ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

 1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
 2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
 3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
 4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
 5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
 6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
 7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
 8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
 9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
 10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
 11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
 12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
 13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
 14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
 15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
 16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
 17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
 18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
 19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
 20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
 21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
 22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
 23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
 29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
 30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
 31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
 32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
 33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
 34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
 35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
 36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
 37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
 38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
 39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
 40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
 41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
 42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
 43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
 44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
 45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
 46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
 47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
 48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
 49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
 50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
 51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
 53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
 54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
 55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
 56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
 57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

 1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
 2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
 3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
 4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
 5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
 6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
 7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
 8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
 9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
 10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
 11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
 12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
 13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
 14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
 15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
 16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
 17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
 18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
 19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
 20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
 21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
 22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
 23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
 24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
 25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
 26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
 27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
 28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
 29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
 30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
 31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
 32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
 33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
 34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
 35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
 36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
 37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
 38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
 39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
 40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
 41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
 43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
 44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
 45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
 46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
 47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
 48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
 49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

புதன், 31 டிசம்பர், 2008

மஸீஹா, சமாதானம் ஏற்பாடுத்துபவர் - Messiah the PeaceMaker

மஸீஹா, சமாதானம் ஏற்பாடுத்துபவர்

Messiah the PeaceMaker

 

ரோலண்ட் கிளார்க் (Roland Clarke)

 
 
"பூமியிலே சமாதானமும் மனுஷர்கள் மேல் பிரியமும் உண்டாவதாக"(லூக்கா 2:14). இந்த வார்த்தைகள் பல ஆண்டுகளுக்கு முன்பு மேசியாவின்(மஸீஹாவின்) பிறப்புப் பற்றி தேவ தூதர்கள் சொன்ன வார்த்தைகளாகும். நாம் இன்று உலகத்தின் நிகழ்வுகளைக் காணும் போது, இவ்வுலகத்தின் மிகப்பெரிய தேவை "சமாதானம் - Peace" என்பதை நாம் அறியலாம், இது மனதிற்கு வலியை உண்டாக்குகிறது.

 
நம்முடைய இந்த உலகம் எயிட்ஸ் போன்ற குணமாக்க முடியாத வியாதிகளால் வருத்தத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கிறது. உலகத்தின் பொருளாதார நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மதத்தை அடிப்படையாகக் கொண்டு இறைவனின் பெயரில் சில அடிப்படைவாதிகள் மற்றவர்களை கொல்வதை மிகவும் கவுரவமான செயல் என்று கருதிக்கொண்டு இருக்கிறார்கள். ஆம், நமக்கு அமைதியும் சமாதானமும் தேவை.

 
2008ம் ஆண்டு, மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவின் ஜெயந்திக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, ஐக்கிய நாடுகளின் சபை "சமாதான கலாச்சாரம் பற்றிய மேல்பட்ட கூடுகை(High-Level Meeting on the Culture of Peace)" என்ற ஒரு கூட்டத்தை கூட்டியது. ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர், பன்கிமோன், ஒரு அவசர கோரிக்கையை முன்வைத்தார், "மதங்களின் இடையில் உரையாடலும், கலாச்சார நாகரீகங்களின் இடையில் உரையாடலும் என்றும் இல்லாத அளவிற்கு இவைகளின் தேவை இப்போது அதிகமாக உள்ளது" என்றார். இந்த மேல்மட்ட கூட்டத்தை "உரையாடல் மகாநாடு(Dialog Conference)" என்றும் அழைத்தனர்.

 
ஐ.நா சபையின் அதிகார சாஸனத்தில் "அமைதியை நிலை நாட்டவேண்டும்" என்பது மூலைக்கல்லாக இருக்கிறது. பைபிளின் ஒரு வசனப்பகுதி ஐ.நா சபையின் அதிகார சாஸனத்தில் இடம் பெற்று இருக்கிறது என்ற விவரம் உங்களுக்குத் தெரியுமா? "அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்;" - இவ்வாசகம் மேசியாவின் சமாதானம் நிறைந்த‌ அமைதியான ஆட்சியில் நடக்கும் ஒரு தீர்க்கதரிசனமாகும்.

 
மதங்களின் இடையே நடக்கவிருக்கும் உரையாடலில், எல்லா நம்பிக்கையாளர்களும் மேசியாவாக‌ நம்பும், சமாதானத்தை உருவாக்கும் தன்னிகரில்லா நாயகனான‌ இயேசுக் கிறிஸ்துவை கருத்தில் கொள்வது சாலச் சிறந்ததாகும்.

 
இயேசு சமாதானம் தருபவர் என்று நம்புகிறவர்கள் கிறிஸ்தவர்கள் மட்டுமே அல்ல. இஸ்லாமியர்களும் இயேசுக் கிறிஸ்து மறுபடியும் கடைசிக் காலங்களில் வருவார் என்றும் மற்றும் அவர் தீமையை வென்று, உலகமனைத்திற்கும் சமாதானத்தை தருவார் என்றும் நம்புகிறார்கள். ஒரு இஸ்லாமிய எழுத்தாளர் ஒரு இஸ்லாமிய சஞ்ஜிகையில் "நிச்சயமாக அல் மஸீஹா(இயேசு) ஜிஹாதை அழிப்பார்;" என்று குறிப்பிடுகிறார். அல்லாவின் ரசூல் சொன்னதாக, சய்யதினா சலாமா பின் நுஃபைல் கூறும் போது, "ஜிஹாத் (பற்றிய கட்டளை), ஈஸா இபின் மர்யம் இறங்கி வரும் வரை நிறுத்தப்படாது("Sayyidina Salamah bin Nufayl has said that the messenger of Allah said, 'The (command of) Jihad will not be abolished until the descent of Isa Ibn Maryam.')" என்கிறார் (Seerat al-Mughlata', Musnad Ahmad).2

 
நாம் மேலே குறிப்பிட்ட இஸ்லாமியர்களின் மேற்கோள்களுக்கும், மேசியாவைப் பற்றிய பைபிள் தீர்க்கதரிசனங்களுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமையை நாம் காணலாம். அதாவது, சமாதான பிரபுவாகிய மேசியா "ஜாதிகளுக்குள் நியாயந்தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்துகொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை…. அவர் ஜாதிகளுக்குச் சமாதானம் கூறுவார்;" "will settle international disputes. They will hammer swords into ploughshares... Nation will no longer fight against nation nor train for war anymore.... Your king will bring peace to the nations." (ஏசாயா 2:4, சகரியா 9:10).

 
மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனங்களைப் பற்றி இதர ஹதீஸ்கள் கூடச் சொல்கின்றன, 1) ஓணாயும் ஆட்டுக்குட்டியும் ஒன்றாக வாழும், 2) மேசியாவின் ஆட்சி காலத்தில் உலகளாவிய‌ அமைதி/சமாதானம் நிலவும் போன்றவைகளைச் சொல்லலாம்.[3]

 
அனேக இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் இப்போது உலகத்தில் நடந்துக்கொண்டு இருக்கும் நிகழ்வுகளைக் கண்டு, இக்காலம் கடைசிக் காலம் என்றுச் சொல்கிறார்கள். ஆகையால், இந்த நேரத்தில் இயேசுக் கிறிஸ்துவின் அமைதி மற்றும் சமாதானம் தரும் செயல்களைப் பற்றி சிறிது சிந்திப்பது, இந்த தடுமாறும் உலகில் நன்மை பயக்கும். அதே நேரத்தில் கிறிஸ்துவின் முதல் வருகையின் போது, பூமியில் அவர் வாழ்ந்த காலத்தில் நடந்த அவரது அனேக செயல்கள், அவர் ஒரு அமைதி மன்னன் என்பதை காட்டுகின்றன.
 
 

மஸீஹாவின் முதல் வருகை

Messiah's first coming
 
 
இயேசு பிறப்பதற்கு முன்பாக அவரைப் பற்றி "நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்துவார்(லூக்கா 1:79)" என்று கூறப்பட்டது. இயேசுவின் போத‌க‌த்திலும் "ச‌மாதான‌ம் த‌ருவ‌து" மிக‌வும் முக்கிய‌ அம்ச‌மாக‌ இருந்த‌து, "சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்"(ம‌த்தேயு 5:9).

 
ஒரு பெண்ணின் தீவிர வியாதியை இயேசு குணமாக்கிவிட்டு, அவளுக்கு சமாதானத்தைக் கூறி அனுப்புகிறார். இயேசு அவளைப் பார்த்து: "மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்" (லூக்கா 8:48). இயேசு "சமாதானத்தோடே போ" என்ற வார்த்தைகளைச் சொன்ன இன்னொரு சூழ்நிலையும் உள்ளது. இந்த இடத்தில் அந்தப் பெண் ஒரு தீய செயல்கள் செய்பவளாக இருந்தாள். அந்த பெண்ணின் பாவங்களை மன்னித்துவிட்டு, இயேசு அவளைப்பார்த்து "உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்" (லூக்கா 7:50).

 
இந்த இரண்டு நிகழ்ச்சிகளின் கடைசியிலும் ஒரு சந்தோஷமான வார்த்தைகளைக் கொண்டு இயேசு முடிக்கிறார். இயேசு தன் உலக வாழ்க்கையின் கடைசி காலத்தில் இந்த நிகழ்ச்சிகளின் மூலமாக இரண்டு சமாதானம் கூறுகிறார். லூக்கா 19ம் அதிகாரத்தில் இயேசுவை பின்பற்றினவர்கள் உரத்த சத்தமாக இவ்வாறு கூறினார்கள்: "கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக".

 
மக்களின் இந்த வார்த்தைகளால் யூத தலைவர்கள் இடரல் அடைந்தார்கள், மற்றும் இப்படி மக்கள் சொல்வதை நிறுத்தும்படி இயேசுவிடம் முறையிட்டார்கள். ஆனால், இயேசு மறுத்துவிட்டார். பிறகு இயேசு இவ்விதமாக கூறினார்: "கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள். அப்பொழுது கூட்டத்திலிருந்த பரிசேயரில் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்முடைய சீஷரை அதட்டும் என்றார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர் விட்டழுது, உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது. உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி, உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும் என்றார்"(லூக்கா 19:38-44).

 
பைபிளுக்கு உரை எழுதியவகளின் கூற்றுப்படி, "கி.பி. 70ல் நடந்த ஜெருசலேமின் அழிவு, மேசியா அவர்களை சந்திக்க‌, தங்களிடம் வந்த போது, அவரை அங்கீகரிக்காமல், அவர் மீது நம்பிக்கை கொள்ளாமல் விட்டதின் தேவ நியாயத்தீர்ப்புத் தான் அந்த அழிவு" என்றனர்(ஜான் மெக்கார்தர்). இஸ்லாமியர்கள் இயேசு தான் மேசியா(மஸீஹா) என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள், இஸ்லாம் கூட இயேசு மேசியா என்பதை அங்கீகரிக்கிறது("அல்-மஸீஹ்" என்ற பெயர் குர்‍ஆனில் 11 முறை வருகிறது).

 
கிறிஸ்துவின் தீர்க்கதரிசனம் தான் தேவனின் நியாயத்தீர்ப்பாக யூதர்கள் மீது வந்தது என்றாலும், இதற்காக, யூதர்கள் மீது கசப்பு வெறுப்புணர்ச்சிக் கொள்ள யாருக்கும் அனுமதியில்லை. இதே போல, கிறிஸ்துவை அங்கீகரிக்காத அவர்களின் நிலை ஒரு மிகப்பெரிய குற்றமாக கருதிக்கொண்டு, யூதர்களின் நாட்டை உலக வரைப்படத்திலிருந்து நீக்கிவிடவேண்டும் என்றுச் சொல்வதும் சரியானதல்ல(இப்படி இஸ்ரவேல் நாட்டை வரைப்படத்திலிருந்தே நீக்கிவிடவேண்டும் என்று சில இஸ்லாமியர்கள் எண்ணுகின்றார்கள்). இஸ்ரவேலில் மீதியாக இருந்தவர்களை தேவன் ஒரு நாள் ஒன்று கூட்டுவார் என்று வேதம் சொல்கிறது. இதோடு நின்றுவிடாமல், அவர்களை சீர்படுத்த, தேவன் கொடுத்த நியாயத்தீர்ப்பின் விளைவுகளை அவர்கள் தாங்கிக்கொண்டு இன்றளவும் உலகத்தில் இருக்கிறார்கள், மற்றும் இவர்களே தேவனால் இரட்சிக்கப்பட்டு, உலகத்தின் எல்லா நாடுகளுக்கும் ஆசீர்வாதமாக மாறுவார்கள். வேதம் சொல்கிறது, "தேவன் அவர்களுக்கு காணாதிருக்கிற கண்களை கொடுத்தார் ..." பல இஸ்ரவேல் மக்கள் இன்னும் கடின இருதயமுள்ளவர்களாக இருக்கிறார்கள், இந்த நிலை எதுவரைக்கு நீடிக்குமென்றால், இஸ்ரவேலர் அல்லாத அந்நிய ஜனங்கள் அனைவரும் கிறிஸ்துவிடம் வரும் வரையிலும் இப்படி இருக்கும்.(ரோமர் 11:8,15,25, சகரியா 12:10, யோவேல் 2:28-32).

 
உலகத்தின் மூலை முடுக்குகளிலிருந்து தேவன் தன் மக்களை கூட்டிச் சேர்ப்பார். அவர் கீழ் கண்டவாறு வாக்கு கொடுத்துள்ளார், "அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்...மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்" (ஏசாயா 54:8-10).

 
இந்த "சமாதானத்தின் உடன்படிக்கை" என்றால் என்ன? பழங்காலத்தில், உடன்படிக்கைகள் ஒரு பலியை செலுத்தி உறுதிப்படுத்துவார்கள். மேலே நாம் கண்ட வாக்குத்தத்தம் சொல்லப்பட்ட வசனத்தின் முந்தைய பாகத்தில் ஏசாயா 53ம் அதிகாரத்தில், "மேசியா எப்படி பாவத்தை போக்கும் பலியாக உள்ளார்" என்பதை விளக்குகிறது: "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது"(ஏசாயா 53:5).

 
"சமாதானத்தின் நகரம்" என்று பொருள்படும் ஜெருசலேமில், மேசியாவாகிய இயேசு தன் சிறப்பான சமாதான ஊழியத்தை நிறைவேற்றியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இயேசு கிறிஸ்து ஜெருசலேம் என்ற நகரத்தில் கொல்லப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவார் என்று அவரே முன்னறிவித்தார். இந்த ஜெருசலேம் என்ற பட்டண‌த்தில் தான், மனுஷ குமாரன் பற்றி முன்னறிவித்த அனைத்து தீர்க்கதரிசனங்களும் நிறைவேறும் இடம் என்று இயேசு குறிப்பிட்டார்(லூக்கா 18:31-33). இன்னும் வேதம் சொல்கிறது, "அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று"(கொலோ 1:20).

 
இயேசுவின் சீடர்களில் ஒருவரான பேதுரு "ஒப்புரவாக்குதலும் மற்றும் சமாதானமும் கிறிஸ்துவின் மரணத்தின் மூலமாக நிறைவேறும்" என்று உறுதிப்படுத்துகிறார். அவர் கூறும் போது:"எந்த ஜனத்திலாயினும் அவருக்குப்பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன். எல்லாருக்கும் கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவைக்கொண்டு அவர் சாமாதானத்தைச் சுவிசேஷமாய்க் கூறி, இஸ்ரவேல் புத்திரருக்கு அனுப்பின வார்த்தையை அறிந்திருக்கிறீர்களே. … யூதருடைய தேசத்திலும் எருசலேமிலும் அவர் செய்தவைகளெல்லாவற்றிற்கும் நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம். அவரை மரத்திலே தூக்கிக் கொலைசெய்தார்கள். மூன்றாம் நாளிலே தேவன் அவரை எழுப்பிப் பிரத்தியட்சமாய்க் காணும்படி செய்தார். …. அன்றியும் அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாயாதிபதியென்று ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும், சாட்சியாக ஒப்புவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்." (அப்போஸ்தலர் 10:35-43, ஜெருசலேம் என்பது மிகவும் முக்கியமான இடமாகும், இங்கு தான் மனிதன் தேவனோடு சமாதானமானான்).
 
 
ச‌மாதான‌ம் த‌ருவ‌த‌ற்கும், பாவ‌த்திற்கும், ம‌ன்னிப்பிற்கும் இடையேயுள்ள‌ ஒற்றுமையை ஆராய்த‌ல்

Exploring the connection between peacemaking, sin and forgiveness
 
 
இதற்கு முன்பு நாம் கண்ட நிகழ்ச்சியை நீங்கள் நியாபகத்திற்கு கொண்டு வரமுடியுமா? அதாவது பாவ வாழ்க்கையில் இருந்த‌ ஒரு பெண்ணை இயேசு மன்னித்து அனுப்பிய நிகழ்ச்சியை நியாபகப்படுத்திக் கொள்ளுங்கள். அப்பெண் செய்துக்கொண்டு இருந்த அவ்வளவு பெரிய பாவத்தை எப்படி இயேசுவினால் மன்னிக்க முடிந்தது? "இயேசுவின் பெயர் மூலமாக பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன" என்று பேதுரு சொல்வது மிகவும் முக்கியமானது. இயேசுவின் தாய் மரியாள், தேவன் தெரிந்தெடுத்த பெயரையே தன் அற்புத குழந்தைக்கு இட்டதாக, குர்‍ஆனும் பைபிளும் நமக்கு போதிக்கின்றன. வேதம் இப்படிச் சொல்கிறது, "அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்."(மத்தேயு 1:21).

 
முஹம்மத் ஐ. எ. உஸ்மான், என்ற மதிப்பிற்குரிய மஃப்டி (இஸ்லாமிய சட்ட நிபுனர்) அவரது "இஸ்லாமிய பெயர்கள்" என்ற புத்தகத்தில் "இயேசு" என்ற பெயருக்கு, "இறைவனே இரட்சிப்பு" என்ற பொருள் என்றுக் கூறுகிறார். இந்த பொருள் மற்ற இஸ்லாமிய அறிஞர்களின் கூற்றுகளோடு ஒத்துப்போகிறது.

இப்போது நீங்களே முடிவு எடுங்கள்,

"இயேசு தான் மேசியா என்பதையும், சமாதான பிரபு என்றும் நான் நம்புகிறேனா? இயேசு தேவனின் இரட்சிப்பை கொண்டுவந்தார் என்பதையும், அவர் ஒருவர் மூலமாகத் தான் என் பாவங்கள் மன்னிக்கபபடுகிறது என்றும் நான் நம்புகிறேனா?"
Do I believe that Jesus is the Messiah, the Prince of Peace? Am I willing to accept that Jesus brought God's salvation and that he alone is able to forgive my sins?

மேசியாவின் "சமாதானம் உருவாக்கும் வேலையைப்" பற்றி கீழ்கண்ட இரண்டு கட்டுரைகளில் விவரமாக விளக்கப்பட்டுள்ளது. முதல் கட்டுரை மிகவும் சிறியது, தமிழில் படிக்கவும், "சொர்க்கத்தின் வழிகாட்டி - Signposts to Paradise" மற்றும் இரண்டாவது கட்டுரை படிக்கவும் "Converging Destinies: Jerusalem, Peace and the Messiah".

இன்னும் அதிக விவரங்களுக்கு என்னோடு தொடர்பு கொள்ள இங்கு சொடுக்கவும்.

பின்குறிப்புக்கள்
1 Quoted by Mufti Mohammad Shafi in 'Signs of Qiyamah and the Arrival of the Maseeh', p. 109
2 Ibid. pp. 38,78, quoting Abu Dawood and Ibn Majah, Hadith #13

Source: http://www.answering-islam.org/authors/clarke/peace_on_earth.html


ரோலண்ட் கிளார்க் அவர்களின் கட்டுரைக‌ள்
முகப்புப் பக்கம்: ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்

சொர்க்கத்தின் வழிகாட்டி - Signposts to Paradise

சொர்க்கத்தின் வழிகாட்டி

Signposts to Paradise

 
 
 
 
பைபிளைப் போலவே, குர்‍ஆனும், மஸீஹாவின் அற்புதப் பிறப்பு எனபது "இறைவனிடமிருந்து வந்த அடையாளம்" என்றுச் சொல்கிறது. அல்லா கொடுக்கும் அடையாளம் பற்றி குர்‍ஆன் மிகவும் மெச்சிக் கொள்கிறது, இவ்வார்த்தைகள் நம்மை ஆழமாக சிந்திக்கத்தூண்டுகிறது, அல்லாவின் அடையாளத்தை புரிந்துக்கொள்பவர்களைப் பற்றி குர்‍ஆன் இவ்விதமாக கூறுகிறது, "...சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு, ... நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு, ... செவியுறும் சமூகத்திற்கு ...நிச்சயமாக அதில் சிந்தித்துணரும் சமூகத்திற்கு."(சூரா 30:21-24). இன்னும் தேவதூதன் இயேசுவின் பிறப்புப் பற்றி சொன்ன செய்திக்கு இயேசுவின் தாய் எப்படி கீழ்படிந்தார்கள் என்பதை படிக்கும் போது மிகவும் உற்சாகமாக இருக்கிறது, "மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள்"(லூக்கா 2:19).

 
உலகத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இயேசுவின் தாயாகிய மரியாள், "உலக பெண்களில் சிறந்தவர்" என்று மதிக்கிறார்கள். கற்பைக் காத்துக் கொள்வதில் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக மரியாள் விளங்குகிறார். மரியாளின் எடுத்துக்காட்டு நமக்கு இன்னொரு விதத்திலும் உற்சாகத்தைத் தருகிறது, அதாவது, அற்புத பிறப்பு பற்றி மரியாளின் செயலை நாம் மேலே படித்தோம். உண்மையாகவே, அற்புத‌பிறப்பு பற்றிய அவரது சிந்தனைகள், இறைவன் மீது அவர் கொண்டிருந்த அன்பையும், பக்தியையும் அது வெளிப்படுத்துகிறது.

 
மரியாளின் சிறப்புமிக்க மகனின் பிறப்பு உலக முக்கியத்துவம் வாய்ந்தது என்று குர்‍ஆன் சொல்கிறது. இந்த அற்புத பிறப்பு, "அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம் (a Sign for all People)"(சூரா 21:91) என்றுச் சொல்கிறது குர்‍ஆன். உண்மையாகவே, தீர்க்கதரிசிகள் இயேசுவின் உலகமயமான ஊழியத்தை/இரட்சிப்பைப் பற்றி கூறினார்கள். இயேசு குழந்தையாக இருக்கும் போது அவரை விருத்தசேதனம் செய்வதற்கு ஆலயத்திற்கு கொண்டு வந்தபோது, சிமியோன் கூறியதை நாம் படிக்கிறோம், "அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து: ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்; புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்"(லூக்கா 2:28-32). இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள், முந்தைய தீர்க்கதரிசிகள் சொன்னதை உறுதிப்படுத்துகின்றன, அதாவது, மேசியா என்பவர் மூலமாகத் தான் தேவன் இரட்சிப்பைத் தருகிறார், "நீர் பூமியின் கடைசிபரியந்தமும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி,(bring salvation to the ends of the earth)"(ஏசாயா 49:6).

 
 
இயேசுவின் "பிறப்புச் செய்தியை" பற்றி பைபிள் மற்றும் குர்‍ஆன் சொல்லும் விவரங்களில் உள்ள ஒற்றுமை உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமானது. ஆனால், ஒரு விவரத்தை இன்னும் நாம் அலசவில்லை. மரியாள் தன் சிறப்புமிக்க‌ மகனுக்கு எவ்விதம் பெயரை தெரிந்தெடுத்தார் என்பதை கவனிப்போம் வாருங்கள்.

 
"இயேசுவின் பெயர்" தேவதூதன் மூலமாக அறிவிக்கப்பட்டது என்று பைபிளும் குர்‍ஆனும் சொல்கின்றன(மத்தேயு 1:21; சூரா 3:45). இறைவன் ஏன் "இயேசு/ஈஸா" என்ற பெயரை தெரிந்தெடுத்தார் என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா? இப்பெயர் ஏதோ தற்செயலாக அல்லது பெயர் வைக்கவேண்டுமே என்பதற்காக எந்த நோக்கமும் இல்லாமல் தெரிந்தெடுக்கப்பட்ட பெயர் அல்ல. இறைவனுக்கு எல்லாம் தெரியும் மற்றும் இப்பெயர் தெரிந்தெடுத்ததற்கு ஒரு நோக்கமும், காரணமும் இருக்கவேண்டும். அவர் மேசியாவின் குணாதிசயங்கள் மற்றும் அவர் செய்யப்போகும் இரட்சிப்பு நோக்கத்தை கருத்தில் கொண்டு இப்பெயரை அவர் வைத்துள்ளார். முஹம்மது எ சித்திக் என்ற இஸ்லாமிய அறிஞர் "இஸ்லாமிய குழந்தைகளுக்கான‌ பெயர்கள்" என்ற தன் புத்தகத்தில், இவ்விதமாக கூறுகிறார்: "பெயர் என்பது ஒரு மனிதனின் குணத்தையும், அவனது செயல்களையும் பிரதிபலிப்பதாக இருக்கிறது -The name is the real introduction of a man's personality and the real representation of a man's activities".

 
இயேசுவின் பெயரின் பொருள் என்ன என்று நாம் தெரிந்துக் கொள்ளவேண்டுமானால், நாம் கேட்கவேண்டிய ஒரு கேள்வி, "இயேசுவின் செயல்பாடுகள் எப்படி அவரது பெயரின் பொருளை பிரதிபலிக்கிறது?" என்பதைத் தான். இயேசு பிறப்பிற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தீர்க்கதரிசி "தேவனின் தாசனாகிய மேசியா என்ன செய்வார்?" என்பதை முன்னறிவித்தார், அதாவது மேசியா என்ப‌வ‌ர் "பூமியின் கடைசி பரியந்தமும் தேவனின் இரட்சிப்பை கொண்டு வருவார் (bring my salvation to the ends of the earth"(ஏசாயா 49:6) என்ப‌தாகும். ஆக‌, இயேசு என்ற‌ பெயரின் பொருள் "தேவ‌னின் இர‌ட்சிப்பு! (God's Salvation!)" என்ப‌தை நாம் அறியும் போது ஆச்ச‌ரிய‌ப்ப‌ட‌வேண்டிய‌தில்லை. இந்த‌ பெய‌ரின் பொருளை, முஹ‌ம்ம‌த் ஐ. எ. உஸ்மான் என்ற‌ இஸ்லாமிய‌ ச‌ட்ட‌ நிபுன‌ர், "இஸ்லாமிய‌ பெய‌ர்க‌ள்" என்ற தன் புத்த‌க‌த்தில் அங்கீக‌ரிக்கிறார்.

 
ஏசாயா என்ற தீர்க்கதரிசி இந்த "இரட்சிப்பு" என்றால் என்ன என்பதை இன்னும் விவரமாக விவரிக்கிறார். ஜெருசலேமில் தேவன் "சகல ஜனங்கள்மேலுமுள்ள முக்காட்டையும், சகல ஜாதிகளையும் மூடியிருக்கிற மூடலையும், இந்த மலையிலே அகற்றிப்போடுவார். அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையைப் பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்."(ஏசாயா 25:7-9). பல ஆண்டுகளுக்கு பின்பு, ஒரு தேவதூதன், இயேசுவின் பிறப்புப் பற்றிய செய்தியை அதே போல் உள்ள வார்த்தைகளைக் கொண்டு அறிவிக்கிறார், "தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்"(லூக்கா 2:10-11).

 
மஸீஹாவின் வேலை மக்களை இரட்சிப்பது என்றால், அதனை அவர் எவ்விதம் செய்துமுடித்தார்? இயேசு அற்புதங்கள் செய்து, எப்படி மக்களை தங்கள் வியாதிகளிலிருந்து சுகமாக்கி காப்பாற்றினார் என்பதை பைபிளும் குர்‍ஆனும் விவரிக்கின்றன. ஒரு முக்கியமான விவரத்தை கவனிக்கவேண்டும், இயேசு வெறும் சிறிய குறைபாடுள்ள வியாதிகளை மட்டுமே சுகப்படுத்தவில்லை, அதோடு கூட, மிகவும் ஆபத்தான தீவிரமான வியாதிகளிலிருந்தும் விடுதலைக் கொடுத்தார்(மத்தேயு 11:5, சூரா 5:113). இயேசு இன்னும் ஆச்சரியமான அற்புதங்களையும் செய்தார். கல்லரையிலிருந்து மனிதர்களை உயிரோடு எழுப்பினார், இப்படிப்பட்டவர்களும் தேவனின் மஸீஹாவினால் இரட்சிக்கப்பட்டார்கள். இதோடு அவர் நிறுத்திக்கொள்ளவில்லை. பாவங்களினால் சீர்குளைந்து தங்கள் வாழ்க்கையை அழித்துக்கொண்டு வேதனையிலுள்ள மனிதர்களையும் அவர் இரட்சித்தார். ஏன் தேவன் "இயேசு" என்ற பெயரை தெரிந்தெடுத்தார் என்பதை காபிரியேல் தூதன், விளக்குகிறார் "அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்"(மத்தேயு 1:21).

 
லூக்கா 19ம் அதிகாரம் மேலே சொன்ன விவரங்களை தெளிவாக விளக்கும் அதிகாரமாகும். தீயவழியில் புகழ்பெற்ற சகேயு என்ற ஒரு மனிதனின் வாழ்க்கை, அவர் இயேசுவை சந்தித்த பிறகு, முழுவதுமாக மாற்றப்பட்டது. ஓ! அந்த நாள் எவ்வளவு மகிழ்ச்சியான நாள்! இந்த நிகழ்ச்சியின் கடையில், மஸீஹா தன் பெயருக்கு என்ன பொருள் என்பதையும், தன் வாழ்க்கையின் மூலமாக தேவன் கொண்டிருந்த நோக்கம் என்ன என்பதையும் தெளிவாக விளக்குகிறார் "இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே. இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்"(லூக்கா 19:9-10).

 
இந்த கட்டுரையை படிக்கும் ஒவ்வொரு வாசகரும், மஸீஹாவின் இரட்சிக்கும் சக்தியையும், அவரை அறிவதினால் கிடைக்கும் மகிழ்ச்சியையும் அடையவேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதைப் பற்றிய மற்றுமொரு தமிழ் கட்டுரை உங்களுக்கு விருப்பமாக இருக்கும், படிக்கவும் "இருளை ஒளியாக்குதல்-Lighting Up the Darkness". இந்த கட்டுரை மஸீஹா கொடுக்கும் இரண்டு காரியங்களாகிய "ஒளியையும் இரட்சிப்பையும் கொடுப்பார்" என்பதைப் பற்றிய விவரங்களில் உள்ள தொடர்பு பற்றி விவரிக்கிறது.

 
சிந்திக்க ஒரு கேள்வி: இயேசு ஒரு கன்னியின் வயிற்றில் பிறந்தார் என்றுச் சொன்னால், ஏன் அவர் தன்னை "மனுஷ குமாரன்" என்று அழைத்துக்கொன்டார்? இந்த கேள்வி உங்களுக்கு விருப்பமானதாக இருக்கும் அல்லது இது போல இன்னும் அனேக கேள்விகள் உங்களுக்கு இருக்கலாம்.

 
உங்களுக்கு நான் உதவமுடியும், என்னை தொடர்பு கொள்ள இங்கு சொடுக்கவும்.


ரோலண்ட் கிளார்க் அவர்களின் கட்டுரை
முகப்புப் பக்கம்: ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்

செவ்வாய், 30 டிசம்பர், 2008

இருளை ஒளியாக்குதல் - Lighting Up The Darkness

இருளை ஒளியாக்குதல்

Lighting Up The Darkness

 
 
 
 
 
இறை நம்பிக்கையுள்ள மக்கள் தெய்வீக ஒளியை நம்புகிறார்கள். பைபிள் கூறுகிறது: "தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை…" (1 யோவான் 1:5). தேவன் தன் சித்தத்தை தன் தீர்க்கதரிசிகளுக்கு அறிவிப்பதின் மூலமாக இருளில் தன் ஒளியை பிரகாசிக்கச் செய்தார். வேதவசனம் இவ்விதமாக எழுதப்பட்டுள்ளது, "உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது " (சங்கீதம் 119:105). குர்‍ஆன் கூறுகிறது " அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) ...நிச்சயமாக நாம்தாம் 'தவ்ராத்'தை யும் இறக்கி வைத்தோம்;. அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன"(சூரா 24:35, 5:44).

 
கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இயேசு கிறிஸ்து "இறைவனின் வார்த்தையாக இருக்கிறார்" என்று நம்புகிறார்கள் (அரபியில் கலிமதுல்லா). அவர் தேவனுடைய வார்த்தையாக இருப்பதினால், வெளிச்சத்தை கொடுக்கிறார். நற்செய்தி என்றுச் சொல்லும் இஞ்ஜிலில் நாம் படிக்கிறோம், "அந்த வார்த்தை மாம்சமாகி...அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது;" (யோவான் 1:14, 4, 5). இன்னும் குர்‍ஆனிலும் படிக்கிறோம், அதாவது இயேசு இஞ்ஜிலை பெற்றார், "அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன, அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது" (குர்‍ஆன் 5:46).
 
 
 
வெளிப்படும் ஒளி - Releavling Light

 
இயேசு குழந்தையாக இருக்கும் போது, அவரை விருத்தசேதனம் செய்வதற்காக ஆலயத்திற்கு கொண்டுவந்த போது, அவரைப் பற்றி ஒரு ஆச்சரியமான தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது. "அவன்(சிமியோன்) அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து: ஆண்டவரே,... புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்"(லூக்கா 2:28-32).

 
மேசியாவின் மூலமாக வெளியாக்கப்பட்ட இந்த வெளிச்சமானது, "அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும், ...அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது.."(லூக்கா 1:78,79) என்று சொல்லப்பட்டது. இதுமட்டுமல்ல‌, இன்னொரு தீர்க்கதரிசனமும் மேசியாவினால் நிறைவேறியது, "..என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்;.."(மல்கியா 4:2).
 
 
 
சுகப்படுத்தும் ஒளி - Healing Light

 
"நீதியின் சூரியன் உங்கள் மேல் உதித்து, அதன் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும்" என்ற தீர்க்கதரிசனத்தின் பொருளை விளக்குவது போல ஒரு அரேபிய பழமொழி உண்டு. இந்த பழமொழி, சூரியனுக்கும், ஆரோக்கியம் அடைவதற்கும் இடையே உள்ள தொடர்பை விளக்குகிறது. இது மக்களுக்கு அறிவுரை இப்படியாக கூறுகிறது: "நீ மருத்துவரிடம் செல்வது போல, சூரியனிடம் போ - Go to the sun like you go to the doctor". இதனால் தான், தங்கள் உடலின் தோலில் சுகவீனமுள்ள நோயாளிகளுக்கு மருத்துவர்கள், காலையில் உதிக்கும் சூரிய ஒளியில் சிறிது நேரம் காட்டும் படி உற்சாகப்படுத்துகின்றனர். இதுமட்டுமல்ல, சூரிய ஒளியின் மூலமாக நம் உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான "உயிர்ச்சத்து டி"யை நாம் பெறமுடியும் மற்றும் நீண்ட நாட்களாக சோர்ந்துப் போய் இருக்கும் மன அழுத்தமுள்ளவர்களுக்கும் சூரிய ஒளி நனமையை பயக்கும்.

 
இயேசு மிகவும் அற்புதமான முறையில் பலரை சுகப்படுத்தினார் என்பதை நாம் அறிவோம். இஞ்ஜிலில் இவ்விதமாக எழுதப்பட்டுள்ளது, அதாவது இயேசுவினால் "இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது... பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, ... ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்... அப்பொழுது பலவித வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும் சந்திரரோகிகளையும், திமிர்வாதக்காரரையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர்களைச் சொஸ்தமாக்கினார்"(மத்தேயு 4:15,23,24).
 
 
 
இரட்சிக்கும் ஒளி - Saving Light

 
 
இயேசு சுகமாக்கிய அனேக மக்களில் சிலரின் நோய் மிகவும் தீவிரமாக இருந்தது. இப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையில் இயேசு இடைப்பட்டதால், அவர்கள் உயிர் பிழைத்தார்கள், இவர்களுக்கு அவரே இரட்சிப்பாக மாறினார்(லூக்கா 7:2, 8:43). தன் வல்லமையுள்ள‌ ஒளியை மரணத்தை எதிர்ப்பார்த்துக்கொண்டு இருந்தவர்களின் மீது பாய்ச்சி காப்பாற்றியதால், "மரண இருளில் இருந்தவர்களுக்கு அவர் வெளிச்சம் கொடுத்தார்" என்ற மேசியா பற்றிய வசனங்களின் பொருள் இன்னும் சிறப்பு மிக்கதாக மாறுகிறது. இது மட்டுமல்ல, மரித்துப்போனவர்களையும் அவர் உயிரோடு எழுப்பினார், இதனை பைபிளும் குர்‍ஆனும் போதிக்கின்றன. குஷ்ட வியாதியினால் நம்பிக்கையின்றி வாழ்ந்தவர்களுக்கு, இயேசு நம்பிக்கையின் கலங்கரை விளக்காக இருந்தார்.

 
மேசியாவின் ஒளியைப் பற்றிய இன்னொரு தீர்க்கதரிசனத்தை நாம் சிந்திப்பது நல்லது. ஏசாயா 49:6ல் நாம் படிக்கிறோம், தேவனுடைய தாசனாகிய மேசியா இரட்சிப்பு மற்றும் ஒளியாக இருக்கிறார், "பூமியின் கடைசிபரியந்தமும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி, உம்மை ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைப்பேன்".
 
 
 
வாழ்வு தரும் ஒளி - Life-Giving Light

 
இதற்கு முன்பாக "தேவனுடைய வார்த்தை நம் எல்லாருடைய‌ வாழ்விற்கு ஒளி தருகிறது" என்று கண்டோம். இப்போது நாம் இயேசுவின் போதனை எப்படி வாழ்வு தருகிறது என்பதைக் காண்போம், மற்றும் ஒளிக்கும் வாழ்விற்கும் இடையே உள்ள தொடர்பையும் காண்போம். "நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்" என்று இயேசு கூறினார் மற்றும் "என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான் என்றார்"(யோவான் 8:12).

 
இயேசு வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு பல ஆண்டுகளுக்கு பின்பு, தன் சீடரான யோவானுக்கு தரிசனத்தில் இவ்விதமாக கூறினார்:".. நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்."(வெளி 1:16-18).

 
இயேசுவின் முகம் பற்றிச் சொல்லும் போது, "அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது" என்று யோவான் விவரிக்கிறார். இயேசுவின் முகத்திலிருந்து வெளிப்பட்ட இந்த ஆச்சரியமான ஒளி நமக்கு "நீதியின் சூரியன்" என்று மேசியாவைக் குறிக்கும் பெயரை நியாபகப்படுத்துகிறது. பிரகாசமான ஒளி என்பது அவர் பாவமற்ற பரிசுத்தர் என்பதை காட்டுகிறது (சூரா 19:19ஐ ஒப்பிட்டுப்பார்க்கவும்).

 
நான் உங்களிடம் ஒரு கேள்வியை கேட்கலாமா? "உண்மையிலேயே இயேசு மரித்ததிலிருந்து எழுந்தார் என்றுச் சொன்னால், அவரிடம் மரணத்தின் மற்றும் பாதாளத்தின் திறவுகோள் உள்ளது என்று பொருள் படுகிறதல்லவா?" இயேசு பாதாளத்தின் காரிருளில் நுழைந்து மற்றும் அதிலிருந்து வெற்றிகரமாக வெளியே வந்தார். இதைப்போல செய்தவர்கள் யாருமில்லை!(May I ask you to consider: "If Jesus really did rise from the dead doesn't it make sense that he has the keys of death and the grave?" After all, he entered that dark realm and exited successfully! No one else has ever done that!).
 
 
யூத‌ர‌ல்லாத‌வ‌ர்க‌ளுக்கு ஓளி - A Light to Non-Jews

 
யோவான் 4ம் அதிகார‌த்தில் ஒரு சுவார‌சிய‌மான‌ நிக‌ழ்ச்சி ந‌டைபெறுகிற‌து, இந்த‌ நிக‌ழ்ச்சியில் "ச‌மாரிய‌ர்க‌ள்" என்றுச் சொல்ல‌க்கூடிய‌ ம‌க்க‌ளுக்கு ஒரு ஆன்மீக‌ வெளிச்ச‌த்தை இயேசு கொண்டு வ‌ந்தார். த‌ங்கள் சகோதரர் இனமான யூதர்களைப்போல, இந்த சமாரியர்களும் படைப்பாளியாகிய தேவனை நம்புகிறார்கள், அவர் தான் மோசேக்கும் சட்டத்தை கொடுத்தார் என்றும் நம்புகிறார்கள். துரதிஷ்டவசமாக இவர்கள் சில வகைகளில் உண்மையான பாதையை விட்டு விட்டார்கள். இவர்களுக்கு தேவன் யார் என்றுத் தெரியவில்லை, ஏனென்றால், "இரட்சிப்பு யூதர்கள் வழியாக வருகிறது" என்று இயேசு இவர்களிடம் கூறினார்"(யோவான் 4:22).

 
தற்காலத்தில் அனேகர் இந்த கருத்தை விமர்சிக்கிறார்கள், அதாவது "இது குறுகிய எண்ணமுடையது" என்றுச் சொல்கிறார்கள். ஆனால், இந்த யூத இனத்தில் தான் தேவன் தீர்க்கதரிசிகளை அனுப்பினார், வேதத்தை அருளினார் மற்றும் கடைசியாக உலகத்தின் அனைத்து மக்களுக்கும் இரட்சிப்பை தரும் மேசியாவாக வருவார் என்பதை இவர்கள் மறந்துப்போகிறார்கள். கடைசியாக, சமாரியர்கள் இயேசுவின் அன்பான கடிந்துக்கொள்ளுதலை ஏற்றுக்கொண்டு, "உண்மையாக அவரே உலகத்தின் இரட்சகர்" என்பதை அங்கீகரித்தனர்(யோவான் 4:42).

 
இயேசுவின் இந்த பெயரின் பொருளை(இரட்சகர்-Saviour) இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள், ஆனால், இயேசு (ஈஸா) என்ற பெயரை அல்லா தெரிந்தெடுத்து அதனை ஒரு தூதன் மூலமாக வெளிப்படுத்தினார் என்று குர்‍ஆன் சொல்கிறது. இயேசு என்ற பெயரின் பொருள் "தேவனே இரட்சகர்-God is salvation" என்று முஹம்மத் ஐ எ உஸ்மான் என்ற இஸ்லாமிய அறிஞர் "இஸ்லாமிய பெயர்கள்" என்ற புத்தகத்தில்(பக்கம் 77) அங்கீகரித்துள்ளார்.

 
இயேசுவே இறைவனின் ஒளி மற்றும் இரட்சகர் என்று நம்புகிறீர்களா?

 
உங்கள் கேள்விகள் சந்தேகங்களை எனக்கு அனுப்பு இங்கு சொடுக்கவும்.

 
 

வெள்ளி, 26 டிசம்பர், 2008

ஒரு முஸ்லீமுக்கு கிறிஸ்து எவைகளைத் தருகிறார்? - What Does Christ Offer to a Muslim?

ஒரு முஸ்லீமுக்கு கிறிஸ்து எவைகளைத் தருகிறார்?

What Does Christ Offer to a Muslim?

 
டல்லஸ் எம் ரோர்க்(Dallas M. Roark), Ph.D.
 
 
 
1. கிறிஸ்து தன்னையே தருகிறார், இதன் மூலம் இறைவனிடம் ஒப்புறவாகலாம்

 
Christ offers Himself, a relationship with Yahweh
 
 
இயேசு தன் வாழ்க்கையின் கடைசி கால கட்டத்தில் பரிசேயர்களுக்கு ஒர் உவமையைக் கூறினார்: "பின்பு அவர் ஜனங்களுக்குச் சொல்லத் தொடங்கின உவமையாவது: ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைத் தோட்டக்காரருக்குக் குத்தகையாக விட்டு, நெடுநாளாகப் புறத்தேசத்துக்குப் போயிருந்தான். அந்தத் தோட்டக்காரர் திராட்சத் தோட்டத்தின் கனிகளில் தன் பாகத்தைக் கொடுத்தனுப்பும்படி, பருவகாலத்திலே அவர்களிடத்தில் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான். அந்தத் தோட்டக்காரர் அவனை அடித்து, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள். பின்பு அவன் வேறொரு ஊழியக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் அடித்து, அவமானப்படுத்தி, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள். அவன் மூன்றாந்தரமும் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் காயப்படுத்தி, துரத்திவிட்டார்கள். அப்பொழுது திராட்சத்தோட்டத்தின் எஜமான்: நான் என்ன செய்யலாம், எனக்குப் பிரியமான குமாரனை அனுப்பினால், அவனையாகிலும் கண்டு அஞ்சுவார்கள் என்று எண்ணி, அவனை அனுப்பினான். தோட்டக்காரர் அவனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி, சுதந்தரம் நம்முடையதாகும்படிக்கு இவனைக் கொல்லுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு, அவனைத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளி, கொன்றுபோட்டார்கள். இப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் அவர்களை என்னசெய்வான்? அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை வேறு தோட்டக்காரரிடத்தில் கொடுப்பான் அல்லவா என்றார். அவர்கள் அதைக்கேட்டு, அப்படியாகாதிருப்பதாக என்றார்கள். அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று என்று எழுதியிருக்கிற வேதவாக்கியத்தின் கருத்தென்ன?"(லூக்கா 20:9-17).

 
இது தேவன் தன் பிரியமான மகனை அனுப்பிய ஒரு கதையாகும். தேவன் உங்களை நேசித்து தன் பிரியமான மகனை உங்களுக்காக அனுப்புகின்ற அன்பைக் காட்டிலும் வேறு பெரிய அன்பு இருக்கமுடியுமா? தேவன் தன் மக்களை தன்னிடமாய் இழுக்கும்படி பல தீர்க்கதரிசிகளை(நபிகளை) அனுப்பினார், இருந்தாலும், மக்கள் தேவனுக்கு எதிராகவே நடந்துக்கொண்டனர். மக்கள் தீர்க்கதரிசிகளை அடித்தார்கள், பல வகைகளில் அவமானப்படுத்தினார்கள், இருந்தாலும் தேவனின் பொறுமை மிகவும் சிறந்தது. அப்படியானால், தன் பிரியமான குமாரன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர் சிலுவையில் அறையப்பட்டார், மறுபடியும் உயிர்த்தெழுந்தார், இன்றும் உங்களுக்காக உயிரோடு இருக்கிறார். அவர் இன்னும் குமாரனாகவே இருக்கிறார். அவர்களிடம்(பரிசேயர்களிடம்) யார் பேசினாலும் உண்மைகள் ஒருபோதும் மனித கற்பனைகளாகாது.

 
கிறிஸ்து தன்னையே கொடுத்துள்ளார் மற்றும் இவர் மூலம் மட்டுமே நீங்கள் உண்மையாக இறைவனை உணர முடியும். "அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார். நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்" (யோவான் 14:9-11).

 
தேவனோடு நீங்கள் நல்லுறவை பெற இப்போதே மன்றாடலாம், அதாவது இயேசுவை உங்கள் வாழ்க்கையில் வரும் படி அழைத்தால் அதுவே போதும். நாம் பின்பற்றுவதற்கு கிறிஸ்து, சட்டங்கள் அடங்கிய ஒரு சட்டபுத்தகமல்ல, ஆனால், ஒரு மனிதனோடு நட்புறவு கொள்ள அவர் இன்னொரு மனிதனாவார். இயேசு கிறிஸ்துவைத் தவிர, அனைத்து நபிகளும் மரித்தார்கள், அகிலத்தின் அனைத்து பெருமைமிக்க அறிஞர்களும் மரித்தார்கள். இயேசு சிலுவையில் அறையப்பட்டார், மற்றும் உங்களுக்காகவும் எனக்காகவும் இன்னும் உயிரோடு இருக்கிறார். உண்மையிலேயே இறைவன் மீது உங்களுக்கு வாஞ்சை உள்ளதா? தேவன் உங்களை எவ்வளவு அதிகமாக நேசித்தார் என்றால், அவர் தன் இடத்தை விட்டு உங்களிடம் வந்துவிட்டார். இங்கு ஒரு பிரச்சனையை நீங்கள் கவனிக்கவேண்டும்: இயேசு தேவகுமாரன் என்பதைப் பற்றி குர்‍ஆன் சொல்வது சரியா அல்லது தவறா? இயேசு எப்படி இருக்கிறார் என்பதை அறிய நற்செய்தி நூல்களை படியுங்கள். அல்லாஹ் எப்படிப்பட்டவர் மற்றும் முஹம்மது எப்படிப்பட்டவர் என்பதை அறிய கு‍ர்‍ஆனை படியுங்கள். இந்த பிரச்சனைப் பற்றிய முடிவை நீங்களே தெரிந்துக் கொள்ளுங்கள். நீங்கள் எடுக்கவேண்டிய முடிவை, மற்றவர்கள் உங்களுக்குச் சொல்ல அனுமதியளிக்காதிருங்கள்.
 
 
 
2. கிறிஸ்து உங்களை மன்னிக்கிறார், மற்றவர்களையும் மன்னிக்கிறார்

Christ offers forgiveness for you and forgiveness to others
 
 
 
இயேசு தரும் அனேக பரிசுகளில் "மன்னிப்பு" என்பது ஒன்றாகும். ஒரு முறை தன் சீடர்களோடு அவர் "பஸ்கா பண்டிகையன்று" உணவு உண்கையில், பொதுவாக‌ உள்ள‌ ந‌டைமுறை ப‌ழ‌க்க‌த்தையும் தாண்டி, "நாம் கடைசி இரவு போஜனம்" என்றுச் சொல்லக்கூடிய அன்று ஒரு புதிய நடைமுறையை உண்டாக்கினார். மத்தேயு இதனை கீழ் கண்டவாறு விவரிக்கிறார்:

 
"அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. இதுமுதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடேகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள் வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்"(மத்தேயு 26:26-29).

 
இயேசு வானத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பு, தன் சீடர்களிடம் கூறினார்:"எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது; அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள்" (லூக்கா 24:46-48).

 
உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கு அறிவிக்கவேண்டிய இயேசுவின் நற்செய்தி "மனந்திரும்புதலும், பாவத்திற்கு பரிகாரமும்" என்பதைப் பற்றியதாகும். மனந்திரும்புதல் என்பது நாம் இப்போது சென்றுக்கொண்டு இருக்கும் திசையை திருப்பி கிறிஸ்துவிற்குள் தேவனின் திசைக்கு திரும்புவதாகும். மனந்திரும்புதல் என்பதை கட்டாயப்படுத்தியோ, அல்லது ஜிஹாத் மூலமாகவோ கொண்டுவரமுடியாது, மற்றும் இறைவனிடம் நல்லபெயர் வாங்குவதற்கு நாம் எடுக்கும் முயற்சியை மனந்திரும்புதல் என்று சொல்லமுடியாது. தேவன் உங்களுடன் ஒரு நல்ல உறவை வைத்துக்கொள்ள விரும்பினார், அதற்காகவே தன் குமாரனை உங்களுக்காக மரிக்க அனுப்பினார். இதன் மூலம் ஒரு புதிய உயிருள்ள உடன்படிக்கையை ஏற்படுத்துகிறார். இயேசுவின் மரணம் மூலமாக நிச்சயமாக மன்னிப்பும் உண்டு. கிறிஸ்துவிடம் தவிர வேறு எங்கும் இதை விட நல்ல விஷயம் காணவியலாது.

 
தேவனுடைய மன்னிப்பை நாம் பெற்றோம் என்பதற்காக ஒரு முக்கியமான சான்று உள்ளது, அது என்னவென்றால், "தேவன் உங்களை மன்னித்ததால் நீங்களும் அதே போல மற்றவர்களை மன்னிக்கவேண்டும்". இயேசு கூறினார்: "மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்" (மத் 6:15). இந்த வசனம், "பழிவாங்க வேண்டும்" என்ற எண்ணைத்தை அடியோடு அகற்றிவிடுகிறது, மற்றும் ஹானர் கில்லிங் என்றுச் சொல்லும் "கவுரவ கொலை- Honour Killing" என்ற கேவலமான பழக்கத்தை அடியோடு தகர்த்திவிடுகிறது. "மன்னிக்கவேண்டும் மற்றும் இரக்கம் காட்டவேண்டும்" என்ற அறைகூவலை இந்த வசனம் நம்முன் வைக்கிறது. "மற்றவர்களை மன்னிக்க முடியாது" என்று நீங்கள் சொன்னால், நிச்சயமாக உங்களை "இறைவன் மன்னிப்பார்" என்று நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது. இதர மக்களை மன்னிக்கும் சுபாவம் உங்களுக்கு இருக்குமானால், அதுவே உங்கள் பாவங்களிலிருந்து நீங்கள் மன்னிப்பை அடைந்து தேவன் பக்கமாக திரும்பியிருக்கிறீர்கள் என்பதற்காக முக்கியமான சான்று ஆகும்.
 
 
3. கிறிஸ்து முடிவில்லாத நித்திய வாழ்வை தருகிறார்

Christ offers everlasting life
 
 
ஏன் ஜிஹாதில் ஈடுபடுகிறார்? இதன் பயன் என்ன? இறைவனுக்காக உயிர்த்தயாகம் செய்வது எதற்காக? இவைகள் எல்லாம் இறைவனின் சொர்க்கத்தை அடைவதற்கான முயற்சிகள் அல்லவா? இயேசு மிகவும் மகிமையான சிறப்பான ஒன்றை தருகிறார். இவர் தன் முன் எப்போதும் வாழ்வதற்கான நித்திய வாழ்வை தருகிறார்.

 
ஒரு முறை இயேசுவிடம் ஒரு விசித்தரமான கேள்வியை கேட்டார்கள், அதாவது, ஒரு பெண் இருந்தாள் அவள் ஏழு ஆண்களை திருமணம் செய்துக்கொண்டால். முதல் கணவன் மரித்ததும், இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டாள், இப்படி ஏழு பேரை திருமணம் செய்துக் கொண்டாள், கடைசியாக எல்லாரும் மரித்துவிடார்கள். உயிர்த்தெழுதலின் நாளில் அவள் யாருடைய மனைவியாக இருப்பாள் என்பது தான் இயேசுவிடம் கேட்கப்பட்ட கேள்வி:

 
"இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் பெண்கொண்டும் பெண்கொடுத்தும் வருகிறார்கள். மறுமையையும் மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலையும் அடையப் பாத்திரராக எண்ணப்படுகிறவர்களோ பெண் கொள்வதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை. அவர்கள் இனி மரிக்கவுமாட்டார்கள்; அவர்கள் உயிர்த்தெழுதலின் பிள்ளைகளானபடியால் தேவதூதருக்கு ஒப்பானவர்களுமாய், தேவனுக்குப் பிள்ளைகளுமாயிருப்பார்கள்"(லூக்கா 20:34-36).

 
சொர்க்கத்தில்/பரலோகத்தில் மோகம் கொண்டு உடலுறவு கொண்டு குடித்து கும்மாளம் போடலாம் என்ற எண்ணமுள்ளவர்களுக்கு இயேசு எந்த அடிப்படையும் தரவில்லை. இஸ்லாமியர்களின் பார்வையின் படி சொர்க்கத்தில் 72 பெண்கள் கிடைப்பார்கள் என்பது தான் இஸ்லாமின் உயர்ந்த நிலை. ஆனால், உடலுறவு பசியை திருப்தியாக்குவதைக் காட்டிலும் மேன்மையானதும், இஸ்லாமிய மேன்மையிலும் ஆச்சரியமானதை தருவதைப் பற்றி இயேசு பேசுகிறார். இந்த வெளிப்பாடு தான் நம்மை அவரைப்போல மாற்றும் தன்மை உடையது.

 
தேவனின் படைப்பின் "குழந்தைகள் பிறப்பு" பற்றிய விவரங்களில் "உடலுறவு" என்பது ஒரு சிறிய பாகமாகும். சொர்க்கத்தில் குழந்தை பிறப்பு என்பது இருக்காது. உவ்வுலகில் மனிதர்கள் முக்கியமாக ஆண்கள், தங்கள் எண்ணங்களை முழுவதுமாக "உடலுறவு" சுற்றியே ஓடவிடுகின்றனர், இதர விஷயங்களுக்கு அவ்வளவு அக்கரை காட்டுவதில்லை. ஆனால், சொர்க்கத்தில் இறைவனின் பிரசன்னத்தில் நாம் இருக்கும் போது, அவ்வாழ்க்கை வெறுப்புள்ள சோர்வு நிறைந்த உயிரில்லாத மகிழ்ச்சியில்லாத வாழ்க்கையாக இருக்காது. இந்த உலகம் நல்லொழுக்கம் தவறிவிட்ட உலகம், இது சீக்கிரமாக கடந்து சென்று விடும். நமக்காக எதிர்காலத்தில் என்ன வைக்கப்பட்டு இருக்கிறது என்று நாம் சிந்தித்தால், நமக்காக புதிய பூமியும், புதிய வானமும் காத்துக்கொண்டு இருக்கிறது, அங்கு இயேசு தானே மகிமையுள்ளவராக இருப்பார். இந்த உலகம் மிகவும் அருமையானது மற்றும் ஆச்சரியமானது என்று நீங்கள் நினைப்பீர்களானால், இதையும் நினைத்துப்பாருங்கள், இவ்வுலகை படைத்த அதே தேவன் தனக்கு முன்பாக நாம் வாழ்வதற்கு நமக்காக ஆயத்தம் செய்த இடம் எவ்வளவு அழகானதாக இருக்கும்.

 
அப்போஸ்தலர் யோவான் எழுதுகிறார்: "பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்." (1 யோவான் 3:2). இயேசுவைப் பற்றி பவுல் கூறுகிறார்: "நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்"(கொலோ3:4).
 
 
4. கிறிஸ்து அன்பு நிறைந்த வாழ்க்கையைத் தருகிறார்

Christ offers a life of love
 
 
அன்பு என்றால் என்ன என்று நாம் அதன் உண்மை அர்த்தத்தை அறியவேண்டும். பல வேளைகளில் "அன்பு" என்பதை "காதல்,மோகம்" போன்றவற்றோடு தொடர்பு படுத்துகிறோம். கிரேக்க மொழியில் "அன்பு" என்ற வார்த்தைக்கு("Love" என்றுச் சொல்லும் ஆங்கில வார்த்தைக்கு) நான்கு விதமான வார்த்தைகள் உள்ளன. இரோஸ்(Eros) என்பது உடலுறவு என்ற வார்த்தையோடு தொடர்புடைய கிரேக்க வார்த்தையாகும். பிலே(Phileo) என்பது நட்புறவு என்ற வார்த்தையோடு தொடர்புடைய கிரேக்க வார்த்தையாகும்.

 
இந்த‌ இர‌ண்டு வார்த்தைக‌ள் அவ்வளவு சிறப்பானவைகள் அல்ல‌, ஏனென்றால், இவைக‌ள் இரு ந‌ண்ப‌ர்க‌ளிடையே அல்ல‌து ஒருவரை ஒருவர் காதலிக்கும் காதலர்களிடையே தானாக‌வே உருவாகும்.

 
மூன்றாவதாக, ஸ்டார்ஜ்(Storge) என்பது குடும்ப நபர்களிடையே இயற்கையாக உருவாகும் அன்பாகும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நேசிக்கிறார்கள், அதே போல பிள்ளைகளும் தங்கள் பெற்றோர்களை நேசிக்கிறார்கள் என்று நாம் சொல்லலாம். அகாபே(Agapao) என்பது புதிய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள "அன்பு" என்ற வார்த்தையாகும். இந்த அன்பு மனித வர்க்கம் மீது காட்டப்பட்ட அன்பாகும். இந்த அன்பு, மற்றவர்கள் மீது நம்பிக்கையும், மதிப்பையும் வைக்கும் அன்பாகும். இப்படிப்பட்ட அன்பைத் தான் தேவன் நம்மேல் வைத்துள்ளார். இந்த அகாபே அன்பது இவ்விதமாக விவரிக்கப்படும், "எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை"(1 கொரி 13:3).

 
இஸ்லாமியர் அல்லாதவர்களைக் கொல்லும் ஜிஹாதிக்களைப் பற்றி சிந்தித்துப்பாருங்கள், அவர்களுக்கு மற்றவர்களின் மீது அன்பும் இல்லை, ஜிஹாத் செய்வதினால், அவர்கள் பெற்றுக்கொள்வதும் எதுவுமில்லை.

 
அன்பு நம்மை உருமாற்றும். தேவனின் அன்பு ஒரு மனிதனை தன் பழைய வாழ்க்கையை விட்டுவிட்டு புதிய உருமாற்றமடைந்த வாழ்க்கையை இயேசுவைப் போல வாழ உதவும்.

 
"உன் எதிரிகளை நேசியுங்கள்" என்ற வாசகம் உங்களுக்கு முரண்பட்டதாக தோன்றலாம். ஆனால், இயேசு கூறினார்: "உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே. ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறது போல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்" (லூக்கா 6:35-36).

 
மேலே உள்ள வாசகம் சிலருக்கு பிரச்சனையாக இருப்பதற்கு காரணம் என்னவென்றால், "உங்கள் எதிரிகளை விரும்புங்கள்" என்று இவ்வசனம் சொல்வதால் தான். நீங்கள் உங்கள் எதிரிகளை நேசிப்பதற்கு அவர்கள் உங்களுக்கு விருப்பமானவர்களாக, பிடித்தவர்களாக இருக்கவேண்டிய அவசியமில்லை. உன் சத்துருக்களை நேசியுங்கள் என்று சொன்னதின் அர்த்தம் என்னவென்றால், "உங்கள் சத்துருக்கள் கூட மனிதர்கள் தான் என்பதை நாம் முதலாவது உணரவேண்டும்" என்பது தான். அவர்களுக்கும் பொதுவான தேவைகளாகிய உணவு, உடை, இருப்பிடம் என்பவைகள் தேவைப்படுகின்றன, எனவே இதனை நாம் உணரவேண்டும். உங்கள் எதிரி ஒரு தேவையில் இருப்பாரானால், உங்களுக்கு அகாபே என்ற அன்பு இருக்குமானால், நீங்கள் கட்டாயமாக அவனுக்கு உதவவேண்டும் என்பதைத் தான் இயேசு இங்கு சொல்கிறார்.

 
அன்பு உள்ளே வரும் போது பழிவாங்கும் மனப்பான்மை வெளியே சென்றுவிட்டதென்று பொருள். நமக்கு அன்பு இருக்குமானால், இஸ்லாமிய பார்வையின் கோட்பாடுகளாகிய "கவுரவ கொலை என்றும், சமுதாயத்தில் அவமானம் என்றும்" கருதிக்கொண்டு மற்றவர்களை துன்புறுத்தும் பழக்கவழக்கங்களை நாம் ஒதுக்கிவிட்டு, மற்றவர்களிடம் அன்புடன் நட்புறவு கொள்வதாகும் மற்றும் பழிவாங்குதல், வெறுப்பு காட்டுதல் போன்றவற்றை விட்டுவிட்டு நம்மை நாமே மாற்றிக்கொள்வதாகும்.
 
 
5. கிறிஸ்து பெண்மணிகளுக்கு கவுரத்தை தருகிறார்

Christ offers status for women
 
 
இயேசுவை பின்பற்றியவர்களில் பெண்கள் கூட இருந்தார்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது. சர்வதேச பைபிள் கலைக்களஞ்சியம்(The International Standard Bible Encyclopedia), நற்செய்தி நூல்களில் காணப்படும் பெண்களைப் பற்றி கீழ் கண்டவிதமாக கூறுகிறது:
 
 
"ஆரம்பத்திலிருந்தே, இயேசுவின் போதனைகளை பெண்கள் கேட்டு, அவருக்கு கீழ்படிந்தார்கள். லாசருவின் சகோதரிகளான மரியாளும் மார்த்தாளும் பெத்தானியாவில் இருக்கும் தங்கள் வீட்டை இயேசு தங்கி ஓய்வு எடுத்துக்கொள்ளும் அன்பான வீடாக மாற்றியிருந்தார்கள். சமுதாயத்தில் இருந்த அனைத்துமட்ட பெண்கள், இயேசு நன்மை செய்பவராகவும், நல்ல நண்பாராகவும் இருப்பதைக் கண்டார்கள். இவர்கள் இயேசுவின் பன்னிரண்டு சீடர்களோடு சேர்ந்து எப்போதும் இயேசுவின் ஊழிய பாதையில் ஒரு பட்டணத்திலிருந்து இன்னொரு பட்டணத்திற்குச் அவரோடு சென்றார்கள். இவர்களில் மேரி மகதலேனா என்ற பெண் கூட இருந்தார், இப்பெண் தன் தீய வாழ்க்கையிலிருந்து மனம் திரும்பியிருந்தார்(லூக்கா 8:2). இத‌ர‌ பெண்க‌ள் யார் என்றால், கூசாவின் ம‌னைவியாகிய‌ யோவ‌ன்னாளும், ம‌ற்றும் சூச‌ன்னாளும் அவ‌ர்க‌ளுடைய‌ ஆஸ்திக‌ளால் இயேசுவின் ஊழிய‌த்தின் தேவைக‌ளை ச‌ந்தித்தார்க‌ள்(லூக்கா 8:3). இவ‌ர்க‌ள் ம‌ட்டும‌ன்றி, தங்கள் தீய நடத்தைகளால் ச‌முதாய‌த்தால் ஒதுக்க‌ப்ப‌ட்ட‌ பெண்களையும் இயேசு அங்கீக‌ரித்து, அவ‌ர்களிடமிருந்து கூட‌ பெண் இனத்தில் காணப்படும் நல்ல குணங்களை வெளிக்கொணர்ந்து கிறிஸ்த பக்தி மார்க்கத்தில் வளர இயேசு உதவி புரிந்தார்(லூக்கா 7:37-50). தாய்மார்கள் தங்கள் பிள்ளைகள் இயேசுவினால் ஆசீர்வதிக்கபடுவதை கண்டு இரசிக்கும் பாக்கியத்தைப் பெற்றார்கள்(மாற்கு 10:13-16). அதே போல தங்கள் மரித்த பிள்ளைகளை அவர் உயிரோடு எழுப்பும் காட்சியை கண்டும் ஆனந்தித்தார்கள்(லூக்கா 7:12-15). இயேசுவின் கடைசிப் பயணமான கலிலேயாவிலிருந்து எருசலேமுக்குச் சென்ற பயணத்திலும் பெண்கள் அவரோடு வந்தார்கள், மற்றும் கலவாரிக்குச் சென்ற அந்த வழியிலும் கூட பெண்கள் அவருக்கு ஊழியம் செய்தார்கள்(மத்தேயு 27:55, மத்தேயு 27:56).

 
பெண்கள் அவரது சிலுவையறையப்படுதலைக் கண்டு அவருக்கு சாட்சிகளானார்கள்(லூக்கா 23:49), கல்ல‌ரையில் வைக்க அவரது உடலை கொண்டு போனபோது கூட பெண்கள் சென்றார்கள்(மத்தேயு 27:61, லூக்கா 23:55); அவரது உடலில் பூசுவதற்கு நறுமனங்களை தயார் செய்து கொண்டுவந்தார்கள்(லூக்கா 23:56); அவர் உயிர்த்தெழுந்த நாளில் அவரது கல்லரைக்கு முதலில் சென்றவர்களும் பெண்கள் தான்(மத்தேயு 28:1, மாற்கு 16:1, லூக்கா 24:1, யோவான் 20:1); இயேசு உயிர்த்தெழுந்து முதன் முதலில் காணப்பட்டது பெண்களுக்குத் தான்(மத்தேயு 28:9, மாற்கு 16:9, யோவான் 20:14). இப்படி விசுவாசிகளான பக்தியுள்ள பெண்களில் மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமியும் இருந்தார்கள்(மத்தேயு 27:56), யோவன்னாளும், மற்றும் பெயர் குறிப்பிடப்படாத ஒரு ஸ்திரியும் இருந்தார்(லூக்கா 24:10). தெரிந்துக்கொள்ளப்பட்ட சீடர்களுக்கு இயேசு உயிர்த்தெழுந்தார் என்ற செய்தியைச் சொல்லும் பாக்கியத்தைப் பெற்றவர்களும் பெண்கள் தான்(லூக்கா 24:9, லூக்கா 24:10, லூக்கா 24:22).

 
இப்பெண்களில் இயேசுவின் தாயும் அடங்குவார்கள். மற்றும் மேலறையில் எல்லாரோடும் சேர்ந்து ஜெபத்தில் தரித்திருந்து, பெந்தேகோஸ்தோ அனுபவத்தைப் பெற்ற 120 பேர்களில் இயேசுவின் தாயும் ஒருவராவார்(அப் 1:14); முதன் முதலில் கிறிஸ்தவத்தை தழுவியவர்களில் பெண்களும் இருக்கிறார்கள்(அப் 8:12); ஆரம்ப திருச்சபை கஷ்டங்களில், பாடுகளில் பெண்கள் பங்கு பெற்றார்கள்(அப் 9:2). புதிய விசுவாத்தை எதிர்த்த யூத எதிரிகள் பல கனம்பொருந்திய‌ பெண்களின் உதவியுடன் பவலையும் பர்னபாசையும் துன்பப்படுத்தினார்கள்(அப் 13:50); அதே நேரத்தில் கிரேக்கரான கனம்பொருந்திய பெண்கள் கிறிஸ்தவ விசுவாசிகளாகி நற்குணசாலிகளாக இருந்தார்கள்(அப் 17:12). இயேசுவின் மூன்று வருட ஊழியத்திலும், சிலுவையின் அடியிலும், கல்லரையில் வைக்கப்படுதலிலும், பெண்கள் தங்கள் உண்மையை நேர்மையை நிருபித்தார்கள், இதுவே இவர்களின் பக்தியை வெளிப்படுத்தின...1
 
 
மேலே சொல்லப்பட்ட பெண்கள் பற்றிய செயல் விவரங்களை ஒருவர் காணும்போது, பெண்களுக்கு இருந்த சுதந்திரத்தை காணமுடியும். அவர்களுக்கு சுயமாக‌ முடிவு எடுக்கும் சுதந்திரம், தங்கள் மதசெயல்பாடுகளில் ஈடுபடும் சுதந்திரம் இருப்பதை காணமுடியும். இவைகளில் எந்த இடத்திலும் பெண்கள் மீது கணவன்மார்கள் அதிகாரம் செலுத்தியதாக காணமுடியாது.

 
கிறிஸ்தவ நம்பிக்கையில் பிறப்பு, அழகு மற்றும் இனம் போன்றவைகளின் அடிப்படையில் ஒருவர் இன்னொருவரை விட மேலானவர் என்று எண்ணுவதற்கு இடமில்லை. நாம் அனைவரும் நம் குறைகளை ஒப்புக்கொண்ட பாவிகள் தாம். நாம் அனைவரும் இயேசுவின் கிருபையினால் காப்பாற்றப்பட்டுள்ளோம் (இரட்சிக்கப்பட்டுள்ளோம்). ஒரு மனிதனுக்கு கிறிஸ்துவில் கிடைக்கும் அதே உரிமையே மற்றவர்களுக்கும் கிடைக்கும். உலகத்தில் பெண்கள் இரண்டாம் நிலை குடிமக்களாகவே கருதப்படுகிறார்கள். இயேசுவின் நற்செய்தி என்னவென்றால், கிறிஸ்துவிற்குள் எல்லாரும் சமம் மற்றும் ஒருவருக்கு கிடைக்கும் அதே உரிமையை மற்றவர்களும் அனுபவிக்கலாம் என்பதேயாகும்.

 
பெண்களை ஆபசமாக்கி அவர்களை துன்புறுத்துவதை கிறிஸ்தவ நம்பிக்கை ஒருபோதும் அனுமதிக்காது. தேவன் ஆணையும் பெண்ணையும் ஒருவரை ஒருவர் நேசிக்கும் வண்ணமாகவே படைத்தார். ஒரு கணவன் தன் மனைவியுடன் தாம்பத்தியம் நடத்தமாட்டேன் என்றுச் சொல்லி, நிரந்தரமாக அவளுக்கு தேவையான தாம்பத்திய உறவு சந்தோஷத்தை கொடுக்காமல் இருப்பது, எதற்கு சமம் என்றால், "நம்மைப் படைத்த இறைவனிடம், இறைவா நீ ஒரு பெரிய தவறு செய்தாய், நான் அதை திருத்திக்கொண்டு இருக்கிறேன்" என்றுச் சொல்வதற்கு சமமாகும். பெண்களுக்கு தங்கள் கணவர்களை தெரிந்தெடுக்கும் உரிமையை தரவேண்டும், இப்படிப்பட்ட உரிமை மத்திய கிழக்கு நாடுகளில் சில நேரங்களில் மறுக்கப்படுகிறது. ஈசாக்கின் திருமண வேலையாக ஆபிகாமின் முன்னோர்களின் நாட்டிற்கு ஆபிரகாமின் ஊழியக்காரர் சென்று பெண் கேட்கிறார், இதனை ஆதியாகமம் 24:57-58 இவ்விதமாகச் சொல்கிறது "அப்பொழுது அவர்கள்: பெண்ணை அழைத்து, அவள் வாய்ப்பிறப்பைக் கேட்போம் என்று சொல்லி, ரெபெக்காளை அழைத்து: நீ இந்த மனிதனோடேகூடப் போகிறாயா என்று கேட்டார்கள். அவள்: போகிறேன் என்றாள்"(ஆதி 24:57-58). இந்த உரிமை தான் இன்றும் கிறிஸ்தவத்தில் நிலைத்திருக்கிறது.

 
பைபிளின் கூற்றுப்படி, கணவனும் மனைவியும், "நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து, தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்"(எபே 5:20-21) என்று அறிவுரை கூறப்படுகிறார்கள். கிறிஸ்துவிற்கும் அவரது சபைக்கும்(சர்ச்) இடையேயுள்ள உறவை, ஒரு கணவனுக்கும் அவனது மனைவிக்கும் இடையேயுள்ள உறவுமுறையோடு ஒப்பிடப்படுகிறது. "ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும். புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார். அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்"(எபே 5:24-28).

 
கிறிஸ்து எப்படி தன் சபையை நேசித்து தன்னைத்தானே கொடுத்தாரோ அது போல கணவர்கள் தங்கள் மனைவிகளை நேசித்து தங்களைத் தாங்களே கொடுக்கவேண்டும். இந்த வரிகள் தான் பெண்களை கவுரவிக்கும் வரிகள், அவர்களை சந்தோஷப்படுத்தும் வரிகளாகும், அன்புடனும் பொறுமையுடனும் அவர்களை நேசிக்கச்சொல்லும் வரிகளாகும். மனைவிகளை கொடுமைப்படுத்துவதற்கும், அடிப்பதற்கும், அவ்வளவு ஏன், தங்கள் சொந்த மனைவிகளை கற்பழிப்பதற்கும் எந்த ஆதாரமும் அதிகாரமும் கிறிஸ்தவத்தில் இல்லை.

 
முடிவுரையாக, தேவன் உங்களை நேசிப்பது என்பது மிகவும் ஆச்சரியமானது, மற்றும் இந்த உணர்வு உங்கள் இருதயத்திற்கு மகிழ்ச்சியைத் தரும். மகிழ்ச்சி அல்லது சந்தோஷம் என்ற வார்த்தைகள் புதிய ஏற்பாட்டில் அடிக்கடி காணும் வார்த்தையாகும். பிலிப்பு சபைக்கு பவுல் கீழ் கண்டவிதமாக நியாபகப்படுத்துகிறார் "கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்" (பிலிப்பியர் 4:4). இயேசுவை நீங்கள் சந்தித்தால், உங்கள் மகிழ்ச்சி இரட்டிப்பாகும், மற்றும் அவர் உங்களை எவ்வளவு நேசிக்கிறார் என்பதையும் அறிவீர்கள்.

 

 

பின்குறிப்பு:

1 The International Standard Bible Encyclopedia, 1929 Edition, available online from E-Sword. This quotation is taken from the entry "Women".

English Source: http://www.answering-islam.org/authors/roark/christ_offers_muslims.html
 
 

திங்கள், 22 டிசம்பர், 2008

தேவன் தம்மை எவ்விதம் வெளிப்படுத்துகிறார்? How does God reveal Himself?

தேவன் தம்மை எவ்விதம் வெளிப்படுத்துகிறார்?

How does God reveal Himself?
 
 
இஸ்லாமிய‌ரும் கிறிஸ்தவர்களும் ஆபிரஹாமின் விசுவாசத்தை ஒரே மாதிரியாகக் காத்துக் கொள்கிறார்கள். இவ்விரு பிரிவினரும், தங்கள் தீர்க்கதரிசிகள் மூலமாக தங்கள் தேவன்/அல்லா இறக்கிய வெளிப்பாடுகள் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றுச் சொல்கிறார்கள். ஆனால் இவர்கள் வெளிப்பாடு என்ற வார்த்தைக்கு என்ன பொருள் கொள்கின்றனர்? மெய்யான ஒரே தெய்வத்தினை வழிபடுதலையே நாடும் நாம் அனைவரும் கடவுள் தான் தம்மை நமக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஒப்புக்கொள்கிறோம். நம்முடைய சொந்த முயற்சியினால் நாம் அவரைக் கண்டுகொள்ள முடியாது, அதனால் தம்மை வெளிப்படுத்த அவரே வேண்டும். கடவுள் தம்மை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்?
 
 
குர்‍ஆன் 42:51-52 "அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் வஹீயாகவோ அல்லது திரைக்கப்பால் இருந்தோ அல்லது தான் விரும்பியதைத் தன் அனுமதியின் மீது வஹீயை அறிவிக்கக் கூடிய ஒரு தூதரை அனுப்பியோ அன்றி (நேரிடையாகப்) பேசவதில்லை நிச்சயமாக அவன் உயர்ந்தவன்; ஞானமுடையவன்.

 
(நபியே!) இவ்வாறே நாம் நம்முடைய கட்டளையில் ஆன்மாவானதை (குர்ஆனை) வஹீ மூலமாக உமக்கு அறிவித்திருக்கிறோம்; (அதற்கு முன்னர்) வேதம் என்பதோ ஈமான் என்பதோ என்னவென்று நீர் அறிபவராக இருக்கவில்லை - எனினும் நாம் அதை ஒளியாக ஆக்கி, நம் அடியார்களில நாம் விரும்பியோருக்கு இதைக் கொண்டு நேர்வழி காட்டுகிறோம் - நிச்சயமாக நீர் (மக்களை) நேரான பாதையில் வழி காண்பிக்கின்றீர்."

வெளிப்பாடு குறித்த இஸ்லாமியரின் பார்வை
வெளிப்பாடு குறித்த கிறிஸ்தவ‌ரின் பார்வை
இயேசு கிறிஸ்து, தேவ‌னின் வார்த்தை
சரியான ஒப்பிடுதல்

 
வெளிப்பாடு குறித்த இஸ்லாமியர்களின் பார்வை

The Islamic View of Revelation
 
 
மனோரீதியான தூண்டுதலினாலன்றி(Inspiration) மனிதரிடம் அல்லா நேரிடையாகப் பேசுவதில்லை என சூரா 42:51-52 தெளிவாகச் சொல்கிறது. இக்காரணத்தினாலேயே, "அனுப்பப்பட்டவர்" எனப் பொருள்படும் ரசூல் என்றழைக்கப்படும், நபிகளாக‌ நியமிக்கப்பட்டவர்களின் மூலமாக அல்லா தம்மை வெளிப்படுத்துகிறார். இந்த நபிகள் வெறும் மனிதர்கள் தாம், எனவே ஒரு வரம்புக்கு உட்பட்டவர்களே (சூரா 80:1-3). இஸ்லாமில் வெளிப்பாடு(Revelation) என்பது கடவுளிடமிருந்து மனிதர்களுக்கு நபிகள் மூலமாக வருவதே. இஸ்லாமின் படி, இறுதி வெளிப்பாடு என்று இஸ்லாமியர்களால் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் வெளிப்பாடே குர்‍ஆன் என்பது. இது முஹம்மதுவிற்கு கி.பி. 610 - 632 ல் காபிரியேல் தூதன், வார்த்தைக்கு வார்த்தை இறங்குதல் என்பதாக, Nazil எனப்படும் (கீழிறங்கி வரும் Tanzil) முறையில் வெளிப்படுத்தப்பட்டது.

 
சொர்க்கத்தில் இருக்கும் கற்பலகைகளை (சூரா 85:21-22) பற்றி கவனிப்போம். குர்‍ஆன் நிரந்தரமாகப் பதிவு செய்யப்பட்டு இருக்கும் இப்பலகைகள், உண்டாக்கப்பட்டவை அல்ல, இவைகள் நிரந்தரமானவைகள். அல்லா, அளவிட முடியாதவரும் அற்புதமானவருமாய் இருப்பதினால், அவருடைய வார்த்தையும் வெளிப்பாடுகளும் அளவிட முடியாதவையும் அற்புதமானவையுமாய் இருக்கின்றன. முகமதுவின் மூலமாகக் கொடுக்கப்பட்ட இந்த இறுதி வெளிப்பாடு தெய்வீகமானது; எனவே மனிதர்களின் மதிப்பீட்டிற்கும் சர்ச்சைக்கும் அப்பாற்பட்டது. இதன் அர்த்தம் என்னவென்றால், இப்பொழுது நம் கையில் இருக்கும் குர்‍ஆன், இன்றும் என்றும் ஒரு எழுத்தும் மாறக்கூடாதபடி அசலாயும் இறுதியாயும் இருக்கும் என்பதே.

 
நாம் அல்லாவின் குர்‍ஆனுக்கு, அத‌ன் வாச‌க‌ங்க‌ளைப் ப‌ற்றிக் கேள்வியேதும் கேட்காம‌ல் அடிப‌ணிய‌ வேண்டும். ஒரு அடிமை, த‌ன் எஜ‌மானிட‌ம் கேள்வி கேட்க‌ முடியுமா? முடியாதல்லவா, அதுபோன்றே, ஒரு முஸ்லிம் குர்‍ஆனைப் ப‌ற்றி வின‌வ‌ முடியாது.

 
இந்தக் கட்டத்தில், முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களைப் பார்த்து, "உங்களுடைய புத்தகம் எப்படி?" எனக் கேட்கிறார்கள். நாமும் குர்‍ஆனையும் பைபிளையும் ஒப்பிடுவோம்.
 
 
வெளிப்பாடு குறித்த கிறிஸ்தவர்களின் பார்வை

The Christian View of Revelation
 
 
துரதிர்ஷ்டவசமாக, இந்த விஷயம், தவறான அடிப்படையில் ஆரம்பிக்கப்படுகிறது. கிறிஸ்தவர்களைப் பொருத்தமட்டில், வெளிப்படுத்துதல் தொடர்பான‌ அவர்களின் கருத்தில் இருந்து பைபிள் மற்றும் குர்‍ஆனின் ஒப்பீடு சற்றுக் குறைவுபடுகிறது.

 
கிறிஸ்தவர்கள் புரிந்துகொண்டுள்ளபடி, தேவன் ஒரே ஒரு வழியின் மூலமாக அல்லாமல், பல வழிகளில் பேசியிருக்கிறார்:
 
 
1. படைத்தல்(Creation): இயற்கை, இது தெய்வீக வேலைப்பாட்டின் வெளிப்பாடு.

2. கிரியைகள்(Action): அதிசயப்படத்தக்க அற்புதங்க‌ள் மூலமாக பல வழிகளில் தேவன் மனித காரியங்களில் நேரடியாக இடைபட்டிருக்கிறார்.

3. தீர்க்கதரிசிகள்(Prophets): அவர்களுக்கு அருளப்பட்ட வார்த்தைகள் மூலமாக‌.

நாம் இந்த வெளிப்படுகளைப் பெற்றிருக்கிறோம். ஆனால், ஏதேன் தோட்டத்தில் ஆதாமின் கீழ்படியாமையினால் நாம் பாவிகளானோம். இது நம் மனதினைக் குருடாகி, தேவனை நாம் காணக்கூடாதபடி செய்தது.(2 கொரிந்தியர் 4:4). இவ்விதமாய், மனுக்குலம் முழுவதும் தொடர்ந்து தேவனைப் புரிந்துகொள்ளத் தவறியது. இந்தப் பாவத்தினாலே விக்கிரக ஆராதனை ஆரம்பித்தது. மெய்யான ஒரே தேவனைப் பற்றிய அறிவினை நாம் ஒருபோதும் பற்றிக் கொள்ளவில்லை.

 
இதன் காரணமாக, தேவன் இறுதியான வழியினைத் தெரிந்துகொண்டார். அவர் நம்மில் ஒருவராகி, தமக்காகத் தாமே பேசினார். அவர் தேவனாய் இருப்பதினால், அவரே அவரை நமக்கு வெளிப்படுத்த முடியும். தேவன் ஒருவரே தேவனுக்காய்ப் பேச முடியும். தேவன் யார் என்று நீங்கள் எனக்குச் சொல்ல முயன்றால் நீங்கள் தோற்றுப் போவீர்கள். நானும் ஒன்றும் பெரிதாய்ச் சொல்லிவிட முடியாது, ஏனெனில், பாவியான ஒரு சாதாரண மனிதனால் தேவன் உண்மையில் எப்படிப்பட்டவர் என்பதில் திரித்தே தான் கூற முடியும். அவரைப் பற்றி அவரே தான் வெளிப்படுத்த வேண்டும்; ஏனெனில் இடையிலுள்ள அனைவரும் அவர் போன்ற அளவிட முடியாத பரிசுத்த ஞானத்தில் மிகவும் குறைவு பட்டவர்களே. எனவே அவர் பேசிய நான்காவது வழி இதுவே:

4. தேவ‌னின் அப்ப‌ழுக்க‌ற்ற‌ ப‌ரிபூர‌ண‌மான‌ வார்த்தையாகிய இயேசு தேவ‌ன் யார் என்ப‌தை ந‌ம‌க்குக் காண்பித்தார்.
 
 
இயேசு கிறிஸ்து, தேவ‌னின் வார்த்தை

Jesus Christ, the Word of God
 
 
தாம் யார் என்ப‌தை ம‌னித‌ருக்கு வெளிப்படுத்திய‌தில் இயேசு கிறிஸ்து தேவனுக்குக் கீழான‌வர் அல்ல, அவ‌ர் தேவனுக்கு சமமானவர். அனைவரையும் ஒதுக்கிவிட்டு தேவ‌னே த‌ம‌க்காக‌ப் பேசுகிறார். நிச்சயமாக, கிறிஸ்துவில் ம‌ட்டுமே அவ‌ர் அறிய‌ப்ப‌டுகிறார்.

 
இயேசுவே இதனை அறிவித்தார். இயேசுவின் சீடராகிய அப்போஸ்தலர் பிலிப்பு ஒருமுறை தேவனை அறிய விரும்பினார். அதற்கு இயேசு,
 
 
பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?

நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்." என்றார் (யோவான் 14:9-10)
 
 
இப்போது நாம் இயேசுவின் வெளிப்பாடினை கடவுளின் ஏனைய வெளிப்பாடுகளுடன் ஒப்பிடுவோம்

 
1. படைப்பு தேவனின் மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆனால் விக்கிரக ஆராதனைக்காரர்களும், இதர தெய்வங்களை வணங்குகிறவர்களும்(Pagans) கூட இதைச் சொல்கிறார்கள்! இவர்கள், "தேவன்/இறைவன் யார்" என்று அறிந்துகொண்டார்கள் என நாம் கூற முடியுமா? இல்லை, தேவனைப் பற்றி அறிந்துகொள்ள வெறும் இயற்கையை விட அதனினும் மேலானவையும் தேவை(No, they need more than just nature to tell them what God is like).

2. அற்புதங்கள், ஒரு தீர்க்கதரிசி தேவனிடமிருந்து வந்தவர் என்பதை உறுதி செய்கிறது. ஆனால், கள்ளத் தீர்க்கதரிசனம் உரைப்பவர்களைப் பாருங்கள், அவர்கள் அனேகம் தேவர்கள் உள்ளார்களென்றும், சில வேளைகளில் தாங்க‌ளே தேவர்களென்றும் அறிக்கை செய்கின்றனர்! இந்துக்கள் மற்றும் புத்த மதத்தினரின் தீர்க்கதரிசிகள், அற்புதங்க‌ள் செய்து, நம்பாதவர்களைக் கூட ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றனர். ஆனால், இத்தகைய அதிசயங்கள் தேவனைப் புரிந்துகொள்ளப் போதுமானவையா? இல்லை, நமக்கு அற்புதங்களைக் காட்டிலும் அதிகம் தேவை.

3. பைபிள், தீர்க்கத்தரிசிகளின் மற்றும் தூதர்களின் செய்திகளின் தொகுப்பாகும். அது எள்ளளவும் தவறே இல்லாத, தவறவே முடியாத தேவனின் வார்த்தையாகும். இயேசு கிறிஸ்துவில் தேவனின் வெளிப்பாடு அது. முழு பைபிளும் தேவனைப் பற்றிப் பேசுவதாகவே இயேசு போதித்தார். "வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; ... என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே"(யோவான் 5:39), பைபிள் ந‌ம‌து புரிந்துகொள்ளுத‌லின் முடிவ‌ல்ல‌. அது ஒரு ஆர‌ம்ப‌ இட‌மே, அதாவ‌து, அது இயேசு கிறிஸ்துவை நோக்கிச் சுட்டிக்காட்டும் ஓர் கைகாட்டி. எனினும், ந‌ம்முடைய‌ ம‌னித‌ மூளையினால், மிக‌வும் ப‌க்தியோடும், அதிக‌ அக்க‌ரையோடும் நாம் என்ன‌ தான் ஆராய்ச்சி செய்தாலும், தேவ‌னைப் ப‌ற்றி முழுவ‌துமாக‌ நாம் அறிந்துக் கொள்ள‌முடியாது.(Yet our human minds cannot discover God by any investigation of a book, no matter how devout, serious or religiously committed that investigation is). எனவே, தேவ ஆவியின் (ruh-allah) மூலம் இயேசு கிறிஸ்துவை பைபிளின் வார்த்தைகளில் நாம் கண்டுபிடிக்கிறோம்.
 
 
இது இஸ்லாமியருக்குக் குழப்பமாகத் தோன்றலாம்; அல்லது பயமுறுத்துவது போன்றும் இருக்கலாம். இவ்வுண்மையை அவர்களுக்கு விளக்க, நமக்கு ஒரு வித்தியாசமான கோணம் தேவைப் படுகிறது. பலர் ஆராய‌ முனைவது போல குர்‍ஆனை பைபிளுடன் ஒப்பிடாமல், அதனை இயேசுவுடனாக ஒப்பிடுவது அதிக பலனுள்ளதாய் இருக்கும். ஏனெனில் இரண்டும் கடவுளின் வார்த்தை என்பது மட்டுமல்லாமல் மனிதர்களுக்குக் கடவுளின் உண்மையான வெளிப்பாடாகவும் நிலை நிற்கின்றன‌.
 
 
சரியான ஒப்பிடுதல்

Better Comparisons
 
 
கால‌ங்காலமாக, பல இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும், முஹம்மதுவை இயேசுவோடும், மற்றும் கு‍ர்‍ஆனை பைபிளோடும் ஒப்பிட்டு வந்துள்ளனர். (கீழேயுள்ள பட்டியலைப் பார்க்கவும்)
 
 
முந்தய ஒப்பீடுகள் ஏனெனில் இவை இரண்டும்
(இவர்கள் இருவரும்)
கு‍ர்‍ஆன்-பைபிள் ஒப்பீடு ...புத்தகங்கள்
முஹம்மது-இயேசு ஒப்பீடு ...மனிதர்கள்


 
ஆங்கிலத்தில்

 
OLD COMPARISONS Because both are...
Qur'an compared to Bible ...books
Muhammad compared to Jesus ...men
 
 
 
இஸ்லாமியரும் கிறிஸ்தவரும் சிறப்பான முறையில், ஒருசில விவாதங்களையே நடத்தியுள்ளனர் என்பதில் ஆச்சரியம் இல்லை! இஸ்லாமின் மற்றும் கிறிஸ்துவத்தின் பொதுவான தன்மைகளை ஒப்பிட்டுப் பார்ப்பது அவைகளை நன்முறையில் விளங்கிப் புரிந்துகொள்ள ஏதுவாகும். ஒப்பிடுவ‌த‌ற்கேதுவான‌ இத்த‌ன்மைக‌ளின் பிரிவுக‌ள் (1)குர்‍ஆனும், இயேசுவும், (2)முஹம்மதுவும், இயேசுவின் அப்போஸ்த‌ல‌ரும், ம‌ற்றும் (3) பைபிளும், ஹ‌தீஸ்க‌ள்/தரிக்ஹ், சீராக்க‌ள் ம‌ற்றும் உரைக‌ள் இவைக‌ளும் ஆகும், (ப‌ட்டிய‌லைப் பார்க்க‌வும்).
 
 
 
முன்னிலும் சிறந்த ஒப்பீடு ஏனெனில் இவை இரண்டும் இவ்வாறாகக் கருதப்படுகின்றன‌ ...
குர்‍ஆனும், இயேசுவும் ...க‌ட‌வுளின் நித்திய‌ வெளிப்பாடு
முஹம்மதுவும், இயேசுவின் அப்போஸ்த‌ல‌ரும் ...வெளிப்பாட்டின் செய்தியினை அறிவித்த‌வ‌ர்க‌ள்
பைபிளும், ஹ‌தீஸ்க‌ள்/தரிக்ஹ், சீராக்க‌ள் ம‌ற்றும் உரைக‌ள் ஆகிய‌ இவைக‌ளும் ...வெளிப்பாட்டின் வ‌ர‌லாறும் போத‌னைக‌ளும் செய்திக‌ளும்


 
ஆங்கிலத்தில்

 
BETTER COMPARISONS Because both are regarded as...
Qur'an compared to Jesus ...the eternal revelation of God
Muhammad compared to Jesus' Apostles ...messengers of the revelation
Hadith, Tarikh, Sira and Tafsir compared to the Bible ...the history and teachings of the revelation and messengers
 
 
 
 
இது ஒருவரையொருவர் புரிந்துகொள்ள உதவியாயிருக்கும் என்ற அதே வேளையில், நாம் ஒன்றினைக் கவனமாக மனதிற் கொள்ள வேண்டும். அதாவது, புதிய ஏற்பாடு இயேசுவைப் பற்றியே பிரதானமாகப் பேசினாலும், அவருடைய வாழ்க்கை நடைமுறைகளைப் பற்றி அதில் அதிகம் சொல்லப்படவில்லை. மாறாக, ஹதீஸ்களும் சூராவும், முகமதுவின் வாழ்க்கை முறைகளை அவர் என்ன செய்தார் என்பன போன்றவற்றை அவர் கூறியவற்றின் விளக்கங்களுடன் விவரமாகச் சொல்கின்றன‌.

 
கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியருக்குள்ளான இறைவனின் வெளிப்பாடு தொடர்பான ஒரு விவாதத்தில் நாம் ஈடுபடுவோமேயானால், அதில் இயேசு கிறிஸ்துவையும் குர்‍ஆனையும் மட்டுமே ஒப்பிடுதல் வேண்டும், பைபிளையும் குர்‍ஆனையும் அல்ல. அதாவது, நாம் பைபிளை அல்ல, மாறாக இயேசு கிறிஸ்துவையே நிச்சயமான தேவனின் வெளிப்பாடாகக் கொள்ள வேண்டும். இயேசு தான் தேவனின் இறுதி வார்த்தை. தேவனின் ஆவி மூலமும் பைபிளின் எழுதப்பட்ட வார்த்தையின் மூலமாகவும் நம் தனிப்பட்ட அனுபவத்தின் மூலமாகவும் இன்றும் நாம் காணக்கூடியவர் அவரே.

 
இக்காரணத்தினாலேயே, நாம் பைபிளை, தேவனால் அருளப்பட்ட பிழையற்ற‌ தேவ வார்த்தை எனவும், இயேசுவின் பிறப்பு, வாழ்க்கை மற்றும் உயிர்த்தெழுதலின் சரித்திரம் முழுவதிலும் அது செயலாற்றுகிறது எனவும் மதிக்கிறோம். விசுவாசத்தின் மூலம் நாம் அவரை அணுகும்போது தேவனை அவர் நமக்கு வெளிப்படுத்துவார். தேவன், மனிதர்களின் வார்த்தைகட்கு மிகவும் அப்பாற்பட்டவர். அவரின் வார்த்தையினாலன்றி எதினாலும் அவரை வெளிப்படுத்த முடியாது.

 
தேவ ஆவியானவர் தாமே தேவனைத் தேடுபவர்களுக்குத் தம்மை வெளிப்படுத்த இயேசு கிறிஸ்துவிடமே அழைத்துச் செல்கிறார். வெறும் மனிதர்களின் வார்த்தைகளில் மட்டுமே போலியான கடவுளின் வெளிப்பாட்டைக் கண்டு திருப்தி அடைவோர் வீண் நம்பிக்கையை வளர்க்கட்டும், தடையில்லை, ஆனால் தாமே சுயமாக வெளிப்படுத்தும் தேவனைச் சந்திப்பதைத் தவிர நாம் வேறெதிலும் திருப்தியடைய மாட்டோம்.

 
இப்புதிய ஒப்பிடுதலின்படி, இயேசு மற்றும் குர்‍ஆன் இரண்டிற்கும் எந்த விதப் பொருத்தமும் இல்லை. குர்‍ஆன் என்பது ஒரு சாதாரணப் புத்தகம் தான். அதன் ஆதாரம் ஒரு அநித்தியமான பாவமுள்ள மனிதனின் தோளின் மீது சுமத்தப்பட்டுள்ளது(சூரா 80:1-3). இது இஸ்லாமியராலும் கிறிஸ்தவராலும் ஒரு மனதாய்ப் பாவமற்றவர் எனக் கருதப்படும் இயேசுவுக்கு எவ்வகையிலும் நிகராகாது. அவரின் வார்த்தையின் படியே அவர் தேவன் தான் என்பது பூரணமான வெளிப்பாடு.

In light of these new comparisons, there is no match between the two revelations, Jesus and the Qur'an. The Qur'an is merely a book whose authenticity rests solely on the shoulders of one finite and sinful man (Sura 80:1-3). It is no match against Jesus, revered by Muslims and Christians alike as sinless, who, according to His word, is God Himself, the perfect revelation.
 
 
"பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம் பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக் கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்."(எபிரெயர் 1:1-2)


English Source: http://debate.org.uk/topics/trtracts/t08.htm
This pamphlet was compiled by an interdenominational group of evangelical Christians concerned with Muslim-Christian dialogue.
 
 

ஞாயிறு, 21 டிசம்பர், 2008

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் இஸ்லாமியர்களே! - Merry Christmas to Muslims!

 

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் இஸ்லாமியர்களே!


Merry Christmas to Muslims!

 
وَالَّتِي أَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهَا مِنْ رُوحِنَا وَجَعَلْنَاهَا وَابْنَهَا آَيَةً لِلْعَالَمِينَ
இன்னும் தம் கற்பைக் காத்துக் கொண்ட (மர்யம் என்ப)வரைப் பற்றி (நபியே! நினைவு கூரும்) எனினும், நம் ஆன்மாவிலிருந்து நாம் அவரில் ஊதி அவரையும், அவர் புதல்வரையும் அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம். (குர்‍ஆன் 21:91)

And (remember) her who guarded her chastity: We breathed into her of Our spirit, and We made her and her son a sign for all peoples. (Surah Al Anbiyaa 91)
 
 
ஒவ்வொரு ஆண்டும் இயேசுக் கிறிஸ்துவின் பிறந்த நாளை நினைவு கூர்ந்து "கிறிஸ்துமஸ்" என்றுச் சொல்லக்கூடிய "கிறிஸ்து ஜெயந்தியை" கொண்டாடுகிறோம். இந்த முக்கியமான நிகழ்ச்சி பற்றிய பல நிகழ்வுகளை குர்‍ஆன் உறுதிப்படுத்துகிறது. இயேசுவின் தாய் ஒரு கன்னியாக இருந்தார்கள். உலக முக்கியத்துவம் வாய்ந்த அவரது அற்புத பிறப்புப் பற்றிய செய்தியை ஒரு தூதன் வெளிப்படுத்தினான். ஆகையால், இந்த நிகழ்வுகளை நாம் கண்டால், இஸ்லாமியர்களுக்கு கிறிஸ்து ஜெயந்தி வாழ்த்துதல்கள் சொல்வது சரியே.
 
 
 
எனினும், சில இஸ்லாமியர்கள் கிறிஸ்து ஜெயந்தி கொண்டாட்டங்களில் கலந்துக் கொள்வதில்லை. இதற்கு முக்கிய காரணம் என்று அவர்கள் சொல்வது, "கிறிஸ்தவர்கள் இயேசுவை திரித்துவத்தில் ஒருவர் என்று கருதி அவரை வணங்குகிறார்கள்" என்பதாகும். இறைவன் தனித்தன்மை வாய்ந்த ஒருவரே இறைவன் என்றும் மற்றும் அந்த இறைவன் தான் இயேசுவாக இறங்கிவந்தார் என்றும் பைபிள் தெளிவாகச் சொல்கிறது(உபாகமம் 6:4,5, சகரியா 14:9, யோவான் 1). கிறிஸ்தவத்தில் உள்ள அனைத்து பெரிய குழுக்களின் முக்கிய போதனையும் இது தான். இதை ஏன் எல்லா கிறிஸ்தவ குழுக்களும் உண்மை என்று நம்புகிறார்கள் என்பதற்கான முக்கிய காரணம், "பைபிள் இதை போதிக்கிறது" என்பதால் தான். தேவன் மனிதனாக இயேசுவில் வந்தார் என்ற "அதிர்ச்சி தரும்" உண்மையை நாம் நீக்கிவிட்டால், பைபிளில் உள்ள அனைத்தையும் நம்புவது இஸ்லாமியர்களுக்கு சுலபமாகிவிடும். தேவனுடைய வார்த்தையாகிய பைபிளில் இயேசுவைப் பற்றிய உண்மை இருந்தும் ஏன் இஸ்லாமியர்கள் அதை ஏற்க மறுக்கிறார்கள் என்றால், அவர்கள் பைபிள் மாற்றப்பட்டது என்று நம்புவதினால் தான். உண்மையில் சிந்தனையில் மாறுபாடுள்ளவர்கள் "கடினமான பகுதிகளை" எடுத்துவிட விரும்புவார்கள், ஆனால் "நம்புவதற்கு கடினமான" விவரங்களை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள் (The fact that they always have been contained in God's Word makes it very unlikely that it was changed. Surely evil people would take out the difficult parts and definitely not add 'hard-to-believe' things).
 
 
 
 
கிறிஸ்தவ போதனைகளுக்கு எதிரான‌ இஸ்லாமியர்களின் எதிர்ப்புக்கள் பெரும்பான்மையாக "அவைகள் எப்படி உண்மையாக இருக்கமுடியும்?" என்ற சந்தேகத்தைச் சுற்றியே இருக்கும், அதற்கு பதிலாக, "ஏன் அவைகள் அப்படி இருக்கின்றன என்று முன்வைக்கபப்டும் காரணங்களை" அவர்கள் கவனிப்பதில்லை. இது மிகவும் ஆச்சரியமானது, ஏனென்றால், விசுவாசிகள்(இறை நம்பிக்கையுள்ளவர்கள்) "இறைவன் என்பவர் நம்முடைய புரிந்துக்கொள்ளுதலுக்கு அப்பாற்பட்டவர் என்றும், அவருக்கு ஆரம்பமுமில்லை, முடிவுமில்லை மற்றும் அவருக்கு எல்லாம் தெரியும்" போன்ற அவருடைய குணங்களை சுலபமாக ஏற்றுக் கொள்வார்கள். ஆகையால், நம்முடைய இப்போதைய விளக்கத்தில், "ஏன் இறைவன் மனிதனாக இயேசுவில் வந்தார் என்பது தான் முக்கியமே தவிர அவர் அதை எப்படி செய்தார்" என்பதல்ல (Therefore, it is more important to focus on explaining why God became a man in Jesus rather than how he managed to do so).
 
 
 
கிறிஸ்து ஜெயந்திக்கான முதல் காரணம்: பாவத்தின் முக்கியத்துவம்

First reason for the Christmas season: The seriousness of sin
 
 
 
நாம் நினைப்பதை விட நம்முடைய பாவங்கள் மிகவும் கொடுமையானவைகளாகும். உங்களில் அனேகருக்கு தெரியும் என்று நினைக்கிறேன், ஆதாமும் ஏவாளும் எத்தனை பாவங்கள் செய்தார்கள் என்று அவர்களை இறைவன் ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்திவிட்டார். அவர்கள் செய்தது ஒரே ஒரு பாவம் தான். ஒரே ஒரு முறை பாவம் செய்து கீழ்படியாமல் போனதினால், அவ்வளவு பெரிய விளைவை அது உண்டாக்கியது எனபதிலிருந்து, பாவம் என்பது வெறும் சிறிய பிழை அல்ல என்பதை நாம் விளங்கலாம். பைபிளின் படி, பாவம் என்பது நம்மை படைத்த இறைவனுக்கு எதிராக நாம் கலகஞ் செய்வதாகும் மற்றும் நம்முடைய தகாத ஆசைகளினாலும், சிந்தனையினாலும் மற்றும் செயல்களாகும் இறைவனை துக்கப்படுத்துவதாகும்.
 
 
 
பாவம் மிகவும் கொடுமையானது என்பதை, இஸ்லாமிய போதனையிலிருந்தும் கூட நாம் தெளிவாக புரிந்துக்கொள்ளலாம். அதாவது, அல்லாவிற்கு இணைவைத்து வணங்கும் பாவமாகிய "ஷிர்க் - SHIRK" என்ற பாவம் "நியாயத்தீர்ப்பு நாளில்" கூட மன்னிக்கப்படாது என்று இஸ்லாம் போதிக்கிறது. இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துப்படி, "பெரிய பாவங்கள்(Major Shirks)" என்று க‌ருதுப‌வ‌ற்றில் ஒரு சில‌ இவ்வித‌மாக‌ உள்ள‌து, அதாவது, 1)அல்லாவின் கட்டளைக்கு எதிராக வேறு ஒரு அதிகாரத்திற்கு கீழ் படிந்து இருப்பது, மற்றும் 2) அல்லாவிற்கு காட்ட‌வேண்டிய‌ அன்பை ம‌ற்றவ‌ர்க‌ளிட‌ம் காட்டுவ‌து ஆகும்.

 
இதே போல, "சிறிய‌ பாவ‌ங்க‌ள்(Mijor Shirks)" கூட‌ ப‌ல‌ வ‌கையாக‌ உள்ள‌ன‌. அதாவ‌து, ச‌குண‌ம் பார்ப்ப‌து, குறிசொல்ப‌வ‌ரிட‌ம் சென்று குறி பார்ப்ப‌து, இன்னுமுள்ள‌ மூட‌ப‌ழ‌க்க‌வ‌ழ‌க்க‌ங்க‌ளை பின்ப‌ற்றுவ‌து, ந‌ல்ல‌ ம‌னித‌ர்க‌ளின் க‌ல்ல‌ரைக‌ளில் சென்று அவ‌ர்க‌ளிட‌ம் ஜெபிப்பது(துவா கேட்ப‌து), ஜோசிய‌ம் பார்ப்ப‌வ‌ர்க‌ளையும், எதிர் காலத்தில் நடக்கும் நிகழ்வு பற்றிய கனவுகளுக்கு பொருள் கூறுப‌வ‌ர்க‌ளை புக‌ழுவ‌து, ந‌ம்மிட‌ம் உள்ள‌வைக‌ள் ப‌ற்றி பெருமையாக‌ வெளியே மற்ற‌வ‌ர்க‌ளுக்கு காட்டுவ‌து, அல்லாவின் க‌ட்ட‌ளையின் ப‌டி பாதிக்க‌ப்ப‌ட்டு இருக்கும் ஒருவ‌ரின் அவ‌ல‌ நிலையைக் க‌ண்டு ம‌ன‌த‌ள‌வில் திருப்தியில்லாம‌ல் இருப்ப‌து போன்ற‌வைக‌ள் சிறிய‌ ஷிர்க்குள் ஆகும். இந்த பெரிய மற்றும் சிறிய ஷிர்க்குகள்(Major and Minor Shirk) மிகவும் கடுமையானவைகள், மற்றும் இவைகளை ஒருவர் சுலபமாக செய்துவிடும் ஆபத்தும் உள்ளது. இவைகளை நாம் சுலபமாக கண்டுபிடித்தும் விடலாம்.
 
 
 
இறைவனின் பார்வையில் பாவம் என்பது எவ்வளவு வருந்தப்படத் தக்கது என்பதை ஒரு எடுத்துக்காட்டு மூலமாக நாம் விவரிப்போம். இந்த விளக்கத்தை நாம் பைபிள் மற்றும் குர்‍ஆனின் அடிப்படையிலேயே பார்க்கப்போகிறோம். குர்‍ஆன் அடிப்படையில் பொதுவாக நாம் "இறைவனைப் பற்றி" விவரிக்கும் போது, "அவர் பார்க்கிறார், அறிகிறார்" என்றுச் சொல்கிறோம். அவர் பார்க்கிறார் மற்றும் எல்லாவற்றையும் முழுவதுமாக அறிந்தும் இருக்கிறார், ஆனால், நம்மை அன்போடு பார்க்கிறாரா என்பது தான் கேள்வி. இறைவனின் குணநலன்களைப் பற்றி விவரிப்பது வீணாகுமா? ஆகாது, இப்போது "பாவத்தை" பற்றிய ஒரு எடுத்துகாட்டை நாம் காண்போம்.

 
நீங்கள் அதிகமாக விரும்பி வாங்கிய ஒரு விலை உயர்ந்த மோட்டார் கார் (Car) உங்களிடம் இருப்பதாக கற்பனை செய்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் காலை உங்கள் காரின் முன்பாகத்தில் ஒரு பகுதி கீறலால் பாதிக்கப்பட்டு அவலட்சனமாக இருப்பதை காண்கிறீர்கள். நீங்கள் உங்கள் பிள்ளைகளிடம் விசாரித்து கேட்டதில், அதைச் செய்தவர், இரண்டு வயதுடைய உங்கள் மகன் "அமீர்" என்று தெரியவருகிறது. இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்கள் இரண்டு வயது மகனிடம் அவன் செய்த செயல் எவ்வளவு பெரிய தவறு என்றும், அதை மறுபடியும் பழுதுபார்க்க உங்களுக்கு எவ்வளவு பணம், நேரம் செலவாகும், என்பதையும் அவனுக்கு விவரித்துச் சொல்ல உங்களால் முடியுமா? அவன் இன்னும் குழந்தை என்பதால் இப்படி சொல்ல உங்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போகும். அப்படி சொன்னாலும், அமீருக்கு நீங்கள் சொல்லும் விவரங்களை புரிந்துக்கொள்ளும் புத்திகூர்மை இன்னும் வரவில்லை. எப்படியாயினும், அந்த சேதத்திற்கு தேவையான பணத்தை, நேரத்தை அமீர் தான் தரவேண்டும், ஆனால், இப்போது அதற்கு வாய்ப்பு இல்லை. இதனால், உங்கள் மகனோடு "தந்தை மகன்" என்ற உறவுமுறையை முறித்துக்கொள்வீர்களா? அவன் மீது எப்போதும் கோபமாக இருப்பீர்களா? இல்லை, இப்படி செய்யமாட்டீர்கள். இந்த நேரத்தில் அவனிடம், இனி இப்படி செய்யவேண்டாம் என்றுச் சொல்வீர்கள் மற்றும் அவனது வயதிற்கு ஏற்றாற் போல கடிந்துக்கொள்வீர்கள்/அதட்டுவீர்கள், அவ்வளவு தான். இப்படி நீங்கள் செய்தாலும், இதற்கு முன்பு அவன் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தீர்களோ அதே போல அன்பு கூறுவீர்கள். அவன் செய்த சேதத்திற்கு நியாயமான தண்டனையை அவனுக்கு இடாமல், அவன் மீது இரக்கத்தோடும், அன்போடும் நடந்துக்கொள்வீர்கள், ஏனென்றால், அந்த சேதத்திற்கான தண்டனையை(பணம் மற்றும் நேரம் செலவை) நீங்களே ஏற்றுக்கொண்டபடியால், அவன் மீது மறுபடியும் இரக்கம் பாராட்டுவீர்கள்.
 
 
 
கிறிஸ்து ஜெயந்திக்கான இரண்டாம் காரணம்: நம்மீது பொழிந்த‌ இறைவனின் உயர்ந்த‌ அன்பு

Second reason for the Christmas season: The greatness of God's love for us
 
 
 
இப்போது மேலே நாம் கண்ட எடுத்துக்காட்டில் சொல்லப்பட்டது போல, இறைவன் மிகவும் பரிசுத்தமானவர் மற்றும் பிழையில்லாதவர். நம்முடைய பாவங்கள் எவ்வளவு பயங்கரமானது/கொடுமையானது என்பதை அறிந்துள்ளார், அதே நேரத்தில் அதன் பயனாக வரும் தண்டனையை நம்மால் சுமக்க முடியாது என்றும் அவர் அறிந்துள்ளார். அவருடைய கண்ணோட்டத்தின் படி நாம் என்ன செய்தோம்? அதன் விளைவு என்ன? என்பதை நாம் சரியாக அறியாத காரணத்தினால், நம்மிடம் அவர் "ஏன் செய்தாய்?" என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தால் அதனால் பயன் இல்லை. இறைவனுக்கு முன்பாக நல்லவர்கள் போல வாழ்ந்தால் போதும் என்று சிலர் எண்ணுகின்றார்கள். இப்படி எண்ணுவது எப்படி இருக்குமென்றால், அமீருக்கு அந்த காரை பழுதுபார்க்க எவ்வளவு செலவாகும் என்பதை தெரிவித்த பிறகு, அமீர் அமைதியாக ஒரு நாற்காலியில் இரண்டு நிமிடம் மௌனமாக உட்கார்ந்து இருப்பதற்கு சமமாகும். இப்படி அமீரின் தந்தை அமீருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தாலும், அந்த காரை பழுதுபார்க்கும் செலவு தானாகவே சந்திக்கப்படுமா?

 
தேவன் நம்மை நேசிக்கிறார், அதனால், நம் பாவங்களை மன்னிக்க விரும்புகிறார். இருந்தாலும், அவரது நீதியான நியாயத்தீர்ப்பு நமக்கு தண்டனையாக நம்மை அவரோடு வாழ இடம்கொடாமல் நிரந்தரமாக‌ பிரித்துவிடும். சிலுவை என்ற இடத்தில் தான் தேவன் தன் இரண்டு குணநலன்களையும் நிறைவேற்றிய இடமாகும்(The cross is the place on which God has fulfilled both characteristics.). நம்மீது வைத்தை அன்பினால் அவர் மனிதனாக இயேசுவாக வந்தார், நமக்காக நம் தண்டனையை தன் மேல் ஏற்றுக்கொண்டு மரித்தார். இந்த தண்டனையை நாம் தான் ஏற்றுக்கொள்ளவேண்டும், ஆனால், நம்மால் அது முடியாது. நாம் தேவனுக்கு எதிராக செய்த மாறுபாட்டினால் வந்த அவமானத்தை இயேசு தன் இரத்தம் சிந்தி எடுத்துப்போட்டார். பைபிளிலும் மற்றும் குர்‍ஆனிலும் தேவனின் மேன்மை மற்றும் புகழ் இயேசுவின் பலியினால் மறுபடியும் நிலைநிறுத்தப்பட்டது (ஒப்பிட்டுப் பார்க்கவும் எண்ணாகமம் 19:1 - 10 மற்றும் குர்‍ஆன் 2:67 – 74).
 
 
 
தேவன் தானே நீதியை நிலைநிறுத்த வேண்டுமென்று விரும்பினார்! எந்த மனிதன் தன் மனதை புதிதாக மாற்றிக்கொண்டு இயேசுவின் மீது நம்பிக்கை வைப்பானோ அவனுக்கு பரலோகத்தில் ஒரு இடம் உண்டு. இயேசுவின் மூலமாகத் தான் தேவன் நம்மை மன்னிதார் மற்றும் இயேசுவை பின்பற்றுகிறவர்கள் தங்களுக்கு தீமை செய்தவர்களை மன்னிப்பதற்கு காரணரும் இவர் தான். இயேசு செய்த இவ்விதமான நன்மைக்கு நன்றிக் கடனாக மற்றும் அவர் கொடுத்த மனவலிமையினாலே கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும், தங்கள் எதிரிகளுக்கும் சேர்த்து தங்களால் இயன்ற நன்மைகளை, செய்துக்கொண்டு இருக்கிறார்கள். இயேசுவை பின்பற்றுகிறவர்களின் இந்த மாற்றம் மற்றவர்களை தேவனின் பக்கம் இழுக்கிறது, தேவன் காட்டிய வழி மூலமாக நீதி செய்யும் படி உற்சாகப்படுத்துகிறது. எவன் ஒருவன் வன்முறையின் மூலமாகவோ அல்லது கட்டாயத்தின் மூலமாகவோ தன் சொந்த நீதியை பின்பற்ற விரும்புவானோ அவன் நியாயத்தீர்ப்பு நாளில் குற்றவாளி என்று தீர்ப்பிடப்படுவான். தேவனின் விருப்பத்தை ஏற்று, அவரை பின்பற்ற யார் யார் விரும்புவார்களோ, அவர்களுக்கு சமாதானம் நிம்மதி ஏற்கனவே கொடுக்கப்பட்டு விட்டது. அந்த நாள் இரவிலே தேவ தூதர்கள் "உலகத்தின் இரட்சகர்" பிறந்தார் என்று மேய்ப்பர்களுக்குச் சொன்னதில் எந்த ஆச்சரியமும் இல்லை.


 
 
உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும்,

மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக …

"Glory to God in the heavenly heights,

Peace to all men and women on earth who please him." (லூக்கா 2:14)
 
 
 
அன்பு என்ற வார்த்தையின் பொருள் சுயமாக முடிவெடுக்கும் உரிமை(Freedom of Choice) என்ற வார்த்தைகளோடு தொடர்புடையது. தேவனின் விலைமதிப்பில்லா இந்த பரிசை நாம் ஏற்கலாம் அல்லது மறுத்துவிடலாம். இது எப்படி நடக்கும் என்றும், எனக்கு புரியவில்லை என்றும் நாம் சொல்வதால், நாம் இதனை மறுக்கக்கூடாது. இப்படிப்பட்ட மறுப்பானது "பொதுவாக இறைவன்" பற்றிய போதனைக்கு எதிரானதாகும். உதாரணத்திற்கு யாத்திராகமம் 3:2 லிருந்து 4 வசனங்களையும், குர்‍ஆன் சூரா 20:11 லிருந்து 13 வரையிலும் உள்ள வசனங்களை படிக்கவும். இந்த வசனங்களில், எரியும் நெருப்பிலிருந்து தேவன்/இறைவன் மோசேயுடன் பேசினார் என்று நாம் படிக்கிறோம். இறைவன் எரியும் நெருப்பில் தன் குரலை/சத்தத்தை பொதித்து மோசேயுடன் கடந்த காலத்தில் பேச அவரால் முடியுமென்றால், நிச்சயமாக தன்னை ஒரு உடலில் பொதித்துக்கொண்டு நம்மை மறுபடியும் தன்னுடன் சேர்த்துக்கொள்வது என்பது அவருக்கு சுலபமானது தான்! என் அருமை இஸ்லாமிய நண்பரே, உங்கள் இருதயத்தின் கண்களை தேவன் திறப்பாராக, நீங்கள் உண்மையான கிறிஸ்து ஜெயந்தியின் உண்மை மகிழ்ச்சியை அடைந்து ஆனந்தம் அடைவீராக.

 
ஆசிரியரோடு தொடர்பு கொள்ள இங்கு சொடுக்கவும்

 

Isa Koran Home Page Back - Oskar's Index Page