ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

 1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
 2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
 3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
 4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
 5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
 6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
 7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
 8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
 9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
 10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
 11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
 12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
 13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
 14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
 15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
 16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
 17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
 18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
 19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
 20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
 21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
 22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
 23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
 29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
 30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
 31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
 32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
 33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
 34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
 35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
 36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
 37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
 38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
 39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
 40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
 41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
 42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
 43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
 44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
 45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
 46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
 47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
 48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
 49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
 50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
 51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
 53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
 54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
 55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
 56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
 57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

 1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
 2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
 3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
 4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
 5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
 6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
 7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
 8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
 9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
 10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
 11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
 12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
 13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
 14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
 15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
 16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
 17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
 18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
 19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
 20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
 21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
 22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
 23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
 24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
 25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
 26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
 27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
 28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
 29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
 30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
 31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
 32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
 33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
 34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
 35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
 36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
 37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
 38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
 39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
 40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
 41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
 43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
 44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
 45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
 46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
 47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
 48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
 49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வியாழன், 30 நவம்பர், 2017

கேள்வி 4: நான் புதிதாக கிறிஸ்தவத்தை தழுவியுள்ளேன். கிறிஸ்தவத்தில் ஹலால், ஹராம் என்பவைகள் உண்டா? நான் எவைகளை பின்பற்ற வேண்டும்? எவைகளை பின்பற்றக்கூடாது?

பதில்:

ஒரு முஸ்லிம் பின்னணியிலிருந்து இயேசுவை பின்பற்ற முடிவு செய்தவர்கள் கேட்கும் முதலாவது கேள்வி இதுவாகத் தான் இருக்கும். ஏனென்றால், ஹலால் ஹராம் என்கின்ற இவ்விருவார்த்தைகள் தான் முஸ்லிம்களை ஒவ்வொரு நாளும் நடத்துகின்றன. ஒரு முஸ்லிம் எதைச் செய்ய நினைத்தாலும், அது ஹலாலா? ஹராமா? அல்லது சுன்னத்தா? என்று தெரிந்துக்கொண்டு செயல்படுகின்றான்.

 • ஹலால் -  அனுமதிக்கப்பட்டவை
 • ஹராம் -  செய்யக்கூடாதவை
 • சுன்னத் - 'செய்தால்' நன்மை கிடைக்கும், செய்யாவிட்டால் பாவமில்லை. 

இதே மனநிலையோடு இருப்பதினால் தான் நீங்களும் இந்த கேள்வியை கேட்டுள்ளீர்கள். உங்களுக்கு ஒரு நற்செய்தி சொல்லப்போகிறேன், அது என்னவென்றால், 'நீங்கள் இயேசுவை பின்பற்ற முடிவு செய்தபடியினால்', இனி நீங்கள் செய்ய விரும்பும் ஒவ்வொரு செயலுக்காக:

அ) இமாம்களைத் தேடிச் செல்லவேண்டியதில்லை.

ஆ) அறியாமையினால் தவறாக ஒரு செயலைச் செய்துவிட்டால், அல்லாஹ் தண்டித்துவிடுவானோ! என்று பயப்படத்தேவையில்லை.

இ) எந்த இஸ்லாமிய அறிஞர் சொல்வதைக் கேட்பது? ஒரு குறிப்பிட்ட இஸ்லாமிய அறிஞரின் இயக்கத்துடன் இணைந்து வாழ்ந்தால், அவரை மற்ற இயக்கத்தினர் காஃபிர்கள் என்று குற்றம்சாட்டுகிறார்கள். இவர்களை அவர்கள் 'காஃபிர்கள்' என்கிறார்கள். எனவே எந்த அறிஞர் சொல்வது 'உண்மை இஸ்லாம்' என்று புரியாமல் குழம்பத்தேவையில்லை.

ஈ) சுருக்கமாகச் சொல்வதென்றால், நீங்கள் முழுவதுமாக விடுதலை பெற்றுவிட்டீர்கள், அதாவது இஸ்லாமை பின்பற்றிக்கொண்டு இருந்தவரை நீங்கள் அடிமையாக இருந்தீர்கள் என்று அர்த்தம்.

கிறிஸ்தவத்தில் ஹலால் ஹராம் இல்லையா?

நீங்கள் விடுதலையாகிவிட்டீர்கள் என்றுச் சொன்னால், 'இனி நீங்கள் உங்கள் விருப்பபடி எப்படியும் வாழலாம்' என்று அர்த்தமில்லை. 1947ம் ஆண்டு நம் இந்தியா ஆங்கிலேயர்களின் ஆட்சியிலிருந்து விடுதலைப் பெற்றது. இதன் அர்த்தம் என்ன? இனி ஒவ்வொரு இந்தியனும் தனக்கென்று சட்டங்களை வகுத்துக்கொள்ளாமல், எல்லா வித சட்ட விரோத செயல்களையும்  செய்யலாம் என்று அர்த்தமா? இல்லை. சுதந்திர இந்தியாவில், 1947லிருந்து காவல்துறையும், நீதிமன்றமும், சிறைச்சாலைகளும் இருக்காது என்று அர்த்தமா? இல்லை. 

'விடுதலை' என்றால், நம்மை வெளிநாட்டவன் ஆளாமல், நம்மை நாமே ஆண்டுக்கொள்வதாகும். 'விடுதலை' என்றால் தவறான சட்டங்களை நீக்கிவிட்டு, சரியான சட்டங்களை நியமித்துக்கொண்டு வாழ்வதாகும். நமக்கென்று ஒரு அரசியல் சட்டத்தை எழுதிக்கொண்டு, நம்மை நாமே ஆண்டுக்கொண்டு இருக்கிறோம்.  எனவே, இஸ்லாமிலிருந்து விடுதலை பெற்றவர்களுக்கும், கிறிஸ்தவம் எது ஹலால்? எது ஹராம்? என்று கற்றுக்கொடுக்கிறது. ஆனால், இஸ்லாமின் ஹலால் ஹராமுக்கும், கிறிஸ்தவத்தின் ஹலால் ஹராமுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. அவைகளை புரிந்துக்கொள்ள மேற்கொண்டு படியுங்கள்.

1) கிறிஸ்தவர்களின் முதலாவது சட்டம்: பத்து கட்டளைகள்

கிறிஸ்தவர்களுக்கும் ஹலால்/ஹராம் (அனுமதிக்கப்பட்டது, தடுக்கப்பட்டது) கட்டளைகள் உள்ளன. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசி மோசேயின் மூலமாக, தேவன் கொடுத்த பத்து கட்டளைகளை கிறிஸ்தவர்கள் தவறாமல் பின்பற்றவேண்டும்.

அவைகளை சுருக்கமாக இங்கு தருகிறேன்:

1. உன் தேவனாகிய கர்த்தர் நானே. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.

2. உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக;

3. ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக

4. உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக

5. கொலை செய்யாதிருப்பாயாக. 

6. விபசாரம் செய்யாதிருப்பாயாக. 

7. களவு செய்யாதிருப்பாயாக.

8. பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக

9. பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக 

10. பிறனுடைய யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக.

(யாத்திராகமம் 20:2-17 & உபாகமம் 5:6-21)

இந்த பத்து கட்டளைகளை நீங்கள் கடை பிடிக்கவேண்டும், 'செய்' என்றுச் சொன்னதை செய்யவேண்டும் (ஹலால்), 'செய்யாதே' என்றுச் சொன்னதை செய்யக்கூடாது (ஹராம்).

இவ்வளவு தானா! பத்து கட்டளைகளை மட்டுமே பின்பற்றினால் போதுமா? ரொம்பவும் ஈஸியாக இருக்கின்றதே! என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்! நான் முஸ்லிமாக இருக்கும் போது மூட்டை கணக்கில் கட்டளைகளை பின்பற்றிக்கொண்டு இருந்தேனே! என்று ஆச்சரியப்படுகிறீர்கள் அல்லவா! இதனால் தான் நான் சொன்னேன் 'நீங்கள் விடுதலையாகியுள்ளீர்கள்' என்று.

இன்னொரு நற்செய்தியையும் உங்களுக்குச் சொல்லட்டுமா! இந்த பத்து கட்டளைகளையும் மிக்ஸியில் போட்டு, இயேசு இரண்டே கட்டளைகளாக மாற்றிவிட்டார்! அடுத்த பாயிண்டை படியுங்கள், நீங்கள் துள்ளி குதிப்பீர்கள்!

2) கிறிஸ்தவர்களின் இரண்டாவது சட்டம்: இரண்டு கட்டளைகள்

மேற்கண்ட 10 கட்டளைகள் மட்டுமல்ல, பழைய ஏற்பாட்டிலுள்ள இதர கட்டளைகள் அனைத்தும் இரண்டே கட்டளைகளில் அடக்கிவிட்டார் இயேசு. 

• முதலாம் பிரதான கட்டளை: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக.

• இரண்டாம் பிரதான கட்டளை: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக (மத்தேயு 22:37-40)

இவ்வளவு தான் கிறிஸ்தவம். இக்கட்டளைகளுக்கு மேலேயும் ஒன்றுமில்லை, கீழேயும் ஒன்றுமில்லை. 

ஒரு சந்தேகம்: இப்போது நான் எத்தனை கட்டளைகளை பின்பற்றவேண்டும்? 10 (அ) 2:

பழைய ஏற்பாடு 10 கட்டளைகள் என்றுச் சொல்கிறது, புதிய ஏற்பாடு 2 கட்டளைகள் என்கிறது, மொத்தம் 12 கட்டளைகள் ஆகிறதல்லவா? எனவே, நான் 12 கட்டளைகளை பின்பற்றினால் போதுமா! என்ற கேள்வி எழும்.

இயேசு அந்த இரண்டு கட்டளைகள் பற்றி சொல்லும் போது, என்ன கூறினார் என்பதை கவனிக்கவேண்டும்: 

இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்(மத்தேயு 22:40)

(கவனிக்கவும்: நம் பைபிள் தமிழாக்கத்தில் 'கட்டளை' என்ற வார்த்தையை, 'கற்பனை' என்று (பிழையாக) மொழியாக்கம் செய்துள்ளார்கள். நாம் பொதுவாக பயன்படுத்தும் 'கற்பனை (Imagination)'அல்ல இது என்பதை மனதில் வைக்கவேண்டும். இவ்வசனத்தில்  கற்பனை என்றால் கட்டளை (commandment) என்று அர்த்தம்).

இவ்விரண்டு கட்டளைகளை மட்டும் பின்பற்றினால் போதும், இவைகளுக்குள் அனைத்து பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளும் அடங்கிவிடும் என்கிறார். ஆக, நாம் 2 கட்டளைகளை மட்டுமே பின்பற்றினால் போதும்.  

எப்படி 2 கட்டளைகளை பின்பற்றினால், 10 கட்டளைகளை பின்பற்றுவது போல ஆகும்? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.

கீழேயுள்ள படத்தைப் பார்க்கவும். பழைய ஏற்பாட்டின் 10 கட்டளைகளை இரண்டாக பிரிக்கலாம்.

 • கட்டளைகள் 1 - 3: மனிதன் தேவனுக்காக செய்யவேண்டியவைகள்.
 • கட்டளைகள் 4 - 10: மனிதன் இதர மனிதர்களுக்காக செய்யவேண்டியவைகள்.

படம் 1: 10 கட்டளைகள் & 2 கட்டளைகள் 

இயேசுவின் வார்த்தைகளின் படி, ஒரு மனிதன், தேவனை தன் முழு இருதயத்தோடும், முழு பலத்தோடும், முழு மனதோடும் அன்பு கூர்ந்தால், அவன், தேவனுக்கு துக்கம் உண்டாக்கும் எந்த ஒரு செயலையும் செய்யமாட்டான். இதன் அர்த்தமென்ன? தேவன் சொன்ன ஆயிரம் கட்டளைகளை நிறைவேற்றுவதற்கு பாடுபடுவதைக் காட்டிலும், அந்த தேவனை முழு மனதோடு அன்பு கூர்ந்துவிட்டால் போதும், அந்த ஆயிரம் கட்டளைகளை நாம் மகிழ்ச்சியாக பின்பற்றிவிடுவோம், அவைகளை பாரமாக நினைக்கமாட்டோம், அன்புக்கு அவ்வளவு வலிமையுள்ளது. 

இதே போல, ஒரு மனிதன், தன்னை நேசிப்பதைப்போல, பிறனையும் நேசிக்க ஆரம்பித்துவிட்டால் போதும், அவன் 10 கட்டளைகளில் உள்ள 7 கட்டளைகளை தானாகவே பின்பற்றிவிடுவான். தன் அயலகத்தார்களை நேசிப்பவன், அவர்களின் பொருட்களை திருடமாட்டான் (கட்டளை 7), அவர்களுக்கு விரோதமாக பொய் சொல்லமாட்டான் (கட்டளை 8), அவர்களின் மனைவியையோ, பொருட்களையோ இச்சித்து பாவம் செய்யமாட்டான் (கட்டளை 9 & 10). தன் பெற்றோர்களை தன்னைப்போலவே நேசிப்பவன், அவர்களை கனப்படுத்துவான் (கட்டளை 4).  எனவே, ஆயிரம் கட்டளைகளை பின்பற்ற முயலுவதைக் காட்டிலும், ஒரே கட்டளையை முழு மனதோடு பின்பற்றிவிட்டால் (தன்னைப் போல அன்பு கூறிவிட்டால்) போதும், அனைத்து இதர கட்டளைகளும் நிறைவேற்றப்படும்.

ஒருவேளை பைபிளில் உள்ள அனைத்து கட்டளைகளையும் கூட்டும் போது, நமக்கு 1000 கட்டளைகள் வருகின்றது என்று வைத்துக்கொள்வோம் (திருடாதே, கொலை செய்யாதே, விபச்சாரம் செய்யாதே, பொய் சொல்லாதே, தீமை செய்யாதே, மற்றவர்களுக்கு தடங்கலாக இருக்காதே, உண்மை பேசு, நீதி செய், நன்மை செய், தேவனை மட்டுமே வணங்கு, வேதத்தை வாசி போன்றவை . . .) இவைகள் அனைத்தையும் வகைப்படுத்தினால், முதலாவதாக, தேவனுக்காக நாம் செய்யக்கூடிய கடமைகளாக (கட்டளைகளாக) இருக்கும், இரண்டாவதாக, இதர மக்களுக்காக நாம் செய்யக்கூடிய கடமைகளாக (கட்டளைகளாக) இருக்கும். எனவே, தேவனை முழு மனதோடு நேசித்து நடந்துக்கொண்டால் போதும், அதே போல, மற்றவர்களின் மனது புண்படாமல் நடந்துக்கொண்டால் போதும். இவ்விரண்டையும் செய்ய ஒரே வழி, தேவன் மீதும், மனிதன் மீதும் முழு மனதோடு அன்பு செலுத்துவது.

ஆக, கிறிஸ்தவத்தில் 'ஹலால்' 'ஹராம்' உண்டா? என்று கேட்டால், 'ஆமாம்' உண்டு என்பது தான் பதில். ஆனால், ஹலாலைச் செய்து, ஹராமை எப்படி விட்டுவிடுவது? இக்கேள்விக்கு பதில் 'அன்பு கூறுவது தான் சுலபமான மற்றும் சரியான வழி'. 

இதனால் தான் நான் இந்த பதிலின் ஆரம்பத்தில், 'நீங்கள் விடுதலை ஆகிவிட்டீர்கள்' என்றுச் சொன்னேன்.

முடிவுரை: 

கிறிஸ்தவத்தில் ஹலால், ஹராம் உள்ளதா என்று கேள்வி கேட்ட சகோதரருக்கு எழுதிக்கொள்வது. முதலாவது, நீங்கள் இஸ்லாமில் கற்றுக்கொண்டதை கைவிடவேண்டும், மனதளவில் மாற்றம் கொண்டுவரப்படவேண்டும். 'கிறிஸ்தவம்' இஸ்லாம் போன்ற மார்க்கமல்ல, அது வித்தியாசமானது, சுலபமானது அதே நேரத்தில் இஸ்லாமை விட பரிசுத்தமானது, மற்றும் உண்மையானது. 

 • இஸ்லாம் -  கிரியை மார்க்கம்.
 • கிறிஸ்தவம் - கிருபை மார்க்கம்.
 • இஸ்லாம் மனிதனைப் பார்த்து 'எத்தனை கட்டளைகளை பின்பற்றினாய்?' என்று கேட்கிறது.
 • கிறிஸ்தவம் மனிதனைப் பார்த்து 'நீ எப்படி அன்பு கூறினாய்? (எப்படி வாழ்ந்தாய்?)' என்று கேட்கிறது.
 • இஸ்லாம் – உன் இரட்சிப்பை நீயே சம்பாதித்துக் கொள் என்கிறது.
 • கிறிஸ்தவம் – 'உன் இரட்சிப்பை நான் சம்பாதித்து வைத்துள்ளேன், அதனை முழுமனதுடன் பெற்றுக்கொள்வாயா?' என்று கேட்கிறது. 
 • இஸ்லாம் – நீ சொர்க்கம் வர நீ என்ன செய்தாய்? எனக்கு அவைகளைக் காட்டு, நான் பார்க்கட்டும் என்றுச் சொல்கிறது.
 • கிறிஸ்தவம் – நீ சொர்க்கம் வர உனக்காக நான் என்ன செய்துள்ளேன்? என்று நீ பார்த்து அறிந்துக்கொள் என்றுச் சொல்கிறது.

ஒருவன் இஸ்லாமை பின்பற்ற முடிவு செய்தவுடன், அவன் முதுகில் ஒரு டன் எடையுள்ள மூட்டையை எடுத்து வைத்து, இதனை உன் மரணம் வரை சுமந்துக்கொண்டு வரவேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது.  ஆனால், கிறிஸ்துவோ, அந்த மூட்டையை என் காலடியில் வைத்துவிட்டு, விடுதலையோடு என்னோடு நடந்துச் செல் என்றுச் சொல்கிறார்.

அன்பு சகோதரனே! சகோதரியே! நீ விடுதலையாக்கப்பட்டுள்ளாய், இனி உன்னை யாரும் அடிமைப் படுத்த  இடம் கொடுக்காதே! 

அடுத்த கேள்வி: ஹலால் ஹராம் என்பதை நற்செயல்களை சம்மந்தப்படுத்தி விளக்கினீர்கள், ஆனால், சாப்பிடுவதில், உடைகள் அணிவதில் மற்றும் இதர காரியங்களில் ஹலால் ஹராம் பற்றி கிறிஸ்தவம் என்ன சொல்கிறது என்பதை விளக்கமுடியுமா?

கேள்வி 3: நான் ஒரு முஸ்லிம் பெண், படித்துகொண்டு இருக்கிறேன். இயேசுவை விசுவாசிக்கிறேன். என் முடிவை வீட்டில் உள்ளவர்களுக்குச் சொன்னால், என் படிப்பை நிறுத்திவிட்டு, வீட்டில் உட்காரவைத்து விடுவார்கள், அல்லது திருமணம் செய்துவிடுவார்கள். நான் என்ன செய்வது?பொருளடக்கம்கேள்வி 5:

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/new_creation_qa/new_creation_qa4.html


Virus-free. www.avast.com

கேள்வி 3: நான் ஒரு முஸ்லிம் பெண், படித்துகொண்டு இருக்கிறேன். இயேசுவை விசுவாசிக்கிறேன். என் முடிவை வீட்டில் உள்ளவர்களுக்குச் சொன்னால், என் படிப்பை நிறுத்திவிட்டு, வீட்டில் உட்காரவைத்து விடுவார்கள், அல்லது திருமணம் செய்துவிடுவார்கள். நான் என்ன செய்வது?

பதில்:

உங்களுடைய நிலையை என்னால் சரியாக புரிந்துக் கொள்ளமுடிகிறது. நீங்கள் எத்தனை மாதங்களாக/ஆண்டுகளாக இயேசுவை பின்பற்றிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பெண்ணாக பிறந்தும், நீங்கள் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று அறியும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.  இங்கு சில ஆலோசனைகளை தருகிறேன், இவைகள் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் பொருந்தும்.

1) திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்:

முதலாவதாக, நீங்கள் உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள முயலுங்கள். உங்கள் முடிவை உடனே பெற்றோர்களுக்குச் சொல்லத் தேவையில்லை. உங்கள் படிப்பு முடியும் வரை, இந்த முடிவு பற்றி பெற்றோர்களுக்குச் சொல்லாதீர்கள். உங்கள் படிப்பை நன்றாக படித்து, நல்ல மதிப்பெண்களில் தேர்ச்சிப்பெற முயற்சி செய்யுங்கள். சமுதாயத்தில் சிறப்பாக வாழவேண்டுமென்றால், உங்களுக்கு படிப்பு வேண்டும், அதன் மூலமாக நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிர்காலத்தில் யார் மீதும் சார்ந்து வாழாமல் இருக்க, படிப்பு முக்கியம். மேலும், சுயமாக சம்பாதிக்கும் திறமையை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள். முடிந்தால், மேற்படிப்பு படித்து, நல்ல ஒரு பட்டதாரியாக மாறுங்கள். 

உங்களுக்கு ஆர்வம் இருந்து, நேரமிருந்தால், இன்னும் சில கைத்தொழில்களை கற்றுக்கொள்ளலாம். அதாவது, படிக்கமுடியாத நிலையில் இருக்கும் பெண்கள், டெய்லரிங் போன்ற பல கைத்தொழில்களைக் கற்றுக்கொள்ளலாம். இதே போல, ஆண்களும் சம்பாதிக்க உதவும் கைத்தொழில்களை கற்றுக்கொள்ளுங்கள். 

தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான். (நீதிமொழிகள் 22:9)

சோம்பேரிகளுக்கு தேவன் உதவி செய்வதில்லை. நாம் திறமைகளை வளர்த்துக்கொண்டால், நமக்கு ஏற்ற வேலைகளை அவர் கொடுத்து நம்மை உயர்த்துவார் (மத்தேயு 25:14-30).

திறமை மற்றும் வேலை போன்றவைகளின் முக்கியத்துவத்தைப் பற்றிச் சொல்வதென்றால், ஒரு பெண் எப்படி இருக்கவேண்டும் என்று வேதம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. உதாரணத்திற்கு, நீதிமொழிகள் 31வது அத்தியாயத்தை படித்துப்பாருங்கள்.  அவைகளிலிருந்து சில வசனங்களை இங்கு தருகிறேன்.

24. மெல்லிய புடவைகளை உண்டுபண்ணி விற்கிறாள்; கச்சைகளை வர்த்தகரிடத்தில் ஒப்புவிக்கிறாள். 25. அவள் உடை பலமும் அலங்காரமுமாயிருக்கிறது; வருங்காலத்தைப் பற்றியும் மகிழுகிறாள். 26. தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது. 27. அவள் சோம்பலின் அப்பத்தைப் புசியாமல், தன் வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறாள். 28. அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்; அவள் புருஷனும் அவளைப் பார்த்து: 29. அநேகம் பெண்கள் குணசாலிகளாயிருந்ததுண்டு; நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள் என்று அவளைப் புகழுகிறான். 30. சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண்; கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள். 31. அவள் கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; அவளுடைய செய்கைகள் வாசல்களில் அவளைப் புகழக்கடவது. (நீதிமொழிகள் 31:24-31)

2) வேத வசனத்தை கற்று, தேர்ச்சி பெறுங்கள்:

இரண்டாவதாக, வேத வசனத்தை படித்து, அதை தியானித்து விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்களின் கடினமான நேரங்களில் வேத வசனம் உதவும். முக்கியமாக, புதிய ஏற்பாட்டை அடிக்கடி படியுங்கள். பழைய ஏற்பாட்டில் சங்கீதம், மற்றும் நீதிமொழிகள் புத்தகங்களையும் அடிக்கடி படியுங்கள். சமுதாயத்தில் எப்படி ஞானமாக நடந்துக்கொள்ளவேண்டும், எப்படி பேசவேண்டும் போன்றவைகளை நீதிமொழிகள் புத்தகம் கற்றுத்தரும்.

சங்கீதம் 23ம் அத்தியாயத்தை நன்றாக கற்றுக்கொண்டு, உங்கள் ஜெபங்களில் அவைகளைச் சொல்லி ஜெபிக்கலாம். சங்கீதம் 91ம் அத்தியாயத்தை மனப்பாடம் செய்து, அவைகளை அடிக்கடி அறிக்கையிட்டு, விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். இயேசுவின் மலைப்பிரசங்கத்தை ஒருபோதும் மறக்கவேண்டாம்.

வேதவசனம் உங்கள் கால்களுக்கு வழிகாட்டும் தீபமாக இருக்கும். மேலும், உங்கள் வாலிப வயதின் ஆசைகளிலிருந்து தப்பித்து, உங்களை பரிசுத்தமானவர்களாக காத்துக்கொள்ள, வேத வசனத்தை அதிகமாக படித்து தியானம் செய்யுங்கள்.

3) குடும்பத்தில் நல்ல சாட்சியான வாழ்க்கை வாழ்ந்துக் காட்டுங்கள்:

ஒரு பக்கம், உங்கள் திறமையை வளர்த்துக்கொண்டு, இன்னொரு பக்கம் வேதவசனத்தை படித்து, அதன் படி நீங்கள் நடக்கும் போது, உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தைக் காண்பீர்கள். வேதம் சொல்வது போல, ஆவியின் கனிகள் கொண்டு வாழவேண்டும்.

22. ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், 23. சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. (கலாத்தியர் 5:22-23)

உங்கள் குடும்பத்தில், ஒரு நல்ல சாட்சியான வாழ்க்கையை வாழ்ந்து காட்டவேண்டும். உங்களின் வயதுள்ள இதர அங்கத்தினர்கள், உறவினர்களை விட, உங்கள் நடத்தை, பேச்சு மற்றும் வாழ்க்கை முறை ஒரு சிறப்பான வாழ்க்கையாக இருக்கவேண்டும். இதைத் தான் கிறிஸ்தவத்தில் சாட்சியான வாழ்க்கை என்றுச் சொல்வார்கள். நீங்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, உங்கள் குடும்பத்தில் நற்செயல்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக நீங்கள் விளங்கவேண்டும்.

உங்கள் இஸ்லாமிய குடும்ப நபர்களுக்கு நீங்கள் வெளிச்சம் கொடுக்கின்ற விளக்காக திகழவேண்டும்.

14. நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.

15. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.

16. இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. (மத்தேயு 5:14-16)

நற்செயல்களின் விஷயத்தில் உங்கள் குடும்பத்தினர், ஒரு வித்தியாசமானவர்களாக உங்களை காணவேண்டும். இருளுக்கும் வெளிச்சத்துக்கும் இருக்கும் வித்தியாசம் அவர்களுக்கு நன்றாக தெரியவேண்டும். இது ஒரே நாளில் நடக்கும் காரியமல்ல, இதற்கு பல மாதங்கள் ஆகலாம். புதிய சிருஷ்டியாக நீங்கள் இருப்பதினால், பழையவைகளை ஒழித்துவிடவேண்டும். 

நீங்கள் ஒரு வித்தியாசமானவர் என்பதை அவர்களுக்கு தெரிவிக்காமல், உங்கள் முடிவு பற்றி சொல்லி என்ன பயன்? அவர்களாகவே, உங்களிடம் வந்து, உன்னை ஒரு சிறந்த மகளாக/மகனாக நான் காண்கிறேன் என்று சாட்சி சொல்லும் படி நீங்கள் வாழவேண்டும். இங்கு நான் குறிப்பிடும் வாழ்க்கை போலியான நடிப்பு வாழ்க்கையல்ல, அது  உண்மையான வாழ்க்கையாகும். இயேசு சொல்வது போல, ஜீவத்தண்ணீர் உள்ள ஊற்று (நற்கனிகள்) போன்று அது உங்கள் உள்ளத்திலிருந்து வெளிப்படவேண்டும். 

4) தேவ வழி நடத்துதலை, தேவ சத்தத்தை கேட்க தயாராக வேண்டும்

ஒரு முஸ்லிம் குடும்பத்தில் தனி ஒரு பெண்ணாக இருக்கும் உங்களுக்கு உங்கள் வீட்டுக்குள் யார் உதவி செய்வார்? வெளியிலிருந்து வந்து யாரும் உதவி செய்யமுடியாது, ஆனால், இயேசுக் கிறிஸ்துவால் உங்களுக்கு உதவி செய்யமுடியும், இதனை யாருமே தடை செய்யமுடியாது. பிரச்சனை வரும் போது என்ன பேசவேண்டும்? எப்படி பதில் சொல்லவேண்டும்? போன்றவைகளை ஆவியானவர் சொல்லித்தருவார்.

இயேசுவின் சத்தத்தை நாம் கேட்கமுடியுமா?  நிச்சயம் கேட்கமுடியும். நாம் வேதம் வாசிக்கும் போதும், ஜெபிக்கும் போதும் நம் உள்ளத்தில் தேவன் பேசுவார், சில நேரங்களில் நம் சரீர பிரகாரமான செவிகளிலேயே தேவன் பேசுவதை நாம் கேட்கமுடியும். இன்னும் சில வேளைகளில் தரிசனங்கள் மூலமாகவும், கனவுகள் மூலமாகவும் வழி காட்டுவார். எனவே, அவருடைய சத்தத்தைக் கேட்க நீங்கள் தயாராக இருந்து, அவருக்கு கீழ்படியவேண்டும். 

கவனிக்கவும், கனவுகள் மூலமாக உங்களுக்கு வழிகாட்டுவார் என்றுச் சொல்லி, ஒவ்வொரு நாளும் காணும் கனவுகளை ஆய்வு செய்துக்கொண்டு இருக்கக்கூடாது. பெரும்பான்மையான கனவுகளுக்கு பொருள் இருக்காது, நாம் அன்றாடம் செய்யும் செயல்களின் பிரதிபலிப்பாகவோ, அல்லது உடல் சோர்வின் காரணமாகவோ கனவுகள் தினமும் வரலாம், இவைகளை கணக்கில் கொள்ளக்கூடாது. ஒரு சிக்கலான பிரச்சனையில் சிக்கியிருக்கும் போது, நமக்கு கனவுகள் தரிசனங்கள் கொடுத்து அவர் உதவி செய்வார், வழிகாட்டுவார். சரியான நேரத்தில் அவர் உதவி செய்வார் என்பதை உணர்ந்து, விசுவாசித்து, நிதானமாக நடந்துக்கொள்ளுங்கள்.

5) முடிவை தேவனிடம் ஒப்புக்கொடுங்கள்:

கடைசியாக, இயேசுவை பின்பற்றும் உங்களின் முடிவைப் பற்றி உங்கள் குடும்பத்துக்குச் சொல்லும் பொறுப்பை அவரே ஏற்றுக்கொள்வார். அதற்கென்று ஒரு காலத்தை அவர் நியமித்து இருப்பார், அந்த நாள், நாழிகை வரும் போது, தானாகவே, அவ்விஷயம் உங்கள் வீட்டாருக்கு தெரிவிக்கப்படும். அந்த நாளை நீங்கள் விரும்பினாலும் சரி, விருமபாவிட்டாலும் சரி, உங்கள் பெற்றோருக்கு அது தெரியவரும். அப்போது நீங்கள் இயேசுவை மறுதலிக்காமல், உண்மையை ஒப்புக்கொள்ளவேண்டும். அப்போது நடக்கும் காரியங்கள் அனைத்தையும் இயேசு தம் கரத்தில் எடுத்துக்கொண்டு, ஒரு ஆசீர்வாதமான முடிவை உங்களுக்குத் தருவார். அனேக முஸ்லிம்களின் சாட்சிகளை நான் கேட்டுள்ளேன், முக்கியமாக என் வாழ்க்கையிலும் நடந்த நிகழ்ச்சிகளும் இப்படித் தான் முடிவுக்கு வந்தது.

சிலர் ஆர்வ கோளாரினால், அறியாமையினால் தங்கள் முடிவை வீட்டிலுள்ளவர்களுக்கு சீக்கிரத்தில் சொல்லிவிட்டு, தங்கள் படிப்பையும், இதர ஆசீர்வாதங்களையும் இழந்துவிடுகிறார்கள். "உன் முடிவு பற்றி குடும்பத்துக்குச் சொல்" என்று அவர் சொல்லும் வரை நீங்கள், அமைதியாக இருந்து மேலே சொல்லப்பட்ட ஆலோசனைகளின் படி வாழ்ந்துக்கொண்டு இருங்கள். இவைகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொருந்தும்.  

6) திருச்சபையின், இதர கிறிஸ்தவர்களின் உதவியை பெறுங்கள்

இதுவரை சொன்ன விவரங்கள் அனைத்தையும் கவனித்தால், 'உங்கள் யுத்தத்தை நீங்கள் மட்டுமே தனியாக செய்யவேண்டும்' என்பது போல தெரிகிறதல்லவா? மேலோட்டமாக பார்த்தால், அப்படித் தான் தெரியும், ஆனால், ஆழமாக உங்கள் வாழ்க்கையில் நடக்கும் அல்லது நடக்கப்போகும் செயல்பாடுகளை கவனித்தால், ஆங்காங்கே தேவன் உங்களுக்கு உதவி செய்ய 'சில கிறிஸ்தவ நண்பர்களை, தோழிகளை, ஊழியர்களை' அனுப்புவார். இதனை இப்போது உங்களால் புரிந்துக் கொள்ளமுடியாது.  மேலே கூறப்பட்ட ஆலோசனைகளின் படி நீங்கள் வாழும் போது, உங்களை உயர்த்த, சரியான நேரத்தில் உதவி செய்ய, அவ்வப்போது தேவன் 'உதவும் கரங்களை' அனுப்புவார், இவைகள் அற்புதமாக நடக்கும், இதில் சந்தேகமில்லை.

எதிர்பாராத இடங்களிலிருந்து உங்களுக்கு உதவி வரும்.

எதிர்பாராத நபர்கள் (உங்கள் உறவினர்களாக கூட இருக்கலாம்) மூலமாக உதவி வரும்.

படிக்கும் அல்லது வேலை பார்க்கும் இடங்களில், உங்களுக்கு மறைமுகமாக உதவி செய்யவே அனேக தேவதூதர்கள் போன்ற கிறிஸ்தவர்களை தேவன் அனுப்புவார்.

எனவே, எல்லோரையும் சந்தேகக் கண்ணோட்டத்தில் பார்க்காமல், கர்த்தர் கொடுத்திருக்கும் ஞானத்தை பயன்படுத்தி, உதவிகளை பெற்றுக்கொண்டு முன்னேரிச் செல்லவேண்டும்.

எப்போது பார்த்தாலும் நீங்கள் தனியாக போராட இயேசு இடம் கொடுக்கமாட்டார். வானத்தையும் பூமியையும் படைத்த ஆண்டவரிடமிருந்து உங்களுக்கு ஒத்தாசை வரும். அது எந்த வடிவில் வரும் என்பதை, அவர் உங்களுக்கு வரும் நெருக்கடியைப் பொருத்து முடிவு செய்வார், ஆனால், உதவி நிச்சயம் வரும், கலங்கவேண்டாம்.

முடிவுரை:

இதுவரை பார்த்த விவரங்கள் அனைத்தும் ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் பொருந்தும். ஒரு முஸ்லிம் குடும்பத்தில் ஒரு ஆணுக்கு இருக்கும் உரிமைகள் பெண்களுக்கு கிடைப்பதில்லை என்பதால், ஆண்களை விட, பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஒரு சிறிய பிழை கூட, பெரிய காரியத்தை, ஆசீர்வாதத்தைக் கெடுத்துவிடும். அவசரப்பட்டு, எல்லோருக்கும் உங்கள் முடிவைச் சொல்லாமல், கர்த்தர் வழிகாட்டும்வரை காத்திருக்கவேண்டும். 'ஸபர் கா ஃபல் மீடா ஹோதா ஹை  - காத்திருந்து உண்ணும் கனி சுவையாக இருக்கும்' என்று ஹிந்தியில் சொல்வார்கள், அதாவது 'காத்திருந்து பெற்றுக்கொள்ளும் ஆசீர்வாதம், நிரந்தரமானதாக இருக்கும்' என்றுச் சொல்லலாம். ஆகவே, காத்திருந்து, ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள், அவசரப்படவேண்டாம்.

சுருக்கம்: நீங்கள் செய்யவேண்டியவை:

1) திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள், படிப்பை பூர்த்திச் செய்யுங்கள்.

2) வேத வசனத்தை கற்று, தேர்ச்சி பெறுங்கள்:

3) குடும்பத்தில் நல்ல சாட்சியான வாழ்க்கை வாழ்ந்துக் காட்டுங்கள்

4) தேவ வழி நடத்துதலை, தேவ சத்தத்தை கேட்க தயாராக இருங்கள்

5) முடிவை தேவனிடம் ஒப்புக்கொடுங்கள்:

6) திருச்சபையின், இதர கிறிஸ்தவர்களின் உதவியை பெறுங்கள்

இவைகள் பொதுவான ஆலோசனைகள். ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்கு தேவையான ஆலோசனைகளைப் பெற, இதர கேள்வி பதில்களைப் படிக்கவும்.

கேள்வி 2: நான் இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, குர்ஆனை படித்துக் கொண்டு இருந்தேன். இப்போது நான் பைபிளை படிப்பதினால், குர்ஆனை படிக்கக்கூடாதா? படித்தால் குற்றமாகுமா?பொருளடக்கம்கேள்வி 4: கிறிஸ்தவத்தில் ஹலால், ஹராம் என்பவைகள் உண்டா?Virus-free. www.avast.com

திங்கள், 27 நவம்பர், 2017

கேள்வி 2: நான் இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, குர்ஆனை படித்துக் கொண்டு இருந்தேன். இப்போது நான் பைபிளை படிப்பதினால், குர்ஆனை படிக்கக்கூடாதா? படித்தால் குற்றமாகுமா?

பதில்: பைபிளை படிக்கும் நீங்கள் குர்-ஆனை படிப்பதினால் எந்த பிரச்சனையும் இல்லை, அது குற்றமும் ஆகாது. ஆனால், குர்-ஆனை படிக்கவேண்டிய அவசியம் உண்டா இல்லையா? என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ளவேண்டும்.

குர்-ஆனை படிப்பது என்றால் என்ன?

நீங்கள் "குர்-ஆனை படித்துக்கொண்டு இருந்தீர்கள்" என்றுச் சொல்கிறீர்கள், இப்போது கேள்வி என்னவென்றால், நீங்கள் குர்-ஆனை எந்த மொழியில் படித்துக்கொண்டு இருந்தீர்கள்? என்பதாகும்.

நீங்கள் இதற்கு முன்பு, அரபியில் குர்-ஆனை படித்துக்கொண்டு இருந்திருந்தால், இப்போது அதனை அரபியில் படிப்பதினால் எந்த ஒரு நன்மையும் இல்லை. குர்-ஆனை புரிந்துக்கொள்ளாமல் அரபியில் படிப்பதினால் என்ன நன்மை உங்களுக்கு கிடைத்தது?  அதே போல, இப்போதும் அதனை அரபியில் படிப்பதினால் என்ன நன்மை? எனவே, இரட்சிக்கப்பட்ட ஒருவர், தனக்கு புரியாத மொழியில் குர்-ஆனை படிப்பதினால் ஒரு நன்மையும் அவருக்கு உண்டாகாது. குர்-ஆனை புரிந்துக்கொள்ளாமல் அரபியில் படிப்பனும், இந்து கோயில்களில் பூசாரி சமஸ்கிருத மொழியில் மந்திரங்கள் சொல்லும் போது, பக்தி ததும்ப புரியாமல் கேட்டுக்கொண்டு இருப்பனும் சமமே! இருவருக்கும் காதுவரைக்கும் எட்டிய சத்தங்கள் (வார்த்தைகள் அல்ல) மூளைக்கு எட்டுவதில்லை.

குர்-ஆனை தமிழில் படித்தல்:

இதுவரை அரபியில் மட்டுமே புரியாமல் குர்-ஆனை படித்த நீங்கள், இப்போது தமிழில் படிக்க விரும்பினால், அது வரவேற்கத்தக்கது. வேதம் என்ற நிலையில் குர்-ஆன் இல்லை. இருந்தாலும், அதில் என்ன சொல்லியிருக்கிறது என்ற அறிவைப் பெறுவதற்காக நீங்கள் குர்-ஆனை தமிழில் படிக்கலாம், இது குற்றமாகாது. குர்-ஆன் என்பது மட்டுமல்ல, மதசார்பற்ற புத்தகங்களையும், நாத்தீகர்கள் எழுதும் புத்தகங்களையும் அறிவு பெருக்கத்துக்காக படிக்கலாம், இதில் தவறில்லை. நான் கிறிஸ்தவ-இஸ்லாமிய கட்டுரைகளுக்காக, அடிக்கடி குர்-ஆனை படிக்கிறேன்.

குர்-ஆனை தமிழில் படிப்பதின் அவசியம்:

இஸ்லாமிய பின்னணியிலிருந்து வந்து நாம் கிறிஸ்தவத்தை பின்பற்றுவதினால், குர்-ஆனின் போதனைகள் பற்றி நாம் ஓரளவிற்கு தெரிந்து வைத்துக்கொண்டு இருக்கவேண்டும். பல நூறு முறை நாம் அரபியில் குர்-ஆனை படித்திருந்தாலும், இரட்சிக்கப்பட்டுவிட்ட பிறகு, ஒரு முறையாவது குர்-ஆனை தமிழில் படிக்கவேண்டும், புரிந்துக்கொள்ளவேண்டும் என்று நான் சொல்லுவேன்.

சில வேளைகளில் முஸ்லிம்கள் நம்மிடம் பேசுவார்கள், விவாதிப்பார்கள், நமக்கு குர்-ஆன் பற்றி ஒன்றுமே தெரியாது என்றுச் சொல்வார்கள். இவர்களுக்கு சரியான பதிலைக் கொடுத்து அவர்களுக்கு சுவிசேஷம் சொல்லவேண்டுமென்றால், நாம் குர்-ஆனை தமிழிலும் படித்து அதனை புரிந்துக்கொள்ளவேண்டும். 

புண்ணியம் கிடைக்கும், நன்மை கிடைக்கும் என்று நம்பி யாரும் குர்-ஆனை படிக்கத் தேவையில்லை. மக்களை இஸ்லாமின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதற்காக இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளை இஸ்லாம் முன்மொழிகின்றது. புரியாமல் படித்தாலும் நன்மைகள் வரும் என்றுச் சொல்வது அறிவுடமையன்று.

சுருக்கம்:

1) குர்-ஆனை அரபியில் படிப்பதினால் எந்த நன்மையும் இல்லை.

2) குர்-ஆனை தமிழில் படிப்பதினால், அதன் போதனைகளை தெரிந்துக்கொண்டு, இஸ்லாம் பற்றிய அறிவை பெருக்கிக் கொள்ளமுடியும்.

3) குர்-ஆனை அரபியிலோ தமிழிலோ படிப்பதினால், புண்ணியமோ, நன்மையோ இல்லை. புண்ணியம் கிடைக்கும் என்றுச் சொல்வது முடநம்பிக்கையாகும். பைபிளையும் எபிரேய மற்றும் கிரேக்க மொழியில் புரிந்துக்கொள்ளாமல் படித்தால் புண்ணியம் என்றுச் சொன்னால், இதையும்  நம்பாதீர்கள்.

4) முஸ்லிம் பின்னணியிலிருந்து வந்தவர்களுக்கு, குர்-ஆன் பற்றிய குறைந்தபட்ச அறிவு தேவைப்படுகின்றது, இது முஸ்லிம்களோடு உரையாடும் போது பயன்படும்.

5) அறிவைப் பொருத்தமட்டில், பார்க்காதே! தொடாதே! என்று கிறிஸ்தவம் சொல்வதில்லை. பார், தொடு ஆனால் புரிந்துக்கொள் என்று தான் சொல்கிறது. எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்.(1 தெச 5:21)

6) நீங்கள் ஒரு பாஸ்டராக  இருப்பீர்களானால், நிச்சயம் குர்-ஆனையும், அதன் விளக்கவுரைகளையும் படித்து கற்றுக் கொள்ளவேண்டும். இது நற்செய்தி அறிவிப்பதற்கு பயன்படும்.

7) பைபிளையும் குர்-ஆனையும் ஒப்பிட்டு பார்க்க விரும்புகிறவர்கள் குர்-ஆனை படிக்கலாம். பைபிளின் நிகழ்ச்சிகள் எப்படி குர்-ஆனில் மறுபதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை படித்து ஒப்பிட்டுப்பார்த்துக் கொள்ளலாம்.

முடிவுரை:

நான் கிறிஸ்தவத்தை ஏற்றுகொண்ட பிறகு, புதிய ஏற்பாட்டை நன்கு படித்து அறிந்துக்கொண்ட பிறகு நான் செய்த முதல் காரியம், என் வீட்டில் தமிழ் குர்-ஆனை கொண்டு வந்தேன். அது வரை என் வீட்டில், அரபி குர்-ஆன் மட்டுமே இருந்தது. சென்னைக்கு என் உறவினர் ஒருவர் சென்ற போது, தமிழ் குர்-ஆன் ஒன்றை வாங்கிக்கொண்டு வாருங்கள் என்று கேட்டுக்கொண்டேன், அவரும், முஹம்மது ஜான் குர்-ஆன் தமிழாக்கத்தை வாங்கிக்கொண்டு வந்து எனக்குக் கொடுத்தார். என் கட்டுரைகளில் நான் முஹம்மது ஜான் தமிழாக்கத்தை அதிகமாக பயன்படுத்த இதுவும் ஒரு காரணம். அதன்  பிறகு அதனை நான் தொடர்ந்து படித்துக் கொண்டு இருக்கிறேன், இன்றுவரை அந்த தமிழாக்கம் என்னிடம் உள்ளது.

எனவே, கிறிஸ்தவர்கள் குர்-ஆனை தமிழில் படிக்கலாம், இதில் தவறு இல்லை. 

கேள்வி 1: நான் இயேசுவை ஏற்றுக்கொண்டேன், அடுத்தது என்ன?பொருளடக்கம்கேள்வி 3:

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/new_creation_qa/new_creation_qa2.html

கேள்வி 1: நான் இயேசுவை ஏற்றுக்கொண்டேன், அடுத்தது என்ன?

அறிமுகத்தை படிக்க சொடுக்கவும்

பதில்: ஒரு முஸ்லிம் குடும்ப பின்னணியிலிருந்து நீங்கள் இயேசுவை பின்பற்ற எடுத்த முடிவுக்காக மிக்க மகிழ்ச்சி. இயேசுவின் இனிய நாமத்தில் உங்களை அன்புடன், தேவனுடைய குடும்பத்தில் வரவேற்கிறேன். உங்களின் மூலமாக பரலோகத்தில் மிகப்பெரிய சந்தோஷம் உண்டாகியிருக்கும்.

ஒரு முஸ்லிம், இயேசுவை பின்பற்ற முடிவு செய்வாரென்றால், அவர் கீழ்கண்ட காரியங்களைச் செய்ய ஆரம்பிக்கவேண்டும்.

1) புதிய ஏற்பாட்டை படிக்கவேண்டும்:

முதலாவதாக, நீங்கள் ஒரு புதிய ஏற்பாட்டை வாங்கி, அதனை படிக்க தொடங்குங்கள். புதிய ஏற்பாட்டை எங்கே வாங்குவது? இந்த புத்தகத்தை வீட்டுக்கு கொண்டுவரமுடியாதே! என்று நீங்கள் சொல்லலாம். இந்த இண்டெர்னெட் காலத்தில் பிரிண்ட் புத்தகமே நமக்குத் தேவை என்று நாம் சொல்லக்கூடாது. இணையத்தில் நமக்கு தமிழ் புதிய ஏற்பாடு உள்ளது, அதனை நாம் படித்துக்கொள்ளலாம்:

ஸ்மார்ட் மொபைள் போன் உங்களிடம் இருந்தால், பைபிள் ஆப்'ஐ(Bible App) இன்ஸ்டால் செய்துக்கொண்டும் படிக்கலாம். மேலும், உங்களுக்கு கிறிஸ்தவ நண்பர்கள் இருந்தால் அவர்களிடமும் ஒரு புதிய ஏற்பாட்டை கேட்டு வாங்கலாம், அல்லது ஒரு சர்சுக்குச் சென்று அங்கு கேட்டாலும் அவர்கள் கொடுப்பார்கள். மனமிருந்தால் மார்க்கமுண்டு.

புதிய ஏற்பாட்டை படிப்பதினால், இயேசுவின் வாழ்க்கையையும், அவரது போதனைகளையும் அறிந்துக்கொள்ளமுடியும். புதிதாக பிறக்கும் குழந்தைக்கு தாய்ப்பால் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் புதிய ஏற்பாட்டை படிப்பது. எனவே, ஒவ்வொரு நாளும் சில அத்தியாயங்களை தாய் மொழியில் அல்லது உங்களுக்கு புரியும் மொழியில் படித்து புரிந்துக் கொள்ளவேண்டும்.

2) ஜெபம் (துவா, பிரார்த்தனை) செய்யவேண்டும்:

'வேதவாசிப்பு' உணவு போன்றது, 'ஜெபம்' சுவாசம் போன்றது. ஒவ்வொரு நாளும் தேவனோடு சில நிமிடங்கள் நீங்கள் பேசவேண்டும். இஸ்லாமில் நமாஜ் இருப்பது போல, நிற்பது, குனிவது போன்ற செயல்களைச் செய்யவேண்டியதில்லை. இருக்கும் இடத்திலேயே உட்கார்ந்துக்கொண்டு, தனி அறையாக இருந்தால் நமக்கு கேட்கும் அளவிற்கு சத்தமாக ஜெபிக்கலாம், சில நேரங்களில் மனதுக்குள்ளும் ஜெபிக்கலாம். இன்னொரு முக்கியமான விவரம், நம் தாய் மொழியில் நாம் ஜெபிக்கவேண்டும், அல்லது நமக்கு புரியும் மொழியில் ஜெபிக்கவேண்டும். நாம் என்ன ஜெபிக்கிறோம் என்பது முதலாவது நமக்கு புரியவேண்டும். பைபிளின் வசனங்களை நமக்கு புரியாத எபிரேய அல்லது கிரேக்க மொழியில் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கக்கூடாது, இதனால் ஒரு கிராம் நன்மையும் கிடைக்காது.

நான்கு வயது மகன் அல்லது மகள் தன் தந்தையிடம் பேசுவது போல, மனம் திறந்து பேசலாம், தன் தாயின் மடியில் உட்கார்ந்துக்கொண்டு, அன்போடு பேசுவது போல, தேவனிடம் நீங்கள் ஜெபம் செய்யலாம். இந்த நேரத்தில் தான் ஜெபிக்கவேண்டும், இப்படித் தான் ஜெபிக்கவேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் இல்லை. மகனுக்கு தன் அப்பாவிடம் பேச, கட்டுப்பாடு வேண்டுமா என்ன? எனவே, தினமும் உங்களுக்கு கிடைக்கும் சில மணித்துளிகளை இதற்காக ஒதுக்கி ஜெபிக்கலாம்.

உதாரணத்திற்கு: 

முதலாவது, தேவன் அந்த நாளில் செய்த/செய்யப்போகும் நன்மைக்காக நன்றி செலுத்தவேண்டும். இரண்டாவதாக, உங்கள் குடும்பத்தினரின் ஆசீர்வாதத்திற்காக, ஆரோக்கியத்திற்காக அவரிடம் வேண்டிக் கொள்ளவேண்டும். மூன்றாவதாக, உங்கள் அன்றைய தேவைகளுக்காக வேண்டிக்கொள்ளவேண்டும். நான்காவதாக, மற்றவர்களுக்காக (நண்பர்கள், உறவினர்களுக்காக) ஜெபிக்கவேண்டும். ஐந்தாவதாக, நம் குறைகளைச் சொல்லி, நாம் ஏதாவது தவறு செய்திருந்தால், அதற்காக மன்னிப்புக் கேட்டு, இனி அப்படிப்பட்ட செயலை செய்யாமல் இருக்க பலத்தை கொடுக்கும்படி வேண்டிக்கொள்ளவேண்டும். கடைசியாக, தேவனுக்கு நன்றிச் சொல்லி, இயேசுவின் பெயரில் வேண்டிக்கொள்ளவேண்டும். இதே வரிசையில் தான் ஜெபிக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை, ஒரு தந்தையோடு பேசுவதுபோல, சுதந்திரமாக பயமில்லாமல் பேசலாம், இதைத் தான் ஜெபம் என்றுச் சொல்கிறோம்.

ஒருமுறை இயேசுவின் சீடர்கள் 'எப்படி ஜெபிக்கவேண்டும்?' என்று இயேசுவிடம் கேட்டபோது, அவர் கற்றுக்கொடுத்த சிறிய ஜெபம் கீழே கொடுக்கிறேன், இதே மாதிரி நாம் ஜெபிக்கலாம்.

நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். 

அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப் போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப் போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: 

பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. 

உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக. 

எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். 

எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். 

எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே. (மத்தேயு 6:6-13)

3) ஒரு திருச்சபையில் சேர்ந்து தேவனை ஆராதித்தல்

ஒரு புதிய விசுவாசிக்கு, வேதவாசிப்பும், ஜெபமும் முக்கியமாக இருப்பது போல, ஒரு சர்சுக்குச் சென்று, மற்ற விசுவாசிகளோடு சேர்ந்து தேவனை ஆராதிப்பதும் முக்கியமானது.

உங்களால், திருச்சபைக்குச் சென்று ஆராதிக்க முடியுமா இல்லையா? என்பது எனக்குத் தெரியவில்லை. முடிந்தால், சர்சுக்குச் சென்று ஆராதிப்பது நல்லது. உங்கள் வீட்டில் இதற்கு அனுமதி இல்லையென்றால், பிரச்சனை இல்லை. எதுவரைக்கும் இப்படி வாய்ப்பு கிடைக்கவில்லையோ அதுவரை சர்ச்சுக்குச் செல்லாமல் இருப்பது நல்லது. 

சர்சுக்கு போவது பற்றிய மேலதிக விவரங்களுக்கு, அடுத்தடுத்த கேள்விகளில் விவரமாக காணலாம்.

4) ஒரு கிறிஸ்தவ நண்பன்/தோழி

ஒரு கிறிஸ்தவ நண்பனை/தோழியை கொண்டு இருப்பது மிகவும் நல்லது. அந்த நண்பனோடு சேர்ந்து, ஜெபிக்கவோ, சபைக்குச் செல்லவோ முடியும். எனவே, ஒரு கிறிஸ்தவ நண்பனை/தோழியை தேடிக்கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட ஒரு நண்பு கிடைக்கும்படி நீங்கள் ஜெபம் செய்யுங்கள், இயேசு நிச்சயமாக ஒரு ஐக்கியத்தை உங்களுக்கு கொடுப்பார்.

இது தொடக்கம் தான். இன்னும் அனேக விவரங்களை நீங்கள் அறிந்துக்கொள்ளவேண்டும். அவைகளைப் பற்றி அறிய இதர கேள்விகளின் பதில்களை படியுங்கள்.

அறிமுகத்தை படிக்க சொடுக்கவும்பொருளடக்கம்கேள்வி 2: நான் இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, குர்ஆனை படித்துக் கொண்டு இருந்தேன். இப்போது நான் பைபிளை படிப்பதினால், குர்ஆனை படிக்கக்கூடாதா? படித்தால் குற்றமா?

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/new_creation_qa/new_creation_q1.html

புதிய சிருஷ்டிகள் கேட்கும் கேள்விகளும் பதில்களும் - அறிமுகம்

(இந்த தொடர் கட்டுரைகளின் நோக்கமென்ன?)

டிஜிட்டல் காலமும் அறிவு பெருக்கமும்:

இது டிஜிட்டல் காலம். எப்படி சமையல் செய்வது? என்ற கேள்வி தொடங்கி, சங்கீதம் கற்பது வரை, எந்த கேள்வியைக் கேட்டாலும் சரி, இணையத்தில் ஏதோ ஒரு பதில் கிடைக்கும். முக்கியமாக, மதம் சம்மந்தப்பட்ட கேள்வி பதில்களுக்கு பஞ்சமே இல்லை. ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவு தாங்கள் பின்பற்றும் மார்க்கத்தை இணையத்தில் படுவேகமாக பரப்பிக்கொண்டு வருகிறார்கள்.

ஸ்மார்ட் மொபைள் போன்கள் வந்ததிலிருந்து, உட்கார்ந்த இடத்திலேயே உலகத்தை கைக்குள் கொண்டுவரமுடிகிறது. இக்காலக்கட்டத்தில் ஒரு மார்க்கத்திலிருந்து இன்னொரு மார்க்கத்தை தழுவ விரும்பும் நபர்களும் அதிகரித்துள்ளார்கள். முக்கியமாக, இஸ்லாமிய கோட்பாடுகளை மூடி மறைத்து வைத்திருந்த காலம் போய், இன்று எல்லா இரகசியங்களும் வெட்ட வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. குர்ஆனை முஸ்லிமல்லாதவர்கள் தொடுவது தீட்டு என்றும், பாவம் என்றும் சொல்லிகொண்டு இருந்த காலம் போய், ஒவ்வொரு இந்துவிற்கும், கிறிஸ்தவனுக்கும் குர்ஆனை அவர்கள் வீட்டிற்கே சென்று  இலவசமாக டோர் டெலிவரி கொடுக்கும் காலம் வந்துவிட்டது. அதே போல, இஸ்லாமை விமர்சிக்க பயப்படும் காலம் போய், வாய்ப்பு கிடைத்தால் புகுந்து விளையாடிவிட, மக்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்கிறார்கள். அறிவு பெருகிவிட்டபடியினால் அக்கரையிலிருந்து இக்கரைக்கு சிலர் செல்கிறார்கள். அதாவது அனேக முஸ்லிம்கள் இஸ்லாமை விட்டு வெளியே வருகின்றனர். சிலர், நாத்தீகத்தையும், சிலர் கிறிஸ்தவத்தையும் தழுவுகிறார்கள். அதே போல, இக்கரையிலிருந்து அக்கரைக்குச் செல்பவர்களும் இருக்கிறார்கள், 'அக்கரை' என்றால் இஸ்லாம் என்று புரிந்திருக்கும் உங்களுக்கு.

சில ஆலோசனைகள்:

இக்கட்டுரையின் முக்கிய நோக்கம், இஸ்லாமிலிருந்து கிறிஸ்தவத்தை தழுவ விரும்புகிறவர்களுக்கு தேவையான ஆலோசனைகளைத் தருவதாகும். 

இஸ்லாமை விட்டு வெளியே வர விரும்புகிறவர்கள், தாங்களாகவே வெளியே வருவார்கள் அல்லவா? ஏன் அவர்களுக்கு ஆலோசனைகள் தேவைப்படுகிறது?

ஒருவன் கிறிஸ்தவத்தை விட்டு வெளியே சென்று நாத்தீகனாகவோ அல்லது முஸ்லிமாகவோ மாறுவது என்பது சுலபம். ஆனால், ஒரு முஸ்லிம் தன் மதத்தை விட்டு, வெளியே செல்வது ஆபத்தானது, சில நேரங்களில் அவன் உயிர் கூட பறிக்கப்படும் அபாயம் உள்ளது. முஸ்லிம்களில் சிலர், ஏதோ ஒரு காரணத்திற்காக தாடியை ஷேவ் செய்துவிட்டு, அதன் பிறகு, தங்கள் தாடி வளரும் வரை சில நாட்கள், தங்கள் பகுதியில் வாழும் "பக்தியுள்ள முஸ்லிம்களின்" கண்களில் படாமல் ஒளிந்து வாழும் சிலரை நான் பார்த்திருக்கிறேன். அற்பமான தாடியை ஷேவ் செய்தாலே, பயப்படும் முஸ்லிம்கள், தங்கள் அல்லாஹ்வையே  மாற்றினால் பயப்படாமல் இருக்கமுடியுமா?

இதுமட்டுமல்ல, 25 வயது நிரம்பிய ஒரு முஸ்லிம் ஆண் தான் கிறிஸ்தவனாக மாறுவது என்பது வேறு, 18 வயது நிரம்பிய மாணவன், இஸ்லாமை விட்டு வெளியே செல்வது என்பது வேறு. மேலும், ஒரு முஸ்லிம் பெண், இஸ்லாமைவிட்டு வெளியே செல்ல முடிவு செய்தால், அதன் விளைவு வேறு வகையாக இருக்கும். எனவே, ஒரு முஸ்லிம் ஆண் அல்லது பெண், இயேசுவை பின் பற்ற விரும்பினால், எப்படிப்பட்ட சிக்கல்களை எதிர்க்கொள்ள வேண்டிவரும் என்பதையும் மேலும் அவைகளிலிருந்து வெளிப்படும் விதம் என்னவென்பதையும்  விளக்கவேண்டியுள்ளது.

இந்த ஆலோசனை கொடுக்க யாருக்கு தகுதியுள்ளது?

இந்த ஆலோசனையைக் கொடுக்க உனக்கு என்ன தகுதி இருக்கிறது? என்ற கேள்வி வாசகர்களுக்கு எழலாம். இது நியாயமான கேள்வி தான். ஆனால், இப்படிப்பட்ட ஆலோசனைகளைக் கொடுக்க என்னை விட யாருக்கு அதிகமான தகுதிகள் இருக்க முடியும் என்பது தான் நான் கேட்கும் எதிர்க்கேள்வி? ஆம், 25 ஆண்டுகளுக்கு முன்பாக, இஸ்லாமை விட்டு வெளியே வந்தவன் நான். என் வாலிப வயதில், ஒரு கிறிஸ்தவ கைப்பிரதியைப் படித்து, இயேசுவை பின்பற்ற முடிவு எடுத்தேன். ஆறுமாதங்கள் யாருக்கும் தெரியாமல், புதிய ஏற்பாட்டை மட்டுமே படித்தேன். எந்த ஒரு கிறிஸ்தவ சபைக்கும் போகவில்லை, எந்த ஒரு போதகரையும் சந்திக்கவில்லை.

அதன் பிறகு, ஒரு சிறிய சர்ச்சுக்கு செல்ல ஆரம்பித்தேன். அப்போது தான் பிரச்சனை தொடங்கியது. பெற்றோர்கள் எதிர்த்தார்கள், பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. நான் ஒரு ஆண் பிள்ளை என்பதால், கொஞ்சம் தப்பித்தேன் என்றுச் சொல்லலாம். படிப்புக்காக வெளியூருக்குச் சென்றபடியினால்,  கடைசியாக கரை சேர்ந்தேன். அந்த காலத்தில் நான் கேட்ட கேள்விகளை, இந்த தொடர் கட்டுரைகளில் முன்வைத்து, எனக்கு எப்படி பதில் கிடைத்தது என்பதை விளக்கவுள்ளேன். மேலும், எனக்கு பிற்பாடு (என்னால் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு) இஸ்லாமை விட்டு வெளியே வந்துக்கொண்டு இருக்கும் என் உறவினர்கள் கேட்ட கேள்விகளும் இதில் அடக்கம்.

எனவே, இப்படிப்பட்ட ஆலோசனை சொல்வதற்கு எனக்கு தகுதி உண்டு என்பது என் கருத்து (அல்லது  நினைப்பு!).

இணையத்தில் நடக்கும் கிறிஸ்தவ ஊழியம்:

நம் தமிழ் கிறிஸ்தவர்கள் இணையத்தில் சிறப்பாக ஊழியம் செய்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு காலத்தில் விவாதம் புரிய வாருங்கள் என்று பாஸ்டர்களுக்கு சவால் விட்டுக்கொண்டு இருந்த தமிழ் முஸ்லிம் அறிஞர்கள், இன்று பாஸ்டர்களைக் கண்டால், பயந்து ஓடுகிறார்கள்.  ஒரு கிறிஸ்தவரிடம் முஸ்லிம்கள் ஒரு கேள்வியை கேட்டால், அதற்கு பதில் சொல்லிவிட்டு, திருப்பி பத்து கேள்விகளை இஸ்லாமிலிருந்து கேட்கிறார். "சாது மிரண்டால் காது கொள்ளாது" என்று கேள்விபட்டு இருப்போம், இதன் அர்தத்தை தமிழ் முஸ்லிம் இன்று நன்கு புரிந்துக் கொண்டுள்ளார்கள். சிங்கத்தின் வாயில் மாட்டிக்கொண்ட ஆடுகளை எப்படி விடுதலை செய்வது என்பதை நன்கு அறிந்துக்கொண்டான் கிறிஸ்தவன்.

தமிழ் கிறிஸ்தவர்கள் பல இஸ்லாமிய அறிஞர்களோடு விவாதம் புரிந்து, அவ்வீடியோக்களை இணையத்தில் பதித்துள்ளார்கள். மேலும், கிறிஸ்தவம் குறித்து கேள்வி கேட்கும் முஸ்லிம்களுக்கு,  சுயமாக வீடியோக்கள் மூலமாக பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். எழுத்துக்கள் மூலமாகவும் பதில்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. இணையத்தில் ஒரு "கருத்து பனிப்போர்" நடந்துக்கொண்டு இருக்கிறது என்றுச் சொல்லலாம். கிறிஸ்தவர்கள் இஸ்லாமை கற்றுக்கொண்டு கேள்வி கேட்பதினால், முஸ்லிம்களுக்கு இப்போது தான் இஸ்லாம் சரியாக புரிய ஆரம்பித்துள்ளது. குர்ஆன் தமிழாக்கங்களில் பல தகவல்கள் புதிதாக சேர்க்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. அதாவது கிறிஸ்தவர்கள் இஸ்லாமைக் குறித்து கேட்கும் கேள்விகள், "குர்ஆன் விளக்கவுரை" என்ற பெயரில் முஸ்லிம்கள் குர்ஆன் தமிழாக்கங்களில் விளக்கமளித்துக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ் முஸ்லிம்களுக்கு இது ஒரு சவால் நிறைந்த காலமாக உள்ளது. இதுவரை சந்திக்காத ஒரு கருத்துப் போரை முஸ்லிம்கள் சந்தித்துக்கொண்டு இருக்கிறார்கள். 

கர்த்தர் தமிழ்நாட்டில் ஒரு பெரிய அறுவடையை முஸ்லிம் சமுதாயத்திலிருந்தே கொடுப்பார் என்பது நிச்சயம். ஒரு முஸ்லிம் குடும்பம் கூட இல்லாத சபை தமிழ்நாட்டில் வருங்காலங்களில்  இருக்காது. தமிழ்நாட்டில், ஒரு கிறிஸ்தவ ஊழியரின் வெற்றி, 'அவர் சபையில் எத்தனை முஸ்லிம்கள் இரட்சிக்கப்பட்டு தேவனை சுதந்திரமாக ஆராதிக்கிறார்கள் என்ற எண்ணிக்கையின் மீது சார்ந்திருக்கும்' என்ற நிலை உண்டானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எனவே, இஸ்லாமைவிட்டு வெளியே வந்து கிறிஸ்துவை பின்பற்ற விரும்பும் அன்பர்களுக்கு அக்காலத்தில் உதவும் வகையில் சில ஆலோசனைகளை இன்று கொடுப்பது நல்லது என்று கண்டேன். 

உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய் (பிரசங்கி 11:1).

இக்கேள்வி பதில்களை படியுங்கள், மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். புதிய சிருஷ்டிகளுக்கு இவைகளை படிக்கக் கொடுங்கள், அவர்களின் சந்தேகம் தீர்த்துவிடுங்கள்.

பொருளடக்கம்

கேள்வி 1: நான் இயேசுவை ஏற்றுக்கொண்டேன், அடுத்தது என்ன?


Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/new_creation_qa/new_creation_intro.html


Virus-free. www.avast.com

வெள்ளி, 24 நவம்பர், 2017

200+ ஆண்டுகள் மனிதர்கள் தன் வஹியை கறைப்படுத்த அல்லாஹ் ஏன் அனுமதித்தான் (ஹதீஸ்களின் நிலை)?

முன்னுரை:

அல்லாஹ் தன் கட்டளைகளை முஹம்மதுவிற்கு அறிவித்தான், இதனை ஜிப்ரீல் என்ற தூதன் மூலம் தெரியப்படுத்தினான். இந்த நிகழ்வை வஹி என்றுச் சொல்வார்கள். இப்படி பெறப்பட்ட அல்லாஹ்வின் வார்த்தைகளை குர்-ஆனில் வசனங்களாக பதிவு செய்தார் முஹம்மது. இது தான் இக்கட்டுரையை புரிந்துக்கொள்ள தேவையான குறைந்தபட்ச விவரங்கள்.

இஸ்லாமின் கோட்பாடுகளை அறிந்துக்கொள்ள இரண்டு மூலங்கள் (புத்தகங்கள்) உள்ளன, முதலாவது குர்-ஆன், இரண்டாவது ஹதீஸ் தொகுப்புக்கள்.

ஹதீஸ்கள் என்பது முஹம்மதுவின் பேச்சு, செயல் மற்றும் அவர் இட்ட கட்டளைகளின் தொகுப்புக்கள் ஆகும். இதுவும் அல்லாஹ்வின் வஹி தான் என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள். முஹம்மது சுயமாக எதையும்  பேசவில்லை, செய்யவில்லை, அல்லாஹ் என்ன சென்னாரோ அதன் படி தான் அவர் செயல்பட்டார்.  ஹதீஸ்களும் இஸ்லாமின் அஸ்திபாரமாக உள்ளது.

இதனை விளக்க கீழ்கண்ட வரைபடத்தை பார்க்கவும். 

(இக்கட்டுரையை சுலபமாக புரிந்துக்கொள்வதற்கு, 8 வரைபடங்கள்/அட்டவணைகள்  கொடுக்கப்பட்டுள்ளது).

1. வஹியின் வகைகள்

படம் 1: அல்லாஹ்வின் வஹியின் வகைகள்

முஹம்மது உயிரோடு இருக்கும் போது, தனக்கு இறக்கப்பட்ட குர்-ஆன் வசனங்களை (வஹியை) அவ்வப்பொது, தோல்களிலும், எலும்புகளிலும், இலைகளிலும் எழுதும் படி செய்தார். இருந்தாலும், முஸ்லிம்கள் அதிகமாக மனப்பாடம் செய்துக்கொள்வதையே அதிகமாக நம்பினர். முஹம்மது உயிரோடு இருக்கும் போது இன்று நம்மிடம் உள்ள (114 அத்தியாயங்கள் அடங்கிய) முழு குர்-ஆனையும் அவர் கண்களால் காணவில்லை.

ஆனால், முஹம்மது பெற்றுக்கொண்ட இதர வஹியை தன் பேச்சிலும், செயலிலும் காட்டினார். இவ்வஹி புத்தகமாக முஹம்மதுவின் காலத்தில் எழுதப்படவில்லை. முஹம்மதுவிற்கு பிறகு 200+ ஆண்டுகளுக்கு பிறகு தான் பேச்சு வழக்கில் உலாவிய கதைகளை (அல்லாஹ்வின் வஹியை) சில முஸ்லிம் அறிஞர்கள் தொகுத்து புத்தகமாக்கினார்கள், அவைகளைத் தான் நாம் ஹதீஸ்கள் என்கிறோம். ஒரு கதை 200 ஆண்டுகளுக்கு மேலாக வாய்வழியாக பரவினால் என்னவாகும்? அக்கதையின் உண்மைக்கரு சிதையும், பல பொய்கள் சேர்க்கப்படும்.

இவ்விவரங்களை இன்னும் தெளிவாக அடுத்த படம் விளக்கும்.

படம் 2: அல்லாஹ்வின் வஹி கறைபடுத்தப்பட்டது எப்படி?

மேற்கண்ட படத்தை கூர்ந்து கவனித்தால், அல்லாஹ்வின் இரண்டாவது வஹியானது, 200+ ஆண்டுகள் மனிதர்களின் கைகளினால் கறைப்பட்டுவிட்டது. இதற்கு ஆதாரம் உள்ளதா? என்ற கேள்வி எழும் போது, நாம் புகாரி முஸ்லிம் போன்ற ஹதீஸ்களை கவனிக்கவேண்டும்.

2) சன்னி பிரிவு முஸ்லிம்களின் 6 ஹதீஸ் தொகுப்புக்கள்:

இஸ்லாமிய சமுதாயம் பெரிய அளவில் இரண்டாக பிரிந்துள்ளது, ஒன்று சன்னி (சுன்னி) முஸ்லிம்கள், அடுத்தது ஷியா முஸ்லிம்கள்.

சன்னி முஸ்லிம்கள் தான் பெரும்பான்மை என்பதால், அவர்கள் நம்பும் புத்தகங்களை மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகின்றது. ஷியா முஸ்லிம்களின் புத்தகங்களை நாம் அதிகமாக ஆய்வு செய்வதில்லை.

சன்னி முஸ்லிம் சமுதாயம் 6 வகையான ஹதீஸ்கள் அதிகார பூர்வமான ஹதீஸ்கள் என்று நம்புகிறார்கள். இவைகளில், முதலாவது புகாரி என்பவரால் தொகுக்கப்பட்ட ஹதீஸ்கள், இரண்டாவதாக, முஸ்லிம் என்பவரால் தொகுக்கப்பட்ட ஹதீஸ்கள். இப்படி, குர்-ஆனுக்கு அடுத்தபடியாக இவ்வதீஸ்கள் முஸ்லிம்களுக்கு வழிகாட்டிகளாக உள்ளன.

கீழ்கண்ட அட்டவணையில் இவ்வதீஸ்கள் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன (புகாரி, முஸ்லிம், நஸயி, அபூதாவுத், திர்மிதி, இப்னு மாஜா).

படம் 3: சன்னி பிரிவினரின் அதிகாரபூர்வமான 6 ஹதீஸ் தொகுப்புக்கள்

முஹம்மதுவிற்கு பிறகு, 200 – 250 ஆண்டுகள்வரை, வாய் வழியாக முஹம்மது பற்றிய கதைகள் உலாவந்தபடியினால், அல்லாஹ்வின் வஹியில் பல புதிய பொய்யான விவரங்கள் மக்களின் வாய்வழியாக பரப்பப்பட்டது. 

உதாரணம்:

புகாரி:

புகாரி (கி.பி. 810 - 870) என்ற இஸ்லாமியர் ஹிஜ்ரி 194ல் பிறக்கிறார். பல ஆண்டுகள் பாடுபட்டு, பல இடங்களுக்குச் சென்று ஹதீஸ்களை சேகரித்தார். 

 • அவர் சேகரித்த ஹதீஸ்களின் எண்ணிக்கை: 6,00,000 (ஆறு லட்சம்).
 • இவைகளில் ஆதாரபூர்வமான, உண்மையான ஹதீஸ்கள் எவைகள் என்று அவர் ஆய்வு செய்து கண்டுபிடித்த எண்ணிக்கை: 7,397
 • அப்படியானால், மூதமுள்ள 5,92,603 ஹதீஸ்கள் பொய்யானவை, இட்டுக்கட்டப்பட்டவை, கறைப்படுத்தப்பட்டவை என்று அவர் ஒதுக்கிவிட்டார்.
 • இதனை சதவிகிதத்தின் படி பார்த்தால், அவர் சேகரித்தவைகளில் 1.23% தான் உண்மையானவை, 98.77% பொய்யானவையாகும்.

இதே போல, சன்னி முஸ்லிம்கள் நம்பும் ஆறு ஹதீஸ் தொகுப்புக்கள் பற்றி மேற்கண்ட அட்டவணையில் நான் பதித்துள்ளேன். 

(குறிப்பு: திர்மிதி மற்றும் இப்னு மாஜா என்பவர்கள், எத்தனை ஹதீஸ்களை தொகுத்தார்கள் என்ற எண்ணிக்கை எனக்கு கிடைக்கவில்லை என்பதால், மேற்கண்ட அட்டவணையில் நான் 4,00,000 (நான்கு லட்சம்) என்று ஒரு சராசரி எண்ணிக்கை கொடுத்துள்ளேன். எனக்கு சரியான எண்ணிக்கை கிடைத்தால், அதனை இந்த அட்டவணையில்/இக்கட்டுரையில் மாற்றுவேன். வாசகர்களுக்கு இவ்விவரம் தெரிந்தால் எனக்கு தெரிவிக்கவும்).

இதனை மேலும் விளக்க, ஒரு பட்டை வரைப்படத்தை கீழே கொடுத்துள்ளேன்.

படம் 4: சன்னி பிரிவினரின் அதிகாரபூர்வமான 6 ஹதீஸ் தொகுப்புக்கள் (பட்டை வரைப்படம்)

(புகாரி, முஸ்லிம் எண்களை மற்றும் சதவிகிதத்தை மட்டுமே மேற்கண்ட படத்தில் குறிப்பிட்டுள்ளேன்)

இவைகளிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், 200-250 ஆண்டுகளில், அல்லாஹ்வின் வஹியில் 98% பொய்கள் கலந்துவிட்டன என்பதாகும், அதிகபட்சமாக 2% தான் உண்மையான வஹியாக உள்ளது.

3) ஹதீஸ் தொகுப்பாளர்களின் காலவரிசை ஹிஜ்ரி 200+ ஆண்டுகளா?

இக்கட்டுரையில் பதிக்கப்படும் அனைத்து விவரங்களும் இஸ்லாமியர்கள் கொடுத்தவை தான். முஸ்லிம்கள் தங்கள் புத்தகங்களில், தளங்களில் பதிக்கப்பட்ட விவரங்களை இங்கு பதித்துள்ளேன். மேலும் விக்கீபீடியா போன்ற தளத்திலிருந்தும் நான் விவரங்களை சேகரித்துள்ளேன், அவைகளின் தொடுப்புக்களை அடிக்குறிப்பில் கொடுத்துள்ளேன்.

முஹம்மதுவிற்கும், புகாரி முஸ்லீம் போன்ற ஹதீஸ்களை தொகுத்தவர்களுக்கும் இடையே எத்தனை ஆண்டுகள் இடைவெளி உள்ளது? குறைந்தபட்சமாக 200 ஆண்டுகள் இடைவெளி உள்ளது என்று இஸ்லாமிய சரித்திரம் சொல்கிறது.

உதாரணத்திற்கு, கீழ்கண்ட தளத்தை பார்வையிடவும். இந்த தளத்தில் அனைத்து முஸ்லிம் அறிஞர்களின் காலவரிசை கொடுக்கப்பட்டுள்ளது.

தளம்: muslimscholars.info

இந்த இடைவெளியை புரிந்துக்கொள்ள கீழ்கண்ட வரை படங்கள் உதவும்.

படம் 5: ஹதீஸ் தொகுப்பாளர்களின் கால வரிசை (கி.பி வருட கணக்கில்)

கி.பி. 570 - முஹம்மது பிறக்கிறார்.

கி.பி. 610 - தம்மை ஒரு நபியாக பிரகடனம் செய்கிறார்

கி.பி. 632 - முஹம்மது காலமாகிறார், வஹியும் நிறுத்தப்படுகின்றது.

கி.பி. 810 - புகாரி ஹதீஸ் தொகுப்பை சேகரித்த புகாரி பிறந்தார். அதாவது முஹம்மதுவிற்கு முதல் வஹி வந்த ஆண்டிலிருந்து கணக்கிட்டால் 200 ஆண்டுகள் (கி.பி. 610- 810). பிறந்த குழந்தை புகாரி ஹதீஸ்களை சேகரிக்கவில்லை. அவர் வாலிபனாகி, பல ஆண்டுகள் அக்கால நாடுகளைச் சுற்றித்திரிந்து தொகுத்தார். இந்த படத்தில் நான் ஹதீஸ் தொகுப்பாளர்களின் பிறந்த ஆண்டை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.

கி.பி. 817 - அபூ தாவுத் பிறக்கிறார்.

கி.பி. 821 - முஸ்லிம் பிறக்கிறார்.

கி.பி. 824 - திர்மிதி மற்றும் இப்னு மாஜா பிறக்கிறார்கள்.

கி.பி. 829 - நஸயி பிறக்கிறார்.

இவர்கள் பிறந்து, இஸ்லாமை கற்றுக்கொண்டு, வாலிபர்களாகி ஊர் ஊராக சுற்றி ஹதீஸ்களை சேகரித்து, தொகுத்த போது, முஹம்மதுக்கு பிறகு 200-250 ஆண்டுகள் ஆகிவிட்டது. இத்தனை ஆண்டுகள் அல்லாஹ்வின் வஹியில், 98% பொய்கள் கலந்துவிட்டன.

கி.பி. என்ற வருட கணக்கில் இருப்பதினால், சில  முஸ்லிம்கள் மேற்கண்ட படத்தை ஒரு மாதிரியாக பார்ப்பார்கள், எனவே அவர்களுக்காக, அதே படத்தை ஹிஜ்ரி கணக்கில் கீழே தருகிறேன்.

படம் 6: ஹதீஸ் தொகுப்பாளர்களின் கால வரிசை (ஹிஜ்ரி வருட கணக்கில்)

முஹம்மது மக்காவிலிருந்து மதினாவிற்கு இடம்பெயர்ந்த ஆண்டு ஹிஜ்ரி என்று அழைப்படுகிறது. ஹிஜ்ரி -12ல் முஹம்மது நபியாகிறார், ஹிஜ்ரி 11ல் மதினாவில் காலமாகிறார். அதன் பிறகு, ஹிஜ்ரி 194ல் புகாரி பிறக்கிறார். அவர் வாலிபனாகி, பல ஆண்டுகள் உழைத்து, அதன் பிறகு ஹதீஸ்களை தொகுத்தார். இப்போது கணக்கு சரியாக விளங்குகிறதா?

ஒவ்வொரு ஹதீஸ் தொகுப்பாளர்களின் பிறப்பு மற்றும் இறப்பு ஆண்டுகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

படம் 7: ஹதீஸ் தொகுப்பாளர்களின் பிறப்பு/இறப்பு ஆண்டு அட்டவணை

4) இப்னு இஷாக் (85 AH/704 CE -150 AH/767 CE) - சஹீஹ் ஹதீஸ்களின் முன்னோடி

இதுவரை கண்ட பட்டியல்கள் மற்றும் வரைபடங்களை பார்க்கும்போது, ஏன் 200+ ஆண்டுகள் அல்லாஹ்வின் வஹியை ஒருவரும் எழுத்துவடியில் கொண்டுவரவில்லை. புகாரிக்கு முன்பாக யாரும் இந்த வேலையைச் செய்யவில்லையா? என்ற கேள்வி எழும். உண்மையில், பலர் இந்த வேலையில் ஈடுபட்டு இருந்தார்கள்.

இப்னு இஷாக் - முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரம்

முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தை முதன் முதலாக தொகுத்து எழுதிய இப்னு இஷாக் என்பவர், ஹிஜ்ரி 85ல் பிறந்தவர். இவருடைய சரித்திரம் தான் சஹீஹ் ஹதீஸ்களை விட முந்தையது. ஆனால், முஸ்லிம்கள் இவரது சரித்திரத்தை ஆதார பூர்வமானதாக கருதமாட்டார்கள், ஏனென்றால், சில தர்மசங்கடமான விவரங்கள், இந்த சரித்திரத்தில் இருப்பதினால் தான் (உதாரணத்திற்கு, சாத்தானின் வசனங்களை முஹம்மது அல்லாஹ்வின் வஹியாக சொன்ன நிகழ்ச்சியைச் சொல்லலாம்).

படம் 8: இப்னு இஷாக்கின் மற்றும் ஹதீஸ்களின் காலவரிசை

ஹிஜ்ரி 100க்குள் இப்னு இஷாக்கின்  பிறப்பு, ஹிஜ்ரி  200க்குள்  புகாரியின் பிறப்பு. முஸ்லிம்கள் இப்னு இஷாக்கின் சரித்திரத்தை ஆதாரமாக எடுத்துக் கொண்டு இருந்திருந்தால், இன்னொரு 100 ஆண்டுகளில் நுழைந்த பொய்களை தவிர்த்து இருந்திருக்கலாம். 

(குறிப்பு:இப்னு இஷாக்கின் சரித்திரம், புத்தகமாக நம்மிடம் இப்போது இல்லை, ஆனால், அவரது மாணவர்களாகிய இப்னு இஷாம், மற்றும் தபரி போன்றவர்கள், அவரது புத்தகத்திலிருந்து பல மேற்கோள்களை சுட்டிக் காட்டியுள்ளார்கள். அவைகளை வைத்துத் தான், இப்னு இஷாக்கின் சரித்திர விவரங்கள் கிடைத்துள்ளன.)

5. அல்லாஹ்வின் வஹி பற்றிய கேள்விகள்:

இதுவரை ஹதீஸ்கள் பற்றிய காலவரிசையைக் கண்டோம். அல்லாஹ்வின் ஒரு வஹியை முஹம்மது (வஹியைப் பெற்றவர்) உயிரோடு இருக்கும் போது, எழுத்துவடிவில் ஓரளவிற்கு கொண்டு வந்தார். ஆனால், அல்லாஹ்வின் இன்னொடு வஹியை எழுத்து வடிவில் கொண்டு வர முஹம்மது தவறிவிட்டார். முஹம்மது தவறினார் என்றுச் சொல்வதை விட, அல்லாஹ்வே தவறினார் என்றுச் சொல்லலாம். முஹம்மதுவின் கடைசி முச்சு, வஹியின் கடைசி சுவாசக்காற்று ஒன்றாக நின்றுவிட்டது. அதன் பிறகு, 200+ ஆண்டுகள் கழித்து தான், எழுத்து வடிவில் கொண்டு வர மக்கள் (முஸ்லிம்கள்) உழைத்தார்கள். புகாரி, முஸ்லிம் ஹதீஸ்கள் தொடங்கி, சன்னி முஸ்லிம்கள் சஹீஹ் என்று கருதும் ஆறு ஹதீஸ்களும் குர்-ஆனுக்கு, அல்லாஹ்வின் வஹிக்கு 250 ஆண்டுகள் பிந்தையது ஆகும்.

கேள்வி 1: அல்லாஹ் ஏன் தன் வஹியை 250 ஆண்டுகள் மக்கள் கறைப்படுத்த அனுமதித்தார்? 

கேள்வி 2: புகாரி தொகுத்த ஹதீஸ்கள் 6,00,000 (ஆறு லட்சம்), இவைகளில் உண்மையானது என்று கண்டுபிடித்தது 7,397, அதாவது 1.23% சதவிகிதம். மீதியுள்ள 5,92,603 ஹதீஸ்கள் பொய்யானவை, அல்லாஹ்வின் வஹியோடு கலந்துவிட்டவை? இந்த நிலைக்கு யார் காரணம்? அல்லாஹ்!

கேள்வி 3: புகாரி உண்மை என்று அடையாளப்படுத்திய 7,397 ஹதீஸ்களாவது உண்மையானவை என்று இன்றுள்ள முஸ்லிம் அறிஞர்கள் ஒப்புக்கொள்கிறார்களா? என்று கேட்டால், இல்லை என்று பதில் வருகிறது. நம் தமிழ் நாட்டில், டிஎன்டிஜே (TNTJ) என்ற இஸ்லாமிய அமைப்பு, இவைகளில் 50+ ஹதீஸ்கள் பொய்யானவை என்றுச் சொல்கிறது. முஸ்லிம்களுக்கு ஏன் இந்த அக்னிப் பரிட்சை? இதற்கு யார் காரணம்? அல்லாஹ் தான்!

கேள்வி 4: முஹம்மது உயிரோடு இருக்கும் போதே, இஸ்லாமிய சட்டங்களை (இன்று ஹதீஸ்களில் காணும் விவரங்களை) ஒரு கோர்வையாக எழுத்துவடிவில் எழுதும் படி செய்யச்செய்து, முஹம்மது அதனை சரி பார்த்து இருந்திருந்தால்! முஸ்லிம்களின் நிலை எங்கேயோ இருந்திருக்கும்! ஆனால், அல்லாஹ் இதனை செய்யவில்லை, இப்படி செய்யவேண்டுமென்று முஹம்மதுவிற்கும் தோன்றவில்லை!

முடிவுரை:

மனிதர்களின் கரங்களால், சரியாகச் சொல்லவேண்டுமென்றால் "மனிதர்களின் வாய்களால்", இன்னும் சரியாகச்சொன்னால், மனித கற்பனை வளத்தினால் கறைப்பட்ட வஹியின் மீதா முஸ்லிம்களின் நம்பிக்கை, எதிர்காலம் எல்லாம் சார்ந்திருக்கிறது?  ஆம். இது தான் உண்மை! 

அல்லாஹ்வின் வஹியாகிய  குர்-ஆனிலிருந்து எடுக்கும் இஸ்லாமிய சட்டங்களைக் காட்டிலும், அல்லாஹ்வின் வஹி ஹதீஸ்களிலிருந்து எடுக்கும் சட்டங்களின் எண்ணிக்கை அதிகம். ஒரு நாளுக்கு எத்தனை முறை தொழவேண்டும் என்ற சட்டம் தொடங்கி, ஹஜ் எப்படி செய்யவேண்டும்? என்ற விவரம் வரை அல்லாஹ்வின் வஹியாகிய ஹதீஸ்கள் தான் முஸ்லிம்களின் அஸ்திபாரங்கள். மலஜலம் கழித்தால் என்ன செய்யவேண்டும்? என்ற கேள்விதொடங்கி, மரணம் நம்மை ஆட்கொண்டால் என்ன செய்யவேண்டும் போன்ற விவரங்கள் வரை ஹதீஸ்களை நம்பித்தான் முஸ்லிம்கள் வாழவேண்டியுள்ளது. இப்படிப்பட்ட ஹதீஸ்களில் 98% பொய்கள் கலந்தன என்றுச் சொல்வது அல்லாஹ்விற்கே அடுக்காது.

இந்த ஹதீஸ்கள் இஸ்லாமுக்கு 250 ஆண்டுகள் கழித்து, எழுத்துவடிவில் கொண்டுவரப்பட்டது, அதற்குள் அவைகளில் எவைகளையெல்லாம் சேர்க்கமுடியுமோ அவைகள் எல்லாம் சேர்த்தாகிவிட்டது. இன்றும் ஹதீஸ்களில் பொய்கள் கலந்துள்ளது என்றுச் சொல்லும் முஸ்லிம்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.

இக்குழப்பங்களுக்கெல்லாம் காரணம் அல்லாஹ் என்றுச் சொன்னால், உங்களில் யாராவது இதனை மறுக்கமுடியுமா? வாய்வழியாக ஒரு செய்தி 200 ஆண்டுகள் உலகில் உலா வந்தால், அச்செய்திக்கு பத்தினித்தன்மை இருக்குமா? ஆம், அது பரிசுத்தமாகவே இருக்கும் என்று சொல்பவர்கள், புகாரி ஒதுக்கிவிட்ட 98.77% ஹதீஸ்களுக்கு என்ன பெயரைச் சூட்டப்போகிறார்கள்?

அடிக்குறிப்புக்கள்:

[1] muslimscholars.info

[2] en.wikipedia.org/wiki/Sahih_al-Bukhari

[3] புகாரி (நூல்) - ta.wikipedia.org/s/5hwu

[4] ஹதீஸ் - ta.wikipedia.org/s/3uo

[5] List of hadith collections - en.wikipedia.org/wiki/List_of_hadith_collections

[6] en.wikipedia.org/wiki/Kutub_al-Sittah

[7] en.wikipedia.org/wiki/Sahih_al-Bukhari

[8] en.wikipedia.org/wiki/Sahih_Muslim


இதர தலைப்புக்கள்

குர்-ஆன் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/general-topics/hadith_corrupted.html


செவ்வாய், 21 நவம்பர், 2017

அல்லாஹ் ஏன் இஸ்மாயீலையும் மக்காவையும் 2500 ஆண்டுகள் மறந்துவிட்டான்?

இஸ்லாமியர்களின் புனித பூமி மக்கா நகரம். முதன் முதலாக ஆதாம் 'அல்லாஹ்வை' தொழுதுக்கொண்ட இடம் காபா என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். ஆபிரகாமையும், ஆகாரையும், கைக்குழந்தை இஸ்மாயீலையும், கிட்டத்தட்ட 1500 கிலோ மீட்டார்கள் தூரம் பிரயாணம் செய்யச் செய்து[1], மக்காவிற்கு அல்லாஹ் அழைத்து வந்தாராம். சில வருடங்கள் கழித்து, ஆபிரகாமும், இஸ்மாயீலும் காபாவை கட்டி எழுப்பினார்களாம். அதன் பிறகு இஸ்மாயீல் ஒரு நபியாக மக்காவில் இறைப்பணி செய்தாராம். இந்த இஸ்மாயீலின் சந்ததியில் தான் முஹம்மது வந்தார் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்[2].  இந்த மக்காவில் உள்ள காபாவை நோக்கித் தான் முஸ்லிம்கள் 1400 ஆண்டுகளாக ஐவேளையும் அல்லாஹ்வை தொழுதுக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மக்காவையும், காபாவையும், இஸ்மாயீலையும் அல்லாஹ் 2500 ஆண்டுகள் மறந்துவிட்டார் என்றுச் சொன்னால், நம்பமுடிகின்றதா உங்களால்? நம்பாமல் என்ன செய்யமுடியும்? குர்-ஆனே சொன்ன பிறகு அதனை முஸ்லிம்களால் மறுக்க முடியுமா?

இதனை புரிந்துக்கொள்ள கீழ்கண்ட படத்தை பார்க்கவும். படத்தின் கீழே விளக்கம் தரப்பட்டுள்ளது.

படம் 1: 2500 ஆண்டுகள் அல்லாஹ் மக்காவை மறந்தது ஏன்?

மேலேயுள்ள படத்தின் விளக்கம்:

முதல் மனிதன் ஆதாம் தொடங்கி நோவா வரையுள்ள காலவரிசையை சரியாக கணிக்கமுடியாது. ஆனால், ஆபிரகாம் காலத்தை ஓரள்விற்கு கணக்கிடலாம். இந்த  ஆபிரகாம் என்பவரிடமிருந்து தான், நம் கதை தொடங்குகிறது, இன்றுள்ள தலைவலிக்கு வித்து அவரிடமிருந்து தான் ஆரம்பிக்கிறது. ஆபிரகாமுக்கு இரண்டு மகன்கள், இஸ்மாயீல் மற்றும் ஈசாக்கு. ஈசாக்கு இறைவனின் வாக்கின்படி  ஆபிரகாமுக்கும் முதல் மனைவி சாராளுக்கும் பிறந்தவர் (முதல் மனைவி என்று சொல்லும் போதே  உங்களுக்கு புரிந்திருக்குமே! இரண்டாம் மனைவியும் இக்கதையில் உண்டு என்று!). இறைவனின் வாக்கு நிறைவேறும்வரை காத்திராமல், சாராள் அவசரப்பட்டு, தன் அடிமை பெண்ணை ஆபிரகாமின் கட்டிலுக்கு அனுப்பினாள், தன் மடியில் தன் கையாலேயே நெருப்பை அள்ளி போட்டுக்கொண்டாள். அடிமைப்பெண் ஆகாருக்கும், ஆபிரகாமுக்கும் பிறந்தவர் இஸ்மாயீல். இதன் பிறகு தான் இறைவனின் வாக்கின்படி, சாராளுக்கு ஒரு மகன் பிறந்தான், அவன் தான் ஈசாக்கு. இறைவன் முந்தியிருக்கவேண்டும், அல்லது சாராள் பிந்தியிருக்கவேண்டும்.

ஆபிரகாமின் காலம் தோராயமாக கி.மு. 2000 என்றுச் சொல்லலாம். அதாவது இன்றிலிருந்து கணக்கிட்டால், கிட்டத்தட்ட 4000 ஆண்டுகள் முந்தையது, ஆபிரகாமின் கதை. இஸ்லாமின் படி, ஆபிரகாம் அல்லாஹ்வின் ஆணைப்படி, ஆகாரையும் (சாராளின் அடிமைப்பெண்), மகன் இஸ்மாயீலையும், அழைத்துக்கொண்டு பல நூறு மைல்களுக்கு அப்பால் இருக்கும் மக்காவிற்குச் சென்றாராம். அங்கு அந்த குழந்தையையும், ஆகாரையும் விட்டுவிட்டு வந்துவிட்டாராம், அதாவது தன் முதல் மனைவி சாராள் மற்றும் மகன் ஈசாக்கு வாழும் இடத்திற்கே வந்துவிட்டாராம். பல ஆண்டுகள் கழித்து, மறுபடியும் இஸ்மாயீலை பார்க்க ஆபிரகாம் பல நூறு மைல்கள் கடந்துச் சென்றாராம். அப்போது தான் 'காபாவை' பழுது பார்த்து கட்டினார்களாம்.

 • ஒரு அப்பா (ஆபிரகாம்),
 • இரண்டு மனைவிகள் (சாராள் & ஆகார்),
 • இரண்டு மகன்கள் (இஸ்மாயீல் & ஈசாக்கு),
 • இரண்டு பட்டணங்கள் (ஜெருசலேம் & மக்கா),
 • இரண்டு எதிர் துருவங்கள் (கிறிஸ்தவம் & இஸ்லாம்).

அல்லாஹ் தன் இறைத்தூதர் இஸ்மாயீலை மக்காவில் ஊழியம் செய்ய நியமித்தாராம். ஈசாக்கு இஸ்ரேலில் பகுதியில் ஊழியத்தில் ஈடுபட்டாராம். இங்கு ஊழியம் என்றுச் சொன்னால், அல்லாஹ்வின் வழியில் மக்களை வழிநடத்தும் படி போதனை செய்வது. இதன் பிறகு என்ன நடந்தது? அல்லாஹ் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்கை மறந்துவிட்டான், மக்காவையும், காபாவையும் மறந்துவிட்டான், இஸ்மாயீலையும் மறந்துவிட்டான். எத்தனை ஆண்டுகள் இப்படி மறந்தான்? கிட்டத்தட்ட 2500 ஆண்டுகள் மறந்தான். 

ஆதாம் தன்னை முதன் முதலாக வணங்கிய இடம் காபா தான் என்று பெருமையாக பேசும் அல்லாஹ், அதனை 2500 ஆண்டுகள் கைகழுவிவிட்டான். ஆனால், ஈசாக்கை அல்லாஹ் கைவிடவில்லை, அவர் சந்ததியை கைவிடவில்லை. கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள், இயேசுக் கிறிஸ்துவரை, ஒருவருக்கு பின்னால் இன்னொருவர் என்று பல தீர்க்கதரிசிகளை (நபிகளை) அனுப்பிக்கொண்டு, அவர்களை வழிநடத்திக்கொண்டு வந்தான். அற்புதங்கள் அனைத்தும் இந்த ஈசாக்கு சந்ததியிலேயே அல்லாஹ் செய்து காட்டினான். குர்-ஆனில் நாம் பார்த்தால், ஆபிரகாமின் மகன் ஈசாக்கு பற்றியும், அவரது சந்ததிகளாகிய யாக்கோபு, யோசேப்பு மற்றும் அவர்களின் 12 வம்சங்கள் பற்றித் தான் அல்லாஹ் ஓயாமல் குர்-ஆனில் பேசியுள்ளான். யூதர்களை பாதுகாக்கவும், வழி நடத்தவும், அவர்கள் தவறு செய்தால், தண்டித்து மறுபடியும் சேர்த்துக்கொள்ளவுமே தன் முழு வாழ்நாட்களையும் (2000 ஆண்டுகள்) அல்லாஹ் செலவிட்டுள்ளான்.

குர்-ஆனின்படி, மிகப்பெரிய தீர்க்கதரிசிகள் அனைவரும் ஈசாக்கு சந்ததியில் வந்தவர்கள் தான், உதாரணத்திற்கு, மோசே, ஆரோன், தாவீது, சாலொமோன், இயேசுக் கிறிஸ்துவரை அனைவரும் ஈசாக்கு வம்சமே! இஸ்மாயீல் என்னவானார்? அவர் வழிநடத்திய மக்கள், மற்றும் மக்கா (காபா) நிலப்பரப்பில் வாழும் மக்களின் நிலை என்ன? அல்லாஹ்விற்கு அக்கரையில்லை, அது அவருக்கு தேவை என்று அவர் நினைக்கவில்லை. புதிய ஏற்பாட்டின் காலத்திலும், இயேசுவின் தாய் மரியாள், யோவான் ஸ்நானகன், இயேசு என்று இவர்கள் பற்றித்தான் பேச்சு அல்லாஹ்விற்கு. இஸ்மாயீலின் சந்ததிகளை சந்தையில் கூறுபோட்டு விற்றுவிட்டார் அல்லாஹ்.

மேலேயுள்ள படத்தில், குர்-ஆனில் வரும் தீர்க்கதரிசிகளின் பெயர்களை மட்டுமே நான் குறிப்பிட்டுள்ளேன். பைபிளின் படி, இன்னும் பல தீர்க்கதரிசிகள் இருக்கிறார்கள், அவர்களை இங்கு நான் சேர்க்கவில்லை என்பதை கவனிக்கவும். இஸ்மாயீலின் சந்ததிகளில் ஒரு நபியையும் 2500 ஆண்டுகளாக அல்லாஹ் அனுப்பவில்லை. ஆனால், ஈசாக்கு வம்சத்தில் இயேசுக் கிறிஸ்துவரை அனேக நபிகளை யூதர்களை வழிநடத்த அல்லாஹ் அனுப்பினான். அல்லாஹ்விற்கு ஏன் இந்த பாரபட்சம்? அல்லாஹ் அனுப்பிய கடைசி யூத நபி இயேசுக் கிறிஸ்து ஆவார். இஸ்மாயீலின் சந்ததியில் கி.பி. 610 வரை முதல் மற்றும் கடைசி நபி இஸ்மாயீல் தான். அல்லாஹ் என்ன நினைத்தானோ தெரியவில்லை, 2500 ஆண்டுகள் கழித்து, "அடடே நம்மை முதன் முதலில் ஆதாம் தொழுதுக்கொண்ட மக்காவையும், காபாவையும் நாம் மறந்துவிட்டோமே" என்று எண்ணி, கி.பி. 610ல் மக்காவில் வாழ்ந்துக்கொண்டு இருந்த, முஹம்மது என்பவரை தன் நபியாக தெரிவு செய்தான். குர்-ஆனின் படி, மக்கா மக்களுக்காக அனுப்பப்பட்ட முதல் நபி இஸ்மாயீல், கடைசி நபி  முஹம்மது. இதுமட்டுமல்ல, உலகத்துக்கே கடைசி நபியாக முஹம்மதுவை அல்லாஹ் அனுப்பினானாம். 

கேள்விகள்: சில கேள்விகள் நமக்கு இப்போது எழுகின்றன.

1) ஏன் அல்லாஹ் மக்காவையும், காபாவையும், இஸ்மாயீலையும் ~2500 ஆண்டுகள் மறந்துவிட்டான்? (ஆபிரகாம் - கி.மு. 2000 ஆண்டிலிருந்து, முஹம்மது கி.பி. 610 வரை)

2) மேலேயுள்ள படத்தில் பார்க்கவும், இஸ்மாயீலுக்கும், முஹம்மதுவிற்கும் இடையே ஒரு நபியும் இல்லை. ஆனால், ஈசாக்கின் பக்கம் பார்த்தால், அனேக நபிகள் உள்ளனர். ஏன் இந்த பாகுபாடு? (மேலேயுள்ள படத்தில் பல யூத நபிகளின் பெயர்களை நான் குறிப்பிடவில்லை.)

3) யூதர்களுக்கு வழி காட்டியது போல, இஸ்மாயீலின் சந்ததிக்கும் வழி காட்டவேண்டியது அல்லாஹ்வின் கடமையல்லவா? வெறும் இஸ்மாயீல் மட்டுமே முக்கியமில்லை, அவருடைய சந்ததியும் முக்கியமே! ஈசாக்கை மட்டும் அல்லாஹ் ஆசீர்வதிக்கவில்லை, அவருடைய பல ஆயிர சந்ததிகளையும் ஆசீர்வதித்தார். 

4) ஒருவேளை, சாராள் ஆபிரகாமின் முதல் மனைவி என்பதாலும், ஆகார் சாராளின் வேலைக்காரி மற்றும் அடிமை! என்பதால் அவளுடைய சந்ததிக்கு என்ன மதிப்பு இருக்கிறது என்ற எண்ணமா அல்லாஹ்விற்கு? 

5) 2500 ஆண்டுகள் அல்லாஹ்வால் மறக்கப்படுதல் என்பது, தெரியாமல் நடந்த பிசகு அல்ல.

6) உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் (சமுதாயங்களுக்கும்) நபிகளை அனுப்பாமல் இருக்கவில்லை என்றுச் சொல்லும் அல்லாஹ், ஏன் இஸ்மாயீலுக்கு பிறகு, அம்மக்களை அம்போ என்று அனாதைகளாக விட்டுவிட்டார்?

7) இஸ்மாயீல் முஹம்மதுவைப் போல ஒரு புத்தகத்தை கொண்டு வந்து, மக்களுக்கு கொடுத்து இருந்திருந்தாலும் ஒருவகையாக ஒப்புக்கொள்ளலாம். அல்லாஹ்வின் வார்த்தையாகிய வேதம் இருக்கிறது, அது அம்மக்களை 2500 ஆண்டுகள் வழிநடத்தும் என்றுச் சொல்லலாம். ஆனால், அக்காலத்தில் மொழிகளும் எழுத்துக்களும் சிறந்த நிலையில் இல்லை, முக்கியமாக அரபி எழுத்துக்களின் நிலை சிறப்பான ஒன்றாக இல்லை. குர்-ஆன் 34:44ன் படி, அல்லாஹ் அரபியர்களுக்கு முஹம்மதுவின் காலம் வரை ஒரு வேதத்தையும் இறக்கவில்லையாம் - பார்க்க குர்-ஆன் 34:44. எனினும் (இதற்கு முன்) நாம் இவர்களுக்கு இவர்கள் ஓதக்கூடிய வேதங்கள் எதையும் கொடுக்கவில்லை; உமக்கு முன்னர், நாம் இவர்களிடம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரையும் அனுப்பவில்லை.

8) ஆனால், ஈசாக்கின் சந்ததிகளுக்கு மட்டும், மோசே என்ற மிகப்பெரிய நபியை அனுப்பினார், தோரா என்றுச் சொல்லக்கூடிய ஐந்தாகமங்களை கொடுத்தார். தாவீது மூலமாக ஜபூரைக் கொடுத்தார். இந்த புத்தகம் இறைவனை துதித்துப் பாடுவதற்காக கொடுக்கப்பட்டது. யூதர்கள் தன்னை துதித்து பாட இறைவேதத்தை கொடுத்த அல்லாஹ், மக்காவின் மக்களை நல்வழிப்படுத்த ஒரு நான்கு பக்கங்கள் கொண்ட ஒரு வேதத்தையும் அல்லாஹ் இறக்கவில்லை. மக்காவின் மீது என்னே ஒரு அன்பு அல்லாஹ்விற்கு! மக்காவில் மக்களை வழிநடத்த ஒரு நபி இல்லை, ஒரு நாதியும் இல்லை, ஒரு வேதமுமில்லை, ஆனால், எருசலேமில் மட்டும் நபிக்கு மேல் நபிகள், வேதங்களுக்கு மேல் வேதங்களை கொடுத்துக்கோண்டே இருந்தான் அல்லாஹ். கடைசியாக, இயேசுவிற்கு இன்ஜில் என்ற புத்தகம் கூட கொடுத்தான். என்னதான் நினைத்துக்கொண்டு இருக்கிறான் அல்லாஹ்? 

9) இஸ்மாயீல் என்ன மாற்றான் தாய் பிள்ளையா? ஒருவேளை, ஆகார் ஒரு அடிமைப்பெண், வேலைக்காரி என்றுச் சொன்னாலும், இஸ்மாயீலின் தந்தை யார்? ஆபிரகாம் அல்லவா? இவர் அல்லாஹ்வின் நண்பன் அல்லவா? இப்படியா! தன் நண்பனின் பிள்ளைகளை, வம்சங்களை நடுத்தெருவில் அனாதைகளாக விட்டுவிடுவது?

10) மக்காவில் இறைச்செய்தி சொல்ல 2500 ஆண்டுகள், ஒரு ஈயையும் அனுப்பாத அல்லாஹ் இஸ்ரேலர்களுக்கு மட்டும் தேனீக்களைப்போல நபிகளின் பட்டாளங்களை அனுப்பினார். இஸ்ரேலில் எங்கு தடுக்கி விழுந்தாலும் ஒரு நபி/திர்க்கதரிசி இருப்பார். சில வேளைகளில், ஒரே இடத்திற்கு இரண்டு மூன்று நபிகளையும் அனுப்பியுள்ளார் (பை ஒன், கெட் ஒன் ஆஃப்ஃபர்). எருசலேமிலிருந்து மக்காவிற்கு போய் இறைச்செய்தியைச் சொல்லுங்கள் என்று ஒருவரை அனுப்பியிருக்கலாம் அல்லவா? அல்லாஹ் அனுப்பினால், மாட்டேன் என்றா நபிகள் சொல்வார்கள்? அப்படி சொன்னாலும், அல்லாஹ் விட்டுவிடுவானா என்ன! மீனை அனுப்பி அந்த நபியை வழிக்கு கொண்டுவரமாட்டான்?

11) அல்லாஹ்விற்கு நினிவே மக்கள் மீது இருந்த அன்பு அக்கரை கூட மக்கா மீது, காபா மீது, இஸ்மாயீலின் சந்ததிகள் மீது இல்லை.

12) ஹூத், ஸாலிஹ் மற்றும் ஷூஐப் போன்றவர்கள் ஆபிரகாமுக்கு முன்பாக வந்த நபிகள் என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள். இவர்கள் இஸ்மாயீலின் சந்ததிகள் அல்ல.

13) மனித இனத்திற்கு முஹம்மதுவரை 124000 நபிகளை அனுப்பியதாக இஸ்லாமிய பாரம்பரியங்கள் சொல்கின்றன. இவர்களில் மக்காவிற்கு மட்டும் இருவர் (இஸ்மாயீல் மற்றும் முஹம்மது) தானா? இது அநியாயம் இல்லையா? சரியான ஊட்டச்சத்து இல்லாமல், நோய்வாய்ப்பட்டு ஒல்லியாக இருக்கும் பையனைப்போல உலக வரைபடத்தில் காணப்படும் இஸ்ரேல் நாட்டிற்கு பலபேரை அனுப்பினான் அல்லாஹ்! ஆனால், பல பாட்டில்கள் ஹார்லிக்ஸும், காம்பிளானும் குடித்துவிட்டு, புஷ்டியாக காணப்படும் அரேபிய தீபகர்ப்பத்திற்கு மட்டும் நபிகளை அனுப்பாமல், அதனை காயவைத்தது மிகப்பெரிய மன்னிக்கமுடியாத தவறு இல்லையா! முஸ்லிம்களுக்கு அல்லாஹ் இழைத்த மிகப்பெரிய துரோகம் இது அல்லவா?

நபிகள் பற்றிய அல்லாஹ்வின் கோட்பாடுகள்: 

ஒவ்வொரு சமுதாயத்துக்கு அல்லாஹ் அனுப்பிய நபிகள் உண்டு:

35:24. நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு, நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்; அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை.

10:47. ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாமனுப்பிய இறை) தூதர் உண்டு; அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும் - அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.

இஸ்மாயீலின் சந்ததிகளுக்கு, அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள் என்றுச் சொல்லக்கூடிய நபர் ஒருவர் கூட 2500 ஆண்டுகளாக இல்லை.

16:36. மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், "அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்" என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; . . . 

முஹம்மதுவிற்கு முன்பு அனுப்பப்பட்ட சில நபிகள் பற்றி தான் அல்லாஹ் குர்-ஆனில் கூறுகின்றான். அவன் அனுப்பிய அனேகரின் பெயர்களை அல்லாஹ் குர்-ஆனில் கூறவில்லை. ஆனால், இஸ்மாயீலிலிருந்து முஹம்மதுவரை ஒருவரையும் அல்லாஹ் அனுப்பவில்லை.

40:78. திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம்; அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம்; இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர்; . . . .  

இஸ்மாயீல் ஒரு நபியில்லையா? மக்காவிற்கு ஒரு நபியையும் அனுப்பவில்லையா! அல்லாஹ்?

இதுவரை பார்த்த விவரங்கள் ஒருவகையென்றால், அடுத்து நாம் பார்க்கப்போகும் குர்-ஆன் வசனங்கள் வேறு வகையாகும். அதாவது, "இஸ்மாயீல் ஒரு நபி" என்று இதுவரை இக்கட்டுரையில் எழுதி வந்துக்கொண்டு இருக்கிறேன். ஆனால், கீழ்கண்ட குர்-ஆன் வசனங்கள் ஒரே அடியாக பெரிய குண்டை எடுத்து போடுகின்றன. அதாவது, மக்காவிற்கு, நான் ஒரு நபியைக்கூட அனுப்பவில்லை, எச்சரிக்கை செய்பவர் ஒருவரையும் அனுப்பவில்லை, அவ்வளவு ஏன், வேதத்தையும் அனுப்பவில்லையென்று அல்லாஹ் சொல்கிறான். அதனால் தான் கடைசியாக முஹம்மதுவை அனுப்பியிருக்கிறேன் என்று அல்லாஹ் சொல்கிறான்.

32:3. . . . எவர்களுக்கு உமக்கு முன் அச்சமூட்டி எச்சரிப்பவர் வந்ததில்லையோ, அந்த சமூகத்தாருக்கு, அவர்கள் நேர்வழியில் செல்லும் பொருட்டு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மை(வேதமாகும்).

34:44. எனினும் (இதற்கு முன்) நாம் இவர்களுக்கு இவர்கள் ஓதக்கூடிய வேதங்கள் எதையும் கொடுக்கவில்லை; உமக்கு முன்னர், நாம் இவர்களிடம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரையும் அனுப்பவில்லை.

28:46. . . . எனினும் எந்த மக்களுக்கு, உமக்கு முன்னால் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் அனுப்பப்படவில்லையோ, அவர்கள் நல்லுபதேசம் பெறும் பொருட்டு அவர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காக உமக்கு உம் இறைவனிடமிருந்து அருட்கொடையாக (இவைக் கூறப்படுகிறது).

36:6. எந்த சமூகத்தினரின் மூதாதையர்கள், எச்சரிக்கப்படாமையினால் இவர்கள் (நேர்வழி பற்றி) அலட்சியமாக இருக்கின்றார்களோ இ(த்தகைய)வர்களை நீர் எச்சரிப்பதற்காக.

இவைகளின் படி, மக்காவிற்கு எச்சரிக்கை செய்ய வந்த முதல் மற்றும் கடைசி நபி 'முஹம்மது' ஆவார். அப்படியானால், இஸ்மாயீல் நபி இல்லையா? அவர் மக்கா இருந்த பகுதியில் அல்லாஹ் பற்றி எச்சரிக்கை செய்யவில்லையா? இஸ்மாயீல் நபி இல்லை என்றுச் சொன்னால், மக்காவை, காபாவை அல்லாஹ் 2500 ஆண்டுகள் மறக்கவில்லை, இன்னும் பல ஆயிர ஆண்டுகள் (குறைந்த பட்சம் 4000 ஆண்டுகள் - ஆதாம் முதல் முஹம்மதுவரை) மறந்துள்ளார். தோண்டத்தோட்ண்டடு குர்-ஆனிலிருந்து பல புதையல்கள் வெளிப்படுகின்றது. 

இக்கட்டுரையில் முஹம்மது ஜான் குர்-ஆன் தமிழாக்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அடிக்குறிப்புக்கள்:

[1] எருசலேமிலிருந்து மக்கா வரை கூகுளில் தூரத்தை கணக்கிட்டால், 1483 கிலோ மீட்டர்கள் வருகின்றது. காரில் சாலையில் பிரயானம் செய்தால் இந்த கணக்கு. 4000 ஆண்டுகளுக்கு முன்பு, காடுமேடுகளைத் தாண்டி, பிரயாணம் செய்தால், இன்னும் தூரம் அதிகமாகும். 

[2] ஆபிரகாம் மக்காவிற்கு கி.மு. 2000 காலகட்டத்தில் சென்றார் என்பதற்கு எந்த ஒரு  சரித்திர ஆதாரமும் இல்லை.


இதர தலைப்புக் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்
Virus-free. www.avast.com