ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

 1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
 2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
 3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
 4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
 5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
 6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
 7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
 8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
 9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
 10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
 11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
 12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
 13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
 14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
 15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
 16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
 17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
 18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
 19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
 20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
 21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
 22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
 23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
 29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
 30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
 31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
 32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
 33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
 34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
 35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
 36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
 37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
 38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
 39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
 40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
 41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
 42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
 43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
 44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
 45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
 46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
 47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
 48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
 49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
 50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
 51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
 53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
 54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
 55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
 56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
 57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

 1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
 2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
 3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
 4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
 5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
 6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
 7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
 8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
 9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
 10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
 11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
 12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
 13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
 14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
 15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
 16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
 17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
 18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
 19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
 20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
 21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
 22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
 23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
 24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
 25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
 26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
 27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
 28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
 29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
 30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
 31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
 32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
 33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
 34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
 35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
 36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
 37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
 38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
 39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
 40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
 41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
 43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
 44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
 45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
 46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
 47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
 48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
 49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வியாழன், 10 ஜூலை, 2014

பாகம் 2 - ரமளான் பற்றி கிறிஸ்தவர்கள் அறிந்துக் கொள்ளவேண்டிய முக்கியமான விவரங்கள்


 (கிறிஸ்தவ சபையே! விழிமின் எழுமின்  - ரமளான் கேள்வி பதில்கள்)


இந்த தொடர் கட்டுரையின் முதல் பாகத்தை இந்த தொடுப்பை சொடுக்கி படிக்கவும்.

இப்போது இரண்டாம் பாகத்தின் கேள்வி பதில்களைக் காண்போம்:

கேள்வி 4: என் இஸ்லாமிய நண்பர், என்னை ரமளான் விருந்திற்கு அழைத்திருக்கிறார், கிறிஸ்தவனாகிய நான் அதில் பங்கு பெறலாமா? அவன் கொடுக்கும் உணவுகளை சாப்பிடுவது பைபிளின் படி சரியானதா? 

பதில்: இது ஒரு கடினமான கேள்வி. இந்த கேள்விக்கான பதிலை புரிந்துக்கொள்வதில் சிலருக்கு சிக்கல்கள் இருக்கும் என்று நம்புகிறேன். நாம் பதிலை காண்பதற்கு முன்பாக, சில முக்கியமான பொதுவான விஷயங்களை புரிந்துக் கொள்ளவேண்டும்.

1) வாய்க்குள்ளே போகிறது மனுஷனையும், தேவனையும் வேறு புரிக்காது, வாயிலிருந்து புறப்படுகிறதே, கர்த்தருக்கு விரோதமான பாவமாக கருத்தப்படும் என்று இயேசு கூறியுள்ளார் (பார்க்க மத்தேயு 15:10, 11).

பின்பு அவர் ஜனங்களை வரவழைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் கேட்டு உணருங்கள்.  வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார். (மத்தேயு 15:10, 11)

2) தேவனுடைய இராஜ்ஜியம் என்பது புசிப்பும் குடிப்பும் அல்ல, இந்த இராஜ்ஜியத்திற்கு பங்குள்ளவர்களாகிய கிறிஸ்தவர்கள் உணவிற்கு அதிகமான முக்கியத்துவத்தைக் கொடுக்கத் தேவையில்லை, அதை விட முக்கியமான விஷயங்கள் அனேகம் உள்ளன (பார்க்க ரோமர் 14:17)

தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது. (ரோமர் 14:17)

3) கிறிஸ்தவர்களுக்கு உணவு பற்றி சுயமாக முடிவுகளை எடுக்க முழு சுதந்திரம் உண்டு, ஆனால், நமக்கு இருக்கும் சுதந்திரத்தை நாம் ஒரு கட்டுப்பாட்டிற்குள் பயன்படுத்தவேண்டும், முக்கியமாக இதர கிறிஸ்தவர்கள் இடறி விழுவதற்கு நாமோ, நம்முடைய சுதந்திரமோ காரணமாக இருக்கக்கூடாது. 

4) சபைக்காகவும், இதர சகோதர சகோதரிகளுக்காகவும் நாம் நம் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்கவேண்டும், அப்போது தான் சகோதர சிநேகம் நிலைத்திருக்கும். 

எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது.  ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்.  (1 கொரிந்தியர் 10:23, 24)

இதன் அடிப்படையில் நாம் பார்த்தால், ஒரு இஸ்லாமிய நண்பர் உங்களை விருந்துக்கு அழைத்தால், விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டதை சாப்பிடலாம், அதனால் எந்த பிரச்சனையும் இல்லை என்று நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் தாராளமாகச் சென்று அவர் கொடுக்கும் உணவை கேள்வி கேட்காமல் சாப்பிடலாம்.  விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டதை நான் சாப்பிடமாட்டேன் என்று நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் அழகாக உங்கள் இஸ்லாமிய நண்பனிடம் மன்னிப்புக் கேட்டு, நான் சாப்பிடமாட்டேன் என்றுச் சொல்லிவிடலாம்.

கேள்வி 5: இஸ்லாமிய மார்க்கவும், விக்கிர ஆராதனைச் செய்யும் மார்க்கங்களும் ஒன்றா?

பதில்: ஆம், விக்கிர ஆராதனையை எப்படி பைபிள் பார்க்கின்றதோ, அதைப்போலத்தான் இஸ்லாமையும் பார்க்கிறது. கிறிஸ்தவர்கள் விக்கிர ஆராதனையை எந்த நிலையில் பார்க்கிறார்களோ அதே நிலையில் இஸ்லாமையும் பார்க்கவேண்டும். இவ்விரண்டும், யெகோவா தேவனுக்கு கொடுக்கவேண்டிய ஆராதனையை (தொழுகையை) விக்கிரகங்களுக்கோ, அல்லாஹ்விற்கோ கொடுக்கும் போது அதுவும் விக்கிர ஆராதனையே ஆகும்.  முஸ்லிம்கள் ஏக இறைவனை வணங்குகிறோம் என்றுச் சொல்லிக்கொண்டாலும், இஸ்லாமின் இறையியலைக் காணும் போது, முஹம்மதுவின் போதனைகளைப் பார்க்கும் போது அது விக்கிர ஆராதனையே ஆகும்.

இந்த வசனத்தை பார்க்கவும்:

1 கொரிந்தியர் 8:4 
விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம். 

இந்த வசனம் இஸ்லாமையும் குறிக்கும். அல்லாஹ் என்ற பெயரில் உண்மையான இறைவன் இல்லை என்பதால், இந்த வசனத்தை இப்படி மாற்றி படித்தால் உண்மை விளங்கும்.

அல்லாஹ்விற்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே  அல்லாஹ் என்று ஒருவன் இல்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.


கேள்வி 6: அப்பொஸ்தலர் நடபடிகளில் நாம் காணுவது போல, விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்ட உணவிற்கு நாம் விலகி இருக்கவேண்டுமல்லவா? அது போல இஸ்லாமியர்கள் கொடுக்கும் உணவிற்கு நாம் விலகி இருக்கவேண்டுமல்லவா?

பதில்: விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவது பற்றிய சில விவரங்களை நாம் காண்போம் (இதைப் பற்றி விவரமாக அறிய இந்த தொடுப்பை http://www.gotquestions.org/food-sacrificed-idols.html சொடுக்கி படிக்கவும்).  இந்த விவரம் இஸ்லாமுக்கும் பொருந்தும்.

அ) சபையில்  ஒற்றுமையை உண்டாக்குவதற்கு:

திருச்சபையின் ஆரம்ப காலத்தில் யூதர்களிலிருந்தும், அந்நிய ஜனங்களிலிருந்தும் (கிரேக்கர்கள்) மக்கள் மனந்திரும்பி சபையில் சேர்க்கப்பட்டார்கள். யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டாலும், அவர்களின் பழைய ஏற்பாட்டு கட்டுப்பாடு, உணவு பற்றிய கட்டளைகளை அவர்கள் மறக்கவில்லை. எனவே அவர்கள் விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்ட பொருட்களை கடைகளில் வாங்கி சாப்பிடக்கூடாது என்று வாதிட்டனர். அக்காலத்தில் விக்கிரகங்களுக்கு படைத்த பிறகு, பூஜை செய்த பிறகு தான் கடைகளில் மாமிசத்தை விற்றார்கள், இவைகளை வாங்கி சாப்பிடக்கூடாது என்று கிறிஸ்தவர்களான யூதர்கள் வாதிட்டனர். 

ஆனால், கிரேக்கர்கள் இது சரியில்லை என்று வாதிட்டனர். எல்லா உணவையும் சாப்பிடலாம் என்று நம்பினார்கள். இப்படி ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு இருந்தபடியினால், சபையில் பிரிவினையை தவிர்ப்பதற்காக, எருசலேம் சபையானது ஒரு முடிவை எடுத்து, தற்காலிகமாக யூத, கிரேக்க சண்டையை ஓயவைத்தது., அதைத்தான் நாம் அப்போஸ்தலர் நடபடிகள் 15ம் அதிகாரத்தில் பார்க்கிறோம்:

அந்தப்படியே யூதாவையும் சீலாவையும் அனுப்பியிருக்கிறோம். அவர்களும் இவைகளை வாய்மொழியாக உங்களுக்கு அறிவிப்பார்கள்.
எவையெனில், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்கவேண்டுமென்பதே. (அப் 15:27, 28)

மேற்கண்ட தீர்மானத்தின் மூலமாக, ஒருவகையாக இரு பிரிவினருக்கு  இடையே இருந்த சண்டை ஓய்ந்தது. இதே போல, யூத-கிறிஸ்தவர்கள் விருத்தசேதனம் செய்யவேண்டும் என்று கட்டாயப்படுத்தினர், ஆனால், திருச்சபை அது தேவையில்லை என்று தீர்ப்பு அளித்தது.  

ஆ) பலவீனமான சகோதரனை மனதில் வைத்தவர்களாக, நம் சுதந்திரத்தை விட்டுக்கொடுத்தல்

இதே போல புதிய ஏற்பாட்டை நாம் படித்தால், ஒரு பலவீனமான சகோதரனுக்காக நாம் நம் சுதந்திரத்தை (எதையும் சாப்பிடலாம் என்ற சுதந்திரத்தை) விட்டுக்கொடுக்கலாம் என்பதை அறியமுடியும்.

1 கொரிந்தியர் 10:27 லிருந்து 31ம் வசனம் வரை படிப்போம். தற்போது இஸ்லாமியர்கள் கொடுக்கும் உணவு பற்றி ஆராய்ந்துக்கொண்டு இருக்கின்ற படியால்,  அவிசுவாசி என்ற இடத்தில் "முஸ்லிம்" என்றும், விக்கிர ஆராதனை என்ற இடத்தில் "இஸ்லாம்" என்றும் மாற்றி படித்துப் பார்ப்போம். அப்போது தெளிவு உண்டாகும்.

10:27  அன்றியும் முஸ்லிம்களில் ஒருவன் உங்களை விருந்துக்கு அழைக்கும்போது, போக உங்களுக்கு மனதிருந்தால், மனச்சாட்சியினிமித்தம் ஒன்றையும் விசாரியாமல், உங்கள் முன் வைக்கப்படுகிற எதையும் புசியுங்கள். 

10:28  ஆயினும் இது அல்லாஹ்விற்கு படைக்கப்பட்டது என்று  ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள்; பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது. 

10:29  உன்னுடைய மனச்சாட்சியைக் குறித்து நான் இப்படிச் சொல்லாமல், மற்றொருவனுடைய மனச்சாட்சியைக் குறித்தே சொல்லுகிறேன். என் சுயாதீனம் மற்றொருவனுடைய மனச்சாட்சியினாலே குற்றமாய் எண்ணப்படவேண்டுவதென்ன? 

10:30  மேலும் நான் அதை ஸ்தோத்திரிப்புடனே அநுபவித்தால், ஸ்தோத்திரித்து அநுபவிக்கிற பொருளைக்குறித்து நான் தூஷிக்கப்படுவானேன்? 

10:31  ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள். 


பூமியும் அதன் நிறைவும் கர்த்தருடையது, எனவே, நாம் புசிக்கும் எதுவானாலும் அதை கர்த்தர் தான் உண்டாக்கினார். எனவே, மற்ற கிறிஸ்தவர்கள் நம்முடைய செயலினால் துக்கப்படுவார்கள் அல்லது குழப்பமடைவார்கள் என்று நீங்கள் கருதினால், முஸ்லிம்கள் கொடுக்கும் உணவை சாப்பிடத்தேவையில்லை.  ஆகையால், நாம் கிறிஸ்தவர்கள் தரும் உணவுகளை உட்கொண்டாலும், முஸ்லிம்கள் தரும் உணவுகளை உட்கொண்டாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்ய வேண்டும். எந்த உணவாக இருந்தாலும் சரி, அதனை சாப்பிடுவதினால் அதிக நன்மையும் இல்லை, சாப்பிடாமல் இருப்பதினால், எந்த தீங்கும் இல்லை.

இ) சகோதர அன்பு வெளிப்படுத்துவது எப்படி?

இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.  ஒரு பொருளும் (முஸ்லிம்கள்/இந்துக்கள் தரும் உணவுகள்) தன்னிலே தீட்டுள்ளதல்லவென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் அறிந்து நிச்சயித்திருக்கிறேன்; ஒரு பொருளைத் தீட்டுள்ளதென்று எண்ணிக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு அது தீட்டுள்ளதாயிருக்கும்.  போஜனத்தினாலே உன் சகோதரனுக்கு விசனமுண்டாக்கினால், நீ அன்பாய் நடக்கிறவனல்ல; அவனை உன் போஜனத்தினாலே (முஸ்லிம்கள்/இந்துக்கள் தரும் உணவை சாப்பிடுவதினாலே) கெடுக்காதே, கிறிஸ்து அவனுக்காக மரித்தாரே.  உங்கள் நன்மை தூஷிக்கப்பட இடங்கொடாதிருங்கள்.  (ரோமர் 14:13-16)


ஈ) நம்முடைய சுதந்திரம் ஒரு பாவமாக கருதப்படலாம்


1 கொரிந்தியர் 8ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டவைகள் சுருக்கமாக இந்த உணவு விஷயத்தை தொட்டுப்  பேசுகின்றது. இது நல்ல தெளிவை உண்டாகும்.  

முன்பு சொன்னதுபோலவே, விக்கிரகம் என்ற இடத்தில் இஸ்லாம் என்றும், அவிசுவாசி என்ற இடத்தில் முஸ்லிம் என்றும் மாற்றியுள்ளேன், படித்துப் பாருங்கள்.

8:7  ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை. சிலர் இன்றையவரைக்கும் இஸ்லாமை, அல்லாஹ்வை ஒரு பொருளென்று எண்ணி, அல்லாஹ்விற்கு  படைக்கப்பட்டதைப் புசிக்கிறார்கள்; அவர்களுடைய மனச்சாட்சி பலவீனமாயிருப்பதால் அசுசிப்படுகிறது. 

8:8  போஜனமானது நம்மைத் தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது; என்னத்தினாலெனில், புசிப்பதினால் நமக்கு ஒரு மேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை. 

8:9  ஆகிலும் இதைக்குறித்து உங்களுக்கு உண்டாயிருக்கிற அதிகாரம் எவ்விதத்திலும் பலவீனருக்குத் தடுக்கலாகாதபடிக்குப் பாருங்கள். 

8:10  எப்படியெனில், அறிவுள்ளவனாகிய உன்னை மசூதியிலே அல்லது இஸ்லாமிய விழாக்களிலே பந்தியிருக்க ஒருவன் கண்டால், பலவீனனாயிருக்கிற அவனுடைய மனச்சாட்சி அல்லாஹ்விற்கு  படைக்கப்பட்டவைகளைப் புசிப்பதற்குத் துணிவுகொள்ளுமல்லவா?
 
8:11  பலவீனமுள்ள சகோதரன் உன் அறிவினிமித்தம் கெட்டுப்போகலாமா? அவனுக்காகக் கிறிஸ்து மரித்தாரே. 

8:12  இப்படிச் சகோதரருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, பலவீனமுள்ள அவர்களுடைய மனச்சாட்சியைப் புண்படுத்துகிறதினாலே, நீங்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறீர்கள். 

8:13  ஆதலால் முஸ்லிம்களின் போஜனம்  என் சகோதரனுக்கு இடறலுண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் முஸ்லிம்கள் தரும்  உணவை  புசியாதிருப்பேன்

இப்போது புரிந்ததா? நாம் முஸ்லிம்களின் விருந்துகளில், விக்கிர ஆராதனை நடக்கும் விருந்துகளில், பங்கு பெறலாமா? இல்லையா? இது உங்கள் விசுவாசத்தைப் பொருத்தது.


கேள்வி 7: இதன் படிப் பார்த்தால், முஸ்லிம்கள் நம்மை விருந்துக்கு அழைத்தால், நாம் தாராளமாகச் செல்லலாம், ஆனால், என் கிறிஸ்தவ சகோதரன் ஒருவன் இடறல் அடைவான் என்று நான் கருதினால், செல்லத்தேவையில்லை, அவர்கள் தரும் உணவை சாப்பிடத்தேவையில்லை, இது சரி தானே? இவ்வளவு தெரிந்தும் இன்னும் சிலர் விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டதை சாப்பிடக்கூடாது, முஸ்லிம்கள் தரும் பொருட்களை சாப்பிடக்கூடாது என்று அடம் பிடிக்கிறார்களே என்ன செய்வது?

பதில்: இப்படிப்பட்டவர்கள் ஒரு விஷயத்தை புரிந்துக்கொள்ளவேண்டும். இன்று நாம் இந்தியாவில் எந்த பொருளை எடுத்துக்கொண்டாலும், ஒரு விக்கிரகத்துக்கு பூஜை செய்யப்படாமல் அது நம்முடைய கையில் வருவதில்லை. இப்படிப்பட்ட கட்டுப்பாட்டை உடையவர்கள் 100% உண்மையாளர்களாக வாழ முயற்சி செய்தால், அவர்கள் எதையும் சாப்பிடமுடியாமல் போய்விடும், அவர்கள் பட்டிணியாக இருக்கவேண்டியது தான். உதாரணத்திற்கு, கீழ்கண்ட விவரங்களை படிக்கவும்:

அ) ஒரு நிலத்தில் நெல்லை பயிரிடும் போது, ஒரு விவசாயி, தன் சாமிக்கு பூஜை செய்தே பயிரிடுகின்றான்.

ஆ) அந்த பயிர் வளரும் போதும், அறுவடையில் நல்ல விளைச்சல் கிடைக்கவேண்டும் என்று தன் சாமியிடம் வேண்டிக்கொள்கிறான்.

இ) அறுவடை செய்யும் போதும்,  தன் இறைவனிடம் வேண்டிக்கொண்டு எல்லா காரியங்களையும் செய்கின்றான்.

ஈ) நெல்லையும், அரிசியையும் வேறு பிரிக்கும் நபரும் தன் அலுவலகத்தில் தன் சாமியிடம்  வேண்டிக்கொண்டே தன் தொழிலை ஆரம்பிக்கின்றான்.

உ) வருடத்திற்கு ஒரு முறை ஆயூதப்பூஜை செய்யப்பட்ட ஆயுதங்களினால் அந்த நெல்லையும், அரிசியையும் வேறு பிரிக்கின்றான்.

ஊ) அரிசியை வாங்கி விற்பவனும் தன் வியாபாரத்தை தொடங்கும் போதும், தன் சாமியை வேண்டிக்கொண்டு, பூஜை செய்து ஆரம்பிக்கிறான்.

எ) அந்த அரிசியை வாங்கி ஹோட்டல் நடத்துபவன் தன் சாமியிடம் வேண்டிக்கொண்டு உணவை தயாரிக்கிறான், வியாபாரம் செய்கின்றான்.

இப்படி ஒரு உணவுப்பொருள் பயிரிடுவது முதற்கொண்டு அறுவடையாகி, நம்மிடம் உணவாக வரும் வரை அதன் மீது பல தெய்ங்களின் வணக்கங்கள் நடைப்பெறுகின்றன.  

இப்போது நம் கேள்வி என்னவென்றால், இதர தெய்வங்கள் பெயர்கள் சொல்லப்பட்ட உணவுப்பொருட்கள், கிறிஸ்தவர்களுடைய வாயில் செல்லக்கூடாது என்று சொல்பவர்கள், முக்கியமாக இந்தியாவில், பாகிஸ்தானில் பட்டிணி கிடந்து சாகவேண்டியது தான்.

உணவு விஷயத்தில் அடம்பிடித்தால்,

 • அடையார் ஆனந்தபவனில் விற்கப்படும் அருமையான இனிப்பை நம்மால் சாப்பிடமுடியுமா?
 • ஹோட்டல் சரவண பவனில் விற்கப்படும் சாம்பார் இட்லிகள் மற்றும் இதர உணவுகளை நம்மால் சாப்பிடமுடியுமா?
 • பாய் கடையில் விற்கப்படும் ஆம்பூர் பிரியாணியைத் தான் நாம் சாப்பிடமுடியுமா?
சொந்தமாக அரிசியை வாங்கி வந்து நம் வீட்டிலும் உணவை தயாரித்து சாப்பிடக்கூடாது, ஏனென்றால், அந்த அரிசியை பயிரிட்டவன் ஒரு கிறிஸ்தவன் தான் என்று எப்படி நம்மால் கூறமுடியும்? இது நடைமுறைக்கு ஏற்காத ஒன்று. அதனால் தான் பைபிள் தெளிவாகச் சொல்கிறது, உலகமும் அதன் நிறைவும் (உணவுப்பொருட்களும்) கர்த்தருடையது. அதனை சாப்பிடுவதினால் எந்த ஒரு தீங்கும் உண்டாவதில்லை.


கேள்வி 8: முஸ்லிமள் தங்கள் நோன்பை முடித்துக்கொள்வதற்கு நாம் உதவி செய்யலாமா? உதாரணத்திற்கு, இந்த மாதத்தில் நோன்பாளிகளுக்காக மசூதிகளுக்கு திண்பண்டங்களை, பழங்களை வாங்கித் தரலாமா?

பதில்: சிலவேளைகளில் கிறிஸ்தவர்கள் தேவையில்லாத விஷயங்களில் அதிகமாக அக்கரைக்கொண்டு, உலக மக்கள் மீது இயேசுவிற்கு இருக்கும் அன்பை விட, தங்களுக்குத் அதிக அன்பு இருக்கிறது என்பதைக் காட்டிக்கொள்ள முயற்சி எடுக்கிறார்கள், அதனால், அனேக பிரச்சனைகளுக்குள் மாட்டிக்கொள்கிறார்கள்.

கீழ்கண்ட விவரங்களை நன்றாக கவனியுங்கள்.

1) ஒரு முஸ்லிம் பசியாக இருந்தால், அவனுக்கு உணவு கொடு.
2) ஒரு முஸ்லிம் தாகமாக இருந்தால், அவனுக்கு தண்ணீர் கொடு.
3) ஒரு முஸ்லிம் உடையில்லாமல் இருந்தால், அவனுக்கு உடை கொடு.
4) ஒரு முஸ்லிம் வீடு இல்லாமல் இருந்தாலும், உன்னிடம் பணம் அதிகமாக இருந்தால், அவனுக்கு ஒரு வீடு கட்டிக்கொடு.
5) ஒரு முஸ்லிம் வியாதியுள்ளவனாக இருந்தால், அவனுக்கு உதவி செய், அவனை விசாரித்து பராமரித்து, மருந்துகள் கொடுத்து சுகப்படுத்து.
6) ஒரு முஸ்லிம் அநியாயமாக சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்தால், அவனை விசாரித்து ஆறுதல் சொல் முடிந்தால் அவன் விடுதலையாக்க முயற்சி எடு.
7) ஒரு முஸ்லிம் அந்நியனாக இருந்தால், அவனுக்கு பாதுகாப்பு கொடுத்து சேர்த்துக்கொள். 

ஏனென்றால், உலகில் இன்னொரு மனிதனுக்கு நீ என்ன செய்கின்றாயோ, அது தனக்கே செய்ததாக இயேசு கருதுகின்றார், இதனை நாம் இயேசுவின் போதனைகளில் பார்க்கமுடியும்.  அந்த மனிதன் யாராக இருந்தாலும் பிரச்சனையில்லை.

ஆனால், 

1) ஒரு முஸ்லிம் நோன்பு இருந்தால், அந்த நோன்பு சம்மந்தப்பட்ட எந்த விஷயத்திற்கும் உதவி செய்யாதே, இது கர்த்தருக்கு விரோதமான பாவமாகும்.

2) ஒரு முஸ்லிம் நோன்பு திறப்பதற்கு ஒரு பேரிச்சம் பழம் கூட நீ வாங்கித் தராதே, ஏனென்றால், அவனுடைய இறைநம்பிக்கையை நீ ஆதரிப்பதாக இது கருதப்படும்.

3) ஒரு முஸ்லிமின் ஏழ்மையை போக்க உன்னால் முடிந்தால், ஒரு இலட்சம் ரூபாய் செலவு செய், ஆனால், அவன் நோன்பு திறப்பதற்கு ஒரு குவளை தண்ணீர் கொடுக்க முன் வராதே, ஏனென்றால், அவனது விக்கிர ஆராதனை என்ற பாவத்தில், அந்நிய தெய்வமாக கருத்தப்படும் அல்லாஹ்வை வணங்கும் பாவத்தில் உன்னை நீ இணைத்துக்கொள்வதாக அது கருதப்படும்.

4) ஒரு முஸ்லிமுக்கு விபத்து நேரிட்டல், ஒரு பாட்டில் இரத்தம் கொடுத்து அவனை காப்பாற்ற முயற்சி எடு, ஆனால், அவனது மார்க்க விஷயங்களில் உன் சுண்டு விரலிலிருந்து ஒழுகும் ஒரு  சொட்டு தண்ணீர் கொடுத்து, நீ கர்த்தரின் கோபத்திற்கு உள்ளாகாதே.

கிறிஸ்தவர்கள் நன்மை எது, தீமை எது என்பதை சரியாக புரிந்துக்கொள்ளவேண்டும். கிறிஸ்தவர்கள் அன்புக்கும், அறியாமைக்கும் இடையே இருக்கும் மிகப்பெரிய வித்தியாசத்தை புரிந்துக்கொள்ளவேண்டும். செய்யப்படும் உதவி எல்லாம் அன்பாக கருதப்படாது. அறியாமையினால் செய்யும் சில உதவிகள் நம்மை அதிகமாக பாதிக்கும். 

உதவி செய்கிறேன் என்றுச் சொல்லி, நாம் மற்றவர்களின் மார்க்க விஷயங்களுக்காக உதவி செய்யக்கூடாது. முஸ்லிம்கள் சிறுவர்களுக்கு விருத்தசேதனம் (சுன்னத்துச்) செய்கிறார்கள் என்றுச் சொல்லி, நாம் அதற்கு டொனேஷன் தரக்கூடாது. மசூதி கட்டுமானப் பணிக்கு டொனேஷன் தரக்கூடாது. ஆனால், அதே முஸ்லிம் ஏழ்மையில் தவிக்கும் போது, உன் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டாவது, அவனுக்கு நீ உதவி செய்ய மறவாதே.

எனவே, ரமளான் மாதத்தில், முஸ்லிம்கள் நோன்பை முடித்துக்கொள்வதற்கு, நாம் ஒரு பேரிச்ச பழத்தையும், ஒரு குவளை தண்ணீரையும் தரக்கூடாது, இப்படி கொடுத்தால், இது கர்த்தருக்கு விரோதமான பாவமாகும். இஸ்லாம் என்பது பைபிளினால் சபிக்கப்பட்ட இன்னொரு சுவிசேஷத்தைச் சொல்கிறது, இன்னொரு இயேசுவை அறிமுகம் செய்கின்றது. பைபிள் இதனை கடுமையாக கண்டிக்கிறது, எனவே, அதிக நன்மையைச் செய்கிறேன் என்றுச் சொல்லி, நம் தலையில் நாமே நெருப்பை அள்ளி போட்டுக்கொள்ளக்கூடாது. நம் ஊர்களில் நடக்கும் மாரியம்மன் திருவிழாக்களில் கூழ் 
ஊற்றுவதற்கும், கோவில் சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்வதற்கும் ஒரு கிறிஸ்தவராக இருந்துக் கொண்டு, நீங்கள் பணத்தை கொடுப்பீர்களா? அதே போலத்தான் இதுவும். 

முஸ்லிம்களை நேசியுங்கள், ஆனால், அவர்களின் மார்க்க விஷயமாக, கர்த்தருக்கு அறுவருப்பான பாவங்களுக்கு பங்காளிகளாக ஆகாதிருங்கள்.

அடுத்த கேள்வி பதிலில் இன்னும் அனேக கேள்விகளையும், பதில்களையும் காண்போம்.

1)      ரமளான் நோன்பை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கட்டாயம் கடைபிடித்து ஆகவேண்டுமா? ஏதாவது விதிவிளக்குகள் உண்டா?
2)      ரமளான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பு இருந்தும், முஸ்லிம்கள் மிகவும் புஷ்டியாக, ஆரோக்கியமாக காணப்படுகிறார்களே! இதன் இரகசியம் என்ன?
3)      ரமளான் பற்றி குர்-ஆன் என்ன சொல்கிறது? சில வசனங்களை மேற்கோள் காட்டமுடியுமா?
4)      இந்த நோன்பு காலத்தில் முஸ்லிம்கள் அதிகமாக எச்சில் துப்பிக்கொண்டு இருப்பதை நான் பார்க்கிறேன், ஏன் இப்படி செய்கிறார்கள்?

ஞாயிறு, 6 ஜூலை, 2014

குர்-ஆன் மற்றும் சுன்னாவின் படி இஸ்லாமியரல்லாதவர்களுக்கு முஸ்லிம்கள் எப்படி வாழ்த்துக்கள் கூறுவது?

சாம் ஷமான் & யோகன் கட்ஜ்

மக்கள் சந்தித்திக்கொள்ளும் போது ஒருவருக்கு ஒருவர் எப்படி வாழ்த்துக்கள் கூறவேண்டும் என்று குர்-ஆன் போதிக்கின்றது:

குர்-ஆன் 4:86

உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

இப்னு அப்பாஸ் அவர்கள் மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் எப்படி யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் மெஜியன்களுக்கும் வாழ்த்துக்கள் கூறவேண்டும் என்றுச் சொல்கிறார்:

1107. இப்னு அப்பாஸ் கூறியதாவது: உங்களுக்கு யார் வாழ்த்துக்கள் சொன்னாலும், அவர்கள் யூதர்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ, அல்லது மேஜியன்களாகவோ இருந்தாலும் சரி, அவர்களுக்கு திருப்பி வாழ்த்துக்களைச் சொல்லுங்கள். ஏனென்றால், அல்லாஹ் இப்படியாக கூறியுள்ளார், "உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள். . . "(Al-Adab al-Mufrad Al-Bukhari (Muslim Morals and Manners), XDIII. The People of the Book; online source; bold and underline emphasis ours)

ஆனால், முஹம்மது  இப்னு அப்பாஸ் சொன்னதற்கு எதிராகவும், குர்-ஆனுக்கு முரண்பட்டும் போதித்துள்ளார்.

1102. அபூ பஸ்ரா அல் ஜிஃபாரி இறைத்தூதர்(ஸல்) சொன்னதாக அறிவித்ததாவது:

"நான் நாளைக்கு யூதர்களிடம் செல்லப்போகிறேன். நீங்கள் யூதர்களுக்கு முதலாவது வாழ்த்துக்கள் கூறாதீர்கள். அவர்கள் உங்களுக்கு முதலாவது வாழ்த்துக்கள்  கூறினால், அப்போது நீங்கள் "உங்களுக்கும்" என்று திருப்பிச் சொல்லுங்கள் என்றார்".

1103: இறைத்தூதர் (ஸல்) சொன்னதாக அபூ ஹுரைரா அறிவித்ததாவது: "வேதமுடையவர்களுக்கு முதலாவது வாழ்த்துதல்களை கூறாதீர்கள். அவர்களை சாலைகளில் சந்திக்கும்போது அவர்கள் நெருக்கமான வழியாக செல்ல கட்டாயப்படுத்துங்கள்"

138: தலைப்பு: இஸ்லாமியரல்லாதவர்களுக்கு முஸ்லிம்கள் முதலாவது வாழ்த்துக்கள் கூறுவது தடை செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு திருப்பி வாழ்த்து கூறுவது எப்படி?  ஒரு கூட்டத்தில் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாதவர்கள் இருந்தால் எப்படி அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறுவது?

866. அல்லாஹ்வின் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா அறிவித்ததாவது, "யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு முதலாவதாக வாழ்த்துக்கள் கூற முயலாதீர்கள். இவர்களை நீங்கள் சாலைகளில் சந்தித்தால், சாலையின் நெருக்கமான வழியாக செல்ல வற்புறுத்துங்கள்" [முஸ்லிம்]

867. அல்லாஹ்வின் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக, அனஸ் அவர்கள் அறிவித்ததாவது, "வேதமுடையவர்கள் உங்களுக்கு வாழ்த்துதல்கள் கூறும்போது, அவர்களுக்கு "உங்களுக்கும்" என்று திருப்பிச்  சொல்லுங்கள்.

868. உஸாமா அறிவித்ததாவது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தை கடந்துச் சென்றுக்கொண்டு இருந்தார். இந்த கூட்டத்தில் முஸ்லிம்கள், விக்கிர ஆராதனைக்காரர்கள் மற்றும் யூதர்களும் இருந்தார்கள். இவர்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வாழ்த்துதல்களைச் சொன்னார்கள். (ரியாத் அஸ்ஸலிஹின் - Riyad as-Salihin (The Meadows of the Righteous); source

மேலே கண்ட ரியாத் 866ம் ஹதிஸ் பற்றி "ஸலஃபி" பிரிவினர் கீழ்கண்டவாறு விரிவுரை கூறுகின்றனர்:

விரிவுரை: முஸ்லிம்கள் முஸ்லிமல்லாத மக்களுக்கு முதலாவது வாழ்த்துக்கள் கூறக்கூடாது என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. மேலும் இந்த ஹதீஸின் படி, ஒரு சாலையில் சென்றுக்கொண்டு இருக்கும் போது, அந்த சாலை மக்களால் நிரம்பியிருக்கும் போது, முஸ்லிம்கள் சாலையின் மத்தியில் செல்லவேண்டும். முஸ்லிமல்லாதவர்கள் சாலையின் ஓரமாக செல்ல வற்புறுத்தப்படவேண்டும். இந்த ஹதீஸ் முஸ்லிம்களின் மேன்மையை நமக்கு எடுத்துக்காட்டுகின்றது, அதே நேரத்தில் இஸ்லாமியரல்லாதவர்கள் பெறவேண்டிய மரியாதைக் குறைவையும், அவர்கள் அடையவேண்டிய கீழ்தரமான நிலையையும் காட்டுகின்றது. (Riyad-us-Saliheen, compiled by Al-Imam Abu Zakariya Yahya bin Sharaf An-Nawawi Ad-Dimashqi, commentary by Hafiz Salahuddin Yusuf, revised by M.R. Murad [Darussalam Publishers & Distributors, Riyadh, Houston, New York, Lahore, First Edition: June 1999], Five. The Book of Greetings, Chapter 138: Greeting the non-Muslims and Prohibition of taking an Initiative, Volume 2, p. 711; online source; italic and underline emphasis ours)

இந்த வாழ்த்துதல்கள் பற்றி "இரு ஜலால்கள்" எப்படி விரிவுரை கூறியுள்ளார்கள் என்பதைக் காணலாம் - குர்-ஆன் 4:86.

உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள். ஒருவர் உங்களிடம் "உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக" என்று வாழ்த்துக்கள் கூறினால், அவருக்கு பதிலாக "உங்களுக்கு சமாதானம் உண்டாகட்டும் மற்றும் அல்லாஹ்வின் ஆசி உங்களுக்கு உண்டாகட்டும்" என்றுச் அதிக படியாச் சொல்லுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான். இப்படி வாழ்த்துக்கள் கூறுவது சிறந்தது.

இந்த ஹதீஸின் படி, ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமல்லாதவருக்கு, தீய மனிதனுக்கு,  வாழ்த்துதல்களை முதலாவது சொல்லக்கூடாது என்பதாகும். இதுமட்டுமல்ல, ஒரு மனிதன் இயற்க்கை கடனைதீர்த்துக்கொண்டு இருக்கும் போதோ, குளித்துக்கொண்டு, சாப்பிட்டுக்கொண்டோ இருக்கும்போது அவருக்கு வாழ்த்துதல்கள் சொல்லக்கூடாது. ஒரு முஸ்லிமல்லாதவர் உங்களிடம் "உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்" என்றுச் சொன்னால், அவருக்கு பிரதியுத்தரமாக "உங்களுக்கும் உண்டாகட்டும்" என்றுச் சொல்லுங்கள் (Tafsir al-Jalalayn; source)

ஒருவர் இஸ்லாமியரல்லாதவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறும்போது, அதைப்போலவோ, அதைவிட சிறந்ததையோ வாழ்த்துதலாக கூறக்கூடாது என்று முஹம்மது போதனை செய்துள்ளார். இதே போல, இன்னொரு இஸ்லாமியர் குர்-ஆன் சொன்னதற்கு எதிராக போதனை செய்துள்ளேன்.

1115. அப்துர்ரஹ்மான் கூறினார்: இப்னு உமரை கடந்து ஒரு கிறிஸ்தவர் செல்லும் போது, அவருக்கு வாழ்த்துதல்களைக் கூறினார், உடனே இப்னு உமரும் அந்த கிறிஸ்தவருக்கு திருப்பி வாழ்த்துக்களைச் சொன்னார். அதன் பிறகு இப்னு உமருக்கு "அந்த நபர் ஒரு கிறிஸ்தவர்" என்று அறிவிக்கப்பட்டது. இதை அறிந்த உடன் இப்னு உமர் உடனே அந்த கிறிஸ்தவரிடம் சென்று "நான் சொன்ன வாழ்த்துதல்களை எனக்கு திருப்பித் தந்துவிடு" என்று கேட்டார். (Al-Adab al-Mufrad Al-Bukhari, XDIII. The People of the Book; bold and underline emphasis ours)

இதுவரை நாம் கண்ட ஸஹியான (உண்மையான) ஹதீஸ்கள் குர்-ஆனுடைய போதனைக்கு எதிராக போதிப்பதைக் காணமுடியும்.

 "யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு முதலாவது வாழ்த்துக்கள் கூறாதீர்கள்" என்று முஹம்மது சொன்னது கீழ்தரமானதாகும். முஸ்லிம்கள் எப்படி தங்களுக்குள் வாழ்த்துக்கள் கூறினார்கள் என்பதைப் பற்றி சில ஹதீஸ்களை இப்போது காண்போம். 

447: வாத்துக்களை முதலாவது சொல்லுதல்:

3326. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம்(அலை) அவர்களை(களி மண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, 'நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்" என்று சொன்னான். அவ்வாறே ஆதம்(அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), 'அஸ்ஸலாமு அலைக்கும் - உங்களின் மீது சாந்தி பொழியட்டும்" என்று கூறினார்கள். அதற்கு வானவர்கள், 'உங்களின் மீதும் சாந்தியும் கருணையும் பொழியட்டும்" என்று பதில் கூறினார்கள். 'இறைவனின் கருணையும் (உங்களின் மீது பொழியட்டும்)' என்னும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) அதிகப்படியாக கூறினார்கள். 

எனவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம்(அலை) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள். ஆதம்(அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை (மனிதப் படைப்புகள்) (உருவத்திலும், அழகிலும்) குறைந்து கொண்டே வருகின்றன" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  Volume :4 Book :60

448. மக்களுக்கு வாழ்த்துக்களை சொல்லுதல்

980. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா அறிவித்ததாவது, "நீங்கள் நம்பிக்கையாளர் ஆகும் வரை அந்த தோட்டத்தில் நுழையமாட்டீர்கள். நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கும் வரை, நீங்கள் நம்பிக்கையாளர் ஆகமாட்டீர்கள். ஒருவர் மீது இன்னொருவர் அன்பு கூறுவது எப்படி நடைப்பெறும் என்று நான் சொல்லட்டுமா?" ஆம், சொல்லுங்கள் இறைத்தூதரே என்று பதில் அளித்தார் ஹுரைரா. இறைத்துதர் "ஒருவரை ஒருவர் வாழ்த்துக்கள் கூறிக்கொள்வதை உங்களின் மத்தியில் ஒரு பொதுவான பழக்கமாக ஆக்கிக்கொள்ளுங்கள்" என்று கூறினார்.

449. முதலாவது வாழ்த்துக்கள் கூறுவது:

982. பஷீர் இப்னு யாசர் அறிவித்ததாவது "வாழ்த்துக்கள் கூறுவதில் யாரும் இப்னு உமரை முந்திக்கொள்ளமுடியாது"

983. ஜபீர் கூறினார், "ஒட்டகம்/குதிரையில் சவாரி செய்பவர், நடந்துக்கொண்டுச் செல்பவருக்கு சலாம் சொல்லவேண்டும். நடந்துக்கொண்டுச் செல்பவர் உட்கார்ந்து இருப்பவருக்கு சலாம் சொல்லவேண்டும். இரண்டு பேர் நடந்துச் செல்லும் போது, யார் முதலாவது சலாம் கூறுகிறாரோ அவர் தான் சிறந்தவர்."

984. இப்னு உமர் கூறியதாவது, அல் அகர் என்பவருக்கு பனு அமர் இப்னு அவ்ஃப்ஐ சார்ந்த ஒருவர் சிறிது பேரிச்சம் பழங்கள் கடன் இருந்தது.  அவர் சொன்னார், "நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன், அப்பொது அபூ பக்கர் சித்தீக் அவர்கள் எங்களோடு இருந்தார், அவர் தொடர்ந்து இவ்விதமாகச் சொன்னார், "நாங்கள் சந்திக்கும் அனைவரும் எங்களுக்கு வாழ்த்துக்கள் சொன்னார்கள். அபூ பக்கர் "நாம் முதலில் வாழ்த்துக்கள் சொல்வதற்கு முன்பாக, மற்றவர்கள் நமக்கு வாழ்த்துக்கள் சொல்லிவிட்டால், அவர்களுக்கு நன்மைகள் சென்றுவிடும் என்று உனக்குத் தெரியாதா?" என்று கேட்டார்கள்.

985. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ அய்யுப் அறிவித்ததாவது, "ஒரு முஸ்லிம் தன்னை இன்னொரு முஸ்லிமோடு பிரிந்து மூன்று நாட்களுக்கு மேல் இருக்கக்கூடாது, அவர்கள் இருவரும் சந்திக்கும் போது, ஒருவர் முகத்தை திருப்பிக்கொள்கிறார், இன்னொருவரும் அப்படியே செய்கிறார். இவர்களில் யார் முதலாவது சலாம் (வாழ்த்துக்கள்) சொல்கிறாரோ அவர் தான் சிறந்தவராவார்".

452. ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை சந்திக்கும் வேளையில் அவருக்கு வாழ்த்துதல்கள் (சலாம்) சொல்வது கடமையாகும்.

1240. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ஸலாமுக்கு பதிலுரைப்பது, நோயாளியை விசாரிப்பது, ஜனாஸாவப் பின்தொடர்வது, விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது. தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும். 

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  Volume :2 Book :23

ஒருவர் இன்னொருவருக்கு சலாம் சொல்வது என்பது  ஒரு பொதுவான நற்காரியமானாலும், இது இன்னொரு நபரை நேசிப்பதையும், மதிப்பு செலுத்துவதையும் காட்டுகின்றது. ஆகையால், வேண்டுமென்றே இன்னொருவருக்கு வாழ்த்துக்கள் கூறாமல் இருப்பது என்பது வெறுப்புணர்வையும் மேலும் அவமதிப்பு செயலாகவும் இருக்கிறது.

ஆக, முஹம்மதுவின் சுன்னா(வார்த்தையும் செயலும்) பல வகைகளில் குர்-ஆனின் கட்டளைகளுக்கு எதிராக உள்ளது என்பதை காண்கிறோம்.

கடைசியாக, நாம் கவனிக்கின்ற ஒரு முக்கியமான விவரம் என்னவென்றால், ஹதீஸ் 985ன் படி, ஒருவருக்கு இடையே மனஸ்தாபங்கள் இருக்கும் போது, யார் முதலாவது சென்று முதலில் வாழ்த்துக்கள் சொல்கிறாரோ அவரே சிறந்தவர் ஆவார். ஏனென்றால், அவனது ஆன்மீக நிலை மற்றவனைக் காட்டிலும் சிறந்ததாகவும், அவர் மார்க்க விஷயங்களில் முதிர்ச்சி அடைந்தவராகவும் இருக்கிறார் என்பதைக் காட்டுகின்றது. இஸ்லாமின் படி, யுதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்கள் முதலாவது வாழ்த்துக்கள் சொல்லக்கூடாது என்று முஹம்மது போதனை செய்வது என்பது நமக்கு எதைக் காட்டுகின்றது?  அதே போல அவர்கள் வாழ்த்துக்கள் முதலாவது சொல்லிவிட்டால், உங்களுக்கும் வாழ்த்துக்கள் என்று முஸ்லிம்கள் ஒரிரு வார்த்தைகளால் வாழ்த்துக்கள் திருப்பிச் சொல்வது எதனைக் காட்டுகின்றது?

முஸ்லிம்களுக்கு யூதர்களும், கிறிஸ்தவர்களும் முதலாவது வாழ்த்துக்கள் சொல்வது என்பது இவர்களின் ஆன்மீக முதிர்ச்சியையும், மேன்மையையும் காட்டுகின்றது. இந்த யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் ஆன்மீக முதிர்ச்சி முஹம்மதுவின் ஆன்மீக முதிர்ச்சியைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது என்பதை இதைக் காட்டுகின்றது. ஆக, வாழ்த்துக்கள் சொல்வதில் முஹம்மதுவை விட, உயர்ந்தவர்கள் சிறந்தவர்கள் யூதர்களே, கிறிஸ்தவர்களே ஆவார்கள்.

ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/Muhammad/Inconsistent/greeting_nonbelievers.html

சனி, 5 ஜூலை, 2014

ரமளான் கேள்வி பதில்கள் - 1: ரமளான் பற்றி கிறிஸ்தவர்கள் அறிந்துக் கொள்ளவேண்டிய முக்கியமான விவரங்கள்

(கிறிஸ்தவ சபையே! விழிமின் எழுமின் தொடர்கிறது)

ஒரு கிறிஸ்தவ போதகரும், உமரும் உரையாடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த மாதம் ரமளான் மாதம் என்பதால் இந்த போதகர் உமரிடம் ரமளான் பற்றிய கேள்விகளை கேட்கிறார். சிலருக்கு  குறுங்கதைகள்  படிக்க பிடிக்கும், சிலருக்கு நீண்ட நாவல்களை படிக்க பிடிக்கும், இன்னும் சிலருக்கு இதர மதத்தவரின் பண்டிகைகள் பற்றி அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். இந்த வகையைச் சார்ந்தவர் தான் இந்த போதகர். இவர் கேட்கும் ரமளான் கேள்விகள் மிகவும் முக்கியமான கேள்விகளாகும். ஒரு கிறிஸ்தவருக்கு ரமளான் பற்றி இந்த கட்டுரைகளில் சொல்லப்பட்ட விவரங்கள் குறைந்த பட்சம்  தெரிந்து இருக்கவேண்டும். இக்கரைக்கு அக்கரை பச்சை என்றுச் சொல்வார்கள் அல்லவா அதுபோல, வெளியே இருந்து பார்த்தால், தூரத்திலிருந்து பார்த்தால் எல்லாம் புதிதாகவும், ஆர்வமூட்டுவதாகவும் தெரியும், ஆனால், சிறிது ஆழமாக நெருங்கிச் சென்று பார்த்தால் தான் உண்மை நிலை புரியும். எனவே, வாருங்கள் ரமளானை தொட்டுப் பார்ப்போம், ரமளான் பாயாசத்தை சுவைத்துப் பார்ப்போம், பிரியாணியின் எலும்புகளை கடித்துப் பார்ப்போம். இந்த வருடம் நம் அண்டை வீட்டு முஸ்லிம்கள் ரமளான் பண்டிகையன்று கம கம என்று மனக்கும் சுவையான "அந்த பிரியாணியை" நமக்கு தருவார்களா? நம் இஸ்லாமிய நண்பர்கள் ரமளான் அன்று நம்மை விருந்துக்கு அழைப்பார்களா? இப்படி நம்மில் சிலர் சிந்திக்கக்கூடும். பிரதர், நீங்க என்ன தான் சொன்னாலும் சரி, முஸ்லிம்கள் செய்யும் பிரியாணியின் சுவையே தனி தான் என்று நீங்கள் மனதில் மௌனமாக சொல்வது என் காதுகளில் சத்தமாக கேட்கத்தான் செய்கிறது.  ரம்ஜான் பண்டிகைக்கு முன்பாக, இஸ்லாமிய நண்பர்கள் நம்மை விருந்துக்கு அழைப்பதற்கு முன்பாக, ரமளானை சிறிது மனதால் முகர்ந்துப் பார்ப்போமா? வாருங்கள்.கேள்வி 1: நான் ஒரு சபையின் போதகராக இருக்கிறேன். ரமளான் என்றால் இஸ்லாமியர்களின் பண்டிகை என்று எனக்குத் தெரியும், ஆனால் அதற்கு மேலாக ஒன்றும் தெரியாது. ரமளான் என்றால் என்ன? சிறிது விளக்கமுடியுமா?

பதில்: முஸ்லிம்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானவைகள் இரண்டு பண்டிகைகளாகும், அவை: ரம்ஜான் மற்றும் பக்ரீத் என்பவைகளாகும்.

சிலர் "ரமலான்" என்று அழைப்பார்கள், வேறு சிலர் "ரமளான்" என்றும், "ரமழான்/ரமதான்" என்றும் அழைப்பார்கள். நாம் இந்த கட்டுரையில் "ரமளான்" என்று பயன்படுத்துகிறோம்.

இஸ்லாமிய காலண்டர் சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டது.  இஸ்லாமியர்களின் மாதங்களில் ஒன்பதாவது மாதம் தான் ரமளான் எனப்படுகின்றது.  

இஸ்லாமிய மாதங்களின் பெயர்கள் இவைகளாகும் [1]: 

1) முஹர்ரம்
2) ஸபர்
3) ரபியுல்  அவ்வல்
4) ரபியுல் ஆஹிர்
5) ஜமாத்திலவ்வல்
6) ஜமாத்திலாஹிர்
7) ரஜப்
8) ஷஃபான்
9) மளான் (ரமலான்)
10) ஷவ்வால்
11) துல்காயிதா
12) துல்ஹஜ் 

ரமளான் என்றுச் சொல்லும் போது, எல்லாருக்கும் ஞாபகம் வருவது "நோன்பு" ஆகும். இந்த மாதம் முழுவதும் முஸ்லிம்கள் 30 நாட்கள் நோன்பு இருப்பார்கள்.

நோன்பு – இஸ்லாமிய கட்டாய கடமை

இஸ்லாமியர்கள் கடைபிடிக்கவேண்டிய முக்கியமான ஐந்து கடமைகளில் (இஸ்லாமிய தூண்களில்) ரமளான் மாதத்தில் நோன்பு இருக்கவேண்டும் என்பதும் ஒரு கடமையாகும்.

இந்த ரமளான் மாதத்தில் முப்பது நாட்கள் நோன்பு இருந்துவிட்டு, அதன் பிறகு பண்டிகையை முஸ்லிம்கள் கொண்டாடுவார்கள்.

கேள்வி 2: கிறிஸ்தவர்களின் உபவாசம் தான் ரமளான் நோன்பா? இவ்விரண்டிற்கும் இடையே இருக்கும் வித்தியாங்கள் என்ன?

பதில்: நான் 2012ம் ஆண்டு ரமளான் மாதத்தில் என் தம்பிக்கு கடிதம் எழுதும் போது, இதைப் பற்றி எழுதியுள்ளேன், அதாவது கிறிஸ்தவர்களின் / இயேசுவின் உபவாசமும், முஸ்லிம்களின் ரமளான் நோன்பும் வெவ்வேறானவை என்று குறிப்பிட்டு இருந்தேன்[2] . அந்த கடிதத்தை இப்போது இங்கு தருகிறேன், முஸ்லிம்களின் நோன்பை சரியாக புரிந்துக்கொள்ள இது உதவியாக இருக்கும்.

 தேதி: சனி, 28 ஜூலை, 2012
அன்புள்ள தம்பி,

உனக்கு சமாதானம் உண்டாவதாக.

நீ ஒரு அருமையான கடிதத்தை எழுதியிருந்தாய். பைபிளின் வசனங்களைமேற்கோள் காட்டி கடிதம் எழுதினாய், அதற்காக மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

என்னுடைய முதல் கடித்தத்தில் நான் முன்வைத்த விவரத்திற்கு நீ பதிலைஎழுதினாய், அதாவது இஸ்லாமியர்களின் நோன்பு என்பது ஏதோ பழங்குடிமக்களின் சடங்காச்சரமல்ல, அது இஸ்லாமுக்கு முன்பு வாழ்ந்த மக்களின்வழக்கமல்ல, அது இயேசு பின்பற்றிய நோன்பு, யூதர்கள் பின்பற்றிய நோன்புஎன்றுச் சொல்லி பதில் எழுதியிருந்தாய். அதற்காக, கீழ்கண்ட மூன்று பைபிளின்வசனங்களை மேற்கோள் காட்டியிருந்தாய்.

இயேசு 40 நாட்கள் நோன்பு (உபசாவம்) இருந்தார்: மத்தேயு 4:2  அவர் இரவும்பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.

இவ்விதமான பிசாசு உபவாசத்திலும்,ஜெபத்தினாலுமே தவிர போகாது –மத்தேயு 17:21 இந்த ஜாதிப்பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றிமற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.

நோன்பு இருக்கும் போது மாயக்காரரைப்போல இருக்கவேண்டாம் என்று இயேசு கூறிய அறிவுரை: – 
மத்தேயு  6:16 நீங்கள் உபவாசிக்கும்போது,மாயக்காரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதைமனுஷர் காணும் பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள்தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 17 நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல்,அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்குஎண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. 18 அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப்பலனளிப்பார்.

உன்னுடைய பதிலுக்காக மிக்க நன்றி, ஆனால் மேற்கண்ட வசனங்களை காட்டி நீஎடுத்த முடிவு தவறானதாகும், அதாவது இஸ்லாமிய நோன்பும், பைபிளின்நோன்பும் ஒன்று தான் என்று நீ நினைத்துக்கொண்டாய். மேலோட்டமாகவசனங்களை நாம் பார்த்தால், இரண்டும் ஒன்று போல காட்சி அளிக்கும், ஆனால்,சிறிது ஆய்வு செய்தோமானால் அனேக வித்தியாசங்கள் காணப்படும். நீமேற்கோள் காட்டிய வசனங்களிலிருந்தே உனக்கு நான் சில விவரங்களைவிளக்குகிறேன்.

இஸ்லாமிய நோன்பிற்கும், கிறிஸ்தவ நோன்பிற்கும் இடையே இருக்கும்வித்தியாசங்கள்:
 1. இஸ்லாமிய நோன்பு என்பது இஸ்லாமிய கடமைகளில் ஒரு கடமையாகும்.அதை தகுந்த காரணங்கள் இல்லாமல் மீறுவது இஸ்லாமிய சட்டத்தின் படிகுற்றமாகும். ஆனால், கிறிஸ்தவத்தில் நோன்பு (உபவாசம்) என்பதுநிச்சயமாக கடைபிடிக்கவேண்டிய கடமையல்ல. நம்முடைய தேவையைபொருத்து நாம் கடைபிடிக்கலாம். பழைய ஏற்பாட்டு காலத்தில் ஒரு ஆபத்து வந்தாலோ, யாராவது மரித்துவிட்டாலோ யூதர்கள் உபவாசம் இருப்பார்கள். யூதர்களுக்கு மோசேயின் மூலமாக ஒரு குறிப்பிட்ட நாளில் உபவாசம் இருக்கும்படி கூறப்பட்டுள்ளது. 
 2. இஸ்லாமிய நோன்பு என்பது அதிகாலை ஆரம்பித்து, சூரியன் அஸ்தமிக்கும்வரை தொடருகிறது, ஆனால், கிறிஸ்தவ உபவாசம் என்பது நாள்முழுவதும் தொடரும். இத்தனை மணிக்கு ஆரம்பித்து, இத்தனை மணிக்குமுடிக்கவேண்டும் என்ற நிபந்தனை இல்லை. பழைய மற்றும் புதியஏற்பாட்டில் நாள் முழுவதும் உபவாசம் இருந்ததாக அனேகஎடுத்துக்காட்டுகளை காணலாம். இதுமட்டுமல்லாமல், யூதர்கள் தனிப்பட்ட ஒரு நாள் உபவாசம் இருக்கும் போது, ஒரு நாளின் மாலையில் ஆரம்பித்து மறுநாள் மாலைவரை இருப்பார்கள் (முழூ நாள்).
 3. இஸ்லாமில் வருடத்திற்கு ஒரு முறை ரமளான் மாதத்தில் 30 நாட்கள்நோன்பு இருக்கவேண்டும் என்பது கட்டளை, ஆனால், கிறிஸ்தவத்திலேவருடத்தின் இந்த குறிப்பிட்ட மாதம் இத்தனை நாட்கள் நோன்புஇருக்கவேண்டும் என்ற கட்டளையில்லை. அவரவருக்கு விருப்பமானநாட்களில், விருப்பமான எண்ணிக்கையில் உபவாசம் இருப்பார்கள்.
 4. இஸ்லாமிய நோன்பில், அதிகாலையில் எழுந்திருந்து, சாப்பிடுவார்கள்,கிறிஸ்தவத்திலே இப்படி அதிகாலையில் எழுந்து சாப்பிடும்கட்டளையில்லை.
 5. முக்கியமாக, இஸ்லாமிலே ஒரு குறிப்பிட்ட மாதம் ஒதுக்கி ரமளான்நோன்பு இருப்பதினால், எல்லாருக்கும் இவர் நோன்பு இருக்கிறார் என்பதுதெரியவரும். ஆனால், கிறிஸ்தவத்தில் ஒருவன் உபவாசம் இருக்கிறேன்என்று சொன்னால் தவிர வெளியே தெரிய வழியில்லை.இஸ்லாமியர்களின் ரமளான் நோன்பு மத்தேயு 6ம் அதிகாரத்தில் இயேசுசொன்ன அறிவுரைக்கு எதிராக இருக்கிறது. அதாவது வெளிப்படையானஒன்றாக இருக்கிறது.
 6. இஸ்லாமிய ரமளான் நோன்பு என்பது இஸ்லாமிய கடமைகளில் ஒன்றாகஇருப்பதினால், ஒருவேளை நோன்பு வைக்கமுடியாதவர்கள் அதற்கானபரிகாரங்கள் செய்யவேண்டும். ஆனால், கிறிஸ்தவ உபவாசத்தில்இப்படிப்பட்ட பரிகாரங்கள் ஒன்றுமில்லை.
 7. ரமளான் மாதம் நோன்பு என்றுச் சொல்கிறீர்களே தவிர, மீதமுள்ளமாதங்களில் உணவுக்கு செலவாகும் பணத்தை விட ரமளான் மாதத்தில்அதிகமாக செலவாகும். அதாவது உணவு பணடங்களின் விற்பனையும்இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக ஆகிறது. ஏதோஅதிகாலையிலிருந்து மாலைவரை நோன்பு இருக்கிறார்கள், மீதமுள்ள பாதிநாள் நன்றாக சாப்பிடுகிறார்கள். இப்படி பாதி நாள் நன்றாக சாப்பிடுவதைநான் தவறு என்றுச் சொல்லவில்லை, ஆனால், இப்படிப்பட்ட வழக்கங்கள்கிறிஸ்தவத்தில் இல்லை என்றுச் சொல்கிறேன், அவ்வளவு தான்.
 8. புகாரி ஹதீஸில் "ரமளான் மாதத்தில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்ப்பார்த்தும்  நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன" என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், கிறிஸ்தவத்தில் உபவாசம் இருப்பதினால் நம்முடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற கோட்பாடு இல்லை. (புகாரி பாகம் 2, அத்தியாயம் 30,எண் 1901).  இயேசுக் கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைத்து, நம்முடைய பாவங்களை அவர் சிலுவையில் சுமந்து தீர்த்தர் என்பதை நம்பி, மேற்கொண்டு பாவமில்லாத வாழ்க்கையை வாழ நம்மை ஒப்புக்கொடுப்பதினால் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

இஸ்லாமிய நோன்பிற்கு, கிறிஸ்தவ உபவாசத்திற்கும் இடையே இருக்கும்வித்தியாசத்தை கண்டாய், ஆனால், இஸ்லாமிய நோன்பிற்கும், சேபியன்கள்என்ற ஜனங்களுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமையை காண்போமானால்,உனக்கு ஆச்சரியமாக இருக்கும். இந்த சேபியன்கள் ரமளான் மாதத்தில் நோன்புஇருப்பார்கள், காபாவை மதிப்போடு தெய்வீகமாக கருதுவார்கள் மற்றும் தாங்கள்தொழுதுக்கொள்ளும் போது காபாவை நோக்கிய தொழுவார்கள். இவர்களைப்பற்றி குர்-ஆனில் குறிப்பு உண்டு, இவர்களை நம்பிக்கையாளர்களின் பட்டியலில்குர்-ஆன் சேர்த்து பேசுகிறது (குர்-ஆன் 2:62, 5:69 & 22:17  பார்க்க http://answering-islam.org/Silas/pagansources.htm)

தம்பி, இஸ்லாமிய நோன்பும், பைபிளின் நோன்பும் ஒன்றல்ல. சேபியன்கள்பின்பற்றிய பழக்கங்களை, மத சடங்காச்சாரங்களை ஓர் இறைக்கொள்கை என்றுச்சொல்லிக்கொள்கின்ற இஸ்லாமில் முஹம்மது புகுத்தியுள்ளார்.  கிறிஸ்தவமற்றும் யூதர்களை குறிப்பிடும் போது குர்-ஆன் மூன்று இடங்களில்சேபியன்களையும் குறிப்பிடுகிறது.  இஸ்லாம் ஓர் இறைக்கொள்கை என்றுசொல்லிக்கொண்டாலும், அதில் அனேக பல தெய்வ வழிபாட்டு மக்களின்பழங்கங்கள் உள்ளன என்பது திண்ணம். இதுமட்டுமல்ல, அஷூரா நாள் நோன்பு கூட யூதர்கள் கடைபிடிக்கிறார்கள் என்பதால் முஹம்மது  கடைபிடிக்க ஆரம்பித்தார். ரமளான் மாத நோம்பு கடமையாக்கப்பட்டதும் இந்த அஷூரா நோன்பு தளர்த்தப்பட்டது.

தம்பி, நீ எழுதிய விவரங்கள் தவறானதாகும், அதாவது இயேசுவின் நோன்பும்,இஸ்லாமிய நோன்பும் ஒன்றல்ல. பைபிளில் காணப்படும் அனேக விவரங்களை,நிகழ்ச்சிகளை நாம் குர்-ஆனில் காண்பது உண்மை தான், ஆனால் குர்-ஆனில்காணப்படும் தொழுகை, மற்றும் நோன்பு போன்ற விவரங்கள் மட்டும்பைபிளிலிருந்து எடுக்கப்பட்டதல்ல, அவைகள் இஸ்லாமுக்கு முன்பு இருந்த பலதெய்வ வழிப்பாட்டு மக்கள் பின்பற்றிய பழக்கங்களாகும்.
                
உன்னை அடுத்த கடித்ததில் சந்திக்கிறேன்.

இப்படிக்கு
தமிழ் கிறிஸ்தவன்.

கேள்வி 3: நீங்கள் ஒரு முன்னாள் முஸ்லிம் என்பதினால், ஒரு தனிப்பட்ட கேள்வி  ஒன்றை கேட்கிறேன். நீங்கள் ரமளான் நோன்பு இருந்ததுண்டா? அப்போது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்? இப்போது எப்படி உணருகின்றீர்கள்? இயேசுவை பின் பற்றிய பிறகு எப்போதாவது, ரமளான் பற்றிய காரியங்களை பார்த்து "நான் முஸ்லிமாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே" என்று எண்ணியதுண்டா?

பதில்: ஒரு கேள்வி என்றுச் சொல்லி, பல கேள்விகளை கேட்டுவிட்டீர்கள்.

முதலாவதாக, நான் முஸ்லிமாக இருந்த காலத்தில் நோன்பு இருந்துள்ளேன்.  ஒரு முறையும் 30 நாட்கள் முழுவதுமாக இருந்ததில்லை. ஒற்றைப்படையில் நோன்பு இருந்துள்ளேன், சிறுவனாக இருந்த போது, ஒரு நாள் அல்லது மூன்று நாட்கள் இருந்துள்ளேன். வாலிபனாக வளரும் போது சிறிது சிறிதாக உயர்த்தி, 15 நாட்கள் வரை நோன்பு இருந்த ஞாபகம் எனக்கு உள்ளது. நான் 15 நாட்களுக்கு மேலாக நோன்பு இருந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. அதன் பிறகு நான் இயேசுவின் சீடனாக மாறிவிட்ட பிறகு, ரமளானுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன்.  அன்று எனக்கு ரமளான் பற்றி தெரிந்த விவரங்களை விட இன்று சிறிது அதிகமாக தெரியும்.

இரண்டாவதாக, அப்போது முஸ்லிம் சிறுவனான நான் என் குடும்பத்தோடு ரமளான் கொண்டாடியது, உறவினர்களோடு மகிழ்ந்தது என்னால் மறக்க முடியாது. என் குடும்பம் பெரிய குடும்பம் என்பதால், இப்படிப்பட்ட பண்டிகைகளில் உறவினர்களால் குடும்பமே ஒரு கலை கட்டும். பெரியவர்கள் சிறுவர்களுக்கு ஈதி (பரிசு பணம்) கொடுப்பார்கள். ரமளான் முடிந்த பிறகும் உறவினர்கள் சில நாட்கள் எங்களோடு இருப்பார்கள். நான் அதிகமாக அந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன். நான் நோன்பு வைக்காத நாட்களிலும் அதிகாலை 3:30 மணியளவில் எழுந்திருந்து, என் அம்மா சமைத்து வைக்கும் சூடான உணவுகளை, என் அக்காள், அண்ணனோடு சேர்ந்து நானும் நன்றாக சாப்பிடுவேன்.  இதே போல, மாலையிலும் அவர்கள் நோன்பை திறக்கும் போதும் நானும் சாப்பிடுவேன். விசேஷித்த வகையான உணவுகள், பழங்கள் என்று சாப்பிட அனேக வகையான உணவுகள் கிடைக்கும். ….ம்ம்ம்… அந்த காலத்தில் வாழ்ந்த வாழ்க்கை ஞாபகம் வருகிறது.

ஞாபகம் வருதே… ஞாபகம் வருதே… ஞாபகம் வருதே….
அதிகாலையில் எழுத்து… சாப்பிட்ட உணவு…
மாலையில் குடித்த ரம்ஜான் கஞ்சி..
கஞ்சியின் நண்பன் புதினா சட்னி…
எல்லாம் எனக்கு ஞாபகம் வருதே. . .

ஹா..ஹா..ஹா.. சும்மா தமாஷ்

கிட்டத்தட்ட 12 மணி நேரம் சாப்பிடாமல், தண்ணிர் பருகாமல் இருந்த பிறகு, மாலையில் சாப்பிடும் கஞ்சியும், புதினா சட்னியும் வாய்க்கும், மனதுக்கும் அமிர்தம் போல இருக்கும், ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்.

மூன்றாவதாக, நான் வாலிபனாகி, கொஞ்சம் அறிவு வந்த போது, ரமளான் பற்றிய எல்லாம் வெளியரங்கமான வெளிவேஷம் போல எனக்கு காணப்பட்டது. மசூதில் நாங்கள் நோன்பை திறந்த பிறகு, தொழுதுவிட்டு வீட்டிற்கு திரும்பி வரும் போது, சாலையோர கடைகளில் பார்த்தால், ஒரு கையில் டீ கப், இன்னொரு கையில் சிகரெட் அல்லது பீடியை பிடித்துக்கொண்டு, வானத்தில் புகை கொஞ்சமாக இருக்கிறது நாங்கள் உதவி செய்கிறோம் என்றுச் சொல்வது போல, இந்த நோன்பாளிகள் வானத்தைப் பார்த்து பார்த்து புகையை ஊதிக்கொண்டு இருப்பார்கள். நோன்பு திறக்கும் போது காணப்பட்ட மகிழ்ச்சியை விட இந்த புகைமகிழ்ச்சி அவர்களுக்கு அதிகமாக இருந்துள்ளது என்பதை காணமுடியும்.  குர்-ஆனின் ஒரு வசனம் கூட புரியாவிட்டாலும், இந்த ரமளான் மாதத்தில் முழு குர்-ஆனையும் படித்துவிட எங்கள் வீட்டில் இருக்கும் நபர்கள் போட்டி போட்டுக்கொண்டு படிப்பார்கள்.  இவைகளை பார்த்த போது,  எனக்கு எந்த ஒரு உற்சாகமும் உண்டாவதில்லை. பெரியவர்கள் துக்கப்படுவார்கள் என்பதற்காகவும், அல்லாஹ் தண்டித்துவிடுவான் என்பதற்காகவும், நம்முடைய அக்கவுண்டில் அல்லாஹ்விடம் நன்மைகள் குறைந்துவிடும் என்பதற்காகவும் நான் நோன்பு இருப்பேன்.  நான் மட்டுமல்ல, இன்றும் நோன்பு இருக்கும் பலரின் நிலையும் இது தான்.

நான்காவதாக, நீங்கள் கேட்ட கேள்வி,  "இயேசுவை பின் பற்றிய பிறகு எப்போதாவது, ரமளான் பற்றிய காரியங்களை பார்த்து " நான் முஸ்லிமாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே" என்று எண்ணியதுண்டா?" என்பதாகும்.

நான் கிறிஸ்துவை பின்பற்றியதிலிருந்து, நான் உலகை பார்க்கும் பார்வை மாறிவிட்டது. உண்மையுடன் தன் தாய் மொழியில் (புரியும் மொழியில்) பைபிளை படிக்கும் கிறிஸ்தவனுக்கு, தொடர்ந்து சபையின் ஐக்கியத்தில் இருக்கும் கிறிஸ்தவனுக்கு உலக காரியங்கள் அனைத்தையும் சரியாக பகுத்து அறியும் அறிவு கிடைத்துவிடுகின்றது. எது ஆன்மீகம், எது ஆன்மீகமில்லை என்றும், எதற்கு முன்னுரிமைப் தரவேண்டும், எதற்கு தரக்கூடாது என்றும் சரியாக பகுத்துப் பார்க்கத் தெரியும்.  எனவே, நான் பைபிளை அறிய அறிய, புதிய விஷயங்களைக் கண்டு வியப்பதில்லை, பிரமாண்டங்களைக் கண்டு பிரமிப்பதில்லை. பெருங்கூட்டம் ஒரு கோட்பாட்டை பின்பற்றுகிறது என்பதற்காக கண்மூடித்தனமாக நான் அதனை பின் பற்றுவதில்லை. இதனை நான் இஸ்லாமிலே கண்டாலும் சரி, கிறிஸ்தவ மக்களிடையே கண்டாலும் சரி, என்னை அவைகள் பாதிப்பதில்லை. எல்லாவற்றையும் நிதானித்து அறியமுடிகின்றது.

எனவே, என்னுடைய கடந்த கால இஸ்லாமிய அனுபவங்கள், மகிழ்ச்சிகள், பிரமிப்புகள் என் தற்கால கிறிஸ்தவ வாழ்வில் எந்த ஒரு அழுத்தத்தையும் உண்டாக்கமுடிவதில்லை. நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன்.

ஆகையால், நான் மிகப்பெரிய பிரமாண்டம் என்று கருதுவது, இயேசுவையும், அவர் எனக்காக செய்து முடித்து கொடுத்த இரட்சிப்பையுமே ஆகும். என் மிகப்பெரிய மகிழ்ச்சி இயேசுவில் நான் வாழும் வாழ்க்கையில் சார்ந்துள்ளது.  நான் பெற்ற மிகப்பெரிய மகிழ்ச்சியில் என் குடும்ப நபர்கள் பங்கு பெறவேண்டும் என்ற ஒரு ஆசை என்னை அவ்வப்போது அழுத்துகிறது. கிறிஸ்தவர்களுக்கு புரியும் படி சொல்லவேண்டுமென்றால், "இஸ்லாம் ஒரு உலக பிரகாரமான வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட மார்க்கமாகும், கிறிஸ்தவம் என்பது பரலோகத்திற்கான வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மார்க்கமாகும்".  அதாவது வெளிப்புற வாழ்க்கைக்கு முக்கியத்தும் கொடுத்து வாழச்செய்வது இஸ்லாம், உள்ளான வாழ்க்கைக்கு முக்கியத்தும் கொடுத்து வாழச்செய்வது கிறிஸ்தவம். இதனை புரிந்துக் கொண்டபடியினால், நான் விட்டுவந்த மார்க்கத்திற்கே மறுபடியும் செல்லவேண்டும் என்ற ஆசையோ, விசையோ என்னிடம் இல்லை.

பாகம் 1 முற்றுப்பெற்றது.

இந்த கேள்வி பதில்கள் கட்டுரைகள், "கிறிஸ்தவ சபை இஸ்லாம் பற்றிய விழிப்புணர்வை அடையவேண்டும்" என்ற நோக்கத்திற்காக பதிக்கப்படுகின்றது. என்வே, கிறிஸ்தவ சபைகள் இதனை தங்கள் சபை பக்தி விருத்திக்காக, இஸ்லாமிய விழிப்புணர்வு சபை அடையவேண்டும் என்பதற்காக தாராளமாக பயன்படுத்தலாம்.

இரண்டாம் பாகத்தில், கீழ்கண்ட கேள்விகளையும் அதற்கான பதில்களையும் காண்போம்.

1)      என் இஸ்லாமிய நண்பர், என்னை ரமளான் விருந்திற்கு அழைத்திருக்கிறார், கிறிஸ்தவனாகிய நான் அதில் பங்கு பெறலாமா? அவன் கொடுக்கும் உணவுகளை சாப்பிடுவது பைபிளின் படி சரியானதா?
2)      ரமளான் நோன்பை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கட்டாயம் கடைபிடித்து ஆகவேண்டுமா? ஏதாவது விதிவிளக்குகள் உண்டா?
3)      முஸ்லிமள் தங்கள் நோன்பை முடித்துக்கொள்வதற்கு நாம் உதவி செய்யலாமா? உதாரணத்திற்கு, இந்த மாதத்தில் நோன்பாளிகளுக்காக மசூதிகளுக்கு திண்பண்டங்களை, பழ வகைகளை வாங்கித் தரலாமா?
4)      ரமளான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பு இருந்தும், முஸ்லிம்கள் மிகவும் புஷ்டியாக, ஆரோக்கியமாக காணப்படுகிறார்களே! இதன் இரகசியம் என்ன?
5)      ரமளான் பற்றி குர்-ஆன் என்ன சொல்கிறது? சில வசனங்களை மேற்கோள் காட்டமுடியுமா?
6)      இந்த நோன்பு காலத்தில் முஸ்லிம்கள் அதிகமாக எச்சில் துப்பிக்கொண்டு இருப்பதை நான் பார்க்கிறேன், ஏன் இப்படி செய்கிறார்கள்?

அடிக்குறிப்புகள்:
[2] ரமளான் நாள் 9 - இஸ்லாமியர்களின் நோன்பு இயேசுவின் நோன்பா? - http://isakoran.blogspot.in/2012/07/9.html

புதன், 2 ஜூலை, 2014

2014 ரமளான் பாகம் 2 - வானத்தில் வல‌ம் வரும் அல்லாஹ்


முன்னுரை: 2014ம் ஆண்டின் ரமளான் மாத முதல் நாளில் "தக்காளியில் அல்லாஹ்வின் பெயர் காணப்படுகிறது, இது அல்லாஹ் செய்த அற்புதம்" என்றுச் சொல்லி, உமரின் தம்பி முன்வைத்த அற்புதமான கேள்விக்கு, உமர் பதில் அளித்துள்ளார். அதனை கீழ்கண்ட தொடுப்பில் படிக்கலாம்.


அதன் பிறகு இன்று, உமரின் தம்பி "அல்லாஹ்வின் மேலதிக அற்புதங்கள்" என்றுச் சொல்லி, அனேக படங்களை உமருக்கு மெயிலில் அனுப்பியுள்ளார். இந்த படங்களில் அல்லாஹ்வின் அற்புதங்கள் காணப்படுகின்றனவா? உண்மையாகவே அல்லாஹ் தற்காலத்தில் இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்கிறாரா?  இவைகளை அறிய, கீழ்கண்ட பதிலை படியுங்கள். இவைகளை படிக்கும்போது, ஒரு கணம் நீங்கள் உங்களின் சிறுவயது அனுபவங்களுக்குச் சென்றுவிடுவீர்கள்.  எப்படி என்று கேட்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்.


அன்புள்ள தம்பிக்கு,

உன் மெயில் கிடைத்தது, அதில் நீ அனேக படங்களை எனக்கு அனுப்பியிருந்தாய். அவைகள் அனைத்தும் அல்லாஹ்வின் தற்கால அற்புதங்கள் என்றுச் சொல்லியிருந்தாய். இப்போது நீ அனுப்பிய அல்லாஹ்வின் அற்புதங்களில் ஒன்றைப் பற்றி சிறிது அலசுவோம்.

1) மேகத்தில் அல்லாஹ்:

நீ அனுப்பிய முதல் படம், மேகத்தில் "அல்லாஹ்" என்ற பெயர் வருகின்ற ஒரு படமாக இருக்கின்றது. இது அல்லாஹ்வின் அற்புதமல்லவா? என்று கேள்வி கேட்டு இருந்தாய்.
  
உன்னைப்போல இருக்கும் முஸ்லிம்கள் இப்படிப்பட்ட படங்களை மெயில் மூலமாக அனேகருக்கு சிந்திக்காமல் அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட அற்புதங்களை இறைவன் செய்வானா? என்று சிந்திப்பதில்லை. நான் இதனை அற்புதமாக கருதவேண்டும் என்று நீ விரும்புகிறாய். ஆனால், ஒரு சராசரி மனிதன் இப்படிப்பட்டவைகளை பார்க்கும் போது அவைகளை, வேடிக்கையாக பார்ப்பானே தவிர அற்புதமாக பார்க்கமாட்டான்.

வானங்களில் காணப்படும் சில கற்பனை வடிவங்கள்:

பொதுவாக நீ வானத்தை பார்க்கும் போது அனேக உருவங்கள் தெரிவதை பார்க்கமுடியும். இது உன்னுடைய கற்பனையைப் பொறுத்தது. நீ என்ன பார்க்கவேண்டும் என்று விரும்புகிறாயோ அல்லது கற்பனை செய்கிறாயோ, அந்த வடிவங்கள் உனக்குத் தெரியும்.

நீ அனுப்பிய படத்தை பார்க்கும் போது, உனக்கு அரபி எழுத்துக்களில் "அல்லாஹ்" என்று தெரிந்தால், மற்றவர்களுக்கு அது போலவே தெரியாது. அதற்கு பதிலாக வேறு ஒரு உருவம் தெரியும். நீ அனுப்பிய படத்தையே நாம் எடுத்துக்கொண்டு கூர்ந்து கவனித்தால், கீழ்கண்ட படம் போல தெரிவதை காணமுடியும்.பனிப்படர்ந்து காணப்படும் நாடுகளில் பனியில் சருக்கி விளையாடுவதற்கு பயன்படும் பலகையில் (Toboggan) ஒரு பையன் உட்கார்ந்து சருக்குவது போல காணப்படுகின்றது நீ அனுப்பிய "வானத்தில் அல்லாஹ்" படம். மேற்கண்ட  இரண்டு படங்களையும் ஒப்பிட்டுப் பார், இது அற்புதமா அல்லது கற்பனையா?  என்று உனக்கு விளங்கும்.  ஒருவேளை அந்த சருக்கும் சிறுவன் அல்லாஹ்வாக இருப்பானோ?

தம்பி நீ ஒன்று செய், மொட்டை மாடியில் சென்று ஒரு நார்காலியில் உட்கார்ந்துக்கொண்டு, அல்லது ஒரு பாயை விரித்து, மல்லாக்கு படுத்துக்கொண்டு, வானத்தையே பார்த்துக்கொண்டு இரு. காலையிலிருந்து மாலை வரை நீ இப்படி செய்தால், அல்லாஹ் மட்டுமல்ல, இன்னும் அனேக உருவங்களை நீ பார்க்கலாம்.  வானத்தில் உருவங்களைப் பார்க்கும் அனுபவம் என்பது அனைவருக்கும் உண்டு. இப்படிப்பட்ட ஒன்றை எடுத்துக்கொண்டு, இதனை அல்லாஹ் என்றுச் சொல்வது அல்லாஹ்விற்கு அவமானமாகும்.

தில்லுமுல்லு செய்யும் முஸ்லிம்கள், மற்றும் தற்கால கிராபிக்ஸ்:

நமக்கு வானத்தில், மலைகளில் இயற்கையாக அனேக உருவங்கள் தெரிவது ஒருபக்கமிருந்தால், முஸ்லிம்களில் சில அறிவா(லி)ளிகள், கம்பியூட்டர் கிராபிக்ஸ்ஸை பயன்படுத்தி, இப்படி தில்லுமுல்லு செய்து "அல்லாஹ்வின் அற்புதங்களை" உருவாக்குகிறார்கள் என்பது மறுக்கமுடியாத இன்னொரு உண்மையாகும்.

கிராபிக்ஸ் மூலமாக வானத்தில் எவைகளை வேண்டுமென்றாலும் காண்பிக்கமுடியும். கீழ்கண்ட இரண்டு படங்களைப் பார்:
ஒருவேளை இந்த படங்கள் கிராபிக்ஸ் மூலமாக உருவாக்கப்பட்ட படங்கள் இல்லை என்றுச் சொன்னாலும், இவைகளுக்கும் இறைவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

மேற்கண்ட படங்களில், முதலாவது படத்தில் காதல் சின்னம் என்றுச் சொல்லக்கூடிய "இதயச் சின்னம்" காணப்படுகின்றது. உன்னுடைய இஸ்லாமிய அறிவின் படி, இந்த சின்னத்தை வானத்தில் காண்பித்து, அல்லாஹ் உலக மக்களுக்கு  எவைகளை போதிக்கிறார் என்று உன்னால் சொல்லமுடியுமா?

இரண்டாவது படத்தில், ஒரு முயல் நம்மை பார்ப்பது போல இருக்கிறது. ஆக, அல்லாஹ் தான் வானத்தில் முயலின் உருவத்தில் காணப்பட்டான் என்று முஸ்லிம்கள் சொல்வார்களா?


அல்லாஹ்வின் அற்புதம் என்றுச் சொல்லி, உப்பு சப்பு இல்லாத விஷயங்களை எனக்கு அனுப்புவதை விட்டுவிட்டு, குர்-ஆனின் அறிவியல் என்ற தலைப்பிற்கு சம்மந்தப்பட்டு ஏதாவது விவரங்களை நீ அனுப்பமுடியுமா?

இணையத்தில் தேடிப்பார்த்து, இன்னும் இதோ அற்புதம் என்றுச் சொல்லி எனக்கு படங்களை அனுப்புவதை நிறுத்து, இதனால் ஒரு நன்மையும் இல்லை.  இதனால் உன் நேரமும் என் நேரமும் வீணாகின்றது.

அடுத்த முறை உன்னுடைய மெயில் வரும் போது, அது குர்-ஆனின் விஞ்ஞானம் சம்மந்தப்பட்ட விஷயமாக இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

இவ்வளவு சொல்லியும் நீ திருந்தாமல், இந்த தற்கால அல்லாஹ்வின் அற்புதங்கள் பற்றியே பேசிக்கொண்டு இருந்தால், இன்னும் சூடாக கேள்விகள் கேட்கவேண்டிவரும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.

இப்படிக்கு
உன் அண்ணன்
உமர்

திங்கள், 30 ஜூன், 2014

2014 ரமளான் பாகம் 1: அல்லாஹ்வின் தற்கால அற்புதங்களும், குர்-ஆனின் அறிவியலும் - அழுகிப்போன தக்காளியில் தத்தளிக்கும் அல்லாஹ்

2014 ரமளான் பாகம் 1:  அல்லாஹ்வின் தற்கால அற்புதங்களும், குர்-ஆனின் அறிவியலும்

உமரின் தம்பி சௌதி அரேபியாவில் வேலை பார்க்கிறார். அவர் இஸ்லாமை தழுவியுள்ளார். உமரோடு அவ்வப்போது இஸ்லாம் பற்றி பேசுவார், கிறிஸ்தவம் பற்றி கேள்விகளைக் கேட்பார். ஒவ்வொரு ஆண்டும் ரமளான் மாதத்தில் இவ்விருவரும் சில தலைப்புகளில் விவாதிப்பதும்,  கடிதங்களை பரிமாறிக்கொள்வதும் உண்டு.  இவ்வாண்டும் உமரின் தம்பி, "அல்லாஹ்வின் தற்கால அற்புதங்களும், குர்-ஆனின் அறிவியலும்" என்ற தலைப்பில் உமரோடு பேசப்போகிறார்.   உண்மையிலேயே குர்-ஆனில் அறிவியல் உண்டா?  அல்லாஹ் தற்காலத்தில் செய்யும் அற்புதங்கள் என்னென்ன?  இஸ்லாமிய அறிஞர்கள் குர்-ஆன் சொல்லாத ஒன்றை கற்பனை செய்துக்கொண்டு மக்களை மயக்குவதற்கு "குர்-ஆனில் அறிவியல் உண்டு" என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்களா?  இவைகளை இந்த ரமளான் மாத தொடர் கட்டுரைகளை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.  ஒவ்வொரு விவரத்தையும், வசனத்தையும் படித்து, ஆய்வு செய்து உங்கள் முடிவிற்கு வாருங்கள். 

வாருங்கள்… ரமளான் மாதத்தின் முதல் நாளுக்குள் செல்வோம்….

2014 ரமளான் பாகம் 1:  அழுகிப்போன தக்காளியில் தத்தளிக்கும் அல்லாஹ்

[அமைதியான மாலை நேரம், ரமளானின் முதல் நாள், உமர் வீட்டில் உட்கார்ந்துக்கொண்டு, தேனீரை ருசித்துக்கொண்டு இருக்கிறார். அவரின் மொபைளுக்கு ஒரு அழைப்பு வருகிறது. உமர் ஒரு கையில் தேனீர் கோப்பையை பிடித்தபடியே, இன்னொரு கையில் மொபைளை எடுத்து பேச ஆரம்பிக்கிறார்].

உமர்:  ஹலோ தம்பி

தம்பி:  ஹலோ அண்ணா, அஸ்ஸலாமு அலைக்கும்

உமர்:   வா அலைக்கும் ஸலாம் தம்பி. நீ எப்படி இருக்கிறாய்?

தம்பி:  நான் சுகமாக இருக்கிறேன், நீங்க எப்படி இருக்கீங்க? பிள்ளைகள்  மற்றும் அண்ணி, அம்மா அப்பா எப்படி இருக்கிறாங்க?

உமர்:   கர்த்தரின் கிருபையால் எல்லாரும் சுகமாக இருக்காங்க.  சௌதியில் ரமளான் மிகவும் கோலாகளமாக கொண்டாடப்படப்போகிறது என்று நினைக்கிறேன். இன்று நோன்பின் முதல் நாள் இல்லையா?

தம்பி:  ஆம் அண்ணா, இன்று தான் ரமளான் முதல் நோன்பு ஆரம்பிச்சுது.

உமர்:  நல்ல விஷயம் தான். இந்த ஆண்டும் நீ 30 நாட்கள் நோன்பு இருப்பாய் அல்லவா?

தம்பி:  இதில் என்ன சந்தேகம்? இதற்காகத் தான் நான் ஆண்டு முழுவதும் ஆவலாக காத்திருந்தேன்.

உமர்:  உன் நோன்பு சிறக்க என் வாழ்த்துக்கள். சரி என்ன விஷயம் சொல்? காரணமில்லாமல் நீயாக அழைக்கமாட்டாயே!

தம்பி:  ம்ம்ம்… புரிந்துக்கொண்டால் சரி. நான் விஷயத்துக்கு வருகிறேன். இந்த ஆண்டு ரமளான் மாதத்தில் உங்களுக்கு சில அல்லாஹ்வின் அற்புதங்களையும்,  குர்-ஆனின் விஞ்ஞான  முன்னறிவிப்புகளையும் காண்பித்து,  இஸ்லாமின் அருமை பெருமைகளைப் பற்றி பேசலாம் என்று விரும்புகிறேன்.  குர்-ஆனுக்கு வெளியே, ஏதாவது ஆதாரம் உண்டா என்று அடிக்கடி நீங்கள் என்னிடம் கேட்கிறீர்கள் இல்லையா? இதோ இந்த மாதம் என்னால் முடிந்தவரை உங்களுக்கு சில விவரங்களை எடுத்துச் சொல்கிறேன்.

உமர்:  வா…வ். என்னே ஒரு அருமையான ஐடியா! எனக்கு இது பிடிச்சுருக்கு.  நீ சொல்வதைப் பார்த்தால், இதற்காக அதிகமாக ஆய்வு செய்து, பெரிய அளவில் தயாரான நிலையில்  இருக்கிறாய் என்று நினைக்கிறேன்.

தம்பி:  பொறுத்திருந்து பாருங்கள், உங்களுக்கே புரியும்.  உங்களுக்கு இப்போது நேரமிருந்தால், ஸ்கைப்பில் (Skype) வருகிறீர்களா? நாம் பேசுவோம்.

உமர்:  மொபைளிலேயே பேசலாமே!

தம்பி:  இல்லை.. இல்லை.. நான் சில இணைய தொடுப்புக்களை, படங்களை அனுப்புவேன், அவைகளை நீங்கள் பார்க்கவேண்டும். அவைகள் நம் உரையாடலுக்கு உதவியாக இருக்கும்.

உமர்:   சரி, எனக்கு ஐந்து நிமிடங்கள் கொடு, நான் ஸ்கைப்பில் லாகின் ஆகிவிடுகிறேன்.

தம்பி:  ரொம்ப நல்லது, நான் ஸ்கைப்பில் லாகின் ஆகி உங்களுக்காக காத்திருக்கிறேன்.

[இருவரும் சில நிமிடங்களுக்கு பிறகு ஸ்கைப்பில் லாகின் ஆகி,  பேச ஆரம்பிக்கிறார்கள்]

தம்பி:  அண்ணா,  நான் ஒரு முக்கியமான அற்புதத்தை காட்டப்போகிறேன். தற்காலத்தில் அல்லாஹ் செய்துவரும் அற்புதங்கள் ஏராளம்.

உமர்:  அப்படியா தம்பி! தன்னுடைய இறைத்தூதர் முஹம்மது வாழ்ந்த காலத்தில்  அற்புதங்களைச் செய்து தன் இறைத்தூதருக்கு உதவி செய்யாத அல்லாஹ்வா? தற்காலத்தில் அதிகமாக அற்புதங்களைச் செய்துக் காட்டுகிறார்?

தம்பி:  அண்ணா, வேடிக்கைவேண்டாம். நான் சொல்வதைக் கேளுங்கள். இதோ இந்த தொடுப்புகளை ஒரு முறை சொடுக்கிப் பாருங்கள்.

உமர்:  அப்படி என்ன இந்த தொடுப்புகளில் உள்ளது. இதோ சொடுக்கிப் பார்க்கிறேன்.

     
தம்பி:   பார்த்தீங்களா? நன்றாக கவனித்துப் பாருங்கள்.

உமர்:  ம்ம்ம் பார்த்தேன்.. அழுகிப்போன தக்காளிகளைப் பார்த்தேன். நீயே கொஞ்சம் விளக்கிச் சொல்லேன்.


தம்பி:  உங்களுக்கு புரியவில்லையா? அல்லது தெரியாதவர் போல நடிக்கிறீர்களா?

உமர்:  சில விஷயங்கள் அவரவர் வாயாலே கேட்டால் தான் நன்றாக இருக்கும். நீயே விளக்கிவிடு.

தம்பி:  அல்லாஹ் தன் பெயரை தக்காளியில் பதித்து இருக்கிறார். இது தான் அற்புதம். இது போல, வேறு எந்த ஒரு இறைவனுடைய பெயரையாவது பார்க்கமுடியுமா?

உமர்:  ஓ அந்த அழுகிப்போன தக்காளியில் நாம் காண்பது அற்புதமா?  

தம்பி:  இஸ்லாமின் அற்புதத்தை ஏற்றுக்கொள்ள மனமில்லை என்பதற்காக, வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசாதீர்கள்.

உமர்:  சரி, தக்காளியில் தன் பெயரை பதித்ததின் மூலமாக, அல்லாஹ் உலகிற்கு எதனைச் சொல்லவருகிறார் என்பதை நீ விளக்கமுடியுமா?

தம்பி:  அல்லாஹ் தான் உலகத்தின் அதிபதி மற்றும் படைப்பாளி என்பது இந்த அற்புதத்தின்  மூலம் விளங்குகிறது அல்லவா?

உமர்:  ஓ நீ அந்த வழியில் வருகிறாயா? 

தம்பி:  என் வழி தனி வழி…

உமர்:  பார்த்து தம்பி, யாருமே போகாத வழியில் போனால், எங்கு போகிறோம் என்று தெரியாமல் வழி தவறி சென்றுவிடுவோம்.

தம்பி:  போதும் அண்ணே! போதும். விளையாட்டுத்தனமாக பேசியது போதும்.  நான் சீரியஸாக கேள்வி கேட்டால் .. நீங்க வேடிக்கையாகவே பேசிக்கிட்டு இருக்கீங்க…

உமர்:  சரி, நானும் சீரியஸாக இந்த விஷயத்தை எடுத்துக்கொள்கிறேன். உனக்கு சில அடிப்படை விஷயங்களை முதலாவது சொல்லிவிடுகிறேன், அப்போது தான் இப்படிப்பட்ட தற்கால இஸ்லாமிய அற்புதங்களின் உண்மை நிலை உனக்குப் புரியும்.

1) தற்கால அற்புதமும், ஏழாம் நூற்றாண்டு அற்புதமின்மையும்:

உங்கள் முஹம்மது வாழ்ந்த காலத்தில், அனேகர் முஹம்மதுவிடம்  வந்து இப்போது அற்புதங்கள் செய்துக்காட்டுங்கள் அப்போது நீர் ஒரு இறைத்தூதர் என்று நம்புவோம் என்று கேள்வி கேட்டனர்.  ஆனால், அல்லாஹ்வினால் எந்த வெளிப்படையான அற்புதமும் முஹம்மதுவின் நபித்துவத்தை நிரூபிப்பதற்காக செய்து காட்டப்படவில்லை. நான் கொண்டு வந்த அற்புதம் குர்-ஆன் மட்டும் தான் என்றுச் சொல்லி முஹம்மது மழுப்பினார்.  இயேசுவைப்போல மரித்தவர்களை எழுப்பி, வியாதியுள்ளவர்களை குணமாக்கியிருந்திருந்தால், இன்னும் அனேகர் முஸ்லிம்களாக மாறியிருப்பார்கள். 

குறைந்த பட்சம், அந்த காலத்திலாவது அல்லாஹ் இப்படிப்பட்ட "தக்காளி அற்புதங்களை" செய்து இருந்திருந்தால், அக்கால மக்கள் ஒருவேளை இவரை நம்பியிருப்பார்கள்.  தன் இறைத்தூதர் உயிரோடு இருக்கும் போது அற்புதங்களைச் செய்யாத அல்லாஹ், 14 நூற்றாண்டுகளுக்கு பிறகு, இப்போது வந்து தக்காளியில் அற்புதங்கள் செய்கிறார் என்றுச் சொல்வது, அல்லாஹ்வை மட்டுப்படுத்துவதாகும். 

எந்த நேரத்த்தில் அற்புதங்கள் தேவையோ, அப்போது செய்யாமல், தேவையில்லாத இக்காலத்தில் அற்புதம் செய்வது என்பது சர்வ ஞானியான அல்லாஹ்விற்கு ஏற்றதல்ல, இதனை சராசரி மனிதர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

2) அழுகிப்போன தக்காளியில் அல்லாஹ்வின் பெயர் – இது அல்லாஹ்விற்கு மேன்மையா?

உன்னைப்போன்ற முஸ்லிம்கள் செய்யும் மிகப்பெரிய தவறு என்னவென்றால், "இஸ்லாம் பற்றி எந்த ஒரு தகவல் கிடைத்தாலும், அதனை சரி பார்க்காமல், சிந்திக்காமல் மற்றவர்களுக்கு அவைகளை அனுப்பிவிடுவதாகும்".  நீ கொஞ்சமாவது சிந்தித்து இருந்திருந்தால், இந்த பரிதாப நிலைக்கு அல்லாஹ் தள்ளப்பட்டு இருந்திருக்கமாட்டார். 

ஒரு அழுகிப்போன தக்காளியிலா அல்லாஹ் தன் பெயரை பதிப்பார்? அல்லது 
ஓரிரு நாட்களில் அழுகிப்போகும் ஒரு பழத்திலா அல்லாஹ் தன் பெயரை பதிப்பார்?  
அழுகும் ஒரு பொருளின் மூலமாக உலகிற்கு எதனை தெரிவிக்க விரும்புகிறார் அல்லாஹ்?

உலகில் எப்போதும் நிலைத்து இருக்கும் ஒரு பொருளில் தன் பெயரை பதித்து இருந்திருந்தால், ஓரளவிற்கு சொல்லிக்கொள்வதற்கு முஸ்லிம்களுக்கும் தெம்பு வரும், ஆனால், இப்படி வாடி வதங்கி அழுகும் ஒரு பொருளிலா ! அற்புதம் செய்வார் அல்லாஹ்? அந்தோ பரிதாபம். 

தம்பி:  இதை அதைச் சொல்லி, முக்கியமான விஷயத்தை மறைக்க முயலாதீர்கள்? தக்காளி அழுகியதோ, இல்லையோ!  தக்காளியில் அல்லாஹ்வின் பெயரைப் பார்த்தீர்களா? இல்லையா?

உமர்:  நீ கணினிக்காலத்தில் வாழ்ந்துக்கொண்டு, கம்பியூட்டர் கிராபிக்ஸ் போடும் அட்டகாசத்தை கண்டு களித்துக்கொண்டு இருக்கும் இந்த காளத்தில் ஒரு படத்தைக் காட்டி, இதில் அல்லாஹ்வின் பெயரை பார்த்தீர்களா இல்லையா? என்று கேட்பது, முட்டாள் தனமாக இருக்கிறது தம்பி.

நீ காண்பித்த முதலாவது படத்தில்,  வரும் "அல்லாஹ்" என்ற வார்த்தை கிராபிக்ஸில் செய்யப்படவில்லை என்று உன்னால் நிரூப்பிக்கமுடியுமா?

தம்பி  நீ விரும்பினால், உன் பெயரையும் தக்காளியில் கிராபிக்ஸில் போட்டு படத்தை தயார் படுத்தமுடியும்.  என்னிடம் சொன்னது போல வெளியே முஸ்லிமல்லாதவர்களிடம்  சொல்லிவிடாதே உன்னை ஒரு மாதிரியாக பார்த்து சிரிப்பார்கள். ஆக, முதலாவது படம் ஒரு "இட்டுக்கட்டப்பட்ட" தக்காளியாகும் அல்லது  அல்லாஹ்வாகும். 

தம்பி:   இதை நான் நம்பமாட்டேன்.

உமர்:  நீ முஸ்லிமாக மாறிவிட்டபிறகு நல்ல விஷயங்களை எதைத் தான் நம்பியிருக்கிறாய் சொல்லு, இதனை நம்புவதற்கு?  கிராபிக்ஸில் பிரமிப்பூட்டும் விஷங்களை உலகம் செய்துக் காட்டிக்கொண்டு இருக்கும் போது, அழுகிப்போன தக்காளி படத்தில் எவனோ ஒருவன் (கண்டிப்பாக அவன் முஸ்லிம்காகத் தான் இருப்பான்) செய்த கயமைத் தனத்தை பிடித்துக்கொண்டு இது அல்லாஹ்வின் அற்புதம் என்றுச் சொல்கிறாயே உனக்கு வெட்கமாக தெரியவில்லை? நீ படித்த படிப்பிற்கும், அறிவிற்கும் இது அடுக்காது தம்பி. 

தம்பி: ஆனால், அடுத்த படத்தில் தெளிவாக அல்லாஹ்வின் பெயர் தெரிகின்றதே! இதற்கு என்ன சொல்லப்போகிறீர்கள்?  

உமர்:  அடேய், என் அருமை தம்பி, உனக்கு எவ்வளவு எடுத்துச் சொன்னாலும், மறுபடியும் நீ பழைய நிலைக்கே வருகிறாயே! நீ எப்போ தான் திருந்தப்போகிறாய்.

சரி, இந்த இரண்டாவது படத்தைப் பற்றிச் சொல்கிறேன் கேள்.  உலகில் காணும் அனேக விஷயங்களில் சில வடிவங்கள் நமக்கு தெரிந்த உருவங்களாகத் தெரியும். சில கோடுகளைக் காட்டி இது தான் அல்லாஹ் செய்த அற்புதம் என்றுச் சொல்வது அடிமுட்டாள் தனமாகும்.  

தம்பி:  இப்போது மாட்டிக்கிட்டீங்க பார்த்தீங்களா?  இதற்கு உங்களால் பதில் சொல்லமுடியவில்லை.  அது கிராபிக்ஸ் இல்லை என்று புரிந்துக்கொண்டீங்களா?
உமர்:  சிலருக்கு சூடாக பதில் கொடுத்தால் தான் புத்தி வரும், மென்மையாகச் சொன்னால் புரியாது. இன்னும் அல்லாஹ்வின் பெயர் அதிகமாக அடிபட்டால் தவிர நீ விடமாட்டாய் போல் இருக்கிறது.  உனக்கு புரியும்படி சொல்கிறேன் கேள், இல்லை இல்லை சில கேள்விகளை கேட்கிறேன் பதில் சொல்லு:

முதல் கேள்வி:
உன் அல்லாஹ் ஒரு மொழிக்கு மட்டும் சொந்தமானவரா? அல்லது உலக மொழிகள் அனைத்திற்கும் உரியவரா?

தம்பி:  உலக மொழிகள் அனைத்தும் அவருக்குத் தெரியும், அவர் இறைவன், ஆகையால் எல்லா மொழிக்கும், நாடுகளுக்கும் சொந்தமானவர்.

உமர்:  அப்படியானால், மேற்கண்ட "அரபி தக்காளி" போலவே

 • தமிழ் தக்காளி
 • ஹிந்தி தக்காளி
 • பஞ்சாபி தக்காளி

என்று நம் நாட்டில் இருப்பவர்களுக்கு புரியும் படி, அவரவர் மொழிகளில் ஏன் அல்லாஹ்வின் பெயர் வருவதில்லை?

தமிழ் நாட்டு மக்கள் தங்கள் வீட்டில் தக்காளிகளை அறுத்துப் பார்த்தால் "தமிழில் அல்லாஹ்" என்ற எழுத்துக்களை அவர்களால் பார்க்கமுடியுமா?

உன் அல்லாஹ் அரபி மக்கள் பேசுபவர்கள் அறுக்கும் தக்காளியில் மட்டுமே அற்புதங்கள் செய்வாரா? தமிழிலே, ஹிந்தியிலே இன்னும் உலக மொழிகளில் அல்லாஹ் அற்புதம் செய்யமாட்டாரா?

தம்பி:  நீங்க டாபிக்கை மாற்றி பேசுறீங்க!

உமர்:   நான் இன்னும் தக்காளிக்குள்ளேயே இருக்கிறேன், அதை விட்டு வெளியே வரவில்லை. உன்னால் பதில் சொல்லமுடியவில்லை என்றுச் சொல்லு.

இரண்டாவது கேள்வி:
இந்த தக்காளி அற்புத்தை, இப்போது தான் அல்லாஹ் செய்ய ஆரம்பித்தாரா? அல்லது முஹம்மதுவின் காலத்திலிருந்தே செய்துக்கொண்டு இருக்கிறாரா? அப்படியானால், முஹம்மதுவிற்கு இதனை ஏன் அவர் வெளிப்படுத்தவில்லை?
மேலும், முஹம்மதுவின் காலத்துக்கு முன்னே, மற்றும் பைபிளின் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இருந்த தக்காளியில் அல்லாஹ்வின் பெயர் இல்லையா?
கடைசியாக, அரபி மொழி உருவாகாமல் இருந்த கால கட்டத்தில் இருந்த தக்காளிகளில் இந்த கோடுகள் (அல்லாஹ்வின் பெயர்) இல்லாமல் இருந்ததா? அல்லது இஸ்லாம் வந்த பிறகு வளர்ந்த தக்காளிகளில் மட்டுமே இந்த அல்லாஹ்வின் அற்புதம் வெளிப்பட்டதா?

தம்பி:  ம்ம்ம்…..

உமர்:  என்ன தம்பி தலை சுத்துதா? ஒரு தக்காளி சூப் போட்டு சூடாக ஒரு கப் குடித்துப் பார், உனக்கு உண்மை விளங்கும்.

மூன்றாவது கேள்வி:

ஸ்பானிஸ் தக்காளி  திருவிழா என்ற பெயரில் திருவிழா நடைப்பெறுகிறது. தக்காளிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி கொண்டாடுகிறார்கள். தம்பி, இந்த தக்காளிகளில் மக்களின் கால்களின் கீழே நசுக்கப்படுகின்றது,  இந்த தக்காளிகளிலும் நாம் அல்லாஹ்வின் பெயரை பார்க்கமுடியுமா?

இது மாத்திரமல்ல, கடைத்தெருக்களில் அழுகிப்போன தக்காளிகளை குப்பைகளில் கொட்டுவார்கள்,  அந்த தக்காளிகளிலும்  அல்லாஹ்வின் பெயரை பார்க்கமுடியுமா தம்பி?

தம்பி:  உங்களால் அல்லாஹ்வின் அற்புதத்தை மறுக்கமுடியாது.

உமர்:  இவ்வளவு எடுத்துச் சொல்லியும், மறுமடியும் நீ ஆரம்பத்திற்கே வருகிறாயே! இப்படிப்பட்ட அற்புதங்கள் அல்லாஹ்வின் பெயரை கெடுக்கிறதே தவிர அவருக்கு பெருமையைக் கொண்டு வராது.

[இப்படி இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது, இவர்களின் தாய் உமரின் அறைக்குள்ளே வருகிறார்கள்.]

அம்மா:  என்ன ஒரே சத்தமாக பேசிக்கொண்டு இருக்கிறாய்? யாரிடம் பேசுகிறாய்?

உமர்:  அம்மா,  ஸ்கைப்பில் நான் தம்பியோடு பேசிக்கொண்டு இருக்கிறேன்.

அம்மா: தம்பியா!  இதோ நானும் பேசறேன். நீ எழுந்திரு.

[உமர் அடுத்த நாற்காலியில் உடகாருகிறார், அவரின் தாய் பேச ஆரம்பிக்கிறார்கள்]

  ஹலோ… எப்படி இருக்கே நீ, சுகமாக இருக்கிறாயா?

தம்பி:  அம்மா, நான் நன்றாக இருக்கிறேன், நீங்க எப்படி இருக்கீங்க.

அம்மா: கர்த்தரின் கிருபையால் சுகமாக இருக்கிறேன். நான் உன் நண்பனிடம் கொடுத்து அனுப்பிய தக்காளி ஊறுகாய் கிடைச்சுதா? உனக்கு ரொம்ப பிடிக்கும் என்பதற்காக ஸ்பெஷலா செஞ்ஜி அனுப்பினேன். வந்து சேர்ந்துச்சா?

தம்பி:  அம்மா…. தக்காளி  ஊறுகாய் பற்றி இப்போது தான் பேசனுமா? இதைப் பத்தி பேச உங்களுக்கு வேறு நேரமே கிடைக்கலையா? எல்லாம் வந்து சேர்ந்திச்சு போங்க.

அம்மா: ஏன் இப்படி கோபமா பேசறே? எனக்கு ஒன்றும் புரியலையே!

உமர்:   அம்மா, உங்களுக்கு புரியாது. அது அவ்வளவு தான், தம்பிக்கு தக்காளி என்றுச் சொன்னா, இன்றிலிருந்து அலர்ஜி.  நீங்க போங்க நான் சீக்கிரமாக பேசிட்டு வரேன்.

[அம்மா அறையை விட்டுச் செல்கிறார்கள்]

தம்பி, அல்லாஹ்வின் பெருமையை உயர்த்த "தக்காளி அற்புதம்" உனக்கு பயன்படாது. தக்காளிக்கு வெளியே ஏதாவது அற்புதம் அல்லாஹ் செய்து இருந்திருதால், அதைப் பற்றி எனக்குச் சொல்லு, நாம் பேசுவோம்.

தம்பி:  ம்ம்ம்… இன்னும் அனேக அற்புதங்கள், விஞ்ஞான உண்மைகள் என்று அனேக விஷயங்கள் கொட்டுக்கிடக்குது. நாளைக்கு இதே நேரத்தில் நான் ஸ்கைப்பில் வந்து உங்களிடம் பேசறேன். இப்போது நான் தொழுகைக்குப் போகணும். நாளைக்கு சந்திப்போம்.

உமர்:  தம்பி, தக்காளி சாப்பிடுவதை நிறுத்திவிடாதே, அது உடலுக்கு நல்லது.  உன்னுடைய அடுத்த அற்புதத்தைக் காண நான் ஆவலோடு காத்திருப்பேன், நாளைக்கு சந்திப்போம்.