முஹம்மதுவின் வாழ்க்கையிலும் குர்ஆனிலும் வன்முறை
Top ten reasons why Islam is NOT the religion of peace
Violence in Muhammad's life and the Quran
ஜேம்ஸ் அர்லண்ட்சன்(James M. Arlandson)
செப்டம்பர் 11 நிகழ்வுகளுக்குப் பிறகு நாட்டின் செய்தித் தொடர்பை பயன்படுத்துக் கொள்ளும் இஸ்லாமியத் தலைவர்கள், இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமென்றும் முஹம்மதுவின் இந்த மார்க்கத்தில் வன்முறைக்கு எந்த அடிப்படையும் இல்லை என்றும் சொல்லி வருகிறார்கள்.
அமெரிக்க அதிபர் புஷ் மற்றும் பிரிட்டனின் பிரதமர் பிளேர் ஆகியோரும் கூட இஸ்லாம் சில வன்முறை வெறியர்களால் "கடத்தப்பட்டுள்ளது" என இதே அறிக்கையை மறு மொழிந்துள்ளனர். இது உண்மை தானா?
இது உண்மையல்ல என்பது வருத்தத்திற்குரிய விஷயம். ஏனெனில், நடைமுறையில் நாம் காணக்கூடிய உண்மைகள் இஸ்லாம் அடிப்படையிலேயே - அதாவது முஹம்மதுவினுடைய வாழ்கையிலும் குர்ஆனிலுமே - வன்முறையினால் நிரப்பப்பட்டுள்ளது என்பதை ஐயமின்றி உறுதி செய்கின்றன.
எனவே இத்தகைய முஸ்லீம் ஆதரவாளர்கள், அவர்கள் மீது சந்தேகம் கொள்ளாத மேற்கத்திய நாட்டினரை தவறான வழியில் அவர்களை திசை திருப்பக்கூடாது, நேர்மையான முறையில் தங்களின் மார்க்கத்தினுடைய அடிப்படையைக் கருத்தில் கொண்டு எப்போதும் நேர்மையாக நடந்துக்கொள்ள வேண்டும்.
இதோ இங்கு, இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் அல்ல என்று விளக்கவல்ல, சரி பார்த்துக் கொள்ளத்தக்க, தெளிவான பத்துக் காரணங்கள் உள்ளன (Here are ten clear, verifiable reasons that explain why Islam is not the religion of peace).
தெளிவான காரணங்கள் என்றால் என்ன?(Clear?): முஸ்லீம் ஆதரவாளர்கள், வழக்கமான சந்தர்ப்பத்திற்கு ஒவ்வாத மறுப்புகளை வெளியிடுவார்கள், அதாவது அவர்கள், "இந்த வசனம் "Out of Context" க்கு வெளியே விளக்கியுள்ளார் என்று சொல்வார்கள். இதை தடுப்பதற்காகவே, நான் ஒவ்வொரு குர்ஆன் வசனத்தின் சூழ்நிலை(Context) என்ன என்பதை இந்த கட்டுரையிலேயே விளக்கியுள்ளேன் அல்லது அதைப் பற்றி விவரிக்கும் இதர கட்டுரைகளின் தொடுப்பை தகுந்த இடத்தில் கொடுத்துள்ளேன். நான் விளக்கும் எந்த வசனமும் சூழ்நிலைக்கு வெளியே(Out of Context) விளக்கப்படவில்லை. மற்றும் இக்கட்டுரையில் இஸ்லாமியர்களின் குர்ஆன் மொழி பெயர்ப்பையே நான் பயன்படுத்தியுள்ளேன்.
சரி பார்த்துக் கொள்ள முடியுமா? (Verifiable?) : வாசகர்கள் குர்ஆன் வசனங்களை பல வகையான ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் அடங்கிய www.quranbrowser.com என்ற தளத்தில் சென்று சரி பார்த்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, வசனம் 61:10 - 12 ( 61 என்பது சுரா, 10 - 12 என்பது வசனங்கள்) என்ற முறையில் டைப் செய்து பார்த்துக் கொள்ளவும். (தமிழில் http://chittarkottai.com/quran/tamil என்ற தளத்தில் குர்ஆன் மொழிபெயர்ப்பு கிடைக்கும்.)
முதலில் நாம் முஸ்லீம்களின் அணுகு முறைக்கு ஒரு பதில் சொல்லியாக வேண்டும். இஸ்லாம் தான் உலகிலேயே தலைசிறந்த மார்க்கம் என நம்பி அதனை உலகம் முழுவதும் பரப்ப விரும்பும் ஒரு முஸ்லீம் ஊழியர் அல்லது எதிர்வாத எழுத்தாளர் இந்த 10 காரணங்களை மறுக்க முனையலாம். ஆனால் இந்தப் பத்துக் காரணங்களடங்கிய பட்டியலை மறுக்க முயர்ச்சித்தால், அது ஒரு புத்தகத்தை இறுதி அத்தியாயத்திலிருந்து ஆராய முயல்வது போன்றதாகும். இந்த ஆய்வாளர், எல்லா அத்தியாயங்களையும் படிக்கும் கடின வேலையைத் தவிர்க்கும் படியாகவே அவ்வாறு செய்தது போலாகும்.
இதுபோன்றே, முஸ்லீம் மறுப்பு எழுத்தாளர்களும், ஊழியர்களும் இக்கட்டுரைகளுக்கும் தொடுப்புகளுக்கும் பின்னால் உள்ள கடின உழைப்பைப் புறக்கணிக்கிறார்கள். இந்த முக்கியமான பத்துக் காரணங்கள் கொண்ட பட்டியல் பல கட்டுரைகளை ஆராய்ந்து வடித்த சாரமும், இதை எழுதியோனும் வேறு பல எழுத்தாளர்களும் செலவழித்த கடின உழைப்புமாகும். முஸ்லீம்களின் அனைத்து விமர்சனங்களுக்கும் பதில் இவைகளில் உண்டு. எனவே இதனை மேற்கூறியவாறு தவறாக ஆராய்பவர்களின் விமர்சனங்கள் கடின உழைப்பின்றி மேலோட்டமாக உள்ளதினால், வெறுமையானவையாயும் அவர்களின் ஆய்ந்துணர்தல் ஆழமற்றதாயும் உள்ளன. அவர்கள் பைபிளை நிச்சயமாகவே புரிந்துகொள்ளமாட்டார்கள் என்பதுடன் தங்களின் மறுப்புகளினால் இஸ்லாமுக்கு வெள்ளை சுண்ணாம்பு அடித்துக் காட்டுகிறார்கள். இக்கட்டுரையில் கொடுக்கபப்ட்ட அதிகபடியான இதர கட்டுரைகளை இதனை விளக்கும். எவ்விதம் அவர்கள் இஸ்லாமுக்கு வேண்டுமென்றோ அல்லது அறியாமையினாலோ வெள்ளையடிக்கிறார்கள் என்பது விளங்கும். அதாவது அவர்களுடைய மதத்தைப் பற்றியே அவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை அல்லது தெரிந்திருந்தும் வேண்டுமென்றே உண்மையை மறைக்க விரும்புகிறார்கள் என்றே அர்த்தமாகிறது. எது எப்படியாயினும் இஸ்லாமைப் பற்றிய உண்மை வெளிப்படுதல் அவசியம்.
10. முஹம்மது தம் ஆயுதங்களுக்கு புனைப் பெயரிடுகிறார்
Muhammad nicknames his weapons
தபரி (கி.பி. 839-923) என்பவர் ஆராய்ச்சியாளர்களால் இன்று மிகவும் நம்பத்தகுந்த இஸ்லாமிய சரித்திர ஆசிரியராய் கருதப்படுகிறார். உண்மையில், அவர் எழுதிய சரித்திரம் நியுயார்க் பதிப்பகத்தின் மாநில பல்கலைக் கழகத்தினால்(State University of New York Press ) 38 பாகங்களாய் மொழிபெயர்க்கப்படத் தேர்ந்தெடுக்கப்பட்டது. (Ismail K. Poonawala மொழிபெயர்த்த நபியின் கடைசி வருடங்கள் 9:153-55 ஐ நாம் பயன்படுத்துகிறோம்).
முஹம்மதுவின் இறுதி காலத்தில் தொகுக்கப்பட்ட ஆஸ்திகளின் பட்டியலில், (குதிரைகள், ஒட்டகங்கள், பால் கொடுக்கும் ஆடுகள் போன்றவைகள்) தபரி, முஹம்மதுவின் ஆயுதங்களின் புனைப் பெயர்களைப் பதிவு செய்கிறார்.
முஹம்மது, கெயின்கா(Qaynuqa) என்ற யூதக் கூட்டத்தை மதீனாவிலிருந்து ஏப்ரல் 624 ல் துரத்திவிட்டபோது எடுத்துக்கொண்ட மூன்று வாள்களுக்கு " பிடுங்குதல்" (Pluck Out), "மிகக் கூர்மை"(Very Sharp), "மரணம்"(Death) எனச் செல்லமாகப் பெயரிட்டிருந்தார். வேறு இரண்டு இடங்களிலிருந்து எடுத்த இரண்டு வாள்களுக்கு, " கூர்மை"(Sharp), "இது மிதக்காது" ("That is wont to sink" presumably into human flesh) எனப் பெயரிடப்பட்டது. அவரது ஹிஜராவிற்குப் பிறகு அல்லது 622ல் மக்காவிலிருந்து மதினாவிற்கு இடம் பெயற்தலுக்கு பிறகு அவரிடம், "கூர்மை" (Sharp) மற்றும் "முதுகெலும்புள்ளது" (Having the vertebrae of the back) என்றழைக்கப்படும் இரு வாள்கள் இருந்தன. இந்தக் கடைசி வாள் அவர், மார்ச் மாதம் 624 ல், பத்ரு போரில் (Battle of Badr) வெற்றியடைந்தபோது கொள்ளைப்பொருளாய் சேகரித்தது.
அடுத்து, முஹம்மது, கெயின்கா(Qaynuqa) கூட்டத்தினரிடமிருந்து மூன்று வில்களை எடுத்துக்கொண்டு அவைகளுக்கு "எளிதில் உபயோகிக்க ஏற்றது(Most conducive to ease) அல்லது அகலமானது(wide)", "வெண்மை(white)", மற்றும் "நாப் மரத்தினாலானது(of nab wood)" (வில் செய்ய பயன்படும் மரத்தின் வகை) எனப் பெயரிட்டிருந்தார்.
அவருடைய ஒரு மேலாடையின் பெயர் "போதுமானது"(ampleness) அல்லது "அளவுக்கதிகமான பகுதி"(redundant portions) என்று வைக்கப்பட்டு இருந்தது, முஹம்மது சற்று பருமனானவர் என்பதால் இப்பெயர்கள் வைக்கப்பட்டு இருக்கலாம். (cf. Ibn Ishaq, Life of Muhammad, trans. Guillaume, p. 383)
இறுதியாக,முஹம்மதுவுக்கும் கூட ஒரு புனைப்பெயர் இருந்தது. தபரி முஹம்மதுவை நல்லவராக காட்டும் பல பெயர்களை பட்டியலிட்டுவிட்டு, அவ்வளவாய் நல்லப்பெயர் என்று கருதமுடியாத ஒரு பெயரையும் குறிப்பிடுகிறார், அந்தப்பெயர் "ஆதாரம் வைக்காமல் அழிப்பவர் -The obliterator" என்பதாகும், இதன் பொருள் ஒரு சுவடு கூட வைக்காமல் அழிப்பவர் என்பதாகும்.
இஸ்லாமிய ஆதரவாளர்கள் தபரியை அதிகாரபூர்வமாக எடுத்துக்கொள்வதை ஆட்சேபிக்கலாம் (முஹம்மதுவை ஒரு வெற்றிச் சாதனையாளராகவும், வீரமிக்கவராகவும் அவர் காண்பிக்கும் போது தவிர). அவரின் ஆக்கம் குர்ஆனுக்கும் சில ஹதீஸ்களுக்கும் (குர்ஆனுக்கு அப்பாற்பட்டு, முஹம்மதுவின் வார்த்தைகளும் செயல்களும் அடங்கியவை) நிகராகக் கருதப்பட முடியாது என்றுச் சொல்வார்கள் இஸ்லாமியர்கள். இது உண்மையும் கூட. ஆனால், இஸ்லாமிய ஆதரவாளர்கள், முஹம்மதுவுடன் இத்தகைய ஆயுதங்களைப் பெயரிடுவதைக் குறித்த சம்பிரதாயங்களைத் தொடர்புபடுத்திக் கூறப்படுவது ஏன் என விளக்கக் கடமைப்பட்டுள்ளனர். பிற்காலத்தில் இயேசுவைக் குறித்தும் கூட, ஆதாரபூர்வமற்ற, நடைமுறைகள் பற்றிய செய்திகள் எழுந்தன. அவைகளும், அவர் ஆயுதங்களுக்குப் பெயரிட்டதாகக் கூட அல்ல, அவைகளை வைத்திருந்ததாகவே கூறவில்லை. முஹம்மதுவைப் பற்றிய இந்தக் கேள்விக்கு அடுத்த ஒன்பது காரணங்களில் பதில் உள்ளது.
இந்தத் தொடுப்பில் உள்ள கட்டுரையும் இது போன்றே இத்தொடுப்பில் உள்ள கட்டுரையும், வாள் பற்றிய இயேசுவின் கருத்தை மிகத் தெளிவாக விவரிக்கிறன. நிச்சயமாகவே அவர் வாளை உவகையுடன் கையாண்டோ, பெருமையாக அதற்கு புனைப் பெயரிட்டு அழைத்தோ , அதினால் மகிழ்வுறவோ இல்லை, வாள்களை பெருமையாக மற்றவர்களுக்கு காட்டி சந்தோஷப்பட்டதோ இல்லை.
இவ்வண்ணமாய், வன்முறை, முஹம்மதுவின் வாழ்க்கையிலும், ஆரம்பம் தொட்டே, இஸ்லாமின் இதயத்திலும் அமர்ந்துள்ளது. அதனால் இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் அல்ல.
9. குர்ஆனில், முஹம்மது விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நூறு சவுக்கடிகள் தண்டனையாகப் பெற வேண்டும் எனக் கட்டளையிடுகிறார்.
Muhammad commands in his Quran that adulterers and adulteresses should receive a hundred lashes.
குர்ஆன் சூரா: 24:2 விபசாரியும், விபசாரனும் இவ் விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.
சரித்திர பூர்வமாக இந்த குர்ஆன் சூரா(வசனம்) கொடுக்கப்பட்டது, டிசம்பர் 627 அல்லது ஜனவரி 628ல் முஹம்மது, ஒரு கூட்டத்தின் மீது நடத்திய தாக்குதலின் போதுதான். இதில் தான் முஹம்மது அவரது வலது கரம் போன்றிருந்த தளபதி அபு பக்கரின் மகளும் தனது பிரியத்திற்குரிய மிகவும் இளையவரான மனைவி ஆயிஷாவையும் உடனழைத்து வந்திருந்தார். முஸ்லீம்களின் வெற்றிக்குப் பிறகு அவர்கள் நூற்றைம்பது மைல் தொலைவில் உள்ள மதீனாவுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். வழியில் அவர்கள் இறுதியாக இராத்தங்கிய இடத்தில், ஆயிஷா, தன் இயற்கை உந்துதலுக்காக அருகில் சென்றிருந்தபோது இருட்டில் தனது நெக்லஸைத்(Necklace) தொலைத்துவிட்டார். அந்தப்படை விடிகாலையில் தங்கியிருந்த இடத்தினின்று புறப்படும் வேளையில், ஆயிஷா, தனது நெக்லஸைத் தேடுவதற்காக தனது ஒட்டகத்தின் மீது இருக்கும் அம்பாரியினின்று இறங்கி, தேடி அதைக் கண்டுபிடித்துவிட்டார். இதற்கிடையில், அந்த ஒட்டகத்தை நடத்துபவன், ஆயிஷா அந்த திரையிடப்பட்ட அம்பாரியினுள் தான் இருக்கிறார் என எண்ணி ஒட்டகத்தை நடத்திச் சென்றுவிட்டான். திரும்பிவந்த ஆயிஷா, தான் தனித்து விடப்பட்டுப் போனதை உணர்ந்தார்.
எனினும், சஃப்வான் (Safwan) என்ற ஒரு அழகான முஸ்லீம் வாலிபன், ஆயிஷாவைப் பார்த்து, மதீனா வரை அவருடன் சென்றான். அந்த இரு இளையவர்களும் ஒன்றாக நகருக்குள் நுழைவதைப் பார்த்த முஸ்லீம்களும், முஹம்மதுவின் எதிர்ப்பாளர்களும் அவர்களுக்கெதிராக வார்த்தைகளை வீசினார்கள். இதன்பலனாக சிறிது நேரம் சென்று, ஆயிஷா எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றும் தவறான நடத்தை அவர்மீது சுமரப்படவில்லை என்றும் வெளிப்பாடு தோன்றியது.
குர்ஆன் சூரா24, விபச்சாரத்திற்கு எதிராக சில அடிப்படை விதிகளை நியமித்துள்ளது. அதில் நூறு சவுக்கடி தண்டனையாக கொடுக்கப்பட வேண்டும் என்பதும் ஒரு விதி. ஆச்சரியப்படும் விதமாக குர்ஆன் சூரா24:2 குற்றம் சாட்டுபவர்களும் தீர்ப்பிடுபவர்களும் கடவுளின் சட்டத்தை நிறைவேற்றுவதை இரக்கம் தடை செய்யலாகாது என வலியுறுத்துகிறது.
மேலும், ஆரம்பகால நம்பிக்கைக்குரிய பாரம்பரியங்கள், அதாவது மிகவும் நம்பத்தகுந்த ஹதீஸ்களை எழுதிய புகாரி (AD 810-870) மற்றும் முஸ்லீம் (AD 817-875) ஆகியோர் பதிவு செய்துள்ளபடி, முஹம்மதுவையும் அவரது முஸ்லீம்களையும் விபச்சாரம் செய்யும் ஆண்களையும் பெண்களையும் கல்லெரிந்து கொல்பவர்களாய்க் காண்பிக்கின்றன.
உமர் சொன்னது: இறைவன் முஹம்மதுவை சத்தியத்துடன் அனுப்பி, அவரிடம் புத்தகத்தை (குர்ஆன்) இறக்கினார். மகா மேன்மைபொருந்திய இறைவன் இறக்கியதில், கல்லெரிதல் என்கின்ற வசனமும் அடங்கியிருந்தது. இறைவனின் தூதர் (முஹம்மது) மக்களை சாகும்வரை கல்லெரியச் செய்தார். அவரின் மரணம் வரை நாங்களும் அதைச் செய்தோம். தகாத உறவில் ஈடுபடும் மணமான ஆண்களையும் பெண்களையும் அது நிரூபிக்கப்படும் பட்சத்திலோ, கர்ப்பம் தரித்தாலோ அல்லது அதனை ஒப்புக்கொண்டாலோ, கல்லெரிதல் நம் கடமை என இறைவனின் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
Umar said: God sent Muhammad with the truth and sent down the Book [Quran] to him, and the verse of stoning was included in what God most high sent down.God's messenger [Muhammad] had people stoned to death, and we have done it also since his death. Stoning is a duty laid down in God's Book for married men and women who commit fornication when proof is established, or if there is pregnancy, or a confession.
Muslim no. 4194
உமர் என்பவர் முஹம்மதுவின் வலது கரத்தினைப் போன்ற தளபதியாவார் (அபு பக்கரும் கூட). முஹம்மதுவின் மரணத்திற்குச் சில காலம் பின்பும் கூட, குர்ஆனில் கல்லெரிவது தொடர்பான வசனங்களைப் பெற அவர் மிகவும் முயன்றார், ஆனால் அவர் அதில் வெற்றியடையவில்லை (Ibn Ishaq, Life of Muhammad, trans. Guillaume, p. 684). இப்படி இருப்பினும், கீழ்கண்ட ஹதீசும் அதற்கு அடுத்ததும் கல்லெறிவதை முஸ்லீம்கள் ஆதரிக்கப் போதுமானவைகளாய் இருக்கின்றன. [1], [2], [3], [4].
பின் விவரிக்கப்பட்டுள்ளது தான் அனேகமாக அதிகபட்சக் கொடுமையாக இருக்கிறது:
ஒரு பெண் நபியிடம் வந்து, தன்னைச் சுத்திகரிக்கும்படி (அவளது பாவத்திற்காக தண்டனை அடைவதன் மூலம்) கேட்டாள். அதற்கு அவர், அவள் சென்று இறைவனிடம் பாவ மன்னிப்புக்காக வேண்டிக் கொள்ளும்படிச் சொல்லி அனுப்பிவிட்டார். அவள் நான்கு முறை மறுபடியும் மறுபடியும் வந்து, தகாத உறவின் மூலம் தான் கர்ப்பவதியானதை ஒப்புக் கொண்டாள். அவர் அவளிடம் குழந்தை பிறக்கும்வரை பொறுத்திருக்கச் சொன்னார். அதன் பின்பு, முஸ்லீம் சமுதாயத்தினரிடம் அவள் குழந்தை பால் மறக்கும் மட்டும் காத்திருக்குமாறு கூறினார். அக்குழந்தை, திட உணவு உட்கொள்ளும் காலம் வந்த போது, முஹம்மது குழந்தையை சமுதாயத்தினரிடம் கொடுத்து விட்டு அந்தப் பெண்ணை கல்லெரிந்து கொல்ல ஆணையிட்டார்.
அவர் அவளுக்காக கட்டளை கொடுத்து, அவள் அவளது மார்பு வரை குழியில் புதைக்கப்பட்டவுடன், மக்கள் அவள் மீது கல்லெரியும்படிக் கட்டளையிட்டார். கலித் பி. அல்வலித் என்பவர் ஒரு கல்லுடன் முன்வந்து, அதை அவள் தலையை நோக்கி எறிந்தார். இரத்தம் முகத்திலிருந்து வெளிப்பட்ட போது அவர் அவளைச் சபித்தார்…
And when he had given command over her and she was put in a hole up to her breast, he ordered the people to stone her. Khalid b. al-Walid came forwardwith a stone which he threw at her head, and when the blood spurted on his face he cursed her. (
Muslim, no. 4206)
முஹம்மது, கலித்தை சற்று நிதானமாக(Gentle) இருக்கச் சொன்னது உண்மைதான். ஆனால், மார்பு வரையிலும் புதைபட்டிருக்கும் ஒருபெண்ணை நோக்கி ஒரு கல்லை எறிபவர் எந்த அளவுக்கு நிதானமாக எறிய முடியும்? நாற்பது மைல் வேகத்தில் செல்லவேண்டிய கல் முப்பது மைல் வேகத்தில் செல்ல வேண்டுமா? ஒருவேளை, முஹம்மது கலித்தை அவளைச் சபிக்காதிருக்கும்படிச் சொல்லியிருக்கலாம். எது எப்படியாயினும், நபி, அந்தப் பெண்ணினுடைய இறந்த சடலத்தின் மீது துவா(ஜெபம்) செய்து, பின்பு அடக்கம் செய்தார். முஹம்மதுவும் அவரது சமுதாயத்தினரும் அந்தப் பெண்ணை இரக்கமின்றிக் கொலை செய்துவிட்டுச் செய்த அந்த துவா(ஜெபம்) உண்மையிலேயே எந்த அளவுக்கு பலனுள்ளதாய் இருந்திருக்கும்? அவர்கள் அவளை மன்னித்து தன்னுடைய குழந்தையை வளர்க்கச் செல்ல அவளை அனுமதித்திருக்க வேண்டும்.
இன்றுள்ள முஸ்லீம் ஆதரவாளர்கள் சிலர், இந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ளாத போதிலும், அவர்கள் ஏன் உண்மையான இறைவன் குர்ஆன் சூரா24:2ல் உள்ளபடி சவுக்கடி கொடுப்பது போன்ற ஒரு கொடிய தண்டனையை இறக்க வேண்டும் என்பதினை விளக்கக் கடமைப்பட்டிருக்கின்றனர். அதே நேரத்தில், புதிய ஏற்பாடு இதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை. எனவே கிறிஸ்தவர்கள், இந்த வசனத்தை அவசியம் நிராகரிக்க வேண்டும். ஏனெனில், கிறிஸ்து, விபச்சரத்தில் பிடிக்கப்பட்ட பெண்ணை மன்னித்து, இனிமேலும் பாவம் செய்யாதே எனக்கூறி அனுப்பிவிட்டார். ( யோவான் 8:1- 11). அவர் நமக்கு நல்லதொரு வழியைக் காண்பித்து உண்மையான இறைவனின் சித்தத்தை நமக்கு விளங்கப் பண்ணினார்.
முந்தின தண்டனைகள் பற்றியும் அவைகள் இன்றைய நாளில் எவ்விதம் வழங்கப்படுகின்றன என்பன குறித்த கூடுதல் தகவலுக்கு
இந்த தொடுப்புக்குச் செல்லவும். இது முஸ்லீம் ஆதரவாளர்களுக்குப் பதிலளிப்பதுடன் யோவான் 8:1-11 ஐ முழுவதுமாக விளக்குகிறது.
ஆக, கொடுமையான வன்முறை ஆரம்பகால இஸ்லாமின் இதயத்தில் வீற்றிருந்தது - முஹம்மதுவின் வாழ்விலும் அவரது குர்ஆனிலும் வன்முறை காணப்பட்டது. எனவே இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் அல்ல.
8. முஹம்மது அவரது குர்ஆனில் கணவன்மார்கள் அவர்களது மனைவிகளை அடிக்க அனுமதிக்கிறார்
Muhammad in his Quran permits husbands to beat their wives
சூரா 4:34 (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்;. எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.
உஹுத் போரின் (மார்ச் மாதம் 625) சரித்திர பூர்வமான சூழலில், இஸ்லாம் 70 புனிதப் போர்வீரர்களை இழந்திருந்த தருவாயில் எழுதப்பட்ட பல வசனங்கள் அடங்கிய தொகுப்பில், இந்த வசனமும் அடங்கும். இவை குடும்பங்கள் குறித்த, அதாவது சொத்துகளைப் பங்கிடுவது மற்றும் அனாதைகளின் ஆஸ்திகளை நிர்வகிப்பது போன்ற சட்டங்களை விவரிக்கின்றது(வசனங்கள் 1-35).
வெளிப்படையாகச் சொல்லப் போனால், குர்ஆன் சூரா4:34, கணவன்மார்கள் தங்களின் கீழ்ப்படியாத மனைவிகள் அத்துமீறினார்கள் என்று கருதினால் அவர்களை அடிக்கலாம் (அவர்கள் உண்மையிலேயே அத்துமீறினார்களா என்பது வேறு விஷயம்) என்று தெரிவிக்கிறது. இது மனைவிகளின் நடத்தை பற்றிய கணிப்பு கணவர்களின் தீர்ப்பையே சார்ந்து இருப்பதாகவே அமைகிறது. எனவே இது மனைவிகளுக்கு எதிரான கொடுமைகளுக்கு (துஷ்பிரயோகத்திற்கு) வழிவகுப்பதாக உள்ளது. இந்த வசனம் ஒரு மிகப்பெரிய பண்பாடு மற்றும் சமுதாயப் பின்னடைவினை உள்ளடக்கப்படுவதாய் உள்ளதால் சரியான நேர்மையான சிந்தனையுள்ள மக்கள் எல்லாரும் இதனை நிராகரிக்க வேண்டும்.
முஹம்மதுவின் காலத்தில் இருந்த திருமணச் சட்டத்தினால் உண்டான குழப்பத்தினால், முஸ்லீம் பெண்கள், வீட்டில் நடக்கும் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டு இருந்தனர் என்று ஹதீஸ் கூறுகின்றது.
வினோதமான மறுமணச்சட்டமும் திருமணம் குறித்த குழப்பங்களும் நிறைந்த சந்தர்ப்பத்தில், ஆரம்பகால முஸ்லீம் சமுதாயத்தில் இருந்த மனைவிகள் குறித்த இந்த நிகழ்ச்சி பற்றி புகாரி தெரிவிக்கிறார்.
ரிஃபா என்பவர் தன் மனைவியை விவாக ரத்து செய்தவுடன், அப்தூர்ரஹ்மான் பின் அஜ்ஜுபைர் அல்குராஜி அவளை மறுமணம் செய்தார். அந்தப் பெண் ஒரு பச்சை நிற முக்காட்டினைப் போட்டுக்கொண்டு ஆயிஷாவிடம் வந்து தன் உடம்பில் உள்ள அடித்ததினாலுண்டான ஒரு பச்சை நிற தடிப்பைக் காண்பித்து அவளது கணவனைப்பற்றி புகார் கூறியதாக ஆயிஷா தெரிவித்தார். பெண்கள் ஒருவரை ஒருவர் தாங்கி உதவுவது வழக்கம். எனவே இறைத்தூதர் வந்தபோது ஆயிஷா, " நம்பிகையாளராகிய இந்தப் பெண்போல ஒருவரும் துன்பப்பட்டிருக்க முடியாது. அவளது சருமம் அவளின் ஆடைகளைவிடப் பச்சையாக உள்ளது பாருங்கள்" எனக் கூறினார். (புகாரி)
Rifa'a divorced his wife whereupon 'AbdurRahman bin Az-Zubair Al-Qurazi married her. 'Aisha said that the lady (came), wearing a green veil (and complained to her(Aisha) of her husband and showed her a green spot on her skin caused by beating). It was the habit of ladies to support each other, so when Allah's Apostle came, 'Aisha said, "I have not seen any woman suffering as much as the believing women. Look! Her skin is greener than her clothes!" (Bukhari, emphasis added)
இந்த ஹதீஸ் முஹம்மது அவரின் வலது கரம் போன்றிருந்த தோழர் அபுபக்கரின் மகளும், தன் இளவயதுடைய மனைவியுமான ஆயிஷாவை (கீழ்கண்ட rule no.1ஐப் பார்க்கவும்) அடித்ததாகச் சொல்கிறது.
"அவர் எனக்கு (ஆயிஷா) வலி ஏற்படும்வண்ணமாக எனது மார்பில் அடித்தார்." (முஸ்லீம் 2127)
"He [Muhammad] struck me [Aisha] on the chest which caused me pain." (Muslim 2127)
வலி ஏற்படும் விதமாக அடிப்பது குறித்த இந்தப் பழக்கத்தினைப் பற்றிய முழு ஆய்வு
இந்தத் தொடுப்பில் உள்ளது, இதில் இத்தலைப்புப் பற்றி புதிய விவாதங்கள் உள்ளன(இறுதிவரை செல்லவும்).
இந்த தொடுப்பில் உள்ள கட்டுரை நீண்டதாக இருப்பினும், இந்த ஹதீஸையும் ஆரம்பகால ஆவணங்களையும் ஆராய்ந்து மனைவியை அடிப்பது குறித்த தெளிவான விவரங்களை, அதனை எதிர்க்கும் இன்றைய இஸ்லாமிய ஆய்வளர்களின் கருத்துடன் அறியத் தருகிறது.
இந்த தொடுப்பில் உள்ள கட்டுரை இது குறித்த இஸ்லாமியரின் மறுப்பிற்கு பதிலளிக்கிறது.
இத்தொடுப்பில் உள்ள கட்டுரை இந்த விஷயத்தை நன்கு ஆராய்ந்து குர்ஆன் சூரா4:34 ன் பல்வேறு மொழி பெயர்ப்புகளுடன் பதில் தருகிறது. அது இந்த ஹதீஸையும் முந்திய விளக்கங்களையும் குறிப்பிட்டு, சிறப்புமிக்க இஸ்லாமிய உரைகளை மேற்கோள் காட்டி, இன்றைய சமாளிப்புகளுக்கு மறுப்பளிக்கின்றது. இறுதியாக, ஒரு
அரபி கிறிஸ்தவரால் எழுதப்பட்ட இத்தொடுப்பில் உள்ள கட்டுரை குர்ஆனையும், ஹதீஸ்களையும், இஸ்லாமிய வல்லுனர்களின் கருத்துக்களையும் முற்றிலுமாக ஆய்வு செய்து, குர்ஆன் சூரா4:34ன் பல மொழிபெயர்ப்புகளை நமக்குத் தருகிறது.
இவ்விதமாக வீட்டில் நடக்கும் வன்முறைகள் ஆரம்பகால இஸ்லாமின் இதயத்திலும், குர்ஆனிலும், முஹம்மதுவின் வாழ்க்கையிலும் அமர்ந்துள்ளது என்பது விளங்குகின்றது. எனவே இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கமன்று.
7. முஹம்மது தன் குர்ஆனில் ஆண் அல்லது பெண் திருடர்களின் கைகள் வெட்டப்பட வேண்டும் எனக் கட்டளை இடுகிறார்
Muhammad in his Quran commands that the hands of male or female thieves should be cut off
சூரா5:38 திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டணையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்.
சூரா5:39 எவரேனும், தம் தீச்செயலுக்காக மனம் வருந்தித் தம்மைச் சீர் திருத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (அவர் தவ்பாவை ஏற்று) மன்னிக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
ஹதீஸ்களின் மூன்று பத்திகள் முஹம்மதுவின் கொள்கைகளையும் அதன் சூழலையும் விவரிக்கின்றன. புகாரியிலிருந்தும் முஸ்லிமிலிருந்தும் சில பத்திகளை தொகுத்து கீழே வழங்கப்பட்டுள்ளது.
இறைத் தூதர் சொல்லியதாக ஆயிஷா (முஹம்மதுவின் பிரியமான மனைவி) தெரிவித்தார்: "கால் தினாருக்கும் அதற்கு மேற்பட்டவைகளுக்கு மட்டுமே ஒரு திருடனின் கை வெட்டப்பட வேண்டும்" (Bukhari Volume 8, Book 81, Number 782: இந்த தொடுப்பில் இதற்கு கீழுள்ள இரண்டு ஹதீஸ்களையும் படிக்கவும்,).
ஒரு தினார் என்பது ரோமரின் "தினாரியஸ்" என்பதிலிருந்து வரப்பெற்றது; இது ஒரு சிறிய தொகை அல்ல, அதே நேரத்தில் ஒரு பெரிய தொகையும் அல்ல. ஆயினும் கால் தினார் என்பது முஹம்மதுவின் பார்வையில் ஒரு கையை இழக்கத்தக்க அளவு மதிப்புள்ளது.
இறைத்தூதர், மூன்று திர்ஹம் மதிப்புள்ள ஒரு கேடகத்திற்காக ஒரு கள்வனின் கையை வெட்டச் செய்தார் என இபின் உமர் தெரிவித்தார். (Volume 8, Book 81, Number 788 புகாரியில் இதற்குக் கீழுள்ள மூன்று ஹதீஸ்களைப் பார்க்கவும்)
"ஒரு திருடன் ஒரு முட்டையைத் திருடி அவன் கை வெட்டப்பட்டும், ஒரு கயிற்றைத் திருடி, அதினால் அவன் கை வெட்டப்பட்டும் இருந்தால் அவன் கடவுளால் சபிக்கப் பட்டவன்" என இறைத்தூதர் சொன்னார் என்று அபூ ஹுரைரா தெரிவித்தார். (Volume 8, Book 81, Number 774, இதற்கு இணையான ஹதீஸ் இங்கு உள்ளது)
சில உரையாளர்கள் ஒரு முட்டை என்பது ஒரு தலைக்கவசம் என்பதாகவும், ஒரு கயிறு என்பது கப்பலின் கயிறு என்பதாகவும் கூறி, இவைகள் விலையேறப்பெற்றது எனச் சொல்கிறார்கள். எனினும் மேலே கண்ட மொழிபெயர்ப்பு பொதுவாக ஏற்கப்பட்டு சிறிய திருட்டுகளுக்கும் இத்தகைய கடும் தண்டனை வழங்கப்படலாம் எனப் பொருள் கொள்ளப்படுகிறது. ஆனால் அதிக மதிப்புடைய பொருட்கள் எனக் கருதப்பட்டாலும், அவைகள் கரங்களுக்கு சமமாக ஆகாது.
இந்தக் கொடிய வழக்கத்தினையும் அதனுடைய சரித்திரப் பின்னனியையும் பற்றிய கூடுதல் தகவலுக்கு இந்தத் தொடுப்பிற்குச் செல்லவும். இது இந்த வழக்கத்தினை ஆதரிக்கும் இஸ்லாமிய ஆதரவாளர்களுக்கு பதில் சொல்லி முஹம்மதுவினின்று இயேசுவை வேறுபடுத்திக் காட்டும். இயேசு இப்படிப்பட்ட தண்டனையை ஒருபோதும் ஆதரித்ததில்லை, இந்த விவரங்களே இப்போதைக்கு போதுமானது. அப்போஸ்தலனாகிய பவுல், " திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன் ." என எபேசியர் 4:28ல் கூறி அவனுடைய கை வெட்டப்படுதல் கூடாது எனச் சொல்கிறார். இதன் மூலம் முஹம்மதுவை விட பவுல் மேலானவர் என்பதை வெளிப்படுத்துகிறார் (So Paul excels Muhammad).
இவ்வண்ணம், கடுமையான தண்டனையின் மூலமான வன்முறை இஸ்லாமின் இதயத்தில், அதாவது முஹம்மதுவின் வாழ்விலும் குர்ஆனிலும் வீற்றிருப்பதனால் இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமன்று எனபது திண்ணம்.
6. முஹம்மது ஆண் கவிஞர்களையும் பெண் கவிஞர்களையும் கொலை செய்கிறார்
Muhammad assassinates poets and poetesses
கீழ்கண்ட இரு கவிஞர்களையும் ஆரம்பகால இஸ்லாமில் இருந்த மற்றவர்களின் சார்பாக உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.
மார்ச் மாதம் கி.பி. 624: அக்பா பின் அபூமுயத்(Uqba bin Abu Muayt)
அக்பா மக்காவில் முஹம்மதுவை மதிப்புக் குறைவாக விமர்சித்து எழுதி கேலி செய்தார். அவர் பத்ரூ போரில் பிடிக்கப்பட்டபோது முஹம்மது அவருக்கு மரண தண்டனையை வழங்கினார். அப்போது அக்பா மிகுந்த மனச்சஞ்ஞலத்துடன் "முஹம்மதுவே! என் பிள்ளைகளை யார் காப்பாற்றுவார்கள்?" எனக் கதறினார். உனக்கு "நரகம்" தான் என்று நபி அமைதியாக கூறினார். அதன் பின்பு இறைத்தூதரின் அடியார்களுள் ஒருவனின் வாள் அக்பாவின் கழுத்தை வெட்டியது.
மார்ச் மாதம் கி.பி. 624: அஸ்மா பின்ட் மர்வன் (Asma bint Marwan)
அஸ்மா (Asma) என்பவள் மதீனாவில் உள்ள ஒரு பழங்குடி மதக் கூட்டத்தினைச் சேர்ந்த பெண் கவிஞர் ஆவார். யாஜித் பி. ஜையத் என்பவன் அவளது கணவனாவார். அவள் மதீனாவின் தன் பழங்குடி மக்களை, அவர்கள் ஒரு புதியவரான முஹம்மதுவுக்கு அடிபணிந்து, அவர்மீது எதிபாராத தாக்குதல் நடத்தாமலிருந்ததாகக் குறை சொல்லி ஒரு பாடல் இயற்றினாள். அவள் சொன்னதைக் கேள்விப்பட்ட இறைத்தூதர், "எனக்காக அந்த மார்வானின் மகளை அழிப்பவர் யார்?" என்றார். அவளது கணவனின் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவன், முன்வந்து, அன்றிரவு அவளின் வீட்டிற்குள் பதுங்கிச் சென்றான். அவளுக்கு ஐந்து குழந்தைகள் இருந்தன; அவர்களில் கடைக்குட்டி அவளின் மார்பில் உறங்கிக்கொண்டிருந்தான். தாக்குதலுக்குச் சென்றவன் அந்தக் குழந்தையை மெதுவாக அவளின் மார்பிலிருந்து விலக்கிவிட்டு, அவனது வாளை உருவி அவள்மீது பாய்ச்சி அவளைத் தூக்கத்திலேயே கொன்றான்.
மறுநாள் காலையில் அந்தக் கொலைகாரன், அவன் மீது பழிவாங்குபவர்கள் யாரேனும் உள்ளனரா எனச் சவாலிட்டான். அவளது கணவன் உள்ளிட்ட ஒருவரும் அந்த சவாலுக்கு மறுமொழி கூறவில்லை. உண்மையில், அவனது கூட்டத்தில் இஸ்லாம் வலுப்பெற்றிருந்தது. முன்பு இரகசியத்தில் மாறினவர்கள் கூட பகிரங்கமாக இஸ்லாமை ஏற்றுக்கொண்டனர் என்று அறிவித்தனர். இந்தத் தாக்குதலை விவரிக்கும் ஆரம்பகால இஸ்லாமியத் தகவல் ஆதாரம் ஒன்று, "இஸ்லாமின் வலிமையை அவர்கள் கண்டார்கள் – because they saw the power of Islam" என சொல்கிறது.
தாக்குதல்களைப் பற்றி விளக்குகின்ற மேலே கண்ட விவரங்கள் தவிர, குர்ஆனும், கேலி செய்பவர்களுக்கும் குறைகூறுபவர்களுக்கும் கடும் தண்டனை வழங்கப்படுவதை ஆதரிக்கிறது. (சூராக்கள் 3:186; 33:57; 33:59-61; மற்றும் 9:61-63).
குர்ஆனில் இல்லாத இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் பற்றிய குறிப்புகளை முஸ்லீம்கள் மறுத்தாலும், பின்வரும் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
1) இணக்கமான இஸ்லாமியச் சூழ்நிலையில் இத்தகைய நடைமுறைகள் முஹம்மதுவச் சுற்றி ஏன் வளரவேண்டும்? (Why would such a tradition grow up around Muhammad in friendly Islamic sources?)
2) முஹம்மதுவைப்பற்றி இவ்வாறான குறிப்புகள் வருவதற்கான காரணம் என்ன? (What was it about Muhammad that produced such reports?)
3) இதுபோன்ற இஸ்லாமை ஆதரிக்கும் நட்பின் வட்டம் தங்களின் இறைத்தூதரை இவ்வாறான "முற்போக்கு" வழியினில் ஏன் எடுத்துக் காண்பிக்க ஆவலாய் இருக்க வேண்டும்? 9 Why are these friendly sources eager to present their prophet in a "positive" way?)
கவிஞர்கள் மீது முஹம்மதுவின் வன்முறைத் தாக்குதல்கள் பற்றிய ஆழ்ந்த அலசலுக்கும், இன்று அவர்கள் டச்சு சினிமா தயாரிப்பாளராகிய தியோ வான் கோ போன்ற கலைஞர்களின் மீது ஏவிவிட்ட வன்முறைகளை நியாயப்படுத்துவது குறித்தும் இந்தத் தொடுப்பில் உள்ள கட்டுரையில் வாசிக்கலாம். இது முஹம்மதுவின் பயங்கரவாதக் கொள்கைகளை நியாயப்படுத்த முயற்சிக்கும் இன்றைய முஸ்லீம் ஆதரவாளர்களுக்கு பதிலளிப்பதுடன் ஆரம்பகால கிறிஸ்துவம் எவ்விதம் ஆரம்பகால இஸ்லாமிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாயிருந்தது என எடுத்துக் காண்பிக்கிறது - இயேசு ஒருவரை யும் கொலை செய்யவுமில்லை, மற்றவர்களை கொல்லுங்கள் என்று நற்செய்தி நூலகளில் அவர் ஆணையிடவும் இல்லை.
அச்சுறுத்தலும் கொலை வெறியும் ஆரம்பகால இஸ்லாமிலும், முஹம்மதுவின் வாழ்விலும் குர்ஆனிலும் இருப்பதினால் இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமன்று.
5. சண்டையிடுவோருக்கும், நாட்டைக் கெடுப்போர்க்கும் தண்டனையாக, கைகளை கால்களை வெட்டுதல் மற்றும் மரண தண்டனை விதித்தல் போன்றவற்றை முஹம்மது குர்ஆன் மூலம் கட்டளையிடுகிறார்
Muhammad in his Quran commands death or the cutting off of hands and feet for fighting and corrupting the land
குர்ஆன் சூரா5:33-34 அல்லாஹ்வுடனும் அவன் துதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டணை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்;. மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு. நீங்கள் அவர்கள் மீது சக்தி பெறுமுன் திருந்திக் கொள்கிறார்களே அவர்களைத் தவிர, நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கருணையுடையவனாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
ஹதீஸ்களின்படி சரித்திரபூர்வமாக இந்த வசனத்தின் அடிப்படையில் "சண்டையிடுதல்" மற்றும் "நாட்டைக் கெடுத்தல்" என்பவைகள் கீழ்க்கண்டவாறு விளக்கப்படுகின்றன.
சில அரபி இனமக்கள் முஹம்மதுவைச் சந்திக்க வந்தபோது மதீனாவின் சீதோஷ்ண நிலை அவர்களுக்கு ஒத்துக் கொள்ளாததினால் நோய்வாய்ப் பட்டனர். அப்போது அவர்களுக்கு பழைய வழக்கத்தின்படி முஹம்மது பரிகாரம் சொன்னார்: அவர்களுக்கு ஒட்டகப்பாலும், அதின் சிறுநீறும் கொடுக்கப்பட்டது. அதனால் அவர்கள் சற்றுக் குணமடைந்தனர். அதன்பின்பு ஏதோ ஒரு காரணத்தினால், அவர்கள் மதீனாவிலிருந்து புறப்பட்டுச் சென்ற பின்பு, முஹம்மதுவின் சீடர்களாயிருந்த சில மேய்ப்பர்களை அவர்கள் கொன்றுபோட்டு, அவர்கள் இஸ்லாமிலிருந்து வெளியேறிவிட்டனர். இறைத் தூதரின் ஒட்டகங்களை ஓட்டிக்கொண்டு போய் விட்டனர்.
இந்தச் செய்தி அவருக்குத் தெரிந்தபோது அவர்களைத் துரத்திப்பிடித்து தன் முன்பு கொண்டுவரப்பட அவர் ஆணையிட்டார். அவர்கள் கைகளும் கால்களும் வெட்டப்படவும், கண்கள் தோண்டப்பட்டு அவர்கள் உடல்கள் பாறையான தரையில் சாகும்வரையிலும் கிடத்தப்படவும் அவர் தீர்ப்பளித்தார்.
பலவீனர்களை ஆக்கிரமித்துச் சுரண்டுதல், சாதிப்பாகுபாடுகள், குடும்ப உறவில் உண்டாகும் விரிசல்கள் போன்ற நிச்சயமற்ற குற்றச்சாடுக்களுக்காக குர்ஆன் சூரா5:33 ன் படி மக்களைத் தண்டிக்க ஏற்படுத்த்ப்பட்ட இத்தகைய கொள்கைகளைப் பற்றிய தகவல்களுக்கு இந்தத் தொடுப்பைப் பார்க்கவும். முஸ்லீம் ஆதரவாளர்களுக்கான பதில்களுக்கு இந்தத் தொடுப்பைப் பார்க்கவும். இது கிறிஸ்துவை முஹம்மதுவினின்று வேறுபடுத்திக் காட்டும். இந்த சிறிய கட்டுரை இந்த வசனத்தின் பின்னணியில் இக்கொடூரமான சட்டத்தினை விளக்கும். முஹம்மது மக்களை சித்திரவதை செய்தார்.
இவ்விதமாகவே, கொடூரமான வன்முறை ஆரம்ப இஸ்லாமின் இதயத்திலும், அதாவது, முஹம்மதுவின் வாழ்விலும், குர்ஆனிலும் காணப்படுவதால் இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் இல்லை.
4. முஹம்மது மக்காவின் வர்த்தகர் கூட்டத்தின் (caravans) மீது தீவிரத் தாக்குதல்கள் நடத்துகிறார்
Muhammad aggressively attacks Meccan caravans
கி.பி. 622ல் முஹம்மது மக்காவிலிருந்து மதீனா வரையிலான ஹிஜ்ராவிற்கு பிறகு சுமார் ஓராண்டிற்குப் பின்பு, அவர் மக்காவின் வர்த்தகர் கூட்டங்களின் (caravans) மீது ஆறு முறை தாக்குதல்கள் நடத்தினார். மேலும் மதீனாவின் மேய்ச்சல் ஒட்டகங்களை (அல்லது கால் நடைகளை) திருடிக்கொண்டு மூன்றுநாள் தொலைவில் சென்ற அரபுக் கூட்டத்தினரைத் தண்டிப்பதற்காக பின் சென்றதையும் சேர்த்து மொத்தம் ஏழு முறை தாக்குதல் நடத்தியுள்ளார்.
முஹம்மதுவிற்கு ஆதரவாக எழுதும் பிரபல மேற்கத்திய நாட்டினரும் இஸ்லாமின் சரித்திர ஆராய்ச்சியாளருமான W. Montgomery Watt என்பவர் எழுதிய இரு புத்தகங்கள் அடங்கிய சரித்திர நூல்கள் ஆரம்ப கால இஸ்லாம் பற்றியவை. பெரும்பாலானவர்களின் அங்கீகாரத்தினைப் பெற்ற இந்த சரித்திரம் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது, "மக்காவில் முஹம்மது (1953) மற்றும் மதீனாவில் முஹம்மது (1956)" என்பனவாகும். இப்புத்தகங்கள் எவ்விதம் புவியியல் முக்கியமாக அமைந்தது என்பதை விளக்குகின்றன.
இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் முஸ்லீம்கள்தான் முதலில் படையெடுத்தார்கள் என்பதே. ஏழு படையெடுப்புகளில் ஒன்றைத்தவிர மற்றவை அனைத்தும் மக்காவின் வர்த்தகர் கூட்டத்தை (Caravans) நோக்கித் தான் ஏவப்பட்டன. மக்காவிலிருந்து சிரியா செல்லும் வர்த்தகர் கூட்டம் மதீனாவையும் கடற்கரையையும் கடந்துதான் செல்லவேண்டும். கூடுமான வரை செங்கடலை ஒட்டியே சென்றாலும், மதீனாவிலிருந்து சுமார் எண்பது மைல் தொலைவில்தான் கடந்துச் செல்ல வேண்டும். எதிரியின் முகாம் இந்தத் தொலைவில் இருந்தாலும் அவர்களின் சொந்த முகாம் இரு மடங்கு தூரத்தில் தான் இருக்கும்.(மதீனாவில் முஹம்மது பக்கம் 2, emphasis added )
The chief point to notice is that the Muslims took the offensive. With one exception the seven expeditions were directed against Meccan caravans. The geographical situation lent itself to this. Caravans from Mecca to Syria had to pass between Medina and the coast. Even if they kept as close to the Red Sea as possible, they had to pass within about eighty miles of Medina, and, while at this distance from the enemy base, would be twice as far from their own base. (Muhammad at Medina, emphasis added, p. 2)
இந்தக் காலத்தில் மக்காவினர் தங்களது படையினை ஒருபோதும் மதீனாவுக்கு அனுப்பியதில்லை என உறுதிபடக் கூறலாம். பின் நாளில் முஹம்மதுவின் ஆக்கிரமிப்புகளினால் வெறுப்படைந்து அவர்கள் படைகளை அனுப்பினர். மக்காவினர் அவர்களது வர்த்தகர் கூட்டத்தைப் பாதுகாக்க தங்கள் படைகளைத் திரட்டியது உண்மைதான். ஆனாலும் முஹம்மது அவர்களை எதிர்கொண்டபோது அவர்கள் மதீனாவிலிருந்து பல நாட்கள் பயண தூரத்தில் இருந்தனர். பெரும்பாலும் இந்த தூரம் எண்பது மைல்களுக்கு மேலாகவே இருந்தது. மதீனாவிலிருந்து மக்கா 200 - 250 மைல் தூரம் இருந்தது. கால் நடையாகவோ, குதிரை மீதோ அல்லது ஒட்டகத்தின் மீதோ இதனைக் கடக்க ஏழு முதல் பதினோறு நாட்கள் வரை ஆகும்.
எனவே இரு முஸ்லீம் ஆதரவாளர்களான ஆராய்ச்சியாளர்களின் கூற்று தவறான வழி காட்டுகிறது. இவர்களின் கூற்றுப்படி அந்த வர்த்தகர் கூட்டம் மதீனாவின் வழியாகச் சென்றார்களாம், அப்போது இஸ்லாமியர்கள் போர் தொடுத்து எவ்வளவு பொருட்களை பெறமுடியுமோ அவ்வளவு பொருட்களை பெற முயற்சி எடுத்தார்களாம், அதற்காக மக்கா வர்த்தர்கள் போர் தொடுத்தார்கள் என்பது நம்ப முடியாதவாறு உள்ளது.( Hence, two Muslim scholar-apologists are misleading when they assert that the caravans "passed through" Medina, adding that the Muslims haphazardly sought for whatever spoils they could get, whereas the Meccans mobilized for war (Isma'il R. al-Faruqi and Lois Lamya'al Faruqi, The Cultural Atlas of Islam, New York: Macmillan, 1986, 134). ஆகவே முஸ்லீம்கள் மக்காவினரை படையெடுப்பின் மூலம் துன்புறுத்தினார்கள் என்பதே சரியாக இருக்க முடியும்.
முஹம்மதுவின் வாழ்க்கையில் 622 ஆம் வருடம் முதல் 632 ஆம் ஆண்டு வரை நடந்த படையெடுப்புகள், திடீர் தாக்குதல்கள் மற்றும் போர்கள் பற்றிய முழு விவரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் வாட் (Watt), முஹம்மது செய்த அல்லது ஈடுபட்ட அனைத்து போர்கள், திடீர் தாக்குதல்களின் மொத்த எண்ணிக்கை எழுபத்து நான்கு எனக் குறிப்பிடுகிறார். (மதீனாவில் முஹம்மது பக்கம் 2:339 - 343). இதில் இந்த எண்ணிக்கையில் சில உடன்படிக்கை பேரங்களும் (இது வன்முறைத் தாக்குதல்களுடன் ஒப்பிட்டால் மிகக் குறைவானது தான்), அதிரடிக் கும்பலுடன் சிறிய அளவில் தாக்குதல்கள் நடத்தியவைகளும், 10,000 ஜிஹாதிகளுடன் மெக்காவைக் கைப்பற்றியதும், பைஜாண்டைன்(Byzantine ) கிறிஸ்தவர்களுடன் நடந்த மோதலும் (அவர்கள் பின்பு காணப்படவே இல்லை), Tabuk க்கு 30,000 புனிதப் போர்வீரர்களை அனுப்பியதும் அடங்கும்.(கீழே காணவும்)
மக்காவின் வணிகர் கூட்டத்தின் மீது நடந்த இந்த ஆறு தீவிர திடீர் தாக்குதல்கள் (வழிப்பறி கொள்ளைகள்) பற்றிய முழு விவரங்களுக்கு இந்தத் தொடுப்பில் உள்ள கட்டுரையைப் பார்க்கவும். இது ஏன் இந்தத் தாக்குதல்கள் தற்காப்புக்காக செய்யப்பட்டவைகள் அல்ல என்பதை விளக்குகின்றது.
இவ்வாறாக, தீவிரமான இராணுவ வன்முறை இஸ்லாமின் ஆரம்பத்திலேயும், முஹம்மதுவின் வாழ்விலும் குர்ஆனிலும் உள்ள படியால், இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமே அல்ல.
3. முஹம்மது தம்முடைய குர்ஆனில் புனிதமான இராணுவப் போரில் மரித்தவர்களுக்கு மகிழ்வுப் பூங்காவினை வாக்களிக்கிறார்
Muhammad in his Quran promises sensuous Gardens for martyrs dying in a military holy war
குர்ஆன் முழுவதிலும், முஹம்மது முஸ்லீம் இளைஞர்களுக்கு, அவர்கள் அல்லாவுக்காகவும் தனக்காகவும் போரில் மரணமடைவார்களாயின், அல்லா அவர்களுக்கு கன்னிப்பெண்கள் நிறைந்த சோலைவனத்தை பரிசாக தருவார் என வாக்களிக்கிறார். (சூரா: 44:51-56; 52:17-29; 55:46-78).
கீழே தரப்பட்டுள்ள குர்ஆன் வசனங்களில், இதே போல உள்ள இதர வசனங்களிலும்(4:74, 9:111; 3:140-143), ஜிஹாத் என்பது ஒரு பொருளாதார வியாபார பேரம் போன்றது என்று சித்தரிக்கப்படுகிறது. அதாவது, இவ்வுலக வாழ்க்கையிலும், மரித்த பிறகு வாழும் வாழ்க்கையிலும் பயன்படும் செலாவணியாக/நாணயமாக ஜிஹாத் கருதப்படுகிறது. (ஜிஹாத் என்ற வார்த்தைக்கு மூல வார்த்தை J-H-D என்பதாகும்.) In the following Quranic passage, representing others (Suras 4:74, 9:111; 3:140-143), the Arabic word "jihad" (root is j-h-d) is the means or currency to trade in this life for the life to come in an economic bargain.
குர்ஆன் சூரா 61:10 ஈமான் கொண்டவர்களே! நோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? குர்ஆன் சூரா 6:11 (அது) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொண்டு, உங்கள் பொருள்களையும், உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பதையில் ஜிஹாது (அறப்போர்) செய்வதாகும்; நீங்கள் அறிபவர்களா இருப்பின், இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும். குர்ஆன் சூரா 6:12 அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான், சுவனபதிகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அன்றியும், நிலையான அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளின் மணம் பொருந்திய இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு; இதுவே மகத்தான பாக்கியமாகும்.
61:10 You who believe, shall I show you a bargain that will save you from painful punishment? 11 Have faith in God and His Messenger and struggle [j-h-d] for His cause with your possessions and your persons—that is better for you, if only you knew—12 and He will forgive your sins, admit you into Gardens graced with flowing streams, into pleasant dwellings in the Gardens of Eternity. That is the supreme triumph. (Haleem)
இந்த வசனங்கள் உஹுத் போரின் (625) சரித்திரப் பின்னனியில் சொல்லப்பட்டன. அதில் முஹம்மது 70 போர் வீரர்களை இழந்தார். இவ்விதம், அவர் உயிர் இழப்பை தியாகமாகக் கருதப்படவேண்டி, இந்த மரணங்களை வியாபாரச் சந்தைப் பேரங்களாகக் காட்டுகிறார். இத்தகைய ஜிஹாதிகள் அவர்களின் உயிர்களை இச்சந்தையில் விற்பார்களானால் அவர்களுக்கு இஸ்லாமிய சொர்க்கம் வழங்கப்படும்- இது ஒரு வியாபார ஒப்பந்தம்.
இஸ்லாமிய தியாக மரணம் பற்றிய ஆழ்ந்த அலசலுக்கும் இத்தகைய தியாக மரணங்களை பைபிள் தியாக மரணத்திற்கு எவ்விதம் எதிராக உள்ளது என்கின்ற விளக்கத்திற்கும் இந்த தொடுப்பைக் காணவும். கிறிஸ்துவின் சிலுவை மீதான தியாக மரணம் பரலோகத்தின் வாசல்களைத் திறக்கின்றது. எனவே கிறிஸ்தவர்கள் யாரும் பரலோகத்தினை அடைய புனிதப் போரில் மரணமடைய வேண்டிய அவசியம் இல்லை (Christ's "Martyrdom" on the cross opens the way to heaven so that Christians do not have to die in a holy war to reach heaven).
இவ்விதம் பயங்கரமான "பரலோக வன்முறை" ஆரம்பகால இஸ்லமில், அதாவது முஹம்மதுவின் வாழ்விலும் குர்ஆனிலும் உள்ளதினால் இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் எனக் கருதப்பட முடியாது.
2. முஹம்மது அநியாயமாக சுமார் 600 யூத ஆண்மக்களைக் கொன்று பெண்களையும் குழந்தைகளையும் அடிமைப்படுத்துகிறார்
Muhammad unjustly executes around 600 male Jews and enslaves the women and children
627ஆம் வருடம் மார்ச் மாதத்தில் மக்காவினர் மற்றும் அவர்களின் கூட்டாளிகளுக்கு எதிராகக் நடந்த அகழிப் போரில் (முஸ்லீம்கள் மதீனாவின் சில பகுதிகளைச் சுற்றித் தோண்டிய அகழியின் பெயரால் அகழிப்போர் என "Battle of the Trench" அழைக்கப்படுகிறது), அவரது மூன்றாவது மற்றும் கடைசி யூத எதிரிகளான குரைஜா(Qurayzah) என்ற யூதக் கூட்டத்தினருக்கு முஹம்மது இறுதி தண்டனையை வழங்கினார். (ஏப்ரல் 624ல் கெயின்கா(Qaynuqa) கூட்டத்தினரையும், ஆகஸ்ட் 625ல் நதீர் -Nadir கூட்டத்தினரையும் நிர்மூலமாக்கினார்.) குரைஜா கூட்டத்தினர் போரில் நடுனிலை வகிக்க எதிர்பார்க்கப்பட்டாலும், மக்காவினருடன் இணைந்து, முஹம்மதுவை பின்புறமாக எதிர்ப்பது போல் காணப்பட்டனர். மதினாவினரான அவர்களின் முஸ்லீம் கூட்டாளிகள் சிலரால் அவர்கள் முஹம்மதுவிடம் குற்றவாளிகளாக அடையாளம் காட்டப்பட்டனர். முஹம்மது அவர்களுக்குக் கருணை காட்டி அவர்கள் கேட்டுக் கொண்டதின்படி நாட்டைவிட்டு வெளியேற்றியிருக்கலாம், அல்லது சிலரை மட்டும் கொன்றிருக்கலாம்.
முஹம்மதுவின் தீர்ப்பு: 600 ஆண்களை சிரச்சேதம் செய்தல் (சில இஸ்லாமிய ஆதாரங்கள் 900 ஆண்கள் எனக் குறிப்பிடுகின்றன), பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாக எடுத்துக்கொள்ளுதல் (அவர் ஒரு யூத அழகியைத் தனக்குப் பரிசாக எடுத்துக் கொண்டார்). முஹம்மது, இனத்தாரிடையே ஏற்படக் கூடிய சண்டையைத் தவிர்க்க மிகவும் தந்திரமாக, தம்முள் உறவினர்களான ஆறு குழுவினரை இரண்டு இரண்டு யூதர்களாகக் கொலை செய்வித்தார். ஏனைய மரண தண்டனைகள், அவருடன் வெளியேறிய அவரது மெக்காவினரைக் கொண்டு நிறைவேற்றப்பட்டிருக்கலாம். இது அன்று இரவு முழுவதும் நீடித்தது.
அகழிப் போரினைப் பற்றியும் குரைஜா இனத்தினரை அவர் நடத்தின விதத்தைப் பற்றியும் இறைத் தூதர் குர்ஆன் சூரா33:25-26 ல் இவ்விதம் குறிப்பிடுகிறார்.
குர்ஆன் சூரா 33:25 நிராகரிப்பவர்களை தங்களுடைய கோபத்தில் (மூழ்கிக்கிடக்குமாறே அல்லாஹ் அவர்களைத் திருப்பிவிட்டான்; (ஆதலால் இந்தப் போரில்) அவர்கள் ஒரு நன்மையையும் அடையவில்லை, மேலும் போரில் முஃமின்களுக்கு அல்லாஹ் போதுமானவன், மேலும் அல்லாஹ் பேராற்றலுடையவன்; (யாவரையும்) மிகைத்தவன். குர்ஆன் சூரா 33:26 இன்னும், வேதக்காரர்களிலிருந்தும் (பகைவர்களுக்கு) உதவி புரிந்தார்களே அவர்களை (அல்லாஹ்) அவர்களுடைய கோட்டைகளிலிருந்து கீழே இறக்கி, அவர்களின் இருதயங்களில் திகிலைப் போட்டுவிட்டான்; (அவர்களில்) ஒரு பிரிவாரை நீங்கள் கொன்று விட்டீர்கள்; இன்னும் ஒரு பிரிவாரைச் சிறைப்பிடித்தீர்கள். குர்ஆன் சூரா 33:27 இன்னும், அவன் உங்களை அவர்களுடைய நிலங்களுக்கும், அவர்களுடைய வீடுகளுக்கும், அவர்களுடைய பொருள்களுக்கும், (இது வரையில்) நீங்கள் மிதித்திராத நிலப்பரப்புக்கும் வாரிசுகளாக ஆக்கி விட்டான்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன்.
இந்தக் கொடுமை அல்லாவின் அழிவற்ற வார்த்தைகளினால் புனிதமாக்கப்பட்டு குர்ஆனின் மூலம் கொண்டாடப்படுவதாக உள்ளது. ஆனால் இந்தக் கேள்விகள் அவசியம் பதிலளிக்கப்பட வேண்டும்:
1) எதிரிகளைத் தூண்டிவிடுதல் என்பது அறுனூறு மனிதர்களைக் கொல்லுதலும் மற்றும் பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாக்கப்படும் செயல்களுக்கு இணை ஆகுமா?
2) இதனை யார் முடிவு செய்வது?
3) அரபிக் கூட்டத்தலைவனின் வலிமை மிக்க இராணுவமா?
முஹம்மது தனது 622 ஆம் வருடத்திய ஹிஜ்ராவின் போது கீழ்கண்டவாறு சொன்னார்:
குர்ஆன் சூரா16:126 (முஃமின்களே!) நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் எந்த அளவிற்கு நீங்கள் தண்டிக்கப்பட்டீர்களோ அது போன்ற அளவுக்கே நீங்களும் தண்டியுங்கள், பொறுத்துக் கொண்டால், நிச்சயமாக அதுவே பொறுமையாளருக்கு மிக்க மேன்மையானதாகும்.
எந்த ஒரு சீரான சிந்தனை உடைய நியாயமான மனிதனும், முஹம்மது தனது பதில் நடவடிக்கைகளில் (கொல்லுதல்) ஒப்பந்த மீறுதல்களுக்குத் தக்கதாக நியாயப்படி நடந்து கொள்ளவில்லை எனக் கண்டுகொள்வான். குரைஜா கூட்டத்தினர் முஸ்லீம்களை ஒருபோதும் தாக்கியதில்லை. ஒரு சிலர் அவ்வாறு செய்திருப்பினும் கூட இந்தக் குற்றத்திற்காக வழங்கப்பட்ட தண்டனையின் அளவு ஏற்றபடி இல்லை. முஹம்மது தனது மனதிலுள்ள ஆத்திரத்தை வெளிப்படுத்த நியாயமற்ற முறையிலும் அதிகப்படியாகவும் மறு பரிசீலனை அற்ற தண்டனையை வழங்கினார்.
இந்த அடாவடி பற்றிய முழு விபரங்களுக்கு இந்த தொடுப்பில் உள்ள கட்டுரையைப் படிக்கவும். இந்த கட்டுரை யூதர்களுடனான முஹம்மதுவின் தொடர்புகளைப் பற்றி ஆய்வு செய்து, முஹம்மதுவின் மறுக்க முடியாத அடாவடித்தனத்திற்கு ஆதரவாக முஸ்லீம்களின் வழக்கமான விளக்கங்களுக்குப் பதிலளிக்கிறது (scroll down to "Politics, Warfare, and Conquests," no. 5). இந்த தொடுப்பில் குரைஜாவுக்கு எதிராக முஹம்மதுவின் அடாவடி குறித்த விவரங்கள் அடங்கிய தொடர் கட்டுரைகள் உள்ளன. இந்த பட்டியல் (online index) வேறு பல தொடுப்புகளைத் தருகின்றது.
இவ்விதம் யூதர்களுக்கு எதிரான வன்முறை ஆரம்ப கால இஸ்லாமில்- அதாவது முஹம்மதுவின் வாழ்விலும் குர்ஆனிலும் அடங்கியுள்ளதினால், இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் அன்று.
1. முஹம்மது தனிப்பட்ட சமய யுத்தங்களைத் (Crusades.) தொடுக்க ஆயத்தப்படுகிறார்
Muhammad launches his own Crusades
கீழ்கண்ட வசனத்தில், முஹம்மது சண்டையிடுதல், போரிடுதல் அல்லது கொலை செய்தல் எனப் பொருள்படும் qital (root is q-t-l) என்ற அரபி வார்த்தையைப் பயன்படுத்திகிறார்.
குர்ஆன் சூரா9:29 வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கெள;ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.
இந்தக் கொடூரமான வசனத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்கள் என்னவெனில், (1) வேதத்தின் மக்கள் (முஹம்மதுவின் இறுதி வாழ்வில் குறிப்பிடப்படும் கிறிஸ்தவர்கள்) இஸ்லாம் தான் உண்மை மார்க்கம் என ஒப்புக்கொள்ளாவிடில் அவர்கள் தாக்கப்படுதல் வேண்டும். இது இன்றைய கால கட்டத்திலும் கூட தீவிரவாதிகள் கிறிஸ்தவர்களை அவர்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளாததினால் தாக்கப்படுவதற்கான கதவுகளைத் திறக்கின்றது. (2) கிறிஸ்தவர்கள் இஸ்லாமின் "பாதுகாப்பு"க்குள் பணிவுடனோ அல்லது மன இறுக்கத்துடனோ வசிக்க "உரிமை" வேண்டுமெனில் அவர்கள் வரி செலுத்தியாக வேண்டும்.
குர்ஆன் சூரா9:29ன் சரித்திரப் பின்னணி, பைஜாண்டைன் பேரரசின் மீது, முஹம்மது தாம் நோய்வாய்ப்பட்டு மரணமடவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 630 ஆம் வருடத்தில் ஒரு இராணுவப் படையெடுப்பு எடுக்க ஆயத்தப்பட்டர் எனக் காண்பிக்கிறது. உண்மையில் குர்ஆன் சூரா9 ஐ, சில ஆராய்ச்சியாளர்கள் விண்ணகத்தினின்று இறங்கிய சுராக்களில் கடைசியானது எனக் கருதுகிறார்கள். எனவே இது இன்றைய முஸ்லீம்களுக்கு பல நடைமுறைகளை வகுக்க ஆதாரமாகக் கருதப்படுகிறது. பெரும்பாலும் இது முந்தைய வசனங்களை, அதிலும் அமைதியை வலியுறுத்தும் வசனங்களைக் கூட ரத்துசெய்ய வல்லதாகக் காண்பிக்கப்படுகிறது.
இஸ்லாமியரைத் தாக்குவதற்காக பைஜாண்டன் என்ற கூட்டத்தினர் தபுக்(Tabuk) என்ற இடத்தில் 700 மைல்கள் வடக்கில் (இது இப்போது வட அரேபியாவில் உள்ளது.) ஒரு படையினைத் திரட்டினார்கள் என முஹம்மது ஒரு வதந்தியைக் கேள்விப்பட்டார். எனவே அவர் 30,000 புனிதப்போர் வீரர்களைக் கொண்ட ஒரு படையை நடத்தி, அவர்களை எதிர்கொள்ளும்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தார். எனினும், பைஜாண்டைன்களால் அதைச் செய்ய முடியவில்லை. எனவே, அந்த வதந்தியின் மீதான முஹம்மதுவின் நம்பிக்கை பலிக்காமல் அவரது படையெடுப்பு பலனற்றுப் போயிற்று. ஆயினும், அவரால் இதன் மூலம் வடக்குப்பக்கத்திலிருந்த அராபியக் கிறிஸ்தவர் குழுக்களுடன், அவர்கள் முஹம்மதுவையோ அவரது சமுதாயத்தினரையோ தாக்கக் கூடாது என்ற ஒரு ஒப்பந்தத்தினைச் செய்து கொள்ள முடிந்தது. தெற்கிலிருந்து வந்த 30,000 பேர் கொண்ட ஒரு படை உண்மையிலேயே வட திசையினரை சற்றுப் பிரமிக்கச் செய்திருக்க வேண்டும். எனவே அவர்களால் இஸ்லாமுக்கு ஆபத்து இல்லை என்ற நிலை தோன்றிற்று. அவர்கள் தான் குர்ஆன் சூரா9:29 ல் கண்டுள்ளபடி "பாதுகாப்பு" வரி கட்டியவர்கள். (முஹம்மதுவின் மரணத்திற்குப் பிறகும், குழுக்களும் நகரங்களும் கூட இவ்வாறே செய்தனர்.). ஆக, முஹம்மதுவின் கட்டாய வரி, பாதுகாப்புக்கானது என்பதினால் நியாயமானது என்றில்லாமல் மூர்க்கத்தனமானது என்பதினால் நியாயமற்றது ஆகும் (Therefore, Muhammad's forced tax was aggressive and hence unjust, not defensive and hence just).
முஹம்மதுவின் இந்த இராணுவ நடவடிக்கை, பின் நாட்களில் ஐரோப்பாவில் நடந்த சிலுவைப் போருக்கு முன்னோடியாக நடந்த இஸ்லாமிய சிலுவைப் போர் எனக் கருதப்படக் கூடியதாக இருந்தது. 638 ஆம் ஆண்டு முஹம்மதுவின் மரணத்திற்குப் பின் ஆறே ஆண்டுகளில், முஸ்லீம் படைகள் எருசலேமைக் கைப்பற்றினர். எனவே இன்று இஸ்லாமியர்கள் தாங்களாகவே ஒப்புக்கொள்ள வேண்டுமேயன்றி, ஐரோப்பாவின் சிலுவைப் போர்களை ஒருபோதும் குறை சொல்லக்கூடாது.
முஹம்மதுவின் மரணத்திகுப் பின் நிகழ்ந்த இஸ்லாமிய (சிலுவைப்) போர் குறித்தும் அவற்றின் அடாவடி மற்றும் உள்நோக்கங்கள் குறித்தும் மேல் தகவல்களுக்கு பின் வரும் இரு தொடுப்புகளைச் சொடுக்கவும்,
Crusades,
Ultimate Goal.
ஆக, சமயப்போர் வன்முறை இஸ்லாமின் ஆரம்பத்திலேயே, முஹம்மதுவின் வாழ்க்கையிலும், குர்ஆனிலும் காணப்பட்டு, இன்று அதற்கப்பால் மேற்கத்திய நாடுகளிலும் சென்றடைந்துள்ளதினால், இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமே அல்ல.
இந்தப் பத்துக் காரணங்களும் இன்று நமக்கு என்ன காண்பிக்கின்றன?
What the ten reasons mean for us today
வன்முறையின் இந்தப் பத்துத் தன்மைகள் ஆரம்பகால இஸ்லாமின் இதயத்தில் ஆழத்தில் உறைந்துள்ளது. இவை இன்றைய கால கட்டத்தில் எட்டு தாக்கங்களை உருவாக்கியுள்ளன. இவற்றில் முதல் மூன்றும் மதவியல்(Theological) சம்பந்தப்பட்டது, ஏனையவை நடைமுறையில்(Practial) உள்ளவை ஆகும்.
மதவியல் தொடர்பான தாக்கங்கள் (Theological implications)
முதலாவதாக, இந்தக் கட்டுரையில் காணப்படும் ஒவ்வொரு காரணமும், மேற்கொண்டு அதில் கொடுக்கப்பட்ட தொடுப்புகளில் உள்ள விவரங்களும், இயேசு கிறிஸ்து ஒருபோதும் இத்தகைய வன்முறையில் ஈடுபட்டதில்லை எனத் தெள்ளத் தெளிவாக விளக்குகின்றன. உதாரணத்திற்கு, அவர் தன்னை எதிர்த்தவர்களை ஒருபோதும் தாக்கியதில்லை, விபச்சாரக்காரர்களைச் சவுக்கால் அடித்ததில்லை, திருடர்களின் கையை வெட்டியதில்லை, அவரது சிலுவைப்போரை ஒருபோதும் நடத்தியதில்லை.(மத்திய கால ஐரோப்பியர்கள் செய்தது கிறிஸ்தவத்திற்கு அடிப்படை அல்ல, அவைகள் கிறிஸ்தவத்திற்கு எதிரானவையாகும்.). கிறிஸ்து தேவனின் அன்பை வெளிப்படுத்துகிறார். எனவே கிறிஸ்தவர்களும், நல்மனம் படைத்தோரும், குர்ஆனில் முஹம்மதுவின் வன்முறையினை ஆதரிக்க வசதியாக இத்தனை வன்முறை வசனங்கள் இருக்கும்போது, அதனை உண்மையான தேவன் வெளிப்படுத்துவாரா என்று வினவ உரிமை உண்டு. அதே நேரத்தில், பைபிளின் புதிய ஏற்பாட்டில் எந்தவித வன்முறையும் காணப்படவில்லை.
இரண்டாவதாக, புதிய ஏற்பாடு மாற்றப்பட்டுள்ளது, ஆனால் குர்ஆனோ பிழையற்றது என முஸ்லீம்கள் நம்புகிறார்கள். வாதத்திற்காக நாம் இது சரியென்று எடுத்துக்கொண்டால் கூட (ஆனால் உண்மையில் அவ்வாறு அல்ல), ஏன் உண்மையை நாடும் சிந்தனையாளர்கள் மாற்றப்பட்ட, ஆனால் அமைதி நாடும் புதிய ஏற்பாட்டை விடுத்து, பிழையற்ற ஆனால் வன்முறை நிறைந்த குர்ஆனை நாடவேண்டும்?(Even if we assume only for the sake of argument that these claims are true (but they actually are not), then why would reasonable seekers of the truth prefer the "pure" but violence-filled Quran over the "corrupted" but peaceful New Testament?)
புதிய ஏற்பாடு மாற்றப்பட்டது என்ற அர்த்தமற்ற குற்றச்சாட்டினை வீசும் முஹம்மது அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படும் முன் அவரும் அவரது குர்ஆனும் தங்களது கேள்விக்குரிய வன்முறை நடவடிக்கைகள் குறித்து ஒரு தீவிர அலசலுக்கு உட்படுத்தப்படுதல் வேண்டும். ஆனால், அந்தோ! அவரும் அவரது குர்ஆனும் இந்தக் கட்டுரையின் கண்ணோட்டத்தில், மிகக் கேவலமாகத் தோற்றுப் போகிறார்கள், ஆனால், கிறிஸ்துவும் புதிய ஏற்பாடும் நன் மதிப்புப் பெற்று விளங்குகிறார்கள். எனவே முஹம்மது, கீழ்த்தரமான நடவடிக்கைகளான விபச்சாரகர்களைச் சவுக்கால் அடித்தல், திருடர்களின் கைகளை வெட்டுதல் மற்றும் மனைவியை அடித்தல் போன்றவற்றின் மூலம் தவறாகக் கருதப்பட்டிருக்கும் போது தக்க ஆய்வினை மேற்கொள்ளாமல் புதிய ஏற்பாட்டை அவர் குற்றம் சாட்டும் போதும் அவ்வாறே தவறாகக் கருதப்படுவார்.
மூன்றாவதாக, முஹம்மது தனக்கு வெளிப்படுகள், தெய்வீக வழிகாட்டுதல் உண்டு என்றுச் சொல்லிக்கொள்ளும் இவரது நடைமுறை கோட்பாடுகள், அறிவுபூர்வமான விஷயங்களான இயேசுவின் தெய்வீகத் தன்மை, திரித்துவம் ஆகிய காரியங்களை அவர் மறுக்கும்போது அவரை எவ்வாறு நம்புவது? தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், நடைமுறைக் காரியங்களில் அவருக்கு இறைவனின் வழிகாட்டுதல் இருந்திருக்க முடியாது, ஏனெனில், உண்மையான கடவுள் இத்தகைய கொடூரமான வன்முறையை இயேசுவிற்குப் பின் அறுனூறு ஆண்டுகள் கழித்து அனுமதித்து மதத்தினை இழிவுபடுத்தியிருக்கும் சாத்தியம் இல்லை – சரித்திர பூர்வமான இந்த இடைவெளி குறிப்பிடத்தக்கது. இயேசுவும் புதிய ஏற்பாடும் இத்தகைய வன்முறையின் ஒரு அடையாளம் கூட இல்லாதிருப்பதைக் காண்கிறோம். மேலும், முஹம்மது பூமி சம்மந்தப்பட்ட விஷயங்களில், இந்த ஆய்வில் தோற்றுப் போகும் போது, மதவியல் மற்றும் அறிவுப்பூர்வமான சோதனையில் அவர் அவசியம் தோற்றுப்போவார். இத்தகைய உயர்ந்த கொள்கைத் தத்துவங்களைப் பொறுத்து, குறிப்பாக, அவர் ஒரு மத வல்லுனரல்லாத போது அவரை நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை. அவரது வெளிப்பாடுகள், இப்போது நடைமுறையில் சந்தேகத்திற்கு உரியவையே. (Third, since Muhammad who claims divine guidance is so wrong about practical matters, why should we believe him about theoretical matters like the deity of Christ and the Trinity, both of which he denies? Clearly, he was not divinely guided in practical matters because the true God would not degrade religion by endorsing such gruesome violence six hundred years after Christ came—the historical span is critical. Christ and the New Testament do not have even one example of such violence. Again, if Muhammad first fails the down-to-earth test, then he likely fails the theological or theoretical test—we have no reason to believe him in such high doctrines, especially since he was no theologian and his revelations are now empirically suspect).
இந்தப் பத்துக் காரணங்களின் நடைமுறைத் தாக்கங்கள் பின் வருமாறு
The practical implications of the top ten reasons are as follows
நான்காவதாக, தங்களின் விசுவாசத்தைக் காத்துக்கொள்ளாத பெயர்க் கிறிஸ்தவர்கள், இஸ்லாமுக்கு மாற உந்தப்படுகையில், சற்று நின்று இரண்டாம் முறை யோசிக்க வேண்டும். தேவ குமாரனாகிய கிறிஸ்து, தேவனின் அன்பினை வெளிப்படுத்துகிறார் (மத்தேயு 3:16-17), சாதாரணமான, தன்னைத் தானே தூதுவன் என அறிவித்துக் கொள்பவரின் கோபத்தினை அல்ல (குர்ஆன் சூரா3:144). தேவ அன்பின் மார்க்கத்தினை விட்டு அவர்கள் ஏன் அல்லாவின் மனுஷீக வன்முறை மார்க்கத்திற்கு மாறவேண்டும்? (Why would they trade in the religion of God's peace and love for Allah's human religion of violence?)
ஐந்தாவதாக, இன்றைய தினம், இஸ்லாமிய வெறியர்கள்(fanatical Muslims) அவர்களின் இறைத்தூதர் விட்டுச் சென்ற பணியினை எளிதில் தொடர்கிறார்கள். இஸ்லாமியர் அல்லாதோர் மீது அல்லாவின் விருப்பத்தைத் திணிக்கும் பொருட்டு, மேலை நாட்டினரை அவர்கள் மேற்கொள்ள விரும்புவதைக் கண்டு நாம் ஏன் ஆச்சரியப்பட வேண்டும்? இப்பொழுதும் அவர்கள் கீழ்க்கண்ட தர்க்க ரீதியான வாதத்தில் பொதிந்துள்ள உண்மையினை மறைக்கும் வண்ணமாக முஹம்மதுவின் சிலுவைப் போரைத்(Muhammad's Crusades) தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்:
(1) A என்பது உண்மையானால், B என்பது நடைபெற வேண்டும். அல்லா இஸ்லாமை ஆதரிப்பாரானால் அது முடிவின்றிப் பரவ வேண்டும்.
(3) எனவே A என்பது உண்மை அல்ல எனவே அல்லா இஸ்லாமை ஆதரிக்கவில்லை.
(1) If A, then B. If Allah endorses Islam, then it should expand endlessly.
(2) Not-B. But it is not expanding endlessly (see this analysis).
(3) Therefore, not-A. Therefore, Allah does not endorse Islam.
இந்த வாதத்தை, அவர்கள் தர்க்கரீதியாக சிந்திக்காவிடினும், குறிப்பாக இரண்டாவது வாக்கியம் வெறியர்களின் மனதை உறுத்துகிறது, இந்த வெறியர்களின் கூற்றுப்படி இஸ்லாம் முடிவின்றி விரிந்து பரவுவதைத் தடைசெய்வது எது? இதற்கு அவர்களது பதில் "அமெரிக்கா"வும் "இஸ்ரேல்" என்ற யூதர்களின் நாடு மத்திய கிழக்கு நாடுகளின் மத்தியில் அமைந்திருப்பதுமே. அராபியர்கள், மூன்று போர்களில் தோல்வியுற்றும், இந்த வெறியர்கள் யூதர்களை வேரறுப்பதில் குறியாய் இருக்கிறார்கள். இந்த இஸ்ரேல் என்ற, அவர்கள் மத்தியில் இருக்கும் மிகச் சிறிய முஸ்லீமல்லாத நாடு, தினந்தோறும் அவர்களுக்கு அடி கொடுக்கிறது. இதை அல்லா எவ்வாறு அனுமதிப்பார்? இதற்கு மேலேயுள்ள இரண்டாவது வாக்கியம் தான் முக்கிய காரணம். இதனால் தான் அவர்கள் கடந்த இருபது ஆண்டுகளாக அமெரிக்கா மீதும், மேலை நாடுகளின் மீதும், இஸ்ரேல் மீதும் தாக்குதல்கள் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். தவிர, ஒசாமா பின் லேடனும், செப்டம்பர் 11 ம் தேதிய காரியத்தை நிறைவேற்றினார். இத்தகைய வெறியர்களை ஊக்குவிக்கும் இஸ்லாமின் உலகளாவிய அதிகாரம் பற்றிய மூன்று குர்ஆன் வசனங்கள் குறித்த தகவலுக்கு இந்த கட்டுரையை பார்க்கவும். பின் லேடனின் நோக்கஙகளைக் குறித்த சிறப்புப் பார்வைக்கு இக்கட்டுரையை படிக்கவும்.
ஆறாவதாக, இந்தக் கட்டுரையின் ஆரமபத்தில் குறிப்பிட்டபடி, உலகளாவிய செய்தித்தொடர்புகளை பயன்படுத்திக்கொள்ளும் இஸ்லாமியத் தலைவர்கள், இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமென்று தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். இவர்கள் மேற்கத்திய நாட்டினரை இவ்விதம் திசை திருப்புவதை உடனே நிறுத்த வேண்டும். ஏனெனில் உண்மையில் இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் இல்லை. அதில் அமைதியான காலங்கள் சிறிது காலம் இருந்தது உண்மையே, ஆனால் அவைகள் நீடித்து இருக்கவில்லை. முஹம்மது, பத்தே ஆண்டுகளில் (622-632) எழுபத்தி நான்கு போர்களையும், தாக்குதல்களையும், வழிப்பறி கொள்ளைகளையும், சண்டைகளையும் நடத்தினார். அவற்றில் பெரும்பான்மையானவை மிகத் தீவிரமானவை.
ஏழாவதாக, மேற்கத்தியப் பண்பாடு, முஹம்மதுவின் வாழ்க்கையையும், குர்ஆனையும், ஷரியா (sharia) சட்டத்தையும் (குர்ஆனிலிருந்தும் ஹதீஸ்களிலுமிருந்து எடுத்து தொகுக்கப்பட்ட சட்டம்) சமுதாயத்திற்கு பலன் தரக்கூடியவை என ஒருபோதும் ஒப்புக்கொள்ளக் கூடாது. மாறாக, இஸ்லாம், சமுதாயம் மற்றும் பண்பாடு குறித்த காரியங்களில் பின்னோக்கி எடுக்கப்பட்ட அனேகம் பலத்த அடிகளாகவே கருதப்பட வேண்டும். சமீப காலத்தில் மேலை நாடுகளில் நடந்த ஒரு வருத்தத்திற்குரிய நிகழ்வும், அதிகம் பிரபலப்படுத்தப் படாததுமான விஷயம் என்னவெனில், கனடாவில் ஒரு இஸ்லாமிய நீதிமன்றம் இருப்பதே ஆகும். ஆஸ்திரேலியாவிலும் முகமதியர்கள் ஷரியா விவாக ரத்து கோர்ட் ஒன்றினை நிறுவ வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். கனடாவின் அரசாங்கம் உடனடியாக இந்த நீதிமன்றத்தை மூடிவிட வேண்டும். அதேபோன்று ஆஸ்திரேலியாவும் அதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. அமெரிக்காவிலோ அல்லது எந்த ஒரு மேலை நாட்டிலோ இத்தகைய கோர்ட்டுகள் செயல்பட அனுமதிக்கக் கூடாது. நேருக்கு நேர் சொல்வோமானால் ஷரியா சட்டத்தினால் சமுதாயத்திற்கு ஒரு பலனும் இல்லை.
இஸ்லாமிய ஆதரவாளர்கள், கிறிஸ்தவத்திலும் வன்முறை உண்டு என கான்ஸ்டன்டைன் (Constantine) என்ற ரோமப் பேரரசனையும், மத்திய கால சிலுவைப் போரையும் குறிப்பிட்டுச் சொல்லுகிறார்கள் என்பது உண்மையே. ஆனாலும், அவைகள் கிறிஸ்துவத்திற்கு அடிப்படையானவைகள் அல்ல. மாறாக, கிறிஸ்துவும், புதிய ஏற்பாடுமே அவ்வாறு கருதப்படத்தக்கவை. மேலும், இயேசுவும் புதிய ஏற்பாட்டை எழுதினவர்களும் ஒருபோதும் வன்முறையை நடத்தவோ அல்லது ஆதரிக்கவோ இல்லை.
இதன் மறுபக்கத்தில், முஹம்மதுவும் குர்ஆனும் இஸ்லாமுக்கு அடிப்படையான விஷயங்கள். முஹம்மதுவின் வாழ்விலும், குர்ஆனின் பக்கங்களிலும் வன்முறை நிரப்பப்பட்டுள்ளது.
எனவே, இத்தகைய தெளிவான, சரி பார்த்துக் கொள்ளத்தக்க பத்துக் காரணங்களினால், இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் அல்ல.
மேலும் அறிய உதவும் கட்டுரைகள்:
- முஹம்மதுவின் மறைக்கப்படாத முகம்(Mohammed without Camouflage): மிகவும் பழமைவாய்ந்த இந்த கட்டுரையை எழுதியவர் ஒரு கிறிஸ்தவர் ஆவார். இவர் இஸ்லாமிலும் அரபி மொழியிலும் புலமைப் பெற்றவர். இக்கட்டுரையில் முஹம்மதுவின் கொடுமையான நடவடிக்கைகளை இவர் பட்டியலிட்டு காட்டுகிறார். இக்கட்டுரையை ஒவ்வொரு கிறிஸ்தவரும், ஒவ்வொரு சிந்திக்கும் இஸ்லாமியரும் படிக்கவேண்டும்.
- இஸ்லாமின் காந்தி எங்கே?(where is the Gandhi of Islam?): இஸ்லாம் ஒரு "அமைதி மார்க்கம்" என்றுச் சொன்னால்? ஏன் ஒரு புகழ்பெற்ற அமைதி வீரரை(Prominent Champions for Peace) எல்லா சமுதாயத்தினரும் அங்கீகரிக்கும் வண்ணம் இஸ்லாமினால் உருவாக்க முடியவில்லை? ஒவ்வொரு தீவிரவாத தாக்குதலுக்கு அடுத்து, நாம் காண்பது என்ன? சில இஸ்லாமியர்கள் அறைகுறை மனதுடன் சில அறிக்கைகளை மட்டும் வெளியிடுகிறார்கள். இதற்கு பதிலாக, எந்த ஒரு இஸ்லாமியரும் ஒரு மிகப்பெரிய கூட்டத்தைக் கூட்டி, இந்த தீவிரவாத்தை முற்றிலும் அழித்துவிடவோ அல்லது தீவிரவாத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவோ, தன் சமுதாய மக்களைக் கூட்டி ஒரு பெரிய எழுப்புதல் உண்டாகவோ செய்ததாக நாம் காணமுடியாது. தீவிரவாத்தை ஒழித்துக்கட்ட உழைத்ததாகவோ நாம் காணமுடியாது. இங்கிலாந்தின் ஒவ்வொரு முஸ்லீமும், சட்டத்துரை அதிகாரிகளோடு ஒத்துழைத்து, இந்த தீவிரவாதத்தை முற்றிலும் அழித்துவிட உதவவேண்டும். இங்கிலாந்திலுள்ள அல்லது மேற்கத்திய நாடுகளில் உள்ள ஒவ்வொரு மசூதியிலும் உள்ள ஒவ்வொரு முஸ்லீமும் தாங்கள் தங்கள் இறைவனை தொழுதுக்கொள்ளும் மசூதிகளில் நடத்தப்படும் "தீவிரவாத கூடுகையை" அரசாங்கத்திற்கு தெரிவிக்கவேண்டும். இதை ஏன் இவர்கள் செய்வதில்லை?
- இஸ்லாம் மற்றும் தீவிரவாதம்
Copyright by James Malcolm Arlandson. Originally published at
americanthinker.com, this article was slightly edited for Answering Islam.
Source: http://www.answering-islam.org/Authors/Arlandson/ten_reasons.htm
Tamil Source: http://www.answering-islam.org/tamil/authors/arlandson/ten_reasons.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக