குர்ஆனின் 9வது அத்தியாயத்தின் 31வது வசனத்தை இந்த கட்டுரையில் ஆய்வு செய்வோம். இந்த வசனத்தை மொழியாக்கம் செய்தவர்கள் உண்மையை மறைத்து மொழியாக்கம் செய்துள்ளார்கள். அல்லாஹ் சொன்னதை மறைத்து தங்கள் சொந்த கற்பனையை சொல்லியுள்ளார்கள். இந்த சிறிய கட்டுரையில், தமிழ், ஆங்கிலம் மற்றும் அரபி மூலங்களில் இந்த ஒரு வசனத்தை ஆய்வு செய்துப் பார்ப்போம்.
- குர்ஆன் 9:31 - ஐந்து தமிழாக்கங்கள்
- குர்ஆன் 9:31 - நான்கு ஆங்கில மொழியாக்கங்கள்
- குர்ஆன் 9:31 - அரபி மூலமும் ஒலியாக்கமும்
- இஸ்லாமிய அறிஞர்களின் வஞ்சகம்
- இஸ்லாமின் அடித்தளத்தை தகர்க்கும் வசனம் 9:31
- குர்ஆன் 9:30 & 9:31 - இயேசுவை அல்லாஹ்வின் மகன் என்றுச் சொல்லாதீர்கள், கடவுள் என்றே சொல்லுங்கள்
- முடிவுரை
1) குர்ஆன் 9:31 ஐந்து தமிழாக்கங்கள்
குர்ஆன் 9:31ஐ ஐந்து தமிழ் மொழியாக்கங்களில் படிப்போம். இந்த வசனத்தின் முதல் வாக்கியத்தை நாம் ஆய்வு செய்யப் போகிறோம். யூதர்களும் கிறிஸ்தவர்களும் அல்லாஹ்வை விட்டுவிட்டு தங்கள் ரபீக்களையும் சந்நியாசிகளையும் மற்றும் இயேசுவையும் தெய்வங்களாக ஆக்கிக் கொண்டார்கள் என்று இந்த வாக்கியம் சொல்வதாக முஸ்லிம் அறிஞர்கள் மொழியாக்கம் செய்துள்ளார்கள். இதன் உண்மை நிலை என்ன என்பதை ஆய்வு செய்வதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்.
டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்
9:31. அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை - அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்.
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்
9:31. இவர்கள் அல்லாஹ்வையன்றி தங்கள் பாதிரிகளையும், சந்நியாசிகளையும், மர்யமுடைய மகன் மஸீஹையும், (தங்கள்) கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர். எனினும், வணக்கத்திற்குரிய ஒரே இறைவனைத் தவிர மற்றெவரையும் வணங்கக் கூடாதென்றே இவர்கள் அனைவரும் ஏவப்பட்டு இருக்கின்றனர். வணக்கத்திற்குரிய இறைவன் அவனையன்றி (வேறெவனும்) இல்லை. அவர்கள் இணை வைக்கும் இவைகளை விட்டு அவன் மிகவும் பரிசுத்தமானவன்.
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்
9:31. அவர்கள் அல்லாஹ்வை விடுத்து மார்க்க மேதைகளையும், துறவிகளையும் தங்களின் ரப் கடவுளராக்கிக் கொண்டார்கள். மேலும் (இதே போன்று) மர்யத்தின் குமாரர் மஸீஹையும் (இறைவனாக்கிக் கொண்டனர்). உண்மை யாதெனில், ஒரே இறைவனைத் தவிர வேறெவரையும் வணங்க அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டதில்லை. வணக்கத்திற்குரிய இறைவன் அவனையன்றி யாரும் இல்லை. அவர்கள் செய்யும் இணைவைப்புச் செயல்களிலிருந்து அவன் தூய்மையானவன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்
9:31. (இவ்வாறே) அவர்கள் அல்லாஹ்வையன்றித் தங்கள் பாதிரிகளையும், தங்கள் சந்நியாசிகளையும் மர்யமுடைய குமாரர் மஸீஹையும் தங்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டனர். இன்னும், ஒரே ஒரு இரட்சகனையே வணங்க வேணடுமென்றல்லாது (வேறு எதனையும்) அவர்கள் கட்டளையிடப்படவில்லை, அவனையன்றி வணக்கத்திற்குரியவன் (வேறெவரும்) இல்லை, அவர்கள் இணைவைப்பவற்றைவிட்டும் அவன் மிகவும் பரிசுத்தமானவன்.
பி ஜைனுல் ஆபிதீன் தமிழாக்கம்
9:31. அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறுதான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன்.
2) குர்ஆன் 9:31 - நான்கு ஆங்கில மொழியாக்கங்கள்
இப்பொழுது இதே குர்ஆன் 9:31ம் வசனத்தை நான்கு ஆங்கில மொழியாக்கங்களில் படிப்போம். முதல் வாக்கியத்தை கூர்ந்து கவனிக்கவும்.
They take their priests and their anchorites to be their lords in derogation of Allah, and (they take as their Lord) Christ the son of Mary; yet they were commanded to worship but One Allah: there is no god but He. Praise and glory to Him: (Far is He) from having the partners they associate (with Him). (9:31)
They have taken as lords beside Allah their rabbis and their monks and the Messiah son of Mary, when they were bidden to worship only One Allah. There is no Allah save Him. Be He Glorified from all that they ascribe as partner (unto Him)!
They have taken their scholars and monks as lords besides Allah, and [also] the Messiah, the son of Mary. And they were not commanded except to worship one God; there is no deity except Him. Exalted is He above whatever they associate with Him.
They have taken their doctors of law and their monks for lords besides Allah, and (also) the Messiah son of Marium and they were enjoined that they should serve one Allah only, there is no god but He; far from His glory be what they set up (with Him).
3) குர்ஆன் 9:31 அரபி மூலமும் ஒலியாக்கமும்
9:31ம் வசனத்தை அரபியில் படிப்போம்,
ஆங்கில ஒலியாக்கம் (Transliteration):
Ittakhathoo ahbarahum waruhbanahum arbaban min dooni Allahi waalmaseeha ibna maryama wama omiroo illa liyaAAbudoo ilahan wahidan la ilaha illa huwa subhanahu AAamma yushrikoona
முதல் வாக்கியத்தின் ஒவ்வொரு அரபி வார்த்தையின் பொருளை காண்போம்.
மேலே கண்ட ஒரு வாக்கியத்தில் இரண்டு பிரிவுகள் உள்ளதைக் காணலாம். அதாவது "அவர்கள் யாரை விட்டுவிட்டு, வேறு யாரை தெய்வங்களாக ஏற்றுக்கொண்டார்கள்"? என்ற கேள்விக்கு, அரபி மூலத்திலிருந்து அறிவது என்னவென்றால், "அவர்கள் அல்லாஹ்வையும், கிறிஸ்துவையும் தெய்வங்களாக ஏற்றுக்கொள்வதை விட்டுவிட்டு, ரபீக்களையும், சந்நியாசிகளையும் தெய்வங்களாக ஏற்றுக்கொண்டார்கள்" என்பதாகும். இரண்டு பேரை (அல்லாஹ்வை, கிறிஸ்துவை) புறக்கணித்து, வெறு இரண்டு பேர்களை (ரபீக்களை, சந்நியாசிகளை) தெய்வங்களாக ஏற்றுக்கொண்டார்கள் என்பதாகும்.
அரபியில் "மின் தூனி" என்ற இரண்டு சொற்களுக்கு "தவிர, விட்டு விட்டு, பதிலாக" என்பது பொருள். இந்த சொற்களுக்கு அடுத்ததாக "அல்லாஹி வல் மஸீஹா" என்று வருகிறது. இதன் பொருள் "அல்லாஹ்வையும் மற்றும் கிறிஸ்துவையும்" என்பதாகும்.
அரபியில் "அல்லாஹ்வை மற்றும் கிறிஸ்துவையும் தெய்வங்களாக ஏற்றுக்கொள்வதை விட்டுவிட்டு, ரபீக்களையும், சந்நியாசிகளையும் அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்" என்று தெளிவாக சொல்லியிருக்கும் போது, இவ்வசனத்தை மொழியாக்கம் செய்தவர்கள் தில்லுமுல்லு செய்துள்ளார்கள். அதனை இப்போது காண்போம்.
4) இஸ்லாமிய அறிஞர்களின் வஞ்சகம்
இதுவரை குர்ஆன் 9:31ஐ தமிழ், ஆங்கிலம் மற்றும் அரபியில் கண்டோம். முஸ்லிம் அறிஞர்கள் அரபியில் உள்ளது போல தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ மொழியாக்கம் செய்துள்ளார்களா என்று கவனித்தால், அவர்கள் அரபிக்கு எதிராக மொழியாக்கம் செய்துள்ளார்கள் என்று தெரியவருகிறது. அரபி மூலத்திற்கு எதிராக செயல்படுவது என்பது அல்லாஹ்விற்கு எதிராக செயல்படுவதாக அர்த்தமாகின்றதல்லவா? அல்லாஹ்விற்கு தெரியாத இலக்கணம், மொழியின் ஆழம், முஸ்லிம் அறிஞர்களுக்கு வந்துவிட்டது! என்று இவர்கள் எண்ணிக் கொண்டுள்ளார்கள்.
இவர்கள் என்ன செய்தார்கள் என்பதை சுருக்கமாக காணலாம்.
அரபி மூலத்தில் இந்த வசனம் நான்கு வாக்கியங்களைக் கொண்டுள்ளது.
வாக்கியம்-1 | அவர்கள் அல்லாஹ்வையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர். |
---|
வாக்கியம்-2 | ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; |
வாக்கியம்-3 | வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை |
வாக்கியம்-4 | அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன் |
அல்லாஹ் மிக்க ஞானமிக்கவன், அவனுடைய ஞானத்திற்கு ஈடு இணை இல்லை என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். ஆனால், முதல் வாக்கியத்தை அரபி மூலத்தில் பார்க்கும் போது, "யூதர்களும் கிறிஸ்தவர்களும் அல்லாஹ்வையும் கிறிஸ்துவையும் தெய்வங்களாக ஏற்றுக்கொள்வதை விட்டுவிட்டு, ரபீக்களையும், துறவிகளையும் தெய்வங்களாக்கிக் கொண்டார்கள்" என்று அல்லாஹ் 9:31ல் சொல்கிறான்.
அரபி மூலத்தின் படி "இடம் சுட்டி பொருள் விளக்கம்" கொடுத்தால்:
- இந்த வசனத்தில் வரும் "அவர்கள்" யார்? யூதர்களும் கிறிஸ்தவர்களும்
- "யாரை" அவர்கள் தெய்வங்களாக கருதாமல் விட்டு விட்டார்கள்? அல்லாஹ்வையும் மஸீஹ்வையும் (கிறிஸ்துவை)
- "யாரை" தெய்வங்களாக்கிக் கொண்டார்கள்? ரபீக்களையும் சந்நியாசிகளையும்
ஆனால், முஸ்லிம் அறிஞர்கள், அல்லாஹ் தன் குர்ஆன் வசனத்தில் தவறு செய்துள்ளான் என்றுச் சொல்லி, மஸீஹ் என்ற பெயரை ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றி பொருள் கூறுகிறார்கள்.
முஸ்லிம் அறிஞர்கள் மொழியாக்கத்தில் செய்த வஞ்சகத்தைப் பாருங்கள்:
டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்
அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்;
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்
இவர்கள் அல்லாஹ்வையன்றி தங்கள் பாதிரிகளையும், சந்நியாசிகளையும், மர்யமுடைய மகன் மஸீஹையும், (தங்கள்) கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்
அவர்கள் அல்லாஹ்வை விடுத்து மார்க்க மேதைகளையும், துறவிகளையும் தங்களின் ரப் கடவுளராக்கிக் கொண்டார்கள். மேலும் (இதே போன்று) மர்யத்தின் குமாரர் மஸீஹையும் (இறைவனாக்கிக் கொண்டனர்).
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்
(இவ்வாறே) அவர்கள் அல்லாஹ்வையன்றித் தங்கள் பாதிரிகளையும், தங்கள் சந்நியாசிகளையும் மர்யமுடைய குமாரர் மஸீஹையும் தங்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டனர்.
பி ஜைனுல் ஆபிதீன் தமிழாக்கம்
அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர்
5) இஸ்லாமின் அடித்தளத்தை தகர்க்கும் வசனம் 9:31
இவ்வசனத்தின் அரபி மூலம், இஸ்லாமின் அஸ்திபாரத்தை ஆட்டம் காணவைக்கிறது என்பதை மொழியாக்கம் செய்தவர்கள் கவனித்தார்கள். எனவே, மஸீஹ் என்ற வார்த்தையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்துள்ளர்கள்.
IFT மொழியாக்கம் செய்தவர்கள், "(இதே போன்று)" மற்றும் "(இறைவனாக்கிக் கொண்டனர்)" என்ற சொற்றொடர்களை அடைப்பிற்குள் போட்டு, அல்லாஹ்வின் ஞான குறைப்பாட்டை சரி செய்துவிட்டதாக நினைத்துள்ளார்கள்.
இவ்வசனத்தை அரபியில் உள்ளது போல மொழியாக்கம் செய்தால் என்ன தீமை உண்டாகும்?
- இஸ்லாமின் அஸ்திபாரம் ஆட்டம் காணும்
- இயேசு அல்லாஹ்விற்கு சமமான இறைவன் என்று அவர்கள் ஏற்கவேண்டி வரும்.
- இஸ்லாமின் இறையியலுக்கு எதிராக இந்த வசனம் உள்ளது, எனவே அல்லாஹ் இதனை எப்படி இறக்கியிருக்கமுடியும்? என்ற சந்தேகம் வரும்.
- குர்ஆனின் அரபி மூலத்தில் மனிதர்களின் கைகள் பட்டு, இந்த வசனம் மாற்றப்பட்டுள்ளது என்று எண்ணவேண்டி வருமே!
- இது உண்மையானால், குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று முஸ்லிம்கள் ஏற்கவேண்டி வரும். அல்லாஹ் தன் வேதத்தை காக்கவில்லை என்று முஸ்லிம்கள் நம்பவேண்டி வரும்.
எது எப்படியோ, அல்லாஹ் தன் முழூ குர்ஆனை பொய்யாக்கும் இந்த வசனத்தை தன்னை அறியாமல் குர்ஆனில் புகுத்தி விட்டான், அல்லது மனிதன் தன் கடைசி வேதத்தில் விளையாடியதை கண்டும் காணதவன் போல இருந்துவிட்டான். எனவே, மொழியாக்கம் செய்தவர்கள், அல்லாஹ்வின் இந்த அறியாமையை போக்க, தாங்கள் சுயமாக குர்ஆன் வசனத்தின் விளக்கத்தில் மாற்றம் செய்து, உலக மக்களை ஏமாற்ற முயன்றுள்ளார்கள் என்று தெரிகின்றது.
இஸ்லாமுக்கு வந்த இன்னொரு சிறிய சிக்கல்:
6) குர்ஆன் 9:30 & 9:31: இயேசுவை அல்லாஹ்வின் மகன் என்றுச் சொல்லாதீர்கள், கடவுள் என்றே சொல்லுங்கள்:
இன்னொரு விஷயமும் இங்கு அடிபடுகிறது, நாம் ஆய்வு செய்த வசனத்துக்கு முன்புள்ள வசனத்தை கவனித்தால், இன்னொரு முரண்பாடு பளிச்சிடுகின்றது.
குர்ஆன் 9:30ஐ படிப்போம்:
9:30. யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்?
இந்த வசனத்தில் "கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்" இது தவறு என்று அல்லாஹ் சொல்கின்றான். ஆனால், அடுத்த வசனத்திலேயே மஸீஹை (கிறிஸ்துவை) தனக்கு சமமான கடவுள் என்றுச் சொல்கிறான்.
அரபி மூலம் 9:31: அவர்கள் அல்லாஹ்வையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர். . .
இவ்விரண்டு வசனங்களை கவனிக்கும் போது, 30வது வசனத்தின் படி 'மஸீஹ் அல்லாஹ்வின் மகன்' என்றுச் சொல்லக்கூடாது, ஆனால் 31வது வசனத்தின் படி 'மஸீஹ் கடவுள்' என்றுச் சொல்லலாம்.
இதுவரை குர்ஆனின் 9:31ம் வசனத்தையும், கடைசியில் 30வது வசனத்தையும் ஆய்வு செய்தோம்.
அல்லாஹ்வோ அல்லது முஹம்மதுவோ, யார் குர்ஆனை இறக்கியிருந்தாலும் சரி, குர்ஆன் 9:31வது வசனம், குர்ஆனின் மொத்த ஏகத்துவ கோட்பாட்டிற்கு சாவு மணி அடித்துள்ளது. இதனை கவனித்த குர்ஆன் மொழியாக்க அறிஞர்கள், தில்லுமுல்லு செய்து, எப்படியாவது பொருள் மாறும் படி செய்துள்ளார்கள். மொழியாக்கம் செய்தவர்கள் தமிழாக்கத்தில் கை வைக்கமுடியும், அரபியில் கைவைக்க முடியுமா?
இப்போது விடைகாணமுடியாத கேள்வி எதுவென்றால், யூதர்களும் கிறிஸ்தவர்களும், அல்லாஹ்வையும் கிறிஸ்துவையும் கடவுளாக ஏற்காமல், ரபீக்களையும் சந்நியாசிகளையும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்று சொல்லும் குர்ஆன் 9:31 வது வசனத்தை முஸ்லிம்கள் என்ன செய்யப்போகிறார்கள்? இந்த வசனம் மக்காவில் இறக்கப்பட்டு இருந்திருந்தால், மதினாவின் வசனத்தினால் இது இரத்து செய்யப்பட்டுவிட்டது என்று முஸ்லிம்கள் சொல்ல வாய்ப்பு உண்டாகும். ஆனால், இந்த அத்தியாயம் குர்ஆனில் கடைசியாக இறக்கப்பட்ட அத்தியாயம் என்று முஸ்லிம்கள் சொல்கின்றபடியினால், அந்த ஒரு வாய்ப்பும் அவர்களுக்கு கிடைக்காமல் போய்விட்டது.
முஸ்லிம்கள் என்ன செய்யப்போகிறார்கள்? இந்த வசனத்தை இப்படி அரபியில் இறக்கியவனைப் பார்த்து, 'ஏன் இப்படி செய்தாய்?' என்று கேட்கலாம் அவ்வளவு தான். அல்லாஹ் சர்வ ஞானி இல்லை, அவனுக்கு அரபியில் ஒரு சரியான வசனத்தை இறக்கத்தெரியவில்லை என்று முஸ்லிம்கள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.