முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
Does Muhammad Pass the 1 John 4 Prophethood Test?
ஆசிரியர்: கெய்த் தாம்சன்
பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். தேவ ஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. (1 யோவான் 4:1-3)
இஸ்லாமிய அறிஞர்கள் 1 யோவான் 4ம் அதிகாரத்தின் முதல் மூன்று வசனங்களை மட்டும் மேற்கோள் காட்டி, இதன் படி, முஹம்மது நபித்துவ பரிட்சையில் வெற்றி பெற்று இருக்கிறார் என்று சொல்கிறார்கள். இந்த இஸ்லாமிய அறிஞர்களின் வாதம் என்னவென்றால், மனிதனாக (மாமிசத்தில்) வந்த கிறிஸ்துவை முஹம்மது அறிக்கையிடுவதினால், முஹம்மது இந்த பரிட்சையில் வெற்றி பெறுகிறார், ஆகையால் முஹம்மதுவை கிறிஸ்தவர்கள் ஒரு உண்மை தீர்க்கதரிசி (நபி) என்று நம்பவேண்டும் என்பதாகும். சமி ஜாதாரி என்ற இஸ்லாமிய அறிஞர் கீழ்கண்டவாறு கூறுகிறார்:
"இந்த வசனங்களில் சொல்லப்பட்டுள்ள "விசுவாசியின் தன்மைக்கு" முஹம்மது சரியாக பொறுந்துகிறார்!
....
ஆகையால் கவனியுங்கள், இயேசு தான் கிறிஸ்து என்று யார் சொல்கிறாரோ (அறிக்கையிடுகிறாரோ) அவர் தேவனிடத்திலிருந்து வந்தவர் என்று பொருள். இதன்படி, யார் யாரெல்லாம் "இயேசு, கிறிஸ்து அல்ல" என்றுச் சொல்கிறார்களோ அவர்கள் "அந்திக் கிறிஸ்து" என்று அர்த்தமாகும். இதனால், முஹம்மது இறைவனிடமிருந்து வந்தவராகிய நபியாவார்கள், ஏனென்றால் முஹம்மது, "இயேசு தான் கிறிஸ்து (ஈஸா மஸீஹா)" என்று அறிக்கையிட்டுள்ளார்கள். (மூலம்)
சமி ஜாதாரி அவர்களின் இப்படிப்பட்ட வாக்குவாதங்களில் உள்ள குறைகளை கீழ்கண்ட விவரங்களின் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.
1) "கிறிஸ்து மாமிசத்தில் வந்தார் என்கின்ற அறிக்கை" என்பதின் பொருளை ஜாதாரி புரிந்துக்கொள்ளவில்லை.
2) ஒரு தீர்க்கதரிசியை பரிசோதிக்க தேவையான பரிட்சை, வெறும் முதல் மூன்று வசனங்களில் மட்டும் சொல்லப்படவில்லை, அதற்கு பதிலாக இந்த பரிட்சை அந்த அதிகாரம் முழுவதும் வியாபித்து உள்ளது.
நாம் மேலே கண்ட முதல் விவரம் பற்றி இரண்டு விளக்கங்கள் உள்ளது. இதில் முதலாவது விளக்கம் என்னவென்றால், "மாமிசத்தில் வந்த கிறிஸ்துவை அறிக்கை பண்ணுவது" என்பது, "இறைவன் மனிதனாக வந்தார், அதாவது இயேசு மனித அவதாரமெடுத்தார்" என்பதை குறிப்பதாகும். (யோவான் 1:1-3, பிலிப்பியர் 2:6-11, யோவான் 8:58).
இதைப் பற்றி டாக்டர் பிரான்ஸிஸ் எ கீப்பெர் (Dr. Francis A. Schaeffer) கீழ்கண்டவிதமாக கூறுகிறார்:
"தீர்க்கதரிசிகளையும் ஆவிகளையும் பரிசோதிக்க, அவர்கள் இயேசு மனிதனாக (மாமிசத்தில்) வந்தார் என்று அறிக்கையிடுகின்றனவா இல்லையா என்பதை பார்க்கவேண்டும். இந்த அறிக்கை இரண்டு பிரிவுகளை உட்கொண்டது. அதாவது இயேசு ஆதி முதலே இருக்கிறார் என்பதையும், அவர் மனிதனாக வந்தார் என்பதையும் உறுதிப்படுத்துகிறது. வேறுவகையில் கூறவேண்டுமானால், ஆவிகளும் தீர்க்கதரிசிகளும் இயேசு ஆதிமுதலே இருக்கிறார் என்பதை அங்கீகரிக்கவேண்டும், அதோடு கூட அவர் மனிதனாக வந்தார் என்பதையும் அறிக்கையிடவேண்டும்.
"The Spirits and prophets are to be tested by whether they confess that Jesus "is come in the flesh," a confession that has two elements of content. It affirms both that Jesus existed before and also that He has come in the flesh. In other words, spirits and prophets must acknowledge both Jesus' pre-existence and His incarnation."[1]
ஆகையால், இயேசு ஆதிமுதலாக இறைவனாக இருக்கிறார், அவர் மனிதனாக வந்தார் என்று வேதம் தெளிவாகச் சொல்வதை முஹம்மது அறிக்கையிடவில்லை, எனவே முஹம்மது நபித்துவ பரிட்சையில் தோற்றுவிடுகிறார். இரண்டாவதாக, "மாமிசத்தில் இயேசு வந்தார் என்று அறிக்கை பண்ணுவது" என்பது, நாக்ஸ்டிக் (Gnostic) என்ற ஒரு மார்க்கத்தின் கோட்பாட்டிற்கு எதிராக உள்ளது எனலாம். இந்த குறிப்பிட்ட மார்க்கத்தவர்களின் நம்பிக்கையின் படி, உலகம் எல்லாம் தீயதாக உள்ளது, அப்படி இருக்கும்போது இயேசு மனிதனாக வந்தார் என்பதை ஏற்கமுடியாது என்பது அவர்களின் நம்பிக்கை. இவர்களின் படி, இயேசு ஒரு ஆவியாக இருந்தார், அவர் மனிதனாக இல்லை என்பதாகும் [2]. இவர்களின் விளக்கத்தை ஒருவேளை சரி என்று நாம் நினைத்தாலும், "இயேசு மனிதனாக வந்தார்" என்பது அவரின் உண்மை தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்துகிறதாக இருக்கிறது. அதாவது அவர் ஆதியிலிருந்தே (உலக தோற்றத்திற்கு முன்பே) இருக்கிறார் மற்றும் அவர் மனிதனாக வந்தார் என்பதை காட்டுகிறது. இந்த இரண்டு விவரங்களும் ஒன்றுக்கொன்று எதிரானது அல்ல. அதாவது இயேசு மாமிசத்தில்(மனிதனாக) வந்தார் என்று கூறினால், அவர் ஏற்கனவே இருந்திருக்கிறார் (Pre-Exist) என்பது புரிகின்றது. வேதத்தின் வெளிச்சத்தில் காணும் போது, திரித்துவத்தில் இரண்டாம் நபராக உள்ள இயேசு பரலோகத்தை விட்டு மகிமையை விட்டு இறங்கி மனிதனாக வந்தார் என்பது புரியும்.
ஒரு வேளை இஸ்லாமிய அறிஞராகிய ஜாதாரி மேற்கண்ட வசனத்தை மேலோட்டமாக புரிந்துக்கொண்டு, யார் யாரெல்லாம் "இயேசு தான் மேசியா (கிறிஸ்து)" என்று அறிக்கையிடுகிறார்களோ அவர்கள் எல்லாம் இறைவன் அனுப்பிய நபிகள் (தீர்க்கதரிசிகள்) என்று முடிவை எடுப்பாரானால், இது அவருக்கு பிரச்சனையாக மாறும். ஏனென்றால், அவரின் இந்த வாதத்தின் படி அவர் மர்மோனிசம் என்ற மார்க்கத்தை ஸ்தாபித்த ஜோசப் ஸ்மித் என்பவரும் இறைவன் அனுப்பிய நபி (தீர்க்கதரிசி) என்று நம்பவேண்டும். ஏனென்றால், ஜோசப் ஸ்மித் என்பவரும் "இயேசு தான் மஸீஹா" என்று அறிக்கையிட்டார், அங்கீகரித்தார். ஆனால், ஜோசப் ஸ்மித் ஒரு நபி என்று ஜாதாரி அங்கீகரிக்கமாட்டர் என்று நமக்கு நன்றாகத் தெரியும். இயேசு தான் மேசியா (மஸீஹா) என்று முஹம்மது கூறியதால், அவர் ஒரு உண்மையான நபி என்றும் அவர் இறைவனிடமிருந்து வந்தார் என்றும் ஜாதாரி கூறுவாரானால், அதே நிலையில் உள்ள ஜோஸப் ஸ்மித்தையும் ஒரு நபி என்றும் அவரையும் இறைவன் தான் அனுப்பினார் என்றும் ஜாதாரி நம்பவேண்டும். ஆனால், இப்படி ஜாதாரி நம்புவாரா? நம்பமாட்டார் [3]. ஆக, 1 யோவான் 4ம் அதிகாரம் முதல் மூன்று வசனங்கள் கூறும் கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையை ஜாதாரி அறியாததால், அவரின் வாதம் இதோடு தோற்றுப்போகிறது.
1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் முஹம்மது தோற்றுப் போகிறார்:
ஜாதாரி செய்த இரண்டாம் பிழை என்னவென்றால், நபித்துவத்தின் பரிட்சை வெறும் முதல் மூன்று வசனங்களில் மட்டுமே அடங்கியுள்ளது என்று தவறாக நினைத்துவிட்டார். ஆனால், அந்த அதிகாரம் முழுவதும் உண்மையான கிறிஸ்தவர்களாக இருப்பதற்கு எப்படிப்பட்ட பரிட்சைகளில் நாம் வெற்றிப் பெறவேண்டும் என்பதைப் பற்றி பேசுகின்றது. இந்த பரிட்சைகளில் முஹம்மது தோல்வியை தழுவுகிறார். உதாரணத்திற்கு, முஹம்மது ஒரு கிறிஸ்து எதிரி (அந்திக் கிறிஸ்து) என்பதற்கும், இதனால் அவரை நாம் பின் பற்றக்கூடாது என்பதற்கும், 1 யோவான் 4:15ம் வசனத்தை பார்ப்போம்:
இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான். (1 யோவான் 4:15)
பரிட்சை என்பது மூன்று வசனங்களோடு மட்டும் முடிந்துவிடவில்லை என்பதை இந்த வசனம் தெளிவாக காட்டுகின்றது. இந்த 15ம் வசனத்தில் நாம் பார்க்கிறோம், அதாவது ஒருவர் தேவனுக்குள் இருக்கிறார் (அல்லது) உண்மையான விசுவாசியாக இருக்கிறார் என்றுச் சொல்லவேண்டுமானால், அவர் இயேசு தேவகுமாரன் என்பதை நம்பவேண்டும் மற்றும் அறிக்கையிடவேண்டும். ஆனால், கிறிஸ்துவின் எதிரியாகிய (அந்திக் கிறிஸ்துவாகிய) முஹம்மது இதனை மறுத்தார், அதாவது இயேசு தேவகுமாரன் இல்லை என்று கூறினார், பார்க்க குர்ஆன் 19:34-35.
இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்) எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்). அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை அவன் தூயவன்; அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், "ஆகுக!" என்று தான் கூறுவான்; (உடனே) அது ஆகிவிடுகிறது. (குர்ஆன் 19:34-35)
ஆக, 1 யோவான் 4ம் அதிகாரத்தின் நபித்துவ பரிட்சையில் முஹம்மது தோற்றுப்போகிறார் மற்றும் அவர் ஒரு பொய் நபி என்பதும் இதன் மூலம் நிரூபனமாகிறது. தேவனின் அன்பின் உண்மைச் செய்தி என்னவென்றால், தேவன் தம்முடைய குமாரனை உலக மக்களின் பாவங்களுக்காக மரிக்க அனுப்பினார் என்பதாகும்.
நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. (1 யோவான் 4:10)
அந்திக் கிறிஸ்துவின் ஆவியினால் ஆட்கொள்ளப்படவராக முஹம்மது தோல்வியுற்று ஒரு பொய் நபி என்று நிருபிக்கப்பட்டுள்ளார். இயேசு நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் செய்த அந்த தியாக பலியை முஹம்மது மறுத்தார் மற்றும் அந்த சிலுவை நிகழ்ச்சியை கண்ட அனைவரையும் அல்லாஹ் தந்திரமாக ஏமாற்றியதாக முஹம்மது கூறினார்.
இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. (குர்ஆன் 4:157)
முடிவுரை:
1 யோவான் 4ம் அதிகாரத்தைக் காட்டி இஸ்லாமிய அறிஞர்கள் முஹம்மதுவின் நபித்துவத்தை நிலை நிறுத்த முயற்சி எடுத்தாலும், அந்த முயற்சி தோல்வியுற்றதை நாம் கண்டோம். "இயேசுக் கிறிஸ்து மாமிசத்தில் வெளிப்பட்டார்/வந்தார்" என்பதின் பொருளை அவர்கள் அறிந்துக்கொள்ளவில்லை. இந்த வசனங்கள் இயேசுவின் ஆதித் தன்மையையும், அவரது மனித அவதாரத்தையும் காட்டும் வசனமாக இருப்பதை நாம் கண்டோம். மேலும், நபித்துவ பரிட்சையானது 4ம் அதிகாரத்தின் முதல் மூன்று வசனங்களோடு நின்றுவிடவில்லை அது முழு அதிகாரமும் வியாபித்து உள்ளது என்பதையும் கண்டோம். இதன் மூலமாக முஹம்மது ஒரு பொய்யான தீர்க்கதரிசி என்றும், அவர் அந்திக் கிறிஸ்துவின் ஆவியை உடையவர் என்றும் நிருபனமாகியுள்ளது. நற்செய்தி நூல்களில் கூறப்பட்டுள்ள இயேசுவின் குமாரத்துவம் மற்றும் சிலுவை மரணத்தை மறுப்பதினால் முஹம்மது அந்திக் கிறிஸ்துவின் ஆவியை உடையவர் என்பது திண்ணம்.
கிறிஸ்து உயிர்த்தெழுந்தார், அவரே தேவன்.
பின் குறிப்புக்கள்:
1 Francis A. Schaeffer, A Christian View of spirituality, Vol. 3, [Good News Publishers, 1985], p. 179
2 Wayne Grudem, Systematic Theology: An Introduction to Biblical Doctrine, [Zondervan, 1994], p. 540
3 ஜாதாரி அவர்கள் ஜோசப் ஸ்மித் என்பவர் மட்டும் உண்மையான நபி இல்லை, மிர்ஜா குலாம் அஹமத் மற்றும் பஹாயுல்லாஹ் போன்றவர்களும் உண்மையான நபிகள் என்று அங்கீகரிக்கவேண்டும். ஏனென்றால், அஹமதீயா இயக்கத்தின் தலைவராகிய மிர்ஜா குலாம் அஹமத் அவர்களும், பஹாய் மத ஸ்தாபகருமான பஹாயுல்லாஹ் அவர்களும், முஹம்மதுவைப் போலவே, பூமியில் ஒரு மனிதராக வாழ்ந்த இயேசு ஒரு மஸீஹா என்று அங்கீகரித்தார்கள்.
ஆங்கில மூலம்: Does Muhammad Pass the 1 John 4 Prophethood Test?
© Answering Islam, 1999 - 2011. All rights reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக