ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

பீஜேவும் இஸ்லாமின் விஞ்ஞானமும்: ஸ்பூன் பயன்படுத்தி சாப்பிடுவது அநாகரிகம், விரலை சூப்புவது நாகரிகம்

முன்னுரை:

பீஜே அவர்களுக்கு, முஹம்மது சொன்ன பெரும்பான்மையான விஷயங்களில் விஞ்ஞானம் புலப்படும். ஆனால், 20ம்/21ம் நூற்றாண்டில் தம் வார்த்தைகளுக்கு இப்படியெல்லாம் முஸ்லிம்கள் விஞ்ஞான விளக்கமளிப்பார்கள் என்று அன்று முஹம்மதுவிற்கே தெரிந்திருக்காது. 

இதை படிக்கும் வாசகரிடம் ஒரு சுவையான  கேள்வியை கேட்கவேண்டும்: "நீங்கள் சாப்பிட்ட பிறகு உங்கள் விரல்களை சூப்புவீர்களா?"  "இல்லை" என்பது உங்கள் பதிலானால், இன்றுலிருந்து விரல்களை சூப்பும் நாகரிகமான! பழக்கத்தை கடைபிடிக்க தொடங்குங்கள், உங்களுக்கு ஜீரணம் நன்றாக நடக்கும்.

ஒரு  முஸ்லிம் பீஜே அவர்களிடம் "சாப்பிட்ட பின் விரலைச் சூப்ப வேண்டுமா" என்ற கேள்வியை கேட்டார். அதற்கு பீஜே அவர்கள் "ஒரு வார்த்தையில், ஆமாம் என்று பதில் அளித்துவிட்டு அதற்கு ஆதாரமாக ஹதீஸ்களை காட்டிவிட்டு சென்று இருந்திருக்கலாம். ஆனால், பீஜே அவர்கள் கீழ்கண்டபடி பதில் அளித்துள்ளார்.

1) சாப்பிட்டு முடித்து விரல்களை சூப்புவது நபிவழியாகும்.

2) உண்பதற்கு கரண்டியைப் பயன்படுத்துவது அநாகரிகத்தால் உருவாக்கப்பட்ட வழக்கம்.

3) விரல்களைப் பயன்படுத்தி சாப்பிடுவதும் விரல்களைச் சூப்புவதும் தான் சிறந்த நாகரிகம்.

4) மேலை நாட்டவர்கள் தினமும் குளிக்கமாட்டார்கள், மலம் கழித்தால் கழுவமாட்டார்கள், பேப்பரால் மட்டுமே துடைப்பார்கள். விரல்களால் சாப்பிட்டால், தண்ணீர் செலவாகும் என்று கரண்டியை பயன்படுத்துகிறார்கள்.

5) சாப்பிட்ட பிறகு விரல்களை சூப்புவதில் விஞ்ஞான நன்மை உள்ளது, உணவு  சீக்கிரமாக ஜீரணம் ஆகும்,  இதனை சோதித்துப் பார்க்கவேண்டுமென்றால், சமையல் அறைக்குச் சென்று குழம்பில் விரலை விட்டுப்பாருங்கள்.

6) இந்த நாகரிகமான விரல் சூப்பும் பழக்கத்தை யாருக்காகவும் முஸ்லிம்கள் விட்டுவிடக்கூடாது.

பீஜே அவர்கள் கொடுத்த பதிலை சிறிது ஆய்வு செய்துப் பார்ப்போம்.

1) முஸ்லிம்கள் சாப்பிட்ட பிறகு விரல்களை சூப்பினால், உனக்கென்ன பிரச்சனை?

இது சூப்பரான கேள்வி தான். முஸ்லிம்கள் சாப்பிட்ட பிறகு விரல்களை சூப்பினால் உனக்கென்ன பிரச்சனை? அல்லது பீஜே அவர்கள் முஸ்லிம்களுக்கு விரல்களை சூப்புங்கள் என்று அறிவுரை கூறினால் உனக்கென்ன பிரச்சனை? என்று என்னிடம் நீங்கள் கேட்கலாம்.  இது நியாயமான கேள்விகள் தான். ஆனால்,  பீஜே அவர்கள் கொடுத்த பதிலில் விஞ்ஞான பிழை இருப்பதினாலும், மேலும், மக்களை நாகரீகமான பழக்கங்களிலிருந்து, ஆரோக்கியமற்ற பழக்கங்களுக்கு நேராக நடத்துகின்ற அறிவுரை இருப்பதினாலும், அவரது பதிலை சிறிது அலசவேண்டும். 

இக்கட்டுரையை  படிப்பவராகிய நீங்கள் முஸ்லிமாக இருந்தால், முழுவதுமாக படித்துப்பார்த்து அதன்  பின்பு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். ஒருவர் மற்றவருக்கு தீய அறிவுரைகள் கொடுப்பதை  நீங்கள் பார்த்தால் என்ன செய்வீர்கள்?

2) பீஜே அவர்கள் கொடுத்த பதில்

கீழ்கண்ட பதிலை பீஜே அவர்கள் தம்முடைய தளத்தில் பதித்துள்ளார்கள், இதனை ஒரு முறை படித்துவிடுங்கள்.

சாப்பிட்ட பின் விரலைச் சூப்ப வேண்டுமா

அப்துல் ரஹ்மான்

சாப்பிட்டு முடித்து விரல்களை சூப்புவது நபிவழியாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் உணவு உண்டால், அவர் தம் விரல்களை உறிஞ்சிக்கொள்ளட்டும். அவற்றில் எதில் பரக்கத் உள்ளது என்பதை அவர் அறியமாட்டார். மேலும் "உங்களில் ஒருவர் உணவு உண்டால் (இறுதியில்) உணவுத் தட்டை வழித்து உண்ணட்டும்'' என்றும், உங்களின் "எந்த உணவில் பரகத் உள்ளது' அல்லது "(உங்களின் எந்த உணவில்) உங்களுக்கு பரக்கத் வழங்கப்படும்' (என்பதை அவர் அறியமாட்டார்)''

அறிவிப்பவா் : அபூஹுரைரா (ரலி) 

நூல் : முஸ்லிம் 4140

பரக்கத் என்றால் நம் புலனுக்குத் தெரியாத மறைமுக அருள் என்று பொருள்.

விரலைச் சூப்புவது இன்று அநாகரிகமாக பார்க்கப்படுகிறது. மேலைநாட்டவர்கள் சாப்பிடுவதற்கு கரண்டியைப் பயன்படுத்தி வருவதால் ஈர்க்கப்பட்டவர்கள் இதை அநாகரிகம் என்று சித்தரித்து விட்டனர்.

உண்பதற்கு கரண்டியைப் பயன்படுத்துவது மேலை நாட்டவரின் அநாகரிகத்தால் உருவாக்கப்பட்ட வழக்கமாகும்.

மேலை நாட்டவர்கள் நம்மைப் போல் தினமும் குளிக்க மாட்டார்கள். மலம் கழித்தால்கூட துடைத்து விட்டு போவார்களே தவிர கழுவ மாட்டார்கள். தண்ணீர் என்றால் அவர்களுக்கு அவ்வளவு அலர்ஜி. விரல்களால் சாப்பிட்டால் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டிய நிலை வரும் என்பதால் அவர்கள் கரண்டியால் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.ஆனால் விரல்களைப் பயன்படுத்தி சாப்பிடுவதும் விரல்களைச் சூப்புவதும் தான் சிறந்த நாகரிகமாகும்

பொதுவாக ஈரமான பொருளில் அல்லது திரவத்தில் விரல்கள் படும்போது விரல்களில் இருந்து ஒரு திரவம் சுரக்கும். அந்தத் திரவம் எளிதில் அப்பொருளை ஜீரணமாக்கிவிடும் என்பதால் விரல்களைக் சூப்புவது தான் சரியான உண்ணும் முறையாகும்.

இதை அறிந்து கொள்ள பெரிய ஆராய்ச்சியாளர்களிடம் நாம் கேட்கத் தேவையில்லை. நாமே பரிசோதனை செய்து அறிந்து கொள்ளலாம்.

ஒரு குழம்பைத் தயாரித்துக் கொள்ளுங்கள். 

அதை இரண்டு பாத்திரங்களில் ஊற்றுங்கள். 

ஒரு பாத்திரத்தில் ஏதாவது ஒரு கரண்டியைப் போடுங்கள்

இன்னொரு பாத்திரத்தில் உள்ள குழம்பில் சிறிது நேரம் விரலை வைத்து விட்டு எடுத்து விடுங்கள்.

விரலை விட்ட குழம்பு சில மணி நேரங்களில் நொதித்துப் போய் இருப்பதையும் கரண்டியைப் போட்ட குழம்பு நொதிக்காமல் இருப்பதையும் நீங்கள் காணலாம்.  இதை சமையல்கட்டில் உள்ள எல்லா பெண்களும் அறிவார்கள்.

உணவு நொதித்துப் போவதுதான் ஜீரணத்தின் ஆரம்ப நிலையாகும். 

எனவே சாப்பிட்ட பின் விரலைச் சூப்புவதால் விரலில் சுரக்கும் திரவம் உணவில் கலந்து அது எளிதில் ஜீரணமாகும் நிலைக்கு மென்மைப்படுத்துகிறது. 

நாகரிகம் என்ற பெயரில் நமக்கு நன்மை தரும் இது போன்ற நல்ல பழக்கங்களை நாம் யாருக்காக்வும் விட்டு விடக் கூடாது.

3) சாப்பிட்டு முடித்து விரல்களை சூப்புவது நபிவழியாகும்

1400 ஆண்டுகளுக்கு முன்பாக அரேபியாவில் வாழ்ந்த முஹம்மது, சாப்பிட்ட பிறகு விரல்களை உறிஞ்சுங்கள், இதன் மூலமாக அல்லாஹ்விடமிருந்து மறைமுக அருள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்ற ஒரு காரணத்தையும் சொல்லிவிட்டுச் சென்றார். இதற்கான ஆதாரத்தை பீஜே குறிப்பிட்டுள்ளார் (நூல் : முஸ்லிம் 4140). 

ஒருவர் கேள்வி கேட்கும் போது,  மேற்கண்ட ஹதீஸை மேற்கோள் காட்டி பீஜே அவர்கள் பதிலை சுருக்கமாக‌ முடித்து இருந்திருக்கவேண்டும். 

"ஏதோ ஒரு மறைமுக அருள் கிடைக்கும்" என்று முஹம்மது சொல்லிவிட்டார், இதற்காக நாம் விஞ்ஞான ஆராய்ச்சியெல்லாம் செய்ய வேண்டியதில்லை, நம்பிக்கையின் பெயரில் பின்பற்றிக் கொண்டு செல்லலாம் என்று பீஜே சொல்லியிருக்க வேண்டும். இப்படி செய்வதை விட்டுவிட்டு, விஞ்ஞானத்தைத் தொட்டு, ஆரோக்கியத்தைத் தொட்டு,  எது நாகரிகம், எது அநாகரிகம் என்று தவறான விளக்கம் அளித்தபடியினால், அவரது பதிலை ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது.  

ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயம் இப்படிப்பட்டவர்களின் போதனைகளைக் கேட்டு, தங்கள் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ளும் ஆபத்து இருப்பதினால், ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட சில விவரங்களை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

இனிமேலாவது, பீஜே போன்ற முஸ்லிம் அறிஞர்கள், முஹம்மதுவின் ஒவ்வொரு போதனையிலும் விஞ்ஞானத்தை தேடமாட்டார்கள் என்று நம்புகிறேன்.  

இப்போது அவர் முன்வைத்த சில கருத்துக்களுக்கு பதில்களைக் காண்போம்.

