ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

 1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
 2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
 3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
 4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
 5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
 6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
 7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
 8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
 9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
 10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
 11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
 12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
 13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
 14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
 15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
 16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
 17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
 18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
 19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
 20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
 21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
 22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
 23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
 29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
 30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
 31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
 32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
 33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
 34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
 35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
 36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
 37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
 38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
 39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
 40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
 41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
 42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
 43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
 44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
 45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
 46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
 47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
 48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
 49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
 50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
 51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
 53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
 54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
 55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
 56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
 57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

 1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
 2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
 3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
 4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
 5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
 6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
 7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
 8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
 9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
 10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
 11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
 12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
 13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
 14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
 15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
 16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
 17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
 18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
 19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
 20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
 21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
 22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
 23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
 24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
 25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
 26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
 27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
 28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
 29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
 30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
 31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
 32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
 33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
 34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
 35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
 36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
 37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
 38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
 39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
 40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
 41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
 43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
 44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
 45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
 46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
 47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
 48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
 49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

சனி, 25 அக்டோபர், 2008

இயேசுவின் ஜிஹாத்: நம் இஸ்லாமிய நண்பர்களுக்கு ஓர் பகிரங்க மடல் (Open Letter to Our Muslim Friends)

இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 14, 2001). செப்டம்பர் 11 ஆம் தேதி நிகழ்வின் தடயங்கள் சில இஸ்லாமிய அடிப்படைவாதக் கும்பலை நோக்கிக் காட்டுகின்ற‌ன‌…

 
நம் இஸ்லாமிய நண்பர்களுக்கு ஓர் பகிரங்க மடல்

Open Letter to Our Muslim Friends:
 
 
செப்டம்பர் 11 ஆம் தேதிய அக்கிரம நிகழ்வுகள் குறித்து உங்களில் பெரும்பான்மையானவர்கள் இல்லாவிடினும் பலர் பயமும் அதிர்ச்சியும் அடைந்திருக்கின்றீர்கள் என நான் அறிவேன். சரித்திரத்தில், 15 ஆம் நூற்றாண்டில் ஸ்பெயினில் இயேசுவின் பெயரால் நடந்த மத வெறி நிகழ்வுகளுக்காக‌வும் அதுபோன்ற ஏனைய பைத்தியக்காரத் தனங்களுக்காகவும் நான் கிறிஸ்தவன் என்ற முறையில் சங்கடப்படுவதைப் போன்று, நீங்கள் - முஸ்லீம்கள் என்ற முறையில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் இத்தகைய நடவடிக்கைக்காக மிகவும் சங்கடத்திற்கு உள்ளாகி இருக்கிறீர்கள் என‌ நான் எண்ணுகிறேன்.

உங்களில் ப‌ல‌ர் அமைதி விரும்பும் ம‌க்க‌ளாக இருக்கிறீர்கள். அமைதிக்காக‌வும் ந‌ம்பிக்கைக்காக‌வும் இதற்கிடையே உங்கள் மத நம்பிக்கையின் வெற்றிக்காகவுமான ம‌ன‌ப்போராட்ட‌த்தினால் அழுத்த‌த்திற்குள்ளாகி எக்கார‌ண‌த்தை முன்னிட்டும் நீங்களும் மற்ற‌வர்களும் ஒரு உட‌ன்பாடுக்கு வர இயலாத‌ நிலையில் இருக்கின்றீர்க‌ள். ஒரு வ‌ச‌தியான‌ நிலையில் உள்ள‌ ஒரு கிறிஸ்த‌வ‌ன் அல்ல‌து ஒரு பெய‌ர் கிறிஸ்த‌வ‌ன் இயேசுவின்பால் மேலோட்டமான பற்றுதலுடன் ப‌ல‌வீன‌மாக இருக்கின்றானோ அதில் உங்க‌ளில் ப‌ல‌ர் உங்க‌ளின் ந‌பிக்காக‌வும் புனித‌ நூலுக்காக‌வும் மிகுந்த‌ வைராக்கியமாகவும் பலசாலியாகவும் உள்ளீர்க‌ள்.

இந்த வாரம் நடந்த இஸ்லாமிய வன்முறைச் சம்பவம் போன்ற‌ நிகழ்வுகளுக்காக‌ நீங்கள் அடிக்கடி சங்கடப்படுவது போன்றே, கிறிஸ்தவர்களாகிய நாங்கள், எங்கள் தரப்பில் வன்முறை நடந்தபோது நாங்களும் சங்கடப்பட்டோம்.

ஆயினும் இவைகளில் அடிப்படையான ஒரு வித்தியாசத்தை நீங்கள் காணலாம். இந்த வித்தியாசம் நமது நம்பிக்கையிலும் அதனை ஸ்தாபித்தவர்களின் இருதயங்களிளும் உள்ள வித்தியாசத்தையே வெளிப்படுத்துகிறது.

இன்றைய கிறிஸ்தவர்கள் சரித்திரத்தின் வன்முறை நிகழ்வுகளுக்கும், அக்கிரமங்களுக்கும், கிறிஸ்தவ சபைகளின் அல்லது கிறிஸ்தவ சபைகளின் ஆதரவுடன் பெற்ற முறையற்ற வெற்றிகளுக்காகவும் மிகவும் சங்கடப்படுகிறார்கள். ஏனெனில் இவை இயேசுவின் முன்னுதாரணமான வாழ்க்கைக்கும் அவரது போதனைகளுக்கும் எதிரானவை என்பதை அவர்கள் அறிந்துள்ளனர். எங்கள் சங்கடம் என்னவென்றால் நாங்கள் "வெறும் மனிதர்க"ளாகவே நடந்து, இதயமற்றவர்கள் போல் தரம் தாழ்ந்து, ஜீவனுள்ள தேவனுக்குக் கீழ்ப்படியத் தவறினோம் என்பதே.

பைபிள் காட்டும் ந‌ம‌து இயேசு வ‌ன்முறைக்கு எச்ச‌ந்தர்ப்ப‌த்திலும் ஒப்புதல் அ‌ளிக்க‌வில்லை. ஒரு கோப‌முற்ற முதல் நூற்றாண்டு அதிகார வர்க்கத்தின் சிறு மதவெறிக்கும்ப‌லிடம் எதிர்ப‌ட்ட‌போது கூட‌ அவ‌ர‌து அணுகுமுறை ப‌ணிவாக‌வே இருந்த‌து. பொய்யான‌ குற்ற‌ச்சாட்டுக‌ள் அவ‌ருக்கு எதிராக‌ சும‌த்த‌ப்ப‌ட்ட‌போதும், "அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப் போல", அவர் வாயைத் திற‌க்க‌வில்லை. கொடும் ம‌ர‌ணத்தைச் சந்தித்த‌போதும் கூட‌ அவ‌ர‌து முடிவைத் தம் ப‌ர‌லோகத் தந்தையிடமே ஒப்புக்கொடுத்தார்.

மரணத்தை அவர் கொல்லுதலினால் அல்ல‌, மாறாக மரணத்தை ஏற்றுக்கொண்டு ஜெயித்தார்(He conquered death—not by killing it—but by dying Himself.) தீமையை நன்மையினால் மேற்கொண்டார். வெறுப்புக்கு எதிரான அவரது புனிதப் போரை(Jihad) அன்பினைக் கொண்டு நடத்தினார். அதிகார வெறி மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றிற்கு எதிரான‌ அவரது ஜிஹாத் , அவர் நம்மிடையே ஒரு பாடுபடும் ஊழியக்காரனாக வாழ்ந்தே நடத்தப்பட்டது. பரலோகத்தினின்று கொண்டு வந்த அழகினால் நமது அவலட்சனங்களைப் போக்கினார். அவரது உடல் சிலுவையில் ஆணிகளால் அறையப்பட்டு சதை கிழிக்கப்படும் போதும் கூட, "பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே", எனத் தம்மை துன்புறுத்தியவர்களுக்காக ஜெபித்தார்.

அவர் காட்டிக் கொடுக்கப்பட்டு அநீதியான விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்ட‌ அந்த இரவில் கெத்சமனே தோட்டத்தில் அவ‌ர‌து ப‌கைவ‌ர்க‌ள் அவ‌ர‌ச் சூழ்ந்துகொண்டார்க‌ள். அச்சந்தர்ப்பத்தில் அவ‌ர‌து ப‌ர‌லோக‌த் தந்தையிட‌ம் அவ‌ர் இராணுவ‌ உத‌வியைக் கூட‌க் கேட்டிருக்க‌லாம் (72,000 தூத‌ர்க‌ள்). ஆனாலும் அவ‌ர் அவ்வாறு செய்ய‌வில்லை.( இஞ்ஜில் ம‌த்தேயு 26:47 முத‌ல் 26:54 வ‌ரை)
 
"அவர் இப்படிப் பேசுகையில், பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடே கூடப் பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள் பட்டயங்களையும், தடிகளையும் பிடித்துக்கொண்டு வந்தார்கள். அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான். இயேசு அவனை நோக்கி: சிநேகிதனே என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது அவர்கள் கிட்ட வந்து, இயேசுவின் மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள். அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கைநீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான். அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தை திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள். நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார்."
 
முன்பு வாழ்ந்த அனேகம் மதத் தலைவர்கள் மற்றும் ஸ்தாபகர்களைப் போலல்லாது அவரைக் காட்டிக் கொடுத்தவனைக் கூட அவர் "சினேகிதனே" என அழைக்கிறார். மற்றும் தன்னை பின்பற்றினவர்களை நோக்கி தம் வாள்களைக் கீழே போட்டு தேவ சித்தத்திற்கு ஒப்புக் கொடுக்கும்படிக் கட்டளையிடுகிறார்.

தமது காயங்களை அவர் மறைத்துக் கொள்ளாமல் அவற்றைத் தழுவிக் கொள்கிறார். மரித்தோரினின்று தேவன் அவரை எழுப்பிய போதும் உயிர்த்தெழுந்த‌ அழியாத‌ அவ‌ர‌து புதிய உடம்பில் அவ‌ர் தெரிந்து ஏற்றுக்கொண்ட பலவீனத்திற்கும் வேதனைக்கும் அடையாளமான காயங்களையும் கைகளில் ஆணியின் சுவடுகளையும் சுமந்தார்.

அவரின் ஒப்பற்ற அன்பு வாழ்க்கையில் அவரைப் பின்பற்றினவர்களிடம், அவரவர் தங்களை வெறுத்து தங்கள் சிலுவையைச் சுமந்துச் செல்லப் பணித்தார், மற்றவர்களின் சிலுவையை அல்ல. கவனிக்கவும்; அடுத்தவர்களை அல்ல, அவரவர் தம்மை வெறுத்து தமது சிலுவையை சுமக்கவேண்டுமென்றார். அடுத்தவர்களின் நலனுக்காக தான் எப்படி உயிரைக் கொடுத்தாரோ அது போல வாழவேண்டுமென்றார்.

கிறிஸ்தவர்களுக்கு, பகைமை மற்றும் அத்துமீறிய வன்முறை என்பன மிகக் கொடுமையான பாவங்களாகும். ஏனெனில் அவை கிறிஸ்துவின் "எளிய, அமைதலுள்ள பண்புடன்" வாழாத‌ இதயங்களினின்று மட்டுமே புறப்படுகின்றன. இத்தகைய இதயங்கள் சுயந‌லம், வெறி, சுரண்டுதல் மற்றும் மற்றவர் மீது கடினம் காட்டுதல் போன்ற குணங்கள் உடையவை. இயேசு அவருடைய முழு வாழ்க்கையையுமே அடுத்தவர்களுக்காகவே கொடுத்தார்; ஆனால் வன்முறை அடுத்தவரிடமிருந்து எடுத்துக் கொள்வதில் தான் ஆரம்பிக்கிறது.
 
"உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்கள் அவயவங்களில் போர் செய்கிற இச்சைகளினாலல்லவா? நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக்கூடாமற்போகிறீர்கள்; நீங்கள் சண்டையும் யுத்தமும் பண்ணியும், நீங்கள் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை. நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியால், பெற்றுக் கொள்ளாமலிருக்கிறீர்கள்." (இஞ்ஜில், யாக்கோபு அதிகாரம் 4)
 
உங்களில் சிலராவது இந்நேரம் இயேசுவின் இப்படிப்பட்ட எடுத்துக்காட்டான வாழ்க்கைக்கும் மற்றும் அவரை பின் பற்றுகிற சிலரின் வாழ்க்கைக்கும் உள்ள‌ அடிப்படை வித்தியாசத்தைப் புரிந்துகொண்டு இருப்பீர்கள். நாங்கள் எங்களது தவறுகளால் அவர் போன்று வாழாமல் சரித்திரத்தில் அவரைப்போன்று அன்பு காட்டாமல் அவரினின்று மாறுபட்டு இருக்கிறோம். நாம் நம் வாழ்க்கையினால் அவரை தவறாக காட்டுகிறோம். ஆனால் அவரது இத‌யத்தின் உண்மையான காட்சி புதிய ஏற்பாட்டில் உள்ள நிகழ்வுகளில் காணலாம். அதாவது அவரின் அன்பான வார்த்தைகளில், இரக்கமுள்ள செய்கைகளில், மற்றும் உலகின் பாவங்களுக்காக மரித்தலில் காணப்படுகிறது. பிதாவின் முன்பாக அவரது சிலுவை மரணமாகிய ஜீவாதார பலி, அதாவது நமது பாவங்களைத் தம்மீது சுமரப்பண்ணி நமக்காய் மரித்தது எல்லா மனிதருக்காகவும் தான். அவர் மரித்தது எனக்காகவும், உங்களுக்காகவும், பேதுரு, பவுல், முகமது, ஆபிரகாம், சாராள், ஆகார் மற்றும் இன்னும் பிறக்கப் போகிறவர்ககாகவும் தான்.

இப்பொழுது நீங்கள் இயேசுவின் செய்திக்கும் உங்கள் நம்பிக்கையின் ஒரு சில அம்சங்களுக்கும் உள்ள குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை புரிந்துகொண்டிருப்பீர்கள். உங்கள் நம்பிக்கையில் அனேகம் சீரிய உண்மைகள் இருப்பினும், அதில் வருந்தத்தக்க‌ ஒரு உணர்வோட்டம் இத்தகைய அன்பின், பணிவின் மற்றும் அமைதியின் வழிக்கெதிராக உள்ளது. இத்தகைய உணர்வோட்டம் தான் கொடிய மனிதர் கையில் அகப்பட்டு உங்களைப் போன்ற மக்களின் இதயத்தை உறுத்தும் ஒரு சோக சம்பவமாக, இவ்வாரத்தில் நடந்ததைப் போன்று உருமாறுகிறது.

நபிகளின் சில போதனைகளினின்று வேறுபட்டு எங்களின் சினம் கொண்ட மனங்களுக்கு எதிராக கீழ்கண்ட வசனம் போதிக்கிறது:
 
"எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்." லூக்கா 6:27,28
 
இயேசுவிடம் அவரது சொல்லிலும் செயலிலும் ஒரு முழுமையான ஒருங்கிணைப்பு மட்டுமே இருந்தது. அவர் அன்பையே போதித்தார், ஒருபோதும் பகைவர்களை வன்முறை உணர்வோடு சாடியதில்லை. அனைத்து நம்பிக்கைகளிலும் உள்ள மனிதர்களாகிய நாம் அவர் வாழ்ந்துகாட்டியது போல் வாழத் தவறிவிட்டோம்.

உங்கள் மனதில் உள்ள இத்தகைய சஞ்ச‌லத்தை எதிர்கொண்டு சரித்திரத்தில் இயேசுவைப் பின்பற்றுபவர்களை அல்லாமல் இயேசுவையே நோக்கி ஒரு புதிய கண்ணோட்டத்துடன் பாருங்கள் என உங்களை நான் ஊக்குவிக்கிறேன். வாழ்வுக்கும் விடுதலைக்குமான அவரது அறைகூவல் ஏன் வன்முறையும் வெற்றியும் பொதியப்பெற்ற‌ வார்த்தைகளால் அல்லாமல் பின் வருவன போன்ற வார்த்தைகளால் அமையப்பெற்றது என நீங்களே அறிந்துகொள்ளுங்கள்
 
"வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது" ( மத்தேயு 11:28 – 30 )
 
இப்படிக்கு


க்ளன் எம் மில்லர்
(Glenn M. Miller, www.Christian-thinktank.com)

[The author of this article, Glenn M. Miller, hereby grants permission to copy this article freely, provided that the material is not modified in any form (other than translation into another language); that the material is distributed without cost, and that the ThinkTank web site identification remains with the material. We further ask that the source is acknowledged as: Source: www.answering-islam.org/glenn.html]

ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/glenn.html
 

Isa Koran Home Page Back - Islam & Terrorism Index Page

Answering IslamKalvi: இயேசு தான் இறைவன் என்றுச் சொன்னால், இறைவன் எப்படி மரிக்கமுடியும்?

 
இஸ்லாம் கல்விக்கு பதில்
 


இஸ்லாம் கல்வி தளத்தில் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது, அதில் "இயேசு இறைவன் என்றால் அவர் எப்படி மரிக்கமுடியும்?" என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அக்கட்டுரைக்கான தொடர் பதில்கள் வரிசையில் இதனை முதலாவது பதிலாக நான் முன்வைக்கிறேன்.

 
இஸ்லாம் கல்வி எழுதியது:

கடவுள் மரணமடைவாரா? இல்லை. ஒரு போதும் இல்லை. பிறப்போ இறப்போ இல்லாதவனே இறைவன். ஆனால் கடவுளின் மூன்று ஆள்த் துவங்களில் ஒருவராகக் கிறித்தவர்களால் கருதப்படும் இயேசு பிறப்பும் இறப்பும் உடையவர். மரியாளின் மகனாகப் பிறக்கின்றார். மரணித்தபின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாகவும் கிறித்தவர்கள் நம்புகின்றனர். இதனை பைபிளும் கூறுகின்றது. இயேசுவின் மரணத்துக்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடையே திரித்துவத்தின் மூன்று ஆள்த்துவங்களில் ஒருவர் இல்லை. அந்த இடைவேளையில் இருந்தது இருவர் மட்டுமே! அப்படியானால் இருமைத்துவமும் கிறித்தவத்தில் உள்ளது என்று கூறலாமா? காரணம் திரித்துவத்தை மீட்சி அடைவதற்கான கொள்கையாகக் கிறித்தவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இயேசு இல்லாதிருந்த அந்த மூன்று நாட்கள் கடவுள் இருவராக மட்டுமே இருந்துள்ளனர். ஒருவர் இல்லை. திரித்துவத்தின் அடிப்படையை இது கேள்விக்குறியாக்குகிறது.

Source: Islam Kalvi

 
 
 
பைபிள் பற்றிய பொதுவான கேள்விகளுக்கு தொடர் பதில்கள்

A Series of Answers to Common Questions

சாம் ஷமான்
 
 
கேள்வி:

இயேசு தான் இறைவன் என்றுச் சொன்னால், இறைவன் எப்படி மரிக்கமுடியும்? இயேசு மரித்திருந்த அந்த மூன்று நாட்கள் யார் இந்த உலகை நடத்திக் கொண்டு இருந்தார்கள்?

( If Jesus is God, how can God die? Who was running the universe those three days that Jesus was dead?)
 
 
பதில்:

 
ஒருவர் மரித்தால் அவர் "முழுவதுமாக இல்லாமல் போய்விடுவார்(non-existence)" என்பதே இக்கேள்வியில் மறைந்துள்ள ஒரு செய்தி அல்லது ஊகமாகும். இந்த கேள்வியின் படி, இயேசு மரித்தார் என்றுச் சொன்னால், அவர் முழுவதுமாக இல்லாமல் போய்விடுவார்(ceased to exist), இது போல நடக்க வாய்ப்பே இல்லையே, அதாவது இறைவன் இல்லாமல் இந்த உலகம் எப்படி நிலைக்கும்? மரணம் என்பதின் பொருளை தவறாக புரிந்துக் கொண்டுள்ளார்கள், இது தான் பிரச்சனை. ஆனால், பரிசுத்த வேதாகமத்தின் படி, மரணம் என்பது, ஆதாமின் கீழ்படியாமையினால் உண்டான ஒரு பிரிவு மட்டுமே ஆகும். முதல் மனிதனின் பாவத்தினால் இரண்டு வகையான பிரிவுகள் உண்டாயின என்று வேதம் சொல்கிறது. முதலாவது "ஆன்மீக மரணம் அல்லது ஆவிக்குரிய மரணம்" ஆகும், அதாவது, இறைவனோடுள்ள ஐக்கியம் அல்லது உறவுமுறை துண்டிக்கப்பட்டு, இறைவனின் அன்பான மற்றும் நெருக்கமான பிரசன்னத்தை இழப்பதாகும். மனிதன் மீது இறைவனின் அன்பு சூழ்ந்து இருப்பதற்கு பதிலாக‌, இறைவனின் கோபம் வியாப்பித்து இருப்பதாகும். இதைத் தான் ஆவிக்குரிய‌ ம‌ர‌ண‌ம் என்றுச் சொல்கிறோம்.
 
 
தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். (ஆதியாகமம் 2:15-17)
 
 
தேவனுக்கு கீழ்படியாமல், தடுக்கப்பட்ட மரத்தின் கனியை புசித்த காரணத்தினால், ஆதாமும் அவன் மனைவியும் தேவனின் பிரசன்னத்திலிருந்தும், ஏதேன் தோட்டத்திலிருந்தும் துரத்தப்பட்டார்கள்.
 
 
பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று, அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார். அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார். (ஆதியாகமம் 3:22-24)
 
 
பாவத்தின் காரணமாக உருவான இந்த ஆவிக்குரிய பிரிவினையை வேதம் தொடர்ந்து விவரிக்கின்றது.
 
 
நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல; தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை. வீம்புக்காரர் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்; அக்கிரமக்காரர் யாவரையும் வெறுக்கிறீர். பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்; இரத்தப்பிரியனையும் சூதுள்ள மனுஷனையும் கர்த்தர் அருவருக்கிறார். (சங்கீதம் 5:4-6)

என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவி கொடார். (சங்கீதம் 66:18)

உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப்பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது. (ஏசாயா 59:2)

அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவார்கள்; ஆனாலும் அவர்கள் தங்கள் கிரியைகளில் பொல்லாதவர்களானபடியினால், அவர் அவர்களுக்கு மறுஉத்தரவு கொடாமல், தமது முகத்தை அக்காலத்திலே அவர்களுக்கு மறைத்துக்கொள்ளுவார். (மீகா 3:4)

தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே; பின்னை துரோகிகளை நீர் நோக்கிக் கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப்பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன? (ஆபகூக் 1:13).

உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே. …சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும். (ரோமர் 2:5,8)

அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள். அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள் (எபேசியர் 2:1-5).
 
இயேசுவோடு ஐக்கிய‌ப்ப‌ட்ட‌ விசுவாசிக‌ள் கூட‌ அவ‌ர்க‌ள் ம‌றுபிற‌ப்பு அடைவ‌த‌ற்கு முன்பாக "பாவத்தில் ம‌ரித்த‌வ‌ர்க‌ளாக" இருந்தார்க‌ள் என்று மேலே ப‌டித்த‌ க‌டைசிப் ப‌த்தியில் ப‌வுல் சொல்கிறார். அதாவ‌து பாவ‌த்தில் ம‌ரித்த‌வ‌ர்க‌ள் என்றுச் சொன்னாலும், விசுவாசிக‌ள் இன்னும் உயிரோடு இருப்ப‌வ‌ர்க‌ளாகவே இருந்தார்க‌ள். மனிதன் பாவ‌த்தினால் ம‌ரித்தான் என்றுச் சொன்னால், அவ‌ன் இல்லாமல்(அழிந்தே) போய்விடுகிறான் என்று பொருள் அல்ல‌, அத‌ற்கு ப‌திலாக‌, அவ‌ன் அன்பான‌ தேவ‌னோடுள்ள‌ ந‌ட்புறவிலிருந்து பிரிக்கப்பட்டான் என்ப‌து தான் இந்த‌ வ‌ச‌ன‌த்தின் பொருளாகும்.

பரிசுத்த பைபிள் குறிப்பிடும் இரண்டாவது வகையான மரணம் "சரீர மரணமாகும்". இந்த சரீர மரணம் என்பது, சரீரத்திலிருந்து ஆவி/ஆன்மா பிரிக்கப்பட்டு, மற்றும் இந்த சரீரமானது தான் வந்த மண்ணுக்கே திரும்பிவிடும். மற்றும் நம்முடைய பாவத்தை சுமந்த இயேசு கிறிஸ்துவும் இந்த இரண்டு வகையான மரணத்தையும் சந்தித்தார், அதாவது தேவனுடன் தன் நட்புறவை நமக்காக இழந்தார், மற்றும் சரீரத்திலிருந்து ஆன்மா பிரிவதையும் அனுபவித்தார். நம்முடைய தொடர் கேள்விகளுக்கான பதிலில் இந்த விவரத்தைப் பற்றி இன்னும் அதிகமாக நாம் சிந்திக்கப்போகிறோம்.

 
ஆக, இந்த இரண்டு வகையான மரணங்களும், ஒருவரை "இல்லாமல் செய்துவிடாது"( Yet, neither types of death results in non-existence or cessation of life). உதாரணத்திற்கு கிழ் கண்ட வசனத்தை பார்க்கவும்:
 
 
நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும், பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும், புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள். (எபிரேயர் 12:22-24)

 
அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும்செத்ததாயிருக்கிறது ("As the body without the spirit is dead, so faith without deeds is dead." யாக்கோபு 2:26)

 
அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின்கீழே கண்டேன். அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள். அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. (வெளி 6:9-11)
 
 
"மரணம்" என்றால் என்ன என்பது பற்றி, கேள்வி கேட்டவரின் புரிந்துக்கொள்ளுதல் பைபிளுக்கு எதிரானது மட்டுமல்ல, அது குர்‍ஆனுக்கும் எதிரானது என்பது தான் மிகவும் முக்கியமான விவரமாகும்(Interestingly, not only is the questioner's definition of death unbiblical, it is also contrary to the Quran:).
 
 
இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை "(அவர்கள்) இறந்துவிட்டார்கள்" என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்(And say not of those slain in God's way, 'They are dead'; rather they are living, but you are not aware. குர்‍ஆன் 2:154)

 
அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள். தன் அருள் கொடையிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு அளித்ததைக் கொண்டு அவர்கள் ஆனந்தத்துடன் இருக்கிறார்கள்;. மேலும் (போரில் ஈடுபட்டிருந்த தன் முஃமினான சகோதரர்களில் மரணத்தில்) தம்முடன் சேராமல் (இவ்வுலகில் உயிருடன்) இருப்போரைப் பற்றி; "அவர்களுக்கு எவ்வித பயமுமில்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்" என்று கூறி மகிழ்வடைகிறார்கள். (குர்‍ஆன் 3:169-170)

Count not those who were slain in God's way as dead, but rather living with their Lord, by Him provided, rejoicing in the bounty that God has given them, and joyful in those who remain behind and have not joined them, because no fear shall be on them, neither shall they sorrow, S. 3:169-170
 
 
கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவின் வார்த்தைகளும் இதனையே எதிரொலிக்கின்றன.
 
அன்றியும் மரித்தோர் எழுந்திருப்பார்களென்பதை மோசேயும் முட்செடியைப்பற்றிய வாசகத்தில் காண்பித்திருக்கிறார். எப்படியெனில், கர்த்தரை ஆபிரகாமின் தேவனென்றும் ஈசாக்கின் தேவனென்றும் யாக்கோபின் தேவனென்றும் சொல்லியிருக்கிறார். அவர் மரித்தோரின் தேவனாயிராமல், ஜீவனுள்ளோரின் தேவனாயிருக்கிறார்; எல்லாரும் அவருக்குப் பிழைத்திருக்கிறார்களே என்றார். (லூக்கா 20:37-38)
 
 
இதுவரை நாம் கண்ட விவரங்களிலிருந்து அறிந்துக்கொள்வது என்னவென்றால், இயேசு சிலுவையில் மரிக்கும் போது அவர் "முழுவதுமாக இல்லாமல் போகவில்லை". பரிசுத்த வேதம் நமக்கு இவ்விதமாக போதிக்கிறது, அதாவது கர்த்தரின் சரீரம் மூன்று நாட்கள் கல்லரையில் இருக்கும் போது கூட, அவரது ஆவி/ஆன்மா தொடர்ந்து உயிரோடு இருந்தது(still consciously alive) மற்றும் வாழ்ந்துக்கொண்டு இருந்தது என்று வேதம் சொல்கிறது.
 
 
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள்,மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார். அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம் சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள். அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார். அவர் இப்படிச் சொன்னதை அவர் மரித்தோரிலிருந்தெழுந்தபின்பு அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்து, வேதவாக்கியத்தையும் இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித்தார்கள். (யோவான் 2:19-22)

நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார். (யோவான் 10:17-18)
 
 
இயேசு தன்னைத் தானே மரணத்திலிருந்து உயிர்த்தெழ வேண்டுமென்றால் அதற்கு உள்ள ஒரே வழி, அவர் உயிரோடு இருந்தால் தான் முடியும். இது நமக்கு இயேசு கல்லரையில் இருந்த மூன்று நாட்களில் அவர் இல்லாமல் போகவில்லை என்பதை நிருபிக்கிறது. இயேசுவின் தெய்வீகத் தன்மை மற்றும் அவரது மனித ஆன்மா அந்த மூன்று நாட்களும் உயிரோடு முழு உணர்வோடு இருந்தது.( The only way that Christ could be able to raise himself from the dead is if Christ were still consciously alive. This establishes that Christ did not cease to exist for those three days that his body remained in the grave. Both Christ's divine nature and his human soul were still conscious during that period of time.)

 
ஆக, கேட்கப்பட்ட கேள்விக்கான பதில் இதுவே. உண்மைத் தேவனாகிய இறைவன், மூன்று நிகரற்ற ஆள்தத்துவத்துடன் எப்போது வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார். இயேசுவின் சரீரம் கல்லரையில் வைக்கப்படும் போதும் சரி, அந்த சரீரம் கல்லரையில் இருந்த அந்த நாட்களிலும் சரி அவர் உயிரோடு இருக்கிறார். அந்த மூன்று நாட்களிலும் கிறிஸ்து உயிரோடு இருந்து, தன் பிதா பரிசுத்த ஆவியானவருடன் மகிமை வல்லமையுடன் உலகத்தை ஆண்டுக்கொண்டு இருந்தார்.


ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/Shamoun/q_god_dying.htm
 
முகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்
இஸ்லாம் கல்வி தள கட்டுரைகளும், ஈஸா குர்ஆன் பதில்களும்

Isa Koran Home Page Back - Islam Kalvi & Mr. M.M. Akbar's Rebuttals Index  Page

திங்கள், 13 அக்டோபர், 2008

ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)

7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா?
 

இருக்கின்றது, இருக்கிறது, இருக்குது, இருக்கு, இக்குது, இக்கு & கீது


(ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை)
 
முன்னுரை: ஆன்சரிங் இஸ்லாம் தளத்தின் கட்டுரையாகிய‌ "ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா" என்ற ஆங்கில கட்டுரையை தமிழில் மொழிப்பெயர்த்து "ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்" தளத்தில் பதித்தேன். இந்த கட்டுரையைப் பற்றிய விமர்சனத்தை அபூமுஹை அவர்கள் கொடுத்துள்ளார்கள். மற்றும் அவர் குர்‍ஆன் 7 வட்டார மொழிகளில் இறக்கப்பட்டது என்று முதல் வாதத்தையும், பிறகு ஒரே வார்த்தையை வித்தியாசமான இராகத்தில் ஓதுவது தவறல்ல என்று இரண்டு முரண்பட்ட கருத்துக்களைக் கூறியுள்ளார். இந்த தற்போதைய கட்டுரையில் அவரின் வாதத்தின் மூலமாக எழும்பும் பிரச்சனைகளைக் காணலாம்.
 
 
ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் கட்டுரை:ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! (Quran or Qurans?! )

 
 

 
 
1. என் மொழிபெயர்ப்பு பற்றிய அபூமுஹை தள விமர்சனம்:

நான் "100% மொழிபெயர்ப்பு திறமையுள்ள" மொழிபெயர்ப்பாளன் கிடையாது. எனவே, என் மொழிப்பெயர்ப்புக்களில் சில நேரங்களில் ஆங்கிலத்திற்கு நிகரான மொழிபெயர்ப்பு தமிழில் இருப்பதில்லை, இதை நானும் அறிந்திருக்கிறேன், அதனால், தான் ஆங்காங்கே தேவையான இடங்களில் ஆங்கில வரிகளை அப்படியே தமிழாக்கத்தோடு கொடுத்துவிடுகிறேன். என் வரிகள் புரியவில்லையானால், ஆங்கில கட்டுரையை படித்துக்கொள்ளலாம், அதனால் தான் ஆங்கில தொடுப்பையும் கொடுத்துவிடுகிறேன்.

 
["100% சரியாக மொழிபெயர்க்க தெரியாத உனக்கு ஏன் இந்த மொழிபெயர்க்கும் வேலை" என்று சில முஸ்லீம்கள் என்னிடம் கேட்கக்கூடும். இதற்கு பதில் சுலபம், அதாவது, 1% கூட‌ புரியாமல், அரபியில் மட்டும் குர்‍ஆனை படிக்கும் கோடானுகோடி முஸ்லீம்கள் இருக்கும் போது, ஏதோ என்னால் முடிந்த அளவு தமிழில் மொழி பெயர்க்கிறேன். ஆகையால், இஸ்லாமுக்கு பதில் சொல்ல இந்த திறமை போதும் என்பது என் கருத்து]

 
அபூமுஹை தளம்:
 
தெளிவில்லாத விமர்சனத்தைப் பதிவு செய்கிறோம் என்பது அவர்களுக்கே உறுத்தலாக இருப்பதால் 'மிகவும் தெளிவாக உள்ளது' என்று சான்றிதழ் வழங்கிக் கொள்கிறார்கள்.
 
 
ஈஸா குர்‍ஆன்:

 
நான் சொன்னபடி உங்களுக்கு என் தமிழாக்கம் புரியவில்லையானால், ஆங்கிலத்தில் படித்துக்கொள்ளலாம். இந்த கட்டுரையை பொருத்த மட்டில், அரபி மொழியிலும் படித்துக்கொள்ளலாம், உங்களுக்கு அரபி படிக்க புரிந்துக்கொள்ள தெரிந்திருந்தால்.

 
ஆங்கிலக் கட்டுரை: Quran or Qurans?!

அரபிக் கட்டுரை: النسخة العربية

 
நான் எழுதிய தமிழ் வரிகள், அதற்கான மூல ஆங்கில வரிகளை கீழே கொடுத்துள்ளேன்.

//நான் இங்கு என்ன சொல்ல வருகிறேன் என்பது மிகவும் தெளிவாக உள்ளது; அதாவது ஒரே ஒரு குர்‍ஆன் உள்ளது என்று ஒருவரும் சொல்லமுடியாது.//

What I'm trying to say is clear; nobody could say that there is one Quran.
 
 
அபூமுஹை தளம்:
 
நண்பர்களே! உலகில் ஒரே ஒரு குர்ஆன் உள்ளதாக யாரும் சொல்ல மாட்டார்கள்! உலகம் முழுதும் உள்ள குர்ஆன் பிரதிகளை கணக்கிட்டால் பல கோடி குர்ஆன் பிரதிகளை கண்டெடுக்கலாம். விஷயத்துக்கு வருவோம்,
 
ஈஸா குர்‍ஆன்:

 
முஸ்லீம்களும் நகைச்சுவையாக எழுதுவதென்பது மிகவும் சந்தோஷமாக விஷயம். உலகத்தில் அனேக குர்‍ஆன் பிரதிகள் உள்ளது என்கிறீர்கள், ஆனால் அவைகள் அனைத்தும் எழுத்துக்கு எழுத்து மாறாமல் இருக்கின்றதா என்பது தானே இப்போது கேள்வியே?

 
எங்கள் குர்‍ஆன்களில் பல வித்தியாசங்கள் உள்ளது என்று எழுதியதே உங்கள் இஸ்லாமிய அறிஞர்கள் (குவைத் பல்கலைக் கழகத்தில் உள்ள பேராசியர்கள்) தானே.
 
 
இந்த கட்டுரைக்கான விவரங்கள் கீழ் கண்ட புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது:

The reading ways of Quran dictionary: (moa'agim alqera'at alqura'nia):

 
இது ஒரு அரபி மொழியில் எழுதப்பட்ட புத்தகம் மற்றும் இதனை இஸ்லாமிய அறிஞர்கள் எழுதினார்கள். குவைத் பல்கலைக்கழகம்(Kuwait University) இதனை 8 பாகங்களாக வெளியிட்டது. இதன் முதல் பதிப்பு 1982ம் ஆண்டு (அரபியில்) வெளியிடப்பட்டது, இதன் ஆசிரியர்கள்:

 
டாக்டர். அப்துல் அல் சலாம் மக்ரெம் (Dr. Abdal'al Salem Makrem)

டாக்டர். அஹமத் மொக்தார் ஒமர் (Dr. Ahmed Mokhtar Omar)

 
இவர்கள் இருவரும் குவைத் பல்கலைக் கழகத்தில் அரபி மொழி பேராசிரியர்களாக இருக்கிறார்கள்.

 
புத்தக பதிப்பாளர்: ஜத் அல்சலாசல்-குவைத் (Zat Alsalasel – Kuwait)

 
 
 
நான் என் பங்கிற்கு ஒரு வேடிக்கையான ஆனால் உண்மை விவரத்தைச் சொல்கிறேன். உலக முஸ்லீம்கள் குர்‍ஆனை எப்படி மதிக்கிறார்கள், குர்‍ஆன் என்றால் எப்படி இருக்கும் என்று கண்முடித்தனமாக நம்புகிறார்கள் என்பதை இதன் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.

 
என் சொந்தக்காரர் ஒருவர் ஒரு கல்ப் நாட்டில் வேலை செய்கிறார், இரண்டாண்டிற்கு ஒரு முறை ஊருக்கு வருவார். ஒரு முறை அப்படி வந்து இருக்கும் போது, அவர் சில பொருட்களை "அரபி செய்தித்தாளில்" சுற்றி கொண்டு வந்தார். நானும் அப்போது அங்கு இருந்தேன். நான் அந்த செய்தித்தளை எடுத்துக்கொண்டு, அதில் ஒரு சிறிய பகுதியை வெட்டி எடுத்து என் சகோதரிக்கு காட்டினேன். என் சகோதரி குர்‍ஆனை அரபியில் பல முறை படித்துள்ளாள். அந்த வெட்டிய காகிதத்தை கண்டவுடன் பயபக்தியுடன் என்னிடமிருந்து வாங்கிக்கொண்டு அதை பத்திரப்படுத்திக் கொண்டாள். அது என்ன காகிதம் என்று நான் கேட்டேன், அவள் சொன்னாள், அது அல்லாவின் வார்த்தையாகிய குர்‍ஆன் வசனம் என்றாள். நான் பிறகு அவளுக்கு விவரித்தேன், அந்த காகிதம் நம் தமிழ் செய்தித்தாள் தினத்தந்தி போல, அரபி செய்தித்தள் என்றுச் சொல்லி, அந்த மொத்த அரபி செய்தித்தாளையும் காட்டினேன், அவள் தன் அறியாமையை நினைத்து நொந்துப்போனால். இப்படித் தான் உலகமனைத்திலும் உள்ள அரபி பின்னனி இல்லாத இஸ்லாமிய மக்கள் "சிகப்பு சேலை கட்டியவள் எல்லாம் என் மனைவி" என்று ஒருவன் சொன்னானாம், அது போல, அரபியில் இருப்பது எல்லாம் குர்‍ஆன் என்று கருதிக்கொண்டு இருக்கின்றனர். அரபியில் நீ உருப்படமாட்டாய், உன் வீடு உருப்படாது என்பது போல பல மோசமான வார்த்தைகளை எழுதி இப்படிப்பட்டவர்களிடம் கொடுத்தால், அதையும் பத்திரப்படுத்தி பாதுகாப்பாக வைப்பார்கள், நம் இஸ்லாமியர்கள். இதே போலத்தான் தங்கள் வாழ்நாட்கள் அனைத்தும் ஒரு வரியும் புரியாமல் குர்‍ஆனை அரபியில் படித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

சரி வட்டார விஷயத்திற்கு வருகிறேன்.

 
 
அபூமுஹை அவர்களின் வாதம் 1: வட்டார வார்த்தைகள்
 
 
அபூமுஹை அவர்கள் எழுதியது

 
வட்டார மொழி

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாநில மக்களும் பேசுவது தமிழ் என்றாலும் ஒவ்வொரு இடத்திலும் பேசும் தமிழில் வித்தியாசமிருக்கும். இதை வட்டார மொழி என்று சொல்வார்கள். பேசு பொருள் ஒன்றாக இருந்தாலும் பேசும் ஒலியில் ஏற்ற இறக்கமிருக்கும். ஒருவர் தமிழ் பேசுவதை வைத்தே அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று கூறிவிடலாம். இதில் இலங்கைத் தமிழ் வித்தியாசமான தனித் தமிழ் பேச்சாக இருக்கும். பயிற்சி எடுத்தாலே தவிர ஒரு வட்டாரப் பேச்சை இன்னொரு வட்டாரத்தைச் சேர்ந்தவர் பேசுவது கடினம். அந்த அளவுக்கு வட்டார மொழி ஒருவரின் பேச்சில் ஊறிப்போனதாகும்.
 
 
ஈஸா குர்‍ஆன்:

 
மேலே அபூமுஹை அவர்கள் சொல்வதை நான் அங்கீகரிக்கிறேன், ஒரு சில வார்த்தைகள் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் வித்தியாசமாக பேசப்படும், பொருள் ஒன்றாக இருந்தாலும், வார்த்தைகளில் வித்தியாசம் இருக்கும். ஆனால், வட்டார மொழியில் குர்‍ஆனை அல்லா இறக்கினான் என்றுச் சொல்லி, குர்‍ஆனை அபூமுஹை அவர்களே கேலிக்கூத்தாக மாற்றியுள்ளார். வட்டார மொழியெல்லாம் இலக்கணப்படி சரியானதாக இருக்காது.

 
எப்படி என்று கேட்கிறீர்களா? தமிழில் உள்ள வட்டார வார்த்தைகளை உதாரணத்திற்காக எடுத்துக்கொள்வோம். கீழ் கண்ட வார்த்தைகளை பாருங்கள். இவைகள் அனைத்திற்கும் ஒரே பொருள் தான். ஆனால், பல வட்டாரங்களில் அல்லது இடங்களில் பயன்படுத்தப்படுகின்ற வார்த்தைகளாகும். இப்படிப்பட்ட வார்த்தைகளை நாம் அனைவரும் அவ்வப்போது ஆங்காங்கே கேட்டிருப்போம், பேசியும் இருப்போம்.
 
 
1) இருக்கின்றது

2) இருக்கிறது

3) இருக்குது

4) இருக்கு

5) இக்குது

6) இக்கு

மற்றும்

7) கீது

 
வட்டார வார்த்தைகளில் குர்‍ஆன் வசனங்கள்:

அபூமுஹை அவர்கள் வட்டார மொழியில் குர்‍ஆன் இறங்கியது என்ற கருத்திற்காக ஒரு ஹதீஸை மேற்கோள் காட்டினார்.
 
அபூமுஹை தளம்:

"ஒரேயொரு (வட்டார) மொழிவழக்குப்படி ஜிப்ரீல்(அலை) அவர்கள் (குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத்தந்தார்கள். அதை இன்னும் பல(வட்டார) மொழி வழக்குகளின் படி எனக்கு ஓதக் கற்றுத்தருமாறு அவர்களிடம் நான் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். (நான் கேட்க, கேட்க) எனக்கு அவர்கள் அதிகப்படுத்திக்கொண்டே வந்து இறுதியில் ஏழு (வட்டார) மொழி வழக்குகள் அளவிற்கு வந்து நின்றது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறால்கள். (புகாரி, 3219, 4991)
 
 
ஈஸா குர்‍ஆன்:

 
இந்த ஹதீஸ் சரியானதா இல்லையா என்பதை இஸ்லாமியர்கள் ஆராய்ச்சி செய்யட்டும், நமக்கு பிரச்சனை இல்லை. ஆனால், அபூமுஹை அவர்கள் இந்த ஹதிஸை ஆதாரமாக காட்டினபடியால், இந்த ஹதீஸ் உண்மையென்றே கருதி, இதனால் எழும் கேள்விகளைக் காண்போம். குர்‍ஆன் ஒரு இறைவேதம், இலக்கிய நூல்களில் சிறந்தது என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள் இப்படிப்பட்ட வட்டார வார்த்தைகள் தங்கள் வேதத்தில் இருப்பதை ஏற்றுக்கொள்வார்களா? பாமர மக்கள் தங்கள் வழக்கத்திற்கு ஏற்ப இலக்கண முறைக்கு முரணாக சொந்தமாக உருவாக்கிக்கொள்ளும் வார்த்தைகளை இஸ்லாமின் இறைவன் தன் வேதத்திலும் புகுத்துவாரா? என்று இஸ்லாமியர்கள் சிந்திக்கட்டும்.

 
இந்த ஹதீஸின் படி குர்‍ஆன் வசனங்களை ஜிப்ராயீல் தூதன், அரபி வட்டார வழக்கப்படி முகமதுவின் வேண்டுகோளுக்கு இணங்க இறக்கினார் என்று அறிகிறோம்.

 
உதாரணத்திற்கு குர்‍ஆன் 2:115ல் உள்ள வசனத்தை நாம் எடுத்துக்கொள்வோம், நாம் மேலே கண்ட தமிழ் வட்டார வார்த்தைகளை( இருக்கின்றது, இருக்கிறது, இருக்குது, இருக்கு, இக்குது, இக்கு , மற்றும் கீது ) இட்டு இந்த வசனத்தை படித்தால் எப்படி இருக்கும் என்று இக்கட்டுரையை படிக்கும் வாசகர்கள் சிந்திக்கட்டும்.
 
 
குர்‍ஆன் 2:115 கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்) நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்;, எல்லாம் அறிந்தவன்.
 
 
மேற்கண்ட வசனத்தில் "இருக்கிறது" என்ற இடத்தில், இருக்கின்றது, இருக்குது, இருக்கு, இக்குது, இக்கு , மற்றும் கீது என்று மாற்றி படித்துப் பாருங்கள் தமிழ் முஸ்லீம் சகோதரர்களே.

 
இப்படித்தான் அல்லா குர்‍ஆனை பலவிதமான 7 வட்டார மொழிப்படி இறக்கினார் என்று அபூமுஹை சொல்லியுள்ளார். ஒரு எடுத்துக்காட்டிற்காக நான் தமிழ் வட்டார வார்த்தைகளை எழுதினேன், இதே போல அரபியில் இருக்கும் வட்டார வார்த்தைகளில் இறக்கப்பட்டதாக அபூமுஹை அவர்கள் சொல்லியுள்ளார்கள்.

 
வட்டார மொழிகள் உள்ள குர்‍ஆன் இலக்கணப்படி சரியானதா?

 
அரபி இலக்கிய புத்தகங்களிலேயே குர்‍ஆன் ஒன்று மட்டும் தான் அதிக தகுதியுடனும், சிறப்புடனும் உள்ளது. இதன் இலக்கிய அழகிற்கு எதுவுமே ஈடாகாது என்பார்கள் முஸ்லீம்கள். ஆனால், இப்படி வட்டார மொழிகளோடு உள்ள புத்தகம் இலக்கணப்படி சரியானதாக இருக்குமா சிந்தியுங்கள்.

 
நாம் பேசும் போது நம் வழக்கப்படி, நாம் வாழும் வட்டாரப்படி பேசினாலும், எழுதும் போது, இலக்கணப்படி எழுதவேண்டும். உதாரணத்திற்கு, மேற்கண்ட குர்‍ஆன் வசனத்தில், வட்டார வழக்கச் சொற்கள் இட்டு படித்துப்பாருங்கள், எவ்வளவு கொச்சையாக இருக்கும்.
 
 
நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது

நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்குது

நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கு

நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இக்கு

நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் கீது
 
 
தமிழ் வெர்சுவல் பல்கலைக் கழகம் (Tamil Virtual University) என்ற தளத்தில் "செந்தமிழ் சிறப்பு" என்ற கட்டுரையிலிருந்து ஒரு விளக்கம்:
 
 
இருக்குது, இருக்கு, இக்குது, இக்கு, கீது என வெவ்வேறிடத்தில் வெவ்வேறு வடிவில் வழங்கினாலும், ஏடெடுத்தெழுதும் போதும் மேடையேறிப் பேசும் போதும், இருக்கின்றது அல்லது இருக்கிறது என்னும் வடிவையே ஆளவேண்டுமென்பது, தொல்லாசிரியர் கட்டளையிட்ட செம்மையென்னும் வரம்பாம்.

Source: Tamil Virtual University http://www.tamilvu.org/slet/lA46K/lA46Kd11.jsp?id=23

formats mine
 
 
எவ்வளவு வட்டார சொற்கள் இருந்தாலும், மேடையில் பேசும் போதும், புத்தகம் எழுதும் போதும், இலக்கணப்படி சரியாக உள்ள வார்த்தைகளை பேச/எழுத‌ வேண்டும். மேடையில் பேசும் போது, வட்டார வார்த்தைகளைப் பேசினால், அது நகைச்சுவைக்காகவும், கேலிக்காகவும் இருக்குமே ஒழிய அது ஒரு இலக்கணப்படி சரியானதாக இருக்காது.

 
எனவே, இலக்கணத்தின்படி அல்லாமல், கொச்சை மொழிகள் வார்த்தைகள் கொண்ட புத்தகத்தை ஒரு சிறப்புடைய புத்தகம் என்று சொல்லமுடியாது.

 
 
அபூமுஹை அவர்களின் வாதம் 2: ஒரே வார்த்தையை வித்தியாசமான இராகத்தில் ஒலியை நீட்டி, நிறுத்தி ஓதுதல்:
 
 
அபூமுஹை அவர்களின் வாதம்:

 
"தர்ஜீவு" என்பதற்கு மீட்டுதல் என்று பொருளாகும். ஒரு எழுத்தைத் திரும்பத் திரும்ப தொண்டைக்குக்கொண்டு வந்து ஓசை எழுப்பி ஓதுவதாகும். ஆ எழுத்தை ஆ ஆ ஆ என்று இழுத்து ஓதும்போது ஒரே எழுத்தின் ஒலி நீண்டு ஓசை நயத்துடன் ஓதும் முறைக்கு தர்ஜீவு எனப்படும்..

 
பாங்கொலியில் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்... தொழுகையின் அழைப்பை குரல் வளமிக்கவர் நன்றாக நீட்டிச் சொல்லும் போது கேட்க இனிமையாக இருக்கும். எடுத்துக்காட்டாக: நாகூர் ஹனீஃபா என்ற முஸ்லிம் பாடகர் ஒரு பாடலில் பாங்கு சொல்லியிருப்பார் அவரின் கனத்த குரலுக்கு நீட்டி நிறுத்தி சொல்லியிருக்கும் பாங்கை தர்ஜீவு என்று சொல்லலாம்.

 
குர்ஆனை மனனம் செய்தவர்கள் வெவ்வேறு முறைகளில் நீட்டி இழுத்து ஓதியிருக்கிறார்கள். "பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்" என்ற தொடக்க வசனத்தை ஓதி நிறுத்திவிட்டு பின்னர் அல்ஹம்துலில்லாஹி... என்று தொடங்குவது ஒருவகை ஓதல்.

 
"பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீமில்ஹம்துலில்லாஹி..." என்று ஒன்றாகச் சேர்த்து நீட்டி இழுத்து ஓதுவதும் ஒருவகை ஓதல்.

ஒரு வசனத்தையே திரும்பத் திரும்ப ஓதுவதும் ஒருவகை. குரல் வளமிக்கவர்கள் குரலை உயர்த்தி, தாழ்த்தி நீட்டி நிறுத்தி வெவ்வேறு வகையிலும் ஓதிக்கொள்ளலாம் என்பதே பல வகையான ஓதுதல் எனப்படும். எழுவகையான ஓதுதல் என்பது ஓர் அளவுதானே தவிர குர்ஆனை இனிமையாக ஓத முடியுமென்றால் ஏழு முறைக்கும் அதிகமான வட்டார மொழியில் ஓதலாம். அதற்கு தடையேதும் இல்லை. குர்ஆன் இனிமையாக ஓதப்பட்டால் செவி தாழ்த்திக் கேட்பவர்களை அது ஊக்கப்படுத்தும்.

formats mine
 
அபூமுஹை அவர்கள் சொல்வது போல, ஓதும் 7 முறைகளிலும் வார்த்தைகள் ஒன்று தான் "இராகம்" மட்டும் தான் மாறுகிறது என்ற கூற்று தவறானதாகும். அதாவது, இன்றுள்ள இஸ்லாமியர்கள் அங்கீகரித்த ஓதும் முறைகளில் வார்த்தைகளே மாறியிருக்கிறது.ஒரு வேளை, இன்றுள்ள குர்‍ஆன் ஓதும் முறைகளில், வெறும் இராகம் மட்டும் தான் மாறியிருக்குமானால், குவைத் பல்கலைக் கழக பேராசியர்கள் அப்படிப்பட்ட ஒரு புத்தகத்தை எழுதியிருக்கவேண்டிய அவசியமே இல்லை. ஆனால், அவர்கள் எழுதிய‌ விவரங்களின் படி, ஒவ்வொரு ஓதும் முறைக்கு வார்த்தைகள் மாறியுள்ளன, அதே போல பொருளும் மாறுகிறது.

"ஒரு குர்‍ஆனா பல குர்‍ஆன்களா" என்ற கட்டுரையில் உள்ள இரண்டாம் எடுத்துக்காட்டை காண்போமானால், நமக்கு இந்த வித்தியாசம் புரியும்.

கீழே உள்ள எடுத்துக்காட்டில் ஒவ்வொரு ஓதும் முறையிலும் அரபி வார்த்தை மாறியிருப்பதை காணலாம்.
 
 
2. எடுத்துக்காட்டு இரண்டு: சூரா மர்யம் 19:25

[English translation based on the one done by Yusuf Ali.]

* ஹஃப் வார்த்தைகளை இப்படியாக படிக்கிறார்:

And shake towards thyself the trunk of the palm-tree: IT WILL LET FALL fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை:
toosaqit

* ஹம்ஜா, அல்மிஷ்:

And shake towards thyself the trunk of the palm-tree: FALL fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை:
tasaaqat

* அஸ்ஸெம், அல்கிஸய், அல்மிஷ்:

And shake towards thyself the trunk of the palm-tree: IT WILL FALL fresh ripe dates upon thee.

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை:
yassaqat

* அபோ அம்ரொ, அஸ்ஸெம், நஃபி:

And shake towards thyself the trunk of the palm-tree: WILL FALL fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை:
tassaqat

* அபோ நஹிக், அபோ ஹை:

And shake towards thyself the trunk of the palm-tree: IT FALL fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை:
tosqt

 
* அலேரப் a book for Alnahas:

And shake towards thyself the trunk of the palm-tree: WE WILL FALL fresh ripe dates upon thee.

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை:
nosaqit

 
* மஸ்ரோக்

And shake towards thyself the trunk of the palm-tree: IT WILL FALL [someone unknown will let fall] fresh ripe dates upon thee.

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை:
yosaqit

* அபோ ஹையா:

And shake towards thyself the trunk of the palm-tree: IT FALL fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை:
tasqwt

* அபோ ஹையா

And shake towards thyself the trunk of the palm-tree: FALL fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை:
yasqwt

 
* அபோ ஹையா

And shake towards thyself the trunk of the palm-tree: IT WILL FALL one by one] fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை:
tatasaqat

* அபோ அல்ஸ்மல்:

And shake towards thyself the trunk of the palm-tree: FALLING fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை:
yosqt

Source: ஒரு குர்‍ஆனா பல குர்‍ஆன்களா

மேலே உள்ள எடுத்துக்காட்டுக்களை பாருங்கள், அபூமுஹை அவர்கள் சொல்வது போல, ஒரே வார்த்தையை பல இராகங்களில் ஓதுவது போல உள்ளதா? கண்டிப்பாக இல்லை, ஒவ்வொரு ஓதும் முறையிலும் வார்த்தை வித்தியாசமாக உள்ளது. இந்த எடுத்துக்காட்டுக்கள் அனைத்தும், குவைத் பலகலைக் கழக பேராசியர்கள் எழுதிய புத்தகத்திலிருந்து எடுத்ததுதான்.

 
அபூமுஹை அவர்களின் முரண்பட்ட இரண்டு வாதங்கள்:

 
அபூமுஹை முதலில் 7 வட்டார வார்த்தைகளில் குர்‍ஆனை இறக்கினார் என்றார், வட்டார வார்த்தைகளில் வித்தியாசம் இருக்கும் என்றார், ஆனால்,தன் இரண்டாவது வாதத்தில் குர்‍ஆனை 7 ஓதும் முறை என்பது, ஒரே வார்த்தையை அழகிற்காகவும், இராகத்திற்காகவும், நீட்டியும், நிறுத்தியும் குர்‍ஆனை வாசிப்பதைத் தான் "குர்‍ஆனை ஓதும் 7 முறைகள்" என்கிறார். இதில் எது சரி, எது தவறு?

 
அவர் சொன்ன இரண்டு விவரங்களை விவரங்களை கீழ் கண்ட பட்டியலில் காணலாம்.
 
 
(A)

7 வட்டார வித்தியாசமான வார்த்தைகள்
(B)

ஒரே வார்த்தையை இராக‌த்திற்காக‌ ப‌ல‌ வ‌கைக‌ளில்(பொதுவாக‌ 7 முறையில்) ஓதுத‌ல்
1) இருக்கின்றது 1) அல்லாஹு அக்பர்
2) இருக்கிறது 2) அல்ல்ல்லாஹு அக்பர்
3) இருக்குது 3) அல்லா.......ஹு அக்பர்
4) இருக்கு 4) அல்லாஹூ...... அக்பர்
5) இக்குது 5) அல்லாஹு அக்க்க்பர்
6) இக்கு 6) அல்லாஹு அக்ப......ர்
7) கீது 7) அல்லாஹு அக்பர்ர்ர்ர்ர்ர்ர்
 
 
அன்பான அபூமுஹை அவர்களே, உங்கள் கட்டுரையின் ஆரம்பத்தில், மேலே உள்ள பட்டியலில் (A) பத்தியில் சொல்லப்பட்டது போல, 7 வட்டார மொழிகளில் இறங்கியது என்றீர்கள். பிறகு, அதே கட்டுரையில் (B) என்ற பத்தியில் உள்ளது போல, அழகிற்காக நாங்கள் குர்‍ஆனை பல வகைகளில் ஒரே வார்த்தையை படிப்போம் என்றுச் சொல்லியுள்ளீர்கள்.

 
ஆனால், இன்றுள்ள குர்‍ஆன்களில் (A) என்ற பத்தியில் உள்ளது போல, வார்த்தைகள் வித்தியாசங்கள் உள்ளன, நீங்கள் சொல்வது போல, ஒரு வார்த்தையை வித்தியாசமாக படிப்போம் என்பது போல இல்லை. எனவே, யார் யாருக்கு எப்படி எழுத தோன்றியதோ அது போல, குர்‍ஆனின் வார்த்தைகளில் விளையாடியிருக்கிறார்கள் இஸ்லாமியர்கள்.

 
இதில் முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், வெறும் வார்த்தைகளில் வித்தையாசங்கள் இருப்பதோடு மட்டுமில்லாமல், இன்னும் அனேக வித்தியாசங்கள் கீழ்கண்ட பட்டியலில் குறிப்பிட்டது போல‌ குர்‍ஆன்களில் உள்ளது.
 
 
எனக்கு அடிக்கடி முஸ்லீம்கள் சொல்வார்கள், அதாவது பல குர்‍ஆன்களில் இருக்கும் இந்த வித்தியாசங்கள் வெறும் சப்தங்களில் இருக்கும் வித்தியாசமே(dialect or pronunciation) அன்று வேறில்லை என்பார்கள். ஆனால், உண்மையில் இது வெறும் சப்தங்களில் இருக்கும் வித்தியாசம் இல்லை. இதைப் பற்றி ஆய்வு செய்தவர் இஸ்லாமிய அறிஞராகிய சுபி அல்-சாலிஹ் என்பவராவார். அவர் இந்த வித்தியாசங்களை ஏழு வகைகளாக பிரிக்கிறார்[3].

1. இலக்கண குறியீடுகளில் இருக்கும் வித்தியாசங்கள்.

2. மெய் எழுத்துக்களில் இருக்கும் வித்தியாசங்கள்.

3. பெயர்ச் சொற்களில் இருக்கும் வித்தியாசங்கள், அதாவது அவைகள் ஒருமையா, இரட்டையா அல்லது பன்மையா, ஆண்பாலா அல்லது பெண்பாலா போன்றவைகளில் இருக்கும் வித்தியாசங்கள்.

4. ஒரு வார்த்தைக்கு பதிலாக இன்னொரு வார்த்தையை பயன்படுத்துமிடத்தில் இருக்கும் வித்தியாசங்கள்.

5. ஒரு வாக்கியத்தில் உள்ள வார்த்தைகளை இடம் மாற்றும் விதத்தில் உள்ள வித்தியாசங்கள். அரபி மொழியில் பொதுவாக இப்படி வார்த்தைகளை எதிரமறையான ஒழுங்கில் அமைப்பது உள்ளது.

6. அரபியர்களின் பழக்கவழக்கங்களினால், சில சிறிய எழுத்துக்களை கூட்டுதல் மற்றும் குறைத்தலில் உள்ள வித்தியாசங்கள்.

7. எழுத்துக்களில் வைக்கும் புள்ளிகளினால் மாறும் சப்தங்களில் உள்ள வித்தியாசங்கள்.

மேலே நாம் பார்த்த பட்டியல் வெறும் சப்தங்களில் வரும் வித்தியாசங்களைச் சொல்லவில்லை, அதற்கும் மேலே இன்னும் பல வித்தியாசங்கள் குர்‍ஆனில் இருப்பதை தெளிவாக காட்டுகிறது.

Source: பல விதமான அரபி குர்‍ஆன்கள் (THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR'AN)

FootNote:
[3] Subhii al-Saalih, Muhaahith fii `Ulum al-Qur'aan , Beirut: Daar al-`Ilm li al-Malaayiin, 1967, pp. 109ff.
 
முடிவுரை: அன்பான இஸ்லாமியர்களே, நீங்கள் நினைத்துக்கொண்டு இருப்பது போல, குர்‍ஆனில் ஒரு எழுத்துகூட மாறவில்லை, வசனங்கள் மாறவில்லை என்று நீங்கள் நம்புவது வெறும் உங்கள் அறிஞர்கள் உங்களுக்குச் போதித்துக்கொண்டு இருக்கும் தவறான விவரங்களாகும். உண்மையில் அப்படி இல்லை, மேலும் அறிய கீழ் கண்ட தமிழ் கட்டுரைகளை படித்துப்பாருங்கள்.

 
குர்‍ஆன் பற்றிய இதர கட்டுரைகள்:
குர்‍ஆன் பாதுகாக்கப்பட்டதா? (Is the Quran Preserved?)

ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! (Quran or Qurans?!)

குர்‍ஆனில் உள்ள எழுத்துப்பிழைகள் (Scribal Errors in the Quran)

பல விதமான அரபி குர்‍ஆன்கள் (THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR'AN)

சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் ஒப்பீடு (சமர்கண்ட் MSS VS 1924 எகிப்திய வெளியீடு)

ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌

விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?

இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம் 

 

சனி, 11 அக்டோபர், 2008

இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்

இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்

 

சஹிஹ் முஸ்லீம் (Sahih Muslim, Book 8, Number 3421)

 
ஆயிஷா அவர்கள் கூறியதவது: பத்து முறை பால்கொடுத்து விட்டால் திருமணம் நியாயமற்றதாகிவிடும் என்று குர்‍ஆனில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. பின்னர் இது இரத்து செய்யப்பட்டு(Abrogate or Substitute) ஐந்து முறையாக குறைக்கப்பட்டது. அல்லாவின் தூதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) மரிக்கும் காலத்திற்கு முன்பு வரையிலும் இந்த வசனம் குர்‍ஆனில் இருந்தது (மற்றும் முஸ்லீம்களால் ஓதப்பட்டும் வந்தது)
 
 
ஏன் இந்த வசனம் இன்றைய குர்‍ஆனில் இல்லை? ஏன்? எங்கே போனது இந்த வசனம்?

 
பால் ஊட்டுதல் பற்றிய மேலதிக விவரங்களை அறிய இங்கு சொடுக்கவும்.

 
 


குர்‍ஆன் பற்றிய இதர கட்டுரைகள்
முகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்

வெள்ளி, 10 அக்டோபர், 2008

விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?

விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம்
குர்‍ஆனில் இல்லை ஏன்
 

The Verse of Stoning
 

சஹிஹ் புகாரி (Sahih Bukhari, Volume 8, Book 82, Number 816)

 
பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6829

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

உமர்(ரலி) கூறினார்: காலப் போக்கில் மக்களில் சிலர் 'இறை வேதத்தில் கல்லெறி (ரஜ்கி) தண்டனை காணப்படவில்லையே?' என்று கூறி, இறைவன் அருளிய கடமை ஒன்றைக் கைவிடுவதன் மூலம் வழிதவறி விடுவார்களோ என நான் அஞ்சுகிறேன். அறிந்து கொள்ளுங்கள்: திருமணமான ஒருவர் விபசாரம் புரிந்து, அதற்கு சாட்சி இருந்தாலோ, கர்ப்பம் உண்டானாலோ, ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது நிச்சயமாகும்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 'அறிந்து கொள்ளுங்கள்! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கல்லெறி தண்டனை நிறைவேற்றினார்கள். அவர்களுக்குப் பின் நாங்களும் அதனை நிறைவேற்றினோம்' (என்றும் உமர்(ரலி) கூறினார்). இவ்வாறுதான் நான் மனனமிட்டுள்ளேன். (இதே விவரமுள்ள ஹதீஸை இங்கே (Vol. 8, No. 817 and Vol. 9, No. 424;) மற்றும் சஹீஹ் முஸ்லீம் ஹதீஸில் இங்கே(No. 4194) பார்க்கலாம்)
 
விபச்சார குற்றத்திற்கு தண்டனையாக உள்ள இந்த "கல்லெறிந்துக் கொள்ளுதல்" வசனம், குர்‍ஆனில் இல்லை? ஏன்?

 
இந்த தலைப்பு பற்றிய மேலதிக விவரங்களை ஜான் கில்கிறைஸ்ட் அவர்களின் "Jam' al-Qur'an" என்ற கட்டுரையிலும், சாம் ஷமான் அவர்களின் கட்டுரையாகிய "Islam and Stoning: A Case Study Into the Textual Corruption Of the Quran" என்ற கட்டுரையிலும் படிக்கலாம். மற்றும் ஜான் பர்டன் அவர்களின் "The Collection of the Qur'an" என்ற கட்டுரையில், இஸ்லாமிய ஆரம்ப கால இஸ்லாமிய அறிஞர்களின் மேற்கோள்களின் சுருக்க பட்டியலிலும் காணலாம்.
 
ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/Quran/Text/stoning.html

குர்‍ஆன் பற்றிய இதர கட்டுரைகள்
முகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்

Source: http://www.answering-islam.org/tamil/quran/stoning.html
 

ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!

ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌

(Sura 2:238 is not complete according to Aisha)
 


 
 
ஆயிஷா அவர்களிடமிருந்தும், அபூ யூனுஸ் மூலமாக, அல்-ககா இபின் ஹகீம் மூலமாக ஜையத் இபின் அஸ்லம் மூலமாக மாலிக் மூலமாக யஹ்யா மூலமாக எனக்கு அறிவிக்கப்பட்டது (Yahya related to me from Malik from Zayd ibn Aslam from al-Qaqa ibn Hakim that Abu Yunus, the mawla of A'isha,) உம்-அல்-மூமினீன் கூறியதாவது,


ஆயிஷா தனக்கு ஒரு குர்‍ஆன் எழுதித் தரும்படி எனக்கு ஆணையிட்டார்கள். மேலும் "தொழுகையையும் மதியத் தொழுகையையும் கவனமாக கடைபிடித்து அல்லாவுக்கு கீழ்படிவாயாக" என்ற ஆயத்தை நீ அடையும்போது எனக்கு தெரியப்படுத்து என்று கூறினார்கள். நான் அதை எட்டியபோது ஆயிஷா அவர்களிடம் கூறினேன், அவர்கள், "தொழுகையையும் மதியத் தொழுகையையும் அஸர் தொழுகையையும் கவனமாக கடைபிடித்து அல்லாவுக்குக் கீழ்படிவாயாக" என்று ஒப்புவித்து, இப்படி எழுதும் படி கூறினார்கள். மற்றும் "நான் இதை அல்லாவின் தூதரிடமிருந்து கேட்டேன் அல்லா அவருக்கு சமாதானம் அருளுவானாக. என்று கூறினார்கள்."
 
 
 
அமர் இபின் ரபி மூலமாக ஜையத் இபின் அஸ்லம் மூலமாக, மாலிக் மூலமாக, யஹ்யா மூலமாக அறிவிக்கப்பட்டது(Yahya related to me from Malik from Zayd ibn Aslam that Amr ibn Rafi said)

நான், உம்-அல்-மூமினீன், ஹப்ஸாவிற்காக ஒரு குர்‍ஆன் எழுதிக் கொண்டிருந்தேன், அவர்கள் என்னிடம், நீ "தொழுகையையும் மதியத் தொழுகையையும் கவனமாக காத்துக்கொண்டு அல்லாவுக்கு கீழ்படிந்து இரு" என்ற‌ ஆயத்தை எட்டும்போது எனக்கு தெரியப்படுத்து, என்றுச் சொன்னார்கள். நான் அதை எட்டினபோது அவருக்கு அறிவித்தேன், அவர்கள். "தொழுகையையும் மதியத் தொழுகையையும் அஸர் தொழுகையையும் கவனமாகக் காத்து அல்லாவுக்கு கீழ்படிந்திரு." என்று ஒப்புவித்தார்கள்.
 
ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/Quran/Text/2.238.html

  

 

வியாழன், 9 அக்டோபர், 2008

அமெரிக்காவில் இருக்கும் முஸ்லிம்களுக்கு ஓர் பகிரங்கக் கடிதம்

அமெரிக்காவில் இருக்கும் முஸ்லிம்களுக்கு ஓர் பகிரங்கக் கடிதம்


An open letter to Muslims in the U.S.

 
இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எனக் கருதப்படுவோரால் அரங்கேற்றப்பட்ட அமெரிக்கா மீதான சமீபத்திய வெறித்தனமான தாக்குதல்கள் அமெரிக்காவில் வாழும், மற்றும் வந்து போகும் முஸ்லீம்களின் மீது கவனத்தை ஈர்த்துள்ளது. இத்தகைய தாக்குதல்களை நடத்தியவர்கள் பெருவாரியான முஸ்லீம்களின் பிரதிநிதிகள் அல்ல‌ என்று சரியாகக் கணிக்கப்பட்டுள்ளது. உண்மை இவ்வாறிருப்பினும், அமைதியை விரும்பும் முஸ்லிம்களுக்கு எதிராக அமெரிக்காவில் ஆங்காங்கே சிற்சில தாக்குதல்கள் நடந்துள்ளன‌. முஸ்லிம்க‌ளுக்கு எதிரான‌ இத்த‌கைய‌ புரிந்துகொள்ளுத‌ல‌ற்ற மனிதாபிமானத்திற்கு எதிரான‌ செய‌ல்க‌ள் நாக‌ரீக‌ம் அற்ற‌தும் ம‌ன்னிக்க ‌முடியாத‌தும் ஆகும்.
 


எனினும், இத்தகைய கண்டனங்கள் சில நாட்களாகவே மீண்டும் மீண்டும் வந்துகொண்டிருக்கின்றன. பொறுமையோடிருக்க வலியுறுத்தும் இத்தகைய கண்டனங்களின் மத்தியில் நான் கேள்விப்படாதது என்னவென்றால், அமைதியை விரும்பும் முஸ்லீம்கள் சமீபத்திய கொடுமைகளினால் ஏற்பட்ட‌ முஸ்லிம்களுக்கு எதிரான‌ ஒரு த‌வ‌றான பொது அபிப்பிராய‌த்தை எதிர்கொள்ளும்படி இக்கொடுமையை நிறைவேற்றியவர்கள் தங்கள் செயல்கள் தவறானது எனப் புரிந்து கொள்ளும் வகையில் எதிர் நடவடிக்கையாக ஒரு ஆக்க‌பூர்வ‌மான‌ செயல்களை முஸ்லீம்கள் ஏற்படுத்தினார்களா? என்று கவனித்தால், இல்லை என்பது தான் பதிலாக உள்ளது.

 
மத சுதந்திரமுடைய மேலைநாட்டு ஜனநாயக நாடுகளில் வசிக்கும் முஸ்லிம்கள், இத்தகைய மேலை நாடுகளிடமிருந்து உரிமையுடன் எதிர்பார்க்கும் அதே பொறுமையை முஸ்லிம்கள் பெரும்பான்மையாய் வசிக்கும் நாடுகளும் கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்த அனைவரும் காணும்படி வெளிப்படையான தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். சௌதி அரேபியா போன்ற முன்னேற்றமான இஸ்லாமிய நாடுகளில் கூட அடிக்கடி இஸ்லாம் தவிர வேறு மதங்களுக்கு மாறுபவர்கள் மீது ப‌கிர‌ங்க‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ள் கொடுமைகள் எடுக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. சௌதி அரேபியாவில் ம‌த‌ம் மாறுத‌ல் த‌ண்ட‌னைக்குரிய‌ குற்ற‌ம்; அதிலும் இஸ்லாமிலிருந்து வேறு ம‌த‌த்திற்கு மாறினால் அது ம‌ர‌ணதண்டனைக்கு ஏதுவான‌ குற்ற‌ம். இத‌ற்கு ம‌றுப‌க்க‌மாக, வேறு மதங்களிலிருந்து இஸ்லாமுக்கு மாறுவ‌தில் த‌டையேதுமில்லை. சூடான், பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் போன்ற பல நாடுக‌ளில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. மாற்று ம‌த‌ ந‌ம்பிக்கையாள‌ர்க‌ள் சாதார‌ண‌மாக‌வே தொடர்ச்சியாக‌ சிறைப்ப‌டுத்த‌ப் ப‌டுகிறார்க‌ள்; பெரும்பான்மையானோர் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற அற்ப காரணத்திற்காகவே ம‌ர‌ண‌த்தைத் த‌ழுவுகிறார்க‌ள்.

சகிப்புத்தன்மை மிக்க நாடுகளில் வசித்துக்கொண்டு முழூ மத‌ சுதந்திரத்திரத்தை முற்றிலும் அனுபவிக்கும் முஸ்லிம்களில் ஐம்பது சதவிகிதத்தினராவது தங்களது சொந்த நாடுகளுக்கு இது பற்றி உணர்வு பூர்வமாகக் கடிதங்கள் எழுதும் பணியினைச் செய்வார்களா? இஸ்லாமிய அருட்பணியாளர்களாகிய இமாம்கள், சகிப்புத்தன்மையோடு வாழ்தல் பற்றி முறையாகத் தம் மக்களுக்குப் தொடர்ந்து போதித்தால் எப்படி இருக்கும்? எந்த ஒரு இஸ்லாமிய நாட்டிலும் இஸ்லாமியரல்லாதோர் ஒருவர் தேவதூஷணம் சொன்னார் என்றோ அல்லது இஸ்லாமிலிருந்து ஒருவர் விலகினார் என்பதாலேயோ தண்டிக்கப்படும் போது ஆயிரக்கணக்கான முஸ்லீம் மக்கள் ஒன்றுகூடி அந்த நாட்டின் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து மறுப்புத் தெரிவித்தால் என்ன? இத்தகைய நெருக்கடிகள் ஒரு சிறிய‌ மாற்றத்தையாவது கொண்டுவரும் என்பது உறுதி, சில சமயங்களில் அதிக மாற்றத்தையும் கொண்டுவரும். சக இஸ்லாமியரால் ஏற்படுத்தப்படும் இத்தகைய நெருக்கடி, மாற்று மதத்தினரிட‌மிருந்து வரும் கண்டணங்க‌ளை விட முஸ்லீம்களுக்கு அதிக ஏற்புடையதாய் இருக்கும். முஸ்லீம்களின் இத்தகைய நடவடிக்கை, எல்லா முஸ்லீம்களுமே தீவிரவாதிகள் தான் என்கின்ற கண்ணோட்டத்தை உடைய‌வர்களை நிச்சயம் வாயடைக்கும்.
 
 
Doug Fattig
Byron, MN
Phone: 507 775 6429
e-mail: beanfarm@sparc.isl.net
Sept. 20, 2001

 
இஸ்லாமிய நாடுகளில் முஸ்லீமல்லாதவர்களுக்கு எதிராக முக்கியமாக கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்துக் கொண்டு இருக்கும் கொடுமைகள் பற்றியும், வன்முறைகள் பற்றியும் உங்களுக்கு சரியான விவரம் தெரியவில்லையானால் "Project Openbook" என்ற தளத்தில் சென்று படிக்கவும், உங்களுக்கு அதிக விவரங்கள் கிடைக்கும்.

ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/openletter_df.html
 
 
இஸ்லாம் மற்றும் தீவிரவாதம் பற்றிய இதர கட்டுரைகள்


முகப்புப் பக்கம்: ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்

இஸ்லாமியர்கள் பைபிளை வாசிக்கும் போது எவற்றை மனதில் கொள்ளவேண்டும்?

பைபிளை வாசித்தல் 


Reading the Bible

 
நீங்கள் பைபிளை வாசிக்கத் தயாராய் இருக்கிறீர்கள், நல்லது. உங்களிடம் ஒரு முழு வேதாகமம் (பைபிள்) இருக்கலாம் அல்லது இயேசுவைப் பற்றிக் கூறும் பகுதி மட்டும் இருக்கலாம். கிறிஸ்துவர்கள் இதைப் புதிய ஏற்பாடு என்றும் முந்தைய‌ பகுதியை ப‌ழைய ஏற்பாடு என்றும் அழைப்பார்கள். இந்தப் பெயர்கள் மிக‌ முக்கியமான அர்த்தத்தைக் கொண்டவை. தேவன் மனிதர்களுடன் சரித்திர காலங்கள் முழுவதும் உடன்படிக்கைகளை (Agreements/Testaments) ஏற்படுத்திக்கொள்கிறார். அவர் பல வழிகளில் தம்மை யார் என்று மனிதனுக்கு வெளிப்படுத்தி தம் கட்டளைகளை நாம் நம்பிக்கையுடனும் கீழ்ப்படிதலுடனும் கடைப்பிடிக்க ஆணையிடுகிறார்.


பைபிளைப்பற்றி முதலாவதாக நாம் விளங்கிக்கொள்ள வேண்டியது என்னவென்றால், அமைப்பினால் பைபிள் குர்‍ஆனிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதே. குர்‍ஆன் ஷரீப்பின் வசனங்கள் அல்லாவின் நேரடிப் பேச்சு போன்று கொடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் அது முகமது மூலமாக வெளிவந்ததாயினும் அவர் இவ்விடத்தில் பாயும் நீரின் தன்மை மாறாமல் கொண்டுச் செல்லும் வாய்க்கால் போன்று சித்தரிக்கப்படுகிறார்.

இத‌ற்கு மாறாக‌ ப‌ரிசுத்த‌ வேதாக‌ம‌ம் ஒரு சில‌ வ‌ருட‌ங்க‌ளிலோ ஒரே ந‌ப‌ராலோ எழுத‌ப்ப‌ட‌வில்லை. அது பல நூற்றாண்டுகளில் பற்பல வேறுபட்ட நபர்களால் எழுதப்பட்டது. இதில் தேவன் பல சமயங்களில் நேரடியாகவும் சில சமயங்களில் பரிசுத்தவான்களின் சிந்தனைகள் வார்த்தைகள் மூலமும் பேசுகிறார். அவர் சரித்திரபூர்வமாகவும், குறிப்பாக இயேசு கிறிஸ்து வழியாகவும் பேசுகிறார்.

பைபிளை வாசிக்கும்போது நாம் தேவனின் வார்த்தையின் சாரத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் இந்த வித்தியாசத்தை நாம் மனதில் கொள்ள வேண்டும். பைபிள் குர்‍ஆனைப் போன்றே இருக்கும் என நாம் எதிர்பார்த்தால் நாம் ஏமாற்றத்துக்கு உள்ளாவோம். எனினும் திறந்த மனதுடன் நாம் பைபிளை வாசிப்போமானால் நாம் ஆச்சரியப்படும் விதத்தில் தேவன் நம்மோடு ஒரு புதுமைமிக்க‌ வல்லமையான வழியில் பேசுவார்.

குர்‍ஆனைப் போல் அல்லாது, பைபிள், கடவுளின் சட்டத்தையே முக்கியப் பொருளாகக் கொண்டதல்ல. எனினும் அதில் பல பகுதிகள் தேவனின் மகத்துவத்தையும் வல்லமையையும் பற்றி உண்மையில் குறிப்பிடத்தான் செய்கின்றன. தேவன் இந்த உலகத்தினைப் படைத்த ஒரு வல்லமையான படைப்பாளி என்ற செய்தியுடன் பைபிள் தொடங்குகிறது (ஆதியாகமம் : 1 ஆம் அதிகாரம்). அடுத்து ஆதாமும் ஏவாளும் பாவம் செய்து அவருடனான நெருங்கிய தொடர்பை இழக்கும்போது அவரது தூய்மையையும் பரிசுத்தத்தையும் நாம் காண்கிறோம். அடுத்து வரும் "சரித்திர நூல்"களில் இஸ்ரவேல் மக்கள் தங்களிலும் தங்களின் எதிரிகளிலும் தேவனின் நியாயத்தீர்ப்பு எவ்விதம் செயல்பட்டது என உணர்வதைப் பார்க்கிறோம். அவர் எவ்விதம் அவர்களது வாழ்வின் நடைமுறைகளுக்கான கட்டளைகளைக் கொடுத்தார் (குறிப்பாக பத்துக்கட்டளைகள்) என அறிகிறோம்.(யாத்திராகமம் 20)

எனினும், பைபிள் வெளிப்படுத்தும் தேவனின் மிக முக்கியமான தனமைகள் இவை அல்ல. அது மனிதர் மீது அவர் பொழியும் மாசற்ற அன்பு மட்டுமே. அதாவது பாவத்தில் ஆழ்ந்த இஸ்ரவேல் மக்களின் மீது அவர் கொண்ட பொறுமையான அன்பே ஆகும். அது பிரத்தியோகமான வழிகளில் தம்மைப் புரிந்துகொண்ட நோவா, ஆபிரகாம், மோசே, யோபு, தாவீது போன்றோர்களைத் தெரிந்தெடுத்தது அவரது தூய‌ அன்பே.

பழைய உடன்படிக்கையில், தேவன், அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களிடம் எவ்வளவு முறை நெருங்கி வந்தார் என்றும் அவர்களோ அவருக்குக் கீழ்படியாமல் அவரை விட்டு எத்துனை முறை விலகிச் சென்றார்கள் என்பதையும் காண்கிறோம். இதனால் தேவன் இறுதியாக மனிதர்களால் மீறப்பட்ட உடன்படிக்கையை நிறைவேற்றவும், அதனை தொடரச்செய்து புதிய உடன்படிக்கையைக் கொண்டு வருகிறார். இம்முறை அவர் அதை பாவமுள்ள பலவீனமான மனிதர்களின் கீழ்ப்படிதல் மூலமாக அல்லாமல், பரலோகத்தினின்று இறங்கிய இரட்சகராகிய மேசியா(மஸீஹா)வின் மூலம் ஸ்தாபிக்கிறார். இந்த மேசியா, தீர்க்கதரிசனங்களின் மூலம் பல முறை முன்னறிவிக்கப்பட்டவர். இப்போது அவர் உன்னதமான ரோம சாம்ராஜ்ஜியத்தில் உள்ள ஒரு பின் தங்கிய பகுதியில் ஒரு ஏழைவீட்டில் ஒரு சாதாரண தச்சனின் மகனாகப் பிறந்தார். ஆம், தேவன் மகத்துவமும் மகா வல்லமையும் கொண்டவர் தான், ஆனாலும் அவர் தமது வல்லமையினாலும், மகத்துவத்தினாலும் நாம் முற்றியும் அழிந்துப் போகாதபடி அவரை இனம் கண்டுகொள்ளும் பொருட்டு அவற்றை மறைத்து வெளிப்பட்டார்.

புதிய ஏற்பாட்டை நாம் வாசிக்கும்போது நமது மனதில் தவறான பார்வை எதுவும் ஏற்பட்டு விடாதபடி நாம் எச்சரிக்கையாய் இருத்தல் அவசியம். இயேசு ஒரு சாதாரண மனிதர் அல்லது ஒரு நபி மட்டுமே எனச் சொல்வோமானால், நாம் முற்றிலும் அவரைப் புரிந்துகொள்ளவே மாட்டோம். அவர் மனிதனை விடவும் மேன்மை பொருந்தியவர் என்றும் ஒரு நபி (தீர்க்கதரிசி / Prophet)யைவிட மேலானவர் என்றும் பைபிள் நமக்குக் காட்டுகிறது. புதிய ஏற்பாடு அவரைப்பற்றிக் கூறும் செய்திகள் அனைத்தையும் முற்றிலும் நீங்கள் வாசிக்கும் வரைக்கும் அவரைப்பற்றி மனதில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதில் ஒரு முடிவிற்கு வராமல் இருங்கள். குறிப்பாக இரட்சிப்பு பற்றி அவர் சொல்லிய வார்த்தைகளை கவனமாய் தியானியுங்கள். அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட அவரது ஊழியர்கள் அவரைப்பற்றிக் கூறியவைகளைச் சிந்தியுங்கள். பைபிளின் சீரிய நோக்கம் தேவ கட்டளைகளை நமக்குக் கொடுப்பதோடு மட்டும் நின்று விடாமல் ஒரு உன்னதமானவரை, அதாவது ஒருபோதும் நமக்கு நாமே கூடச் செய்ய முடியாதவைகளைச் செய்யக்கூடிய ஒருவரிடம் நம்மை அறிமுகப்படுத்துகிறது.

இந்த‌ இயேசு கிறிஸ்துவானவர், புதிய‌ ஏற்பாட்டில் ம‌ட்டுமின்றி ஒரு வகையில் ப‌ழைய‌ ஏற்பாட்டிலும் கூடப் பேச‌ப்ப‌டும் ஒரு மைய‌க்க‌ருத்தான‌வ‌ர் ஆவார். ப‌ழைய‌ ஏற்பாடு அவர் பூமியில் தோன்றிய காலத்திற்குப் ப‌ல‌ நூற்ற‌ண்டுக‌ளுக்கு முன்பே எழுதப்ப‌ட்டிருந்த‌ போதிலும் அவ‌ரைப்ப‌ற்றிய‌ ப‌ல‌ குறிப்புக‌ள் அதில் காண‌ப்ப‌டுகின்ற‌ன‌. உதார‌ண‌மாக‌ யோசேப்பின் வாழ்க்கையில் அவ‌ர‌து அடிச்சுவட்டை நாம் காண‌ முடியும். இஸ்ர‌வேல‌ரின் ப‌லியிடும் முறை ந‌ம‌து பாவ‌ங்க‌ளுக்கான‌ த‌ண்டனைக்குரிய‌ ப‌ரிகாரத்தின் தேவையை ந‌ம‌க்கு விள‌க்குகிற‌து. தீர்க்க‌த‌ரிசிக‌ளும் கூட‌ ந‌ம‌க்காகப் பாடுப‌ட்டு ந‌ம்மை இறுதி வெற்றி வ‌ரை வ‌ழிந‌டத்தி அவரது ஆவிக்குரிய நித்திய ராஜ்ஜியத்தில் சேர்த்துக்கொள்ள வ‌ருகின்ற‌ ஒருவ‌ரைப் ப‌ற்றிப் பேசுகிறார்க‌ள்.

இவை அனைத்தும் புதிய‌ ஏற்பாட்டில் நிறைவேறுகின்ற‌ன‌. அதில் அவ‌ர‌து வாழ்க்கையைப் ப‌ற்றின‌ நான்கு வகையான‌ பார்வைக‌ள் கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ (ம‌த்தேயு, மாற்கு, லூக்கா ம‌ற்றும் யோவான் சுவிசேஷ‌ங்க‌ள்). அத‌ன் பின்பு அவ‌ர‌து (நேரடி சீடர்களின்) அடியார்க‌ளின் ச‌ரித்திர‌மும் (அப்போஸ்தலர் நடபடிகள்) அதைத் தொடர்ந்து அவ‌ர்க‌ள‌து போத‌னைக‌ளும் (புதிய‌ ஏற்பாட்டின் பிற்ப‌குதியில்) உள்ள‌ன‌.

ஆம், பைபிள் குர்‍ஆனிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது. அத‌னுடைய‌ ச‌ரித்திரம் வித்தியாசமானது; அதன் நோக்கம் வித்தியாசமானது. அத‌ன் மைய‌க்க‌ருத்து வித்தியாசமானது. ப‌ல்வேறு காலங்களைச் சார்ந்த புத்த‌க‌ங்க‌ளின் தொகுப்பாய் ஒரு நூலகமாய் இருந்த‌போதும் ஒரே புத்த‌க‌மாக‌ ஒரே தொனியில் தேவ‌னின் குர‌லை எடுத்துரைக்கிற‌து. நீங்கள் பைபிளைப் படிக்கும் போது அது உங்க‌ளிட‌மும் பேச‌ட்டும்! "தேவ‌னே, உம்மை என‌க்கு வெளிப்ப‌டுத்தும்" என‌ ஜெபியுங்க‌ள். நீங்கள் க‌ருத்துட‌ன் ஜெபிக்கும் பட்சத்தில் அவர் உங்களின் இந்த‌ ஜெப‌த்திற்கு நிச்சயம் ப‌தில‌ளிப்பார்.

ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/Bible/reading.html


 
 
முகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்