ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

செவ்வாய், 26 ஜனவரி, 2016

பாகம் 1 - சென்னையில் பேருதவி புரிந்த முஸ்லிம்களை முஹம்மதுவும் அல்லாஹ்வும் மன்னிப்பார்களா?


2015ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தை சென்னைவாசிகள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள். பல நாட்கள் தொடர்ந்து பெய்த கனமழையினால் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கின,  மக்கள் என்னசெய்வதென்று அறியாமல் கண்ணீரில் மூழ்கினர். பல நாட்கள் அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் அவதிப்பட்டனர். கோடிக்கணக்கில் பணமுள்ளவர்கள் கூட தெருக்கோடிக்குச் சென்று தங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ளமுடியாத நிலையில் இருந்தனர். இந்த நேரத்தில் இந்துக்களும், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் இன்னும் இதர மக்களும், "ஜாதி மத பேதம்" பார்க்காமல் உதவிகள் செய்தனர். மனித நேயத்தின் உண்மை வடிவம், முழு பௌர்ணமி நிலவு போல பலிச்சென்று சென்னையில் தெரிந்தது. உதவி செய்த அனைத்து பிரிவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அரசாங்கமும் தன் கடமையை செய்தது.

முஸ்லிம்களின் மனித நேய உதவிகள்:

இந்த முறை முஸ்லிம்கள் செய்த உதவியை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. ஒவ்வொரு இஸ்லாமிய பிரிவினரும் போட்டி போட்டுக் கொண்டு உதவிகள் செய்தனர்.  மக்களுக்கு உதவி புரியச்சென்றவர்களில் இரண்டு முஸ்லிம் சகோதரர்கள் மரித்துவிட்டதாகவும் நாம் இணையத்தில் வாசிக்கிறோம். இவர்களின் இவ்வுதவிகள் பற்றி மேலும் அறிய அவரவர்களின் இணைய தளங்களுக்குச் சென்று படித்துக் கொள்ளலாம்.  

பதிநான்கு நூற்றாண்டுகளாக பூட்டிவைத்திருந்த மனித நேயத்தின் கதவுகளை முஸ்லிம்கள் ஒரே நேரத்தில் திறந்துவிட்டது போல் இருந்தது. சென்னையில் முஸ்லிம்கள் செய்த உதவிகளில் முஸ்லிமல்லாதவர்களும் இருந்தார்கள் என்பது தான் கவனிக்கவேண்டிய ஒன்று. 
  • "இவர்கள் இந்துக்கள் ஆயிற்றே!" என்றுச் சொல்லி  நீட்டிய கைகளை முஸ்லிம்கள் சொடுக்கென்று திரும்ப எடுத்துக் கொள்ளவில்லை. 
  • "இவர்கள் கிறிஸ்தவர்கள் ஆயிற்றே!" என்றுச் சொல்லி உதவி செய்ய ஓடும் தங்கள் கால்களுக்கு முஸ்லிம்கள் தடை விதிக்கவில்லை.  
தடைகளையும், ஆபத்துக்களையும் பாராமல் உதவி செய்தனர். எனவே முஸ்லிம்களை மெச்சிக்கொள்ளாமல் நம்மால் இருக்கமுடியாது.  முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகளாக இருப்பார்கள் என்று முஸ்லிமல்லாதவர்கள் நம்புகிறார்கள். ஆனால், இந்த முறை வானத்திலிருந்து வந்த தண்ணீரால் "சென்னை கழுவப்பட்டப்போது", அதோடு கூட முஸ்லிம்களின்  இந்த அவப்பெயரும் சிறிது கழுவப்பட்டது என்றுச் சொல்லமுடியும். வாழ்க தமிழ் முஸ்லிம்கள்! வளர்க அவர்களின் மனித நேயம்! இக்கட்டுரையின் கருப்பொருள் முஸ்லிம்களின் இவ்வுதவிப் பற்றியது தான். மேற்கொண்டு படியுங்கள்.

கிறிஸ்தவர்களின் மனித நேய உதவிகள் பற்றி ஏன் இக்கட்டுரையில் அதிகமாக எழுதவில்லை?

நான் முஸ்லிம்களை அதிகமாக புகழுவதைக் கண்டு, கிறிஸ்தவர்கள் என் மீது கோபம் கொள்ளலாம். இக்கட்டுரையில் கிறிஸ்தவர்களின் உதவிகள் பற்றி ஏன் அதிகமாக எழுதவில்லை என்பதைப் பற்றி அறிய  அடிக்குறிப்பு  [1] ஐ பார்க்கவும்

முஸ்லிம்களின் உதவிகள் பற்றிய ஆய்விற்கு நாம் வெள்ளத்தை இப்போது திருப்பிவிடுவோம்.

சில முத்துச்சிதரல்கள்:


மழை நீரில் சென்னை மிதந்த போது, குறிப்பிடும்படி சில நிகழ்வுகள் நடந்ததாக இணையத்தில் படிக்கலாம். அவைகளில் நான்கு செய்திகளை மட்டும் பார்த்துவிட்டு, நம் கருப்பொருளைத் தொடுவோம். 

1) ஒரு இந்து சகோதரி பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டு இருந்தபோது, மழை நீரால் மருத்துவமனைக்கும் செல்லமுடியாத நிலையில் தவித்துக் கொண்டு இருந்தபோது,  ஒரு முஸ்லிம் சகோதரர் அந்த பெண் மருத்துவ மனையில் பத்திரமாக சேர்ப்பதற்கு உதவி செய்தாராம். இதனால், அந்த இந்து பெற்றோர்கள் பிறந்த குழந்தைக்கு, தங்களுக்கு உதவி செய்த முஸ்லிம் சகோதரரின் பெயரையே சூட்டினார்களாம்.

2) முஸ்லிம்கள் உதவி செய்வதை படமாக போட்டு, "இப்படிப்பட்ட உதவி செய்யும் எங்களையா பாகிஸ்தானுக்கு போகச்சொல்கிறீர்கள்? நாங்கள் பாகிஸ்தானுக்கு போகட்டுமா?" என்ற கேள்வியை முஸ்லிம்கள் பெருமிதத்துடன் கேட்டு இருந்தார்கள்.

3) ஒரு முஸ்லிம் தன் கையில் செருப்பை எடுத்துக் கொண்டு சென்றுக் கொண்டு இருக்கிறார், இந்த படத்தைப் போட்டு, "பாருங்கள், மாற்று மதங்களின் வணக்க ஸ்தலங்களுக்கு மதிப்பு கொடுக்கும் வண்ணமாக, ஒரு முஸ்லிம் தன் செருப்பை கையில் எடுத்துக் கொண்டுச் செல்கிறார்" என்று எழுதி இருந்தார்கள். மாற்று மத கோயில்களுக்கு நாங்கள் எவ்வளவு மதிப்பு தருகிறோம் என்பதை பாருங்கள்!?! என்று கேள்வி கேட்டு இருந்தார்கள்.

4) இதே போல, இந்துக்களும் ஒரு படத்தைப் போட்டு, ஒரு முஸ்லிம் சகோதரி பிரசவத்திற்கு ஒரு விநாயகர் கோயிலை இந்துக்கள் திறந்து கொடுத்தார்களாம், அதனால், அந்த முஸ்லிம் பெற்றோர்கள் தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு "கணேசன்" என்று பெயர் சூட்டினார்களாம். 

இப்படி அனேக விஷயங்களை இணையத்தில் நாம் காணலாம். இவ்விவரங்கள் உண்மையா இல்லையா என்று ஆய்வு செய்வது இக்கட்டுரையின் நோக்கமல்ல.

இக்கட்டுரையின் நோக்கம் இது தான்: 

சென்னையில் பேருதவி புரிந்த முஸ்லிம்களை முஹம்மதுவும் அல்லாஹ்வும் மன்னிப்பார்களா?

பாகம் 1

இக்கட்டுரையின் கருப்பொருள் கீழ்கண்ட கேள்விகளுக்கு விடை காண விழைவதாகும்: 

1) இந்துக்களிடமும், கிறிஸ்தவர்களிடமும் முஸ்லிம்கள் பாராட்டின இந்த மனித நேய அன்பை, தங்கள் வேதமாகிய குர்-ஆனின் அடிப்படையில் செய்தார்களா? அல்லது இவ்வுதவிகளுக்கு பின்னணியில் ஏதாவது உள்ளார்ந்த அர்த்தமிருக்கின்றதா?

2) நம் கண்முன்னே முஸ்லிம்கள் செய்த இந்த பேருதவிகளை முஹம்மதுவும், அல்லாஹ்வும் அங்கீகரிப்பார்களா? 

3) அல்லாஹ் காஃபிர்களை (முஸ்லிமல்லாதவர்களை) வெறுக்கிறார், ஆனால் முஸ்லிம்கள் காஃபிர்களுக்காக உயிரை பணயம் வைத்து உதவி செய்தார்கள், இதனை இஸ்லாமும் குர்-ஆனும் அனுமதிக்குமா? 

4) காஃபிர்களுக்கு பேருதவி செய்யச் சொல்லி குர்-ஆன் முஸ்லிம்களுக்கு கட்டளையிடுகின்றதா? இதற்கு குர்-ஆன் வசன ஆதாரமிருக்கின்றதா?

5) முஸ்லிமல்லாதவர்களிடம் முஹம்மது எப்படி நடந்துக்கொண்டார்?  முஸ்லிம்கள் காஃபிர்களிடம் எப்படி நடந்துக்கொள்ளவேண்டும் என்று முஹம்மது கட்டளையிட்டார்? 

6) நம் தமிழ் முஸ்லிம்கள் செய்தது போலவே, இஸ்லாமிய நாடுகளில் வாழும் சிறும்பான்மை காஃபிர்களுக்காக  (இந்துக்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் . . .) உயிரை பணயம் வைத்து முஸ்லிம்கள் உதவி புரிகின்றார்களா? அல்லது காஃபிர்களின் உயிரை பணயமாக எடுத்துக் கொண்டு இருக்கிறார்களா? முஸ்லிம்கள் இஸ்லாமிய நாடுகளில் ஒருவகையிலும், இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில் வேறுவகையிலும் நடந்துக் கொள்கிறார்களே? இதற்கு காரணமென்ன?

7) இஸ்லாமிய ஷரியா சட்டத்தில் காஃபிர்களின் நிலை என்ன? ஷரியா சட்டம் முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் இடையே வேறுபாட்டை காட்டுகின்றதா? அல்லது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை ஆதரிக்கின்றதா?

8) கடைசியாக, இந்த சென்னையின் வெள்ளம் நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள் எவைகள்? 
போன்ற கேள்விகளுக்கு இந்த தொடர் கட்டுரைகளில் பதில்களைக் காண்போம். ஒருவேளை தமிழ் முஸ்லிம்கள் கூட மேற்கண்ட கேள்விகளுக்கு பதில்களைக் கொடுக்க முன்வரலாம். சென்னையில் தமிழ் முஸ்லிம்கள் செய்த உதவிகளை யாரும் மறுக்கமுடியாது, ஆனால், இவ்வுதவிகளின் பின்னணி என்ன? ஏன் இஸ்லாமிய நாடுகளில் முஸ்லிம்கள் இதே போல உதவிகள் செய்வதில்லை? இதற்கு மூலக் காரணங்கள் என்னவென்பதைத் தான் இக்கட்டுரை ஆய்வு செய்கிறது.

முஸ்லிமல்லாதவர்களின் மிகப்பெரிய எதிரி -  இஸ்லாம் பற்றிய அறியாமை


இஸ்லாம் பற்றிய  அறியாமை மிகப்பெரிய ஆபத்தை இஸ்லாமியரல்லாதவர்களுக்கு கொண்டுவரும் என்பதை நாம் மனதில் பதித்துக் கொள்ளவேண்டும்.   இந்துக்கள் பகவத் கீதையை தெரிந்துவைத்திருக்கிறார்களோ இல்லையோ, ஆனால் குர்-ஆனையும், முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்றையும் படித்து புரிந்துக்கொள்ள வேண்டும்.  இயேசுவின் போதனைகளை கிறிஸ்தவர்கள் அரைகுறையாக புரிந்துக் கொண்டாலும் பரவாயில்லை, முஹம்மதுவின் போதனைகளை மட்டும் முழுவதுமாக புரிந்துக் கொள்ளவேண்டும். 

(இப்போது சில இந்துக்கள் "குர்-ஆனை நாங்கள் படித்து இஸ்லாமிய போதனைகளை தெரிந்துக் கொள்வது போல, பைபிளையும் படித்து அதன் போதனைகளையும் தெரிந்துக் கொள்ளக்கூடாதா?" என்று என்னிடம் கேள்வி கேட்கலாம். எல்லோரும் பைபிளை படிக்கவேண்டும் என்று தான் நாங்கள் இலவசமாக பைபிளைத் தருகிறோம்.  எபிரேய கிரேக்க மொழிகளில் கொடுக்காமல், நீங்கள் படிப்பது உங்களுக்கு புரியவேண்டும் என்பதற்காக உங்கள் தாய் மொழிகளில் பைபிளை மொழியாக்கம் செய்து தருகிறோம்.  இந்துக்கள் பைபிளையும் படிக்கவேண்டும், இயேசுவின் போதனைகளையும் அறிந்துக் கொள்ளவேண்டும், எனவே, எல்லோரும் தாராளமாக பைபிளை படிக்கலாம். நான் இஸ்லாம் பற்றி எவைகளை எழுதுகிறேனோ, அவைகள் அனைத்தும் பைபிளுக்கும் பொருந்தும். நாம் குர்-ஆனை கேள்வி கேட்டால், அதே கேள்வியை பைபிளுக்கும் கேட்கலாம், இதர மார்க்க வேதங்களுக்கும் கேட்கலாம். பதில் உள்ளவர்கள் பதில் சொல்லட்டும், பதில் இல்லாதவர்கள் அமைதியாக ஜகா வாங்கிக்கொண்டுச் செல்லட்டும்.)

தமிழ் முஸ்லிம்களின் மனித நேய செயல்களை சென்னைவாசிகள்  கண்டார்கள், இப்போது இந்த முஸ்லிம்களின் வேதம் இதைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம். முஹம்மதுவும், அல்லாஹ்வும் முஸ்லிமல்லாதவர்களிடம் எப்படி நடந்துக் கொள்ளவேண்டும்? என்று சொல்லியுள்ளார்கள் என்பதை ஆய்வு செய்வோம்.  இவ்விவரங்களுக்கு ஆதாரமாக முஸ்லிம்களின் வேதமாகிய குர்-ஆனையும், ஹதீஸ்களையும் மேற்கோள் காட்டியுள்ளோம்.  இஸ்லாமிய வேதம் சொல்கின்றபடி தானே முஸ்லிம்கள் நடந்துக் கொண்டு இருப்பார்கள்? என்று முஸ்லிமல்லாதவர்கள் நினைக்கலாம், இதற்கான பதிலை இக்கட்டுரையில் கொடுத்திருக்கிறேன், வாசகர்கள் கொடுத்திருக்கும் ஆதாரங்களை சுயமாக ஆய்வு செய்து பார்த்துக் கொள்ளட்டும்.

இந்த கட்டுரையில் எடுத்துவைக்கும் குர்-ஆன் மற்றும் ஹதீஸ்கள் பற்றி முஸ்லிம்கள் தங்கள் விளக்கங்களை பதில்களை பின்னூட்டமிட்டால் அதற்கான பதில் தரப்படும்.

1) முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிரான செயல்களைச் செய்யவேண்டும், இது தான் முஸ்லிம்களின் தனித்துவம்:


முஹம்மது என்பவரை முஸ்லிம்கள் தீர்க்கதரிசியாக நம்புகிறார்கள். இஸ்லாமை கி.பி. ஏழாம் நூற்றாண்டில் மக்காவில் தோற்றுவித்தவர் இவர்.  முஹம்மதுவின் ஒவ்வொரு வாக்கையும் முஸ்லிம்கள் வேதவாக்காக பாவித்து கீழ்படிகிறார்கள். ஒவ்வொரு முஸ்லிமும் முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிரான காரியங்களைச் செய்யவேண்டும் என்று முஹம்மது கட்டளையிட்டுள்ளார். சென்னையில் முஸ்லிம்கள் செய்த உதவிகளை எண்ணிப்பார்த்து  நாம் வியக்கிறோம். ஆனால், அவைகளை விட பெரிய வியப்பு நமக்கு இப்போது காத்திருக்கிறது.

முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிரான மாறுபாடு 1: தாடிகளுக்கும், தலைமுடிக்கும் சாயமிடுங்கள்


யூதர்களும் கிறிஸ்தவர்களும் தங்கள் தாடிகளுக்கும் தலைமுடிக்கும் சாயமிட்டுக் கொள்வதில்லையாம், எனவே முஸ்லிம்கள் தங்கள் தாடிக்கும் தலைமுடிக்கும் சாயமிட்டுக் கொள்ளவேண்டுமாம். இப்படி செய்வது எதற்கு? "முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்களுக்கு  எதிராக நடந்துக் கொள்கிறார்கள்" என்று காட்டிக் கொள்வதற்காக. 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. எனவே, நீங்கள் (அவற்றிற்குக் கருப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள்
என அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.
ஆதாரம்: புகாரி 3462, மேலும் பார்க்க புகாரி எண் 5899 மற்றும் முஸ்லிம் 4271

முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிரான மாறுபாடு 2: தாடியை வளரவிடுங்கள், மீசையை ஒட்ட நறுக்குங்கள்


ஒருவரது மீசையும், தாடியும் அவருக்கே சொந்தம், அவைகளை அவர் என்னவாவது செய்யலாம் தவறில்லை. இதே போல, ஒரு மார்க்கத்தின் அடிப்படையில் நம் வெளிப்புற தோற்றத்தை நாம் மாற்றிக் கொள்ளலாம், இதிலும் தவறில்லை. ஆனால், மற்ற மதத்தவர்களுக்கு எதிராக நாங்கள் நடந்துக் கொள்கிறோம் என்று காட்டிக்கொள்ள இப்படி செய்வது, கேவலமானதாகும். அமைதி மார்க்கம் என்றுச் சொல்லிக்கொள்ளும் இஸ்லாமின் இறைத்தூதர் இப்படி கேவலமான கட்டளைகளை கொடுத்துள்ளார். சமுதாயத்தின் ஒற்றுமையை குலைக்க, சமுதாய மக்களிடையே ஏற்றத்தாழ்வு மனப்பான்மையை உருவாக்க, மற்ற மதத்தவரிடம் வெறுப்புணர்வை வெளிப்படையாக காட்டிக் கொள்ள வித்திட்டவர் இஸ்லாமிய இறைத்தூதர் முஹம்மது ஆவார். இவைகளை இஸ்லாமின் புனித நூல்கள் புகாரி, முஸ்லிம் மற்றும் அஹ்மத் போன்றவைகளில் காணலாம், இதோ அந்த ஆதாரங்கள்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.  (ஸஹீஹ் புகாரி எண்: 5892)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: மீசையை ஒட்ட நறுக்குங்கள். தாடியை வளரவிடுங்கள்.-இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 434)

நாங்கள், அல்லாஹ்வின் தூதரே, வேதமுடையவர்கள் தங்களது தாடிகளை (ஒட்ட) கத்தரித்துக் கொள்கிறார்கள்; மீசைகளை வளர விடுகிறார்கள் என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்களது மீசைகளை நீங்கள் கத்தரியுங்கள். தாடிகளை வளர விடுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி),

நூல்: அஹ்மது (21252)

இதர மார்க்க மக்களின் "தீய பழக்கவழக்கங்களை செய்யாமல் இருங்கள்" என்று முஹம்மது கட்டளையிட்டிருக்கவேண்டும். மீசையை வளரவிடுவதில் என்ன தவறு இருக்கிறது? தாடியை ஒட்ட கத்தரிப்பதில் (ட்ரிம் செய்வதில்) என்ன தவறு இருக்கிறது? இதில் அல்லாஹ்விற்கு எதிரான பாவம் என்ன இருக்கிறது?  முஹம்மதுவின் ஒரே நோக்கம், முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிராக செயல்படவேண்டும் அவ்வளவு தான். இதைத் தான் முஸ்லிம்கள் இன்றும் செய்துக் கொண்டு இருக்கிறார்கள். என்னே அறியாமை! முஸ்லிம்களின் மனதில் மாற்று மதத்தவரைப் பற்றிய விஷ வெறுப்புணர்வை இப்படிப்பட்ட கட்டளைகள் விதைத்துவிடுமல்லவா?

முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிரான மாறுபாடு 3:


அவன் வேட்டி அணிவதில்லையா? முஸ்லிமே! நீ வேட்டி அணிந்து அவனுக்கு மாறு செய். அவன் செருப்பு அணிவதில்லையா? முஸ்லிமே! நீ செருப்பு அணிந்து அவனுக்கு மாறு செய். 

வேட்டியையும் செருப்பையும் விட்டுவைக்கவில்லை இஸ்லாமிய இறைத்தூதர். இதர மார்க்க மக்களுக்கு எதிராக நடப்பதே முஸ்லிம்களின் முக்கிய நோக்கமாக மாற்றியிருக்கிறார் முஹம்மது. கீழ்கண்ட ஹதீஸ்களை படிக்கும் முஸ்லிம்களின் உள்ளத்தில் எப்படிப்பட்ட எண்ணங்கள் ஓடும் என்பதை கற்பனை செய்துப் பாருங்கள். கீழ்கண்ட ஹதீஸில் எத்தனை முறை "அவர்களுக்கு மாறு செய்யுங்கள்" என்று முஹம்மது கூறியுள்ளார் என்பதை கவனியுங்கள். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூத்த அன்சாரிகளைக் கடந்து சென்றனர். அவர்களின் தாடிகள் வெண்மையாக இருந்தன. அப்போது "அன்சார்களே (உங்கள் முடிகளை) மஞ்சளாகவோ, சிவப்பாகவோ ஆக்கிக் கொள்ளுங்கள்.வேதக்காரர்களுக்கு மாறு செய்யுங்கள்'' எனக் கூறினார்கள். "அப்படியானால் வேதக்காரர்கள் கால்சட்டை அணிகின்றனர். வேட்டி அணிவதில்லையே'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "நீங்கள் கால்சட்டையும் அணியுங்கள். வேட்டியும் அணியுங்கள் வேதக்காரர்களுக்கு மாறு செய்யுங்கள்'' எனக் கூறினார்கள்.

"அல்லாஹ்வின் தூதரே வேதக்காரர்கள் காலுறை அணிகின்றனர். செருப்புஅணிவதில்லையே'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "நீங்கள் காலுறைகளும் அணியுங்கள். செருப்பும் அணியுங்கள்.வேதக்காரர்களுக்கு மாறு செய்யுங்கள்'' எனக் கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதரே வேதக்காரர்கள் தங்கள் தாடிகளைக் கத்தரித்து மீசைகளை முழுமையாக வைக்கின்றனரே'' எனக் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "நீங்கள் உங்கள் தாடிகளை முழுமையாக வைத்து மீசையைக் கத்தரியுங்கள்'' எனக் கூறினார்கள்.

நூல் : அஹ்மத் (21252)

குருவிற்கு ஏற்ற சீடர்கள் தப்பாமல் கிடைத்துள்ளார்கள் முஹம்மதுவிற்கு. அவர் ஏதோ ஒரு விஷயத்தில் மாறு செய்யுங்கள் என்றுச் சொன்னால், எல்லாவற்றையும் நோண்டி நோண்டி ஏன் கேட்கவேண்டும்? இப்படியெல்லாம் கேட்கும் தோழர்கள் கீழ்கண்டவிதமாகவும் கேட்டு இருக்கவேண்டியது தானே! ஒருவேளை அதற்கும் முஹம்மது பதில் சொல்லியிருப்பார்.

இதோடு கூட, வேதக்காரர்கள் தினமும் சாப்பாடு சாப்பிடுகிறார்கள் என்று நாங்கள் கேட்டோம், அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "நீங்கள் சாப்பாடும் சாப்பிடுங்கள், ஒட்டகங்கள் சாப்பிடுவது போல இலைகளையும், வைக்கோளையும் சாப்பிட்டு வேதக்காரர்களுக்கு மாறு செய்யுங்கள்" எனக் கூறினார்கள்.

இஸ்லாமிய அறிஞர்களின் அங்கீகாரம்:


மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் எங்கள் இஸ்லாமிய நூல்களில் இருந்தாலும், அவைகளை பின்பற்றும் படி இஸ்லாமிய அறிஞர்கள் எங்களுக்கு போதிப்பதில்லை, அவைகளை நாங்கள் பின்பற்றுவதும் இல்லை என்று முஸ்லிம்கள் சொல்லமுடியாது. ஏனென்றால், முஹம்மது சொன்னவைகளில் நியாயம் இல்லாவிட்டாலும், அறிவுடமைக்கு எதிராக இருந்தாலும், கேவலமான கட்டளைகளாக இருந்தாலும், முஸ்லிம்கள் அவைகளை முழுமூச்சோடு பின்பற்றுகிறார்கள். கேள்வி கேட்காமல், முஹம்மது சொன்னதை கடைபிடித்தால் முஸ்லிம்களுக்கு அதிக நன்மைகளை அல்லாஹ் கொடுப்பான் என்பது இஸ்லாமிய நம்பிக்கை. 

ஆன்லைன் பீஜே தளத்திலும், பத்திரிக்கைகளிலும் மேற்கண்ட ஹதீஸ்களை மேற்கோள் காட்டி, முஸ்லிம்கள் அவைகளை பின்பற்றுங்கள் என்று உற்சாகப்படுத்தியுள்ளார்கள். முஸ்லிம்களின் அடையாளமே, மற்ற மதத்தவருக்கு மாறு செய்யும் படி தங்கள் வெளிப்புற தோற்றத்தை காட்டிக்கொள்வதாகும் என்று எழுதியுள்ளார்கள். முஹம்மது சொன்னது போல செய்யாத முஸ்லிம்கள் தங்கள் தனித்துவத்தை இழந்து விடுகிறார்களாம். அதனை நீங்களே படியுங்கள்:

இந்த செய்திகளுக்கு மாற்றமாக, முழுக்க முழுக்க வெள்ளை வெளேரென்று தலைமுடியும் தாடியும் வைத்திருப்பது, அல்லது கருப்பு சாயம் பூசுவது, ஒட்டு முடி வைப்பது, பர்தாவை பெண்கள் பேணாமல் இருப்பது போன்ற காரியங்களை முஸ்லிம்கள் மக்களிடம் பார்க்க முடிகிறது. வெறும் பெயரை மட்டும் வைத்துத் தான் முஸ்லிம் என்று அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் தங்களது தனித்துவத்தை தொலைத்துவிட்டு பெயரளவிற்கு முஸ்லிம்களாக இருக்கிறார்கள்.

2) தமிழ் முஸ்லிம்களின் மனித நேய செயல்களும் முஹம்மதுவும்:


இதுவரை நாம் இரண்டு விஷயங்களை அறிந்துக் கொண்டோம். முதலாவது, முஸ்லிம்களின் சென்னை உதவிகள் பற்றி அறிந்துக் கொண்டோம், இரண்டாவதாக,  இஸ்லாமிய ஆதார நூல்களிலிருந்து "முஸ்லிமல்லாதவர்களுக்கு எப்படியெல்லாம் முஸ்லிம்கள் மாறு செய்யவேண்டும் என்று முஹம்மது கட்டளையிட்டுள்ளார் என்பதை" அறிந்துக் கொண்டோம்.

இதன் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு சில கேள்விகளை முன்வைத்து, இந்த முதலாவது பாக கட்டுரையை முடிக்க விரும்புகிறேன்.

அ) முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிராக செயல்படுங்கள் என்று முஹம்மது முஸ்லிம்களுக்கு கட்டளையிட்டுள்ளார். ஆனால், முஸ்லிம்கள் இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் தங்கள் உயிரை பணயம் வைத்து உதவி செய்துள்ளார்கள்.

ஆ) சென்னையில் இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் உதவிகள் செய்து, முஸ்லிம்கள் முஹம்மதுவின் கட்டளைகளுக்கு எதிராக நடந்துக் கொண்டார்கள் என்று நாம் கருதலாமா? அல்லது முஸ்லிம்களின் இந்த உதவிகளுக்கு பின், ஒரு மாய்மாலமான செயல் உள்ளதா? 

இ) முஹம்மதுவின் மேற்கண்ட ஹதீஸ்களில் சொல்லிய கட்டளைகளை இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்கள் விளக்க கடமைப்பட்டுள்ளார்கள். இதனை செய்வார்களா?

ஈ) முஸ்லிமல்லாதவர்களின் அற்பமான தாடி மற்றும் தலைமுடி விஷயத்தில், ஒரு மிகப்பெரிய இஸ்லாமிய தீர்க்கதரிசி முஸ்லிம்களுக்கு கீழ்தரமாக அறிவுரை கூறுவாரா?  இப்படி முஹம்மது கட்டளையிடுவதிலிருந்து, இஸ்லாமிய மார்க்கம் எந்த தரத்தில் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது என்பதை நாம் எடை போடலாம்.

உ) தமிழ் நாட்டில் வாழும் இந்துக்களே, கிறிஸ்தவர்களே! உங்கள் பகுதியில் வாழும் முஸ்லிம்கள் தங்கள் தாடிகளுக்கும் தலைமுடிகளுக்கும் மருதானி போன்ற சாயம் போட்டுக்கொண்டு, வெள்ளை முடிகளை சிகப்பாக மாற்றிக்கொண்டுச் செல்வதை பார்த்து இருப்பீர்கள்.  இதன் மூலம் முஸ்லிம்கள் தெரிவிப்பது என்ன? "எங்கள் இறைத்தூதர் சொல்லியபடி, நாங்கள் எங்கள் தாடிகளுக்கும் தலைமுடிக்கும் சிகப்பு சாயம் போட்டுக்கொண்டு, உங்களுக்கு எதிராக நடந்துக் கொண்டு இருக்கிறோம்" என்று அவர்கள் சொல்கிறார்கள் என்று அர்த்தம், அப்படித்தானே! நீங்கள் கருப்பு சாயம் போட்டால், நாங்கள் சிகப்பு போடுவோம்! நீங்கள் வேட்டி கட்டவில்லையானால், நாங்கள் வேட்டி கட்டுவோம்! நீங்கள் மீசையை வளரவிட்டால், நாங்கள் அதனை ஒட்ட வெட்டுவோம்! நாங்கள் எதைச் செய்தாலும், அது அற்பமான விஷயமாகிய தாடி மிசை செருப்பு போன்றவைகளாக இருந்தாலும் சரி, உங்களுக்கு எதிராக செய்வது தான் எங்கள் இறைத்தூதர் கற்றுக்கொடுத்த பாதை. இஸ்லாமிய ஆதாரங்கள் இப்படித் தான் சொல்கின்றன. முஸ்லிம்களே! இதற்கு என்ன சொல்லப்போகிறீர்கள்?

ஊ) ஒரு கேவலமான விஷயத்தில் கூட முஹம்மதுவை அணுவணுவாக அப்படியே பின்பற்றும் முஸ்லிம்கள், எப்படி இப்படிப்பட்ட உதவிகளை அதுவும் முஸ்லிமல்லாதவர்களுக்கு செய்தார்கள்? இதில் இருவர் மரித்தும் விட்டார்களாம். இவர்களை முஹம்மது மன்னிப்பாரா?

எ) சென்னையில் உதவி செய்த முஸ்லிம்கள்  அனைவரும் "பெயரளவு முஸ்லிம்கள்" என்று சொல்லமுடியாது, அதாவது முஹம்மதுவின் மேற்கண்ட கட்டளைகளை அறியாதவர்கள் அல்ல இந்த முஸ்லிம்கள். இவர்கள் இஸ்லாமை நன்கு அறிந்திருக்கும் முஸ்லிம்கள். ஆக, முஸ்லிம்கள் இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் உதவி செய்து, முஹம்மதுவிற்கு மாறு செய்தார்களா? அல்லது  இதில் உள்ளர்த்தம் ஏதாவது உண்டா?

ஏ) முஸ்லிமல்லாதவர்களுக்கு மாறு செய்யவேண்டுமென்றால் வேறு விஷயங்களில் செய்யவேண்டியது தானே!  ஒரு இனம் அல்லது மக்கள் செய்யும் தீய காரியங்களைச் செய்யாமல் இருக்க முஹம்மது கட்டளை கொடுத்திருந்தால் அதனை ஏற்றுக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, பிறக்கும் பெண் பிள்ளைகளை கொல்லும் பழக்கமுடைய மக்களின் செயல்களுக்கு மாறு செய்ய முஸ்லிம்களுக்கு கட்டளையிட்டால், அதனை ஏற்கலாம். மக்காவினரின் பழமைவாய்ந்த இப்படிப்பட்ட செயல்களை முஹம்மது கண்டித்துள்ளார். இவைகளை ஏற்கலாம். ஆனால், அற்பமான தாடியையும், தலை முடியையும் பிடித்துக் கொண்டு ஆட்டினால் என்ன நன்மை?

முடிவுரை:


முஸ்லிம்களே! மேற்கண்ட ஹதீஸ்களை நீங்கள் பொய் என்றுச் சொல்வீர்களா? முஹம்மது இப்படியெல்லாம் சொல்லவில்லை, புகாரி மற்றும் முஸ்லிம் ஹதீஸ்கள் சொல்லும் இவ்விவரங்கள் பொய்யானவை என்று அவைகளை ஒதுக்குவீர்களா?  எங்கள் மார்க்கம் மனித நேய மார்க்கமாகும், இந்துக்களையும், கிறிஸ்தவர்களையும், யூதர்களையும் மற்ற எல்லோரையும் நேசிக்கச்சொல்லும் மார்க்கம் என்று நீங்கள் சொன்னால், மேற்கண்ட ஹதீஸ்களின் நிலை என்ன? 
இந்த பாகத்தை இதோடு முடித்துக் கொள்கிறேன். இஸ்லாம் எப்படியெல்லாம் மற்ற மார்க்க மக்களிடம் நடந்துக் கொள்கிறது என்பதை அடுத்த பாகத்தில் இன்னும் மேலதிக ஆதாரங்களை குர்-ஆன் மற்றும் ஹதீஸ்களிலிருந்து பார்க்கலாம்.

அடிக்குறிப்புக்கள்:


[1] கிறிஸ்தவர்களின் மனித நேய உதவிகள் பற்றி ஏன் இக்கட்டுரையில் எழுதவில்லை.

கிறிஸ்தவர்களின் உதவிகள் பற்றி அதிகமாக எழுதாமல், ஏன் முஸ்லிம்களின் உதவிப் பற்றி அதிகமாக உமர் எழுதுகிறார்? என்ற கேள்வி கிறிஸ்தவர்களுக்கு எழும். ஆனால், கிறிஸ்தவர்கள் ஒன்றை சரியாக புரிந்துக் கொள்ளவேண்டும்.  இயற்கையாக நடப்பதைக் கண்டு யாரும் ஆச்சரியப்படமாட்டார்கள், அதிசயமாக நடப்பதைக் கண்டு தான் மக்கள் ஆச்சரியப்படுவார்கள்.  மீன்கள் நீந்துவதைக் கண்டு யாராவது ஆச்சரியப்படுவார்களா? கழுகுகள் உயர பறப்பதைக் கண்டு யாராவது மெச்சிக்கொள்வார்களா? மீனின் நீந்தும் திறமையைப் பார்த்து, கழுகின் பறக்கும் திறமையைப் பார்த்து மக்களின் புருவங்களும் உயராது.  இதே போலத்தான் கிறிஸ்தவர்களின் சேவையும், உதவிகளும். கிறிஸ்தவர்கள் இயற்கையாகவே உதவிகள் செய்பவர்கள், தொன்றுதொட்டு அவர்கள் செய்துவருவது ஒன்றும் புதிதல்லவே!  இதனை நான் பெருமைக்காக அதிகப்படுத்திச் சொல்லவில்லை, உண்மையைத் தான் சொல்கிறேன். 

கிறிஸ்தவர்களின் உதவிகளை நாம் அதிகமாக புகழ்ந்தால், அது அவர்களை அவமானப்படுத்துவதற்கு சமமாகும், கடமையை செய்பவர்களுக்கு அதிக புகழ்ச்சி தேவையில்லை, சத்தியத்திற்கு விளம்பரம் தேவையில்லை.  கிறிஸ்தவர்களின் உதவிகளை மைக் வைத்து  ஊரறிய சொல்லவேண்டிய அவசியமில்லை, ஏனென்றால், ஆபத்து காலத்தில் மட்டுமல்ல, எல்லா காலத்திலும் கிறிஸ்தவர்கள் உதவி செய்கிறார்கள். கிறிஸ்தவர்கள் உதவி செய்ய "சென்னை தண்ணீரில் மூழ்கி மிதக்கவேண்டிய அவசியமில்லை". இக்கட்டுரையின் நோக்கத்தை முழுவதுமாக அறிந்துக் கொள்ள முழு கட்டுரையையும் படிக்கவும்.  அதன் பிறகு இப்படிப்பட்ட கேள்வியை என்னிடம் கேட்க விரும்பமாட்டீர்கள்.

இந்துக்களும் பேருதவியை செய்தார்கள்,  வேற்றுமையில் ஒற்றுமை என்பதை இப்படிப்பட்ட ஆபத்தான காலத்தில் இந்தியாவில் அபரிதமாக காணமுடிகின்றது. 

[2] ஆன்லைன் பீஜே தள கட்டுரைகள்

[5] உமரின் முந்தைய கட்டுரை - 101 காரணங்கள் - முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்? பாகம் 5 (காரணம் 48. தாடிக்கும் தலைமுடிக்கும் சாயமிட்டு யூதர்களுக்கு மாறு செய்யுங்கள்)


வெள்ளி, 15 ஜனவரி, 2016

சமாதானத்தை கொண்டுவருவது எது? (ஜிஹாதா? அல்லது மன்னிப்பா?)

What Brings Peace

ஆசிரியர்: ராபர்ட் ஸீவர்ஸ்

இந்த குழப்பமான, பிரச்சனைக்குரிய உலகத்தில் உண்மையான சமாதானத்தை பெறுவது அரிதான விஷயமாகும். நாம் அனைவரும் சமாதானத்தை விரும்புகிறோம். நாடுகளுக்கிடையே சமாதானம், குடும்பங்களில் சமாதானம், அவ்வளவு ஏன் நம் மனதிலும் சமாதானம் இருக்கவேண்டும் என்று நாம் விரும்புகிறோம். நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், அவைகள் நம் மனதின் அமைதியை கெடுக்காமல் இருக்க பார்த்துக் கொள்ளவேண்டும். நம்மைச் சுற்றி பல தரப்பட்ட மக்கள் இருந்தாலும், பல வேற்றுமைகளுடைய மக்கள் இருந்தாலும், அவைகளை பொருட்படுத்தாமல், அம்மக்களோடு ஒற்றுமையாக வாழ்வது தான் சமாதானம் என்று கருதப்படும்.  இஸ்லாமும் கிறிஸ்தவமும் சமாதானத்தை தேடுங்கள் என்று அறிவுரை கூறுகின்றன. ஆனால், அந்த சமாதானத்தை எப்படி அடையவேண்டும் என்ற விஷயத்தில் இவ்விரு மார்க்கங்களும் நேர் எதிர் வழிமுறைகளை கையாளச் சொல்கின்றன. நாம் சமாதானம் அடைய "இஸ்லாமும் கிறிஸ்தவமும்" எப்படிப்பட்ட வழிமுறைகளை நமக்கு அறிமுகப்படுத்துகின்றன என்பதை ஆய்வு செய்வது தான் இக்கட்டுரையின் நோக்கம்.

கிறிஸ்தவத்தின் இறைவன் சமாதானத்தைப் பற்றி பல விவரங்களை கூறியுள்ளார். தம்மை பின்பற்றுபவர்களுக்கு "சமாதானத்தை" கொடுப்பதாக இயேசு வாக்கு கொடுத்திருக்கிறார். பரிசுத்த ஆவியானவரைப் பற்றி தம்முடைய சீடர்களுக்கு இயேசு அறிவித்த பிறகு (யோவான் 14:26), அடுத்த வசனத்தில் அவர்கள் சமாதானத்தையும் பெறுவார்கள் என்றும் கூறுகிறார் (யோவான் 14:27). இதுமட்டுமல்ல, ஆவிக்குரிய கனிகளில் சமாதானமும் ஒரு கனியாகும் (கலாத்தியர் 5:22). கடைசியாக, இந்த சமாதானமானது, தேவனிடமிருந்து அவரது குமாரனாகிய இயேசுக் கிறிஸ்துவின் மூலமாக வருகிறது (அப்போஸ்தலர் நடபடிகள் 10:36). சமாதானம் என்பது தேவனிடமிருந்து வரும் தற்காலிகமான "ஒரு அமைதி நிலை" அல்ல. அதற்கு பதிலாக, கிறிஸ்துவே நம்முடைய சமாதானமாக இருக்கிறார் (எபேசியர் 2:14). சமாதானம் என்பது நாம் முயற்சி எடுத்து நாடவேண்டியதாகும் (ரோமர் 14:19). நாம் ஒன்றுக்கும் கவலைப்படாமல், தேவனுக்கு நன்றி செலுத்தி, வேண்டுதல்களைச் செய்யவேண்டும், அப்போது தேவ சமாதானம் நம் இருதயங்களை ஆண்டுக்கொள்ளும். இதுமட்டுமல்ல, தேவன் கொடுக்கும் இந்த சமாதானம் உலகம் கொடுக்கின்ற தற்காலிக சமாதானமாக இருக்காது, இது ஒரு ஊற்று போல உள்ளத்தில் பிரவாகித்துக் கொண்டே இருக்கும். இதனை இதர மக்கள் அறிந்துக் கொள்ளமாட்டார்கள் (பிலிப்பியர் 4:6-7).

இந்த சமாதானத்திற்கு இன்னொரு பக்கமும் உள்ளது. நாம் தேவனுடன் சமாதானம் பொருந்தினால், நம் உள்ளத்தில் அவர் கொடுக்கும் உண்மை சமாதானம் நிரந்தரமாக தங்கியிருக்கும் (ரோமர் 5:1). நம்முடைய குறைகளை மன்னித்து தேவன் நம்முடன் சமாதான உடன்படிக்கை செய்தார். இதற்கு நாம் என்ன பதில் கொடுக்கப்போகிறோம்? (2 கொரிந்தியர் 5:18-19).

5:18  இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசு கிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.

5:19 அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார். (2 கொரிந்தியர் 5:18-19)

வேறு வகையாக சொல்லவேண்டுமென்றால், தேவன் நம்முடைய குறைகளை மன்னித்து நம்மோடு ஒப்புரவானார், நம்மோடு சமாதான உடன்படிக்கை செய்தார், இதே போல, நாமும் மற்றவர்களின் குறைகளை மன்னித்து அவர்களோடு சமாதானம் உடையவர்களாக மாறி ஒப்புரவாகவேண்டும் (மத்தேயு 6:14; மாற்கு 11:25). நாம் மற்றவர்களை மன்னிக்காமல் இருந்தால், நமக்கு சமாதானம் கிடைக்காது. மற்றவர்கள் மீது நமக்கு இருக்கும் கோபமும், கசப்பும், நம்முடைய மன்னிக்காத குணமும் நம்மையே அழித்துவிடும். மற்றவர்களை மன்னியுங்கள் என்று கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளையானது, கடைசியில் அது அவர்களுக்கே (மன்னிப்பவர்களுக்கே) மனச்சாந்தியை கொடுக்கும். நாம் மற்றவர்களை மன்னிக்கவேண்டும் என்று தேவன் கட்டளை கொடுத்தார், ஏனென்றால், அவர் அந்த மன்னிப்பை நமக்கு முதலாவது கொடுத்துள்ளார். இதைப் பற்றி எபேசியர் 4:32 அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது.

ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். (எபேசியர் 4:32)

கிறிஸ்தவத்தின்படி, சமாதானத்திற்கு அடிப்படை "மன்னிப்பு" ஆகும். இந்த சத்தியத்தை பைபிள் ஆங்காங்கே பறைசாற்றுகிறது. என் சொந்த வாழ்க்கையிலும் இதனை நான் கண்டு இருக்கிறேன், சமாதானத்தை அனுதின வாழ்வில் அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன்.

இஸ்லாமின்படி சமாதானத்தை எப்படி பெறுவது?

மன்னிப்பதின் மூலமாக சமாதானம் கிடைக்கும் என்று இஸ்லாம் போதிக்கின்றதா?

இஸ்லாம் பல வகைகளில் சமாதானம் பற்றி பேசுகின்றது. ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை சந்திக்கும் போது கூறும் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்ற வாழ்த்தை இதற்கு ஒரு உதாரணமாகச் சொல்லலாம். இந்த வாழ்த்துதலின் பொருள் "உங்கள் மீது சமாதானம் உண்டாகட்டும்" என்பதாகும். இந்த வாழ்த்துதலைப் பற்றி முந்தைய கட்டுரையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 

இஸ்லாமை பொருத்தமட்டில், ஒருவரை மன்னிப்பதற்கும் அதனால் சமாதானம் உண்டாவதற்கும் இடையே உள்ள ஒற்றுமையை முழுவதுமாக புரிந்துக் கொள்ளமுடியாது. இதனை அறிய குர்-ஆனின் மிகவும் கொடுமையான வசனங்கள் என்று கருதப்படும் வசனங்களை உதாரணமாகச் சொல்லலாம். இஸ்லாம் பற்றிய அடிப்படை அறிவு உள்ளவர்கள் இந்த வசனங்களின் முதலாவது வசனத்தை நன்கு அறிந்திருப்பார்கள், ஆனால், அனேகருக்கு இதன் இரண்டாவது வசனம் அவ்வளவாக தெரிந்திருக்காது. 

குர்-ஆன் 9:14-15 வசனங்கள்:

9:14. நீங்கள் அவர்களுடன் போர் புரியுங்கள்; உங்களுடைய கைகளைக் கொண்டே அல்லாஹ் அவர்களுக்கு வேதனையளித்து அவர்களை இழிவு படுத்தி, அவர்களுக்கெதிராக அவன் உங்களுக்கு உதவி (செய்து அவர்கள் மேல் வெற்றி கொள்ளச்) செய்வான். இன்னும் முஃமின்களின் இதயங்களுக்கு ஆறுதலும் அளிப்பான்.

9:15. அவர்களுடைய இதயங்களிலுள்ள கோபத்தையும் போக்கி விடுவான்; தான் நாடியவரின் தவ்பாவை (மன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்கிறான். அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும், (பூரண) ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (டாக்டர் முஹம்மது ஜான் தமிழாக்கம்)

[9.14] Fight them, Allah will punish them by your hands and bring them to disgrace, and assist you against them and heal the hearts of a believing people.

[9.15] And remove the rage of their hearts; and Allah turns (mercifully) to whom He pleases, and Allah is Knowing, Wise.

மக்கள் அனேக முறை குர்-ஆன் 9:14ம் வசனத்தை மட்டும் மேற்கோள் காட்டுவார்கள், இதில் முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்களோடு போரிட கட்டளையிடப்பட்டுள்ளார்கள். எனினும், முஸ்லிம்கள் ஏன் போரிடவேண்டுமென்று அல்லாஹ் சொல்கிறான்? இதற்கான காரணத்தை அறிய மக்கள் குர்-ஆனில் அதிகமாக கவனம் செலுத்துவதில்லை. குர்-ஆன் 9:15ம் வசனத்தின் படி, முஸ்லிமல்லாதவர்களிடம் முஸ்லிம்கள் போரிட்டால், அதன் மூலம் அல்லாஹ் "முஸ்லிம்களின்(முஃமின்களின்) இதயங்களுக்கு ஆறுதல் அளிப்பான்" மற்றும் "அவர்களுடைய (முஃமின்களின்) இதயங்களிலுள்ள கோபத்தையும் போக்கி விடுவான்".

அல்லாஹ்வின் இந்த வாக்குறுதியை முஸ்லிம்கள் எப்படி ஜிஹாதோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள்? அதாவது, ஜிஹாதின் மூலம் முஸ்லிம்களுக்கு வரும் மேற்கண்ட நன்மைகளை எப்படி முஸ்லிம்கள் இவ்வசனத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள்? இஸ்லாமியர்களால் மதிக்கப்படும் குர்-ஆன் விரிவுரையாளர் அல் மௌதூதி என்பவர் "அல்லாஹ் சொல்லும் ஜிஹாத், அனேக முஸ்லிம்களின் இருதயங்களுக்கு ஆறுதலைக் கொடுக்கும்" என்று கூறுகிறார் [1]. அதாவது முஸ்லிம்கள் அல்லாஹ்வின் "சண்டையிடுங்கள் என்ற கட்டளைக்கு கீழ்படிந்தால்", அதனால் அவர்களின் மனக்கவலையும், வலியும் நீங்கும் என்பதாகும். "சண்டை" என்பது முஸ்லிம்களுக்கு மன நிம்மதியைக் கொடுக்கும் மருந்தாகும். இஸ்லாமில், சமாதானம் என்பது சண்டையின் மூலமாக விளையும்  அருங்கனியாக இருக்கிறது. இஸ்லாமுக்கு வெளியே இருப்பவர்களிடம் சண்டையிடுவதினால், இந்த கனியை முஸ்லிம்கள் புசிக்கமுடியும், அதாவது சமாதானம் அடையமுடியும். குர்-ஆனின் படி, துக்கமடைந்த இருதயத்தின் வலியை நீக்கும் ஒரு மருந்து தான் ஜிஹாத் என்பது. மார்க் தூரி என்பவர் இதனை "மனித உள்ளத்திற்கு கொடுக்கப்பட்ட சிறப்பான மருந்து இது" என்றுச் சொல்லி ஆச்சரியப்படுகிறார்[2].

கிறிஸ்தவத்தில் சமாதானம் என்பது மன்னிப்பின் மூலமாகவும், ஒப்புரவாகுதலின் மூலமாகவும் கிடைக்கிறது. இஸ்லாமில், சமாதானம் என்பது ஜிஹாதின் மூலமாகவும், கொல்வதினாலும், சண்டையிடுவதினாலும்  கிடைக்கிறது.

இப்படி நான் எழுதுவதினால் சிலரின் மனது புண்படலாம், ஆனால் இதைத் தான் இஸ்லாமும், அதன் நூல்களும், விரிவுரைகளும் சொல்கின்றன. இதைப் பற்றி யாராவது விவாதிக்க விரும்பினால், என் தள கட்டுரையின் பின்ணூட்ட பகுதியில் தங்கள் கருத்தை பதிக்கலாம் (http://unravelingislam.com/blog/?p=470). கிறிஸ்தவ வாசகர்களிடம் நாம் கேட்டுக்கொள்வதாவது "இஸ்லாமியர்களோடு நல்ல நட்புறவை கொண்டிருங்கள், அவர்களுக்கு சுவிசேஷத்தைச் சொல்லுங்கள், அவர்களும் நம்மைப் போலவே தேவன் கொடுக்கும் உண்மையான நிரந்தரமான சமாதானத்தை பெற வேண்டிக் கொள்ளுங்கள்".

அடிக்குறிப்புக்கள்:

படைப்புகளும் படைத்தவரும் (குர்-ஆனின் இறைவனும், பைபிளின் இறைவனும்)

The Creator and the Creation

ஆசிரியர்: ராபர்ட் ஸீவர்ஸ்

என் இணைய தளத்தின் கட்டுரைகள், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்திற்கு இடையே காணப்படும் இறையியல் வித்தியாசங்களை பட்டியலிடும் ஆய்வு கட்டுரைகளாக இருக்கும். இவைகளில் சில கட்டுரைகள் வெளிப்படையாக உண்மைகளை சொல்வதினால், சில முஸ்லிம்களுக்கு மன வருத்தத்தை உண்டாக்கும். சில கட்டுரைகள் வாசகர்களின் சிந்தனையைத் தூண்டி, மேற்கொண்டு ஆய்வு செய்ய அவர்களை உற்சாகப்படுத்தும். இவ்விரு மார்க்கங்களுக்கு இடையே பல வித்தியாசங்களை நாம் பட்டியலிட்டாலும், படைப்பு மற்றும் படைத்தவர் பற்றிய வித்தியாசம் மிகவும் சுவாரசியமானதாகும். எனவே இக்கட்டுரையில் 'படைப்பும் படைத்தவரும்' என்ற கருப்பொருளில் ஆய்வு செய்யப்போகிறோம்.

கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் என்ற இவ்விரு மார்க்கங்களை பின்பற்றுபவர்கள் சொல்லும் பொதுவான ஒரு விஷயம், "வானத்தையும் பூமியையும் படைத்த இறைவனை நாங்கள் தொழுதுக்கொள்கிறோம்" என்பதாகும். இது ஒரு அடிப்படை விஷயம் என்பதால், இதனை அதிகமாக விளக்கத்தேவையில்லை. பைபிள் தன் முதல் வசனத்தை தேவன் வானத்தையும் பூமியையும் படைத்த வர்ணனையோடு துவங்குகிறது (ஆதியாகமம் 1:1). இன்னும் பல இடங்களில் பைபிளின் இறைவன் தம்முடைய உருவாக்கும் வல்லமையை பறைசாற்றுவதை காணமுடியும் (பார்க்க ஏசாயா 44:24 & யோபு 38:4-6). இதே போல, குர்-ஆனிலும் அனேக இடங்களில் அல்லாஹ் வானத்தையும் பூமியையும் படைத்தவர் என்று சொல்லப்பட்டுள்ளது.  

குர்-ஆன் 6:73. அவன் தான் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்தான்; அவன் "ஆகுக!" என்று சொல்லும் நாளில், அது (உடனே) ஆகிவிடும். அவனுடைய வாக்கு உண்மையானது; எக்காளம் (ஸூர்) ஊதப்படும் நாளில், ஆட்சி (அதிகாரம்) அவனுடையதாகவே இருக்கும்; அவன் மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான்; அவனே பூரண ஞானமுடையோன்; (யாவற்றையும்) நன்கறிந்தோன். (டாக்டர் முஹம்மது ஜான் தமிழாக்கம்)

கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் "வானத்தையும் பூமியையும் படைத்தவரை" தொழுதுக் கொள்வதினால், இவ்விரு பிரிவினரும் ஒரே இறைவனைத் தான் தொழுதுக் கொள்கிறார்கள் என்று மக்கள் முடிவு செய்துவிடுகிறார்கள். அதாவது, கிறிஸ்தவர்கள் வணங்கும் இறைவனைத் தான் முஸ்லிம்களும் வணங்குகிறார்கள் என்று மக்கள் தவறாக எண்ணிவிடுகிறார்கள். ஆனால், பைபிளின் இறைவனும், குர்-ஆனின் அல்லாஹ்வும் தாம் படைத்தவைகளிடம் எப்படி தொடர்பு கொள்கிறார்கள் என்ற ஆய்வைச் செய்தால், இவ்விருவருக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை சரியாக புரிந்துக் கொள்ளமுடியும். 

இஸ்லாமின் படி, அல்லாஹ் என்பவர் தாம் படைத்தவைகளிலிருந்து மேலானவராக கருதப்படுகிறார். நாம் அல்லாஹ்வை பார்க்கமுடியாது என்றும், அவரது சத்தத்தை கேட்கமுடியாது என்றும் முஸ்லிம்கள் நம்புகிறார்கள். அதாவது,  நம் ஐம்புலங்களிலிருந்து அல்லாஹ்வை அறியமுடியாது என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.  இந்த விவரத்தை குர்-ஆன் தெளிவாக விளக்கவில்லை என்றாலும், குர்-ஆன் 29:6ம் வசனத்தை முஸ்லிம்கள், "அல்லாஹ் எல்லா படைப்பை விட மேலானவர்" என்று விளக்குகிறார்கள்.  அல்லாஹ் 'ஒரு போதும் தன் படைப்பிற்குள் வரமாட்டார்" என்று விரிவுரை கொடுக்கிறார்கள். ஒரு இஸ்லாமிய அறிஞர் கீழ்கண்ட விதமாக கூறுகிறார்:

"அல்லாஹ் தான் படைத்த அனைத்து படைப்பைவிட மேலானவன். அவன் தன் படைப்பு போல, ஒரு காலத்திற்கு இடத்திற்கு உட்பட்டவன் அல்ல. ஒருவேளை அல்லாஹ் தன் படைப்பிற்குள் நுழைந்தால், அவனும் தன் படைப்பைப்போல குறையுள்ளவனாக கருதப்படவேண்டி வரும்" [1]

"ஒரு முக்கியமான விவரத்தை தெளிவுபடுத்தவேண்டியுள்ளது. அல்லாஹ் வானத்தில் இருக்கிறான் என்று சொல்லும் போது,  "அவன் வானத்திற்குள் இருக்கிறான்" என்று அர்த்தமல்ல. இதன் உண்மை பொருள் "அல்லாஹ் வானத்திற்கு மேலே இருக்கிறான்" என்பதாகும். அவன் தன் படைப்பை விட மேலானவன், தன் படைப்போடு அவன் சம்மந்தம் கலக்கமாட்டான். அல்லாஹ்வின் ஆதிக்கம், மேன்மை மற்றும் வல்லமை என்பவைகள் அவனின் முக்கிய இலக்கணங்களாக இருக்கின்றன" [2]

"Allah Most High is transcendent above any quality of His creation, including existing within time or space, as that would entail being limited."

We would like to point out that, in saying that Allah is in the heavens, we do not mean that He is present within the heavens. What we mean is that Allah is above the heavens. He is High above His creation, not connected to them, and that His Ascendancy is that of Being, Position, Honor, and Force; indeed, it is one of His Essential Attributes. [ii]

மேற்கண்ட இஸ்லாமியர்களின் மேற்கோள்களின் சுருக்கம் இது தான், அதாவது "அல்லாஹ் வானம் மற்றும் பூமிக்கு அப்பாற்பட்டவன், அவைகளுக்குள் அவன் அடங்கமாட்டான், அவனை அவைகளுக்குள் அடக்கவும் முடியாது" என்பதாகும். அல்லாஹ் யார் என்பதை ஓரளவிற்கு இப்போது புரிந்துக்கொண்டு இருப்பீர்கள். 

பைபிளின் இறைவன் பற்றி இப்போது சுருக்கமாக காண்போம்.  

பைபிளின் இறைவன் அனைத்தையும் படைத்தார். கிறிஸ்தவத்தில் இருக்கும் ஒரு விசேஷம் என்னவென்றால், வானம் பூமி மற்றும் எல்லாவற்றையும் படைத்த இறைவன், தன் படைப்பிற்குள் நுழையவும் அவருக்கு வல்லமை உண்டு என்பதாகும். அவர் ஆதாமுக்கு காணப்பட்டார் (ஆதியாகமம் 3:8), மோசேவோடு ஒரு மலையில் பேசினார் (யாத்திராகமம் 19:3), சாலொமோன் கட்டிய தேவாலயத்தின் பிரதிஷ்டை நாளன்று, அனைத்து இஸ்ரவேலர்களின் மத்தியில் தேவாலயத்தில் மகிமையாக இறங்கினார் (1 இராஜாக்கள் 8:11).  இவைகள் அனைத்தையும் காட்டிலும், மனித இனத்தை இரட்சிக்கும் படியாக, அவர் மனிதனாக இவ்வுலகத்தில் வந்தது முத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய விஷயம். ஒரு வித்தியாசமான சூழ்நிலையில் அவர் உலகில் வந்தார் (மத்தேயு 1:18), இறைவனாக இருந்தும் ஒரு குழந்தையாக பிறந்தார், மேலும் மற்ற பிள்ளைகளைப் போலவே வளர்ந்தார். 

அல்லாஹ்வைப் பற்றி சொல்லும்போது, "நாம் அவரை நம் ஐம்புலங்களால் உணரமுடியாது" என்று பார்க்கிறோம். ஆனால், இயேசுவின் சீடர்கள் தங்கள் ஐம்புலங்களால் இறைவனை உணர்ந்தார்கள், சுவாசித்தார்கள், தொட்டார்கள், பேசினார்கள். இதனை அவர்கள் சாட்சியாக பகிர்ந்தார்கள். பைபிளின் இறைவன் தான் படைத்த படைப்பின் மத்தியிலேயே ஒரு மனிதனாக இறங்கிவந்தார். அவர் தம் சீடர்களுக்கு காணப்பட்டார், அவர்களோடு பேசினார், அவர்களின் காதுகள் இறைவனின் பேச்சை நேரடியாக கேட்டன. இப்படி பல வகையில் பைபிளின் இறைவன் இப்பூவுலகில் உலாவியதை சீடர்கள் கண்டு களித்தார்கள்.  ஒரு சந்தர்ப்பத்தில், தோமா என்ற சீடர், இயேசுவின் காயங்களை தொட்டுப்பார்க்க விரும்பினார் (யோவான் 20:25).

இவ்விவரங்கள் 1 யோவான் 1:1-2ம் வசனங்களில் இரத்தினச் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. 

ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம். அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக்குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். (1 யோவான் 1:1-2)

அல்லாஹ் மிகவும் வல்லமை மிக்கவன், அவன் தான் படைத்த படைப்பிற்குள் வரமுடியாது என்று முஸ்லிம்கள் சொல்லக்கூடும். இப்படி முஸ்லிம்கள் சொல்வார்களானால், அல்லாஹ் பலவீனமானவன் என்று அர்த்தமாகிறது. அதாவது அல்லாஹ்வினால் தான் படைத்த படைப்பிற்குள்ளே வருவதற்கு முடியாத அளவிற்கு பலவீனமானவன் என்று சொல்லும் படி ஆகிவிடுகிறது. வேறுவகையில் சொல்வதானால், தன் படைப்பிற்குள் வருவதற்கு அல்லாஹ்வினால் முடியாது, அவ்வளவு பலவீனமானவனாக அல்லாஹ் இருக்கிறான் என்று முஸ்லிம்கள் ஒப்புக்கொள்வதாக ஆகிவிடுகிறது. 

ஒரு வேலையை செய்யமுடியாத அளவிற்கு அல்லாஹ் பலமுள்ளவன் என்றுச் சொல்வது, அவன் பலவீனமானவன் என்று சொல்வதற்கு சமமாகும் (Being "too powerful" to accomplish something is equivalent to not being able to do it.).

இறைவன் சர்வ வல்லவர் ஆவார், எதுவும் அவரை பலவீனப்படுத்தாது.  அவர் எவைகளை செய்ய விரும்பினாலும், அது தடைப்படாது. அவர் விரும்பினால் தன் வல்லமையை இழக்காமல் தன் படைப்பிற்குள் மனித உருவத்தில் நுழைய முடியும், இது அவருக்கு சுலபமான காரியமாகும். இதனை கிறிஸ்தவத்தில் காணலாம். இதைத்தான் இயேசுவும் செய்துக் காட்டினார்.

முடிவுரையாக, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமில் மற்றொரு வித்தியாசத்தை நாம் கண்டுள்ளோம். பைபிளின் இறைவனும், குர்-ஆனின் இறைவனும் நேர் எதிராக நடந்துக் கொண்டுள்ளார்கள். பைபிளின் தேவன் தாம் சர்வ வல்லவர் என்பதை தன் படைப்பில் (பூமியில்) ஒரு மனிதனாக வந்தும், தம் வல்லமையை இழக்காமல் தன் தெய்வீகத்தை நிருபித்தார். குர்-ஆனின் அல்லாஹ், தான் வல்லமையை இழக்கவேண்டி வருமோ என்று அஞ்சி, தன் படைப்பிற்குள் நுழைய மறுக்கிறார். 

அடிக்குறிப்புக்கள்:

ஆங்கில மூலம்: http://unravelingislam.com/blog/?p=357

இஸ்லாமின் இரண்டாம் அகபா உடன்படிக்கையும், கிறிஸ்தவத்தின் கெத்சமனே தோட்டமும்


The Second Pledge of 'Aqaba

ஆசிரியர்: ராபர்ட் ஸீவர்ஸ்

நான் என் தளத்தில் பதிக்கும் கட்டுரைகளில், பொதுவாக தவிர்க்கும் ஒரு தலைப்பு உண்டு, அது இஸ்லாமிய ஜிஹாத் ஆகும். இந்த ஜிஹாத் பற்றி ஆய்வு செய்து, நேர்த்தியாக விவரங்களை தொகுத்து எழுதுவதற்கு அனேக கிறிஸ்தவ அறிஞர்கள் இருக்கிறார்கள். ஆனால், இஸ்லாமின் இறையியல் பற்றி ஆய்வு செய்து, சத்தியத்தை உலகிற்கு எடுத்துச் சொல்வதற்காக கர்த்தர் என்னை அழைத்திருக்கிறார். இஸ்லாமிய ஜிஹாதை மேலோட்டமாக பார்க்கும் போது, அது முழுக்க முழுக்க ஒரு அரசியல் மற்றும் நாடு சார்ந்த போராட்டமாக காணப்பட்டாலும், அதற்கும் இஸ்லாமிய இறையியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.  ஜிஹாதை நாம் புரிந்துக் கொள்வதற்கு உதவியாக இருக்கும் என்பதற்காக முஹம்மதுவின் வாழ்க்கையில் நடந்த  ஒரு நிகழ்ச்சியை, அதாவது 'இரண்டாவது அகபா உடன்படிக்கையை' ஆய்வு செய்வோம். அதோடு கூட இயேசுவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியையும் ஒப்பிடுவோம். இக்கட்டுரை ஜிஹாதின்  இறையியல் பக்கத்தை மட்டும் ஆய்வு செய்கிறது. 

ஒருவர் இஸ்லாமை முழுவதுமாக அறிந்துக் கொள்ளவேண்டுமென்றால், அவர் இஸ்லாமின் சரித்திரத்தை புரிந்துக் கொள்ளவேண்டும். இஸ்லாமின் ஒவ்வொரு இறையியல் கோட்பாடும் முஹம்மதுவின் செயல்களோடு சம்மந்தப்பட்டுள்ளது. அதாவது முஹம்மதுவின் ஒவ்வொரு செயலும் இஸ்லாமுக்கு ஒரு புதிய கோட்பாட்டை கொடுத்துள்ளது. ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்ட முஹம்மதுவின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒரு கோர்வையாக எழுதப்படவில்லை.  இதனால், முஹம்மதுவின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை சரியாக புரிந்துக் கொள்வது கடினமாக இருக்கும். ஆரம்ப முதல் முடிவு வரை நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சம்மந்தப்படுத்தி முஹம்மதுவின் வாழ்க்கையின் முழு படத்தை குழப்பமில்லாமல் புரிந்துக் கொள்ள  அதிக நேரத்தை செலவழிக்கவேண்டும்.

இதுவரை கண்ட விவரங்களை மனதில் பதித்துக்கொள்ளுங்கள். இப்போது இஸ்லாமின்  'இரண்டாம் அகபா உடன்படிக்கையைப் பற்றி' இக்கட்டுரையில் சுருக்கமாக காண்போம். இஸ்லாமின் ஆரம்ப காலத்தில் முஹம்மது மக்காவில் வாழ்ந்தார், அப்போது முஸ்லிம்கள் அதிகமாக துன்புறுத்தப்பட்டார்கள். எனவே, முஸ்லிம்களில் சிலர் மதினாவிற்கும், இதர ஊர்களுக்கும் இடம் பெயர்ந்து விட்டார்கள். மதினா மக்களில் பலர் முஸ்லிம்களை அன்புடன் வரவேற்றார்கள்.

மக்காவில் முஹம்மதுவிற்கு தொல்லைகள் அதிகரித்துக் கொண்டு இருந்ததினால், அவர் மதினாவிற்கு தப்பித்துச் செல்ல முடிவு செய்தார். முஹம்மதுவின் உயிருக்கு ஆபத்து அதிகரித்துக் கொண்டே இருந்தது. அவர் உயிர் தப்பி மதினாவிற்கு செல்லவேண்டுமென்றால், ஒரு யுக்தியை கையாண்டு தப்பிக்கவேண்டும். இதற்கு அவருக்கு சிலரது உதவி தேவைப்படும், முக்கியமாக அவருக்கு நம்பிக்கைக்குரிய தோழர்களின் உதவியுடன் அவர் தப்பிச் செல்லவேண்டும். ஒரு வருடத்திற்கு முன்பாக "அகபாவின் முதலாம் உடன்படிக்கை" கையைழுத்து போடப்பட்டபோது, முஸ்லிம்கள் முஹம்மதுவிற்கு உதவி செய்வதாகவும், அவரை பாதுகாப்பதாகவும் வாக்கு கொடுத்து இருந்தார்கள். 

இப்னு இஷாக் தம்முடைய "முஹம்மதுவின் சரிதை" என்ற புத்தகத்தில் 'இரண்டாம் அகபா உடன்படிக்கைப்' பற்றி கீழ்கண்டவிதமாக பதிவு செய்துள்ளார். [1]

"அல்லாஹ் இறைத்தூதருக்கு சண்டையிடுவதற்கு அனுமதி கொடுத்தபோது,இரண்டாம் அகபா உடன்படிக்கையில் போர் செய்வது பற்றிய வாக்கியமும் புதிதாக சேர்க்கப்பட்டது. எனவே, முஸ்லிம்கள் அனைவரும் இனி இறைத்தூதரோடு சேர்ந்து மற்றவர்களோடு போர் புரிய வேண்டும். இறைத்தூதரையும், அல்லாஹ்வையும் எதிர்ப்பவர்களோடு முஸ்லிம்கள் போர் புரிந்தால், அல்லாஹ் அதற்கான நன்மையை அவர்களுக்கு சொர்க்கத்தில் கொடுப்பான். [2]

இரண்டாம் அகபா உடன்படிக்கை எழுதப்படுவதற்கு முன்பு வரை, இறைத்தூதர் போரிடுவதற்கும், இதர மக்களின் இரத்தம் சிந்துவதற்கும் அனுமதி கொடுக்கப்படாமல் இருந்தார். [3]

இஸ்லாமில் ஜிஹாத் என்ற விதையை விதைத்தது இந்த இரண்டாம் அகபா உடன்படிக்கையாகும். மேலும் இதனால் இஸ்லாமின் இறைத்தூதர் தைரியம் கொண்டு, தன் தோழர்களின் உதவியுடன் தன் உயிரை காத்துக் கொள்ள மக்காவிலிருந்து மதினாவிற்கு ஓடிச் சென்றார். இந்த நிகழ்வை 'ஹிஜ்ரா' என்றுச் சொல்வார்கள், இது இஸ்லாமிய சரித்திரத்தில் மிகவும் முக்கியமான நிகழ்வாகும் (இதைப் பற்றி மேலும் அறிய இந்த சிறிய கட்டுரையை படிக்கவும்). இந்த ஹிஜ்ரா 'இரண்டாம் அகபா உடன்படிக்கை' கையெழுத்தான பிறகு நடந்ததாகும். 

இதுவரை கண்ட இஸ்லாமிய விவரங்களுக்கும் கிறிஸ்தவத்திற்கும் என்ன சம்மந்தம்?  இதனை அறிந்துக் கொள்ள, இஸ்லாமைப் போலவே, கிறிஸ்தவத்திலும் நடந்த ஒரு முக்கியமான நிகழ்வுக்கு முன்பு என்ன நடந்தது என்பதை நாம் அறிந்துக் கொள்ளவேண்டும். அப்போது தான் இவ்விரண்டு மார்க்கங்களின் அடிப்படை கோட்பாடுகளில் உள்ள வித்தியாசம் புரியும். இயேசுவின் வாழ்வில் நடந்த அதி முக்கிய நிகழ்வுகள் இரண்டு ஆகும்.  இயேசுவை சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வும் (ரோமர் 5:6) அவரது உயிர்த்தெழுதலும் ஆகும் (அப் 17:31). இந்த இரண்டு நிகழ்வுகளுக்கு முன்பாக நடந்த ஒரு நிகழ்ச்சி, இஸ்லாமுடைய இரண்டாம் அகபா உடன்படிக்கை போன்றதாகவே இயேசுவின் சீடர்களுக்கு காணப்பட்டது. அதாவது முஹம்மதுவின் தோழர்கள் தங்கள் உயிரை இஸ்லாமின் இறைத்தூதருக்காக பணயம் வைக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தனர். இதே போல, இயேசுவின் சீடர்களும் தங்கள் உயிரை இயேசுவிற்காக ஊற்றவேண்டிய நிலையில் இருந்தனர்.  இயேசுவை கைது செய்ய ஒரு கூட்டம் வந்த போது,  இயேசுவை சரீர பிரகாரமாக பாதுகாக்கவேண்டும் என்ற நிலையில் சீடர்கள் இருந்தனர். அந்த சமயத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை லூக்கா 22:49-51ம் வசனங்கள் சுருக்கமாக விவரிக்கின்றன:

22:49  அவரைச் சூழநின்றவர்கள் நடக்கப்போகிறதைக் கண்டு: ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா என்றார்கள். 22:50  அந்தப்படியே அவர்களில் ஒருவன் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான். 22:51  அப்பொழுது இயேசு: இம்மட்டில் நிறுத்துங்கள் என்று சொல்லி, அவனுடைய காதைத்தொட்டு, அவனைச் சொஸ்தப்படுத்தினார். (லூக்கா 22:49-51)

இயேசுவின் சீடர்கள் இயேசுவை காப்பாற்றுவதற்காக சண்டையிடவும் தயாராக இருந்தனர். நாம் சண்டையிடலாமா வேண்டாமா என்ற கேள்வி கேட்கப்பட்டது, ஆனால் பதில் வருவதற்கு முன்பாகவே ஒரு சீடர் காரியத்தில் இறங்கிவிட்டார், பட்டயத்தை எடுத்து வீசினார், அதனால் ஒரு காவலாளியின் காது வெட்டப்பட்டது. ஆனால், இயேசு குறிக்கிட்டு, அங்கு நடக்க இருந்த தீய நிகழ்வை தலைகீழாக மாற்றிவிட்டார். இயேசு தம் பாதுகாப்பிற்காக சீடர்கள் சண்டையிடவேண்டும் என்று கேட்டுக் கொள்ளவில்லை. அதற்கு பதிலாக, பட்டயத்தை கீழே போடுங்கள், சண்டையை நிறுத்துங்கள் என்று கட்டளையிட்டார். இயேசுவின் சீடர்கள் தங்கள் பட்டயங்களாலே தமக்கு பாதுகாப்பு அளிக்க முயலக்கூடாது, ஏனென்றால், தாம் ஒரு வித்தியாசமான இராஜாவாக இருக்கிறார் என்பதை இயேசு தெளிவுப்படுத்தினார் (யோவான் 18:36). சாதாரண இராஜாக்களை பாதுகாப்பது போல, தன்னை பாதுகாக்க முயலவேண்டாம் என்றும், தம்முடைய அரசு வித்தியாசமானது என்றும் அவர் கூறினார். இது தான் கிறிஸ்தவத்தின் அதி முக்கிய நிகழ்வுகளுக்கு முன்பாக நடந்த நிகழ்வு ஆகும்.

முடிவாக, கிறிஸ்தவத்திலும் இஸ்லாமிலும் அதி முக்கியமான நிகழ்வுகள் நடந்துள்ளன. இவ்விரண்டு மார்க்கங்களை பின்பற்றின முஹம்மதுவின் சஹாபாக்கள் மற்றும் இயேசுவின் சீடர்களுக்கு தங்கள் தலைவருக்கு, தங்கள் விசுவாசத்தை காட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் கிடைத்தன. இவ்விருவருக்கும் அந்த அதி முக்கியமான நிகழ்வுக்கு முன்பாகவே இந்த சந்தர்ப்பங்கள் ஒரே மாதிரியாக கிடைத்தன. 

இஸ்லாமிலே, "தங்கள் இறைத்தூதர் முஹம்மதுவை காப்பாற்ற சண்டையிடுவோம்" என்ற கோஷத்தோடு, சஹாபாக்கள் இரண்டாம் அகபா உடன்படிக்கையில் கையெழுத்து போட்டனர். முஹம்மதுவிற்காக சண்டையிட ஒப்புக்கொண்டனர்.

ஆனால், கிறிஸ்தவத்திலே, இயேசுவின் சீடர்கள் தாங்கள் உயர்த்திய பட்டயங்களை தங்கள் தலைவரின் வார்த்தைகளுக்கு இணங்கி கீழே போட்டனர். இதன் மூலம் தங்கள் விசுவாசத்தை கெத்சமனே தோட்டத்தில் பறைசாற்றினர், இனி நாங்கள் பட்டயங்களை தூக்கி சண்டையிடமாட்டோம் என்று ஒப்புக்கொடுத்தனர்.

இந்நிகழ்ச்சிகளின் மூலம் இவ்விரு மார்க்கங்களின் அடிப்படை சத்தியங்கள் நமக்கு தெளிவாக தெரிகின்றது. தன்னை காப்பாற்ற சண்டையிடவும் தன் சீடர்கள் தயாராக இருக்கவேண்டும் என்று அவர்களிடம் ஒப்புதல் பெற்ற முஹம்மது எங்கே! தனக்கே ஆபத்து வந்தாலும், மேலே தூக்கிய பட்டயங்களை கீழே போடுங்கள் என்றுச் சொன்ன இயேசு எங்கே! 

இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தின் இறையியலை நாம் ஆய்வு செய்யச் செய்ய, இவ்விரண்டிற்கும் இடையே இருக்கும் தூரம் பெரியதாகிக்கொண்டே செல்கிறதே தவிர, இவை ஒன்றையொன்று சந்திக்கும் என்ற நம்பிக்கை நமக்கு வருவதில்லை.

அடிக்குறிப்புக்கள்

[2] Ishaq, M. i. (1955). Sirat Rasul Allah. (A. Guillaume, Trans.) Karachi: Oxford University Press, p208.

[3] ibid, p 212