ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வியாழன், 7 டிசம்பர், 2017

கேள்வி 6: விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டது கிறிஸ்தவர்களுக்கு ஹலாலாகுமா? ஹராமாகுமா?

கேள்வி 6: நான் முஸ்லிமாக இருந்தபோது, விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டதில்லை, அவைகள் எங்களுக்கு ஹராமாக இருந்தது. நான் இப்போது கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ளேன். விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டது கிறிஸ்தவனாகிய எனக்கு ஹலாலாகுமா? ஹராமாகுமா?

ஹலால் ஹராம் பற்றிய முந்தைய கேள்வி பதில்களை இங்கு  படிக்கவும்: கேள்வி 4 & கேள்வி 5.

பல ஆண்டுகள் கிறிஸ்தவர்களாக இருப்பவர்களுக்கும் இந்த சந்தேகம் உண்டு, எனவே புதிதாக கிறிஸ்தவரான உங்களுக்கு இந்த சந்தேகம் வருவது சகஜமே. இஸ்லாமிய பின்னணியிலிருந்து நீங்கள் வந்து இருப்பதினால் இக்கேள்விக்கான பதில் உங்களுக்கு நிச்சயம் தேவை.

அல்லாஹ்வின் மற்றும் விக்கிரகங்களின் பெயரில் அறுக்கப்பட்டவைகள்:

அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி அறுக்கப்பட்ட (ஹலால்) மாமிசத்தை கிறிஸ்தவர்கள் சாப்பிடலாமா? என்று கேள்வி கேட்டால், "ஆம் சாப்பிடலாம்" என்று கிறிஸ்தவர்கள் பதில் சொல்வார்கள். ஞாயிறு காலை பாய் கசாப்பு கடைக்குப் போய் வந்த பிறகு தான் சர்சுக்கே போகிறான் கிறிஸ்தவன். ஒரு ஹோட்டலில் நுழையும் போது, 'இங்கு ஹலால் மாமிச உணவு மட்டுமே கிடைக்கும்' என்ற வாசகம் இருந்தாலும், கிறிஸ்தவனுக்கு 'இதனை நாம் சாப்பிடலாமா?' என்ற சந்தேகம் வருவதில்லை. ஆனால், விக்கிரகத்துக்கு படைக்கப்பட்ட உணவு என்ற உடன் (அது சாம்பார் சாதம், வடை, பாயாசம் போன்ற சைவ உணவாக இருந்தாலும் சரி), 'வேண்டாம், நான் சாப்பிடுவதில்லை' என்றுச் சொல்லி மறுத்துவிடுகின்றான். இதன் மூலம் அறிவதென்ன? கிறிஸ்தவனுக்கு அல்லாஹ் என்றால் யார், விக்கிரகம் என்றால் என்ன என்று சரியாகத் தெரியவில்லை என்று அர்த்தம்.

பைபிளின் படி 'அல்லாஹ் கூட ஒரு விக்கிரகமே' ஆகும். அல்லாஹ்வை தொழுதுக்கொள்வதும் விக்கிர ஆராதனையே! நம் இந்திய கிறிஸ்தவனுக்கு 'இந்திய விக்கிரகமென்றால்' அது ஒரு வகை, 'அரேபிய விக்கிரகமென்றால்' அது வேறு வகை. உண்மையில், இவ்விரண்டும் ஒன்று தான். இரண்டும் விக்கிர ஆராதனையே![1].

இதன் படி பார்த்தால், அல்லாஹ்வின் பெயரில் அறுக்கப்பட்டதை ஒரு கிறிஸ்தவன் சாப்பிடமுடியுமென்றால், இந்திய விக்கிரகங்களின் பெயரில் அறுக்கப்பட்டதையும் அவனால் சாப்பிடமுடியும். ஹலால் மாமிசத்தை சாப்பிடுவதில் தவறில்லை என்றால், மாரியம்மனின் பெயரில் அறுக்கப்பட்டதையும் சாப்பிடுவதில் தவறில்லை.  விக்கிரகங்களுக்கு  படைக்கப்பட்டதைப்  பற்றி இன்னும் சில அடிப்படை விவரங்களை பைபிளின் படி தெரிந்துக்கொள்வோம்.

புதிய ஏற்பாட்டில் விக்கிரகத்துக்கு படைக்கப்பட்ட உணவு பற்றி வரும் வசனங்களை நாம் சுருக்கமாக ஆய்வு செய்வோம்.

1) சபைக்குள் ஒற்றுமையை கொண்டுவர

அப்போஸ்தலர்கள் இருந்த காலத்தில், அந்நிய ஜனங்களின் பட்டணங்களில், அதாவது கிரேக்க மற்றும் ரோம பட்டணங்களில் அனேகர் மனந்திரும்பி சபையில் சேர்க்கப்பட்டார்கள். அதே போல, யூதர்களும் இரட்சிக்கப்பட்டுக்கொண்டு இருந்தார்கள். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட சில யூதர்கள், அந்நிய ஜனங்களின் சபைகளுக்குச் சென்று, மோசேயின் கட்டளைகளை கிறிஸ்தவர்களும் பின் பற்றவேண்டும் என்று போதனை செய்ய ஆரம்பித்தார்கள். அதாவது, கிறிஸ்தவர்களும் விருத்தசேதனம் செய்துக்கொள்ளவேண்டும், இதர நியாயப்பிரமாண கட்டளைகளை பின்பற்றவேண்டும் என்று சொன்னபோது. அந்த சபை, பர்னபாசையும், பவுலையும் எருசலேமுக்கு அனுப்பி, அப்போஸ்தலர்களான பேதுரு, யாக்கோபு போன்றவர்களின் ஆலோசனையைக் கேட்க அனுப்பினார்கள். இதனை அப்போஸ்தலர் நடபடிகள் 15வது அத்தியாயத்தின் முதல் வசனத்திலிருந்து படிக்கலாம்.

எருசலேமின் தலைமைச் சபை, கீழ்கண்ட விவரங்களை கிரேக்க ரோம சபைகளுக்கு எழுதி அனுப்பினார்கள்.

15:23  இவர்கள் கையில் அவர்கள் எழுதிக்கொடுத்தனுப்பின நிருபமாவது: அப்போஸ்தலரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோகியாவிலும் சீரியாவிலும் சிலிசியாவிலும் இருக்கும் புறஜாதியாராகிய சகோதரருக்கு வாழ்த்துதல் சொல்லி எழுதிய நிருபம் என்னவென்றால்: 

15:24  எங்களால் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனமடைய வேண்டுமென்றும், நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் உங்களைக் கலக்கி, உங்கள் ஆத்துமாக்களைப் புரட்டினார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியினாலே, 15:25  நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்காகத் தங்கள் பிராணனையும் ஒப்புக்கொடுக்கத் துணிந்தவர்களும் எங்களுக்குப் பிரியமானவர்களுமாயிருக்கிற பர்னபா பவுல் என்பவர்களோடுங்கூட, 15:26  எங்களால் தெரிந்துகொள்ளப்பட்ட சில மனுஷரை உங்களிடத்திற்கு அனுப்புகிறது ஒருமனப்பட்டுக் கூடின எங்களுக்கு நலமாகக் கண்டது. 15:27  அந்தப்படியே யூதாவையும் சீலாவையும் அனுப்பியிருக்கிறோம். அவர்களும் இவைகளை வாய்மொழியாக உங்களுக்கு அறிவிப்பார்கள். 15:28  எவையெனில், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்கவேண்டுமென்பதே. 

15:29  அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது; இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக் கொள்வது நலமாயிருக்கும். சுகமாயிருப்பீர்களாக என்று எழுதினார்கள். (அப்போஸ்தலர் 15:23-29)

இவ்வசனங்களில் 28வது வசனத்தை கூர்ந்து படித்தால், விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டதற்கு விலகி இருங்கள் என்று சொல்லியிருப்பதைக் காணமுடியும்.

15:28  எவையெனில், 

விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், 

இரத்தத்திற்கும், 

நெருக்குண்டு செத்ததிற்கும், 

வேசித்தனத்திற்கும், 

நீங்கள் விலகியிருக்கவேண்டுமென்பதே.

ஆங்கிலத்தில்: 

You are to abstain from food sacrificed to idols,

from blood,

from the meat of strangled animals and

from sexual immorality.

You will do well to avoid these things. Farewell. (Acts 15:29 – NIV)

இவ்வசனத்தின் படி, கிறிஸ்தவர்கள் விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டதை சாப்பிடக்கூடாது என்று பொருள்படுகின்றதல்லவா? இதன் பின்னணியை நாம் இப்போது பார்ப்போம்.

கிரேக்க-ரோம பட்டணங்களில், கடைகளில் விற்கப்பட்ட மாமிசமானது, முதலாவது  அவர்களின் தெய்வங்களுக்கு முன்பாக பூஜை செய்யப்பட்டு, அதன் பிறகு கடைகளில் விற்கப்பட்டது. யூத பின்னணியைக் கொண்ட கிறிஸ்தவர்கள், அந்நிய ஜனங்கள் அறுக்கும் மாமிசத்தை சாப்பிடமாட்டார்கள். அப்படிப்பட்ட பட்டணங்களில் கடைகளில் விற்கப்படும் மாமிசத்தை, விலை கொடுத்து வாங்கி சாப்பிடுவது, விக்கிர ஆராதனைக்கு சமம் என்றுச் சொல்லி, அவர்கள் சபையில் குழப்பத்தை உண்டாக்கினார்கள். ஆனால், யூத பின்னணியல்லாத கிறிஸ்தவர்கள் (கிரேக்கர்கள், ரோமர்கள், இதர ஜனங்கள்), நாங்கள் அவர்களின் பூஜைகளில் ஈடுபடவில்லையே, கடைகளில் விற்கப்படுபவற்றைத் தான் வாங்கி சாப்பிடுகிறோம் என்றுச் சொன்னார்கள். அந்நிய தெய்வங்களுக்கு பூஜை செய்து கடைகளில் விற்கப்படும் பொருட்களை முக்கியமாக மாமிச வகையான பொருட்களை சாப்பிடலாமா? இல்லையா? என்ற குழப்பம் சபையில் உண்டானது. இந்த சந்தேகம் தீர்க்கத்தான், அந்தியோகியா, சீரியா, சிலிசியா பட்டணத்து சபைகள், இருவரை தெரிவு செய்து, எருசலேமுக்கு அனுப்பினார்கள்.

இப்பிரச்சனையை ஆய்வு செய்து, இயேசுவின் சீடர் பேதுருவும், யாக்கோபும் மற்றவர்களும் ஒன்று கூடி மேற்கண்ட கடிதத்தை மேற்கண்ட பட்டண சபைகளுக்கு அனுப்புகிறார்கள்.

மேற்கண்ட கடிதத்தில், விக்கிரத்துக்கு படைக்கப்பட்டதை சாப்பிடக்கூடாது என்றுச் சொல்வது எவைகளையென்றால், அந்நிய ஜனங்களின் விழாக்களில், மிருகங்களைக் கொன்று, சரியாக அவைகளின் இரத்தத்தை வடிக்காமல் பரிமாறப்படும் உணவைத்தான். மேலும், மிருகத்தை (உதாரணத்துக்கு, கோழியை) கத்தியால் அறுத்து, இரத்தத்தை வடிக்காமல், அதற்கு பதிலாக  கழுத்தை நெருக்கி கோழியை சாகடித்து, அதன் மாமிசத்தை உண்பது. மேலும், அக்கால விக்கிர ஆராதனை விழாக்களில் பாலியல் நிகழ்ச்சிகளும் நடைப்பெற்றன. அதாவது, விழாவில் பங்குபெரும் மக்கள், பல பெண்களோடு விபச்சாரம் செய்வதும் ஒரு பாகமாக இருந்தது. 

ஆரோக்கியமற்ற முறையில் (கழுத்தை நெருக்கி) மிருகங்களைக் கொன்று, அவைகளின் இரத்தத்தை வடிக்காமல், கறியோடு இரத்தத்தையும் சேர்த்து,  அரைகுறையாக சமையல் செய்து சாப்பிடுவது கூடாது என்றனர் அப்போஸ்தலர்கள். இப்படி சாப்பிடுவது உடல் நலத்துக்கு கேடு. மேலும், விபச்சாரம் என்ற ஒரு தீய செயலும், இதோடு சம்மந்தப்பட்டு இருந்ததினால் இயேசுவின் சீடர்கள் இதனை தடுத்தார்கள். ஆக, மேற்கண்ட எருசலேமின் கடிதத்தின் பின்னணி இது தான்: அந்நிய ஜனங்கள் முதலாவது பூஜைகள் செய்து, அதன் பிறகு அப்பொருட்களை கடைகளில் விற்பார்கள். இதனை சாப்பிடுவதில் தவறில்லை, இப்படி சாப்பிடுவதினால், நாம் விக்கிர ஆராதனை செய்பவர்களாக ஆகமாட்டோம். ஆனால், திருவிழா, ஆராதனை என்ற  ஆரோக்கியமற்ற உணவு + இரத்தம் வடிக்காத மாமிசம் + அதோடு கூட விபச்சாரம் போன்ற பழக்கம் அந்நிய ஜனங்களில் இருந்தபடியினால், இவைகளில் மட்டுமே பங்கு பெறவேண்டாம் என்று அவர்கள் எச்சரித்தார்கள். 

மேலும், இதனை சபையின் ஒற்றுமைக்காக தற்காலிக அமைதிக்காக  எழுதி அனுப்பினார்களே தவிர, இதுவே நிரந்தர தீர்வாக சட்டமாக எழுதி அனுப்பவில்லை. ஏனென்றால், எந்த உணவாக இருந்தாலும் சரி, அது வாய்க்குள் போவதினால், அது நம்மை தீட்டுப்படுத்தாது என்று பேதுரு நன்கு அறிந்திருக்கிறார். 

பேதுருவும் ஒரு யூதனாக இருந்தபடியினால், சுத்தமான மருகங்களின் மாமிசத்தை மட்டும் (பழைய ஏற்பாட்டின்படி) சாப்பிடுவராக இருந்தார். ஆனால், கர்த்தர் அவருக்கு ஒரு தரிசனத்தைக் கொடுத்து, இனி எதையும் அசுத்தம் என்றுச் சொல்லாதே என்ற கோட்பாட்டை கற்றுக்கொடுத்தார் (பார்க்க அப்போஸ்தலர் 11:7-9) 

11:7  அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று என்னுடனே சொல்லுகிற சத்தத்தையும் கேட்டேன். 11:8  அதற்கு நான்: ஆண்டவரே, அப்படியல்ல, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றும் ஒருக்காலும் என் வாய்க்குள்ளே போனதில்லை என்றேன். 11:9  இரண்டாந்தரமும் வானத்திலிருந்து சத்தம் உண்டாகி: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதேயென்று மறுமொழி சொல்லிற்று. (அப்போஸ்தலர் 11:7-9)

இந்த தரிசனத்திற்கு பிறகு பேதுரு, அந்நிய ஜனங்களுக்கு சுவிசேஷம் சொல்வதை தொடங்கினார், மேலும், அவர்களோடு ஒன்றாக சேர்ந்து சாப்பிடுவதையும், உணவு விஷயத்தில் இருந்த பழைய ஏற்பாட்டு கட்டுப்பாட்டையும் விட்டுவிட்டார்.

எனவே, இப்படிப்பட்ட அனுபவங்களைப் பெற்ற பேதுரு, மேற்கண்ட கடிதத்தை எழுதியதின் நோக்கம், சபையில் யூத பின்னணி கிறிஸ்தவர்களுக்கும், இதர கிறிஸ்தவர்களுக்கும் இடையே ஒற்றுமையை உண்டாக்குவதற்காகும். அதே நேரத்தில் ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்ளக்கூடாது, அந்நிய ஜனங்களின் ஆராதனைகளில் காணப்படும் விபச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என்று கட்டளையிட்டுள்ளார்.

தற்காலத்தில் பார்த்தாலும் சரி, இந்துக்கள், முஸ்லிம்கள் தங்கள் கடைகளில் முதலாவது பூஜை செய்கிறார்கள், தங்கள் வியாபாரம் செழிக்க வேண்டுதல் செய்கிறார்கள், அதன் பிறகு கடையை திறந்து வியாபாரம் செய்கிறார்கள். இக்கடைகளில் விற்கப்படும் பொருட்களையும் சாப்பிடக்கூடாது என்று யாராது சொல்லமுடியுமா? இது சாத்தியமா?

சுருக்கமாகச் சொன்னால், அப்போஸ்தலர் 15வது அத்தியாயத்தில் வரும் கடிதம், 'அன்பின் வெளிப்பாடாக, சில விஷயங்களை விட்டுக்கொடுங்கள், மேலும் ஆரோக்கியமானதையே சாப்பிடுங்கள் என்றுச் சொல்கிறதே தவிர, யூதர்களின் கருத்துப்படி, மோசேயின் நியாயப்பிரமாணத்தை தலையில் வைத்துக்கொண்டு பாரப்பட்டுக்கொண்டு இருக்காதீர்கள் என்றுச் சொல்கிறது.

2) பலவீனமான சகோதரனுக்கு இடறலாக இருக்காதே!

விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டதை சாப்பிடும் விவரம் பற்றி இன்னொரு தெளிவான விவரம் 1 கொரிந்தியர் 8:4-13வரை விவரிக்கப்பட்டுள்ளது. சில வசனங்களை இங்கு தருகிறேன்.

8:4  விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.

8:8  போஜனமானது நம்மைத் தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது; என்னத்தினாலெனில், புசிப்பதினால் நமக்கு ஒரு மேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை. 

8:9  ஆகிலும் இதைக்குறித்து உங்களுக்கு உண்டாயிருக்கிற அதிகாரம் எவ்விதத்திலும் பலவீனருக்குத் தடுக்கலாகாதபடிக்குப் பாருங்கள். 

8:10  எப்படியெனில், அறிவுள்ளவனாகிய உன்னை விக்கிரகக்கோவிலிலே பந்தியிருக்க ஒருவன் கண்டால், பலவீனனாயிருக்கிற அவனுடைய மனச்சாட்சி விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிப்பதற்குத் துணிவுகொள்ளுமல்லவா? 

8:11  பலவீனமுள்ள சகோதரன் உன் அறிவினிமித்தம் கெட்டுப்போகலாமா? அவனுக்காகக் கிறிஸ்து மரித்தாரே. 

8:12  இப்படிச் சகோதரருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, பலவீனமுள்ள அவர்களுடைய மனச்சாட்சியைப் புண்படுத்துகிறதினாலே, நீங்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறீர்கள். 

8:13  ஆதலால் போஜனம் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் புசியாதிருப்பேன். (1 கொரிந்தியர் 8:4,8-13)

இவ்வசனங்கள் சொல்லும் விவரங்கள்:

1) விக்கிரகத்துக்கு படைக்கப்பட்டதை சாப்பிடுவதில் தவறில்ல, காரணம், 'உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லை'. இல்லாத ஒன்றை பிடித்துக்கொண்டு ஏன் நாம் தொங்கவேண்டும்?

2) உணவு நம்மைத் தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது. அதாவது சில உணவுகளை நாம் உட்கொண்டால், கர்த்தர் கோபம் கொள்வார், சில உணவுகளை தவிர்த்தால் கர்த்தர் அதிகமாக நம்மை நேசிப்பார், என்பதெல்லாம் ஆதாரமற்ற கூற்றுக்கள். போஜனத்துக்கும் பக்திக்கும் சம்மந்தமில்லை. கிறிஸ்தவர்களில் எத்தனை பேருக்கு 8:8ம் வசனம் சரியாக புரிந்துள்ளது?

3) மேற்கண்ட இரண்டு விவரங்களை சரியாக புரிந்துக்கொண்டவர்கள் உண்மையிலேயே விடுதலையானவர்கள் (8:9). ஆனால் எச்சரிக்கை தேவை, நமக்கு இருக்கும் சுதந்திரம் மற்றவர்களுக்கு (பலவீனமானவர்களுக்கு) தடையாக இல்லாமல் இருக்க பார்த்துக் கொள்ளவேண்டும். இங்கு தான் இந்த உணவு விஷயம் யூ டர்ன் (U Turn) அடிக்கிறது.

4)ஒரு நபர் விக்கிரகங்களை வணங்கும் பின்னணியிலிருந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால். அவர் கிறிஸ்தவரான பிறகு, விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டதை சாப்பிடுவது சரியானது அல்ல என்று நினைத்து (கவனிக்கவும் நினைத்து), தன் மனசாட்சியில் முடிவு செய்து இருக்கலாம். இதனால், அவர் ஒரு போதும் விக்கிரகத்துக்கு படைக்கப்பட்டதை சாப்பிடுவதில்லை. ஆனால், சாப்பிட்டால் ஒரு பிரச்சனையும் இல்லை என்று நமக்குத் தெரியும். இருந்த போதிலும், அந்த சகோதருக்காக நாம், விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டதை அவருக்கு முன்பாக சாப்பிடக்கூடாது. பைபிள் அனுமதிக்கும் ஒன்றை, அந்த சகோதரரின் மனசாட்சிக்காக நம் உரிமையை விட்டுக் கொடுக்கிறோம். 10ம் வசனத்தை பாருங்கள்:

8:10  எப்படியெனில், அறிவுள்ளவனாகிய உன்னை விக்கிரகக்கோவிலிலே பந்தியிருக்க ஒருவன் கண்டால், பலவீனனாயிருக்கிற அவனுடைய மனச்சாட்சி விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிப்பதற்குத் துணிவுகொள்ளுமல்லவா? 

நீங்கள் விக்கிரகத்துக்கு படைக்கப்பட்டதை சாப்பிடுவதை அவர் கண்டால், 'இது என்ன? நான் சாப்பிடக்கூடாது என்று நம்புகிறேன், ஆனால் இந்த சகோதரர் சாப்பிடுகிறாரே! என்று குழம்புவார்'. ஒருவேளை, அவரை நீங்கள் கட்டாயப்படுத்தி 'சாப்பிடுங்கள், இதில் தவறு இல்லை' என்று சொல்லி, அவர் சாப்பிட்டால், அவர் முழு மனதோடு சாப்பிடாமல் சந்தேகத்தோடு சாப்பிடுவார். சாப்பிட்ட பிறகு, நான் செய்தது தவறாக இருக்குமோ என்று தன் மனசாட்சியில் வாதிக்கப்படுவார். எனவே, அவரது மனசாட்சியை தொந்தரவு செய்யாமல், இருக்கும்படியாக, கிறிஸ்தவ சகோதரர்கள் ஒருவருக்காக இன்னொருவர் தம் உரிமையை விட்டுக்கொடுப்பது நல்லது. இதுதான் இவ்வசனங்களின் பொருள்.

5) அந்த சகோதரரின் மனது உங்களது செயலினால், புண்பட்டதினால், நீங்கள் பாவம் செய்வதற்கு சமமாகிறது. கீழ்கண்ட வசனங்களை பாருங்கள். அப்படிப்பட்ட உணவு சாப்பிட்டது பாவமல்ல, பலவீனமான சகோதரரின் நலனை கருத்தில் கொள்ளாமல், நாம் செயல்பட்டதினால், இது பாவமாகும்.

8:11  பலவீனமுள்ள சகோதரன் உன் அறிவினிமித்தம் கெட்டுப்போகலாமா? அவனுக்காகக் கிறிஸ்து மரித்தாரே. 

8:12  இப்படிச் சகோதரருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, பலவீனமுள்ள அவர்களுடைய மனச்சாட்சியைப் புண்படுத்துகிறதினாலே, நீங்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறீர்கள். 

வேறுவகையாகச் சொல்வதென்றால், முதிர்ச்சி அடைந்த விசுவாசிகள், புதிய விசுவாசிகளின் மனசாட்சியை கவனித்து அன்பாக நடந்துக்கொள்ளுங்கள். அவர்கள் வேதத்தை முழுவதுமாக  அறிந்து, உங்களைப்போல முதிர்ச்சி அடையும் வரை உங்களின் சில உரிமைகளை அச்சகோதருக்காக விட்டுக்கொடுக்கலாமே!

6) சைவ உணவை மட்டும் உண்பவரும், நீங்களும் ஹாஸ்டலில் தங்கி படிப்பதாக வைத்துக்கொள்வோம். உங்கள் அறையில் நீங்கள் வாரம் ஒரு முறை அசைவம் சமைப்பது அவருக்கு மனதுக்கு சங்கடமாக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். உண்மையாக, அவர் மீது உங்களுக்கு அன்பு இருந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? அவருக்காக உங்கள் உரிமையை விட்டுக்கொடுப்பீர்கள், இனி அசைவம் சமைப்பதில்லை என்றுச் சொல்லி, அவர் மனது புண்படாமல் நடந்துக்கொள்வீர்கள். இதைத் தான் செய்யச்செல்லி பைபிள் நமக்கு போதிக்கிறது.

8:13  ஆதலால் போஜனம் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் புசியாதிருப்பேன்.

சுருக்கமாகச் சொல்வதென்றால், எந்த உணவையும் சாப்பிடலாம், நமக்கு உரிமை உள்ளது, ஆனால், மற்றவர்களின் நலனிலும், அல்லது மனசாட்சியையும் பார்த்து நடந்துக்கொள்வது நல்லது. உனக்கு இருக்கும் சுதந்திரத்தைவிட, உன் சகோதரனின் பலவீனம் உனக்கு முக்கியம். அவனை உன் செயலினால் (அற்பமான உணவு விஷயத்தினால்) துக்கப்படுத்தாதே!

3) நல்ல சாட்சியான வாழ்க்கையை வாழ்ந்துக் காட்ட

பைபிளில் இன்னொரு நிகழ்ச்சியும், இந்த விக்கிரகத்துக்கு படைக்கப்பட்ட உணவு பற்றி வருகிறது (பார்க்க 1 கொரிந்தியர் 10:25-32).

10:25  கடையிலே விற்கப்படுகிற எதையும் வாங்கிப் புசியுங்கள்; மனச்சாட்சியினிமித்தம் நீங்கள் ஒன்றையும் விசாரிக்கவேண்டியதில்லை. 10:26  பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது. 

10:27  அன்றியும் அவிசுவாசிகளில் ஒருவன் உங்களை விருந்துக்கு அழைக்கும்போது, போக உங்களுக்கு மனதிருந்தால், மனச்சாட்சியினிமித்தம் ஒன்றையும் விசாரியாமல், உங்கள் முன் வைக்கப்படுகிற எதையும் புசியுங்கள். 10:28  ஆயினும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள்; பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது. 

10:29  உன்னுடைய மனச்சாட்சியைக் குறித்து நான் இப்படிச் சொல்லாமல், மற்றொருவனுடைய மனச்சாட்சியைக் குறித்தே சொல்லுகிறேன். என் சுயாதீனம் மற்றொருவனுடைய மனச்சாட்சியினாலே குற்றமாய் எண்ணப்படவேண்டுவதென்ன?

கடையில் விற்கப்படுகின்ற எல்லாவற்றையும் வாங்கி சாப்பிடுங்கள், ஹலாலா ஹராமா என்று கேள்வி கேட்கவேண்டியதில்லை, ஏன்? உலகமும் அதில் உள்ளவைகளும் கர்த்தருடையது. கடைக்காரன் சாமிக்கு பூஜை செய்தானோ, அல்லது அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி அறுத்தானே, அதைப்பற்றி உங்களுக்கு கவலை வேண்டாம், உணவை வாங்கி சாப்பிடுங்கள். இதனால் உங்கள் பக்திக்கு ஒரு பங்கமும் வராது (வயிற்றுக்கு வந்தால் வரலாம், அது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பொருத்தது).

உங்கள் நண்பர் ஒருவர் (அவர் கிறிஸ்தவரல்ல), உங்களை மாரியம்மன் திருவிழாவிற்கு அழைத்து, அவர் வீட்டில் விருந்து கொடுத்தால், உங்களுக்கு முன் வைக்கும் உணவு பற்றி கேள்வி கேட்காமல் சாப்பிடுங்கள். அதை எங்கே வாங்கினீர்கள், ஹலாலா என்று கேள்வி கேட்கவேண்டாம்.  ஆனால், இன்னொருவர் உங்கள் பக்கத்தில் இருந்துக்கொண்டு (அவர் கிறிஸ்தவராகவும் இருக்கலாம், அல்லது அவிசுவாசியாகவும் இருக்கலாம்), இந்த உணவு விக்கிரகத்துக்கு படைக்கப்பட்டது என்றுச் சொன்னால், அப்படி சொன்னவருக்காக நீங்கள் சாப்பிடவேண்டாம். ஏனென்றால், அவர் கொஞ்சம் பலவீனமானவர், அவர் முதிர்ச்சி அடைந்த விசுவாசியல்ல, அவர் இன்னும் கற்கவேண்டியது நிறைய இருக்கிறது. உங்களுக்கு இருக்கின்ற சுதந்திரத்தை பயன்படுத்தி, 'அவரது மனதை நோகடிக்கவேண்டாம்'. எனவே அவருடைய மனசாட்சிக்காக  சாப்பிடாதீர்கள் (உங்கள் மனசாட்சி தெளிவாகச் சொல்கிறது, இதனை சாப்பிடலாம் என்று).

சுருக்கமாகச் சொன்னால், எந்த உணவும் தீட்டுள்ளது அல்ல. ஆனால், நம்மில் ஒவ்வொருவரும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன் (1 கொரிந்தியர் 10:24) 

பைபிள் தன் கோட்பாடுகளில் தெளிவாக இருக்கிறது. உணவு விஷயத்தில் பல உதாரணங்களைக் கொண்டுள்ளது. எந்த ஒரு பாஸ்டரும் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள் என்று இமாம்களைப் போல ஃபத்வா இடமுடியாது. 

4) வேசித்தனமும், விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்ட உணவும்

கடைசியாக, விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்ட உணவை இயேசுவின் ஊழியர்கள் சாப்பிடும்படி, யெசபேல் என்ற பெண் அவர்களுக்கு போதித்து வழிதவற செய்துவிட்டாள் என்று இயேசு குற்றம் சாட்டுகிறார். இப்படிப்பட்ட பெண்ணை நீ சபையில் ஏன் வைத்திருக்கிறாய் என்று தியத்தீரா சபையை கண்டிக்கிறார் (பார்க்க வெளிப்படுத்தின விசேஷம் 2:20):

ஆகிலும், உன் பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம் பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.(வெளிப்படுத்தின விசேஷம் 2:20)

நன்றாக மேற்கண்ட வசனத்தை கவனிக்கவும், இங்கு வெறும் விக்கிரகத்துக்கு படைக்கப்பட்ட உணவை மட்டும் சொல்லவில்லை, அதோடு கூட, வேசித்தனமும் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது அக்கால விக்கிர ஆராதனைகளில், திருவிழாக்களில் சிற்றின்ப செயல்கள், வேசித்தனங்கள் சேர்ந்தே நடத்தப்பட்டன, அதன் பிறகு விருந்து பரிமாறப்பட்டது. இதையே இயேசு கண்டிக்கிறார்.

விக்கிரகங்களின் திருவிழாக்களில் இப்படி ஆபாசமான செயல்கள் கூட இருக்குமா என்று சிலர் சந்தேகிக்கலாம். சமுதாயம் வளர்ச்சி அடையாத காலக்கட்டத்தில் இப்படிப்பட்ட மூட பழக்கங்கள் இருந்தன, இதனை அறிய கீழ்கண்ட கட்டுரையை சொடுக்கி படிக்கவும்:

1) Sacred prostitution -  en.wikipedia.org/wiki/Sacred_prostitution

Sacred prostitution, temple prostitution, cult prostitution,[1] and religious prostitution are general terms for a sexual ritual consisting of sexual intercourse or other sexual activity performed in the context of religious worship, perhaps as a form of fertility rite or divine marriage (hieros gamos). Some scholars prefer the term sacred sex to sacred prostitution in cases where payment for services was not involved.

இந்தியாவிலும் தேவதாசி என்ற முறை இருந்தது. ஆனால், இது கொஞ்சம் வித்தியாசமானது. இந்த தேவதாசி முறையை தவறாக விபச்சாரத்திற்கு பயன்படுத்தியதால் நிறுத்தப்பட்டது (மூலம்: en.wikipedia.org/wiki/Devadasi)

இதுவரை பார்த்த விவரங்களின் படி, விக்கிரகம் என்பது உலகில் ஒன்றுமில்லை, அதற்கு படைக்கப்பட்டதை சாப்பிடுவதில் எந்த தவறும் இல்லை. அதே நேரத்தில் ஒரு கிறிஸ்தவராக, தன் சக சகோதரரின் பலவீனமான மனசாட்சியை கருத்தில் கொண்டு செயல்படவேண்டும் என்று பைபிள் கட்டளையிடுகிறது.

5) இன்று விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டதை (அ) பூஜை செய்யப்பட்டதை சாப்பிடமாட்டேன் என்று அடம் பிடிப்பவர்களின் கவனத்துக்கு

இதுவரை பல ஆதாரங்களை மேற்கோள் காட்டி, ஒரு கிறிஸ்தவன் உணவு விஷயத்தில் விடுதலையாக்கப்பட்டுள்ளான். அவன் ஹலால் உணவையும் உண்ணலாம், விக்கிரகங்களுக்கு பூஜை செய்யப்பட்டதையும் உண்ணலாம் என்று விளக்கினேன். இவ்வளவு விவரங்கள் சொல்லியும், சிலர் 'நான் சாப்பிடமாட்டேன்' என்று அடம்பிடித்தால், கீழ்கண்ட விவரங்களை படித்து, உங்கள் முடிவைச் சொல்லுங்கள். 

இப்படிப்பட்டவர்கள் ஒரு விஷயத்தை புரிந்துக்கொள்ளவேண்டும். இன்று நாம் இந்தியாவில் எந்த பொருளை எடுத்துக்கொண்டாலும், ஒரு விக்கிரகத்துக்கு பூஜை செய்யப்படாமல் அது நம்முடைய கையில் வருவதில்லை. இப்படிப்பட்ட கட்டுப்பாட்டை உடையவர்கள் 100% உண்மையாளர்களாக வாழ முயற்சி செய்தால், அவர்கள் எதையும் சாப்பிடமுடியாமல் போய்விடும், அவர்கள் பட்டிணியாக இருக்கவேண்டியது தான். உதாரணத்திற்கு, கீழ்கண்ட விவரங்களை படிக்கவும்:

அ) ஒரு நிலத்தில் நெல்லை பயிரிடும் போது, ஒரு விவசாயி, தன் சாமிக்கு பூஜை செய்தே பயிரிடுகின்றான்.

ஆ) அந்த பயிர் வளரும் போதும், அறுவடையில் நல்ல விளைச்சல் கிடைக்கவேண்டும் என்று தன் சாமியிடம் வேண்டிக்கொள்கிறான்.

இ) அறுவடை செய்யும் போதும்,  தன் இறைவனிடம் வேண்டிக்கொண்டு எல்லா காரியங்களையும் செய்கின்றான்.

ஈ) நெல்லையும், அரிசியையும் வேறு பிரிக்கும் நபரும் தன் அலுவலகத்தில் தன் சாமியிடம்  வேண்டிக்கொண்டே தன் தொழிலை ஆரம்பிக்கின்றான்.

உ) வருடத்திற்கு ஒரு முறை ஆயூதப்பூஜை செய்யப்பட்ட ஆயுதங்களினால் அந்த நெல்லையும், அரிசியையும் வேறு பிரிக்கின்றான்.

ஊ) அரிசியை வாங்கி விற்பவனும் தன் வியாபாரத்தை தொடங்கும் போதும், தன் சாமியை வேண்டிக்கொண்டு, பூஜை செய்து ஆரம்பிக்கிறான்.

எ) அந்த அரிசியை வாங்கி ஹோட்டல் நடத்துபவன் தன் சாமியிடம் வேண்டிக்கொண்டு உணவை தயாரிக்கிறான், வியாபாரம் செய்கின்றான்.

இப்படி ஒரு உணவுப்பொருள் பயிரிடுவது முதற்கொண்டு அறுவடையாகி, நம்மிடம் உணவாக வரும் வரை அதன் மீது பல தெய்ங்களின் வணக்கங்கள் நடைப்பெறுகின்றன.

இப்போது நம் கேள்வி என்னவென்றால், இதர தெய்வங்கள் பெயர்கள் சொல்லப்பட்ட உணவுப்பொருட்கள், கிறிஸ்தவர்களுடைய வாயில் செல்லக்கூடாது என்று சொல்பவர்கள், முக்கியமாக இந்தியாவில், பாகிஸ்தானில் பட்டிணி கிடந்து சாகவேண்டியது தான்.

உணவு விஷயத்தில் அடம்பிடித்தால்,

  • அடையார் ஆனந்தபவனில் விற்கப்படும் அருமையான இனிப்பை நம்மால் சாப்பிடமுடியுமா?
  • ஹோட்டல் சரவண பவனில் விற்கப்படும் சாம்பார் இட்லிகள் மற்றும் இதர உணவுகளை நம்மால் சாப்பிடமுடியுமா?
  • பாய் கடையில் விற்கப்படும் ஆம்பூர் பிரியாணியைத் தான் நாம் சாப்பிடமுடியுமா?

சொந்தமாக அரிசியை வாங்கி வந்து நம் வீட்டிலும் உணவை தயாரித்து சாப்பிடக்கூடாது, ஏனென்றால், அந்த அரிசியை பயிரிட்டவன் ஒரு கிறிஸ்தவன் தான் என்று எப்படி நம்மால் கூறமுடியும்? இது நடைமுறைக்கு ஏற்காத ஒன்று. அதனால் தான் பைபிள் தெளிவாகச் சொல்கிறது, உலகமும் அதன் நிறைவும் (உணவுப்பொருட்களும்) கர்த்தருடையது. அதனை சாப்பிடுவதினால் எந்த ஒரு தீங்கும் உண்டாவதில்லை.

முடிவுரை:

முஸ்லிம் பின்னணியிலிருந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள், உணவு பற்றி கவலைப்படத் தேவையில்லை. நீங்கள் இஸ்லாமில் கற்றுக்கொண்டவைகளை மறந்துவிடுங்கள். 

உலகமும் அதில் உள்ளவைகளும் கர்த்தருடையது, எனவே, ஆரோக்கியத்தை மட்டும் கருத்தில் கொள்ளுங்கள், மற்ற எதையும் பார்க்காமல், மனசாட்சியை நோகடிக்காமல், தாராளமாக கடைகளில் விற்கப்படுகின்றவைகளை வாங்கி புசியுங்கள்.

தேவனுடைய இராஜ்ஜியம் புசிப்பும் குடிப்பும் அல்ல, எனவே அற்பமானவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, நீதியையும், சந்தோஷத்தையும், சமாதானத்தையும் விட்டுவிடாதீர்கள் (ரோமர் 14:17).

அடிக்குறிப்புக்கள்:

[1] அல்லாஹ்வும் விக்கிரகமா? அல்லாஹ்வை தொழுதுக்கொள்வது கூட விக்கிர ஆராதனையா?

அல்லாஹ்வை தொழுதுக்கொள்வதும், விக்கிரகங்களை தொழுதுக்கொள்வதும் ஒன்றே தான். குர்-ஆனின் அல்லாஹ், பைபிளின் யெகோவா தேவன் அல்ல. மக்காவின் மக்கள் வணங்கிக்கொண்டு இருந்த பல தெய்வங்களில் அல்லாஹ்வும் ஒருவர். முஹம்மது வருவதற்கு முன்பே அல்லாஹ்வை அரேபியர்கள் வணங்கிக்கொண்டு இருந்தனர். முஹம்மதுவின் தந்தையின் பெயர் அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) என்பதாகும்.

[2] இக்கட்டுரைக்கு உதவிய தொடுப்புக்கள்:

கேள்வி 5:

நான் கிறிஸ்தவத்தை தழுவியுள்ளேன் - உணவு விஷயத்தில் 'ஹலால் ஹராம்' பற்றி கிறிஸ்தவம் என்ன சொல்கிறது?

பொருளடக்கம்கேள்வி 7:

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/new_creation_qa/new_creation_qa6.html


Virus-free. www.avast.com

கேள்வி 5: நான் கிறிஸ்தவத்தை தழுவியுள்ளேன் - உணவு விஷயத்தில் ’ஹலால் ஹராம்’ பற்றி கிறிஸ்தவம் என்ன சொல்கிறது?

இஸ்லாமிய பின்னணியிலிருந்து கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டர்களுக்கு வரும் பொதுவான கேள்விகளில் இதுவும் ஒன்று. இதனை கேள்வி என்றுச் சொல்லாமல், சிக்கல் என்றுச் சொல்லலாம். எவைகளை சாப்பிடுவது, எவைகளை விட்டுவிடுவது? சாப்பிடக்கூடாததை சாப்பிட்டுவிட்டால், இறைவன் தண்டித்துவிடுவானோ? என்ற பயம் பொதுவாக வருவதுண்டு. ஒரு மதத்தை பின்பற்றினால், அது நம்முடைய "உணவு, உடை மற்றும் கலாச்சாரத்தை மாற்றவேண்டும்" என்று முஸ்லிம்கள் தவறாக போதிக்கப்பட்டுள்ளார்கள். இதனை விளைவு தான் இப்படிப்பட்ட கேள்விகள் எழுவதற்கு காரணம்.

நீங்கள் முஸ்லிமாக இருந்து, இப்போது இயேசுவை பின்பற்ற முடிவு செய்துள்ளீர்கள். இதனால், உங்களுடைய உணவு பழக்கங்கள், உடைகள், இதர கலாச்சார பழக்கங்கள் மாறுமா? என்று கேள்வி கேட்கிறீர்கள்.  ஒருவர் இயேசுவை பின்பற்ற விரும்பினால், 'அவர் மனமாற்றம் அடைந்தால் போதும், உணவு மாற்றம், உடைமாற்றம், கலாச்சார  மாற்றம் அடையத்தேவையில்லை'.  இதனை ஒருவரியில் சொன்னால் பயன் தராது, எனவே, கீழ்கண்ட தலைப்புகளில் சிறிது விளக்கிவிடுகிறேன்.

1) உணவு நம்மை இறைவனிடமிருந்து பிரிக்காது

2) கிறிஸ்தவத்தில் உணவில் ஏதாவது கட்டுப்பாடு உண்டா?

3) பழைய ஏற்பாட்டு உணவு கட்டுப்பாடுகளை கிறிஸ்தவர்கள்   பின்பற்றவேண்டுமா?

4) முடிவுரை


1)   உணவு நம்மை இறைவனிடமிருந்து பிரிக்காது

மனிதனை உருவாக்கிய இறைவனுக்கு மனிதனின் உடலில் உணவின் பங்கு என்னவென்று நன்றாகத் தெரியும். சாப்பிடும் உணவு, எங்கு செல்கிறது, எப்படி ஜீரணமாகிறது, உடலுக்கு எப்படி ஊட்டச்சத்து கிடைக்கிறது, கடைசியாக கழிவுப்பொருளாக மாறி எங்கு சென்று வெளியே வருகிறது என்று அனைத்தையும் அறிவான் இறைவன். சாப்பிடும் உணவு ஒரு போதும் தன்னிடமிருந்து மனிதனை பிரிக்காது என்று இறைவன் அறிவான். ஆனால், உலக மதங்களை பார்க்கும் போது, உணவு விஷயத்தில் ஏதோ ஒரு கட்டுப்பாட்டை அவைகள் விதித்துள்ளதை பார்க்கமுடியும். உதாரணத்திற்கு, இந்துக்கள் சில நாட்களில் மாமிசம் உண்ணமாட்டார்கள். இஸ்லாமுக்கு வந்தால், கோழி, ஆடு போன்றவைகளை அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி அறுக்கவில்லையென்றால் அதனை சாப்பிடக்கூடது என்ற தடை உள்ளது. அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி, ஒரு மிருகத்தை கொன்றால், அது ஹலால் எனப்படுகின்றது, மற்றவை ஹராம் எனப்படுகின்றது.

இதனால் தான் ஹோட்டல்களில், இதர கடைகளில் "ஹலால்" என்று எழுதியிருப்பதைக் காணமுடியும்.

ஆரோக்கியத்தைக் கணக்கில் கொண்டு சில உணவுகளை நாம் உண்ணக்கூடாது என்பது உண்மையே, ஆனால், முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி அறுப்பதைத் தான் உண்ணவேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.

உணவு தேவனையும் மனிதனையும் பிரிக்காது என்று இயேசு தெளிவாகச் சொல்லியுள்ளார்:

15:11  வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார். 15:17  வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றில் சென்று ஆசனவழியாய்க் கழிந்துபோம் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா? 15:18  வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். 15:19  எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும். 15:20  இவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்; கைகழுவாமல் சாப்பிடுகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது என்றார். (மத்தேயு 15:11, 17-20)

இவ்வசனங்களில் தீட்டு என்றுச் சொல்வது, தேவனையும் மனிதனையும் பிரிக்கும் தீய செயல்கள் ஆகும். சாப்பிடுவது தீய செயல் அல்ல. திருடுவதும், கொலைசெய்வதும், விபச்சாரம் செய்வதும், தீய சிந்தனைகளில் இருப்பதும், பொய் சொல்வதும் தான் தீய செயல்கள். இவைகள் எங்கேயிருந்து வருகின்றன, அதை கவனித்து சரி செய்துக்கொள்ளுங்கள். வயிற்றுக்குள் போகும் உணவு பற்றி கவலை வேண்டாம் என்று இயேசு ஒரு நல்ல கோட்பாட்டை சொல்லியுள்ளார்.

பொய் மதங்களின் அடையாளங்களில் ஒன்று:

ஒரு குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது என்று ஒரு மதம்  கட்டுப்பாடு விதித்தால், அவர்கள் அம்மத்தின் மூலமாக வியாபாரம் செய்யப் பார்க்கிறார்கள் என்று அர்த்தம் அல்லது மனிதனின் பலவீனத்தை தங்கள் ஆதாயத்துக்காக பயன்படுத்தப் பார்க்கிறார்கள் என்று அர்த்தம். பொதுவாக ஒரு சராசரி மனிதனின் பலவீனம் இப்படி இருக்கும். அதாவது ஒரு மதம் என்றுச் சொன்னால், அது கடினமான சட்டங்களை விதிக்கவேண்டும், சாப்பிடுவதில், இறைவனை தொழுதுக்கொள்வதில் சில சடங்காச்சாரங்களை விதிக்கவேண்டும் என்கின்ற தவறான எதிர்ப்பார்ப்பு அவனுக்கு  உள்ளது.

'நீ இந்த குறிப்பிட்ட நாட்களில் மாமிசம் உண்ணக்கூடாது' அப்போது தான் உன் வேண்டுதல்களை நான் கேட்டு, நன்மை செய்வேன் என்றுச் சொன்னால், மனிதன் நம்புகின்றான். அற்பமான காரியங்களில் தன்னை சங்கடப்படுத்தும் இறைவன்/சாமி தான் சரியான தெய்வம் என்று நம்புகிறான் மனிதன். ஆனால், அதே மனிதனிடம், நீ எந்த ஒரு மத சடங்காச்சாரத்தையும் பின்பற்றத் தேவையில்லை, கர்பூரம், ஊதுவத்தி, மெழுகு வத்திகளை என் சந்நிதிக்கு வந்து கொளுத்த வேண்டியதில்லை,  ஆனால், உண்மையான மனதுடன் என்னை வேண்டினால் போதும், நான் நன்மைச் செய்வேன் என்று இறைவன் சொன்னால், அதே 'மனிதன்' நம்பமாட்டான், அதனை சந்தேகிப்பான்.

விடுதலைத் தரும் மதம் தனக்குத் தேவையில்லை என்று மனிதன் தவறாக நினைத்துக்கொண்டு இருக்கிறான். இது தான் மனிதனின் பலவீனம் அல்லது தவறான எதிர்ப்பார்ப்பு.

இதனால் தான் பொய்யான அல்லது தவறான மதங்களில் அனேக மூட நம்பிக்கைகள், மத சடங்காச்சாரங்கள், உணவுகளில் கட்டுப்பாடுகள், இறைவனை தொழுதுக்கொள்வதில் சில வழிமுறைகள், சட்டங்கள் போன்றவை மனிதர்களால் உருவாக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது.

மனிதனைப் பார்த்து இறைவன் 'நீ முழுமனதோடு என்னை தொழுதுக்கொள், எந்த ஒரு சடங்காச்சாரங்களையும் செய்யாதே, அவைகள் எனக்குத் தேவையில்லை' என்றுச் சொன்னால், முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் ஆச்சரியமாக இருக்கும். ஆனால், கிறிஸ்தவம் அதனைத் தான் சொல்கிறது. இதனால் தான் 'கிறிஸ்தவர்கள் விடுதலையானவர்கள்' என்று நான் சொல்கிறேன்.

ஆக, எந்த ஒரு உணவும் ஒரு போதும் நம்மை இறைவனிடமிருந்து பிரிக்காது.

இக்கேள்வியைக் கேட்டவருக்குச் சொல்லிக்கொள்வது, நீங்கள் கிறிஸ்துவை நம்பியுள்ளீர்கள், உங்களை தேவையில்லாத சட்டத்திட்டங்கள் ஆள இடம் கொடுக்க வேண்டாம். இஸ்லாமில் நீங்கள் இருக்கும் போது கற்றுக் கொண்ட மூட நம்பிக்கைகளை, வெளிப்படையான மத சடங்காச்சாரங்களை நீங்கள் மறக்கவேண்டும்.

(கவனிக்கவும்: ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், புனித வெள்ளிக்கு முன்பாக, 40 நாட்கள் மாமிச உணவு உண்பதில்லை. (ருசியுள்ள உணவு என்பது வெறும் அசைவம் தான் என்று சிலர் எண்ணியுள்ளனர். ஆனால், சைவ உணவையும் சரியாக சமைத்தால் செம ருசியாக இருக்கும் என்பது இன்னொரு ருசியான தகவல்.) இந்த சட்டம், மனிதர்கள் உருவாக்கியவை, இயேசுவோ, அப்போஸ்தலர்களோ,  இப்படி 40 நாட்கள் மாமிசம் உண்ணவேண்டாம் என்றுச் சொன்னதில்லை, புதிய ஏற்பாடும் இதனை அங்கீகரிப்பதில்லை. லெந்து நாட்கள் (Lent days) என்றுச் சொல்லி ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரி- மார்ச் மாதங்களில் 40 நாட்கள் இப்படி குறிப்பிட்ட உணவுகளை உண்ணாமல், துக்கங்கொண்டாடுகிறார்கள். இதனால், இறைவனிடம் சேரமுடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள், ஆனால், வேதத்தில் இதற்கு ஆதாரமில்லை).

இறைவனின் அதீத அன்பை பெறுவதற்காக உணவில் கட்டுப்பாடு வேண்டும் என்று நம்புகிறவர்கள், இனி உணவு பற்றி கவலைப்படாமல் இயேசு சொன்ன தீய எண்ணங்கள் தங்கள் உள்ளங்களிலிருந்து வெளியே வருகின்றனவா? என்பதை கவனிக்கவேண்டும். அவைகள் தான் மனிதனையும் இறைவனையும் பிரிக்கிறது, அவைகளை எப்படி தவிர்க்கவேண்டும் என்பதை பார்க்கவேண்டும். ஹலால் உணவு உங்களை இயேசுவிடமிருந்து ஒருபோதும் பிரிக்காது.

2)   கிறிஸ்தவத்தில் உணவில் ஏதாவது கட்டுப்பாடு உண்டா?

மேலே சொன்னது போல, கிறிஸ்தவத்தில் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு இல்லை. ஏனென்றால், வாய்க்கு ருசியானவைகளை தவிர்த்தால் 'இறைவன்' என்னை நேசிப்பான் என்றுச் சொல்வது, பொய் மார்க்கங்கள் செய்யும் மலைப்பிரசங்கங்கள்.

கிறிஸ்தவம் எதிர்ப்பார்ப்பதெல்லாம், உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூரவேண்டும்.  உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூரவேண்டும் என்பவைகளைத் தான் (மத்தேயு 22:37-40).

இதோ 'இந்த ஒரு குறிப்பிட்ட உணவை, இந்த குறிப்பிட்ட நாட்களில் உண்ணக்கூடாது' என்ற ஒரு கட்டளையும் கிறிஸ்தவத்தில் இல்லையா? என்று ஆச்சரியமாக சிலர்  கேள்வி கேட்பார்கள்.

இயேசு போதித்த தெளிவான, சிம்பிள் வாழ்க்கை முறையை நாம் சரியாக புரிந்துக் கொள்ள வேண்டும். யாரோ ஒருவர் எப்போதும் நம்மீது ஒரு பெரிய கல்லை வைத்து அழுத்திக்கொண்டே இருக்கவேண்டும் என்று முஸ்லிம்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். ஆனால், இயேசுவோ உங்களை விடுதலையாக்கியுள்ளார், இது தான் கிறிஸ்தவத்தின் அடிப்படை கோட்பாடு. முஸ்லிம்களையும், இந்துக்களையும் பார்த்து கிறிஸ்தவம் கேட்கும் கேள்வி என்னவென்றால் 'ஒரு மார்க்கம் என்றால், அது உணவு விஷயத்தில் நிச்சயமாக கட்டுப்பாடு விதித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் உள்ளதா?'.

இந்து மற்றும் இஸ்லாமிலிருந்து கிறிஸ்துவை பின்பற்ற விரும்புகிறவர்கள், தாங்கள் எல்லா விஷயங்களிலிருந்தும் விடுதலையான விஷயத்தை புரிந்துக்கொள்ளவேண்டும்.

மருத்துவர்கள் உங்களுடைய உடல் நலத்திற்காக சில உணவுகளை தவிர்த்துவிடுங்கள் என்றுச் சொன்னால், அவ்வுணவுகளை சாப்பிடக்கூடாது. இந்த கட்டுப்பாடு கிறிஸ்தவம் விதித்த ஒன்றல்ல, நம்முடைய உடல் நலத்திற்காக நாம் ஒதுக்கியது. சிலருக்கு பால் பொருட்கள் உடலுக்கு ஏற்காது, சிலருக்கு மாமிசம் ஏற்காது, சிலருக்கு சில காய்கறிகள் ஏற்காது, எனவே, நம் உடல் நலத்துக்கு எது நல்லதோ அதனைச் செய்வோம், தீயதை விட்டுவிடுவோம்.

உணவை நாம் உடல் வளர்ச்சிக்கும், அனுதின வாழ்வுக்கு தேவையான சக்தியை கொடுக்கவுமே சாப்பிடுகிறோம், பக்திக்காக அல்ல.

ஒரு கிறிஸ்தவன் யாருடைய கட்டாயமும் இல்லாமல், சுயமாக ஒரு முடிவு செய்கிறான் என்று வைத்துக்கொள்வோம் அதாவது 'நான் இனி மாமிசம் உண்ணமாட்டேன்' என்றுச் சொல்லி, அவன் வாழ்நாளெல்லாம் சாப்பிடாமல் இருந்தால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. மனிதன் தன் மனதில் நியமித்தப்படி எதையும் செய்யலாம், இதனை பைபிள் தடை செய்வதில்லை, அது அவன் விருப்பம். ஆனால், இப்படி மாமிசம் சாப்பிடக்கூடாது என்று அவன் மற்றவர்களை கட்டாயப்படுத்தினால் அது தவறான ஒன்றாகும். இதனை பைபிள் ஒருபோதும் அனுமதிக்காது. இதே போல, ஹலால் உணவையோ, இதர உணவையோ உண்ணக்கூடாது என்று யாரும் யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது.

மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்று தற்காலத்தில் இந்தியாவில் சில இந்துக்கள் பிரச்சனையை உண்டாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு முஸ்லிம், கிறிஸ்தவன் மற்றும் நாத்தீகன் எவைகளைச் சாப்பிடவேண்டும், எவைகளை சாப்பிடக்கூடாது என்று கட்டளையிடும் உரிமை இவர்களுக்கு யார் கொடுத்துள்ளார்கள் என்று நாம் கேட்டுக்கொண்டு இருக்கிறோம். உனக்கு விருப்பமில்லையென்றால், அதை உன்மட்டும் வைத்துக்கொள், என் மீது திணிக்காதே! என்று எல்லோரும் சொல்கிறோம்.

ஆரோக்கிய முறையில் சமைக்கப்பட்ட மற்றும் உடலுக்கு நன்மை செய்யும் எந்த உணவையும், கிறிஸ்தவன் சாப்பிடலாம். ஒரு கிறிஸ்தவன் முஸ்லிம்களின் ஹோட்டல்களிலும் ஹலால் கறி சாப்பிடலாம், இந்துக்களின் ஹோட்டல்களிலும் கறி சாப்பிடலாம். பியூர் வெஜிடேரியன் ஹோட்டல்களில் சாம்பார் இட்லிக்களை வாங்கி நன்றாக விளாசலாம் (சாம்பார் பக்கெட்டை பக்கத்தில் வைத்துக்கொண்டு). அதே போல, ஒரு கிறிஸ்தவன் நான் இனி மாமிசத்தை சாப்பிடமாட்டேன், மரக்கறிகளை மட்டுமே சாப்பிடுவேன் என்று முடிவு செய்துக்கொண்டு, அப்படியே வாழலாம். எல்லாம் அவனவனுக்கு சம்மந்தப்பட்டது.  சாப்பிடுவதில் எந்த கட்டுப்பாடும் இல்லை.

(ஒரு குட்டி லாஜிக்: அல்லாஹ் இறைவன் இல்லை என்று கிறிஸ்தவர்கள் சொல்கிறார்கள், அப்படியானால், முஸ்லிம்கள் அல்லாஹ்வின் பெயரில் (ஹலால்) அறுக்கும் கறியை வாங்கி ஏன் சாப்பிடுகிறார்கள்? உங்கள் வேதத்தின் படி அல்லாஹ், அந்நிய தெய்வம் அல்லவா? என்று சில முஸ்லிம்கள் கேள்வி கேட்கலாம்.

உங்கள் கேள்வியில் சாரம் இருக்கிறது, ஆனால், லாஜிக் மிஸ்ஸாகிறது. அதாவது, அல்லாஹ் என்ற ஒருவன் உலகில் இல்லை என்பதை நம்புபவன் கிறிஸ்தவன், அப்படி இருக்க, இல்லாத ஒருவன் பெயரைச் சொல்லி, அறுக்கும் கறியை வாங்கி சாப்பிடுவதில் என்ன தவறு இருக்கிறது. அல்லாஹ் என்பது ஒரு கற்பனைத் தானே! அல்லாஹ் ஒரு கற்பனை என்று நம்புபவன், அவன் பெயரைச் சொல்லி அறுக்கப்படும் மிருகத்திற்கு அல்லாஹ்வின் பாதிப்பு உண்டு என்று நம்புவது எப்படி சரியானதாக இருக்கும்? நிலாவில் வடை சுடும் ஆயாவின் பெயரில் அறுத்தால், அந்த மிருகத்தின் மாமிசத்தை சாப்பிடுபவனுக்கு ஏதாவது நன்மை/தீமை உண்டாகுமா? அதே போலத் தான் கிறிஸ்தவனுக்கும் ஹலால் செய்யப்பட்ட உணவு உண்பது. நிலாவின் ஆயாவும்! குர்-ஆனின் அல்லாஹ்வும் கற்பனையே!)

கடைசியாக, ஒரு ஆலோசனை. கிறிஸ்தவர்கள் உணவு விஷயத்தில் இரண்டு காரியங்களை மட்டும் கவனமாக பார்த்துக் கொள்ளவேண்டும். முதலாவதாக, ஒரு ஹோட்டலுக்கு போவதற்கு முன்பு, பாக்கெட்டில் செலவு செய்வதற்கு பணமிருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள், இரண்டாவதாக, உங்கள் உடல் நலத்தை இவ்வுணவு பாதிக்குமா என்பதை மட்டும் பாருங்கள். ஒன்று மட்டும் நிச்சயம், அதாவது உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கை ஹலால் உணவு சாப்பிடுவதினால் ஒரு சதவிகிதமும் பாதிக்கப்படாது, எனவே உணவு விஷயத்தில் புகுந்து விளையாடுங்கள்.

பக்தியைப் பொருத்தமட்டில், எந்த உணவாக இருந்தாலும் சரி, அதனை சாப்பிடுவதினால் எந்த தீமையும் இல்லை, சாப்பிடாமல் இருப்பதினால் எந்த நன்மையும் இல்லை.

3)   பழைய ஏற்பாட்டு உணவு கட்டுப்பாடுகளை கிறிஸ்தவர்கள் பின்பற்றவேண்டுமா?

பைபிளில் இரு பிரிவுகள் உள்ளன, பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு. பழைய ஏற்பாட்டில் தேவன் கொடுத்த  சட்டங்களைப் பற்றி அறிந்துக்கொண்டால், மேற்கண்ட கேள்வி எழாது.

1) தேவன் பழைய ஏற்பாட்டு காலத்தில் கொடுத்த சட்டம், யூதர்களுக்கு/இஸ்ரேல் மக்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது.

2) பழைய ஏற்பாட்டுச் சட்டம், ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. மேசியா வரும் வரை, அதாவது இயேசு வரும் வரை இஸ்ரேல் மக்கள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்கள். உலகத்தின் முடிவு வரை பின்பற்றக்கூடியவைகள் அல்ல.

3) மேசியா வந்த பிறகு, யூதர்களும் அச்சட்டங்களை பின்பற்றத்தேவையில்லை, அவர்கள் பழைய உடன்படிக்கையிலிருந்து புதிய (இயேசுவின்) உடன்படிக்கைக்கு மாறவேண்டும்.

4) யூதர்களுக்கு கொடுக்கப்பட்ட சட்டங்கள், அவர்கள் தேவனுக்கு கீழ்படிந்து வாழ கொடுக்கப்பட்டது. அதன் மூலம், தேவன் தான் கொடுத்த உடன்படிக்கையின் படி, அவர்களை காத்துக்கொள்வார்.

5) அச்சட்டங்கள் மூலமாக, இஸ்ரேல் மக்கள் அக்கால விக்கிர ஆராதனை மக்களோடு ஒப்பிடும் போது, ஒரு வித்தியாசமானவர்களாக காட்டுவதற்கு கொடுக்கப்பட்டது. முக்கியமாக, உணவு, உடை, சுகாதார சட்டங்கள் இந்த வித்தியாசத்தை காட்டுகின்றன.

6) சில சட்டங்கள் புதிய ஏற்பாட்டிலும் ஆங்காங்கே சுட்டிக்காட்டப்பட்டது, உதாரணத்துக்கு, பத்து கட்டளைகளைச் சொல்லலாம். 

7) அந்த 10 கட்டளைகளையும், இதர நற்செயல்கள் பற்றிய கட்டளைகளையும், இயேசு இரண்டு கட்டளைகளின் மூலமாக  நிறைவேற்ற கிறிஸ்தவர்களுக்கு கட்டளையிட்டார் (மத்தேயு 22:37-40).

8) ஆரோக்கியம், சுகாதாரம் பற்றிய கட்டளைகள் அக்கால சூழ்நிலைகளினால் உண்டாகும் வியாதிகளிலிருந்து யூதர்களை காப்பாற்றிக்கொள்ள கொடுக்கப்பட்டது.

9) அக்கால விக்கிர ஆராதனைகளில் பன்றிகள் பலியிடப்பட்டன, இதர செக்ஸ் செயல்களும் அவ்வாராதனைகளில் செய்யப்பட்டன, பிள்ளைகளை தெய்வங்களுக்கு பலியாக கொடுக்கப்பட்டன. இவைகளைச் செய்யாமல் யூதர்கள் வாழவேண்டுமென்பதால் பல கட்டளைகளை தேவன் அவர்களுக்கு கொடுத்தார். இவைகளில் உணவு சம்மந்தப்பட்ட கட்டளைகளும் உள்ளன.

எனவே, பழைய ஏற்பாட்டு கட்டளைகள் கிறிஸ்தவர்களை கட்டுப்படுத்தாது. அவைகளை நாம் பின்பற்றத் தேவையில்லை.

ஒட்டகம் பழைய ஏற்பாட்டின் படி, தடை செய்யப்பட்டுள்ளது. யாருக்கு தடை செய்யப்பட்டது? யூதர்களுக்கு மட்டுமே.

கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், பூமியிலிருக்கிற சகல மிருகங்களிலும் நீங்கள் புசிக்கத்தக்க ஜீவ ஜந்துக்கள் யாதெனில்: மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும் அசை போடுகிறதுமானவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.  ஆனாலும், அசைபோடுகிறதும் விரிகுளம்புள்ளதுமானவைகளில் ஒட்டகமானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லாதபடியால், அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். (லேவியராகமம் 11:1-4)

மோசேயின் மூலமாக, ஹராமாக கொடுக்கப்பட்ட ஒட்டகத்தை, முஹம்மது ஹலாலாக மாற்றிவிட்டார். முஸ்லிம்கள் ஒட்டகம் சாப்பிடுகிறார்கள். அதே போல, யூதர்களின் ஓய்வு நாள், சனிக்கிழமை, முஸ்லிம்களின் தொழுகை நாள் வெள்ளிக்கிழமை. இப்படி ஏன் முஸ்லிம்கள், மோசேயின் சட்டத்தை மீறுகிறார்கள் என்று கேட்டால், எங்கள் நபி அதனை ஹலால் ஆக்கிவிட்டார் என்றுச் சொல்வார்கள். அதே போலத்தான், மேசியா கிறிஸ்தவர்களுக்கும் பலவற்றை ஹலாலாக மாற்றியுள்ளார்.

4) முடிவுரை:

இதுவரை கண்டவைகளின் சுருக்கம் இது தான்.

அ) பைபிளின் இறையியல் மிகவும் தெளிவாக எல்லா காலத்துக்கும் பொருந்தக்கூடியதாக இருக்கிறது. உணவு மனிதனை நல்லவனாக மாற்றாது, கெட்டவனாகவும் மாற்றாது என்பதை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும்.

ஆ) 'உணவு' ஒரு அற்புதமான விஷயம். மனிதன் அனுபவிக்கும் அனேக நற்காரியங்களில்  உணவும் ஒன்று. மனதுக்கு பிடித்தமானதை, ஆரோக்கியத்தை கருத்தில் வைத்தவர்களாக, கேள்வி கேட்காமல் சாப்பிடலாம்.  

இ) இஸ்லாமிலிருந்து இரட்சிக்கப்படுபவர்கள், அனைத்து விதமான அடிமைத்தனத்திலிருந்து விடுதலை ஆக்கப்பட்டு இருப்பதினால், உணவை ஒரு பொருட்டாக எண்ணவேண்டாம்.

ஈ) உடல் ஆரோக்கியத்தின் படி, சில உணவுகளை கிறிஸ்தவர்கள் தவிர்க்கலாம், இது உடல் சம்மந்தப்பட்டது மட்டுமே, விசுவாசத்துக்கும் இதற்கும் சம்மந்தமில்லை.

உ) உணவு விஷயத்தில், சுத்தமுள்ளவனுக்கு எல்லாமே ஹலாலாகத்தான் இருக்கும். அசுத்தமுள்ளவனுக்கு அனைத்தும் ஹராமாகத் தெரியும்.

வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.

இனியும்  ஏன் தயக்கம்! கணினியை லாக் செய்துவிட்டு வெளியே கிளம்புங்கள். கடைத்தெருவுக்குச் சென்று, கண்களில் படும் முதலாவது "அசைவ (Non-Vegetarian)" ஹோட்டலில் நுழைந்து, சூப்பரான உணவுகளை ஆர்டர் செய்து, ஒரு பிடி பிடித்து, பிள்'ஐ கட்டிவிட்டு வீடு வந்து சேருங்கள்.

கேள்வி 4: கிறிஸ்தவத்தில் ஹலால், ஹராம் என்பவைகள் உண்டா?பொருளடக்கம்

கேள்வி 6:

விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டது கிறிஸ்தவர்களுக்கு ஹலாலாகுமா? ஹராமாகுமா?


Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/new_creation_qa/new_creation_qa5.html


Virus-free. www.avast.com

வியாழன், 30 நவம்பர், 2017

கேள்வி 4: நான் புதிதாக கிறிஸ்தவத்தை தழுவியுள்ளேன். கிறிஸ்தவத்தில் ஹலால், ஹராம் என்பவைகள் உண்டா? நான் எவைகளை பின்பற்ற வேண்டும்? எவைகளை பின்பற்றக்கூடாது?

பதில்:

ஒரு முஸ்லிம் பின்னணியிலிருந்து இயேசுவை பின்பற்ற முடிவு செய்தவர்கள் கேட்கும் முதலாவது கேள்வி இதுவாகத் தான் இருக்கும். ஏனென்றால், ஹலால் ஹராம் என்கின்ற இவ்விருவார்த்தைகள் தான் முஸ்லிம்களை ஒவ்வொரு நாளும் நடத்துகின்றன. ஒரு முஸ்லிம் எதைச் செய்ய நினைத்தாலும், அது ஹலாலா? ஹராமா? அல்லது சுன்னத்தா? என்று தெரிந்துக்கொண்டு செயல்படுகின்றான்.

  • ஹலால் -  அனுமதிக்கப்பட்டவை
  • ஹராம் -  செய்யக்கூடாதவை
  • சுன்னத் - 'செய்தால்' நன்மை கிடைக்கும், செய்யாவிட்டால் பாவமில்லை. 

இதே மனநிலையோடு இருப்பதினால் தான் நீங்களும் இந்த கேள்வியை கேட்டுள்ளீர்கள். உங்களுக்கு ஒரு நற்செய்தி சொல்லப்போகிறேன், அது என்னவென்றால், 'நீங்கள் இயேசுவை பின்பற்ற முடிவு செய்தபடியினால்', இனி நீங்கள் செய்ய விரும்பும் ஒவ்வொரு செயலுக்காக:

அ) இமாம்களைத் தேடிச் செல்லவேண்டியதில்லை.

ஆ) அறியாமையினால் தவறாக ஒரு செயலைச் செய்துவிட்டால், அல்லாஹ் தண்டித்துவிடுவானோ! என்று பயப்படத்தேவையில்லை.

இ) எந்த இஸ்லாமிய அறிஞர் சொல்வதைக் கேட்பது? ஒரு குறிப்பிட்ட இஸ்லாமிய அறிஞரின் இயக்கத்துடன் இணைந்து வாழ்ந்தால், அவரை மற்ற இயக்கத்தினர் காஃபிர்கள் என்று குற்றம்சாட்டுகிறார்கள். இவர்களை அவர்கள் 'காஃபிர்கள்' என்கிறார்கள். எனவே எந்த அறிஞர் சொல்வது 'உண்மை இஸ்லாம்' என்று புரியாமல் குழம்பத்தேவையில்லை.

ஈ) சுருக்கமாகச் சொல்வதென்றால், நீங்கள் முழுவதுமாக விடுதலை பெற்றுவிட்டீர்கள், அதாவது இஸ்லாமை பின்பற்றிக்கொண்டு இருந்தவரை நீங்கள் அடிமையாக இருந்தீர்கள் என்று அர்த்தம்.

கிறிஸ்தவத்தில் ஹலால் ஹராம் இல்லையா?

நீங்கள் விடுதலையாகிவிட்டீர்கள் என்றுச் சொன்னால், 'இனி நீங்கள் உங்கள் விருப்பபடி எப்படியும் வாழலாம்' என்று அர்த்தமில்லை. 1947ம் ஆண்டு நம் இந்தியா ஆங்கிலேயர்களின் ஆட்சியிலிருந்து விடுதலைப் பெற்றது. இதன் அர்த்தம் என்ன? இனி ஒவ்வொரு இந்தியனும் தனக்கென்று சட்டங்களை வகுத்துக்கொள்ளாமல், எல்லா வித சட்ட விரோத செயல்களையும்  செய்யலாம் என்று அர்த்தமா? இல்லை. சுதந்திர இந்தியாவில், 1947லிருந்து காவல்துறையும், நீதிமன்றமும், சிறைச்சாலைகளும் இருக்காது என்று அர்த்தமா? இல்லை. 

'விடுதலை' என்றால், நம்மை வெளிநாட்டவன் ஆளாமல், நம்மை நாமே ஆண்டுக்கொள்வதாகும். 'விடுதலை' என்றால் தவறான சட்டங்களை நீக்கிவிட்டு, சரியான சட்டங்களை நியமித்துக்கொண்டு வாழ்வதாகும். நமக்கென்று ஒரு அரசியல் சட்டத்தை எழுதிக்கொண்டு, நம்மை நாமே ஆண்டுக்கொண்டு இருக்கிறோம்.  எனவே, இஸ்லாமிலிருந்து விடுதலை பெற்றவர்களுக்கும், கிறிஸ்தவம் எது ஹலால்? எது ஹராம்? என்று கற்றுக்கொடுக்கிறது. ஆனால், இஸ்லாமின் ஹலால் ஹராமுக்கும், கிறிஸ்தவத்தின் ஹலால் ஹராமுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. அவைகளை புரிந்துக்கொள்ள மேற்கொண்டு படியுங்கள்.

1) கிறிஸ்தவர்களின் முதலாவது சட்டம்: பத்து கட்டளைகள்

கிறிஸ்தவர்களுக்கும் ஹலால்/ஹராம் (அனுமதிக்கப்பட்டது, தடுக்கப்பட்டது) கட்டளைகள் உள்ளன. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசி மோசேயின் மூலமாக, தேவன் கொடுத்த பத்து கட்டளைகளை கிறிஸ்தவர்கள் தவறாமல் பின்பற்றவேண்டும்.

அவைகளை சுருக்கமாக இங்கு தருகிறேன்:

1. உன் தேவனாகிய கர்த்தர் நானே. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.

2. உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக;

3. ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக

4. உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக

5. கொலை செய்யாதிருப்பாயாக. 

6. விபசாரம் செய்யாதிருப்பாயாக. 

7. களவு செய்யாதிருப்பாயாக.

8. பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக

9. பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக 

10. பிறனுடைய யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக.

(யாத்திராகமம் 20:2-17 & உபாகமம் 5:6-21)

இந்த பத்து கட்டளைகளை நீங்கள் கடை பிடிக்கவேண்டும், 'செய்' என்றுச் சொன்னதை செய்யவேண்டும் (ஹலால்), 'செய்யாதே' என்றுச் சொன்னதை செய்யக்கூடாது (ஹராம்).

இவ்வளவு தானா! பத்து கட்டளைகளை மட்டுமே பின்பற்றினால் போதுமா? ரொம்பவும் ஈஸியாக இருக்கின்றதே! என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்! நான் முஸ்லிமாக இருக்கும் போது மூட்டை கணக்கில் கட்டளைகளை பின்பற்றிக்கொண்டு இருந்தேனே! என்று ஆச்சரியப்படுகிறீர்கள் அல்லவா! இதனால் தான் நான் சொன்னேன் 'நீங்கள் விடுதலையாகியுள்ளீர்கள்' என்று.

இன்னொரு நற்செய்தியையும் உங்களுக்குச் சொல்லட்டுமா! இந்த பத்து கட்டளைகளையும் மிக்ஸியில் போட்டு, இயேசு இரண்டே கட்டளைகளாக மாற்றிவிட்டார்! அடுத்த பாயிண்டை படியுங்கள், நீங்கள் துள்ளி குதிப்பீர்கள்!

2) கிறிஸ்தவர்களின் இரண்டாவது சட்டம்: இரண்டு கட்டளைகள்

மேற்கண்ட 10 கட்டளைகள் மட்டுமல்ல, பழைய ஏற்பாட்டிலுள்ள இதர கட்டளைகள் அனைத்தும் இரண்டே கட்டளைகளில் அடக்கிவிட்டார் இயேசு. 

• முதலாம் பிரதான கட்டளை: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக.

• இரண்டாம் பிரதான கட்டளை: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக (மத்தேயு 22:37-40)

இவ்வளவு தான் கிறிஸ்தவம். இக்கட்டளைகளுக்கு மேலேயும் ஒன்றுமில்லை, கீழேயும் ஒன்றுமில்லை. 

ஒரு சந்தேகம்: இப்போது நான் எத்தனை கட்டளைகளை பின்பற்றவேண்டும்? 10 (அ) 2:

பழைய ஏற்பாடு 10 கட்டளைகள் என்றுச் சொல்கிறது, புதிய ஏற்பாடு 2 கட்டளைகள் என்கிறது, மொத்தம் 12 கட்டளைகள் ஆகிறதல்லவா? எனவே, நான் 12 கட்டளைகளை பின்பற்றினால் போதுமா! என்ற கேள்வி எழும்.

இயேசு அந்த இரண்டு கட்டளைகள் பற்றி சொல்லும் போது, என்ன கூறினார் என்பதை கவனிக்கவேண்டும்: 

இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்(மத்தேயு 22:40)

(கவனிக்கவும்: நம் பைபிள் தமிழாக்கத்தில் 'கட்டளை' என்ற வார்த்தையை, 'கற்பனை' என்று (பிழையாக) மொழியாக்கம் செய்துள்ளார்கள். நாம் பொதுவாக பயன்படுத்தும் 'கற்பனை (Imagination)'அல்ல இது என்பதை மனதில் வைக்கவேண்டும். இவ்வசனத்தில்  கற்பனை என்றால் கட்டளை (commandment) என்று அர்த்தம்).

இவ்விரண்டு கட்டளைகளை மட்டும் பின்பற்றினால் போதும், இவைகளுக்குள் அனைத்து பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளும் அடங்கிவிடும் என்கிறார். ஆக, நாம் 2 கட்டளைகளை மட்டுமே பின்பற்றினால் போதும்.  

எப்படி 2 கட்டளைகளை பின்பற்றினால், 10 கட்டளைகளை பின்பற்றுவது போல ஆகும்? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.

கீழேயுள்ள படத்தைப் பார்க்கவும். பழைய ஏற்பாட்டின் 10 கட்டளைகளை இரண்டாக பிரிக்கலாம்.

  • கட்டளைகள் 1 - 3: மனிதன் தேவனுக்காக செய்யவேண்டியவைகள்.
  • கட்டளைகள் 4 - 10: மனிதன் இதர மனிதர்களுக்காக செய்யவேண்டியவைகள்.

படம் 1: 10 கட்டளைகள் & 2 கட்டளைகள் 

இயேசுவின் வார்த்தைகளின் படி, ஒரு மனிதன், தேவனை தன் முழு இருதயத்தோடும், முழு பலத்தோடும், முழு மனதோடும் அன்பு கூர்ந்தால், அவன், தேவனுக்கு துக்கம் உண்டாக்கும் எந்த ஒரு செயலையும் செய்யமாட்டான். இதன் அர்த்தமென்ன? தேவன் சொன்ன ஆயிரம் கட்டளைகளை நிறைவேற்றுவதற்கு பாடுபடுவதைக் காட்டிலும், அந்த தேவனை முழு மனதோடு அன்பு கூர்ந்துவிட்டால் போதும், அந்த ஆயிரம் கட்டளைகளை நாம் மகிழ்ச்சியாக பின்பற்றிவிடுவோம், அவைகளை பாரமாக நினைக்கமாட்டோம், அன்புக்கு அவ்வளவு வலிமையுள்ளது. 

இதே போல, ஒரு மனிதன், தன்னை நேசிப்பதைப்போல, பிறனையும் நேசிக்க ஆரம்பித்துவிட்டால் போதும், அவன் 10 கட்டளைகளில் உள்ள 7 கட்டளைகளை தானாகவே பின்பற்றிவிடுவான். தன் அயலகத்தார்களை நேசிப்பவன், அவர்களின் பொருட்களை திருடமாட்டான் (கட்டளை 7), அவர்களுக்கு விரோதமாக பொய் சொல்லமாட்டான் (கட்டளை 8), அவர்களின் மனைவியையோ, பொருட்களையோ இச்சித்து பாவம் செய்யமாட்டான் (கட்டளை 9 & 10). தன் பெற்றோர்களை தன்னைப்போலவே நேசிப்பவன், அவர்களை கனப்படுத்துவான் (கட்டளை 4).  எனவே, ஆயிரம் கட்டளைகளை பின்பற்ற முயலுவதைக் காட்டிலும், ஒரே கட்டளையை முழு மனதோடு பின்பற்றிவிட்டால் (தன்னைப் போல அன்பு கூறிவிட்டால்) போதும், அனைத்து இதர கட்டளைகளும் நிறைவேற்றப்படும்.

ஒருவேளை பைபிளில் உள்ள அனைத்து கட்டளைகளையும் கூட்டும் போது, நமக்கு 1000 கட்டளைகள் வருகின்றது என்று வைத்துக்கொள்வோம் (திருடாதே, கொலை செய்யாதே, விபச்சாரம் செய்யாதே, பொய் சொல்லாதே, தீமை செய்யாதே, மற்றவர்களுக்கு தடங்கலாக இருக்காதே, உண்மை பேசு, நீதி செய், நன்மை செய், தேவனை மட்டுமே வணங்கு, வேதத்தை வாசி போன்றவை . . .) இவைகள் அனைத்தையும் வகைப்படுத்தினால், முதலாவதாக, தேவனுக்காக நாம் செய்யக்கூடிய கடமைகளாக (கட்டளைகளாக) இருக்கும், இரண்டாவதாக, இதர மக்களுக்காக நாம் செய்யக்கூடிய கடமைகளாக (கட்டளைகளாக) இருக்கும். எனவே, தேவனை முழு மனதோடு நேசித்து நடந்துக்கொண்டால் போதும், அதே போல, மற்றவர்களின் மனது புண்படாமல் நடந்துக்கொண்டால் போதும். இவ்விரண்டையும் செய்ய ஒரே வழி, தேவன் மீதும், மனிதன் மீதும் முழு மனதோடு அன்பு செலுத்துவது.

ஆக, கிறிஸ்தவத்தில் 'ஹலால்' 'ஹராம்' உண்டா? என்று கேட்டால், 'ஆமாம்' உண்டு என்பது தான் பதில். ஆனால், ஹலாலைச் செய்து, ஹராமை எப்படி விட்டுவிடுவது? இக்கேள்விக்கு பதில் 'அன்பு கூறுவது தான் சுலபமான மற்றும் சரியான வழி'. 

இதனால் தான் நான் இந்த பதிலின் ஆரம்பத்தில், 'நீங்கள் விடுதலை ஆகிவிட்டீர்கள்' என்றுச் சொன்னேன்.

முடிவுரை: 

கிறிஸ்தவத்தில் ஹலால், ஹராம் உள்ளதா என்று கேள்வி கேட்ட சகோதரருக்கு எழுதிக்கொள்வது. முதலாவது, நீங்கள் இஸ்லாமில் கற்றுக்கொண்டதை கைவிடவேண்டும், மனதளவில் மாற்றம் கொண்டுவரப்படவேண்டும். 'கிறிஸ்தவம்' இஸ்லாம் போன்ற மார்க்கமல்ல, அது வித்தியாசமானது, சுலபமானது அதே நேரத்தில் இஸ்லாமை விட பரிசுத்தமானது, மற்றும் உண்மையானது. 

  • இஸ்லாம் -  கிரியை மார்க்கம்.
  • கிறிஸ்தவம் - கிருபை மார்க்கம்.
  • இஸ்லாம் மனிதனைப் பார்த்து 'எத்தனை கட்டளைகளை பின்பற்றினாய்?' என்று கேட்கிறது.
  • கிறிஸ்தவம் மனிதனைப் பார்த்து 'நீ எப்படி அன்பு கூறினாய்? (எப்படி வாழ்ந்தாய்?)' என்று கேட்கிறது.
  • இஸ்லாம் – உன் இரட்சிப்பை நீயே சம்பாதித்துக் கொள் என்கிறது.
  • கிறிஸ்தவம் – 'உன் இரட்சிப்பை நான் சம்பாதித்து வைத்துள்ளேன், அதனை முழுமனதுடன் பெற்றுக்கொள்வாயா?' என்று கேட்கிறது. 
  • இஸ்லாம் – நீ சொர்க்கம் வர நீ என்ன செய்தாய்? எனக்கு அவைகளைக் காட்டு, நான் பார்க்கட்டும் என்றுச் சொல்கிறது.
  • கிறிஸ்தவம் – நீ சொர்க்கம் வர உனக்காக நான் என்ன செய்துள்ளேன்? என்று நீ பார்த்து அறிந்துக்கொள் என்றுச் சொல்கிறது.

ஒருவன் இஸ்லாமை பின்பற்ற முடிவு செய்தவுடன், அவன் முதுகில் ஒரு டன் எடையுள்ள மூட்டையை எடுத்து வைத்து, இதனை உன் மரணம் வரை சுமந்துக்கொண்டு வரவேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது.  ஆனால், கிறிஸ்துவோ, அந்த மூட்டையை என் காலடியில் வைத்துவிட்டு, விடுதலையோடு என்னோடு நடந்துச் செல் என்றுச் சொல்கிறார்.

அன்பு சகோதரனே! சகோதரியே! நீ விடுதலையாக்கப்பட்டுள்ளாய், இனி உன்னை யாரும் அடிமைப் படுத்த  இடம் கொடுக்காதே! 

அடுத்த கேள்வி: ஹலால் ஹராம் என்பதை நற்செயல்களை சம்மந்தப்படுத்தி விளக்கினீர்கள், ஆனால், சாப்பிடுவதில், உடைகள் அணிவதில் மற்றும் இதர காரியங்களில் ஹலால் ஹராம் பற்றி கிறிஸ்தவம் என்ன சொல்கிறது என்பதை விளக்கமுடியுமா?

கேள்வி 3: நான் ஒரு முஸ்லிம் பெண், படித்துகொண்டு இருக்கிறேன். இயேசுவை விசுவாசிக்கிறேன். என் முடிவை வீட்டில் உள்ளவர்களுக்குச் சொன்னால், என் படிப்பை நிறுத்திவிட்டு, வீட்டில் உட்காரவைத்து விடுவார்கள், அல்லது திருமணம் செய்துவிடுவார்கள். நான் என்ன செய்வது?பொருளடக்கம்கேள்வி 5:

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/new_creation_qa/new_creation_qa4.html


Virus-free. www.avast.com

கேள்வி 3: நான் ஒரு முஸ்லிம் பெண், படித்துகொண்டு இருக்கிறேன். இயேசுவை விசுவாசிக்கிறேன். என் முடிவை வீட்டில் உள்ளவர்களுக்குச் சொன்னால், என் படிப்பை நிறுத்திவிட்டு, வீட்டில் உட்காரவைத்து விடுவார்கள், அல்லது திருமணம் செய்துவிடுவார்கள். நான் என்ன செய்வது?

பதில்:

உங்களுடைய நிலையை என்னால் சரியாக புரிந்துக் கொள்ளமுடிகிறது. நீங்கள் எத்தனை மாதங்களாக/ஆண்டுகளாக இயேசுவை பின்பற்றிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பெண்ணாக பிறந்தும், நீங்கள் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று அறியும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.  இங்கு சில ஆலோசனைகளை தருகிறேன், இவைகள் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் பொருந்தும்.

1) திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்:

முதலாவதாக, நீங்கள் உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள முயலுங்கள். உங்கள் முடிவை உடனே பெற்றோர்களுக்குச் சொல்லத் தேவையில்லை. உங்கள் படிப்பு முடியும் வரை, இந்த முடிவு பற்றி பெற்றோர்களுக்குச் சொல்லாதீர்கள். உங்கள் படிப்பை நன்றாக படித்து, நல்ல மதிப்பெண்களில் தேர்ச்சிப்பெற முயற்சி செய்யுங்கள். சமுதாயத்தில் சிறப்பாக வாழவேண்டுமென்றால், உங்களுக்கு படிப்பு வேண்டும், அதன் மூலமாக நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிர்காலத்தில் யார் மீதும் சார்ந்து வாழாமல் இருக்க, படிப்பு முக்கியம். மேலும், சுயமாக சம்பாதிக்கும் திறமையை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள். முடிந்தால், மேற்படிப்பு படித்து, நல்ல ஒரு பட்டதாரியாக மாறுங்கள். 

உங்களுக்கு ஆர்வம் இருந்து, நேரமிருந்தால், இன்னும் சில கைத்தொழில்களை கற்றுக்கொள்ளலாம். அதாவது, படிக்கமுடியாத நிலையில் இருக்கும் பெண்கள், டெய்லரிங் போன்ற பல கைத்தொழில்களைக் கற்றுக்கொள்ளலாம். இதே போல, ஆண்களும் சம்பாதிக்க உதவும் கைத்தொழில்களை கற்றுக்கொள்ளுங்கள். 

தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான். (நீதிமொழிகள் 22:9)

சோம்பேரிகளுக்கு தேவன் உதவி செய்வதில்லை. நாம் திறமைகளை வளர்த்துக்கொண்டால், நமக்கு ஏற்ற வேலைகளை அவர் கொடுத்து நம்மை உயர்த்துவார் (மத்தேயு 25:14-30).

திறமை மற்றும் வேலை போன்றவைகளின் முக்கியத்துவத்தைப் பற்றிச் சொல்வதென்றால், ஒரு பெண் எப்படி இருக்கவேண்டும் என்று வேதம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. உதாரணத்திற்கு, நீதிமொழிகள் 31வது அத்தியாயத்தை படித்துப்பாருங்கள்.  அவைகளிலிருந்து சில வசனங்களை இங்கு தருகிறேன்.

24. மெல்லிய புடவைகளை உண்டுபண்ணி விற்கிறாள்; கச்சைகளை வர்த்தகரிடத்தில் ஒப்புவிக்கிறாள். 25. அவள் உடை பலமும் அலங்காரமுமாயிருக்கிறது; வருங்காலத்தைப் பற்றியும் மகிழுகிறாள். 26. தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது. 27. அவள் சோம்பலின் அப்பத்தைப் புசியாமல், தன் வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறாள். 28. அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்; அவள் புருஷனும் அவளைப் பார்த்து: 29. அநேகம் பெண்கள் குணசாலிகளாயிருந்ததுண்டு; நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள் என்று அவளைப் புகழுகிறான். 30. சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண்; கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள். 31. அவள் கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; அவளுடைய செய்கைகள் வாசல்களில் அவளைப் புகழக்கடவது. (நீதிமொழிகள் 31:24-31)

2) வேத வசனத்தை கற்று, தேர்ச்சி பெறுங்கள்:

இரண்டாவதாக, வேத வசனத்தை படித்து, அதை தியானித்து விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்களின் கடினமான நேரங்களில் வேத வசனம் உதவும். முக்கியமாக, புதிய ஏற்பாட்டை அடிக்கடி படியுங்கள். பழைய ஏற்பாட்டில் சங்கீதம், மற்றும் நீதிமொழிகள் புத்தகங்களையும் அடிக்கடி படியுங்கள். சமுதாயத்தில் எப்படி ஞானமாக நடந்துக்கொள்ளவேண்டும், எப்படி பேசவேண்டும் போன்றவைகளை நீதிமொழிகள் புத்தகம் கற்றுத்தரும்.

சங்கீதம் 23ம் அத்தியாயத்தை நன்றாக கற்றுக்கொண்டு, உங்கள் ஜெபங்களில் அவைகளைச் சொல்லி ஜெபிக்கலாம். சங்கீதம் 91ம் அத்தியாயத்தை மனப்பாடம் செய்து, அவைகளை அடிக்கடி அறிக்கையிட்டு, விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். இயேசுவின் மலைப்பிரசங்கத்தை ஒருபோதும் மறக்கவேண்டாம்.

வேதவசனம் உங்கள் கால்களுக்கு வழிகாட்டும் தீபமாக இருக்கும். மேலும், உங்கள் வாலிப வயதின் ஆசைகளிலிருந்து தப்பித்து, உங்களை பரிசுத்தமானவர்களாக காத்துக்கொள்ள, வேத வசனத்தை அதிகமாக படித்து தியானம் செய்யுங்கள்.

3) குடும்பத்தில் நல்ல சாட்சியான வாழ்க்கை வாழ்ந்துக் காட்டுங்கள்:

ஒரு பக்கம், உங்கள் திறமையை வளர்த்துக்கொண்டு, இன்னொரு பக்கம் வேதவசனத்தை படித்து, அதன் படி நீங்கள் நடக்கும் போது, உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தைக் காண்பீர்கள். வேதம் சொல்வது போல, ஆவியின் கனிகள் கொண்டு வாழவேண்டும்.

22. ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், 23. சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. (கலாத்தியர் 5:22-23)

உங்கள் குடும்பத்தில், ஒரு நல்ல சாட்சியான வாழ்க்கையை வாழ்ந்து காட்டவேண்டும். உங்களின் வயதுள்ள இதர அங்கத்தினர்கள், உறவினர்களை விட, உங்கள் நடத்தை, பேச்சு மற்றும் வாழ்க்கை முறை ஒரு சிறப்பான வாழ்க்கையாக இருக்கவேண்டும். இதைத் தான் கிறிஸ்தவத்தில் சாட்சியான வாழ்க்கை என்றுச் சொல்வார்கள். நீங்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, உங்கள் குடும்பத்தில் நற்செயல்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக நீங்கள் விளங்கவேண்டும்.

உங்கள் இஸ்லாமிய குடும்ப நபர்களுக்கு நீங்கள் வெளிச்சம் கொடுக்கின்ற விளக்காக திகழவேண்டும்.

14. நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.

15. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.

16. இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. (மத்தேயு 5:14-16)

நற்செயல்களின் விஷயத்தில் உங்கள் குடும்பத்தினர், ஒரு வித்தியாசமானவர்களாக உங்களை காணவேண்டும். இருளுக்கும் வெளிச்சத்துக்கும் இருக்கும் வித்தியாசம் அவர்களுக்கு நன்றாக தெரியவேண்டும். இது ஒரே நாளில் நடக்கும் காரியமல்ல, இதற்கு பல மாதங்கள் ஆகலாம். புதிய சிருஷ்டியாக நீங்கள் இருப்பதினால், பழையவைகளை ஒழித்துவிடவேண்டும். 

நீங்கள் ஒரு வித்தியாசமானவர் என்பதை அவர்களுக்கு தெரிவிக்காமல், உங்கள் முடிவு பற்றி சொல்லி என்ன பயன்? அவர்களாகவே, உங்களிடம் வந்து, உன்னை ஒரு சிறந்த மகளாக/மகனாக நான் காண்கிறேன் என்று சாட்சி சொல்லும் படி நீங்கள் வாழவேண்டும். இங்கு நான் குறிப்பிடும் வாழ்க்கை போலியான நடிப்பு வாழ்க்கையல்ல, அது  உண்மையான வாழ்க்கையாகும். இயேசு சொல்வது போல, ஜீவத்தண்ணீர் உள்ள ஊற்று (நற்கனிகள்) போன்று அது உங்கள் உள்ளத்திலிருந்து வெளிப்படவேண்டும். 

4) தேவ வழி நடத்துதலை, தேவ சத்தத்தை கேட்க தயாராக வேண்டும்

ஒரு முஸ்லிம் குடும்பத்தில் தனி ஒரு பெண்ணாக இருக்கும் உங்களுக்கு உங்கள் வீட்டுக்குள் யார் உதவி செய்வார்? வெளியிலிருந்து வந்து யாரும் உதவி செய்யமுடியாது, ஆனால், இயேசுக் கிறிஸ்துவால் உங்களுக்கு உதவி செய்யமுடியும், இதனை யாருமே தடை செய்யமுடியாது. பிரச்சனை வரும் போது என்ன பேசவேண்டும்? எப்படி பதில் சொல்லவேண்டும்? போன்றவைகளை ஆவியானவர் சொல்லித்தருவார்.

இயேசுவின் சத்தத்தை நாம் கேட்கமுடியுமா?  நிச்சயம் கேட்கமுடியும். நாம் வேதம் வாசிக்கும் போதும், ஜெபிக்கும் போதும் நம் உள்ளத்தில் தேவன் பேசுவார், சில நேரங்களில் நம் சரீர பிரகாரமான செவிகளிலேயே தேவன் பேசுவதை நாம் கேட்கமுடியும். இன்னும் சில வேளைகளில் தரிசனங்கள் மூலமாகவும், கனவுகள் மூலமாகவும் வழி காட்டுவார். எனவே, அவருடைய சத்தத்தைக் கேட்க நீங்கள் தயாராக இருந்து, அவருக்கு கீழ்படியவேண்டும். 

கவனிக்கவும், கனவுகள் மூலமாக உங்களுக்கு வழிகாட்டுவார் என்றுச் சொல்லி, ஒவ்வொரு நாளும் காணும் கனவுகளை ஆய்வு செய்துக்கொண்டு இருக்கக்கூடாது. பெரும்பான்மையான கனவுகளுக்கு பொருள் இருக்காது, நாம் அன்றாடம் செய்யும் செயல்களின் பிரதிபலிப்பாகவோ, அல்லது உடல் சோர்வின் காரணமாகவோ கனவுகள் தினமும் வரலாம், இவைகளை கணக்கில் கொள்ளக்கூடாது. ஒரு சிக்கலான பிரச்சனையில் சிக்கியிருக்கும் போது, நமக்கு கனவுகள் தரிசனங்கள் கொடுத்து அவர் உதவி செய்வார், வழிகாட்டுவார். சரியான நேரத்தில் அவர் உதவி செய்வார் என்பதை உணர்ந்து, விசுவாசித்து, நிதானமாக நடந்துக்கொள்ளுங்கள்.

5) முடிவை தேவனிடம் ஒப்புக்கொடுங்கள்:

கடைசியாக, இயேசுவை பின்பற்றும் உங்களின் முடிவைப் பற்றி உங்கள் குடும்பத்துக்குச் சொல்லும் பொறுப்பை அவரே ஏற்றுக்கொள்வார். அதற்கென்று ஒரு காலத்தை அவர் நியமித்து இருப்பார், அந்த நாள், நாழிகை வரும் போது, தானாகவே, அவ்விஷயம் உங்கள் வீட்டாருக்கு தெரிவிக்கப்படும். அந்த நாளை நீங்கள் விரும்பினாலும் சரி, விருமபாவிட்டாலும் சரி, உங்கள் பெற்றோருக்கு அது தெரியவரும். அப்போது நீங்கள் இயேசுவை மறுதலிக்காமல், உண்மையை ஒப்புக்கொள்ளவேண்டும். அப்போது நடக்கும் காரியங்கள் அனைத்தையும் இயேசு தம் கரத்தில் எடுத்துக்கொண்டு, ஒரு ஆசீர்வாதமான முடிவை உங்களுக்குத் தருவார். அனேக முஸ்லிம்களின் சாட்சிகளை நான் கேட்டுள்ளேன், முக்கியமாக என் வாழ்க்கையிலும் நடந்த நிகழ்ச்சிகளும் இப்படித் தான் முடிவுக்கு வந்தது.

சிலர் ஆர்வ கோளாரினால், அறியாமையினால் தங்கள் முடிவை வீட்டிலுள்ளவர்களுக்கு சீக்கிரத்தில் சொல்லிவிட்டு, தங்கள் படிப்பையும், இதர ஆசீர்வாதங்களையும் இழந்துவிடுகிறார்கள். "உன் முடிவு பற்றி குடும்பத்துக்குச் சொல்" என்று அவர் சொல்லும் வரை நீங்கள், அமைதியாக இருந்து மேலே சொல்லப்பட்ட ஆலோசனைகளின் படி வாழ்ந்துக்கொண்டு இருங்கள். இவைகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொருந்தும்.  

6) திருச்சபையின், இதர கிறிஸ்தவர்களின் உதவியை பெறுங்கள்

இதுவரை சொன்ன விவரங்கள் அனைத்தையும் கவனித்தால், 'உங்கள் யுத்தத்தை நீங்கள் மட்டுமே தனியாக செய்யவேண்டும்' என்பது போல தெரிகிறதல்லவா? மேலோட்டமாக பார்த்தால், அப்படித் தான் தெரியும், ஆனால், ஆழமாக உங்கள் வாழ்க்கையில் நடக்கும் அல்லது நடக்கப்போகும் செயல்பாடுகளை கவனித்தால், ஆங்காங்கே தேவன் உங்களுக்கு உதவி செய்ய 'சில கிறிஸ்தவ நண்பர்களை, தோழிகளை, ஊழியர்களை' அனுப்புவார். இதனை இப்போது உங்களால் புரிந்துக் கொள்ளமுடியாது.  மேலே கூறப்பட்ட ஆலோசனைகளின் படி நீங்கள் வாழும் போது, உங்களை உயர்த்த, சரியான நேரத்தில் உதவி செய்ய, அவ்வப்போது தேவன் 'உதவும் கரங்களை' அனுப்புவார், இவைகள் அற்புதமாக நடக்கும், இதில் சந்தேகமில்லை.

எதிர்பாராத இடங்களிலிருந்து உங்களுக்கு உதவி வரும்.

எதிர்பாராத நபர்கள் (உங்கள் உறவினர்களாக கூட இருக்கலாம்) மூலமாக உதவி வரும்.

படிக்கும் அல்லது வேலை பார்க்கும் இடங்களில், உங்களுக்கு மறைமுகமாக உதவி செய்யவே அனேக தேவதூதர்கள் போன்ற கிறிஸ்தவர்களை தேவன் அனுப்புவார்.

எனவே, எல்லோரையும் சந்தேகக் கண்ணோட்டத்தில் பார்க்காமல், கர்த்தர் கொடுத்திருக்கும் ஞானத்தை பயன்படுத்தி, உதவிகளை பெற்றுக்கொண்டு முன்னேரிச் செல்லவேண்டும்.

எப்போது பார்த்தாலும் நீங்கள் தனியாக போராட இயேசு இடம் கொடுக்கமாட்டார். வானத்தையும் பூமியையும் படைத்த ஆண்டவரிடமிருந்து உங்களுக்கு ஒத்தாசை வரும். அது எந்த வடிவில் வரும் என்பதை, அவர் உங்களுக்கு வரும் நெருக்கடியைப் பொருத்து முடிவு செய்வார், ஆனால், உதவி நிச்சயம் வரும், கலங்கவேண்டாம்.

முடிவுரை:

இதுவரை பார்த்த விவரங்கள் அனைத்தும் ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் பொருந்தும். ஒரு முஸ்லிம் குடும்பத்தில் ஒரு ஆணுக்கு இருக்கும் உரிமைகள் பெண்களுக்கு கிடைப்பதில்லை என்பதால், ஆண்களை விட, பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஒரு சிறிய பிழை கூட, பெரிய காரியத்தை, ஆசீர்வாதத்தைக் கெடுத்துவிடும். அவசரப்பட்டு, எல்லோருக்கும் உங்கள் முடிவைச் சொல்லாமல், கர்த்தர் வழிகாட்டும்வரை காத்திருக்கவேண்டும். 'ஸபர் கா ஃபல் மீடா ஹோதா ஹை  - காத்திருந்து உண்ணும் கனி சுவையாக இருக்கும்' என்று ஹிந்தியில் சொல்வார்கள், அதாவது 'காத்திருந்து பெற்றுக்கொள்ளும் ஆசீர்வாதம், நிரந்தரமானதாக இருக்கும்' என்றுச் சொல்லலாம். ஆகவே, காத்திருந்து, ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள், அவசரப்படவேண்டாம்.

சுருக்கம்: நீங்கள் செய்யவேண்டியவை:

1) திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள், படிப்பை பூர்த்திச் செய்யுங்கள்.

2) வேத வசனத்தை கற்று, தேர்ச்சி பெறுங்கள்:

3) குடும்பத்தில் நல்ல சாட்சியான வாழ்க்கை வாழ்ந்துக் காட்டுங்கள்

4) தேவ வழி நடத்துதலை, தேவ சத்தத்தை கேட்க தயாராக இருங்கள்

5) முடிவை தேவனிடம் ஒப்புக்கொடுங்கள்:

6) திருச்சபையின், இதர கிறிஸ்தவர்களின் உதவியை பெறுங்கள்

இவைகள் பொதுவான ஆலோசனைகள். ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்கு தேவையான ஆலோசனைகளைப் பெற, இதர கேள்வி பதில்களைப் படிக்கவும்.

கேள்வி 2: நான் இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, குர்ஆனை படித்துக் கொண்டு இருந்தேன். இப்போது நான் பைபிளை படிப்பதினால், குர்ஆனை படிக்கக்கூடாதா? படித்தால் குற்றமாகுமா?பொருளடக்கம்கேள்வி 4: கிறிஸ்தவத்தில் ஹலால், ஹராம் என்பவைகள் உண்டா?



Virus-free. www.avast.com