9/11: மக்காவில் கிரேன் விபத்து – இது தேவனின் கைவேலையா? பாகம் 2
முன்னுரை: இந்த தலைப்பில் எழுதப்பட்ட முதல் பாகத்தை இங்கு படிக்கவும்:
9/11: மக்காவில் கிரேன் விபத்து – இது அல்லாஹ்வின் கைவேலையா? பாகம் 1
மக்காவில் நடந்த கிரேன் விபத்தில் அல்லாஹ்வின் அற்புதம் (செயல்) ஏதாவது காணப்படுகின்றதா? என்பதை கவனியுங்கள் என்று முஸ்லிம்களுக்கு ஒரு கேள்வியை முதல் பாகத்தில் முன்வைத்தேன்.
இரண்டாம் பாகத்திற்கான நோக்கம்:
இந்த விபத்துப் பற்றி சில தளங்களில் நான் பல பின்னூட்டங்களைப் படித்தேன். இந்த கிரேன் விபத்தை பைபிளின் தேவன் தான் செய்திருக்கிறார் என்று சிலர்பின்னூட்டமிட்டிருந்தனர். அவைகள் என்னை சிறிது கலங்க வைத்துவிட்டன. முக்கியமாக, சில கிறிஸ்தவர்களும், நாத்தீகர்களும் கொடுத்த பின்னூட்டங்கள் ஆழமாக சிந்திக்காமல் கொடுத்த மேலோட்ட விவரங்கள் என்பதை உணர்ந்துக் கொண்டேன். எனவே இதைப் பற்றி, சில விஷயங்களை கிறிஸ்தவர்களோடு பகிர்ந்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இந்த இரண்டாம் பாகத்தை எழுதுகிறேன். முக்கியமாக இஸ்லாமிய தீவிரவாத செயல்கள் பற்றியும், அவைகளால் பாதிக்கப்படும் கிறிஸ்தவ திருச்சபை மற்றும் இதர மக்கள் அறியவேண்டியவைகளைப் பற்றியும் என் புத்திக்கு எட்டியதை நான் இக்கட்டுரையில் எழுதுகிறேன். இதனை கேள்வி பதில் நடையில் எழுதுகிறேன்.
கேள்வி 1: இவ்வாண்டு 9/11ம் அன்று அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் இருந்த இடத்தில் "தீவிரவாத தாக்குதலால் மரித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டபோது" வானத்தில் வானவில் காணப்பட்டது. அதே நாள் மக்காவில் காபாவிற்கு அருகில் மின்னல் தோன்றியது, பலத்த காற்று கிரேனை விழ வைத்தது. இது உடனிகழ்வு (co-incident) அல்ல. இது நிச்சயமாக தேவச்செயலாகத் தான் இருக்கவேண்டும்? பைபிளின் தேவன் தான் இதனை செய்திருக்கவேண்டும்!
உமரின் பதில்: இந்த செய்தி உண்மையானதா என்பதை இதுவரை யாரும் சரி பார்க்கவில்லை. அந்த நாள் உண்மையாகவே அமெரிக்காவில் வானவில் காணப்பட்டதா, மக்காவில் மின்னல் காணப்பட்டதா, இந்த புகைப்படங்கள் அந்த குறிப்பிட்ட நாட்களில் எடுத்தவைகளா?
- http://toprightnews.com/breaking-you-wont-believe-who-owned-the-crane-that-collapsed-in-mecca-today/
- https://twitter.com/DefendGlenn/status/642460402912247813/photo/1
- https://twitter.com/RT_com/status/642386111780798464/photo/1
ஒருவேளை அமெரிக்காவின் வானவில்லும், மக்காவின் மின்னலும் உண்மையாக இருந்தாலும், இதனால் எந்த ஒரு சத்தியமும் நிலைநாட்டப்படப்போவதில்லை. ஏனென்றால், அமெரிக்கா போன்ற நாடுகளில் அதுவும் இம்மாதங்களில் (இலையுதிர் காலம்) மழையும், வானவில்லும் தெரிவது சர்வசாதாரணமே. அதே போல, சௌதி அரேபியாவில் காற்றும் மணற்புயலும் இக்காலங்களில் சாதாரணமாகும். இது ஒரு உடனிகழ்வு (co-incident) என்றுச் சொல்லமுடியுமே தவிர, இது இறைச்செயல் என்றுச் சொல்லமுடியாது. இக்கட்டுரையில் உள்ள அனைத்து பதில்களையும் படித்தால் இதனை சரியாக புரிந்துக் கொள்ளமுடியும்.
கேள்வி 2: மக்காவின் கிரேன் விபத்து 9/11 அன்று நடந்ததால், பைபிளின் தேவன் தான் இதனை செய்தார் என்று கருதலாம் அல்லவா?
உமரின் பதில்: நிச்சயமாக இல்லை. இதனை பைபிளின் தேவன் செய்யவில்லை என்று என்னால் சொல்லமுடியும். நாம் திரும்ப கேட்கும் கேள்வி: ஏன் தேவன் மக்காவில் விபத்தை 9/11 அன்று செய்யவேண்டும்?
தேவனுக்கு தேவைப்பட்டால் அவர் எந்த நாளிலும் செய்வார், இதே நாளில் செய்யவேண்டிய அவசியமில்லை. 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதியில் இஸ்லாமிய தீவிரவாதிகள் ஒரு தீய செயலை நடத்தினார்கள், அதற்காக தேவன் 14 ஆண்டுகள் கழித்து ஏன் பழி வாங்குவார்? இதற்கு முன்பு 13 செப்டம்பர்கள் வந்தது, அப்போது ஏன் தேவன் இதனைச் செய்யவில்லை? மேலும் மனிதனைப்போல தேவன் பழி வாங்க மாட்டார். அவர் ஞானத்தை யாரும் அறியமுடியாது.
அமெரிக்காவில் தீவிரவாத செயலுக்கு தேவன் பழி வாங்கினால், இந்தியாவில் நடந்த தீவிரவாத செயலுக்கு எப்போது பழி வாங்குவார்? மேலும் இதர நூற்றுக்கணக்கான தீவிரவாத தாக்குதல்களுக்கு எப்போது அவர் பழி வாங்கப்போகிறார்? தன் சொந்த ஜனங்கள் என்று பழைய ஏற்பாட்டில் வாக்குக் கொடுத்த யூத ஜனங்கள் மீது (இஸ்ரவேலில்) நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எப்போது பதில் தரப்போகிறார்?
எனவே, தேவன் தான் இந்த நாளில் மக்காவில் கிரேன் விபத்தை செய்யவைத்தார் என்றுச் சொல்வது, தேவனைப் பற்றிய சரியான அறிவு இல்லாதவர்கள் சொல்லும் விவரமாகும். ஆனால், ஒன்றை மட்டும் ஒப்புக்கொள்ளவேண்டும், அது என்னவென்றால், "தேவனுக்கு எல்லாம் முன்கூட்டியே தெரியும் என்பதாகும், அதாவது இந்த விபத்து அவருக்கு தெரிந்தே நடந்துள்ளது, அதனை அவர் தடுக்கவில்லை என்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்". முஸ்லிம்களும் இதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறார்கள், அதாவது அல்லாஹ்விற்கு இந்த விபத்து பற்றித்தெரியும் ஆனால், அவர் அதனை தடுக்காமல், அது நிகழ அனுமதித்துள்ளார் என்பதாகும். ஏன் இறைவன் விபத்துக்களை உலகில் அனுமதிக்கிறார், அதுவும் தன்னை வணங்குமிடங்களிலும் ஏன் அனுமதிக்கிறார்? என்று நாத்தீகர்கள் கேட்கும் கேள்விக்கு இக்கட்டுரையில் பதில் தரமுடியாது, அது மிகப்பெரிய தலைப்பாகும், அது இக்கட்டுரையின் தலைப்பிற்கு அப்பாற்பட்டதாகும்.
கேள்வி 3: 9/11ல் மரித்தவர்கள் 3000 பேரில், 100 பேர் தேவனால் பழிவாங்கப்பட்டனர், மீதமுள்ளது 2900 பேர். கணக்கு சரி தானே!
உமரின் பதில்: இந்த கேள்வியைப் பார்த்தால், அமெரிக்காவிற்காக மட்டுமே தேவன் செயல்படுகிறார் என்று சொல்வது போல் இருக்கிறது. நீங்கள் கேட்பது உண்மை என்று நினைத்தால், உலகில் எந்த நாட்டில் தீவிரவாத செயல் நடைப்பெற்றாலும், அந்த நாட்டுக்காக தேவன் தனிப்பட்ட முறையில் பழி வாங்க வேண்டும். அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பதை மறக்கவேண்டாம்.
மேலும் பழிவாங்க வேண்டுமென்றால், பின் லாடனின் தீவிரவாத குழுவில் உள்ளவர்களை அல்லவா தேவன் பழி வாங்கி இருக்கவேண்டும்? அதை விட்டுவிட்டு, மக்காவில் விபத்தை செய்வித்து ஏன் அப்பாவி முஸ்லிம்களை கொல்லவேண்டும்? உங்கள் கணக்கு சரியில்லை. உங்கள் கணக்கில் அனேக பிழைகள் உள்ளன.
கேள்வி 4: உபாகமம் 32:35ல் பழிவாக்குவது எனக்கு உரியது, அதனை நான் செய்வேன் என்று கர்த்தர் சொல்கிறார். இதன் படி, கர்த்தர் பழி வாங்கினார் என்று சொல்லலாம் அல்லவா?
உமரின் பதில்: இல்லை, கர்த்தர் பழி வாங்கினார் என்று சொல்லமுடியாது. ஒரு மனிதனை இன்னொரு மனிதன் பழி வாங்க துடிக்கக்கூடாது என்றும், மனித சமுதாயத்தில் பழிவாங்கும் எண்ணமுடையவர்களால் அதிக தீமைகள் விளையும் என்பதாலும் கர்த்தர் "பழிவாங்குவதும், பதில் அளிப்பதும்" எனக்கு உரியது. அதனை மனிதர்களே, நீங்கள் செய்யாதீர்கள் என்று எச்சரித்துள்ளார். இதைத் தான் உபாகமம் 32:35ல் படிக்கிறோம்.
உபாகமம் 32:35 பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது; ஏற்றகாலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடும்; அவர்களுடைய ஆபத்துநாள் சமீபமாயிருக்கிறது; அவர்களுக்கு நேரிடும் காரியங்கள் தீவிரித்து வரும்.
இந்த ஒரு வசனமல்ல, பைபிளில் அனேக இடங்களில் இதைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது.
ரோமர் 12:19 பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.
எபிரேயர் 10:30 பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பார் என்றும் சொன்னவர் இன்னாரென்று அறிவோம்.
இந்த வசனத்தோடு, மக்காவின் கிரேன் விபத்தை முடிச்சு போடுவது சரியானதன்று. இவ்வசனங்கள் தனி மனிதன் வாளை ஏந்தி பழி வாங்கக்கூடாது என்றும், அதனை அரசாங்கம் செய்யவேண்டும், அல்லது இறைவன் பார்த்துக் கொள்வான் என்றும் தெரிவிக்கவே சொல்லப்பட்டது.
கர்த்தர் பழி வாங்குவது உண்மை தான், ஆனால் இப்படி விபத்துக்களினால் அல்ல. மேலும், கிறிஸ்தவத்தின் படி, இவ்வுலகை இப்போதைக்கு அவர் கிருபையின் கீழ் விட்டுள்ளார். மனிதன் உலகில் செயல்படுத்தும் ஒவ்வொரு வன்முறை செயலுக்கும் தேவன் இவ்வுலகிலேயே இப்போதே பழிவாங்க வேண்டுமென்றால், உலகம் ஒரே நாளில் சுடுகாடு ஆகிவிடும்.
உலக வர்த்தக மையத்தை விடுங்கள், அது மதசார்பற்ற ஒரு வியாபார ஸ்தலம். இப்போது இதை கவனியுங்கள். இஸ்லாமிய நாடுகளில் கிறிஸ்தவ சபைகள் எரிக்கப்படுகின்றன, சபைகளில் தீவிரவாதிகள் நுழைந்து ஆராதனை செய்துக் கொண்டு இருக்கும் மக்களை சுட்டுத்தள்ளுகிறார்கள். சமீப காலமாக ஐஎஸ் என்ற பெயரில் இயங்கிக்கொண்டு இருக்கும் இன்னொரு இஸ்லாமிய தீவிரவாத இயக்கம், திருச் சபைகளை இடித்து, கிறிஸ்தவர்களை சுட்டுத் தள்ளுகிறது, இஸ்லாமிய நபி முஹம்மது செய்தது போல, பெண்களை அடிமைகளாக விற்றுக் கொண்டு இருக்கிறது, பெண்கள் கற்பழிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
தேவன் உடனே பழிவாங்க வேண்டுமென்றால், இந்த இயக்கத்தில் இருப்பவர்களை அல்லவா கொல்லவேண்டும்? அதை விட்டுவிட்டு, ஏன் அப்பாவி முஸ்லிம்களை மக்காவில் கொல்லப்போகிறார்? லாஜிக் புரிகின்றதா?
கர்த்தருடைய நேரம் இன்னும் வரவில்லை, அவருக்கென்று ஒரு காலத்தை நியமித்து இருக்கிறார். அந்த நேரம் வரும்வரை, வெளிப்படுத்தின விசேஷத்தில் சொல்லியபடி, நாம் நம் வேலையை செய்துக் கொண்டு இருப்போம்.
வெளி 22:10 பின்னும், அவர் என்னை நோக்கி: இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களை முத்திரை போடவேண்டாம்; காலம் சமீபமாயிருக்கிறது.
22:11 அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
22:12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
எனவே, உபாகமம் 32:35ம் வசனத்துக்கும், இந்த மக்காவின் கிரேன் விபத்துக்கும் சம்மந்தமில்லை.
கேள்வி 5: இஸ்லாமியர்களின் புனித வணக்கஸ்தலம் மக்காவில் விபத்துக்களினால்/நோய்களினால்/நெரிசல்களினால் முஸ்லிம்கள் மரிப்பது வித்தியாசமானதாக இருக்கின்றதல்லவா? இப்படி மற்றவர்களின் வணக்கஸ்தலங்களில் நடப்பதில்லையே! இது நமக்கு எதனை காட்டுகிறது? முஸ்லிம்களுக்கு எதிராக இறைச்சக்தி செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது என்பதை காட்டுகின்றதல்லவா?
உமரின் பதில்: இஸ்லாமுக்கு எதிராக இறை சக்தி செயல்பட்டுக்கொண்டு இருப்பதை நான் அறிவேன், ஆனால் இஸ்லாமியர்களுக்கு எதிராக அது செயல்படவில்லை என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளவேண்டும். அதற்கு பதிலாக, முஸ்லிம்களுக்கு ஆதரவாக தேவ அன்பு தன் இரு கரங்களை நீட்டி அழைத்துக் கொண்டு இருக்கிறது, அவர்களை பரலோக பிரஜைகளாக மாற்றுவதற்கு முழூமூச்சில் ஊழியங்கள் நடைப்பெற்றுக்கொண்டு இருக்கின்றன, இதனை மறந்துவிடவேண்டாம்.
உங்கள் கேள்விக்கு வருகிறேன்.
புனித ஸ்தலங்களில் அல்லது வணக்க ஸ்தலங்களில் மக்கள் மரிப்பது இஸ்லாமுக்கு மட்டும் சொந்தமானதல்ல. ஒவ்வொரு மதத்திலும் இது நடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறது. முக்கியமாக, கிறிஸ்தவ வணக்கஸ்தலங்களிலும் மக்கள் மரிக்கிறார்கள். இதனை கர்த்தர் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார். ஆனால், இம்மரணங்களுக்காக யார் காரணமாக இருக்கிறார்களோ, அவர்களுக்கு அய்யோ!
கிறிஸ்தவ மதத்தலங்களில் மரணங்கள்:
உலகிலேயே இதர மக்களின் கரங்களில் மாட்டிக்கொண்டு அதிகமாக அவதிப்படும் மக்கள் "கிறிஸ்தவர்கள் தான்" என்று ஒரு செய்தியில் படித்த ஞாபகம்.
- முதலாவதாக, சுனாமி, பூகம்பம் மற்றும் இதர விபத்துக்களினால் எல்லா வகையான மார்க்க மக்களும் மரிக்கிறார்கள். இதில் கிறிஸ்தவர்களும் உண்டு, இதில் எந்த பாகுபாடும் இறைவன் காட்டுவதில்லை.
- இது போதாது என்று, இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்கள் அவர்கள் தங்கள் திருச்சபைகளில் தொழுதுக் கொண்டு இருக்கும்போதே, இஸ்லாமிய தீவிரவாதிகளால் தாக்கப்படுகிறார்கள், சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.
- சில இஸ்லாமிய நாடுகளில் கிறிஸ்தவ சிறுமிகள், வாலிபப் பெண்கள் சில முஸ்லிம்களால் கடத்தப்பட்டு, பல நாட்கள் அவர்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். அதன் பிறகு கற்பழித்தவனே திருமணம் செய்துக் கொள்கிறான், அப்பெண்களை முஸ்லிம்களாக மாற்றிவிடுகிறார்கள்.
- சரி இந்தியாவிற்குள் இருக்கும் கிறிஸ்தவர்களாவது சுதந்திரமாக தொழுதுக் கொள்ள முடிகிறதா? என்று பார்த்தால், அவ்வப்போது சில சர்சுக்கள் சில இந்துக்களால் கொலுத்தப்படுகின்றன, கிறிஸ்தவர்கள் தாக்கப்படுகிறார்கள்.
- இது போதாது என்றுச் சொல்லி, சமீப காலமாக, ஐஎஸ் என்ற இஸ்லாமிய தீவிரவாத இயக்கம், தன் பங்கிற்கு மிகப்பெரிய அளவில் கிறிஸ்தவர்களையும், அவர்கள் வணக்கஸ்தலங்களையும் தீக்கிரையாக்கிக் கொண்டு இருக்கிறது. கிறிஸ்தவர்களை அவர்கள் வணக்கஸ்தலங்களிலேயே தாக்குவது தீவிரவாதிகளுக்கு ஒரு பேஷனாகிவிட்டது.
இஸ்லாமிய மதத்தலங்களில் மரணங்கள்:
சில இஸ்லாமியர்களால் கிறிஸ்தவர்களும், இதர மக்களும் பாதிக்கப்படுகிறார்களே! குறைந்தபட்சம் தங்கள் சொந்த இனமாகிய இஸ்லாமியர்களாவது சுகமாக இருக்கிறார்களா? என்று கேள்வி கேட்டால் அதுவும் இல்லை.
என் கருத்துப்படி, கிறிஸ்தவர்களுக்கு அடுத்தபடியாக, அதிகமாக அவதிக்குள் உட்படுத்தப்படுவது முஸ்லிம்கள் என்றுச் சொல்லுவேன். நான் கருத்துக் கணிப்பு எதுவும் எடுக்கவில்லை. அனுதினமும் செய்தித் தாள்களைப் பார்த்தால், ஒரளவிற்கு இதனை அறிந்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு:
- சுன்னி முஸ்லிம் தீவிரவாதிகள் ஷியா முஸ்லிம் மசூதிகளில் வெடிகுண்டு வைக்கிறார்கள்.
- ஷியா முஸ்லிம் தீவிரவாதிகள் சுன்னி முஸ்லிம் மசூதிகளில் வெடிகுண்டு வைக்கிறார்கள். இரண்டும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் தானே, எப்படி அவர்களால் வேறு விதமாக செயல்படமுடியும்?
- ஈரான் ஈராக் சண்டைகள், சத்தாம் உசேனின் குவைத் ஆக்கிரமிப்பு. இதில் மரித்த முஸ்லிம்கள்.
- இது போதாவது என்று மேற்கத்திய நாடுகள் இடையில் நுழைந்து "நான் உதவி செய்கிறேன் என்றுச் சொல்லி உதவிக் கரம் நீட்டியதால்", நடந்த சண்டைகள் இவைகளில் மரித்த முஸ்லிம்கள்.
- இதுவரை இக்கட்டுரையை மூச்சு பிடித்துக் கொண்டு படித்துவிட்ட முஸ்லிம்கள் எதிர்ப்பார்க்கும் அடுத்த பாயிண்ட் எதுவாக இருக்கும்? ஆம் அதுதான், மத்திய கிழக்கு நாடுகளில் நடந்துக் கொண்டு இருக்கும் டாம் அண்டு ஜெர்ரி சண்டை (Tom & Jerry). இன்னுமா உங்களுக்கு புரியவில்லை? அது "இஸ்ரவேல் மற்றும் பாலஸ்தீனா சண்டை" ஆகும். இதில் மரித்த முஸ்லிம்கள், மரித்துக் கொண்டு இருக்கும் முஸ்லிம்கள் மற்றும் மரிக்கப்போகும் முஸ்லிம்கள். இப்போதைக்கு மரித்த யூதர்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டாம்.
- இப்படி பல வகைகளில் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துக் கொண்டு இருக்கும் முஸ்லிம்களுக்கு புதிய தலைவலியாக மாறியது ஐஎஸ் என்ற இஸ்லாமிய தீவிரவாத இயக்கம். இந்த ஐஎஸ் தீவிரவாதத்தை உருவாக்கியது யார் என்று தெரிந்துக் கொள்ள, ஐஎஸ் தீவிரவாதிகளின் நம்பிக்கைகள் என்ன? அவர்கள் எவைகளை உலகில் ஸ்தாபிக்க நினைக்கிறார்கள்? போன்றவற்றை இணையத்தில் தேடிப்பார்த்து படித்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு கடினமாக இருந்தால், குர்-ஆனையும், ஹதீஸ்களையும் முஹம்மதுவின் வாழ்க்கையையும் ஒரு முறை படித்துப் பாருங்கள், ஓரளவிற்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பற்றிய துப்பு கிடைக்கும்.
- உலகிலேயே, தன் இன மக்களால் தாங்களே அதிகமாக கொல்லப்படும் அவல நிலை முஸ்லிம்களுக்கு மட்டுமே உள்ளது என்றுச் சொன்னால், அது மிகையாகாது. அவ்வப்போது ஆங்காங்கே இப்படி தங்கள் இனத்தை அழிக்க துடிக்கும் சர்வாதிகாரிகள் தங்கள் இனத்திலேயே உருவாக்கப்பட்டது உண்டு, ஆனால், இந்த இஸ்லாமில் மட்டுமே, அப்படிப்பட்டவர்கள் தொடர்ந்து உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள், இன்னும் இஸ்லாம் உலகில் இருக்கும் வரை உருவாகிக்கொண்டே இருப்பார்கள்.
- சௌதி அரேபியாவிற்கு வெளியே மசூதிகளில் மரிக்கும் முஸ்லிம்களை ஆறுதல் படுத்தும் விதமாக, அவ்வப்போது இஸ்லாமின் புனித பூமியாகிய மக்காவிலும், முக்கியமாக காபா இருக்கும் ஸ்தலத்திலும் பல மரணங்கள் நிகழ்ந்து விடுவதுண்டு. இவ்வாண்டு (2015) காபாவிற்கு அருகில் ஒரு கிரேன் விழுந்து 100க்கும் அதிகமானோர் மரித்தனர். நேற்று ஹஜ்ஜின் போது 700க்கும் அதிகமானோர் நெரிசலினால் மரித்தனர். இவையெல்லாம் வணக்க ஸ்தலங்களில் நடக்கும் மரணங்கள். நல்லவேளை, ஒவ்வொரு கிறிஸ்தவனும் எருசலேமுக்கு ஒவ்வொரு ஆண்டும் புனித யாத்திரை செய்யவேண்டும், அங்கு சென்று சாத்தானை கல்லெரியவேண்டும் போன்ற மூடநம்பிக்கைகள் கிறிஸ்தவத்தில் இல்லை. எனவே, நெரிசலில் சிக்கி மரிக்கவேண்டிய துர்பாக்கிய நிலை கிறிஸ்தவர்களுக்கு இல்லை என்பது ஆறுதல் படுத்தும் செய்தியாகும்.
இந்து மதத்தலங்களில் மரணங்கள்:
கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் வணக்க ஸ்தலங்களில் மரண அவலங்கள் உண்டு என்று சொன்னேன். இந்து மதத்தலங்களில் மரணங்கள் இல்லையா என்று யாரும் கேட்காதீர்கள். இயற்கைக்கு மதமில்லை, அது மதசார்ப்பற்ற ஒன்றாகும். என்னுடைய இந்த கட்டுரை இஸ்லாமையும், கிறிஸ்தவத்தையும் நோக்கி நகர்வதால், இந்துக்கள் பற்றி சில வரிகளை மட்டுமே எழுதி தொடர்ந்து செல்ல விரும்புகிறேன்.
- இந்து மதத்தலங்களின் மரணங்களுக்கு பெரும்பான்மையான காரணம், அதிக பக்தியும், கூட்டமும் நெரிசலும் தான்.
- இந்துக்களின் சில கோயில்கள் மற்றும் புனித ஸ்தலங்கள் மலைகளிலும், மிகவும் ஆபத்தான இடங்களிலும் இருக்கும். சில நேரங்களில் இயற்கை தன் கைவரிசையைக் காட்டும். சமீப காலங்களில் இந்தியாவில் ஏற்பட்ட மலைச்சரிவுகளினாலும், மழை வெள்ளங்களினாலும் மரித்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.
- தங்கள் இறைவனை காண புனித யாத்திரைச் சென்ற அனேகர், வீடு திரும்பவில்லை. யாரைக் குற்றப்படுத்துவது?
- இது போதாது என்பதற்காக, சில குறிப்பிட்ட விசேஷித்த திருவிழாக்களில் மக்களின் கூட்டம் அதிகமாகும் போது, நெரிசலில் மாட்டிக் கொண்டு மரிப்பவர்களும் இருக்கிறார்கள்.
- இந்தியாவில் தீவிரவாதிகளால் தீய செயல்கள் வெற்றிகரமாக அமுல் படுத்தும் போது, இதில் மரிப்பவர்களில், இந்துக்களின் எண்ணிக்கை மற்றவர்களை விட அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.
இதுவரை பார்த்த விவரங்களின் படி, இறைவன் பாகுபாடு இன்றி எல்லா இன மக்களையும் மரிக்கச் செய்கின்றான். முக்கியமாக தன்னை வணங்கும் ஸ்தலத்திலேயே மக்களின் உயிர்கள் எடுக்கப்பட அவன் அனுமதிக்கிறான் என்பது மட்டும் உண்மை. அது விபத்தா? தீவிரவாதமா? அல்லது இயற்கை சீற்றமா? என்பது இடத்தைப் பொறுத்து, நாட்டைப் பொறுத்து, முஸ்லிம்களின் சதவிகிதத்தைப் பொறுத்து அமைகிறது.
எனவே, மக்காவில் மரிப்பவர்களின் எண்ணிக்கை நமக்கு எதனையும் காட்டுவதில்லை. சரியாக நிர்வாகம் செய்யாததால் விபத்து நேரிடுகிறது, சில நேரங்களில் இயற்கை தன் சீற்றத்தைக் காட்டுகிறது, அவ்வளவு தான்.
கேள்வி 6: இஸ்லாமிய தீவிரவாத வன்முறைகளில் சிக்கித் தவிக்கும் கிறிஸ்தவ திருச்சபை என்ன செய்யவேண்டும்?
உமரின் பதில்: இது கடினமான கேள்வியாகும். கிறிஸ்தவ சபை இருக்கும் இடைத்தைப் பொறுத்து செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாறுபடும். நான் திருச்சபை இருக்கும் இடத்தை மூன்றாக பிரிக்க விரும்புவேன்.
1) இஸ்லாமிய நாடுகளில் இருக்கும் கிறிஸ்தவ திருச்சபைகள்
2) முஸ்லிம்கள் பெரும்பான்மை நாடுகளில் இருக்கும் கிறிஸ்தவ திருச்சபைகள்.
3) முஸ்லிம்கள் சிறும்பான்மை நாடுகளில் இருக்கும் கிறிஸ்தவ திருச்சபைகள்.
இஸ்லாமிய நாடுகளில் திருச்சபைகள்:
என்ன சொல்லுவேன்? எப்படி சொல்லுவேன்? இஸ்லாமிய நாடுகளில் கிறிஸ்தவர்களாக பிறப்பது பாவமா? அல்லது இஸ்லாமிய நாடுகளில் முஸ்லிமாக இருந்து கிறிஸ்துவை பின்பற்ற முடிவு செய்வது பாவமா? இஸ்லாமிய நாடுகளில் கிறிஸ்தவ திருச்சபை படும் அல்லல்களை சொல்வது சுலபமல்ல. இணையத்தில் தேடி படித்துப் பாருங்கள். முஸ்லிம்களின் சுலபமான இலக்கு கிறிஸ்தவர்களாவார்கள்.
திருச்சபை என்ன செய்யவேண்டும்? பழிக்கு பழி வாங்கக்கூடாது. முஸ்லிம்கள் திருச்சபைகளில் குண்டு வைக்கிறார்கள் என்பதற்காக, கிறிஸ்தவர்கள் மசூதிகளில் குண்டு வைக்கக்கூடாது. அவர்களை வழி நடத்துகின்ற அவர்களின் வேதம் என்ன சொல்கிறதோ அதைத் தான் அவர்கள் செய்வார்கள். ஆனால், கிறிஸ்தவர்கள் தேவனை சார்ந்து மட்டுமே இருக்கவேண்டும். ஞானமாக நடந்துக் கொள்ளவேண்டும். எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். ஒற்றுமையாக இருந்து, உரிமைகளுக்காக நியாயமான முறையில் போராடவேண்டும். அந்த மக்கள் மனந்திரும்ப ஜெபிக்கவேண்டும்.
முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் இருக்கும் திருச்சபைகள்:
இஸ்லாமிய நாடுகளுக்கும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடுகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை. திருச்சபை அதே எதிர்ப்பு மற்றும் வன்முறைக்கு ஆளாகவேண்டி வரும். இஸ்லாமின் ஷரியா சட்டம் அமுலில் இல்லாமல் இருப்பதினால், திருச்சபை தன் உரிமைகளுக்காக நியாயமான முறையில் போராட முடியும். முஸ்லிம்களால் வஞ்சிக்கப்படாமல் திருச்சபை எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
முஸ்லிம் சிறும்பான்மை நாடுகளில் இருக்கும் திருச்சபைகள்:
இந்தியா போன்ற நாடுகளில், முஸ்லிம்கள் சிறும்பான்மையாக இருப்பதினால், அமைதி மார்க்க புறாக்கள் போல முஸ்லிம்கள் காணப்படுவார்கள். திருச்சபையை வஞ்சிக்க தீவிரமாக செயல்படுவார்கள். மற்ற நாடுகளில் படும் அல்லல்கள் போல இல்லையென்றாலும், திருச்சபை எச்சரிக்கையாக இருக்கவேண்டும். திருச்சபை விசுவாசிகள் புறாக்களைப்போல கபடற்றவர்களாக இருப்பதோடு கூட, சர்பத்தைப்போல எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சபையில் இஸ்லாமிய விஷம் அமைதியாக பரவும் அபாயம் இருப்பதால், எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வெளிவேஷத்தைக் கண்டு, இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று நம்பி திருச்சபை ஏமாறக்கூடாது.
கேள்வி 7: ஒரு சொற்பமான சதவிகித முஸ்லிம்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதை ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பார்க்கவேண்டும்? பெரும்பான்மையான முஸ்லிம்கள் அமைதி விரும்பிகளாகவும், அமைதியை நிலைநாட்டுபவர்களாகவும் இருக்கிறார்களே! இது சமுதாயத்திற்கு போதாதா? ஒவ்வொரு மார்க்கத்திலும் சொற்ப சதவிகிதத்தினர், வன்முறையில் ஈடுபடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்களே! இஸ்லாம் மட்டும் எப்படி தனித்து விளங்குகிறது?
உமரின் பதில்: சொற்பமான சதவிகிதம் என்ற வார்த்தைகளை கவனிக்கும் போது, நீங்கள் சொல்வது சரி தான் என்று தோன்றும், சொற்ப சதவிகித மக்கள் என்ன செய்துவிடப்போகிறார்கள் என்று எண்ணத்தோன்றும். ஆனால், புள்ளி விவரங்களோடு பார்க்கும் போது, விஷயம் விஷமாக மாறுவதை காணமுடியும்.
முஸ்லிம்களில் வெறும் சொற்ப சதவிகித மக்கள் தான் தீவிரவாத செயல்களில் வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள், மீதமுள்ள பெரும்பான்மையானவர்கள் அமைதியானவர்களாகவும், ஆபத்தை விளைவிக்காதவர்களாகவும் இருக்கிறார்கள், இது உண்மை தான். ஆனால், ஒரு சிறிய புள்ளிவிவர கணக்கை இப்போது காண்போமா!
இந்த "சொற்ப சதவிகிதம்" என்பதற்கு ஒரு எண்ணை (சதவிகிதத்தை) கொடுத்து கணக்கு பார்ப்போமா?
1) நூறில் ஒருவன் - 100:1
2) ஆயிரத்தில் ஒருவன் – 1,000:1
3) லட்சத்தில் ஒருவன் – 1,00,000:1
4) பத்து லட்சத்தில் ஒருவன் - 10,00,000:1
இந்திய ஜனத்தொகை கணக்கெடுப்பு 2011ன் படி, இந்தியாவில் முஸ்லிம் மக்களின் சதவிகிதம் 14.23% ஆகும், எண்ணிக்கையில் பார்த்தால், 17.22 கோடி மக்கள் முஸ்லிம்கள் ஆவார்கள் (http://www.census2011.co.in/religion.php).
1) நூறில் ஒருவன் என்று கணக்கிட்டால், 17.22 கோடியில், இப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,22,000 நபர்கள் ஆவார்கள்.
2) ஆயிரத்தில் ஒருவன் என்று கணக்கிட்டால், 1,72,200 நபர்கள் ஆவார்கள்.
3) லட்சத்தில் ஒருவன் என்று கணக்கிட்டால், 1722 நபர்கள் ஆவார்கள்
4) பத்து இலட்சத்தில் ஒருவன் என்று கணக்கிட்டால், 172 நபர்கள் ஆவார்கள்.
முதலாவது, நூறில் ஒருவன்: நாம் நியாயமாக எழுதவேண்டுமென்றால், இந்தியாவில் 1% முஸ்லிம்கள் தீவிரவாதி செயல்களில் ஈடுபடுபவர்கள் என்று சொல்லமுடியாது. ஏனென்றால், இந்திய கணக்கெடுப்பின் படி பார்த்தால், 17.22 லட்ச நபர்கள் இந்த வகையில் வருகிறார்கள்.
இரண்டாவது, ஆயிரத்தில் ஒருவன்: இதுவும் 1.72 லட்ச நபர்கள் வருகிறார்கள். இந்தியாவின் முஸ்லிம்களின் நிலையை கணக்கில் கொண்டு பார்த்தால், இதனையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டாம் (வேண்டாம் என்றுச் சொன்னேன் "எடுத்துக் கொள்ள முடியாது என்று சொல்லவில்லை").
மூன்றாவது, லட்சத்தில் ஒருவன்: கணக்கு 1722 நபர்கள் என்று வருகிறது. இதனை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். 17 கோடி ஜனத்தொகையில் 1722 நபர்களுக்கு இப்படிப்பட்ட தீவிரவாத செயல்களில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம் இருக்குமா என்று கேட்டால், தற்காலத்தில் நடக்கும் இஸ்லாமிய தீவிரவாத செயல்களை பார்க்கும் போது, "இது சரியான கணிப்பு தான்" என்று சொல்லமுடியும்.
கடைசியாக, பத்து லட்சத்தில் ஒருவன் என்று கணக்கிட்டால், 172 பேர் வருகிறார்கள்.
நாம் கேள்வியில் பார்த்ததின் படி "சொற்ப சதவிகிதம்" என்பதற்கு நாம் 1722 அல்லது 172 என்ற எண்களை தரலாம். முஸ்லிம்களின் மீது வைத்துள்ள அன்பின் காரணமாக, நான் 172யே உதாரணமாக எடுத்துக் கொள்கிறேன்.
- இந்த 172 தீவிரவாதிகளால், 121 கோடி இந்திய மக்களுக்கு ஆபத்து உண்டா இல்லையா?
- இந்த சொற்ப எண்ணிக்கையுள்ள 172 பேர், எப்படி 121 கோடி மக்களுக்கு ஆபத்தாக கருதமுடியும்?
நாம் மேலே படித்த கேள்வியைத் தான், புள்ளிவிவரங்களோடு நான் கொடுத்துள்ளேன். இப்பொழுது பிம்பம் எப்படி தெரிகின்றது? இன்னும் புரியவில்லையென்றால், கீழ்கண்ட விவரங்களை பாருங்கள்:
அ) உலக வர்த்தக மையம் தாக்குதல் – 19 தீவிரவாதிகள், 2996 பேர் மரணம். மரித்தவர்களின் இந்த எண்ணிக்கையில் உலகத்தின் 90 நாடுகளின் குடிமக்கள் மரித்துள்ளார்கள். பல ஆயிர கோடி மதிப்புள்ள பொருளாதாரம் நட்டமடைந்தது.
ஆ) மும்பை தாக்குதல் – 10 தீவிரவாதிகள், 164 பேர் மரித்தனர், 308 பேர் காயமுற்றனர்.
இந்த விவரங்களை நன்றாக கவனியுங்கள். 19 பேர், 3000 பேரை கொல்லமுடியும், 90 நாடுகளின் குடிமக்களை கொல்லமுடியும், பல ஆயிர கோடி பொருளாதாரத்தை நஷ்டப்படுத்த முடியுமென்றால், 172 பேர் எவ்வளவு பெரிய ஆபத்தை உண்டாக்கமுடியும் என்று கணக்கு போட்டு பார்க்கமுடியுமா?
19 பேர் என்பது சொற்ப எண்ணிக்கைத் தான்
10 பேர் என்பது சொற்ப எண்ணிக்கைத் தான்
ஆனால், இவர்களினால் உண்டான உயிர் நஷ்டம், பொருளாதார நஷ்டம் போன்றவற்றை பாருங்கள், கண்கள் பிதுங்கி விடும்.
இந்திய முஸ்லிம் ஜனத்தொகை 172,245,158 யில், 172 பேரை கழித்துவிடுவோம், மீதமுள்ள 17 கோடியே, 22 இலட்ச நல்ல முஸ்லிம்களினால், இந்த 172 மக்களினால் உண்டாகவிருக்கும் ஆபத்திலிருந்து இந்தியாவை காக்கமுடியுமா?
மக்கள் சொற்பம் தான், ஆனால் ஆபத்தோ சொற்பமல்ல, அது பிரமாண்டம்.
எனவே, சொற்ப சதவிகித மக்கள் தானே இப்படியெல்லாம் தீவிரவாதம் என்று திரிகிறார்கள், எனவே நாம் அதனை கண்டுக்கொள்ளத் தேவையில்லை என்று சொல்லமுடியாது, சொல்லவும் கூடாது, இது அறிவுடமையாகாது. மக்கள் அதிகம் கூடும் இடத்தில் ஒரே ஒரு தீவிரவாதி, தற்கொலை தாக்குதல் நடத்தினால், எத்தனை மக்கள் கொல்லப்படுவார்கள், எவ்வளவு ஆபத்து உண்டாகும் என்பதை நாம் கவனிக்கவேண்டும்.
எனவே சொற்ப எண்ணிக்கையே என்று சும்மா இருந்துவிடமுடியாது, தீவிரவாதத்தை தூண்டும், எதுவாக இருந்தாலும் சரி, அதனை அடியோடு அழித்துவிடவேண்டும், ஒருவேளை பெரும்பான்மை மக்கள் அதனை ஆதரிப்பதாக இருந்தாலும் சரி.
அடிக்குறிப்புக்கள்:
கேள்வி 8: மும்பை தாக்குதலில் ஈடுபட்ட 10 நபர்கள் அனைவரும் பாகிஸ்தானியர்கள், இந்திய முஸ்லிம்கள் இல்லை. இது நமக்கு எதனை காட்டுகிறது? இந்திய முஸ்லிம்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதில்லை என்று காட்டுகின்றதல்லவா? இதனால் இந்திய முஸ்லிம்களால் ஆபதில்லை என்று புரிந்துக்கொண்டு நிம்மதி பெருமூச்சு விடலாம் அல்லவா?
உமரின் பதில்: இது இன்னும் ஆபத்தான விஷயமாகும். நான் மேலே சொன்ன சொற்ப எண்ணிக்கை (172 நபர்கள்) இந்திய முஸ்லிம் ஜனத்தொகையிலிருந்து எடுத்துச் சொன்னேன். இப்போது ஆபத்து இன்னும் அதிகமாக உள்ளது. அதாவது, ஒரு நாட்டில் தீவிரவாத செயல் நடந்தேறினால், அதற்கு அந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் மட்டுமே காரணம் என்று இருந்தால், ஆபத்தின் சதவிகிதம் குறைவே. ஆனால், அவர்களோடு மற்ற நாட்டு முஸ்லிம் தீவிரவாதிகளும் சேர்ந்து செயல்படுவார்கள் என்று சொல்லும் போது, ஆபத்து இன்னும் அதிகரிக்கிறது.
ஆக, இந்திய மண்ணில் தீவிரவாத செயல் புரிய, இந்திய முஸ்லிம் ஜனத்தொகையில் சொற்ப சதவிகித மக்களின் எண்ணிக்கையை மட்டும் கணக்கில் கொள்ளாமல், அதோடு சேர்த்து உலகமனைத்திலும் உள்ள முஸ்லிம் ஜனத்தொகையில் சதவிகிதத்தையும் கணக்கிடவேண்டும்.
ஆக, சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், உலகத்தில் உள்ள எந்த ஒரு நாட்டிலும் ஒரு இஸ்லாமிய தீவிரவாத செயல் நடந்தேற, அந்நாட்டு முஸ்லிம்களின் கைமட்டுமல்ல, உலகத்தில் உள்ள மற்ற நாடுகளில் வாழும் முஸ்லிம்களின் கைகளும் இருக்கும். எனவே, சொற்ப எண்ணிக்கை மக்கள் தான் தீவிரவாத செயலில் ஈடுபடுகிறார்கள் என்ற வாதம் அர்த்தமற்ற வாதமாகும்.
உதாரணத்திற்கு, உலக ஜனத்தொகையில் அந்த சொற்ப சதவிகிதத்தை (பத்து லட்சத்தில் ஒருவன் என்ற) கணக்கிட்டுப் பார்ப்போம்.
கவனிக்க: இந்திய மண்ணில் மட்டுமே நாம் எடுத்துக் காட்டுக்காக பத்து லட்சத்தில் ஒருவன் என்ற சதவிகிதத்தை கொள்ளமுடியும், ஆனால், இஸ்லாமிய நாடுகளில் நூற்றுக்கு சிலர் இந்த தீவிரவாத வகையில் இருப்பார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவும். இந்த கணக்கு ஒரு மதத்தை சார்ந்து இருப்பதினாலும், நாம் வேண்டுமென்றே இவ்விஷயத்தை பூதாகாரமாக காட்டுகின்றோம் என்று மற்றவர்கள் குற்றம் சாட்டக்கூடாது என்பதற்காக, பத்து லட்சத்தில் ஒருவர் என்ற உதாரணத்தை எடுத்துக் கொண்டு கணக்கிடுகிறோம்.
2010ன் கணக்கெடுப்பின் படி, முஸ்லிம்களின் உலக ஜனத்தொகை 157 கோடியாகும். (https://en.wikipedia.org/wiki/Islam_by_country)
நம்முடைய சொற்ப சதவிகிதத்தை கணக்கிடும் போது: 1570 நபர்கள் வருகிறார்கள்.
ஆக, உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் இந்த 1570 நபர்களால் ஆபத்து உள்ளது என்று தாராளமாகச் சொல்லமுடியும், ஏனென்றால், இவர்கள் உலக இஸ்லாமிய உம்மாவின் குடிமகன்கள் ஆவார்கள். உலக வர்த்தக மையத்தை தாக்கியவர்கள், அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள் அல்ல, அவர்களில் அனேகர் சௌதி முஸ்லிம்கள். மும்பை தாக்குதலில் ஈடுபட்டவர்கள், இந்திய முஸ்லிம்களல்ல, அவர்கள் பாகிஸ்தான் முஸ்லிம்கள்.
ஆக, இந்த சொற்ப எண்ணிக்கை வாதம் அடியோடு அடிபட்டுப் போகிறது. சொற்ப மக்களால் இப்படிப்பட்ட ஆபத்து நிகழுமானால், உண்மையில் சதவிகிதம் இன்னும் அதிகமாக இருப்பதினால், ஆபத்து எவ்வளவு பெரியது என்று கணக்கிட்டுப்பாருங்கள்.
கேள்வி 9: முஸ்லிம்கள் தங்கள் மார்க்கத்தின் பெயரில் நடக்கும் தீவிரவாத வன்முறை செயல்களுக்கு தகுந்த பதிலடியை எப்படி கொடுக்கவேண்டும்? இஸ்லாமை சீர்திருத்தி "தீவிரவாதிகளே இல்லாத மதமாக" அதனை மாற்றமுடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. இஸ்லாமை சீர்திருத்த சிலர் ஏற்கனவே எழும்பிவிட்டனர் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். சீக்கிரத்தில் இதனை நாம் கண்டு களிக்கப்போகிறோம். இது உங்களுக்குத் தெரியுமா?
உமரின் பதில்: முடவன் கொம்புத் தேனுக்கும் ஆசைப்படலாம், ஆனால், இஸ்லாமை சீர்திருத்த ஆசைப்படுவது மிகவும் கடினமான காரியம், மன்னிக்கவும் அது முடியாத காரியமாகும். இஸ்லாமை சீர்திருத்த விரும்புபவர்களுக்கு, ஒன்று இஸ்லாமின் அடிப்படை தெரியாமல் இருக்கவேண்டும், அல்லது அவர்களுக்கு பயித்தியம் பிடித்திருக்கவேண்டும். இந்த பயித்தியம் தெளிவதற்கு முன்பு அவர்களின் உயிர் இஸ்லாமியர்களாலே பிடுங்கி எறியப்பட்டுவிடும்.
இந்த தொடுப்புக்களை ஒரு முறை படித்துப் பாருங்கள்:
- https://en.wikipedia.org/wiki/Liberal_Muslim_movements
- http://www.answering-islam.org/authors/abraham/reforming_islam.html
- http://www.frontpagemag.com/fpm/243473/you-cant-reform-islam-without-reforming-muslims-daniel-greenfield
- http://www.theguardian.com/commentisfree/2015/may/17/islam-reformation-extremism-muslim-martin-luther-europe
மேற்கண்ட நான்காவது கட்டுரையில் கீழ்கண்ட வரிகள் முடிவுரையாக கொடுக்கப்பட்டுள்ளது:
With apologies to Luther, if anyone wants to do the same to the religion of Islam today, it is Isis leader Abu Bakr al-Baghdadi, who claims to rape and pillage in the name of a "purer form" of Islam – and who isn't, incidentally, a fan of the Jews either. Those who cry so simplistically, and not a little inanely, for an Islamic reformation, should be careful what they wish for.
ஒரு மார்க்கத்தை சீர்திருத்தவேண்டுமென்றால், அந்த மார்க்கம் தூயதாக இருந்திருக்கவேண்டும், அதனை சிலர் தவறாக பயன்படுத்தி இருந்திருக்கவேண்டும், அப்போது அந்த மார்க்கத்தை அதன் தூய வடிவில் திரும்ப கொண்டுவர அதாவது சீர்திருத்த முயற்சி எடுக்கலாம். ஆனால், இஸ்லாமைப் பொறுத்தமட்டில், குர்-ஆனும், ஹதீஸ்களும் சொல்லும் வழியில் தான் தற்கால இஸ்லாம் இஸ்லாமிய நாடுகளில், ஐஎஸ், அல்கய்தா போன்ற தீவிர்வாதிகளால் பின்பற்றப்படுகிறது. எனவே, இஸ்லாம் தன் உண்மை வடிவில் வாழ்ந்துக் கொண்டு இருக்கும் தற்காலத்தில் அதனை எப்படி சீர்திருத்தவாதிகள் கெடுக்கமுடியும்? அதனை எப்படி தற்கால இஸ்லாமிய இமாம்கள், மற்றும் இஸ்லாமிய தலைவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்?
இந்த முயற்சியை எடுத்தவர்கள், எடுப்பவர்கள் கொல்லப்படுவார்கள், விமர்சிக்கப்படுவார்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள். கடைசியாக அவர்களின் முயற்சி எடுபடாது.
முஸ்லிம்கள் தங்கள் மார்க்கத்தின் பெயரால் நடக்கும் தீவிரவாத செயல்களுக்கு "சீர்திருத்தம்" என்ற பதிலடி கொடுக்கமுடியாது. பதிலடி கொடுப்பதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் அனுமதிக்கமாட்டார்கள். தீவிரவாதிகளுக்கு முஸ்லிம்கள் உதவி செய்யாமல் இருந்தாலே அது அந்நாட்டுக்கு அவர்கள் செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்கும். இதற்கு மேலே முஸ்லிம்கள் ஏதாவது செய்யவேண்டுமென்றால், அமைதியாக இஸ்லாமை விட்டு வெளியேறவேண்டும், இதைத் தவிர்த்து வேறு எந்த ஒரு வழியையும் முஸ்லிம்களுக்கு இஸ்லாம் வைத்துவைக்கவில்லை.
முடிவுரை: இது வெறும் ஆரம்பம் தான். இஸ்லாமிய தீவிரவாதத்தை புரிந்துக் கொள்ள குர்-ஆனையும், ஹதீஸ்களையும், முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறையும் நாம் படிக்கவேண்டும். முக்கியமாக முஸ்லிம் நாடுகளில் இருக்கும் தற்கால இமாம்கள், இஸ்லாமிய தலைவர்கள் பேசும் பேச்சுக்களை கேட்கவேண்டும். மசூதிகளில் கொடுக்கப்படும் சொற்பொழிவுகளை கூர்ந்து கவனிக்கவேண்டும். இவர்களின் பேச்சுக்களில் காணப்படும் வெறுப்புணர்வையும், கோபத்தையும், இரத்தம் சிந்ததுடிக்கும் வேகத்தையும் பார்த்து ஆய்வு செய்யவேண்டும். இஸ்லாமிய தீவிரவாதத்தின் ஆணிவேர் "குர்-ஆனும், ஹதீஸ்களும்" ஆகும் என்பதை உணரும் முஸ்லிம்கள்,அமைதியாக அதை விட்டு வெளியேறி விடுகிறார்கள். சிலர் அதனை வெளியே சொல்லாமல், பெயரளவிற்கு முஸ்லிம்களாக வாழ்ந்துக் கொண்டு இருகிறார்கள்.
தொடரும்...
உமரின் இதர தலைப்புக் கட்டுரைகள்
உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்
Source: http://www.answeringislam.org/tamil/authors/umar/general-topics/crane_accident_911_part2.html