[அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதங்கள்: கடிதம் 1, கடிதம் 2, கடிதம் 3, கடிதம் 4, கடிதம் 5, கடிதம் 6, கடிதம் 7, கடிதம் 8 , கடிதம் 9, கடிதம் 10, கடிதம் 11, கடிதம் 12, கடிதம் 13 ]
அன்புள்ள தம்பிக்கு,
நீ ஒரு இஸ்லாமிய நாட்டில் இப்போது வாழ்ந்துக்கொண்டு இருக்கிறாய், மற்றும் உன்னை ஒரு இஸ்லாமியனாக பிரகடனம் செய்துவிட்டாய். எனவே, இனி நீ மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும், நான் பேச்சு சுதந்திரத்தை பயன்படுத்துவேன், உண்மையை பேசுவேன், தீய காரியங்களுக்கு எதிர்த்து குரல் கொடுப்பேன், பெண் உரிமைக்காக போராடுவேன், குறைந்த பட்சம் குரல் கொடுப்பேன் என்றுச் சொல்லி, சுதந்திரமாக செயல்பட்டால், ஆபத்து உன் வாசற்படியில் படுத்துயிருக்கிறது என்பதை அறிந்துக்கொள். இந்த ஆபத்து வேறு மார்க்கத்தார்கள் மூலம் அல்ல, இஸ்லாமியர்கள் மூலமாகவே உனக்கு வரும் என்பதை மறந்துபோகாதே,
ஒரு கிறிஸ்தவன் இஸ்லாமை தழுவும் போது, இஸ்லாமியர்கள் உனக்கு நண்பர்களாக இருந்து அன்போடும், நட்புடனும் கவனித்துக்கொள்வார்கள். ஆனால், நீ சிறுவயது முதற்கொண்டு ஒரு கிறிஸ்தவனாக வளர்க்கப்பட்டபடியினால் சுதந்திரமாக வாழ கற்றுக்கொண்டு இருக்கிறாய். கிறிஸ்தவம் பற்றி நகைச்சுவையாக ஏதாவது சொன்னாலும் உன்னை யாரும்(கிறிஸ்தவர்கள்) ஒன்றும் சொல்லமாட்டார்கள், கருத்து சுதந்திரம் உனக்கு இருந்தது. இப்பொது இஸ்லாமியனாக மாறியதால், இனி நீ சுதந்திரமாக செயல்படமுடியாது, குறைந்தபட்சம், சௌதியில் இருக்கும் வரையில் நீ சுதந்திரமாக இருக்க முடியாது.
குர்-ஆன் பற்றியோ, முஹம்மது பற்றியோ, இஸ்லாம் பற்றியோ நீ எவைகளை பேசினாலும், அவைகளை சிந்தித்து பேசவேண்டும்.
உன்னை அறியாமல் இஸ்லாமுக்கு எதிராக ஏதாவது சொல்லிவிட்டு, அதன் பிறகு, "நான் வேடிக்கையாகத் தான் சொன்னேன்" (அ) "இதில் என்ன தவறு, இது பொதுவாக விஷயம் தானே" என்று நீ கூறினால், இஸ்லாமியர்கள் அதனை அங்கீகரித்துக் கொள்ளமாட்டார்கள். நீ உண்மையாகவே அறியாமையில் சொல்லியிருந்தாலும், ஆபத்து உனக்குத் தான். எனவே, இதர இஸ்லாமியர்களிடம் பேசும் போதும், இணையத்தில் எழுதும் போதும், எதை செய்தாலும் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதை உனக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இஸ்லாமியர்கள் எப்படி நடந்துக் கொள்வார்கள் என்பதற்கு ஒரு நடந்த நிகழ்ச்சியை உனக்கு தெரிவிக்கிறேன்.
பாங்களாதேஷ் நாட்டில் ஒரு குறிப்பிட்ட செய்தித்தாளில் ஒரு சிறிய கார்ட்டூன் மற்றும் ஒரு நகைச்சுவை செய்தி வந்தது. இஸ்லாமியர்கள் தங்கள் பெயர்களுக்கு முன்னால் "முஹம்மது" என்ற வார்த்தையை சேர்த்துக்கொள்வது அங்கு வழக்கமாக இருந்தது. ஒரு சின்ன பையனிடம் ஒரு முதியவர் (இஸ்லாமிய இமாம்) உன் பெயர் என்ன என்று கேட்டார். அவன் "முஹம்மது" என்ற வார்த்தையை விட்டுவிட்டு, தன் பெயரை மட்டும் சொன்னான், உடனே அந்த முதியவர், பெயருக்கு முன்னால் இருக்கும் "முஹம்மது" என்ற வார்த்தையை விட்டுவிடாதே, அதோடு சேர்த்து பெயரைச் சொல்லவேண்டும் என்று அறிவுரை கூறினார். அதன் பிறகு அந்த பையனிடம் உன் கையில் இருப்பது என்ன என்று கேட்க, அந்த பையன் தன் கையில் பூனையை வைத்து இருந்ததினால், இப்போது கேட்ட அறிவுரையின் படி, "முஹம்மது பூனை" என்று சொல்கிறான். இது தான் கார்ட்டூன் சொல்லும் செய்தி.
http://en.wikipedia.org/wiki/2007_Bangladesh_cartoon_controversy
http://news.bbc.co.uk/2/hi/7006528.stm
http://www.islam-watch.org/Assets/Aalpin_Muhammad_Cartoon.jpg
இந்த கார்ட்டூனை வரைந்தவனும் ஒரு இஸ்லாமியன் தான். இஸ்லாமியர்கள் கொந்தளித்தார்கள், மிகப்பெரிய கலவரம் நடந்தது. பூனைக்கு முன்னால் எங்கள் நபியின் பெயரைச் சொல்வதா? இது மிகப்பெரிய அவமானம் என்று கலவரத்தில் ஈடுபட்டார்கள். அதை வரைந்தவன் இப்படியெல்லாம் நடக்கும் என்று நான் நினைக்கவில்லை, நான் அறியாமல் இதை செய்துவிட்டேன் என்று மன்னிப்பு கேட்டான், செய்தித்தாளின் முதலாளியும் மன்னிப்பு கோரினார், இஸ்லாமியர்கள் கேட்டபாடில்லை. எனவே, அரசாங்கம் அந்த வாலிபனை கைது செய்து பாதுகாப்பிற்காக சிறையில் அடைத்தது. மேலும் என்ன நடந்தது என்பதை மேலேயுள்ள தொடுப்புகளை சொடுக்கி அறிந்துக்கொள்.
நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், நீ அறிந்து செய்தாலும், அறியாமையில் செய்தாலும் இஸ்லாமிய மக்களில் சிலர் உன்னை மன்னிக்கமாட்டார்கள். இது ஒரு புறமிருக்க, ஒரு வேளை, சில மாதங்களுக்கு பிறகு, உண்மை இஸ்லாமை அறிந்துக்கொண்டு, எனக்கு இது சரிபட்டு வராது என்று எண்ணி, இஸ்லாமை விட்டு வெளியரங்கமாக நீ வெளியேற நினைத்தால், அதுவும் உனக்கு ஆபத்தாக முடியும். ஒரு முறை இஸ்லாமியனாக மாறி மறுபடியும் அதைவிட்டு வெளியேறினால், இஸ்லாமியர்கள் காயப்படுவார்கள், அவர்களை நீ ஏமாற்றிவிட்டதாகவும், இஸ்லாமை அவமானப்படுத்திவிட்டதாகவும் நினைப்பார்கள். இஸ்லாமியர்களின் மனநிலை கடினமான உண்மைகளை கிரகிக்கமுடியாத நிலையில் இருக்கிறது.
ஆகையால், நீ இஸ்லாமை விட்டு வெளியேற விரும்பினால், யாரிடமும் சொல்லாமல் இருப்பது தான் நல்லது மற்றும் நீ அப்போது இந்தியாவில் வந்து நிரந்தரமாக தங்குவது தான் உனக்கு பாதுகாப்பு.
நீ இப்போது என்னிடம் "அண்ணே, இஸ்லாமில் என் நம்பிக்கை திடமாக உள்ளது, என் இஸ்லாமிய நண்பர்கள் அன்பானவர்கள், நான் தவறு செய்தால் அவர்கள் மன்னிப்பார்கள், நீங்கள் சொல்வது போல வன்முறையில் ஈடுபடமாட்டார்கள்" என்று சொல்ல விரும்புவாய். நல்லது தம்பி, உன் நண்பர்கள் உன்னை நேசித்து, எந்த நிலையிலும் உனக்கு ஆபத்து விளைவிக்காமல் இருந்தால் அதுவே எனக்கு போதும், ஆனால் உன் நண்பர்களாக இல்லாமல் இருக்கும் இதர இஸ்லாமியர்களிடமிருந்து பிரச்சனை நேரங்களில் உன்னை எப்படி பாதுகாத்துக்கொள்வாய்? எனவே, உன் மீது அன்பு கூர்ந்து நான் வேண்டிக்கொள்வதெல்லாம், எச்சரிக்கையாக இரு என்பது மட்டும் தான்.
தம்பி, நீ புலியின் மிது சவாரி செய்துக்கொண்டு இருக்கிறாய், வேகம் குறைந்தாலும், நீ கீழே இறங்கப் பார்த்தாலும் உனக்கு ஆபத்து, எனவே தொடர்ந்து உன் பயணம் வேகமாக தொடரட்டும். நீ கீழே இறங்க விரும்பினால், நான் உனக்கு முன்னமே சொன்னது போல இந்தியாவிற்கு வரும் வரை எச்சரிக்கையாக இரு.
எனக்கு இரண்டு காரியங்கள் மீது முழு நம்பிக்கை உண்டு, முதலாவது நீ எல்லாவற்றையும் ஆராய்ந்து சரி பார்க்க ஆரம்பித்துள்ளாய் என்பதாகும் (இப்படி இல்லையென்றால் நீ என்னோடு கடிதத் தொடர்பு வைத்துக்கொண்டு இருப்பாயா?), இரண்டாவது இஸ்லாம் என்றால் என்ன என்பதும் எனக்குத் தெரியும். உன்னைப்போல ஆராய்ச்சி செய்து படித்துப் பார்த்து சிந்தித்து செயல்படுபவனை இஸ்லாம் ஒருபோதும் அனைத்துக்கொள்ளாது, அல்லது உன் மனது இஸ்லாமை தொடர்ச்சியாக பிடித்துக்கொண்டு இருக்காது. எனவே ஒரு நாள் நீ உண்மையை அறியும் போது, உனக்கு இந்த என்னுடைய வார்த்தைகள் உபயோகமாக இருக்கும் என்பதற்காக இவைகளை எழுதுகிறேன்.
இப்போது உனக்கு நானே அனுமதி தருகிறேன், இந்த கடிதத்தை படித்துவிட்டு, உன்னால் என் வார்த்தைகளை ஜீரணித்துக்கொள்ள முடியாவிட்டால், இதனை கிழித்து எரிந்துவிடு (உன் கணினியிலிருந்து அழித்துவிடு). ஆனால், எப்போதும் உன் மீதே அன்பு கூர்ந்து காத்துக்கொண்டு இருக்கின்ற ஒரு சகோதரன் இந்தியாவில் உனக்கு உண்டு என்பதை மறந்துவிடாதே.
புலி மீது சவாரி செய்வது வீரமல்ல தம்பி, அது வீம்பு.
உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.
இப்படிக்கு, உன் அண்ணன்
தமிழ் கிறிஸ்தவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக