குர்ஆனில் "மிகப்பெரும் கருணையாளன்(ரஊஃபுன்- raoofun), மிகப்பெரும் அன்புடையோன்(ரஹீமும் - raheemum)' என்று அல்லாஹ் அழைக்கப்படுகின்றான்.
உதாரணத்திற்கு கீழ்கண்ட வசனங்களை படியுங்கள், இவைகள் அனைத்தும் அல்லாஹ்வைக் குறிக்கின்றன: (அனைத்து குர்ஆன் வசனங்களும் முஹம்மது ஜான் தமிழாக்கத்திலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.)
ரஊஃபுன் (raoofun):
- 2:207. . . . அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக(رَءُوْفٌ) இருக்கின்றான்.
- 3:30. . . . இன்னும் அல்லாஹ் தன் அடியார்கள் மீது கருணை(رَءُوْفٌۢ) உடையோனாக இருக்கின்றான்.
மேலே பார்த்தது போன்று இந்த ரஊஃபுன் என்ற வார்த்தை தனியாக வரும் போது, 10 இடங்களில் குர்ஆன் அல்லாஹ்விற்கு மட்டுமே பயன்படுத்தியுள்ளது - Quran corpus.
ரஹீமும் (raheemum):
- 11:90. . . . நிச்சயமாக என்னுடைய இறைவன் மிக்க கிருபையுடையவனாகவும்(رَحِيْمٌ), பிரியமுடையவனாகவும் இருக்கின்றான்". .
- 49:12. . . . நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்(رَّحِيْمٌ).
ரஹீமும் என்ற வார்த்த பல வடிவங்களில் குர்ஆனில் வருகிறது, ஆனால், "மிகப்பெரும் கிருபையாளன்" என்ற வடிவம் வரும் போது (50+ முறை) அது அல்லாஹ்விற்கே பயன்படுத்தப்பட்டுள்ளது - Quran Corpus.
நாம் இந்த கட்டுரையில் இவ்விரு வார்த்தைகளும் ஒரே இடத்தில் வருவதைப் பற்றி ஆய்வு செய்துக்கொண்டு இருக்கிறோம். இவ்விரு வார்த்தைகளையும் ஒரே இடத்தில் குர்ஆனில் வந்தால் கூட அது "அல்லாஹ்விற்கு மட்டுமே" குறிப்பிடுகின்றதே தவிர, அது மனிதர்களை குறிப்பதில்லை, ஒரே ஒரு இடத்தில் தவிர (9:128).
- 2:143. . . . நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணை காட்டுபவன், நிகரற்ற அன்புடையவன் (لَرَءُوْفٌ رَّحِيْمٌ).
- 9:117. . . . நிச்சயமாக அவன் அவர்கள் மீது மிக்க கருணையும், கிருபையும் உடையவனாக இருக்கின்றான் ( رَءُوْفٌ رَّحِيْمٌۙ).
- 16:7.. . . நிச்சயமாக உங்களுடைய இறைவன் மிக இரக்கமுடையவன்; அன்பு மிக்கவன்.( لَرَءُوْفٌ رَّحِيْمٌۙ).
- 16:47. . . . நிச்சயமாக உங்கள் இறைவன் இரக்கமுடையவன்; பெருங் கிருபையுடையவன் ( لَرَءُوْفٌ رَّحِيْمٌ).
- 22:65. . . .நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன் (لَرَءُوْفٌ رَّحِيْمٌ).
- 24:20. . . . நிச்சயமாக அல்லாஹ் இரக்கமுடையவனாகவும் அன்புடையோனாகவும் இருக்கின்றான் ( رَءُوْفٌ رَّحِيْمٌ).
- 57:9.. . . நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக்க கிருபையுடையவன்; நிகரற்ற அன்புடையவன் ( لَرَءُوْفٌ رَّحِيْمٌ).
- 59:10. . . நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன் ( رَءُوْفٌ رَّحِيْمٌ ) என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர்.
ஆனால், ஒரே ஒரு இடத்தில் மட்டும், இவ்வார்த்தைகள் இரண்டும், முஹம்மதுவிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
9:128. (முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக(رَءُوْفٌ رَّحِيْمٌ) இருக்கின்றார்.
ஏன் இந்த வசனத்தில் (9:128) ஷிர்க் இருக்கிறது?
ரஊஃபுன் மற்றும் ரஹீமும் என்ற வார்த்தைகள் தனியாக வந்தாலும் சரி, ஒன்றாக வந்தாலும் சரி, அல்லாஹ்விற்கு மட்டுமே குர்ஆன் பயன்படுத்தி இருக்கும் போது, இந்த ஒரு வசனத்தில் மட்டும் ஏன், அது முஹம்மதுவிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது? என்ற சந்தேகம் எழுகின்றதல்லவா?
குர்ஆனை மொழியாக்கம் செய்த யுசுஃப் அலி போன்ற அறிஞர்கள் இதனை அறிவார்கள் எனவே தான், அல்லாஹ்விற்கு இவ்வார்த்தை பயன்படுத்தும் வசனங்களில் ஆங்கிலத்தில் பெரிய எழுத்துக்களில் (Capital letters) எழுதினார்கள், 9:128 என்ற வசனம் வரும் போது, சிறிய எழுத்தில் (Lower letter) எழுதினார்கள்.
Yousuf Ali Translations:
- 2:143 . . .For God is to all people most surely full of kindness Most Merciful.
- 9:117 . . .for He is Unto them Most Kind, Most Merciful.
- 16:7 . . . for your Lord Is indeed Most Kind, Most Merciful.
- 9:128 Now hath come unto you An Apostle from amongst Yourselves: it grieves him That ye should perish: Ardently anxious is he Over you: to the Believers Is he most kind and merciful.
9:128ல் குறிப்பிடப்பட்டது முஹம்மதுவையா? அல்லது வேறு நபியையா?
9:128ம் வசனத்தை பார்க்கும் போது, "(முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்;" என்ற வார்த்தைகளிலிருந்து, இங்கு குறிப்பிடப்பட்டவர் முஹம்மது என்பதை சுலபமாக அறிந்துக்கொள்ளலாம்.
மேலும் சில ஆங்கில மொழியாக்கங்களில், அடைப்பிற்குள் முஹம்மது என்று எழுதியும் வைத்து, அடையாளப்படுத்தியுள்ளார்கள்.
ஹிலாலி க்ஹான் ஆங்கில மொழியாக்கம் (சௌதி வெளியீடு):
128. Verily, there has come unto you a Messenger (Muhammad صلى الله عليه وسلم) from amongst yourselves (i.e. whom you know well). It grieves him that you should receive any injury or difficulty. He (Muhammad صلى الله عليه وسلم) is anxious over you (to be rightly guided, to repent to Allâh, and beg Him to pardon and forgive your sins in order that you may enter Paradise and be saved from the punishment of the Hell-fire); for the believers (he صلى الله عليه وسلم is) full of pity, kind, and merciful.
முஸ்லிம் ஹதீஸ் தொகுப்பிலிருந்து சான்று:
முஸ்லிம் எண் 4697. ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எனக்கு (ஐந்து) பெயர்கள் உள்ளன. நான் "முஹம்மத்" (புகழப்பட்டவர்) ஆவேன். நான் "அஹ்மத்" (இறைவனை அதிகமாகப் புகழ்பவர்) ஆவேன். நான் "மாஹீ" (அழிப்பவர்) ஆவேன்; என் மூலம் அல்லாஹ் (ஏக) இறைமறுப்பை அழிக்கின்றான். நான் "ஹாஷிர்" (ஒன்றுதிரட்டுபவர்) ஆவேன்; மக்கள் என் பாதங்களுக்குக் கீழே (என் தலைமையில்) ஒன்றுதிரட்டப்படுவார்கள். நான் "ஆகிப்" (இறுதியானவர்) ஆவேன்; எனக்குப் பிறகு வேறெந்த இறைத்தூதரும் இல்லை" என்று கூறினார்கள். அவர்களுக்கு அல்லாஹ் "ரஊஃப்" (பேரன்புடையவர்) என்றும் "ரஹீம்" (இரக்கமுடையவர்) என்றும் பெயர் சூட்டியுள்ளான்.. . .
குர்ஆனில் அல்லாஹ்விற்கு மட்டுமே சூட்டப்பட்ட அந்த புனிதமான பட்டப் பெயர்களை அல்லது அல்லாஹ்வின் தனிப்பட்ட குணத்தை, ஏன் இந்த ஒரு வசனத்தில் மட்டும் அது முரண்படுகிறது? ஏன் அல்லாஹ்விற்கு சமமாக 'முஹம்மது' இவ்வசனத்தில் காட்டப்பட்டார்? இது ஷிர்க் இல்லையா? முஹம்மது அல்லாஹ்விற்கு சமமானவரா?
ஸூரத்துத் தவ்பா தான் கடைசியாக இறங்கிய அத்தியாயம்:
குர்ஆனின் இந்த 9வது அத்தியாயம் (தவ்பா) தான் கடைசியாக இறக்கப்பட்ட அத்தியாயம் என்று இஸ்லாம் கூறுகின்றது. அதாவது புகாரி ஹதீஸிலும் இதற்கு சான்று உண்டு.
புகாரி 4989. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்து வரச் சொன்)னார்கள். (நான் அவர்களிடம் சென்றேன். என்னிடம்) அவர்கள், ''நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்ற 'வஹீ' (வேத வசனங்)களை எழுதிவந்தீர்கள். எனவே, குர்ஆன் வசனங்களைத் தேடுங்கள்!" என்று சொன்னார்கள். ஆகவே, நான் குர்ஆன் வசனங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டேன். இறுதியாக 'அத்தவ்பா' எனும் (9ஆவது) அத்தியாயத்தின் கடைசி இரு வசனங்களை அபூகுஸைமா அல்அன்சாரீ (ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன். அவரல்லாத வேறு எவரிடமும் அவற்றை நான் காணவில்லை.
(அவ்விரு வசனங்களாவன:) உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குச் சிரமமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்கள்மீது அதிகப் பரிவும் கருணையும் உடையோராகவும் அவர் இருக்கின்றார்.
(நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வேறு இறைவன் யாருமில்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கின்றேன். மேலும், அவன் மகத்தான அரியணையின் அதிபதியாயிருக்கின்றான்.(9:128,129)
மேலும் பார்க்க புகாரி எண்கள்: 4679, 4986 & 7191
ஒரே ஒருவரிடம் (அபூகுஸைமா அல்அன்சாரீ) மட்டும் காணப்பட்ட 9:128, 129 வசனங்கள்:
இங்கு கவனிக்கவேண்டிய இன்னொரு விவரமும் உண்டு, அதாவது, 9வது ஸூரா கடைசியாக இறக்கப்பட்டது என்று ஒரு விவரம், ஆனால், அதில் கடைசியாக காணப்படும் இரண்டு வசனங்கள் (128,129), ஒரே ஒருவரிடம் மட்டுமே காணப்பட்டது. அவர் "அபூகுஸைமா அல்அன்சாரீ" என்ற ஷஹாபா ஆவார்.
குர்ஆனின் வசனங்களை சேகரிக்கும் போது, யாராவது ஒருவர் 'இது குர்ஆன் வசனம், நான் நபியவர்களிடமிருந்து கற்றேன்' என்று கூறுவாரானால், அதற்கு அவர் இரண்டு சாட்சிகளை கொண்டுவரவேண்டும், அதாவது இவரைப்போன்று இன்னொருவரிடமும் அந்த வசனங்கள் இருந்திருக்கவேண்டும். ஒரே ஒருவரிடம் மட்டும் வசனங்கள் இருந்தால், அவைகளை குர்ஆனில் சேர்க்காமல் விட்டுவிடுவார்கள், இது தான் அப்போது இருந்த சட்டம். இப்படி ஒரே சாட்சியுள்ள அனேக வசனங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அவர் எவ்வளவு சிறந்த சஹாபாக இருந்தாலும் சரி, இரண்டு சாட்சிகள் இல்லாமல், அவர் கொண்டு வரும் வசனங்கள் குர்ஆனில் சேர்க்கப்படாது.
ஆனால், இந்த ஒரு விஷயத்தில் மட்டும், ஒரே சாட்சியுடன் வசனம் குர்ஆனில் சேர்க்கப்பட்டது. (இதே போன்று குர்ஆன் 33:21ம் வசனம் கூட அபூ குஸைமா என்பவரிடம் மட்டும் தான் இருந்தது என்ற செய்தியும் உண்டு. இந்த வசனம் பற்றி ஸையத் அறிந்திருந்தார், இதனால் அவர் தேடும் போது அபூ குஸைமாவிடம் அது காணப்பட்டது, ஆக ஸையத் மற்றும் குஸைமா இருவரையும் சேர்த்து இரண்டு சாட்சிகள்.)
அதுவரை 'மிகப்பெரும் கருணையுடையவன், பெரும் அன்புடையோன்' என்பது அல்லாஹ்விற்கு மட்டுமே கொடுக்கப்பட்டு இருந்த பட்டங்கள், இந்த இருவசனங்கள் மூலமாக அது முஹம்மதுவிற்கும் சூட்டப்பட்டாகிவிட்டது. இது மிகப்பெரிய ஷிர்க் அல்லவா?
இந்த விஷயம் எந்த ஒரு முஸ்லிமுக்கும் தெரியாமல் இருந்தது, நூற்றுக்கணக்கான சஹாபாக்களுக்கும் தெரியாமல் இருந்தது, ஒரே ஒரு அன்சாரிக்கு மட்டும் தெரிந்திருந்தது என்பது சந்தேகத்திற்கு உரியது, கேள்விக்குரியது.
அபூகுஸைமா என்ற தோழர், உமரை விட நேர்மையானவரா?
இரண்டாவது கலிஃபா உமர் அவர்கள் 'கல்லெறி தண்டனை' பற்றிய வசனத்தை கொண்டுவந்தார்கள், ஆனால், அதற்கு இரண்டாவது சாட்சி இல்லை என்றுச் சொல்லி குர்ஆனில் சேர்க்க மறுக்கப்பட்டது. ஆனால், அபூ குஸைமா கொண்டு வந்த வசனம், ஒரே ஒரு சாட்சியுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டது, ஏனென்றால், இவரது சாட்சி இரண்டு சாட்சிகளுக்கு சமம் என்று முஹம்மது கூறியிருந்தாராம், கீழ்கண்ட புகாரி ஹதீஸை பார்க்கவும்.
புகாரி எண் 4784. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்,) குர்ஆனுக்குப் பிரதிகள் எடுத்தபோது 'அல்அஹ்ஸாப்' எனும் (33ஆவது) அத்தியாயத்தின் ஒரு வசனத்தை நான் காணவில்லை. அதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதக் கேட்டிருந்தேன். குஸைமா அல்அன்சாரீ (ரலி) அவர்களிடம் தவிர வேறு யாரிடமும் அது எனக்குக் கிடைக்கவில்லை. இந்த குஸைமாவின் சாட்சியத்தைத் தான் (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு பேரின் சாட்சியத்திற்குச் சமமானதாக ஆக்கினார்கள். (அந்த வசனம் இதுதான்:) ''இறை நம்பிக்கையாளர்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்விடம் தாம் அளித்த வாக்குறுதியில் உண்மையாக நடந்துகொண்டார்கள்." (33:23)
இதில் பல சந்தேகங்கள் கேள்விகள் எழுகின்றன:
1) கலிஃபா உமரை விட, அபூ குஸைமா நேர்மையானவரா?
2) கலிஃபா உமர் நம்பத்தகாதவரா?
3) மக்காவிலிருந்தே முஹம்மதுவிற்காக உயிரையும் உடமைகளையும் விட்டு வந்த உமர், போன்ற சஹாபாக்களை விட, மதினாவில் இஸ்லாமை ஏற்ற அபூ குஸைமா எப்படி நம்பத்தகுந்தவராக மாறிவிட்டார்?
4) அந்த இரண்டு வசனங்கள்(9:128,129), எந்த ஒரு சஹாபாவிடமும் இல்லாமல் எப்படி மறைந்துவிட்டது? அபூ குஸைமாவிடம் மட்டும் எப்படி வசனம் பாதுக்காக்கப்பட்டு இருந்தது?
5) அல்லாஹ் முஸ்லிம்களின் மனதில் குர்ஆனை பாதுகாத்தான் என்றுச் சொல்வதெல்லாம், பொய்யான கூற்றுக்கள் ஆகும், இரண்டு வசனங்களை மக்காவிலிருந்து இஸ்லாமை ஏற்ற சஹாபாக்களுக்கு ஞாபமில்லை, எழுதியும் வைத்துக்கொள்ளவில்லை என்பது வேண்டிக்கையான ஆச்சரியமாகும்.
9:128,129ஐ வைத்திருந்தவர் உபை இப்னு கஅப்? அபூ குஸைமா இல்லை?
இந்த இரண்டு வசனங்கள் மனித கைவேலையாக இருக்கலாம் என்பதை வலுப்படுத்தும் படி, இன்னொரு ஹதீஸ் சந்தேகத்தை எழுப்புகிறது, அதாவது, தவ்பா அத்தியாயத்தின் கடைசி இரண்டு வசனங்களை ஞாபகத்தில் கொண்டு வந்து, குர்ஆனில் சேர்த்தவர் 'உபை இப்னு கஅப்' என்று அபூ தாவுத் ஹதீஸ் கூறுகின்றது.
On the authority of Ubayy ibn Kaab, they were collecting the Quran from the volume of Ubayy. Men were writing, while Ubayy ibn Kaab was dictating to them. When they reached the end of the verse in Sura Baraa (9:127): Thus, God has diverted their hearts, for they are people who do not comprehend, they asserted that this verse was the last of what God, the Exalted, revealed of the Quran. Then, Ubayy said, "God's messenger, peace and blessings be upon him, had me recite two verses after this: Indeed, a messenger has come to you from among yourselves. Your suffering is hard on him. He is anxious over you, compassionate and merciful to the believers..." to the end of the Sura. He said, "So this is the last of what was revealed of the Quran" (Ibn Abu Dawud vol.2, 30).
கேள்விகள்:
- 9:128,129ம் வசனங்களை அறிந்தவர் 'உபை' மட்டுமே என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது, ஆனால், இதற்கு முன்பு கண்ட ஹதீஸின் படி குஸைமா என்பவரிடம் மட்டுமே இந்த இரண்டு வசனங்கள் இருந்தன. இவ்விரு ஹதீஸ்களின் படி எது உண்மை?
- உபை என்ற சஹாபாவும் முஹம்மதுவிற்கு குர்ஆன் வசனங்களை தொகுத்தவராக இருந்தார். இவர் பொய் சொல்ல வாய்ப்பு இல்லை.
- இதிலிருந்து பார்க்கும் போது, இவ்வசனங்களைச் சுற்றி ஏதோ ஒரு பிரச்சனை இருப்பதை அறியமுடிகின்றதல்லவா?
கலிஃபா உமருக்கும் இந்த வசனம் தெரியுமோ, இன்னொரு ஹதீஸின் குழப்பம்:
முதலாவது "அபூ குஸைமா" என்பவரிடம் மட்டுமே இவ்விரு வசனங்கள் இருப்பதாக கண்டோம், அதன் பிறகு பார்த்த ஹதீஸின் படி, உபை என்பவரிடம் மட்டுமே இவ்விரு வசனங்கள் இருந்ததாக அறிகிறோம். இப்போது, உமருக்கும் இந்த வசனம் தெரிந்திருக்கிறது என்ற ஹதீஸும் அபூதாவூதில் உள்ளது, அதனை படிப்போம்.
Ibn Zubair said, "Al-Harith ibn Khuzaima brought two verses from the end of surat Baraa: Indeed, a messenger has come to you from among yourselves. Your suffering is hard on him. He is anxious over you, compassionate and merciful to the believers, until His saying, the Lord of the glorious throne, to Umar. So he [Umar] said, 'Who is with you in this?' He [Al-Harith] said, 'I only know that I bear witness that I heard them from God's messenger, peace and blessings be upon him.' Then, Umar said, 'And I bear witness that I heard them from God's messenger, peace and blessings be upon him.' Then he said, 'If it was three verses, I would make them a separate Sura. Then, they looked for a Sura from the Quran and attached them to it. Thus, it was attached at the end of Baraa" (Ibn Abu Dawud Vol. 2, 30).
கேள்விகள்:
- குஸைமா அவ்விரு வசனங்களை கொண்டு வந்த போது, உமர் அவர்கள் 'இரண்டாவது சாட்சி' எங்கே என்று கேட்கிறார். பதில் இல்லை என்று தெரிந்த போது, உடனே "தாமும் இந்த வசனத்தை முஹம்மதுவிடம் கேட்டு இருக்கிறோம்" என்றுச் சொல்லி, அவ்விரு வசனத்தை சேர்த்துக்கொள்கிறார்.
- இதில் எது உண்மை? குஸைமாவிற்கு மட்டுமே இவ்விரு வசனங்கள் தெரிந்திருந்ததா? அல்லது உபைக்கு மட்டுமே தெரிந்திருந்ததா? அல்லது 'குஸைமாவிற்கும், உமருக்கும்' மட்டும் தெரிந்திருந்ததா?
- இது ஒரு இட்டுக்கட்டப்பட்ட வசனமாக தெரிகின்றது, ஆகையால் தான் பல முரண்பட்ட விவரங்களை ஹதீஸ்கள் கூறுகின்றன.
- இது மட்டுமல்ல, ஒருவேளை மூன்று வசனங்கள் கிடைத்து இருந்திருந்தால், அதனை தனி ஸூராவாக உருவாக்கியிருப்போம் என்றும் உமர் சொல்கிறார்.
முடிவுரை:
இதுவரை குர்ஆனின் 9:128,129ம் வசனங்களை ஆய்வு செய்தோம். இதில் இரண்டு பிரச்சனைகளைக் கண்டோம்:
பிரச்சனை 1: ஷிர்க் உள்ள வசனங்கள்:
இதில் ஒரு ஷிர்க் என்ற மிகப்பெரிய பாவம் இருக்கிறது என்பதைக் கண்டோம். அதாவது, ரஊஃபுன் (raooஃபுன்) மற்றும் ரஹீமும் (raheemum) என்ற பட்டப்பெயர்கள் அல்லாஹ்விற்கு மட்டுமே குர்ஆனில் சூட்டப்பட்டுள்ளதைக் கண்டோம், ஆனால் கடைசியாக, இட்டுக்கட்டப்பட்ட வசனங்களை உருவாக்கி, குர்ஆனின் கடைசி ஸூராவான தௌபா அத்தியாயத்தோடு சேர்க்கப்பட்டதாக அறிகிறோம். இதுமட்டுமல்ல, இவ்விரு வசனங்கள் குர்ஆனில் சேர்க்கப்பட்ட 'குர்ஆன் தொகுப்பு வரலாற்றில்' பல முரண்பாடுகளை தவறுகளை காணமுடிகிறது.
