சாம் ஷமான்
பரிசுத்த ஆவியானவரால் நிரம்பியவராக இயேசு வனாந்திரத்திற்கு சோதனைக்காரனால் சோதிக்கப்படுவதற்குச் சென்றார். இயேசு அந்த சோதனைக்காரனிடம் "தேவனாகிய கர்த்தரை மட்டுமே பணிந்துக் கொண்டு அவரை தொழுதுக்கொள்" என்று தெளிவாகச் சொன்னார்:
இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானைவிட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டு போகப்பட்டு, நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று. . . . பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து: இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன். நீர் என்னைப் பணிந்துகொண்டால், எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார். அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின் மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும். ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும், உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும் எழுதியிருக்கிறது என்று சொன்னான். அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார். பிசாசானவன் சோதனையெல்லாம் முடித்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான். பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று. (லூக்கா 4:1-2, 5-14)
இதே நிகழ்ச்சி மத்தேயு சுவிசேஷத்திலும் உள்ளது:
அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார். . . . . அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான். அதற்கு இயேசு:உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார். மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான். அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார். அப்பொழுது பிசாசானவன் அவரை விட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடை செய்தார்கள். (மத்தேயு 4:1, 5-11)
இவ்வசனங்களை படிப்பவர்களில் சிலர் இவ்விதமாக வாதிடுவார்கள், அதாவது இயேசுவின் பதில் "பிதாவாகிய தேவனைப் பற்றியதாகும், தேவனை சோதிக்கக்கூடாது என்றும் அவரைத் தான் தொழுதுக் கொள்ளவேண்டுமென்றும்" இயேசு கூறினார் என்றும் சொல்வார்கள். ஆனால், இயேசு இங்கு குறிப்பிடுவது என்னவென்றால், "கிறிஸ்துவாகிய தான் பிதாவைத் தவிர வேறு யாரையும் தொழுதுக்கொள்ளமாட்டார் என்றும், தன்னையும் பிசாசு சோதிக்கக்கூடாது" என்றும் இயேசு கூறினார். தேவனை எப்படி பரிட்சை பார்க்கக்கூடாதோ, அதே போல, கிறிஸ்துவையும் பரிட்சை பார்க்கக்கூடாது என்பது தான் இயேசுவின் பதிலாக இருந்தது.
இவ்வசனங்களை இன்னொரு வகையிலும் நாம் விளக்கலாம், அதாவது, மேற்கண்ட வசனங்களுக்கு பிறகு காணப்படும் நிகழ்ச்சிகளையும், மத்தேயு, லுக்கா மற்றும் அப்போஸ்தலர் நடபடிகளில் காணப்படும் நிகழ்ச்சிகளையும் கவனிக்கும் போது, இயேசுவின் தெய்வீகத்தன்மை தெளிவாக நமக்கு புரியும். சாத்தான் இயேசுவை பரீட்சை பார்ப்பதை, கர்த்தரின் வார்த்தையாகிய வேத வசனங்கள் "மேசியாவை அப்படி சோதிக்க முயலக்கூடாது" என்று சாத்தானை எச்சரிக்கின்றன. சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், "இயேசு, தாம் தேவன் என்பதை இங்கு அடையாளப்படுத்துகிறார், எனவே, தேவனை பரீட்சை பார்க்கக்கூடாது" என்று இயேசு குறிப்பிடுகிறார். இங்கு இன்னொரு விஷயமும் வெளிச்சத்திற்கு வருகிறது, அதாவது தேவன் ஒருவரே ஆனால், அவர் கிறிஸ்துவாகவும், பிதாவாகவும், பரிசுத்த ஆவியானவருமாகவும் இருக்கிறார்கள், இவர்களை தொழுதுக்கொள்ளவேண்டும் என்பதாகும்.
கடைசியாக, தேவகுமாரன் ஏமாற்றுக்காரனுக்கு முன்பாக தாழவிழுந்து தொழுதுக்கொள்வதற்கு பதிலாக, அந்த சாத்தான், இவருக்கு முன்பாக விழுந்து தொழுதுக் கொள்வது தான் சரியானது என்று இயேசு கூறுகிறார்.
இதுவரை கண்டவைகளின் பின்னணியில், இப்போது மத்தேயு, லூக்கா, அப்போஸ்தலர் நடபடிகளில் இயேசு மக்களிடமிருந்து தொழுகையை ஏற்றுக்கொண்டாரா என்பதைக் காணப்போகிறோம். மேலும் அவர் உயிர்த்தெழுந்து பரலோகம் சென்றுவிட்டபிறகு யாராவது அவரை பரீட்சை பார்த்தார்களா என்பதையும் வேதத்திலிருந்து பார்ப்போம். இவ்விரண்டு விவரங்களும் "இயேசு தன்னை இறைவனாக அடையாளப்படுத்தினார்" என்பதை உறுதிப்படுத்தும். மேலும் அவர் ஆராதனைக்கும் தொழுகைக்கும் பாத்திரவானாக இருக்கிறார் என்பதையும், யாரும் அவரை பரீட்சை பார்க்க முயலக்கூடாது என்பதும் தெளிவாக விளங்கும்.
முதலாவதாக, தேவனின் பரிசுத்த ஊழியக்காரர்களாகிய அப்போஸ்தலர்களை மற்றவர்கள் தொழுதுக்கொள்ளும் போது, அவர்கள் எப்படி செயல்பட்டார்கள் என்பதைக் காண்போம்.
இயேசுவின் சீடர்கள் தங்கள் தலைவரின் வார்த்தைகளை இருதயத்தில் பத்திரப்படுத்தினார்கள். மேலும், யாராவது அவர்களை தொழுதுக்கொள்ள விரும்பினால், அதனை தடுத்தார்கள், இதனை நாம் பரிசுத்த அப்போஸ்தலர் பேதுருவின் வாழ்வில் காணலாம்:
"பேதுரு உள்ளே பிரவேசிக்கிறபொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிர்கொண்டுபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான். பேதுரு அவனைத் தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும் ஒரு மனுஷன்தான் என்றான்". (அப்போஸ்தலர் நடபடிகள் 10:25-26)
இதே போலத்தான் பவுலும் பர்னபாவும் செயல்பட்டார்கள். லீஸ்திரா என்ற பட்டணத்தின் மக்கள் இவர்களை தங்கள் தேவர்களாகிய "யூபித்தார் மற்றும் மெர்க்கூரி" என்றும் சொல்லி பலிகளை செலுத்த முன்வந்தபோது, பவுலும் பர்னபாவும் அதனை பலமாக எதிர்த்தார்கள்.
லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் சப்பாணியாயிருந்து, ஒருபோதும் நடவாமல், கால்கள் வழங்காதவனாய் உட்கார்ந்து, பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு: நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தத்தோடே சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான். பவுல் செய்ததை ஜனங்கள் கண்டு, தேவர்கள் மனுஷரூபமெடுத்து நம்மிடத்தில் இறங்கிவந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா பாஷையிலே சத்தமிட்டுச் சொல்லி, பர்னபாவை யூப்பித்தர் என்றும், பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் அவனை மெர்க்கூரி என்றும் சொன்னார்கள். அல்லாமலும் பட்டணத்துக்குமுன்னே இருந்த யூப்பித்தருடையகோவில் பூஜாசாரி எருதுகளையும் பூமாலைகளையும் வாசலண்டையிலே கொண்டுவந்து, ஜனங்களோடேகூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான். அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,கூட்டத்துக்குள்ளே ஓடி, உரத்த சத்தமாய் மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனுஷர்தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பவேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம். (அப்போஸ்தலர் நடபடிகள் 14:8-15)
இது ஒரு புறமிருக்க, மக்கள் ஏரோது என்ற அரசனின் பிரசங்கத்தை கேட்டு, இது தேவனின் சத்தம் என்று சொன்னபோது, தேவனுக்கு செலுத்தவேண்டிய மகிமையை அவன் செலுத்தாதபடியினால், தேவன் ஏரோதை அடித்தார், அவன் மரித்துப்போனான். தேவனுடைய மகிமையை யாரும் கொள்ளையடிக்க முடியாது.
அக்காலத்திலே ஏரோது தீரியர்பேரிலும் சீதோனியர் பேரிலும் மிகவுங் கோபமாயிருந்தான். தங்கள் தேசம் ராஜாவின் தேசத்தினால் போஷிக்கப்பட்டபடியினால், அவர்கள் ஒருமனப்பட்டு, அவனிடத்தில் வந்து, ராஜாவின் வீட்டு விசாரனைக்காரனாகிய பிலாத்துவைத் தங்கள் வசமாக்கிச் சமாதானம் கேட்டுக்கொண்டார்கள், குறித்தநாளிலே ஏரோது ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டு, சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம்பண்ணினான். அப்பொழுது ஜனங்கள் இது மனுஷசத்தமல்ல, இது தேவசத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள். அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான். (அப்போஸ்தலர் நடபடிகள் 12:20-23)
இதுவரை நாம் கண்ட விவரங்களின் படி, தேவனுக்கு செலுத்தவேண்டிய தொழுகையும் ஆராதனையும், வேறு ஒருவருக்கும் கிடைப்பதை தேவன் அனுமதிப்பதில்லை என்பதை அறிந்தோம். இயேசு வெறும் ஒரு தீர்க்கதரிசியாக மட்டுமே இருந்திருந்தால், அப்போஸ்தலர்கள் தடுத்ததுபோலவே, இயேசுவும் தன்னை தொழுதுக்கொண்டவர்களை தடுத்து இருந்திருப்பார்.
இத்துடன் பாகம் ஒன்று முடிவடைந்தது, இரண்டாவது பாகத்தை இங்கு சொடுக்கி படிக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக