதனால் குடியிருப்பு பகுதிகளில் சத்தம் மிகுதியால் ஒலி மாசு ஏற்பட வாய்ப்புக்கள் உண்டாகும்.

வாகனங்களின் ஹாரன் ஓசை, அலுவலகங்களில் பயன்படும் கருவிகள், ஆலை இயந்திரங்கள், கட்டிட பணிகள், தரையை சுத்தம செய்யும் இயந்திரங்கள், குரைக்கும் நாய்கள், கருவிகள், மின் விசைகள், ஒளிபரப்பு கருவிகள், விசைகள், ஒலிபெருக்கி, மின்சார விளக்குகள் எழுப்பும் ஒலி, ஆடல் பாடலுக்கான பொழுதுபோக்கு சாதனங்கள், மேலும் சத்தம் போட்டு பேசும் மனிதர்கள், ஆகியவை அனைத்தும் வீட்டின் உள்ளும், வீட்டின் வெளியேயும், இரைச்சல் உண்டாவதற்கான காரணிகளாகும்.


உமரின் இதர தலைப்புகளில் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/general-topics/sonu_nigam_azaan.html


ஆபேலின் கொலையும் குர்-ஆனின் (யூத பாரம்பரிய) மூலமும் - குர்-ஆன் 5:31-32

சுருக்கம்:

முஹம்மது இதர நூல்களிலிருந்து பல விவரங்களை  எடுத்து குர்-ஆனில் பதிவு செய்துள்ளார். இந்த கட்டுரையில் யூத நூல்களில் வரும் ஒரு நிகழ்ச்சியை முஹம்மது எப்படி குர்-ஆனில் புகுத்தியுள்ளார் என்பதை மட்டுமே காண்போம்.

அறிமுகம்:

பல மூலங்களின் கலவையாக முஹம்மது இஸ்லாமை உருவாக்கினார். அதாவது, யூத, கிறிஸ்தவ, சேபியன், பல தெய்வ வழிபாடுகள் மற்றும் தன் சொந்த இறையியல் கோட்பாடுகளை ஒன்றாக கலந்து அவர் இஸ்லாமை உருவாக்கினார். குர்-ஆனை மேலோட்டமாக ஆய்வு செய்யும் போது பளிச்சென்று தெரியும் ஒரு மூலம், யூத மார்க்கமாகும். இந்த கட்டுரையில் ஆபேலின் மரணம் பற்றிய ஒரு யூத நிகழ்ச்சியை ஆய்வு செய்வோம்.

யூத மார்க்கம் பற்றி முஹம்மதுவிற்கு பல விவரங்கள் தெரிந்து இருந்தது. ஹிஜாஜ் முழுவதும் யூத குடியிருப்புக்கள் இருந்தன. இவர்கள் தங்கள் உழவுத்தொழிலுக்கும், கைவினை பொருட்களுக்கும் புகழ்பெற்றவர்களாக திகழ்ந்தனர். முஹம்மது தமது வாலிப வயதில் செய்த வியாபார பயணங்களின் போது, இவர்களோடு அவருக்கு பல தொடர்புகள் உண்டாகியிருக்கவேண்டும். அதன் பிறகு, யாத்ரீப் (மதினா) பட்டணத்தில் வாழ்ந்த யூதர்களோடு இவருக்கு தொடர்பு உண்டானது. இவரது போதனைகளைக் கேட்டு சில யூதர்கள் முஸ்லிம்களாக மாறினார்கள், மேலும் இரண்டு/மூன்று யூதப்பெண்களை முஹம்மது திருமணமும் செய்துக் கொண்டார். இப்னு இஷாம் தம்முடைய 'முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்றில்' முஹம்மதுவிற்கும் யூதர்களுக்கு இடையே நடைப்பெற்ற உரையாடல்களை பதிவு செய்துள்ளார்.

பைபிளின் பழைய ஏற்பாட்டு நிகழ்ச்சிகளை குர்-ஆன் அடிக்கடி மறுபதிவு செய்கிறது. பொதுவாக ஒரு கதை பலரின் வாய் வழியாக சொல்லிக்கொண்டே செல்லப்படும் போது, அது மாறிக்கொண்டே இருக்கும். முதலில் அக்கதை சொல்லப்பட்ட விவரங்களில் சில கூட்டல் கழித்தல்கள் வந்துவிடும். இதைத் தான் குர்-ஆனிலும் காணமுடியும். பழைய ஏற்பாட்டில் வரும் நிகழ்ச்சிகள் சிறு மாறுதல்களுடன் குர்-ஆனில் காணப்படுவதற்கும் இது தான் காரணம். தாம் சந்தித்த யூதர்களிடமிருந்து பல கதைகளை அவர் வாய் வழியே கேட்டு இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. முஹம்மது யூதர்கள் வழியாக அவர்களின் நம்பிக்கைகள் பற்றியும், உவமைகள், எடுத்துக்காட்டுக்கள், மத போதனைகள் (மித்ராஷ், மிஷ்னாஹ்) என்று பலவற்றை கேட்டு இருந்திருப்பார். முஹம்மது கேட்டவைகள் காலப்போக்கில் சில நிகழ்ச்சிகள் அவரது மனதில் மறக்கப்படாமல்  இருந்திருக்கும், சில நிகழ்ச்சிகள் மறக்கப்பட்டு விட்டிருக்கும். கடைசியாக, அவர் வெளிப்பாடுகளை சொல்லும் போது, சில கதைகளில் மாற்றங்கள் சேர்க்கப்பட்டு இருந்தன, சில கதைகள் முஹம்மதுவின் இறையியல் சூழ்நிலைக்கு ஏற்ப திருத்தப்பட்டு இருந்தன.

குர்-ஆனில் மறுபதிவு செய்யப்பட்ட கதைகளில், ஏன் இப்படிப்பட்ட மாற்றங்கள் காணப்படுகின்றன என்று பார்க்கும் போது, ஒரு மனிதன் வாய் வழியாக சொல்லப்படும் விவரங்களை காதுவழியாக கேட்டு, அவைகளின் மூல புத்தகங்களை படிக்காமல், நிகழ்ச்சிகளை பதிவு செய்தால், குர்-ஆனில் உள்ளது போல மாற்றத்தோடு தான் காணப்படும், ஒரிஜினல் போல காணப்படாது. யூதர்கள் மேற்கோள் காட்டும் புத்தகங்களை நேரடியாக படித்து தெரிந்துக்கொள்ளும் அளவிற்கு படிப்பறிவில்லாத முஹம்மதுவினால், தான் "வெளிப்பாடுகள்" என்றுச் சொல்லும் விவரங்களை எப்படி சரி பார்க்கமுடியும்?

மூலங்கள்:

இதன் அடிப்படையில், ஒரு முக்கியமான நிகழ்ச்சி குர்-ஆன் ஸூரா 5:27-32 வசனங்களில் காணலாம். இந்த குர்-ஆன் பகுதியானது காயீன் மற்றும் ஆபேல் கதைப் பற்றி விவரிக்கிறது. ஆரம்பத்தில் தோராவும், குர்-ஆனும் ஒரே மாதிரியான விவரங்களை விவரித்தாலும், குர்-ஆனின் 31வது வசனத்தில் குர்-ஆன் ஒரு மாற்றமான கதையைச் சொல்கிறது.

குர்-ஆன் 5:31. பின்னர் தம் சதோதரரின் பிரேதத்தை (அடக்குவதற்காக) எவ்வாறு மறைக்க வேண்டுமென்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான்; அது பூமியை தோண்டிற்று (இதைப் பார்த்த) அவர் "அந்தோ! நான் இந்த காகத்தைப் போல் கூட இல்லாதாகி விட்டேனே! அப்படியிருந்திருந்தால் என் சகோதரனுடைய பிரேதத்தை நான் மறைத்திருப்பேனே!" என்று கூறி, கை சேதப்படக் கூடியவராகி விட்டார்.

குர்-ஆன் 5:31 சொல்லும் விவரம் தோராவில் இல்லை, ஆனால், இதற்கு இணையான விவரம் யூதர்களின் கட்டுக்கதைகள் அடங்கிய தொகுப்புக்களில் காணப்படுகிறது.

குர்-ஆனில் கண்ட அந்த நிகழ்ச்சி, யூதர்களின் பிர்கே ரபி எலியேஜர் நூலில் கீழ்கண்டவாறு உள்ளது:

ஆதாமும் அவரோடு கூட இருந்தவர்கள், கொலை செய்யப்பட்ட ஆபேலுக்காக அழுதுக்கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு அந்த சடலத்தை என்ன செய்வதென்று அப்போது தெரியாமல் இருந்தது. அந்த நேரத்தில் ஒரு காகம் வந்தது, இன்னொரு காகம் மரித்து இருந்தது.  அந்த காகம், பூமியை தன் கால்களால் கீறி பள்ளம் உண்டாக்கி, அதில் மரித்த காகத்தை போட்டு மூடியது. இதனை கண்ட ஆதாம், "நானும் மரித்த சடலத்தை அந்த காகம் செய்தது போலவே பூமியை தோண்டி புதைப்பேன்" என்றுச் சொல்லி, ஆபேலின் உடலை புதைத்தார்.

Adam and his companion sat weeping and mourning for him (Abel) and did not know what to do with him as burial was unknown to them. Then came a raven, whose companion was dead, took its body, scratched in the earth, and hid it before their eyes; then said Adam, "I shall do as this raven has done", and at once he took Abel's corpse, dug in the earth and hid it. [Geiger, Judaism and Islam, p. 80, as quoted in Gilchrist, Muhammad and the Religion of Islam, p. 205, 206].].

குர்-ஆன் மற்றும் பிர்கே நூலில் சொல்லப்பட்ட விவரங்களை பார்த்தால், இவ்விரண்டுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமையை கண்டுக்கொள்ளலாம். குர்-ஆனின் படி ஆபேலின் சடலத்தை காயின் புதைத்தான், பிர்கே நூலில் படி, ஆதாம் புதைத்தான், இது தான் வித்தியாசம். 

குர்-ஆனின் அடுத்த வசனம் (5:32) இன்னொரு விவரத்தை நிருபிக்கிறது. அதாவது, முஹம்மதுவின் வெளிப்பாடுகள், பிர்கே என்ற ஒரே நூலிலிருந்து மட்டுமல்ல, பைபிள், யூத பாரம்பரிய நூல்களாகிய மித்ரஷ், மிஸ்னாஹ், பலதெய்வ வழிப்பாட்டு முறைகள் போன்றவற்றிலிருந்து வந்துள்ளது என்பதை அறியலாம்.

குர்-ஆன் 5:32. இதன் காரணமாகவே, "நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.

மேற்கண்ட வசனத்தை மேலோட்டமாக பார்த்தால், குர்-ஆன் 5:31 மற்றும் 5:32க்கு இடையே எந்த ஒரு சம்மந்தமும் இல்லை என்பது போல தெரியும். ஒரு மனிதனின் வாழ்வு அல்லது மரணம், எப்படி ஒட்டு மொத்த மனித இனத்தின் இரட்சிப்புக்கு அல்லது அழிவுக்கு காரணமாக இருக்கிறது என்பதை குர்-ஆன் விளக்கவில்லை. ஆனால், இன்னொரு யூத பாரம்பரிய நூலாகிய மிஷ்னாஹ் சன்ஹெட்ரின் (Mishnah Sanhedrin)ஐ கவனித்தால், குர்-ஆன் 5:31க்கும், 5:32க்கும் இடையே இருக்கும் ஒற்றுமையை கண்டுபிடிக்க முடியும். இந்த யூத நூல் என்ன சொல்கிறது என்பதை கவனியுங்கள்:

காயின் தன் சகோதரனை கொன்ற விஷயத்தில், "உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது" என்று சொல்லப்பட்டதை  காணமுடியும் (ஆதி 4:10). இந்த இடத்தில் இரத்தம் என்று ஒருமையில் சொல்லப்படாமல், இரத்தங்கள் என்று மூல மொழியில் பன்மையில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது, ஆபேலின் இரத்தமும், அவன் மூலமாக உருவாக இருக்கும் சந்ததியின் இரத்தங்களும் கூப்பிடுகிறது என்று அர்த்தமாகிறது. இதன் மூலம் அறிவது என்ன? மனிதன் ஒருவனாக படைக்கப்பட்டான், ஆகையால், எவன் ஒருவன் இன்னொரு தனி மனிதனை கொல்கிறானோ, அவன் அந்த மனிதனின் முழு இனத்தை கொன்றுவிட்டதாக ஆகிறது. ஆனால், எவன் ஒருவன் இன்னொருவனை வாழ வைக்கிறானோ, அவன் முழு இனத்தை வாழவைப்பதாக கருதப்படுகிறது. (மிஷ்னாஹ் சன்ஹெட்ரின் 4:5)

இந்த பகுதி மிஷ்னாஹ் பாரம்பரிய நூலில் 4:5ல் காணப்படுகிறது.  மிஷ்னாஹ் என்பது தோராவிற்காக யூத ரபிக்கள் எழுதிய விளக்கவுரைகளாகும்.  ஒரு யூத ரபி எழுதிய விளக்கவுரை எப்படி குர்-ஆனில் புகுந்துவிட்டது? அதுவும் அல்லாஹ்வின் வார்த்தையாக புகுந்துவிட்டது? இந்த கேள்விக்கு பதில் மிகவும் சுலபமானது, முஹம்மது இப்படிப்பட்ட விவரங்களை, போதனைகளை யூதர்களிடமிருந்து கேட்டு இருந்திருக்கின்றார், அதன் பிற்கு இவைகள் தான் "அல்லாஹ்வின் வஹி/வெளிப்பாடுகள்" என்று குர்-ஆனில் புகுத்திவிட்டார்.

ஆதியாகமம் 4:10ல் வரும் வார்த்தை பன்மையாக இருக்கிறது என்பதை அறிந்துக்கொண்ட ஒரு யூத ரபி தன் சொந்த விளக்கத்தை கொடுத்திருந்தார். ஆபேலை கொன்றவன் ஆபேலின் வம்சத்தை முழுவதும் கொன்றுவிட்டான் என்று தான் விளக்கவுரையில் எழுதிவிட்டான். இதே போல, ஒருவனை வாழவைத்தவன், அவன் மூலமாக பிறக்கும் முழு மக்கட்தொகையையும் வாழவைத்துவிட்டான் என்றும் விளக்கம் கொடுத்துவிட்டான். இந்த விளக்கத்தை அறிந்துக்கொண்ட முஹம்மது, இது தோராவில் உள்ளதா? அல்லது ரபிக்கள் எழுதிய விளக்கவுரை மிஷ்னாஹ்வில் எடுத்துக்காட்டாக சொல்லப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்யாமல், இதுதான் அல்லாஹ்வின் நித்தியமான வார்த்தையென்று குர்-ஆனில் புகுத்திவிட்டார். சிறிது சிந்தித்துப்பாருங்கள்! ஒரு யூத ரபியின் சொந்த கருத்து, உலகமெல்லாம் முஸ்லிம்கள் படிக்கும் குர்-ஆனின் அழிவில்லாத வார்த்தைகளாகிவிட்டது.

முடிவுரை:

முஹம்மதுவிற்கு எப்படி வெளிப்பாடுகள் வந்துள்ளன என்பதை சுருக்கமாக இச்சிறிய கட்டுரை  எடுத்துக்காட்டுகிறது. காயீனின் கொலை விஷயத்தில், முஹம்மது பல ஆண்டுகளுக்கு முன்பு கேள்விப்பட்டு இருந்த விவரம் ஞாபகத்தில் இருந்தது அவருக்கு கைகொடுத்தது, ஆனால் கடைசியில் அவரை ஏமாற்றிவிட்டது. எது ஆதாரபூர்வமான விவரம், எது பொய்யான விவரம் என்ற பரிசோதனையில் குர்-ஆன் தோற்றுவிட்டது. மற்றவர்களின் மார்க்க விளக்கங்கள் தன் சொந்த வசனங்கள் என்று குர்-ஆன் பதிவு செய்து தவறிவிட்டது. எது காரணமாக இருந்தாலும், தான் கேள்விபட்டு இருந்த ஒரு யூதர்களின் விளக்கத்தை வேதம் என்று நம்பி, அதை குர்-ஆனில் புகுத்திவிட்டார். தான் சொல்லும் இந்த விவரம் எந்த விளக்கவுரையில் இருக்கிறது என்று முஹம்மதுவிற்கு சிறிது தெரிந்திருந்தாலும், இதனை அவர் சேர்க்காமல் இருந்திருப்பார்.

இக்கட்டுரையில் பார்த்தது போல, குர்-ஆனில் காணப்படும் பல விவரங்கள் பைபிளிலிருந்தும் இதர கட்டுக்கதைகளிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்றுச் சொல்வார்களே, அது போல, ஒரு உதாரணத்தை மட்டுமே இந்த கட்டுரையில் எடுத்துக்காட்டியுள்ளேன். ஆம், யூத பாரம்பரியங்களுக்கு முஹம்மதுவும், குர்-ஆனும், இஸ்லாமும் நன்றிக்கடன் பட்டுள்ளார்கள் என்றுச் சொல்வதில் தவறில்லை.

ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/Quran/Sources/cain.html

அடிக்குறிப்புக்கள்:

[1] பிர்கே ரபி எலியேஜர் (Pirke Rabbi Eliezer):

ஜுடைகா கலைக்களஞ்சியம் இந்த "பிர்கே ரபி எலியேஜர்" தொகுப்பு ஒரு கட்டுக்கதை தொகுப்பு என்றுச் சொல்கிறது. இதற்கு கி.பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ரபி எலியேஜர் தான் ஆசிரியர் என்றும், ஆனால் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இது எழுத்துவடிவில் தொகுத்தார்கள் எனவும் கூறுகிறது. இது குர்-ஆனுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதென்று, கிறிஸ்தவ ஆய்வாளர்கள்  சொல்கிறார்கள். குர்-ஆன் பிர்கே நூலைக் காட்டிலும் முந்தையது மேலும், பிர்கே நூலிலிருந்து குர்-ஆன் நேரடி மேற்கோள் காட்டவில்லை. முஹம்மதுவின் காலத்துக்கு முன்பே, பிர்கே வாய் வழியாக பல நூற்றாண்டுகளாக உலாவிய கதை நூலாகும், மேலும் இந்த விவரங்கள் தல்மூத் மற்றும் மித்ராஷ் போன்ற யூத நூல்களிலும் காணப்படுகிறது. யூத ரபிகள் காலங்காலமாக சொல்லிக்கொண்டு வந்த பாரம்பரியங்களின் தொகுப்பு பிர்கே என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை மேலும் யூதர்களிடையே இப்படிப்பட்ட கதைகள் மிகவும் புகழ்பெற்றவை. தோரா அல்லது தல்மூத் நூல்களுக்கு எழுதப்பட்ட விளக்கவுரைகளாக யூதர்கள் இவைகளை  கருதுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட விவரத்தை சில உதாரணங்களைக் கொண்டு விளக்க இந்நூல்கள் யூதர்களிடையே பயன்படுத்தப்பட்டன. இன்று நாம் விளக்கவுரைகள் (காமண்டரி) என்றுச் சொல்கிறோமே, அது போல அல்லாமல், இவைகள் வேறு வகையான விளக்கவுரைகளாக இருக்கின்றன.


குர்-ஆனின் மூலம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள்

குர்-ஆன் பற்றிய கட்டுரைகள்

Source: http://www.answering-islam.org/tamil/quran/text/cain.html


ஒரு கிறிஸ்தவர் இஸ்லாம் பற்றி போதிக்கும் போது, அங்கு ஒரு முஸ்லிம் கட்டாயம் இருக்கவேண்டுமா?

ஆசிரியர்: ஆலன் ஸ்லெமன்

நான் கடந்த 10 ஆண்டுகளாக இஸ்லாம் பற்றி போதித்துக்கொண்டு இருக்கிறேன். பல முறை கிறிஸ்தவரல்லாதவர்கள் என்னிடம் கேள்விகள் கேட்பார்கள். ஒருமுறை கீழ்கண்ட கேள்வியை ஒருவர் என்னிடம் கேட்டார்:

"நீங்கள் இஸ்லாம் பற்றி கிறிஸ்தவர்களுக்கு  வகுப்புகள் எடுக்கும் போது, ஒரு முஸ்லிமை அந்த கூட்டத்திற்கு வரவழைத்து, நீங்கள் போதிக்கும் விவரங்களுக்கு பதில்களைச் சொல்ல அனுமதிப்பீர்களா? உங்களின் போதனையை சரி பார்க்க அவருக்கு வாய்ப்பு கொடுப்பீர்களா?"

இஸ்லாம் பற்றி கிறிஸ்தவர்களுக்கு எடுக்கப்படும் வகுப்புகளுக்கு முஸ்லிம்களை அழைக்காமல் இருப்பது அநியாயம் என்று சிலர் கருதுகிறார்கள். இந்த கேள்விகளைக் குறித்து நான் என் கருத்துக்களை சுருக்கமாக இங்கு எழுதுகிறேன்.

முதலாவதாக, இஸ்லாம் பற்றி போதிக்கப்படும் இடத்திற்கு முஸ்லிம்களை கட்டாயம் அழைக்கவேண்டும் என்பதற்கு மிகச்சில காரணங்களே இருக்கமுடியும். உதாரணத்திற்கு சொல்வதானால், கிறிஸ்தவ-இஸ்லாம் விவாத நிகழ்ச்சிக்கு, கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு மற்றும் கருத்து பரிமாற்ற நிகழ்ச்சிக்கு கட்டாயம் முஸ்லிம்களை அழைத்தே ஆகவேண்டும். நான் சில நேரங்களில், முஸ்லிம்களை அழைத்து  இஸ்லாம் பற்றிய தங்கள் நிலைப்பாட்டை கிறிஸ்தவர்களிடம் விவரிக்க சொல்லி, அதன் பிறகு கிறிஸ்தவர்கள் தங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள வாய்ப்பு கொடுத்துள்ளேன். கிறிஸ்தவர்கள் நடத்தும் மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பேசுவதற்கு முஸ்லிம்களை அழைப்பது, மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், நானோ அல்லது கிறிஸ்தவ-இஸ்லாமிய நிகழ்ச்சிகளை நடத்தும் நிர்வாகியோ, கட்டாயம் முஸ்லிம் அறிஞர்களை அழைக்கவேண்டும் என்றுச் சொல்வதில் அர்த்தமில்லை, அது தேவையும் இல்லை. 

இரண்டாவதாக, நான் பல முறை கிறிஸ்தவர்களுக்கான நிகழ்ச்சிகளில் பேசும் போது, அவைகள் பெரும்பான்மையாக, இஸ்லாம் பற்றி கிறிஸ்தவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் வகுப்புகளாக இருக்கும். இந்த நிகழ்ச்சிகளில் இஸ்லாம் பற்றி போதனை செய்துவிட்டு, சத்தியத்தை முஸ்லிம்களுக்கு எப்படி சொல்லவேண்டும் என்று கற்றுக்கொடுப்பேன். இவ்விதமாக நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் முஸ்லிம்களை அழைப்பது தேவையில்லாத ஒன்றாகும். இஸ்லாமை போதிக்கும் நிகழ்ச்சிக்கு முஸ்லிம்களை அழைத்தால், அந்த நிகழ்ச்சி எந்த நோக்கத்திற்காக நடத்தப்படுகிறதோ, அது முறியடிக்கப்பட்டு விடும். 

மூன்றாவதாக, பலர் என்னிடம் "உங்கள் நிகழ்ச்சிகளில் முஸ்லிம் அறிஞர் இருந்தால் நீங்கள் செய்யும் பிழைகளை சரி செய்துக் கொள்ளமுடியும் அல்லவா" என்று கேட்டுள்ளார்கள். என்னுடைய போதனையில் பிழைகள் இருக்கும் என்றும், அவைகளை முஸ்லிம்கள் மட்டுமே சரி செய்யமுடியும் என்றும் அவர்கள் எண்ணுவதினால் தான் இப்படிப்பட்ட கேள்வியை கேட்கிறார்கள். இஸ்லாமோ கிறிஸ்தவமோ, எப்போதெல்லாம் ஒரு சிறிய பிழை நடந்துள்ளது என்று எனக்கு தெரிகிறதோ, உடனே அதனை நான் சரி செய்துக்கொள்கிறேன். ஆனால், நான் ஒரு முஸ்லிமல்லாதவனாக இருப்பதினால், இஸ்லாம் பற்றிய தவறான விவரங்களை நிச்சயம் சொல்வேன் என்று எண்ணுவது தவறாகும்.

நான்காவதாக, ஒரு முக்கியமான கேள்வியை கேட்கவேண்டும். கிறிஸ்தவர்களிடம் கேட்ட இதே கேள்வியை முஸ்லிம்களிடமும் கேட்கமுடியுமா? அதாவது முஸ்லிம்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில், வகுப்புகளில் கிறிஸ்தவ அறிஞர்களை அழைத்து, முஸ்லிம்களின் போதனைகளில் இருக்கும் பிழைகளை சரி செய்ய கிறிஸ்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா? இன்னும் சரியாக கேட்கவேண்டுமென்றால், சௌதி அரேபியாவில் கிறிஸ்தவம் பற்றி மசூதிகளில் இமாம்கள் பேசும் போது, அங்கு கிறிஸ்தவர்களை வரவேற்று, அந்த இமாம்கள் சொல்லும் போதனைகளை சரி செய்ய வாய்ப்பு தரப்படுமா? இந்த ஆசை ஒரு போதும் நிறைவேறாது. முஸ்லிம்கள் இப்படி கிறிஸ்தவர்களை அழைத்து நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும் என்று நான் கட்டாயப்படுத்தவில்லை. அது முஸ்லிம்களின் விருப்பம், அவர்கள் தங்கள் மசூதிகளில் பயான் செய்யும் போது, முக்கியமாக கிறிஸ்தவம் பற்றி பேசப்படும் பயான்களில், கிறிஸ்தவர்களை அழைப்பதற்கும், அழைக்காமல் இருப்பதற்கும் அவர்களுக்கு முழு உரிமை உள்ளது.

நாங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் தேவைக்கு ஏற்ப முஸ்லிம்களை அழைத்து பேச வைக்கிறோம். ஆனால், இது எங்களுக்கும் கட்டாயமில்லை, இதுவும் எங்கள் விருப்பம் தான். கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களை அழைக்காமல், பல இஸ்லாமிய தலைப்புக்களில், தங்கள் சபை விசுவாசிகள் மத்தியிலே, அல்லது பல சபைகள் ஒன்றாக சேர்ந்து பல கூட்டங்களை நடத்தலாம், கருத்து பரிமாற்றங்கள் செய்துக்கொள்ளலாம். கிறிஸ்தவர்கள் தனிப்பட்ட கூட்டங்களில் முஸ்லிம்களை அழைக்காமல் இருக்க நியாயமான காரணங்கள் உள்ளன. நாங்கள் நடத்தும் நிகழ்ச்சியின் நோக்கம் என்ன? தலைப்பு என்ன? யார் யாரெல்லாம் அழைக்கப்பட்டுள்ளார்கள், இன்னும்  பல காரணங்களின் அடிப்படையில் முஸ்லிம்களை நம் எல்லா நிகழ்ச்சிகளிலும் அழைப்பதில்லை. இது நியாயம் கூட.

Source: http://www.str.org/blog/must-muslim-also-present-when-christian-teaches-islam

Author:  Alan Shlemon - A speaker for Stand to Reason

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

2017 ஈஸ்டர் சிறப்புக் கட்டுரை - அஹ்மத் நபியின் பிரவேசமும் அல்லாஹ்வின் ஆள்மாற்றமும்

[புனித வெள்ளிக்கு அடுத்த நாள் ஒரு முஸ்லிமிடமிருந்து உமருக்கு ஒரு போன் வந்தது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவரை தனிமையில் சந்தித்தால், அவருக்கு ஒரு முக்கியமான இரகசியத்தைச் சொல்வதாக கூறினார். உமர் அதிர்ந்துப் போனான். உமருக்கு போன் செய்தவர் யார்? சொல்லப்போகும் இரகசியம் என்ன? அந்த போன் ஏன் புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிக்கைக்கு இடைப்பட்ட காலத்தில் வரவேண்டும்? அவரை தனிமையில் சந்திக்க உமர் சென்றானா இல்லையா? போன்ற கேள்விகளுக்கான பதிலை அறிய மேற்கொண்டு படிக்கவும்]

உமர்: ஹலோ! யார் பேசுறது?

முஸ்லிம்: ஹலோ, பேசுவது உமரா?

உமர்:  ஆமாம், உமர் தான் பேசுகிறேன உங்களுக்கு என்னவேண்டும்?

முஸ்லிம்: என் பெயர் அஹ்மத் நபி, உங்களிடம் தனியாக பேசவேண்டும்.

உமர்:  அஹ்மத் நபியா? இப்படி யாரும் எனக்கு நண்பர்கள் இல்லையே!

முஸ்லிம்: இது தான் முதல் முறை உங்களிடம் நான் பேசுவது.

உமர்:  சரி, என்னிடம் நீங்கள் ஏன் பேசவேண்டும்? எதைப் பற்றி பேசவேண்டும்.

அஹ்மத் நபி: இது இரகசியம், இதனை போனில் பேசமுடியாது.

உமர்: உங்க பேர் என்ன சொன்னீங்க? "அஹமத் நபியா"? நபி என்று யாராவது முஸ்லிம்களில் பெயரை வைத்துக்கொள்வார்களா?

அஹ்மத் நபி: நபி என்பது பெயரல்ல!  அஹ்மத் என்பது தான் என் ‍பெயர். நபி என்பது எனக்கு அல்லாஹ் கொடுத்திருக்கின்ற பட்டம், அதாவது நான் அல்லாஹ்வின் நபியாக வந்துள்ளேன், இறைத்தூதராக வந்துள்ளேன்.

உமர் மனதுக்குள்ளே "வசமாக ஒரு பைத்தியத்திடம் மாட்டிக்கொண்டேன் போல இருக்கே! இயேசுவே, இது என்ன சோதனை" என்று சொல்லிக்கொண்டான்.

உமர்:  ஹலோ சார், நீங்க என்ன சொல்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. நீங்க அல்லாஹ்வின் நபியா? அதுவும் இந்த‌ 21ம் நூற்றாண்டிலா? குழப்பமாக இருக்கிறது.

அஹ்மத் நபி:  போனில் இவைகளை விவரிக்கமுடியாது. நாளை நாம் பேசலாம். நான் சொல்லும் இடத்திற்கு வாங்களேன்.

உமர்:  அய்யா அஹ்மத் அவர்களே, நான் தனியாக முஸ்லிம்கள் அழைத்தால் வருவதில்லை!

அஹ்மத் நபி:  நீங்கள் பயப்படத்தேவையில்லை, நான் அல்லாஹ்வின் இறைத்தூதர், என்னை நீங்கள் நம்பலாம். கடந்த மாதம் நடந்த கொயம்பத்தூர் கொலைப்பற்றி கேள்விப்பட்டுத் தானே, தனியாக வரமாட்டேன் என்றுச் சொல்கிறீர்கள்

உமர்:  எனக்கு அல்லாஹ்வின் இறைத்தூதர் என்றாலோ, அல்லது அவரை பின்பற்றுபவர்கள் என்றாலோ கொஞ்சம் முன்னெச்சரிக்கை அதிகம். எனவே, நீங்கள் சொன்ன இடத்திற்கு வேண்டாம், மெரினா பீச்சுக்கு வருகிறேன், அங்கு பேசலாமா?

அஹ்மத் நபி: என்னை ஒரு முறை நீங்கள் சந்தித்துவிட்டால், அதன் பிறகு நீங்கள் பயப்படவேண்டிய அவசியம் இருக்காது.

உமர்:  பயப்படுவதற்கு நான் இருக்கமாட்டேன் என்று மறைமுகமாகச் சொல்கிறீர்களா? மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் மெரினா பீச் உங்களுக்கு ஓகே என்றால் எனக்கு ஓகே.

அஹ்மத் நபி:  ம்ம்... சரி நாம் மெரினா பீச்சில் சாயங்காலம் 4 மணிக்கு நாளைக்கு சந்திப்போம்.
[தேதி: 16 ஏப்ரில் 2017, மாலை 4 மணிக்கு உமரும் அஹ்மத் என்பவரும் மெரினா பீச்சில் சந்திக்கிறார்கள்.]

அஹ்மத் நபி:  ஹலோ உமர், எப்படி கரெக்டா என்னை கண்டுபிடிச்சுட்டீங்க?

உமர்:   முகத்தை பார்த்தாலே தெரிகிறதே! நெத்தியிலே வடு  கருப்பு, முகத்திலே கள்ளச்சிரிப்பு, கைப்பிடி அளவு தாடி. இவைகள் போதாதா ஒரு முஸ்லிமை அடையாளம் காண்பதற்கு

அஹ்மத் நபி:  சரி விளையாட்டு பேச்சுக்கள் போதும், சீரியஸாக ஒரு விஷயம் சொல்லனும்.

உமர்:  சொல்லுங்க, அஹ்மத்.

அஹ்மத் நபி:  அஹ்மத் நபி என்றுச் சொல்லுங்க, எதற்கு நபியை 'கட்' செய்துட்டீங்க.

உமர்: உங்கள் முஹம்மதுவை குறிப்பிடும் போது கூட 'நபி' என்று நான் சொல்வதில்லை. 'முஹம்மது நபி' என்று உச்சரித்தால், அவரை நான் நபி என்று ஏற்றுக்கொள்வதாக ஆகிவிடும். அது சரி, அஹமத் என்பது முஹம்மதுவிற்கு இருக்கும் இன்னொரு பெயர் இல்லையா? அதே பெயரை ஏன் நீங்கள் வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்?

அஹ்மத் நபி:  நான் என்ன செய்யமுடியும், என் பெற்றோர்கள் வைத்த பெயர்.

உமர்:  சரி போகட்டும், சீக்கிரமாகச் சொல்லுங்க, நான் வீட்டிற்கு போகவேண்டும், இன்று ஈஸ்டர் பண்டிகை.

அஹ்மத் நபி:  நான் சொல்வதை கவனமாக கேளுங்க, குறுக்கே பேசவேண்டாம். எங்கள் இறைத்தூதர் முஹம்மதுவை அல்லாஹ் எப்படி நபியாக தெரிந்தெடுத்தானோ, அதே போல என்னையும் தெரிந்தெடுத்தான். எனக்கும் ஒரு வேதத்தை கொடுப்பதாகச் சொல்லியுள்ளான். முஹம்மதுவையும், முந்தைய நபிகளையும்  நம்பியதுபோல முஸ்லிம்கள் என்னையும் நபியாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.

உமர்:  இன்னிக்கு ஏப்ரில் ஃபஸ்ட் கூட இல்லையே, இப்படி ஒரு பச்சைப் பொய் சொல்ல எப்படி தைரியம் வந்தது உங்களுக்கு?

அஹ்மத் நபி:  நான் சொல்வதை நம்புங்க, நான் உண்மையைச் சொல்கிறேன்.

உமர்:  உங்கள் மார்க்கத்தை நான் பூர்த்தி செய்துவிட்டேன் என்று குர்‍ஆன் சொல்கிறதே (குர்‍ஆன் 5:3) அதற்கு உங்கள் பதில் என்ன?

5:3.  . . . இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என்அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்)தேர்ந்தெடுத்துள்ளேன்; . . ..

அஹ்மத் நபி:  அது மதினாவில் இறக்கப்பட்ட வசனம், அது உண்மையில்லை.

உமர்: எனக்கு சிரிப்பு தான் வருகிறது. உங்களை நபியாக காட்டுவதற்கு இந்த‌ குர்‍ஆன் வசனத்தை புறக்கணிக்கிறீர்களா? இது தவறு இல்லையா?

அஹ்மத் நபி:  இந்த ஒரு குர்‍ஆன் வசனத்தை அல்ல, மதினாவில் இறக்கப்பட்ட அனைத்து வசனங்களும் அல்லாஹ் இறக்கிய வசனங்கள் அல்ல. மக்காவில் இறக்கப்பட்ட அத்தியாயங்கள் மற்றும் வசனங்கள் தான் உண்மையான குர்‍ஆன்.

உமர்:  வாய்க்கு வந்தபடி ஏதேதோ பேசுகிறீர்கள். மதினா அத்தியாயங்கள் அனைத்தும் குர்-ஆன் இல்லை என்பதற்கு என்ன ஆதாரம் வைத்துள்ளீர்கள்?

அஹ்மத் நபி:  நான் சொல்வதை கவனமாக கேளுங்கள். மக்காவிலிருந்து ஹிஜ்ரா செய்த போது இறைத்தூதர் முஹம்மது அவர்களும், அபூ பக்கர் அவர்களும் ஒரு குகையில் ஒளிந்துக்கொண்டு இருந்தார்கள்.

உமர்:  இது தான் எனக்கும் தெரியுமே! முஹம்மதுவை தேடி வந்தவர்கள் அந்த குகையில் நுழையவில்லை, காரணம் அந்த குகையின் நுழைவாயில் ஒரு சிலந்தி வலை பின்னியிருந்தது, இதனை கண்டு அவர்கள் உள்ளே நுழயவில்லை. இது தானே அந்த கதை.

அஹ்மத் நபி: இங்கு தான் ஒரு தவறு நடந்துள்ளது. ஒரு குழு உள்ளே நுழையாமல் சென்றுவிட்டது, ஆனால், அதன் பிறகு ஒரு குறைஷி மட்டும் உள்ளே சென்றான். அவன் முஹம்மதுவையும் அபூ பக்கரையும் கண்டு சண்டை போட்டான், இந்த சண்டையில் அபூ பக்கர் மயக்கமடைந்துவிட்டார். அதன் பிறகு அவர் முஹம்மதுவை மேற்கொண்டு விட்டான், அவன் அவரை கொலை செய்வதற்கு முன்பு, அல்லாஹ் முஹம்மதுவை தன்னளவில் எடுத்துக்கொண்டான். அங்கு வந்த அந்த குறைஷியின் முகத்தை இறைத்தூதர் முஹம்மதுவின் முகத்தைப்போல அல்லாஹ் மாற்றிவிட்டான், உடைகளையும் அப்படியே மாற்றிவிட்டான். முஹம்மது மாயமாக மறைந்துவிட்டதை கண்ட அந்த குறைஷி திடுக்கிட்டு, ஒன்றுமே புரியாமல்  அங்கேயே உட்கார்ந்துக்கொண்டு இருந்தான். அபூ பக்கர் மயக்கம் தெளிந்து எழுந்த பிறகு, தன் பக்கத்தில் முஹம்மதுவாக மாறிய குறைஷி உட்கார்ந்து இருப்பதைப் பார்த்தார். அந்த குறைஷி நபர் எங்கே என்று கேட்டார். தன் முகம் முஹம்மதுவைப்போல மாறிவிட்டதை அறிந்துக்கொண்ட அந்த குறைஷி, 'அல்லாஹ் அவனை மாயமாக்கி எடுத்துக்கொண்டான், நம்மை காப்பாற்றிவிட்டான்' என்றுச் சொன்னான். அன்றிலிருந்து தன்னை முஹம்மது என்று சொல்லிக்கொண்டு அவன் மதினாவில் இறைத்தூதரின் இடத்தில் வாழ்ந்தான். அவன் இஸ்லாமை கெடுத்துவிட்டான்.

உமர்:  கதை ரொம்பவும் நன்றாக இருக்கிறது, படம் எடுத்தால் நன்றாக ஓடும். 

அஹ்மத் நபி:  நான் சொல்வதை நம்பு உமர். இது தான் நடந்தது, அதன் பிறகு முஹம்மதுவாக மாறிய அந்த குறைஷியும், அபூ பக்கரும் மதினாவிற்குச் சென்றார்கள். இதன் பிறகு என்ன நடந்தது என்று நம் அனைவருக்கும் தெரியும் அல்லவா!

உமர்:  ஒரு பேச்சுக்காக நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொண்டாலும், லாஜிக் இடிக்கிறதே! பல கேள்விகள் எனக்கு எழுகின்றன.

அஹ்மத் நபி:  உங்கள் கேள்விகள் என்ன?

உமர்:  என்ன தான் ஒரு குறைஷியின் முகத்தை அல்லாஹ் மாற்றினாலும், அவன் குணம் மாறுமா? இதனை மதினாவில் முஸ்லிம்கள், இதர தோழர்கள் கண்டுபிடித்து இருந்திருப்பார்கள் அல்லவா?

அஹ்மத் நபி:  சரியான கேள்வி தான். உமர் கூர்ந்து கவனியுங்கள். மக்காவில் முஹம்மதுவின் வாழ்க்கை ஒரு அமைதியான ஒன்றாக இருந்தது, குர்-ஆன் வசனங்களும் அமைதியை விரும்பும் வசனங்களாகவும், ஜிஹாத் பற்றி பேசாத வசனங்களாகவும் இருந்தன. சகிப்புத்தன்மையை ஊட்டக்கூடிய ஒரு மார்க்கமாக இருந்தது, இது சரி தானே!

உமர்:  ஆமாம், அது உண்மை தான். 

அஹ்மத் நபி:  ஆனால், மதினாவிற்கு வந்த பிறகு குர்-ஆனின் பாணி மாறிவிட்டது, ஜிஹாத் பற்றி அதிகமான வசனங்கள் இறங்கின, பல வழிப்பறிகள், போர்கள் சண்டைகள் என்று ஒரு அராஜக மார்க்கமாக மதினாவின் குர்-ஆன் வசனங்கள் காட்டுவதை பார்க்கமுடியும்.

உமர்:  ம்ம்ம்… நீங்கள் சொல்வதில் உண்மை உள்ளது, எனக்கு புரியுது. 

அஹ்மத் நபி:   இது மட்டுமல்ல, அந்த குறைஷி பல திருமணங்கள் செய்துக்கொண்டு, போட்ட ஆட்டம் இருக்கிறதே, அடேங்கப்பா! அதைச் சொல்லவே முடியாது.

உமர்:  அப்படியானால், மதினாவில் வாழ்ந்தவர் முஹம்மது அல்ல, மதினாவில் வசனங்களை இறக்கியது அல்லாஹ் அல்ல என்று சொல்ல வருகிறீர்கள்.

அஹ்மத் நபி:  கரெக்ட். மக்காவின் இறைத்தூதரும், மதினாவின் இறைத்தூதரும் நேர் எதிர் துருவங்கள் ஆவார்கள். மக்காவின் குர்-ஆனும், மதினாவின் குர்-ஆனும் முரண்பட்டவைகளாகும். அந்த முகம் மாற்றப்பட்ட குறைஷி இறைத்தூதரின் பெயரில் மதினாவில் செய்த காரியங்கள் கண்டிக்கத்தக்கவைகள் ஆகும்.

உமர்:  எனக்கு இன்னும் லாஜிக் இடிக்கிறது. முஹம்மது வந்துச் சென்றுவிட்டு, 14 நூற்றாண்டுகள் ஆகிவிட்டது, இத்தனை ஆண்டுகள் ஏன் அல்லாஹ் சும்மா இருந்துவிட்டான்? ஹிஜ்ராவின் போது நடைப்பெற்ற அந்த ஆள்மாறாட்டத்தை அபூ பக்கர், உமர், உஸ்மான் மற்றும் அலி போன்றவர்களுக்கு எடுத்துச் சொல்லி, இந்த குழப்பத்தை நீக்கியிருந்திருக்கலாம் அல்லவா? ஏன், இந்த நீண்ட மௌனம்.

அஹ்மத் நபி: நீங்கள் கேட்ட கேள்வியில் நியாயம் இருக்கிறது. ஆனால், இது முதல் முறை நடந்த நிகழ்ச்சி அல்ல, இதே போல நிகழ்ச்சி ஏற்கனவே நடந்துள்ளது. 

உமர்:  அது எப்போது?

அஹ்மத் நபி:  இன்னுமா உங்களுக்கு புரியவில்லை. நன்றாக சிந்தித்துப் பாருங்கள், நீங்களும் பல முறை இது பற்றி எழுதியுள்ளீர்கள். இயேசுவை சிலுவையில் அறைய கொண்டுச் செல்வதற்கு முன்பும், அல்லாஹ் இப்படியே தன் நபியை அதாவது இயேசுவை மாயமாக எடுத்துக்கொண்டான். இதனை யாரும் அறியாத வண்ணம் இன்னொருவருக்கு இயேசுவின் முகத்தை கொடுத்துவிட்டான். இதனை குர்-ஆன் 4:157ல் காணலாம். 

4:157. இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.

உமர்:  ஓ… இப்போது தான் எனக்கு புரிகிறது. அல்லாஹ் முதல் நூற்றாண்டில் ஒரு ஆள்மாறாட்டம் செய்தார், அதனை ஏழாம் நூற்றாண்டில் முஹம்மதுவிற்கு வெளிப்படுத்தினார். அதே போல, முஹம்மதுவை தன் அளவில் எடுத்துக்கொண்டு, அந்த உண்மையை இந்த 21ம் நூற்றாண்டில் உங்களுக்கு வெளிப்படுத்தினார். 

அஹ்மத் நபி: இப்போது தான் நீங்கள் சரியாக புரிந்துக் கொண்டுள்ளீர்கள்.

உமர்:  இன்னொரு கேள்வி. ஞானமுள்ள இறைவன் செய்த தவறினால், இன்று உலகம் படும் அல்லல்களை பார்த்தீரா? இஸ்லாமின் பெயரில் நடக்கும் தீவிரவாத செயல்களை பார்த்தீரா? ஆள்மாறாட்டம் செய்த அல்லாஹ் ஏன் மௌனமாக இத்தனை ஆண்டுகள் இருந்துவிட்டான்? ஏன் முஹம்மதுவின் தோழர்களிடம் உண்மையைச் சொல்லாமல் ஏமாற்றினார்? ஒரு மிகப்பெரிய தவறை அல்லாஹ் செய்துள்ளான். பல ஆண்டுகளாக மக்கள் வழிதவறி செல்வதற்கு அல்லாஹ் தான் காரணம். இதற்கு உங்கள் பதில் என்ன?

அஹ்மத் நபி:  இயேசுவை அல்லாஹ் எடுத்துக்கொண்டு, 600 ஆண்டுகள் மௌனமாக இருக்கவில்லையா? இயேசுவை தன்னளவில் எடுத்துக்கொண்ட விஷயத்தை இயேசுவின் சீடர்களுக்கும் சொல்லாமல், அவரது தாயாருக்கும் சொல்லாமல், கடைசியாக இறைத்தூதர் முஹம்மதுவிற்கு வஹி மூலமாக அறிவிக்கவில்லையா? அது போல தான் இதுவும். 1400 ஆண்டுகள் அமைதியாக இருந்த அல்லாஹ், இப்போது எனக்கு வஹி மூலமாக அறிவித்துள்ளார். இயேசுவின் விஷயத்தில் 600 ஆண்டுகள் அமைதி காத்தான் அல்லாஹ், முஹம்மது நபி விஷயத்தில் 1400 ஆண்டுகள் அமைதி காத்தான், அல்லாஹ் நோஸ் த பெஸ்ட். 

உமர்: பதில் சொல்லமுடியவில்லையென்றால் 'அல்லாஹ் நோஸ் த பெஸ்ட்' என்று மட்டும் சரியாக சொல்லத் தெரிந்துக் கொள்ளுங்கள். 

அஹ்மத் நபி:  நான் சொல்வதை சொல்லிவிட்டேன், அல்லாஹ் என்னை நபியாக தெரிந்தெடுத்தான், நான் அல்லாஹ்வின் அடிமை. அவன் எனக்கு வேதத்தை கொடுத்துள்ளான். முந்தைய வேதங்களில் உள்ள பிழைகளை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்ட மக்கா குர்-ஆன் எப்படி வந்ததோ, அதே போல, எனக்கு அவன் கொடுக்கும் வஹியின் மூலம் நம்மிடம் உள்ள குர்-ஆனில் இருக்கும், பிழைகளை உலகிற்கு வெளிப்படுத்தப் போகிறான்.

உமர்:  அல்லாஹ் அனுப்பின ஒரு நபியினாலேயே உலகம் ரொம்ப கஷ்டத்தில் இருக்கிறது, இந்த இலட்சனத்தில் இன்னொரு 'அல்லாஹ்வின் நபியா?' உலகத்தில் கொஞ்சமாவது அமைதி இருக்கட்டுமய்யா? கொஞ்சம் தயை செய்யுங்க, தாங்காது உலகம் தாங்காது.

அஹ்மத் நபி:  என் வார்த்தைகளை கேட்டு நடந்துக்கொண்டவர்கள் நேர் வழியில் செல்வார்கள். அல்லாஹ் சொல்வதைக் கேளுங்கள். 

உமர்:  இதெல்லாம் இருக்கட்டும், என்னிடம் ஏன் இதையெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். முஸ்லிம்களிடம் சொல்லவேண்டியது தானே!

அஹ்மத் நபி: இந்த விவரங்களை நான் ஏற்கனவே, சில முஸ்லிம்களிடம் சொல்லிவிட்டேன், ஆனால் அவர்கள் நம்பவில்லை.

உமர்:  என்னது, ஏற்கனவே முஸ்லிம்களிடம் சொல்லியாகிவிட்டதா? நீங்கள் அல்லாஹ்வின் நபியென்று சொல்லிட்டீங்களா? அடக்கடவுளே, இதை ஏன் என்னிடம் ஏற்கனவே சொல்லவே இல்லை. அவ்வளவு தான் நீங்க குளோஸ். அய்யய்யோ… உங்களோடு இவ்வளவு நேரம் பேசிக்கொண்டு இருந்ததே மிகப்பெரிய தவறு. நான் இப்போதே ஓடறேன்… ஆளவிடப்பா….

[உமர் இப்படி சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, "டப்" என்ற ஒரு சத்தம்.  ஒரு தோட்டா.. அஹ்மத் நபியின் நேற்றியில் சிகப்பு பொட்டு வைத்துவிட்டது. உமர் இதைப் பார்த்து ஓடுகின்றான்… அவனை நோக்கியும் துப்பாக்கிச் சூடு தொடங்கியது… ஓடுகின்றான்.. ஓடுகின்றான்… உமரின் முதுகில் ஒரு தோட்டா பதிந்துவிட்டது… இயேசுவே என்றுச் சொல்லி கத்திக்கொண்டு உமர்… தன் படுக்கையிலிருந்து கீழே விழுந்துவிட்டான்… அவன் பயந்தவிட்டிருந்தான்]

உமரின் மனைவி: என்ன ஆச்சுங்க? ஏன் கத்துனீங்க? 
என்ன சத்தம் இங்கு? என்று கேட்டவாறு உமரின் தந்தை பக்கத்து அறையிலிருந்து வந்துவிட்டார். 

உமருக்கு முகமெல்லாம் வேர்த்து கொட்டிவிட்டது. எழுந்து உட்கார்ந்து, தண்ணீர் குடித்துவிட்டு சுதாரித்துக்கொண்டான் உமர்.

உமர்: அப்பா ஒரு கெட்ட கனவு கண்டேன். என்னை தீவிரவாதிகள் முதுகில் சுட்டுவிட்டார்கள், அதனால் அதிர்ந்துப்போய் எழுந்துவிட்டேன்.

உமரின் மனைவி: இதுக்கு தான் சொல்றது, எப்போ பார்த்தாலும், சிரியாவில் என்ன ஆச்சு, எந்த நாட்டில் யார் பாம் போட்டான், போன்ற செய்திகளை மட்டுமே பார்த்துவிட்டு தூங்கினால், கனவில் தீவிரவாதி வரமல், இயேசுவா வருவார். 

உமரின் அப்பா: டேய், இனிமேல் அப்படிப்பட்ட செய்திகளை பார்ப்பதை விட்டுவிட்டு ஜெபம் செய்துவிட்டு, அமைதியாக தூங்கு. நான் போறேன்.

இரண்டு கழுத வயசு ஆகிறது, இப்பவும் கெட்ட கனவு வந்து பயமுறுத்துது என்றுச் சொல்றான் இவன் என்று முனுமுனுத்துக்கொண்டு அப்பா வெளியே சென்றுவிட்டார்.

சரி, நீயும் தூங்கு என்று மனைவியிடம் சொல்லி, துப்பட்டியை போர்த்திக்கொண்டு தூங்க ஆரம்பித்தான் உமர். 

உமரின் மனைவி 'அந்த அஹ்மத் நபி' என்ன ஆனார் என்று திரும்பி பார்த்தீங்களா? அனாதையாக அவரை விட்டுவிட்டு ஓடிப்போவது என்ன நியாயம் என்று கேள்வி கேட்டாள். உமர் அதிர்ந்துப்போனான், என் கனவில் வந்த நபரின் பெயரும், நிகழ்ச்சியும் இவளுக்கு எப்படி தெரிந்தது?. . .

உனக்கு எப்படி இது தெரியும்? என்று கேட்டான் உமர். நிம்மதியாக படுங்க, காலையில் சொல்றேன் என்றுச் சொல்லி அவளும் படுத்துவிட்டாள்…

மேலதிக விவரங்களுக்கு படிக்கவும்: