ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

 1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
 2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
 3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
 4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
 5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
 6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
 7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
 8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
 9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
 10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
 11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
 12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
 13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
 14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
 15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
 16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
 17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
 18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
 19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
 20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
 21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
 22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
 23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
 29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
 30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
 31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
 32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
 33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
 34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
 35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
 36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
 37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
 38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
 39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
 40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
 41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
 42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
 43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
 44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
 45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
 46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
 47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
 48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
 49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
 50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
 51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
 53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
 54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
 55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
 56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
 57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

 1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
 2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
 3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
 4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
 5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
 6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
 7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
 8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
 9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
 10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
 11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
 12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
 13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
 14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
 15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
 16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
 17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
 18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
 19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
 20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
 21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
 22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
 23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
 24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
 25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
 26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
 27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
 28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
 29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
 30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
 31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
 32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
 33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
 34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
 35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
 36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
 37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
 38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
 39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
 40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
 41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
 43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
 44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
 45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
 46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
 47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
 48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
 49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

செவ்வாய், 27 அக்டோபர், 2015

மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை

மக்காவின் பிரச்சனை 4

ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை

முன்னுரை: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல என்பதைப் பற்றி தொடர் கட்டுரைகளை பார்த்துக் கொண்டு இருக்கிறோம். முந்தைய கட்டுரைகளை படிக்க சொடுக்கவும்:

மக்காவின் பிரச்சனைகள் – அறிமுகம்12 & 3

இப்போது மக்காவின் நான்காவது புவியியல் பிரச்சனையைக் காண்போம். 

மக்காவின் பிரச்சனை 4


மக்கா பள்ளத்தாக்கில் உள்ளது என்று குர்-ஆனும் ஹதீஸ்களும் தெளிவாக கூறுகின்றன. மேலும், காபாவிற்கு பக்கத்தில் ஸஃபா மர்வா மலைகளுக்கு இடையே நீரோடை உள்ளது என்றும் சொல்கின்றன. இவைகளை கீழ்கண்ட குர்-ஆன் வசனத்திலும், ஹதீஸ்களிலும் காணலாம்.

1) மக்கா பள்ளத்தாக்கில் உள்ளது

குர்-ஆன் 48:24

அவனே, மக்காவின் பள்ளத்தாக்கில், அவர்களின் கைகளை உங்களை விட்டும், உங்களின் கைகளை அவர்களை விட்டும் தடுத்தான். அந்நிலையில் அவர்களின் மீது உங்களுக்கு வெற்றியையும் கொடுத்திருந்தான். மேலும், நீங்கள் செய்துகொண்டிருந்தவை அனைத்தையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருந்தான். (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்)

குர்-ஆன் 14:37

"எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியாரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே! - தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தாட்டுவதற்காகக் குடியேற்றியிருகின்றேன்; எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக!"

புகாரி ஹதீஸ்கள்:

4972. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் 

நபி(ஸல்) அவர்கள் (மக்காவின்) பள்ளத்தாக்கு நோக்கிக் கிளம்பிச் சென்று (அங்குள்ள 'ஸஃபா' எனும்) அந்த மலை மீதேறி, 'யா ஸபாஹா! (இதோ, அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!) என்று கூவியழைத்தார்கள். . . . .. Volume :5 Book :65

2731. & 2732.  . . .

மேலும், 'குறைஷிகளில், முஸ்லிமாக நபி(ஸல்) அவர்களிடம் வருகிறவர் அச்சமின்றி இருக்கலாம் (அவரை எங்களிடம் திருப்பியனுப்பி வேண்டாம்)" என்று கூறிவிட்டனர். அப்போதுதான் அல்லாஹ், 'அவனே மக்காவின் பள்ளத்தாக்கில் அவர்களின் கைகள் உங்களுக்கெதிராக உயர்வதையும் தடுத்துவிட்டான்; . . . . Volume :3 Book :54

3364. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: 

. . . பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் (அவர்களை அஙகேயே விட்டு விட்டு தமது ஷாம் நாட்டிற்கு) திரும்பிச் சென்றார்கள். அப்போது அவர்களை இஸ்மாயீலின் அன்னை ஹாஜர் (அலை) அவர்கள் பின்தொடர்ந்து வந்து இப்ராஹீமே! மனிதரோ வேறெந்த பொருளுமோ இல்லாத இந்தப்பள்ளத்தாக்கில் எஙகளை விட்டு விட்டு நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று கேட்டார்கள். இப்படி பல முறை அவர்களிடம் கேட்டார்கள். . . . . . எஙகள் இறைவா! (உன் ஆணைப்படி) நான் என் மக்களில் சிலரை இந்த வேளாண்மையில்லாத பள்ளத்தாக்கில் கண்ணியத்திற்குரிய உன் இல்லத்திற்கு அருகில் குடியமர்த்திவிட்டேன். . . .Volume :4 Book :60 (மேலும் பார்க்க புகாரி எண் 3365)

2) ஸஃபா, மர்வாவுக்கிடையே நீரோடை உள்ளது:

காபாவிற்கு அருகில் இருக்கும் ஸஃபா மற்றும் மர்வா என்ற இரண்டு மலை(குன்று)களுக்கு இடையே ஒரு நீரோடை இருக்கிறது என்று கீழ்கண்ட புகாரி ஹதீஸ்கள் கூறுகின்றன. 
நீரோடை பகுதியில் விரைந்து ஓடும் முஹம்மது:

1617. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் முதல் வலம்வரும்போது முதல் மூன்று சுற்றுக்களில் ஓடுவார்கள். பிந்திய நான்கு சுற்றுக்களில் நடப்பார்கள். மேலும் ஸஃபா, மர்வாவுக்கிடையே உள்ள நீரோடைப் பகுதியில் மட்டும் விரைந்து ஓடுவார்கள். Volume :2 Book :25

1644. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள், கஅபாவை முதல் வலம்வரும்போது மூன்று சுற்றுக்களில் வேகமாக ஓடுவார்கள்; நான்கு சுற்றுக்களில் நடப்பார்கள். மேலும், ஸஃபா - மர்வாவுக்கிடையே வலம்வரும்போது ஓடைப் பகுதியில் மட்டும் ஓடுவார்கள். . . . . . Volume :2 Book :25

3) குன்றுகளுக்கு மத்தியில் நீரோடை இருப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? 

மேலே பார்த்த இரண்டு ஹதீஸ்களை கவனிக்கும் போது, அவைகள் ஒரு வித்தியாசமான வர்ணனையை தருவதை காணமுடியும்.

ஹதீஸ்களை நன்றாக கவனியுங்கள், முஹம்மது அவர்கள்:
 • ஸஃபா மர்வாவுக்கிடையே உள்ள நீரோடைப் பகுதியில் மட்டும் விரைந்து ஓடுவார்கள்
 • ஸஃபா மர்வாவுக்கிடையே வலம்வரும்போது ஓடைப் பகுதியில் மட்டும் ஓடுவார்கள்
அதாவது, ஸஃபா மர்வா மலைகளுக்கு இடையே ஒரு நீரோடை இருந்திருக்கிறது, இந்த ஓடையின் வழியே மட்டுமே முஹம்மது ஓடுவார் என்று குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ளது. இந்த ஹதீஸ்களில் சொல்லப்பட்ட நீரோடைகள் பற்றிய புவியியல் விவரங்களை சரியாக புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, கீழ்கண்ட படங்களை பதித்துள்ளேன்:

4) ஹதீஸ்கள் சொல்லும் வர்ணனை இதுவா? (படம் 1)

ஹதீஸ்களை கவனிக்கும் போது, இரண்டு மலைகளுக்கு மத்தியிலே நீரோடை கீழ்கண்டவாறு ஓடவில்லை என்பதை புரிந்துக் கொள்ளலாம். 

படம் 1: ஹதீஸ்கள் மேற்கண்ட நீரோடையை கூறவில்லை

பொதுவாக எல்லா இடங்களிலும் இரண்டு மலைகளுக்கு இடையே நீரோடை அல்லது ஆறுகள் ஓடும். ஆனால், இந்த ஹதீஸ்கள் வேறு வகையில் சொல்கின்றன.

5)  ஹதீஸ்கள் சொல்லும் வர்ணனை இது தான் (படம் 2)

இரண்டு மலைகளுக்கு மத்தியிலே நீரோடை கீழ்கண்டவாறு செல்கிறது, இது அபூர்வம் தான், உலகில் சில இடங்களில் மட்டுமே இப்படி நீரோடை செல்லும், அதாவது ஒரு மலையிலிருந்து இன்னொரு மலைக்கு நீரோடை செல்கிறது.

படம் 2: 

மக்காவில் ஸஃபா மர்வா மலைகளுக்கு இடையே சயீ செல்லும் போது, முஸ்லிம்கள் ஸஃபாவிலிருந்து மர்வாவிற்கும், அதன் பிறகு மர்வாவிலிருந்து ஸஃபா மலைக்கும் ஓடுவார்கள், இப்படி ஏழு முறை செய்வார்கள். இவ்விரு மலைகளுக்கு இடையே 300 மீட்டர் இடைவெளி உள்ளது. ஏழு முறை முஸ்லிம்கள் சயீ செய்தால், அவர்கள் கிட்டத்தட்ட 2.1 கிலோ மீட்டர் (1.3 மைல்) தூரம் நடப்பார்கள்/ஓடுவார்கள். இந்த எண்ணிக்கை நமக்கு அடுத்த கட்டுரைகளின் கருப்பொருளுக்கு உதவியாக இருக்கும்.[2]


படம் 3: ஸஃபா மர்வா மலைகளுக்கு இடையே சயீ செய்தல்

6) சௌதியின் மக்காவிற்கு பொருந்தாத, ஸஃபா மர்வா நீரோடை புவியியல் விவரங்கள்

மேற்கண்ட ஹதீஸ்கள் மிகவும் முக்கியமான ஹதீஸ்கள் ஆகும். இவைகளில் காணப்படும் வர்ணனைகளை கவனிக்கும் போது, அவைகள் சௌதியின் மக்காவை குறிப்பதாக தெரியவில்லை. ஸஃபாவிலிருந்து ஒரு நீரோடை புறப்பட்டு, மர்வாவை நோக்கி ஓடியுள்ளது அல்லது மர்வாவிலிருந்து ஒரு நீரோடை புறப்பட்டு ஸஃபாவை நோக்கி ஓடியுள்ளது. இது தான் புகாரி ஹதீஸ்கள் சொல்லும் விவரம். 

7) தற்கால மக்காவில் இம்மலைகளை எங்கே காணலாம்?

கீழ்கண்ட படம் கூகுள் எர்த்லிருந்து எடுக்கப்பட்டது (அக்டோபர் 2015). நன்றாக கவனிக்கவும், ஸஃபா மற்றும் மர்வா மலைகள் (குன்றுகள்) எவ்வளவு சிறியவைகளாக இருக்கின்றன? இந்த படத்தில் அவைகள் எங்கே காணப்படுகின்றன?


படம் 4: கூகுள் எர்த் படம்

மேற்கண்ட படத்தில் ஸஃபா மர்வா மலைகள் நம் கண்களுக்கு தெரியவில்லை, காரணம் அவைகள் காபாவின் வெளிப்புற கட்டிடத்திற்குள் அடங்கிவிட்டது.  இஸ்லாமியரல்லாதவர்கள் மக்காவிற்கு போக முடியாது என்பதால், இம்மலைகளின் படங்கள் மற்றும் வீடியோக்கள் சிலவற்றை இங்கு தருகிறேன். இப்படங்கள் நம்முடைய கட்டுரைகளை புரிந்துக் கொள்ள உதவியாக இருக்கும்.


படம் 5: ஸஃபாவிலிருந்து சயீ ஆரம்பிக்கும் இடம்


படம் 6: மர்வாவின் மீது உட்கார்ந்திருக்கும் மக்கள்

ஸஃபா மர்வாவின் சிறிய வீடியோக்கள்:

இச்சிறிய வீடியோக்களை பாருங்கள். இந்த இரண்டு மலைகள் எவ்வளவு சிறியவைகளாக இருக்கின்றன என்பதை கவனியுங்கள். நம்முடைய அடுத்த கட்டுரையை சரியாக புரிந்துக் கொள்ள இந்த வீடியோக்கள் உதவியாக இருக்கும்.

 1. Safa Marwa (Sahie) Area, Makkah (Saudi Arab) 
 2. Safa Marva (full HD)  
 3. Safa Marwa Security Glass Broken by one Pilgrim  (இந்த விடியோ இங்கு பதிப்பதின் நோக்கம், ஒரு மனிதன் எவ்வளவு சுலபமாக இந்த மலையில் ஏறலாம் என்பதை காட்டுவதற்காகும்)

இம்மலைகள் காபாவைச் சுற்றியுள்ள வெளிப்புற கட்டிடங்களின் உள்ளே அடங்கிவிட்டதை பாருங்கள். இவைகளிலிருந்து நீரோடைகள் புறப்படுமா? இதற்கான அறிகுறி மற்றும் சாத்தியம் ஏதாவது தெரிகின்றதா? 

சிந்திக்கவேண்டிய விஷயங்கள்: 

1) ஒரு பெரிய பள்ளத்தாக்கில் புனித நகரம் (மக்கா? / பெட்ரா?) இருந்திருக்கிறது.

2) காபாவின் அருகில் ஒரு பக்கம் ஸஃபா மலையும், இன்னொரு பக்கம் மர்வா மலையும் இருந்திருக்கிறது. முஸ்லிம்கள் புனித பூமி என்று நம்பும் சௌதியின் மக்காவில் உள்ள இவ்விரண்டு மலைகளுக்கு இடையே உள்ள தூரம் 300 மீட்டர்கள் ஆகும். ஒரு முஸ்லிம் ஏழு முறை இவ்விரண்டு மலைகளுக்கு மத்தியில் ஓடும்போது, அவர் 2.1 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கிறார். இந்த விவரம் நமக்கு அடுத்தடுத்த கட்டுரையை படிக்கும் போது உபயோகமாக இருக்கும்.

3) ஒரு மலையிலிருந்து இன்னொரு மலைக்கு நேராக, நீரோடை ஓடிக்கொண்டு இருந்திருக்கிறது. 

4) இந்த ஓடையில் தான் முஹம்மது சயீ செய்யும் போது ஓடியிருந்திருக்கிறார். 

5) பொதுவாக, நீரோடை  ஒரு மலையிலிருந்து செல்லவேண்டுமென்றால், அது மிகப்பெரிய மலையாக இருக்கவேண்டும். மழை பெய்யும் போது, பல இடங்களிலிருந்து வரும் மழை நீர் ஒன்றாக சேர்ந்து அருவியாக மாறி மலையிலிருந்து இறங்கிவரும்.  இப்படிப்பட்ட நிலை, ஸஃபா மர்வா போன்ற சிறிய குன்றுகளுக்கு இருக்கின்றதா என்பதை பாருங்கள்?

6) ஸஃபா மர்வாவிற்கு இடையில் எப்படி நீரோடை வந்தது?  இந்த கேள்விக்கு முஸ்லிம்கள் தான் பதில் சொல்லவேண்டும்.

முடிவுரை: புகாரி ஹதீஸ்கள் 1617 & 1644 சொல்லும் விவரங்கள், தற்போது நாம் காணும் மக்காவின் ஸஃபா மர்வா மலைகளுக்கு பொருந்துவதில்லை என்பதை நாம் அறிந்துக் கொள்ளலாம். இதே விவரங்கள் பெட்ரா என்ற நகரத்துக்கு சரியாக பொருந்துவதை நாம் "பெட்ரா" பற்றி எழுதும் போது பார்ப்போம். 

அடுத்த மக்கா பிரச்சனையில் சந்திப்போம்.

அடிக்குறிப்புகள்

The Masjid al-Haram houses the Kaaba, the focal point of prayer for all Muslims. Safa — from which the ritual walking (Arabicسعىsaʿy) begins — is located approximately 100 m (330 ft) from the Kaaba. Marwah is located about 350 m (1,150 ft) from the Kaaba. The distance between Safa and Marwah is approximately 300 m (980 ft), so that seven trips amount to roughly 2.1 km (1.3 mi). The two points and the path between them are now inside a long gallery that forms part of the Masjid.
இந்த [2] அடிக்குறிப்பு 29-அக்டோபர்-2015ம் தேதி அன்று சேர்க்கப்பட்டது. 

மக்காவின் பிரச்சனைகள் பற்றிய கட்டுரைகள் 

வெள்ளி, 23 அக்டோபர், 2015

மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?


முன்னுரை: "இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!" என்ற தொடரின் முந்தைய கட்டுரைகளை படிக்கவும்:

இந்த நான்காவது கட்டுரையில், இஸ்லாமின் புனித நகரம் மக்காவிற்கு உள்ள மற்றொரு பிரச்சனையை காண்போம். 

மக்காவின் பிரச்சனை 3

முற்காலத்திய வரைபடங்களில் காணப்படாத மக்காவின் பெயர்:

மக்கா ஒரு வியாபார நகரம். பல செல்வ செழிப்பான வியாபாரிகள் வாழ்ந்த நகரம். முஹம்மதுவின் சித்தப்பா அபூ தலிஃப் மற்றும் முஹம்மதுவின் மனைவி கதிஜா போன்றவர்கள் செல்வந்தர்களாக இருந்த நகரம். இஸ்லாமுக்கு முன்புலிருந்து மக்கா வணிக மக்கள் நிறைந்த நகரமாக இருந்தது. முஹம்மதுவின் காலத்துக்கு முன்புலிருந்தே, மக்கள் புனித யாத்திரைக்காக வந்துச் செல்லும் நகரம் மக்கா ஆகும்.  

ஆனால், இப்படிப்பட்ட நகரம் அக்கால வியாபாரிகளின் வரைப்படங்களில் காணப்படவேண்டும் என்பது சாதாரணமாக எல்லாரும் எதிர்ப்பார்க்கும் ஒன்றாகும். 

வியாபாரிகளின் வரைபடங்களில் தங்கள் வழிப் பிரயாணத்தின் போது வரும் ஒவ்வொரு கிராமத்தின் பெயரும், நகரத்தின் பெயரும் குறிக்கப்படவேண்டும் என்று கட்டாயமில்லை. ஆனால், வியாபாரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களின் பெயர்கள் கட்டாயம் இருக்கவேண்டும்.  மேலும் வணிகக்கூட்டம் தங்கள் வழிப்பிரயாணங்களில் எந்தெந்த இடங்களில் (நகரங்களில்) தங்கி தாங்கள் மற்றும் தங்கள் ஒட்டகங்கள் இளைப்பாற வேண்டும் என்ற விவரம் வரைப்படங்களில் இருக்கும். ஆனால், ஒரு முக்கியமான மற்றும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், கி.பி 900க்குள் உருவாக்கப்பட்ட எந்த ஒரு வரைப்படத்திலும் "மக்கா"வின் பெயர் காணப்படவில்லை என்பது தான். கி.பி 900 என்பது முஹம்மது மரித்த பிறகு கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் ஆகும் (முஹம்மது மரித்த வருடம் கி.பி. 632).

இதைப் பற்றி ஆசிரியர் கிப்சன் கீழ்கண்டவாறு கூறுகிறார்:

பல ஆண்டுகளாக அரேபியாவின் புராதன நிலப்படங்களை நான் சேகரித்தேன். அவைகளை மிகவும் ஜாக்கிரதையாக மொழியாக்கம் செய்தேன். ஆனால், அவைகள் ஒன்றிலும் மக்காவின் பெயர் காணப்படவில்லை. தொலெமி (Ptolemy) என்பவரின் அரேபிய நிலப்படத்தை இதற்கு ஒரு எடுத்துக் காட்டாக கொள்ளலாம். அடுத்த பக்கத்தில் இந்த வரைபடத்தில் காணப்படும் இடங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் மக்காவின் பெயர் ஒரு இடத்தில் கூட வருவதில்லை. இதுமட்டுமல்ல, கி.பி. 740 வரையுள்ள எந்த ஒரு ஆவணத்திலும் (புத்தகத்திலும்), மக்காவின் பெயர் ஒருமுறை கூட வருவதில்லை. அதாவது ஹிஜ்ரா நடந்து 122 ஆண்டுகள் வரை, எந்த ஒரு நூலிலும் மக்கா என்ற பெயரில் ஒரு ஊர் இருந்ததாக குறிப்பு இல்லை. கி.பி. 740ல் மக்கா என்ற பெயர் முதன் முதலாக "Continuatio Byzantia Arabica" என்ற நூலில் காணப்படுகிறது.

Over the years I have gathered copies of many ancient maps of Arabia and have diligently had them translated and transcribed, but never once did I find Mecca mentioned on an early map. An often quoted example of this is Ptolomy's map of Arabia. Some of the locations are transcribed on the map on the next page. Mecca is never shown, and indeed the mention of Mecca does not appear in any literature prior to 740 AD (approximately 122 years after the Hijra) when it first appears in the Continuatio Byzantia Arabica. (See page 267 and Appendix A, page 396) (Quranic Geography, Page: 224, Chapter: CHAPTER SIXTEEN - MECCA & THE HOLY CITY) [1]

பக்கம் 225ல், ஆசிரியர் கீழ்கண்ட விவரங்கள் கொண்ட ஒரு படத்தை கொடுத்துள்ளார். ஆசிரியரின் அனுமதியின்றி அவரது படத்தை பதிக்கக்கூடாது என்பதால், நான் அதனை இங்கு பதிக்கவில்லை.

Above: Some of the locations mentioned by Ptolemy. A similar and more complete map can be found in Hitti's "History of the Arabs," Eighth Edition, p 47.

தொலெமியின் வரைபடத்தில் உள்ள இடங்களை பார்க்க விரும்புகிறவர்கள், ஆசிரியரின் "குர்-ஆனிக் ஜியோகிராஃபி" என்ற புத்தகத்தை வாங்கி பக்கம் 225ஐ பார்க்கவும் அல்லது "ஹிஸ்டரி ஆஃப் த அரப்ஸ்" என்ற புத்தகத்தின் எட்டாவது பதிப்பை வாங்கி, பக்கம் 47ஐ பார்க்கவும்.

இந்த வரை படங்களில் அனேக இடங்களின் பெயர் உள்ளதே தவிர, மக்காவின் பெயர் மட்டும் காணப்படவில்லை. இதன் அர்த்தமென்ன? மக்கா என்பது ஒரு புகழ்பெற்ற அல்லது மக்கள் அதிகம் உள்ள நகரமாக இருக்கவில்லை என்பது தான். 

சிந்திக்கவேண்டிய விஷயங்கள்:

1. குர்-ஆன் மற்றும் இஸ்லாமின்படி, மக்கா என்பது பல செல்வ செழிப்புள்ள வியாபாரிகள் இருந்த முக்கியமான நகரம்.

2. முஹம்மதுவின் காலத்துக்கு முன்புலிருந்தே இந்த நிலை இருந்தது.

3. ஆனால், அக்காலத்தில் வரையப்பட்ட நிலப்படங்களில் (Map), முக்கியமான அரேபிய நகரங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன, ஆனால், மக்கா என்ற பெயர் மட்டும் காணப்படவில்லை.

4. இது ஒரு புறமிருக்க, வரை படங்களில் மட்டுமல்ல, இதர நூல்களிலும், மக்கா என்ற பெயர் கி.பி. 740வரை ஒரு முறை கூட கணப்படவில்லை. இது மக்கா மீது மிகப் பெரிய சந்தேகத்தை உண்டாக்குகிறது. அதாவது முஹம்மதுவிற்கு பிறகு 122 ஆண்டுகளுக்குள் எழுதப்பட்ட எந்த ஒரு புத்தகத்திலும் "மக்கா" என்ற பெயரில் ஒரு ஊர் இருந்ததாக எந்த தகவலும் இல்லை.

5. இது எப்படி சாத்தியமாகும்? முஹம்மது 570ல் பிறக்கிறார், 610ல் தன்னை நபியாக பிரகடனம் செய்கிறார், 632வரை பல போர்களை புரிந்து பல இடங்களை பிடிக்கிறார். அவர் மரித்த பிறகு, நான்கு கலிஃபாக்களின் காலத்தில் அரேபியா முழுவதும் கிட்டத்தட்ட இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வருகிறது. அடுத்த 100 ஆண்டுகளில் எழுதப்பட்ட எந்த புத்தகத்திலும் "மக்கா" என்ற பெயர் இல்லை. இது எப்படி சாத்தியம்?

6. இதன் படி பார்த்தால், இஸ்லாம் சொல்லும் மக்கா வேறு, நாம் இன்று கருதும் மக்கா வேறு. முஹம்மது பிறந்தது மக்காவில் அல்ல, இஸ்லாம் உருவானது மக்காவில் அல்ல, முஹம்மது கைப்பற்றியது மக்கா அல்ல. அதுவேறு ஒரு நகரமாக இருந்திருக்கவேண்டும், அது குர்-ஆன் சொல்வது போல, செல்வ செழிப்புள்ள வியாபாரிகளைக் கொண்ட நகரமாக இருந்திருக்கிறது. நகரங்களின் தாயாக (உம்முல் குரா) இருந்திருக்கிறது. அந்த நகரம் அனைத்து வியாபாரிகளின் வரைபடங்களில் முக்கிய இடத்தை பிடித்திருக்கவேண்டும். அதுதான் பெட்ரா நகரம் என்று ஆசிரியர் கிப்சன் கூறுகிறார். 

7. கடைசியாக, கி.பி. 900க்குள் வரையப்பட்ட எந்த ஒரு நிலப்படத்திலும், மக்காவின் பெயர் ஒரு முறை கூட குறிப்பிடப்படவில்லை. இது நமக்கு எதைக் காட்டுகிறது, முஹம்மது பிறந்து 300 ஆண்டுகளுக்குள் மக்கா ஒரு வியாபார நகரமாக கருதப்படவில்லை என்பது தான்.

ஆபிரகாம் மற்றும் இஸ்மவேலின் காலத்தில் மக்கா:

கி.மு. 2000 -1900 காலகட்டத்தில், ஆபிரகாம் இஸ்மவேலையும், ஆகாரையும் விட்டுச் சென்ற இடம் இன்றுள்ள மக்கா என்று இஸ்லாம் சொல்கிறது. மனித நடமாட்டமில்லாமல் இருந்த இடத்தில் ஆகாரும், இஸ்மலேலும் வாழ்ந்தார்களாம், இதர மக்களும் அங்கு வந்து சேர்ந்தார்களாம், அந்த இடம் தான் மக்காவாம். அப்படியானால், ஒரு இடம் 2600 ஆண்டுகளாக (ஆபிரகாமிலிருந்து முஹம்மதுவரை) மக்களால் சூழ்ந்து இருந்திருந்தால், அது எவ்வளவு பெரிய பட்டணமாக இருந்திருக்கவேண்டும்? அதன் பெயர் பலவாறு பரவியிருந்திருக்கவேண்டும். ஆனால், சரித்திர ஆய்வு செல்லும் விவரங்களைப் பார்த்தால், முஹம்மதுவிற்கு நூறு ஆண்டுகளுக்கு பிறகு, யாரோ ஒருத்தர் (அது யார் என்று அடுத்தடுத்த தொடர் கட்டுரைகளில் காண்போம்), எங்கேயோ (பெட்ராவில்) உருவான இஸ்லாமை கொண்டு வந்து, இன்று மக்கா என்று நம்பும் இடத்தோடு ஒட்டவைத்திருக்கிறார். இந்த தவறு சரித்திர ஆதாரங்களை பார்க்குபோது நமக்கு தெரிகிறது. இன்னும் பல ஆதாரங்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

முடிவுரை: இஸ்லாம் உருவான இடம் மக்கா அல்ல என்பதைப் பற்றி இது வரை மூன்று பிரச்சனைகளை பார்த்துள்ளோம். இன்னும் பல முக்கியமான பிரச்சனைகளை அடுத்தடுத்த கட்டுரைகளில் நாம் காண்போம். குர்-ஆன் மற்றும் ஹதீஸ்களில் சொல்லப்பட்ட "புவியியல்" சம்மந்தப்பட்ட விவரங்கள் அனைத்தும் இன்றுள்ள மக்காவிற்கு பொருந்துவதாக இல்லை, அது ஜோர்டானில் இருக்கும் பெட்ராவிற்கு சரியாக பொருந்துகிறது. 

அடுத்த மக்கா பிரச்சனையில் சந்திப்போம், அது வரை மேலே சொல்லப்பட்ட விவரங்களை சிறிது ஆய்வு செய்து பாருங்கள்.

அடிக்குறிப்புகள்:

[1] https://en.wikipedia.org/wiki/Ptolemy

[2] https://en.wikipedia.org/wiki/Ptolemy%27s_world_map

[3] உலகத்தை மாற்றிவிட்ட 12 வரைபடங்கள் (12 Maps That Changed the World)

மக்காவின் பிரச்சனைகள் பற்றிய கட்டுரைகள் 

உமரின் இதர கட்டுரைகள்

Source: http://www.answeringislam.org/tamil/authors/umar/mecca_petra/mecca_problem_3.html


மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?


முன்னுரை: "இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!" என்ற தொடரின் முந்தைய இரண்டு கட்டுரைகளை படிக்கவும்:

தற்போதைய கட்டுரையில், குர்-ஆன் கூறும் மக்கா ஏன் இன்றுள்ள சௌதி அரேபியாவில் உள்ள மக்கா இல்லை என்பதற்கு சரித்திர ஆசிரியர் கிப்சன் சொல்லும் இரண்டாவது ஆதாரத்தைக் காண்போம்.

மக்கா பிரச்சனை 2

புனித நகரம் மக்காவிலிருந்து பல வியாபார கூட்டங்கள் புறப்பட்டதாகவும், அதே போல, வியாபார கூட்டம் மக்காவிற்கு வந்ததாகவும் நாம் இஸ்லாமிய நூல்களில் வாசிக்கிறோம்.   முஹம்மதுவின் உறவினர் மற்றும் பாதுகாவலர் அபூ தலிஃப் ஒரு வியாபாரியாக இருந்தார் என்பதும், அவர் பல முறை வியாபார கூட்டங்களை மக்காவிலிருந்து அனுப்பினார் என்றும் நாம் வாசிக்கிறோம் (இப்னு இஷாக், பக்கம் 79). முஹம்மது திருமணம் செய்துக் கொண்ட கதிஜா அவர்களும் ஒரு வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருந்த செல்வ செழிப்பான ஒரு பெண்மணி தான். கதிஜா அவர்களின் வியாபாரத்தையும் முஹம்மது கவனித்து வந்துள்ளார், அதன் பிறகு தான் திருமணம் செய்துக் கொண்டார் (இப்னு இஷாக், பக்கம் 82).

மக்கா வறட்சியான இடம்:

மேலும், முஹம்மது மதினாவிற்கு இடம்பெயர்ந்த பிறகு, மதினாவை ஒட்டி மக்காவினரின் வியாபாரக் கூட்டம் செல்லும் போது, அவர்களை கொள்ளையிட முஹம்மது சென்றார், இந்த வியாபார கூட்டத்தில் ஒரு முறை மூன்று ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இருந்தார்கள் (தபரி, வால்யூம் 7, பக்கம் 110). இவைகளையெல்லாம் கவனித்தால், வியாபாரிகள் செல்லும் வழியில் மக்கா ஒரு நல்ல மைய இடமாக இருந்திருக்கிறது என்று நமக்கு தோன்றுகிறது, மேலும் முஸ்லிம்கள் இப்படியே நம்புகிறார்கள். ஆனால், சரித்திர ஆசிரியர்கள் வேறு விதமாக சொல்கிறார்கள். 

டாக்டர் பட்ரீஷியா க்ரோன் (Dr. Patricia Crone) என்ற சரித்திர ஆசிரியர் கீழ்கண்ட விதமாக கூறுகிறார் (இதனை கிப்சன் தம்முடைய புத்தகத்தில் பக்கம் 223ல் மேற்கோள் காட்டுகிறார்):

"மக்கா ஒரு வறண்ட மற்றும் வளமற்ற இடம் ஆகும், இப்படிப்பட்ட வறண்ட இடங்களில் வியாபாரிகள் தங்கி இளைப்பாறமாட்டார்கள். அதற்கு பதிலாக பக்கத்திலேயே நல்ல பச்சையான தாவரங்கள் இருக்கும் இடத்தில் தங்குவார்கள். வியாபார கூட்டம் வளம் நிறைந்த இடமாகிய தயிஃப் என்ற இடத்தில் தங்கி இளைப்பாராமல், ஏன் வளமற்ற இடமாகிய மக்காவில் தங்கி தங்களுக்கு துன்பத்தை வருவித்துக் கொள்வார்கள்?  மக்காவில் ஒரு கிணறு உள்ளது, மற்றும் காபா போன்ற வணக்கஸ்தலமும் உள்ளது, ஆனால், தயிஃப் என்ற இடத்திலும் இவ்விரண்டும் உள்ளது, அதே நேரத்தில் நல்ல உணவும் அங்கு கிடைக்கும். எனவே, வியாபார கூட்டம் மக்காவில் தங்குவதற்குச் செல்லமாட்டார்கள். (Crone, 1987 page 6-7; Crone-Cook, 1977, page 22)

"Mecca was a barren place, and barren places do not make natural halts, and least of all when they are found at a short distance from famously green environments. Why should caravans have made a steep descent to the barren lands of Mecca when they could have stopped at Tā'if? Mecca did, of course, have both a well and a sanctuary, but so did Tā'if, which had food supplies, too". (Crone, 1987 page 6-7; Crone-Cook, 1977, page 22)

மேலும், ஆசிரியர் க்ரோன் இப்படி ஒரு கேள்வியை கேட்கிறார்:

"அரேபியாவில் அப்படி என்ன பொருட்கள் விளைகிறது, அவைகளை மிகத்தொலையில் உள்ள இடங்களுக்கு கொண்டுச் சென்று, விற்று இலாபம் சம்பாதிப்பதற்கு?  முக்கியமாக, தங்கள் நகரத்தை செழிப்பாக்குவதற்கு, இப்படிப்பட்ட வரட்சியான பிரதேசங்களின் வழியாகச் சென்று, பொருட்களை விற்று இலாபம் சம்பாதிக்கும் படி அரேபியாவில் எப்படிப்பட்ட பொருட்கள் விளைந்தன? (Crone, 1987, page 7)

Furthermore, Dr. Crone asks, "What commodity was available in Arabia that could be transported such a distance, through such an inhospitable environment,and still be sold at a profit large enough to support the growth of a city in a peripheral site bereft of natural resources?" (Crone, 1987, page 7) 

இஸ்லாமிய காலத்தின் அரபியர்கள் சாம்பிராணி, மற்றும் இதர வாசனை பலசரக்கு பொருட்களை (spices) கொண்டுச் சென்று வியாபாரம் செய்தார்கள் என்று முஸ்லிம்களும் இதர மேற்கத்திய அறிஞர்களும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், கிஸ்டர் மற்றும் ஸ்பெரென்ஜர் அவர்களின் ஆய்வின் படி, வாசனைப் பொருட்களை அரேபிய வியாபாரிகள் விற்பது பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நின்று விட்டது, மேலும் இஸ்லாமிய காலத்தில் அரபியர்கள் தோல் மற்றும் உடைகள் போன்ற பொருட்களையே வியாபாரம் செய்தார்கள். எனவே ஒரு நகரம் சர்வதேச அளவில் வியாபார மைய ஸ்தலமாக மாறுவதற்கு இப்பொருட்கள் (தோல் மற்றும் உடைகள்) போதுமானதாக இல்லை (Kister 1965, page 116; Sprenger, 1869, page 94).

இன்னொரு கடைசி மேற்கோளை கிப்சன் அவர்களின் புத்தகத்திலிருந்து பார்ப்போம்:

"இஸ்லாமிற்கு முந்தைய அரேபியா" என்ற தலைப்பில் பல மாநாடுகள் நடந்தன. பண்டைய கால அரேபியாவின் வரை படங்கள் (map of Arabia) பலவற்றை நான் ஆய்வு செய்தேன். அதன் பிறகு, நான் பேசும் மாநாட்டில் கலந்துக் கொண்டவர்களிடம் நான் ஒரு கேள்வியை கேட்டேன்: படைய கால அரேபிய வியாபாரிகள் செல்லும் வழிகள் எந்த இடத்தில் ஒன்றையொன்று சந்திக்கிறது?  இந்த இடம் தான் சர்வதேச வியாபாரிகள் சந்திக்கும் மையப்பகுதியாக இருக்கும். இந்த கேள்விக்கு,  மாநாட்டில் கலந்துக்கொண்ட ஆய்வாளர்கள் கொடுத்த பதில் "வியாபாரிகள் குழுமியிருக்கும் மைய இடம் அரேபியாவின் வடக்கு பகுதியில் உள்ளது, அரேபியாவின் தென் பகுதியில் உள்ள மக்காவில் அல்ல, இது மட்டுமல்ல, வியாபாரிகள் தங்கள் வழிகளில் தங்கி இளைப்பாறிச் செல்லும் இடமாக மக்கா இல்லை" 

In seminars on pre-Islamic Arabia, I have often traced the various trade routes on a map of Arabia. Then I ask the audience to indicate where all the trade routes intersect. This would naturally seem to be the "center of the trade route." Inevitably, everyone responds that they intersect in northern Arabia, not at Mecca which was not even a stopping place on the caravan routes. Check the map on page 157 to see for yourself. (Quranic Geography, Page: 224, Chapter: CHAPTER SIXTEEN - MECCA & THE HOLY CITY) [1]

ஆசிரியர் தம்முடைய புத்தகத்தின் 157ம் பக்கத்தில் அரேபிய வியாபாரிகளின் வழிகளை வரைபடத்தில் குறித்துள்ளார்.  இந்த படத்தை அவருடைய அனுமதியின்றி நான் இங்கு பதிக்கமுடியாது, ஆனால், அவரது தளத்தில் அதே படம் பல வண்ணங்களில் பதித்துள்ளார். எனவே, அப்படத்தை கீழே உள்ள தொடுப்புகளை சொடுக்கி பார்க்கவும்:

மேற்கண்ட படத்தை நன்றாக கவனிக்கவும், இதில் மக்காவின் பெயர் வருகின்றதா என்று கவனியுங்கள்? இந்த தொடர் கட்டுரைகளில் நாம் பல இடங்களின் பெயர்களையும், அவ்விடங்களில் நடந்த இஸ்லாமிய நிகழ்ச்சிகளையும் பார்க்கப் போகிறோம். அவைகளை சரியாக புரிந்துக் கொள்ள இப்படத்தை நன்றாக மனதில் பதியவைத்துக் கொள்ளுங்கள். அதாவது: 

 • மதினாவிற்கு எப்பக்கத்தில் எருசலேம் இருக்கிறது (வடக்கு).
 • மதினாவிற்கு எப்பக்கத்தில் ஸனா இருக்கிறது (தெற்கு)
 • மதினாவிற்கு எப்பக்கத்தில் சிரியா இருக்கிறது?
 • எருசலேமுக்கு எப்பக்கத்தில் மதினா இருக்கிறது? எப்பக்கத்தில் சிரியா இருக்கிறது?

போன்ற விவரங்கள் நமக்கு உதவியாக இருக்கும். 

சிந்திக்கவேண்டிய விஷயங்கள் - இதுவரை கண்ட சுருக்கமும், மக்கா பற்றிய கேள்விகளும்:

1. குர்-ஆன், ஹதிஸ்கள் மற்றும் முஹம்மதுவின் வாழ்க்கை சரிதைகளை வாசிக்கும் போது, மக்கா ஒரு கிராமம் அல்ல, அது பல வியாபாரிகளைக் கொண்ட ஒரு நகரம் என்பதை அறிய முடிகின்றது. 

2. குர்-ஆன் மக்காவை 'நகரங்களின் தாய் (உம்முல் குரா)' என்ற அடைமொழியில் அழைக்கிறது. 

3. முஹம்மதுவின் முதல் மனைவி கதிஜா அவர்கள், அதே மக்காவில் வியாபாரம் செய்துக் கொண்டு இருந்த செல்வ செழிப்பான பெண்மணியாக இருந்தார்கள். 

4. முஹம்மதுவும் வியாபார விஷயமாக பல முறை சிரியாவிற்கு சென்றும் இருக்கிறார். 

5. இவ்விவரங்கள் அனைத்தும் "மக்கா ஒரு முக்கியமான வியாபார நகரமாக இருந்ததாகவும், அவ்வூரில் செல்வ செழிப்பான வியாபாரிகள் இருந்ததாகவும் தெரிகின்றது". 

6. இது மட்டுமல்ல, இதர நாட்டு வியாபாரிகள் பிரயாணமாகச் செல்லும் வழியில் தங்கி இளைப்பாறும் மையமாகவும் மக்கா இருந்ததாக தெரிகின்றது. 

7. ஆனால், மேற்கண்ட அனைத்து விவரங்களின் படி, நாம் தற்காலத்தில் சௌதியில் உள்ள இஸ்லாமிய புனித பூமி மக்காவை ஆய்வு செய்யும் போது, தொல்லியல், புவியியல், சரித்திர ஆதரங்கள் அனைத்தும், நமக்கு வேறு வகையான விவரங்களைத் தருகின்றது.

8. அக்கால அரேபிய வியாபாரிகள் செல்லும் வழியை வரைப்படத்தில் பார்க்கும் போது, மக்காவின் பெயர் காணப்படுவதில்லை.

9. வளமற்ற ஒரு இடமாகவும், வியாபாரிகள் தங்கி இளைப்பாறி தங்கள் ஒட்டகங்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவுக்கு பயன்படாத ஒரு இடமாகவும் மக்கா இருந்துள்ளதாக ஆய்வு சொல்கிறது. சரித்திர தொல்லியல் ஆய்வாளர்கள் இதனை உறுதி செய்திருக்கிறார்கள்.

10. இதன் மூலம்  தெளிவாக்கப்படும்  விவரம் என்னவென்றால், இஸ்லாமிய ஆதாரங்கள் குறிப்பிடம் இடம் "தற்காலத்தில் நாம் மக்கா என்று அழைக்கும் இடமல்ல, அது வேறு ஒரு இடமாக இருக்கிறது" என்பதைத் தான். 

முடிவுரை:

நாம் இதுவரை மக்கா பற்றி இரண்டு விஷயங்களை (பிரச்சனைகளை) பார்த்து இருக்கிறோம். 

1. "நகரங்களின் தாய்" என்று குர்-ஆன் குறிப்பிடும் இடம் மக்கா அல்ல, அது வேறு ஒரு இடமாக  இருக்கவேண்டும், ஆய்வுகள் இப்படித்தான் சொல்கின்றன.

2. இஸ்லாமின் ஆரம்பகால நூல்கள் கொடுக்கும் வர்ணனைகள், வளமிக்க வியாபார நகரம் போன்றவை 'மக்காவை' குறிப்பதாக இல்லை, வியாபாரிகளுக்கும், வியாபாரத்திற்கும் பயன்படாத ஒரு  வறண்ட இடமாக மக்கா இருந்துள்ளது. அப்படியானால், இஸ்லாமிய நூல்கள் விவரிக்கும் அந்த வியாபார வசதி நிறைந்த இடம் மக்கா அல்லாமல் வேறு ஒரு நகரமாக இருந்திருக்க வேண்டும்.

மேற்கண்ட ஒவ்வொரு காரணமும், இஸ்லாமியர்கள் புனித பூமியாக கருதிக் கொண்டு இருக்கும் மக்காவை விட்டு, வேறு ஒரு இடத்திற்கு நேராக தன் விரலை நீட்டுகிறது என்பதை காணமுடியும். குர்-ஆன் சொல்லும் நகரங்களின் தாய் என்பது 'பெட்ராவை' குறிக்கும் என்று சரித்திர ஆசிரியர் தம் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். குர்-ஆன் சொல்லும் வர்ணனைகள் பெட்ரா நகரத்திற்கு சரியாக பொருந்துகிறது. 'மக்காவின் பிரச்சனைகள்' அனைத்தையும் பார்த்துவிட்ட பிறகு 'பெட்ரா' சம்மந்தப்பட்ட விவரங்களுக்கு நாம் செல்வோம்.

நம்முடைய அடுத்த பாகத்தில், மக்காவின் மூன்றாவது பிரச்சனைப் பற்றிய விவரங்களைக் காண்போம்.

மக்காவின் பிரச்சனை 1 : குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?


முன்னுரை: "இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல" என்ற தலைப்பில் நாம் அறிமுகத்தை பார்த்துள்ளோம். கீழ்கண்ட அறிமுக கட்டுரையை படிக்காமல், நீங்கள் இதர கட்டுரைகளை படித்தால், நாம் முன்வைக்கும் விவரங்களின் பின்னணி சரியாக விளங்காது.

மக்காவின் பிரச்சனை 1

சரித்திர ஆசிரியர் டென் கிப்சன் அவர்கள் தம்முடைய "குர்-ஆனிக் ஜியோகிராஃபி" புத்தகத்தில் 16வது அத்தியாயத்தில் கொடுத்துள்ள முதலாவது ஆதாரத்தை பார்ப்போம்.

முஸ்லிம்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மக்காவின் பெயர் குர்-ஆனில் ஒரே ஒரு முறைத்தான் வருகிறது:

குர்-ஆன் ஸூரா 48:24

48:24. அவனே, மக்காவின் பள்ளத்தாக்கில், அவர்களின் கைகளை உங்களை விட்டும், உங்களின் கைகளை அவர்களை விட்டும் தடுத்தான். அந்நிலையில் அவர்களின் மீது உங்களுக்கு வெற்றியையும் கொடுத்திருந்தான். மேலும், நீங்கள் செய்துகொண்டிருந்தவை அனைத்தையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருந்தான்.(இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்)

இன்னொரு இடத்தில் 'பக்கா' என்று வருகிறது:

குர்-ஆன் ஸூரா 3:96

3:96. (இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது. (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

இந்த மக்காவை குர்-ஆன் விளக்கும்போது "நகரங்களின் தாய்" என்று குறிப்பிடுகிறது. 

6:92. இந்த வேதத்தை - அபிவிருத்தி நிறைந்ததாகவும், இதற்குமுன் வந்த (வேதங்களை) மெய்ப்படுத்துவதாகவும் நாம் இறக்கி வைத்துள்ளோம்; (இதைக்கொண்டு) நீர் (நகரங்களின் தாயாகிய) மக்காவில் உள்ளவர்களையும், அதனைச் சுற்றியுள்ளவர்களையும் எச்சரிக்கை செய்வதற்காகவும், (நாம் இதனை அருளினோம்.) எவர்கள் மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் இதை நம்புவார்கள். இன்னும் அவர்கள் தொழுகையைப் பேணுவார்கள். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

அரபியில் "உம்முல் குரா – Umm al-Qura" என்ற வார்த்தைகளைத் தான் "நகரங்களின் தாய்" என்று மொழிப் பெயர்த்துள்ளார்கள். நகரங்களின் தாய் என்று குர்-ஆன் சொல்வது "மக்காவைத் தான்" என்று இஸ்லாமிய அறிஞர்கள் சொல்கிறார்கள், ஆனால், அதை நிரூபிக்க அவர்களால் முடிவதில்லை. 

ஏழாம் நூற்றாண்டில் முஹம்மது வாழ்ந்த போது, மக்கா "ஒரு நகரம்" என்ற நிலையிலும் இல்லை, "நகரங்களுக்கெல்லாம் தாய்" என்ற நிலையிலும் இல்லை. ஒரு நகரத்திற்கான எந்த தகுதியும் மக்காவிற்கு அப்போது இல்லாமல் இருந்தது. அப்படியானால், ஏன் குர்-ஆன் மக்காவை "நகரங்களின் தாய்" என்றுச் சொல்கிறது?  ஒருவேளை குர்-ஆன் சொல்லும் "உம்முல் குரா" என்பது வேறு ஒரு நகரமாக இருக்குமோ? 

ஜோர்டான் மற்றும் சௌதி அரேபியாவின் தொல்லியல் ஆராய்ச்சியாளர்களின் கூற்று:

குர்-ஆனிக் ஜியோகிரஃபி புத்தகத்தின் ஆசிரியர், டென் கிப்சன் தம் புத்தகத்தில் கீழ்கண்ட விவரங்களைச் சொல்கிறார்:

"2002ம் ஆண்டு, ஜோர்டான் நாட்டில், பெட்ராவில் நடந்த "நெபாடியன்ஸ் ஆய்வுவின் இரண்டாம் மாநாட்டில்" கலந்துக் கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த மாநாட்டை "அல் ஹுசேன் பின் தலால் பல்கலைக் கழகம்" ஏற்பாடு செய்திருந்தது. இந்த மாநாட்டின் போது, பல முன்னணி ஜோர்டானிய மற்றும் சௌதி அரேபிய தொல்லியல் ஆய்வாளர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த உரையாடலின் போது மக்காவைப் பற்றியும் அதனைச் சுற்றியும் நடந்த தொல்லியல் ஆய்வு பற்றியும் பல கேள்விகள் கேட்டு பதில்களைப் பெற்றேன். தங்கள் பெயர்களை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் அவர்கள் எனக்கு பதில் அளித்தார்கள். அதாவது "மக்காவைப் பற்றி கி.பி. 900க்கு முன்பாக எந்த ஒரு தொல்லியல் கண்டுபிடிப்புகளும் இல்லை" என்று அவர்கள் பதில் அளித்தார்கள். பண்டைய காலத்தில் இஸ்லாம் உருவான காலத்தில் மக்காவைச் சுற்றி நகர பாதுகாப்பு சுவரும், பெரிய கட்டிடங்களும், தோட்டங்களும், அரச கட்டிடங்களும் கோயில்களும் இருந்தனவா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "தங்கள் தலையை அசைத்து, அந்த மாதிரி எதுவும் அங்கு இருந்ததில்லை" என்றனர்."(Quranic Geography, பக்கம் 223, அத்தியாயம் CHAPTER SIXTEEN - MECCA & THE HOLY CITY)

ஆங்கிலத்தில் மேற்கோள்:

"In 2002 I had the opportunity to visit the Second Conference on Nabataean Studies held in Petra, Jordan, and organized by the Al Hussein Bin Talal University. During the conference I had occasion to speak with several leading Jordanian and Saudi archeologists. I asked them specifically about the archeological record in and around Mecca. While not wishing to be quoted or named publicly, they admitted that the archeological record at Mecca was basically non-existent before 900 AD. I had expected them to defend the opinion that ancient Mecca was a walled city with houses, gardens, public buildings and temples. They shook their heads and said, "There was nothing like that there." (Quranic Geography, Page: 223, Chapter: CHAPTER SIXTEEN - MECCA & THE HOLY CITY) [1]

நாம் சிந்திக்கவேண்டிய விஷயங்கள்:

1) குர்-ஆன் மக்காவை "நகரங்களின் தாய்" என்று அழைக்கிறது.

2) கி.பி. 900க்குள் மக்கா ஒரு நகரம் என்பதற்கான எந்த ஒரு தொல்பொருள் ஆதாரமும் மக்காவில் இது வரை கிடைக்கவில்லை.

3) சௌதி மற்றும் ஜோர்டான் தொல்லியல் ஆராய்ச்சியாளர்களின் படி, கி.பி. 900க்கு முன்பாக மக்கா ஒரு நகரமாக இருந்ததில்லை. 

4) அக்காலத்தில் நகரம் என்பதற்கு சில அடையாளங்கள் இருக்கின்றன, அதாவது நகரத்தைச் சுற்றி பாதுகாப்பு சுவரும்,  அரசு தோட்டங்களும், பெரிய கட்டிடங்களும் இருக்கும், ஆனால், இவைகள் ஒன்றும் முஹம்மதுவின் காலத்திற்கு பின்பும் 270 ஆண்டுவரை (கி.பி. 900 வரை) மக்காவில் இல்லை என்பது ஆய்வின் படி தெரிகின்றது.

5) இப்படி இருந்தும், குர்-ஆன் ஏன் நகரங்களின் தாய் என்று மக்காவை குறிப்பிட்டுச் சொல்கிறது? குர்-ஆன் சொல்வது பொய்யாக இருக்காது, ஏனென்றால், இந்த வசனத்தை கேட்கும் அக்கால மக்கள் 'தாங்கள் இருப்பது ஒரு நகரம் தானே' அதைத் தானே குர்-ஆன் சொல்கிறது என்று எண்ணியிருப்பார்கள்.

6) குர்-ஆன் குறிப்பிடுவது இன்று நாம் மக்கா என்று அழைக்கும் சௌதியின்  மக்கா இல்லாமல் அது வேறு ஒரு நகரமாக இருந்திருக்கிறது!

7) இதனைத் தான் சரித்திர ஆசிரியர் கிப்சன் 'பெட்ரா நகரம்' என்றுச் சொல்கிறார்.

முடிவுரை: இது தான் மக்கா மீது சரித்திர ஆசிரியர் கிப்சன் அவர்களுக்கு வந்த முதலாவது சந்தேகம். இதனை படிக்கும் முஸ்லிம்கள் ஆசிரியரின் முடிவை உடனே ஏற்றுக் கொள்ளவேண்டாம், அதற்கு பதிலாக இதைப் பற்றி உங்கள் ஆய்வை தொடருங்கள்.  நாம் பதிக்கப்போகும் அடுத்தடுத்த "மக்கா பிரச்சனைகளை" ஒன்று சேர்த்து பார்க்கும் போது, பிம்பம் மிகவும் பெரியதாகவும், தெளிவாகவும் தெரியவரும். அப்போது நீங்கள் ஒரு முடிவிற்கு வரலாம். 

மக்கா பற்றி ஆசிரியர் முன்வைத்த இரண்டாவது ஆதாரத்தை அடுத்த கட்டுரையில் காண்போம்.

அடிக்குறிப்புகள்:

[1] அமேஜானில் இப்புத்தகத்தை வாங்க: Buy Quranic Geography at Amazon

[2] உபயோகமுள்ள இதர தொடுப்புக்கள்:

இவைகள் குர்-ஆனிக் ஜியோகிராஃபி புத்தகத்தின் ஆதாரங்கள் அல்ல. இணையத்தில் தேடிப்பார்த்ததில் கிடைத்தவைகள்.

 • இந்த தொடுப்பில் இஸ்லாமுக்கு முன்பு இருந்த நகரங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால், அவைகளில் மக்காவின் பெயர் இடம் பெறவில்லை - https://en.wikipedia.org/wiki/Ancient_towns_in_Saudi_Arabia
 • உம்முல் குரா என்பது தமிழ் மக்களிடையேயும் புகழ் பெற்ற வார்த்தைகளாக இருக்கிறது, இதைப் பற்றிய தமிழ் தள தொடுப்புக்கள்:

மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம் : இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!

ஒவ்வொரு நாளும் ஐந்து வேளைகள் உலகில் உள்ள முஸ்லிம்கள் மக்காவில் உள்ள காபா என்ற "அல்லாஹ்வின் ஆலயத்திற்கு நேராக" தங்கள் தொழுகையை நிறைவேற்றி தங்கள் பயபக்தியை பறைசாற்றுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் மக்காவிற்கு புனித யாத்திரை செல்கிறார்கள். இவர்களின் இறைவன் "அல்லாஹ்", அவன் அனுப்பிய தீர்க்கதரிசி "முஹம்மது", இவர் பிறந்த பூமி புனித மக்கா, இந்த பூமியில் இருக்கும் இறையில்லம் காபா. இந்த காபாவை பார்த்துக்கொண்டே, நினைத்துக்கொண்டே நகர்கிறது முஸ்லிம்களின் உலக வாழ்க்கைப் பயணம்.
இஸ்லாமையும் மக்காவையும் வேறு பிரித்து பார்க்கமுடியாது. மனித உடலையும் உயிரையும் பிரித்துவிட்டால் என்ன பயன்? மனிதனின் உடலிலிருந்து உயிர் பிரிந்துவிட்டால், அதன் பிறகு அந்த உடலை  "பிணம்" என்று அழைப்பார்கள். எனவே, இவ்விரண்டும் ஒன்றாக இருந்தால் தான் உயிர் உள்ள மனிதன் என்று சொல்லமுடியும். இது போல, மக்காவும் இஸ்லாமும் உயிரும் உடலும் போன்றது. 
இஸ்லாமின் ஐந்து கடமைகளில் ஒரு கடமை மக்காவிற்கு புனித யாத்திரை செல்வதாகும். இஸ்லாமில் மக்காவின் தனித்தன்மை என்னவென்பதை பாருங்கள்:
 • முஹம்மது பிறந்த இடம் மக்கா 
 • முஹம்மது தம்மை நபியாக சுயபிரகடனம் செய்துக்கொண்ட இடம் மக்கா 
 • ஆபிரகாமும், இஸ்மவேலும் காபாவை கட்டிய இடம்  இடம் மக்கா
 • குர்-ஆனில் அபயபூமியாக அல்லாஹ் அறிவித்த இடம் மக்கா
 • உலக முஸ்லிம்கள் ஒவ்வொரு ஆண்டும் புனிய யாத்திரை (ஹஜ்) செய்யும் இடம் மக்கா 
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மக்காவின் பெயர் குர்-ஆனில் ஒரே ஒரு முறைத்தான் வருகிறது என்ற விஷயம் சிலருக்கு ஆச்சரியத்தைத் தரும் (குர்-ஆன் ஸூரா 48:24). மேலும் இன்னொரு இடத்தில் குர்-ஆன் "பக்கா" என்று குறிப்பிடுகிறது (குர்-ஆன் 3:96). மக்காவின் இன்னொரு பெயர் "பக்கா" என்று இஸ்லாமிய அறிஞர்கள் கருதுகிறார்கள். 
மக்கா மற்றும் பெட்ரா
ஒரு சரித்திர ஆசிரியர் பல ஆண்டுகள் மத்திய கிழக்கு நாடுகளில் ஆய்வு செய்து, இஸ்லாமின் புனித பூமியாகிய மக்கா பற்றிய தன் ஆய்வின் முடிவை புத்தகமாக வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால்:
"இஸ்லாம் மக்காவில் உருவாகவில்லை. இஸ்லாம் ஜோர்டானில் உள்ள பெட்ராவில் முஹம்மதுவினால் தோற்றுவிக்கப்பட்டது. அவருக்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து, தற்போதுள்ள மக்காவிற்கு அது மாற்றப்பட்டது.
இதை படித்தவுடன், என்னைப் பார்த்து:
 • உனக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?
 • அறிவுள்ளவன் எவனாவது இதனை ஏற்றுக் கொள்வானா?
 • கடந்த 1400 ஆண்டுகளாக, பல கோடி முஸ்லிம்கள் நம்பிக்கொண்டு இருக்கும் ஒரு நம்பிக்கையை இன்று வந்து இல்லை என்றுச் சொல்வது முட்டாள்தனமானது! 
என்று கேட்கவேண்டும் (திட்டவேண்டும்) என்று உங்களுக்கு தோன்றுகிறதா?
ஆம், இந்த விஷயத்தை முதன்முதலில் படித்த போது எனக்கும் இதே கேள்விகள் தான் எழும்பின. மத நம்பிக்கையும் சரித்திர உண்மைகளும் பலவேளைகளில் மோதிக் கொள்கின்றன. இந்த மோதலை தூரத்தில் நின்று வேடிக்கை பார்க்க முடியாது, எனவே, உள்ளே நுழைந்து உண்மை என்னவென்று கண்டறிவது தான் சிறந்தது.
குர்-ஆனிலும், ஹதீஸ்களிலும், இதர இஸ்லாமிய ஆரம்ப கால சரித்திரங்களிலும் "மக்கா" பற்றி சொல்லப்பட்ட புவியியல் மற்றும் இதர விவரங்களை ஆய்வு செய்யும் போது, அவைகள் இன்றுள்ள  மக்காவை குறிக்காமல், ஜோர்டானில் உள்ள பெட்ராவை குறிக்கிறது என்று அந்த ஆய்வு சொல்கிறது. இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இன்னும் அந்த ஆச்சரியத்திலிருந்து நான் மீளவில்லை என்றுச் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்! 
இஸ்லாம் முதலில் பெட்ரா என்ற பட்டணத்தில் உருவாகி, பின்பு முஹம்மது மரித்த பல ஆண்டுகள் கழித்து மக்காவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது என்ற விஷயம் முஸ்லிம்களை சிந்திக்கச் செய்யும் விவரமாகும். 
இந்த விவரங்கள் அடங்கிய சரித்திர புத்தக விவரங்கள்:
புத்தகத்தின் பெயர்: குர்-ஆனிக் ஜியோகிரஃபி (குர்-ஆனின் புவியியல்)
(Quranic Geography - A SURVEY AND EVALUATION OF THE GEOGRAPHICAL REFERENCES IN THE QUR'AN WITH SUGGESTED SOLUTIONS FOR VARIOUS PROBLEMS AND ISSUES)
ஆசிரியர்: டென் கிப்சன் (Dan Gibson)
இவர் பல ஆண்டுகள் மத்திய கிழக்கு நாடுகளில் வாழ்ந்து, ஆய்வு செய்து இப்புத்தகத்தை எழுதியுள்ளார். இவர் நபாட்டியன்ஸ் இன மக்களின் சரித்திரத்தை ஆய்வு செய்து புத்தகங்களையும் எழுதியுள்ளார். இந்த ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விஷயம் தான் "இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல, அது பெட்ரா" என்பதாகும். இதனை மேலும் இவர் ஆய்வு செய்து இப்புத்தகத்தை எழுதியுள்ளார்.
 • இப்புத்தகத்தை அமேஜான் தளத்திலிருந்து வாங்கிக் கொள்ளலாம்: அமேஜான்[1] 
 • இப்புத்தகத்தை  பிடிஃப் (PDF) வடிவில் வாங்க சொடுக்கவும்: Quranic Geography PDF 
 • சரித்திர ஆசிரியர் டென் கிப்சன் அவர்களின் தளங்கள்: www.nabataea.net &www.searchformecca.com
இவர் முதல் 15 அத்தியாயங்களில், குர்-ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று கூட்டங்களாகிய ஆது, ஸமூது, மத்யன் பற்றி எழுதியுள்ளார். 
இப்புத்தகத்தின் 16 லிருந்து 24வது அத்தியாயம் வரை   பெட்ராவில் உருவான இஸ்லாமும், கிப்லாவும் எப்படி மக்காவிற்கு மாறியது? எப்போது மாறியது? மேலும் குர்-ஆனில் ஹதீஸ்களில் வரும் புவியியல் விவரங்கள் எப்படி பெட்ராவை குறிக்கின்றன போன்றவைகள் பற்றி  பல ஆதாரங்களை முன்வைத்து எழுதியுள்ளார். மொத்தம்158 பக்கங்கள், இதைப் பற்றி ஆசிரியர் ஆய்வு செய்து எழுதியுள்ளார். 
 அத்தியாயங்கள் தலைப்புகள்பக்கம்
Chapter 16The Holy City221
Chapter 17The Qibla238
Chapter 18Archeological Evidence251
Chapter 19Literary Evidence275
Chapter 20Historical Evidence302
Chapter 21Navigation and Pre-Islamic Poetry333
Chapter 22The Abbāsid Writers346
Chapter 23The Case for Aqaba and Al-Aqṣa357
Chapter 24Qur'ānic Geography370-379
புத்தகத்தின் பின் இணைப்பு 'A' யில் (Appendix A), ஆரம்ப கால இஸ்லாமிய கால அட்டவணையை கொடுத்துள்ளார். அதாவது கி.பி. 550 லிருந்து 1095 வரை, ஒவ்வொரு ஆண்டும் மத்திய கிழக்கு அல்லது அரேபியா சுற்றியுள்ள நாடுகளில் நடந்த விவரங்களை தொகுத்து கொடுத்துள்ளார் (பக்கங்கள் 382 – 413 வரை). பின் இணைப்பு 'C' யில் (Appendix C), இஸ்லாமுடைய கிப்லா, பெட்ராவிலிருந்து மக்காவிற்கு மாற்றமடைவதற்கு முன்பு எழுதப்பட்ட மூல குர்-ஆன்களில் ஸூராக்கள் 2:143-145 மற்றும் 48:24 பற்றிய ஆய்வை செய்துள்ளார், அவைகளின் முடிவை இப்பகுதியில் கொடுத்துள்ளார். இவைகள் அனைத்தும் அவரது ஆய்விற்கும் அவரது 'இஸ்லாமின் புனித பூமி மக்கா அல்ல' என்ற கருத்துக்கும் மேலும் வலுசேர்ப்பதாக காணப்படுகிறது. 
16-24 அத்தியாயங்களின் சுருக்கத்தை படிக்க:
இவ்வத்தியாயங்களில் கொடுக்கப்பட்ட விவரங்களின் சுருக்கமான மதிப்புரையை கீழ்கண்ட பிடிஃப் (PDF)ல் படித்து தெரிந்துக் கொள்ளலாம் (24 பக்கங்கள்). ஆங்கிலம் மற்றும் அரபி மொழியில் இவைகள் கிடைக்கின்றன [இந்த மதிப்புரை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது, கூடிய சீக்கிரம் முடிவடைந்துவிடும்].
இந்த பைலை இலவசமாக பதிவிறக்கம் செய்துக் கொண்டு படிக்கலாம்.
உமரின் நிலைப்பாடு: நான் இந்த புத்தகத்தை பிடிஃப் (PDF) வடிவில் வாங்கி படித்தேன். இதனை படிப்பதற்கு முன்பாக, இது அந்த சரித்திர ஆசிரியரின் ஒரு கற்பனையாக இருக்கும் என்று எண்ணினேன். ஆனால், இந்த ஆறாவது பாகத்தை (அத்தியாயங்கள் 16-24 வரை) படித்தவுடன், என் நிலைப்பாட்டில் தடுமாற்றம் ஏற்பட்டது. அவர் முன்வைத்த ஆதாரங்களை கவனிக்கும் போது, இஸ்லாமிய சரித்திரத்தில் குளறுபடிகள் நடந்திருக்கிறது என்று தோன்றியது. எனவே, அவரது புத்தகத்தில் நான் படித்த சில விவரங்களை தமிழ் கட்டுரைகளாக சுருக்கமாக பதிக்கலாம் என்று விரும்புகிறேன். 
தமிழ் முஸ்லிம்கள் அவரது புத்தகத்தை வாங்கி படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். மேற்கொண்டு நாம் ஆய்வு செய்ய இச்சிறிய தமிழ் கட்டுரைகள் உதவியாக இருக்கும். ஆதார வசனங்களை/விவரங்களை மட்டுமே நான் இந்த புத்தகத்திலிருந்து எடுத்துக் கொள்வேன், மீதமுள்ள வரிகள் அனைத்தும் தமிழ் மக்கள் புரிந்துக் கொள்வதற்காக எழுதப்படும் என் சொந்த வரிகளாகும். நான் புத்தகத்தின் அத்தியாயங்களை அப்படியே மொழியாக்கம் செய்யவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 
அவரது புத்தகத்தில் பல படங்கள், அட்டவணைகள் கொடுக்கப்பட்டுள்ளது, அவைகள் காப்புரிமை (Copyright) செய்யப்பட்டு இருப்பதினால், அவைகளை பதிக்கமுடியாது, எனவே நீங்கள் புத்தகத்தை வாங்கி படிப்பதே சிறந்தது. 
கீழ்கண்ட விவரங்களை நாம் தமிழ் கட்டுரைகளில் பார்க்கப்போகிறோம்:
 • மக்கா பற்றி குர்-ஆனில் ஹதீஸ்களில் கொடுக்கப்பட்டு இருக்கும் புவியியல் விவரங்கள் தற்கால "மக்காவை" குறிப்பனவனாக காணப்படுவதில்லை ஏன்?  ஆனால், அவ்விவரங்கள் பெட்ராவிற்கு ஏன் கச்சிதமாக பொருந்துகிறது?
 • ஆரம்ப கால மசூதிகள் மற்றும் கிப்லா ஏன் பெட்ராவை நோக்கி கட்டப்பட்டுள்ளது. 
 • எப்போது கிப்லா பெட்ராவிலிருந்து தற்கால மக்காவிற்கு மாறியது? மாற்றியது யார்?
 • மக்காவிற்கு இஸ்லாம் மாறிய பிறகு அனைத்து மசூதிகளும் மக்காவின் காபாவை (கிப்லா) நோக்கியே மாற்றப்பட்டுள்ளது / திருத்தி கட்டப்பட்டுள்ளது.
முஸ்லிம்களுக்கு வேண்டுகோள்:
"இஸ்லாம்" தங்கள் வாழ்வின் முக்கியமான அம்சம் என்று கருதும் முஸ்லிம்கள், முதலாவது ஆங்கில புத்தகத்தை வாங்கி படியுங்கள். இப்புத்தகத்தில் கொடுக்கப்பட்ட அனைத்து  விவரங்களையும் நான் தமிழில் பதிக்கமுடியாது. ஆசிரியர் முன்வைத்த அனைத்து ஆதாரங்களையும், வசனங்களையும், ஹதீஸ்களையும் ஆய்வு செய்துப் பாருங்கள். உங்கள் கண்டுபிடிப்பை அல்லது பதிலை "தகுந்த ஆதாரங்களோடு" மறுப்பு எழுதுங்கள். அவைகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் நாம் அந்த சரித்திர ஆசிரியரை தொடர்பு கொண்டு அவருக்கு அனுப்பி விளக்கம் கேட்போம். 
வாருங்கள், மக்கா இஸ்லாமின் புனித நகரமல்ல என்று ஆசிரியர் கிப்சன் முன்வைக்கும் ஒவ்வொரு காரணத்தையும் காண்போம்.
அடிக்குறிப்புகள்:
Book Description: This book covers historical records of the four known times when peoples of the Arabian peninsula united and burst out of the Arabian deserts to conquer other nations (topics such as: The People of 'Ad, People of Thamud, Midianites, etc.). The book also examines the geographical references in the Qur'an cross-referencing them with historical locations. The surprise comes when Gibson examines the Holy City of Islam, known as Mecca. Here Gibson finds evidence that the original Holy City was in northern Arabia in the city of Petra. He theorizes that during an Islamic civil war one hundred years after Muhammad, the Ka'ba was destroyed and the Black Rock was moved to its present location. Gibson examines archaeological, historical and literary evidence that support this theory and addresses many questions and objections that readers may have. This book contains many references, as well as some useful appendices including a 32 page time line of Islamic history from 550 AD - 1095 AD, and a 20 page annotated selected bibliography of early Islamic sources in chronological order from 724 AD - 1100 AD plus a list of many early Qur'anic manuscripts. Fully referenced with many illustrations and photos. It has library binding, and is a must for every academic library or scholar of Middle Eastern History.

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

மதசார்பற்ற நாட்டுக்காக ஏங்கும் முஸ்லிம் சமுதாயமும், பிஜே அவர்களும்

முன்னுரை: "இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை" என்ற தலைப்பில் பிஜே அவர்கள் ஒரு உரையை நிகழ்த்தினார்கள். 

இந்த உரையை ஒலிவடிவில் கேட்க இங்கு சொடுக்கவும்.

இதன் சுருக்கத்தை படிக்க இங்கு சொடுக்கவும்.

வாசகர்கள் பிஜேயின் உரையை முழுவதுமாக ஒலி வடிவில் கேட்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இதில் பிஜே அவர்கள் பல விஷயங்களை கூறியுள்ளார்கள். "இந்தியாவில் மதசார்பற்ற நிலைப் பற்றி" அவர் கூறியவைகளை நாம் ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் அதே மதசார்ப்பற்ற நிலைப் பற்றி அவரிடம் சில கேள்விகள் கேட்கவேண்டியுள்ளது, அவைகளை இக்கட்டுரையின் பிற்பகுதியில் பாகம் 2ல் கேட்டுள்ளேன். 

பாகம் 1: பிஜே அவர்களின் உரையில் காணப்பட்ட நிறைகள் 

அ) முதல் பந்தையும் கடைசி பந்தையும் ஆறு ரன்களுக்கு  அடித்த பிஜே அவர்கள்:

பிஜே அவர்கள் தம் உரையை ஆரம்பித்த உடனே ஒரு அருமையான விவரத்தை எடுத்துக்காட்டாகச் சொன்னார். அதை கேட்டவுடன் எனக்கு உடலெல்லாம் சிலிர்த்துவிட்டது. அமெரிக்காவின் முன்னாள் அதிபரைக் கூட ஒரு முஸ்லிம் அறிஞர் உதாரணமாக காட்டுவாரா? ஆச்சரியமாக உள்ளதே!

உரையின் ஆரம்பம்: 

மதசார்பற்ற நாட்டின் அதிபர் என்றால் கென்னடி மாதிரி அல்லவா இருக்கவேண்டும்! என்று பிஜே அவர்கள் கூறினார்கள். மாஷா அல்லாஹ்!!! 

"உரையின் துவக்கமாக மதச்சார்பற்ற நாட்டை ஆளக்கூடிய ஆட்சியாளர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை முன்னாள் அமெரிக்க அதினர் கென்னடி கூறிய செய்திகளை மேற்கோள்காட்டி பீஜே பேசினார். அதாவது கிறித்தவ மத்த்திலுள்ள  ரோமன் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த கென்னடி அவர்கள் தான் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றவுடன் ஒரு பிரகடனத்தைச் செய்தார். ரோமன் கத்தோலிக்கப் பிரிவினரின் தலைமையிடமாக உள்ள வாடிகனுக்குச் சென்று தான் ஒவ்வொரு முறையும் அங்குள்ள மதத்தலைவரான போப் ஆண்டவரிடத்தில் ஆசி வாங்கி வருவதை வழக்கமாக வைத்திருப்பதாகவும், ஆனால் தற்போது நான் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ளதால் இங்குள்ள அனைத்து பிரிவு மக்களுக்கும் நான் அதிபராக ஆகியுள்ளதால் இனிமேல் போப் ஆண்டவரிடத்தில் ஆசி வாங்க செல்லமாட்டேன் என்று அறிவிப்புச் செய்தார். மதச்சார்பற்ற நாட்டில் ஆட்சியாளர்களாக இருப்பவர்கள் இப்படி ஒருசார்பற்றவர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்." [1]

உரையின் முடிவுரை:

முன்னுரையைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கவேண்டாம் வாசகர்களே, முடிவுரையையும் சிறிது படித்துவிடுங்கள், அப்படியே ஸ்தம்பித்துவிடுவீர்கள். 

பிஜேயின் உரையின் முடிவுரை:

"அப்சல் குருவை அநியாயமாக தூக்கிலிட்டு கொலை செய்தது ஏன்?

உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பினார். இந்த அநியாயத்திற்கெல்லாம் படைத்த இறைவனிடம் முறையிடுங்கள், அவன் நமக்கு தீர்ப்பு வழங்குவான். இந்த அநியாயக்காரர்களுக்கு இங்கும் மறுமையில் அல்லாஹ் இழிவை வழங்குவான் என்று ஆக்ரோசமான முறையில் பேசி முடித்தார். "[1]

தங்களுக்கு அநியாயம் நடந்தால் முஸ்லிம்கள் அதற்கு பதிலடி  கொடுக்காமல், அல்லாஹ்விடம் அந்த தீயவர்கள் பற்றி முறையிடவேண்டும், பழிக்கு பழி வாங்கக்கூடாது, அல்லாஹ் அவர்களை பார்த்துக்கொள்வான் என்று பிஜே அவர்கள் முடித்த முடிவுரை என்னை கவர்ந்து விட்டது. நான் பிஜே அவர்களின் ஃபேன் ஆகிவிட்டேன் (பேன் என்று நான் சொல்லவில்லை). 

இயேசுவின் போதனையை எப்போது இவர் பின்பற்ற தொடங்கினார்? இப்படியும் முஸ்லிம் அறிஞர்கள் முஸ்லிம்களுக்கு அறிவுரை கூறுவார்களா? பாலைவனத்திலும் தாமரை மலருமா? பிஜே அவர்களின் இவ்வார்த்தைகளில் உண்மையுள்ளதா? என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் ஆங்காங்கே காணப்போகிறோம்.

மேற்கண்ட முன்னுரை மற்றும் முடிவுரைக்கு மத்தியில் அனேக விஷயங்களை பிஜே அவர்கள் சொன்னார்கள். அவைகளில் சிலவற்றை நாம் ஆமோதிக்கலாம், சிலவற்றோடு மோதத்தான் வேண்டும்.  முதலில் அவர் உரையில் நாம் ஆமோதிக்கும் விவரங்கள் என்னவென்பதை காண்போம்.

ஆ) இந்தியா மதசார்பற்ற நாடு என்றால், ஏன் அரசு அலுவலகங்களில், ஒரு மதத்தின் பூஜைகள், படங்கள் போன்றவைகள் வைக்கப்பட்டு இருக்கின்றன?

இந்த உரையில், மதசார்ப்பற்ற நாடு எப்படி இருக்கவேண்டும்? என்று பிஜே கோடிட்டு காட்டுகிறார். அமெரிக்க முன்னாள் அதிபர் கென்னடியை மெச்சிக்கொள்கிறார். ஒரு மதசார்ப்பற்ற நாட்டின் அதிபர் என்றால் இவரைப்போன்று அல்லவா இருக்கவேண்டும்! என்று ஆச்சரியப்படுகிறார். இவரது முழு உரையை ஒலிவடியில் நாம் கேட்டால், இவர் ஜனநாயக மதசார்ப்பற்ற அரசாட்சியை மெச்சிக்கொள்வது போல தெரிகின்றது. மதசார்ப்பற்ற நாடுகளில் உண்மையாகவே "மதசார்பின்மையை" பின்பற்றினால், சிறும்பான்மையினருக்கு அதிக நன்மைகள் கிடைக்குமே! என்று ஏங்குகிறார். 

"இந்தியா" ஒரு மதசார்ப்பற்ற நாடு என்று சொல்லிக் கொண்டாலும்,  அரசியல் சாசனம் இதனை ஆமோதித்தாலும், உண்மையில் அப்படி தெரியவில்லையே! என்று இவர் அங்கலாய்க்கிறார். இவர் சொன்ன கீழ்கண்ட எடுத்துக் காட்டுகளை நாம் ஒரு மனதோடு ஆமோதிக்கலாம்:

1) மதச்சார்பற்ற நாட்டில் அரசு அலுவலகங்களில் கடவுள் சிலைகளையும், கோவில்களையும் வைத்து வழிபாடு நடத்துவது மதச்சார்பின்ன்மையா?

2) தமிழக அரசின் சின்னமாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் சின்னத்தை வைத்திருப்பது மதச்சார்பின்ன்மையா?

3) பொங்கல் இனாம் கொடுக்கும் அரசாங்கம், ரமலான் பரிசு வழங்காமல் பாரபட்சம் காட்டுவது சரியா?

4) இராமாயணத்தை ஒளிபரப்பிவிட்டு, திப்பு சுல்தானின் வீர வரலாற்றை ஒளிபரப்பும் போது இது கற்பனை கதை என்று மத்திய அரசு அறிவித்த்தே இதுதான் மதச்சார்பற்ற தன்மையா? (இது உண்மையா என்று நான் சரி பார்த்ததில்லை, இப்படி மத்திய அரசு செய்திருந்தால், இது தவறு தான்).

5) நீதி தேவதை கண்ணைக் கட்டியிருப்பது போல காட்டிவிட்டு முஸ்லிம் என்றால் மட்டும் மத துவேஷத்தோடு தீர்ப்பளிப்பது தான் மதச்சார்பற்ற தன்மையா?

6) தாடி வைப்பது தாலிஃபானிசம்; தாடி வைக்க அனுமதி கேட்பது பாகிஸ்தானிசம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்களே! இது சரியா?

7) குர்பானி கொடுக்க தடை போட்டு மத துவேஷத்தை தங்களது தீர்ப்பில் காட்டியது, பகவத் கீதையை மேற்கோள் காட்டி தீர்ப்பளித்த்து சரியா? [1]

இப்படி பல உதாரணங்களை பிஜே அவர்கள் முன்வைத்தார்கள். இவைகள் அனைத்தும் நியாயமான கேள்விகளாக நமக்கு தென்படுகின்றது. ஆகவே, மேற்கண்ட விஷயங்களோடு நாம் அவரோடு ஒருமித்துப் போகலாம்.

ஒரு அரசு அலுவலகத்தில், இப்படி சாமி படங்கள் மாட்டிவைத்தால், மாற்று மத மக்கள் அங்கு ஒரு நீதிக்காகச் சென்றால், அங்கு இருக்கும் அதிகாரிகளிடமிருந்து தங்களுக்கு நீதி கிடைக்கும் என்று எப்படி நம்புவது? என்று கேள்வி எழுப்புகிறார். பெரும்பான்மையான அதிகாரிகள் உண்மையாகவும் நீதியாகவும் நடந்துக் கொள்வதால், மாற்று மத மக்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று நாம் நம்பலாம். ஆனால், சில இடங்களில் தன் இனத்தான், மதத்தான் என்ற உணர்வு சிறிது மேலோங்கி காணப்படுவதால், மதத்தின் பெயரில் அநியாயம் நடக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே இவரது கேள்விகள் நியாயமானதே.   

மதசார்பற்ற இந்தியாவின் நீதித்துறையும் சில வேளைகளில் "முஸ்லிம்களுக்கென்று தனிப்பட்ட முறையில், வேண்டுமென்றே அநியாயமான தீர்ப்பு வழங்கியதாக" இவர் சில உதாரணங்களை முன்வைத்தார். 

நான் மேலே சொன்னவைகளை நாம் மதசார்ப்பற்ற நிலையில் உற்று நோக்கினால், பிஜே அவர்கள் சொன்னவைகளில் நியாயம் இருக்கிறது என்பதை கவனிக்கமுடியும். 

இஸ்லாமியரல்லாத வாசகர்கள் இதுவரை என்னோடு கூட சேர்ந்து பிஜேவை ஆமோதித்ததற்காக என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.   இனி நீங்கள் இந்த கட்டுரையின் மீதமுள்ள விவரங்களை படிக்க வேண்டிய அவசியமில்லை, நீங்கள் விரும்பினால் இப்போதே இக்கட்டுரையை விட்டு வெளியே சென்றுவிடலாம்.  ஏனென்றால், நான் தனிப்பட்ட முறையில் பிஜே அவர்களிடம் "இஸ்லாம் பற்றிய" சில கேள்விகளை கேட்கவேண்டியுள்ளது. 

ஒரு முஸ்லிமாக இருந்துக் கொண்டு, குர்-ஆனையும், முஹம்மதுவையும் பின்பற்றிக்கொண்டு, அதனை போதனை செய்துக் கொண்டு, இஸ்லாமிய ஷரியா சட்டம் தான் உலகில் சிறந்த சட்டம் என்று நம்பும்  பிஜே போன்றவர்களுக்கு மேற்கண்ட விதமாக மதசார்பின்மைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? என்று நான் பல கேள்விகளை கேட்கவேண்டியுள்ளது. 

இந்தியாவில் முஸ்லிம்கள் சிறும்பான்மையாக இருப்பதினால், இப்படி மதசார்பின்மையை சரியாக பேணாமல் இருப்பதைப் பார்த்து கொதித்து எழும் பிஜே அவர்கள், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் இஸ்லாமிய நாடுகளில் சிறும்பான்மையினருக்கு எதிராக நடக்கும் அட்டூழியங்களை பார்த்து மௌனமாக இருப்பது ஏன்? 

முஸ்லிம்கள் சிறும்பான்மையென்றால் ஒரு நியாயம், முஸ்லிம்கள் பெரும்பான்மையென்றால் இன்னொரு நியாயமோ? என்று பல கேள்விகள் கேட்கவேண்டியுள்ளது.

பாகம் 2: பிஜே அவர்கள் உரையின் அபத்தங்கள் 

பிஜே அவர்களே, உங்களுடைய உரையை முழுவதுமாக நான் ஒலி வடியில் கேட்டேன். இவைகளை கேட்டபோது என் உள்ளத்தில் தோன்றிய எண்ணம் என்னவென்றால், "இவர் நடிக்கிறாரா? ஒரு முஸ்லிமாக இருந்துக் கொண்டு, இஸ்லாமை மறந்துவிட்டு, இப்படி வார்த்தைகளை அள்ளி வீசுகிறாரே! உண்மையாகவே இவர் ஒரு முஸ்லிம் தானா!" என்ற சந்தேகம் எனக்கு வந்தது. உங்களிடம் இதைப் பற்றி பல கேள்விகள் கேட்க வேண்டியுள்ளது.

1) பிஜே அவர்கள் முழுமனதோடு ஆதரிப்பது மதசார்ப்பற்ற அரசையா அல்லது மத சார்புள்ள இஸ்லாமிய அரசையா?

பிஜே தம்முடைய உரையில் மதசார்ப்பற்ற நாடு எப்படி இருக்கவேண்டும் என்ற இலக்கணத்தை கூறினார். சிறும்பான்மையினர் மதசார்ப்பற்ற நாட்டில் தான் மகிழ்ச்சியாக இருக்கமுடியும் அதுவும் அரசு மதசார்ப்பற்ற தன்மையை முழுவதுமாக பின்பற்றினால், உண்மையாகவே மாற்று மத சிறும்பான்மையினர் நிம்மதியாக இருக்கலாம் என்பது தான் அவரது உரையின் சாராம்சமாக தெரிகிறது.

இதிலிருந்து பீஜே அவர்கள் மதசார்ப்பற்ற அரசைத் தான் விரும்புகிறார் என்று நாம் அறிந்துக் கொள்ளலாம். ஏனென்றால், அவரது கருத்தின் படி, இப்படிப்பட்ட நாட்டில் தான் சிறும்பான்மையினரின் மனது புண்படாது, அவர்களுக்கு அதிகாரிகள் மீது நம்பிக்கை வரும், மதத்தின் அடிப்படையில் மற்றவர்கள் (பெரும்பான்மையினர்) இவர்களை துன்புறுத்தமாட்டார்கள். எனவே, மதசார்ப்பற்ற அரசு தான் சிறந்தது, அதன் ஆட்சி தான் எல்லா மக்களுக்கு ஏற்ற ஆட்சியாக இருக்கமுடியும் என்பதை பல உதாரணங்களை முன்வைத்து பேசினார். இந்தியா மதசார்ப்பற்ற நாடு என்றுச் சொல்லிக்கொண்டும், அதனை முழுவதுமாக பின்பற்றாததினால் தான் "முஸ்லிம்களாகிய" நாங்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறோம் என்று தன் மனவேதனையை கொட்டினார். இது உண்மையும் கூட, மதசார்ப்பற்ற நாட்டில் தான் (முழுவதுமாக அதனை அரசு கடைபிடித்தால்), அனைத்து தரப்பினருக்கும் நியாயம் கிடைக்கும். 

பீஜே அவர்களுக்கு கேள்விகள்:

 • ஒரு முஸ்லிமாக இருந்துக் கொண்டு, இஸ்லாமிய முறையில் ஆட்சி அமைக்கும் படி கட்டளையிடும் வேதமாகிய குர்-ஆனையும், ஹதீஸ்களையும் வைத்துக் கொண்டு, உலகம் அனைத்தும் ஒரே "மதத்தை அடிப்படையாக கொண்ட அரசின் கீழ்வரவேண்டும்", அதுவும் இஸ்லாமிய அரசாக இருக்கவேண்டும் என்று விரும்புகின்ற பீஜே அவர்களே, மதசார்பின்மையைப் பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?
 • குர்-ஆன் இறைவேதம் என்று நம்பும் அந்த நிமிடமே, மதசார்பின்மையைப் பற்றி பேசக்கூடிய தகுதியை நீங்கள் இழக்கிறீர்கள். ஒவ்வொரு முஸ்லிமும் இழக்கிறான். 
 • இஸ்லாமிய ஷரியா சட்டமும், இஸ்லாமிய அரசும் தான் சிறந்தது என்றுச் சொல்லும் அந்த நிமிடமே, மதசார்பின்மையைப் பற்றி பேசக்கூடிய தகுதியை நீங்கள் இழக்கிறீர்கள்.
 • இஸ்லாமை சார்ந்துக் கொண்டு அரசை நடத்திய உங்கள் முஹம்மதுவை பின்பற்றுகின்ற நீங்கள், மதசார்ப்பற்ற நாடு பற்றி பேச எப்படி தைரியம் கொள்கிறீர்கள்?
 • இஸ்லாமிய ஆட்சி செய்யும் நாட்டில் சிறும்பான்மையினர் வேறு மதத்தை சார்ந்து இருப்பதினால், மதத்தின் அடிப்படையில் அவர்களிடம் தனிப்பட்ட ஜிஸ்யா வரி வாங்குவது சரியா தவறா? இன்றும் இஸ்லாமிய நாடுகளில் சிறும்பான்மை கிறிஸ்தவர்கள் படும் பாடுகளை அளவிடமுடியாதது. 
 • இஸ்லாம் அங்கீகரிக்கும் "இஸ்லாமிய ஆட்சி" சிறந்ததா? அல்லது காஃபிர்களின் "மதசார்ப்பற்ற ஆட்சி" சிறந்ததா?
 • இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகள் 100% மதசார்ப்பற்றதாக காணப்படவில்லை என்பது தான் உங்களின் குற்றச்சாட்டு. இதன் அடிப்படையில் பார்த்தால், மதசார்ப்பற்ற அரசுக்குத் தான் உங்கள் ஓட்டு என்று நாம் கருதலாமா? அல்லது இந்தியாவில் சிறும்பான்மையாக முஸ்லிம்கள் இருப்பதினால், "மதசார்ப்பற்ற அரசினால்" அதிக நன்மை உண்டாகும் என்பதால், இப்படி மேடைகளில் உண்மையை மறைத்து பேசுகிறீர்களா?
 • மதத்தை சார்ந்து நடத்தும் ஆட்சியாகிய இஸ்லாமிய ஆட்சியைவிட, மதசார்ப்பற்ற அரசையே தவ்ஹித் ஜமாத் ஏற்றுக் கொள்ளும் என்று உங்களால் பொது மேடைகளில் பேசமுடியுமா?
 • மதத்தை சார்ந்து நடக்கும் இஸ்லாமிய ஆட்சிகள் அமுலில் இருக்கும் "இஸ்லாமிய நாடுகளில்" சிறும்பான்மையினருக்கு நியாயம் கிடைப்பதில்லை என்பதை உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியுமா? 

மதசார்ப்பற்ற நாடு என்று அரசியல் சாசனம் சொல்லிவிட்டபிறகும், இந்தியா போன்ற நாட்டில் பெரும்பான்மையினரால், சிறும்பான்மையினருக்கு "அனேக தீமைகள் நடக்குமென்றால்", இஸ்லாமிய நாட்டில் பெரும்பான்மையானவர்களாக முஸ்லிம்கள் இருப்பதினால், அதுவும் இஸ்லாமிய ஜாதியின் அரசியல் சாசனம் அமுலில் இருப்பதினால் அங்கு சிறும்பான்மையினருக்கு எவ்வளவு தீமைகள் விளையும்? சிந்தித்து பார்த்து இருக்கின்றீர்களா? மூளை என்று ஒன்று இருந்து, அது சரியாக வேலை செய்கிறது என்று சொல்பவர்கள் சிந்திக்கட்டும்.

இந்தியாவில் நடக்கும் அட்டூழியங்களுக்கு நான் வக்காளத்து வாங்கவில்லை, ஆனால், "மதசார்ப்பற்ற ஆட்சியைப் பற்றிப் பேச" உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? என்று கேட்கிறேன் அவ்வளவு தான். 

முஸ்லிம்களுக்கு ஒரு அநியாயம் நடந்துவிட்டால், இப்படி மேடைபோட்டு கூச்சல் போடும் நீங்கள் இஸ்லாமிய நாடுகளில் சிறும்பான்மையினருக்கு நடக்கும்  தீமைகளை பார்த்துக் கொள்ளாமல் இருப்பது ஏன்? ஒரு நாடு என்றால், அது மதத்தை சார்ந்து இருக்கக்கூடாது என்று உங்களால் சொல்லமுடியுமா? உங்களுடைய உரையின் படி, இஸ்லாமிய ஆட்சியை நீங்கள் வேறுக்கிறீர்கள் என்றும், அதில் வேற்று மத மக்களுக்கு நன்மையை விட தீமை தான் அதிகம் விளையும் என்றும் நீங்கள் சொல்ல வருகிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?

உங்கள் முஹம்மது விரும்பும் அரசு எது? மதசார்ப்பற்ற அரசையா? அல்லது மத சார்புள்ள அரசையா? முஹம்மதுவும், கலிஃபாக்களும் செய்த ஆட்சி எப்படிப்பட்டது?  உங்கள் முஹம்மதுவும், கலிஃபாக்களும் எல்லா மதத்திற்கு சம உரிமை கொடுத்து ஆட்சி புரிந்தார்கள் என்று உங்களால் சொல்லமுடியுமா? 

2) ஒரு இஸ்லாமிய தீவிரவாதிக்காக தொழுகை நடத்தி, துவா கேட்பவர்கள் உலகிற்கு எதனை சொல்ல விரும்புகிறார்கள்?

உங்கள் உரையில் "ஒரு முஸ்லிம் தீவிரவாதியாக இருந்து சட்டத்தினால் தண்டிக்கப்பட்டாலும், அவன் முஸ்லிமாக இருந்ததால், மத அடிப்படையில் நாங்கள் அவனுக்காக தொழுகை நடத்தினால் என்ன தவறு?" என்று கேட்டீர்கள்.

மேலும் கீழ்கண்ட ஒரு உதாரணத்தையும் சொன்னீர்கள். 

ஒரு மதசார்ப்பற்ற நாட்டில், ஒரு அரசு அலுவலகத்தில் ஒரு இந்து சாமியின் படம் மாட்டியிருந்தால், அந்த அலுவலகத்துக்கு நியாயம் கேட்டுச் செல்லும் ஒரு முஸ்லிம் என்ன நினைப்பான்? அந்த அதிகாரி தன் மதத்தையும், தான் ஒரு இந்து என்பதையும் வெளிப்படையாக காட்டிவிட்டார். இவரிடம் நீதி கேட்டுச் சென்றால் நிச்சயமாக நியாயம் கிடைக்காது, இவர் என் எதிராளியாகிய அந்த இந்துவுக்குத் தான் நியாயம் செய்வார் என்று நினைப்பார் அல்லவா? அரசு அலுவலகங்களில் இப்படி ஒரு மதத்தின் படங்களை மாட்டியிருந்தால், உலகிற்கு  அவர்கள் எதனை வெளிப்படுத்துகிறார்கள்? நாங்கள் இந்துக்களுக்குத் தான் நியாயம் செய்வோம் என்று சொல்வது போல ஆகுமல்லவா? என்று ஒரு எடுத்துக்காட்டைச் சொன்னீர்கள்.

உங்களின் இந்த வரிகளில் நியாயம் இருக்கிறது. ஆனால், மேலே ஒரு தீவிரவாதிக்காக மதத்தின் அடிப்படையில் தொழுகை நடத்தியது மட்டும் எப்படி நியாயம்?

தூக்கிலிடப்பட்ட தீவிரவாதிகளுக்காக முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் போது உலகிற்கு எதனை நீங்கள் சொல்லவருகிறீர்கள்? 

1. இந்திய அரசே, மாற்று மத அன்பர்களே! நீங்கள் தூக்கில் போட்ட நபர் ஒரு முஸ்லிம் ஆவார். அவரை உங்கள் சட்டம் தூக்கில்போட்டது. அவருக்காக நாங்கள் அல்லாஹ்விடம் தொழுகை நடத்தி, அவருக்காக வேண்டுதல் செய்கிறோம்.

2. அவரின் தீவிரவாத செயலினால், பல ஆயிர மக்கள் மரித்து இருந்தாலும், நாங்கள் அவருக்காக தொழுகை நடத்துவோம், வேண்டிக்கொள்வோம், ஏனென்றால் அவர் என் ஜாதிக்காரர்.

3. அவர் உங்கள் சகோதரிகளை விதவைகளாக்கினார், அனேக குழந்தைகளை அனாதைகளாக்கியிருக்கினார், பிஞ்சு குழைந்தைகளை பஞ்சு பஞ்சாக சிதறும்படி செய்தார், பல ஆயிர கோடி பொருளாதாரத்தை சேதமாக்கியிருக்கிறார், இரத்த ஆறு ஓடவைத்திருக்கிறார்.  இருந்தபோதிலும் அவர் என் ஜாதி, அவர் ஒரு முஸ்லிம் என்பதால், அவருக்காக நாங்கள் தொழுகை நடத்துவோம். 

4. உங்கள் பிள்ளைகள் அனாதைகளானால் எங்களுக்கென்ன? உங்கள் பெற்றோர்கள் கொல்லப்பட்டால் எங்களுக்கு என்ன? உங்கள் சகோதரிகள் விதவைகளானால் எங்களுக்கு என்ன?  அவர் என்னதான் செய்தாலும், அவர் ஒரு முஸ்லிம் எனவே, எங்கள் மத அடிப்படையில் அவருக்கு கொடுக்கவேண்டிய "மரியாதையை" நாங்கள் கொடுப்போம், அவருக்கு சொர்க்கம் கொடுக்கும் படி அல்லாஹ்விடம் வேண்டுதல் செய்வோம்.

5. ஒரு தீவிரவாதிக்காக தொழுகை நடத்தும் போது, மேற்கண்ட விதமாக நீங்கள் உலகிற்கு சொல்கிறீர்கள் அப்படித்தானே! "இல்லை, இல்லை, நாங்கள் அப்படி நினைக்கவிலலை? ஒரு மத சடங்கிற்காகச் தான் செய்கிறோம்" என்று சொல்வீர்களானால், உங்கள் செயலை உலக மக்கள் வேறு எப்படி எடுத்துக் கொள்வார்கள்? இதர இந்தியர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை வருமா? அல்லது கோபம் வருமா?

6. ஒரு கொடூரனுக்காக, சண்டாளனுக்காக, மக்களின் இரத்தத்தை குடித்தவனுக்காக, ஜாதி அடிப்படையில் அவனுக்கு மரியாதை செய்தால், அதன் பிறகும் இஸ்லாம் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் நன்மையாக பேச யாருக்கு மனம் வரும்? நேசித்தவர்களை பலிகொடுத்த மக்களின் புண்ணில் வேல்  பாய்ச்சும் செயல் தானே, தீவிரவாதிகளுக்காக தொழுகை நடத்துவது? உங்களின் இந்த செயல் உலகிற்கு எதனை வெளிக்காட்டுகிறது? முஸ்லிம்கள் நல்லவர்கள் என்றா இது வெளிப்படுத்தும்?  

7. எங்கள் குடும்பங்களை அழித்தவனுக்காக வேண்டுதல் செய்யும் இந்த மனிதர்கள் யார்? இவர்கள் எந்த கிரகத்திலிருந்து வந்தவர்கள்? இவர்கள்  பின்பற்றும் இஸ்லாம் எப்படிப்பட்டது? எவ்வளவு திமிரு இருந்தால், வெடிகுண்டு வைத்தவனுக்காக அல்லாஹ்விடம் தொழுகை நடத்துவார்கள் இவர்கள்? என்று சராசரி மனிதன் நினைக்கமாட்டான்? காது உள்ளவன் கேட்கக்கடவன், மூளை உள்ளவன் சிந்திக்கக்கடவன். மனிதனாக தன்னை காட்டிக்கொள்பவன் இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளக்கடவன்.

அலுவலகங்களில் சாமிபடம் மாட்டியவர்களின் செயல், தீவிரவாதிகளுக்காக தொழுபவர்களின் செயலைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு மேலானது. 

இந்தியா போன்ற மதசார்ப்பற்ற நாட்டில் அரசு சம்மந்தப்பட்ட பொதுவான இடங்களில் ஒரு பிரிவினரின் சாமி படங்கள் இருப்பது எப்படி தவறோ, அதைவிட, ஒரு தீவிரவாதிக்காக  தொழுகை நடத்தி, வேண்டுதல் செய்வதும் ஆயிரமடங்கு தவறாகும். 

முஸ்லிம்களே! உங்கள் செயல்களுக்கு பின்னால் இருக்கும் அர்த்தத்தை புரிந்துக் கொள்ளக்கூடாத நிலையில் இக்கால இஸ்லாமியரல்லாத மக்கள் இல்லை. உங்கள் ஒவ்வொரு அசைவையும், வார்த்தையையும் மக்கள் கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை மனதில் வைக்கவும். 

ஒருவனை அநியாயமாகக் கொன்றால், அவன் மனித இனத்தை கொன்றவனாவான் என்று வாய்கிழிய மேடைகளில் பேசுவது மட்டும் போதாது, அதனை செயலில் காட்டவேண்டும். உண்மையாக தீவிரவாத செயலில் ஈடுபட்டு, சட்டத்தினால் தண்டிக்கப்பட்டவனுக்கு ஜாதி அடிப்படையில் வக்காளத்து வாங்கி, அல்லாஹ்விடம் வேண்டிக்கொள்வது, மனித இனத்துக்கு செய்யும் துரோகமாகும். 

இவன் ஒரு தீவிரவாதி, இவன் அனேகரை கொன்று இருக்கிறான், இவனுக்காக நாம் தொழுகை நடத்தக்கூடாது. இவனுக்காக நாம் தொழுகை நடத்தினால், மற்ற மக்கள் நம் இஸ்லாம் பற்றி என்ன நினைப்பார்கள்? ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயம் தீவிரவாதத்துக்கு வக்காளத்து வாங்குகிறது என்று முஸ்லிமல்லாதவர்கள் நினைக்கமாட்டார்களா? என்று முஸ்லிம்கள் சிந்திக்கவேண்டும். இப்படி செய்வதை விட்டுவிட்டு, ஒரு ஜனநாயக நாட்டில், மாற்று மத மக்கள் அதிகமாக வாழும் பகுதியில் மேடையில் நின்றுக்கொண்டு வெட்கமில்லாமல் "நாங்கள் தீவிரவாதிகளுக்காக தொழுகை நடத்துவோம்" என்றுச் சொல்வது கேவலமானது, இது கண்டிக்கத்தக்கது.  இன்று மேடையில் நின்றுக்கொண்டு பயமில்லாமல், தீவிரவாதிகளுக்காக நாங்கள் தொழுகை நடத்துவோம் என்றுச் சொல்பவர்கள், அப்படிப்பட்ட தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக உதவமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? இந்திய அரசு இப்படிப்பட்டவர்கள் மீது ஒரு கண் வைக்கவேண்டும்! 

3) இஸ்லாமிய நாடுகளின் அரசு அலுவலகங்களில் இஸ்லாமிய சின்னங்களை, குர்-ஆன் வசனங்களை, படங்களை நீக்கவேண்டும் என்று நீங்கள் பரிந்துரைப்பீர்களா?

இந்திய அரசு அலுவலகங்களில் ஒரு மதத்தை சம்மந்தப்பட்ட படங்கள், சின்னங்கள் இருப்பதை குற்றம் சாட்டினீர்கள், அது சரியானதே. ஆனால், இஸ்லாமிய நாடுகளில் உள்ள அரசு அலுவலகங்களில் காணப்படும் இஸ்லாம் சம்மந்தப்பட்ட அனைத்து படங்களையும், குர்-ஆன் வசன படங்களையும், சின்னங்களையும் நீக்க நீங்கள் விரும்புவீர்களா?

4) இந்தியாவில் முஸ்லிம்களாக இருக்கும் அரசு அதிகாரிகள், சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், தங்களை மதசார்ப்பற்ற முறையில் காட்டிக் கொள்ளவேண்டும் என்று நீங்கள் சொல்வீர்களா? 

ஒரு அரசு அலுவலகத்தில் சாமி படம் வைக்கப்பட்டால், அங்கு வரும் முஸ்லிமுக்கு நம்பிக்கை அற்றுப்போகுமென்றால், இதே நாட்டில் அரசு அலுவலகங்களில் வேலை செய்யும் முஸ்லிம் அதிகாரிகள், ஊழியர்கள் தொப்பி அணியாமல், தாடி வைக்காமல், ஒரு முஸ்லிமுக்கான எந்த அடையாளத்தையும் வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்க பிஜே அவர்கள்  பரிந்துரை செய்வீர்களா?

பிஜே அவர்கள் கீழ்கண்டவாறு ஒரு அறிக்கையை வெளியிடவேண்டும் என்று ஒட்டுமொத்த காஃபிர்கள் (முஸ்லிமல்லாதவர்கள்) அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

"தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. நமது சகோதரர் பிஜே அவர்கள் கொடுத்த உரையின் அடிப்படையில், கீழ்கண்ட விதமாக TNTJவுடன் இணைந்துள்ள முஸ்லிம்கள் நடந்துக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

அரசு அலுவலகங்களில் அல்லது எல்லா மத மக்களும் ஒன்று கூடும் "பொது இடங்களில் வேலை செய்யும் முஸ்லிம்கள்" உயர்ந்த பதவிகளை வகிப்பவர்கள், இனி தாங்கள் இஸ்லாமியர்கள் என்று வெளிக்காட்டும் எதனையும் செய்யக்கூடாது. உதாரணத்திற்கு, தொப்பி அணியவேண்டாம், தாடி வையுங்கள் ஆனால், அது முஸ்லிம் தாடியாக இருக்கக்கூடாது (அது என்ன முஸ்லிம் தாடி?). அதிகமாக தொழுவதினால் நெற்றியில் உண்டான வடுவை எப்படியாவது மறைத்துவிடுங்கள். இனி பேண்ட் தைக்கும் போது கனுக்கால் அனைத்தும் மறையும் படி அணியுங்கள். உங்கள் அறையில் மற்றவர்கள் பார்க்கும் படி அலமாரியில் குர்-ஆன் இருக்குமானால், அதனை எடுத்து மறைத்துவிடுங்கள். தொழுகை நேரம் வந்தால், "நான் தொழுதுவிட்டு வருகிறேன் என்றுச் சொல்லாமல், வேறு ஒரு சாக்குபோக்கு சொல்லிவிட்டுச் செல்லுங்கள்". இப்படியெல்லாம் நீங்கள்  செய்தால், இஸ்லாமியரல்லாதவர்கள் உங்களிடம் நியாயம் நீதி கேட்க வந்தால், அவர்களுக்கு எந்த ஒரு சந்தேகமும் வராது. இது தான் உண்மையான மதசார்ப்பற்ற நாட்டில் வாழும் மக்களுக்கு (முஸ்லிம்களுக்கு) அழகு. இதனை நாம் மற்றவர்களிடம் எதிர்ப்பார்த்தது போதும், முதலாவதாக நாமே இதனை கடைபிடிப்போம், மற்றவர்களுக்கும் ஒரு எடுத்துக் காட்டாக வாழ்வோம். நம்மைக் கண்டு, மற்றவர்கள் திருந்தட்டும்.".

5) கென்னடியின் செயலை மெச்சிக்கொள்ளும் நீங்கள், இஸ்லாமிய அதிகாரிகள்/சட்டமன்ற/பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியில் இருக்கும் வரை மக்காவில் ஹஜ் செய்யமாட்டேன் என்று சொல்லவேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்களா?

பிஜே அவர்கள் தன் உரையை தொடங்கியவுடன், முதல் பந்திலேயே சிக்சர் அடிச்சார். ஆறு பந்துகளிலும் சிக்சர் அடித்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை பார்த்து இருப்போம், ஆனால், பீஜே அவர்கள், முதல் ஆறு பந்துகளையும், ஆட்டத்தின் கடைசி ஆறு பந்துகளையும் சிக்சருக்கு அடிச்சது தான் ஆச்சரியம். 

அமெரிக்க முன்னாள் அதிபர் கென்னடி, இனி தான் வாடிகன் செல்லமாட்டேன், போப்பிடம் ஆசி வாங்கமாட்டேன், என்னை கிறிஸ்தவனாக காட்டுகின்ற இந்த செயலை செய்யமாட்டேன், நான் ஒரு மதசார்ப்பற்ற நாட்டின் அதிபர், அனைத்து மக்களுக்கும் அதிபர் எனவே இந்த முடிவை நான் எடுத்தேன் என்றுச் சொன்னதை மேற்கோள் காட்டி பீஜே அவர்கள் "இதுவல்லவா மதசார்பின்மை!!!" என்று ஆச்சரியப்படுகிறார். 

இப்படி எந்த ஒரு இஸ்லாமிய நாட்டின் அதிபராவது "நான் எல்லா மக்களுக்கும் அதிபர், எனவே, இனி நான் மக்காவிற்குச் சென்று ஹஜ் செய்யமாட்டேன், நான் ஒரு முஸ்லிம் என்று காட்டுகின்ற, ஹஜ், உம்ரா போன்றவைகளை செய்யமாட்டேன்" என்றுச் சொல்வாரா? இப்படி செய்யும் படி, முதலாவது பாகிஸ்தானின் அதிபருக்கு பிஜே அவர்கள் பரிந்துரை கடிதம் அனுப்புவாரா?

இஸ்லாமிய நாடுகளை விடுங்கள், இந்தியாவையே எடுத்துக் கொள்வோம். கென்னடி சொன்னது போல, இந்தியாவில் அரசு அதிகாரிகளாக, சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களாக, மந்திரிகளாக இருக்கும் முஸ்லிம்கள் சொல்வார்களா? நான் ஆட்சியில் இருக்கும் இந்த ஐந்து ஆண்டுகளில் "ஹஜ் செய்யமாட்டேன்" என்று சொல்லவேண்டும் என்று பிஜே அவர்கள் முஸ்லிம்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுவாரா? 

கென்னடி போன்றவர்களைக் கண்டு முஸ்லிம்கள் ஆச்சரியப்படுவார்களே தவிர, முஸ்லிம்களை கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்பட வாய்ப்பே இல்லை. யார் யாருக்கு என்ன கொடுப்பனை உள்ளதோ, அது தானே கிடைக்கும்! 

6) ஒருவேளை, இந்தியாவில் 80% முஸ்லிம்கள் இருந்து, இந்துக்கள் 17%, கிறிஸ்தவர்கள் 3% இருந்தால், அரசு அலுவலகங்களில் இஸ்லாமிய சின்னங்கள், மத விஷயங்கள் ஒன்றும் இருக்காதா? அல்லது மக்கா/மதினா படங்களோடு கூட, சாமி படங்களும், இயேசுவின் படமும், புத்தரின் படமும் இருக்குமா?

இந்த கேள்விக்கு பீஜே அவர்கள் பதில் சொல்லட்டும். அதற்கு முன்பாக, ஒருவேளை தற்போது, அரசு அலுவலகங்களில் அனைவருக்கும் சம உரிமை என்ற பெயரில் எல்லா மத சின்னங்கள்/படங்கள் வைத்தால் நிலைமை எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம். கட்டுரை மிகவும் சீரியஸாக செல்வதால், கொஞ்சம் வேடிக்கையாக சிந்திக்க ஒரு கற்பனை உரையாடல். 

இடம்: இந்தியா, தமிழ்நாடு, ஒரு அரசு அலுவலகம்

பிஜே அவர்களின் உரையைக் கேட்டு, மெச்சிக்கொண்ட ஒரு இந்து அரசு அதிகாரி, தன் அலுவலகத்தில் உள்ள அனைத்து மத அன்பர்களை அழைத்து, உரையாடுகிறார்.

அரசு அதிகாரி (இந்து): நம் நாடு ஒரு மதசார்ப்பற்ற நாடு. இந்த அலுவலகத்தில் எந்த ஒரு மதத்தின் சின்னமும்/படமும் இருக்கக்கூடாது அல்லது எல்லாருக்கும் சம உரிமை இருப்பதினால், எல்லாருடைய சாமிகளின் படங்கள் வைக்க உரிமை உள்ளது. நான் இந்துக்களின் பிரதிநிதியாக "முருகரின்" படத்தை வைக்கிறேன்.

[ஒவ்வொரு ஊழியரும் தன் மதத்துக்கு சம்மந்தப்பட்ட படங்களை வைக்க முன்வந்தனர்.]

முஸ்லிம் ஊழியர்: நான் குர்-ஆன் வசனம் மற்றும் மக்கா மதினா உள்ள ஒரு போட்டோவை வைக்கிறேன். 

கிறிஸ்தவன்: நான் பைபிளின் வசனமும், இயேசு தன் இரண்டு கைகளை நீட்டி அழைப்பது போல இருக்கின்ற படத்தை வைக்கிறேன்.

புத்தமத அன்பர்: நான் தியானத்தில் இருக்கின்ற புத்தரின் படத்தை வைக்கிறேன்.

அரசு அதிகாரி (இந்து): எல்லாருடைய விருப்பமும் நிறைவேறிவிட்டதா! ரொம்ப நல்லது. இனிமேல் தான் இந்தியா உண்மையான மதசார்ப்பற்ற நாடாக மாறப்போகிறது! இப்போது கூட்டத்தை முடித்துவிடலாமா?

கூட்டத்திலிருந்து ஒரு சத்தம் வருகிறது:  "ஹலோ சார், இருங்க, இன்னும் என்னுடைய விருப்பத்தை நீங்க கேட்கவே இல்லையே!"

அரசு அதிகாரி (இந்து): யாரப்பா நீ? எல்லாரும் தங்கள் சாமியின் படங்களை வைப்பதாக சொல்லிவிட்டார்களே! நீ யார்? இந்துவா? முஸ்லிமா? கிறிஸ்தவனா? அல்லது புத்தமதமா?

அந்த நபர்: சார், நான் நாத்தீகன். நான் என்ன படம் வைக்க?

[எல்லாரும் ஆச்சரியத்தில் முழ்கி விட்டார்கள்…..]

அரசு அதிகாரி (இந்து): நீங்க எந்த படமும் வைக்கமுடியாது தம்பி! உங்களுக்குத் தான் நம்பிக்கையே இல்லையே!

நாத்தீகர்: சாரி சார், நாங்களும் நம்புகிறோம், எங்களுக்கும் நம்பிக்கை உள்ளது.

அரசு அதிகாரி (இந்து): ஆச்சரியமாக இருக்கிறதே! நீங்க எந்த இறைவனை நம்புகிறீங்க?

நாத்தீகர்: "எந்த இறைவனும் இல்லை" என்பதை நம்புகிறோம். இதுவும் ஒரு நம்பிக்கைத் தானே.  

"இறைவன் இருக்கிறார்" என்று நம்புவது உங்கள் நம்பிக்கை, 

"இறைவன் இல்லை" என்று நம்புவது எங்கள் நம்பிக்கை. 

ஆக, உங்களுக்கும் நம்பிக்கை உண்டு, எங்களுக்கும் நம்பிக்கை உண்டு. எல்லாருக்கும் சம உரிமை என்றால் எனக்கும் உரிமை தரனும். 

அரசு அதிகாரி (இந்து):முருகா! எப்படிப்பட்ட பிரச்சனையில் என்னை மாட்டவைத்துவிட்டாய்! சரி, நீங்க என்ன படம் மாட்டப்போகிறீங்க அதைச் சொல்லுங்க.

நாத்தீகர்: எங்களுக்கு எந்த படமும் இல்லை. எப்படிப்பட்ட படம் மாட்டலாம் என்று நீங்க எல்லாரும் சேர்ந்து எனக்கு ஐடியா சொல்லுங்க.

அரசு அதிகாரி (இந்து): ஒரு நாத்தீகனின் "இறைவன் இல்லை" என்ற கோட்பாட்டை நிலை நாட்ட, ஒரு ஆத்தீகன் ஐடியா தரணுமா? நல்ல இருக்கு தம்பி உங்க கேள்வி?

[ஒரு முஸ்லிமுக்கு ஒரு ஐடியா வருகிறது….]

முஸ்லிம் ஊழியர்: ஒன்று செய்யலாம், ஒரு வெள்ளை காகிதத்தை அப்படியே பிரேம் போட்டு மாட்டுவோம். அது நாத்தீகத்துக்கு சரியாக இருக்கும்.

[எல்லாரும் ஆச்சரியத்தோடு அந்த முஸ்லிமின் பக்கம் பார்க்கிறார்கள்… இதுவும் சரியான ஐடியாவாக இருக்கிறதே என்று சிலர் சிந்திக்கிறார்கள்]. 

நாத்தீகர்:  வேண்டாம் வேண்டாம்!  ஒன்றுமே இல்லாத படத்தை மாட்டினால், இறைவனை நம்பும் உங்களைப்போல ஆத்தீகர்கள், அந்த வெள்ளைப்படத்தேயே உற்றுப்பார்த்து, ஏதோ உருவம் தெரிகிறது என்றுச் சொல்லி, கதை விடுவார்கள். இந்த ஐடியாவினால் ஆத்தீகனுக்கு புதிய ஐடியா வர நான் அனுமதிக்கமாட்டேன். இந்த ஐடியா சரியாக இல்லை.

புத்தமத அன்பர்: அப்படியானால், கருப்பு காகிதத்தை பிரேம் போட்டு மாட்டுவோமா? அதில் ஒன்றும் தெரியாதே! நீங்களும் கருப்பு உடை தான் அணிகிறீங்க தானே!

[கிறிஸ்தவன் சும்மா  இருப்பானா….உடனே அவன் எழுந்து…]

கிறிஸ்தவன்: வேண்டாம்.. கருப்பு படம் மாட்டினால், அது சாத்தானை குறிக்கும். சிலர் இந்த படத்தைப் பார்த்து சாத்தானை வணங்குபவர்கள் இங்கு இருப்பதாக நினைத்துவிடுவார்கள், இது சரிபட்டு வராது.

அரசு அதிகாரி (இந்து): எந்த ஒரு வண்ணத்தை எடுத்தாலும் பிரச்சனையாக இருக்கிறது. இப்போது என்ன தான் செய்வது?

[அந்த முஸ்லிமுக்கு இன்னொரு ஐடியா வருகிறது….]

முஸ்லிம் ஊழியர்: இது சரியாக இருக்கும். தமிழ் நாட்டில் நாத்தீகம் என்றால் நமக்கு ஞாபகம் வருவது "பெரியார் தான்" எனவே அவரது போட்டோவை வைத்துவிடுவோம். எப்படி ஐடியா?

அரசு அதிகாரி (இந்து): ஐடியா நல்லா இருக்கு, ஆனால், தமிழ் நாட்டில், திமுக, முதற்கொண்டு பெரும்பான்மையான கட்சிகள்  "பெரியாரின்" படத்தை வைத்து தான் கட்சி நடத்துகிறார்கள். சிலர் நம் அலுவலகத்தை பார்த்து "கட்சி அலுவலகம்" என்று நினைத்துவிடுவார்கள். உடனே வேறு ஒருவன் "அண்ணாவின்" போட்டோவும் வைக்கவேண்டும் என்றுச் சொல்லுவான். இது சரிப்பட்டு வராது.

நாத்தீகன்:  ஒன்று செய்வோம், நாத்தீகர்களுக்கு சம உரிமை கொடுத்து திருப்தி படுத்த, உங்கள் படங்கள் அனைத்தும் நீக்கிவிடுங்க. அது சரியாக இருக்கும்.

[அனைவரும்….. சத்தமாக…..]

இது முடியாது, ஒரு போட்டோவும் இல்லையானால், அது நாத்தீகம் மட்டும் இருப்பதாக ஆகிவிடுமே! இதனை நாங்கள் ஒப்புக் கொள்ளமுடியாது.

இந்த பிரச்சனையை தீர்ப்பதெப்படி….. எனக்குத் தெரியாது. ஐடியா இருப்பவர்கள் சொல்லலாம்…..

வாழ்க்கையை ரொம்பவும் சீரியஸாக எடுத்துக் கொள்ளக்கூடாது எனவே தான் மேற்கண்ட உரையாடல்… 

சரி பீஜே அவர்களின் முடிவுரைக்கு போவோமா….?

7) மேடையில் நீங்கள் முடிவுரையில் சொன்ன "விஷயம்" வெறும் மேடைப்பேச்சுக்காகவா அல்லது தனிப்பட்ட முறையிலும் முஸ்லிம்களுக்கு இதே போதனையை செய்வீர்களா?

இஸ்லாமிய நாடுகளில் வாழும் முஸ்லிம் அறிஞர்களின் மேடைப்பேச்சுக்களை கேட்கும் போது, அவர்கள் மக்கள் வன்முறையில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் படி பேசுகிறார்கள். ஆனால், நம் தமிழ் நாட்டின் இஸ்லாமிய அறிஞர் பிஜே அவர்கள் முஸ்லிம்களுக்கு "நம் எதிரிகள் பற்றி அல்லாஹ்விடம் முறையிடுங்கள், நியாயம் கிடைக்கும்படி கெஞ்சுங்கள், அவன் பார்த்துக் கொள்வான், நீங்கள் வன்முறையில் ஈடுபடவேண்டாம்" என்று சொன்னது, ஆச்சரியமான விஷயம். ஆனால், மேடையில் மட்டும் இப்படி சொல்கிறாரா? அல்லது இவரது தனிப்பட்ட உரையாடல்களிலும் முஸ்லிம்களுக்கு இப்படியே அறிவுரை கூறுகிறாரா? என்பது தான் சந்தேகம். 

இவரைப்போலவே, உலக முஸ்லிம் அறிஞர்கள் அனைவரும் தங்கள் மார்க்க மக்களுக்கு போதனை செய்திருந்தால், செய்துக் கொண்டு இருந்தால், இனி செய்தால், "இஸ்லாம் அமைதி மார்க்கமல்ல" என்று சொல்லக்கூடிய தைரியம் யாருக்கு வரும்?

பிஜே அவர்களே வாழ்க! 

கடைசியாக, அந்த கட்டுரை கீழ்கண்ட விதமாக முடிகிறது:

"முஸ்லிம்களின் கோபத்தை கொபளிப்பதாகவும், ரணமாக வேதனை பட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்களின் உள்ளத்திற்கு ஆறுதலாகவும், இஸ்லாமியர்களிடத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சியை பறைசாற்றும் விதமாகவும் இந்த பொதுக்கூட்டம் ஒரு மாநாட்டைப் போல மக்கள் திரளால் நிரம்பி வழிந்தது."[1]

இந்த உரையை கேட்ட ஒவ்வொரு முஸ்லிமும் ஆறுதல் அடைந்தார் என்று சொல்வது ஏற்கத்தக்கது அல்ல, ஏனென்றால், இவரது உரையை கேட்ட ஒவ்வொரு முஸ்லிமுடைய உள்ளத்தில் "இன்னும் பயம் அதிகரித்து இருந்திருக்கும்", இந்தியாவில் இப்படியாக நம்மை அநியாயமாக நடத்துகிறார்களா? என்ற கேள்வி எழும், மேலும், "இந்திய நீதித்துறை மீதும், சட்ட ஒழுங்கு மீதும், அரசியல் சாசனம் மீதும் இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் இவரது உரையை கேட்ட முஸ்லிம்களுக்கு இனி இருக்காது".

"ஒரு நாட்டின் நீதித்துறை மீது, சட்டத்தின் மீது, அரசின் மீது ஒரு குடிமகன் நம்பிக்கையை இழப்பானானால், அவனை சில தீய சக்திகள் தவறாக பயன்படுத்திக் கொண்டு, பல தீய செயல்கள் நாட்டில் நடக்கும் படி செய்துவிடுவார்களோ" என்ற பயம் எனக்குள்ளது.  பிஜே அவர்களின் இப்படிப்பட்ட உரையாடல் "முஸ்லிம்களில் இருக்கும் வாலிபர்களில்  சிலர் தீவிரவாதத்தை நோக்கிச் செல்ல மறைமுகமாக வழி வகுத்துவிடும் அபாயம் உள்ளது".  எழுச்சி பொங்க பேசுவதில் தவறு இல்லை, ஆனால், எதைப் பற்றி "இப்படி எழுச்சி பொங்க பேசுகிறோம்" என்பது தான் கவனிக்கத்தக்கது. 

 • நாட்டு மக்களே! எச்சரிக்கையாக இருங்கள். 
 • முஸ்லிம்களே! உங்கள் அறியாமையை சில தீய சக்திகள் தவறாக பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்காதிருங்கள். 
 • இந்திய நாட்டு அரசங்கமே! மதசார்பின்மையை ஏட்டில் மட்டுமல்ல, செயலிலும் காட்ட முயற்சி எடு.
 • பிஜே அவர்களே! உங்கள் உரையை தயாரிக்கும் போது, பல முறை சிந்தித்து தயாரியுங்கள், உங்கள் முஸ்லிம் சமுதாயத்தில்  அனேகர் அறியாமையில் இருக்கிறார்கள். சில இஸ்லாமிய விஷமிகள் அவர்களின் அறியாமையில் குளிர் காய அனுமதிக்காதீர்கள். இதனை எப்படி தடுப்பீர்கள்? முதல் வழி, இந்திய அரசாங்கத்தில் உள்ள ஓட்டைகளை மக்களுக்கு போதிக்கும் போது, பல விளைவுகளை கவனத்தில் கொண்டு போதியுங்கள். இந்தியாவை நேசிக்காதவன், அதற்கு தீமை செய்ய சீக்கிரம் தன் கையை ஓங்குவான். முஸ்லிம்கள் இந்தியாவை நேசிக்கிறார்கள் என்று நம்புகிறேன்! என் நம்பிக்கையில் மண்ணைவாரி போட்டுவிடாதீர்கள்.