ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

கிறிஸ்தவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிறிஸ்தவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 27 மார்ச், 2020

இயேசு தாம் பிறப்பதற்கு முன்பிலிருந்து அநாதியாக இருந்தாரா?

எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது. (மீகா 5:2)
மீகா என்பவர் ஒரு தீர்க்கதரிசி ஆவார். இயேசு பிறப்பதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்பு இவர் வாழ்ந்தார். மேசியாவின் சரியான பிறந்த இடத்தை அவர் தீர்க்கதரிசனமாக‌ கூறினார் - பெத்லகேம். இது ஒரு ஆச்சரியமான விவரம் தான், ஆனால் இந்த வசனத்தில் இன்னும் ஆச்சரியப்படுத்தும் வேறு ஒரு விவரமும் உள்ளது.

இந்த வசனத்தில் சொல்லப்பட்டவர் பெத்லகேம் ஊரிலிருந்து வந்தாலும்,  அவருடைய ஆரம்பம் உண்மையில் பெத்லகேமில் இருந்து தொடங்கவில்லை என்று மீகா அறிவிக்கிறார். அவருடைய தொடக்கம்  “அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது“ என்று தீர்க்கதரிசனமாக கூறுகிறார்.

ஒரு நிமிடம் பொறுங்கள்! … ஆனால், நித்தியமானவர் இறைவன் மட்டும் தானே! ஆம், அநாதியாக இருப்பவர், தொடக்கமில்லாமல் இருப்பவர் இறைவன் மட்டும்தான்.

இயேசு அநாதியாக‌, காலத்திற்கும் படைப்பிற்கும் முன்பே, நித்தியமாகவும், படைக்கப்படாதவராகவும் இருந்தார்.

நாம் அனைவரும் பிறப்பதற்கு முன்பே இருந்திருக்கின்றோம். இதனால் நாம் கடவுளாக மாறிவிடமுடியுமா?”  என்று முஸ்லிம்கள்  கேட்பார்கள்.

முஸ்லிம்களின் இந்த வாதத்திற்கு குர்‍ஆனில் எந்த ஒரு சான்றுமில்லை. இது முஸ்லிம்களின் கற்பனையான வாதமாகும். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நாம் பிறப்பதற்கு முன்பு நாம் இருக்கவில்லை.  நீங்கள் பிறப்பதற்கு முன்பே இருந்திருந்தால், நீங்கள் நித்தியமானவர் என்று அழைக்கப்படுவீர்கள்! நீங்கள் அநாதியாக இருந்திருந்தல், நீங்கள் கடவுளாக கருதப்படுவீர்கள்.

நாம் நம்முடைய தாயின் கர்ப்பத்தில் கருத்தரித்த தருணத்தில் தான் நம்முடைய தொடக்கம் ஆரம்பிக்கிறது. அதற்கு முன் 1 வினாடி கூட நாம் இல்லை!

உடனே முஸ்லிம்கள், "சரி ஒப்புக்கொள்கிறோம், ஆனால் நாம் அனைவரும் இறைவனின் அறிவில் இருந்தோம்" என்றுச் சொல்வார்கள்.

இறைவன் சர்வஞானியாக எல்லாவற்றையும் அறிந்தவராக இருக்கிறார், உண்மை தான். அவருடைய பரிபூரண மற்றும் முழுமையான அறிவில், நாம் பிறப்பதற்கு முன்பே இறைவன் நம் ஒவ்வொருவரையும் அறிந்திருந்தார் என்பதும் உண்மையே. ஆனால், இதன் அர்த்தம், “நாம் ஏற்கனவே உயிருள்ள மனிதர்களாக இருந்தோம்” என்று எடுத்துக்கொள்ள முடியாதல்லவா?

இயேசு, “நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.” என்று கூறினார் (வெளி  22:13).

இங்கு இயேசு தெளிவாக, குழப்பம் வராத வண்ணமாக “தான் இறைவன்” என்றுச் சொல்வதை கவனிக்கவும். இந்த வசனத்தில் சொல்லப்பட்டவைகளை முஸ்லிம்கள் சுலபமாக அடையாளம் கண்டுக்கொள்வார்கள். அல்லாஹ்வின் 99 பெயர்களில் ஒன்றான "அல்- அவ்வல் மற்றும் அல்-ஆகிர்" என்ற பட்டப்பெயரை இங்கு அவர்கள் நினைவு கூறுவார்கள். முஹம்மது வந்து இந்தப் பெயரை தன் மக்களுக்கு கற்பித்துக் கொடுப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு  முன்பே இயேசு இந்த தெய்வீக “அல்-அவ்வல் மற்றும் அல்-ஆகிர் “ என்ற‌ பட்டத்தை தன்னுடையது என்று கூறினார்.

இயேசு பெத்லகேமில் பிறப்பதற்கு முன்பு, அவர் திரித்துவத்தின் இரண்டாவது நபராக இருந்தார் (யோவான் 17: 5, 17:24). தந்தையும் குமாரனும் நித்திய காலமாக அன்பு, ஐக்கியம் மற்றும் மகிமையுடன் கூடிய  உறவு இவர்கள் மத்தியில் இருந்ததாக இந்த வசனங்கள் கூறுகின்றன.

கேப்ரியல் தூதன் மரியாளுக்கு நற்செய்தியை அறிவிப்பதற்கு முன்புவரை  “இயேசு” என்ற பெயர் திரித்துவத்தின் இரண்டாவது நபரின் பெயராக அறியப்படவில்லை (லூக்கா 1:31). ஆனால் நித்திய குமாரன் தன்னை "இயேசு" என்று உலகிற்கு வெளிப்படுத்துவதற்கு முன்பே நித்திய காலமாக அநாதியாக இருந்தார் (டேவிட் குஜிக்).

பெத்லகேமில் பிறப்பதற்கு முன்பு, எல்லாவற்றையும் படைத்தவர் இயேசு ஆவார் (கொலோசெயர் 1: 16-17, யோவான் 1: 1-3). “அவர் எல்லாவற்றிற்கும் முன்பாக இருந்தவர் ஆவார்”.

அவர் எல்லாவற்றையும் படைத்தவர் என்பதால், அவர் நித்தியமானவர், மேலும் அவர் படைத்தவற்றின் ஒரு பகுதியாக இருக்கவில்லை. இறைவனைத் தவிர மற்ற அனைத்துமே படைக்கப்பட்டவைகள் தான். எது படைக்கப்படவில்லையோ, அது தான் கடவுள்/இறைவன். எல்லாவற்றையும் படைத்தவர் இயேசு ஆவார்; எனவே அவர் இறைவன் ஆவார். அவர் தனது சொந்த வேலையின் ஒரு பகுதியாக இருக்க முடியாது. (கிளார்க்)

மூலம்: http://www.faithbrowser.com/did-jesus-exist-before-he-was-born/

புதன், 24 அக்டோபர், 2018

குர்‍ஆன் 5:47ல் அல்லாஹ் சொன்னதை நான் பின்பற்ற முடியுமா?

முஸ்லிம்களே! குர்‍ஆனில் அல்லாஹ் சொன்னவைகளை நாம் நம்பவேண்டுமா? அல்லது நம்பவேண்டாமா? குர்‍ஆனில் சொல்லப்பட்டவைகளை நீங்கள் நம்புகிறீர்களா?

குர்‍ஆனின் கீழ்கண்ட வசனத்தின் காரணமாகத் தான் நான் இக்கேள்வியை கேட்கிறேன், மூன்று குர்‍ஆன் தமிழாக்கங்களில் இவ்வசனத்தை படிப்போம்:

5:47. (ஆதலால்) இன்ஜீலையுடையவர்கள், அதில் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பு வழங்கட்டும்; அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் தான் பாவிகளாவார்கள். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

5:47. ஆகவே, இன்ஜீலை உடையவர்கள் அதில் அல்லாஹ் அறிவித்து இருக்கும் (கட்டளைகளின்)படியே தீர்ப்பளிக்கவும். எவர்கள், அல்லாஹ் அறிவித்த (கட்டளைகளின்)படியே தீர்ப்பளிக்க வில்லையோ அவர்கள் நிச்சயமாக பாவிகள்தான். (அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்)

5:47. மேலும், இன்ஜீல் அருளப்பட்டவர்கள், அதில் எந்தச் சட்டத்தை அல்லாஹ் இறக்கி வைத்தானோ அந்தச் சட்டத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கட்டும் (என்பதே நம் கட்டளையாக இருந்தது)! மேலும், எவர்கள் அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கவில்லையோ, அவர்கள்தாம் ஃபாஸிக்கள் பாவிகளாவர்.(இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் தமிழாக்கம்)

கிறிஸ்தவர்கள் இன்ஜிலில் சொல்லப்பட்டதின் படியே தீர்ப்பு அளிக்கவேண்டுமாம். குர்‍ஆனின் இந்த வசனத்துக்கு கீழ்படிய என்னை அனுமதிப்பீர்களா?

இல்லை.. இல்லை, இன்ஜில் தொலைந்துவிட்டது அல்லது மாற்றப்பட்டுவிட்டது என்று முஸ்லிம்கள் நம்மிடம் கூறுவார்கள்.

இன்ஜில் தொலைந்து போய் இருந்தால், ஏன் அல்லாஹ், அதனைக் கொண்டு தீர்ப்பு அளியுங்கள் என்று கட்டளையிடுகின்றான்?

குர்‍ஆன் 5:47 என்ற வசனத்துக்கு நான் கீழ்படிவது எப்படி?

இவ்வசனத்தை இறக்கும் போது, இன்ஜில்  என்பது தொலைந்துவிட்டது அல்லது எதிர்காலத்தில் தொலையப்போகிறது என்ற விவரம் அல்லாஹ்விற்கு தெரியவில்லையா? சர்வ ஞானியான அல்லாஹ் இதனை அறிந்திருக்கவேண்டுமல்லவா?

அல்லாஹ் இவ்வசனத்தை இறக்கும் போது, சொல்லாத விஷயத்தை, முஸ்லிம்களே, நீங்கள் எப்படி அறிந்துக்கொண்டீர்கள்?

ஒருவேளை நீங்கள் (முஸ்லிம்கள்), குர்‍ஆன் இறக்கப்பட்ட பிற்பாடு தான் இன்ஜில் தொலைந்துவிட்டது என்று சொல்வீர்களானால், இன்னமும் நீங்கள் அல்லாஹ்வின் வார்த்தையை கனவீனப்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம். ஏனென்றால், உங்கள் கூற்றின்படி, அல்லாஹ்வின் 5:47 என்ற வசனமானது இனி உபயோகத்தில் இல்லை, அது செல்லுபடியாகாது என்று சொல்லவருகிறீர்கள். அல்லாஹ்வின் வசனங்கள் ஒரு காலத்தில் (7ம் நூற்றாண்டில்) செல்லுபடியாகும், எதிர்காலத்தில் அவைகளினால் உபயோகமில்லை, அவைகள் செல்லுபடியாகாது என்று நீங்கள் சொல்கிறீர்கள், அப்படித்தானே!

இதுமட்டுமல்ல, அல்லாஹ் தன்னுடைய இன்னொரு வசனத்தின் மூலமாக, தன்னைத் தானே தர்மசங்கடத்தில் தள்ளிக்கொள்கிறான்:

ஸூரா 5:68ஐ படிக்கவும்:

5:68. "வேதமுடையவர்களே! நீங்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும், இன்னும் உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கப்பட்டவற்றையும் நீங்கள் கடைப்பிடித்து நடக்கும் வரையிலும் நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களாக இல்லை" என்று கூறும்; மேலும் உம் இறைவனால் உம்மீது இறக்கப்பட்ட (வேதமான)து அவர்களில் பெரும்பாலோருக்கு குஃப்ரை (நிராகரித்தலை)யும் வரம்பு மீறுதலையும் நிச்சயமாக அதிகப்படுத்துகிறது; ஆகவே நிராகரித்துக் கொண்டிருக்கும் கூட்டத்தாருக்காக நீர் கவலைப்பட வேண்டாம். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

முஸ்லிம்களே, ஸூரா 5:68 ஐ கிறிஸ்தவர்கள் பின்பற்ற அனுபதிப்பீர்களா?

குர்‍ஆன் 5:68ல் சொல்லப்பட்டதின்படி யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு வழிகாட்டுதல் கிடைக்காது ஏனென்றால் தோராவும், இன்ஜிலும் தொலைந்துவிட்டன என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.

ஆனால், இவ்வசனத்தில் அல்லாஹ் தோராவும், இன்ஜிலும் தொலைந்துவிட்டன என்று சொல்லவில்லையே! முஸ்லிம்கள் அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு எதிராக‌ பேசுகிறார்கள். நல்வழிகாட்டுதலை தோராவிலும், இன்ஜிலிலும் காணலாம் என்று அல்லாஹ் சொல்கிறான். அல்லாஹ் ஒருவகையாக சொல்கிறான், அதற்கு எதிராக முஸ்லிம்கள் சொல்வதினால். இப்போது நாம் என்ன செய்வது? 

குர்‍ஆன் சொல்வதை நாம் நம்பவேண்டுமா? இல்லையா?

குர்‍ஆன் 5:47 செல்லுபடியாகாது என்று நாம் மேலே கண்டோம், இப்போது அந்த பட்டியலில் குர்‍ஆன் 5:68ம் வசனமும் சேர்ந்துவிட்டது. முஸ்லிம்களே, குர்‍ஆனிலிருந்து இன்னும் எத்தனை வசனங்களை நீங்கள் இரத்து செய்யப்போகிறீர்கள்? அல்லாஹ் சொல்லாத ஒன்றை சொன்னதாக நீங்கள் கற்பனை செய்துக்கொண்டு இன்னும் எத்தனை ஸூராக்களை பொய்யாக்கப்போகிறீர்கள்?

அல்லாஹ் தன் வேதத்தை நித்தியத்தில் எழுதியதாக முஸ்லிம்கள் நம்புகிறார்கள், ஆனால், அதனை பாதுகாக்க அல்லாஹ் தவறியிருக்கின்றான் என்று அவர்களே சாட்சியிடுகிறார்கள். முஸ்லிம்களிடமிருந்து  இன்னும் எப்படிப்பட்ட‌ அவமானங்களை அல்லாஹ் சகிக்கவேண்டி இருக்குமோ தெரியவில்லை!

சிந்திக்க சில வரிகள்:

முஹம்மது வாழ்ந்த காலத்தில் இருந்த கையெழுத்துப் பைபிள் பிரதிகள், கீழ்கண்ட இரண்டு பிரதிகளாக இப்போதும் நம்மிடம் உள்ளது.

  1. கோடக்ஸ் வாடிகனஸ் - The Vatican (Codex Vaticanus)
  2. கோடக்ஸ் சினாடிகனஸ் - British Museum (Codex Sinaticus)

இயேசு உலக மக்களுக்காக மரித்து, உயிர்த்தெழுந்த விவரங்கள், மேலும் பல சாட்சிகளுக்கு முன்பாக அவர் ப‌ரமேரிய விவரங்கள் அனைத்தும் இந்த பிரதிகளில் உள்ளது. புதிய ஏற்பாடு, இவ்விரு கிரேக்க  கையெழுத்து பிரதிகளில் பத்திரமாக பாதுக்காக்கப்பட்டு இருக்கிறது. இவைகள் முஹம்மதுவிற்கு முன்பு 200 ஆண்டுகள் பழைய பிரதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்தவ பைபிள் முஹம்மதுவிற்கு முன்பு 575 ஆண்டுகள் முந்தையதாகும். அதே போல, யூதர்களின் தோரா (பைபிளின் முதல் ஐந்து நூல்கள்), முஹம்மதுவிற்கு முன்பு 1000 லிருந்து 3000 ஆண்டுகள் முந்தையதாகும்.  இவைகளில் வெளிச்சமும், நேரான வழிகாட்டுதலும் இருக்கிறது, எனவே முஸ்லிம்கள் இவைகளை படிக்கவேண்டும் என்று முஹம்மது குர்‍ஆனில் கட்டளையிட்டுள்ளார். இவைகள் மாற்றப்பட்டுவிட்டன என்று இஸ்லாம் சொல்லுமானால், முஹம்மது ஒரு பொய்யர் என்று இஸ்லாம் அவர் மீது முத்திரை குத்துகிறது என்று அர்த்தம், ஏனென்றால் அவர் தான் தோரா, இன்ஜில் மற்றும் ஜபூரை படிக்கச் சொன்னவர் - Steve Perez

முஸ்லிம் நண்பரே! அந்த புத்தகங்கள் எங்கே?

முஸ்லிம்: உங்கள் பைபிளில், எங்கள் இறைத்தூதர் முஹம்மது பற்றி பல வசனங்கள் உள்ளன என்று உங்களுக்குத் தெரியுமா?

கிறிஸ்தவர்: பைபிள் கறைபடுத்தப்பட்டுவிட்டது என்று முஸ்லிம்களாகிய நீங்கள் சொல்கிறீர்கள் அல்லவா?

முஸ்லிம்: ஆமாம், பைபிள் மாற்றப்பட்டுவிட்டது தான்..

கிறிஸ்தவர்: அப்படியானால், கறைபடுத்தப்பட்ட புத்தகத்தில் உங்கள் இறைத்தூதர் முஹம்மது பற்றிய வசனங்கள் உள்ளன என்று எப்படி நீங்கள் சொல்கிறீர்கள்? அல்லாஹ் தன் தூதர் முஹம்மதுவின் பெயர் உள்ள புத்தகத்தை பாதுகாத்து இருந்திருப்பான்?  என்பதை சிந்திக்கமாட்டீர்களா?

முஸ்லிம்: பைபிள் முழுவதும் கறைபடுத்தப்படவில்லை, சில விவரங்கள் மட்டுமே கறைபடுத்தப்பட்டது.

கிறிஸ்தவர்: அப்படியானால், அந்த சில விவரங்களை பாதுகாக்க அல்லாஹ்வினால் முடியவில்லை அப்படித்தானே? தன் வார்த்தைகளை தானே காப்பாற்ற முடியாத நிலையில் அல்லாஹ் இருக்கிறான் என்றுச் சொல்கிறீர்கள்!

முஸ்லிம்: அது அல்லாஹ்வின் தவறல்ல, அது மனிதனின் தவறு.

கிறிஸ்தவர்: ஆமாம், இதைத் தான் நானும் சொல்கிறேன். அல்லாஹ் தான் உண்டாக்கிய பலவீனமான படைப்பான மனிதன் தன் வார்த்தைகளை மாற்றும் போது, அவனை தடுக்க முடியாத அளவிற்கு அல்லாஹ் இருந்துள்ளான்..

முஸ்லிம்: இல்லை, இல்லை. சில வசனங்கள் மாற்றப்பட்டன, மீதமுள்ள விவரங்கள் அனைத்தும் மாற்றப்படாமல் இருக்கின்றன‌.

கிறிஸ்தவர்: எந்த வசனங்கள் மாற்றப்பட்டன? எவைகள் மாற்றப்படவில்லை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?

முஸ்லிம்: குர்‍ஆன் தான் சொல்கிறது. முந்தைய வேதங்கள் மாற்றப்பட்டன என்பதால் தான் கடைசியாக குர்‍ஆன் இறங்கியது.

கிறிஸ்தவர்: ஓ அப்படியா! ஆக, குர்‍ஆன் வருவதற்கு முன்பே பைபிள் மாற்றப்பட்டது என்பதால் தான் குர்‍ஆன் வந்தது என்றுச் சொல்கிறீர்கள்? அப்படித்தானே!

முஸ்லிம்: ஆமாம்.

கிறிஸ்தவர்: அப்படியானால், என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்:

1) முந்தைய வேதங்கள்  பற்றி ஏன் குர்‍ஆன் புகழ்ந்து பேசுகின்றது?

2) கிறிஸ்தவர்களின் வேதம் மாற்றப்பட்டு இருந்திருந்தால், ஏன் குர்‍ஆனில் அல்லாஹ், கிறிஸ்தவர்களைப் பார்த்து, உங்களுக்கு நான் இறக்கிய இன்ஜிலின் படி தீர்ப்பு வழங்குங்கள் என்றுச்சொல்கிறான்?

3) கிறிஸ்தவர்களைப் பார்த்து, ஏன் அல்லாஹ் 'வேதமுடையவர்கள்' என்று அழைக்கின்றான், அந்த வேதம் தான் மாற்றப்பட்டுவிட்டதே!

முஸ்லிம்: உண்மையில் குர்‍ஆன் தோரா, ஜபூர் மற்றும் இன்ஜில் பற்றி தான் பேசுகின்றது, பைபிளைப் பற்றி பேசவில்லை.

கிறிஸ்தவர்: அப்படியானால், ஏன் நீங்கள் முஹம்மதுவின் பெயரை பைபிளில் தேடிக்கொண்டு இருக்கிறீர்கள்?

முஸ்லிம்: . . .

கிறிஸ்தவர்: தோரா, ஜபூர் மற்றும் இன்ஜில் புத்தகங்கள் இப்போது எங்கே உள்ளன?

முஸ்லிம்: இந்த புத்தகங்கள் தொலைந்துவிட்டன.

கிறிஸ்தவர்: இந்த மூன்று புத்தகங்களும் தொலைந்துவிட்டன என்று அல்லாஹ், குர்‍ஆனில் எங்கேயாவது சொல்லியுள்ளானா? ஏதாவது வசன எண்ணை தரமுடியுமா?

முஸ்லிம்: ம்ம்ம். . .இல்லை வசன எண்களை கொடுக்கமுடியாது. குர்‍ஆன் இறங்கிய நேரத்தில், அப்புத்தகங்கள் தொலைக்கப்படாமல் இருந்தன.

கிறிஸ்தவர்: ஓ.. அப்படியானால், முஹம்மதுவின் வாழ்நாட்களில் இப்புத்தகங்கள் முழுவதுமாக இருந்தன, ஆனால், குர்‍ஆனுக்கு பிறகு அவைகள் தொலைந்துவிட்டன என்றுச் சொல்கிறீர்கள், சரி தானே!

முஸ்லிம்: ஆமாம்.

கிறிஸ்தவர்: ஒரு சின்ன சந்தேகம். இதற்கு முன்பு தானே நீங்கள் சொன்னீர்கள், "முந்தைய வேதங்கள் மாற்றப்பட்டுவிட்டன என்பதால் தான் குர்‍ஆனை அல்லாஹ் கடைசி வேதமாக இறக்கினான் என்று"? இப்பொழுது மாற்றி தலைகீழாகச் சொல்கிறீர்கள்?

முஸ்லிம்: பைபிளில் மாற்றப்பட்ட தோராவும், ஜபூரும், இன்ஜிலும் உள்ளன.

கிறிஸ்தவர்: குர்‍ஆனுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, பைபிள் முழுமை அடைந்துவிட்டது, மற்றும் உலகின் பல நாடுகளுக்கும் கண்டங்களுக்கும் பரவி விட்டுஇருந்தது. உங்களின் கூற்றுப்படி, பைபிளில் காணப்படும் தோரா, ஜபூர் மற்றும் இன்ஜில் மாற்றம் அடைந்துவிட்டது என்றுச் சொன்னால், ஆரம்ப காலத்தில் இருந்த கைப்பிரதி தோரா, ஜபூர் மற்றும் இன்ஜிலோடு நாம் ஒப்பிட்டுப்பார்த்து சரி பார்க்கலாம். குர்‍ஆனுக்கு பிறகு பைபிள் மாற்றப்பட்டுவிட்டது என்ற உங்கள் குற்றச்சாட்டுக்கு பதில், குர்‍ஆனுக்கு முன்பு இருந்த பைபிளோடு ஒப்பிட்டுப்பார்ப்பது தான்.  இன்று நம்மிடம் இவை இரண்டும் உள்ளன, முழு உலகமும் இதனை ஒப்பிட்டுப்பார்த்து தெரிந்துக்கொள்ளலாம். இதுவரை எந்த ஒரு முஸ்லிமும் இதனை செய்யவில்லை, ஆனால், முஸ்லிமல்லாத இதர அறிஞர்கள் அனைவரும் செய்தாகிவிட்டது.

குர்‍ஆனுக்கு முன்பு, குர்‍ஆனுக்கு பின்பு உள்ள பைபிளை ஒப்பிட்டுப்பார்த்து, முஹம்மதுவின் பெயர் இல்லாததைப் பார்த்து, இஸ்லாமிய கோட்பாடுகள் இல்லாததைப் பார்த்து அறிஞர்கள் அமைதியாகிவிட்டனர். ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு, பல நாடுகள் மற்றும் கண்டங்களுக்கு நெடிய பணம் செய்து, அனைத்து பைபிள்களையும் சேகரித்து வைத்துக்கொண்டு, எல்லாவற்றிலும் மாற்றம் செய்வது என்பது கற்பனையில் மட்டுமே நடக்கக்கூடிய ஒன்றாகும். இப்படிப்பட்ட ஒரு பெரிய எழுத்து ஊழல் நடந்ததாக சரித்திரம் சாட்சியிடவில்லை, இது சாத்தியமும் இல்லை. குர்‍ஆன் ஏழாம் நூற்றாண்டில் பிறந்த போது, முந்தைய வேதங்களில் இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடந்ததாக அது சொல்லவில்லை,  மேலும் தனக்கு பின்பாக நடக்கும் என்றும் குர்‍ஆன் சொல்லவில்லை. மாறாக, முந்தைய வேதங்களை உறுதிப்படுத்தவே தாம் வந்ததாக கூறுகிறது, முந்தைய வேதங்களை புகழ்ந்து பேசுகின்றது.

முஸ்லிம்: பவுல் என்பவர் தான் பைபிளை மாற்றிவிட்டார்.

கிறிஸ்தவர்: இந்த வாதம் அறிவுடையோர் சொல்லும் வாதமல்ல.. முஹம்மதுவிற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் பவுலடியார். பவுலடியார் என்பவர் தன் வேதங்களை இவ்விதமாக மாற்றிவிட்டார் என்று அல்லாஹ் முஹம்மதுவிற்கு குர்‍ஆனை இறக்கும் போது சொன்னதுண்டா? அபூ லஹப் செய்த செயலுக்கான‌ தண்டனையாக நரகத்தில் அவரை தள்ளுவேன் என்று சொன்ன அல்லாஹ், பவுலடியார் பற்றி ஏதாவது சொல்லியுள்ளானா? அவருக்கு ஏதாவது தண்டனை கொடுப்பேன் என்று பெயர் குறிப்பிட்டுச்  சொல்லியுள்ளானா அல்லாஹ்? முஸ்லிம்களின் படி, பவுலடியாரின் செயல்கள் அபூ லஹப்பின் செயலை விட பெரியது என்பதால், அல்லாஹ் ஏதாவது குர்‍ஆனில்  சொல்லியிருக்கக்கூடும் என்பதால் தான் இந்த கேள்வியைக் கேட்டேன்!

ஒரு  பலவீனமான  சாதாரண  மனிதனால், சர்வ வல்லவனாகிய அல்லாஹ்வின் வார்த்தைகளை அழிக்கமுடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? உங்களை பொறுத்தமட்டில், தன் வார்த்தைகளை காத்துக்கொள்ள திராணியில்லாத‌, வல்லமையற்ற ஒரு பலவீனமான இறைவனாக அல்லாஹ் காணப்படுகின்றானா?

இதுமட்டுமல்ல, ஒரு முக்கியமான விவரத்தை நீங்கள் மறைமுகமாகச் சொல்லவருகிறீர்கள். அதாவது, பலவீனமான மனிதன் மாற்றிய புத்தகங்கள் 2000 ஆண்டுகளாக மாற்றமடையாமல் இருக்கின்றன, ஆனால், அல்லாஹ்வின் புத்தகங்கள் தொலைந்துவிட்டன, அல்லது மற்றப்பட்டுவிட்டன என்று முஸ்லிம்களாகிய நீங்கள் கூறுகின்றீர்கள்.

அல்லாஹ்வின் புத்தகங்கள் எங்கே!

ஞாயிறு, 21 அக்டோபர், 2018

ஷைத்தானின் புண்ணியத்தினால் ஆயத்துல் குர்ஸியை முஸ்லிம்கள் (ஷைத்தானை துரத்த‌) ஓதிக்கொண்டு இருக்கிறார்கள்!

ஷைத்தானிடமிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக ஆயத்துல் குர்ஸி[1] என்ற ஒரு குர்ஆன் வசனத்தை முஸ்லிம்கள் ஓதுகிறார்கள்.

முஸ்லிம்களே! இந்த வசனத்தை ஓதினால் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு கிடைக்குமென்று உங்களுக்கு கற்றுக் கொடுத்தவன் யார் என்று சிந்தித்து பார்த்து இருக்கின்றீர்களா? சரி, இப்போதாவது அதனை அறிந்துக்கொள்வோம். 

ஆயத்துல் குர்ஸியை ஓதினால், ஷைத்தான் நெருங்கமாட்டான் என்று  கற்றுக்கொடுத்தவன் யார்?

அல்லாஹ் கற்றுக்கொடுத்தானா  - இல்லை!

முஹம்மது கற்றுக்கொடுத்தாரா  - இல்லை! 

அப்படியானால் இதனை கற்றுக் கொடுத்தவர் யார்?

இதனை கற்றுக் கொடுத்தவன் ஷைத்தான் ஆவான்! ஆம் அவன் தான் கற்றுக்கொடுத்தான்.  மேலும் முஹம்மது அதனை அங்கீகரித்தும் இருக்கிறார் என்பதை அறியும் போது, மனது உண்மையாகவே வலிக்கிறது.

சஹீஹ் புகாரி ஹதீஸ் தொகுப்பில் பதிவு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியை படித்துப் பாருங்கள், அப்போது தான் உண்மை உங்களுக்கே புரியும்.

நூல்: புகாரி ஹதீஸ், எண்: 5010

5010. முஹம்மத் இப்னு சீரீன்(ரஹ்) அறிவித்தார் 

அபூ ஹுரைரா(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ரமளானின் (ஃபித்ரா) ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது யாரோ ஒருவன் என்னிடம் வந்து அந்த (ஸகாத்) உணவுப் பொருளை அள்ளலானான். உடனே அவனை நான் பிடித்து, 'உன்னை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்' என்று சொன்னேன்' என்று கூறிவிட்டு, - அந்த நிகழ்ச்சியை முழுமையாகக் குறிப்பிட்டார்கள். - (இறுதியில், திருட வந்த) அவன், 'நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது (ஆயத்துல் குர்ஸீ'யை ஓதுங்கள்! (அவ்வாறு செய்தால்,) விடியும்வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (உங்களைப் பாதுகாக்கின்ற) காவலர் (வானவர்) ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார்; எந்த ஷைத்தானும் உங்களை நெருங்கமாட்டான்' என்று கூறினான். (இதை நான் நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன்). அப்போது நபியவர்கள், 'அவன் பெரும் பொய்யானாயிருப்பினும அவன் உம்மிடம் உண்மையாகத்தான் சொல்லியிருக்கிறான்; (உம்மிடம் வந்த) அவன்தான் ஷைத்தான்' என்று கூறினார்கள் என்றும் கூறினார்கள். 35 

Volume :5 Book :66 (மேலும் பார்க்க புகாரி ஹதீஸ் எண்கள்: 2311 & 3275)

என்ன ஆச்சரியம்!

இந்த நிகழ்ச்சியை நீங்கள் கற்பனை செய்து பார்க்கமுடியுமா? 

ஷைத்தான், தன்னை எப்படி விரட்ட வேண்டும் என்று தானே முஸ்லிம்களுக்கு நேரடியாக‌ சொல்லிக் கொடுக்கின்றானா! இது எப்படி சாத்தியமாகும்? இதுவும் ஒரு உண்மையான நிகழ்ச்சி என்று நம்பும் அளவிற்கு  முஸ்லிம்கள் அறியாமையில் இருக்கிறார்களா?

ஒரு திருடனின் அறிவுரை:

இதனை கற்பனை செய்துப்பாருங்கள், அதாவது ஒரு  திருடன் அல்லது கொலைக்காரன், உங்களிடம் குழந்தைகள் விளையாடும் தண்ணீர் பாய்ச்சும் போலி துப்பாக்கியைக் கொடுத்து, என்னிடமிருந்து உங்களை காப்பாற்ற இந்த ஆயுதம் உதவும். இதனைக் கொண்டு என்னை சுட்டால், என்னால் உங்களை ஒன்றுமே செய்யமுடியாது. என்னை நம்புங்கள், நான் உண்மையைச் சொல்கிறேன். இதோ இந்த துப்பாக்கியை உங்கள் படுக்கையின் பக்கத்தில் வைத்துக்கொண்டு நீங்கள்  நிம்மதியாக தூங்கலாம். நான் வரும் போது, இதனைக் கொண்டு என்னை சுட்டால் போதும் என்று சொல்கிறான் என்று வைத்துக்கொள்வோம்.

ஒரு திருடன் இப்படி உங்களிடம் சொன்னால், எப்படி இருக்கும் உங்களுக்கு? அதனை  நீங்கள் நம்புவீர்களா?

இதுமட்டுமல்ல, தன்னை எப்படி விரட்டமுடியும் என்று ஷைத்தான் கொடுத்த  ஆலோசனையை  (அல்லது குறுக்குவழியை)  அல்லாஹ்வின் இறைத்தூதரான முஹம்மது அங்கீகரித்தும் விட்டார், என்னே ஆச்சரியம்!

இக்கேள்விகளை சிந்தித்துப்பாருங்கள்: 

  1. தன்னை விரட்டும் வழிமுறைகளை  முஸ்லிம்களுக்கு ஏன் ஷைத்தான் கற்றுக்கொடுப்பான்?
  2. ஷைத்தான் தனக்கு தானே குழி தோண்டிக்கொள்வான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
  3. இப்படி ஷைத்தான் சொன்னான் என்று நம்புவது அறிவுடமையாக இருக்கின்றதா?

சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே; அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? (இயேசு - மத்தேயு 12:26), 

முஹம்மது கூறிய விவரத்தில் உள்ள லாஜிக்கை பார்த்தீர்களா?

அப்போது நபியவர்கள், 'அவன் பெரும் பொய்யானாயிருப்பினும் 

அவன் உம்மிடம் உண்மையாகத்தான் சொல்லியிருக்கிறான்;' (புகாரி எண்: 5010)

இது என்ன ஆச்சர்யம்! ஒரு பெரும் பொய்யன், சொன்னது உண்மையா?

வேடிக்கையாக உள்ளதல்லவா? முஹம்மது அல்லாஹ்வின் இறைத்தூதராக இருப்பதோடு மட்டுமல்லாமல், ஷைத்தானுக்காக வழக்காடும் வழக்கறிஞராகவும் இருக்கிறாரா என்ன? என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா?

ஒருவனைப் பார்த்து, "நீ உலக மகா பொய்யன்" என்ற பட்டத்தை கொடுத்துவிட்ட பிறகு, "நீ சொன்னதும் உண்மையே" என்றுச் சொன்னால், இப்போது நாம் யாரை நொந்துக்கொள்வது? அந்த பொய்யனையா (ஷைத்தானையா) அல்லது அவனை அங்கீகரித்தவரையா (முஹம்மதுவையா)?

அடுத்ததாக, ஷைத்தான் கூறியதையும் கவனியுங்கள்:

அதற்கவன் 'என்னைவிட்டுவிடு! அல்லாஹ் உமக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்!' என்றான். (நூல்: புகாரி ஹதீஸ், எண் 2311)

  1. அல்லாஹ் "இந்த‌  நன்மையைச் செய்வான்" என்ற முடிவு எடுக்க ஷைத்தானுக்கு அதிகாரம் கொடுத்தவன் யார்? 
  2. ஷைத்தான் சொல்லிவிட்டானே என்பதற்காக, அதன் படி செய்ய அல்லாஹ்வால் முடியுமா? அல்லாஹ் ஷைத்தானுக்கு ஏதாவது கடமைப்பட்டுள்ளானா? 
  3. அல்லது ஷைத்தான் அல்லாஹ்வோடு சேர்த்து செயல்படும் கூட்டாளியா?

இந்த ஹதீஸ் முழுவதையும் படித்தால், இன்னும் பல தர்மசங்கடமான  கேள்விகள் எழும்புகின்றன, ஆனால், இதோடு என் கேள்விகளை முடித்துக்கொள்கிறேன்.

முஸ்லிம்களே, அடுத்த முறை நீங்கள் ஆயத்துல் குர்ஸியை ஓதும் போது, இதனை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள், அது என்னவென்றால், இந்த  ஆயத்தை ஓதினால், ஷைத்தான் ஒன்றுமே உங்களை செய்யமுடியாது என்று உங்களுக்கு ஆலோசனை சொன்னவனே, அதே ஷைத்தான் தான். 

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், ஷைத்தான் உங்களை (முஸ்லிம்களை) தெளிவாக குழப்பி ஏமாற்றியுள்ளான். நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று அவன் விரும்பினானோ, அதனைத் தான் நீங்கள் பல நூற்றாண்டுகளாக செய்துக்கொண்டு இருக்கிறீர்கள், அல்ஹம்துலில்லாஹ்!

அடிக்குறிப்புக்கள்:

1) ஆயத்துல் குர்ஸி என்பது, குர்‍ஆனின் இரண்டாம் அத்தியாயத்தின் 255வது வசனமாகும்.

2:255. அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது; அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன். (முஹம்மது ஜான் டிரஸ்ட் தமிழாக்கம்).

2) இந்த நிகழ்ச்சி பற்றி பதிவு செய்யப்பட்ட  ஸஹீஹ் புகாரி ஹதீஸ்கள்:

2311. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் ரமளானுடைய (ஃபித்ரா) ஜகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள். அப்போது ஒருவர் வந்து உணவுப் பொருட்களை அள்ளலானார். அவரை நான் பிடித்து, 'உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்!' என்று கூறினேன். அதற்கவர், 'நான் ஓர் ஏழை!' எனக்குக் குடும்பம் இருக்கிறது. கடும் தேவையும் இருக்கிறது! என்று கூறினார். அவரை நான்விட்டு விட்டேன். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள், 'அபூ ஹுரைராவே! நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவர் என்ன செய்தான்? என்று கேட்டார்கள்.நான், 'இறைத்தூதர் அவர்களே! தாம் கடுமையான வறுமையில் இருப்பதாகவும் தமக்குக் குடும்பம் இருப்பதாகவும் அவர் முறையிட்டார். எனவே, இரக்கப்பட்டு அவரைவிட்டு விட்டேன்! என்றேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நிச்சயமாக அவன் பொய் சொல்லியிருக்கிறான்! மீண்டும் அவன் வருவான்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று நம்பி அவனுக்காக(அவனைப் பிடிப்பதற்காக) காத்திருந்தேன். அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கியபோது அவனைப் பிடித்தேன். 'உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்! என்று கூறினேன். அதற்கவன், 'என்னைவிட்டுவிடு! நான் ஓர் ஏழை! எனக்குக் குடும்பமிருக்கிறது! இனிநான் வரமாட்டேன்! என்றான். அவன் மேல் இரக்கப்பட்டு அவனைவிட்டு விட்டேன். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் அபூ ஹுரைராவே! உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்! என்று கேட்டார்கள். நான் 'இறைத்தூதர் அவர்களே! அவன் (தனக்குக்) கடும் தேவையும் குடும்பமும் இருப்பதாக முறையிட்டான்; எனவே, அவன் மேல் இரக்கப்பட்டு அவனைவிட்டுவிட்டேன்! என்றேன். 'நிச்சயமாக அவன் உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான். திரும்பவும் உம்மிடம் வருவான்! என்றார்கள். மூன்றாம் முறை அவனுக்காகக் காத்திருந்தபோது,அவன் வந்து உணவு பொருட்களை அள்ளத் தொடங்கினான். அவனைப் பிடித்து, 'உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன்! (ஒவ்வொரு முறையும்) 'இனிமேல் வரமாட்டேன்! என்று செல்லிவிட்டு, மூன்றாம் முறையாக நீ மீண்டும் வந்திருக்கிறாய்! என்று கூறினேன். அதற்கவன் 'என்னைவிட்டுவிடு! அல்லாஹ் உமக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்!' என்றான். அதற்கு நான் 'அந்த வார்த்தைகள் என்ன? என்று கேட்டேன். 'நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸியை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஓதும்! அவ்வாறு செய்தால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான்!' என்றான். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் 'நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்? என்று கேட்டார்கள். 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருவதாக அவன் கூறினான்; அதனால் அவனைவிட்டு விட்டேன்!' என்றேன். 'அந்த வார்த்தைகள் என்ன? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்சியை ஆரம்பம் முதல் கடைசிவரை ஓதும்! அவ்வாறு ஓதினால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான்! என்று என்னிடம் அவன் கூறினான்' எனத் தெரிவித்தேன். நபித்தோழர்கள் நன்மையான(தைக் கற்றுக் கொண்டு செயல் படுத்துவதில் அதிக ஆர்வமுடையவர்களாக இருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும் அவன் உம்மிடம் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறான்! மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசி வருகிறீர் என்று உமக்குத் தெரியுமா? என்று கேட்டனர். 'தெரியாது' என்றேன். 'அவன்தான் ஷைத்தான்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

Volume :2 Book :40

3275. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

ரமளானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாத்திடும் பொறுப்பை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது (இரவில்) ஒருவன் வந்து அந்த (ஸகாத்) உணவுப் பொருளை அள்ளலானான். உடனே, நான் அவனைப் பிடித்துக் கொண்டேன்; 'உன்னை அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்று முறையிடுவேன்' என்று கூறினேன். (அறிவிப்பாளர் முழு நிகழ்ச்சியையும் விபரமாகச் சொல்கிறார்..) இறுதியில் அவன், 'நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள். (அவ்வாறு ஓதினால்) உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரும் வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்' என்று என்னிடம் சொன்னான். (இதை நபி(ஸல்) அவர்களிடம் சொன்னபோது,) 'அவன் பொய்யனாயிருந்தும், உங்களிடம் உண்மை பேசியுள்ளான். அவன் ஷைத்தான் தான்' என்று கூறினார்கள். 

Volume :3 Book :59

5010. முஹம்மத் இப்னு சீரீன்(ரஹ்) அறிவித்தார் 

அபூ ஹுரைரா(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ரமளானின் (ஃபித்ரா) ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது யாரோ ஒருவன் என்னிடம் வந்து அந்த (ஸகாத்) உணவுப் பொருளை அள்ளலானான். உடனே அவனை நான் பிடித்து, 'உன்னை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்' என்று சொன்னேன்' என்று கூறிவிட்டு, - அந்த நிகழ்ச்சியை முழுமையாகக் குறிப்பிட்டார்கள். - (இறுதியில், திருட வந்த) அவன், 'நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது (ஆயத்துல் குர்ஸீ'யை ஓதுங்கள்! (அவ்வாறு செய்தால்,) விடியும்வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (உங்களைப் பாதுகாக்கின்ற) காவலர் (வானவர்) ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார்; எந்த ஷைத்தானும் உங்களை நெருங்கமாட்டான்' என்று கூறினான். (இதை நான் நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன்). அப்போது நபியவர்கள், 'அவன் பெரும் பொய்யானாயிருப்பினும அவன் உம்மிடம் உண்மையாகத்தான் சொல்லியிருக்கிறான்; (உம்மிடம் வந்த) அவன்தான் ஷைத்தான்' என்று கூறினார்கள் என்றும் கூறினார்கள். 35 Volume :5 Book :66

இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் எங்கேயிருந்து வந்தன?

ஒரு நாளைக்கு ஐந்து வேளை தொழ‌வேண்டும் என்று ஆதாம், நூஹ், இப்ராஹிம், மூஸா, தாவூத்,  சுலைமான், யஹ்யா மற்றும் வேறு எந்த ஒரு தீர்க்கதரிசிக்கும் இறைவன் கட்டளை இடவில்லை.

இறைவனை தொழுதுக்கொள்ளும் போது, உளு (முஸ்லிம்கள் செய்வது  போல‌) செய்யுங்கள் என்று ஆதாம், நூஹ், இப்ராஹிம், மூஸா, தாவூத்,  சுலைமான், யஹ்யா மற்றும் வேறு எந்த ஒரு தீர்க்கதரிசிக்கும் இறைவன் கட்டளை இடவில்லை.  

நீங்கள் ஷஹதா சொல்லுங்கள் என்று ஆதாம், நூஹ், இப்ராஹிம், மூஸா, தாவூத்,  சுலைமான், யஹ்யா மற்றும் வேறு எந்த ஒரு தீர்க்கதரிசிக்கும் இறைவன் கட்டளை இடவில்லை.  

ரமளான் நோன்பு 30 நாட்கள்  கட்டாயம் கடைபிடிக்கவேண்டும் என்று ஆதாம், நூஹ், இப்ராஹிம், மூஸா, தாவூத்,  சுலைமான், யஹ்யா மற்றும் வேறு எந்த ஒரு தீர்க்கதரிசிக்கும் இறைவன் கட்டளை இடவில்லை.  

வெள்ளை ஆடையை அணிந்துக்கொண்டு ஒரு கருப்புக்கல்லை இத்தனை முறை சுற்றிவரவேண்டும் என்று ஆதாம், நூஹ், இப்ராஹிம், மூஸா, தாவூத்,  சுலைமான், யஹ்யா மற்றும் வேறு எந்த ஒரு தீர்க்கதரிசிக்கும்  இறைவன் கட்டளை இடவில்லை.  

இப்படி பல இஸ்லாமிய  வழிபாட்டு முறைகளை  பட்டியல் இடமுடியும். ஒன்றை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஒரு மிகப்பெரிய  நபி  என்று  முஸ்லிம்கள் நம்பும், இயேசுக் கிறிஸ்து கூட, இவைகளில் எந்த ஒரு முறையை கூட செய்யவேண்டும் என்று கற்றுக் கொடுத்ததில்லை மற்றும் போதித்ததில்லை.

இப்படி முந்தைய  தீர்க்கதரிசிகள் யாருமே செய்யாத இந்த வணக்க வழிபாடுகள் எங்கேயிருந்து வந்து, இஸ்லாமில் புகுந்து, சட்டமாக மாறிவிட்டன‌?

பதில்: ஸாபியீன்கள் என்பவர்களிடமிருந்து தான் இவைகள் வந்து, இஸ்லாமின் சட்டமாக மாறிவிட்டன‌.

யார் இந்த ஸாபியீன்கள்(Sabians):

ஸாபியீன்கள் என்பவர்கள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு காலகட்டத்திலிருந்து சந்திர கடவுளை வணங்கும் விக்கிர ஆராதனை செய்பவர்களாக‌ இருந்தார்கள். இவர்களின் வழிப்பாட்டு முறையினால் முஹம்மது அதிகமாக ஈர்க்கப்பட்டார், மேலும் குர்‍ஆனிலும் இவர்கள் பற்றிய குறிப்பு சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது குர்‍ஆன் 2:62ன் படி, இவர்களை அல்லாஹ் அங்கீகரித்துள்ளான்.

2:62. ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (முஹம்மது ஜான் தமிழாக்கம்).

டாக்டர் ரஃபர் அமரி(Dr Rafat Amari [1]) என்பவரின் "Occultism in the Family of Muhammad" என்ற ஆய்வுக் கட்டுரையின்படி, வராகா  என்பவர் இந்த ஸாபியீன்களின் தலைவர் ஆவார்.  ஆம், இந்த  வராகா (கதிஜாவின் உறவினர்) தான் முஹம்மது ஒரு நபி என்றுச் சொல்லி, அவரை சம்மதிக்கவைத்தவர். முஹம்மது ஆரம்பநாட்களில் யாரால் ஈர்க்கப்பட்டு இருந்தார் என்பதை இப்போது புரிந்திருக்கும்.

இப்னு அல்நதீம்(Ibn al-Nadim) தம்முடைய "அல் ஃபஹ்ரிஸிட் - al-Fahrisit" என்ற புத்தகத்தில், மத்திய கிழக்கு நாடுகளில் பல மத பிரிவுகள் அக்காலத்தில்  இருந்ததாக கூறுகிறார். அவரின் கூற்றின் படி, ஸாபியீன்கள் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் 30 நாட்கள் நோன்பு இருப்பார்கள். அவர்களது சந்திர கடவுளான "சின்"ஐ கனப்படுத்த இப்படி நோன்பு இருப்பார்கள்.

இந்த ஸாபியீன்கள் ஃபித்ர்(Fitr) என்ற பண்டிகையை அனுசரிப்பார்கள் மேலும் ஹிலல் என்ற புது பிறை நாளையும் அனுசரிப்பார்கள். இதனை அவர்கள் மக்காவின் இறைவீட்டை (காபா) கனப்படுத்த செய்வார்கள்.

டாக்டர் ரஃபர் அமரியின் படி, ஸாபியீன்கள் யெமன் நாட்டு திசையை நோக்கி (கிப்லா), தினமும் ஐந்து வேளை தொழுகை புரிகின்றனர். அக்காலத்தில் இதர மத பிரிவுகளில் காணப்பட்ட இப்படிப்பட்ட மத  சடங்காச்சாரங்களை தான் முஹம்மது புதிதாக உருவாக்கிய  மதத்தில் புகுத்திவிட்டார், இவைகள் அல்லாஹ்வினால் கட்டளையிடப்பட்டன என்று சொல்லிவிட்டார்.

அவ்வளவு ஏன், முஸ்லிம்கள் கூறும் விசுவாச அறிக்கையாகிய‌  ஷஹதா  கூட, ஸாபியீன்களிடமிருந்து எடுத்துக் கொண்டதுதான்.

இஸ்லாமிய  அறிஞர் அப்த் அல் ரஹ்மான் இப்னு ஜைத் (Abd al-Rahman Ibn Zayd) கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இப்படி எழுதுகிறார்: பல  தெய்வ பழிப்பாட்டு மக்கள், இறைத்தூதர் மற்றும் அவரது சஹாபாக்களைப் பார்த்து, "இவர்கள் ஸாபியீன்கள்" என்று கூறினார்கள், ஏனென்றால், ஈராக்கில் வாழ்ந்துக்கொண்டு இருந்த ஸாபியீன்கள் கூட "லா இலாஹா இலா அல்லாஹ்" என்றே கூறிக் கொண்டு இருந்தார்கள்.

இதர இஸ்லாமிய மத சட்டங்களான‌, உளூ செய்வது, மிஸ்வாக் பயன்படுத்துவது, கஜல் செய்து சுத்தம் செய்வது போன்றவை  ஜொராஷ்ட்ரியம் (Zoroastrianism) என்ற மத பிரிவிலிருந்து வந்தவைகளாகும்.

இஸ்லாமின் முக்கிய வணக்க வழிபாடுகள் எங்கேயிருந்து வந்தன என்பது இப்போது புரிந்திருக்கும்.

அடிக்குறிப்புக்கள்:

திங்கள், 3 செப்டம்பர், 2018

வேறு மார்க்கத்தை ஏற்றுக்கொள்வதற்கு முஸ்லிம்கள் ஏன் அதிக தயக்கம் காட்டுகிறார்கள்?

சமீபத்தில் என்னிடத்தில் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதாவது "முஸ்லிம்கள் எப்படி ஒரு பக்தியுள்ள முஸ்லிம்களாக வாழ்கிறார்கள்?" மற்றும் அவர்கள் இஸ்லாமை விட்டு வெளியேறி மற்ற மார்க்கங்களை பின்பற்ற தயக்கம் காட்டுவது ஏன்? வேறுவகையாக சொல்ல வேண்டுமென்றால், முஸ்லிம்கள் இஸ்லாமை விட்டு வெளியேறுவது ஏன் ஒரு கடினமான செயலாக இருக்கிறது?

இதற்கு பல காரணங்கள் உள்ளன. அவைகளில் முக்கியமான மூன்று காரணங்களை இப்பொழுது காண்போம்.

1) இஸ்லாமிய கலாச்சாரம்:

முதலாவதாக, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக முஸ்லிம் நாடுகளில் பிறக்கிறார்கள், இதனால் பிறந்ததிலிருந்தே இஸ்லாம் என்பது அவர்களின் ரத்தத்தில் ஊறிய ஒன்றாக மாறிவிடுகிறது. இதன் அர்த்தம் என்னவென்றால், ஒருவன் முஸ்லிமாக வாழ்வதற்கு அவனுக்கு ஒரு வலுவான குடும்ப உறவுகளும் கலாச்சாரங்களும் உதவி புரிகின்றன. இதன்படி பார்த்தால் ஒரு முஸ்லிம் இஸ்லாமை விட்டு வெளியேறுகிறான் என்று சொன்னால், அதன் அர்த்தம், அவன் தன்னுடைய குடும்ப உறவுகளை ஒட்டுமொத்தமாக வெட்டிவிட்டு தன் கலாச்சாரத்தை விட்டுவிட்டு வெளியே வருகிறான் என்று அர்த்தம். இவைகளை தாண்டி ஒருவன் இஸ்லாமை விட்டு வெளிவருவது என்பது மிகவும் கடினமான காரியம் தான்.

2) வாழ்வின் அனைத்து பகுதிகளையும் பாதிக்கும் முடிவு:

இரண்டாவதாக, இஸ்லாமிய கலாச்சாரத்தில் ஒருவன் வாழ்ந்தால், அவனைச் சுற்றி முழுவதுமாக இஸ்லாம் தான் காணப்படும். உதாரணத்திற்கு, ஒரு வட்டவடிவமான ரொட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். அதை பல பாகங்களாக வெட்டுங்கள்.

இந்த ரொட்டியில்  வெட்டப்பட்ட ஒவ்வொரு துண்டும் மனிதனின் ஒரு குறிப்பிட்ட பகுதியை குறிப்பதாக கருதிக் கொள்ளுங்கள்.

  • அதில் ஒரு துண்டு அவனுடைய சம்பாத்தியத்தை குறிப்பதாக இருக்கும்.
  • அடுத்த துண்டு குடும்பத்தை குறிப்பதாக இருக்கும்.
  • இன்னொரு துண்டு மதத்தை குறிப்பதாக இருக்கும்.
  • இன்னொரு துண்டு நண்பர்களை குறிப்பாக இருக்கும்.
  • இன்னொரு துண்டு அவனுடைய கலாச்சாரத்தை குறிப்பதாக இருக்கும்.

இப்படி ஒவ்வொரு துண்டுக்கும் வாழ்க்கையின் ஒரு பகுதியை ஒப்பிடலாம்.

முஸ்லிமல்லாதவர்களுக்கும் மேற்கத்திய நாடுகளில் வசிப்பவர்களுக்கும் இந்த உதாரணம் சரியாக பொருந்தக் கூடியதாக இருக்கிறது. அதாவது ஒரு மேற்கத்திய மனிதன் தன் மதத்தை மாற்றிக் கொண்டான் என்று சொன்னால், அவனுடைய அந்த ஒரு ரொட்டியின் ஒரு பகுதியை அவன் மாற்றிக் கொள்கிறேன் என்று அர்த்தம். அவ்வளவுதான் மீதம் இருக்கின்ற இதர பகுதிகள் அதாவது சம்பாத்தியம், குடும்பம், நண்பர்கள், கலாச்சாரம் போன்றவைகள் மாறவே மாறாது. ஆனால் ஒரு முஸ்லிமுக்கு, முக்கியமாக இஸ்லாமிய நாடுகளில் வாழும் ஒரு முஸ்லிம் தன்னுடைய மதத்தை விட்டு வெளியேறுகிறான் என்று சொன்னால், அவன் ஒரு பகுதியை மாற்றிக் கொள்ளவில்லை, தன் வாழ்வின் எல்லாப் பகுதிகளையும் மாற்றிக் கொள்கிறான் என்று அர்த்தம். அதாவது, ஒரு முஸ்லிம் தன் மதத்தை மாற்றிக்கொண்டால் அது அவருடைய குடும்பத்தை பாதிக்கும், நண்பர்களை பாதிக்கும், சம்பாத்தியத்தை பாதிக்கும் மற்றும்  கலாச்சாரத்தையும் பாதிக்கும். வேறு வகையாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு முஸ்லிம் தன் மதத்தை மாற்றிக் கொள்வது என்பது, "அவனைத் தொடும்" எல்லா வாழ்க்கை பகுதிகளையும் அவன் மாற்றிக் கொள்வதற்கு சமம் ஆகும். இதற்காக ஒரு முஸ்லிம் மிகப்பெரிய விலையை செலுத்த வேண்டி இருக்கும்.  இதனால் தான்,  முஸ்லிம்கள் சீக்கிரமாக தங்கள் மதத்தை மாற்றிக் கொள்வதில்லை.

3) இஸ்லாமின் கொடூரமான மரண தண்டனையும், வேறு பல வன்முறைகளும்:

மூன்றாவது முக்கியமான காரணம், இஸ்லாமை விட்டு வெளியேறுகிறவர்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் தண்டனை ஆகும். அதாவது ஒருவன் இஸ்லாமை விட்டு வேறு மார்க்கத்தை பின்பற்றினால் அவனுக்கு இஸ்லாமில் மரண தண்டனை கொடுக்கப்படும்.

இஸ்லாமிலிருந்து கிறிஸ்தவத்திற்கு மனம் மாறுகின்றவர்களுக்கு முஸ்லிம்கள் அதிக தொல்லைகளை கொடுக்கிறார்கள். எப்படியாவது அவர்கள் கிறிஸ்துவை விட்டு மறுபடியும் இஸ்லாமுக்கு திரும்பிவிட வேண்டும் என்பதற்காக அதிகப்படியாக கொடுமைப்படுத்துகிறார்கள். இந்த வன்கொடுமைகளையும் தாங்கிக்கொண்டால், அடுத்தபடியாக, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

இப்படிப்பட்ட அனேக நிகழ்வுகளை நான் பார்த்திருக்கிறேன். அதாவது இஸ்லாமிலிருந்து கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பார்கள், வீட்டை விட்டு ஓடுவார்கள், தான் வாழ்ந்து வந்த சமுதாயத்தை விட்டு பாதுகாப்பைத் தேடி ஓடுவார்கள். தங்கள் உயிர் பிழைக்க ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு தாவிக் கொண்டே இருப்பார்கள். இவ்விதமான தொல்லைகளை சந்திக்க வேண்டி வரும் என்பதால் அநேகர் இஸ்லாமை விட்டு வெளியே வருவதில்லை.

இப்படிப்பட்ட பல பிரச்சனைகளை மக்கள் சந்திக்க வேண்டியிருந்தாலும், பரிசுத்த ஆவியானவர் அனைத்து இடையூறுகளையும் தகர்த்தெரிந்து மக்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டே இருக்கிறார். அதனால்தான் கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியானவர் இடைபடவேண்டும் என்று ஜெபிக்க வேண்டும். அதாவது தேவனின் மிகப்பெரிய பலத்தினால்தான் ஒருவர் இஸ்லாமிலிருந்து வெளியே வந்து கிறிஸ்துவை பின்பற்றமுடியும்.

விசுவாச தற்காப்பு ஊழியம் செய்பவர்களுக்கு உதவும் நீதிமொழிகள் (Proverbs for Apologists)

நீதிமொழிகள் புத்தகத்தில் உள்ள சில வசனங்கள்,  விசுவாச தற்காப்பு ஊழியம் செய்யும்போது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன. அவைகளை பற்றி நான் அநேக முறை தியானித்து உள்ளேன். "மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்(15:1)" என்ற வசனத்தை உதாரணமாகச் சொல்லலாம். இந்த வசனத்தில் சொல்லியபடி செய்தால் நம்முடைய உரையாடல்கள் அதிக பயனுள்ளதாக இருக்கும். 

நான் அதிகமாக பேச நினைக்கும் போதெல்லாம், இன்னொரு வசனத்தை ஞாபகப்படுத்திக் கொள்வேன், அதாவது, "சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான் (10:19)" என்ற வசனம் தான் அது.

சில நேரங்களில் என்னோடு பேசுபவர் ஒரு குறிப்பிட்ட தலைப்பை பற்றி என்ன நினைக்கிறார் என்பதை அறிய, சில கேள்விகளைக் கேட்டு, அவர் என்ன சொல்கிறார் என்பதை அமைதியாக கேட்டுக்கொண்டு இருப்பேன். இப்படி மற்றவர்களின் பேச்சுக்கள் மூலம் கிடைக்கும் ஞானத்தை தேடும் படி, இன்னொரு வசனம் என்னை உற்சாகப்படுத்தும்.

"மூடன் ஞானத்தில் பிரியங்கொள்ளாமல், தன் மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான்(18:2)"

இவ்வசனத்தை இன்னொரு பொது தமிழாக்கத்தில் படித்தால், அதன் பொருள் தெளிவாக புரியும்:

"மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதை அறிவற்றவர்கள் விரும்பமாட்டார்கள். அவர்கள் தம் சொந்த எண்ணங்களைச் சொல்வதையே விரும்புகின்றனர். (18:2)"

நான் நீதிமொழிகள் புத்தகத்தை படிக்கும் போது, இப்படிப்பட்ட சில வசனங்களை குறித்துக்கொண்டேன். அவைகளை இப்பொழுது உங்களுக்கு தருகிறேன்.

இவ்வசனங்களை மிகவும் நிதானமாக படியுங்கள், தியானம் செய்யுங்கள், மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள் மற்றும் அவைகள் உங்களை செதுக்க விட்டுக்கொடுங்கள்.

ஞானத்தையும் அறிவையும் தேடுதல்:

(Seek Knowledge and Wisdom):

கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக; நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள். அதினால் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் தயையும் நற்புத்தியும் பெறுவாய். (3:3-4)

பொன்னைச் சம்பாதிப்பதிலும் ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு உத்தமம்! வெள்ளியைச் சம்பாதிப்பதிலும் புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை! (16:16)

மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்ற காலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது! (15:23)

இரும்புக் கத்தியைக் கூராக்க ஜனங்கள் இரும்பையே பயன்படுத்துவார்கள். இதே விதத்தில் ஒருவரிடமிருந்து ஒருவர் அறிந்துகொள்வதன் மூலம், இருவருமே கூர்மை அடையமுடியும். (27:17 – ERV-Tamil Translation)

புத்திகூர்மையான ஆலோசனை:

(Tactical Advice):

மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும். (15:1)

இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகியென்னப்படுவான்; உதடுகளின் மதுரம் கல்வியைப் பெருகப்பண்ணும். (16:21b)

நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கப்பண்ணலாம்; இனிய நாவு எலும்பையும் நொறுக்கும். (25:15)

சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான். (10:19)

பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான். (17:28)

மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப் போலாவாய்.

மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான். (26:4–5)

4 இங்கே ஒரு இக்கட்டான சூழ்நிலை. ஒரு முட்டாள் மூடத்தனமான கேள்வியைக் கேட்டால் நீயும் ஒரு மூடத்தனமான பதிலைக்கொடுக்கவேண்டாம். ஏனென்றால் நீயும் முட்டாளைப்போன்று தோன்றுவாய். 5 ஆனால் ஒரு முட்டாள் ஒரு மூடத்தனமான கேள்வியைக் கேட்டால் நீயும் ஒரு மூடத்தனமான பதிலையே கூறவேண்டும். இல்லையெனில் அவன் தன்னை ஞானியாக நினைத்துக்கொள்வான். (ERV-Tamil Translation)

எச்சரிக்கைகள்:

Warnings:

வழக்காடப் பதற்றமாய்ப் போகாதே; முடிவிலே உன் அயலான் உன்னை வெட்கப்படுத்தும்போது, நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே. (25:8)

கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே. அப்படிச் செய்தால், நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன் ஆத்துமாவுக்குக் கண்ணியை வருவிப்பாய். (22:24–25)

ஞானி மூடனுடன் வழக்காடுகையில், சினந்தாலும் சிரித்தாலும் அமைதியில்லை. (29:9)

மூடனுடைய செவிகள் கேட்கப்பேசாதே; அவன் உன் வார்த்தைகளின் ஞானத்தை அசட்டைபண்ணுவான். (23:9)

மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடே நொய்யாகக் குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் அவனை விட்டு நீங்காது. (27:22)

தன் வழக்கிலே முதல்பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; அவன் அயலானோ வந்து அவனைப் பரிசோதிக்கிறான். (18:17)

உன் செய்கைகளை சொற்களை கவனி:

Watch Your Character:

மூடன் ஞானத்தில் பிரியங்கொள்ளாமல், தன் மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான். (18:2)

காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாயிருக்கும். (18:13)

அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை. (16:18)

அகந்தை வந்தால் இலச்சையும் வரும்; தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு. (11:2)

பரியாசக்காரர் பட்டணத்தில் தீக்கொளுத்திவிடுகிறார்கள்; ஞானிகளோ குரோதத்தை விலக்குகிறார்கள். (29:8)

கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடிய சாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான். (15:18)

அவன் எனக்குச் செய்த பிரகாரம் நானும் அவனுக்குச் செய்வேன், அவன் செய்கைக்குத்தக்கதாக நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே. (24:29)

ஆசிரியர்:  எமி கே ஹால் (Amy K. Hall)

புதன், 22 ஆகஸ்ட், 2018

2018 பக்ரீத் சிறப்பு கட்டுரை – ச்சே. . . பீஜேவின் குர்ஆன் தமிழாக்கத்தை படிக்க விருப்பமேயில்லை – அல்லாஹ்வின் கள்ளத்தராசு

[பக்ரீத் பெருநாள் இன்று நல்லபடியாக நடந்தேறியது. பெருநாள் தொழுகை முடிந்து, குர்பானி கொடுத்து, சொந்தங்களுக்கும் மற்றவர்களுக்கும் குர்பானி கறி பகிர்ந்துகொடுக்கப்பட்டது. பிரியாணி வாசனை கமகமக்க அருமையாக சமைத்து, அனைவரும் உண்டு மகிழ்ந்தார்கள். கிராமங்களிலிருந்து சொந்தங்கள் பெரிய அண்ணாவின் விட்டிற்கு, அதாவது சென்னைக்கு வந்திருந்தார்கள். உமரும் தான் வேலை செய்யும் ஊரிலிருந்து சென்னைக்கு வந்திருந்தான். மதியம் சாப்பிட்டதும் சொந்தங்கள் அனைவரும் மெரினா பீச்சுக்கும், ஷாப்பிங்கிற்கும் போய்விட்டார்கள். சிலர் மட்டும் வீட்டிலேயே தங்கிவிட்டார்கள். மணி மாலை 4 இருக்கும், மொட்டை மாடியில் உமர் உலாவிக்கொண்டு இருந்தான். அங்கு வந்து சேர்ந்தான், பெரியண்ணாவின் மகன் அப்துல்லாஹ்.]

அப்துல்லாஹ்: சித்தப்பா, மாடியில் தனியாக என்ன செய்துக்கொண்டு இருக்கீங்க?

உமர்: சும்மா காத்து வாங்கிக்கொண்டு இருக்கிறேன். நீ மெரினாவிற்கு போகவில்லை! கலைஞரின் சமாதியை கூட பார்த்துவிட்டு வந்திருக்கலாம் இல்லையா?

அப்துல்லாஹ்: இல்லே சித்தப்பா, நான் போகவில்லை. அப்பாவும், அம்மாவும் போகலே, நானும் அவர்களோடு இருந்துட்டேன்.

உமர்: ம்ம்ம்… சரி

அப்துல்லாஹ்: நீங்க நாளை ஊருக்கு கிளம்புறீங்க தானே!

உமர்: ஆமாம், வேலை இருக்கே! போகணுமே!

அப்துல்லாஹ்: உங்களோடு சில நிமிஷங்கள் பேசலாம் என்றுச்சொல்லி தான் நான் வெளியே கூட இன்னிக்கு போகலை.

உமர்: இது தான் காரணமா? அதனால் தான் நீ போகலையா. சரி சொல்லு என்ன பேசணும். ஏதாவது காதல் கத்தரிக்கான்னு பிரச்சனை இருக்கா?

அப்துல்லாஹ்: அதெல்லாம் ஒன்னும் இல்ல சித்தப்பா. ஒரு முக்கியமான கேள்வி கேட்கணும் அவ்வளவுதான்.

உமர்: சரி சொல்லு.

அப்துல்லாஹ்: உங்களுக்கு தெரியாதது இல்ல. கடந்த சில மாதங்களாக பீஜே  பற்றி வரும் செய்திகளை நீங்க கேள்விபட்டு இருப்பீங்க. நான் ரொம்ப வருஷமா அவருடைய குர்ஆன் மொழியாக்கத்தை படித்துக் கொண்டு வருகிறேன், ஆனா இப்போது அதை எடுத்து படித்தாலே போதும், அவர் செய்த காரியம் ஞாபகம் வருகிறது. அதனால அவருடைய மொழியாக்கத்தை படிக்கவே விருப்பமில்லை. ஒரு பெரிய மார்க்க அறிஞராக இருந்துக்கொண்டு இப்படியெல்லாம் செய்வது நியாயமா.? இது அவருக்கே அழகா இருக்கா? நீங்க என்ன சொல்றீங்க? 

உமர்: இதை ஏன் என்னிடம் கேட்கிறாய்? நானும் உன்னைப் போல, உன் மனநிலையோடு தான் இருக்கிறேன்.

அப்துல்லாஹ்: நீங்கள் எங்களுக்கு தேவையான ஆலோசனைகளை பலமுறை கொடுத்து இருக்கீறீர்கள்.  உங்களுடைய அபிப்பிராயம் என்னவென்று தெரிந்துக்கொள்ளலாம் என்று உங்களைப்பற்றி எங்களுக்கு ஒன்றுமே தெரியாத மாதிரி பேசுறீங்களே!  நீங்க பைபிள் படிப்பது எங்களுக்குத் தெரியும்? சர்சுக்கு போவது பற்றியும் தெரியும். அதனால் தான் நீங்கள் எங்களையெல்லாம் விட்டுவிட்டு தூரமாகச் சென்று வேலை செய்கிறீர்கள் என்பதும் தெரியும். நீங்க சர்சுக்கு போற விஷயமா பல மாதங்களுக்கு முன்பு, உங்களுக்கும் அப்பாவுக்கும் இடையே நடந்த சண்டை கூட எங்களுக்கு தெரியும். 

உமர்: என்னைப் பற்றி பெரியவர்களுக்கு மட்டும் தெரியும் என்று நினைத்தேன் ஆனால் எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சா.

அப்துல்லாஹ்: என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் நான் பிஜே குர்ஆன் தமிழாக்கத்தை படிப்பதை விட்டு விடப் போகிறேன் ஏனென்றால் அதை எடுத்தவுடனே பிஜே உடைய இந்த தீய செயல் தான் ஞாபகம் வருகிறது. முஹம்மது ஜான் குர்ஆன் தமிழாக்கத்தை படிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீங்க? இத்தனை வருஷமா இவங்க தான் உண்மையான இஸ்லாமை சொல்றவங்க என்று நினைச்சிட்டு இருந்தோம். 

நீங்களும் ஆரம்பத்திலே முஹம்மது ஜான் தமிழாக்கத்தை படித்துக்கொண்டு இருந்தீர்கள். பீஜேவின் தமிழாக்கம் வந்தவுடன், நீங்கள் தான அதனை நம் வீட்டில் . முதன்முதலில் அறிமுகம் செய்து, அதைப் பற்றி ஆஹா ஓஹோ என்று புகழாரம் சூட்டினீர்கள். அதன் பிறகு நாம் அனைவரும் அதை அடிக்க ஆரம்பித்தோம். ஆனால், இப்போது பீஜேவின் விசயம் வேறுமாதிரியான வழியில் செல்வதால், உங்களிடமே இதற்கான தீர்வை கேட்கலாம் என்று நினைத்து நான் கேட்கிறேன்.

உமர்: இந்த கேள்வியை அப்பாவிடம் கேட்டு இருந்திருக்கலாம் அல்லவா! 

அப்துல்லாஹ்: நான் கேட்டேன் ஆனால் அப்பா "நீ மார்க்க விஷயங்களில் தலையிடாதே! உன் வேலையை பார்" என்று சொல்லிவிட்டார். சரி நீங்க பக்ரீத்துக்கு இங்கே வரும் போது கேட்கலாம் என்பதற்காக நான் அமைதியாக இருந்துவிட்டேன். 

உமர்: நீ எந்த குர்ஆன் தமிழாக்கத்தையும் படிக்கலாம் பிரச்சினையில்லை. ஆனால் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் அது என்னவென்றால், பிஜே செய்த காரியம் கண்டனத்திற்கு உரியது அதற்கான தண்டனையை ஜமாத் கொடுத்தாக வேண்டும் அதே நேரத்தில் சட்டமும் இப்படிப்பட்ட காரியங்கள் செய்பவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக பிஜே எழுதிய புத்தகங்கள் மற்றும் அவருடைய குர்ஆன் தமிழாக்கம் என்பது அவருடைய திறமையின் மூலமாக கிடைத்தவைகள் அல்லவா? அவைகளை ஏன் புறக்கணிக்கவேண்டும்?

நடத்தையும் திறமையும்:

நன்றாக கவனி, திறமை வேறு நடத்தை வேறு. பிஜேயின் நடத்தை சரி இல்லை என்பது உண்மை தான், ஆனால் அவர் ஒரு நல்ல திறமைசாலி என்பதை மறக்கக் கூடாது. அவர் நடத்தை கெட்டவர் என்பது நிருபணமான ஒன்று.  ஆனால் அவர் இதுவரை எழுதிய புத்தகங்களை நாம் தூக்கி வீசிட முடியாதல்லவா?

உன்னுடைய கேள்வி நியாயமானதுதான் ஒருவருடைய திறமையை பாராட்டுவதற்கு முன்பு அவர் நல்ல நடத்தை உள்ளவராகவும் இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதில் தவறில்லை. முக்கியமாக மார்க்க விஷயங்களில் திறமைகளை காட்டிலும் நல்ல நடத்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். 

அப்துல்லாஹ்: ஆமாம், இதைத்தான் நானும் யோசித்தேன். மார்க்க விசயங்களில் திறமையுள்ளவனை விட நல்ல நடத்தை உள்ளவன் தான் நமக்கு தேவை.

உமர்: ஒரு பெரிய திறமைசாலி ஒரு நல்ல மனிதனாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை அதேபோல ஒரு நல்லவன் ஒரு பெரிய திறமைசாலியாக இருப்பான் என்று எதிர்பார்க்கவும் முடியாது.

நீ சொன்னது போல இனிமேல் பிஜே தமிழாக்கத்தை படிப்பதை விட்டுவிட்டு வேறு ஒரு மொழியாக்கத்திற்கு நீ மாறிவிடலாம். ஏனென்றால் குறைந்தபட்சம் குர்ஆனை கையில் எடுக்கும் போதாவது பிஜே பற்றி நினைக்காமல் இருக்கலாம், அல்லவா!

அப்துல்லாஹ்: ரொம்ப நன்றி சித்தப்பா. ஆனால் எனக்குப் புரியாத புதிர் என்னவென்றால் இவ்வளவு பெரிய மார்க்க அறிஞர் இப்படிப்பட்ட சின்ன வேலைகளை செய்வாரா என்பது தான்!

உமர்: இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை அப்துல்லாஹ். 

பிஜேவுடைய இந்த செயல்களுக்கும் இஸ்லாமிய இறையியல் கோட்பாடுகளுக்கும் சம்மந்தம் இருக்கிறது. உண்மையைச் சொல்லப்போனால் இஸ்லாமின் அடிப்படைக் கோட்பாடுகள் தான், பெரிய மார்க்க அறிஞர்கள், இப்படிப்பட்ட காரியங்களை செய்ய உற்சாகப்படுத்துகிறது.

அப்துல்லாஹ்: நீங்க என்ன சொல்றீங்க சித்தப்பா? பிஜேவுடைய இப்படிப்பட்ட கெட்ட செயல்களுக்கு இஸ்லாமிய கோட்பாடுகள் காரணமா? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே? கொஞ்சம் விளக்குங்களேன்?

உமர்:

சரி நான் சொல்வதை கவனமாக கேள். நீ அமல்கள் பற்றி, நன்மைகள் பற்றி கேள்விப்பட்டிருப்பாய் அல்லவா? உதாரணத்திற்கு

அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள்கிடைக்கும்.

லுஹாவுடைய இரண்டு ரக்அத்துகளை தொழுதால் 360 தர்மங்களைசெய்த நன்மையைப் பெற்றுக் கொள்வார்.

100 தடவை 'ஸுப்ஹானல்லாஹ்' என்று கூறினால் அவருக்கு 1000 நன்மைகள் எழுதப்படும். அல்லது 1000 பாவங்கள் மன்னிக்கப்படும்.

ஐந்து வேளை தொழுகையை ஜமாத்தோடு தொழுதால் 27 நன்மைகள்கிடைக்கும்.

நாம் அஸ்ஸலாமு அலைக்கும் என்று பதில் ஸ்லாம் சொன்னால் அதற்கு 10 நன்மைகளை அல்லாஹ் தருகின்றான்.

நாம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் என்று பதில் ஸ்லாம் சொன்னால் அதற்கு 20 நன்மைகளை அல்லாஹ் தருகின்றான்.

நாம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு என்று பதில் ஸ்லாம் சொன்னால் 30 நன்மைகளை அல்லாஹ் தருகின்றான்.

எவர் அல்லாஹ்வின் வழியில் ஏதாவது ஒன்றை செலவிடுவாரோ அவருக்கு எழு நூறு மடங்கு நன்மைகளை அல்லது அதைவிடவும் அதிகமாக நன்மைகளை அல்லாஹ் எழுதி விடுகின்றான்.

எவர் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து தொழுகையையும், நிரை வேற்றி, ஜனாஸாவை அடக்கும் வரை இருப்பாரோ அவர் இரண்டு கீராத் நன்மைகளை பெற்றவராக திரும்புவார். (கீராத் என்பது உஹத் மலைக்கு சமமாகும்).

ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து சென்று அதை அடக்கம் செய்வதற்கு முன் திரும்புவாரென்றால், அவர் ஒரு கீராத் அளவு நன்மைகளை பெற்று திரும்புகிறார்.

விரும்பிய தொழுகையை வீட்டில் தொழுதுவிட்டு பள்ளியை நோக்கி நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது அவரது கால்கள் தரையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு நன்மை கிடைக்கும்.

ஒரு முஸ்லிமை பொறுத்தவரையில், ஒரு நன்மைக்கு வழிகாட்டினால் அந்த நன்மையை உலகம் அழியும்வரை யார் செய்தாலும் அதிலும் இவருக்கு ஒருபங்கு நன்மை கிடைக்கும். 

"ஜும்ஆவுடைய நாளில் குளித்து விட்டு பள்ளிக்கு (நேரத்தோடு) செல்பவர் ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.

இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர்போன்றவர் ஆவார்.

மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.

நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைத் தர்மம் செய்தவர்போன்றவர் ஆவார்.

ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர்ஆவார். 

தொழுகைக்கான அழைப்பைக் கேட்கும்பொழுது அதற்காக பதில் கூறுகிறோம் அதற்கு நன்மை எழுதப்படுகிறது.

மனிதனின் ஒவ்வொரு அமலுக்கும் கூலி இரட்டிப்பாக வழங்கப்படுகிறது. ஒரு நன்மைக்கு பத்து நன்மைகள் முதல் எழுநூறு மடங்கு வரை கிடைக்கும்

அப்துல்லாஹ்:

ஆமாம் அவைகள் எல்லாம் எனக்கு தெரியுமே. நன்மைகளுக்காகத் தானே நாம் தொழுகைக்கு தவறாமல் செல்கிறோம் ஜமாத்தாக தொழுகிறோம், சலாம் கூறுகிறோம் இதில் என்ன தவறு இருக்கிறது. இவ்வுலகில் வாழும்வரை நம்மால் முடிந்த வரை அமல்கள் செய்து நன்மைகளை குவித்துக்கொள்ளவேண்டுமல்லவா? இதன் அடிப்படையில் தானே நமக்கு கியாமத் நாளில் அல்லாஹ் தீர்ப்பு வழங்குவான்.

உமர்: சரியாகச் சொன்னாய்,

இப்பொழுது நாம் பிஜேவின் விஷயத்திற்கு வருவோம். பிஜே அவர்கள் எத்தனை முறை குர்ஆனை அரபியில் படித்திருப்பார்? ஒவ்வொரு எழுத்திற்கும் அல்லாஹ் பத்து நன்மைகளை பிஜே அவர்களின் கணக்கிலே சேர்ப்பான் என்பது நம்பிக்கை அல்லவா. அப்படியானால் கூட்டி கழிச்சு பாரு, பல ஆண்டுகளாக அவர் படித்த குர்ஆன் எழுத்துக்களுக்கு எத்தனை இலட்சக்கணக்கான நன்மைகளை அவர் கணக்கில் அல்லாஹ் சேர்த்து இருந்திருப்பார். அதேபோல அவர் ஜமாத்தோடு தொழுவதற்காக எல்லோருக்கும் சலாம் சொன்னதற்காக இன்னும் எத்தனை இலட்சம் நன்மைகள் அவர் கணக்கில் சேர்க்கப்பட்டிருக்கும்.

இது மட்டுமல்ல அவர் குர்ஆன் மொழியாக்கம் செய்தபடியால் அவருக்கு அதிக நன்மையை அல்லாஹ் அவருடைய கணக்கில் சேர்த்துக் இருப்பான் இல்லையா?

அப்துல்லாஹ்: ஆமாம் இது உண்மைதான் கூட்டி கழிச்சு சொன்னால் பல கோடி நன்மைகள் அவருடைய பெயரில் அல்லாஹ் சேர்த்திருப்பான். ஒரு பேச்சுக்காக பிஜே அவர்களின் கணக்கில் இதுவரை 100 கோடி நன்மைகளைக் காட்டிலும் அதிகமாக அல்லாஹ் எழுதி இருப்பான் என்று வைத்துக் கொள்ளலாம் இல்லையா.

உமர்: சரியாகச் சொன்னாய் அப்துல்லாஹ். ஆக அல்லாஹ் அவருடைய கணக்கில் வரவில் 100 கோடி நன்மைகளை சேர்த்து இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். 

அதேபோல மனிதன் செய்யும் தீய செயல்களுக்கு அல்லது  தவறுகளுக்கு அவர்களின் கணக்கிலிருந்து சில நன்மைகளை அல்லாஹ் நீக்கிவிடுவான் அல்லவா?

அப்துல்லாஹ்: ஆமாம், நிச்சயமாக. உதாரணத்திற்கு, இந்த விவரங்களைச் சொல்லலாம்.

நாய் வைத்திருந்தால் நன்மைகள் அழிந்து போகும்: நாய் வைத்திருப்பவரின் நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவிற்கு (அவற்றின் ஊதியம்) குறைந்து போய்விடும்; விவசாயப் பண்ணையையோ கால்நடைகளையோ (திருடு போய் விடாமல்) பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்களைத் தவிர. (ஸஹீஹுல் புஹாரி – 2322)

மது அருந்தியவனின் நாற்பது காலைகளின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது: யார் மது அருந்துகின்றானோ அவனுடைய நாற்பது காலைகளின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. (ஸுனன் திர்மிதி – 1862)

கடனாளியாக மரணித்தவரின் நன்மைகள் எடுக்கப்பட்டு அவரின் கடன் தீர்க்கப்படும்: ஒரு தீனார் ஒரு திர்ஹம் அளவு கடன் பட்ட நிலையில் யார் மரணித்தாரோ அவரின் நன்மைகளிலிருந்து அவரின் கடன் தீர்க்கப்படும் (ஸுனன் இப்னி மாஜஹ் – 2414)

அஸர் தொழுகையை விட்டால் நன்மைகள் அழிந்து விடும்: மேகம் சூழ்ந்த ஒரு நாளில் புரைதா(ரலி)வுடன் ஒரு போரில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். அப்போது அவர்கள் 'அஸர் தொழுகையை முன் வேளையில் நிறைவேற்றுங்கள். ஏனெனில் 'அஸர் தொழுகையைவிட்டு விடுகிறவரின் செயல்கள் நிச்சயமாக அழிந்து விடுகின்றன' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்' என்று குறிப்பிட்டார்கள். (ஸஹீஹுல் புஹாரி – 553)

ஒருவர் சோதிடனிடம் சென்று எதைப் பற்றியாவது கேட்டால் அவருடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது: ஒருவர் சோதிடனிடம் சென்று எதைப் பற்றியாவது கேட்டால் அ(வ்வாறு கேட்ட)வருடைய நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை. இதை நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் சிலரிடமிருந்து ஸஃபிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் – 4488)

ஒருவர் இன்னொருவருக்கு ஏசியிருந்தால்? அவதூறு கூறியிருந்தால்………? அநியாயமாக ஒருவரின் சொத்தைப் புசித்திருந்தால்? ஒருவரின் இரத்தத்தைச் சிந்தியிருந்தால்?

திவாலாகிப்போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். மக்கள் யாரிடம் வெள்ளிக்காசோ (திர்ஹம்) பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்' என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை நோன்பு ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர்மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்;இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்குமுன் நன்மைகள் தீர்ந்துவிட்டால் (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு இவர்மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப்போனவர்)' என்று கூறினார்கள். (முஸ்லிம் -5037)

உமர்:

சரியாகச் சொன்னாய். இதுதான் இஸ்லாம் சொல்லும் கோட்பாடு. மரிப்பதற்கு முன்பு நாம் நல்ல அமல்களை செய்து நன்மைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். கியாமத் நாளில் அல்லாஹ் தம்முடைய தராசின் ஒரு தட்டில் நன்மைகளை வைத்து நம்முடைய தீய செயல்களை இன்னொரு தட்டில் வைப்பான் தீயவைகளை காட்டிலும் நன்மைகள் அதிகமாக இருக்குமானால் நாம் ஜெயித்தோம், இல்லையென்றால் தோல்வி (நரகம்) தான்.

அப்துல்லாஹ்: சுருக்கமாகச் சொன்னால் இது தான் சரி. எனவே தான் நன்மைகளை அதிகமாக்கிக் கொள்ள நாம் முயலுகிறோம்.

உமர்: இந்த கோட்பாடுதான் பிஜே போன்றவர்கள் தவறுகள் செய்வதற்கு காரணமாக இருக்கிறது.

அப்துல்லாஹ்: இது எப்படி?  அமல்கள் செய்து நன்மைகளை பெருக்கிக்கொள்வதற்கும், பீஜே போன்றவர்கள் செய்யும் நடத்தைக்கெட்ட செயல்களுக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது?

உமர்: நான் இப்போது விளக்குகிறேன். நாம் பிஜேவின் கணக்கை எடுத்துக்கொள்வோம்.  அவருடைய கணக்கில் அல்லாஹ் 100 கோடி நன்மைகளை வைத்திருக்கிறான் என்று நினைத்துக்கொள்வோம்.

இந்த 100 கோடி என்ற கணக்கு அல்லது ஒரு அதிக அமல்கள் தன்னுடைய கணக்கில் இருக்கின்றது என்று பிஜே அவர்களுக்கும் தெரிந்து இருக்கும் இல்லையா. ஏனென்றால் இஸ்லாமை அதிகமாக படித்து ஆய்வு செய்து பல புத்தகங்களை எழுதியவருக்கு அரபியிலிருந்து தமிழில் குர்ஆனை மொழியாக்கம் செய்தவருக்கு இஸ்லாமுடைய இந்த அல்லாஹ்வின் நன்மை தீமை தராசு கணக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை

இப்போது பிஜே அவர்களும் ஒரு மனிதர் என்பதால் அவரும் சில சிறிய சிறிய தவறுகளை செய்யக்கூடும் அதனால் சில அமல்கள் அவருடைய கணக்கில் இருந்து அல்லாஹ் எடுத்துவிடுவான் இல்லையா! சில நேரத்தில் தேவையில்லாமல் அவர் கோபமாக பேசி இருக்கலாம். அதனால் சில அமல்கள் கழிக்கப்பட்டு விடும்.

ஆக பிஜே போன்ற அறிவாளிகள் தாங்கள் செய்யும் அமல்களின்  எண்ணிக்கை மீது ஒரு கணக்கு வைத்திருப்பார்கள். அதேபோல தாங்கள் செய்யும் தவறுகள் / தீய காரியங்கள் எப்படிப்பட்ட அமல்களை அழித்துவிடும் அல்லது தன்னுடைய கணக்கிலிருந்து நீக்கிவிடும் என்றும் அறிந்திருப்பார்கள் அல்லவா? 

நம்முடைய கணக்கு படி பிஜேவின் கணக்கில் 100 கோடி நல்ல செயல்கள் இருந்தால் அவர் செய்யும் சில தவறுகள் மூலமாக சில நூறு அல்லது ஆயிரம் நன்மைகள் அழிக்கப்பட்டிருக்கலாம். இது சரிதானே

அப்துல்லாஹ்: பிஜே மட்டுமல்ல ஒவ்வொரு முஸ்லிமும் இப்படித்தான் வாழ்கிறான் இதுதான் இஸ்லாமின் கோட்பாடு நன்மைகள் அதிகம் செய்ய வேண்டும் அமல்களைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் அமல்களை அழிக்கும் செயல்களை குறைத்துக் கொள்ள வேண்டும்.

உமர்:

இதன்படி பார்த்தால் பீஜேவின் "அந்த பலான" நடத்தை கெட்ட செயலுக்கு ஒருவேளை

  • அல்லாஹ் ஆயிரம் அமல்களை குறைத்துக் கொள்வான் அல்லவா? அல்லது
  • பத்தாயிரம் அமல்களை அவருடைய கணக்கில் இருந்து எடுத்து விடுவான் அல்லவா?
  • அல்லது ஒரு லட்சம் நல்ல அமல்கள் அழிக்கப்பட்டு விட்டது என்று வைத்துக் கொள்வோமா?

கடைசியாக அவர் செய்த தீய காரியங்களுக்கு 1 கோடி நன்மைகள் அல்லது அமல்கள் அழிக்கப்பட்டுவிட்டன  என்று  வைத்துக்கொண்டாலும் இன்னும் பிஜே கணக்கில் 99 கோடி நன்மைகள் மிஞ்சி இருக்குமல்லவா? இந்த கணக்கு சரியா?

அப்துல்லாஹ்: அவர் செய்தது சின்ன தவறு அல்ல மிகப் பெரிய தவறு

உமர்: சரி உன் கணக்கிற்கே வருகிறேன், அவர் செய்த அந்த தீய செயலுக்காக 99 கோடி அமல்கள் அழிக்கப்பட்டுவிட்டது என்று வைத்துக் கொள்வோம்.  இப்படி இருந்தும் அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தை கொடுப்பான் ஏனென்றால் அவரிடம் இன்னும் ஒரு கோடி நன்மை மிச்சமிருக்கிறது இது மாத்திரமல்ல அவர் இனிமேல் வாழும் நாட்களில் குர்ஆனைப் படிப்பார், ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மைகள் வீதம் அவருக்கு அல்லாஹ் கொடுப்பான். அவர் ஜமாஅத்தோடு தொழுதால் அதிக நன்மைகள் கிடைக்கும் இன்னும் பல வகைகளில் அவர் அமல்களைச் செய்து நன்மைகளை சம்பாதித்துக்கொள்வார். இது சரி தானே!

அப்துல்லாஹ்: இது குழப்பமாக இருக்கிறதே. அல்லாஹ் கியாமத் நாளில் தீர்ப்பு வழங்கும் போது, பூமியில் மனிதன் செய்த நன்மை தீமைகளை கணக்கில் வைத்துதான் நீதி செய்யமுடியும் அல்லவா? அப்படி இருக்கும்போது அதில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி மக்கள் தப்பிக்க முயல்வது ஆச்சரியமாக இருக்கிறதே. உங்க லாஜிக் எனக்கு சிறிது புரிய ஆரம்பித்துள்ளது,

உமர்: இதைத்தான் நான் குறிப்பிடுகிறேன், அல்லாஹ்வின் இறையியல் கோட்பாடுகள் தவறானவைகள் ஆகும்.  முக்கியமாக இந்த நன்மை தீமை கோட்பாடு மிகவும் தவறான ஒன்று.

அப்துல்லாஹ்: அப்படியானால் பிஜே இதையெல்லாம் கணக்குப் போட்டு தான் அந்த பாவத்தை செய்து இருந்திருப்பார் என்றுச் சொல்கிறீர்களா? 

உமர்:  அவர் கணக்குப்போட்டு செய்தாரோ, அல்லது பாவம் செய்துவிட்டு,  அதன் பிறகு கணக்கு போட்டுக்கொண்டாரோ, எனக்குத் தெரியாது.

ஒரு சராசரி முஸ்லிம் கூட ஒவ்வொரு நாளும் எப்படி தன் கணக்கில் நன்மைகளை அதிகபடியாக சேர்த்துக்கொள்ளலாம், எப்படி அந்த நன்மைகள் அழியாமல் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தபடி தானே நாட்களை கடத்துகிறான். அதிக அமல்களைச் செய்து நன்மைகளை பெருக்கிக்கொள்ளுங்கள் என்று தானே இஸ்லாம் சொல்கிறது.

சாதாரண மனிதனுக்கும் பிஜே போன்றவர்களுக்கும் இடையேஇருக்கும் வித்தியாசம் ஒன்று தான், அது நன்மைகளின் தீமைகளின் அளவு. அதாவது ஒரு சராசரி முஸ்லிம் தன் சக்திக்கு ஏற்ற அமல்களை செய்து குறைந்த அளவு தீயவைகளைச் செய்து எப்படியாவது அல்லாஹ்வின் தராசிலே நன்மைகள் அதிகமாக காணப்படும் படி செய்யவேண்டும் என்று நினைக்கிறான். அதேபோலத்தான் பீஜே போன்றவர்கள் அதிக நன்மைகள் செய்து இப்படிப்பட்ட சில தவறுகளினால் சில அமல்களை அல்லது பல அமல்களை இழக்கிறார்கள். இஸ்லாமின் கோட்பாடு சராசரி முஸ்லிமுக்கும், பீஜே போன்றவர்களுக்கும் ஒன்று தான். 

சராசரி முஸ்லிம் அல்லாஹ்வோடு செய்வது சிறுதொழில் வியாபாரம் போன்றது, பீஜே போன்றவர்கள் செய்வது ஏற்றுமதி இறக்குமதி போன்ற பிரமாண்ட வியாபாரம் போன்றது, ஆனால், அல்லாஹ்வின் கணக்கு வழக்கு எல்லாம் இருவருக்கும் சமமே. அதாவது வரவிலிருந்து (நன்மைகள்)  செலவை (தீய செயல்கள்) கழித்துவிட்ட பிறகும், ஏதாவது மீதமிருக்கவேண்டும் அவ்வளவு தான்.

எது எப்படியானாலும் இஸ்லாமின் கோட்பாட்டின்படி கூட்டல் கழித்தல் கணக்கு தான் வாழ்க்கை.  எத்தனை கூட்டப்படுகின்றன எத்தனை கழிக்கப்படுகின்றன என்பதில்  ஒரு முஸ்லிம் கண் வைத்து வாழ்ந்தால் போதும், கடைசியில் அல்லாஹ்வின் நியாயத்தீர்ப்பில் ஜெயித்துவிடலாம்,.

அப்துல்லாஹ்:

இதற்கு தீர்வு தான் என்ன? இந்தக் கோட்பாடு தவறு என்றால் சரியான கோட்பாடு எது?

உமர்: அல்லாஹ்வின் கணக்கு தவறானது. நீ சலாம் சொன்னால் உனக்கு பத்து நன்மைகள் கிடைக்கும் என்றுச் சொல்வதும், நீ இதைச் செய், உனக்கு இரண்டு மடங்கு நன்மைகள் கிடைக்கும் என்று அல்லாஹ் சொல்வதினால் தான் முஸ்லிம்கள் கணக்கு போட்டுக்கொண்டு வாழுகிறார்கள். முஸ்லிம்களை கணக்கு போட அல்லாஹ் கற்றுக்கொடுக்கின்றானே தவிர மனிதாபமானத்தோடு வாழும்படி கற்றுக்கொடுப்பதில்லை. அல்லாஹ் கணக்கு பார்க்கச் சொல்கிறானே தவிர, அதன் விளைவுகளை பாருங்கள் என்று சொல்ல தவறிவிட்டான்.

பிஜே போன்றவர்கள் பல கோடி நன்மைகளை செய்துவிட்டு அதன் பிறகு தெரிந்தே தீய செயல்கள் செய்வதற்கும் இந்தக் கோட்பாடுகள் உதவி புரிகின்றன. இறைவனுக்கு விருப்பமான வாழ்க்கையை ஒரு மனிதன் வாழ்கின்றானா இல்லையா? என்பதை பார்க்க வேண்டுமே தவிர அல்லாஹ் சொல்வது போல கணக்குப் போட்டு வாழக்கூடாது. நீ 35 மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்றாய், நீ 60 மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் வெற்றி பெற்றாய், நீ 99 மதிப்பெண்கள் பெற்று கல்லூரியில் முதல் இடத்தை பிடித்தாய் என்று இஸ்லாம் கற்றுக்கொடுப்பதினால் உண்டாகும் விளைவுகள் இவைகள்.  இப்படிப்பட்ட இஸ்லாமிய இறையியல் சரியான இறையியல் அல்ல.

இன்னும் சில முஸ்லிம்கள் தாங்கள் செய்யும் செயல்களுக்கு எவ்வளவு அமல்கள் சேர்க்கப்படுகின்றன என்பதை அறியாமல் பயந்து கொண்டே ஒவ்வொரு நாளும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த பயத்திற்கும் இஸ்லாமிய கோட்பாடு தான் காரணம் பீஜே போன்றவர்களின் செயல்களுக்கும் இதுவே காரணம்.

சரியான கோட்பாடு எதுவென்றால் இறைவனிடம் கணக்குப் போட்டு வாழ்வது அல்ல, அதற்கு பதிலாக முழுவதுமாக நம்மை நாம் இறைவனுக்கு அர்ப்பணித்து வாழ்வதாகும். எத்தனை நன்மைகளை நாம் செய்தோம் என்று கணக்கு போடாமல், எப்படி வாழ்ந்தோம் என்று பார்க்கச் சொல்லும் கோட்பாடு தான் சரியான கோட்பாடு. மேலும், தவறுகள் செய்யும்போது மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டு அதன் பிறகு அப்படிப்பட்ட தவறுகள் நடைபெறாமல் பார்த்துக் கொள்வதும் தான் சிறந்த கோட்பாடு. கூட்டி கழிச்சி பாரு கணக்கு எல்லாம் சரியாக இருக்கும் என்று சொன்னால், நம்முடைய நிலைமை பிஜேயின் நிலைமை போலவே இருக்கும். 

பிஜே தாம் செய்த செயல்களுக்கு அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டாரோ, இல்லையோ தெரியாது. இஸ்லாமை நன்கு அறிந்து வைத்திருக்கும் பீஜே, தான் செய்த தவறுக்காக இஸ்லாமின் கோட்பாட்டின்படி தம்முடைய அமல்களின் எண்ணிக்கையில் சிலவற்றை குறைத்துக்கொண்டு இருந்திருப்பார் அவ்வளவுதான்.

அப்துல்லாஹ்:

உங்களிடம் ஒரு கேள்வியை நான் கேட்கட்டுமா? நியாயத்தீர்ப்பு விஷயத்தில் இஸ்லாமிய கோட்பாடு தராசிலே நிறுத்தி கணக்குப் பார்த்து மனிதர்களை தீர்ப்பு செய்கிறது என்பதை புரிந்து கொண்டேன். இந்த விஷயத்தில் கிறிஸ்தவத்தின் நியாயத்தீர்ப்பு எப்படி இருக்கும்?

கிறிஸ்தவர்கள் செய்யும் நன்மைகள் எப்படி கணக்கிடப்படுகின்றன? கிறிஸ்தவர்களின் தீய செயல்கள் எப்படி கணக்கிடப்படுகின்றன? எதன் அடிப்படையில் அவர்கள் நியாயத்தீர்க்கப்படுகிறார்கள்?

உமர்:

நல்ல கேள்வியை கேட்டாய். 

கிறிஸ்துவத்தின் கோட்பாடு மிகவும் சுலபமானது. மனிதனுடைய நல்ல செயல்கள் பரிசுத்த தேவனுக்கு முன்பாக எடுபடாது. இறைவனுக்கு முன்பு நம்முடைய நீதியான செயல்கள் அனைத்தும் கந்தைத் துணிகள் போன்றவைகள் ஆகும். தேவன் எதிர்பார்க்கும் அளவிற்கு நம்மால் பரிசுத்தமாகவும் நீதியாகவும் வாழ முடியாது. இறைவனாக பார்த்து நம்மை மன்னித்து நமக்கு ஒரு புது வாழ்வு கொடுத்து, நான் உன் தீய காரியங்களை மன்னித்து இருக்கிறேன் இதுவரைக்கும் செய்தவைகளை மன்னித்து விட்டேன். இனி என் மீது நீ வைக்கும் விசுவாசமே அல்லது நம்பிக்கையே உன்னை என்னிடத்தில் சேர்க்கும். எனவே என்னை விசுவாசித்து நான் உனக்காக செய்தவைகளை நம்பி நீ வாழ வேண்டும். கூட்டல் கழித்தல் கணக்கு இனி உனக்கு இல்லை. 

[உமர் பேசிக்கொண்டே இருக்கும் போது, அவரது அண்ணன் மேலே மொட்டை மாடிக்கு வந்துவிட்டார்]

உமரின் அண்ணா: நீங்க இரண்டு பேரும் இங்கே இருக்கீங்களா? அப்துல்லாஹ், நீ கீழே போ. நான் கொஞ்ச நேரம் பேசிட்டு வரேன்.

அப்துல்லாஹ்: சரி சித்தப்பா, நான் கீழே போகிறேன், பிறகு பேசலாம்.

[அப்துல்லாஹ் மாடியிலிருந்து இறங்கி சென்றுவிட்டான்]

உமரின் அண்ணா: நீங்க ரெண்டு பேரும் என்ன பேசிக்கிட்டு இருந்தீங்க?

உமர்: சும்மா, ஏதோ பேசிக்கிட்டு இருந்தோம். 

உமரின் அண்ணா: தம்பி, ஒரு முக்கியமான விசயம் பற்றி உன்னோடு பேசவேண்டும்.

உமர்: என்ன சொல்லுங்க அண்ணா!

உமரின் அண்ணா: நாம் பேசறது இரகசியமாக இருக்கட்டும். பீஜேவுடைய குர்-ஆன் தமிழாக்கத்தை நீ தானே எங்களுக்கு அறிமுகம் செய்தாய்!

உமர்: ஆமாம், இப்போது என்ன அதுக்கு?

உமரின் அண்ணா: ச்சே பீஜே செய்த காரியத்தினால், அவரது தமிழாக்கத்தை படிக்கவே முடியலே! தமிழாக்கத்தை எடுத்தாலே போதும், அவர் செஞ்சது தான் ஞாபகம் வருகிறது. நீ என்ன நினைக்கிறாய்? அதை படிக்கலாமா? அல்லது வேறு தமிழாக்கத்தை படிக்கலாமா?

உமர்:? ? ? 

[உமர் மனதில் பேசிக்கொண்டான்… அடப்பாவமே… முழு தமிழ நாடும் இதே நிலையில் தான் இருக்கிறார்களா என்ன? ]

மறுபடியும் தொடர்ந்தான் உமர், 

இதுவரை அப்துல்லாஹ்விடம் சொன்ன விவரங்களை இரண்டாம் முறை சொல்ல ஆரம்பித்தான் உமர். . . .

தேதி: 22 ஆகஸ்ட் 2018


பிஜேவிற்கு கொடுத்த இதர மறுப்புக்கள்

உமரின் கட்டுரைகள் பக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/answerpj/pj_allah_judgement.html