[முந்தைய ஒன்பது தொடர் கட்டுரைகளை கீழேயுள்ள தொடுப்புகளை சொடுக்கி படிக்கலாம்: 2013 ரமளான் நாள் 1, நாள் 2, நாள் 3, நாள் 4, நாள் 5 , நாள் 6, நாள்7 , நாள் 8 & நாள் 9]
அன்பான தம்பிக்கு,
நீ எழுதிய கடிதத்தை படித்தேன்.
நீ பொறுமையை இழந்தவனாக மிகவும் சோர்வாக எழுதியிருந்தாய். இனி இஸ்லாமிய போர்கள் பற்றி இம்மாதம் என்னிடம் உரையாடமாட்டாய் என்றும் கூறியிருந்தாய். சில மழைத்துளிகளை தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு பலவீனமாக இருக்கும் நீ, மகா சமுத்திரமாக இருக்கும் இதர இஸ்லாமிய சரித்திரத்தை எப்படி ஜீரணித்துக்கொள்வாய்.
இதோ இந்த கடிதத்தில், கடைசியாக ஒரு நிகழ்ச்சிப் பற்றி எழுதி, உன் விருப்பத்தின் படி, இவ்வாண்டு ரமளான் தொடரை முடித்துக்கொள்கிறேன்.
உலக பொருட்களுக்காக முஸ்லிம்களையே கொலை செய்யும் சஹாபாக்கள்:
குரு எப்படியோ அப்படியே சீடர்களும் இருப்பார்கள். ஒரு மனிதன் எவைகளை அதிகமாக கேட்கிறானோ, சிந்திக்கிறானோ அவைகளைப்போலவே அவன் மாறிவிடுகின்றான். அன்பு பற்றியும், மற்றவர்களை நேசிப்பது பற்றியும் ஒரு மனிதன் பல ஆண்டுகள் போதிக்கப்பட்டால், அதன் பாதிப்பு நிச்சயமாக அவனது வாழ்வில் காணப்படும். அதே போல, போர்கள், சண்டைகள், வழிப்பறி கொள்ளைகள், கொலைகள் என்று இவ்விதமான விவரங்களையே ஒரு மனிதன் அதிகமாக கேட்டு, அவைகளில் அதிகமாக போதிக்கப்பட்டால், 'வாய்ப்பு' கிடைக்கும் போது, அவனுக்குள் வாழும் இந்த குணங்கள் அப்படியே வெளிப்பட்டுவிடும்.
இதைத் தான் இந்த நிகழ்ச்சியில் நாம் காணப்போகிறோம்.
முஹம்மது மக்காவை தாக்க முடிவு செய்தார். ஆனால் இந்த விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக, தன் சகாக்களில் 8 நபர்களை தெரிவு செய்து, "இழம்" என்ற இடத்திற்கு அனுப்பினார். இதன் மூலமாக, முஹம்மது மக்காவை தாக்காமல், தன் கவனத்தை வேறு இடத்தை நோக்கி வைத்திருக்கிறார் என்று எல்லாரும் எண்ணவேண்டும் என்று நினைத்தார்.
முஹம்மதுவின் கட்டளையினால் இவர்களும் சென்றார்கள். சென்ற இடத்தில் ஒரு மேய்ப்பன் இவர்களை கடந்துச் சென்றான், அப்படி செல்லும் போது அவன் "இவர்களுக்கு சலாம் கூறினான்". இருந்தபோதிலும், இவனைக் கொன்று இவனது ஆடுகளை எடுத்துக்கொண்டார்கள். இதனை மதினாவிற்கு வந்து முஹம்மதுவிடம் சொன்ன போது, அல்லாஹ் ஒரு வசனத்தை (குர்-ஆன் 4:94) இறக்கினான்.
பீஜே தமிழாக்கம் குர்-ஆன் 4:94
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் (போருக்குச்) சென்றால் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! உங்களுக்கு ஸலாம் கூறியவரிடம் இவ்வுலக வாழ்க்கையின் பொருட்களைப் பறிப்பதற்காக ''நீ நம்பிக்கை கொண்டவன் இல்லை'' என்று கூறி விடாதீர்கள்! அல்லாஹ் விடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. இதற்கு முன் நீங்களும் இவ்வாறே இருந்தீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிந்தான். எனவே தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
முஹம்மது ஜான் டிரஸ்ட் தமிழாக்கம் - 4:94
முஃமின்களே! அல்லாஹ்வுடைய பாதையில் (போருக்கு) நீங்கள் சென்றால், (போர் முனையில் உங்களை எதிர்த்துச் சண்டை செய்வோர் முஃமின்களா அல்லது மற்றவர்களா என்பதைத்) தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். (அவர்களில்) எவரேனும் (தாம் முஃமின் என்பதை அறிவிக்கும் பொருட்டு) உங்களுக்கு "ஸலாம்" சொன்னால், இவ்வுலக வாழ்க்கையின் அற்பமான அழியக் கூடிய பொருட்களை அடையும் பொருட்டு "நீ முஃமினல்ல" என்று கூறி (அவரைக் கொன்று) விடாதீர்கள்; அல்லாஹ்விடம் ஏராளமான பொருட்கள் இருக்கின்றன; இதற்கு முன்னர் நீங்களும் (பயந்து பயந்து) இவ்வாறே இருந்தீர்கள் - அல்லாஹ் உங்கள் மீது அருள் புரிந்தான்; எனவே (மேலே கூறியாவாறு போர் முனையில்) நீங்கள் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீஙகள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.
இந்த வசனத்தின் மூலமாக, ஒரு முஸ்லிம் இன்னொருவருக்கு சலாம் சொன்னபோதும், உலக பொருட்களுக்காக, அவனை கொன்றது தவறு என்று அல்லாஹ் கூறுகின்றான். இப்னு கதீர் போன்ற குர்-ஆன் விரிவுரையாளர்களின் படி, "முஸ்லிம்கள் தவறுதலாகக் கூட இன்னொரு முஸ்லிமை கொல்லக்கூடாது" என்று கூறுகிறார்கள்.
தம்பி, மேற்கண்ட நிகழ்ச்சி, அந்த காலத்தில் முஹம்மதுவின் சஹாபாக்கள் எப்படி நடந்துக்கொண்டார்கள் என்பதைக் காட்டுகிறது. முஹம்மது எப்படியோ அப்படியே சஹாபாக்கள் நடந்துக்கொண்டார்கள் அல்லது அவர்களை உருவாக்கிய இஸ்லாமிய போதனை அவர்களை இப்படி பணத்திற்காக கொலை செய்ய தூண்டியுள்ளது.
தம்பி,பொறுமையோடு கீழ்கண்ட கேள்விகளை படிப்பாயா? அவைகள் பற்றி சிந்திப்பாயா?
1) முஹம்மதுவின் தோழர்கள் வளர்க்கப்பட்ட விதத்தைப் பார்த்தாயா? செல்வத்திற்கு ஆசைப்பட்டு, "நான் ஒரு முஸ்லிம்" என்றுச் சொன்னாலும், அதை நம்பாமல் அவனை கொன்று, அவனது ஆடுகளை/ஒட்டகங்களை கொள்ளையடித்து மதினா வந்துள்ளார்கள்.
2) முஸ்லிம்களாக பல ஆண்டுகள் முஹம்மதுவோடு வாழ்ந்தாலும், இப்படி கொல்வது தவறு என்று அவர்களின் மனசாட்சி அவர்களை எச்சரிக்கவில்லை என்பதை கவனிக்கவேண்டும்.
3) ஒரு காட்டுமிராண்டி நடந்துக்கொள்வது போலவே இவர்கள் நடந்துக்கொண்டார்கள். பணம் கிடைத்தால் எதையும் செய்வார்களா இவர்கள்?
4) இதனை அறிந்த பிறகு, அல்லாஹ் வசனத்தை இறக்குகிறார் – முஸ்லிம்களா இல்லையா என்பதைப் பார்த்து கொலை செய்யுங்கள் என்று அறிவுரைக் கூறுகிறார். புனிதப்போர் என்ற வேஷம் போட்டு செல்லும் போது, , முஸ்லிம்கள் அல்லாதவர்களை எந்த காரணமும் இல்லாமல் கொலை செய்யலாம் என்பது தானே, இதன் கருத்து.
5) இந்த கொலையை செய்தவர்களுக்கு அல்லாஹ் என்ன தண்டனை கொடுத்தார் என்று, உன்னால் கண்டுபிடித்து எனக்கு அறிவிக்கமுடியுமா தம்பி?
6) இந்த சஹாபாக்கள் அழிந்துப்போகும் செல்வத்தின் மீது ஆசை வைத்து இப்படி கொலை செய்துள்ளார்கள் என்று அல்லாஹ் வெளிப்படையாக இவர்களை குற்றப்படுத்துகிறார். இவர்களுக்கு என்ன தண்டனை உங்கள் இறைத்தூதர் கொடுத்தார்?
7) தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை என்றுச் சொல்வார்கள், அதுபோல முஹம்மதுவின் சீடர்கள் அவரைப் போலவே வாழ்ந்து இருக்கிறார்கள்.
தம்பி, கடந்த 10 நாட்களாக, 11 இஸ்லாமிய வழிப்பறி கொள்ளைகளை நாம் ஆய்வு செய்துள்ளோம். இன்னும் அனேக போர்கள், கொலைகள், தனிமனித வெறுப்புக்கள், என்று அனேக இஸ்லாமிய வன்முறைப் பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது.
தம்பி, ஒரு மனிதனாக உன்னை நினைத்துப் பார்த்து சிந்தித்துப்பார். இப்படியெல்லாம் கொலை வெறியோடு பரவிய மார்க்கத்தைத் தான் நீ இப்போது பின்பற்றிக்கொண்டு இருக்கிறாய். இஸ்லாமிய நூல்களை அதிகமாக படி, ஆய்வு செய், சத்தியத்தை அறிய முயற்சி செய். யார் உன்னை கைவிட்டாலும், சத்தியம் ஒரு நாள் உன்னை விடுதலையாக்கும். இந்த நம்பிக்கையில் தான் நான் உன்னோடு உரையாடிக்கொண்டு இருக்கிறேன்.
இதோ இன்று ரமளான் மாதத்தின் கடைசி நாள், நாளைக்கு நீ ரமளான் கொண்டாடப்போகிறாய். இந்த புனித மாதத்தில் உலக அளவில் நடந்த இஸ்லாமிய தாக்குதல்கள், தீவிரவாத செய்ல்கள், எத்தனை என்று உனக்குத் தெரியுமா? இதனால் எத்தனைப் பேர்கள் மரித்தார்கள், ஊனமுற்றவர்களாக மாறினார்கள் என்று உனக்குத் தெரியுமா? இதோ அந்த பட்டியல்:
Ramadan Bombathon
2013 Scorecard
Because, if you think all religions are the same,
then you haven't been paying attention
2013 | In the name of | In the name of | By |
Terror Attacks | 310 | 0 | 1* |
Suicide Bombings | 28 | 0 | 0 |
Dead Bodies | 1651 | 0 | 0 |
Wounded | 3048 | 0 | 0 |
இப்படிக்கு,
உன் அண்ணன், தமிழ் கிறிஸ்தவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக