பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
நான் அடிக்கடி இது போன்ற ஒரு கேள்வியை எதிர்கொள்வதுண்டு:
"சமீபத்தில் நான் கலைக்களஞ்சியத்தில் தீர்க்கதரிசிகள் பற்றி யூத-கிறிஸ்தவர்களின் கருத்துக்களைக் கண்டேன். அதைக் கண்டு அதிர்ந்து போனேன். தீர்க்கதரிசிகள் பெரும் பாவிகளாகப் பார்க்கப்படுகின்றனர். நான் கண்டவற்றுள் சில விவரங்களை இங்கே காணலாம்:
லோத்: அவரது மகள்கள் அவரை மது அருந்தச்செய்து, அவருடன் உடலுறவு வைத்துக்கொள்கிறார்கள்.ஆரோன்: மோசே விலகிச்சென்ற பின் ஆரோன் மக்கள் வழிபட "தங்கக் கன்றை" செய்தார். இது ஷிர்க் ஆகும் (அல்லாஹ்விற்கு இணைவைத்தல் - மிகப்பெரிய பாவமாகும்). எப்படி ஒரு தீர்க்கதரிசி இப்படிப்பட்ட மிகப்பெரிய அப்பாவத்தைச் செய்ய இயலும்?
நோவா: பெருவெள்ளத்திற்குப் பின் திராட்சை ரச மதுவைக் கண்டறிந்து, குடிகாரனானார்.தாவீது: அவர்கள் தாவீது வேசித்தனத்தின் மகன் என்று கூறுகிறார்கள். ஒரு தீர்க்கதரிசி பிறப்பிலிருந்தே பரிசுத்தமாக இருக்கவேண்டும்."
மேற்கண்ட விவரங்களை எந்த கலைக்களஞ்சியத்திலிருந்து (encyclopaedia) நம் இஸ்லாமிய நண்பர் படித்தாரென்று தெரியவில்லை. அவற்றுள் சில சரியானவை மற்றும் சில விவரங்கள் தவறானவையாகும். எடுத்துக்காட்டாக தாவீது வேசித்தனதின் மகன் என்று பைபிளில் எங்கும் கூறவில்லை. நோவா ஒருமுறை குடித்தார் என பைபிளில் உள்ளது. அவர் தொடர்ந்து குடித்துக்கொண்டு இருந்த ஒரு "குடிக்காரர்" என்று பைபிளில் எங்கும் கூறப்படவில்லை.
நாம் இக்கதைகளை விரிவாக பார்க்க முடியும் ஆனால், இந்த இஸ்லாமியர் சொல்லவரும் முக்கியமான கருத்து வேறு ஒன்று உள்ளது, அது கீழ்கண்ட வாக்கியத்தில் பொதிந்துள்ளது.
"தீர்க்கதரிசிகள் பாவம் செய்வதில்லை. அவர்கள் அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டு மற்றும் அல்லாஹ்வினால் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள்."
இதை சிந்தித்துப் பாருங்கள்: நீங்களே செய்யும் தவறை, பிறரைச் "செய்யாதே" என எப்படி கூற இயலும்?
Think of this: how can you tell someone not to do something if you do it yourself?
இது கிறிஸ்தவர்களுக்கு ஒரு சிக்கல் கிடையாது என்பதை நான் விளக்க விரும்புகிறேன்.
முஹம்மது தன்னைப் பின்பற்றுவோர் 4க்கு மேற்பட்ட மனைவிகள் வைத்துக்கொள்ளக் கூடாது என்றார்.
அவருக்கோ குறைந்தபட்சம் 11 மனைவிகள் இருந்தனர். அவர் மரிக்கும் போது 9 மனைவிகளை விட்டுச் சென்றார்.
இருந்தாலும் அவரைப் பின்பற்றுவோர் அவரது கட்டளையை மதித்து நான்கு மனைவிகள் மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள்.
இது எப்படி சாத்தியமாகும்?
இது ஒரு பிரச்சனையே அல்ல என்று நீங்கள் கூறுவீர்கள் என எனக்குத் தெரியும்.
பின்பு ஏன் பாவங்கள் செய்யும் தீர்க்கதரிசிகள் மக்களுக்கு கடவுளின் உண்மையான கட்டளைகளை போதிக்க முடியாது? சில நேரங்களில் அவர்கள் தவறுகள் செய்தார்கள் என்று அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் சத்தியத்தை, உண்மையை போதிக்க என்ன தடை? அவர்கள் போதிப்பது ஒன்றாகவும் செய்வது வேறாகவும் இருந்தால் அது வெளிவேடமே! அது நம்பகத் தன்மையை உடைக்கிறது. ஆனால், இவர்கள் தவறுகள் செய்யும் போது கடிந்துக்கொள்ளப்பட்டு மனந்திரும்பி திருந்தி வாழ்வார்களானால், இப்படிப்பட்டவர்கள் இன்னும் சத்தியத்தை போதிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று நான் காண்கிறேன் மற்றும் இவர்கள் சொல்வதை நாம் உன்னிப்பாக கவனித்து பின்பற்றலாம். அவர்கள் போதனை செல்லும். தான் செய்த பாவங்களை விட்டுவிட்டு, அப்பாவங்களை அறிக்கையிட்டு, அதை மீண்டும் செய்யாமல் போராடும் மனிதர்கள் என்னை மிகவும் கவர்கிறவர்களாய் உள்ளனர். அவர்கள் போதனைகளை என் மனம் ஏற்க மறுப்பதில்லை. அவர்களின் சாட்சி, தேவன் இத்தகைய வழுவும் மனிதர்களை பழுதற்றவர்களாய் மாற்றும் போது நான் என் தவறுகளை உணர்ந்து அவைகளை விட்டுவிடும் போது என்னையும் மாற்றுவார் என்னும் நம்பிக்கையைத் தருகிறது. பைபிளில் உள்ள தீர்க்கதரிசிகள் என்னைப் போன்ற மனிதர்களே என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கும் இறைவன் முன் ஒரு வாய்ப்பு மற்றும் நம்பிக்கை உண்டு என உணர்கிறேன்.
முஸ்லிம்களுக்கு வாழ்நாள் முழுவதும் போதிக்கப்படும் கருத்துக்களால், இந்த விவரங்களை புரிந்துக்கொள்வது அவர்களுக்கு பிரச்சனையாக இருக்கும் என்பதை நான் அறிவேன். இஸ்லாம் பைபிளைக் காட்டிலும் வேறுபட்டது. அந்தந்த மார்க்கங்களை அவற்றின் சொற்களால் புரிந்துகொள்வதே சரியானதாகும். உண்மையைக் கூறுவதில் எந்த இழிவும் இல்லை. பைபிள் ஒரு பாரபட்சமற்ற சத்திய நூல் ஆகும். அதன் கதாநாயகர்களின் பாவங்களைக்கூட வெளிப்படையாகக் கூறுகிறது. பைபிளை நான் நம்புவதற்கு இதுவும் ஒரு காரணமாகிறது. என்னிடத்தில் பைபிள் எதையும் மறைப்பதில்லை. நன்மை மற்றும் தீமை இவைகளின் மத்தியில் தேவனின் கிருபையே நமக்கு துணையாக இருக்கிறது.
தமிழ் மூலம்: பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக