முதலில் "இயேசுவின் வரலாறு :5 மறுப்பு பாகம் - 1ஐ" இங்கு படியுங்கள்.
http://isakoran.blogspot.com/2007/07/5-1.html
மறுப்பு பாகம் - 2 தொடர்கிறது.......
நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:
இதுவரை நாம் கண்ட சம்பவங்களில் பெரிய அளவிளான கருத்து வேற்றுமைகள் எதுவும் இல்லை. மரியமுக்கு மனம் முடிப்பதற்காக நிச்சயிக்கப்பட்டிருந்தவரைப் பற்றி குர்ஆன் எங்கும் குறிப்பிடவில்லை. குழந்தை வழியாக மரியம் மிகப் பெரிய அளவில் சிறப்பிக்கப்படவிருப்பதால் மற்ற சாதாரண விஷயங்களை இறைவன் சொல்லாமல் இருந்திருக்கலாம்.
என் மறுப்பு:அப்படி என்றால், உம்முடைய கூற்றுப்படி, யோசேப்பு என்ற ஒரு "நபரோடு" ஏற்கனவே மரியாளுக்கு திருமண நிச்சயதார்தம் நடந்ததுள்ளது (பைபிள் சொல்வதும் இதுவே).
மரியாளுக்கு நிச்சயிக்கப்பட்ட யோசேப்பு பற்றி குர்-ஆன் ஒன்றும் குறிப்பிடவில்லை அல்லவா. இதனால் வரும் பிரச்சனை என்ன தெரியுமா? இது வரை குர்-ஆன் சொன்னதாக சொல்லிக்கொண்டு வரும் நிகழ்ச்சிகள் அனைத்தும் பொய் என்பதை இது காட்டுகிறது. எப்படி ? மேற்கொண்டு படியுங்கள்.
மரியாள் ஜகரியாவின் வீட்டில் இருந்து காணாமல் (தூர இடத்திற்கு) போனது, யோசேப்பிற்குத் தெரியுமா?இக்கேள்விக்கு இரண்டு பதில்கள் சொல்லலாம்.
1. யோசேப்பிற்குத் தெரியாது
2. யோசேப்பிற்குத் தெரியும் என்பதே.
1) யோசேப்பிற்கு தெரியாது என்று வைத்துக்கொள்வோம்:
1. யோசேப்பிற்கு தெரியாது என்றுச் சொன்னால், தன் மனைவி பற்றி இவர் ஜகரியாவிடம் கேட்டுயிருப்பார் அல்லவா? அதற்கு ஜகரியா என்ன பதில் சொல்லியிருப்பார்?2) யோசேப்பிற்கு தெரியும் என்று வைத்துக்கொள்வோம்:
2. எனக்கு தெரியாது என்று சாதாரணமாக ஜகரியா சொல்லியிருப்பாரா? அப்படி சொல்லியிருந்தால், இதை யோசேப்பு ஏற்றுக்கொண்டு இருப்பாரா?
3. எனக்கு மரியாள் சொல்லிவிட்டு போகவில்லை. எங்கே போனாள் என்று கூட தெரியாது, என்றுச் சொல்லியிருப்பாரா ஜகரியா?
4. ஜகரியாவை சும்மா விட்டுயிருப்பார்களா யோசேப்பும், மற்ற ஊர் மக்களும்?
5. ஜகரியா எந்த பதில் சொன்னாலும், மரியாள் அவர் வீட்டில் இல்லை என்பது உண்மை(குர்-ஆன் படி), அப்போது யோசேப்பும் மற்றவர்களும் மரியாளைத் தேடி சென்று இருக்கமாட்டார்களா? இவர்கள் தேடினாலும் மரியாள் கண்டுபிடிக்காமல் போவதற்கு, மரியாள் என்ன பல நூறு அல்லது ஆயிரம் மைல்களுக்கு அப்பால் சென்று இருப்பார்களா? இந்த கேள்விகளுக்கு குர்-ஆனிடம் பதில் இல்லை.
உண்மையாகவே தன் மனைவி ஆகப்போகிறவள், இறைவனுடைய ஆவியால் கர்ப்பம் தரித்தால் என்று யோசேப்பிற்கு தெரிந்து இருந்தால்,
1. இது வரை குர்-ஆன் சொல்லும் மரியாளின் தூரப்பயணம்,இவை எல்லாம் வீண் தானே ?
2. பல மாதங்கள் தனிமை வாழ்வு,
3. உதவி செய்ய யாரும் இல்லாததால் மரியாளின் பிரசவ வலி கதரல்,
4. பிரசவ வலி நேரத்திலும் மரத்தின் அடிபாகத்தை உலுக்கவேண்டிய கட்டாயம்,உணவிற்காக
5. மனிதர்களிடம் சொல்லவேண்டிய பொய்கள், "விரதம் இருக்கிறேன் பேச மாட்டேன்" என்று "பேசிய" மரியாள்
6. தன் ஜனங்களுக்கு முன்பாக தனிமையாக நிற்கவேண்டிய நிலை
இதற்கு பதிலாக பைபிள் சொல்வது போல, யோசேப்பிற்கு தூதர்கள் உண்மையைச் சொல்ல, தன் மனைவியை தன்னிடம் சேர்த்துக்கொண்டு, பைபிள் சொல்வது போல இயேசு பிறக்கும் வரை, மரியாளை கணவன் என்ற முறையில் தொடாமல், பாதுகாப்பு அளித்து, எந்த அவதூறு பெயரும் மரியாளுக்கு வராமல், அல்லா செய்து இருக்கலாம் அல்லவா?
//குழந்தை வழியாக மரியம் மிகப் பெரிய அளவில் சிறப்பிக்கப்படவிருப்பதால் மற்ற சாதாரண விஷயங்களை இறைவன் சொல்லாமல் இருந்திருக்கலாம்//
மரியாளுக்கு யோசேப்போடு நிச்சயமானது சாதாரண விஷயம் அல்ல, இது தான் மிக முக்கியமான விஷயம்.
இயேசு குழந்தை அற்புதத்திற்கு அடுத்து, யோசேப்பு மரியாளை திருமணம் செய்துக்கொண்டாரா இல்லையா?
இயேசு குழந்தை அற்புதம் கண்டு மரியாளை ஏற்றுக்கொண்ட யோசேப்பு, ஒரு தூதனோ, அல்லாவோ முன்பே சொல்லியிருந்தால், ஏற்றுக்கொண்டு இருக்கமாட்டாரா?
இத்தனை பாடுகள் மரியாளுக்கு தேவையே இல்லாமல் போகுமே? இதற்கெல்லாம் பதில் சொல்லமுடியுமா?
பார்த்தீர்களா எத்தனை பிரச்சனைகள், சிக்கல்கள், குர்-ஆன் சொல்லும் நிகழ்ச்சிகளில், சிந்திக்க வேண்டும் இஸ்லாமிய நண்பர்களே?
ஆனால், பைபிள் சொல்கிறது, யோசேப்பிற்கு தூதன் விஷயத்தைச் சொல்கிறான், யோசேப்பு தன் மனைவியை ஏற்றுக்கொள்கிறான். ஊரில் உள்ளவர்களுக்கோ மரியாள் கர்ப்பம் ஆனது ஒரு சாதாரண விஷயம் (யோசேப்பு மூலம் மரியள் கர்ப்பம் ஆனார் என்று நினைத்துக்கொண்டார்கள்). எந்த பிரச்சனையும் இல்லை.
எது நடைமுறைக்கு ஏற்றது, பைபிள் சொல்வதா? அல்லது குர்-ஆன் சொல்வதா? என்று சிந்தியுங்கள்.
நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:
இனி பைபிள் கண்டுக் கொள்ளாத, குர்ஆனில் மட்டுமுள்ள இயேசுவின் முதல் அற்புதத்தையும் அதனால் மரியாளுக்கு ஏற்பட்ட உலகச் சிறப்பையும் பார்ப்போம்.
பெற்றெடுத்த பிஞ்சுக் குழந்தையுடன் தன் சமூகத்திற்கு மரியம் திரும்பினார். திருமணமாகாத ஒரு கன்னிப் பெண் அதிலும் நல்லக் குடும்பத்தில் பிறந்தப் பெண் கைக்குழந்தையுடன் வருவதைக் கண்ட அந்த பகுதி மக்கள்,
.(பிள்ளையைப் பெற்று) அப்பிள்ளையைத் தமது சமுதாயத்திடம் கொண்டு வந்தார். ''மர்யமே! விபரீதமான ஒரு காரியத்தைச் செய்து விட்டாயே?'' என்று அவர்கள் கேட்டனர். (அல் குர்ஆன் 19:27)
''ஹாரூனின் சகோதரியே! உனது தந்தை கெட்டவராக இருந்ததில்லை. உனது தாயும் நடத்தை கெட்டவராக இருக்கவில்லை'' (என்றனர்)( அல்குர்ஆன் 19:28).
அவர் குழந்தையைச் சுட்டிக் காட்டினார்! ''தொட்டிலில் உள்ள குழந்தையிடம் எவ்வாறு பேசுவோம்?'' என்று அவர்கள் கேட்டார்கள் (அல் குர்ஆன் 19:29).
என் மறுப்பு:
குர்-ஆன் சொல்லுகின்ற, "இயேசு குழந்தையாக இருக்கும் போது செய்த அற்புதம்", எகிப்து தேசத்தில் தோன்றிய அரபி தள்ளுபடி ஆகமமான "The first Gospel of the Infancy of Christ" என்ற புத்தகத்திலிருந்து எடுத்தது.
-----------------------------------------------------------
The Book : Infancy Gospel of Jesus
-----------------------------------------------------------
இந்த தள்ளுபடி புத்தகம், இயேசுவின் சீடர்களால் எழுதப்பட்டதல்ல. இது 2ம் அல்லது 3ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. ஆனால், புதிய ஏற்பாட்டின் சுவிசேஷங்கள் எல்லாம், முதல் நூற்றாண்டிலேயே எழுதி முடிக்கப்பட்டது.
இந்த புத்தகத்தில் தான் இயேசு குழந்தையாக இருக்கும் போது பேசியதாக வசனம் வருகிறது. அதை முகமது குர்-ஆனிலும் சேர்த்துவிட்டார்.
Wikipedia Encyclopedia says about Gospel of the Infancy of Christ : The Infancy Gospel of Thomas is a non-canonical text that was part of a popular genre, aretalogy, of the 2nd and 3rd centuries — The text describes the life of the child Jesus, with fanciful, and sometimes malevolent, supernatural events, comparable to the trickster nature of the god- child in many a Greek myth. One of the episodes involves Jesus making clay birds, which he then proceeds to bring to life, an act also attributed to Jesus in the Qur'an, thus indicating the text may have had substantial influence on Arabic tradition by the 7th century.Source : http://en.wikipedia.org/wiki/Infancy_Gospel_of_Thomas
Britannica Encyclopedia Says about Gospel of the Infancy of Christ : ...of Mark, and Gospel of Philip) preserve some legends and myths found in the early Christian centres of Edessa, Alexandria, and Asia Minor. The First Gospel of the Infancy of Jesus (known also as the Arabic Infancy Gospel ), for example, recounts that, one day, Jesus and his playmates were playing on a rooftop and one fell down and...Source: http://www.britannica.com/eb/topic-208181/First-Gospel-of-the-Infancy-of-Jesus
இந்த புத்தகத்தின் முதல் 3 வசனங்களிலேயே இயேசு குழந்தையாக இருக்கும் போது தன் தாயாகிய மரியாளிடம் பேசியதாக எழுதப்பட்டுள்ளது.
1st Gospel of the Infancy of Christ - Verse 2 and 3
இயேசு குழந்தையாக இருக்கும் போது பேசியதாக எழுதப்பட்டுள்ளது
வசனம் 3: மரியாளே, காபிரியேல் தூதன் உனக்கு சொன்னது போல நான் தேவனுடைய குமாரனாகிய இயேசு, உலகத்தின் இரட்சிப்பிற்காக என் பிதா என்னை அனுப்பியுள்ளார்.
2. He relates that Jesus spoke even when he was in the cradle and said to his mother :
3. Mary, I am Jesus the Son of God, that word which you brought forth according to the declaration of the angel Gabriel to you, and my Father has sent me for the salvation of the world.
இந்த புத்தகத்தை முழுவதுமாக இங்கு படிக்கலாம்:
http://wesley.nnu.edu/biblical_studies/noncanon/gospels/infgos1.htm
http://www.pseudepigrapha.com/LostBooks/infancy1.htm
http://ministries.tliquest.net/theology/apocryphas/nt/infancy1.htm
இதில் மற்றுமொறு முரண்பாடு என்னவென்றால், மரியாளை ஆரோனின் சகோதரி என்று அழைப்பது. ஆரோன் என்பவர் மோசேயின் சகோதரர் ஆவார். அவர் மரியாளுக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். இந்த முரண்பாட்டைப் பற்றி நாம் இதற்கு முந்தைய மறுப்புகளில் கண்டோம்.
இந்த அற்புதம் நடைபெறவில்லை, இப்படி மரியாள் தனியாகச் சென்று 9 மாதங்கள் தனிமையில் இருந்தார்கள் என்பதும் வெறும் குர்-ஆன் சொல்லும் கதைகளே தவிர இவைகள் நடைமுறைக்கு ஏற்றதல்ல.
நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:
அந்தப் பகுதி மக்கள் வெளிபடுத்திய வார்த்தைகளிலிருந்து மரியாளின் குடும்பம், அவர் வளர்ந்தக் குடும்பம் எத்துனை கண்ணியமான குடும்பமாக இருந்துள்ளது என்பதை விளங்கலாம். அத்தகைய சிறப்பான குடும்பத்தில் பிறந்த - வளர்ந்த ஒரு கன்னிப் பெண் திருமணம் ஆகாத நிலையில் கையில் குழந்தையுடன் வந்து நிற்கிறார். இப்போது அந்த மக்களின் தூற்றலுக்கும் நக்கல் பேச்சுக்கும், குத்தலுக்கும் யாரால் பதில் சொல்ல முடியும? அந்த சந்தர்பத்தில் 'தான் குற்றமற்றவள்' என்று மரியாள் எத்துனை வலுவாக வாதாடினாலும் அதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல என்றைக்கும் எவரும் அந்த வார்த்தையை பொருட்படுத்தவே மாட்டார்கள். ஏனெனில் உலக நடப்பும் சூழ்நிலையும் அப்படி.
மரியம் தன் நிலையை எவ்வளவு விளக்கினாலும் அதை பிற மனிதர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால் தான் இறைவன் மரியாளை 'நீ பேச வேண்டாம்' என்று சொல்லி விட்டான். அந்த சந்தர்பங்களில் மரியாள் பேசுவது அர்த்தமற்றதாகவே கருதப்படும். 'தவறையும் செய்து விட்டு, குழந்தையையும் பெற்றுக் கொண்டு, எப்படி வீண் விதண்டாவாதம் செய்கிறாள்' என்றுதான் சமுதாயம் தூற்றும். அதனால் அந்த சந்தர்பத்தில் மரியம் வாய் மூடி மெளனமாக இருப்பதே அறிவார்ந்த செயலாகும். இறைவன் மிகத் தெளிவாக இதை மரியாளுக்கு உணர்த்தி விட்டான்.
என் மறுப்பு:
அல்லா என்ன சொல்கிறார் என்றுப் பாருங்கள்.
//நீர், உண்டு பருகி மன நிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் ''நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன்'' என்று கூறுவாயாக! (அல் குர்ஆன் 19: 22-26)//
தான் மௌன விரதம் இருப்பதாக பேசச் சொல்கிறார். மௌன விரதம் இருந்துக்கொண்டு எப்படி பேசுவது - இது தான் குர்-ஆன்.
நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:
தான் குற்றமற்றவள் என்பது நிரூபிக்கப்பட வேண்டும். அது தான் பெற்ற குழந்தை அதை உலகிற்கு உணர்த்தும் என்பதை இறைவனின் அறிவிப்பால் உணர்ந்திருந்த மரியாள் அந்த மக்களின் கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக குழந்தையின் பக்கம் செய்கை செய்கிறார். மரியமுக்கு எதிராக குற்றச்சாட்டு வைத்த அந்த மக்களுக்கு ஆச்சரியம். நாங்கள் உன்னிடம் கேள்விக் கேட்டால் நீ குழந்தையை காட்டுகிறாயே.. தொட்டில் குழந்தையிடம் நாம் எவ்வாறு பேசுவோம்? என்று கேட்கிறார்கள். அப்போதுதான் அந்த அற்புதம் நடக்கின்றது.
மரியம் சுமந்து வந்த அந்தக் குழந்தைப் பேசுகின்றது.
நான் கர்த்தரின் அடிமையாக இருக்கிறேன்.
அவர் எனக்கு வேதத்தைக் கொடுத்து என்னை தூதராகவும் ஆக்கி இருக்கிறார்.
நான் எங்கிருந்தாலும் என்னைப் பாக்கியம் பொருந்தியவனாக ஆக்கி இருக்கிறார்.
நான் உயிருடன் இருந்து தாயாருக்கு பணிவிடை செய்யும் காலமெல்லாம் தொழுதுவருமாறும், ஜக்காத் (என்ற பொருளாதார பங்கீடல்) கொடுத்து வருமாறும் ஏவப்பட்டுள்ளேன்.
நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும், மீண்டும் உயிர் பெற்று எழும் நாளிலும் என்மீது சாந்தி நிலவும் என்று அந்தக் குழந்தைக் கூறிற்று. (அல் குர்ஆன் 19:30,31,32,33)
என் மறுப்பு:
இதற்கு முன்பே நாம் பார்த்தோம், இயேசு குழந்தையாக இருக்கும் போது பேசியது, இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது என்று. இயேசு "ஜகாத்" பற்றிப் பேசியது, உண்மையா என்பதை இப்போது பார்க்கலாம்.
1. ஜகாத் என்ற பொருளாதார பங்கிடு:
ஜகாத் என்பது ஒவ்வொரு முஸ்லீம் சகோதரர்களும் கொடுக்கும் பணம், ஜகாத் என்பது இயேசுவின் காலத்தில் இல்லை. இது முகமது உருவாக்கியது. இயேசுவிற்கு பின்பு 500 வருடங்களுக்கு பிறகு முகமது உருவாக்கிய "ஜகாத்" பற்றி இயேசு பேசுவது ஒரு குர்-ஆனின் வெளிப்படையான சரித்திர பிழையாகும்.
"ஜகாத்" பற்றி தமிழ்முஸ்லீம் தளம் என்ன சொல்கிறது என்றுப்பாருங்கள்.
http://tamilmuslim.blogspot.com/2005/05/blog-post_28.html
ஒரு முஸ்லிம், ஓராண்டில் தன் கையிருப்பில் உள்ள பணம், நகை உள்ளிட்டவற்றில் 2.5% ஜகாத்தாக கொடுக்க வேண்டும். யாருக்கு கொடுக்க வேண்டும்? குர் ஆனிடமே கேட்போம்.(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்பவர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன்பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிபவர்களுக்கும்), வழிப்போக்கருக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (9:60) //
2. யூதர்கள் கொடுப்பது "ஜகாத்" அல்ல, அது "தசம பாகம்":
சில இஸ்லாமியர்கள் சொல்லலாம், யூதர்களும் ஜகாத் கொடுத்தார்கள் என்று. யூதர்கள் கொடுத்தது "ஜகாத்" அல்ல, அது "தசம பாகம்". யூதர்கள் கொடுத்த "தசம பாகமும்", இஸ்லாம் சொல்லும் "ஜகாத்தும்" ஒன்றல்ல, இவைகள் வெவ்வேறானவை. இதில் கூட குர்-ஆன் அல்லது முகமது ஒரு முரண்பாட்டை செய்துள்ளார்.
"ஜகாத்திற்கும்" "தசமபாகத்திற்கும்" உள்ள வித்தியாசங்கள்:
1. ஜகாத் என்பது வருடத்திற்கு ஒரு முறை கொடுப்பது. தசம பாகம் என்பது நம் வருமானத்தில் அது ஒரு நாள் சம்பளமாகவோ, வார சம்பளமாகவோ அல்லது மாதசம்பளமாகவோ இருக்கலாம். அதிலிருந்து கொடுப்பது.
2. ஜகாத் 2.5%, தசமபாகம் 10%.
3. ஜகாத் ஏழை எளிய மக்களுக்கு, இன்னும் இதர தர்மங்களுக்கு, தசம பாகம் சபைக்கு அல்லது சர்ச்சிற்குத் அதன் தேவைகளை சந்திப்பதற்காகத் தருவது. கிறிஸ்தவத்தில் தானதருமங்கள் வேறு தசமபாகம் வேறு.
இயேசுவின் காலத்தோடு சம்மந்தப்படுத்தி "ஜகாத்" நான் கொடுப்பேன் என்று இயேசு சொன்னார் என்பது ஒரு வெளிப்படையான குர்-ஆன் முரண்பாடாகும்.
பச்சிலங்குழந்தையான இயேசு தனது முதல் பேச்சிலேயே ஏராளமான விபரங்களை கூறியுள்ளார். அதை அறியுமுன் பவுலால் தொகுக்கப்பட்டு இயேசுவின் புத்தகம் என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பைபிளில் இவ்வளவு பெரிய அற்புதம் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் . உலகில் எங்குமே இதுவரையும் நடக்காத ஒரு அற்புதத்தை இயேசுவின் குழந்தைப் பருவம் அதிலும் பிறந்த சில நாட்களில் நடத்துகின்றது. இதை பைபிள் கண்டுக் கொள்ளவில்லை. திருமணமாகத கன்னிப் பெண் குழந்தைப் பெற்றெடுக்கிறாள் என்றால் நிச்சயம் சமூகம் தூற்றவே செய்யும். மரியாளுக்கு ஏற்பட்ட இந்த நிலையை அவர் எப்படி எதிர் கொண்டு தன்னை தூய்மையான பெண் என்பதை மக்கள் முன்னிலையில் நிரூபித்தார் என்ற விபரம் எதுவும் பைபிளில் கிடைக்கவில்லை.
என் மறுப்பு:
1. குர்-ஆன் சொல்லும் குழந்தை அற்புதம், முதன் முதலாக எழுதியது, குர்-ஆனில் இல்லை.
2. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு நூலிலிருந்து ஒரு அற்புதத்தை சொல்லிவிட்டு, நான் தான் முதலில் சொன்னேன் என்று மார்தட்டுவது, இஸ்லாமியர்களுக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாமே ஒழிய, மற்றவர்களுக்கு அல்ல.
3. "The Gospel of Infancy of Christ" என்ற நூலில் ஏற்கனவே "இயேசு குழந்தையாக இருக்கும் போது பேசியதாக உள்ளது" அதை இஸ்லாமிற்கு ஏற்றவாரு மாற்றி சொல்லிவிட்டார் முகமது அல்லது அல்லா.
// பவுலால் தொகுக்கப்பட்டு இயேசுவின் புத்தகம் என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பைபிளில் இவ்வளவு பெரிய அற்புதம் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.//
புதிய ஏற்பாட்டை தொகுத்தவர் "பவுல்" என்று சொல்வதிலிருந்து, அறியாமை வெளிப்படுகிறது. புதிய ஏற்பாட்டில் இத்தனை புத்தகங்கள் உள்ளது என்று பவுலுக்கே தெரியாது, எப்படி குர்-ஆனில் 114 அதிகாரங்கள் இருப்பது முகமதுவிற்கு தெரியாதோ அது போல. இயேசுவிற்கு அடுத்து, முதல் நூற்றாண்டிற்கு பின்பு பலபேர் பல புத்தகங்களை எழுதினார்கள். அதையெல்லாம் பைபிள் என்றும், அவைகளில் சொல்லப்பட்டது உண்மை என்றும் ஏற்றுக்கொண்டால் எப்படி?
//மரியாளுக்கு ஏற்பட்ட இந்த நிலையை அவர் எப்படி எதிர் கொண்டு தன்னை தூய்மையான பெண் என்பதை மக்கள் முன்னிலையில்நிரூபித்தார் என்ற விபரம் எதுவும் பைபிளில் கிடைக்கவில்லை.//
4. குர்-ஆனில் சொல்லப்பட்ட நிகழ்ச்சிய்கள் (மரியாள் சம்மந்தப்பட்ட) எல்லாம் நடைமுறைக்கு முரணானது என்றுப் பார்த்தோம். அப்படி இருக்கும் போது யூத சமூகத்திற்கு மரியாளின் தூய்மையை தெரிவிக்கவேண்டிய அவசியமே பைபிள் படி இல்லையே. பின் ஏன் இல்லாத கதைகளை பைபிள் சொல்லப்போகிறது?
நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:
மரியாள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் தரிக்கிறார் என்ற செய்தி சாதாரண ஒன்றல்ல. பைபிளின் வரலாறுபடி மரியாளுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்த யோசேப் என்ற கணவர் திருமணத்திற்கு முன் தனக்கு பேசிவைத்திருந்த பெண் கர்ப்பம் தரிக்கிறாள் என்பதை ஒத்துக்கொள்ள முடியாமல் அவளை தள்ளி விட (திருமணம் செய்யாமல் புறக்கணித்து விட வேண்டும்) என்று மனதிற்குள் எண்ணிய விபரத்தை பைபிள் கூறுகின்றது.
18 மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியால் கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.
19. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். (மத்தேயு)
இந்நிலையில் தான் தேவத்தூதர்கள் யோசேபை சந்தித்து மரியாளின் நிலவரத்தைக் கூறுகிறார்கள். யோசேபு பிறகு சமாதானமடைகின்றார். யோசேபின் நிலையே இதுவென்றால் ஊர் மக்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஊர் மக்களைப் பற்றி பைபிள் கண்டுக்கொள்ளவே இல்லை.
என் மறுப்பு:
ஊர் மக்களுக்கு தெரியவே வாய்ப்பு இல்லையே. யோசேப்பிற்கு தெரிந்தவுடனே, அவர் திருமணம் செய்துக்கொள்கிறார். இப்படி இருக்கும் போது, மரியாள் கர்ப்பமானது, யோசேப்பின் மூலம் என்று மக்கள் நினைத்துயிருப்பார்கள். எனவே, பிரச்சனை ஒன்றும் இல்லை.
யோசேப்பு பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
1. அவர் பைபிள் சொல்வது போல, நிச்சயமான பிறகு, தூதன் மூலம் அறிந்து மரியாளை ஏற்றுக்கொண்டாரா?
2. அல்லது, யோசேப்பு என்ற ஒரு நபரே மரியாளின் வாழ்வில் இல்லை என்றுச் சொல்கிறீர்களா?
இதில் எதை நீங்கள் தெரிந்தெடுத்தாலும், உங்கள் குர்-ஆனின் நிகழ்ச்சிகள் உண்மையில்லை என்பது நிருபனமாகும்.
நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:
இயேசுவின் சிறப்பையும், மரியாளின் கற்பொழுக்கத்தையும் திருக்குர்ஆன் மட்டுமே உலகிற்கு தெளிவாக எடுத்துச் சொல்கின்றது. இயேசு வளர்ந்து பெரியவராக ஆன பின் செய்த பல அற்புதங்களை விட பச்சிலங்குழந்தையாக இருக்கும் போது செய்த அற்புதம் தான் மிகப் பெரியதாகும். வளர்ந்தப்பின் செய்யுமம் அற்புதங்களுக்கு வேறு அர்த்தம் கற்பித்து விடலாம். இயேசுவின் அற்புதம் உட்பட பல இறைத்தூதர்களின் அற்புதங்களுக்கு அந்தந்தப் பகுதி மக்கள் வெவ்வேறு அற்புதம் கற்பித்தார்கள் என்பது பைபிள் உட்பட கூறும் வரலாற்று உண்மையாகும். அதே சமயம் குழந்தை செய்யும் அற்புதத்திற்கு யாரும் வேறு அர்த்தம் கற்பிக்க முடியாது. அது கலப்படமற்ற அற்புதமாகவே உலகிற்கு தெரியும். அப்படிப்பட்ட ஒரு அற்புதம் தான் இயேசுவின் குழந்தைப்பருவத்தில் நிகந்து அவர் அந்தப்பகுதி மக்களிடம் பேசியதாகும் . இந்தப் பேச்சு அவரை இறைத்தூதர் என்றும் அவரது தாயார் மரியாள் கற்பு நெறித் தவறாத தூய்மையான பெண் என்றும் உலகிற்கு உணர்த்தியது. இன்றுவரையிலும் உலகின் இறுதிநாள் வரையிலும் அந்த அற்புதம் குர்ஆனில் பேசப்படுகின்றது. இந்த அற்புதத்தை பைபிள் கண்டுக்கொள்ளவில்லை.
என் மறுப்பு:
குர்-ஆன் சொல்லும் இயேசுவின் குழந்தை அற்புதம் உண்மையில்லை என்பதை இயேசுவின் வாழ்க்கையிலிருந்தே தெரிந்துக்கொள்ளலாம்.
1. ஒரு நாள் குழந்தை அல்லது சில நாள் குழந்தை பேசுவது என்பது, உலக அதிசயம்: குர்-ஆன் சொல்வது போல, மரியாள், குழந்தையை கொண்டுவருகிறார்கள், யூத ஜனங்கள் கேள்விகள் கேட்கிறார்கள், உடனே குழந்தை பேசுகிறது. என்னவாகியிருக்கும், இதை பார்க்கும் ஜனங்கள் தலை தெரிக்க ஓடியிருப்பார்கள், ஏதோ விபரீதம் நடக்கிறது என்றுச் சொல்லி ஓடி ஒளிந்துயிருப்பார்கள். சிலருக்கோ இதயமே நின்றுயிருக்கும். எல்லாரும் பயந்து போய், நடுங்கியிருப்பார்கள்.
2. இயேசுவை சிறுவயதிலிருந்தே ஒரு தெய்வீக புருஷராக மதித்துயிருப்பார்கள், அவரை எதிர்த்து, சிலுவையில் அறைந்து (குர்-ஆன் படி சிலுவையில் அறைய பிடிக்க சென்று) இருக்க மாட்டார்கள். பிறந்த குழந்தை இப்படிப்பட்ட அற்புதம் செய்யுமானால், அந்த குழந்தையை ஒரு சாதாரண குழந்தையாக பார்க்கமுடியாது. இயேசுவிற்கு சிறுவயதிலிருந்தே ஒரு தனி மதிப்பு, மரியாதை, புகழ் எல்லாம் கிடைத்துயிருக்கும். காணிக்கைகள், பணம் என்று பரிசுகளைக் கொண்டுவந்து பலவாறு தங்கள் நம்பிக்கையை அக்குழந்தை மீது காட்டியிருப்பார்கள்.
நீங்கள் சொல்வது போல, பெரியவராக ஆனபிறகு செய்த அற்புதங்களுக்கு வேறு அர்த்தங்கள் சொன்னாலும், இந்த அற்புதம் வைத்துக்கொண்டு எல்லாம் சாதித்துவிடலாம். ஆனால் நடந்தது என்ன? ஒரு சாதாரண தச்சனின் மகனாக நடுத்தர வாழ்வை வாழ்ந்தார் இயேசு. எந்த வசதியில்லாமல் வாழ்ந்தார். இயேசு செய்த அற்புதங்களைப் பார்த்த ஆசாரியர்கள், யூத மக்கள், இவனுக்கு எப்படி இந்த வல்லமை கிடைத்தது, இவன் தச்சனின் குமாரன் அல்லவா? என்று ஆச்சரியப்பட்டார்கள்(மாற்கு: 6: 1-3). இன்னும் குர்-ஆன் சொல்வது போல, குழந்தை அற்புதம் நடந்து இருக்குமானால், இவ்விதம் அவர்கள் சொல்வதற்கு வாய்ப்பே இல்லை. இவன் தான் குழந்தையாக இருக்கும் போதே அற்புதம் செய்தவன் ஆயிற்றெ, இந்த அற்புதங்கள் என்ன புதுசா? என்றுச் சொல்லியிருப்பார்கள். எனவே, குழந்தை இயேசு அற்புதம் என்பது ஒரு கற்பனைக் கதையே தவிர வேறில்லை.
இதற்கு பதில் சொல்லுங்கள், சுவிசேஷங்கள் எழுதிய சீடர்கள் இயேசுவின் எதிரிகளா? இல்லையே, தங்கள் தலைகளை இயேசுவிற்காக வெட்டித்தள்ள நீட்டியவர்கள். ஒருவேளை இந்த அற்புதம் நடந்துயிருக்குமானால், அதை எழுதுவதினால், தங்கள் மதிப்பு கூடுமே தவிர குறையாது. ஏன் ஒருவரும் சொல்லவில்லை, இயேசுவின் மீது கோபமா அல்லது இது ஒரு சாதாரண அற்புதமா? பின் ஏன் யாரும் எழுதவில்லை. காரணம் அது நடக்கவில்லை .
நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:
இயேசுவின் முதல் பேச்சு குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்தது என்று குர்ஆன் சொல்லும் போது பைபிள் முதல் பேச்சை எப்படி சொல்கின்றது என்பதைப் பாருங்கள்.
அவருக்கு பனிரெண்டு வயதானபோது அவர்கள் அந்த பண்டிகை முறைமையின் படி எருசலேமுக்குப் போய்.......அப்போது அவருடைய தாயார் அவரை நோக்கி மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய் இதோ உன் தகப்பனும் நானும் விசாரத்தோட உன்னைத் தேடினோமே என்றாள். அதற்கு அவர் 'நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள் என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்க வேண்டியதென்று அறியீர்களா என்றார். (லூக்கா 42-49)
பைபிளின் நான்கு சுவிசேசக்காரர்களின் தொகுப்பிலும் இயேசுவின் முதல் பேச்சு இந்த இடத்தில் தான் சொல்லப்பட்டுள்ளது. அதாவது இயேசு தனது பணிரென்டு வயதுக்கு முன் பேசிய எந்த விபரமும் கிடைக்கவில்லை.
பைபிளை மட்டுமே நம்பிக்கொண்டு திருக்குர்ஆன் பற்றிய எந்த சிந்தைனையுமில்லாத கிறிஸ்த்தவ சகோதரர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இயேசுவின் சரியான வரலாறு எங்கு கிடைக்குமென்று.
குழந்தைப் பருவத்தில் இயேசு பேசிய வார்த்தைகள் அதன் ஆழம் அதிலிருந்து வேறுபடும் இன்றைய கிறிஸ்த்துவம் இனி அதுபற்றிப் பார்ப்போம். இறைவன் நாடட்டும்.
என் மறுப்பு:
இயேசுவின் உண்மை வரலாறு பைபிளில் தான் கிடைக்கும். இயேசுவின் பிறப்பு விவரங்களை குர்-ஆன் விவரிக்கும் போது செய்த முரண்பாடுகளையும், சரித்திர பிழைகளையும் நாம் இதுவரை கண்ட மறுப்புகளில் கண்டோம். எனவே, இயேசுவின் உண்மை வரலாறு குர்-ஆனில் அல்ல பைபிளில் தான் கிடைக்கும்.
இயேசுவின் வரலாறு மட்டுமல்ல வேறு எந்த தீர்க்கதரிசியின் முழு வரலாறும் குர்-ஆனில் காணமுடியாது.
அவ்வளவு ஏன், முகமதுவிற்குப் பிறகு 150 ஆண்டுகளுக்கு பின்பு தொகுக்கப்பட்ட ஹதீஸ்கள், டபரி, இஷாக் போன்றவர்கள் தொகுத்த சரித்திர நூல்கள் இல்லையானால், முகமது என்பவர் யார், அவர் எப்படி வாழ்ந்தார், என்ன பேசினார் என்றே தெரிந்திருக்காது. அல்லா இறக்கியதாகச் சொல்லப்படும் குர்-ஆன் மட்டும் வைத்துக்கொண்டு, மனிதர்கள் உருவாக்கிய ஹதீஸ்கள் உதவி இல்லாமல், முகமது யார் என்றுச் சொல்லமுடியுமா இஸ்லாமியர்களால்?
குர்-ஆனில் வரும் நபர்களைப் பற்றி முழுவதுமாக அறிந்துக்கொள்ள வேண்டுமானால், நமக்கு பைபிள் வேண்டும். முகமதுவிற்கு குர்-ஆனில் ஏதாவது சந்தேகம் வந்தால், பைபிளை படிப்பவர்களிடம் கேட்டுத் தெரிந்துக்கொள்ள வேண்டுமென்று அல்லா முகமதுவிற்கு கட்டளையிடுகிறார்.
குர்-ஆன் 10:94 (நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொளிவீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம் கேட்டுப் பார்ப்பீராக் நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்திய (வேத)ம் வந்துள்ளது - எனவே சந்தேகம் கொள்பவர்களில் நீரும் ஒருவராகி விட வேண்டாம்.
குர்-ஆன் 10:95 அன்றியும் அல்லாஹ்வின் வசனங்களை பொய்ப்பிப்போர்களில் ஒருவராக நீரும் ஆகிவிட வேண்டாம்; அவ்வாறாயின் நஷ்டமடைவோரில் நீரும் ஒருவராவீர்.
எனவே, இயேசுவின் பிறப்புப் பற்றிச் சொல்லும் குர்-ஆன் நிகழ்வுகள் முகமது தள்ளுபடி ஆகமங்களிலிருந்து எடுத்தார் என்பதும், இயேசு "ஜகாத்" என்பதைப் பற்றிப் பேசுவது ஒரு சரித்திர முரண்பாடு என்பதும் இந்த மறுப்பில் கண்டோம். மற்றும் மரியாளின் கணவன் யோசேப்பு மரியாளை எப்படி, எப்போது திருமணம் செய்துக்கொண்டார் என்பதைப் பற்றி குர்-ஆன் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. இதனால், குர்-ஆன் சொல்லும் மரியாளின் தூரப்பயணம், மற்றும் இதர நிகழ்வுகள் நடைமுறைக்கு ஒத்துவராததாக மாறுகிறது. பைபிள் சொல்லும் மரியாளின், இயேசுவின் சரித்திரமே சரியானது என்பதை இதன் மூலம் அறியலாம்.
இயேசுவின் வரலாறு 5: மறுப்புக் கட்டுரை பாகம் 2 முற்றிற்று:
David
site: www.geocities.com/isa_koran
e-mail : isa.koran@gmail.com
Blog : http://isakoran.blogspot.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக