ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வெள்ளி, 20 டிசம்பர், 2013

2013 கிறிஸ்துமஸ்: பாகம் 3 - இயேசுவின் பிறப்பு விஷயத்தில் அல்லாஹ்வை நிர்பந்தித்தது யார்?



[கிறிஸ்துமஸ் 2013: பாகம் 1ஐ, பாகம் 2ஐ  சொடுக்கி படிக்கவும்]

[உமரும் அவரது தம்பி அப்துல்லாஹ்வும் ஸ்கைப்பில் (Skype) பேச மறுபடியும் உட்கார்ந்தார்கள், உரையாடல் தொடர்கிறது]

அப்துல்லாஹ்: அண்ணே! எப்படி இருக்கீங்க

உமர்: கர்த்தரின் கிருபையால் நான் நலமாக உள்ளேன், நீ எப்படி இருக்கிறாய்?

அப்துல்லாஹ்: அல்லாஹ்வின் அருளால் நலமாக இருக்கிறேன்.  கடந்த முறை நாம் பேசும் போது, மர்யம் அவர்களுக்கு அல்லாஹ் செய்த அற்புதத்தை நீங்கள் விமர்சித்தீர்கள். ஒரு சரியான காரணம் இல்லாமல் அல்லாஹ் அற்புதம் செய்தார் என்று குற்றம் சாட்டினீர்கள். இப்போது நான் ஒரு கேள்வியை உங்களிடம் கேட்கிறேன், அதற்கு பதில் சொல்லுங்கள்.

உமர்: சரி தம்பி, உன் கேள்வியை கேள்.

அப்துல்லாஹ்: இயேசு அற்புதமாக பிறந்தவர், தந்தையில்லாமல் பிறந்தவர் என்று பைபிள் சொல்கிறது அல்லவா?

உமர்: குர்ஆன் கூட இப்படித்தானே சொல்கிறது

அப்துல்லாஹ்: இப்போது என் கேள்வி என்னவென்றால், ஏன் பைபிளின் தேவன் இயேசுவை அனுப்பும் போது, அற்புதம் செய்து அனுப்பினார்? இயற்கையான முறையில் ஒரு தம்பதிகள் மூலமாக அனைவரும் பிறப்பது போல பிறக்கச்செய்து இருக்கலாம் அல்லவா? ஏன் கணவர் இல்லாமல் ஒரு கன்னியின் மூலமாக இயேசுவை பிறக்கச் செய்யவேண்டும்? 
அல்லாஹ் மர்யம் அவர்களுக்குச் செய்த அற்புதம் பற்றி எந்த கேள்வியை நீங்கள் கேட்டீர்களோ, அதே கேள்வி இப்போது உங்களுக்கு வருகிறது, இதற்கு பதில் சொல்லுங்கள். பைபிளின் தேவன் எந்த ஒரு சரியான காரணமும் இல்லாமல், ஏன் அற்புதமான முறையில் மர்யம் கருத்தரிக்கச் செய்து இயேசுவை இவ்வுலகில் அனுப்பினார்?

உமர்: தம்பி, நீ  உன்னை மித மிஞ்சிய அறிவாளி என்று நினைத்துக்கொள்கிறாய். உண்மையில் இந்த கேள்வியை கேட்கவேண்டியவர்கள் கிறிஸ்தவர்கள் ஆவார்கள். நான் உன்னிடம் கேட்கவேண்டும் என்று நினைத்திருந்த கேள்வியை நீயே கேட்கிறாய்.

அப்துல்லாஹ்: நீங்கள் தலைப்பை  மாற்றி பேசாதீங்க. என் கேள்விக்கு பதில் சொல்லுங்க?

உமர்: இயேசு இவ்வுலகில் வரும் போது, ஏன் ஒரு தம்பதிகளுக்கு இயற்கையான முறையில் பிறக்காமல், ஒரு கன்னிகைக்கு அற்புதமாக பிறந்தார் என்பதற்கு எங்களிடம் பதில் உண்டு. ஆனால், உங்கள் இஸ்லாமில் அதற்கு பதில் உண்டா?  இந்த ஒரு கேள்விக்கு தரப்படும் பதில் தான் இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே இருக்கும் மிகப்பெரிய பிளவு ஆகும்.

இயேசு வெறும் ஒரு தீர்க்கதரிசியாக மட்டுமே இருந்திருந்தால், தேவன் அவரை இயற்கையான முறையில் பிறக்கவைத்திருப்பார். ஆனால், அவர் தீர்க்கதரிசிகளைக் காட்டிலும் மேலானவர் என்பதால் அவர் அற்புதமாக பிறந்தார்.  ஒரு ஆணின் துணையில்லாமல் மரியாள் கர்ப்பம் தரிக்கச் செய்து, தேவன் இயேசுவை அனுப்பினார்.

ஆதியாகமம் 3:15ல் தேவன், இயேசுவின் எப்படி பிறப்பார் என்பதை தெளிவாக கூறினார். ஒரு ஸ்திரியின் வித்தின் மூலமாக பிறக்கப்போகின்றவர் சாத்தானை ஜெயிப்பார் என்று கூறினார்.

ஆதியாகமம் 3:15 உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.

இயேசு ஆதியிலிருந்து இருந்தபடியினாலே, அவர் கணவன் மனைவி உறவின் மூலமாக பிறக்கவில்லை. இன்னும் அனேக வசனங்களை நான் சொல்லமுடியும். ஆனால், இப்போது கேள்வி என்னவென்றால், "அல்லாஹ் ஏன் இயேசுவை அற்புதமான முறையில் பிறக்கச்செய்யவேண்டும்?" என்பதாகும். [மற்றவர்களைப் பார்த்து காப்பி அடித்தால், இப்படித் தான் முழிக்கவேண்டி வரும்]

அப்துல்லாஹ்: அது அல்லாஹ்வின் விருப்பம். அவரை கேள்வி கேட்க யாராலும் முடியாது.

உமர்: இறைவனை கேள்வி கேட்கமுடியாது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் காரணம் இல்லாமல் ஏன் இயேசுவை ஒரு கன்னிப்பெண் கர்ப்பம் தரிக்கச் செய்து அதன் மூலமாக பிறக்கச் செய்யவேண்டும்? என்பது தான் கேள்வி

அப்துல்லாஹ்: நான் தான் சொன்னேனே, அது அவரது விருப்பம் என்று?

உமர்:  தம்பி, சரியாக புரிந்துக்கொள். இறைவன் செய்யும் அனைத்தையும் பற்றி நாம் கேள்வி கேட்கமுடியாது. இதனை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், ஏன் இறைவன் இப்படி செய்யவேண்டும் என்ற கேள்வியை நாம் கேட்கலாம் இல்லையா? நாம் சிந்திக்கலாம் அல்லவா?
இறைவன் நம்மைப்போல ஞானமில்லாதவர் அல்ல, அவர் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் ஒரு காரணம் இருக்கும்.  

அப்துல்லாஹ்: இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? ஆதாமை எப்படி படைத்தார்? தாய் இல்லாமல் படைத்தார் அல்லவா? அது போல இயேசுவை தந்தையில்லாமல் பிறக்கச் செய்தார் அவ்வளவு தான். இருவரையும் தம் வார்த்தையினால் பிறப்பித்தார் அல்லாஹ்

உமர்: இப்போது தான் நீ என் வழிக்கு கொஞ்சம் கொஞ்சமாக வருகிறாய். ஆதாம் தாய் இல்லாமல் பிறந்தார் என்றுச் சொல்கிறாய். இதற்கு காரணம் என்ன? ஆதாம் தான் முதல் மனிதன், எனவே இறைவனுக்கு வேறு வழியே இல்லை, தாய் இல்லாமல் தான் ஆதாமை இறைவன் உருவாக்கமுடியும்.

ஆனால், ஆதாமைத் தவிர உலகில் வேறு எந்த மனிதனாக இருந்தாலும் சரி, அவன் ஆண் பெண் உறவு மூலமாகத்தான் பிறக்கவேண்டும். இது தான் இயற்கை நியதி, மனித இனம் பெருகுவதற்கு இது தான் இறைவன் உருவாக்கிய திட்டம்.

ஆனால், இயேசுவின் பிறப்பு விஷயத்தில் மட்டும் ஏன் இறைவன் தான் உருவாக்கிய இயற்கை திட்டத்தை புறக்கணித்துவிட்டு வித்தியாசமாக செயல்படவேண்டும்?

உன் அல்லாஹ்விற்கு தன் நபியை அனுப்ப கி.பி. முதல் நூற்றாண்டில் "மர்யம்" என்ற ஒரு பெண் கிடைத்த போது, ஏன் அவருக்கு ஒரு ஆண் கிடைக்கவில்லை? மரியமை யாரும் திருமணம் செய்துக்கொள்ளமாட்டார்கள் என்று சொல்லிவிட்டார்களா?

இயேசுவை ஒரு விசேஷித்த முறையில் அனுப்ப அல்லாஹ்வை நிர்பந்தித்தது யார்?

ஒரு சாதாரண நபியை அனுப்ப, இயற்கை விதியை ஏன் அல்லாஹ் மீறினார்?

அப்துல்லாஹ்: இதெல்லாம் ஒரு கேள்வியா?

உமர்: ஆமாம், இது நல்ல கேள்வி தான். அல்லாஹ் எது செய்தாலும் சும்மா செய்துவிடுவாரா? ஏதோ எடுத்தோம் கவிழ்த்தோம் என்பது போல, ஞானமில்லாமல் அல்லாஹ் செயல்படுவாரா? பல கோடி மக்களை இயற்கையான முறையில் பிறக்கச் செய்த அல்லாஹ், இயேசுவின் விஷயத்தில் மட்டும் ஏன் இயற்கைக்கு முரண்பட்டு செயல்படவேண்டும்?

உங்கள் இறைத்தூதர் முஹம்மதுவை ஒரு கணவன் மனைவியின் உறவின் மூலமாக பிறக்கச் செய்த அல்லாஹ், ஏன் இயேசுவை மட்டும் இதே பாணியில் பிறக்கச் செய்து இருக்கக்கூடாது?

அல்லாஹ்வை யாரோ நிர்பந்தித்தார்களா? அல்லது அல்லாஹ்வை ஏதோ ஒன்று இப்படி செயல்பட செய்ததா?

இதற்கு உலகில் எந்த முஸ்லிமிடமும் பதில் இல்லை, உங்கள் முஹம்மதுவிடமும் பதில் இல்லை. ஆனால், இதற்கு ஒரு சாதாரண கிறிஸ்தவனிடம் பதில் உள்ளது.

அப்துல்லாஹ்: அது என்ன பதில்?

உமர்: தம்பி இதற்கு பதில் கிறிஸ்தவத்தில் தான் உள்ளது, இஸ்லாமில் இல்லை.

அப்துல்லாஹ்: அந்த பதில் தான் என்ன? சொல்லுங்கள்.

உமர்: ஆதாமின் கீழ்படியாமையினால் உண்டான தண்டனையிலிருந்து உலகை மீட்க, தேவனால் தான் முடியும், அதுவும் பரிசுத்தராகிய அவர் பரிசுத்தராகவே உலகில் வரவேண்டும். அற்புதராகிய அவர் அற்புதமான வகையில் உலகில் வந்து, பாவிகளாகிய நம்முடைய தண்டனையை அவர் சுமந்துக்கொண்டு நமக்கு மீட்பை கொண்டுவரவேண்டும்.

ஒரு புது மனிதன் உருவாக, ஆண் பெண் இருவரும் தேவை. ஆனால், ஏற்கனவே இருக்கிறவர் இவ்வுலகில் வரவேண்டுமென்றால், இன்னொரு ஆணின் துணை அவருக்கு தேவையில்லை. மட்டுமல்ல, ஒரு கருவாக மாறி அது குழந்தையாக வளருவதற்கான ஒரு இடம் தான் மர்யம் அல்லது மர்யமின் கர்ப்பம், அவ்வளவு தான். இறைவனே மனிதனாக வரவேண்டும் என்ற  திட்டத்தை அதே இறைவன தீட்டியதால், அவர் கன்னியின் வயிற்றில் கருவாக வந்தார்.  இது தான் கிறிஸ்தவம் கொடுக்கும் பதில்.

ஆனால், இதற்கு இஸ்லாம் என்ன பதில் சொல்லும்? இதற்கு அல்லாஹ்விடம் பதில்  உண்டா?

என்ன தம்பி பதிலைக்காணோம்.

உலகில் இயேசுவைத் தவிர, வேறு எந்த இறைத்தூதரையாவது அல்லாஹ் இப்படி விசேஷித்த முறையில் பிறக்கச் செய்தாரா?

அப்துல்லாஹ்: இல்லை...

உமர்: அப்படியானால், இயேசுவை மட்டும் ஏன் இப்படி தம்முடைய ஆவியைக் கொண்டு, ஒரு தூதனை அனுப்பி, அல்லாஹ் அற்புதமான முறையில் கருவை உருவாக்கினார்?  அல்லாஹ்வை நிர்பந்தப்படுத்தியது எது?

அப்துல்லாஹ்:. . . .

உமர்: உன்னால் மட்டுமல்ல தம்பி, உலகில் எந்த ஒரு இஸ்லாமிய அறிஞனாலும், இதற்கு பதில் சொல்லமுடியாது.

முஸ்லிம்கள் "அல்லாஹ் சும்மா செய்தார் என்றோ, இதற்கான காரணம் அவருக்கு மட்டுமே தெரியும் என்றோ" சொல்லிக்கொள்ளலாம். இந்த பதிலைத் தவிர வேறு பதில் முஸ்லிம்களால் கூறமுடியாது.

ஆனால், இதற்கு கிறிஸ்தவமும், பைபிளும், சுலபமாக பதில் சொல்லிவிடும். இயேசு ஆதியிலிருந்து இருந்தவர், ஆபிரகாமுக்கு முன் இருந்தவர், எருசலேம் தேவாலயத்தை விட பெரியவர், சாலொமோனை விட பெரியவர், அவர் சாவாமை உள்ளவர், இருந்தவர், இருக்கிறவர், வரப்போகிறவர், நம்மை நியாயம் தீர்க்கப்போகிறவர் அவரே. எனவே, இப்படிப்பட்டவர் உவ்வுலகில் ஏழ்மை கோலம் பூண்டு வந்தார் ஆனால் அற்புதமாக வந்தார்.

தம்பி, இனிமேல் கிறிஸ்துவின் பிறப்பு பற்றி என்னிடம் கேள்விகள் கேட்கமாட்டாய் என்று நினைக்கிறேன்.

[தமிழ் நாட்டு முஸ்லிம்களுக்கு ஒரு சவால்: இயேசு ஒரு நபி மட்டுமே என்று முஸ்லிம்களாகிய நீங்கள் நம்புகிறீர்கள். குர்ஆன் சொல்வது எல்லாம் உண்மை என்று நம்புகிறீர்கள். அப்படியானால், ஏன் அல்லாஹ் இயேசு என்ற ஒரு நபியை இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையில் பிறக்கச் செய்தார் என்று உங்களால் பதில் சொல்லமுடியுமா? அல்லாஹ் அனுப்பிய எந்த ஒரு நபிக்கும் இல்லாத சிறப்பு இந்த ஒரு நபிக்கு மட்டும் அல்லாஹ் கொடுக்க காரணம் என்ன?  இயேசு செய்த அற்புதங்கள் பற்றி கேள்வி கேட்கப்படவில்லை, இயேசு ஏன் அற்புதமாக பிறந்தார் என்பது தான் கேள்வி. இயேசுவின் பிறப்பு விஷயத்தில் அல்லாஹ் ஏன் இயற்கை விதியை புறக்கணித்தார்? இப்படிச் செய்ய அல்லாஹ்வை நிர்பந்தித்தது யார்? முஸ்லிம்களால் இதற்கு பதில் சொல்லமுடியுமா?]

அப்துல்லாஹ்: அண்ணே, நான் எங்கள் இஸ்லாமிய அறிஞர்களிடம் கேட்டு உங்களுக்கு பதில் சொல்கிறேன்.

உமர்: நல்லது தம்பி. நீயும் சிந்தித்துப்பார்.  வெறுமனே தினமும் ஐந்து வேளை குனிந்து உட்கார்ந்து எழுந்தோமானால் அந்த நாளின் கடமை முடிந்துவிட்டது என்ற கண்ணோட்டத்தில் வாழாமல், கொஞ்சம் சிந்தித்துப் பார். ஏன் எப்படி என்ற கேள்விகளை கேட்டுப்பார், அப்போது உனக்கு உண்மை புரியும். கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் அப்போது கண்டடைவீர்கள். 

தம்பி உனக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.

தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். (லூக்கா 2:10,11)



செவ்வாய், 17 டிசம்பர், 2013

இஸ்லாமின் அரச குடும்பம் - பாகம் 3: குர்ஆனில் தெரித்த இரத்தம் (உஸ்மானும் இஸ்லாமிய அரச குடும்பமும்)

இஸ்லாமின் அரச குடும்பம்

ஆசிரியர்: சைலஸ்

பாகம் 3: குர்ஆனில் தெரித்த இரத்தம்

(உஸ்மானும் இஸ்லாமிய அரச குடும்பமும்)

ஸஹீஹ் புகாரி 650. உம்மு தர்தா(ரலி) அறிவித்தார். 

அபூ தர்தா கோபமாக என்னிடம் வந்தார்கள். நீங்கள் கோபமாக இருக்கக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி(ஸல்) அவர்களின் சமூகம் கூட்டாகத் தொழுகிறார்கள் என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களிடம் நான் காணவில்லை!' எனக் கூறினார்கள்.

(இந்த நிகழ்ச்சி அபூ தர்தாவின் கடைசி காலத்தில் நடந்தது, மேலும் உஸ்மான் ஆட்சியின் போது நடந்தது) 

ஸஹீஹ் புகாரி 3655. இப்னு உமர்(ரலி) கூறினார். 

நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் மக்களிடையே சிறந்தவர்கள் இன்னார், இன்னார் என்று மதிப்பிட்டு வந்தோம். (முதலில்) அபூ பக்ர்(ரலி) அவர்களைச் சிறந்தவராக மதிப்பிட்டோம். பிறகு உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களையும் பிறகு உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களையும் சிறந்தவர்களாக மதிப்பிட்டு வந்தோம். 

 ஸஹீஹ் புகாரி 3700. அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். 

உமர் இப்னு கத்தாப்(ரலி) கொலை செய்யப்படுவதற்குச் சில நாள்களுக்கு முன் மதீனாவில் அவர்களை பார்த்தேன். . . . . இப்படி அவர்கள் சொல்லி நான்கு நாள்கள் கூட சென்றிருக்காது. அதற்குள் (பிச்சுவாக் கத்தியால்) உமர்(ரலி) குத்தப்பட்டு வட்டார்கள். 

உமர்(ரலி) குத்தப்பட்ட நாளில் அதிகாலை(த் தொழுகைக்காக) நான் (தொழுகை அணியில்) நின்று கொண்டிருக்கிறேன். எனக்கும் உமா(ரலி) அவர்களுக்கும் இடையில் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களைத் தவிர வேறு எவரும் இருக்கவில்லை. 

. . . (அங்கிருந்த ஆண்கள் உமர்(ரலி) அவர்களை நோக்கி), 'இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! தங்களுக்கு ஒரு பிரதிநிதியை அறிவித்து, இறுதி உபதேசம் செய்யுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எவரைக் குறித்து திருப்தியடைந்த நிலையில் இறந்தார்களோ அந்தச் சிலர் அல்லது அந்தக் குழுவினர். தாம் இந்த (ஆட்சித் தலைமை) விஷயத்தில் (முடிவு செய்ய) வேறெவரை விடவும் மிகத் தகுதி படைத்தவர்களாக எனக்குத் தெரிகிறார்கள்." என்று கூறிவிட்டு, அலீ(ரலி), உஸ்மான்(ரலி), ஸுபைர்(பின் அவ்வாம் (ரலி), தல்ஹா(ரலி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) ஆகியோரின் பெயர்களையும் அப்போது குறிப்பிட்டார்கள். மேலும், உமர்(ரலி), 'உமரின் மகன் அப்துல்லாஹ்வும் உங்களுடன் இருப்பார். ஆனால், ஆட்சி அதிகாரத்தில் அவருக்கு எந்தப் பங்குமீல்லை இதை மகன் அப்துல்லாஹ்வூக்கு ஆறுதல் போன்று கூறினார்கள். 

. . . .

(கத்திக்குத்துக்கு உள்ளாம் மூன்று நாள்களுக்குப் பிறகு) உமர்(ரலி) இறந்துவிட்டார்கள். . . . அவர்களை அடக்கம் செய்து முடித்தபோது அந்த (ஆறு பேர் கொண்ட) ஆலோசனைக் குழுவினர் (அடுத்த ஆட்சித் தலைவர் யார் என்று தீர்மானிப்பதற்காக ஓரிடத்தில்) குழுமினர். அப்போது, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள், '(கருத்து வேறுபாட்டைக் குறைப்பதற்காக, ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும்) உங்களின் உரிமையை உங்களில் மூன்று பேர்களிடம் ஒப்படையுங்கள்" என்று கூறினார்கள். அப்போது ஸுபைர்(ரலி), 'என்னுடைய அதிகாரத்தை அலீ அவர்களுக்கு (உரியதாக) நான் ஆக்கிவிட்டேன்" என்று கூறினார்கள். பிறகு தல்ஹழ(ரலி), 'என்னுடைய அதிகாரத்தை நான் உஸ்மான் அவர்களுக்கு (உரியதாக) ஆக்கி விட்டேன்" என்ற கூறினார்கள். பிறகு ஸஅத்(ரலி), 'என்னுடைய அதிகாரத்தை நான் அப்தூ ரஹ்மான் பின்அ வ்ஃப் அவர்களுக்கு (உரியதாக) ஆக்கிவிட்டேன்" என்று கூறினார்கள். அப்போது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) (அலீ ரலி- அவர்களையும் உஸ்மான்- ரலி- அவர்களையும் நோக்கி), 'உங்கள் இருவரில் இந்த அதிகாரத்திலிருந்து விலகிக் கொள்(ள முன்வரு)கிறவரிடம் இந்தப் பொறுப்பை நாம் ஒப்படைப்போம்.

அல்லாஹ்வும், இஸ்லாமும் அவரின் மீது (கண்காணிப்பாளர்களாக) உள்ளனர். உங்களில் சிறந்தவர் யாரென (அவரவர் மனத்திற்குள்) சிந்தித்துக் கொள்ள வேண்டும்" என்று கூறினார்கள். அப்போது இருமூத்தவர்(களான உஸ்மான்(ரலி) அவர்களும், அலீ(ரலி) அவர்)களும் மெளனமாக இருந்தார்கள். அப்போது, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), 'நீங்கள் (ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கும்) அதிகாரத்தை என்னிடம் ஒப்படைக்கிறீர்களா? உங்களில் சிறந்தவரை நான் (தரத்தில்) குறைத்து மதிப்பிடவில்லை யென்பதை அல்லாஹ் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறான்" என்று கூறினார்கள். அதற்கு, அவ்விருவரும் 'ஆம்! (உங்களிடம் அப்பொறுப்பை ஒப்படைக்கிறோம்)" என்றனர். அப்போது அவ்விருவரில் ஒருவரின் ( - அலீ - ரலி அவர்களின்) கையை அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) பிடித்துக் கொண்டு 'உங்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (நெருங்கிய) உறவுமுறை இருக்கிறது. மேலும், இஸ்லாத்தில் உங்களுக்கு நீங்களே அறிந்துள்ள சிறப்பும் உண்டு. அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறான். உங்களை நான் ஆட்சித் தலைவராக நியமனம் செய்தால் (குடிமக்களிடத்தில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்வீர்கள். உஸ்மான் அவர்களை நான் ஆட்சித் தலைவராக நியமனம் செய்தால் அவருக்கு செவிமடுத்து, கட்டுப்பட்டு நடப்பீர்கள்" என்று கூறினார்கள். பிறகு இன்னொருவரிடம் ( உஸ்மான் - ரலி - அவர்களிடம்) தனியே வந்து அலீ(ரலி) அவர்களிடம் கூறியதைப் போன்றே (அவர்களிடமும்) வாக்குறுதி வாங்கிய பின், 'உஸ்மான் அவர்களே! தங்களின் கையைத் தாருங்கள்" என்று கூறி (உஸ்மான் - ரலி - அவர்களின் கையைப் பிடித்து) அவர்களுக்கு பைஅத் (விசுவாசப் பிரமாணம்) செய்து கொடுத்தார்கள். அப்போது அலீ(ரலி) அவர்களும் உஸ்மான்(ரலி) அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். மேலும், அந்நாட்டவரும் (மதீனா வாசிகளும்) வந்து அவர்களிடம் பைஅத் செய்து கொடுத்தார்கள். 

ஸஹீஹ் புகாரி 4024. . . . . 

என ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார். 

ஸயீத் இப்னு முஸய்யப்(ரலி) கூறினார் 

முதல் குழப்பமான உஸ்மான்(ரலி) அவர்களின் கொலை நடைபெற்றது. அது பத்ருப்போரில் பங்கெடுத்தவர்களில் ஒருவரையும்விட்டு வைக்கவில்லை. பிறகு இரண்டாம் குழப்பமான 'ஹர்ரா போர்' நடைபெற்றது. அது ஹுதைபிய்யா உடன் படிக்கையில் பங்கு கொண்ட மூன்றாவது (குழப்பம்) நடைபெற்றது. மக்களுக்கு ஆற்றல் இருந்தும் (அந்தக் குழப்பம்) விலகவே இல்லை.

சிந்தனைக்கு விருந்து:

கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; .. . .. (மத்தேயு 5:21,22)

இதன் காரணமாகவே, "நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். . . . .. (குர்-ஆன் 5:32)

ஸஹீஹ் புகாரி 4590. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார். 

இது (திருக்குர்ஆன் 04:93 வது வசனம், இராக்கைச் சேர்ந்த) கூஃபாவாசிகள் (அதன் சட்டம் மாற்றப்பட்டுவிட்டதா இல்லையா என்பது தொடர்பாகக்) கருத்து வேறுபாடு கொண்டிருந்த வசனமாகும். நான் இந்த வசனம் குறித்துக் கேட்பதற்காக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் சென்று அதைப்பற்றிக் கேட்டேன். அவர்கள், 'ஓர் இறைநம்பிக்கையாளரை வேண்டுமென்றே கொலை செய்கிறவனுக்குரிய தண்டனை நரகமேயாகும்' எனும் இந்த (திருக்குர்ஆன் 04:93 வது) வசனம் அருளப்பட்டது. இதுதான் (இறைநம்பிக்கையாளரைக் கொலை செய்யும் குற்றம் தொடர்பாக) இறங்கிய கடைசி வசனமாகும்; இதை எதுவும் மாற்றிவிடவில்லை' என்று கூறினார்கள். 

முக்கிய நபர்கள்:

உஸ்மான் (உத்மான்): இஸ்லாமை தழுவியவர்களில் உஸ்மான் நான்காவது நபர் ஆவார். இவர் முஹம்மதுவின் நெருங்கிய நண்பராவார். மேலும் இவர் உம்மயத் என்ற சிறப்புமிக்க வம்சத்தில் வந்தவராவார். மக்காவின் சுற்று வட்டாரங்களில் வாழ்ந்த மக்களில் இவர் சிறப்புமிக்க வெற்றியுள்ள வாழ்க்கை வாழ்ந்தவராவார். இவர் ஒரு ஜமிந்தார் என்றுச் சொல்லக்கூடிய நிலையில் வாழ்ந்தார். இவர் முஹம்மதுவின் மகள் "ருகையா"வை திருமணம் செய்திருந்தார். ருகையா அவர்கள் மரித்த பிறகு, முஹம்மதுவின் இன்னொரு மகள் "உம் குள்தும்"ஐ மணந்தார். கடைசியாக, உஸ்மான் மூன்றாவது "கலிஃபா" ஆனார் (இஸ்லாமிய தலைவரானார்). முதல் நான்கு கலிஃபாக்களை "நேர் வழி காட்டப்பட்ட(Rightly-Guided)" கலிஃபாக்கள் என்று அழைப்பார்கள்.

அலி: இவரைப் பற்றிய குறிப்பை அறிய இரண்டாம் பாகத்தை பார்க்கவும்.

ஜுபைர்: இவரைப் பற்றிய குறிப்பை அறிய இரண்டாம் பாகத்தை பார்க்கவும்.

தல்ஹா: இவர் முஹம்மதுவின் நெருங்கிய நண்பராகவும், இஸ்லாமிய சமுதாயத்தில் ஒரு முக்கிய நபராகவும், தலைவராகவும் இருந்தார். இஸ்லாமிய முக்கிய தலைவர்களில் முதல் 10 நபர்களில் இவரும் ஒருவர் என்று சில ஹதீஸ்கள் கூறுகின்றன.

முஅவியாஹ்: இவர் அபூ சுஃப்யானின் மகனாவார். அபூ சுஃப்யான் ஒரு காலத்தில் முஹம்மதுவின் தீவிர எதிரியாக இருந்தவர், தற்போது (முஹம்மது மரித்தபிறகு) இவர் சீரியாவின் ஆளுநனராக இருக்கிறார்.

பின்னணி:

உமர் அவர்கள் மரண படுக்கையில் இருக்கிறார்கள் (இவரால் ஏமாற்றப்பட்ட ஒரு அடிமையினால் இவர் கத்தியால் குத்தப்பட்டார் என்று சொல்லப்படுகின்றது). இஸ்லாமிய சமுதாயத்தின் முக்கிய தலைவர்களை உமர் சந்தித்து, அடுத்த தலைவர் (கலிஃபா)  யார் என்ற முடிவை எடுக்கவுள்ளார். ஏன் மற்றும் எப்படி உஸ்மான்  அவர்கள் அடுத்த கலிஃபாவாக தெரிவு செய்யப்பட்டார் என்பதற்கு பலவகையான விவரங்களை இஸ்லாமிய நூல்கள் தருகின்றது. மேலும் இந்த தெரிவு செய்யும் குழுவானது ஒருமனதாக உஸ்மானை அடுத்த தலைவராக தெரிவு செய்யவில்லை. இருந்த போதிலும் கடைசியாக உஸ்மான் அடுத்த தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.  காலங்கள் செல்லச்செல்ல, உஸ்மானின் தலைமைத்துவத்தை கேள்விகேட்கவேண்டிய நிலை இஸ்லாமியர்கள் மத்தியிலே ஏற்பட்டது. அனேக முஸ்லிம்களுக்கு  வாழ்க்கை மிகவும் கடினமானதாக மாறியிருந்தது. உஸ்மானுக்கு எதிராக அனேக குற்றச்சாட்டுகள் இஸ்லாமிய சமுதாயத்தில் வைக்கப்பட்டது. அதாவது உஸ்மான் தன் சொந்த இனத்தவருக்கு தனிச்சலுகை தருகின்றார், பணத்தை சரியாக கையாளவில்லை மேலும் இவரது ஆட்சியில் ஊழல் அதிகமாகிவிட்டது என்றும் அனேக குற்றச்சாட்டுகள் இவருக்கு எதிராக எழும்பின. இதனால் உஸ்மானின் சிறப்புக்கள் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டது. கடைசியாக, மக்கள் ஆயுதங்களை ஏந்திக்கொண்டு இவருக்கு எதிராக எழும்ப ஆரம்பித்தனர். 

எகிப்து , குஃபா மற்றும் பஸ்ரா நகரங்களிலிருந்து மூன்று குழுவாக மக்கள் உஸ்மானுக்கு எதிராக மதினாவை நோக்கி புறப்பட்டனர். உஸ்மான் தத்து எடுத்த மகன் கூட இவருக்கு எதிராக எழும்பினான். உஸ்மானுக்கு எதிராக எழும்பிய இந்த மக்களைப் பற்றி அனேக வகையான விவரங்களை இஸ்லாமிய நூல்கள் தருகின்றன. ஆனால், நாம் மிகவும் ஆழமாகச் செல்லாமல், பொதுவான விஷயங்களை மட்டுமே இங்கே அலசுகிறோம். முஸ்லிம்களுடைய மனதில் ஒட்டியிருந்த தீய எண்ணங்கள் சிறிது சிறிதாக வெளியே தெரிய ஆரம்பித்தது, அது ஆணிவேர் வரை சென்று மரம் முழுவதும் பரவி அதன் கனிகளின் மூலமாக வெளிப்பட ஆரம்பித்தது. உண்மையான இஸ்லாமின் கனிகளை  மக்கள் சுவைக்க ஆரம்பித்தனர்.

தபரியின் சரித்திரம், வால்யூம் 15, " கலிஃபத்துவத்தின் ஆரம்பகால தடங்கல்கள்" என்ற உபதலைப்பிலிருந்து சில வரிகள்: [1]

இந்த ஆண்டு (654), உஸ்மான் இப்னு அஃப்பான்அவர்களை எதிர்த்த அனைவரும் ஒருவருக்கு ஒருவர் கடிதம் எழுதிக்கொண்டனர்.  உஸ்மானுக்கு எதிராக அவர்கள் ஒன்று கூடி, அனேக சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பற்றி உஸ்மானோடு நேரடியாக பேசவேண்டும் என்று திட்டமிட்டனர் (பக்கம் 131).

அனேக முஸ்லிம்கள் அடங்கிய ஒரு குழு, உஸ்மானின் செயல்கள் பற்றி பரிசீலனை செய்ய ஒன்று கூடியது.  இந்த குழு ஒரு தூதனை உஸ்மானிடம் அனுப்பி பேசவேண்டும் என்று முடிவு செய்தது. அதாவது உஸ்மான் புரிந்த சர்ச்சைக்குரிய செயல்கள் பற்றி அவரிடம் பேச முடிவு செய்தது.(பக்கங்கள் 135 மற்றும் 136)

(உஸ்மான் அவர்களிடம் அலி  கீழ்கண்டவாறு பேசுகிறார்)

அலி கூறினார், "நான் உங்களிடம் சொல்ல விரும்புவது என்னவென்றால், உமர் அவர்கள் யார் யாரையெல்லாம் பதவியில் அமர்த்தினாரோ, அவர்களை கவனமாக அவர் கண்காணித்துக்கொண்டு இருந்தார். யாராவது அவரைப் பற்றி ஒரு தவறான வார்த்தை பேசினாலும் சரி, அது உமரின் காதுக்கு எட்டும் போது அவர்களை உமர் சாட்டையால் அடிப்பித்து, தீவிரமாக தண்டிப்பார். ஆனால், இப்படி நீங்கள் (உஸ்மான்) செய்யவில்லை. நீங்கள் பலவீனமானவராகிவிட்டீர்கள், உங்கள் உறவினர்கள் எந்த தவறு செய்தாலும், அவைகளை பார்த்தும் பார்க்காதது போல இருந்துவிட்டீர்கள்". இதற்கு உஸ்மான், "அவர்கள் உங்களுக்கும் உறவினர்கள் தானே" என்று மறுமொழி கொடுத்தார்.  உடனே அலி அவர்கள் "ஆம், உண்மையாகவே அவர்கள் எனக்கும் மிகவும் நெருங்கிய உறவினர்களே, ஆனால், மற்றவர்கள் அவர்களை விட நல்லவிதமான நடந்துக்கொள்கிறார்கள் அல்லவா?" என்று கூறினார். மறுபடியும் உஸ்மான் இவ்விதமாக கூறினார், "உங்களுக்கு தெரியுமா? உமர் அவர்கள் தன் ஆட்சிகாலம் முழுவதும் முஅவியாவை ஆட்சியில் அமரவைத்திருந்தார்கள் அல்லவா? அதே போலத்தானே நானும் செய்தேன்".  உடனே அலி இவ்விதமாக பதில் அளித்தார், "அல்லாஹ்வின் பெயரில் உங்களுக்கு சொல்கிறேன், உமரின் அடிமையாகிய யர்ஃபா என்பவர் உமருக்கு பயப்படுவதைக் காட்டிலும், முஅவியா அதிகமாக உமருக்கு பயந்திருந்தார் என்று உங்களுக்கு தெரியுமா?". உஸ்மான் "ஆம் எனக்குத் தெரியும்" என்று பதில் அளித்தார். அலி மேலும் இவ்விதமாக கூறினார், "உண்மை என்னவென்றால், முஅவியா உங்களிடமிருந்து அனுமதி பெறாமலேயே பிரச்சனைகளுகான தீர்வுகளை சுயமாக எடுக்கிறார். இதனை நீங்களும் அறிந்திருக்கிறீர்கள். மேலும் முஅவியா மக்களிடம் "இது உஸ்மானின் கட்டளை, இதற்கு யாரும் முரண்படாதீர்கள்" என்றுச் சொல்கிறார்.  இவைகளை உஸ்மானிடம் அலி சொல்லிவிட்டு, அங்கிருந்து கடந்து சென்றுவிட்டார். உஸ்மானும் தன்னுடைய நிலைக்கு திரும்பிவிட்டார். (பக்கங்கள் 142, 143)

எகிப்தியர்களை பொருத்தமட்டில், அடுத்த கலிஃபாவாக "அலி" வரவேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால், பஸ்ராவின் மக்கள் "தல்ஹா" கலிஃபாவாக வரவேண்டும் என்றும், குஃபா மக்கள் "அல் ஜுபைர்" கலிஃபாவாக பதவி ஏற்கவேண்டும் என்று விரும்பினார்கள். இவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தங்கள் இடத்தை விட்டு மதினாவை நோக்கி புறப்பட்டார்கள்.  இந்த மக்கள் பலவகையான எண்ணங்களோடு புறப்பட்டார்கள். ஒன்று மட்டும் தெளிவாக தெரிகின்றது அது என்னவென்றால், ஒரு குழுமட்டுமே வெற்றிப்பெறும், மீதமுள்ள இரண்டு குழுக்கள் தோல்வி அடையும் (பக்கம் 160).

இந்த புரட்சிக்காரர்கள் தங்கள் தளங்களை அடைந்தவுடன்,  மதினாவை சுற்றிவளைத்து அதனை தாக்க தயாராகிவிட்டனர். மதினா மக்களின் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். ஆச்சரியப்படும் விதமாக, "அல்லாஹு அக்பர்" என்று ஒருமித்து கோஷமிட்டு, மதினா பட்டணம் முழுவதையும் கலங்கடித்தனர். அலி, தல்ஹா மற்றும் அல் ஜுபைர் மூலமாக அமைக்கப்பட்ட பாளைய கூடாரங்களை இவர்கள் ஆக்கிரமித்துக்கொண்டு, உஸ்மானை சுற்றி வளைத்தனர். "யார் எங்களோடு கைகோர்த்து நிறபார்களோ, உஸ்மானை புறக்கணிப்பார்களோ, அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்" என்று கோஷமிட்டனர்.(பக்கம் 162)

இந்த அதிருப்தியாளர்கள் ஒன்று கூடி, மசூதிகளில் உள்ள மக்கள் வெளியே வரும்வரை அவர்கள் மீது கற்களை வீசிக்கொண்டு இருந்தார்கள். மசூதியில் பிரசங்க  பீடத்தில் இருந்த உஸ்மான் மயக்க நிலையை அடையும் வரை அவர் மீதும் கற்களை வீசினர். உஸ்மான் மயக்க நிலையில் தன்னுடைய வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டார்.  இப்போது எகிப்திய அதிருப்தியாளர்கள்,  மதினா மக்களில் வெறும் மூன்று நபர்களின் ஆதரவை எதிர்ப்பார்த்தனர், இம்மூவரோடு கடிதத்தொடர்பை இவர்கள் வைத்துக்கொண்டு இருந்தார்கள். இம்மூவரின் பெயர்கள்: முஹம்மது பி. அபூபக்கர் (அபூ பக்கரின் மகன்), முஹம்மது பி. அபீ உதைஃபா, மற்றும் அம்மர் பி. யாசிர் என்பவைகளாகும். மதினாவின் மக்களில் ஒரு குழுவானது தங்கள் தலைவருக்காக மரிக்கவும் தயாராக இருந்தது. இவர்களின் பெயர்களாவன, சைத் மாலிக், அபூ ஹுரைரா, ஜையத் பி. தாபித் மற்றும் அல் ஹசேன் பி அலி (அலியின் மகன்) என்பதாகும். இவர்கள் தன் விட்டைவிட்டு வெளியேறும்படி  உஸ்மான கண்டிப்பாய் உத்தரவிட்டார், உடனே இவர்கள் அவரை விட்டுச் சென்றுவிட்டார்கள். உஸ்மான் பிரசங்க பீடத்திலிருந்து மயங்கி விழுந்துவிட்ட பிறகு, இவரை வீட்டில் காண அலி, தல்ஹா மற்றும் அல்ஜுபைர் சென்றனர்.  உஸ்மானிடம் தங்கள் வருத்தத்தை தெரிவித்துக்கொண்டு, தங்கள்  வீட்டிற்கு திரும்பி சென்றுவிட்டனர் (பக்கங்கள் 165, 166)

இந்த அதிருப்தியாளர்கள் உஸ்மானிடம் வந்து இவ்விதமாக கூறினார்கள், "குர்ஆனை கொண்டுவரும் படி சொல்லுங்கள்?". உஸ்மான் கட்டளையிட குர்ஆன் கொண்டு வரப்பட்டது.  பத்தாவது அத்தியாயத்தை எடுத்து படியுங்கள் என்று அவர்கள் கூற உஸ்மான் பத்தாவது அத்தியாயத்தை படிக்க ஆரம்பித்தார்.  கீழ்கண்ட வசனம் வரும்வரை அவர்கள் காத்திருந்தனர், அதன் பிறகு நிறுத்தச் சொன்னார்கள்:

"(நபியே!) நீர் கூறும்: "அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த ஆகாரங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள்; (இப்படித் தீர்மானித்துக் கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க்கற்பனை செய்கின்றீர்களா?"

அவர்கள் உஸ்மானிடம் இவ்விதமாக கேட்டனர்: "சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள்; (இப்படித் தீர்மானித்துக் கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க்கற்பனை செய்கின்றீர்களா?".

இதற்கு உஸ்மான் "இந்த வசனம் இன்ன இன்ன காரணத்திற்காக இறக்கப்பட்டது என்று அவர்களுக்கு விவரிக்க ஆரம்பித்தார்". ...  அவர்கள் உஸ்மானோடு அந்த வசனம் பற்றி தீவிரமாக விவாதித்துக்கொண்டு இருந்தார்கள், ஆனால் உஸ்மானோ "இந்த வசனம் இன்ன இன்ன காரணத்திற்காக இறக்கப்பட்டது" என்று பதில் அளித்துக்கொண்டு இருந்தார். பக்கம் (167)

அதன் பிறகு, இந்த எகிப்திய அதிருப்தியாளர்களின் பிரதிநிதிகள் திருப்தியோடு  எகிப்திற்கு திரும்பி சென்றுக்கொண்டு இருந்தார்கள். ஆனால், ஒரு மனிதன் குதிரையில் சென்றுக்கொண்டு இருந்தான். அவன் இந்த குழுவை தாண்டி சென்றுக்கொண்டு இருந்தான்.  சிறிது நேரம் கழித்து இவன் அவர்களை மறுபடியும் கடந்துச் சென்றான். இதனைக் கண்ட இவர்கள், அவனை அழைத்து, நீ என்ன செய்கிறாய்? என்று கேட்டார்கள். நீ எங்களிடம் ஏதோ ஒன்றை மறைக்கிறாய் என்று அவனிடம் தேட ஆரம்பித்தார்கள். அவனிடம் ஒரு கடிதம் காணப்பட்டது. அந்த கடிதத்தில் உஸ்மானின் கையெழுத்தும், முத்திரையும் காணப்பட்டது. இது எகிப்தின் ஆளுநருக்கு எழுதப்பட்டு இருந்தது. இந்த கடிதத்தில் "அவர்களை சிலுவையில் அறையுங்கள் அல்லது கொலை செய்துவிடுங்கள் அல்லது கை கால்களை வெட்டிவிடுங்கள்" என்று எழுதப்பட்டு இருந்தது. ஆகையால், இந்த எகிப்திய பிரதிநிதிகள் மறுபடியும் மதினாவிற்கு திரும்பினர்.(பக்கங்கள் 168, 169)

ஒட்டகத்தில் சென்றுக்கொண்டு இருந்த, உஸ்மானின் ஒரு அடிமையிடம் கண்டுபிடிக்கப்பட்ட கடிதத்தை படித்ததும், இந்த எகிப்திய பிரதிநிதிகள் மதினாவிற்கு உஸ்மானிடம் திரும்பி வந்தனர். அந்த கடிதத்தில், இவர்களில் சிலரை கொன்றுவிடும்படி, சிலரை சிலுவையில் அறையும்படி எகிப்திய ஆளுநருக்கு எழுதியிருந்தது. அவர்கள் உஸ்மானிடம் வந்து " இவன் உங்களுடைய அடிமையாவான்" என்று கூறினர். இதற்கு உஸ்மான், "என்னுடைய அனுமதி இல்லாமல் இவன் சென்றுள்ளான்" என்று பதில் அளித்தார். அவர்கள் மறுபடியும் உஸ்மானிடம், "இது உங்கள் ஒட்டகம் தானே?" என்று கேட்டனர்.  இதற்கு உஸ்மான், "இவன் என்னுடைய அனுமதியின்றி என் வீட்டிலிருந்து எடுத்துச் சென்றான்" என்று பதில் சொன்னார். மறுபடியும் அவர்கள் "இது உங்களுடைய அடையாள முத்திரை" என்றனர், அதற்கு உஸ்மான் "இது என்னுடையது அல்ல, இது போலியான முத்திரை" என்றார் (பக்கம் 185).

உஸ்மான் தனக்கு நேரிட்ட கொடுமைகளைக் கண்டு, மேலும் தனக்கு எதிராக வந்த மக்கள் திரளைக் கண்டு, சிரியாவில் உள்ள முஅவியா பி. அபீ சுஃப்யான் அவர்களுக்கு இவ்விதமாக எழுதினார்: " . . .  மதினாவின் மக்கள் இறைநம்பிக்கை இல்லாதவர்களாக ஆகிவிட்டார்கள். அவர்கள் கீழ்படிதலை விட்டுவிட்டார்கள், ஆதரவு கொடுப்பதாக அவர்கள் செய்த வாக்கை புறக்கணித்து விட்டார்கள்.  ஆகையால், சிரியாவில் உள்ள இராணுவத்தை என்னிடம் அனுப்பவும். உங்களிடமிருக்கும் ஒவ்வொரு நல்ல ஒட்டகத்திலும், வலுவிழந்த ஒட்டகத்திலும் இராணுவத்தை அனுப்பவும்". இந்த கடிதத்தை முஅவியா பெற்ற பிறகு, அதன் படி செய்ய தாமதம் செய்தார். ஏனென்றால், இறைத்தூதரின் தோழராகிய உஸ்மானுக்கு வெளிப்படையாக முரண்பட இவர் விரும்பவில்லை. அதிருப்தியாளர்களின் எண்ணமும் தன் எண்ணமும் ஒன்று தான் என்பதை முஅவியா அறிந்திருந்தார் (பக்கம் 185).

அதன் பிறகு, உஸ்மானுக்கு எதிராக 600 எகிப்திய மக்கள் மதினாவை நோக்கி வந்தார்கள். இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்தவர் "அமர் பி புதல் பி. வர்ஃகா அல் குஜைய்" என்பவராவார்.  இவர் இறைத்தூதரின் தோழராவார். . . . . அவர்கள் உஸ்மானுக்கு எழுதிய கடிதத்தில் இவ்விதமாக எழுதியிருந்தார்கள்: "... அல்லாஹ்வின் பெயரில் இதனை அறிந்துக்கொள்ளுங்கள்,  அதாவது அல்லாஹ்விற்காக நாங்கள் உங்கள் மீது கோபமாக இருக்கிறோம், நாங்கள் அல்லாஹ்வில் திருப்தி அடைகிறோம்.  நீங்கள் நேர்மையோடு, குழப்பமில்லாமல் எங்களிடம் வந்தாலும் சரி, அல்லது உங்கள் தவறை  ஒப்புக்கொள்ளாமல் வந்தாலும் சரி, நாங்கள் எங்கள் தோள்களில் உள்ள வாள்களை கீழே வைப்பதில்லை என்று சத்தியம் செய்கிறோம். இது தான் நாங்கள் உங்களுக்கு சொல்ல விரும்பும் விஷயம் மற்றும் உங்களுக்கு எதிரான முன்வைக்கும் குற்றச்சாட்டுமாகும். உங்களுக்கு எதிராக நாங்கள் செய்யும் இந்த செயல்களை அல்லாஹ் எங்களுக்கு மன்னிப்பானாக. உங்களுக்கு சமாதானம் உண்டாகட்டும். (பக்கங்கள் 186, 187)

தம்மை அவர்கள் கொன்றுவிடுவார்கள் என்று உஸ்மான் பயந்தார். அவர் தன்னுடைய குடும்பத்தினர்களிடமும், தமக்கு அறிவுரை கூறுபவர்களிடமும் வினவினார். "இந்த அதிருப்தியாளர்கள் என்ன செய்தார்கள் என்று பார்த்தீர்களா? இதிலிருந்து விடுபடுவது எப்படி?" என்று அவர்களிடம் உஸ்மான் கேட்டார். அதற்கு அவர்கள் "அலி" அவர்களை அழைத்து பேசுங்கள் என்று அறிவுரை கூறினார்கள்.

அலி அவர்களை வரும் படி உஸ்மான் சொல்லியனுப்பினார், அலியும் வந்து சேர்ந்தார். உஸ்மான் அலி அவர்களிடம் "அபூ ஹசன் அவர்களே, மக்கள் என்ன செய்தார்கள் என்றும், நான் என்ன செய்தேன் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள் என்று எனக்கு பயமாக இருக்கிறது.  என்னை விட்டு சென்றுவிடும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன், அவர்கள் கேட்பதெல்லாம் அவர்களுக்கு செய்வேன், எனக்கு எதிராகவும், மற்றவர்களுக்கு எதிராகவும் அவர்கள் பக்கத்தில் நின்று அவர்களுக்கு நியாயம் செய்வேன். நான் இரத்தம் சிந்த நேரிட்டாலும் சரி, அவர்களுக்கு நியாயம் செய்வேன். . . . இவைகளைக் கேட்டு அலி வெளியே வந்து, மக்களிடம் இப்படியாக கூறினார், "ஓ.. மக்களே, நீங்கள் நீதிவேண்டும் என்று கேட்டீர்கள், இதோ உங்களுக்கு நீதி கிடைத்துள்ளது. . . ". இதற்கு மக்கள் "நாங்கள் இதனை அங்கீகரிக்கிறோம்" என்றுச் சொன்னார்கள். பக்கங்கள் (187, 188).

. . .  உஸ்மான் இவ்விதமாக கூறினார், "எனக்கு அவகாசம் கொடுங்கள், அவர்கள் கேட்கும் காரியங்களை ஒரே நாளில் செய்யமுடியாது, எனக்கு அவகாசம் கிடைத்தால், நான் எல்லாவற்றையும் சரி செய்கிறேன்". இதற்கு அலி, "இதர இடங்களின் காரியங்களுக்கு நீங்கள் அவகாசம் எடுத்துக்கொள்ளுங்கள், உங்கள் கட்டளைகள் அந்த இடங்களுக்குச் சென்றடைய அதிக நாட்கள் ஆகும், ஆனால் மதினாவின் காரியங்களுக்காக அவகாசம் தரமுடியாது" என்று பதில் அளித்தார். உடனே உஸ்மான் அவர்கள், "சரி, மதினாவின் காரியங்களை சரி செய்வதற்கு எனக்கு மூன்று நாட்கள் அவகாசம் தாருங்கள்" என்று கேட்டார். இதற்கு அலி ஒப்புதல் அளித்தார். அதன் பிறகு, அலி வெளியே சென்று மக்களுக்கு இவைகளை தெரிவித்தார். அலி அவர்கள் அந்த மக்களுக்கும், உஸ்மானுக்கும் இடையே ஒரு உடன்படிக்கையை உண்டாக்கினார்கள், அதாவது, மூன்று நாட்கள் அவகாசம் தரப்படுகின்றது, இதற்குள் எல்லா வகையான அநீதி காரியங்களை சரி செய்து, மற்றும் இந்த மக்கள் வெறுக்கும் ஆளுநர்களை பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்பதாகும். (பக்கம் 188).

ஆனால், உஸ்மான் அவர்கள் போர் செய்வதற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டார்கள், ஆயுதங்களை சேகரித்துக் கொண்டார்கள்.  போரில் கிடைத்த பொருட்களில், அடிமைகளில் ஐந்தில் ஒரு பாகம் கலிஃபாவிற்கு தரப்படும்.  இதன் மூலம் கிடைத்த அடிமைகளை சேகரித்துக்கொண்டு, உஸ்மான் மிகப்பெரிய இராணுவத்தை தயார் படுத்திக்கொண்டார். மூன்று நாட்கள் கடந்துவிட்டது, இன்னும் உஸ்லாம் அவர்கள் தான் ஒப்புக்கொண்ட காரியங்களை செய்யவில்லை, அதாவது மக்களுக்கு வெறுப்புண்டாக்கிய எந்த காரியத்தையும் அவர் ஒழித்துக்கட்டவில்லை, அவர்கள் வெறுத்த ஆளுநர்களை நீக்கவில்லை. இதனால், மக்கள் மறுபடியும் இவருக்கு எதிராக புரட்சியில் இறங்கினார்கள். (பக்கம் 189).

இதுவரை நாம் கண்ட விவரங்களின் சுருக்கம்:

இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தில் வாழ்ந்த மக்களுக்கு உஸ்மானுடைய ஆட்சியில் மகிழ்ச்சியில்லை. இந்த சாம்ராஜ்ஜியங்களில் உள்ள மக்கள் ஒன்று கூடி, உஸ்மானுக்கு எதிராக மதினாவை நோக்கி புறப்பட்டார்கள். உஸ்மான் தனக்கு கீழே ஆளுநர்களாக இருக்கும் நபர்களை உதவிக்கு அழைத்தார், ஆனால், யாரும் உதவ முன்வரவில்லை. இந்த அதிருப்தியாளர்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டுமென்று விரும்பி, உஸ்மானை எதிர்த்தார்கள். உஸ்மான் தன்னுடைய செயல்களுக்காக மன்னிப்புக் கோரி அவைகளை சரி செய்துக்கொள்வார் என்று எதிர்ப்பார்த்தார்கள். அவர்களின் கோரிக்கைகளை தாம் நிறைவேற்றுவதாக உஸ்மான் வாக்குறுதி கொடுத்தார், அதிருப்தியாளர்கள் இதனை அங்கீகரித்து நிம்மதியாக நாடு திரும்பினார்கள்.  இந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது, ஒரு மனிதனை சந்தித்தார்கள், அவனிடம் ஒரு கடிதம் இருந்தது. எகிப்து நாட்டு ஆளுநர்களுக்கு இந்த கடிதம் எழுதப்பட்டு இருந்தது. இந்த எதிர்ப்பாளர்களை தண்டிக்கும்படியாகவும், கொல்லும்படியாகவும் அந்த கடிதத்தில் எழுதப்பட்டு இருந்தது.  இந்த முறை இன்னும் அதிக கோபத்தோடு இந்த மக்கள் உஸ்மானை சந்திக்கச் சென்றார்கள்.  உஸ்மான் அலியின் உதவியுடன், தன் தவறுகளை சரி செய்துக்கொள்ள மூன்று நாட்கள் அவகாசம் தேவை என்று கேட்டு பெற்றுக்கொண்டார்.   எனினும் தன் தவறுகளை சரி செய்துக் கொள்ளாமல், தன் வார்த்தையை  காத்துக் கொள்ளாமல், உஸ்மான் ஒரு இராணுவத்தை போருக்காக தயார் படுத்திக்கொண்டார்.  தன்னுடைய இராணுவத்தால் இந்த புரட்சியாளர்களை ஒழித்துக்கட்டிவிடலாம் என்று உஸ்மான் எண்ணிவிட்டார்.  ஆனால்,  அந்த எதிர்ப்பாளர்கள் மறுபடியும் உஸ்மானை நோக்கி வந்தார்கள். 

கடைசி நிமிடங்கள்:

முஹம்மது பி. அபி பக்கர் (அபூபக்கரின் மகன்) 13 பேரோடு உஸ்மானிடம் வந்தார். அவர் உஸ்மானின் தாடியை பிடித்து இழுத்தார், இதனால் அவரது வாய் ஆட்டம்கண்டது. முஹம்மது பி. அபி பக்கர் உஸ்மானிடம் "முஅவியாவும் உங்களுக்கு உதவமுடியாது, இப்னு அமரும் உங்களுக்கு உதவமுடியாது, உங்களுடைய கடிதங்களும் உங்களுக்கு உதவாது" என்று கூறினார்."என் தாடியை விட்டுவிடு, என்னை போகவிடு என் சகோதரரின் மகனே, என் தாடியை விட்டுவிடு" என்று உஸ்மான்  கூறினார். இப்னு அபி பக்கர், தன் கண்களால் வேறு ஒரு நபருக்கு சைகை செய்வதை நான் கண்டேன். அந்த நபர் உஸ்மான் மீது பாய்ந்து, அம்புகள் கொண்ட ஒரு பெரிய இரும்பு கம்பியினால் அவரது தலையில் குத்தினார்…. அவர்கள் ஒன்று சேர்ந்து உஸ்மானை கொன்றுவிட்டனர். (பக்கங்கள் 190, 191).

"முஹம்மது பி. அபி பக்கர்" அவரிடம் சென்றார் மற்றும் அவரது தாடியை இழுத்து பிடித்துக்கொண்டு, இவ்விதமாக கூறினார், "அபூ பக்கர் அவர்கள் எங்களிடம் நடந்துக்கொண்டது போல நீங்கள் எங்களிடம் நடந்துக்கொள்ளவில்லை". அதன் பிறகு அவர் வெளியே சென்றுவிட்டார். கருப்பு மரணம் என்ற பெயர் கொண்ட இன்னொரு மனிதன் உஸ்மானின் அறைக்குள் வந்தான், உஸ்மானின் கழுத்தை நெருக்கிப்பிடித்து அவரை முகத்தில் அறைந்தான். அதன் பிறகு அவன் வெளியே சென்று "அல்லாஹின் பெயரில் ஆணையிட்டுச் சொல்கிறேன், உஸ்மானின் தோண்டையைப் போல மிகவும் மிருதுவான தோண்டையை நான் காணவில்லை" என்று கூறினான். அல்லாஹ்வின் பெயரைக் கொண்டுச் சொல்கிறேன், அவரது கழுத்தை நான் நெருக்கினேன், ஒரு ஜின்னின் ஆவி பிரிவது போல அவரது ஆவி ஆட்டம் கண்டு அவரது உடல் நடுங்கும் வரை நான் அவரை விடவில்லை. அதன் பிறகு அவன் சென்றுவிட்டான்.

ஒரு குறிப்பிட்ட மனிதன் உஸ்மானிடம் சென்றான், அப்போது அவர் குர்-ஆனை தன்னிடம் வைத்திருந்தார். அவர் அப்போது "உனக்கும் எனக்கும் இடையே குர்-ஆன் உள்ளது" என்று கூறினார். அந்த மனிதன் தன் வாளை எடுத்துச் சென்றான், உஸ்மான் தன் கையால் தடுத்தார், அப்போது அவரது கை துண்டிக்கப்பட்டது.  அவரது கை முழுவதுமாக துண்டிக்கப்பட்டதோ அல்லது அதிகமாய காயப்பட்டதோ எனக்குத் தெரியாது. பிறகு அவன் "அல்லாஹ்வின் பெயரில் சொல்கிறேன், குர்-ஆனுக்கு  மேலாகச் சென்ற ஒரே கை இதுவாகத்தான் இருக்கும்" என்றுச் சொன்னான். (பக்கம் 205).

"அமர் பி. அல் ஹமிக்", உஸ்மானின் மீது பாய்ந்து, அவரின் நெஞ்சின் மீது உட்கார்ந்துவிட்டான். உஸ்மானின் உயிர் ஊசலாடிக்கொண்டு இருந்தது.  இவன் அவரை ஒன்பது முறை கத்தியால் குத்தினான்.  அமர் "அல்லாஹ்விற்காக நான் மூன்று முறை அவரை குத்தினேன், எனக்குள் இருந்த கோபத்தின் காரணமாக ஆறு முறை குத்தினேன்" என்று கூறினான் (பக்கம் 220).

வீட்டிற்குள் இருந்த படியே அந்த எதிர்ப்பாளர்கள் "பொக்கிஷ சாலையை(கஜானாவை) பிடியுங்கள், உங்களுக்கு முன்பாக வேறு யாரும் அங்கு செல்லக்கூடாது" என்று கத்தினார்கள்.  அந்த பொதுவான பொக்கிஷ சாலையை பாதுகாத்துக்கொண்டு இருந்த காவலாளிகள், இந்த சத்தத்தை கேட்டவுடன் "ஓடு.. ஓடு… இவர்கள் உலக பொருட்கள் மீது ஆசை கொண்டு வருகிறார்கள், ஓடு" என்று சொல்லிக்கொண்டு ஓடிவிட்டார்கள். அதன் பிறகு அந்த எதிர்ப்பாளர்கள், அங்கு வந்து அனைத்தையும் கொள்ளையிட்டாரள் (பகம் 216).

உஸ்மான் ஆட்சியின் முடிவு:

உஸ்மான் ஆட்சி செய்த சமயத்தில் அவர் குறைஷி இனத்தில் இருந்த முக்கியமான நபர்களை உமர் நடத்தியது போல சரியாக நடத்தவில்லை.  ஆகையால் இவர்கள் இஸ்லாமிய ஆட்சி புரியும் அனைத்து இடங்களுக்கும் சென்றார்கள். இஸ்லாம் ஆட்சி புரிந்த இடங்களில் வாழும் இதர குறைஷி மக்களின் நிலையை இவர்கள் கண்டார்கள். அவர்களுக்கு இஸ்லாமில் எந்த ஒரு சலுகைகளும், அதிகாரங்களும் அளிக்கப்படாமல் இருந்தது.   ஆகையால், குறைஷிகள் ஒரு கூட்டமாக சேர்ந்து விட்டனர்.  குறைஷிகள் அவர்களின் நம்பிக்கையை தட்டி எழுப்பினார்கள், இதன் மூலம் தங்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தார்கள். இதன் பிறகு அவர்கள் இவ்விதமாக கூறிக்கொண்டார்கள், "குறைஷி மக்கள் சக்தி வாய்ந்தவர்கள், நாம் அவர்களின் மத்தியிலே புகழைப் பெறுவோம், நமக்கு முன்னுரிமை இனி கிடைக்கும்படிச் செய்வோம்". இஸ்லாமில் நுழைந்த முதல் தவறு இது தான். சராசரி மக்களின் மத்தியில் உருவான முதன் முதல் முரண்பாடு இது தான்.(பக்கம் 224).

புறாக்களை பறக்கவிட்டு, அவைகளை கற்களால் அடித்து, அதன் மூலம் செல்வங்களை பிரித்துக்கொள்ளும் பழக்கம் மதினாவின் மக்களிடையே பரவியது. இதனை முதன் முதலில் ஒழித்துக்கட்டியவர் உஸ்மான் ஆவார். உஸ்மான் ஒரு ஊழியரை இதற்காக அமர்த்தி, அவர் மூலமாக மக்கள் இப்படிப்பட்ட பழக்கத்தில் ஈடுபடாமல் பார்த்துக்கொண்டார். (பக்கம் 226)

மக்களிடையே குடிப்பழக்கம் தொடங்கியிருந்தது.  உஸ்மான் ஒரு குழுவை உருவாக்கினார். அந்தக் குழு ஊர் முழுவதும் சுற்றித்திரிந்து இப்படிப்பட்ட குடிக்கும் மக்களை கண்டுபிடித்தது. இதன் பிறகு குடிப்பழக்கம் இன்னும் அதிகமாக ஊர் முழுவதும் பரவியது.  மக்களுக்கு வெளிப்படையாக உஸ்மான் எச்சரித்தார், அதாவது அல்லாஹ்வின் சட்டத்தின் படி குடிக்கும் மக்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரித்தார்.  குடிக்கும் போது கண்டுபிடிக்கப்பட்டால் சாட்டையடி தரப்படும் என்ற தண்டனையை மக்களும் ஏற்றுக்கொண்டார்கள். மேலும் சிலர் குடிக்கும் போது கண்டுபிடிக்கப்பட்டு சாட்டையால் தண்டிக்கப்பட்டார்கள். (பக்கம் 226)

சாராம்சம்:

உமர் மரிக்கும் வரையில், மக்கள் இஸ்லாமின் பாரமான சட்டதிட்டங்களால், தாங்கமுடியாத நுகத்தினால் அதிகமாக சோர்ந்து போய் இருந்தனர். இதுமாத்திரமல்ல, உஸ்மான் கலிஃபா ஆனவுடன், முஸ்லிம்கள் உலகத்தின் பல பகுதிகளுக்குச் சென்று அவைகளை ஆக்கிரமித்துக்கொள்ள ஆரம்பித்தனர், மேலும் இவர்களின் கண் உலக ஆசைகளின் பக்கம் சாய்ந்தது.   சிலர் தங்களுக்கு அதிகாரமும், மதிப்பும் வேண்டுமென்பதற்காக இப்படிப்பட்ட முஸ்லிம் தலைவர்களோடு தங்களை இணைத்துக்கொண்டு வாழ்ந்தார்கள்.  தடைசெய்யப்பட்ட பில்லிசூனிய மந்திரங்கள் செய்வது, மதுபானம் குடிப்பது போன்ற பழக்கங்கள் மறுபடியும் மதினாவில் தலை தூக்கியது. ஆரம்பத்தில் சில எதிர்ப்புக்கள் இருந்தாலும், காலப்போக்கில் இது அபரிதமாக வளர ஆரம்பித்தது. ஆனால், அரசராக இருக்கும் உஸ்மான் இப்படிப்பட்டவர்களை கண்டும் காணாதவர் போல இருந்துவிட்டார், அவர்களை கண்டுக்கொள்ளவில்லை. இப்படிப்பட்ட மக்கள் தங்களை கட்டுப்படுத்திக்கொள்ளாமல், தங்கள் இச்சைகளை இன்னும் அதிகமாக பூர்த்தி செய்துக்கொள்ள, தீவிரமாக செயல்பட்டுக்கொண்டு இருந்தார்கள்.  அவர்களுக்கு இப்படிப்பட்ட செயல்கள் இன்னும் அதிகமாக செய்ய ஆர்வம் இருந்தது. உஸ்மான் அவர்களோ தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அதிகமான சலுகைகளைக் கொடுத்தார், மேலும் முக்கியமான பதவிகளை அவர்களுக்கு கொடுத்தார். இவர்களில் சிலர் நம்பிக்கைத் துரோகிகளாக இருந்தார்கள், இன்னும் அதிகார தாகத்திற்காக ஏங்கிக்கொண்டு இருந்தார்கள்.  இவர்கள் அநியாயமாக செயல்பட ஆரம்பித்தார்கள் மற்றும் ஊழல் நிறைந்தவர்களாக மாறினார்கள்.  கடைசியாக, சராசரி மக்களின் கோபமும், பாவ ஆசைகளும் தலைதூக்கியது, 

இவர்கள் உஸ்மானுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தார்கள். உஸ்மானுடைய இந்த பாவமான செயல்களினாலும், பொறுப்பற்ற தனத்தினாலும் மக்கள் அதிகமாக அவதிக்குள் அகப்பட்டார்கள். இதுவரை சகித்துக்கொண்டது போதும் என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டதும், உஸ்மானுக்கு எதிரான போர்க்கொடியை தூக்க ஆரம்பித்தார்கள்.  இது ஒரு புறமிருக்க,  உஸ்மான் இந்த மக்களோடு சமரசம் பேசினார், தன்னுடைய தவறான செயல்களை சரி செய்துக்கொள்வதாக வாக்கு கொடுத்தார், ஆனால், அவர் பொய் சொல்லி மக்களை ஏமாற்றிவிட்டு, அதன் பிறகு அவர்களோடு போர் செய்ய தன்னை தயார்படுத்திக்கொண்டார். உஸ்மானுடைய தொழர்களாகவும், இன மக்களாகவும் இருந்த, அலி, தல்ஹா, ஜுபைர் மற்றும் முஅவியா  இன்னும் இதர மக்கள், தங்கள் கலிஃபாவை காப்பாற்ற பெரிய முயற்சி எடுக்கவில்லை, ஏதோ பெயரளவில் உதவி செய்வது போல பாசாங்கு செய்துவிட்டு கடந்துச் சென்றார்கள்.  இவர்கள் அனைவரும் அறிந்திருந்த விஷயம் என்னவென்றால்,  உஸ்மான் அழிக்கப்பட்டால், தாங்கள் அடுத்ததாக கலிஃபாவாக வரமுடியும் என்பதாகும்.

கேள்விகளும் கருத்துப்பரிமாற்றங்களும்:

இஸ்லாமிய சரித்திரத்தின் ஒவ்வொரு முன்னேற்றத்திலும், இஸ்லாமிய முகம் படிப்படியாக கருக ஆரம்பித்தது. முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு ஒரே ஒரு வம்சத்திற்குள்ளாகவே, இஸ்லாமின் உண்மை கனிகள் பழுக்க ஆரம்பித்ததை காணமுடியும். பாருங்கள்! உண்மையான முஸ்லிம்களின் பரிசுத்த இரத்தம் எப்படி சிந்தப்பட்டது என்று, அதுவும் சிறந்த முஸ்லிம்களாலேயே இந்த காரியம் நடந்தேரியது. இஸ்லாமுடைய தீவிர எதிரிகள் முஸ்லிம்களே! இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்திற்கு என்ன நடந்தது என்று பார்த்தீர்களா? 

முஹம்மதுவின் நெருங்கிய நண்பர்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்துக்கொள்கிறார்கள். தோளோடு தோள் சேர்த்துக் கொண்டு, ஆரம்ப காலத்தில் இஸ்லாமுக்காக போர் புரிந்த இவர்கள், இன்று தங்கள் வாள்களை தோள் கொடுத்து தாங்கிய தன் இஸ்லாமிய தோழனுக்கு எதிராக காட்டுகிறார்கள். இப்போது இஸ்லாமிய சாம் ராஜ்ஜியத்தில் நோய் பற்றிக்கொண்டது. தன் நன்னடத்தை, அரசியல் வலிமை மற்றும் பொருளாதார ஸ்திரத்தை இழந்த இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் தன் நோயை மதினாவை சுற்றியுள்ள இதர இடங்களுக்கு பரப்பிக்கொண்டு இருக்கிறது.  முஹம்மதுவின் மீது நம்பிக்கை வைத்து அவரை பின்பற்றியவர்களில் நான்காவதாக இருப்பவர் இவர் என்று  கருதப்பட்ட "உஸ்மான் கலிஃபாவை", முஹம்மதுவின் நெருங்கிய நண்பரின் மகன் கொன்றான். இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் வலிமை வாய்ந்த பதவி என்று கருதப்படும், கலிஃபா என்ற பதவியை வகித்த "உஸ்மான்" தன் சொந்த வீட்டிலேயே கொலை செய்யப்பட்டார். இஸ்லாமிய சமுதாயம் என்று ஒன்று இருந்ததா என்ற சந்தேகம் வருகின்றது, தேடிப்பார்த்தலும் அது கண்களுக்கு தென்படவில்லை. தன் அன்பான கலிஃபாவை காப்பாற்றாமல் அவருக்கு முதுகை காட்டினது இஸ்லாமிய சமுதாயம்.

இவைகளை சரியான கோணத்தில் நீங்கள் புரிந்துக்கொள்ள இப்போது சொல்லப்போகும் உதாரணத்தைக் கவனியுங்கள்.  இயேசுவின் சீடனாகிய யோவான், மற்றோரு சீடனாகிய பேதுருவிற்கு விரோதமாக சதி செய்து அவரைக் கொன்றால், கிறிஸ்தவத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? குறைந்தபட்சம் இப்படியெல்லாம் நடக்குமென்று உங்களால் கற்பனையாவது செய்யமுடிகின்றதா?

நீங்கள் இப்போது குர்ஆன் ஸூரா 8:63ஐ பற்றி என்ன சொல்வீர்கள்?  முஹம்மதுவின் தோழர்களுக்கு மத்தியிலே அன்பின் பிணைப்பை உண்டாக்குவதற்கு பதிலாக அல்லாஹ் அவர்களை சபித்துவிட்டு, பிரிவினையையும், வெறுப்பையும் உண்டாக்கினார் என்று தோன்றுகிறதல்லவா?

சரி, இப்போது இதன் விளைவுகள் என்ன என்பதை கவனிப்போம்.

1) வெறுப்புணர்வும் கொலையும்:

இஸ்லாமிய சமுதாயத்தின் இதயத்தில்  எவ்வளவு பாவம் புகுந்துவிட்டதென்றால், அவர்கள் தங்களை அடக்கிக்கொள்ளாமல், கொடுமையான வன்முறையிலும் ஈடுபடவும் தயங்கவில்லை.  இஸ்லாமிய தலைவர்கள் (கலிஃபா) கொலை செய்யப்பட்டு சாய்க்கப்பட்டார்கள். இது ஏதோ ஒரு நபர் செய்த கொலையில்லை. முஹம்மதுவின் அனேக தோழர்கள் தங்கள் முந்தைய தொழருக்கு எதிராக புறப்பட்டு அவரை கடுமையாக கொலை செய்கிறார்கள்.

2) இருமனப்போக்கு:

உஸ்மானை பாதுகாக்கவேண்டிய முஸ்லிம்கள், அவரை விட்டுச்சென்றுவிட்டனர். உஸ்மான் தனக்கு வரும் பிரச்சனைகளை தானே சந்திக்கட்டும் என்று அவரை தனிமையாக விட்டுவிட்டார்கள்.

3) ஆன்மீக ஊழல்

பதினைந்து ஆண்டுகளிலேயே இஸ்லாமிய சமுதாயம் ஊழல் நிறைந்ததாக மாறிவிட்டது. முஹம்மதுவோடு தோளோடு தோள் கொடுத்து போர் புரிந்த அதே முஸ்லிம்கள், அவரோடு கூட வறுமையில் வாழ்ந்த அதே முஸ்லிம்கள், இன்று முஹம்மது கற்றுக்கொடுத்த அனைத்து காரியங்களையும் விட்டுவிட்டு தங்களை வன்முறைக்கு விற்றுவிட்டார்கள். அவர்களுக்கு அதிகாரத்தின் மீது ஆசை இருந்தது, அவர்களுக்கு செல்வத்தின்  மீது ஆசை இருந்தது. அவர்களுக்கு வரட்டு கௌரவம் அதிமுக்கியமான காரியமாக காணப்பட்டது. ஒருவரை ஒருவர் வெறுத்து, ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரை ஒருவர் கொன்றார்கள்.  நாம் இங்கே பார்ப்பது என்னவென்றால், ஒரு வயதான மனிதர், வலுவிழந்த மனிதர், கன்னத்தில் அறையப்பட்டார், கேவலப்படுத்தப்பட்டார், தன் எதிரிகளால் கழுத்து நெருக்கப்பட்டார், கடைசியாக, குர்-ஆன் படித்துக்கொண்டு இருக்கும்போது, வெட்டப்பட்டார், அவரைக் காப்பாற்ற வந்த அவரது மனைவியும் காயப்படுத்தப்பட்டார்கள்.

விமர்சனம்: 

ஒரே ஒரு தலைமுறை கடந்துச்செல்வதற்கு முன்பே, இஸ்லாமிய சமுதாயத்தில், ஒருவரைப் பார்த்து ஒருவர்  குரைத்துக்கொள்ளும் நாய்களின் கூட்டம்  போல மக்கள் மாறிவிட்டார்கள். இவர்களின் ஆன்மீக நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்துவிட்டது. இந்த நிலை கலிஃபா நாற்காலியிலிருந்தே தொடங்கியது. இந்த ஆன்மீக மரணம் இஸ்லாமிய சமுதாயத்தில் தன் கனிகளை பெற்றெடுக்க ஆரம்பித்துவிட்டது.  இஸ்லாமிய சமுதாயத்தில் என்ன நடந்தது என்று பார்த்தீர்களா? உண்மையான இஸ்லாம் என்னவென்று இப்போது உங்களுக்கு புரிந்ததா?

குறிப்புக்கள்:  

1) al-Tabari, "The History of al-Tabari", (Ta'rikh al-rusul wa'l-muluk), State University of New York Press  1993

ஆங்கில மூலம்:  http://www.answering-islam.org/Silas/rf3_uthman_murder.htm

சைலஸ் அவர்களின் இதர கட்டுரைகள்


© Answering Islam, 1999 - 2013. All rights reserved.

செவ்வாய், 10 டிசம்பர், 2013

2013 கிறிஸ்துமஸ்: பாகம் 2 - மரியாளுக்கு அல்லாஹ் செய்த அற்புதம், ஏன் பைபிளில் காணப்படவில்லை?


[கிறிஸ்துமஸ் 2013: பாகம் 1ஐ இங்கு சொடுக்கி படிக்கவும்]

[உமரும் அவரது தம்பி அப்துல்லாஹ்வும் ஸ்கைப்பில் (Skype) பேச மறுபடியும் உட்கார்ந்தார்கள், உரையாடல் தொடர்கிறது]

அப்துல்லாஹ்: உமரண்ணா, எப்படி இருக்கீங்க?

உமர்: கர்த்தரின் கிருபையால் நன்றாக இருக்கிறேன், நீ எப்படி இருக்கின்றாய்?

அப்துல்லாஹ்: அல்லாஹ்வின் அருளால் நன்றாக இருக்கிறேன். இன்று ஒரு முக்கியமான கேள்வியை நான் கேட்கவேண்டும், இப்போது கேட்கட்டுமா?

உமர்: தாராளமாக கேட்கலாம்.

அப்துல்லாஹ்: குர்-ஆன் 3:37 ல் அல்லாஹ் இயேசுவின் தாய் மரியாள் அவர்களுக்கு அற்புதமாக உணவை கொடுத்தார் என்று கூறுகிறது. இந்த அற்புதம் ஏன் பைபிளில் சொல்லப்படவில்லை? இயேசு செய்த அனைத்து அற்புதங்களையும் தெரிவிக்கும் சுவிசேஷ நூல்கள், இயேசுவின் தாய்க்கு இறைவன் செய்த இந்த அற்புதத்தை மட்டும் ஏன் மறைத்துவிட்டது?  இயேசுவின் தாய்க்கு நீங்கள் கொடுக்கும் கௌரவம் இது தானா?
குர்-ஆன் 3:37ம் வசனத்தை ஒரு முறை படியுங்கள்:

3:37. அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்; அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், "மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?" என்று அவர் கேட்டார்; "இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்" என்று அவள்(பதில்) கூறினாள்.

என்னுடைய இந்த கேள்விக்கு உங்கள் பதில் என்ன?

உமர்: நல்ல அருமையான கேள்வியை கேட்டு இருக்கின்றாய்!

அப்துல்லாஹ்: தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருங்கள், கிறிஸ்மஸ் ஏவுகனைகள் உங்களை நோக்கி வந்துக்கொண்டே இருக்கும். நீங்கள் கலங்கப்போகிறீர்கள்!

உமர்: தம்பி உனக்கு அவசரம் அதிகம், இன்னும் நான் பதிலே சொல்லவில்லை, அதற்குள் அவசரப்பட்டு ஏதேதோ சொல்கிறாய். சரி, உன் கேள்விக்கு இப்போது பதிலைச் சொல்கிறேன், கேள். 

முதலாவது ஒரு விஷயத்தை தெரிந்துக்கொள், அதாவது இயேசு செய்த எல்லா அற்புதங்களும் புதிய ஏற்பாட்டில் சொல்லப்படவில்லை. எனவே, "இயேசு செய்த அனைத்து அற்புதங்களையும் தெரிவிக்கும் சுவிசேஷ நூல்கள்" என்றுச் சொல்லாதே. சுவிசேஷ நூல்கள் சில அற்புதங்களை மட்டுமே சொல்கிறது (பார்க்க யோவான் 21:25).

இரண்டாவதாக, உங்கள் முஹம்மதுவிற்கு கதைகள் சொல்லவேண்டுமென்றால் மிகவும் பிடித்தமான விஷயம் என்று நினைக்கிறேன், அதுவும் இதர புத்தகங்களிலிருந்து விஷயங்களை எடுத்து, அவைகளை தனக்கு விருப்பமான படி மாற்றிச் சொல்வது அவரது வழக்கம் போல தெரிகிறது.

மரியாளுக்கு அல்லாஹ் கொடுத்த அற்புதம் ஏன் பைபிளில் இல்லை என்று கேட்கிறாய்? முதலாவது, அற்புதங்களை ஏன் இறைவன் செய்கின்றான் என்று உனக்குத் தெரியுமா?

மக்களை சந்திக்கும் பெரும்பான்மையான நேரங்களில் கையிலிருந்து வீபூதியை தந்திரமாக கொண்டு வந்து, மக்களுக்கு எல்லாம் வழங்கும் சாய்பாபா போல இறைவன் நடந்துக்கொள்வார் என்று நீ நினைப்பது தவறு.

அற்புதம் என்பது விளையாட்டாய் செய்யும் செயலல்ல, ஒரு முக்கியமான நோக்கத்திற்காக, மக்களுக்கு நம்பிக்கை வருவதற்காக, தேவைப்படும் போது  செய்வது தான் அற்புதம்.

இயேசு கூட அற்புதம் செய்தார். மக்களின் தேவைக்காகவும், தன்னுடைய செய்தியின் நம்பகத்தன்மையை நிருபிப்பதற்காகவும் இயேசு அற்புதம் செய்தார். ஆயிரக்கணக்கான மக்களுக்கு அற்புதமாக உணவு அளித்த இயேசு, தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றிய இயேசு, தனக்கு பசி உண்டாகும் போது, சீடர்களை அனுப்பி உணவை வாங்கிக்கொண்டு வரும் படி அனுப்பினார். அவர் நினைத்து இருந்திருந்தால், அற்புதம் செய்து தன் பசியை போக்கிக்கொண்டு இருக்கமுடியும், ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. நாற்பது நாட்கள் உபவாசம் இருந்து பசியின் உச்சக்கட்டத்தை அடைந்த பிறகும், சாத்தான் சோதிக்கும்போது அவர் தனக்காக அற்புதம் செய்யவில்லை. [வெறும் கற்களை ரொட்டிகளாக மாற்றும் வல்லமை இயேசுவிற்கு இருக்கிறது என்று சாத்தான் அறிந்திருந்தான்]. மேலும் அவர் வாழ்ந்த காலத்தில் மரித்த அனைவரையும் அவர் உயிரோடு எழுப்பவில்லை என்பதை கவனத்தில் வைத்துக்கொள்.

பழைய ஏற்பாட்டிலும், மோசேவுடன் தேவன் பேசும் போது, எகிப்தில் இருந்த யாக்கோபின் சந்ததியான இஸ்ரவேல் மக்கள் மோசேயை ஒரு நபி என்று நம்பமாட்டார்கள் என்பதால் அற்புதங்களை கொடுத்து  அனுப்பினார். மோசேயினால் செய்யப்பட்ட அற்புதங்களைக் கண்டு தான் மக்கள் அவரை நபி என்று நம்பி ஏற்றுக்கொண்டார்கள்.

எனவே, அற்புதம் என்பது தேவையில்லாமல் செய்யும் செயல் அல்ல.   அல்லாஹ் மரியாளுக்கு (தேவையில்லாமல்) அற்புதம் செய்ததாக குர்-ஆன்  சொல்கிறது. இந்த அற்புதம் உண்டாக்கும்  பிரச்சனைகளை பார்ப்போமா?

அப்துல்லாஹ்: இல்லை.. இல்லை… நீங்கள் சொல்வது தவறு. அல்லாஹ்  தன் அடியார்களுக்கு அற்புதங்களைச் செய்கிறார், இதனை நீங்கள் எப்படி மறுக்கமுடியும்?

உமர்: நான் சொல்வதை முழுவதுமாக கவனி, அவசரப்படாதே! தன் அடியார்களுக்கு இறைவன் அற்புதம் செய்யமாட்டார் என்று நான் சொன்னேனா? இல்லையல்லவா?  இறைவன் அற்புதம் செய்யும் போது, ஒரு முக்கியமான காரணத்தை முன்னிட்டுத்தான் அற்புதம் செய்வார், வேண்டாத விஷயத்திற்கு அற்புதம் செய்யமாட்டார் என்றுச் சொல்கிறேன், அவ்வளவு தான்.

உனக்கு புரியும் படி ஒரு எடுத்துக்காட்டைச் சொல்கிறேன் கேள்:  இயேசு சுகமளிக்கிறார் என்று எல்லா கிறிஸ்தவர்களும் அறிந்திருக்கிறார்கள்.  ஒரு கிறிஸ்தவன் தன் அலுவலகத்தில் முக்கியமான வேலை செய்துக்கொண்டு இருக்கும் போது, அவனுக்கு சின்ன தலைவலி வருகிறது என்று வைத்துக்கொள்வோம், இப்போது இந்த தலைவலியை நீக்க அவனுக்கு இரண்டு வழிகள் உண்டு, முதலாவதாக, அவன் ஒரு தலைவலி மாத்திரையை எடுத்துக்கொண்டு சூடான டீ அல்லது காபியை குடித்துவிட்டு, சில நிமிடங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டால் பெரும்பான்மையான சாதாரண தலைவலிகள் நீங்கிவிடும்.

ஆனால், அந்த கிறிஸ்தவன் மேற்கண்ட வழியை பின்பற்றாமல், கர்த்தர் எனக்கு பரிகாரியாக இருக்கிறார் என்றுச் சொல்லி, கர்த்தர் சுகமாக்கும்வரை நான் மருந்து எடுத்துக் கொள்ளமாட்டேன் என்று அடம்பிடித்துகொண்டு,  தன் அலுவலகத்தில் தன் கடமையைச் செய்யும் நேரத்தை வீணடித்துக்கொண்டு, ஒரு அறையில் உட்கார்ந்துகொண்டு மணிக்கணக்கில் ஜெபித்துக்கொண்டு இருந்தால் இயேசு சுகத்தைக் கொடுப்பாரா?

சரியான மருந்து நம் கையில் இருக்கும் போது "நீங்கள் அற்புதம் செய்தால் தான் நான் ஒப்புக்கொள்வேன்" என்றுச் சொல்லி அற்புதத்திற்காக அடம்பிடிப்பது தவறானதாகும். ஆனால், இதே தலைவலி தொடர்ந்து அனுதினமும் வந்துக்கொண்டு இருந்தால், மருத்துவரை காண்பது சிறந்தது. அதே நேரத்தில் கர்த்தரிடத்திலும் ஜெபிப்பது சரியானது.

"அற்புதம்" தேவைப்படாத விஷயத்தில் கர்த்தரிடமிருந்து அற்புதம் வேண்டுமென்று மனிதன் அடம்பிடிப்பது முட்டாள்தனமாகும். இதே போல, "அற்புதம்" தேவைப்படாத நேரத்தில் காரணமில்லாமல்  அற்புதம் செய்வது இறைவனின் முட்டாள்தனமாகும்.

நான் மேலே சொன்ன கிறிஸ்தவனுக்கு, அல்லாஹ்விற்கும் எந்த ஒரு வித்தியாசத்தையும் நான் காணவில்லை.

தேவையில்லாமல் தான் அல்லாஹ் மரியாளுக்கு அற்புதம் செய்து இருக்கிறார்.

அப்துல்லாஹ்: ஏன் இப்படி சொல்கிறீர்கள்?

உமர்: மரியாளுக்கு 'உணவு' கொடுத்து அற்புதம் செய்ததினால் அல்லாஹ் எதனை நிருபித்துள்ளார்? இதனால் அவர் என்ன சொல்ல வருகிறார்?

அப்துல்லாஹ்: "அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்" என்று மரியாள் சொல்கிறார்கள் அல்லவா?

உமர்: மரியாள் சொல்வது இறைவனின் பொதுவான குணமாகும். உலக படைப்பு அனைத்திற்கும் உணவு அளிப்பது இறைவனே. அதை அவன் கணக்கின்றி செய்கிறான்.  மரியாளுக்கு அற்புதம் செய்ய இது ஒரு காரணமா?

இந்த அற்புதத்தினால் வரும் பிரச்சனைகளை அல்லாஹ் அறிவாரா?

சரி இதற்கு பதில் சொல்:
  • மரியாளுக்கு உணவு அற்புதமாக வழங்கித்தான் ஆகவேண்டும் என்ற நிலையில் ஜகரிய்யா ஏழ்மையில் இருந்தாரா?
  • மூன்று பேருக்கு உணவு வழங்கும் அளவிற்கு ஜகரியாவின் பொருளாதார நிலை மிகவும் கேவலமாக இருந்ததா? அல்லது
  • தன்னால் மரியாளை பராமரிக்க முடியவில்லை என்று இவர் அல்லாஹ்விடம் வேண்டினாரா?
இந்த அற்புதம் மரியாளை எப்படி ஆபத்துக்குள்ளாக தள்ளுகிறது என்று உனக்குத் தெரியுமா? அதாவது, ஒரு பெண்ணுக்கு அனுதினமும் உணவை அற்புதகமாக அல்லாஹ் கொடுத்தால், அது அந்த ஊரில் உள்ளவர்கள் மத்தியில் ஒரு அதிசமான நிகழ்வாக இருந்திருக்கும்.  மரியாள் மிகவும் புகழ்பெற்ற பெண்ணாக கருதப்பட்டிருப்பார்கள் அல்லது ஊரில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒரு பெண்ணாக இந்த அற்புதத்தினால் மாறியிருந்திருப்பார்கள். விஷயம் இப்படியிருக்கும் போது:
  • மரியாள் கர்ப்பம் தரித்தவிஷயம் யாருக்கும் தெரியாமல் போனதெப்படி?
  • அனைவருக்கும் அறிமுகமான பெண் கர்ப்பம் தரித்து யாருக்கும் தெரியாத இடத்திற்கு சென்றுவிட்டார் என்று குர்-ஆன் சொல்கிறது. இது எப்படி சாத்தியமாகும்? ஜகரியா மரியாளை தேடவில்லையா?
  • ஊர் மக்கள் மரியாளை தேடவில்லையா?
  • ஒரு பெண் 9 மாதம் எப்படி தன் கர்ப்பத்தை மறைக்கமுடியும்? மூன்று மாதம் மறைக்கலாம், ஆனால், 9 மாதம் மறைக்கமுடியுமா?
  • மேலும் ஜகரிய்யா மற்றும் எலிசபெத் அவர்கள் முதிர்ந்த வயதை அடைந்த பின்னும் ஒரு குழந்தையை பெற்றெடுத்ததால், இவர்கள் குடும்பம் அனைவரும் அறிந்த குடும்பமாக இருந்திருக்கும். இன்னும் இவர்கள் வீட்டில் வளரும் மரியாளுக்கு அல்லாஹ் உணவை அற்புதமாக கொடுத்ததால், இன்னும் இவர்களின் புகழ் அதிகமாக பரவியிருக்கும். இந்நிலையில் மக்கள் எப்படி மரியாளை மறந்திருக்கமுடியும்?
ஆக, தம்பி, அல்லாஹ் செய்த அற்புதம், மரியாளை புகழ்பெற்ற பெண்ணாக மாற்றியிருக்கும். குறைந்தபட்சம் ஊரில் உள்ள அனைவரும் தெரிந்த பெண்ணாக மாற்றியிருக்கும். இப்படிப்பட்ட பெண்,  9 மாதம் குழந்தையை மறைத்துவைத்து, பிள்ளை பெற்றவுடன் மக்களிடம் கொண்டுச் செல்வது என்பது, நடைமுறையில் சாத்தியமில்லாத விஷயமாகும். நடைமுறையில் சாத்தியமில்லாதவைகளைத் தான் குர்-ஆன் அதிகமாகச் சொல்கிறது.

இதற்கு உன் பதில் என்ன?

அப்துல்லாஹ்: நான் கேட்ட கேள்வி என்ன? ஏன் இந்த அற்புதம் பைபிளில் சொல்லப்படவில்லை என்பதாகும். ஆனால், நீங்கள் இதற்கு பதில் சொல்லவில்லை?

உமர்: முதலில், நீ சொன்ன அற்புதமே ஒரு இட்டுக்கட்டப்பட்ட கதை என்று தெளிவாக தெரியும் போது, ஏன் இதர விஷயங்களை சிந்திக்கவேண்டும்?

தள்ளுபடி ஆகமங்களிலிருந்து:

மேலும், பைபிளில் இல்லாத இந்த அற்புதம் எப்படி முஹம்மதுவிற்கு தெரிந்தது என்று  நீ கேட்கலாம்?  இரண்டாம் நூற்றாண்டிலிருந்து அனேகர் அனேகவிதமான கதைகளை எழுதினார்கள்.  இயேசுவின் இளமைப்பருவம் தொடங்கி, அவர் மரிக்கும் வரையில்,  பைபிளில் சொல்லாத அனேக விஷயங்களை மக்கள் கற்பனை செய்து சுயமாக எழுதினார்கள். இவைகளை அறிஞர்கள் தள்ளுபடி ஆகமங்கள் என்று வரையறுத்துள்ளார்கள். இந்த வரிசையில் தான் "யாக்கோபின் சுவிசேஷம் – Gospel of James" என்ற தள்ளுபடி ஆகமத்தில் குர்-ஆனில் சொல்லப்பட்ட அற்புதம் எழுதப்பட்டுள்ளது. இப்புத்தகத்திலிருந்து ஒரு வசனத்தை உனக்கு படிக்க தருகிறேன்:

8.1 . . . .And Mary was in the temple of the Lord as a dove that is nurtured: and she received food from the hand of an angel.


இரண்டாம் நூற்றாண்டு முதற்கொண்டு மக்கள் மத்தியில் நிலவிய இப்படிப்பட்ட கதைகளை கேட்டு, முஹம்மது குர்-ஆனில் அவைகளை புகுத்தியுள்ளார். இவைகள் எல்லாம் பைபிளில் காணப்படவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது முட்டள்தனமாகும், தம்பி.  இன்னும் அனேக கட்டுக்கதைகள முஹம்மது குர்-ஆனில் இறைவசனங்களாக சேர்த்துள்ளார்,  அவைகளை நேரம் வரும் போது உனக்கு விளக்குகிறேன்.

அப்துல்லாஹ்: எவைகளைச் சொன்னாலும், ஏதோ ஒரு பதிலை தருகிறீர்கள், இது சரியானதல்ல.

உமர்: இதற்கு நான் என்ன முடியும்? உன் குர்-ஆனில் உள்ள குளறுபடிகளை இப்படிப்பட்ட சரித்திர பிழைகளை சொல்லாமல் இருக்கமுடியாதே! நீ தானே கேள்வி கேட்டாய்! உனக்கு பதில் சொல்லவேண்டியது என் கடமையாகும்.

இயேசுவின் பிறப்பின் விஷயத்திலும், அவரின் சிலுவை மரண விஷயத்திலும், குர்-ஆன் பெரிய தவறுகளை செய்துள்ளது.  மக்கள் மத்தியிலே நிலவும் கட்டுக்கதைகளை சொல்லிவிட்டால் மக்கள் நம்பிவிடுவார்கள் என்று முஹம்மது நினைத்துவிட்டார்.  தள்ளுபடி ஆகமங்களில் உள்ள விவரங்களை உண்மை என்று எண்ணிவிட்டார்.  இன்னும் அனேக விஷயங்களை நான் சொல்லமுடியும்.

அப்துல்லாஹ்: அண்ணே, போதும்..போதும். நீங்கள் சொன்ன அந்த தள்ளுபடி ஆகமத்தை படித்துவிட்டு, நாளைக்கு நான் வருகிறேன் அப்போது பார்ப்போம்.

உமர்: சரி தம்பி. நான் சொன்ன விஷயங்களை சிந்தித்துப்பார். நாளைக்கு பார்க்கலாம்.

வியாழன், 5 டிசம்பர், 2013

2013 கிறிஸ்துமஸ் - பாகம் 1: இஸ்லாமின் இரகசிய சாண்டா கிளாஸ் (Santa Claus – கிறிஸ்மஸ் தாத்தா) யார்?


[முன்னுரை: உமரின் தம்பி "அப்துல்லாஹ்" சௌதியில் வேலை செய்கிறார். அவர் இஸ்லாமை தழுவியுள்ளார். இவருக்கும் உமருக்கும் இடையே அவ்வப்போது இஸ்லாம் கிறிஸ்தவம் பற்றிய உரையாடல்கள், விவாதங்கள் நடப்பதுண்டு. இவ்வாண்டு கிறிஸ்துமஸ்ஸை முன்னிட்டு, அப்துல்லாஹ், உமரிடம் புரிந்த உரையாடல்களை தொடர் கட்டுரைகளாக காண்போம்.]

2013 கிறிஸ்துமஸ் பாகம் 1: 
இஸ்லாமின் இரகசிய சாண்டா கிளாஸ் (Santa Claus – கிறிஸ்மஸ் தாத்தா) யார்?

[உமரின் தம்பி அப்துல்லாஹ், உமருக்கு தொலைபேசியில் அழைத்து பேசுகிறார்]

உமர்: ஹலோ அப்துல்லாஹ்!

அப்துல்லாஹ்: அஸ்ஸலாம் அலைக்கும் அண்ணா.

உமர்: வஅலைக்கும் ஸலாம், தம்பி.

அப்துல்லாஹ்: நான் நன்றாக இருக்கிறேன், நீங்க எப்படி இருக்கீங்க?

உமர்: கர்த்தரின் கிருபையால், நான் நன்றாக இருக்கிறேன். நீ எந்த காரணமும் இல்லாமல் என்னை அழைக்கமாட்டாயே! என்ன விஷயம் சொல்லு?

அப்துல்லாஹ்: ஆமாம் அண்ணா, ஒரு முக்கியமான விஷயத்திற்காகத் தான் உங்களை அழைத்தேன். இது டிசம்பர் மாதம் மற்றும் 25ம் தேதி கிறிஸ்துமஸ் வருகிறது அல்லவா!

உமர்: அட, கிறிஸ்துமஸ்ஸும் உனக்கு ஞாபகம் இருக்கிறதா! ஆச்சரியமாக இருக்கே! 

அப்துல்லாஹ்: அண்ணே, கிறிஸ்தவர்களின் அனைத்து பண்டிகைகளைக் குறித்து நாங்க தான் அதிகம் பேசுகிறோம், ஞாபகத்தில் வைத்துக்கொள்கிறோம் தெரியுமா? சரி விஷயத்துக்கு வருகிறேன். நான் இயேசுவின் பிறப்பு பற்றிய குர்ஆன் வசனங்களை சில நாட்களாக ஆய்வு செய்து வருகிறேன். இவ்வாண்டு, இந்த கிறிஸ்துமஸ் மாதத்தில், உங்களுடன் இயேசுவின் பிறப்பு பற்றி விவாதிக்கலாம் என்று விரும்புகிறேன். நீங்க "ஸ்கைப்பில்(Skype)" வரமுடியுமா? நாம் பேசலாம்.

உமர்: வாவ்... நல்ல விஷயம் தான். நாம் தொலைபேசியிலேயே பேசலாமே!

அப்துல்லாஹ்: இல்லை.. இல்லை.. குர்-ஆன் வசனங்களை நான் மேற்க்கோள் காட்டும் போது,  அவைகளை  பேஸ்ட் செய்ய உதவியாக இருக்கும். எனவே, ஸ்கைப்பில் வாருங்கள்.

உமர்: ஓகே, நான் இன்று மாலை வீட்டிற்கு வந்தவுடன், உன் மொபைலில் அழைப்பேன், அப்போது நீ ஸ்கைப்பில் லாகின் ஆகிவிடு, நாம் பேசுவோம்.

அப்துல்லாஹ்: அண்ணே! இந்த முறை குர்ஆன் வசனங்களை வைத்துக்கொண்டு, இயேசுவின் பிறப்பு பற்றி குர்ஆன் சொல்வது தான் சரியானது, பைபிள் சொல்வது தவறானது என்பதை நான் நிருபிக்கப்போகிறேன். உங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள், உங்களை நோக்கி கிறிஸ்மஸ் வெடிகள் வருகின்றன.

உமர்: ஓ.. எனக்கு பயமாக இருக்கிறே! 
தம்பி, பார்த்து வெடி வைக்கவேண்டும், கிறிஸ்மஸ் ராக்கெட்டு விடும் போது, உன்னை நோக்கியே அது திரும்பி வராமல் பார்த்துக்கொள்.

அப்துல்லாஹ்: பெஸ்ட் ஆஃப் லக் அண்ணா! இன்று மாலை சந்திப்போம்.

உமர்: உனக்கும் நல்வாழ்த்துக்கள் தம்பி.

[அன்று மாலை இருவரும் ஸ்கைப்பில் லாகின் ஆகிறார்கள், உரையாடல் தொடர்கிறது.]

உமர்: தம்பி, இந்த நாள் எப்படிச் சென்றது?

அப்துல்லாஹ்: நன்றாக இருந்தது அண்ணா. உங்களுக்கு எப்படி?

உமர்: சிறிது டென்ஷனாக இருந்தது.

அப்துல்லாஹ்: எதைப் பற்றி டென்ஷன்? என்னோடு உரையாடப்போவது பற்றிய  டென்ஷனா?

உமர்: தம்பி, ஆபிஸில் கொஞ்சம் வேலை அதிகமாக இருந்தது.  
சரி, நான் தயாராக இருக்கிறேன், உன் கேள்விகளை நீ கேட்கலாம்.

அப்துல்லாஹ்: என்னுடைய முதலாவது கேள்வி பொதுவான கேள்வியாகும். நாம் சிறு பிள்ளைகளாக இருக்கும் போது, கிறிஸ்மஸ் என்றாலே முதலில் நம் ஞாபகத்தில் வருபவர் குழந்தை இயேசு, இரண்டாவதாக  "கிறிஸ்துமஸ் தாத்தா அல்லது சாண்டா கிளாஸ்" ஞாபகத்தில் வருவார். பைபிளில் சொல்லாத இந்த தாத்தா எப்படி கிறிஸ்துமஸ்ஸில் வந்தார்? இப்படியெல்லாம் செய்யும் படி இயேசு சொல்லியுள்ளாரா? இது கிறிஸ்தவ மார்க்கத்திற்கு விரோதமானது அல்லவா? பைபிள் இதனை அங்கீகரிக்குமா?  இவைகளுக்கு பதிலைச் சொல்லுங்கள், அதன் பிறகு குர்-ஆனில் எப்படி இயேசுவின் பிறப்பு பற்றிய உண்மைகள் சொல்லப்பட்டுள்ளது என்று நான் விளக்குகிறேன்.

உமர்: ம்ம்ம்…. உன்னுடைய முதலாவது வெடி கிறிஸ்மஸ் தாத்தாவை நோக்கி வீசுப்படுகின்றதா? தம்பி நன்றாக கவனி. பைபிள் கிறிஸ்மஸ்ஸை கொண்டாடச் சொல்லவில்லை. ஆனால், ஒரு நாளை விசேஷமானதாக மாற்றிக்கொள்ள நமக்கு பைபிள் அனுமதி கொடுத்துள்ளது. அதாவது நம்முடைய பிறந்த நாளை முன்னிட்டு, மகிழ்ச்சியாக இருக்கவும், நண்பர்கள், உறவினர்களோடு மகிழ்ச்சியாக இருக்கவும் நமக்கு அனுமதி உண்டு. 

இதே போல, நமக்காக பரலோகத்திலிருந்து இறங்கி வந்த இயேசுவின் பிறந்த நாளை நாங்கள் கொண்டாடுவதில் எந்த ஒரு தீமையும் இல்லை. இயேசு பிறந்த நாள் டிசம்பர் 25ம் தேதி தான் என்று நாம் துள்ளியமாகச் சொல்லமுடியாது. இருந்தபோதிலும், ஒரு நாளை விசேஷமாக ஒதுக்கி, அதில் மகிழ்ச்சியாக இருப்பது தவறில்லை. 

அடுத்தபடியாக, கிறிஸ்மஸ் தாத்தாவைப் பற்றி கேட்டாய். இவரைப் பற்றியும் பைபிளில் சொல்லப்படவில்லை, இவர் மனிதர்களால் உண்டாக்கப்பட்ட ஒரு கற்பனைப் பாத்திரம். இதனால் எந்த ஒரு தீமையுமில்லை. மேலும் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும், இந்த கிறிஸ்மஸ் தாத்தா என்பது ஒரு கற்பனை கதாப்பாத்திரம் என்று நன்றாகத் தெரியும். பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்ற காரணத்தினால், பெற்றோர்களும் கிறிஸ்மஸ் தாத்தா என்ற கற்பனை பாத்திரத்தை அனுமதிக்கிறார்கள். இதே பிள்ளைகள் பெரியவர்களாகும் போது, கிறிஸ்துமஸ் தாத்தா பற்றிய உண்மை நிலையை தெரிந்துக்கொள்வார்கள், நாம் எப்படி தெரிந்துக்கொண்டோமோ அது போல.

எனவே, கிறிஸ்துமஸ்ஸை 25ம் தேதி கொண்டாடுவதோ, அல்லது கிறிஸ்மஸ் தாத்தாவின் பரிசுகளை பெற்றுக்கொள்வதோ, எந்த விதத்திலும் தவறில்லை. கிறிஸ்தவர்களாகிய நாங்கள் நாட்கள், காலங்களுக்கு அப்பாற்பட்டவர்கள், எந்த நாளையும் மகிழ்ச்சியான நாட்களாக மாற்றிக்கொள்ள எங்களுக்கு உரிமையுண்டு.

அப்துல்லாஹ்: இதை எப்படி நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியும்?

உமர்: உங்களுடைய அனுமதி யாருக்கு வேண்டும்? நீங்கள் ஏற்றுக்கொண்டால் என்ன? ஏற்றுக்கொள்ளாவிட்டால் எங்களுக்கு என்ன? உங்கள் கட்டுப்பாட்டிற்குள் நாங்கள் வரமாட்டோம் தம்பி. எல்லோரையும் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர நீங்கள் முயற்சிக்கிறீர்கள், ஆனால் அது முடியாது தம்பி.

அப்துல்லாஹ்: பைபிளில் சொல்லப்படாத ஒன்றை ஏன் நீங்கள் செய்கிறீர்கள்? இயேசு இதனை அங்கீகரிப்பாரா?

உமர்: தம்பி, எதற்கு முதலாவது முக்கியத்துவம் தரவேண்டுமோ அதற்கு நாங்கள் முதலாவது முக்கியத்துவம் தருகிறோம். மீதமுள்ளதெல்லாம் இரண்டாம் தரமானது.  திருச்சபைக்குள் இருத்தல், பரிசுத்தமாக வாழுதல், பிறரிடம் அன்புடன் இருத்தல், நேர்மையாக வாழ்தல், வேத வாசிப்பு, ஜெபம் என்று அனேக முக்கியமாக விஷயங்கள் உள்ளன, அவைகளுக்கு நாங்கள் முக்கியத்துவம் தருகிறோம். இதைத் தான் இயேசுவும் விரும்புவார்.

அப்துல்லாஹ்: நீங்க எந்த விளக்கம் கொடுத்தாலும், என்னால் அதனை அங்கீகரிக்க முடியாது.

உமர்: தம்பி, ஏற்றுக்கொள்வது ஏற்றுக்கொள்ளாதது உன் விருப்பம். சரி ஒரு முக்கியமாக கேள்வியை நான் கேட்கிறேன், அதற்கு பதில் தரமுடியுமா?

அப்துல்லாஹ்: சரி சொல்லுங்க.

உமர்: இஸ்லாமின் இரகசிய சாண்டா கிளாஸ் (கிறிஸ்மஸ் தாத்தா) யார் என்று உனக்குத் தெரியுமா?

அப்துல்லாஹ்: [சிரிக்கிறார்]  என்ன, இஸ்லாமின் சாண்டா கிளாஸ்ஸா? என்ன சொல்றீங்க?

உமர்: உனக்கு நான் அதனை விளக்குகிறேன். பொதுவாக சாண்டா கிளாஸ் பிள்ளைகளுக்கு பரிசுகளை வழங்குவார். பிள்ளைகள் அதனால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இதே  போல, இஸ்லாமின் சாண்டா கிளாஸ் உலக மக்களுக்கு ஒரு மிகப்பெரிய பரிசை கொடுத்து இருக்கிறார் அவர் யார் என்று உனக்குத் தெரியுமா?

அப்துல்லாஹ்: நீங்க சொல்வதைப் பார்த்தால், இஸ்லாமில் யாரையோ குறிப்பிட்டு, இவர் தான் சாண்டா கிளாஸ் என்று சொல்வீர்கள் போல இருக்கிறதே!

உமர்: நீ சொன்னது சரியானது தான். ஆனால், அவர் யார் என்று உனக்குத் தெரியுமா? 

அப்துல்லாஹ்: எங்கள் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைத் தான் நீங்கள் "இஸ்லாமின் சாண்டா கிளாஸ்" என்று  கூறுகிறீர்களா?

உமர்: இல்லை, முஹம்மது இல்லை. முஹம்மது அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து யாரையும் காப்பாற்ற அவரால் முடியாது என்று சொல்லியுள்ளாரே: பார்க்க புகாரி ஹதீஸ் 2753:

2753. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
"உங்கள் நெருங்கிய உறவினர்களை அச்சுறுத்தி எச்சரியுங்கள்" என்னும் (திருக்குர்ஆன் 26:214) இறைவசனத்தை அல்லாஹ் அருளிய பொழுது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து நின்று, 'குறைஷிக் குலத்தாரே!" என்றோ அது போன்ற ஒரு சொல்லையோ கூறி (அழைத்து), 'ஓரிறை வணக்கத்தையும், நற்செயல்களையும் விலையாகத் தந்து உங்களுக்கு (நரக நெருப்பிலிருந்து) விடுதலை வாங்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து சிறிதளவும் உங்களைக் காப்பாற்ற என்னால் முடியாது. அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அல்லாஹ்வின் தூதருடைய அத்தை(மாமி) ஸஃபிய்யாவே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள் (தருகிறேன்). (ஆனால்,) அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் உன்னை காப்பாற்ற முடியாது" என்று கூறினார்கள். 
இதே போன்ற ஓர் அறிவிப்பை இப்னு ஷிஹாப்(ரஹ்) வழியாக அஸ்பஃக்(ரஹ்) அறிவித்தார். 

நான் சொல்லும் இஸ்லாமின் சாண்டா கிளாஸ் அல்லாஹ்வின் அழிவிலிருந்து உலக மக்களை காப்பாற்றியுள்ளார். 

அப்துல்லாஹ்: அல்லாஹ்வாக இருக்குமோ! 

உமர்: இல்லை, அல்லாஹ்வே எப்படி தன்னுடைய தண்டனையிலிருந்து நம்மை காப்பாற்றியிருப்பார்.  அல்லாஹ் இல்லை. இஸ்லாமின் சாண்டா கிளாஸிற்கு கிறிஸ்தவர்களாகிய நாங்கள் மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரும் நன்றி சொல்லவேண்டும்.

அப்துல்லாஹ்: எனக்கு தெரியாது அண்ணா, நீங்களே சொல்லுங்கள்.

உமர்: சரி, இதை விளக்குவதற்கு கீழ்கண்ட ஹதீஸ்களை படிக்கவேண்டும். யார் நம்மை அல்லாஹ்வின் அழிவிலிருந்து காப்பாற்றியுள்ளார்? 

இதை தெரிந்துக்கொள்வதற்கு முன்பாக, ஏன் அல்லாஹ் நம்மை அழிக்கவேண்டும் என்று விரும்புகிறார் என்பதை அறிந்துக் கொள்ளவேண்டும். சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண் 5304 கீழ்கண்டவிதமாக கூறுகிறது:

5304. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் பாவம் செய்யாதவர்களாக இருந்தால், அல்லாஹ் உங்களை அகற்றிவிட்டு, பாவம் செய்கின்ற மற்றொரு சமுதாயத்தைக் கொண்டுவருவான். அவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவார்கள். அல்லாஹ்வும் அவர்களை மன்னிப்பான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 

இதே விவரம் எண்கள் 5302 மற்றும் 5303 ஹதீஸ்களிலும் உள்ளது.

'அல்லாஹ் ஏன் நம்மை அழித்துவிடுகிறார்?' நாம் பாவம் செய்யாமல் இருந்துவிட்டால் நம்மை அல்லாஹ் அழித்துவிடுவாராம். மேலும் பாவம் செய்கின்ற மக்களை கொண்டுவந்து, அவர்கள் பாவம் செய்து மன்னிப்பு கேட்டால் அவர்களை மன்னிப்பாராம்'

தம்பி இந்த ஹதீஸ்  பற்றி நீ என்ன நினைக்கிறாய்?

அப்துல்லாஹ்: மக்கள் மன்னிப்பு கோரினால் தானே அல்லாஹ் அவர்களை மன்னிக்கமுடியும்? மக்கள் பாவம் செய்தால் தானே அவர்கள் மன்னிப்பு கேட்கமுடியும்?

உமர்: அல்லாஹ் தனது மன்னிக்கும் குணத்தை காட்டுவதற்கு மக்கள் பாவம் செய்யவேண்டுமென்று விரும்புகிறார். இது சரியானதா? மேலும் அப்படி பாவம் செய்யாத மக்களை அழித்துவிடுவேன் என்றுச் சொல்வது தான் வேதனைக்குரிய விஷயம். 

அப்துல்லாஹ்: அண்ணா ஒரு நிமிஷம் நில்லுங்க. மேற்கண்ட ஹதீஸில் அல்லாஹ் பாவம் செய்யாத மக்களை அழிப்பதாகச் சொல்லவில்லையே! "அல்லாஹ் உங்களை அகற்றிவிட்டு" என்று தானே சொல்லியுள்ளார்.

உமர்: " அல்லாஹ் உங்களை அகற்றிவிட்டு, பாவம் செய்கின்ற மற்றொரு சமுதாயத்தைக் கொண்டுவருவான்" என்ற சொற்றொடரின் பொருள் என்னவென்று சரியாக உனக்கு புரிகின்றதா? உனக்கு சரியாக புரியவேண்டுமென்பதற்காக ஆங்கிலத்தில் இந்த ஹதீஸை ஒரு முறை படிப்போமா? இதோ பேஸ்ட் செய்கிறேன், படித்துப்பார்:

6621 Abu Ayyub Ansari reported that Allah's Messenger (may peace be upon him) said: If you were not to commit sins, Allah would have swept you out of existence and would have replaced you by another people who have committed sin, and then asked forgiveness from Allah, and He would have granted them pardon.  

 6622 Abu Huraira reported Allah's Messenger (may peace be upon him) having said: By Him in Whose Hand is my life, if you were not to commit sin, Allah would sweep you out of existence and He would replace (you by) those people who would commit sin and seek forgiveness from Allah, and He would have pardoned them. 

ஆங்கிலத்தில் "Allah would have swept you out of existence" என்று வருகின்றது.  ஆக, பாவம் செய்யாத மக்களை அல்லாஹ் அழித்துவிடுகின்ற இறைவனாக இருக்கிறார் என்று முஹம்மது இந்த ஹதீஸின் மூலமாக கூறுகிறார்.

அப்துல்லாஹ்: சரி, இந்த ஹதீஸுக்கும், இஸ்லாமின் சாண்டா கிளாஸ் என்று நீங்க சொல்வதற்கும் என்ன சம்மந்தம்?

உமர்: இதோ விளக்குகிறேன். நாம் பாவம் செய்யாமல் இருந்தால் அல்லாஹ் நம்மை அழித்து இருந்திருப்பார். ஆனால், நாம் அல்லாஹ்வினால் அழிக்கப்படாமல் இருக்கிறோம். இதன் பொருள் என்ன?

அப்துல்லாஹ்: நாம் பாவம் செய்கின்றோம் என்று அர்த்தம்.

உமர்: சரியாகச் சொன்னாய். நாம் பாவம் செய்வதற்கு யார் காரணம் தெரியுமா உனக்கு?  

இப்போது குர்-ஆன் வசனங்களை படிப்போம். 

2:35. மேலும் நாம், "ஆதமே! நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்" என்று சொன்னோம்.

2:36. இதன்பின், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம், "நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு" என்று கூறினோம்.

7:19. (பின்பு இறைவன் ஆதமை நோக்கி:) "ஆதமே! நீரும், உம் மனைவியும் சுவர்க்கத்தில் குடியிருந்து, நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப்பிரகாரம் புசியுங்கள்; ஆனால் இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்" (என்று அல்லாஹ் கூறினான்).

7:20. எனினும் அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய (உடலை) மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான் அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான எண்ணங்களை) ஊசலாடச் செய்தான்; (அவர்களை நோக்கி, "அதன் கனியை நீங்கள் புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாய் விடுவீர்கள், அல்லது (இச்சுவனபதியில்) என்றென்னும் தங்கிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி (வேறெதற்கும்,) இந்த மரத்தை விட்டும் உங்களை உங்கள் இறைவன் தடுக்கவில்லை" என்று கூறினான்.

7:21. "நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் நற்போதனை செய்பவனாக இருக்கிறேன்" என்று சத்தியம் செய்து கூறினான்.

7:22. இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று; அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு: "உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?" என்று கேட்டான்.

இந்த வசனங்களின் படி ஆதாமும் ஏவாளும் பாவம் செய்ய காரணமாக இருந்தது யார்? ஷைத்தான் ஆவான். ஒருவேளை ஷைத்தான் அவர்களை ஏமாற்றாமல் இருந்திருந்தால் என்ன நடந்து இருந்திருக்கும்? மேற்கண்ட ஹதீஸின் படி, அல்லாஹ் ஆதாமையும், ஏவாளையும் அழித்து இருந்திருப்பார். மேலும் பாவம் செய்யும் வேறு ஒரு மக்களை கொண்டு வந்து இருப்பார்.

ஆனால், ஷைத்தானின் புண்ணியத்தினால், ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபடியினால் அல்லாஹ்வினால் அவர்கள் அழிக்கப்படாமல் இருந்தார்கள்.

ஆக, ஆதாமையும், ஏவாளையும், இவர்கள் மூலமாக வந்த உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியது யார்? ஷைத்தான் என்றுச் சொல்லக்கூடிய சாத்தான் தானே.

அப்துல்லாஹ்: அண்ணா, நீங்க சொல்வது கொஞ்சம் புரியுது, கொஞ்சம் புரியவில்லை. அன்று சாத்தான், ஆதாமையும், ஏவாளையும் வஞ்சித்து பாவம் செய்யவைத்தான், ஆனால், இன்று நம்மை பாவம் செய்யச் செய்ய தூண்டுவது யார்?

உமர்: ஓ.. என் அருமை தம்பியே! நீ முதலில் குர்-ஆனை அரபியில் படிப்பதை நிறுத்திவிட்டு தமிழில் படிக்க ஆரம்பி.  

குர்-ஆன் 15:39 என்ன சொல்கிறது என்று ஒரு முறை படித்துப்பார்.

15:39. (அதற்கு இப்லீஸ்,) "என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன்.

இப்படி சாத்தான் வழிக்கேட்டில் நம்மை செலுத்துகிறான் என்று நாம் வேதனை அடையத்தேவையில்லை, ஏனென்றால், நாம் பாவம் செய்யவில்லையானால், அல்லாஹ் நம்மை அழித்துவிடுவார். 

ஆக, இஸ்லாம் ஒரு உண்மையான மார்க்கமாக இருக்கிறது என்று நாம் நம்பினால், சாத்தானை நாம் வெறுக்கக்கூடாது, அவனுக்கு நன்றி செலுத்தவேண்டும். "அல்லாஹ்வின் அழிவிலிருந்து காப்பாற்றிய சாத்தானே" உனக்கு நன்றி என்று மக்கள் சொல்லவேண்டும்.

எனவே, மேற்கண்ட குர்-ஆன் மற்றும் ஹதீஸை உண்மை என்று நாம் நம்பினால், சாத்தான் தான் உலக மக்களின் இரட்சகன் ஆவான், ஹீரோ ஆவான், உலக மக்கள் அழிக்கப்படாமல் இருப்பதற்கு இவனே காரண கர்த்தா ஆவான். சாத்தான் தான் இஸ்லாமின் இரகசிய சாண்டா கிளாஸ் ஆவான். நமக்கு மறைமுகமாக பரிசுகளை  வழங்கி காப்பாற்றியவன் சாத்தான் ஆவான்.

தம்பி உனக்கு புரிந்ததா? இன்னும் விளக்கவேண்டுமா?

அப்துல்லாஹ்: எனக்கு குழப்பமாக உள்ளது. 

உமர்: இதில் குழம்புவதற்கு என்ன இருக்கிறது?
பாவம் செய்யாதவர்களை அல்லாஹ் அழிப்பதாக உங்கள் இறைத்தூதர் சொல்லியுள்ளார்.
சாத்தான் மக்களை பாவம் செய்யத்தூண்டுகின்றான்.
மக்கள் பாவம் செய்தபடியால், அல்லாஹ் மக்களை அழிக்கவில்லை
ஆக, மக்கள் அல்லாஹ்வினால் அழிக்கப்படாமல் இருந்ததற்கு காரணமாக இருப்பவன் சாத்தான், எனவே இஸ்லாமின் படி நாம் அனைவரும் சாத்தானுக்கு நன்றி சொல்லவேண்டும்.

இது தான் இஸ்லாமிய சாண்டா கிளாஸின் சுருக்கம்.

அப்துல்லாஹ்: ம்ம்ம்…. இன்றைக்கு இது போதும், நாளக்கு நான் ஸ்கைப்பில் வருகிறேன் அண்ணா.

உமர்: கொஞ்சம் இரு தம்பி, இன்னும் கிறிஸ்மஸ் தாத்தா கதை முடியவில்லை.

அல்லாஹ் மன்னிக்கவேண்டும் என்பதற்காக உலக மக்கள் பாவம் செய்ய வேண்டும் என்று அவர் எதிர்ப்பார்த்தால், அல்லாஹ்வின் எதிரி யாராக இருக்கமுடியும் சொல்லு?

அப்துல்லாஹ்: ம்ம்ம்…எனக்கு தெரியாது.

உமர்: அல்லாஹ்வின் எதிரிகள் பாவம் செய்யாதவர்கள் தானே. ஏனென்றால், பாவம் செய்யாதவர்களை அல்லாஹ் அழித்துவிடுகின்றான் இல்லையா? 
இஸ்லாமின் படி பாவம் செய்யாதவர் யார்? 

இயேசுக் கிறிஸ்து தான் அவர்.

சஹிஹ் அல் புகாரி 3286ன் படி,உலகில் பிறக்கும் ஒவ்வொருவரையும் சாத்தான் தொடுகின்றான், ஆனால், இயேசுவையோ அவனால் தொடமுடியவில்லை. மேலும் பாவம் செய்யாதவர் இயேசு ஆவார்.  தம்பி கீழ்கண்ட ஹதீஸை படித்துப்பார்:

3286. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
ஆதமின் மகன் (மனிதன்) ஒவ்வொருவனும் பிறக்கும்போது, அவனுடைய இரண்டு (விலாப்) பக்கங்களிலும் ஷைத்தான் தன் இரண்டு விரல்களால் குத்துகிறான்; மர்யமின் குமாரர் ஈஸாவைத் தவிர (அவர் பிறந்தபோது அவரை விலாப் பக்கம்) குத்தச் சென்றான். ஆனால், அவரைச் சுற்றியிருந்த மெல்லிய சவ்தை; தான் குத்தினான். (அதுதான் அவனால் முடிந்தது.) 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 


ஆதாம் பாவம் செய்தார், நோவா பாவம் செய்தார், ஆபிரகாம் பாவம் செய்தார், மோசே பாவம் செய்தார், அவ்வளவு ஏன் சர்வ சாதாரணமாக முஹம்மது பாவம் செய்தார். ஆனால் பாவமே செய்யாதவர் இயேசு ஆவார்.

இயேசுவை தவிர மற்ற எல்லா நபிமார்களும் பாவம் செய்தார்கள். 
அல்லாஹ் எல்லோரையும் மன்னிப்பார், ஆனால் இயேசுவை மன்னிக்கமாட்டார், ஏனென்றால், இவர் பாவம் செய்யவில்லை.

எனவே, அல்லாஹ்வின் எதிரி இயேசுக் கிறிஸ்து ஆவார்.

நீங்கள் பாவம் செய்யவில்லையானால், நான் அழித்துவிடுவேன் என்று அல்லாஹ் எச்சரிக்கை கொடுத்தும், இயேசு பாவம் செய்யவில்லை என்பதை நாம் இதுவரை கண்ட விவரங்களிலிருந்து அறியலாம். அல்லாஹ்வின் அச்சுருத்தலுக்கெல்லாம் இயேசு இணங்கவில்லை. சாத்தானும் இயேசுவை தொடமுடியவில்லை.

கடைசியாக, நம்மை பாவம் செய்யச் செய்து, அல்லாஹ்வின் அழிவிலிருந்து நம்மை காப்பாற்றியது ஷாத்தான் ஆவான். எனவே, இயேசுவை தவிர இதர நபிமார்களையும், முஸ்லிம்களையும் மற்றும் உலக மக்கள் அனைவரையும்  காப்பாற்றியது சாத்தான் ஆவான். ஆக, இஸ்லாமின் சாண்டா கிளாஸாக இருந்து கிறிஸ்மஸ் பரிசுகளை வழங்கியவன் சாத்தான் ஆவான்.

உமர், உனக்கு  மேற்கண்ட ஹதீஸ்கள், மற்றும் குர்ஆன் வசனங்கள் புரிகின்றதா? முக்கியமாக இயேசுவின் பிறப்பு பற்றிய ஹதீஸின் படி, சாத்தான் இயேசுவை தொடமுடியவில்லை... இது ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா?

நான் இதுவரை சொன்ன விவரங்கள் கீழ்கண்ட வீடியோவில்  டேவிட் உட் என்ற கிறிஸ்தவர் அழகாகவும், வேடிக்கையாகவும், கோர்வையாகவும் விவரித்துள்ளார்.



அப்துல்லாஹ்: அண்ணா, எனக்கு வேலை இருக்கிறது, நாம் நாளை சந்திப்போம்.

உமர்: சரி தம்பி, நாளைக்கு  சரியான கேள்விகளை தயார்படுத்திக்கொண்டு வா. 

[அப்துல்லாஹ், மரியாளுக்கு அல்லாஹ் செய்த அற்புதம் பற்றிய கேள்வியை கேட்கவுள்ளார். இந்த கேள்விக்கு உமர் என்ன பதில் சொல்கிறார் என்பதை அடுத்த உரையாடலில் காண்லாம்]

செவ்வாய், 15 அக்டோபர், 2013

இஸ்லாமிய அரச குடும்பம் - பாகம் 2 - புதிய அரசர்

இஸ்லாமிய அரச குடும்பம்

பாகம் 2 - புதிய அரசர்

ஆசிரியர்: சைலஸ்

யோவான் 13:34,35
நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்தது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள் என்றார்.

குர்ஆன் 8:63
மேலும், (முஃமின்களாகிய) அவர்கள் உள்ளங்களுக்கிடையில் (அன்பின்) பிணைப்பை உண்டாக்கினான்; பூமியிலுள்ள (செல்வங்கள்) அனைத்தையும் நீர் செலவு செய்த போதிலும், அவர்கள் உள்ளங்களுக்கிடையே அத்தகைய (அன்பின்) பிணைப்பை உண்டாக்கியிருக்க முடியாது - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களிடையே அப்பிணைப்பை ஏற்படுத்தியுள்ளான்; மெய்யாகவே அவன் மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான் (முஹம்மது ஜான் டிரஸ்ட் குர்ஆன் தமிழாக்கம்)

பாகம் 2: புதிய அரசர்

(அபூ பக்கர், அலி மற்றும் அபூ சுஃப்யான்)

அறிமுகம்

எதிர்பாராத விதமாக விஷத்தின் காரணமாக முஹம்மது மரித்தபோது[1], இஸ்லாமிய சமுதாயத்தில் "அடுத்த தலைவர் யார்?" என்பதில் குழப்பம் ஏற்பட்டது. முஹம்மது மரித்தவுடனே அபூ பக்கர் அவர்கள் அடுத்த கலீஃபாவாக (தலைவராக) தெரிவு செய்யப்பட்டார் என்று நான் முந்தைய கட்டுரையில் கூறியிருந்தேன். அபூ பக்கர் அவர்கள் அடுத்த தலைவராக தெரிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒரு சுலபமான வேலையாக இருக்கவில்லை, மேலும் சண்டை சச்சரவு இல்லாமல் அவர் தெரிவு செய்யப்படவில்லை. அடுத்த கலீஃபாவாக அபூ பக்கர் அரியாசனையில் உட்காரவேண்டும் என்று எல்லாரும் விரும்பவில்லை.

(குறிப்பு 1: முஹம்மதுவின் மரணம் பற்றிய விவரங்களை அறிய இந்த கட்டுரையை படிக்கவும்)

அபூ பக்கர் அவர்கள் எப்படி கலீஃபாவாக தெரிவு செய்யப்பட்டார் என்பது பற்றி பலவகையான விவரங்களை  பல மூல நூல்கள் கூறுகின்றன, எதிர்ப்புக்களின் மத்தியிலே  கடைசியாக அவர் கலீஃபாவாக மாறினார். இவர் தலைவராக மாறியது எல்லோருக்கும் மகிழ்ச்சி அளிக்கவில்லை.  இவரது தலைமைத்துவத்தை பல இஸ்லாமிய குழுக்கள் அங்கீகரிக்கவில்லை. ஆனால், அபூ பக்கருக்கு பல இஸ்லாமிய தலைவர்களின் ஆதரவு இருந்ததால், அவரே தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

முதலில் அலி அவர்கள் அபூ பக்கருக்கு ஆதரவு அளிக்க மறுத்துவிட்டார்கள், ஏனென்றால், தாமே கலீஃபாவாக தலைவர் பொறுப்பை ஏற்கவேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். சரித்திர ஆசிரியர் தபரி அவர்களால் பதிவு செய்யப்பட்ட அலி அவர்களின் வார்த்தைகளை இப்போது படியுங்கள் (தபரி, வால்யும் 16, பக்கம் 51 [4])

இறைத்தூதர் மரித்துவிட்டார்கள். இஸ்லாமிய சமுதாயத்தின் தலைவர் பதவிக்கு தகுதியானவர் என்னைத் தவிர வேறு யாருமில்லை.  ஆனால், மக்கள் அபூ பக்கர் அவர்களுக்கு தங்கள் ஆதரவை கொடுத்தனர், எனவே, நானும் என் ஆதரவை அபூ பக்கருக்கு கொடுத்தேன். அதன் பிறகு அபூ பக்கர் மரித்துவிட்டார்கள். இப்போது கூட இஸ்லாமிய சமுதாயத்தின் தலைவர் பதவிக்கு தகுதியானவர் என்னைத் தவிர வேறு யாருமில்லை. ஆனால், மக்கள் உமர் அவர்களுக்கு தங்கள் ஆதரவை கொடுத்தார்கள், நானும் அப்படியே செய்தேன். இதன் பிறகு உமர் அவர்களும் மரித்துவிட்டார்கள். இப்போதும் தலைவர் பதவிக்கு என்னைத் தவிர பொறுத்தமானவர் யாருமில்லை. இருந்தபோதிலும் ஆறு வாக்கெடுப்பில் ஒரு வாக்கை போடும்படி மக்கள் எனக்கு அதிகாரம் கொடுத்தனர், மற்றும் உஸ்மான் தங்கள் தலைவராக வரவேண்டும் என்று அவர்கள்  விரும்பி தங்கள் ஆதரவை  கொடுத்தனர், மறுபடியும் நான் என் ஆதரவையும் தரவேண்டியதாக இருந்தது.


இஸ்லாமிய சமுதாயத்தில் இன்னொரு நபரும் இருந்தார், இவரும் வேறுபல காரணங்களுக்காக அபூபக்கர் கலீஃபாவாக ஆவதை விரும்பவில்லை. இவர் ஒரு தலைவராக இல்லாமல் இருந்தாலும், மிகவும் முக்கியமானவராக இருந்தார்.

நாம் இந்த நிகழ்ச்சிப் பற்றி ஆய்வு செய்யவேண்டும். இஸ்லாமிய அரியாசனத்தில் அபூ பக்கர் அவர்கள் உட்காருவதை விரும்பாத இந்த முக்கியமான இஸ்லாமியரின் நோக்கங்கள் மற்றும் வார்த்தைகளை நாம் ஆய்வு செய்து பார்க்கவேண்டும். இது ஒரு சிறிய நிகழ்ச்சி தான், ஆனால் இதன் தாக்கம் இஸ்லாமிய சரித்திரத்தில் தொடர்ந்து வந்துள்ளது மேலும் இன்று வரை இஸ்லாமிய சமுதாயத்தில் இதன் நிழல் காணப்படுகிறது. அன்பர்களே, நீங்கள் நினைவில் கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், நாம் " மனிதர்களிலேயே மிகவும் சிறந்த முஸ்லீம்கள் என்று   முஹம்மதுவினால் அங்கீகாரம் கொடுக்கப்பட்ட" முஸ்லிம்களைப் பற்றி ஆய்வு செய்துக்கொண்டு இருக்கிறோம் என்பதாகும்.  இஸ்லாம் என்னும் மரத்தின் கனிகள் தான் இவர்கள்.  வாருங்கள்!, இந்த இஸ்லாமிய கனிகளை சிறிது சுவைத்துப் பார்ப்போம்....

முக்கிய நபர்கள்:

அபூ பக்கர் - இவர் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் முதல் கலீஃபா (அரசை நடத்திச் செல்லும் தலைவர்) ஆவார். "சரியாக வழிநடத்தப்பட்ட நான்கு கலீஃபாக்கள்" என்று அழைப்படும் கலீஃபாக்களில் முதன்மையானவர் இவர் ஆவார். முஹம்மது மரித்த பிறகு இவர் கலீஃபாவாக பதவி ஏற்றார்.  இவர் முஹம்மதுவின் நெருங்கிய நண்பராவார்.  இவர் இரண்டு ஆண்டுகள் ஆட்சி புரிந்து அதன் பிறகு காலமானார்.

அலி  - இவர் முஹம்மதுவின் மருமகன் ஆவார். இவர் முஹம்மதுவின் மகள் ஃபாதிமாவை திருமணம் செய்து இருந்தார்.  இவர் வீரமிக்க இஸ்லாமிய போர் வீரனாக இருந்தார்,  யுத்தக் களத்தில் அனேக வெற்றிகளுக்கு உறுதுணையாக இருந்தார். அலி அவர்களுக்கு ஹசேன் மற்றும் ஹுசேன் என்ற பெயர்களில் இரண்டு மகன்கள் இருந்தார்கள். அலி அவர்கள் நான்காவது கலீஃபாவாக இருந்தார், மேலும் "சரியாக  நடத்தப்பட்ட கலீஃபாக்களின்" பட்டியலில் இவர் கடைசியானவராக இருக்கிறார்.

அபூ சுஃப்யான் – இவர் முஹம்மதுவின் மிகப்பெரிய எதிரியாக இருந்தார்.  மக்காவின் ஒரு புகழ்பெற்ற வம்சத்தில் பிறந்த இவர், மக்காவினருக்கு தலைவராக  இருந்தார்.  உஹூத் என்ற போரின் போது, முஸ்லிம்களை தோற்கடித்த மக்காவினரின் படைத்தலைவராக இருந்தவர் இவர் தான். இந்த போரின் போது முஹம்மது அதிகமாக காயப்பட்டார் மேலும் அதிகமாக பயந்துபோய் இருந்தார். இந்த போரில் அனேக முஸ்லிம்களை கொன்று அதனை சுவாரசியமாக  கண்டு களித்தவர் இவர், மேலும் இந்த வெற்றியைப் பற்றி புகழ்ந்துப்பேசி, முஹம்மதுவை ஏளனப்படுத்தினார் அபூ சுஃப்யான்.  ஒரு காலக் கட்டத்தில் இந்த அபூ சுஃப்யானை  கொலை செய்யும் படி முஹம்மது சிலரை அனுப்பினார், ஆனால் அவர்கள் தோல்வியடைந்தார்கள், அபூ சுஃப்யானை  கொலை செய்ய அவர்களால் முடியவில்லை.   அதன் பிறகு முஹம்மது ஒரு வலிமை வாய்ந்த நபராக மாறிவிட்டபிறகு,  அவர் மக்காவை நோக்கி தன் படைகளோடுச் சென்றார்.  இந்த நேரத்தில் அபூ சுஃப்யான் முஹம்மதுவை சந்திக்கச் சென்றார்.  இந்த இடத்தில் அபூ சுஃப்யான் ஒரு முஸ்லிமாக மாற கட்டாயப்படுத்தப்பட்டார், இல்லையானால் அவர் அங்கேயே கொலை செய்யப்பட்டு இருக்கவேண்டும் (ஆரம்பத்தில்  அபூ சுஃப்யானுக்கு  பாதுகாப்பு அளிப்பதாக முஸ்லிம்கள் வாக்கு கொடுத்தனர்,  அதன்பிறகு முஸ்லிம்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டனர், முஹம்மதுவை இவர் சந்திக்கும் நேரத்தில் கொலை செய்யப்படக்கூடும் என்ற சூழ்நிலை நிலவியது).  இந்த நேரத்தில் தான் திடீரென்று "முஹம்மது ஒரு இறைத்தூதர்" என்று இவர் ஒப்புக்கொண்டார்! அதாவது தன் உயிருக்கு பயந்து முஹம்மது ஒரு தீர்க்கதரிசி என்று இவர் நம்பினார்.  முஹம்மது மக்காவை முழுவதுமாக கைப்பற்றிக்கொண்ட பிறகு, ஒரு விலை உயர்ந்த பரிசு ஒன்றை முஹம்மது அபூ சுஃப்யானுக்குக் கொடுத்தார்,  இதனால் அனேக இஸ்லாமியர்கள் கோபமும் அடைந்தார்கள்.  மேலும் இவரை கிறிஸ்தவ நகரமாகிய நஜ்ரான் என்ற நகரத்திற்கு பிரதிநிதியாக  முஹம்மது நியமித்தார்.  அபூ சுஃப்யான் தனக்கு அரசியல் அதிகாரம் கிடைப்பதை அதிகமாக விரும்பினார்.  அரசியல் அதிகாரம் என்றால் என்ன என்பதை இவர் சரியாக புரிந்துக்கொண்டார், தனக்கும்  தன்  மகன்களுக்கும் இந்த அதிகாரம் "இஸ்லாமிய சமுதாயத்தின்" மூலமாக  கிடைக்கும் என்று இவர் நம்பினார்.

அபூ சுஃப்யான் அவர்களை நாம் இஸ்லாமிய அரச குடும்பமாக கருதமுடியாது, அல்லது முஸ்லிம்களிலே இவர் ஒரு சிறந்த முஸ்லிம் என்றும் கருதமுடியாது. ஆனால், முஹம்மதுவின் காலத்தில் இவர் முக்கிய நபராக இருந்தார் என்பதையும் நாம் மறுக்கமுடியாது.   இஸ்லாமை இவர் ஏற்றதால் முஹம்மது இவருக்கு பொருளாதார பரிசுகளை அளித்தார் மேலும் ஒரு நகரத்திற்கு பிரதிநிதியாக நியமித்தார்.

அல்ஜுபைர் – இவர் மதிப்புமிக்க ஒரு முஸ்லிமாக இருந்தார், முஹம்மதுவின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார். இவர் ஒரு நல்ல இஸ்லாமிய அடியாராக (சீடராக) இருந்தார்.  இது மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட காலத்தில் அலி அவர்களுடன் இணைந்து இவர் ஒரு முக்கியமான செயலை செய்தார்.

பின்னணி:
முஹம்மது மரித்து சிறிது நேரம் தான் ஆகியிருந்தது.  இஸ்லாமிய சமுதாயத்தின் தலைவர்கள் தங்கள் நண்பர்கள், வம்சத்தினர்களுடன் உறவினர்களுடன்  இங்கும் அங்குமாக கூட்டம் கூட்டினார்கள்.  இஸ்லாமிய சமுதாயத்தின் அடுத்த  பெருந்தலைவர்  (கலீஃபா) யார் என்ற முடிவை எடுப்பதற்கு அவர்கள் கூட்டம் கூடியிருக்கிறார்கள்.  யார் தலைவராக இருக்கவேண்டும் என்ற முடிவை ஆரம்பத்தில் போட்டியின்றி ஒருமனதாக எடுக்கமுடியவில்லை.

தபரியின் சரித்திரம் புத்தகம், வால்யூம் 9 லிருந்து விவரங்கள்:

"இறைத்தூதர் அவர்கள் ரபிவுல் மாதம் இரண்டாம் நாள் திங்கட்கிழமையன்று காலமானார்கள்.  இறைத்தூதர் மரித்த அதே திங்கட்கிழமையன்று அபூ பக்கர் அவர்கள் தலைவராக இருப்பதற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது (பக்கம் 184).

உமர் எழுந்து நின்று இவ்விதமாக கூறினார்,  "உங்களில் யார் அபூ பக்கர் அவர்களை விட்டு வேறு பிரிந்துவிட்ட விரும்புகிறீர்கள்? ஆனால், இவருக்குத் தான் இறைத்தூதர் முன்னுரிமை கொடுத்தார்".  நானும் இவருக்கு என் ஆதரவைத் தருகிறேன் என்றார்.  உமருடைய வார்த்தைகளுக்கு  மக்கள் கீழ்படிந்தார்கள், அவர் சொன்னது போலவே செய்தார்கள்.  ஆனால், அன்சாரிகள் அல்லது அங்கிருந்தவர்களில் சிலர் "நாங்கள் அலி அவர்களுக்குத் தவிர வேறு யாருக்கும் எங்கள் ஆதரவை தரமாட்டோம்" என்று கூறினார்கள் (பக்கம் 186).

உமர் அவர்கள் அபூ பக்கர் அவர்களின் கரங்களை உயர்த்திப்பிடித்து, இவ்விதமாக கூறினார்கள், "என் அதிகாரம் உங்களுக்குத் தான், ஆதரவு உங்கள் அதிகாரத்திற்குத் தான்".  இதைக் கண்ட மக்களும் இதே போல தங்கள் ஆதரவை கொடுத்தார்கள். இந்த ஆதரவை உறுதிபடுத்தும்படி கேட்டுக்கொண்ட போது, அலியும் அல்ஜுபைரும்  ஒதுங்கி நின்றுவிட்டார்கள்.  ஜுபைர் தன் வாளை அதன் இடத்திலிருந்து உருவி, இவ்விதமாக கூறினார் "அலி அவர்கள் தலைவர் ஆவதற்கு முழு ஆதரவும் கிடைக்கும் வரை, இந்த வாளை அதன் உறையில் வைக்கமாட்டேன்".  இந்தச் செய்தி அபூ பக்கர் மற்றும் உமர் அவர்களுக்கு எட்டியது. அப்போது உமர் "அவனை  கல்லால் அடித்து, அவன் வாளை அவனிடமிருந்து பிடுங்கிக்கொண்டு வாருங்கள்" என்று கூறினார் (1). உமர் அங்கு விரைந்துச் சென்று,  ஜுபைரின் வாளை கட்டாயமாக பிடுங்கிக்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.  மேலும் "விருப்பமிருந்தாலும், இல்லாவிட்டாலும் தங்கள் ஆதரவை அபூ பக்கருக்கு கொடுத்தே ஆகவேண்டும்" என்று உமர் கூறினாராம் (பக்கங்கள் 188, 189).

குறிப்பு 1: அந்த நேரத்தில் ஜுபைர் ஃபாத்திமாவின் வீட்டில் இருந்தார். ஃபாத்திமா அலியின் மனைவியாவார்கள் மற்றும் முஹம்மதுவின் மகள் ஆவார்கள்)

அபூ பக்கர் அவர்கள் தங்கள் பேச்சை முடித்ததும், அன்சாரிகளில் ஒருவர் எழுந்து நின்று இவ்விதமாக கூறினார். . ."அன்சாரிகளாகிய எங்களில் ஒருவரும், குறைஷிகளாகிய உங்களில் ஒருவருமாக இரண்டு நபர்களை நாம் தலைவர்களாக ஏற்படுத்துவோம்". இதனால் அங்கு அமளியும் மக்களின் சத்தங்களும் அதிகமாகிவிட்டன.  உமராகிய நான் மிகவும் பயந்துவிட்டேன், எல்லோடும் அபூ பக்கருக்கு ஆதரவு கொடுக்காமல் இருந்துவிடுவார்களோ என்று பயந்து, நான் அபூ பக்கரை நோக்கி, "உங்கள் கரங்களை என்னிடம் நீட்டுங்கள், நான் உங்களுக்கு என் ஆதாரவை தருகிறேன்" என்று கூறினேன். அவரும் அப்படியே செய்தார், நான் அவர் கரங்களை பிடித்துக்கொண் டு என் ஆதரவை தெரிவித்தேன். இதனைக் கண்டு என்னைத் தொடர்ந்து முஜாஹிர்களும்,  அவர்களைத் தொடர்ந்து அன்சாரிகளும் தங்கள் ஆதரவை அபூ பக்கருக்கு கொடுத்தார்கள்.

இப்படி செய்த போது, நாங்கள் சயித் பி. உபதா என்பவரின் மீது பாய்ந்தோம், நாங்கள் அவரை கொன்றுவிட்டோம் என்று யாரோ சொன்னார்கள். நான் சொன்னேன் "அல்லாஹ் அவனை கொல்வானாக!". அபூபக்கருக்கு  எங்கள் ஆதரவை கொடுப்பதை விட மிகவும் வலிமை மிக்கது எதுவுமில்லை என்று இறைவனின் பெயரில் ஆணையிட்டு கூறுகிறேன். நாங்கள் எதற்கு பயந்தோம் என்றால், அந்த நேரத்தில் நாங்கள் எங்கள் ஆதரவை அபூ பக்கருக்கு கொடுக்காமல் இருந்திருந்தால், அதன் பிறகு  அவருக்கு மொத்த ஆதரவு கிடைத்து இருக்காது.  அதாவது நாங்கள் விரும்பாத அன்சாரிகளுக்கு ஆதரவு கொடுத்திருப்பார்கள், அல்லது அன்சாரிகளை எதிர்த்து இருந்திருப்பார்கள், இதனால் சட்டஒழுங்கு கெடுக்கப்பட்டு இருக்கும்" (பக்கம் 194).

இரண்டு 'அபூ' க்கள்:

இப்போது சரித்திர ஆசிரியர், தன் கவனைத்தை  அபூ சுஃப்யான் பக்கம் திருப்புகிறார்.  அபூ பக்கர் கலீஃபாவாக பதவி ஏற்பதைப் பற்றி அபூ சுஃப்யானின் கருத்து என்ன என்பதை தபரி கீழ்கண்ட விதமாக விவரிக்கிறார்.

அபூ சுஃப்யான் அலியிடம் இவ்விதமாக கூறினார், "குறைஷிகளில் மிகவும் தாழ்ந்த வம்சத்திடம் இந்த கலீஃபா பதவி கொடுக்கும் அளவிற்கு  நமக்கு என்ன ஆனது? இறைவனின் பெயரில் சத்தியமிட்டுக் கூறுகிறேன், நீங்கள் விருப்பினால், இந்த இடம் முழுவதும் போர் வீரர்களாலும், குதிரைகளாலும் நிரப்பிவிடுகிறேன்".  இதற்கு அலி பதில் அளித்தார்: "ஓ அபூ சுஃப்யான், நீண்ட காலமாக நீங்கள் இஸ்லாமுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக போர் புரிந்தவராக இருந்தீர், ஆனால் எந்த ஒரு தீயகாரியத்தையும் செய்ய உங்களால் முடியாமல் போனது. இந்த பதவிக்கு தகுதியானவராக அபூ பக்கரை நாங்கள் காண்கிறோம்  (பக்கம் 198)".

இறைத்தூதருக்கு பிறகு, அபூ பக்கர் அந்த பதவியை ஏற்ற போது,  அபூ சுஃப்யான் கூறியதாவது, "நமக்கும் அபூ ஃபசில் வம்சத்தாருக்கும் சம்மந்தமேது?  உண்மையில் இந்த தலைமைத்துவம் அப்த் மனாஃப் வம்சத்திற்கே உரியது". [அபூ சுஃப்யானின் மகன் யாஜித் ஆளுநர் ஆக்கப்பட்டபோது,] அவரிடம் "உம்முடைய மகனிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டது" என்று சொல்லப்பட்டது.  இதற்கு அபூ சுஃப் இப்படி பதில் அளித்தார், "அவர் தன் வம்சங்களுக்கிடையே உள்ள உறவை அன்புடன் பெலப்படுத்திக்கொண்டார்" (1). (பக்கம் 199)

குறிப்பு 1: யாஜித் மரித்தபிறகு, உமர் முஅவியாவை சிரியாவின் ஆளுநராக நியமித்த போது, அபூ சுஃப்யான் இதே வார்த்தைகளை கூறினார்.

மக்கள் தங்கள் ஆதரவை அபூ பக்கருக்கு கொடுக்க கூடியிருந்த நேரத்தில், அபூ சுஃப்யான் அங்கு வந்தார். அவர் வந்து "இறைவன் மீது சத்தியமாக, இந்த இடத்தில் புகையின் மேகம் இருப்பதை காண்கிறேன், ஒ அப்த் மனாஃப் வம்சத்தார்களே, உங்கள் காரியங்களை பார்ப்பதற்கு உங்கள் மீது தலைவராக மாறுவதற்கு அபூ பக்கர் எங்கேயிருந்து வந்தார்? மிகவும் பலவீனமான அலி மற்றும் அல்-அப்பாஸ் எங்கே?" என்று கூறினார். மேலும் அலியை நோக்கி, அபூ சுஃப்யான் "ஓ அபூ ஹசேன், உங்கள் கரங்களை உயர்த்துங்கள், நான் உங்களுக்கு என் ஆதரவைத் தருகிறேன்" என்று கூறினார். ஆனால், அலி இதனை மறுத்துவிட்டார். ஆகையால், அவர் மிகவும் புகழ்பெற்ற முத்தலமிஸின் பாடல் வரிகளை சரியாக அப்போது சொன்னார்:

"அவனுக்காக நியமித்த அவமானத்தில் யாரும் நிலைத்து இருக்கமாட்டார்கள், வெட்கமில்லாத இருவர் தவிர – அவர்களில் ஒருவர் வீட்டுக் கழுதை இன்னொருவர் கட்டையினால் ஆன கூடார ஆணியாகும்.

ஒரு பழைய கயிற்றினால் அடித்தால், அந்த வீட்டுக்கழுதை தன் அவமானத்திற்கு திரும்பும்.
கூடார ஆணியின் தலையை உடைத்தாலும், அதற்காக யாரும் துக்கம் கொண்டாடமாட்டார்கள்."


அலி அபூ சுஃப்யானை இப்படியாக கடிந்துக்கொண்டார், "இறைவன் மீது சத்தியமாக, நீங்கள் குழப்பம் உண்டாக்குவதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. நீண்ட காலமாக இஸ்லாமுக்கு தீமையையே நீங்கள் விரும்புகிறீர்கள். உங்களுடைய அறிவுரை எங்களுக்குத் தேவையில்லை (பக்கம் 199)".

அபூ பக்கருக்கு ஆதரவு கொடுக்கப்பட்டபோது, அபூ சுஃப்யான் அலியிடமும், அப்பாஸிடமும் "நீங்கள் இருவரும் வெட்கமில்லாதவர்கள்" என்று கூறினார், மேலும் கீழ்கண்ட பாடலை பாடிக்காண்பித்தார்.

"வீட்டுக்கழுதை தன் மேன்மையின்மையை அறியும்,
ஆனால், ஒரு விடுதலையான மனிதனும், ஒரு திடகாத்தரமான ஒட்டகமும் மேன்மையின்மையை எதிர்க்கும்."
"அவனுக்காக நியமித்த அவமானத்தில் யாரும் நிலைத்து இருக்கமாட்டார்கள், வெட்கமில்லாத இருவர் தவிர – அவர்களில் ஒருவர் வீட்டுக் கழுதை இன்னொருவர் கட்டையினால் ஆன கூடார ஆணியாகும்.

ஒரு பழைய கயிற்றினால் அடித்தால், அந்த வீட்டுக்கழுதை தன் அவமானத்திற்கு திரும்பும்.
கூடார ஆணியின் தலையை உடைத்தாலும், அதற்காக யாரும் துக்கம் கொண்டாடமாட்டார்கள்."


சுருக்கம்: 
முஹம்மது மரித்துவிட்டார். யார் அடுத்த தலைவர் என்பதில் கருத்து ஒற்றுமையில்லை.  அன்சாரிகளில் சிலர் ஏற்கனவே தங்கள் தலைவரை தங்களுக்குள் தெரிவு செய்வதற்கு முடிவு செய்துவிட்டார்கள், ஆனால், உமரும் அபூபக்கரும் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். உமர் முன்னுக்கு வந்து அபூ பக்கர் தான் அடுத்த கலீஃபா என்று முன்மொழிந்தார். கருத்து வேற்றுமை அதிகமாக இருந்தது, உமர் வெளிப்படையாக தன் ஆதரவை அபூ பக்கருக்கு கொடுத்த போது, சண்டையிட்டு, இரத்தம் சிந்துவதற்கான சூழ்நிலை வெகு தொலைவில் இல்லை என்ற சூழ்நிலை உருவாகியிருந்தது. உமரின் அடிச்சுவடிகளையே இதர முஸ்லிம்களும் பின்பற்றினர். அலியும் ஜுபைரும் தங்கள் அங்கீகாரத்தை கொடுக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர்.    அலி விரும்பினால், போர் வீரர்களை கொண்டுவந்து, அபூ பக்கர் கலீஃபா ஆவதை தன்னால் தடுக்கமுடியும் என்று அபூ சுஃப்யான் கூறினார், ஆனால் அலி மறுத்துவிட்டார்.  அலி அவர்களுக்காக கொலை செய்யவும் ஜுபைர் தயார் நிலையில் இருந்தார். அலி "தாம் கலீஃபா ஆக வேண்டும்" என்று தன் இருதயத்தின் ஆழத்தில் விரும்பினார், ஆனால், அந்த நேரத்தில் இரத்தம் சிந்தக்கூடாது என்று விரும்பியதால், அமைதியாக விட்டுக்கொடுத்தார். மக்காவின் வம்சங்களில் மிகவும் தாழ்ந்த  வம்சத்திலிருந்து வந்தவர் தங்கள் மீது ஆளுகை செய்வதை அபூ சுஃப்யான் விரும்பவில்லை.   இந்த தவறை சரி செய்வதற்கு எதிர் காலத்தில் இரத்தம் சிந்தவேண்டி வரும் என்று அபூ சுஃப்யான் முன்னறிந்து கண்டுக்கொண்டார்.


கலந்துரையாடல்:
இப்போது மறுபடியும் ஸூரா 8:63ஐ அலசுங்கள். முஸ்லீம்களின் உள்ளங்கள்  ஒன்றாக இணைக்கப்படவில்லை என்பதை நாம் காணமுடியும்.  இந்த வசனம் ஏதோ ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் கொடுக்கப்பட்ட வசனமாக இருக்கக்கூடும் அல்லது  இவ்வசனம் இரத்து செய்யப்பட்டு இருக்கக்கூடும், ஆனால் ஒருவிஷயம் மட்டும் தெளிவாக தெரிகின்றது, அது என்னவென்றால், முஹம்மதுவின் மரணத்திற்கு பின்பு, இஸ்லாமிய சமுதாயம் ஒற்றுமையாக வாழவில்லை, ஒருவருடைய கழுத்தில் இன்னொருவர் கத்தியை வைத்திருந்தார், இதுதான் உண்மை.

இந்த நிகழ்ச்சியைச் சுற்றியுள்ள சில முக்கியமான விஷயங்களை இப்போது காண்போம்.

1) தற்பெருமையும் இறுமாப்பும்:
அபூ பக்கர் இஸ்லாமிய சமுதாயத்தின் தலைவராக (கலீஃபாவாக) வரக்கூடாது என்று அபூ சுஃப்யான் எண்ணியதின் பின்னணி என்னவென்றால், அபூ பக்கர் ஒரு சிறிய அல்லது தாழ்ந்த வம்சத்திலிருந்து வந்தவர் என்பதாகும். சுஃப்யான் அபூ பக்கரை தாழ்வாக நினைத்தார். தம்மை விட அபூ பக்கர் தரத்தில் குறைந்தவர் என்று எண்ணினார்.  இதனால், அபூ பக்கரிடமிருந்து கட்டளைப் பெற்று அவருக்கு கீழ்படியவேண்டிய நிலையில் தாம் இருக்கக்கூடாது என்று சுஃப்யான் நினைத்தார்.

அபூ பக்கரை தலைவராக நியமித்தது, எதிர்காலத்தில் இரத்தம் சிந்தவேண்டிய நிலைக்கு இஸ்லாமிய சமுதாயத்தை தள்ளிவிடும் என்று அபூ சுஃப்யான் தன் உள்ளத்தில் நினைத்தார். சுஃப்யான் தன் கண்களை தலைவர் நாற்காலி மீதும் அதிகாரத்தின் மீதும் வைத்திருந்தார். இவர் ஒரு ஞானமிக்க அரசியல் தலைவராக சிந்தித்தார்.  எப்படி தலைவர் பதவியை பிடிப்பது என்பது பற்றி சுஃப்யான் நன்றாக அறிந்திருந்தார். மேலும் தன் மகன்களுக்கு அரசாங்கத்தில் உயர்ந்த இடத்தை பிடித்துத்தரவும், அரசியலில் வலிமையுள்ள குடும்பமாக தன் குடும்பம் இருக்கவும் இவர் விரும்பி, அதை அடையக்கூடிய வழிகளை ஆய்வு செய்துக்கொண்டு இருந்தார்.

2) கலகம் மற்றும் பணியாமை:
அபூ பக்கருக்கு தன் ஆதரவை கொடுக்கவேண்டும் என்று அலி அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டார். ஆனால், தன் உள்ளத்தில் அலி அபூ பக்கரை புறக்கணித்து இருந்தார். முஹம்மதுவின் நெருங்கிய நண்பராகவும், நம்பிக்கையானவராகவும் அபூ பக்கர் இருந்தார். இவர் கலீஃபா ஆவதை அலி விரும்பவில்லை, இருந்தபோதிலும், காலத்தின் கட்டாயத்தினால், அந்த சமயத்தில் அலி தன் ஆதரவை கட்டாயத்தின் பெயரில் அபூ பக்கருக்கு கொடுத்தார்.

அந்த நேரத்தில் இஸ்லாமிய சமுதாயத்தில் விரிசல்கள் ஏற்பட்டு இருந்தது. ஆனால், உமருடைய புத்திசாலித்தனமும், செயல்பாடுகளும் இஸ்லாமிய சமுதாயத்தில் ஏற்படயிருந்த உள்நாட்டு சண்டைகளையும் தற்காலிகமாக தடுத்துவிட்டது. முஸ்லிம்களின் உள்ளங்களுக்கிடையில் அன்பின் பிணைப்பை உண்டாக்கினேன் என்ற அல்லாஹ்வின் வார்த்தைகள் பொய்யாயின. பிணைப்பு உடைந்துவிட்டபடியால் அல்லாஹ் இவர்களை இணைக்கவேண்டிய விதம் பற்றி பாடம் கற்றுக்கொள்ளவேண்டி இருந்தது.

விமர்சனமும் கேள்விகளும்:

ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் வரும் எதிர்பாராத நிகழ்வுகள் போன்ற நிகழ்வுகள் இஸ்லாமிய சமுதாயத்திலும் ஆரம்ப காலத்திலிருந்தே நிகழ்வதை நாம் காணமுடியும்.  இஸ்லாமிய சமுதாயத்தின் தலைவர்களின் உள்ளங்களில் வெறுப்புணர்ச்சியும், பொறாமையும் கசப்பும் வேர்விட்டு படர்ந்து இருப்பதை காண முடியும். இன்னும் சிலரோ எதிர் காலத்தில் உள்நாட்டு கலவரங்கள் ஏற்படும் என்பதை நிச்சயமாக கணித்து இருந்தனர். இப்படிப்பட்ட அடிமட்ட மனோபாவங்கள் மற்றும் பதவி மீது, செல்வத்தின் மீது கொண்டு இருந்த பேராசைகள் இஸ்லாமிய சமுதாயத்தில் தீயவிளைவுகளை கொண்டு வர இருந்தது.

இங்கு கவனிக்கவேண்டிய முக்கிய குறிப்பு என்னவென்றால், இஸ்லாமிய சமுதாயத்தில் காணப்பட்ட இந்த வன்மையான கருத்து வேறுபாடுகள் ஒரு தீயசக்தியாகவே உருவெடுத்தது.  எதிர்காலத்தில் பல கொடுமையான தீய செயல்கள் நடைப்பெற இந்த கருத்துவேறுபாடுகள் வழிமொழிந்தது. முஹம்மதுவினால் மிகவும் சிறந்த முஸ்லிம்கள் என்று போற்றப்பட்ட இந்த இஸ்லாமிய தலைவர்களின் உள்ளங்களில் இந்த தீய நினைவுகள் எப்படி வேரூண்றி இருந்தது என்பதை நாம் மேன்மேலும் அடுத்தடுத்த ஆய்வுகளில் காண்போம்.

இந்த ஆரம்ப கால இஸ்லாமியர்களின் மத்தியில் "சகோதர அன்பு" என்ற ஒன்று இருந்திருக்கவேண்டாமா?

அலி கலீஃபாவாக ஆக வேண்டும் என்பதற்காக, இதர முஸ்லிம்களைக் கொல்ல தயாராக இருக்கிறேன் என்று ஏன் ஜுபைர் விரும்பவேண்டும்?

முஹம்மதுவின் மிகவும் நெருங்கிய நண்பரும், மிகவும் நம்பகததன்மை மிக்கவராகிய அபூ பக்கரை கலீஃபாவாக நியமித்த போது, ஏன் அலி அதனை விரும்பவில்லை?

அபூ பக்கர் காலிஃபாவாக மாறுவதை ஏன் அலியினால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை?  அலி தம்முடைய தீய எண்ணங்களை கட்டுப்படுத்தியிருக்கவேண்டாமா?

உலக அளவில் பார்க்கும் பொது,  பெரும்பான்மையான அரசியல் தலைவர்களை தெரிந்தெடுக்கும் மக்கள் மென்மையானவர்களாகவும், சகிப்புத்தன்மையுள்ளவர்களாகவும் இருக்கிறதை நாம் காணமுடியும்.  அல்லாஹ்வினால் உண்டாக்கப்பட்ட இஸ்லாம் என்ற அரசாங்கம், இதர மதசார்பற்ற அரசாங்களோடு ஒப்பிடும் போது, ஏன் இஸ்லாம் தரைமட்டும் தாழவிழுகிறது? இஸ்லாமியரல்லாத அரசாங்கத்தோடு ஒப்பிடும் போது, இஸ்லாமிய அரசாங்கத்தில் ஏன் இப்படிப்பட்ட கீழ்தரமான நிகழ்வுகள் நடைப்பெற்றுள்ளது?

நூற்குறிப்புக்கள்:
2)      al-Tabari, "The History of al-Tabari", (Ta'rikh al-rusul wa'l-muluk), State University of New York Press  1993

ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/Silas/rf2_newking.htm

சைலஸ் அவர்களில் இதர கட்டுரைகள்