ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
Abraham's name
தோராவில், ஆதியாகமம் 17:1,3,5ம் வசனங்கள் கீழ்கண்டவாறு கூறுகின்றன:
ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு. ..... அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான். தேவன் அவனோடே பேசி: ........ இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்.
When Abram was ninety-nine years old, the LORD appeared to him and said, "I am God Almighty, walk before me and be blameless. ... Abram fell facedown, and God said to him ... No longer will you be called Abram, your name will be Abraham for I have made you father of many nations."
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவரின் பெயர் "ஆபிரகாம்" என்றே பயன்படுத்தப்பட்டது. பைபிளின் பழைய ஏற்பாட்டில் குலத்தலைவராகிய இவரை எல்லாரும் இந்த பெயரிலேயே அறிவார்கள். சிலருக்கு அவருக்கு முன்பாக இருந்த உண்மையான பெயர் தெரியாது.
பைபிளைப் பற்றிய அறிவு இல்லாத அனேக மக்களுக்கு ஆபிரகாமின் உண்மைப் பெயர் என்னவென்று தெரியாமல் இருப்பதுபோல, முஹம்மதுவிற்கும் இந்த பெயர் தெரியாமல் இருந்திருக்கிறது. ஆபிராம் என்ற பெயரை தேவன் ஆபிரகாம் என்று மாற்றி மற்றும் அதே நேரத்தில் ஈசாக்கின் பிறப்பு பற்றிய வாக்குறுதியையும் கொடுத்தார், உடன்படிக்கையையும் உறுதிப்படுத்தினார். ஆனால், "ஆபிராம்" வாலிபராக இருக்கும் சமயத்தில் அவரை "ஆபிரகாம்" என்று அழைப்பதை நாம் குர்ஆனில் காண்கிறோம். உண்மையில் அவரது பெயர் அந்த நேரத்தில் "ஆபிராம்" என்பதாகும்.
அதற்கு (அவர்களில் சிலர்) "இளைஞர் ஒருவர் இவற்றைப் பற்றி (அவதூறாகக்) குறிப்பிட்டு வந்ததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், அவருக்கு இப்றாஹீம் என்று பெயர் சொல்லப்படுகிறது" என்று கூறினார்கள். (குர்ஆன் 21:60)
They said: "We heard of the youth talked of them: He is called Abraham." (Sura 21:60)
குர்ஆனின் அனேக சரித்திர தவறுகளில் இதுவும் ஒன்று. ஆபிராமுக்கு எண்பது அல்லது அதற்கும் குறைவான வயது இருக்கும் போது அவரை "ஆபிரகாம்" என்று குர்ஆன் அழைத்து சரித்திர பிழையை செய்துள்ளது. அப்போது அவருக்கு இருந்த பெயர் "ஆபிராம்" என்பதாகும். இது அல்லாஹ்விற்கு தெரியாமல் இருந்திருக்கிறது. இது ஒரு சிறிய தவறாக தெரியலாம், ஆனால், பைபிள் பற்றிய பொது அறிவு இல்லாமல், அல்லாஹ் மேலோட்டமாக செய்த தவறு சிறிய தவறு அல்ல.
ஆங்கில மூலம்: Abraham's name
குர்ஆன் பற்றிய கட்டுரைகளை படிக்கவும்
© Answering Islam, 1999 - 2010. All rights reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக