ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

கொடுமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொடுமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 31 ஜூலை, 2008

இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - அபுமுஹை கட்டுரைகளில்

இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி

(அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
 
 
 
முன்னுரை: இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்று முஸ்லீம்கள் ஏகமாக சொல்கிறார்கள். ஆனால், முகமது மற்ற நாட்டு மன்னர்களுக்கு எழுதிய கடிதங்களே போதும், நமக்கு இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்பதை அறிந்துக்கொள்வதற்கு. மற்ற நாட்டு மன்னர்களுக்கு முகமது கடிதங்கள் மூலம் அழைப்பு விடுத்தார், அபுமுஹை அவர்கள் அக்கடிதங்களின் தமிழ் மொழியாக்கத்தை பதித்துள்ளார். இக்கடிதங்களை ரஹீக் என்ற புத்தகத்திலிருந்து பதித்ததாக, அபுமுஹை அவர்கள் குறிப்பு எழுதியுள்ளார்கள்.

இக்கட்டுரையில் நாம் கீழ் கண்ட இரண்டு விவரங்களைக் காணப்போகிறோம்.

1) தமிழில் மொழிபெயர்க்கும் போது, வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்து, "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்" என்பதை காட்ட‌ முயற்சி செய்த தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள்.

2) இக்கடிதங்கள் நமக்கு எதை போதிக்கின்றன, இஸ்லாம் அமைதி மார்க்கமா அல்லது மற்றவர்களை பயப்படவைத்து, வாளால் பரவிய மார்க்கமா?





1) தமிழில் மொழிபெயர்க்கும் போது, வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்து, "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்" என்பதை காட்ட‌ முயற்சி செய்த தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள்


முகமது எட்டு அரசர்களுக்கு கடிதம் மூலம் இஸ்லாமை தழுவும் படி அழைப்பு விடுத்ததாக அபூமுஹை அவர்கள் கட்டுரைகளை எழுதியுள்ளார்கள். இக்கடிதங்கள் ஆங்கிலத்தில் முஹம்மத் டாட் நெட் என்ற தளத்தில் பதிக்கப்பட்டுள்ளது. பஹ்ரைன் நாட்டு மன்னருக்கு முகமது அனுப்பிய முதலாவது கடிதம் கிடைக்காததால், அதை நான் இக்கட்டுரைக்கு எடுத்துக்கொள்ளவில்லை, அக்கட்டுரையை படிக்க இங்கே சொடுக்கவும்.

இந்த கட்டுரைகளில் சிலவற்றில், எங்கெல்லாம் இஸ்லாமைக் கொண்டு முகமது மற்றவர்களை பயப்பட வைத்தாரோ, அங்கெல்லாம் நம் தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள் அவ்வார்த்தைகளை மறைத்து, "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் போல" காட்சி அளிக்கும் படி மொழிபெயர்த்துள்ளார்கள்.

அவைகளைப் பற்றிய விவரங்களை கீழே காணலாம்:

ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு நமக்கு உபயோகமாக இருக்கும் என்பதால், இக்கடிதங்களை ஆங்கிலத்தில் நான் கீழே பதித்து, அதன் பக்கத்தில் நம் தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள் தமிழில் மொழிபெயர்த்த விவரஙகளைத் தருகிறேன். முழு கடிதங்களைப் படிக்க கொடுக்கப்பட்ட தமிழ் அல்லது ஆங்கில தொடுப்புக்களை சொடுக்கவும்.

வரிசை எண் எந்த நாட்டு அரசனுக்கு இக்கடிதம் அனுப்பப்பட்டது தமிழில்(அபூமுஹை த‌ள‌ம் எழுதிய‌து) இக்கடிதம் ஆங்கில‌த்தில்
1. அபிசீனியா மன்னர் நஜ்ஜாஷிக்கு ….. நான் உமக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். நிச்சயமாக நான் இஸ்லாமியத் தூதராவேன். நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய். .......

Source: http://abumuhai.blogspot.com/2008/07/1.html
…. I call you unto the fold of Islam; if you embrace Islam, you will find safety, ….

Source:
A Deputation to Abyssinia (Ethiopia)
2. எகிப்து மன்னருக்கு நான் உங்களுக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. ஈடேற்றம் அடைவீர்.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/2.html
… I invite you to accept Islam. Therefore, if you want security, accept Islam.

Source:
Letter to the Vicegerent of Egypt, called Muqawqas
3. பாரசீக மன்னருக்கு நீங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் ஈடேற்றம் பெறுவீர்கள்.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/3.html
…… Accept Islam as your religion so that you may live in security,….

Source: A Letter to Chosroes, Emperor of Persia
4. ரோம் நாட்டு மன்னருக்கு ….நேர்வழியை பின்பற்றியவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! இஸ்லாமை ஏற்றுக்கொள் ஈடேற்றம் அடைவாய்….

Source: http://abumuhai.blogspot.com/2008/07/4.html
……I invite you to embrace Islam so that you may live in security.

Source:
The Envoy to Caesar, King of Rome
5. யமாமா நாட்டு அரசருக்கு ….குதிரையும் ஒட்டகமும் எதுவரை செல்ல முடியுமோ அதுவரை எனது மார்க்கம் வெற்றி பெரும். இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள். ஈடேற்றம் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் உள்ள பகுதிகளையெல்லாம் உங்களுக்கே தந்துவிடுகிறேன்.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/67.html
… Be informed that my religion shall prevail everywhere. You should accept Islam, and whatever under your command shall remain yours."

Source:
A Letter to Haudha bin 'Ali, Governor of Yamama
6. சிரியா நாட்டு மன்னருக்கு அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, ஹாரிஸ் இப்னு அபூ ஷமீருக்கு எழுதியது. நேர்வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனை உண்மையாக ஏற்றுக் கொண்டவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! தனக்கு இணை துணை இல்லாத ஏகனான அல்லாஹ் ஒருவனையே நீர் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று நான் உங்களை அழைக்கிறேன். அப்படி செய்தால் உங்கள் ஆட்சி உங்களிடமே நிலைத்திருக்கும்.''

அஸத் இப்னு குஸைமா கிளையைச் சேர்ந்த ஷுஜா இப்னு வஹப் இக்கடிதத்தை எடுத்துச் சென்றார்.
இவர் ஹாரிஸிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அதைத் தூக்கி எறிந்துவிட்டு''என்னிடமிருந்து எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும். இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன்'' என்று கர்ஜித்தான். இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/67.html
From Muhammad, Messenger of Allâh to Al-Harith bin Abi Shamir. Peace be upon him who follows true guidance, believes in it and regards it as true. I invite you to believe in Allâh Alone with no associate, thenceafter your kingdom will remain yours."

Shuja' bin Wahab had the honour of taking the letter to Harith, who upon hearing the letter read in his audience, was madly infuriated and uttered:
"Who dares to disposs me of my country, I'll fight him (the Prophet)," and arrogantly rejected the Prophet's invitation to the fold of Islam.

Source:
A Letter to Harith bin Abi Shamir Al-Ghassani, King of Damascus
7. ஓமன் நாட்டு அரசருக்கு நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.'

Source: http://abumuhai.blogspot.com/2008/07/8.html
If you two accept Islam, you will remain in command of your country; but if you refuse my Call, you've got to remember that all your possessions are perishable. My horsemen will appropriate your land, and my Prophethood will assume preponderance over your kingship."

Source:
Letter to the King of 'Oman, Jaifer, and his Brother 'Abd Al-Jalandi


2) இக்கடிதங்கள் நமக்கு எதை போதிக்கின்றன, இஸ்லாம் அமைதி மார்க்கமா அல்லது மற்றவர்களை பயப்படவைத்து, வாளால் பரவிய மார்க்கமா?

மேலே உள்ள சில கட்டுரைகளில்,

ஆங்கிலத்தில் "
if you embrace Islam, you will find safety" என்று உள்ளதை

தமிழில் "
நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய்" என்று மொழிபெயர்த்துள்ளார்கள்.

ஆங்கிலத்தில் உள்ள வரிகளில் "ஒரு நிபந்தனை" இருப்பதை காணமுடியும், அதாவது, "நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், பாதுகாப்பாக இருப்பீர்கள்" என்று உள்ளது. இதன் உள் அர்த்தம் என்ன? "நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளவில்லையானால், பாதுகாப்பாக இருக்கமாட்டீர்கள், அதாவது நான் வந்து போர் புரிந்து, உங்கள் மீது வெற்றிக்கொள்வேன்" என்று பொருள். இந்த விவரத்தை மிகவும் தெளிவாக, முகமது ஓமன் நாட்டு மன்னருக்கு எழுதிய கடிதத்தில் விவரித்துள்ளார்.


ஓமன் நாட்டுக்கு முகமதுவின் கடிதம்:

...நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.'


...If you two accept Islam, you will remain in command of your country; but if you refuse my Call, you've got to remember that all your possessions are perishable. My horsemen will appropriate your land, and my Prophethood will assume preponderance over your kingship."

மேலே உள்ள கடிதத்தில் முகமது சொல்வதை கவனியுங்கள். ஓமன் நாட்டு அரசர் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், தன் நாட்டை தானே ஆட்சி செய்யலாமாம். யார் யாருக்கு ஆட்சிப் பொறுப்பை தருவது? நான் ஆட்சி செய்யும் நாட்டில், எனக்கு யாரோ ஒருவர் கடிதம் அனுப்பி, இஸ்லாமை ஏற்றுகொள், அப்போது நீயே உன் நாட்டை ஆட்சி செய்யலாம் என்று சொன்னால், நான் என்ன காதில் பூவைத்து இருப்பேனா? ஒருவேளை எனக்கு இராணுவ பலம் குறைவாக இருந்தால், தோற்றுப்போவேன் என்ற பயத்துடன் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளமுடியும் [அப்படி தோற்றுப்போவேன் என்ற பயத்துடன் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இதனால் அல்லாவிற்கும், இஸ்லாமுக்கும் என்ன மேன்மை சொல்லுங்கள்?]. எனக்கு இராணுவ பலம் அதிகமாக இருந்தால், முகமதுவோடு போர் புரிவேன். எது எப்படியானாலும், இது தான் அல்லாவின் தீனை பரப்பும் விதமா? சிந்தியுங்கள்.

ஒரு வேளை முஸ்லீம்கள் இக்கடிதங்களுக்கு "அப்படி அர்த்தம் இல்லை, கிறிஸ்தவர்கள் பொய் சொல்கிறார்கள்" என்று சொல்லக்கூடும். ஆனால், சிரியா அரசன், இக்கடிதம் படித்து என்ன சொன்னார் என்பதை சிறிது படித்துப்பார்த்தால் புரியும், இஸ்லாமை முகமது எப்படி பரப்பினார் என்பதை. அந்த அரசன் "என்னிடத்திலிருந்து என் ஆட்சியை யார் பிடுங்க முடியும்?" என்றுச் சொல்கிறான், அப்படியானால், அக்கடிதத்தில் என்ன எழுதியிருக்கும் என்று தெரிந்துக்கொள்ள ஆராய்ச்சி செய்யவேண்டிய அவசியமில்லை.


அஸத் இப்னு குஸைமா கிளையைச் சேர்ந்த ஷுஜா இப்னு வஹப் இக்கடிதத்தை எடுத்துச் சென்றார். இவர் ஹாரிஸிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அதைத் தூக்கி எறிந்துவிட்டு''என்னிடமிருந்து எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும். இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன்'' என்று கர்ஜித்தான். இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை.


Shuja' bin Wahab had the honour of taking the letter to Harith, who upon hearing the letter read in his audience, was madly infuriated and uttered: "Who dares to disposs me of my country, I'll fight him (the Prophet)," and arrogantly rejected the Prophet's invitation to the fold of Islam.


சிலர் சொல்லக்கூடும், முகமதுவின் இக்கடிதங்களுக்கு பலர் ஆமோதம் அளித்தார்கள், இஸ்லாமியர்களாக மாறினார்கள் என்று. உண்மை தான் பலர் அமோதம் அளித்தார்கள், சிலர் எதிர்த்தார்கள். இங்கு பிரச்சனை "இஸ்லாமின் கோட்பாடுகள், கட்டளைகள்" மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி இருந்ததா இல்லையா என்பதல்ல? முகமது இஸ்லாமை பரப்பிய விதம் சரியா? உடனே, முகமதுவை விட்டுவிட்டு மற்ற அரசர்களின் பெயர்களை குறிப்பிட்டு, இந்த நாட்டில் இப்படி அமைதியான முறையில் இஸ்லாம் பரவியது என்று சொல்லவேண்டாம், இப்போது கேள்வி, முகமது இஸ்லாமை எப்படி பரப்பினார்? என்பது தான். முகமதுவின் கடிதங்களில் உள்ள உண்மை என்ன? என்பதைப் பற்றியது தான்.



முகமது இஸ்லாமை வாளால் தான் பரப்பினார்:

இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்பதை காட்ட முஸ்லீம்கள், பல நாடுகளின் சரித்திரத்தைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால், முகமது எப்படி பரப்பினார் என்பதை இக்கடிதங்கள் படம் பிடித்துக்காட்டுகின்றன. இதற்கு முஸ்லீம்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? நான் ஒரு கேள்வியை கேட்கட்டும், அதாவது உலகத்தில் பல இஸ்லாமிய நாடுகள் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு நாட்டிற்கு, இந்திய அரசாங்கம் அல்லது வேறு ஒரு மேற்கத்திய நாடு அல்லது இராணுபலம் அதிகமாக உள்ள நாடு, கீழ் கண்டவாறு கடிதம் எழுதி அனுப்பினால், எப்படி இருக்கும்.


மான்புமிகு சூடான்/பாகிஸ்தான்/சௌதி அரேபியா etc... நாட்டு அதிபருக்கு, இந்தியாவின்/சைனாவின்/அமெரிக்காவின்/ஜெர்மனியின் etc... நாட்டு அதிபர் எழுதிக்கொள்வது. உங்களுக்கு சாந்தி உண்டாகட்டும்.

நாங்கள் a/b/c/x/y/z etc.. என்ற இறைவனை வணங்குகிறோம், மற்றும் இத்தெய்வமே உண்மையானவர். எனவே, உங்கள் அல்லாவை தொழுவதை இனி விட்டுவிடுங்கள். நீங்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டுமானால், இந்துத்துவத்தை / கிறிஸ்தவத்தை / புத்தமதத்தை / etc... ஏற்றுக்கொள்ளுங்கள், அப்போது பாதுகாப்பாக இருப்பீர்கள். நீங்க‌ள் இஸ்லாமை விட்டு விட்டு எங்கள் தெய்வ‌ங்க‌ளை ஏற்றுக்கொள்ள‌வில்லையானால், எங்க‌ள் இராணுவ‌ம் உங்க‌ள் நாட்டில் வ‌ந்து இற‌ங்கும், எங்க‌ள் வ‌லிமையை உங்க‌ளுக்கு காட்டுவோம். எங்க‌ள் மார்க்க‌த்தை ஏற்று, உங்க‌ள் இஸ்லாமை விட்டு விடுங்க‌ள் என்று உங்க‌ளுக்கு அழைப்பு விடுக்கிறோம். அப்ப‌டி நீங்க‌ள் மாற‌வில்லையானால், அல்லாவை வ‌ண‌ங்கும் மூஸ்லீம்க‌ளின் பாவ‌ங்க‌ள் எல்லாம் உங்க‌ள் மேல் சும‌ரும் என்ப‌தை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த மேலே உள்ள கடிதத்திற்கும், முகமது அனுப்பின கடிதங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று நினைக்கிறீர்கள். இதை படித்தவுடன் கோபம் வரவில்லையா உங்களுக்கு? அப்படித்தான், முகமதுவும் தன் தெய்வமாகிய அல்லாவை பரப்ப, ஆயுதத்தையும், போரையும், சர்வாதிகாரத்தையும் பயன்படுத்தினார். அதற்கு இக்கடிதங்களே சாட்சிகள். இக்கடிதங்களையும், அவைகளில் உள்ள செய்திகளையும், உலகத்தில் உள்ள மக்களுக்கு எப்படி விளக்குவீர்கள்? என்ன நியாயத்தை கற்பிப்பீர்கள்? சாதாரணமாக, கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தாமல், பொன்னுக்கும் மண்ணுக்கும் ஆசைப்பட்டு பல அரசர்கள் பக்கத்து நாட்டு அரசர்கள் மீது போர் தொடுப்பார்கள். ஆனால், தன்னை ஒரு இறைவனின் தூதன் என்றுச் சொல்லிக்கொண்டு, உலகத்திற்கு அமைதியை கொடுப்பேன் என்றுச் சொல்லிக்கொண்டு, இரத்தம் சிந்தியது சரிதானா என்று சிந்தித்துப் பாருங்கள். இப்படியும் ஒரு மதத்தை பரப்பனுமா? என்று உங்களை நீங்களே கேள்வியை கேட்டுப்பாருங்கள்.

முகமதுவை விட மற்ற இஸ்லாமிய அரசர்கள் நல்லவர்கள் என்று சொல்லும் இஸ்லாமியர்கள்:

இஸ்லாமை பரப்ப இஸ்லாமிய அரசர்கள் வாளைப்பயன் படுத்தவில்லை, அவர்கள் தங்கள் நல்ல நடத்தையினால் தான் பரப்பினார்கள் என்றுச் சொல்லி, இஸ்லாமுக்காக பரிந்துப்பேசும் இஸ்லாமியர்கள் ஒன்றை கவனத்தில் வைக்கவேண்டும். இப்படி நீங்கள் செய்வதினால், நீங்கள் மேற்கோள் காட்டும் இஸ்லாமிய அரசர்கள், "முகமதுவை விட நல்லவர்களாக இருந்தார்கள்" என்பதை மறைமுகமாக நீங்கள் சொல்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் முகமது கடிதங்களை அனுப்பி, அரசர்களை இஸ்லாமுக்கு அழைத்து, வரவில்லையானால் தொலைத்துவிடுவேன் என்று பயமுறுத்தி இஸ்லாமை பரப்பினார், ஆனால், அவரை பின்பற்றியவர்கள் அப்படி செய்யவில்லை என்று நீங்கள் சொல்வதினால், என்ன தவறு செய்துள்ளீர்கள் என்று சிந்தித்துப்பாருங்கள்.

முடிவுரை: இஸ்லாமிய நண்பர் அபூமுஹை அவர்களுக்கு, நீங்கள் எழுதிய கட்டுரைகள் ஒரு குறிப்பிட்ட புத்தகத்திலிருந்து எடுத்து எழுதினீர்கள் என்று சொல்லியுள்ளீர்கள். நான் கேட்க விரும்பும் கேள்வி: அப்புத்தகத்திலே இப்படி உண்மையை மறைத்து இஸ்லாம் ஒரு அமைதி மதம் போல காட்டித் தான் எழுதியிருந்ததா? அல்லது நீங்கள் அதனை மறைத்து எழுதினீர்களா?

எது எப்படியானால், அப்புத்தகம் எழுதியவரும் ஒரு முஸ்லீம் தானே, இக்கடிதங்களில் உள்ள பொருளை எங்களுக்கு விளக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். மட்டுமல்ல, உங்கள் நபி அன்று செய்தது இன்று கூட மக்கள் அல்லது நாடுகள் பின்பற்ற தகுந்தது என்றுச் சொல்லும் முஸ்லீம்கள், இப்படி இன்றுள்ள உலகில் கடிதம் மூலமாக பயமுறுத்தி மதத்தை பரப்ப நீங்கள் அனுமதிப்பீர்களா? அல்லது பாகிஸ்தானுக்கு, ஈரானுக்கு அல்லது சௌதி அரேபியாவிற்கு ஒரு கடிதம் அனுப்பினால், அவர்கள் என்ன பதில் தருவார்கள்? அக்கடிதம் அனுப்பியவர்களோடு போர் செய்வார்களா அல்லது இஸ்லாமை விட்டுவிட்டு வேறு மார்க்கத்திற்கு மாறிவிடுவார்களா?

காதுள்ளவன் கேட்கக்கடவன்
 
 

செவ்வாய், 8 ஏப்ரல், 2008

19 காரணங்கள்: ஏன் கௌரவமான மனிதர்களில் பலர் முஸ்லீம்களாக மாற விரும்புவதில்லை?


19 காரணங்கள்: ஏன் கௌரவமான மனிதர்களில் பலர் முஸ்லீம்களாக மாற விரும்புவதில்லை

19 Reasons why many Honorable People Don't Want to Be Muslims

மற்றவர்களை இஸ்லாமியர்களாக மாற்ற விரும்பும் முஸ்லீம்கள், "ஏன் உண்மையை அறிய விரும்பும் மனிதர்கள், இஸ்லாமை நம்புவதில்லை?" என்ற கேள்வியின் பதிலை தெரிந்துக்கொள்ள விரும்பக்கூடும். இதற்கு சில முக்கியமான காரணங்கள் உண்டு, இந்த கட்டுரையில் அந்த காரணங்களை ஒவ்வொன்றாக காணலாம். இந்த காரணங்களில் ஒன்று உண்மையாக இருந்தாலும், அது இஸ்லாம் உண்மையான மார்க்கம் இல்லை என்பதை தெளிவாக்கிவிடும். இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்ட தொடுப்புக்கள் ஒவ்வொரு காரணத்தையும் தெளிவாக விளக்கும்.

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டு இருக்கும் பட்டியல், குற்றப்படுத்தும் தோரணையில் அல்லாமல், சொல்லப்படும் எல்லா காரணங்களுக்கும் தேவையான எல்லா ஆதாரங்களையும் தருகிறது. இந்தக் கட்டுரை சில காரணங்களை சுருக்கமாக‌ விளக்குகிறது, முழுவிவரங்களையும் தெரிந்துக்கொள்ள கொடுக்கப்பட்ட தொடுப்புக்களில் சென்று படிக்கவும்.



இஸ்லாம் முந்தைய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நிராகரிக்கிறது

ISLAM DENIES WORDS OF PREVIOUS PROPHETS


1. முஸ்லீம்கள், முந்தைய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நிராகரிக்கிறார்கள், அவ்வசனங்கள் திருத்தப்பட்டன என்று வாதாடுகிறார்கள். இயேசு முந்தைய வேத சட்டத்தையும், இன்ஜீலையும்(சுவிசேஷத்தையும்) உண்மைய்ப்படுத்தக் கூடியவராக இருந்தார் என்று குர்‍ஆனில் சூரா 5:46-48 சொல்கிறது. மற்றும் சவக்கடல்(Dead Sea Scrolls) பகுதியில் கிடைத்த பிரதிகளில் இயேசுவின் காலத்தில் இருந்த பழைய ஏற்பாட்டு பிரதிகள் கூட இருந்தன. படிக்க‌: http://www.muslimhope.com/DeadSeaScrolls.htm

மோசே மூலமாக கொடுத்த தன் சட்டத்தை பாதுகாக்கவும், இயேசுவிற்கு கொடுத்த இன்ஜீலையும் பாதுகாக்க அல்லாவினால் முடியவில்லையானால், குர்‍ஆனில் கொடுத்த அவரது வசனங்களையும் பாதுகாக்க அல்லாவினால் முடியாது. குர்‍ஆனுக்கு முன் இறக்கிய தன் வேதத்தையும் அல்லா பாதுகாத்து இருக்கவேண்டும். படிக்க: http://www.biblequery.org/History/ChurchHistory/WhatEarlyChristiansTaught.htm

2. தீர்க்கதரிசிகளின் போதனையாகிய "தேவன் பிதாவாக இருக்கிறார்" என்பதை இஸ்லாம் நிராகரிக்கிறது.

தேவன் நமக்கு தந்தையாக இருக்கிறார் என்பதை யுதர்களும், கிறிஸ்தவர்களும் நம்புகிறார்கள் மற்றும் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் "தேவன் பிதாவாக இருப்பதாக" நாம் பல விவரங்களைக் காணலாம். படிக்க:
http://www.muslimhope.com/FatherhoodOfGod.htm

அதாவ‌து, ச‌ரீர பிர‌கார‌மாக‌ தேவ‌ன் ந‌ம‌க்கு த‌ந்தையாக‌ இல்லை, அத‌ற்கு ப‌திலாக‌ எல்லா விசுவாசிக‌ளையும் அவ‌ர் த‌ன் பிள்ளைக‌ளாக கருதுகிறார் ம‌ற்றும் முக்கிய‌மாக‌ இயேசுவை அவ‌ர் உல‌க‌தோற்ற‌த்திற்கு முன்பே த‌ன் பிள்ளையாக பெற்றார். இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த வேத பிரதிகளிலும் "தேவன் நமக்கு தந்தையாக" இருக்கிறார் என்பதை தெளிவாக காணமுடியும். படிக்க: http://www.muslimhope.com/DeadSeaScrolls.htm

3. இயேசு தான் ஒரு தேவகுமாரன் என்று போதித்தார் மற்றும் தன்னை தேவனாக தொழுதுக்கொள்வதை அவர் ஏற்றுக்கொண்டார். குர்‍ஆன் இதை நிராகரிக்கிறது:

இயேசு இப்படித்தான் போதித்தார் என்று ஆரம்ப கால புறசமய எழுத்தாளர்கள்(early pagan writers) இதை அங்கீகரித்துள்ளனர். படிக்க:
Proving for Muslims That Jesus is God (and Lord) - http://www.muslimhope.com/JesusIsGod.htm

4. அல்லா ஏமாற்றுகிறார் : இயேசுவை பின்பற்றின எல்லாரையும் அல்லா ஏமாற்றினார்: இறைவன் என்பவர் பொய் சொல்வதில்லை என்று பைபிள் சொல்கிறது. (எண்ணாகமம் 23:19, 1 சாமுவேல் 15:29). குர்‍ஆன் சொல்கிறது, "அல்லா, சதி செய்பவர்களில் எல்லாம் மிகப்பெரிய சதிகாரர்". தன்னை பின்பற்றினவர்களை எல்லாம்(இயேசுவின் சீடர்களை) அல்லா முட்டாளாக்கினார். அதாவது, இயேசு சிலுவையில் அறையப்பட்டதாகவும், அவர் மறுபடியும் மரித்தோரிலிருந்து எழுந்திருந்ததாகவும் அவர்கள் நினைக்கச்செய்தார். படிக்க: http://www.muslimhope.com/DeceptionInIslam.htm



குர்‍ஆனில் உள்ள சில பிழைகள்(தவறுகள்)

SOME ERRORS IN THE QUR'AN


5. ஜுல் கர்னைன்: சூரியன் சேறு கலந்த நீரில் மூழ்குவது இல்லை:

இரவிலே சூரியன் சேறு கலந்த நீரில் மூழ்குகிறது என்று சூரா 18:85-86 சொல்கிறது என்று இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்கள் நம்பினார்கள், இது பல முஸ்லீம்களை சமீக காலம் வரை நம்பச்செய்தது. இதைப் பற்றி மேலும் அறிய படியுங்கள்:
http://www.muslimhope.com/ZulQarnain.htm and http://www.muslimhope.com/AstronomyAndTheQuran.htm

6. முகமதுவின் "இரவு பிரயாண" சமயத்தில், எருசலேமில் எந்த மசூதியும் இல்லை (சூரா 17:1):

யூதர்களின் தேவாலயம் அழிக்கப்பட்ட இடத்தில் மற்றும் முகமதுவிற்கு பிறகு உருவான அல்‍அக்ஸர் மசூதி பற்றி முகமதுவின் காலத்தில் இஸ்லாமியர்கள் எழுதிவைத்தது ஒரு தவறாகும்(garbage dump). உண்மையில் இல்லாத இடத்தைச் "சென்று பார்த்தேன்" என்று முகமது சொல்லியுள்ளார். இந்த விவரம், இஸ்லாமியர் அல்லாதவர்கள் "ஏன் பாலஸ்தீனர்கள் அல்‍அக்ஸர்க்காக போர் செய்வோம் என்றுச் சொல்கிறார்கள் என்ற‌" கேள்வியை எழுப்புவதற்கு காரணமாக உள்ளது. இதைப் பற்றி மேலும் அறிய படியுங்கள்:
http://www.muslimhope.com/NightJourney.htm

குர்‍ஆனில் திருத்தங்கள்

CHANGES IN THE QUR'AN


7. பெரிய திருத்தம்: சூரா 53ல் இருந்த "அல்லாவின் மகள்கள்"

ஆரம்ப கால நான்கு இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்களும், அதற்கு பின்பு வந்த ஏழு இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்களும், குர்‍ஆனின் சூரா 53 கீழ் கண்டவாறு இருந்தது என்று எழுதிவைத்துள்ளார்கள்.

நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா? மற்றும் மூன்றாவதான "மனாத்"தையும் (கண்டீர்களா?) "இவைகள் உயரத்தில் பறக்கும் பறவைகள், உண்மையாகவே இவர்களின் மத்தியஸ்தம் அங்கீகாரத்துடன் ஏற்றுக்கொள்ளப்படும்"
("Have ye seen [the pagan goddesses] Lat, and 'Uzza, And another, the third, Manat? These are the exalted cranes (intermediaries) Whose intercession is to be hoped for.")

அல்லாவின் வசனங்கள் முகமதுவிற்கு வெளிப்படுத்தப்பட்ட போது, சாத்தான் சில பொய்யான வசனங்களை முகமதுவிற்கு வெளிப்படுத்தினான் என்று ஹதீஸும் குர்‍ஆனும் ஒத்துக்கொள்கிறது. படிக்க: http://www.muslimhope.com/DaughtersOfAllah.htm

8. கூடுதலான‌ (அ) குறைவான வசனங்கள்(Variants):

முகமதுவுடைய உதவியாளர் "உபைய் பின் கைப்" மற்றும் இதர மக்களிடம் இருந்த‌ குர்‍ஆனின் வசனங்கள் சிலரிடம் கூடுதலாகவும், சிலரிடம் குறைவாகவும் இருந்தன. குர்‍ஆனின் மாற்றங்கள் இல்லை என்று முஸ்லீம்கள் சொல்வது ஒரு பெரிய பொய்யாகும். படிக்க:
http://www.muslimhope.com/QuranVariants.htm

இரத்து செய்யப்பட்ட வசனங்கள் என்றுச் சொல்லி குர்‍ஆனிலிருந்து நீக்காமல் அப்படியே விட்டுவிட்ட வசனங்கள் தவிர, ஹதீஸ்களும், மற்றும் இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்களும் குர்‍ஆனிலிருந்து அமைதியாக நீக்கிவிட்ட வசனங்கள், மற்றும் அதிகாரங்கள் பற்றியும் சொல்லியுள்ளார்கள். இப்போது புதிதாக கண்டெடுக்கப்பட்ட பிரதியாகிய சனா/யேமினி குர்‍ஆனில்(San'a/Yemeni Qur'an) கூட பல மாற்றங்கள் இருப்பதை காணலாம்.



முகமது மற்றும் ஆரம்பகால முஸ்லீம்களின் "வன்முறை" செயல்கள்

VIOLENCE OF MOHAMMED AND EARLY MUSLIMS


9. முகமது மக்களை கொடுமைசெய்ய குறைந்தபட்சம் இரண்டுமுறை கட்டளையிட்டார்:

கினானா பின் அல்ரபி பொக்கிஷங்கள் எங்கே இருக்கின்றன என்று முகமதுவிற்கு சொல்லாத காரணத்தால், அவர் கொஞ்சம் கொஞ்சமாக கொளுத்தப்பட்டார். மேலும் அறிய படியுங்கள்:
http://www.muslimhope.com/WarInIslam.htm

10. மற்றவர்களை கொல்லும்படி முகமது கட்டளையிட்டார்:

அ) கப் பின் அஷ்ரப் அல்லாவையும் முகமதுவையும் அவமதித்தார். இவரை கொள்ள ஒரு மனிதன் முகமதுவின் அனுமதியோடு அஷ்ரப்போடு சேர்ந்துக்கொண்டார். இந்த மனிதனை அஷ்ரப் நம்பினார், ஆனால், அந்த மனிதர் அஷ்ரபை கொன்றுவிட்டான். அஷ்ரபை கொல்ல எந்த பொய்யையாவது சொல்லி கொல்லும்படி முகமது அனுமதி அளித்தார்.

ஆ) அபு ரபி இவர் இராணுவ அல்லது அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டார்.

இ) மக்காவின் தலைமை அதிகாரி அபு ரபியை கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டது.

ஈ) அல் அஸ்வத், இவர் தன்னை ஒரு தீர்க்கதரிசி (நபி) என்று சொல்லிக்கொண்டார், அதனால், இவரின் வாயை மூட வன்முறையை முகமது பயன்படுத்தி, இவரை கொன்றார்.

உ) கலிட் பின் சுஃப்யான் (முகமது தனக்கு எதிராக இந்த மனிதன் ஒரு கூட்டத்தை தயார்படுத்திக்கொண்டு இருக்கிறார் என்று கேள்விப்பட்டு, இவரை கொன்றார்)

ஊ) யாஸர் பின் ரிஜம் ( இவரை கொல்லும்படி முகமது கட்டளையிடவில்லை, இருந்தாலும், இவர் முதலில் முஸ்லீமாக மாறுவேன் என்றும் சொல்லி, பிறகு பின் வாங்குகிறார் என்று இதர முஸ்லீம்கள் கேள்விப்பட்டு இவரை கொன்றுப்போட்டார்கள்)

இந்த நிகழ்ச்சிகள் பற்றி அறிய படியுங்கள்:http://www.muslimhope.com/Assassinations.htm

11. முகமது வாளினால் இஸ்லாமை பரப்பினார்:

எதிர்பாராத விதத்தில் முகமது திடீரென்று மக்களின் மீது தாக்குதல் நடத்த கட்டளையிட்டார். இஸ்லாம் என்றால் "அமைதி" என்று பொருள் என்றுச் சொன்னால், 10 ஆண்டு காலத்தில் ஏன் 82 தாக்குதல்கள் நடந்ததன்? மேலும் அறிய படிக்கவும்:
http://www.muslimhope.com/WarInIslam.htm and http://www.muslimhope.com/BanuMustaliq.htm



பெண்கள் மற்றும் திருமணம் பற்றி இஸ்லாமின் பார்வை

ISLAMIC VIEW OF WOMEN AND MARRIAGE


12. உங்கள் வலக்கை சொந்தமாக்கிக் கொண்டவர்கள்:

ஒவ்வொரு முஸ்லீமுக்கு நான்கு மனைவிகள் தவிர, கணக்கிலடங்கா அடிமைப்பெண்களையும், போரில் கைதான பெண்களையும் தாங்கள் உடலுறவு கொள்ள‌ பயன்படுத்திக்கொள்ளலாம், அந்த பெண்களுக்கு விருப்பமில்லையானாலும் சரி. மேலும் அறிய படிக்க:
http://www.muslimhope.com/WomenInIslam.htm and http://www.muslimhope.com/RightHand.htm

13. பெண்கள் ஆண்களைவிட குறைவானவர்கள்: மாதத்தில் சில நாட்களில் அவர்கள் தொழுகை செய்யக்கூடாது, பெண்களுக்கு அறிவு குறைவு, இவர்கள் தான் நரகத்தில் அதிகமாக காணப்படுவார்கள்:

இஸ்லாமிய மேதாவி அல்-கஜாலி(al-Ghazali 1058-1111 கி.பி) 18 வழிகளில் பெண்கள் ஆண்களைவிட குறைவானவர்கள் என்று குறிப்பிடுகிறார். அவைகள்:

ஒரு பெண்ணின் சாட்சி ஒரு ஆணின் சாட்சியில் பாதியாகும்

ஒரு ஆண் பல மனைவிகளை திருமணம் செய்யலாம், ஆனால், பெண்ணுக்கு ஒரு கணவன் தான்.

ஆண்களைப் போல ஒரு பெண் மிகவும் சுலபமாக விவாகரத்து செய்யமுடியாது.

மனைவி என்பவள் வீட்டிலேயே இருக்கவேண்டும்

ஒரு பெண் தன் தலையை மூடிக்கொண்டே இருக்கவேண்டும்

ஆண்கள் மட்டும் தான் வெள்ளிக்கிழமை நாட்களில், மற்றும் பண்டியை நாட்களில் மட்டும் சவ அடக்கத்திற்கு ஆஜராகவேண்டும்.

ஒரு பெண் "ஒரு நீதிபதியாகவோ" அல்லது "ஒரு ஆட்சி செய்யும் தலைவியாகவோ இருக்கக்கூடாது".

மேலும் அறிய படிக்க: http://www.muslimhope.com/WomenInIslam.htm

14. முஸ்தஹில் மற்றும் முடா அருவருப்பான செயல்கள் (Mustahil and Mu'tah – they sound disgusting)

ஒரு முஸ்லீம் திரும்பப்பெறாத விவாகரத்தை செய்துவிட்டால், அந்தப்பெண் மறுபடியும் அந்த பழைய கணவனோடு சேர்ந்து வாழவேண்டுமானால், இந்தப் பெண் வேறு ஒரு ஆணோடு திருமணம் செய்யவேண்டும், பிறகு தான் தன் பழைய கணவனோடு சேர்ந்து வாழவேண்டும். இப்படிப்பட்ட வேலைக்காக உள்ள மனிதனைத் தான் முஸ்தஹில் என்பார்கள். முடா என்றுச் சொல்வது "தற்காலிகமான திருமணமாகும்", அதாவது, ஒரு முஸ்லீம் ஒரு பெண்ணை சில மணித்துளிகளுக்காக அல்லது அதற்கும் அதிகமாக காலத்திற்காக திருமணம் செய்துக்கொள்வதாகும், ஆனால், இது விபச்சாரம் என்று எண்ணப்படாது. சுன்னி முஸ்லீம்கள் "முகமது இதை ஒரு குறிப்பிட்ட காலத்திற்காகத் தான் அனுமதித்தார்" என்றுச் சொல்கிறார்கள். ஆனால், ஷிய முஸ்லீம்கள் இந்த "தற்காலிகமான திருமணம்" என்பது இன்று கூட பின்பற்றத்தகுந்தது என்றுச் சொல்கிறார்கள், மற்றும் இன்று கூட இதை ஈரான் மற்றும் இதர இடங்களில் பின்பற்றுகிறார்கள். மேலும் அறிய படிக்க:
http://www.muslimhope.com/WomenInIslam.htm

15. ஏன் முகமது 8 லிருந்து 9 வயது உள்ள சிறுமியை திருமணம் செய்துக்கொண்டார்? முகமதுவின் இந்த செயல், ஆப்ரிக்காவில் மற்றும் இதர இடங்களில் உள்ள வாலிப முஸ்லீம் பெண்களுக்கு சொல்லமுடியாத வேதனையையும், உடல் சம்மந்தப்பட்ட பிரச்சனையையும் கொடுத்துள்ளது. மேலும் அறிய படிக்க http://www.muslimhope.com/AishaNine.htm



இயற்கைக்கு மாறான நடத்தையுள்ள முகமது

THE UNUSUAL CHARACTER OF MOHAMMED


16. ஏன் முகமதுவிற்கு இத்தனை மனைவிகள் தேவைப்பட்டது?

முகமதுவின் வளர்ப்பு மகன் தன் மனைவியை(ஜைனப் பின்ட் ஜஷ்) விவாகரத்து செய்துவிட்டபிறகு, முகமது அப்பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். முகமதுவின் மற்ற மனைவிகளான "ஷஃபியா" மற்றும் "ஜுவர்ரியா பின்ட் ஹரித்" என்பவர்கள் விதவைகளானார்கள் ஏனென்றால், முகமது தான் இப்பெண்களின் கணவர்களை இதற்கு முன்பே கொன்றார். சில பெண்கள் முகமதுவின் திருமண விண்ணப்பத்தை நிராகரித்தனர், முகமது விவாகரத்து செய்த விவரங்களையும் இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்கள் எழுதியுள்ளார்கள். முகமதுவிற்கு வைப்பாட்டிகளும் இருந்தனர். மேலும் அறிய படியுங்கள்:
http://www.muslimhope.com/WhyDidMohammedGetSoManyWives.htm

17. தீய சக்தியால் பீடிக்கப்பட்டு இருந்தார் (Bewitched):

இறைவனின் உண்மையான தீர்க்கதரிசி எப்படி ஒரு தீயசக்தியின் சக்திக்கு (பில்லி சூன்யம் கட்டுக்கு உட்பட்டார்) கட்டுப்படமுடியும்? இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஹதீஸ்களில் 11 இடங்களில் சொல்லப்பட்டு உள்ளது, இந்த ஹதீஸ்கள் தான் சுன்னி இஸ்லாமின் ஷரியா சட்டத்தொகுப்பிற்கு அடிப்படை. மேலும் அறிய படியுங்கள்:
http://www.muslimhope.com/IslamAndScience.htm

18. வித்தியாசமான மூட பழக்கவழக்கங்கள் (Odd Superstitions):

முகமது சொன்னதாக ஹதீஸ்கள் பல விவரங்களைச் சொல்கின்றன, அதாவது "கண் திருஷ்டி" உண்மை என்று முகமது சொன்னதாக ஹதீஸ் உள்ளது. எப்போதெல்லாம் மலம் கழிக்கிறோமோ அப்போதெல்லாம் ஒற்றைப்படை எண்களில் கற்களை பயன்படுத்துங்கள் என்றும், உங்கள் மூக்கை ஒற்றைப்படை எண்களில் கழுவுங்கள் என்றும், தொழுகை செய்யும்போது ஒற்றைப்படை எண்களில் தொழுவுங்கள் என்றும், கண்களுக்கு மருந்துபோடும்போது(கழுவும் போது) ஒற்றைப்படை எண்களில் கழுவவேண்டும் என்றும் முகமது சொன்னதாக ஹதீஸ்கள் உள்ளன. நீங்கள் கால்களில் செருப்புக்களை போடும்போது, முதலில் வலது கால் செருப்பை போடவேண்டும், அதே போல‌ செருப்பை கழற்றும்போது, இடது கால் செருப்பை முதலில் கழற்றவேண்டும் என்றும் முகமது சொல்லியுள்ளார். நீங்கள் சாப்பிடும் போது "வலது கையினால் சாப்பிடுங்கள்", ஏனென்றால், இடது கையினால் "சாத்தான்" சாப்பிடுகிறான் என்று சொல்லியுள்ளார். இதைப்பற்றி மேலும் அறிய படியுங்கள்:
http://muslimhope.com/IslamAndScience.htm and http://muslimhope.com/IslamAndMedicine.htm

19. கல்லரைக்குள்(சமாதிக்குள்) சித்திரவதை (Torment of the grave):

முகமதுவே பயந்த ஒரு விஷயம் இருக்குமானால், அது "சமாதிக்குள் சித்திரவதை அனுபவிப்பது" என்பதைப் பற்றித் தான். இதன் பொருள் "நரகத்தில் அனுபவிக்கும் சித்திரவதைப் பற்றியது அல்ல, இது சமாதி செய்யப்பட்ட இடத்திலேயே(மண்ணுக்குள்) அனுபவிக்கும் சித்திரவதை பற்றியதாகும்". முகமது, இந்த சித்திரவதையை மற்றவர்கள், மற்றும் தன்னை பின்பற்றுகிறவர்கள், ஏன் தானே அனுபவிக்கக்கூடாது என்று பயந்து இருந்தார். இதைப்பற்றி மேலும் அறிய படியுங்கள்:
http://www.muslimhope.com/TormentOfTheGrave.htm

மூலம்: http://www.muslimhope.com/19ReasonsWhyManyHonorablePeopleDontWantToBeMuslims.htm

மேலும் விவரங்களுக்கு இங்கு சொடுக்கவும்: http://www.muslimhope.com

Isa Koran Home Page Articles Index
1
 

வெள்ளி, 28 மார்ச், 2008

ஏகத்துவத்திற்கு பதில்: உவமைக்கு உண்மைக்கும் வித்தியாசம் அறியா அறிஞர்கள் : பாகம் - 2

 
ஏகத்துவத்திற்கு பதில்

உவமைக்கு உண்மைக்கும் வித்தியாசம் அறியா அறிஞர்கள் : பாகம் - 2

எசேக்கியேல் 23 மறுவிசாரணை

முன்னுரை: சமீப காலமாக இஸ்லாமியர்கள் மிகவும் அதிகமாக கோபமாக இருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்றால், அவர்கள் சொல்வதை அப்படியே கேட்டு சும்மா இருக்காமல், மற்றவர்கள் பதில்கள் தருவது தான். மட்டுமல்ல, முகமதுவின் வாழ்க்கையை மற்றவர்கள் கொஞ்சம் புரட்டி கேள்விகள் கேட்டாலே போதும், அப்படியே கண்கள் சிவப்பாக மாறிவிடுகின்றது. முகமதுவின் மற்றும் அல்லாவின் ஆபாச விவரங்கள் எங்கே வெளியே தெரிந்துவிடும் என்று, பைபிளில் உள்ள சில பழைய ஏற்பாட்டு வசனங்களை எடுத்துக்கொண்டு இது ஆபாசம், இது சரியா? இது வேதமா? என்று கேள்விகள் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக, எசேக்கியேல் 23ம் அதிகாரத்தை குறிப்பிட்டு இது ஆபாசம் என்று சொன்னார்கள், நான் அதற்கு பதில் கொடுத்தேன் .

ஏகத்துவத்திற்கு பதில்: எசேக்கியேல் 23 ஆபாசமா? இஸ்லாம் ஆபாசமா? பாகம் - 1

நான் இந்த பதிலில், தேவன் சமாரியா மற்றும் எருசலேம் என்ற இரண்டு நாடுகளை இரண்டு சகோதரிகளாக தேவன் பாவித்து, இவர்கள் தன்னைவிட்டு விக்கிரகங்களை வணங்குவதை வேசித்தனத்திற்கு ஒப்பிட்டு இவர்களுக்கு செய்தியை கொடுத்தார், இது உண்மையாக நடந்த கதை அல்ல, இது ஒரு உவமை, அதாவது நாடுகளை பெண்களாக கருதி இவர்களின் தீய செயல்களுக்கு தண்டனை வழங்கும் வண்ணமாக தேவன் வசனத்தை சொல்லியுள்ளார் என்றேன்.

இதற்கு ஏகத்துவ தள சகோதரர் இப்ராஹிம் அவர்கள்

"இல்லை இல்லை இது உவமை இல்லை, இதில் யாரையும் ஒப்பிடவில்லை, வசனங்களில் உவமை என்ற வார்த்தை வருகிறதா? பாருங்கள்"

என்று மறு கேள்வி கேட்டுள்ளார்.

[ஒரு விவரத்தைச் சொல்லும் போது, அதில் "உவமை" என்ற வார்த்தை வந்தால் தான் இவர் "அதில் சொல்லப்பட்டது உவமை" என்று ஏற்றுக்கொள்வாராம். இல்லையானால், அது உவமை இல்லை என்று அடித்துச் சொல்வாராம். என்னே அறிவு! என்னே புலமை! வாழ்க இப்ராஹிம்! வாழ்க இவரது புலமை!]

ஆனால், இதே கட்டுரையில் "முஸ்லீம்கள் சொர்க்கத்திற்கு வந்தால், மிகவும் அழகான திடமான மார்ப்புகள் உள்ள பெண்களை தருவேன் என்று அல்லா சொன்ன வசனத்தைப் பற்றி நான் குறிப்பிட்டு இருந்தேன்" அதைப்பற்றி இவர் மூச்சு விடவில்லை, ஏன்? ஏனென்றால், அல்லா இவர்களுக்கு இப்படிப்பட்ட பெண்களை சொர்க்கத்தில் தருவது, உவமை இல்லை, பொய் இல்லை, அது உண்மை என்று இவருக்கு தெரியும். அதனால், அதைப்பற்றி ஒன்றும் குறிப்பிடாமல் விட்டுவிட்டார்.

சரி, இந்த கட்டுரையில்:

ஏகத்துவம் சொன்ன விவரம் சரியா?

எசேக்கியேல் 23ம் அதிகாரத்தில் இரண்டு நாடுகளை இரண்டு சகோதரிகளாக‌ தேவன் ஒப்பிடுகிறாரா இல்லையா?

இஸ்லாமியர்களின் ஆராய்ச்சியின் முடிவு சரியா?

இப்ராஹிம் அவர்களுக்கு உண்மைக்கும் உவமைக்கும் வித்தியாசம் தெரியுமா? இல்லையா? வேண்டுமென்றே இவர் இப்படி மாற்றிச் சொல்கிறாரா?


போன்றவைகளைக் காண்போம்.

இதோ ஏகத்துவம் இப்ராஹிம் அவர்கள் எழுதிய வரிகள்:



இவர்கள் நம்மவர்களுக்கு அளித்த பதிலின் லட்சனம்

அடுத்து இவரின் பதிலின் லட்சனத்திற்கு வருவோம்.

நாம் இதுவரை வெளியிட்டிருந்த இரண்டு கட்டுரைகளில் இரண்டாவதாக எழுதிய 'ஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள்' என்ற கட்டுரைக்கு என்ன பதில் எழுதி இருந்தார்கள்? எவரோ ஒருவர் எடுத்த வாந்தியை அப்படியே திருப்பி எடுத்துள்ளார்கள். சரி, யாருடைய பதிலாக இருந்தாலும் ஒழுங்கான -அறிவுப்பூர்வமம?ன பதிலாக இருந்திருக்க வேண்டாமா?

எசேக்கியேல்- 23ம் அதிகாரம் முழுவதையும் படித்துப் பாருங்கள். நீங்கள் எழுதியது போல் 'எந்த இடத்தில் இதற்கு இது உவமை' என்று சொல்லப்பட்டுள்ளது. நீங்களாகவே ஒரு ஆபாசமான கதைக்கு இப்படி ஒரு விளக்கம் அளித்துக்கொண்டால் அதெல்லாம் விளக்கங்களாகிவிடுமா? அப்படிஎன்றால் இதேபோல் எத்தனையோ ஆபாசக்கதைகள் எத்தனையோ ஆபாசப்புத்தகங்களிலும் தான் வருகிறது. அதற்கும் ஏதேனும் உவமைக் காரணங்கள் இருக்குமோ?

ஏசேக்கியேல் 23ம் அதிகாரத்தின் தொடக்கத்தில் மிக மிக மிகத் தெளிவாக

'கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனுபுத்திரனே, ஒரே தாயின் குமாரத்திகளாகிய இரண்டு ஸ்திரீகள் இருந்தார்கள். அவர்கள் எகிப்திலே வேசித்தனம் பண்ணினார்கள். தங்கள் இளம்பிராயத்திலே வேசித்தனம்பண்ணினார்கள்... என்றே தொடங்குகிறது. இதில் எங்கய்யா உவமை கண்டுபிடித்தீர்கள்?
.......
.......
மிக் பச்சையாகவே ஒரு ஆபாசக்கதையை சொல்லப்பட்டுள்ளது. இங்கே எந்த இடத்தில் உவமை என்று வருகின்றது?
......
......
இது தான் இவர்களின் பதிலின் லட்சனம்.


Source: http://egathuvam.blogspot.com/2008/03/blog-post_19.html

1. எசேக்கியேல் 23ம் அதிகாரத்தில் வரும் இரண்டு சகோதரிகள் என்பது இரண்டு நாடுகள் ஆகும்.

நம் இஸ்லாமிய நண்பர் என்ன சொல்கிறார் என்றால், இந்த எசேக்கியேல் அதிகாரத்தில் சொல்லப்பட்ட நிகழ்ச்சி, உவமை கிடையாதாம், அதாவது இதில் வரும் இரண்டு சகோதரிகள் சமாரியாவிற்கும், எருசலேமுக்கும் ஒப்பிடப்படவில்லையாம். இவருக்கு "உவமை" என்ற வார்த்தை இருக்கனுமாம்.


எசேக்கியேல் 23:1 – 2:

கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

மனுபுத்திரனே, ஒரே தாயின் குமாரத்திகளாகிய இரண்டு ஸ்திரீகள் இருந்தார்கள்.

இந்த வசனங்களில் வரும் "ஒரே தாய்" என்பது ஆபிரகாமின் மனைவி சாராளை குறிக்கும். அதாவது 12 வம்சங்கள் அனைத்தும் ஆபிரகாம் சாராள் என்ற ஒரு குடும்பத்திலிருந்து வந்தவர்கள். இந்த தாய்க்கு பிறந்தவர்கள் இரண்டு குமாரத்திகள் என்றால் இரு நாடுகள், முதலில் இஸ்ரவேல் என்று ஒரே நாடாக‌ இருந்த 12 வம்சங்கள், இரண்டு நாடுகளாக பிரிக்கப்பட்டது, அதாவது 12 வம்சங்களில் 10 வம்சங்கள் இஸ்ரவேல் என்றும், 2 வம்சங்கள் யூதா என்றும் இரு நாடுகளாக சாலொமோனின் குமாரனுடைய காலத்தில் பிரிந்தது (1 இராஜாக்கள் 12ம் அதிகாரம்). சமாரியாவை தலைநகரமாகக் கொண்டு "இஸ்ரவேல் நாடும்", எருசலேமை தலைநகரமாகக் கொண்டு "யூதா நாடு" என்று இரு நாடுகளாக பிரிக்கப்பட்டது.


எசேக்கியேல் 23:4

அவர்களில் மூத்தவளின் பெயர் அகோலாள், அவளுடைய தங்கையின் பெயர் அகோலிபாள், அவர்கள் என்னுடையவர்களாகி, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றார்கள்; இவைகளே அவர்களுடைய பெயர்கள்; அகோலாள் என்பதற்குச் சமாரியா என்றும், அகோலிபாள் என்பதற்கு எருசலேம் என்றும் பொருளாம்.

மூத்தவளின் பெயர் அகோலாள் : சமாரியா அதாவது இஸ்ரவேல் நாடு, இந்த நாட்டை மூத்தவள் என்று தேவன் சொல்கிறார், ஏனென்றால், இரு நாடுகளாக பிரிக்கப்படாமல் இருந்த போது, இஸ்ரவேல் என்று ஒரு நாடாகத்தான் இருந்தது, மற்றும் இந்த புதிய இஸ்ரவேலில் 10 வம்சங்கள் உள்ளன, மற்றும் அதிகமான நிலப்பரப்பு கொண்டது. அகோலாள் என்றால் "தன் வீடு அல்லது கூடாரம்" என்று பொருள். அதாவது, தேவனின் உடன்படிக்கை பெட்டி இருந்த இருந்தது இஸ்ரவேல் நாட்டில்.


4. Aholah--that is, "Her tent" (put for worship, as the first worship of God in Israel was in a tent or tabernacle), as contrasted with Aholibah, that is, "My tent in her." Source: Search Gods Word Commentary

அவளுடைய தங்கையின் பெயர் அகோலிபாள்: இஸ்ரவேலிலிருந்து யூதா என்ற சிறிய நாடு இரண்டு வம்சங்களோடு தனியாக பிரிந்தது, அதனால், இளையவள் என்று தேவன் சொல்கிறார். அகோலிபாள் என்றால், என் கூடாரம் அவளிடத்தில் உண்டு என்றுப் பொருள். அதாவது, எருசலேமில் தேவனுடைய ஆலையம் சாலொமோனால் கட்டப்பட்டு இருந்தது, அது இப்போது யூதா நாட்டின் தலைநகரமானது.

அவர்கள் என்னுடையவர்களாகி, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றார்கள்; இந்த இரு நாடுகளோடும் மக்களோடும் தேவன் உடன்படிக்கை செய்துள்ளார், இவர்கள் தனக்கு சொந்தமான நாடுகள் என்று தேவன் சொல்கிறார், இந்த இரு நாடுகளில் உள்ள மக்களும் தன் பிள்ளைகள் என்று தேவன் சொல்கிறார்.

[இப்போது இஸ்லாமியர்களுக்கே உரித்தான முறையில் "தேவன் எப்படி ஒரு நாட்டை திருமணம் செய்துக்கொள்ளமுடியும் என்று கேள்வி கேட்காதீர்கள். அவர் எப்படி மக்களை பெறமுடியும் என்று கேள்வி கேட்காதீர்கள். எல்லாரும் சிரிப்பார்கள். "நாம் இந்தியர்கள், ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள்" என்றுச் சொன்னால், எப்படி இது சாத்தியமாகும்? நமக்கு தனித்தனி தந்தை இருக்கிறார்கள் அல்லவா? எப்படி இந்தியர்கள் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள் என்றுக் கேட்டு, உங்கள் அறியாமையை உலகம் அறியும் படி செய்யவேண்டாம். மற்றும் இந்த வசனத்தில் தேவன் இந்த இரு சகோதரிகளை(நாடுகள்) தன் மனைவி அல்லது தன்னுடையவர்கள் என்றுச் சொல்வதால், "பார்த்தீர்களா, பைபிளில் உள்ள தேவனும் இரண்டு மனைவிகளை உடையவர் என்று சொல்கிறார், இப்படி இருந்தும், முஸ்லீம்கள் நான்கு திருமணம் செய்துக்கொள்ள அல்லா சொன்னதை போய் உலகம் குற்றம் பிடிக்கிறதே" என்று லாஜிக்காக பேசவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த வசனம் பற்றி ஜாகிர் நாயக் அவர்களுக்கு தெரிந்தால், போதும் இதையும் தன் லாஜிக்கான பேச்சில் ஒரு பாயிண்டாக சேர்த்துக்கொள்வார்.]

தேவன் தனக்கும் மக்களுக்கும் இடையே இருக்கும் உறவு முறையை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்துகிறார், சில நேரங்களில் எஜமான் வேலைக்காரன் என்ற முறையில் சில உதாரணங்கள் சொல்வார், தான் ஒரு தோட்டக்காரன், தன் மக்கள் திராட்சை கொடிகள் என்றும், தான் ஒரு மேய்ப்பன் என்றும், மக்கள் தன் ஆடுகள் என்றும் சொல்லுவார், சில நேரங்கள் தான் கணவனாகவும், மக்கள் அனைவரும் மனைவியாகவும் சொல்லுவார், சில இடங்களில், நிலத்தை குத்தகைக்கு விட்டுச்சென்ற எஜமானனாகவும், குத்தகைக்கு பெற்றவர்கள் மக்களாகவும் கருதி பேசுவார். இதனை நாம் பைபிளில் பரவலாக காணலாம்.

அகோலாள் என்பதற்குச் சமாரியா என்றும், அகோலிபாள் என்பதற்கு எருசலேம் என்றும் பொருளாம்: இப்போது தான் மிகவும் முக்கியமான வார்த்தைகளுக்கு நாம் வந்துள்ளோம். அதாவது தான் சொன்ன இரு சகோதரிகள் இரு நாடுகளின் தலை நகரங்கள் என்று மிகவும் தெளிவாக, பாமர மக்களுக்கும் புரியும் படி சொல்லியுள்ளார்.

இப்போது சொல்லுங்கள், இப்ராஹிம் அவர்களே, இது இரு நாடுகளின் விழுந்துவிட்ட நிலையை விளக்கிய விவரங்களா அல்லது உண்மையில் இரு பெண்கள் இப்படி வேசித்தனம் செய்த நிகழ்ச்சியா?

ஏதாவது எழுதும் போது, நாம் எழுதும் வசனங்களில் உள்ள பின்னனி என்ன என்று தெரிந்துக்கொண்டு எழுதவேண்டும். இந்த நிகழ்ச்சியில் இரு நாடுகளின் தீய வழிகளைப்பற்றிச் சொல்லப்பட்டுள்ளதா? இல்லையா?

எசேக்கியேல் 23:36
பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ அகோலாளையும் அகோலிபாளையும் குறித்து வழக்காடமனதானால், அவர்களுடைய அருவருப்புகளை அவர்களுக்குத் தெரியக்காட்டு.

இந்த வசனத்தில் எசேக்கியேல் தீர்க்கதரிசிக்கு சொல்கிறார், நீ அவர்களுக்காக என்னோடு வழக்காட விரும்பினால், முதலில் இந்த இரு நாடுகளுக்கும் தன் தன் அருவருப்புக்களை தெரியப்படுத்து, அவர்களின் தவறை சுட்டிக்காட்டு, திருந்தும்படி சொல் என்கிறார். பொதுவாக, தீர்க்கதரிசிகள் மூலமாக மிகவும் கடுமையான தண்டனைகளை தேவன் சொல்லும் போது, அவர்கள் தங்கள் நாட்டிற்காக வேண்டிக்கொள்வார்கள், அப்படி வழக்காட வேண்டுமானால், முதலில் அவர்களை திருந்தச்சொல் என்று தேவன் சொல்கிறார்.

எசேக்கியேல் 23 : 37 – 39
அவர்கள் விபசாரம்பண்ணினார்கள்; அவர்கள் கைகளில் இரத்தமும் இருக்கிறது; அவர்கள் தங்கள் நரகலான விக்கிரகங்களோடே விபசாரம்பண்ணி, தாங்கள் எனக்குப் பெற்ற தங்கள் பிள்ளைகளையும் அவைகளுக்கு இரையாகத் தீக்கடக்கப்பண்ணினார்கள்.

அன்றியும் அவர்கள் என் பரிசுத்த ஸ்தலத்தை அந்நாளிலேதானே தீட்டுப்படுத்தி, என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்கள்.

அவர்கள் தங்கள் பிள்ளைகளைத் தங்கள் நரகலான விக்கிரகங்களுக்கென்று பலியிட்டபின்பு, அவர்கள் என் பரிசுத்தஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்க அந்நாளில்தானே அதற்குள் பிரவேசித்தார்கள்; இதோ, என் ஆலயத்தின் நடுவிலே இப்படிச் செய்தார்கள்.

அவர்கள் தங்கள் மக்களை விக்கிரகங்களுக்கு பலியிட்டு, தீக்கடக்க செய்து தங்கள் பிள்ளைகளை கொன்றார்கள் என்று தேவன் குற்றம் சாட்டுகிறார். பிள்ளைகளை பலியிடுவது தேவன் விரும்புவது இல்லை. தேவனின் ஆலயத்திலும் இப்படி செய்தார்கள் என்றுச் சொல்கிறார்,

இந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டது இரண்டு விதமான குற்றங்கள், அதாவது மற்ற நாடுகளோடு நட்புறவு வைத்துக்கொண்டது, அதே நேரத்தில் தேவனை மறந்து விக்கிரகங்களுக்கு ஆராதனை செய்து பிள்ளைகளை கொன்றது.

Outline of Ezekiel 23


A history of the apostacy of God's people from him, and the aggravation thereof.

- In this parable, Samaria and Israel bbear the name Aholah, "her own tabernacle;" because the places of worship those kingdoms had, were of their own devising. Jerusalem and Judah bear the name of Aholibah, "my tabernacle is in her," because their temple was the place which God himself had chosen, to put his name there. The language and figures are according to those times. Will not such humbling representations of nature keep open perpetual repentance and sorrow in the soul, hiding pride from our eyes, and taking us from self-righteousness? Will it not also prompt the soul to look to God continually for grace, that by his Holy Spirit we may mortify the deeds of the body, and live in holy conversation and godliness?

Source :
Matthew Henry's Commentary

எசேக்கியேலில் 7 உவமைகள்:

நம் ஏகத்துவ தள இப்ராஹிம் அவர்கள், "இது உவமை இல்லை" என்று சாதிக்கிறார், ஆனால், எசேக்கியேல் 15ம் அதிகாரத்திலிருந்து 24ம் அதிகாரம் வரை, தேவன் 7 வகையான உவமைகளால் மக்களை எச்சரித்துள்ளார், திருந்தவில்லையானால், தண்டனை நிச்சயம் என்று எச்சரித்துள்ளார். இந்த உவமைகளில் 6வது தான் 23ம் அதிகாரத்தில் உள்ளது. இந்த ஒவ்வொரு உவமையை பயன்படுத்தி தேவன் மக்களை எச்சரிக்க பல வசனங்களை பயன்படுத்தியுள்ளார். இந்த உவமைகள் ஒருவரியில் சொல்லப்பட்ட உவமைகள் அல்ல, பல வசனங்கள் மூலமாக சொல்லப்பட்டுள்ளது.

உவமை 1: இஸ்ரவேல் என்னும் திராட்சைக்கொடி பிரயோஜனமற்றது (எசே 15:1-8)
Parable One -- Israel the Vine is Useless: 15:1-8

உவமை 2: இஸ்ரவேல் கணவனுக்கு துரோகம் செய்த மனைவி (எசே 16:1-63)
Parable Two-- Israel the Adulterous Wife: 16:1-63

உவமை 3: இரண்டு கழுகுகள் (நேபுகாத்நேச்சர் மற்றும் பார்வோன் அரசன்) (எசே 17:1-24)
Parable Three--Two Eagles (Nebuchadnezzar & Pharaoh), the Rise of the First and the Fall of the Second: 17:1-24

உவமை 4: மிகவும் வலிமையுள்ளதாக நினைத்த இரண்டு சிங்கங்கள்: (எசே 19:1-9)
Parable Four--Two Lions Who Thought Themselves Strong (Jehoahaz & Jehoiakim): 19:1-9

உவமை 5: காய்ந்து மடிந்துவிட்ட திராட்சைக்கொடி (எசே 19:10-14)
Parable Five--The Withered Vine (Zedekiah): 19:10-14

உவமை 6: வேசித்தனம் செய்த சமாரியா எருசலேம் என்னும் இரண்டு சகோதரிகள், மற்றும் அவர்களுக்கு வந்த தண்டனை. எருசலேமை பாபிலோன் நாடும், சமாரியாவை அசீரியா நாடும் மேற்கொள்ளும்படி செய்வேன் என்று தணடனைகள் பிரகடனம். (எசே 23:1-49)
Parable Six--As Two Sisters Lusted ( Samaria & Jerusalem ), So Will God Give the Second over to Babylon as He Did the First to Assyria: 23:1-49

உவமை 7: நகரம் பானையில் கொதிக்கும் தண்ணீரைப்போல தத்தளிக்கிறது
Parable Seven--The City Is in Turmoil like a Boiling Pot: 24:1-14

From Bible.org:
எசேக்கியேல் 12ம் அதிகாரத்திலிருந்து 24ம் அதிகாரம் வரை, தேவன் இந்த தீர்க்கதரிசி மூலமாக 5 அடையாளங்கள், 6 செய்திகள், மற்றும் 7 உவமைகள் மூலமாக தான் இஸ்ரவேல் மீது கொண்டுவரப்போகும் நியாயத்தீர்ப்பை விவரிக்கிறார்.


3. Prophecies of Judgment through Five Signs, Six Sermons, and Seven Parables: Through an interchange of signs, sermons, and parables, the Lord has Ezekiel proclaim the varied nature of the coming judgment upon Jerusalem from Babylon because of the nation's sin 12:1--24:27

a. Sign One--Luggage through the hole in the Wall to Symbolize the Coming Exile: 12:1-6

b. Sign Two--Trembling While Eating to Show Impending Judgment: 12:17-18

c. Message One--The Lord Promises to Judge False Prophets for Their Lies: 13:1-23

d. Message Two--The Lord Will Judge the Elders for Their Idolatry: 14:1-11

e. Parable One-- Israel the Vine is Useless: 15:1-8

f. Parable Two-- Israel the Adulterous Wife: 16:1-63

g. Parable Three--Two Eagles (Nebuchadnezzar & Pharaoh), the Rise of the First and the Fall of the Second: 17:1-24

h. Message Three--Each Person Will Be Judged on the Basis of His Own Life, Not for the Sins of their Fathers:4 18:1-32

i. Parable Four--Two Lions Who Thought Themselves Strong (Jehoahaz & Jehoiakim): 19:1-9

j. Parable Five--The Withered Vine (Zedekiah): 19:10-14

k. Message Four--A Review of Israel's Sinful History From Egypt to the Present: 20:1-44

l. Sign Three--Coming Judgment Is Pictured through Ezekiel's Sword and Groaning: 21:1-7

m. Message Five--A Sharpened Sword Will Certainly Come to the Nation: 21:8-17

n. Sign Four--A Signpost Which Shows Babylon the Way to Judah : 21:18-32

o. Message Six--Because of the Sin of the People in the City, Refining Judgment Will Come: 22:1-31

p. Parable Six--As Two Sisters Lusted ( Samaria & Jerusalem ), So Will God Give the Second over to Babylon as He Did the First to Assyria: 23:1-49

q. Parable Seven--The City Is in Turmoil like a Boiling Pot: 24:1-14

r. Sign Five--Ezekiel Is to Be Silent with the Death of His Wife to Foreshadow the Loss of the People in the City with the Coming Judgment: 24:15-27

Source:
Bible.Org Commentary

இதுவரை படித்தவர்கள் சிந்திக்கட்டும்: இது உண்மையாக நடந்த சம்பவமா அல்லது நாடுகளை குறிப்பிட்டு சொல்லப்பட்ட செய்தியா? உவமை என்ற வார்த்தை வந்தால் தான் அது ஒப்பிட்டு சொல்வது ஆகுமா? "நாம் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள்" என்றுச் சொன்னால், உண்மையான நம் தாயை குறிக்குமா? அல்லது நாட்டை குறிக்குமா? இதில் உவமை என்ற வார்த்தை வந்தால் தான் நாட்டை குறிக்கும் என்று யாராவது சொல்லமுடியுமா?

இவ்வளவு விளக்கியும் "இல்லை இது உண்மையாக நடந்த ஒரு நிகழ்ச்சி தான், இது ஒரு உவமை இல்லை என்றுச் சொல்வீர்களானால், அதற்காக நாம் ஒன்றும் செய்யமுடியாது". எனக்கு ஒரு வசனம் நியாபகம் வருகிறது.

மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடே நொய்யாகக் குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் அவனைவிட்டு நீங்காது. (நீதிமொழிகள் 27:22)

முடிவுரை: சரி, என் முன் வைத்த கேள்விக்கு பதிலை அளித்துவிட்டேன். இப்போது இஸ்லாமியர்கள் தான் நான் இதற்கு முன்பு சொல்லியிருந்த விவரம் பற்றி விளக்கவேண்டும். அதாவது,

அல்லா முஸ்லீம்களுக்கு தன் சொர்க்கத்தில்:


கொடுக்கப்போகும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்?

ஒவ்வொரு முஸ்லீமுக்கு எத்தனை பேர்களை அல்லா தருவார்?

சிலர் சொல்வார்கள், ஜிஹாதில் மரிப்பவர்களுக்கு மட்டும் தான் 70 பெண்களை தருவார், சாதாரணமாக மரிப்பவர்களுக்கு இரண்டு பேர் மட்டும் தான் என்பார்கள். இது உண்மையா?

அவர்கள் எப்படி திடமான மார்பகங்களை உடையவர்களாக இருப்பார்கள்?

அல்லா ஏதாவது பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற ஒரு அறுவை சிகிச்சை முறையில் ஏதாவது செய்வாரா?

ஏன் முஸ்லீம்களுக்கு 100 ஆண்களுடைய அந்த வலிமையை அல்லா தருவார்?

ஒரு குடும்பத்தில் திருமணமாகாமல் இருக்கும் வாலிபன் மரித்துவிட்டால் அவனுக்கும் இந்த பாக்கியம் உண்டா?

சொர்க்கத்தில் இந்த பெண்களை அல்லா தருவது ஒரு உவமையா? அல்லது ஒரு கற்பனையா ? அல்லது உண்மையா?

ஒவ்வொரு முறை ஒரு முஸ்லீம் உடலுறவு கொண்டால், மறுபடியும் அந்த பெண்ணை கன்னியாக அல்லா மாற்றுவாரா?

ஒரே வயதுடைய பெண்கள் என்று நம் தமிழ் அறிஞர்கள் மொழி பெயர்த்தார்களே, அப்படியானால் என்ன பொருள்?

அதாவது, 90 வயதில் ஒரு முஸ்லீம் மரித்தாலும், அவருக்கு 90 வயது பெண்கள் கிடைப்பார்களா?

அல்லது இவரை வாலிபராக 18 வயதுடையவராக மாற்றி 18 வயதுடைய பெண்களை அல்லா கொடுப்பாரா?
போன்ற கேள்விகளுக்கு முஸ்லீம்கள் தான் மக்களுக்கு விளக்கவேண்டும்.

ஏனென்றால், நாங்கள் விளக்கமளித்தால் அது இஸ்லாமுக்கு அவதூறு என்றுச் சொல்லி திட்டுவீர்கள், அதனால், நீங்களே விளக்கிவிடுங்கள்.

இந்த விவரங்கள் என் சொந்த கருத்துக்கள் இல்லை, இவைகள் விகிபீடியாவில் உள்ளது மற்றும் இஸ்லாமிய தளங்களில் கேள்விகள் கேட்கப்பட்டால், "ஆமாம், அல்லா இப்படிப்பட்ட பெண்களை தருவார் என்று பதில் அளித்துள்ளார்கள்." அதாவது, அந்த பெண்களின் கை கால்களைப்பார்த்தால், ஒரு பக்கத்திலிருந்து நாம் பார்த்தால், அடுத்த பக்கம் இருக்கும் பொருள் தெரியுமாம், அதாவது அந்த உடல் அப்படி கண்ணாடிப்போன்று இருக்குமாம், எலும்புகளும் அப்படியே கண்ணாடிப்போன்று இருக்குமாம். இந்த இஸ்லாமிய தள கட்டுரையை படியுங்கள், ஒரு நபர் சொர்க்கத்தில் உடலுறவு இருக்குமா என்று கேட்டதற்கு குர்‍ஆன் அடிப்படையில் பதில் அளிக்கப்பட்டுள்ளது (Question:
I'm wondering will the men from amongst the human race that enters paradise, will they have sexual intercourse with the "HOURIS" women in the paradise .  - http://www.islamqa.com/index.php?ref=10053&ln=eng )


From Wikipedia: http://en.wikipedia.org/wiki/Houri

Description:

The houri have variously been described as being

"chaste females"[8],
"restraining their glances"[8][9],
"modest gaze"[4],
"wide and beautiful/lovely eyes"[8][10][11][12][3],
"untouched / with hymen unbroken by sexual intercourse"[9][13],
"like pearls"[14],
"virgins"[15],
"voluptuous/full-breasted"[16][5],
"with large, round breasts which are not inclined to hang"[17],
"companions of equal age"[16][2],
"non-menstruating/urinating/defecating and childfree"[17][18],
"60 cubits [27.5 meters] tall"[19][20][18],
"7 cubits [3.2 meters] in width"[18],
"transparent to the marrow of their bones"[17][21],
"eternally young"[22],
"hairless"[22]
with "appetising vaginas"[23],
"pure"[21],
"beautiful"[21],
"white"[24],
"revirginating"[23],
"splendid"[1] and much more besides.

இந்த மேலே உள்ள பட்டியலில் bold செய்யப்பட்ட வார்த்தைகளுக்கு தமிழில் என்ன பொருள் என்று நீங்களே கண்டுபிடியுங்கள்.

அடேங்கப்பா! எவ்வளவு தகுதிகள், இந்த தகுதிகள் இருக்கும் பெண்களை அல்லா சொர்க்கத்தில் கொடுக்காமல், இந்த பூமியிலேயே இதில் சொல்லப்பட்ட தகுதிகள் அனைத்தும் உள்ள பெண்களை படைத்து இருந்தால்,இப்படிப்பட்ட பெண்ணை திருமணம் செய்யும் எந்த ஆணும் வேறு ஒரு பெண் பக்கம் தன் பார்வையை திருப்புவானா? திருப்பவே மாட்டான்.

இதை நான் ஏன் இந்த கட்டுரையில் குறிப்பிட்டேன் என்றுச் சொன்னால், இது கற்பனையா அல்லது உண்மையா என்று முஸ்லீம்களிலிருந்து தெரிந்துக்கொள்ளலாம் என்று தான். ஒரு உவமையை சொன்னதால், அது வேதமாக இருக்கமுடியாது என்று நிபந்தனை போடும் முஸ்லீம்கள், இப்படிப்பட்ட பெண்களை அனேகரை முஸ்லீம்களுக்கு தருவேன் என்றுச் சொன்னது உண்மையா? என்பதை தெரிந்துக்கொள்ளலாம் என்று தான்.

மேலும் படிக்க:

1.
Muhammad, Islam, and Sex - (The Prophet of Allah liked three worldly objects - perfume, women and food)

2.
Muhammad's Sexual Prowess.

3. MUHAMMAD AND THE FEMALE CAPTIVES

4.
All About Mohammad

5.
Questionable Language Of The Quran

6.
அபாச ஹதீஸ்களின் பட்டியல்

Source : http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/egaththuvam/ezekielPart-2.html

Isa Koran Home Page Back - Egaththuvam Rebuttal Index page
1

திங்கள், 14 ஜனவரி, 2008

முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்(MUHAMMAD'S USE OF TORTURE)

        

முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்

ஆசிரியர்: சாமுவேல் கிரீன்

MUHAMMAD'S USE OF TORTURE

By Samuel Green

தமிழாக்கம்

( ஆங்கிலத்தில் இக்கட்டுரையை படிக்க
MUHAMMAD'S USE OF TORTURE - By Samuel Green ஐ சொடுக்கவும்)


இஸ்லாமை வளர்க்கவேண்டும் என்று உழைக்கும் இஸ்லாமிய அறிஞர்கள் "முகமது எவ்வளவு நல்லவராக வாழ்ந்தார்" என்று மற்றவர்களுக்கு போதிப்பார்கள். " இன்றைய மனித இனத்திற்கு முகமதுவின் வாழ்க்கை ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது" என்றுச் சொல்லுவார்கள். பல முஸ்லீம்களிடமும் முஸ்லீம்களில்லாதவர்களிடமும் முகமதுவைப் பற்றிப் பேசிப் பார்த்ததில் ஒன்று மட்டும் எனக்கு மிகவும் தெளிவாக புரிந்துவிட்டது. அது என்னவென்றால், இவர்கள் முகமதுவின் உண்மையான வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும் விவரங்களை, புத்தகங்களை படிக்கவில்லை என்பது தான் அது. மற்றும் முகமது தன் வாழ்க்கையில் என்னென்ன செய்தார் என்று இவர்களுக்கு தெரியவில்லை. அவர் செய்த பல செயல்களில் ஒன்று தான் " மற்றவர்களை கொடுமைப்படுத்துவது ". 

முதன் முதலாக முகமதுவின் வாழ்க்கை சரிதையை எழுதியவர் மதினாவில் பிறத இபின் இஷாக் (85-151 ஹிஜரி)  என்பவராவார். இந்த சரிதையில் "கைபர்" என்ற பட்டணத்தை முகமது கைப்பற்றிய பிறகு என்னென்ன செய்தார் என்பதைப் பற்றி தெரிந்துக்கொள்ளமுடியும். இந்த நிகழ்ச்சியை இபின் கதிர்[1] ஏற்றுக்கொண்டுள்ளார் மற்றும் அதைப் பற்றி எழுதியும் உள்ளார்.

கைபர் பட்டணம் பற்றிய மிதமுள்ள விவரங்கள் ( THE REST OF THE AFFAIR OF KHAYBAR )

கினானா பி. அல்-ரபி என்பவர் அல்-நதிர் என்பவரின் பொக்கிஷங்களின் பாதுகாவலன் ஆவார். இவரை நபியிடம் அழைத்துக்கொண்டு வந்தார்கள், முகமது பொக்கிஷங்களைப் பற்றி இவரிடம் கேட்டார். பொக்கிஷங்கள் எங்கே உள்ளது என்று தனக்கு தெரியாது என்று அவர் மறுத்தார். ஒரு யூதன் நபியிடம் வந்தான்(T. was brought) , "இந்த கினானா ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஒரு பாழடைந்த இடத்திற்கு சென்று வருவதை நான் கண்டு இருக்கிறேன்" என்றுச் சொன்னான். நபியவர்கள் கினானாவிடம் " நாங்கள் அந்த பொக்கிஷங்கள் உன்னிடம் இருப்பதாக கண்டுபிடித்தால், உன்னை கொன்றுவிடுவோம்" என்றுச் சொன்னார்கள், அதற்கு கினானா, "அப்படியே என்னை கொன்றுவிடுங்கள்" என்றுச் சொன்னான். நபியவர்கள் அந்த பாழடைந்த இடத்தை தோண்டி தேடிப்பார்க்கும் படி கட்டளையிட்டார்கள். அப்படி தேடிப்பார்க்கும் போது, அந்த இடத்தில் கொஞ்சம் பொக்கிஷங்களை அவர்கள் கண்டுபிடித்தார்கள். பின்பு நபியவர்கள் கினானாவிடம் மீதமுள்ள பொக்கிஷங்கள் எங்கே மறைத்து இருக்கிறாய்? என்று கேட்டபோது, அதை தெரிவிக்க கினானா மறுத்துவிட்டான். எனவே, நபியவர்கள் அல்-ஜுபைர் பி.அவ்வம் என்பவருக்கு கட்டளையிட்டு, " இவனிடம் மிதமுள்ள பொக்கிஷங்களை நீங்கள் தெரிந்துக்கொள்ளும் வரை இவனை கொடுமைப்படுத்துங்கள்(Torture)" என்றுச் சொன்னார். எனவே, அல்-ஜுபைர் நெருப்பை மூட்டி, இரும்பை சூடுபடுத்தி கினானாவின் மார்பிலே வைத்தான். கினானா கிட்டத்தட்ட மரித்தவன்போல் ஆகிவிட்டான். பிறகு நபி கினானாவை முஹம்மத் பி. மஸ்லமாவிடம் ஒப்புக்கொடுத்தார், அவன் தன் சகோதரன் மஹ்மத்காக பழிக்கு பழிவாங்க கினானாவின் தலையை துண்டித்து விட்டான். (Ibn Ishaq, Sirat Rasul Allah, translated as, The Life of Muhammad, (tr. A. Guillaume), Karachi: Oxford University Press, 1998, p. 515.)


THE REST OF THE AFFAIR OF KHAYBAR

Kinana b. al-Rabi`, who had the custody of the treasure of B. al-Nadir, was brought to the apostle who asked him about it. He denied that he knew where it was. A Jew came (T. was brought) to the apostle and said that he had seen Kinana going round a certain ruin every morning early. When the apostle said to Kinana, "Do you know that if we find you have it I shall kill you?" he said Yes. The apostle gave orders that the ruin was to be excavated and some of the treasure was found. When he asked him about the rest he refused to produce it, so the apostle gave orders to al-Zubayr b. al-`Awwam, " Torture him until you extract what he has," so he kindled a fire with flint and steel on his chest until he was nearly dead. Then the apostle delivered him to Muhammad b. Maslama and he struck off his head, in revenge for his brother Mahmud. (Ibn Ishaq, Sirat Rasul Allah, translated as, The Life of Muhammad, (tr. A. Guillaume), Karachi: Oxford University Press, 1998, p. 515.)


முகமதுவின் இந்த செயல், அவருடைய நடத்தையைப் பற்றிய மிகவும் முக்கியமான விவரத்தை நமக்கு போதிக்கிறது. தன் இலக்கை அடைவதற்கு கொடுமைபடுத்துவதை ஒரு ஆயுதமாக பயன்படுத்திய மனிதனாக முகமது உள்ளார். இந்த நிகழ்ச்சியில், முகமதுவிற்கு அல்-நதிர் என்ற இனமக்களின் "பொக்கிஷங்கள்" தேவைப்பட்டது. அந்த பொக்கிஷ சாலையின் பாதுகாவலன் அதை முகமதுவிற்கு கொடுக்கவில்லை. அதனால், அவனை கொடுமைப்படுத்தும் படி முகமது கட்டளையிட்டார். முகமதுவின் தோழர்களுக்கு ஒரு மனிதனை எப்படி கொடுமைப்படுத்தவேண்டும் என்று நன்றாகத் தெரியும், எனவே, அவனை கொடுமைப்படுத்த ஆரம்பித்தனர். இப்படிப்பட்டவர் தான் முகமது என்பவர். முகமது விரும்பினால் மற்றவர்கள் மீது பரிதாபப்பட்டு அவர்களை மன்னிக்கமுடியும், அதே நேரத்தில் தன் அரசாங்கத்தை விஸ்தரிக்கச் செய்வதற்காகவும் பணத்திற்காகவும் மற்றவர்களை கொடுமைப்படுத்தவும் அவரால் முடியும். இந்த வகையில் பார்க்கும் போது, உலக சரித்திரத்தில் வாழ்ந்த சாதாரண அரசர்கள் மற்றும் சர்வாதிகாரிகள் போல இவரும் செயல்பட்டுள்ளார். 

முகமதுவைப் பற்றி பெரும்பான்மையான மக்களுக்கு தெரிந்திருப்பது உண்மையின் ஒரு பாதி மட்டும் தான் என்பது மிகவும் கொடுமையானது, வருந்தப்படத் தக்கது. இஸ்லாமையும், முகமதுவையும் பற்றிச் சொல்லி இஸ்லாமை வளர்க்கும் அறிஞர்கள் நேர்மையானவர்களாக இருந்து, "முகமதுவின் உண்மையான வாழ்க்கையைப் பற்றியுள்ள எல்லா விவரங்களையும்" சொல்லவேண்டும். "முகமது ஒரு பின்பற்றத்தகுந்த எடுத்துக்காட்டாக இருக்கிறாரா இல்லையா" என்று நாங்கள் முடிவு செய்வதற்கு முன்பு, அவருடைய வாழ்க்கையைப் பற்றிய எல்லா விவரங்களையும் நாங்கள் அறிய விரும்புகிறோம்.

இயேசுவின் வாழ்க்கையே எல்லாரும் பின்பற்றத் தகுந்த எடுத்துக்காட்டாக உள்ளதென்று நான் சொல்வேன். நீங்கள் இயேசுவின் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துக்கொள்ளவும், அவரை பின்பற்றவும் உங்களை நான் அன்புடன் அழைக்கிறேன். பைபிளில் இயேசுவைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறது என்று தெரிந்துக்கொள்ள
இந்த தொடுப்பை க்ளிக் செய்யவும்.


Endnotes

[1] Ibn Kathir, Al-Sira al-Nabawiyya, translated as, The Life of the Prophet Muhammad, (tr. Prof. Trevor Le Gassick), Reading, UK: Garnet Publishing Limited, 2000, vol. 3, p. 268.

Further Reading

Read about
Muhammad's use of assassins and intimidation to spread Islam.

ஆசிரியர் சாமுவேல் கிரீன் அவர்களோடு தொடர்பு கொள்ள: மெயில் விலாசம்
ஆசிரியருடைய இதர கட்டுரைகள் ஆங்கிலத்தில் படிக்க : இங்கே சொடுக்கவும்.


Christian-Muslim Discussion Papers © 2005

மூலம்:
MUHAMMAD'S USE OF TORTURE - By Samuel Green


தமிழாக்கம் முற்றிற்று

மேலும் படிக்க : Thoughts on the Prophethood of Muhammad

Source:  http://www.answering-islam.org/Silas/index.htm



Isa Koran Home Page Articles Index Author Samuel Green's Index
1
 
 
 

புதன், 9 ஜனவரி, 2008

பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி? - சாமுவேல் கிரீன்

                      

பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?

ஆசிரியர்: சாமுவேல் கிரீன்

COMPARING THE BIBLE AND THE QUR'AN
(How to do it Accurately)
By Samuel Green

தமிழாக்கம்
( ஆங்கிலத்தில் இக்கட்டுரையை படிக்க
இங்கு சொடுக்கவும்)


கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் சில விவரங்களைப் பற்றி விவாதிக்கும் போது, சில நேரங்களில் பைபிளையும் குர்ஆனையும் ஒன்றையொன்று ஒப்பிடுகிறார்கள். அவர்கள் பெரும்பான்மையாக கீழ் கண்ட விதங்களில் (தலைப்புக்களில்) அவைகளை ஒப்பிடுகிறார்கள்.
வேதங்கள் எப்படி பாதுகாக்கப்பட்டது (Preservation of text )

வேதங்களின் அதிகாரபூர்வமான தொகுப்புக்கள் (Formation of canon )

இயேசு, பெண்கள், போர்கள் போன்ற தலைப்புகள் குறித்து வேதங்கள் என்ன போதிக்கின்றன (Teaching about Jesus, women, warfare, etc. )

விஞ்ஞான பிழையின்மை (அ) ஆதாரம் (Scientific accuracy )

முரண்பாடுகள் (Contradictions)


நானும் இப்படிப்பட்ட ஒப்பிட்டு முறையைத் தான் கடந்த காலத்தில் செய்துவந்தேன்.  உண்மையில் இது ஒரு பிழையுள்ள மற்றும் நம்மை தவறான வழியில் நடத்தக்கூடிய "ஒரு ஒப்பிட்டு முறையாகும்". இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

காரணம் 1: பைபிள் மற்றும் குர்‍ஆன் வசனங்களின் சூழ்நிலை (Reason 1. The Context of the Bible and Qur'an)

குர்ஆன் முகமதுவின் வாழ்க்கையைச் சுற்றியுள்ள விவரங்களையும் மற்றும் வெளிப்பாடுகளையும் சொல்கிறது. முகமது, தன் வாழ்க்கையில் நிகழ்ந்த பல சூழ்நிலைகளுக்கு பதிலாக குர்‍ஆன் வசனங்களைச் சொன்னார் அல்லது அவருக்கு வசனங்கள் வெளிப்பட்டது. ஆனால், அந்த சூழ்நிலைகள் (அ) சந்தர்பங்கள் என்ன? போன்ற விவரங்கள் குர்‍ஆனில் எழுதப்படவில்லை. அதாவது, குர்‍ஆன் தன் சொந்த வசனங்கள் வெளிப்பட்ட சூழ்நிலையையும்(Context), கால வரிசை விவரங்களையும்(Chronology) கொண்டு இருக்கவில்லை. குர்‍ஆனை சரியாக புரிந்துக்கொள்வதற்கு, அதன் வசனங்கள் வெளிப்பட்ட சூழ்நிலையையும்(Context), காலவரிசை விவரங்களையும்(Chronology) தெரிந்துக்கொள்வது மிக மிக அவசியமாக உள்ளது. ஆனால், இந்த சூழ்நிலையையும், காலவரிசை முறையையும் நாம் தெரிந்துக்கொள்ளவேண்டுமானால், குர்‍ஆனுக்கு வெளியே உள்ள "இஸ்லாமிய பாரம்பரிய" நூல்களாகிய "ஹதீஸ்களையும், சீராவையும் (Hadith or Sira literature)" நாம் படித்து தெரிந்துக்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட நூல்கள் நமக்கு குர்‍ஆன் வசனங்கள் வெளிப்பட்ட சூழ்நிலையை சொல்கின்றன. இஸ்லாமிய அறிஞர் Habib Ur Rahman Azami (ஹபீப் உர் ரஹ்மான் அஜாமி) "குர்‍ஆன் ஹதீஸ்கள் மீதும் சீராவின் மீதும் ஆதாரப்பட்டுள்ளது " என்று மிகவும் தெளிவாகச் சொல்லியுள்ளார்.
ஹதீஸ்கள் பயனற்றவை என்றும், அதிகார பூர்வமற்றது என்றும் அவைகளை ஒதுக்கிவிட்டால், குர்‍ஆனில் உள்ள பெரும்பான்மையான வசனங்களின் பொருளும், அவைகளை புரிந்துக்கொள்வதும் முடியாமல் போய்விடும். (Habib Ur Rahman Azami, The Sunnah in Islam, pp. 29-31.)

(I)t is almost impossible to understand or explain the meaning of a large number of Qur'anic verses if the Traditions are rejected as useless and inauthentic. (Habib Ur Rahman Azami, The Sunnah in Islam, pp. 29-31.)

ஆனால், பைபிள் வித்தியாசமானது. பைபிள் தன் வசனங்களை புரிந்துக்கொள்ள தேவையான சூழ்நிலையையும்(Context), காலவரிசை விவரங்களையும்(Chronology) தன்னுள் கொண்டுள்ளது. பைபிளின் வெளிப்பாடுகள் உலகம் உண்டானது எப்படி என்ற விவரங்களோடு ஆரம்பிக்கிறது, அதன் பிறகு நடந்த நிகழ்வுகளை சொல்லிக்கொண்டு வந்து கடைசியில், உயிர்த்தெழுதல் காலத்தைப் பற்றி சொல்லி விட்டு, சரியாக முடிவடைகிறது. பைபிள் பல கட்டளைகளை கொடுக்கும் போது அல்லது நற்செய்தியை அறிவிக்கும் போது, அவ்வசனங்கள் எந்த சூழ்நிலையில்(Context) வெளிப்பட்டது என்ற விவரங்களை மிகவும் தெளிவாகச் சொல்கிறது. ஆகவே, நீங்கள் பைபிளை புரிந்துக்கொள்ள வேண்டுமானால், உங்களுக்கு தேவை பைபிள் மட்டும் தான்.

இறைவனுடைய வார்த்தைகள் எப்படி இருக்கவேண்டுமோ அது போல, பைபிள் தன் சுயதேவையை தானே பூர்த்திசெய்துக்கொள்ளும் தகுதியுடையதாக உள்ளது. எனவே, பைபிளை குர்‍ஆனோடு மட்டும் ஒப்பிட்டு பார்ப்பது பிழையுள்ளதாகும் மற்றும் அது தவறான முடிவுக்கு கொண்டுபோகும்.
(The Bible is self-sufficient, as the word of God should be. Therefore to compare the Bible to the Qur'an alone is misleading and inaccurate.)

காரணம் 2: பழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் (Practices and Beliefs)

இஸ்லாமின் பெரும்பான்மையான அடிப்படை கோட்பாடுகள், நம்பிக்கைகள் பற்றிய விவரங்கள் குர்ஆனில் இல்லை.

"முகமது சொன்னது, செய்தது" என்று சொல்லக்கூடிய "சுன்னா-Sunnah" என்பது குர்‍ஆனுக்கு துணையாக உள்ள அடுத்தபடியான நூல்கள் ஆகும். உண்மையைச் சொல்லவேண்டுமானால் சில சந்தர்பங்களில் இந்த "சுன்னா" குர்‍ஆனை விட அதிக முக்கியத்துவம் பெறுகிறது அல்லது "சுன்னா" வின் கை குர்‍ஆனைவிட ஒரு படி மேலே நிற்கிறது.

உதாரணத்திற்கு ஒரு எடுத்துக்காட்டை இங்கு சொல்லட்டும், அதாவது குர்‍ஆன் தினமும் மூன்று முறை நமாஜ் செய்யவேண்டும்(24:58 and 11:114) என்று சொல்லும் போது, சுன்னா "ஐந்து முறை" தினமும் நமாஜ் செய்யவேண்டும் என்று சொல்கிறது (முஸ்லீம்கள் இன்று பின்பற்றுவது "சுன்னா" நிர்ணயித்த தினமும் 5 முறை நமாஜ் செய்வதைத்தான், குர்‍ஆன் சொல்வதை அல்ல‌ ).


இன்னும் சில சந்தர்பங்களில் இஸ்லாமின் ஆரம்ப கால பழக்கவழக்கங்களை பார்க்கும் போது, சில பழக்கங்கள், "சுன்னா" விற்கு முரண்பட்டவையாக கூட இருந்தது. உண்மையைச் சொல்லவேண்டுமானால், குர்‍ஆன் வெளிப்படையாக எல்லா கட்டளைகளையும் சொல்லவில்லை , இஸ்லாமின் அடிப்படை கட்டளைகளையாவது குர்‍ஆன் முழுமையாக சொல்வதில்லை. அதாவது, குர்‍ஆன் "நமாஜ் (தொழுகை)" செய்யவேண்டும் என்று கட்டளையிடுகிறது, ஆனால், எப்படி செய்யவேண்டும்? என்று சொல்வதில்லை. எப்படி நமாஜ் செய்யவேண்டும்? என்ற வழிமுறை முழுக்க முழுக்க "சுன்னா"வின் மீது ஆதாரப்பட்டுள்ளது. (Cyril Glass鬠"Sunnah", The Concise Encyclopedia of Islam, pp. 381-382.)

குர்ஆன் தினமும் தொழவேண்டிய தொழுகையாகிய "நமாஜ்" என்ற சலாவை(Salah) கடமையாக்கி அதை கட்டளையிட்டுள்ளது, மற்றும் அதை எப்படி செய்யவேண்டும் என்ற சில விவரங்களை (like Qiyam, Ruku`, Sujud and Qira'ah) குர்ஆன் சொல்கிறது. ஆனால், நமாஜை சரியான முறையில் எப்படி செய்யவேண்டும் என்பதையும், இந்த நமாஜ் சம்மந்தப்பட்ட இதர செயல்பாடுகள் எந்த வரிசையில் செய்யவேண்டும் என்பதைப் பற்றிய விவரங்கள் குர்ஆனில் சொல்லப்படவில்லை. அதே போல, ஹஜ்(Hajj) என்னப்பட்ட "மக்காவிற்குச் செல்லும் புனித யாத்திரை" என்பது ஒரு மதசம்மந்தப்பட்ட கடமை என்று குர்ஆன் சொல்கிறது. ஆனால், ஹஜ் என்பதை எந்த ஒழுங்கில்(Method) செய்யவேண்டும்? ஹஜ் செய்யும் போது என்னென்ன சாம்பிரதாயங்களை(Formalities) எப்படி செய்யவேண்டும்? போன்ற விவரங்களை குர்ஆன் விவரிப்பதில்லை. ஹஜ்ஜை எப்படி செய்யவேண்டும் என்று சரியான வழிமுறையை நபியே செய்துகாட்டியுள்ளார். (Habib Ur Rahman Azami, pp. 10-11.)

குர்ஆன் மற்றும் சுன்னா(Sunnah) என்ற இரண்டின் உதவியுடன் மட்டுமே இஸ்லாம் சட்டம்(Islamic Shariah) முழுமைபெறும். (Habib Ur Rahman Azami, p. 5.)


எப்படி தொழவேண்டும்? எப்போது தொழவேண்டும்? மற்றும் என்ன சொல்லி தொழவேண்டும்? ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது அதை எப்படி செய்யவேண்டும்? சுன்னத்து(circumcision) எப்படி செய்யவேண்டும்? போன்ற, இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகள் பெரும்பான்மையாக முகமதுவின் செயல்பாடுகளிலிருந்து(சுன்னா) வருகிறது . இஸ்லாமுக்கு சுன்னா(Sunnah) என்பது மிக முக்கியமானது, ஆனால், சுன்னா என்பது குர்ஆனிலிருந்து வரவில்லை, அதற்கு பதிலாக அது ஹதீஸ்களிலிருந்தும், சீராவிலிருந்தும் வருகிறது. மறுபடியும் நாம் கவனிக்கும் பொது, பைபிள் கோட்பாடுகள் இப்படி இல்லை. ஒரு கிறிஸ்தவனுக்கு தேவையான எல்லாவற்றையும் பைபிள் தன்னகத்தே கொண்டுள்ளது. இறைவன் நம்மை இரட்சிப்பதற்காக என்ன செய்தார்? மற்றும் இதனால் தன் பெயர் எப்படி கனப்படுத்தப்படும் மற்றும் நாம் எப்படி வாழவேண்டும்? போன்றவற்றை பைபிள் தெளிவாகச் சொல்கிறது. பைபிள் நம்முடைய ஞானத்திற்கும் விடுதலைக்கும் ஆதாரமாக உள்ளது. எனவே, பைபிளை குர்‍ஆனோடு மட்டும் ஒப்பிட்டு பார்ப்பது பிழையுள்ளதாகும் (inaccurate) மற்றும் அது தவறான முடிவுக்கு(misleading) கொண்டுபோகும்.

மிகச் சரியான ஒப்பிடும் முறை ( A More Accurate Comparison )

இப்போது ஒன்று மட்டும் தெளிவாக புரிந்துவிட்டது, அதாவது பைபிளை குர்ஆனோடு ஒப்பிடுவது என்பது சரியான ஒப்பிடுதல் அல்ல. ஏனென்றால், பைபிள் கிறிஸ்தவத்தின் அஸ்திபாரம் ஆகும். ஆனால், குர்ஆன் இஸ்லாமின் அஸ்திபாரம் அல்ல. மாறாக, குர்ஆன், ஹதீஸ்கள், மற்றும் சீரா இவை மூன்றும் இஸ்லாமின் அஸ்த�=As��Aாரமாக உள்ளது. நீங்கள் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய புத்தகங்களை நேர்மையாகவும், சரியான முறையிலும் ஒப்பிட்டு பார்க்கவேண்டும் என்று விரும்பினால், நீங்கள் இவ்விரு மார்க்கங்களின் முக்கியமான புத்தகங்களை ஒப்பிட்டுப்பார்க்கவேண்டும்.
( If you want an honest and accurate comparison between the books of Christianity and Islam then you must compare the essential books of both religions.)

ஹதீஸ்கள் பற்றிய சில விவரங்கள்: "ஹதீஸ் - hadith" என்ற வார்த்தையின் அர்த்தம் "ஒரு பொருளின் விவரம் அல்லது செய்தி (an account or news about something) " என்பதாகும். ஒரு ஹதீஸின் அளவு ஒரு வாக்கியமாகவோ அல்லது ஒரு பக்கம் அளவிற்கோ இருக்கும். இஸ்லாமைப் பொருத்தவரை முகமது என்ன சொன்னாரோ மற்றும் அவர் என்ன செய்தாரோ அது தான் ஹதீஸ்களின் முக்கிய கருப்பொருளாக உள்ளது. இதைத் தான் "சுன்னா" என்றுச் சொல்வார்கள், ஆக, ஹதீஸ்களில் இருப்பது "சுன்னா" ஆகும். ஹதீஸ்கள் பலவகையில் மிகப்பெரிய தொகுப்புகளாக உள்ளது. முக்கியமான ஹதீஸ் தொகுப்புக்கள் என்ன என்று பேராசிரியர். மசுத்-உல்-ஹசன் அவர்கள் விளக்குகிறார்.

முசன்னப் ("Musannaf"[1]) முறைப்படி அங்கீகரிக்கப்பட்ட ஹதீஸ்களின் தொகுப்புக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
அல்-புகாரி (கி.பி. 870 ) [7658 ஹதீஸ்களின் தொகுப்பு]

முஸ்லீம் (கி.பி. 875 ) [7748 ஹதீஸ்களின் தொகுப்பு]

அபு தாவுத் (கி.பி. 875 ) [5276 ஹதீஸ்களின் தொகுப்பு]

அல்-திர்மிதி (கி.பி. 892) [4415 ஹதீஸ்களின் தொகுப்பு]

அல்-நசய் (கி.பி. 915) [5776 ஹதீஸ்களின் தொகுப்பு]

இபின் மஜா (கி.பி. 886) [4485 ஹதீஸ்களின் தொகுப்பு]

... அல்-புகாரி மற்றும் முஸ்லீம் ஹதீஸ் தொகுப்புக்கள் மிகவும் உயர்ந்ததாகவும் உண்மையானதாகவும் மதிக்கப்படுகிறது, எனவே இவை இரண்டும் "அல்-சஹிஹை - Al-Sahihain" ஆதாரப்பூர்வமான மற்றும் அதிகாரபூர்வமான ஹதீஸ்கள் என்று அழைக்கப்படுகிறது.
Al-Bukhari
The collection of hadith 
by Imam Bukhari.
9 volumes in the 
English/Arabic translation.
Muslim
The collection of hadith 
by Imam Muslim.
8 volumes in the 
English/Arabic translation.


மஸ்நத் - "Musnad"[2] முறைப்படி மிகவும் புகழ்பெற்ற ஹதீஸ் "அஹமத் இபின் ஹன்பல் " (கி.பி. 855 )தொகுத்த ஹதீஸ் தொகுப்பாகும்.

ஷியா முஸ்லீம் பிரிவினரின் ஹதீஸ் தொகுப்புக்களில், முகமது நபி என்ன சொன்னாரோ அல்லது செய்தாரோ போன்ற செய்திகளை மட்டும் அது உள்ளடக்கிக் கொண்டு இருப்பதோடு மட்டுமல்லாமல், ஷியா இமாம்கள்(அறிஞர்கள்)சொன்னதும் செய்ததும் அது உள்ளடக்கியுள்ளது.


ஷியா முஸ்லீம் பிரிவினரின் ஹதீஸ் தொகுப்புக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


முஹம்மத் இபின் யாகுப் அல்-குல்லுனி (கி.பி. 939)

முஹம்மத் அல்-ஹும்மி (கி.பி. 991)

தஹிர் அல்-ஷரிப் அல்-முர்தஜா (கி.பி. 1004)

முஹம்மத் அல்-துசி (கி.பி. 1067) (Prof. Masud-ul-Hasan, History of Islam, vol. 1, p. 613.)

"முவட்டா மாலிக் - Muwatta of Malik" என்ற பெயரில் ஒரு முக்கியமான ஹதீஸ் தொகுப்பும் உள்ளது.

சீராவைப் பற்றிய சில விவரங்களைத் தெரிந்துக்கொள்ளலாம். "சீரா"க்கள் என்பது முகமதுவின் வாழ்க்கையைப் பற்றிய சரிதைகள் ஆகும். இவைகள் முகமதுவின் வாழ்க்கையின் சூழ்நிலையையும், கால வரிசை முறையையும் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையும், கால வரிசை முறையும் தான் குர்ஆன் வசனங்களின் சூழ்நிலையும்(Context), காலவரிசையு(Chronology)மாக இருக்கிறது. பழமைவாய்ந்த இரண்டு சீராக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

முஹம்மத் இபின் இஷாக் (கி.பி. 773) Via இபின் ஹிஸம் (கி.பி. 840) recension, சீரத் ரசூல் அல்லாஹ் (English translation 798 pages[3].)

முஹம்மத் இபின் சைத் (கி.பி. 852), கிதாப் அல்-தபாகத் அல்-கபீர் (English translation, 1097 pages[4].)


( Muhammad ibn Ishaq (d. 773 C.E.) via ibn Hisham's (d. 840 C.E.) recension, Sirat Rasul Allah. (English translation 798 pages[3].)

Muhammad ibn Sa'd (d. 852 C.E.), Kitab al-Tabaqat al-Kabir, (English translation, 1097 pages[4].))

Ibn Ishaq
Ibn Ishaq, Sirat Rasul Allah 
translated as 'The Life of Muhammad'
Ibn Sa'd
Ibn Sa'ad, Kitab
Al-Tabaqat Al-Kabir

இக்கட்டுரையை படிக்கும் நீங்கள், இஸ்லாம் மார்க்கத்திற்கு குர்ஆன் மட்டுமல்லாமல், இன்னும் பல முக்கியமான புத்தகங்கள் இருப்பதை கவனிக்கமுடியும். இந்த இதர புத்தகங்களின் அளவை பார்க்கும் போது அவைகள் குர்ஆனை விட மிகவும் பெரியதாக காணப்படுகிறது.

புகாரி மற்றும் முஸ்லீம் ஹதீஸ்களில் உள்ள வசனங்களின் எண்ணிக்கை குர்ஆனின் மொத்த வசனங்களாகிய 6236 வசனங்களை விட அதிகமாக உள்ளது. ஒரு முன்னாள் இஸ்லாமிய அறிஞர் ஒரு முறை எனக்கு கீழ்கண்டவாறுச் சொன்னார், அதாவது, "இஸ்லாமில் 10% குர்ஆன் மற்றும் 90% ஹதீஸ்கள் (ஹதீஸ் மற்றும் சீரா)" என்றார். குர் ஆன் என்பது ஒரு "வரை படத்தின்" நான்கு பக்கங்களிலும் போடப்பட்டு இருக்கும் சட்டங்கள்(Frame) போன்றது. குர்ஆன் சில எல்லைகளை குறித்துக் கொடுக்கும், ஆனால் அந்த படத்தில் வரையப்பட்டிருக்கும் விவரங்கள் அனைத்தும் ஹதீஸ்கள் மூலமாக கொடுக்கப்படுகிறது. ( The Quran is like the frame of a picture. It sets some boundaries, but the details of the picture are provided by the traditions. )

சில செயல்முறை விளக்கங்கள்: (Some Application)

1. பைபிளை குர்ஆனோடு ஒப்பிடும் இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் தலைவர்கள் நேர்மையுள்ளவர்களாக நடந்துக்கொண்டு மக்களை ஏமாற்றுவதை இனி நிறுத்திவிடவேண்டும். அவர்கள் இனி "குர்ஆன் தனக்குள் தானே முழுமையானது அல்ல" என்று மக்களுக்கு போதிக்கவேண்டும். இனி பைபிளோடு குர்ஆனை மட்டும் ஒப்பிடுவதோடு மட்டுமல்லாமல், இஸ்லாமில் உள்ள முக்கியமானதாக கருதப்படும் இதர அனைத்து புத்தகங்களையும் ஒப்பிடுங்கள். ஒரு இஸ்லாமிய அறிஞர் இப்படி நேர்மையற்ற முறையில் பைபிளோடு குர்ஆனை மட்டும் ஒப்பிட்டு வாதாடுவதை, இக்கட்டுரையை படிக்கும் நீங்கள் கவனிக்க நேர்ந்தால், உடனே தைரியம் கொண்டு அவர் செய்துக்கொண்டு இருக்கும் இந்த தவறை அவருக்கு எடுத்துக்கூறுங்கள்.

2. "பைபிளோடு குர்ஆனை மட்டும் ஒப்பிடுவது சரியானது" தான் என்று கிறிஸ்தவர்கள் நினைத்துக்கொண்டு ஏமாந்துப் போகாதீர்கள். இதைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். கிறிஸ்தவம் என்பது பைபிள் ஒன்றின் மீது மட்டும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஆனால், இஸ்லாம் குர்ஆன் மீது மட்டுமல்ல, அதோடு கூட ஹதீஸ்கள் மீதும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஒரு முஸ்லீம் "இரண்டு புத்தகங்களையும்" ஒப்பிடுங்கள் என்று உங்களிடம் கூறினால், உடனே நீங்கள் "நேர்மையான முறையில்" ஒப்பிடவேண்டுமானால், குர்ஆனோடு கூட ஹதீஸ்களையும், சீராவையும் பைபிளோடு ஒப்பிடவேண்டும் என்று அழுத்திச்சொல்லுங்கள்.

3. ஒரு வேளை இக்கட்டுரையை படிக்கும் நீங்கள் ஒரு "கிறிஸ்தவரல்லாதவராகவோ" அல்லது ஒரு "முஸ்லீமாகவோ" இருப்பீர்களானால்,"உண்மையில் குர்ஆனும் பைபிளும் ஒரே வகையான புத்தகங்கள் இல்லை" என்பதை நினைவில் கொள்ளவும். குர்ஆன் என்ன வசனங்கள் சொல்கிறதோ அந்த வசனங்கள் வெளிப்பட்ட சந்தர்ப்பத்தை(சூழ்நிலையை - Context )அது சொல்வதில்லை அல்லது இஸ்லாமில் பின்பற்றப்படும் பல கோட்பாடுகளைப் பற்றிய சூழ்நிலையை குர்ஆன் சொல்வதில்லை. இவைகள் வேறு புத்தகங்களிலிருந்து வருகிறது. ஆனால், ஒரு கிறிஸ்தவனுக்கு தேவையான நம்பிக்கை மற்றும் அவன் பின்பற்றவேண்டிய எல்லா கோட்பாடுகளையும் பைபிள் தன்னிடம் கொண்டுள்ளது.

4. நாங்கள் "இயேசுவை உங்கள் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று உங்களுக்கு அழைப்பு விடுக்கும் போது, பைபிள் ஒன்றை மட்டும் நீங்கள் நம்பினால் போதும் என்றுச் சொல்கிறோம்.

5. ஒரு சாதாரண கிறிஸ்தவன் "பைபிள் முழுவதையும் படித்து அதன் கோட்பாடுகளை நன்றாக புரிந்துக்கொள்ள" அவனால் முடியும், ஆனால், ஒரு சாதாரண முஸ்லீம் குர்ஆனையும் மற்றும் இஸ்லாமில் உள்ள எல்லா புத்தகங்களையும் படித்து புரிந்துக்கொள்வது என்பது மிகவும் கடினமான வேலையாகும். ஏனென்றால், இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகள் அடங்கிய புத்தகங்கள் அதிக அளவில் உள்ளது, மட்டுமல்லாமல் அவைகள் எல்லாம் இன்னும் மொழிபெயர்க்கப்படவில்லை. உண்மையைச் சொல்லவேண்டுமானால், முகமதுவின் வாழ்க்கையை முதன் முதலில் சரிதையாக எழுதிய, இபின் இஷாக் அவர்களின் புத்தகமாகிய "சூரத் ரசூல் அல்லா - Ibn Ishaq's, Sirat Rasul Allah" என்ற புத்தகத்தை பெரும்பான்மையான முஸ்லீம்கள் படிப்பதில்லை.

பின் குறிப்புகள் :


[1] Where the hadiths are ordered according to topic.
[2] Where the hadiths are ordered according to narrator.
[3] Ibn Ishaq, Sirat Rasul Allah, translated as, The Life of Muhammad, (tr. A. Guillaume), Karachi: Oxford University Press, 1998.
[4] Ibn Sa'ad, Kitab Al-Tabaqat Al-Kabir, (tr. S Moinul Haq) New Delhi: Kitab Bhavan, 2 volumes, no date.

References

Habib Ur Rahman Azami, The Sunnah in Islam, U.K.: UK Islamic Academy, 1995.
Prof. Masud-ul-Hasan, History of Islam, Delhi: Adam Publishers & Distributors, 2002.
Cyril Glass鬠The Concise Encyclopedia of Islam, San Francisco: Harper & Row, 1989.

Copyright © 2007 Samuel Green.

மூலம்:
http://answering-islam.org/Green/compare.htm

ஆசிரியர் சாமுவேல் கிரீன் அவர்களோடு தொடர்பு கொள்ள: மெயில் விலாசம்
ஆசிரியருடைய இதர கட்டுரைகள் ஆங்கிலத்தில் படிக்க : இங்கே சொடுக்கவும்.


தமிழாக்கம் முற்றிற்று

நன்றியுரை: நான் சகோதரர் சாமுவேல் கிரீன் அவர்களுக்கு மெயில் அனுப்பி,
ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் வெளியாகியுள்ள அவருடைய கட்டுரைகளை மொழிபெயர்க்க அனுமதி கெட்டபோது, உடனே எனக்கு அனுமதி கொடுத்தார். அதற்காக அவருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.



Isa Koran Home Page Articles Index Author Samuel Green's Index

 

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/samuelgreen/CompareGreen.htm

 

 



Download prohibited? No problem. CHAT from any browser, without download.