பிரச்சனை 2: ஒரே ஒரு சாட்சியோடு குர்ஆனில் சேர்க்கப்பட்ட வசனங்கள்:
மதினாவில் இறக்கப்பட்ட இரண்டு வசனங்கள் அதுவும், "முஹம்மது பெரும் கருணையாளர், பெரும் அன்பாளர்" என்ற முக்கியமான விவரங்களைக் கொண்ட வசனங்களை, யாருமே ஞாபகத்தில் வைத்திருக்கவில்லை என்றுச் சொல்வது, நகைப்பிற்குரியது, மேலும், மதினாவில் முஹம்மதுவோடு வாழ்ந்த 10 ஆண்டுகளில் அதனை யாருமே, ஞாபகப்படுத்திக் கொள்ளவில்லை என்பது வருத்தமளிக்கின்ற ஒன்று.
முஹம்மது மரித்த பிறகு, குர்ஆனை தொகுக்கும் போது, பல முரண்பட்ட செய்திகள் இவ்விரு வசனங்கள் பற்றி வருவதைக் கண்டால், இது ஒரு இட்டுக்கட்டப்பட்ட வசனங்கள் தான் என்பதை புரிந்துக்கொள்ளமுடிகின்றது. இந்த சந்தேகத்திற்கு வலுசேர்க்கும் வண்ணமாக, அவ்விரு வசனங்கள் குர்ஆனின் அடிப்படை கோட்பாட்டோடு பலமாக மோதுகின்றது. அல்லாஹ்விற்கு மட்டுமே உள்ள இலக்கணத்தை, குணத்தை (பெரும் கருணையுள்ளவன், பேரன்புடையவன்) மனிதனுக்கு சூட்டி, இவ்வசனம் பேசுகின்றது. முஹம்மது உயிரோடு இருந்திருந்தால், நிச்சயமாக இதனை ஒப்புக்கொண்டு இருந்திருக்கமாட்டார் என்பதை உறுதியாக கூறமுடியும்.
இந்த ஆய்வில் வெளிப்பட்ட இன்னொரு பிரச்சனை என்னவென்றால், "எங்கள் சஹாபாக்கள் அனைவரும் குர்ஆனை 100% மனனம் செய்திருந்தவர்கள்" என்று முஸ்லிம்கள் சொல்லும் பொய்கள் இப்போது உடைக்கப்பட்டுள்ளது.
யாருமே ஹபீஸ் இல்லை (100% குர்ஆனை மனனம் செய்தவரில்லை) என்பது தெரிகின்றது. குர்ஆனை தொகுக்க ஒரு கமிட்டியை வைத்து, அவ்வளவு பெரிய வேலை தொடங்கியதிலிருந்து அறிவது என்னவென்றால், "குர்ஆனை மக்களின் மனதில் அல்லாஹ் பாதுகாத்தான் என்பது வேடிக்கையிலும் பெரிய வேடிக்கையாகும்", இதனை யாராவது மறுக்கமுடியுமா?
இதனை மறுப்பவர்கள், "குர்ஆன் தொகுத்த வரலாறு பற்றிய அனைத்து ஹதீஸ்களையும் பொய்கள் என்றுச் சொல்லி புறக்கணிக்கவேண்டியது தான்", இதனை செய்வார்களா முஸ்லிம்கள்?
எது எப்படியோ, 9:128,129 வசனங்கள் இன்றைய குர்ஆனில் காணப்படுகின்றது, அதனை முஸ்லிம்கள் படித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
தேதி: 4th Nov 2021
குர்ஆனின் இதர ஆய்வுக் கட்டுரைகள்
உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்
Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/arabic_quran/shirk_quran_9_128.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக