ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

 1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
 2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
 3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
 4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
 5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
 6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
 7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
 8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
 9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
 10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
 11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
 12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
 13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
 14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
 15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
 16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
 17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
 18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
 19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
 20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
 21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
 22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
 23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
 29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
 30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
 31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
 32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
 33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
 34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
 35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
 36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
 37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
 38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
 39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
 40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
 41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
 42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
 43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
 44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
 45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
 46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
 47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
 48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
 49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
 50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
 51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
 53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
 54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
 55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
 56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
 57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

 1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
 2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
 3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
 4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
 5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
 6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
 7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
 8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
 9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
 10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
 11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
 12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
 13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
 14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
 15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
 16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
 17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
 18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
 19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
 20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
 21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
 22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
 23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
 24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
 25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
 26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
 27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
 28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
 29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
 30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
 31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
 32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
 33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
 34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
 35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
 36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
 37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
 38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
 39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
 40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
 41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
 43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
 44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
 45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
 46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
 47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
 48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
 49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

சனி, 11 டிசம்பர், 2021

குர்‍ஆன் 3:18 - இஸ்லாமின் உண்மையான ஷஹதா எது? முஸ்லிம்கள் ஏன் பாதி ஷஹதாவைச் சொல்கிறார்கள்?

இஸ்லாமின் ஐந்து தூண்களில் முதலாவது தூண், ஷஹதா என்றுச் சொல்லக்கூடிய 'விசுவாச அறிக்கை/சாட்சியம் கூறுதல்/சாட்சிப்பிரமாணம்' ஆகும். இதனை கலிமா என்றும் கூறுவார்கள்.

ஒருவர் இஸ்லாமை தழுவும் போது, இந்த சாட்சியம் அல்லது ஷஹதாவை கூறவேண்டும், அப்போது தான் அவர் 'இஸ்லாமை ஏற்றதாக கருதப்படும்'.  அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மது அல்லாஹ்வின் இறைத்தூதர் என்றும் சாட்சியம் சொன்னால் தான், அவரை முஸ்லிமாக கருதுவார்கள். மேலும், இதனை அவர் அரபியில் சொல்லவேண்டும் அதாவது அரபியில் அறிக்கையிடவேண்டும். 

தமிழில் இதன் பொருளை புரிந்துக்கொண்டாலும், அரபியில் சொன்னால் தான் அல்லாஹ் அங்கீகரிப்பான்.

முஸ்லிம்களின் சிந்தனைக்கு ஒரு கேள்வி: ஒருவர் ஷஹதாவை தமிழிலோ, அல்லது அரபி அல்லாத வேறு மொழியிலோ சொல்லி, இஸ்லாமை ஏற்றதை நான் இதுவரை கண்டதில்லை, வாசகர்கள் யாராவது கண்டிருந்தால், தெரிவிக்கவும். ஒருவர் இஸ்லாமை தழுவும் போது, அரபியில் ஷஹதா சொல்லாமல் தன்னுடைய தாய் மொழியில் சொன்னால், அதனை இஸ்லாம் ஏற்குமா? அவரை முஸ்லிமாக இஸ்லாமிய சமுதாயம் கருதுமா? உலக மக்கள் அனைவருக்காகவும் அல்லாஹ் வகுத்த மார்க்கம் இஸ்லாம் என்று சொல்லும் நீங்கள், தன் தாய் மொழியில் சாட்சி பிரமாணம் சொல்ல அனுமதிப்பதில்லை ஏன்? அப்படியானால், இஸ்லாம் ஒரு அரேபிய மக்களுக்கான மார்க்கமேயன்றி, உலக மார்க்கம் என்று எப்படி சொல்லமுடியும்?

சரி, இப்போது நம்முடைய ஆய்வுக்கு வருவோம்.

இது தான் ஷஹதா: 

 • அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நான் சாட்சி கூறுகிறேன் மற்றும் முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி கூறுகிறேன்.
 • Arabic Transliteration: "Ashhadu an la ilaha illa 'llah; ashhadu anna Muhammadan rasulu 'llah"
 • English: "I witness that there is no god but Allah, and Muhammad is the messenger of Allah."

இன்று ஒரு சிறிய முஸ்லிம் கூட்டம் இருக்கிறார்கள், இவர்களின் படி, மேலே சொன்ன ஷஹதா என்பது தவறானதாகும், இது ஷிர்க் என்றுச் சொல்லக்கூடிய அளவுக்கு பெரிய பாவமாகும். ஏனென்றால், அல்லாஹ்வோடு சேர்த்து, முஹம்மதுவின் பெயரும் வருவதினால், இது தவறானது என்று கூறுகிறார்கள். முஹம்மது என்பவர் அல்லாஹ்வின் தூதர் தான், ஆனால், 'ஷஹதாவில்' அவரது பெயரை சேர்த்தால், அது ஷிர்க் ஆகிவிடும் என்று கூறுகிறார்கள் இவர்கள்.

கீழ்கண்ட குர்‍ஆன் வசனத்தின் படி, "ஷஹதா" என்பது "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை" என்றுச் சொல்வது மட்டுமே என்று அவர்கள் கூறுகிறார்கள். 

மலக்குகளும், அறிவுரையோரும் எப்படி ஷஹதா சொல்லவேண்டும்? "அவனைத்(அல்லாஹ்வைத்)தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை" என்று சாட்சி கூறவேண்டும். இதோடு கூட வேறு எதையும் சேர்க்கக்கூடாது.

பார்க்க குர்‍ஆன் 3:18. 

குர்‍ஆன் 3:18 அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன்.

இந்த வசனத்தின்படி, சாட்சியம் கூறும் போது, "முஹம்மதுவையும் சேர்த்துச் சொல்லவேண்டும்" என்ற விவரங்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை.

இதே போன்று, "அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை" என்ற சொற்றொடர்கள் இன்னும் சில இடங்களில் குர்‍ஆனில் வருகின்றது.  ஆனால், எந்த ஒரு வசனத்திலும், அதோடுகூட "முஹம்மது அல்லாஹ்வின் இறைத்தூதர்" என்று சேர்த்து எங்கும் குர்‍ஆனில் வருவதில்லை.

குர்‍ஆன்  37:35. "அல்லாஹ்வைத் தவிர நாயன் இல்லை" என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், மெய்யாகவே அவர்கள் பெருமையடித்தவர்களாக இருந்தனர்.

குர்‍ஆன்  47:19. ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக; இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களான ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக - அன்றியும் உங்களுடைய நடமாட்டத்தலத்தையும் உங்கள் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கறிகிறான்.

மேலும், ஷஹதாவின் இரண்டாவது பாகம், கீழ்கண்ட வசனத்திலிருந்து எடுக்கப்பட்டதென்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள். இந்த வசனத்தில் முதலாவது வாக்கியத்தைப் பார்க்கவும்.

குர்‍ஆன்  48:29. முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; . . .  

ஆனால், ஹதீஸ்களில், முஸ்லிம்கள் இன்று கூறுவது போன்று ஷஹதா உள்ளது. 

உண்மையாகவே ஷஹதாவில் முஹம்மதுவின் பெயரை சேர்த்து பயன்படுத்தவேண்டுமென்றால், குர்‍ஆனில் அல்லாஹ் சொல்லியிருக்கவேண்டுமல்லவா? ஒரு வேளை 'எல்லாவற்றையும் குர்‍ஆனில் எழுதியே இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை, நாங்கள் ஹதீஸ்களிலிருந்துகூட எடுத்துக்கொள்வோம்' என்று முஸ்லிம்கள் பதில் சொல்லக்கூடும், இந்த கூற்று உண்மை தான். ஆனால், இஸ்லாமின் முதல் தூண் என்றும், முஸ்லிம்களின் முதல் கடமையென்றும், இஸ்லாமிய மார்க்கத்தை தழுவுகிறவர்களின் முதல் படியென்றும் கூறப்படும் 'சாட்சியம் கூறுதல்' குர்‍ஆனில் இருக்காது, ஆனால், இஸ்லாம் தோன்றி 200 ஆண்டுகளுக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட, பல இலட்சக்கணக்கான பொய்கள் கலந்திருக்கும் ஹதீஸ்களிலிருந்து நாங்கள் எடுத்துக்கொள்வோம் என்று முஸ்லிம்கள் சொல்வது, அறிவுடமைக்கும் ஏற்காத ஒன்றாக தெரிகின்றது.

குர்‍ஆனின்படி அல்லாமல், ஹதீஸ்களின்படி ஷஹதா சொல்கிறார்கள் முஸ்லிம்கள்:

முஸ்லிம்கள், குர்‍ஆனிபடி ஷஹதா (சாட்சியம்) கூறவேண்டுமென்றால், வெறும் "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை" என்று மட்டுமே கூறவேண்டும். ஆனால், அவர்கள் ஹதீஸ்களில் உள்ளது போன்று ஷஹதா கூறுகிறார்கள்.

புகாரி எண்: 8. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இஸ்லாம் ஐந்து தூண்கள்மீது எழுப் பப்பட்டுள்ளது. 1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதிமொழிவது. 2. தொழுகையைக் கடைப்பிடிப்பது. 3. (கடமையானோர்) ஸகாத் (கட்டாய தர்மம்) வழங்குவது. 4. (இயன்றோர் இறையில்லம் கஅபாவில்) ஹஜ் செய்வது. 5. ரமளானில் நோன்பு நோற்பது. இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இன்னும் அனேக ஹதீஸ்கள் இதைப் பற்றி கூறுகின்றது.

ஷஹதாவில் ஈசா, சொர்க்கம், நரகம் பற்றியும் வரவேண்டுமா?

இப்போது அதிகாரபூர்வமான "புகாரி மற்றும் முஸ்லிம்" ஹதீஸ்களின் படியுள்ள சாட்சியம் பற்றி பார்ப்போம்.

கீழ்கண்ட ஹதிஸ்களின் படி ஷஹதாவில், அல்லாஹ், முஹம்மது, ஈஸா, சொர்க்கம் மற்றும் நரகம் என்ற ஐந்து காரியங்கள் வரவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இவைகள் பொய்யான ஹதீஸ்கள் என்று யாரும் கூறமாட்டார்கள்.

புகாரி எண் 3435. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; அவன் தனித்தவன் அவனுக்கு இணை கிடையாது' என்றும் முஹம்மத் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்' என்றும் 'ஈசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்' என்றும், 'அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன (யிஆகுக!› என்னும்) ஒரு வார்த்தை(யால் பிறந்தவர்)› என்றும், 'அவனிடமிருந்து உருவான ஓர் உயிர்' என்றும், சொர்க்கம் (இருப்பது) உண்மை தான்' என்றும், நரகம் (இருப்பது) உண்மை தான்' என்றும், எவர் (சொல்லால் உரைத்து, உள்ளத்தால் நம்பி) உறுதிமொழி கூறுகின்றாரோ அவரை அல்லாஹ் அவருடைய செயல்களுக்கேற்ப சொர்க்கத்தில் புகுத்துவான்.

இதை உபாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இப்னு ஜாபிர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ''அவரை அல்லாஹ், சொர்க்கத்தின் எட்டு வாசல்களில் தான் விரும்பிய வாசல் வழியாக அனுமதிப்பான்" எனறு கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

முஸ்லிம் எண்: 46. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையாளன் யாருமில்லை. முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவேன்; (இறைத் தூதர்) ஈசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய அடிமையின் புதல்வரும் ஆவார்; அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன ("ஆகுக" எனும்) ஒரு வார்த்தை(யில் பிறந்தவர்); அவனிடமிருந்து (ஊதப்பட்ட) ஓர் உயிர்சொர்க்கம் உண்மை; நரகம் உண்மை என்றெல்லாம் யார் உறுதிமொழி கூறுகின்றாரோ அவரைச் சொர்க்கத்தின் எட்டு வாசல்களில் தான் நாடிய வாசல் வழியாக அல்லாஹ் நுழைவிப்பான்.

இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆனால், (அதன் இறுதியில்) "அவரை அல்லாஹ் அவருடைய செயல்களுக்கேற்ப சொர்க்கத்தில் நுழைவிப்பான்" என்று இடம்பெற்றுள்ளது. "சொர்க்கத்தின் எட்டு வாசல்களில் தான் நாடிய வாசல் வழியாக நுழைவிப்பான்" என்பது இடம்பெறவில்லை.

நன்றாக கவனியுங்கள் புகாரியில் "எவர் (சொல்லால் உரைத்து, உள்ளத்தால் நம்பி) உறுதிமொழி கூறுகின்றாரோ" என்றும்,  முஸ்லிம் ஹதீஸில் "யார் உறுதிமொழி கூறுகின்றாரோ" என்றும் வருகிறது. அதாவது, இப்படி உறுதி மொழி எடுக்கும் எவராக இருந்தாலும் சரி, அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் புகுத்துவான் என்று ஹதீஸ்கள் பதிவு செய்கின்றன, அவர்கள் முஸ்லிம்களாகிவிடுகிறார்கள் என்று முஹம்மது சொல்கிறார். இப்படி ஷஹதா சொல்வது ஷிர்க் என்று யாராவது கூறமுடியுமா? இது அங்கீகரிக்கப்படாத ஒன்று என்று கூறமுடியுமா?

இஸ்லாமின் முழுமையான ஷஹதா எது?

நாம் மேலே கண்ட ஹதீஸும் அதிகார பூர்வமானதாகும், இதன் படி முழுமையான (100%) ஷஹதா என்பது, கீழ்கண்ட 7 வகையான வாக்கியங்கள் கொண்டது.

 1. 'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; அவன் தனித்தவன் அவனுக்கு இணை கிடையாது'
 2. 'முஹம்மத் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்'
 3. 'ஈசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்'
 4. 'அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன ஒரு வார்த்தை ஈசா ஆவார்'
 5. 'அல்லாஹ்விடமிருந்து உருவான ஓர் உயிர் ஈசா ஆவார்'
 6. 'சொர்க்கம் உண்மை'
 7. 'நரகம் உண்மை'

மேற்கண்ட ஏழு வாக்கியங்கள் கொண்ட ஷஹதா (சாட்சியம்) தான் 100% முழுமையான ஷஹதா. ஆனால், இன்று முஸ்லிம்கள் சொல்லும் ஷஹதா, பாதி ஷஹதா தான், சரியாகச் சொல்லவேண்டுமென்றால், பாதிக்கும் குறைவான ஷஹதா ஆகும். 7 வாக்கியங்களில், 2 வாக்கியங்களைத் தான் இன்று முஸ்லிம்கள் ஷஹதாவாக‌ சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள், அதாவது 28.5% ஷஹதாவைத் தான் முஸ்லிம்கள் சொல்கிறார்கள் (100/7x2 = 28.5%).

இது கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாமை தழுவுகிறவர்களின் ஷஹதாவா?

மேற்கண்ட ஷஹதா கிறிஸ்தவர்களுக்குத் தான் என்று சில முஸ்லிம்கள் கூறக்கூடும். ஆனால், இது கிறிஸ்தவர்களுக்குத் தான் என்று மேற்கண்ட ஹதிஸ்களும் முஹம்மதுவும் சொல்லவில்லை என்பதை கவனிக்கவேண்டும், இதற்கு எந்த சான்றுமில்லை.  மேலும் எல்லா மக்களையும் உள்ளடக்கும்வகையில் "எவர் இப்படி கூறுகின்றாரோ" என்று ஹதீஸில் தெளிவாக கூறப்பட்டுள்ளதால், இது கிறிஸ்தவர்களுக்கான ஷஹதா இல்லை என்று கூறலாம்.

முடிவுரை: முஸ்லிம்கள் எதை ஷஹதாவாக பயன்படுத்துவது?

இதுவரை நாம் ஆய்வு செய்த விவரங்களிலிருந்து மூன்று வகையான ஷஹதா இருப்பதாக அறிகிறோம்.

ஹதீஸ்கள் சொல்லும் இரண்டாம் வகையான " பாதி ஷஹதாவை" முஸ்லிம்கள் சொல்கிறார்கள், முழுமையான ஷஹதாவை சொல்வதில்லை, அதையும் ஆதார பூர்வமான ஹதீஸ்களே சொல்கின்றன. இந்த முழுமையான ஷஹதா எந்த வகையிலும் குர்‍ஆனின் அடிப்படை கோட்பாடுகளுக்கு முரணானதும் அல்ல. குர்‍ஆனுக்கு முரண்படும் வகையில் முஹம்மது எதையும் போதிக்கமாட்டார் என்று முஸ்லிம்கள் நன்கு அறிவார்கள், சரி தானே! அப்படியானால், ஏன் முழுமையான ஷஹதாவை முஸ்லிம்கள் அறிக்கையிடுவதில்லை?

முழுமையான ஷஹதாவை முஸ்லிம்கள் ஏன் பயன்படுத்துவதில்லை என்ற காரணத்தை கூறுவார்களா? 

குறைந்தபட்சம் குர்‍ஆன் சொல்லும் ஷஹதாவையாவது ஏன் முஸ்லிம்கள் பயன்படுத்துவதில்லை என்ற காரணத்தைச் சொல்வார்களா?

மேலும், ஒரு கேள்வி இன்னும் பதில் அளிக்கப்படாமல் இருக்கிறது. ஆதாம் முதல் முஹம்மது வரை, பல முக்கியமான நபிகளை அல்லாஹ் அனுப்பியிருக்கும் போது, அதாவது இப்றாஹீம், மூஸா, தாவூத், சுலைமான், யஹ்யா போன்ற முக்கியமானவர்கள் இருக்கும் போது, மேற்கண்ட முழுமையான ஷஹதாவில் "ஈசாவிற்கு" மட்டும் ஏன் இடம் கொடுக்கப்பட்டுள்ளது? அப்படியென்ன ஈசா சிறந்தவராக அல்லாஹ்விற்கு தென்பட்டுள்ளார்? ஒருவேளை ஈசா 'அல்லாஹ்வின் வாக்காகவும், அல்லாஹ்வின் ஆன்மாவாகவும்("கலிமதுல்லாஹ் மற்றும் ரூஹ‌ல்லாஹ்")' இருப்பதாலா'?

தேதி: 11th Dec 2021


குர்‍ஆனின் இதர ஆய்வுக் கட்டுரைகள்

குர்‍ஆன் பக்கம்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/arabic_quran/half_shahada.html


திங்கள், 22 நவம்பர், 2021

குர்‍ஆன் 3:183 - அல்லாஹ்வின் அறியாமை – யூதர்களின் நபித்துவ‌ சோதனையில் தோல்வியுற்ற முஹம்மது

முஹம்மது யூதர்களோடு புரிந்த சில வாதங்களை குர்ஆன் பதிவு செய்கிறது. முஹம்மது ஒரு நபி என்பதை யூதர்கள் நம்ப மறுத்தார்கள் பல நேரங்களில் அவரிடமிருந்து சில அற்புதங்களை எதிர்பார்த்தார்கள். முஹம்மது அற்புதம் செய்யாதபோது அவரை நபி என்று ஏற்க மறுத்தார்கள். அவர் கொண்டு வந்த குர்‍ஆனை இறைவசனம் என்று நம்பவில்லை.

இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளிலிருந்து ஒரு நிகழ்ச்சியை இப்பொழுது காண்போம்.

குர்‍ஆன் 3:183ஐ படிப்போம்.

3:183. மேலும் அவர்கள், "எந்த ரஸூலாக இருந்தாலும், அவர் கொடுக்கும் குர்பானியை(பலியை) நெருப்பு சாப்பிடு(வதை காண்பிக்கு)ம் வரை அவர் மீது நாங்கள் விசுவாசம் கொள்ள வேண்டாம்" என்று அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளான்" என்று கூறுகிறார்கள். (நபியே!): "எனக்கு முன்னர் உங்களிடம் வந்த தூதர்களில் பலர், தெளிவான ஆதாரங்களையும், இன்னும் நீங்கள் கேட்டுக்கொண்ட (படி பலியை நெருப்பு உண்ப)தையும் திடமாகக் காண்பித்தார்கள். அப்படியிருந்தும் ஏன் அவர்களை நீங்கள் கொன்றீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள்" என்று நீர் கூறும். (முஹம்மது ஜான் தமிழாக்கம்).

இந்த வசனத்தில் யூதர்களிடம் அல்லாஹ் ஒரு வாக்குறுதியை வாங்கினான் அல்லது ஒரு கட்டளையை கொடுத்தான் என்று யூதர்கள் கூறுவதாக வருகிறது. அதாவது ஒரு நபியை நீங்கள் (யூதர்கள்) இறைதூதராக நம்ப வேண்டுமென்றால் அவர் அற்புதம் செய்ய வேண்டும் அதிலும் முக்கியமாக ஒரு பலியை (குர்பானியை) வானத்திலிருந்து வருகின்ற நெருப்பு சுட்டெரிக்கும் படியான அற்புதம் அவர் செய்ய வேண்டும். அப்போதுதான் அவரை நீங்கள் இறைதூதராக நம்பவேண்டும் என்று அல்லாஹ் கூறியதாக யூதர்கள் இவ்வசனத்தில் சொல்கிறார்கள். 

முஹம்மது ஜான் தமிழாக்கம் இந்த விளக்கத்தை சரியாக சொல்லாவிட்டாலும்  IFT மொழியாக்கம் ஓரளவுக்கு சரியாக இதனை மொழியாக்கம் செய்துள்ளது.

3:183. "(திடீரென்று வரும்) நெருப்பு கரித்து விடுகின்ற வண்ணம் ஒரு குர்பானியை (பலியை) எங்கள் கண்ணெதிரே கொண்டு வரும் வரை எந்த ஒருவரையும் இறைத்தூதராக ஏற்றுக்கொள்ள வேண்டாமென்று திண்ணமாக அல்லாஹ் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளான்" என்று சொன்னவர்களிடம் (நபியே!) நீர் கூறும்: "நிச்சயமாக எனக்கு முன்பு உங்களிடையே தூதர்கள் பலர் தெளிவான பல சான்றுகளுடன் வந்திருந்தனர். (ஏன்) நீங்கள் இப்பொழுது குறிப்பிடுகின்ற சான்றினையும் கூட அவர்கள் கொண்டு வந்தனர். (இறைநம்பிக்கை கொள்வதற்கு இதனை ஒரு நிபந்தனையாய்க் கூறுவதில்) நீங்கள் உண்மையாளர்களாயிருந்தால், பிறகு அத்தகைய தூதர்களை ஏன் கொலை செய்தீர்கள்?"  (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்)

இந்த மொழியாக்கத்தில் "(திடீரென்று வரும்) நெருப்பு கரித்து விடுகின்ற வண்ணம்" என்று குறிப்பிடுவது எதை என்றால், இறைத்தூதர் "வானத்திலிருந்து அற்புதமாக‌ நெருப்பைக் கொண்டுவந்து"  அந்த ஆடு/மாடு பலியை எரிக்கவேண்டும். 

இந்த வசனத்தில் சொல்லப்படும் நிகழ்ச்சி குர்‍ஆனில் எங்கு உள்ளது? அந்த நபி யார்? என்று நாம் தேடிப் பார்க்கும் போது நமக்கு அது கிடைக்காது. இதைப்பற்றி அறிய வேண்டுமென்றால் யூதர்களின் பழைய ஏற்பாட்டில் தான் தேடிப்பார்க்க வேண்டும் இதைப்பற்றி தான் குர்ஆனும் இங்கு கூறுகிறது.

பைபிளிலிருந்து சில சான்றுகள்:

வானத்திலிருந்து அக்கினியை கொண்டு வந்து ப‌லிகளை எரிக்கும் அற்புதம் பற்றிய சில விபரங்களை பைபிளிலிருந்து இப்பொழுது பார்ப்போம், அதன்பிறகு குர்ஆனின் இந்த வசனத்தை ஆய்வு செய்வோம்.

பழைய ஏற்பாட்டின் படி பல நேரங்களில் தீர்க்கதரிசிகளின் மற்றும் நியாயாதிபதிகளின், அரசர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அல்லது அவர்களுக்காக‌ வானத்திலிருந்து அக்கினி வந்து பலிகளை எரித்தது உண்மை தான்.

பார்க்க‌: 

 1. லேவியராகமம் 9:23-24 (Leviticus)
 2. நியாயாதிபதிகள் 6:20-2 (Judges)
 3. 1 நாளாகமம் 21:26 ( 1 Chronicles)
 4. 2 நாளாகமம் 7:1-3 (2 Chronicles)
 5. 1 ராஜாக்கள் 18 (1 Kings)

மேலும் யூதர்களிடம் பைபிளின் தேவன் ஒரு தீர்க்கதரிசியை எப்படி பரிசோதித்துப் பார்ப்பது அல்லது அடையாளம் கண்டு கொள்வது என்பது குறித்தும் நிபந்தனைகளை கொடுத்திருக்கிறார். ஆனால் ஒரு இறைத்தூதரை கண்டுபிடிப்பதற்கு நிச்சயமாக வானத்திலிருந்து அக்கினி வந்து பலிகளை எரித்தால் தான் நீங்கள் "அவரை நபி என்று நம்ப வேண்டும்" என்ற ஒரு நிபந்தனையை அவர் கொடுக்கவில்லை. தீர்க்கதரிசி என்பவர்கள் அற்புதங்கள் செய்ய வேண்டும் அவர்கள் தீர்க்கதரிசனங்கள் சொன்னால் அவைகள் நிறைவேற வேண்டும் போன்ற நிபந்தனைகளை சொல்லி இருக்கின்றார். ஆனால் வானத்திலிருந்து அக்கினி வந்து பலிகளை எரித்தால் தான், இந்த ஒரு அற்புதத்தை செய்தால் தான் "அவரை தீர்க்கதரிசி என்று நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்" என்ற கட்டளையை தேவன் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியின் போது (1 ராஜாக்கள் 18வது அத்தியாயம்) எலியா தீர்க்கதரிசி வானத்திலிருந்து அக்கினியை கொண்டு வந்து பலிகளை எரித்துக் காட்டி யெகோவா தேவன் தான் மெய்யான தேவன் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார். ஆனால் இந்த அற்புதத்தையே ஒவ்வொரு தீர்க்கதரிசியும் செய்து நிரூபிக்க வேண்டும் என்ற கட்டளை மட்டும் பழைய ஏற்பாட்டில் இல்லை.

குர்‍ஆன் 3:183ன் படி யார் பொய் சொன்னார்கள்?

இந்த வசனத்தில் யூதர்கள் சொல்வது போன்று ஒரு உடன்படிக்கையை தேவன் யூதர்களோடு செய்யாதபோது, இந்த வசனத்தின்படி யார் உண்மை சொல்கிறார்கள்? யார் பொய் சொல்கிறார்கள்?

 • யூதர்கள் சொல்வது பொய்யா? அல்லது 
 • அறியாமையில் இந்த வசனம் பொய் சொல்கிறதா? அதாவது குர்ஆன் ஆக்கியோன் யூதர்கள் சொல்லாத ஒன்றை யூதர்கள் சொல்வது போன்று குர்‍ஆனில் இந்த வசனத்தில் கூறியுள்ளானா?

முஹம்மது ஒரு பொய் நபி:

யூதர்கள் சொல்லாத ஒன்றை சொன்னதாக சொல்லி, இந்த வசனத்தில் இவ்விவரங்களை முஹம்மது சேர்த்து இருந்தால், அவர் ஒரு பொய் நபி என்று உறுதியாகின்றது.

யூதர்கள் பொய் சொல்லியிருந்தால்!?

ஒருவேளை பழைய ஏற்பாட்டில் தேவன் சொல்லாத ஒன்றை சொன்னதாக யூதர்கள் பொய் சொல்லியிருந்தால், முஹம்மதுவிற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது, அதாவது பழைய ஏற்பாட்டில் தேவன் இப்படிப்பட்ட கட்டளையை கொடுக்கவில்லை ஆனால் நீங்கள் அவர் மீது பொய் சொல்கிறீர்கள் என்று எடுத்துக்காட்டி தன்னுடைய இறைத்தூது உண்மை என்பதை அவர் உறுதிப்படுத்தி இருந்திருக்கலாம், இதன் மூலமாக தான் ஒரு நபி என்று அவர் நிரூபித்து இருந்திருக்கலாம்.

ஆனால் மேற்கண்ட குர்ஆன் வசனத்தின் படி இப்படி அல்லாஹ் செய்யவில்லை முகம்மதுவும் செய்யவில்லை! இதன் அர்த்தம் என்ன?  அல்லாஹ்விற்கும் முஹம்மதுவிற்கும் முந்தைய வேதம் பற்றிய அறிவு இல்லை என்பதுதானே! உண்மையாகவே யெகோவா தேவன் தான் "அல்லாஹ்" என்பது உண்மையானால், யூதர்களின் இந்த பொய்யை அவர் கண்டுபிடித்து இருந்திருப்பாரே? யூதர்கள் எதைச் சொன்னாலும் அதை அப்படியே ஒப்புக் கொண்டு பதில் சொல்வது தான் இவர்களின் வாடிக்கையாக இருந்துள்ளது. இதுதான் வஹியா? இதுதான் இறைவேதமா?

அல்லாஹ் உண்மையான இறைவனாக இருந்திருந்தால், இப்படிப்பட்ட சூழலில் அல்லாஹ் என்ன செய்து இருந்திருக்க வேண்டும்? யூதர்கள் ஒரு தவறான விஷயத்தை சொன்னபோது அல்லாஹ் கீழ்கண்ட விதமாக வசனத்தை இறக்கியிருந்திருக்கவேண்டும்.

"யூதர்களே நான் உங்களிடம் இப்படிப்பட்ட வாக்குறுதியை ஒருபோதும் செய்யவில்லை, உங்கள் முன்னோர்களிடமும் செய்யவில்லை. இதை நம்பாதவர்கள் முந்தைய வேதத்தை படித்து பார்த்துக் கொள்ளட்டும். ஒரு இறைத்தூதரை உண்மையான‌ இறைத்தூதர் என்று கண்டுபிடிப்பதற்கு அற்புதங்கள் வேண்டும் என்று சொன்னேனே தவிர, வானத்திலிருந்து அக்கினியை கொண்டுவந்து ஒரு குர்‍பானியை/பலியை எரிக்க வேண்டும் என்ற அற்புதத்தை கண்டிப்பாக செய்யவேண்டும் என்று நான் சொல்லவில்லை, எனவே நீங்கள் பொய் சொல்கிறீர்கள். முஹம்மதுவே! இவர்கள் சொல்வதை நம்ப வேண்டாம்.

முஹம்மதுவின் தர்மசங்கட நிலை:

முஹம்மது தம்மை நபி என்று சொல்லிக் கொண்ட நாள் முதல் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மூலமாக பல எதிர்ப்புகளுக்கு அவர் ஆளானார். தம்மை ஒரு தீர்க்கதரிசி என்று அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னும் யூதர்கள் ஒருபடி மேலே சென்று மூஸாவை போன்று மற்ற தீர்க்கதரிசிகளை போன்று நீர் அற்புதம் செய்தால்தான் நாம் நம்புவோம் என்று சொன்னார்கள். ஆனால் ஒரு முறையும் அவரால் அற்புதம் செய்ய முடியவில்லை. 

ஒரு பக்கம் முந்தைய வேதங்களில் குறிப்பிடப்பட்ட தீர்க்கதரிசிகளை போன்று தாமும் ஒரு தீர்க்கதரிசி தான் என்று சொல்லிக்கொண்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் செய்து காட்டியது போன்று ஒரு அற்புதமும் இவரால் செய்ய முடியவில்லை. இதனால் அவரை நபியென்று யூதர்களும் கிறிஸ்தவர்களும் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.

 • முஹம்மதுவிடம் அற்புதங்களை எதிர்ப்பார்த்த யூத கிறிஸ்தவர்கள்: பார்க்க குர்‍ஆன் 2:118, 6:37, 10:20, 11:12, 13:7, 13:27, 20:133, 29:50

நம்முடைய இறைத்தூதரால் அற்புதம் செய்து காட்ட முடியாது, ஏனென்றால் அவர் ஒரு எச்சரிக்கை செய்பவர் மட்டும்தான் என்ற ஒரு பதிலை அல்லாஹ் கூறினான். அதேபோன்று இன்னொரு பதிலையும் அல்லாஹ் கூறினான் அதாவது ஒருவேளை அவர் அற்புதம் செய்து காட்டினாலும் நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்பது தான் அது.  

 • பார்க்க: குர்‍ஆன் 2:145, 17:59, 28:48, 37:14-15

இப்போது நாம் ஆய்வு செய்து கொண்டு இருக்கும் வசனமும் இந்த இரண்டாம் வகை பதிலை சார்ந்ததுதான்.  அதாவது முந்தைய நபிமார்களுக்கு அவர்கள் கேட்டுக் கொண்டபடி வானத்திலிருந்து அக்கினி கொண்டு வந்து பலியை எரிக்க செய்தாலும் அதன் பிறகும் யூதர்களாகிய நீங்கள் அதை நம்பவில்லை, அவர்களை கொலையும் செய்தீர்கள். ஆகையால் இப்பொழுது நான் அப்படிப்பட்ட ஒரு அற்புதத்தை முஹம்மது மூலமாக செய்ய முடியாது என்பதுதான் இவ்வசனம் கூறும் சுருக்கமாகும்.

குர்‍ஆன் 3:183ஐ படிப்போம்.

3:183. மேலும் அவர்கள், "எந்த ரஸூலாக இருந்தாலும், அவர் கொடுக்கும் குர்பானியை(பலியை) நெருப்பு சாப்பிடு(வதை காண்பிக்கு)ம் வரை அவர் மீது நாங்கள் விசுவாசம் கொள்ள வேண்டாம்" என்று அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளான்" என்று கூறுகிறார்கள். (நபியே!): "எனக்கு முன்னர் உங்களிடம் வந்த தூதர்களில் பலர், தெளிவான ஆதாரங்களையும், இன்னும் நீங்கள் கேட்டுக்கொண்ட (படி பலியை நெருப்பு உண்ப)தையும் திடமாகக் காண்பித்தார்கள். அப்படியிருந்தும் ஏன் அவர்களை நீங்கள் கொன்றீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள்" என்று நீர் கூறும். (முஹம்மது ஜான் தமிழாக்கம்).

குர்‍ஆன் 3:183 வசனத்தின் இரண்டாவது பிரச்சனை:

யூதர்கள் முஹம்மதுவை ஏமாற்றுவதற்கு பொய்களைச் சொல்லி அற்புதங்களை எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளாமல், அவர்கள் சொல்வது உண்மை என்று நம்பி பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறது இந்த வசனம். இது முதலாவது பிரச்சனை, இரண்டாவது பிரச்சனை என்னவென்றால்,  முந்தைய வேதங்களில் எந்த தீர்க்கதரிசி வானத்திலிருந்து அக்கினியை கொண்டுவந்து குர்பானியை எரிக்கச் செய்து தன்னுடைய நபித்துவத்தை நிருபித்தார்? இந்த அற்புதம் செய்த எந்த நபியை யூதர்கள் கொலை செய்தார்கள், இந்த நபியுடைய பெயர் என்ன? இவ்விரண்டு கேள்விகளுக்கு குர்ஆனில் பதில் உண்டா, இல்லை? குறைந்தபட்சம் பைபிளில் இவ்விரண்டு கேள்விகளுக்கு பதில் உண்டா என்று தேடி பார்த்தால், அங்கேயும் பதில் கிடைப்பதில்லை -  இது தான் குர்‍ஆனின் இந்த வசனத்தில் உள்ள தீர்க்கமுடியாத பிரச்சனை!

பைபிளின்படி வானத்திலிருந்து அக்கினி இறங்கி வந்து பலிகளை எரித்த நிகழ்ச்சிகள் பற்றிய‌ கீழ்கண்ட வசனங்களில் எந்த ஒரு இடத்திலும் அப்படிப்பட்ட நபியை யூதர்கள் கொன்றதாக சரித்திரம் இல்லை, அப்படி என்றால் யாரைப் பற்றி குர்‍ஆன் பேசுகின்றது?

குர்‍ஆன் குறிப்பிடுவது  லேவியராகமம் 9:23-24 நிகழ்ச்சியையா?

இந்த வசனத்தின்படி மோசேயும் ஆரோனும் ஏற்கனவே இறைவனின் தூதர்களாக இஸ்ரவேல் மக்களை கானான் தேசத்திற்கு வழிநடத்திக் கொண்டு வந்தார்கள். இவர்கள் கர்த்தருக்கு பலியிட்ட போது கர்த்தர் அக்கினியினால் அந்த பலியை அங்கீகரித்தார். இங்கு அவர்கள் தங்கள் நபித்துவத்தை நிரூபிக்கும் படி அக்கினி அற்புதம் செய்யவில்லை. மேலும் மோசேயையும் ஆரோனையும் யூதர்கள்  கொல்ல‌வில்லை ஆகையால் குர்‍ஆன் 3:183 சொல்வது இந்த நிகழ்ச்சியை அல்ல.

குர்‍ஆன் குறிப்பிடுவது  நியாயாதிபதிகள் 6:20-24 நிகழ்ச்சியையா?

இவ்வசனங்களில் கர்த்தருடைய தூதன் கிதியோன் என்ற ஒரு நபருக்கு காணப்பட்டு அவர் கொடுத்த பலியை அக்கினியினால் எரித்தார் மற்றும் அங்கீகரித்தார். இதுவும் குர்‍ஆன் சொல்லு வசனத்திற்கு பொருந்தவில்லை.  இந்த இடத்திலும் கிதியோன் தாம் ஒரு தீர்க்கதரிசி என்று மற்றவருக்கு நிரூபிக்கும் படி இந்த அற்புதம் நடைபெறவில்லை யூதர்கள் மேலும் கிதியோனை கொல்லவும் இல்லை.

குர்‍ஆன் குறிப்பிடுவது  1 நாளாகமம் 21:26 நிகழ்ச்சியையா?

இவ்வசனங்களில் தாவீது கர்த்தருக்கு பலியிட்ட போது கர்த்தர் அக்கினியினால் அந்த பலியை அங்கீகரித்தார் மேலும் எந்த இடத்திலும் தாவீது தம்மை ஒரு தீர்க்கதரிசி என்று நிரூபிப்பதற்காக இந்த அற்புதம் செய்யப்படவில்லை, அதுமாத்திரமல்ல யூதர்கள் தாவீதை கொல்லவுமில்லை. யூதர்களின் மிகப்பெரிய சிறந்த நபராக தாவீது இருக்கிறார், எனவே, குர்ஆன் சொல்லும் வசனம் நிச்சயமாக இதுவாக இருக்காது. 

குர்‍ஆன் குறிப்பிடுவது  2 நாளாகமம் 7:1-3  நிகழ்ச்சியையா?

இவ்வசனங்கள் சாலமோன் ராஜா தேவாலயம் கட்டி அங்கு பலியிட்டபோது கர்த்தருடைய அக்கினி வந்து அதனை சுட்டெரித்த நிகழ்ச்சியை குறிக்கிறது. இதுவும் குரான் சொல்லும் வசனத்திற்கு எந்த ஒரு வகையிலும் ஏற்றதாக இல்லை. சாலமோன் ராஜாவை யூதர்கள் கொல்லவுமில்லை.

குர்‍ஆன் குறிப்பிடுவது  2 ராஜாக்கள் 18  நிகழ்ச்சியையா?

இந்த வசனங்களில் சொல்லப்பட்ட நிகழ்ச்சி எலியா என்ற தீர்க்கதரிசி பற்றியது. இவர் கர்த்தருடைய தீர்க்கதரிசியாக நின்று கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு சவால் விட்டு, பலியிட்டபோது  வானத்திலிருந்து அக்கினி வந்து பலியை பட்சித்தது. எலியா கர்த்தருடைய‌ தீர்க்கதரிசி என்று நிரூபணமானது. ஒருவேளை இந்த நிகழ்ச்சியைப் பற்றி மேற்கண்ட குர்ஆன் வசனம் சொல்லியதாக நாம் கணக்கில் எடுத்தாலும், இதுவும் பொருந்துவதாக இல்லை, ஏனென்றால் இந்த எலியா தீர்க்கதரிசியை யூதர்கள் கொலை செய்ய முயற்சி எடுக்கவும் இல்லை. 

எசபேல் என்ற ராணி இவரை கொல்வதற்கு முயற்சி எடுத்தாள், ஆனால் அவள் யூத பெண் அல்ல. அவள் வெற்றி பெறவில்லை. ஆகையால் குர்ஆன் யூதர்களைப் பார்த்து வானத்திலிருந்து அக்கினியை கொண்டு வந்து அற்புதம் செய்த நபரை நீங்கள் கொலை செய்தீர்கள் என்று சொல்லுகின்ற வசனம் அல்லது நிகழ்ச்சி பழைய ஏற்பாட்டிலும் எங்கும் இல்லை என்பது இவைகளின் மூலமாக நிரூபணமாகிறது

அப்படியானால், குர்‍ஆன் 3:183 ல் நடந்தது என்ன?

குர்ஆன் 3:183 வசனம் சொல்வது போன்று பழைய ஏற்பாட்டில் எங்குமில்லை. அப்படியானால் இந்த வசனத்தின்படி நடந்த நிகழ்ச்சி என்ன?

இதன் சுருக்கத்தை இங்கு தருகிறேன்:

1. யூதர்கள் அற்புதங்கள் செய்து காட்டுங்கள் என்று சொன்னார்கள், ஆனால் தம்மால் செய்ய முடியாது என்று முஹம்மது கூறிவிட்டார்.

2. எந்த ஒரு அற்புதமும் செய்ய முடியாத நிலையில் முஹம்மது இருந்தபோது, முஹம்மதுவின் நபித்துவத்தை சோதிப்பதற்காக, யூதர்கள் ஒரு யுக்தியை கையாண்டார்கள். அதாவது தங்களிடம் அல்லாஹ் "வானத்திலிருந்து நெருப்பை கொண்டு வந்து அற்புதம் நிகழ்த்துபவரை மட்டுமே நீங்கள் நபி என்று நம்பவேண்டும் என்று" ஒரு உடன்படிக்கை செய்தான், என்ற பொய்யை சொல்லியுள்ளார்கள். அல்லாஹ் இதனை மறுக்கவில்லை.

3. உண்மையாகவே முஹம்மது ஒரு நபியாக இருந்திருந்தால் அல்லாஹ் என்பவர் முந்தைய வேதங்களையும் கொடுத்தவராக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? யூதர்களைப் பார்த்து  நீங்கள் சொல்வது பொய், இப்படிப்பட்ட உடன்படிக்கை செய்யப்படவில்லை முந்தைய வேதங்களைப் படித்து பாருங்கள் என்று சொல்லி அப்போழுதே அவர்களின் மூக்கை அறுத்து இருந்திருக்கலாம், ஆனால் இப்படி அல்லாஹ் செய்யவில்லை.

4. இப்படி செய்வதை விட்டுவிட்டு யூதர்களின் மாயத்தில் மாட்டிக்கொண்டு, தம்முடைய அரைகுறை ஞானத்தோடு "ஆமாம் இப்படி உடன்படிக்கை செய்தது உண்மைதான் ஆனால் அப்படி அனுப்பப்பட்ட நபிகளையும் நீங்கள் கொலை செய்தீர்கள்" என்று அல்லாஹ் குர்ஆனில் பதில் தருகிறார்.

5. நம் மேலே பைபிளிலிருந்து பார்த்தபடி யூதர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு உடன்படிக்கை இல்லை என்பதும் தெரியும். இப்படிப்பட்ட அற்புதம் செய்தவரை அவர்கள் கொலை செய்யவும் இல்லை அதாவது அவர்களின் முன்னோர்கள் கொலை செய்யவும் இல்லை என்பதும் தெரியும். இதிலிருந்து என்ன நிரூபணம் ஆனது என்று சொன்னால், முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்பதும் குர்ஆன் இறைவேதம் இல்லை என்பதும் இவர்களுக்கு சரியாக புரிந்து விட்டது. அதனால் தான் அவர்கள் கடைசி வரை அவரை நபி என்று ஏற்றுக் கொள்ளவே இல்லை. இப்படி யூதர்கள் வைத்த ஒவ்வொரு சோதனையிலும் முஹம்மது தோற்றுக் கொண்டே இருந்தார் என்பதுதான் உண்மை. இதனால் தான், யூதர்கள் அரேபிய பூமியில் இருக்கக்கூடாது என்று விரும்பி, அவர்களை நாடு கடத்தினார்.

முடிவுரை: இது வரை பார்த்த விவரங்கள் நமக்கு எதைக் காட்டுகின்றது? குர்‍ஆன் 3:183ம் வசனம், ஒரு சரித்திர பிழையைச் செய்துள்ளது. யூதர்களின் மாயவலையில் அல்லாஹ் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளான். இதனை புரிந்துக்கொள்ளாத முஹம்மது, இல்லாத ஊருக்கு டிக்கெட் வாங்கி பயணித்துள்ளார்.

முஹம்மது ஒரு இறைத்தூதர் என்பதற்கு, முஹம்மதுவைத் தவிர வேறு யாருமே சாட்சியில்லை. ஜிப்ரீல் தூதன் முஹம்மதுவை சந்தித்ததற்கு அவரைத் தவிர வேறு யாருமே சாட்சியில்லை. முஹம்மதுவின் சொந்த மக்கா மக்களும், யூத கிறிஸ்தவர்களும் நம்பும் படி, எந்த ஒரு அற்புதத்தையும் முஹம்மது செய்யவில்லை. முஹம்மது அற்புதங்கள் செய்யமாட்டார் என்று அல்லாஹ் அடித்துச் சொல்லியுள்ளான். முந்தைய நபிமார்கள் மூலமாக இறைவன் பல அற்புதங்கள் செய்து, தம்முடைய நபிகளின் நம்பகத்தன்மையை நிருபித்தார். ஆனால், முஹம்மதுவின் நம்பகத்தன்மையை நிருபிக்க, அல்லாஹ் எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை, அதனை விரும்பவும் இல்லை.

படித்தவர்களும், அறிவுடையோர்களும் இப்போது  என்ன முடிவு எடுக்க முடியும்? முஹம்மது ஒரு மெய்யான நபி அல்ல, அவர் கொண்டு வந்த புத்தகம் வேதமல்ல, அற்புதங்கள் செய்யாத அல்லாஹ் இறைவன் அல்ல என்று தான் முடிவு எடுக்கமுடியும்! 

இன்று நாம் காணும் போலிச்சாமியார்கள், பாபாக்கள் வரிசையில் முஹம்மதுவையும் தான் வைக்கமுடியும்! நித்தியானந்தா குறைந்த பட்சம் மேஜிக்காவது செய்து, தனக்கு தெய்வீகசக்தி உள்ளது என்றுச் சொல்லிக்கொள்கிறார். முஹம்மது உண்மையான நபியாக இருந்திருந்தால், அல்லாஹ் உண்மையான தெய்வமாக இருந்திருந்தால், ஒரே ஒரு அற்புதம் செய்து, மக்கா மக்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் என்று அனைத்து மக்களின் வாய்களை அடைத்திருந்திருக்கலாம், அதனை அவர் செய்யவில்லை, இதனால் மக்கள அவரை நம்பவில்லை.

முஹம்மதுவிற்கு ஆள்பலமும், பணபலமும் கிடைத்தபிறகு, வாளைக் காட்டி மக்களை பயமுறுத்தி முஸ்லீம்களாக மாற்றினார், இதனை மறுப்பவர்கள், ஹிஜ்ரிக்கு பிறகு இஸ்லாமின் சரித்திரத்தை இஸ்லாமிய நூல்களிலிருந்தே படித்துக்கொள்ளட்டும், ஆய்வு செய்யட்டும்.

ஆக, குர்‍ஆன் 3:183 ஒரு வஹியா? அல்லது வலியா? என்ற கேள்வி எழுப்பினால், 'குர்‍ஆன் ஒரு வலிதான், வஹி அல்ல' என்பது புலனாகும்.

தேதி: 22nd Nov 2021


குர்‍ஆனின் இதர ஆய்வுக் கட்டுரைகள்

குர்‍ஆன் பக்கம்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/arabic_quran/quran_3_183.html


வெள்ளி, 5 நவம்பர், 2021

வாட்ஸப் வலி: தீபாவளி பட்டாசுகளில் குர்‍ஆன் வசன‌ தாள்கள் பயன்படுத்துகிறார்கள், இது கண்டிக்கத்தக்கது! இது நியாயமான கோபமா?

கடந்த ஆண்டு தீபாவளி நாட்களில் வாட்ஸப்பில் ஒரு படத்தை ஒரு நண்பர் அனுப்பினார், அதைப் பற்றி கேள்வி கேட்டார். நான் ஒன்றும் பதில் அளிக்கவில்லை. இந்த ஆண்டும், இந்த வாரமும் வாட்ஸப் குரூப்பில், வேறு ஒரு படத்தை அனுப்பினார்கள். அதில் 'தீபாவளி பட்டாசுகளில் குர்‍ஆன் தாள்கள் சுற்றப்பட்டு, அவைகள் வெடிக்கும் போது, குர்‍ஆன் வசன தாள்கள் கிழிக்கப்பட்டு, வசனங்கள் தெரிவதாக‌ ஒரு படத்தை' அனுப்பியிருந்தார்கள். குர்‍ஆன் வசனங்கள் உள்ள தாள்களை இப்படி வெடிகளில் சுற்றி வெடிக்கச் செய்வது, கண்டிக்கத்தக்கது என்று சொல்லப்பட்டு இருந்தது. 

இதைப் பற்றி இணையத்தில் தேடும் போது, கீழ்கண்ட செய்தியும் கண்களில் பட்டது:

Three Jammu towns tense over claims of Diwali crackers being packed with Koran pages

Muslims in Bhaderwah town and its surrounding areas observed bandh after some people claimed to have found half-burnt pieces of papers having Arabic language written on them.

இதைக் குறித்து சில வரிகளை எழுதலாம் என்று நினைத்து, இச்சிறிய கட்டுரையை எழுதிக்கொண்டு இருக்கிறேன். இவ்விவரங்கள் குர்‍ஆனுக்கும் முஸ்லிம்களுக்கும் மட்டுமல்ல, பைபிளுகும் கிறிஸ்தவர்களுக்கும் உதவும் என்று நம்புகிறேன்.

1) பிரிண்டிங் வந்த பிறகு பரிசுத்தம் சென்றுவிட்டது:

600 ஆண்டுகளுக்கு முன்பு ஜான் கூடன் பர்க் பிரிண்டிங் இயந்திரம் கண்டுபிடிக்கும் முன்பு வரை, புத்தகங்கள், வேதவசனங்கள் அனைத்தும், விலையுயர்ந்த தோல்களில் எழுதப்பட்டுக்கொண்டு இருந்தன. இதனால் ஒரு சிலரிடம் மட்டுமே அவைகள் காணப்பட்டன. ஆனால், பிரிண்டிங் இயந்திரங்கள் வந்த பிறகு, அறிவு விபரீதமாக வளர்ந்துவிட்டது, காரணம் கோடிக்கணக்கான புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டன, மலிவான விலையில் விற்கப்பட்டன.  

எனவே, இப்போது நாம் எங்கேயாவது, 'இப்படி குர்‍ஆன்/பைபிள் வசன தாள்கள் கிழிக்கப்பட்டு, எரிக்கப்பட்டு இருக்கும்' படங்களை பார்க்கும் போது நாம் கோபம் கொள்ளவேண்டிய அவசியமில்லை. இன்றும் நான் சாலைகளில் செல்லும் போது, சில நேரங்களில் பைபிளின் சில தாள்கள் சாலைகளில் கிழிக்கப்பட்டு இருப்பதை பார்க்கமுடிகிறது.

2) வேண்டுமென்றே இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுபவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்

ஒரு பிரிவினரை கோபப்படுத்தவேண்டுமென்றோ, அல்லது அவர்கள் இவர்களை கோபப்படுத்தினார்கள் என்பதால், மற்றவர்களின் புனித நூல்களை கிழித்து, மற்றும் எரித்து, அவைகளை படங்களாக வீடியோக்களாக வெளியிடுகிறவர்கள் கண்டிக்கப்படவேண்டியவர்கள் ஆவார்கள்.  இவர்களின் செயல்களை எற்றுக்கொள்ளமுடியாது.

3) நடைமுறையில் தடுக்கமுடியாத 'விபரீதமான செயல்கள்'

சில நேரங்களில் சில தொழிற்சாலைகளில், உதாரணத்திற்கு, பட்டாசு தொழிற்சாலைகளில், பல ஆயிர கிலோ கணக்கில் காகிதங்களை வாங்கி அவர்கள் பயன்படுத்துவார்கள். இப்படிப்பட்ட நேரங்களில், அவர்கள் "அந்த காகிதங்களில் குர்‍ஆன் தாள்கள் இருக்கின்றனவா? பைபிள் வசனங்கள் இருக்கின்றனவா? பகவத் கீதை வசனங்கள் அல்லது ஸ்லோகங்கள் இருக்கின்றனவா? என்று பார்த்து, அவைகளை நீக்கிவிட்டு தொடரமுடியாது. இது நடைமுறை சாத்தியமற்றது. இதற்காக பட்டாசு தொழிற்சாலைகள் மீது குற்றம் சுமத்தமுடியாது.

4) குர்‍ஆனை புத்தகங்களாக பிரிண்ட் செய்யாமல் இருக்கமுடியுமா?

ஒருவேளை முஸ்லிம்கள் "இல்லை, இந்த விவரங்களை நாங்கள் ஒப்புக்கொள்ளமாட்டோம், பட்டாசு தொழிற்சாலைகளில், குர்‍ஆன் தாள்களை பயன்படுத்தக்கூடாது, இதனை நாங்கள் ஒப்புக்கொள்ளமாட்டோம், இதனை வன்மையாக கண்டிக்கிறோம்" என்று சொல்வார்களானால், நான் சில ஆலோசனைகளை இங்கு தருகிறேன், அதனை நீங்கள் பின்பற்றினால், இந்த பிரச்சனை வராது.

முஸ்லிம்களுக்கு சில ஆலோசனைகள்:

 1. முதலாவதாக, முஸ்லிம்கள் இனி 'குர்‍ஆனை காகிதங்களில் அச்சு அடிக்கக்கூடாது'. முஸ்லிம்கள் தோல் சுருல்களில் இன்னும் இதர விலையுயர்ந்த பொருட்கள் மீது, குர்‍ஆனை பிரிண்ட் செய்துக்கொள்ளட்டும்.
 2. இப்படி செய்தால், குர்‍ஆன் புத்தகமாக பிரிண்ட் ஆகாது, பட்டாசுக்களில் அவைகளை சுற்றும் பிரச்சனையும் தீர்ந்துவிடும்.
 3. இதுவரை பிரிண்ட் செய்யப்பட்ட குர்‍ஆனைகளை சேகரித்து, பரிமுதல் செய்துவிடுங்கள்.
 4. பல பேர் கொண்ட ஒரு குழுவை நியமித்து, பட்டாசு தொழிற்சாலைக்கு அனுப்பி, அவர்களின் காகிதங்களை ஆய்வு செய்து, அவைகளில் 'குர்‍ஆன் வசன தாள்களை தேடிக்கண்டுபிடித்து, எடுத்துவிடுங்கள்' அவர்களுக்கு தேவையான நஷ்ட ஈட்டை கொடுத்துவிடுங்கள்.
 5. பெரும்பான்மையான இந்தியர்களுக்கு, அரபி எழுத்துக்கள் எவையென்று தெரியாது, அவைகளில் குர்‍ஆன் வசனங்கள் எவை என்று கண்டுபிடிக்கவும் தெரியாது. எனவே, முஸ்லிம்கள் ஒரு இயக்கத்தை தொடங்கி, இந்தியர்கள் அனைவருக்கும் (முடிந்த அளவு) அரபியையும், குர்‍ஆன் வசனங்களை கண்டுபிடிக்கும் யுக்திகளையும் கற்றுக்கொடுக்கவேண்டும்.
 6. மேலும், யாராவது அரபி குர்‍ஆன் தாள்களை கண்டுபிடித்தால், அவைகள் எரிந்த/கிழிந்த நிலையில் இருந்தாலும் சரி, அவைகளை கொண்டுவந்து முஸ்லிம்களிடம் கொடுத்தால், அவர்களுக்கு பரிசு கொடுக்கப்படும் என்று அறிவித்தால், இது இப்படிப்பட்ட பிரச்சனையை தீர்க்க ஓரளவிற்கு உதவலாம்.
 7. இனி முஸ்லிம்கள், யாருக்கும் குர்‍ஆனை இலவசமாக கொடுக்கக்கூடாது. இப்படி இலவசமாக கொடுக்கும் போது, சிலர் படிப்பார்கள், சிலர் எரிப்பார்கள், சிலர் கிழிப்பார்கள். எனவே, இலவசமாக கொடுப்பதை நிறுத்தினால், இதுவும் இந்த பிரச்சனையை தீர்க்க உதவும்.
 8. இலவசமாக நாமே நம் வேதத்தை கொடுத்துவிட்டு, அதை அவர்கள் கனப்படுத்தவேண்டுமென்று எதிர்ப்பார்ப்பது சரியானதா? மேலும் அதை யாராவது கிழித்து எரிந்தால், அவன் மீது குற்றம் சுமத்துவதும் சரியானதா? நாமே யாருக்கும் கொடுக்காமல் நம் வேதத்தை வைத்துக்கொண்டால், இந்த பிரச்சனை வராதே. மேலும் குர்‍ஆனை புத்தகமாக பிரிண்டே செய்யாமல் இருந்தால், இன்னும் சூப்பராக இருக்குமல்லவா? அல்லாஹ் பாதுகாப்பது போன்று, 'முஸ்லிம்களின் மனதிலேயே குர்‍ஆனை பாதுகாத்தால், அதனை யாரும் பட்டாசுக்களில் காகிதமாக சுற்றமுடியாதல்லவா'? எப்படி, ஐடியா நன்றாக இருக்கிறதா?

இந்த ஆலோசனைகள் பைபிளுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும். யாராவது பட்டாசுக்களில் பைபிள் வசன காகிதங்கள் பயன்படுத்தினார்கள் என்று கண்டனம் செய்தால், மேற்கண்ட ஆலோசனைகளை பின்பற்றலாம்.

முடிவுரை:

நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் நடைமுறை சாத்தியமற்றது என்று சொல்வீர்களானால்,  பட்டாசுக்களில்  குர்‍ஆன் வசனங்கள் உள்ள காகிதங்கள் பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் முட்டாள்தனமானதும், நடைமுறைக்கு ஏற்காத குற்றச்சாட்டாக இருக்கிறது என்பது என் கருத்தாகும்.

மக்களின் மனதை புண்படுத்தவேண்டும் என்ற நோக்கில், வேண்டுமென்றே குர்‍ஆனை கிழிப்பதும், எரிப்பதும் ஏற்றுக்கொள்ளகூடாத செயலாகும், கண்டிக்கத்தக்கதாகும். பட்டாசுக்களில் குர்‍ஆன் வசன ஏடுகளை பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு ஏற்புடையதன்று.

குப்பைத்தொட்டிகளில், நாற்றமடிக்கும் இடத்தில் எழுந்தருளும் கடவுள்கள்:

நான் அனேக முறை குப்பைத்தொட்டிகளில் குப்பைகளை போடப்போகும் போது, அங்கே முருகன் படம், மற்ற சாமிகள் படம், இயேசுவும், மரியாளும் இருக்கும் படம் என்று அனேக பழைய படங்களை பார்க்கமுடிந்தது.

நாற்றமெடுக்கும் குப்பைத்தொட்டிகளின் பக்கத்திலே நாம் செல்லும் போது, மூக்கை மூடிக்கொண்டுச் செல்கிறோம். ஆனால், அங்கே சாமிகளில் படங்களும், தர்காக்களின் படங்களும், இயேசுவின் படங்களும் தூக்கி போடப்படுகின்றன, இதனை செய்வது யார் "நாம் தான்".  

சாமி படங்களை பூஜை அறையில் மிகவும் பக்தியாக வைத்து, சுத்தபத்திரத்தோடு பூஜைகள் செய்யும் மக்கள், அப்படங்கள் பழையது ஆகிவிட்ட பிறகு, அல்லது புது வீடுகளுக்குச் செல்லும் போது,  பழைய சாமி படங்களை குப்பைகளில் போட்டுவிடுகிறார்கள். இவர்களின் பக்தி அவ்வளவு தான். சாமி படங்களின் இந்த கேவளமான நிலைக்கு காரணம் 'படங்களை நாம் பயன்படுத்துவது தான்'. சாமி படங்களை குப்பைகளில் போட்டு, கடவுள்களை அவமானப்படுத்துவது யாரோ நாத்தீகர்கள் அல்ல, ஆத்திகர்கள் தான், சாமிகளை வணங்குபவர்கள் தான்.  இதே நிலை தான், குர்‍ஆனுக்கும் நாம் காண்கிறோம்.

கடைசியாக, ஒரு வரியில் சொல்லவேண்டுமென்றால், பட்டாசுக்களில் குர்‍ஆன் ஏடுகள் பயன்படுத்தப்படுவது கண்டிக்கத்தக்கது என்ற வாதமோ, மனவருத்தமோ தேவையற்றது, அதனை சரி செய்யவும் முடியாது. இதே ஆலோசனைத் தான் கிறிஸ்தவர்களுக்கும் நான் கொடுக்கவிரும்புவேன்.

தேதி: 5th Nov 2021


வாட்ஸப் வழி(வலி)கள் பக்கம்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/whatsapp/diwali_crackers_quran_pages.html


ஸனா குர்‍ஆன் 9:122-129 வசனங்களோடு முரண்படும் 95% உலக முஸ்லிம்கள் படிக்கும் இன்றைய குர்‍ஆன் வசனங்கள்!

ஸனா குர்ஆன் (Sanaa Manuscript) தற்போதுள்ள மிகப் பழமையான குர்ஆனிய கையெழுத்துப் பிரதிகளில் ஒன்றாகும். 1972 ஆம் ஆண்டு யெமன் நாட்டிலிள்ள ஸனா நகரத்தின் பெரிய மசூதியின் மறுசீரமைப்பின் போது சில அரபி கையெழுத்துப் பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டது. 1981 ஆம் ஆண்டில் இந்த கையெழுத்துப் பிரதியில் இருப்பது "குர்‍ஆன்" என்று அடையாளம் காட்டப்பட்டது. இன்னும் குர்‍ஆன் அல்லாத வேறு பிரதிகளும் கிடைத்தன. இது தோலில் எழுதப்பட்ட இரண்டு அடுக்குகள் கொண்ட எழுத்துக்களாக இருந்தன, அதாவது ஒரு முறை குர்‍ஆன் வசனங்கள் எழுதப்பட்டு, அதன் பிறகு சில காலம் சென்று அவைகளை அழித்து, இன்னொரு முறை எழுதப்பட்டது. அழிக்கப்பட்ட உரையை/எழுத்துக்களை புற ஊதா ஒளி மற்றும் கணினியின் உதவியுடன் படிக்கலாம்.  மேல் உரை பெரும்பாலும் 'உத்மானிய' குர்ஆனுடன் ஒத்துப்போகிறது. அழிக்கப்பட்ட கீழ் உரை குர்‍ஆன் வசனங்கள் இன்றைய குர்‍ஆனோடு பல வகைகளில் வேறுபட்டு காணப்படுகிறது.

இந்த  தோலின் காலக்கட்டம்  ரேடியோகார்பன் என்ற விஞ்ஞான முறையின் கணக்கின் படி, கி.பி. 578 (ஹிஜ்ரிக்கு முன்பு 44 ஆண்டுகள்) மற்றும் கி.பி. 669 (ஹிஜ்ரி 49) ஆகும். மேல் உரை எழுத்துக்களின் காலக்கட்டம், ஏழாம் நூற்றாண்டின் கடைசியிலிருந்து, எட்டாம் நூற்றாண்டின் ஆரம்பம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழ் உரை எழுத்துக்களின் (அழிக்கப்பட்ட வரிகள்) காலக்கட்டம் கி.பி. 632 லிருந்து 669 வரை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஸனா குர்‍ஆன் பக்கம் 22ன் ஆய்வு:

மேல் உரை மற்றும் கீழ் உரை இரண்டும் சேர்த்து, மொத்தமாக 38 பக்கங்கள் (Folios) இந்த ஸனா கையெழுத்துப் பிரதிகளில் கிடைத்தன. இவைகளில் பக்கம் 22ஐ இந்த கட்டுரையில் ஆய்வு செய்யப்போகிறோம். இந்த பக்கம் 22ல், குர்‍ஆனின் 9வது அத்தியாயத்தின் சில வசனங்களும், 19வது அத்தியாயத்தின் சில வசனங்களும் காணப்படுகின்றன. 

இவற்றில், 9:122 - 129 வசனங்களை இன்றுள்ள குர்‍ஆனோடு ஒப்பிடும் போது காணப்படும் வேற்றுமைகளை, வித்தியாசங்களை இப்போது காண்போம்.

ஸனா குர்‍ஆன் பிரதியின் வசன வார்த்தைகளை மூன்றாம் பத்திலும் (Column: Reconstruction, பிரதியின் வசனங்கள்), இன்று நாம் பயன்படுத்தும் 1924 கெய்ரோ குர்‍ஆனின் வசனங்களை, நான்காவது பத்தியிலும் (Column: Standard Text, இன்றைய குர்‍ஆன்) கொடுக்கப்பட்டுள்ளது.  இவ்விரு வசனங்களுக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை "குறிப்பு" என்ற பத்தியில் தமிழில் கொடுக்கப்பட்டுள்ளது. 

  

இந்த ஆய்வு வெளிப்படுத்தும் உண்மை என்ன‌?

1) ஸனா குர்‍ஆன் பிரதிகளின் கீழ் உரையில் இருந்த வசனங்கள், உஸ்மான் அவர்கள் "குர்‍ஆனை தரப்படுத்தப்படுவதற்கு" முன்பு எழுதப்பட்ட வரிகள் ஆகும்.

2) கலிஃபா உஸ்மான் அவர்கள், குர்‍ஆனை தரப்படுத்திய பிறகு, மேற்கண்ட குர்‍ஆன் வரிகளை அழித்துவிட்டு உஸ்மான் அவர்கள் அனுப்பிய குர்‍ஆனின் வரிகளை எழுதியுள்ளார்கள் (தோல் சுருள் என்பதால், இப்படி செய்வார்கள், ஏனென்றால் தோல் சுருள்களின் விலை அதிகமாகும்).

3) அந்த கீழ் உரையின் வசனங்களை நாம் மேலே கொடுத்த பட்டியலில் ஒப்பிட்டுள்ளோம்.

4) உஸ்மான் அவர்கள் குர்‍ஆனை தரப்படுத்துவதற்கு முன்பும் (கீழ் உரை), பின்பும் (மேல் உரை) பல வார்த்தைகள் விடப்பட்டுள்ளன, புதிதாகவும் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை மேற்கண்ட பட்டியலில் காணலாம் (குறிப்பு என்ற பத்தியை காணவும்).

5) பொதுவாக இப்படிப்பட்ட வித்தியாசங்களுக்கு முஸ்லிம்கள் பதில் அளிக்கும் போது, 'அவைகள் வெறும் குறில் நெடில் போன்ற வித்தியாசங்கள் தான், வார்த்தை வித்தியாசங்கள், எழுத்து வித்தியாசங்கள் அல்ல' என்றுச் சொல்வார்கள். ஆனால், உண்மையில் மேலே கண்ட வித்தியாசங்களை காணும் போது, "குர்‍ஆனில் கூட்டல் மற்றும் கழித்தல் நடத்துள்ளது" என்பதை காணமுடியும்.

6) ஒரு எடுத்துக்காட்டுக்காக, மேலேயுள்ள பட்டியலில், இரண்டாவது வரிசையை எடுத்துக்கொள்ளவும்.

இவ்வசனத்தில், ஸனாவில் ஒரு வார்த்தையும் (உம்மதின்), தற்போதைய குர்‍ஆனில் வேறு வார்த்தையும் (ஃபிர்கதின்) உள்ளது. இவைகள், நெடில் குறில் வித்தியாசங்கள் அல்ல, வார்த்தையே மாறுமட்டுள்ளது. ஒரு பிரிவினர்/கூட்டத்தினர் என்றுச் சொன்னாலும், ஒரு குழுவினர், சமுதாயத்தினர், ஒரு உம்மத்தினர் என்றுச் சொன்னாலும், பொருள் மாறுவதில்லை, ஆனால் வித்தியாசமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

இப்போழுது கேள்வி என்னவென்றால், அல்லாஹ் எப்படி இவ்வசனத்தை இறக்கினான்? உம்மதின் என்ற வார்த்தையோடு இறக்கினானா? அல்லது ஃபிர்கதின் என்ற வார்த்தையுடன் இறக்கினானா?

முடிவுரை:

இதுவரை பார்த்த விவரங்கள் வெறும் ஒரு அத்தியாயத்தின் சில வசனங்களை மட்டுமே ஆய்வு செய்யும் போது கிடைத்த, ஒரு வித்தியாசத்துளியாகும். ஸனாவின் அனைத்து பக்கங்களையும், வசனங்களையும் ஆய்வு செய்தால், இன்னும் அனேக வித்தியாசங்கள் கிடைக்கின்றன.

இதன் மூலம் அறிவதென்ன? குர்‍ஆன் ஓசையிலும் பாதுகாக்கப்படவில்லை, எழுத்திலும் பாதுகாக்கப்படவில்லை என்பது தான்.

தேதி: 5th Nov 2021

அடிக்குறிப்புக்கள்:


குர்‍ஆனின் இதர ஆய்வுக் கட்டுரைகள்

குர்‍ஆன் பக்கம்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/arabic_quran/sanaa_9_compare.html


வியாழன், 4 நவம்பர், 2021

குர்‍ஆன் 9:128ன் ஷிர்க்: முஹம்மது மிகப்பெரும் கருணை மற்றும் நிகரற்ற அன்புடையவரா? 9:128,129 வசனங்கள் இட்டுக்கட்டவைகளா?

குர்‍ஆனில் "மிகப்பெரும் கருணையாளன்(ரஊஃபுன்- raoofun), மிகப்பெரும் அன்புடையோன்(ரஹீமும் - raheemum)' என்று அல்லாஹ் அழைக்கப்படுகின்றான்.

உதாரணத்திற்கு கீழ்கண்ட வசனங்களை படியுங்கள், இவைகள் அனைத்தும் அல்லாஹ்வைக் குறிக்கின்றன: (அனைத்து குர்‍ஆன் வசனங்களும் முஹம்மது ஜான் தமிழாக்கத்திலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளன‌.)

ரஊஃபுன் (raoofun):

 • 2:207. . . . அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக(رَءُوْفٌ) இருக்கின்றான்.
 • 3:30. . . . இன்னும் அல்லாஹ் தன் அடியார்கள் மீது கருணை(رَءُوْفٌۢ) உடையோனாக இருக்கின்றான்.

மேலே பார்த்தது போன்று இந்த ரஊஃபுன் என்ற வார்த்தை தனியாக வரும் போது, 10 இடங்களில் குர்‍ஆன் அல்லாஹ்விற்கு மட்டுமே பயன்படுத்தியுள்ளது - Quran corpus

ரஹீமும் (raheemum):

 • 11:90. . . . நிச்சயமாக என்னுடைய இறைவன் மிக்க கிருபையுடையவனாகவும்(رَحِيْمٌ), பிரியமுடையவனாகவும் இருக்கின்றான்". . 
 • 49:12. . . . நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்(رَّحِيْمٌ).

ரஹீமும் என்ற வார்த்த பல வடிவங்களில் குர்‍ஆனில் வருகிறது, ஆனால், "மிகப்பெரும் கிருபையாளன்" என்ற வடிவம் வரும் போது (50+ முறை) அது அல்லாஹ்விற்கே பயன்படுத்தப்பட்டுள்ளது - Quran Corpus.

நாம் இந்த கட்டுரையில் இவ்விரு வார்த்தைகளும் ஒரே இடத்தில் வருவதைப் பற்றி ஆய்வு செய்துக்கொண்டு இருக்கிறோம். இவ்விரு வார்த்தைகளையும் ஒரே இடத்தில் குர்‍ஆனில் வந்தால் கூட அது "அல்லாஹ்விற்கு மட்டுமே" குறிப்பிடுகின்றதே தவிர, அது மனிதர்களை குறிப்பதில்லை, ஒரே ஒரு இடத்தில் தவிர (9:128).

 • 2:143. . . . நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணை காட்டுபவன், நிகரற்ற அன்புடையவன் (لَرَءُوْفٌ رَّحِيْمٌ).
 • 9:117. . . . நிச்சயமாக அவன் அவர்கள் மீது மிக்க கருணையும், கிருபையும் உடையவனாக இருக்கின்றான் ( رَءُوْفٌ رَّحِيْمٌۙ).
 • 16:7.. . . நிச்சயமாக உங்களுடைய இறைவன் மிக இரக்கமுடையவன்; அன்பு மிக்கவன்.( لَرَءُوْفٌ رَّحِيْمٌۙ).
 • 16:47. . . . நிச்சயமாக உங்கள் இறைவன் இரக்கமுடையவன்; பெருங் கிருபையுடையவன் ( لَرَءُوْفٌ رَّحِيْمٌ).
 • 22:65. . . .நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன் (لَرَءُوْفٌ رَّحِيْمٌ).
 • 24:20. . . . நிச்சயமாக அல்லாஹ் இரக்கமுடையவனாகவும் அன்புடையோனாகவும் இருக்கின்றான் ( رَءُوْفٌ رَّحِيْمٌ).
 • 57:9.. . . நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக்க கிருபையுடையவன்; நிகரற்ற அன்புடையவன் ( لَرَءُوْفٌ رَّحِيْمٌ).
 • 59:10. . .  நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன் (  رَءُوْفٌ رَّحِيْمٌ ) என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர்.

ஆனால், ஒரே ஒரு இடத்தில் மட்டும், இவ்வார்த்தைகள் இரண்டும், முஹம்மதுவிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

9:128. (முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக(رَءُوْفٌ رَّحِيْمٌ) இருக்கின்றார்.

ஏன் இந்த வசனத்தில் (9:128) ஷிர்க் இருக்கிறது?

ரஊஃபுன் மற்றும் ரஹீமும் என்ற வார்த்தைகள் தனியாக வந்தாலும் சரி, ஒன்றாக வந்தாலும் சரி, அல்லாஹ்விற்கு மட்டுமே குர்‍ஆன் பயன்படுத்தி இருக்கும் போது, இந்த ஒரு வசனத்தில் மட்டும் ஏன், அது முஹம்மதுவிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது? என்ற சந்தேகம் எழுகின்றதல்லவா?

குர்‍ஆனை மொழியாக்கம் செய்த யுசுஃப் அலி போன்ற அறிஞர்கள் இதனை அறிவார்கள் எனவே தான், அல்லாஹ்விற்கு இவ்வார்த்தை பயன்படுத்தும் வசனங்களில் ஆங்கிலத்தில் பெரிய எழுத்துக்களில் (Capital letters) எழுதினார்கள், 9:128 என்ற வசனம் வரும் போது, சிறிய எழுத்தில் (Lower letter) எழுதினார்கள்.

Yousuf Ali Translations: 

 • 2:143 . . .For God is to all people most surely full of kindness Most Merciful.
 • 9:117 . . .for He is Unto them Most Kind, Most Merciful.
 • 16:7 . . . for your Lord Is indeed Most Kind, Most Merciful.
 • 9:128  Now hath come unto you An Apostle from amongst Yourselves: it grieves him That ye should perish: Ardently anxious is he Over you: to the Believers Is he most kind and merciful.

9:128ல் குறிப்பிடப்பட்டது முஹம்மதுவையா? அல்லது வேறு நபியையா?

9:128ம் வசனத்தை பார்க்கும் போது, "(முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்;" என்ற வார்த்தைகளிலிருந்து, இங்கு குறிப்பிடப்பட்டவர் முஹம்மது என்பதை சுலபமாக அறிந்துக்கொள்ளலாம். 

மேலும் சில ஆங்கில மொழியாக்கங்களில், அடைப்பிற்குள் முஹம்மது என்று எழுதியும் வைத்து, அடையாளப்படுத்தியுள்ளார்கள்.

ஹிலாலி க்ஹான் ஆங்கில மொழியாக்கம் (சௌதி வெளியீடு):

128. Verily, there has come unto you a Messenger (Muhammad صلى الله عليه وسلم) from amongst yourselves (i.e. whom you know well). It grieves him that you should receive any injury or difficulty. He (Muhammad صلى الله عليه وسلم) is anxious over you (to be rightly guided, to repent to Allâh, and beg Him to pardon and forgive your sins in order that you may enter Paradise and be saved from the punishment of the Hell-fire); for the believers (he صلى الله عليه وسلم is) full of pity, kind, and merciful

முஸ்லிம் ஹதீஸ் தொகுப்பிலிருந்து சான்று:

முஸ்லிம் எண் 4697. ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எனக்கு (ஐந்து) பெயர்கள் உள்ளன. நான் "முஹம்மத்" (புகழப்பட்டவர்) ஆவேன். நான் "அஹ்மத்" (இறைவனை அதிகமாகப் புகழ்பவர்) ஆவேன். நான் "மாஹீ" (அழிப்பவர்) ஆவேன்; என் மூலம் அல்லாஹ் (ஏக) இறைமறுப்பை அழிக்கின்றான். நான் "ஹாஷிர்" (ஒன்றுதிரட்டுபவர்) ஆவேன்; மக்கள் என் பாதங்களுக்குக் கீழே (என் தலைமையில்) ஒன்றுதிரட்டப்படுவார்கள். நான் "ஆகிப்" (இறுதியானவர்) ஆவேன்; எனக்குப் பிறகு வேறெந்த இறைத்தூதரும் இல்லை" என்று கூறினார்கள். அவர்களுக்கு அல்லாஹ் "ரஊஃப்" (பேரன்புடையவர்) என்றும் "ரஹீம்" (இரக்கமுடையவர்) என்றும் பெயர் சூட்டியுள்ளான்.. . .

குர்‍ஆனில் அல்லாஹ்விற்கு மட்டுமே சூட்டப்பட்ட அந்த புனிதமான பட்டப் பெயர்களை அல்லது அல்லாஹ்வின் தனிப்பட்ட குணத்தை, ஏன் இந்த ஒரு வசனத்தில் மட்டும் அது முரண்படுகிறது? ஏன் அல்லாஹ்விற்கு சமமாக 'முஹம்மது' இவ்வசனத்தில் காட்டப்பட்டார்? இது ஷிர்க் இல்லையா? முஹம்மது அல்லாஹ்விற்கு சமமானவரா?

ஸூரத்துத் தவ்பா தான் கடைசியாக இறங்கிய அத்தியாயம்:

குர்‍ஆனின் இந்த 9வது அத்தியாயம் (தவ்பா) தான் கடைசியாக இறக்கப்பட்ட அத்தியாயம் என்று இஸ்லாம் கூறுகின்றது. அதாவது புகாரி ஹதீஸிலும் இதற்கு சான்று உண்டு.

புகாரி 4989. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்து வரச் சொன்)னார்கள். (நான் அவர்களிடம் சென்றேன். என்னிடம்) அவர்கள், ''நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்ற 'வஹீ' (வேத வசனங்)களை எழுதிவந்தீர்கள். எனவே, குர்ஆன் வசனங்களைத் தேடுங்கள்!" என்று சொன்னார்கள். ஆகவே, நான் குர்ஆன் வசனங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டேன். இறுதியாக 'அத்தவ்பா' எனும் (9ஆவது) அத்தியாயத்தின் கடைசி இரு வசனங்களை அபூகுஸைமா அல்அன்சாரீ (ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன். அவரல்லாத வேறு எவரிடமும் அவற்றை நான் காணவில்லை.

(அவ்விரு வசனங்களாவன:) உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குச் சிரமமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்கள்மீது அதிகப் பரிவும் கருணையும் உடையோராகவும் அவர் இருக்கின்றார்.

(நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வேறு இறைவன் யாருமில்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கின்றேன். மேலும், அவன் மகத்தான அரியணையின் அதிபதியாயிருக்கின்றான்.(9:128,129)

மேலும் பார்க்க‌ புகாரி எண்கள்: 4679, 4986 & 7191

ஒரே ஒருவரிடம் (அபூகுஸைமா அல்அன்சாரீ) மட்டும் காணப்பட்ட 9:128, 129 வசனங்கள்:

இங்கு கவனிக்கவேண்டிய இன்னொரு விவரமும் உண்டு, அதாவது, 9வது ஸூரா கடைசியாக இறக்கப்பட்டது என்று ஒரு விவரம், ஆனால், அதில் கடைசியாக காணப்படும் இரண்டு வசனங்கள் (128,129), ஒரே ஒருவரிடம் மட்டுமே காணப்பட்டது. அவர் "அபூகுஸைமா அல்அன்சாரீ" என்ற ஷஹாபா ஆவார்.

குர்‍ஆனின் வசனங்களை சேகரிக்கும் போது, யாராவது ஒருவர் 'இது குர்‍ஆன் வசனம், நான் நபியவர்களிடமிருந்து கற்றேன்' என்று கூறுவாரானால், அதற்கு அவர் இரண்டு சாட்சிகளை கொண்டுவரவேண்டும், அதாவது இவரைப்போன்று இன்னொருவரிடமும் அந்த வசனங்கள் இருந்திருக்கவேண்டும். ஒரே ஒருவரிடம் மட்டும் வசனங்கள் இருந்தால், அவைகளை குர்‍ஆனில் சேர்க்காமல் விட்டுவிடுவார்கள், இது தான் அப்போது இருந்த சட்டம். இப்படி ஒரே சாட்சியுள்ள அனேக வசனங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அவர் எவ்வளவு சிறந்த சஹாபாக இருந்தாலும் சரி, இரண்டு சாட்சிகள் இல்லாமல், அவர் கொண்டு வரும் வசனங்கள் குர்‍ஆனில் சேர்க்கப்படாது.

ஆனால், இந்த ஒரு விஷயத்தில் மட்டும், ஒரே சாட்சியுடன் வசனம் குர்‍ஆனில் சேர்க்கப்பட்டது. (இதே போன்று குர்‍ஆன் 33:21ம் வசனம் கூட அபூ குஸைமா என்பவரிடம் மட்டும் தான் இருந்தது என்ற செய்தியும் உண்டு. இந்த வசனம் பற்றி ஸையத் அறிந்திருந்தார், இதனால் அவர் தேடும் போது அபூ குஸைமாவிடம் அது காணப்பட்டது, ஆக ஸையத் மற்றும் குஸைமா இருவரையும் சேர்த்து இரண்டு சாட்சிகள்.)

அதுவரை 'மிகப்பெரும் கருணையுடையவன், பெரும் அன்புடையோன்' என்பது அல்லாஹ்விற்கு மட்டுமே கொடுக்கப்பட்டு இருந்த பட்டங்கள், இந்த இருவசனங்கள்  மூலமாக அது முஹம்மதுவிற்கும் சூட்டப்பட்டாகிவிட்டது. இது மிகப்பெரிய ஷிர்க் அல்லவா?

இந்த விஷயம் எந்த ஒரு முஸ்லிமுக்கும் தெரியாமல் இருந்தது, நூற்றுக்கணக்கான சஹாபாக்களுக்கும் தெரியாமல் இருந்தது, ஒரே ஒரு அன்சாரிக்கு மட்டும் தெரிந்திருந்தது என்பது சந்தேகத்திற்கு உரியது, கேள்விக்குரியது.

அபூகுஸைமா என்ற தோழர், உமரை விட நேர்மையானவரா?

இரண்டாவது கலிஃபா உமர் அவர்கள் 'கல்லெறி தண்டனை' பற்றிய வசனத்தை கொண்டுவந்தார்கள், ஆனால், அதற்கு இரண்டாவது சாட்சி இல்லை என்றுச் சொல்லி குர்‍ஆனில் சேர்க்க மறுக்கப்பட்டது. ஆனால், அபூ குஸைமா கொண்டு வந்த வசனம், ஒரே ஒரு சாட்சியுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டது, ஏனென்றால், இவரது சாட்சி இரண்டு சாட்சிகளுக்கு சமம் என்று முஹம்மது கூறியிருந்தாராம், கீழ்கண்ட புகாரி ஹதீஸை பார்க்கவும்.

புகாரி எண்  4784. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்,) குர்ஆனுக்குப் பிரதிகள் எடுத்தபோது 'அல்அஹ்ஸாப்' எனும் (33ஆவது) அத்தியாயத்தின் ஒரு வசனத்தை நான் காணவில்லை. அதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதக் கேட்டிருந்தேன். குஸைமா அல்அன்சாரீ (ரலி) அவர்களிடம் தவிர வேறு யாரிடமும் அது எனக்குக் கிடைக்கவில்லை. இந்த குஸைமாவின் சாட்சியத்தைத் தான் (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு பேரின் சாட்சியத்திற்குச் சமமானதாக ஆக்கினார்கள். (அந்த வசனம் இதுதான்:) ''இறை நம்பிக்கையாளர்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்விடம் தாம் அளித்த வாக்குறுதியில் உண்மையாக நடந்துகொண்டார்கள்." (33:23)

இதில் பல சந்தேகங்கள் கேள்விகள் எழுகின்றன‌:

1) கலிஃபா உமரை விட, அபூ குஸைமா நேர்மையானவரா?

2) கலிஃபா உமர் நம்பத்தகாதவரா?

3) மக்காவிலிருந்தே முஹம்மதுவிற்காக உயிரையும் உடமைகளையும் விட்டு வந்த உமர், போன்ற சஹாபாக்களை விட, மதினாவில் இஸ்லாமை ஏற்ற அபூ குஸைமா எப்படி நம்பத்தகுந்தவராக மாறிவிட்டார்?

4) அந்த இரண்டு வசனங்கள்(9:128,129), எந்த ஒரு சஹாபாவிடமும் இல்லாமல் எப்படி மறைந்துவிட்டது? அபூ குஸைமாவிடம் மட்டும் எப்படி வசனம் பாதுக்காக்கப்பட்டு இருந்தது?

5) அல்லாஹ் முஸ்லிம்களின் மனதில் குர்‍ஆனை பாதுகாத்தான் என்றுச் சொல்வதெல்லாம், பொய்யான கூற்றுக்கள் ஆகும்,  இரண்டு வசனங்களை மக்காவிலிருந்து இஸ்லாமை ஏற்ற சஹாபாக்களுக்கு ஞாபமில்லை, எழுதியும் வைத்துக்கொள்ளவில்லை என்பது வேண்டிக்கையான ஆச்சரியமாகும்.

9:128,129ஐ வைத்திருந்தவர் உபை இப்னு கஅப்? அபூ குஸைமா இல்லை?

இந்த இரண்டு வசனங்கள் மனித கைவேலையாக இருக்கலாம் என்பதை வலுப்படுத்தும் படி, இன்னொரு ஹதீஸ் சந்தேகத்தை எழுப்புகிறது, அதாவது, தவ்பா அத்தியாயத்தின் கடைசி இரண்டு வசனங்களை ஞாபகத்தில் கொண்டு வந்து, குர்‍ஆனில் சேர்த்தவர் 'உபை இப்னு கஅப்' என்று அபூ தாவுத் ஹதீஸ் கூறுகின்றது.

On the authority of Ubayy ibn Kaab, they were collecting the Quran from the volume of Ubayy. Men were writing, while Ubayy ibn Kaab was dictating to them. When they reached the end of the verse in Sura Baraa (9:127): Thus, God has diverted their hearts, for they are people who do not comprehend, they asserted that this verse was the last of what God, the Exalted, revealed of the Quran. Then, Ubayy said, "God's messenger, peace and blessings be upon him, had me recite two verses after this: Indeed, a messenger has come to you from among yourselves. Your suffering is hard on him. He is anxious over you, compassionate and merciful to the believers..." to the end of the Sura. He said, "So this is the last of what was revealed of the Quran" (Ibn Abu Dawud vol.2, 30).

கேள்விகள்:

 1. 9:128,129ம் வசனங்களை அறிந்தவர் 'உபை' மட்டுமே என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது, ஆனால், இதற்கு முன்பு கண்ட  ஹதீஸின் படி குஸைமா என்பவரிடம் மட்டுமே இந்த இரண்டு வசனங்கள் இருந்தன. இவ்விரு ஹதீஸ்களின் படி எது உண்மை?
 2. உபை என்ற சஹாபாவும் முஹம்மதுவிற்கு குர்‍ஆன் வசனங்களை தொகுத்தவராக இருந்தார். இவர் பொய் சொல்ல வாய்ப்பு இல்லை. 
 3. இதிலிருந்து பார்க்கும் போது, இவ்வசனங்களைச் சுற்றி ஏதோ ஒரு பிரச்சனை இருப்பதை அறியமுடிகின்றதல்லவா?

கலிஃபா உமருக்கும் இந்த வசனம் தெரியுமோ, இன்னொரு ஹதீஸின் குழப்பம்:

முதலாவது "அபூ குஸைமா" என்பவரிடம் மட்டுமே இவ்விரு வசனங்கள் இருப்பதாக கண்டோம், அதன் பிறகு பார்த்த ஹதீஸின் படி, உபை என்பவரிடம் மட்டுமே இவ்விரு வசனங்கள் இருந்ததாக அறிகிறோம். இப்போது, உமருக்கும் இந்த வசனம் தெரிந்திருக்கிறது என்ற ஹதீஸும் அபூதாவூதில் உள்ளது, அதனை படிப்போம்.

Ibn Zubair said, "Al-Harith ibn Khuzaima brought two verses from the end of surat Baraa: Indeed, a messenger has come to you from among yourselves. Your suffering is hard on him. He is anxious over you, compassionate and merciful to the believers, until His saying, the Lord of the glorious throne, to Umar. So he [Umar] said, 'Who is with you in this?' He [Al-Harith] said, 'I only know that I bear witness that I heard them from God's messenger, peace and blessings be upon him.' Then, Umar said, 'And I bear witness that I heard them from God's messenger, peace and blessings be upon him.' Then he said, 'If it was three verses, I would make them a separate Sura. Then, they looked for a Sura from the Quran and attached them to it. Thus, it was attached at the end of Baraa" (Ibn Abu Dawud Vol. 2, 30).

கேள்விகள்:

 1. குஸைமா அவ்விரு வசனங்களை கொண்டு வந்த போது, உமர் அவர்கள் 'இரண்டாவது சாட்சி' எங்கே என்று கேட்கிறார். பதில் இல்லை என்று தெரிந்த போது, உடனே "தாமும் இந்த வசனத்தை முஹம்மதுவிடம் கேட்டு இருக்கிறோம்" என்றுச் சொல்லி, அவ்விரு வசனத்தை சேர்த்துக்கொள்கிறார்.
 2. இதில் எது உண்மை? குஸைமாவிற்கு மட்டுமே இவ்விரு வசனங்கள் தெரிந்திருந்ததா? அல்லது உபைக்கு மட்டுமே தெரிந்திருந்ததா? அல்லது 'குஸைமாவிற்கும், உமருக்கும்' மட்டும் தெரிந்திருந்ததா?
 3. இது ஒரு இட்டுக்கட்டப்பட்ட வசனமாக தெரிகின்றது, ஆகையால் தான் பல முரண்பட்ட விவரங்களை ஹதீஸ்கள் கூறுகின்றன.
 4. இது மட்டுமல்ல, ஒருவேளை மூன்று வசனங்கள் கிடைத்து இருந்திருந்தால், அதனை தனி ஸூராவாக உருவாக்கியிருப்போம் என்றும் உமர் சொல்கிறார். 

முடிவுரை:

இதுவரை குர்‍ஆனின் 9:128,129ம் வசனங்களை ஆய்வு செய்தோம். இதில் இரண்டு பிரச்சனைகளைக் கண்டோம்:

பிரச்சனை 1: ஷிர்க் உள்ள வசனங்கள்:

இதில் ஒரு ஷிர்க் என்ற மிகப்பெரிய பாவம் இருக்கிறது என்பதைக் கண்டோம். அதாவது, ரஊஃபுன் (raooஃபுன்) மற்றும் ரஹீமும் (raheemum)  என்ற பட்டப்பெயர்கள் அல்லாஹ்விற்கு மட்டுமே குர்‍ஆனில் சூட்டப்பட்டுள்ளதைக் கண்டோம், ஆனால் கடைசியாக, இட்டுக்கட்டப்பட்ட வசனங்களை உருவாக்கி, குர்‍ஆனின் கடைசி ஸூராவான தௌபா அத்தியாயத்தோடு சேர்க்கப்பட்டதாக அறிகிறோம். இதுமட்டுமல்ல, இவ்விரு வசனங்கள் குர்‍ஆனில் சேர்க்கப்பட்ட 'குர்‍ஆன் தொகுப்பு வரலாற்றில்' பல முரண்பாடுகளை தவறுகளை காணமுடிகிறது.

பிரச்சனை 2: ஒரே ஒரு சாட்சியோடு குர்‍ஆனில் சேர்க்கப்பட்ட வசனங்கள்:

மதினாவில் இறக்கப்பட்ட இரண்டு வசனங்கள் அதுவும், "முஹம்மது பெரும் கருணையாளர், பெரும் அன்பாளர்" என்ற முக்கியமான விவரங்களைக் கொண்ட வசனங்களை, யாருமே ஞாபகத்தில் வைத்திருக்கவில்லை என்றுச் சொல்வது, நகைப்பிற்குரியது, மேலும், மதினாவில் முஹம்மதுவோடு வாழ்ந்த 10 ஆண்டுகளில் அதனை யாருமே, ஞாபகப்படுத்திக் கொள்ளவில்லை என்பது வருத்தமளிக்கின்ற ஒன்று.

முஹம்மது மரித்த பிறகு, குர்‍ஆனை தொகுக்கும் போது, பல முரண்பட்ட செய்திகள் இவ்விரு வசனங்கள் பற்றி வருவதைக் கண்டால், இது ஒரு இட்டுக்கட்டப்பட்ட வசனங்கள் தான் என்பதை புரிந்துக்கொள்ளமுடிகின்றது. இந்த சந்தேகத்திற்கு வலுசேர்க்கும் வண்ணமாக, அவ்விரு வசனங்கள் குர்‍ஆனின் அடிப்படை கோட்பாட்டோடு பலமாக மோதுகின்றது. அல்லாஹ்விற்கு மட்டுமே உள்ள இலக்கணத்தை, குணத்தை (பெரும் கருணையுள்ளவன், பேரன்புடையவன்) மனிதனுக்கு சூட்டி, இவ்வசனம் பேசுகின்றது. முஹம்மது உயிரோடு இருந்திருந்தால், நிச்சயமாக இதனை ஒப்புக்கொண்டு இருந்திருக்கமாட்டார் என்பதை உறுதியாக கூறமுடியும்.

இந்த ஆய்வில் வெளிப்பட்ட இன்னொரு பிரச்சனை என்னவென்றால், "எங்கள் சஹாபாக்கள் அனைவரும் குர்‍ஆனை 100% மனனம் செய்திருந்தவர்கள்" என்று முஸ்லிம்கள் சொல்லும் பொய்கள் இப்போது உடைக்கப்பட்டுள்ளது.

யாருமே ஹபீஸ் இல்லை (100% குர்‍ஆனை மனனம் செய்தவரில்லை) என்பது தெரிகின்றது. குர்‍ஆனை தொகுக்க ஒரு கமிட்டியை வைத்து, அவ்வளவு பெரிய வேலை தொடங்கியதிலிருந்து அறிவது என்னவென்றால், "குர்‍ஆனை மக்களின் மனதில் அல்லாஹ் பாதுகாத்தான் என்பது வேடிக்கையிலும் பெரிய வேடிக்கையாகும்", இதனை யாராவது மறுக்கமுடியுமா?

இதனை மறுப்பவர்கள், "குர்‍ஆன் தொகுத்த வரலாறு பற்றிய அனைத்து ஹதீஸ்களையும் பொய்கள் என்றுச் சொல்லி புறக்கணிக்கவேண்டியது தான்", இதனை செய்வார்களா முஸ்லிம்கள்? 

எது எப்படியோ, 9:128,129 வ‌சனங்கள் இன்றைய குர்‍ஆனில் காணப்படுகின்றது, அதனை முஸ்லிம்கள் படித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

தேதி: 4th Nov 2021


குர்‍ஆனின் இதர ஆய்வுக் கட்டுரைகள்

குர்‍ஆன் பக்கம்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்

Source:  https://www.answering-islam.org/tamil/authors/umar/arabic_quran/shirk_quran_9_128.html 

சனி, 30 அக்டோபர், 2021

கெய்ரோ 1924 குர்‍ஆன், மூல அரபு குர்‍ஆன்களாகிய தாஷ்கண்ட் & இஸ்தான்புல் கையெழுத்துப் பிரதிகளோடு சரிபார்க்கப்படாமல் வெளியிடப்பட்டதா? (நாம் படித்துக்கொண்டு இருக்கும் குர்‍ஆன் நம்பகமானதா?)

கேள்வியை மாற்றிக் கேட்கிறேன்.  1924ம் ஆண்டு கெய்ரோவில் வெளியிட்ட குர்‍ஆனை(ஹப்ஸ் Hafs Quran), "பழமையான கையெழுத்து குர்‍ஆன்களாக" கருதப்படுகின்ற தாஷ்கண்ட் மற்றும் இஸ்தான்புல் குர்‍ஆனோடு ஒப்பிட்டு, அதன்படி தரப்படுத்தினார்களா?

1924ம் ஆண்டு எகிப்து வெளியிட்ட குர்‍ஆன், அல்லது சௌதி அரசு 1985ம் ஆண்டிலிருந்து அச்சடித்து உலகெங்கிலும் அனுப்புகின்ற குர்‍ஆன்கள், அல்லது இன்று 95% உலக முஸ்லிம்களின் வீட்டில் உள்ள குர்‍ஆன்கள் அனைத்தும், 'குர்‍ஆனின் மூலப் பிரதிகளாக கருதப்படுகின்ற இஸ்தான்புல், மற்றும் தாஷ்கண்ட் பிரதிகளோடு' ஒப்பிட்டு, தரப்படுத்தப்பட்டு பிரிண்ட் செய்யப்படவில்லை, என்பது தான் உண்மை.

முஸ்லிம்களின் நம்பிக்கையும், சந்தேக கேள்விகளும்: 

 1. இது எப்படி உண்மையாகும்? உலகில் உள்ள கோடிக்கணக்கான முஸ்லிம்களும், முஸ்லிமல்லாதவர்களும் படித்துக்கொண்டு இருக்கும் 1924ம் ஆண்டு வெளியிடப்பட்ட குர்‍ஆன், மூல அரபி குர்‍ஆன்களோடு சரிபார்க்கப்படாதவைகளா?
 2. எங்கள் இமாம்களும், அறிஞர்களும், நம் கையில் இருக்கும் குர்‍ஆன், புள்ளிக்கு புள்ளி, எழுத்துக்கு எழுத்து, வார்த்தைக்கு வார்த்தை, இஸ்தான்புல் மற்றும் சமர்கண்ட் குர்‍ஆன்களோடு சரியாக இருக்கிறது என்றுச் சொல்வதெல்லாம் பொய்களா?
 3. உலக முஸ்லிம்கள் அனைவரும் படிக்கும் குர்‍ஆன் மூலத்தோடு சரி பார்க்கப்படாத புத்தகமா?
 4. ஏன் எகிப்து, 1924ல் இப்படிப்பட்ட ஒரு பெரிய தவறைச் செய்தது? அவர்களுக்கு மூல குர்‍ஆன்கள் இருப்பது தெரியாதா?
 5. ஒரு தவறான சரி பார்க்கப்படாத குர்‍ஆனை எகிப்து அரசு எப்படி பிரிண்ட் செய்யலாம்,  அல்லாஹ் அவர்களை மன்னிப்பானா?
 6. இதே தவறை, சௌதி அரசாங்கம், 1985ம் ஆண்டிலிருந்து, பல கோடிகளை செலவு செய்து, அச்சகம் அமைத்து, உலகெங்கிலும் அனுப்பிக்கொண்டு இருக்கிறதே, இவர்களுக்காகவாவது ஞானமில்லையா?

ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், மேற்கண்ட கேள்விகளைக் கேட்டு, அவைகளுக்கு பதில்களைத் தேடியிருப்பேன்.

சான்றுகள் ஏதாவது உண்டா?

நாம் அனைவரும் படிக்கும் குர்‍ஆன், மிகவும் பழமையானதாக கருதப்படும் மூல குர்‍ஆன்களோடு சரி பார்க்கப்படாமல் பிரிண்ட் செய்யப்பட்டது என்பதற்கு என்ன சான்றை நீங்கள் கொடுக்கிறீர்கள்? என்று முஸ்லிம்கள் கேள்வி எழுப்பலாம்.

இவ்வளவு பெரிய விஷயத்தை சான்றுகள் இல்லாமல், முன்வைக்கமுடியுமா? நான் என்ன முஸ்லிமா! சான்றுகள் கொடுக்காமல் பொய்களை அள்ளி வீசுவதற்கு, இதோ சான்றுகள்.

சான்று 1: சமர்கண்ட் குர்‍ஆனோடு 1924ம் ஆண்டு வெளியான கெய்ரோ குர்‍ஆனின் ஒப்பீடுதல்:

கீழ்கண்ட கட்டுரையில், சமர்கண்ட் மூல பிரதிகளோடு, 1924ம் ஆண்டின் குர்‍ஆனை (அதாவது உங்கள் கைகளில் இருக்கும் குர்‍ஆனை ) ஒப்பிட்டு, அவைகளில் உள்ள எழுத்துப்பிழைகள், எழுத்து வித்தியாசங்கள் மற்றும் வார்த்தை வித்தியாசங்கள் கொடுக்கப்பட்டுள்ளன‌, மனவலிமையுள்ள முஸ்லிம்கள் அவைகளை சொடுக்கி படிக்கலாம்.

தமிழ் வீடியோ: இதைப் பற்றிய தமிழ் வீடியோவை இங்கு பார்க்கலாம்

1924ம் ஆண்டின் குர்‍ஆனை, மூல புரதிகளோடு ஒப்பிட்டு, அதன் படி பிரிண்ட் செய்திருந்தால், இத்தனை வித்தியாசங்களை, தவறுகளை அவைகள் கொண்டு இருக்குமா?

சான்று 2: முஸ்லிம்களே அங்கீகரித்த ஆய்வுக் கட்டுரைகள்:

குர்‍ஆன்12-21 (quran12-21.org) என்ற தளத்தில், கி.பி. 12ம் நூற்றாண்டிலிருந்து, இன்றுவரை அதாவது 21ம் நூற்றாண்டு வரை, ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகளில் முதன் முதலாக, பிரிண்ட் செய்த, மொழியாக்கம் செய்த, குர்‍ஆன்கள் பற்றிய ஆய்வுகள் கொடுத்துள்ளார்கள்.

தள மூல தொடுப்பு: https://quran12-21.org/en 

கி.பி. 1550 முதல், 1924 வரையில், பல மொழிகளில் ஐரோப்பிய கண்டத்தில்  மொழியாக்கம் செய்யப்பட்ட குர்‍ஆன் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

 1. Introductory note to the Cairo edition (1924)
 2. Introductory note to Muhammad Hamidullah's French translation, as revised by Fode Soriba Camara, Mohamed Ahmed Lo and Ahmad Mouhammad al-Amine al-Chinquity, at the initiative of the King Fahd Complex (2000)
 3. Introductory note to Régis Blachère's French translation (1957).
 4. Introductory note to George Sale's English translation (1734)
 5. Introductory note to the Russian translation (1716)
 6. Introductory note to André Du Ryer's French translation (1647)
 7. Introductory note to Giovanni Castrodardo's Italian translation, as published by Andrea Arrivabene (1547)
 8. Introductory note to Robert of Ketton's Latin translation (1143), as edited by Theodor Bibliander (1550). 
 9. Introductory note to Tafsīr al-Ğalālayn (15th century)

தமிழில்:

 1. அரபி பிரிண்ட் கெய்ரோ குர்‍ஆன் 1924
 2. பிரென்சு குர்‍ஆன் மொழியாக்கம் 2000
 3. பிரென்சு குர்‍ஆன் மொழியாக்கம் 1957
 4. ஆங்கில குர்‍ஆன் மொழியாக்கம் 1734
 5. ரஷ்ஷிய குர்‍ஆன் மொழியாக்கம் 1716
 6. பிரென்சு குர்‍ஆன் மொழியாக்கம் 1647
 7. இத்தாலிய குர்‍ஆன் மொழியாக்கம் 1547
 8. லத்தீன் குர்‍ஆன் மொழியாக்கம் 1550
 9. ஜலலைன் தஃப்ஸீர் அறிமுகம் - 15வது நூற்றாண்டு

மேற்கண்ட ஒவ்வொரு மொழியாக்கத்தைப் பற்றிய அடிப்படை விவரங்கள் அந்தந்த தொடுப்புக்களில் கொடுக்கப்பட்டுள்ளது. நாம் கெய்ரோ 1924ம் ஆண்டு குர்‍ஆன் பற்றிய ஆய்வுக் கட்டுரையை படிக்கும் போது, கீழ்கண்ட விவரங்கள் ஆச்சரியத்தைக் கொடுக்கும், இந்த விவரங்களை முஸ்லிம் ஆய்வாளர்களே எழுதியுள்ளார்கள் என்பது தான் ஆச்சரியத்தின் ஆழம்:

Quote:

The Cairo Edition (1924)

"However, it is worth noting that the variations observed in this case do not have any real impact on the meaning of the text. As for the Quranic script (rasm), the variant readings (qirā'āt) and the counting of the verses (fawāṣil), the commission consulted Quranic science treatises. In particular, they used the works of Abū ʿAmr al-Dānī (d. 444/1053) and his disciple Abū Dāwūd Ibn Naǧāḥ (d. 496/1103). In contrast, the more ancient codices of the Qur'ān, called maṣāḥif in Arabic, and which are preserved in Muslim countries such as Egypt, Syria and Turkey were ignored. Neglecting those maṣāḥif is somehow unfortunate because recent studies show interesting disparities between what these Quranic treatises of science say about the manuscripts, and what the codices at our disposal actually contain. One can notably find in the latter extra-canonic reading variants that preceded the period when the Quranic corpus was standardized."

இருப்பினும், இங்கு காணப்படும் வித்தியாசங்கள், வசனங்களின் அர்த்தத்தை மாற்றுவதில்லை என்பதை இங்கு குறிப்பிடவேண்டும்.  குர்‍ஆனின் எழுத்துக்கள் (rasm), குர்‍ஆனின் பலவகையான வாசிப்பு முறைகள் (qirā'āt), குர்‍ஆன் வசன எண்ணிக்கைகள் (fawāṣil) பற்றிய விவரங்களை, இந்த குழு குர்‍ஆன் சம்மந்தப்பட்ட‌ பல நூல்களை ஆய்வு செய்துள்ளது. முக்கியமாக, இந்த குழு அபு அம்ர் அத்தானி(இறப்பு. ஹிஜ்ரி 444/கி.பி 1053) மற்றும் அவரது சீடர் அபு தாவூத் இப்னு நகஹ் (இறப்பு. ஹி. 496/கி.பி 1103) ஆகியோரின் புத்தகங்களை பயன்படுத்தினர். மாறாக, இந்த குர்‍ஆன் குழு எகிப்து, சிரியா மற்றும் துருக்கி போன்ற முஸ்லீம் நாடுகளில் பாதுகாக்கப்பட்டு வரும், குர்‍ஆனின் மிகவும் பழமையான அரபு கையெழுத்துப் பிரதிகளை (மஸாஹிஃப்) புறக்கணித்தார்கள்இப்படி அவர்கள் பழமையான குர்‍ஆன் பிரதிகளோடு சரி பார்க்காதது ஒரு துரதிர்ஷ்டமான  செயலாகும். ஏனென்றால், சமீப காலமாக இந்த அரபு கையெழுத்துப் பிரதிகள் மீது செய்யப்பட்ட ஆய்வுகளின் படி, கெய்ரோ குர்‍ஆனுக்கும், கையெழுத்துப் பிரதிகளுக்கும் இடையே பல வித்தியாசங்கள் காணப்படுகின்றன. கெய்ரோ குர்‍ஆனில் பல மாற்றங்கள்/வித்தியாசங்கள் காணப்படுகின்றன, முக்கியமாக‌ கையெழுத்துப் பிரதிகளில் காணப்படுபவைகளே பழமையானதாக உள்ளன.

. . .

To sum up, the interpretation of the Qur'ān and the observed differences in its translations implies a study of the nature of the Quranic corpus and the variants on which it was based. The major problem with the Cairo edition lies in the absence of references to manuscripts: consulting them would have probably allowed us to obtain a text elaborated in a specific period of time, and thus to assess to what extent it is faithful or not to a certain reality of the corpus we have at our disposal. 

முடிவுரையாக சொல்வதானால், மூல குர்‍ஆனுக்கும், அதன் பிறகு உண்டான‌ குர்‍ஆன் ஓதும் முறைகளில் (கிராத்துக்களில்) உள்ள வித்தியாசங்களின் வெளிப்பாடு தான், குர்‍ஆனின் மொழியாக்கங்களில் காணப்படும் வித்தியாசங்கள் ஆகும். கெய்ரோ குர்‍ஆனின் முக்கியமான பிரச்சனை என்னவென்றால், "எந்த இடத்திலும், எந்த ஒரு மூல அரபு கையெழுத்துப் பிரதிகள் பற்றிய குறிப்புகளை அது சான்றுகளாக‌ கொடுக்கவில்லை"ஒருவேளை, இப்படிப்பட்ட மூல கையெழுத்துப் பிரதிகளின் குறிப்புக்கள் கெய்ரோ குர்‍ஆனில் கொடுத்திருந்தால், அவைகளின் மூலமாக, குர்‍ஆனின் சரியான பின்னணி/காலங்கள்/அர்த்தங்கள் பற்றி அறிந்துக்கொள்ள‌ வாய்ப்பு கிடைத்திருக்கும், மேலும், அவ்வசனங்களின் நம்பகத்தன்மைக்கு ஒரு சான்று கிடைத்து,  அவைகளை ஏற்றுக்கொள்ளலாமா, இல்லையா என்ற முடிவுக்கு வரலாம்.

மேலேயுள்ள விவரங்களை சரியாக கூர்ந்து படித்துப் பாருங்கள், முக்கியமாக ஆங்கிலத்தில் படியுங்கள், உண்மை புரியும். 

மேற்கண்ட இரண்டு பத்திகளின் சுருக்கம்:

 • கெய்ரோ குர்‍ஆன் தயாரிக்கும் போது, மூல அரபு குர்‍ஆன் பிரதிகளை சரிபார்க்காதது துரதிர்ஷ்டமானது. அவர்கள் மூல பிரதிகளை புறக்கணித்தார்கள்.
 • கெய்ரோ குர்‍ஆனின் மிகப்பெரிய பிரச்சனை (தவறு), மூல அரபு குர்‍ஆன்களோடு சரி பார்க்காதது தான்.
 • இப்படி அவர்கள் செய்யாமல் இருந்திருந்தால், நமக்கு எவைகள் சரியான வசனங்கள் என்று அறிந்துக்கொள்ள வாய்ப்பு உண்டாகியிருந்திருக்கும்.
 • இதனால், இன்று மூல குர்‍ஆன்களை ஆய்வு செய்யும் போது, நம் கையில் உள்ள குர்‍ஆனோடு அனேக வசனங்கள் அவைகள் வித்தியாசப்படுகின்றன.

முடிவுரை:

மேலே கண்ட விவரங்களிலிருந்து அறிவது என்னவென்றால்,  இன்று உலக முஸ்லிம்கலில் 95% பேர் பயன்படுத்தும் குர்‍ஆன் கெய்ரோவில் 1924ம் ஆண்டு வெளியிட்ட குர்‍ஆன் ஆகும், அதையே சௌதி அரசும் 1985ம் ஆண்டு முதல்  அதிகாரபூர்வமான குர்‍ஆனாக‌ பிரிண்ட் செய்து இலவசமாக கொடுத்துக்கொண்டு இருக்கிறது.  ஆனால், இந்த குர்‍ஆனை தரப்படுத்தும் போது 1924ம் ஆண்டு அல் அஜர் பல்கலைக்கழக முஸ்லிம்கள் அறிஞர்கள், இன்று இஸ்தான்புல் மற்றும் சமர்கண்ட் இடங்களில் வைக்கப்பட்டுள்ள 'மூல அரபு குர்‍ஆன்' கையெழுத்துப் பிரதிகளோடு ஒப்பிட்டு, சரிபார்த்து வெளியிடவில்லை என்பது, வேதனையான மற்றும் ஆச்சரியமான விஷயமாகும்.

இந்த விஷயம் எத்தனை முஸ்லிம்களுக்குத் தெரியும்?

இன்று, அந்த மூல அரபு குர்‍ஆன்களோடு, 1924ம் ஆண்டின் குர்‍ஆனை ஒப்பிட்டால், பலப்பல வித்தியாசங்கள், எழுத்து நீக்கங்கள், வார்த்தை நீக்கங்கள் போன்று அனேக வித்தியாசங்கள் காணப்படுகின்றன, இதனை முஸ்லிம் அறிஞர்கள் அறிந்து, நொந்துக்கொள்கிறார்கள்.

ஆனால், நம்முடன் இருக்கும் முஸ்லிம் அறிஞர்கள், நமக்கு இவைகள் தெரியாது என்று நம்பி, "நாம் படிக்கும் குர்‍ஆன் உலக நாடுகள் அனைத்திலும் ஒரே மாதிரியாக இருக்கும், எழுத்துக்குஎழுத்து புள்ளிக்கு புள்ளி, வார்த்தைக்கு வார்த்தை ஒரே மாதிரியாக இருக்கிறது' மேலும், பழைய மூல அரபு குர்‍ஆன்களோடு ஒப்பிட்டுப் பாருங்கள், ஒரே ஒரு வித்தியாசம் கூட இருக்காது என்று பல பொய்களை அள்ளிவீசிக்கொண்டு இருக்கிறார்கள்.

இவர்களை யார் கேள்வி கேட்பது? உண்மையான முஸ்லிம்கள் தான் கேள்வி கேட்கவேண்டும்.

முஸ்லிம்கள் கேட்பார்களா? தங்கள் குர்‍ஆனை சரி செய்துக்கொள்வார்களா? மூல பழைய குர்‍ஆன்கள் நம்மிடம் இருக்கும் போது, அவைகளை பிரிண்ட் செய்து படிப்பார்களா? அல்லது பல தவறுகள் இருக்கின்ற 1924ம் ஆண்டில் குர்‍ஆனை படிப்பார்களா?

சமர்கண்ட், இஸ்தான்புல் குர்‍ஆன் பிரதிகளை கீழ்கண்ட தொடுப்புக்களை சொடுக்கி பார்க்கலாம்:

 1. The "Qur'ān Of ʿUthmān" At Tashkent (Samarqand), Uzbekistan, From 2nd Century Hijra
 2. Samarkand Kufic Quran
 3. Topkapi manuscript
 4. Uthman Quran or Samarkand Kufic Quran (Youtube Video)

தேதி: 30th Oct 2021


குர்‍ஆனின் இதர ஆய்வுக் கட்டுரைகள்

குர்‍ஆன் பக்கம்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/arabic_quran/quran_cairo_istanbul_tashkant.html