4) விரல்களால் சாப்பிட்டால், தண்ணீர் செலவாகும் என்று கரண்டியை பயன்படுத்துகிறார்கள்

பீஜே அவர்களின் கூற்று:

//மேலை நாட்டவர்கள் தினமும் குளிக்கமாட்டார்கள், மலம் கழித்தால் கழுவமாட்டார்கள், பேப்பரால் மட்டுமே துடைப்பார்கள். விரல்களால் சாப்பிட்டால், தண்ணீர் செலவாகும் என்று கரண்டியை பயன்படுத்துகிறார்கள்.//

இது பீஜே அவர்களின் மிகவும் சீரியஸான கருத்து, ஆனால் மற்றவர்களுக்கு இவரது கருத்து வேடிக்கையாக தெரிகின்றது. முஸ்லிம்களிடம் ஒரு விசித்திர‌ குணமுள்ளது அது என்னவென்றால்,  மேலை நாட்டவர்கள் அல்லது முஸ்லிமல்லாதவர்கள், எந்த ஒரு செயலைச் செய்தாலும், அதில் ஒரு பிழையை கண்டுபிடிக்க முயற்சிப்பார்கள் என்பதாகும். மேலும் தங்கள் கருத்து விஞ்ஞானத்துக்கு எதிராக இருந்தாலும், தங்கள் கருத்து தான் விஞ்ஞானத்திற்கு ஒத்து இருக்கிறது என்று அடித்துச் சொல்வார்கள். முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் 'மற்றவர்கள் சொல்வதை ஆய்வு செய்யாமல், அவைகளை அப்படியே நம்புவதினால்", பீஜே போன்றவர்கள் சொல்லும் விஞ்ஞான கருத்துக்கள் அனைத்தும் சரியானவை என்று நம்பிவிடுகிறார்கள்.

மேலை நாட்டவர்களுக்கு நான் வக்காளத்து வாங்கவில்லை, அதே நேரத்தில் 'விரல்களால் சாப்பிடுவதை' நான் விமர்சிக்கவில்லை. நான் வீட்டில் எப்போதும் (100%) விரல்களால் தான் சாப்பிடுகிறேன், மேலும், வெளியே ஹோட்டல்களுக்குச் செல்லும் போது, சில நேரங்களில் ஸ்பூன்களை பயன்படுத்துகிறேன். எது ஆரோக்கியம்? என்று தெரிகிறதோ அதனை செய்கிறேன்.

பீஜே அவர்களின் கீழ்கண்ட வரி என்னை இந்த கட்டுரையை எழுதவைத்தது:

"தண்ணீர் என்றால் அவர்களுக்கு அவ்வளவு அலர்ஜி. விரல்களால் சாப்பிட்டால் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டிய நிலை வரும் என்பதால் அவர்கள் கரண்டியால் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர்."

தண்ணீர் செலவாகும் என்பதால் கரண்டியில் சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டார்கள் என்றுச் சொல்வது சரியான கூற்று இல்லை. பாலைவன பிரதேசங்களில் தண்ணீருக்கு பஞ்சம் இருக்கும், குளிர் பிரதேசங்களில் அல்ல. ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு தான், சாப்பிடும் போது மக்கள் ஸ்பூன்களை பயன்படுத்துகிறார்கள், மற்றும் கைகளால் சாப்பிடுவதை முடிந்த அளவிற்கு தவிர்க்கிறார்கள். இதில் மேலை நாட்டவர்கள் என்றும் இந்தியர்கள் என்றும் நாம் பிரித்துப் பார்க்கமுடியாது, அனைவரும் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு கரண்டிகளில் சாப்பிடுகிறார்கள்.

முடிந்த அளவிற்கு கைகளால் சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும், ஏன்?

1) முகம், கைகள், கால்கள் இவைகளில் அதிகமாக அசுத்தமாவது "கைகள் தான்".

2) கைகளால் அனேக பொருட்களை தொடுகிறோம்,  அனேகருடன் கை குலுக்குகிறோம், தெருக்கலில் நடக்கும் போதும் தூசு மற்றும் இதர கிருமிகள் நம் கைகளில் நம்மை அறியாமலேயே ஒட்டிக்கொள்கிறது.

3) இதுமட்டுமல்லாமல், நாம் செய்யும் வேலை நம் கைகளை அதிகமாக மாசுப்படுத்திவிடுகிறது. கூலி வேலை செய்பவர்கள், மண்ணைத் தொட்டு அதிகமாக வேலைச் செய்யும் உழவர்கள், இருசக்கர, நாற்சக்கர வண்டிகளை ரிப்பேர் செய்யும் மெக்கானிக்குகள், வியாபாரிகள் என்று எந்த ஒரு வேலையை, தொழிலை  எடுத்துக் கொண்டாலும், அதிகமாக கைகள் தான் மாசுபடுகிறன.

4) நடப்பதினால் கால்கள் மாசுபட்டாலும், கால்களின் விரல்களால் நாம் சாப்பிடுவது இல்லை, எனவே, கால்களில் படிந்த அசுத்தம் வாயிக்குள் போவதில்லை. ஆனால், கால்கள் மூலமாக கூட அசுத்தம் வீட்டிற்குள் வரும், இதற்காகத் தான் வீட்டிற்குள் வருவதற்கு முன்பு, கைகால்களை கழுவிக்கொண்டு வீட்டிற்குள் வரும் பழக்கத்தை மக்கள் பின்பற்றுகிறார்கள்.

5) சாப்பிடுவதற்கு முன்பு, நாம் கைகளை தண்ணீரால் சுத்தப்படுத்தினாலும், சில கிருமிகள் கைகளை விட்டு போகாது, எனவே கைகளை எப்போதும் சோப்பு போட்டு கழுவவேண்டும் என்று டாக்டர்கள் அறிவுரை கூறுகிறார்கள்.

இவைகளை கருத்தில் கொண்டு, ஆரோக்கியத்தை முக்கியப்படுத்துபவர்கள் கரண்டிகளால் சாப்பிடுகிறார்களே தவிர, தண்ணீர் வீணாகும் என்பதற்காக அல்ல. சாப்பிட்ட பிறகு விரல்களை சூப்பவேண்டும் என்று முஹம்மது சொல்லியுள்ளதை நியாயப்படுத்துவதற்காக, நல்ல ஆரோக்கியமான பழக்கங்களை பீஜே தவறாக விமர்சிக்கிறார். 

சாப்பிடுவதற்கு முன்பு சோப்பால் கைகளை சுத்தமாக கழுவுபவர்கள், கைகளால் சாப்பிட்டால் எந்த ஆரோக்கிய குறைவும் உண்டாகாது. ஆனால், சில நேரங்களில் கைகளை சோப்பைக் கொண்டு கழுவுவதற்கு சாத்தியமிருக்காது, அப்படிப்பட்ட இடங்களில் சுத்தமான கரண்டிகள் பயன்படுத்திக் கொண்டு சாப்பிடுவது தான் அறிவுடமையாகும். பீஜே சொல்லிவிட்டார் என்பதற்காக, கைகள் அழுக்காக இருந்தாலும் கைகளால் சாப்பிடுவது, ஆரோக்கியமற்ற கெட்ட பழக்கமாகும். கைகளால் வரும் நோய்களை தடுப்பதற்கு, கரண்டிகளை பயன்படுத்தவேண்டும்.  

மலம் கழித்து கைகளால் கழுவுவதினால் ஏற்படும் விளைவுகள்/நோய்கள்:

டாய்லட்டுக்கு சென்று வந்த பிறகு கைகளை சோப்பால் நன்றாக கழுவவேண்டும். சோப்பினால் கைகளை சுத்தமாக கழுவவில்லையென்றால், பல கோடி கிருமிகள் நம் கைகளிலேயே இருக்கும், அந்த கைகளால் தொடும் அனைத்து பொருட்களுக்கும், மனிதர்களுக்கும் அக்கிருமிகள்  பரவிவிடும், இதனால் வியாதிகள் வரும். [1] 

கைகளை சோப்பினால் கழுவுவதினால், வயிற்றுப் போக்குக்கு ஆளாபவர்களின் சதவிகிதம் 31% குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களில் 58% சதவிகிதத்தினருக்கு வயிற்றுப்போக்கு வராமல் தடுக்கப்படுகின்றது. மேலும், மூக்கடைப்பு போன்ற மூச்சு சம்மந்தப்பட்ட பலவீனங்கள் பொது மக்களுக்கு வருவதை 16-21% குறைக்கப்படுகின்றது. [2]

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும், 5 வயதுக்குட்பட்ட 18 இலட்சம் குழந்தைகள் வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியா நோய்களால் மரிக்கிறார்கள். குழந்தைகளை கொல்லும் இரண்டு நொய்களில் இவ்விரண்டும் முதலிடத்தை பிடிக்கிறது. இக்குழந்தைகளுக்கும் சோப்பினால் சுத்தமாக கைகளை கழுவுவதை கற்றுக்கொடுத்தால், மூன்றில் ஒரு குழந்தை வயிற்றுப்போக்கினால் மரிப்பதை தடுக்கமுடியும், ஐந்தில் ஒரு குழந்தை நிமோனியா போன்ற மூச்சு சம்மந்தப்பட்ட வியாதிலிருந்து தப்பித்துவிடும். [3]

Hepatitis A, Shigellosis & Giardiasis போன்ற வியாதிகள் மலம் கழுத்துவந்த பிறகு கைகளை சோப்பு போட்டு சரியாக கழுவாததினால் பெரும்பான்மையாக வருகிறது. [4]

80% தொற்று நோய்களுக்கு காரணம் மக்கள் கைகளை குலுக்கிக்கொள்வதினால் என்று ஆய்வுகள் சொல்கின்றன[5].

மலம் கழித்து கைகளால் கழுவுவதினால் மட்டுமல்ல, காகிதங்களை பயன்படுத்தினாலும் கழிவறைக்குச் சென்று வந்த பிறகு சோப்பினால் கைகளை கழுவவேண்டும் என்பதை புரிந்துக்கொள்ளவேண்டும். 

எனவே, எப்போதும் சுத்தமான ஸ்பூன்களை பயன்படுத்திச் சாப்பிடுவது ஆரோக்கியமான நல்ல பழக்கமாகும், முக்கியமாக கைகளால் கழுவும் பழக்கமுள்ள முஸ்லிம்கள் நிச்சயம் ஸ்பூன்களில் சாப்பிட்டால், பல வியாதிகளிலிருந்து தப்பிக்கலாம். பீஜே போன்றவர்கள் சொல்லும் ஆரோக்கியமற்ற அறிவுரைகளை கேட்பீர்களானால், உங்கள் குடும்பமும், பிள்ளைகளும்  வியாதிகளில் விழுவது நிச்சயம்.

இப்படிப்பட்ட வியாதிகளிலிருந்து விடுபடுவதற்காகவே மேலை நாட்டவர்கள் டாய்லெட்டுகளில் பேப்பர்களை பயன்படுத்துகிறார்கள். கைகளில் மலம் படாமல் பார்த்துக் கொள்வது, கைகளினால் வரும் நோய்கள் பாதிக்கு மேல் குறைந்துவிடும். நம் இந்தியாவிலும் பிள்ளைகளுக்கு ஹக்கீஸ் போன்ற நாப்கின்களை தாய்மார்கள் பயன்படுத்துகிறார்கள் எனவே, பிள்ளைகளின் ஆரோக்கியம் மேம்படுகிறது, மட்டுமல்ல, வீடு கூட சுத்தமாக இருப்பதற்கு இது வழி வகுக்கிறது.

இதுவரைக்கும், கைகளால் பரவும் நோய்கள் பற்றி பார்த்தோம். 

பீஜே அவர்களுக்கு சில கேள்விகள்:

1) சுத்தமான கரண்டிகளால் சாப்பிட்டால் நோய் வரும் என்று உங்களால் சொல்லமுடியுமா? கைகளால் சாப்பிடும் போது, நோய்கள் வரவாய்ப்புக்கள் அதிகம் என்பதை நம்மால் நிருபிக்கமுடியும். பல நேரங்களில் பிள்ளைகள் கைகளை கழுவாமால் சாப்பிட்டு விடுகிறார்கள். குறைந்தபட்சம், சோப்பால் கைகளை கழுவிக்கொண்டு சாப்பிடும் பழக்கம் வரும்வரை பிள்ளைகள் கரண்டிகளைக் கொண்டு சாப்பிடுவதற்கு பெற்றோர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்.

2) கரண்டிகளால் சாப்பிடுவதை தடுக்கும் உங்களைப் போன்றவர்கள், கைகளால் சாப்பிடுவதற்கு முன்பாக கைகளை சோப்பைக் கொண்டு சுத்தமாக கழுவுங்கள் என்று உங்கள் பதிலில் சொல்லியிருக்கலாம் அல்லவா?

3) சுத்தமில்லாத கைகளால் சாப்பிட்டால், நோய்கள் வரும் என்று உங்களின் அந்த பதிலில் முஸ்லிம்களுக்கு எச்சரிக்கையை  கொடுத்திருந்திருக்கலாம் அல்லவா?

4) உண்மையை பொய் என்றும், பொய்யை உண்மையென்றும் சொல்வதில் உங்களுக்கு என்ன அவ்வளவு ஆர்வம்? நீங்கள் நடுநிலையோடு பதில் சொல்பவராக இருந்தால், கரண்டிகளால் சாப்பிடுவதினால் உண்டாகும் நன்மைகளை எடுத்துக் காட்டியிருக்கலாம் அல்லவா? ஆனால், நீங்கள் செய்தது என்ன? கரண்டிகளால் சாப்பிடுவது ஒரு அநாகரிக பழக்கம் என்றுச் சொல்லியுள்ளீர்கள்.

5) முஸ்லிம்களின் ஆரோக்கியம் கெட்டால் உங்களுக்கு சந்தோஷமா? உங்கள் வரிகளை படிக்கும் முஸ்லிம்கள், கரண்டிகளால் சாப்பிடுவதை நிறுத்திக் கொண்டு, கைகளால் சாப்பிட்டு நோய்வாய் பட்டு அவதிப்பட்டால், உங்களுக்கு மகிழ்ச்சியா?

6) ஒரு ஆரோக்கியமான பழக்கத்தை அநாகரிக பழக்கம் என்றுச் சொல்லி உங்கள் சமுதாய மக்களை ஏன் கெடுக்கிறீர்கள்?

5) உலகில் அதிக ஆண்டுகள் உயிர் வாழும் ஜப்பானியர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்?

உலகில் அதிக ஆண்டுகள் உயிர் வாழும் மக்களில் ஜப்பானியர்கள் முதல் இடத்தை பிடித்துள்ளார்கள். இவர்களின் உணவு பழக்கவழக்கங்களினாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை பின்பற்றுவதினாலும் இவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் அதிக ஆண்டுகள் வாழுகிறார்கள்.

இவர்கள் குச்சிகளை பயன்படுத்தி சாப்பிடுகிறார்கள். இதுவும் ஒருவகையான கரண்டியைப் போன்று தான். கைகளால் சாப்பிடுவது மிகவும் குறைவு.

உலகில் அதிக ஆண்டுகள் வாழும் முதல் பத்து நாடுகளை இங்கு பதித்துள்ளேன். கொடுக்கப்பட்ட தொடுப்பை சொடுக்கி, கரண்டிகளால் சாப்பிடுவது அநாகரிக பழக்கம் என்றும், விரல்களை சூப்புவது தான் நாகரிகம் என்றுச் சொல்லும் முஸ்லிம் நாடுகள் எந்த இடத்தை பிடித்துள்ளன என்பதை பார்க்கவும்.

List of countries by life expectancy

 1) Japan (ஜப்பான்)

 2) Switzerland (ஸ்விட்சர்லாண்ட்)

 3) Singapore (சிங்கப்பூர்)

 4) Australia (ஆஸ்திரேலியா)

 5) Spain (ஸ்பெயின்)

 6) Iceland (ஐஸ்லாண்ட்)

 7) Italy (இத்தாலி)

 8) Israel (இஸ்ரேல்)

 9) Sweden (ஸ்வீடன்)

 10) France (பிரான்ஸ்)

இந்த நாடுகள் ஆரோக்கியத்தில் முன்னணியில் இருப்பதற்கு காரணம் கரண்டிகளால், குச்சிகளால் சாப்பிடுவது மட்டும் தான் என்று நான் சொல்லவரவில்லை. ஆரோக்கியத்துக்கு சுத்தமான கரண்டிகளால் சாப்பிடுவதும் ஒரு காரணம் என்றுச் சொல்கிறேன். இந்த பட்டியலில் 8வதாக இஸ்ரேல் இருக்கிறது என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். அல்லாஹ்வும் முஹம்மதுவும் முஸ்லிம்களும் சபிக்கும், இஸ்ரேலர்கள் ஆரோக்கியத்தில் முன்னணியில் இருப்பது, உண்மையான இறைவன் அல்லாஹ்வை பின்பற்றும் முஸ்லிம் நாடுகளுக்கு அவமானமில்லையா? கரண்டிகளால் குச்சிகளால் சாப்பிடும் நாடுகள், டாய்லட்டுகளில் பேப்பர்களை பயன்படுத்தும் நாடுகள் எப்படி ஆரோக்கியமானவைகளாக இருக்கின்றன என்பதை அறியவேண்டுமென்றால், முஸ்லிம்கள் முதலாவது பீஜே போன்ற அறிஞர்களின் அறிவுரைகளை புறக்கணிக்கவேண்டும், அதன் பிறகு மற்றவர்களிடம் உள்ள நல்லவைகளை பின்பற்ற முயலவேண்டும். எதற்கெடுத்தாலும், ஹதீஸ்களில் ஆதாரங்களை தேடிக்கொண்டு இருக்கக்கூடாது.

[உலகிலேயே முஸ்லிம்கள் தான் சிறந்தவர்கள் என்று அடம்பிடிப்பீர்களானால், மற்றவர்களிடம் இருக்கும் நல்லவைகளை பார்க்க மறுப்பீர்களானால், உலக முடிவு வரையிலும்  நீங்கள் எப்போதும் ஆரோக்கிய பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் வரமாட்டீர்கள் என்பதை மறக்கவேண்டாம்.]

இதுவரை பீஜே அவர்கள், கரண்டிகளால் சாப்பிடுபவர்கள் மீது சொன்ன குற்றச்சாட்டிற்கு பதிலைச் சொன்னேன். அடுத்ததாக, அவர் ஒரு விஞ்ஞானியைப் போல, ஒரு விஞ்ஞான ஆராய்ச்சியை நம் வீட்டு சமையல் அறையில் செய்யவேண்டும் என்றுச் சொன்ன விவரத்தை சிறிது ஆய்வு செய்வோம்.

6)  உணவு நொதித்துப் போவதுதான் ஜீரணத்தின் ஆரம்ப நிலையாகும்

பீஜே அவர்கள் "உணவு நொதித்துப் போவதுதான் ஜீரணத்தின் ஆரம்ப நிலையாகும்" என்று கூறியுள்ளார். 

அவர் எழுதிய அந்த விஞ்ஞான கண்டுபிடிப்பை இன்னொரு முறை படித்துவிடுங்களேன்:

பீஜே அவர்கள் எழுதியது:

ஒரு குழம்பைத் தயாரித்துக் கொள்ளுங்கள். 

அதை இரண்டு பாத்திரங்களில் ஊற்றுங்கள். 

ஒரு பாத்திரத்தில் ஏதாவது ஒரு கரண்டியைப் போடுங்கள்

இன்னொரு பாத்திரத்தில் உள்ள குழம்பில் சிறிது நேரம் விரலை வைத்து விட்டு எடுத்து விடுங்கள்.

விரலை விட்ட குழம்பு சில மணி நேரங்களில் நொதித்துப் போய் இருப்பதையும் கரண்டியைப் போட்ட குழம்பு நொதிக்காமல் இருப்பதையும் நீங்கள் காணலாம்.  இதை சமையல்கட்டில் உள்ள எல்லா பெண்களும் அறிவார்கள்.

உணவு நொதித்துப் போவதுதான் ஜீரணத்தின் ஆரம்ப நிலையாகும். 

எனவே சாப்பிட்ட பின் விரலைச் சூப்புவதால் விரலில் சுரக்கும் திரவம் உணவில் கலந்து அது எளிதில் ஜீரணமாகும் நிலைக்கு மென்மைப்படுத்துகிறது.

உணவு நொதித்துப் போவது என்றால் என்ன?

பீஜே அவர்கள் சொன்ன மேற்கண்ட விவரத்தை கவனித்தால், அவருக்கு 'நொதித்துப் போவது/ஜீரணமாவது' பற்றிய அடிப்படை விஞ்ஞான அறிவு சுத்தமாக  இல்லை என்பது தெரிகிறது.

உணவுப்பொருள், காய்கறிகள், பழங்கள் என்று எவைகளை எடுத்துக்கொண்டாலும், அவைகள் சில மணி நேரங்கள் அல்லது நாட்கள் கெடாமல் இருக்கும். சரியான பாதுகாப்பு முயற்சிகளை எடுக்கவில்லையென்றால், அவைகள் சீக்கிரமாக கெட்டுப்போகும்.

ஒரு பொருள் கெட்டுப்போவதற்கும், நொதித்துப் போவதற்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை பீஜே அவர்கள் புரிந்துக்கொள்ளவில்லை என்று தெரிகின்றது. 

கொதிக்கவைத்த பாலில் சிறிது தயிரை போட்டு, சில மணி நேரங்கள் வைத்தால், அந்த பால் முழுவதும் தயிராக மாறுகிறது, இது நொதித்தல் எனப்படுகின்றது. ஆனால், ஒரு குழம்பில் கையை வைத்துவிட்ட பிறகு சில மணி கழித்துப் பார்த்தால், அது கெட்டுப்போய் இருக்கும். இந்த கெட்டுப்போன உணவை சாப்பிட்டால், நன்றாக ஜீரணமாகும் என்று பீஜே சொல்லவருகிறார் என்று தெரிகிறது. 

பாக்டீரியாக்களில் நல்லவைகள் மற்றும் தீயவைகள் உள்ளன. பாலை தயிராக்குவது நல்ல பாக்டீரியாக்கள் ஆகும் (இவைகள் பற்றிய பெயர்களை, இதர விவரங்களை இங்கு சொடுக்கி படிக்கவும்). நம் வயிற்றுக்குள் உணவு ஜீரணமாவதும் நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் இதர எம்ஜைன்களால் ஆகும். 

ஒரு குழம்பில் கைகளை வைத்த பிறகு அல்லது கைகளை வைக்காமலேயே இருந்தாலும் சில மணி நேரத்துக்கு பிறகு அது புளித்துவிடும்/கெட்டுவிடும், அந்த குழம்பில் சேர்த்திருந்த இதர பொருட்களின் படி, இதர இரசாயண கிரியைகள் நடந்து, அக்குழம்பு மனிதர்களின் உடலுக்கு கேடு விளைவிக்கும் அளவிற்கு கெட்டுப்போகும். கெட்டுப்போன, பூசிப்போன குழம்புகள், உணவுப் பண்டங்கள் ஜீரணத்திற்கு உதவும் என்று பீஜே சொல்வது, அறிவுடமையாகுமா?

இதே போல, பழங்களை, காய்களை எடுத்துக்கொண்டாலும் சரி, அவைகளை மரங்களிலிருந்து பறித்த பிறகு, அவைகளுக்கு உயிரைத்தருகின்ற இடத்திலிருந்து வேறு பிரித்துவிடுவதினால், அவைகள் கெட ஆரம்பிக்கும், அதாவது அவைகளில் இராசாயண கிரியைகள் நடைப்பெற்று, கண்களுக்கு தெரியாத பாக்டீரியாக்கள் மூலமாக அவைகள் கொஞ்சம் கொஞ்சமாக அழுக ஆரம்பிக்கும். உணவு பொருட்கள் அழுக, கெட ஆரம்பிப்பதற்கு காற்று, ஈரப்பதம், வெளிச்சம்  மற்றும் தட்பவெப்ப நிலை உதவி புரிகின்றது. பாக்டீரியாக்கள் தங்களை சீக்கிரமாக பெருக்கிக்கொண்டு, பொருட்களை கெட வைப்பதற்கு இவைகள் தேவையாக இருக்கும். இந்நான்கையும் நாம் கட்டுப்படுத்தினால் பொருட்களை இன்னும் சில நாட்கள்/மணிகள் கெடாமல் பார்த்துக்கொள்ளமுடியும்.

பாலில் கொஞ்சம் தயிரைக் கலந்து பிரிட்ஜில் (குளிர் சாதனப்பெட்டியில்) வைத்துப்பாருங்கள். அந்த பால் தயிராவதற்கு நீண்ட நேரமாகும், ஏனென்றால், பாக்டீரியாக்கள் தங்களை பெருக்கிக்கொள்ள ஒரு குறிப்பிட்ட அளவிற்கு சூடு தேவைப்படுகிறது, பிரிட்ஜில் குளிர் இருப்பதினால், சீக்கிரமாக தயிர் கிடைக்காது, இதே காரணத்திற்காக பழங்கள், உணவு பொருட்களை பிரிட்ஜில் வைக்கிறோம். காற்று புகமுடியாத பெட்டிகளில் பொருட்கள் வைத்தால், அதிக நாட்கள் கெடாமல் இருக்கும். இப்படி பல உதாரணங்களைச் சொல்லிக்கொண்டு போகலாம். 

நான் இங்கு குறிப்பிட விரும்புவது இது தான், வயிறுக்குள் ஜீரணமாவதற்கு பயன்படும் சுரப்பிகள் வேறு, உணவு பொருட்கள் வெளியே இருந்தால் கெட்டுப்போவதற்கு உதவி புரியும், தீய பாக்டீரியாக்கள் வேறு. இதனை சரியாக புரிந்துக்கொள்ளாத பீஜே அவர்கள் சொன்ன, அந்த குழம்பு உதாரணம் தவறானதாகும். கெட்டுப்போன/பூசிப்போன/புளிப்பு அடைந்த குழம்பு உடல் நலத்திற்கு கேடு, ஜீரணத்திற்கு உதவாது. மேலும் விரல்களில் சுரக்கும் திரவம் என்று பீஜே குறிப்பிட்டுள்ளார். அது என்ன திரவம், அதன் பெயர் என்ன? அந்த திரவம் மற்ற நேரங்களில் சுரக்காதா? போன்ற கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவேண்டும். உணவை கைகளால் தொட்டு சாப்பிடுவதினால் வயிற்றுக்குள் ஜீரணத்திற்கு உதவும் திரவங்கள் சுரக்க ஆரம்பிக்குமே தவிர, விரல்களிலிருந்து திரவம் சுரப்பதில்லை. விரல்களிலிருந்து உப்புக்கலந்த வியர்வை சுரக்கும். இந்த வியர்வையைத் தான் பீஜே ஜீரணத்திற்கு உதவும் திரவம் என்றுச் சொல்கிறாரா?

முடிவுரை:

முதலாவதாக, கரண்டிகளால் சாப்பிடுபவர்கள் ஜீரணக்கோளாறு பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள் என்ற தோரணையில் பீஜே பதில் சொல்லியுள்ளார், இது தவறு.

இரண்டாவதாக, விரல்களால் சாப்பிட்டு, அவைகளை சூப்புவதினால் ஜீரணம் அதிகமாகும் என்பது உண்மையானாலும், ஜீரணக்கிரியையில் இதன் பங்கு சதவிகிதம் மிக மிக குறைவு தான். ஆனால் இதற்காக பீஜே அவர்கள் சொன்ன குழம்பு உதாரணம் நகைப்பிற்கு உரியது. குழம்பை கெட்டுப்போகச் செய்துவிட்டு, இந்த கிரியை ஜீரணத்திற்கு உதவும் என்றுச் சொன்னது, விஞ்ஞானத்திற்கு முரண்பட்ட கருத்தாகும். இவர் சொல்வதைப் பார்த்தால், குழம்பில் கையை வைத்துவிட்டு, அதை கெட வைத்துவிட்டு, இன்னும் பல மணி நேரம் அதனை அப்படியே வைத்துவிட்டால், அது முழுவதுமாக கெட்டு வாடை அடிக்கும், அப்போது அதனை சாப்பிட்டால், நன்றாக ஜீரணமாகும் என்றுச் சொல்வது போல உள்ளது.  இப்படி கெட்டுப்போன குழம்புகளைச் சாப்பிட்டால், அது வயிற்றுக்குள் சென்று ஃபுட் பாய்சன் ஆக மாறி, உடல் நலக்குறைவை உண்டாக்கும். விஞ்ஞானத்துக்கு எதிரான ஒன்றைச் சொல்லிவிட்டு, இது தான் 'உண்மையான விஞ்ஞானம்' என்றுச் சொல்வது முஸ்லிம்களின் வாடிக்கையாகிவிட்டது. 

மூன்றாவதாக, தண்ணீர் அலர்ஜியினால் தான் மேலை நாட்டவர்கள் கரண்டியில் சாப்பிடுகிறார்கள் என்று பீஜே சொல்வது முட்டாள்தனமானது.  அதிகமாக அசுத்தமாக வாய்ப்பு இருக்கின்ற கைகளினால் உணவு உட்கொண்டால் உடல் ஆரோக்கியத்துக்கு கேடு என்பதால் தான் கரண்டிகளை, குச்சிகளை (ஜப்பான்) பயன்படுத்துகிறார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம், நம்முடைய காதில் காலிஃபிளவர் வைக்க கங்கணம் கட்டியுள்ளார் பீஜே. 

நான்காவதாக, கைகளால் சாப்பிட்டால் தான் நமக்கு சாப்பிட்டது மாதிரி இருக்கும், இதனை மறுக்கமுடியாது, ஏனென்றால் நாம் இதற்கு சிறிய வயதிலிருந்து பழக்கப்பட்டு இருக்கிறோம். மேலும் உணவை நம் கைகளால் தொட்டு சாப்பிடுவது ஜீரணத்தை அதிகபடுத்தும். அதே நேரத்தில், கைகளை சரியாக சோப்பு போட்டு கழுவாமல் சாப்பிடுவதினால் உண்டாகும் ஆரோக்கிய குறைபாடுகள் இந்தியாவில் அதிகம் என்பதையும் நாம் மறுக்கக்கூடாது. நம்முடைய இந்திய மக்களின் அறியாமை எந்த நிலையில் இருக்கின்றதென்றால், 'கழிப்பிடங்கள் அமைத்துக்கொண்டு, அவைகளை பயன்படுத்துங்கள்' என்று அரசாங்கம் விளம்பரம் செய்யும் அளவிற்கு நம்முடைய ஆரோக்கியம் அடிபட்டு  இருக்கின்றது. மேலும், மலம் கழித்துவிட்டு  நாம் கைகளால் கழுவுவதினால், இன்னும் நம்முடைய ஆரோக்கியம் குறைகிறது. [கி.பி. 7ம் நூற்றாண்டில் முஹம்மதுவிற்கு கழிப்பிடங்கள் கிடைக்காததினால் அவர் வெட்டவெளியில் கழித்தார், இவரை அணுவணுவாக பின்பற்றும் முஸ்லிம்கள் வயல்வெளிகளில் தான் கழிப்போம் என்றுச் சொல்லி, வயல்வெளிகளை தேடிக்கொண்டு கைகளில் செம்புகளை எடுத்துக்கொண்டு ஓடுவதில்லை.]

பீஜே அவர்களிடம் ஒரு கேள்வியை கேட்கவேண்டும், மலம் கழித்துவிட்டு, அதனை இடது கையால் தொட்டு நாம் கழுவுகிறோம், அதன் பிறகு சோப்பால் கைகளை கழுவுவதில்லை. வளர்ச்சி அடைந்துக் கொண்டு இருக்கின்ற, இன்னும் வளர்ச்சி அடையாத நாடுகளில் படிப்பறிவில்லாமல் வாழும் மக்களில் இப்படிப்பட்ட பழக்கம் அதிகமாக உள்ளது. இது ஆரோக்கியமற்ற செயலாகும். இதற்கு பதிலாக, மலம் கழித்துவிட்டு, பேப்பரால் துடைத்துவிட்டுச் செல்வது சரியானதாக இருக்குமல்லவா? குறைந்தபட்சம், கைகளுக்காகவாவது மலம் ஒட்டாமல் இருக்குமே!

இஸ்லாமிய சமுதாயம் ஏன் பின் தங்கியிருக்கிறது?

ஒருவன் முன்னேறவேண்டுமென்றால், அவன் சுயமாக சிறந்ததைச் செய்யவேண்டும் அல்லது மற்றவர்களிடமிருந்து சிறந்ததைக் கற்றுக்கொள்ளவேண்டும். முஸ்லிம்கள் இவ்விரண்டையும் செய்யாமல், மற்றவர்களையும் விமர்சித்துக்கொண்டு இருப்பார்கள். இதனை முஸ்லிம்கள் அனைத்துத்துறைகளிலும் செய்வதினால், எந்த ஒரு துறையிலும் அவர்களால் சிறந்து விளங்கமுடிவதில்லை! ஒரே ஒரு துறையில் மட்டும் உலகில் முஸ்லிம்கள் சிறந்து விளங்குகிறார்கள், அது என்னவென்று வாசகர்களுக்கு புரிந்து இருக்குமென்று நினைக்கிறேன். [தெரியாதவர்கள் நாளைக்கு உலக செய்தித்தாள்களை புரட்டிப்பாருங்கள், அந்த துறையில் சிறந்து விளங்கின ஒரு முஸ்லிமின் பெயர் கண்டிப்பாக அச்சாகியிருக்கும்].

முஸ்லிம் சமுதாயத்தின் இந்த முன்னேற்றமின்மைக்கு முதல் காரணம், பீஜே போன்ற முஸ்லிம் அறிஞர்கள் தான். இப்படிப்பட்டவர்கள் தங்கள் சமுதாயத்தை பல நூறு ஆண்டுகள் பின்னோக்கி வேகமாக அழைத்துச் செல்கிறார்கள், இதனை அறிந்துக்கொள்ளக்கூடிய நிலையில் முஸ்லிம்கள் இல்லாததினால், முஸ்லிம் சமுதாயம் இதர சமுதாய மக்களைவிட பல நூறு ஆண்டுகள் பின்னோக்கி வாழ்ந்துக்கொண்டு இருக்கிறது. 

முஸ்லிமின் அடையாளம் விரலை சூப்புதவா?

குறைந்தபட்சம், இந்த விரலை சூப்பும் காரியத்தை பொதுவில் செய்யவேண்டாம், வேலை செய்யும் இடங்களில் செய்யவேண்டாம், விடுகளில் செய்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், பொதுவில் நீங்கள் விரல்களை சூப்பிக்கொண்டு இருந்தால், இந்த உலகம் உங்களை ஒரு மாதிரியாக பார்க்க ஆரம்பிக்கும், இதனால் உங்கள் முன்னேற்றம் தடைபடலாம் என்ற ஒரு அறிவுரையை பீஜே சொல்லியிருந்திருக்கலாம். இப்படி சொல்வதை விட்டுவிட்டு, 

நாகரிகம் என்ற பெயரில் நமக்கு நன்மை தரும் இது போன்ற நல்ல பழக்கங்களை நாம் யாருக்காகவும் விட்டு விடக் கூடாது"

என்றுச் சொல்கிறார் பீஜே, இப்படிப்பட்ட அறிவுரைகளைக் கேட்கும் சமுதாயம் முன்னேறுவது எப்போது?  பொதுவில் உன் முஸ்லிம் அடையாளத்தை விரலை சூப்பி உலகிற்கு எடுத்துக் காட்ட தேவையில்லை.

[இக்கட்டுரைகள் பல விவரங்களை அடிமட்ட அளவில் சென்று விவரிக்கவேண்டி இருந்தது, உதாரணத்திற்கு, கழிவறைக்குச் சென்று வந்த பிறகு கைகளை கழுவுதல் பற்றி எழுதியதைச் சொல்லலாம். பீஜே போன்றவர்களுக்கு இப்படி அடிமட்டம் வரை சென்று விளக்கினால் தான்புரியும்.]

அடிக்குறிப்புக்கள்

[1] Feces (poop) from people or animals is an important source of germs like Salmonella, E. coli O157, and norovirus that cause diarrhea, and it can spread some respiratory infections like adenovirus and hand-foot-mouth disease. These kinds of germs can get onto hands after people use the toilet or change a diaper, but also in less obvious ways, like after handling raw meats that have invisible amounts of animal poop on them. A single gram of human feces—which is about the weight of a paper clip—can contain one trillion germs 1. Germs can also get onto hands if people touch any object that has germs on it because someone coughed or sneezed on it or was touched by some other contaminated object. When these germs get onto hands and are not washed off, they can be passed from person to person and make people sick. (மூலம்: www.cdc.gov/handwashing/why-handwashing.html)

[2] Teaching people about handwashing helps them and their communities stay healthy. Handwashing education in the community:

  • Reduces the number of people who get sick with diarrhea by 31% 1, 2
  • Reduces diarrheal illness in people with weakened immune systems by 58% 3
  • Reduces respiratory illnesses, like colds, in the general population by 16-21% 2, 4

[3] About 1.8 million children under the age of 5 die each year from diarrheal diseases and pneumonia, the top two killers of young children around the world 1.

Handwashing with soap could protect about 1 out of every 3 young children who get sick with diarrhea 2, 3 and almost 1 out of 5 young children with respiratory infections like pneumonia 3, 4. (மூலம்: www.cdc.gov/handwashing/why-handwashing.html)

[5] 80 Percent of Infections Spread by Hands: CDC

கருத்துகள் இல்லை: