ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

சனி, 30 ஏப்ரல், 2022

ரமளான் 2022 - உவமை 10: புத்தியுள்ள 5 கன்னிகைகளாக மாறி சொர்க்கத்திற்குள் நுழைய முஸ்லிம்களுக்கு விருப்பமா?

(ரமளான் 2022 தொடர் கட்டுரைகள்)

(முந்தைய வேதங்களின் உவமைகளும் இஸ்லாமும்)

ரமளான் 2022 ஆண்டின் முந்தைய கட்டுரைகளை கீழே படிக்கவும்:

  • உவமை 1: விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான் - யார் வழியருகே விதைக்கப்பட்டவர்கள்?
  • உவமை 2: காணாமல் போன ஆடுகளை அல்லாஹ் தேடுவானா? வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிப்பானா?
  • உவமை 3: தீய குத்தகைக்காரர்களின் உவமையும், இஸ்லாமின் முன்னறிவிப்பும்
  • உவமை 4: தீய குத்தகைக்கார உவமையில் முரண்பாடும், பிழையும் உள்ளதா?
  • உவமை 5: முஸ்லிம்களே, உங்கள் கண்ணத்தில் ஒரு தகப்பனாக‌ அல்லாஹ் முத்தம் கொடுப்பானா? சொந்த வீட்டிலேயே அடிமைகளாக வாழும் பிள்ளைகளா நீங்கள்?
  • உவமை 6: இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பு அளித்த தகப்பன் - இது தான் இஸ்லாமிய வழி
  • உவமை 7: அன்றைய பரிசேயர்களும் இன்றைய முஸ்லிம்களும் – சுயநீதி தம்பட்டத்தினால் இறைவனின் அன்பை பெறமுடியுமா?
  • உவமை 8: நீ இறைவனின் இலவச கிருபையை பெற விரும்புகிறாயா? அல்லது உன் அமல்கள் (கந்தைத் துணி, இத்தா துணி) மூலமாக இறைவனின் தரத்தை எட்டிவிடலாமென கனவு காண்கிறாயா?
  • உவமை 9:முஸ்லிம்களே நல்ல சமாரியன்கள்! என்ன விளையாடுகிறீரா? இது எப்படி சாத்தியம்?

இந்த தற்போதைய கட்டுரையில் இன்னொரு சுவாரசியமான உவமையைக் காண்போம். 

புத்தியுள்ள மற்றும் புத்தியற்ற கன்னிகைகள்

கீழ்கண்ட 13 வசனங்களில் ஒரு அருமையான நிகழ்ச்சியை இயேசு கூறி அதன் மூலமாக, ஒரு முக்கியமான எச்சரிக்கையை கொடுத்துள்ளார். இந்த உவமையில் ஒரு நற்செய்தியும் ஒரு தீய‌ செய்தியும் உள்ளது,  யாருக்கு நற்செய்தியுள்ளது, யாருக்கு தீயச்செய்தியுள்ளது என்பதை அறிய, வாருங்கள் இந்த உவமையை படிப்போம். மேலும் முஸ்லிம் நண்பர்களுக்கு இந்த உவமையிலிருந்து என்ன ஆலோசனை கிடைக்கிறது என்பதை பற்றி ஆய்வு செய்வோம்.

மத்தேயு 25:1-13

1. அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்.

2. அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள்.  3. புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை. 4. புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள்.

5. மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள். 6. நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று. 7. அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள்.

8. புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள். 9. புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்குப் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள். 10. அப்படியே அவர்கள் வாங்கப் போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாண வீட்டிற்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது.

11. பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள். 12. அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

13. மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.

1) புத்தியுள்ளவர்கள், புத்தியில்லாதவர்கள் என்றால் என்ன பொருள்:

மேலே படித்த உவமையில் "புத்தியுள்ளவர்கள், புத்தியில்லாதவர்கள்" என்று வாசிக்கும் போது, ஏதோ, அவர்கள் பிறந்ததிலிருந்தே புத்தியுள்ளவர்கள் என்றோ, அதே போன்று மற்றவர்கள் பிறந்ததிலிருந்தே புத்தியில்லாதவர்கள் என்றோ நாம் பொருள் கொள்ளக்கூடாது. இந்த உவமையில் கவனிக்கவேண்டிய விவரம் என்னவென்றால், ஒரு செயலைச் செய்யும் போது, அல்லது ஒரு காரியத்தில் அவர்கள் புத்தியில்லாதவர்களாக நடந்துக்கொண்டார்கள் என்று பொருள் கொள்ளவேண்டும். 

உலகின் பெரும்பான்மையான நாடுகளில், திருமண நிகழ்ச்சிகளை மிகவும் விமரிசையாக கொண்டாடுவார்கள். இன்றும் சில‌ செல்வந்தர்கள் தங்கள் "செழிப்பை" அதிக செலவுகள் செய்து தங்கள் வீட்டு திருமணங்களில் காட்டுவார்கள். இது அவரவர் விருப்பம். சில நாடுகளில் அந்த கொண்டாட்டங்கள் 7 நாட்களுக்குத் தொடரும். நம் இந்தியாவிலும், இப்படி பல நாட்கள் கொண்டாடியதாக நாம் கேள்விப்பட்டிருப்போம். நாட்கள் செல்லச்செல்ல, திருமண செலவுகளும் அதிகமாகிவிட்டதால், கூட்டுக்குடும்பங்கள் உடைந்துவிட்டதால்  நாட்கள் குறைந்து, இப்போது இரண்டு நாட்களில் திருமணத்தை முடித்துக்கொள்கிறார்கள். இன்னும் சில காதல் ஜோடிகள், மற்றும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட சில திருமணங்கள் கூட‌ ஒரே ஒரு மணி நேரத்தில் திருமண பதிவு அலுவலகத்திற்கு சென்று திருமணத்தை முடித்துக்கொள்கிறார்கள்.

முக்கியமாக, இயேசு வாழ்ந்த மத்தியகிழக்கு நாடுகளில், மூன்று நாட்கள் அல்லது ஒரு வாரம் திருமணம் நடக்குமாம்.  மாப்பிள்ளை அழைப்பு, மணப்பெண் அழைப்பு என்று பல நிகழ்ச்சிகள் நடக்கும். அதில் மாப்பிள்ளை அழைப்பு பற்றி தான் இந்த உவமையில் சொல்லப்பட்டுள்ளது. மாப்பிள்ளையை வரவேற்க ஒரு பெரிய கூட்டமே காத்திருக்கும், முக்கியமாக கன்னிப்பெண்கள், விளக்குகளை (தீவட்டிகளை) ஏந்திக்கொண்டு காத்திருப்பார்கள்.

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை தெரிந்துக்கொண்டு, புத்திசாலித்தனமாக, தீவட்டிகளுக்குத் தேவையான எண்ணையை எடுத்துக்கொண்டுச் செல்லாத பெண்களைத் தான் "புத்தியில்லாதவர்கள்" என்று இந்த உவமையில் கூறப்பட்டுள்ளது.

2) புத்தியுள்ள கன்னிகைகள் யார்?

இந்த உவமையில் இயேசு தம்மை மணவாளன் என்றும், தம்மை விசுவாசித்து, பரிசுத்தமாக தங்களைக் காத்துக்கொண்டு, ஆயத்தமாக (எண்ணையை வைத்துக்கொண்டு) அவரது வருகைக்கு காத்திருக்கின்ற திருச்சபையை "புத்தியுள்ள கன்னிகைகளுக்கு" ஒப்பிட்டு கூறியுள்ளார்.

அன்பு முஸ்லிம் நண்பர்களே! இறைவனின் சொர்க்கத்திற்குச் செல்லவேண்டுமென்று தானே நீங்கள் பல அமல்களைச் செய்கிறீர்கள்? தவறாமல் அனுதினமும் தொழுகிறீர்கள், ரமளான் நோன்பு நோற்கிறீர்கள்? இன்ன பல நல்ல செயல்களைச் செய்து மக்களுக்கு உதவி செய்கிறீர்கள்? இவைகள் எல்லாம் உங்களை சொர்க்கத்தின் வாசல் மூடப்படுவதற்கு முன்பு உள்ளே செல்ல உதவுமா? சிந்தித்துப் பாருங்கள். மனிதனால் எந்த காலத்திலும் 'பரிசுத்த இறைவன் விரும்பும் அளவிற்கு பரிசுத்தமாக பிழையில்லாத வாழ்க்கை வாழமுடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?'? 

3) சொர்க்கத்தின் கதவுகளை மூட இயேசுக்கு யார் அனுமதி கொடுத்தது?

முஸ்லிம்கள் பல முறை "இயேசு இறைவன் அல்ல, அவர் ஒரு நபி/தீர்க்கதரிசி மட்டுமே" என்றுச் சொல்வார்கள். இயேசு புதிய ஏற்பாட்டில் எங்கேயாவது "தம்மை கடவுள் என்றோ, தமக்கு தெய்வீகத்தன்மை உண்டு என்றோ" கூறியுள்ளாரா? என்று கேள்வி எழுப்புவார்கள்.

நீங்கள் ஒப்புக்கொண்டாலும் சரி, ஒப்புக்கொள்ள மனமில்லாமல் மறுத்தாலும் சரி, இந்த உவமையில் இயேசு தம்மை இறைவன் என்றுச் சொல்வதைக் காணலாம்.

பரலோக ராஜ்ஜியத்தின் அதாவது சொர்க்கத்தின் கதவுகளை ஒரு முறை அவர் மூடிவிட்டால், அதன் பிறகு ஆயத்தமில்லாதவர்கள் என்ன செய்தாலும் சரி, என்னச் சொல்லி முறையிட்டாலும் சரி "உங்களை அறியேன் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்று சொல்லிவிடுவார்.

இந்த இடத்தில் "உங்களை அறியேன்" என்று இயேசு கூறியது, உண்மையாக அவர்களை அவர் அறியவில்லை என்று அர்த்தமல்ல, அவர்கள் யார் என்று அவருக்கு தெரியவில்லையென்று பொருள் அல்ல, அவர்களை அவர் "அங்கீகரிக்கமாட்டார், அனுமதி கொடுக்கமாட்டார்" என்று பொருளாகும். சர்வஞானியான இறைவனுக்கு அவர்கள் யார் என்று தெரியாமல் இருக்குமா?  

ஆயத்தமில்லாதவர்களுக்கு அவர் அனுமதி கொடுப்பதில்லை. கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்டாலும், திருச்சபையின் அங்கத்தினர்களாக இருந்தாலும், அவர்கள் கையில் தீவட்டிகளை வைத்திருந்தாலும், அந்த தீவட்டி (பரிசுத்தமான வாழ்க்கை) மணவாளன் வர தாமதம் ஆகிவிட்டாலும், எண்ணையை வைத்துக்கொண்டு எப்போதும ஆயத்தமாக இருக்கும் மக்களுக்கு மட்டுமே சொர்க்கத்தின் உள்ளே நுழைவதற்கு அனுமதி.

இந்த உவமையின் சுருக்கம் மத்தேயு 25:13வது வசனத்தில் உள்ளது.

"25:13 மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்."

ஆயத்தமாக இருங்கள்  கடைசி நேரத்தில் கைவிடப்படும்படியாக வாழாதீர்கள். 

  • ஒரு நபி தம்முடைய வருகைக்காக காத்திருங்கள் என்று சொல்லமுடியுமா?
  • ஆயத்தமாக இல்லாதவர்களை நான் விட்டுவிடுவேன் என்று சொல்லமுடியுமா?
  • சொர்க்கத்திற்குள் அனுமதிக்க இவருக்கு யார் அனுமதி கொடுத்தது?

இதற்கு ஒரே பதில் தான் உள்ளது, அந்த மணவாளன் தான் இறைவன். பழைய ஏற்பாட்டிலும், தேவன் தம்மை "மணவாளன்" என்றும், இஸ்ரவேல் மக்கள் மணப்பெண் என்றும் கூறியுள்ளார்.

ஏசாயா 62:5. வாலிபன் கன்னிகையை விவாகம்பண்ணுவதுபோல, உன் மக்கள் உன்னை விவாகம்பண்ணுவார்கள்; மணவாளன் மணவாட்டியின்மேல் மகிழ்ச்சியாயிருப்பதுபோல, உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார்.

புதிய ஏற்பாட்டில் இயேசு தம்மை மணவாளன் என்றும், திருச்சபை மணவாட்டி என்றும் கூறியுள்ளார்.

4) மனுஷகுமாரன் வரும் நாளை முஸ்லிம்களே நீங்கள் அறிவீர்களா?

மனுஷகுமாரன் என்ற வார்த்தையை பிடித்துக்கொண்டு முஸ்லிம்கள் "பாருங்கள், இயேசு தம்மை மனுஷகுமாரன்" என்றுச் சொல்கிறார், ஆகையால் அவர் இறைவன் அல்ல என்றுச் சொல்வார்கள். 

இந்த வார்த்தைப் பற்றி சுருக்கமாக இரண்டு விவரங்களை முஸ்லிம்கள் அறியவேண்டும். பழைய ஏற்பாட்டின் தானியேல் 7வது அத்தியாயத்தில் ஒரு மனுஷகுமாரனுக்கு ஒப்பானவர் பற்றி வருகிறது.

தானியேல் 7:13-14

13. இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார்.

14. சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்.

தானியேலின் இந்த தரிசனத்திற்கு பிறகு, யூதர்களுக்கு "மேசியா மனுஷகுமாரன் போல வருவார், அவரது ஆட்சி நித்திய ஆட்சி, தேவனுக்கு உள்ள இலக்கணங்கள் அவருக்கு சூட்டப்பட்டுள்ளது" என்று  நன்றாகத்தெரியும்.  

எனவே, இயேசு மனுஷகுமாரன் என்று ஒவ்வொரு முறை சொன்னபோதும், யூதர்களுக்கு உறுத்தியது, "இவன் தன்னை தேவனுக்கு சமமாக பேசுகின்றானே" என்றுச் சொல்லி அவரை கொலை செய்ய முயன்றார்கள். எனவே, முஸ்லிம்களே, இயேசு வாழ்ந்த முதல் நூற்றாண்டில், இஸ்ரேல் நாட்டில், யூதர்களுக்கு மத்தியில் "நான் ஒரு மனுஷன் என்றுச் சொன்னால், அவன் மனிதன் என்று பொருள், யாராவது "நான் மனுஷ குமாரன்" என்றுச் சொன்னால், அவன் தானியேல் 7வது அத்தியாயத்தில் வரும் தெய்வீக புருஷனை குறிப்பிடுகின்றான், தன்னை தேவன் என்றுச் சொல்கின்றான் என்று பொருள் என்பதை நீங்கள் அறியவேண்டும்.

இரண்டாவதாக, இயேசு மத்தேயு 24:13ல் சொன்ன எச்சரிக்கையின் படி, ஒரு மனிஷகுமாரன் வரும் நாளை உலக மக்கள் ஏன் ஆயத்தமாக இருக்கவேண்டும் என்ற கேள்வியைக் கேட்டுப்பார்த்தால், இயேசு தம்மை இறைவன் என்றும், தம்முடைய அடுத்த வருகையில் நீங்கள் கைவிடப்படாமல் இருப்பதற்கு எச்சரிக்கையாக இருங்கள் என்று அவர் கூறுகின்றார் என்று பொருள்.

5) முஸ்லிம்கள் எந்த பிரிவில் இருக்கிறார்கள்? புத்தியுள்ள 5 கன்னிகைகள் பிரிவிலா? அல்லது புத்தியில்லாத 5 கன்னிகைகள் பிரிவிலா?

இதுவரை நாம் உவமையை படித்தோம், அதன் விளக்கத்தையும் மேலோட்டமாக பார்த்தோம். இதன் படி பார்த்தால், முஸ்லிம்கள் எந்த பிரிவில் இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள்?

கண்டுபிடித்துவிட்டீர்களா? உங்களில் சிலர் நினைப்பது போன்று, "ஆம், முஸ்லிம்கள் இந்த இரண்டு பிரிவினரிலும் இல்லை". இதைவிட மிகவும் தூரமான பிரிவில் இருக்கிறார்கள்.  மணவாளன் யார் என்று தெரியாத பிரிவில் "முஸ்லிம்கள் இருக்கிறார்கள்" என்று சொல்லலாம்.

புத்தியில்லாத கன்னிகைகள் குறைந்தபட்சம் மணவாளனின் வருகையை நம்பினார்கள்,அவரை எதிர்க்கொண்டுப் போக, தீவட்டிகளை எடுத்துக்கொண்டுச் சென்றார்கள், அவர் அதோ வருகிறார் என்று சொன்னவுடன் ஆயத்தப்பட முயன்றார்கள், தங்களிடம் எண்ணையில்லாதபடியினால், அதனை வாங்கச் சென்றார்கள், ஆனால், அவர்கள் திரும்பி வரும் போது, கதவு மூடப்பட்டுவிட்டது.

முஸ்லிம்களே, இந்த புத்தியில்லாத பிரிவிலும் இல்லை. அவர்கள் இயேசுவை நம்புவதில்லை, அவர் கொடுக்கும் இரட்சிப்பை பெற விரும்பவில்லை. ஆகையால், அந்த 10 கன்னிகள் கூட்டத்தின் எந்த பிரிவிலும் இல்லை. இந்த உவமையிலும் முஸ்லிம்கள் இல்லை என்று எண்ணும் போது எனக்கு கவலையாக உள்ளது!

சில முஸ்லிம்கள் "இயேசு மறுபடியும் வருவார் என்று இஸ்லாம் சொல்கிறது, அவர் வந்து பன்றிகளை கொள்வார், சிலுவையை முறிப்பார், யூதர்களோடு சண்டையிடுவார்" என்ற கதைகளை நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். 

ஆனால், இது சுத்தப்பொய்யாகும். இயேசு கூறிய உவமையின்படி, அவர் வரும் போது, நாம் ஆயத்தமாக இல்லாமல் இருந்தால், அவர் கைவிட்டுவிடுவார் என்று தெளிவாக கூறுகின்றார். வெளிப்படுத்தல் 22:15ம் வசனத்தின் கடைசி பகுதியை கீழே படிக்கவும்:"பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்". 

வெளி 22:11-16

11. அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.

12. இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.

13. நான் அல்பாவும் ஒமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.

14. ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.

15. நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.

16. சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.

முஸ்லிம்களே! நீங்கள் "பொய்யை மெய்" என்று நம்பிக்கொண்டு வாழ்ந்துக்கொண்டு இருக்கிறீர்கள், புத்தியுள்ள கன்னிகைகள் போன்று, மணவாளனின் வருகை மீது விசுவாசம் வைத்து, ஆயத்தமாக இருங்கள், ஏமாற்றப்பட்டுவிடாதீர்கள் என்று இந்த ரமளான் மாதத்தில் அன்போடு எச்சரிக்கிறேன்.

இந்த பத்து கன்னிகள் பற்றிய உவமையை வீடியோவாக இங்கு பார்க்கலாம்:

  1. https://www.bible.com/videos/25414-matthew-25-1-13 
  2. https://www.youtube.com/watch?v=_ZHxI25j1EI  - பத்து கன்னிகைகள் | Ten Virgins | Tamil Christian All
  3. https://www.youtube.com/watch?v=EEw3GlFytro - The Parable Of The Ten Virgins
  4. https://www.youtube.com/watch?v=hngvHaVumJQ  - THE PARABLE OF THE 10 VIRGINS (Matthew 25:1-13)

இன்னொரு உவமையோடு சந்திப்போம்...

தேதி: 30th April 2022




வெள்ளி, 22 ஏப்ரல், 2022

ரமளான் 2022 - உவமை 9: முஸ்லிம்களே நல்ல சமாரியன்கள்! என்ன விளையாடுகிறீரா? இது எப்படி சாத்தியம்?

(ரமளான் 2022 தொடர் கட்டுரைகள்)

முந்தைய வேதங்களின் உவமைகளும் இஸ்லாமும்

ரமளான் 2022 ஆண்டின் முந்தைய கட்டுரைகளை கீழே படிக்கவும்:

  • உவமை 1: விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான் - யார் வழியருகே விதைக்கப்பட்டவர்கள்?
  • உவமை 2: காணாமல் போன ஆடுகளை அல்லாஹ் தேடுவானா? வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிப்பானா?
  • உவமை 3: தீய குத்தகைக்காரர்களின் உவமையும், இஸ்லாமின் முன்னறிவிப்பும்
  • உவமை 4: தீய குத்தகைக்கார உவமையில் முரண்பாடும், பிழையும் உள்ளதா?
  • உவமை 5: முஸ்லிம்களே, உங்கள் கண்ணத்தில் ஒரு தகப்பனாக‌ அல்லாஹ் முத்தம் கொடுப்பானா? சொந்த வீட்டிலேயே அடிமைகளாக வாழும் பிள்ளைகளா நீங்கள்?
  • உவமை 6: இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பு அளித்த தகப்பன் - இது தான் இஸ்லாமிய வழி
  • உவமை 7: அன்றைய பரிசேயர்களும் இன்றைய முஸ்லிம்களும் – சுயநீதி தம்பட்டத்தினால் இறைவனின் அன்பை பெறமுடியுமா?
  • உவமை 8: நீ இறைவனின் இலவச கிருபையை பெற விரும்புகிறாயா? அல்லது உன் அமல்கள் (கந்தைத் துணி, இத்தா துணி) மூலமாக இறைவனின் தரத்தை எட்டிவிடலாமென கனவு காண்கிறாயா?

இந்த கட்டுரையில், உமர் தம்முடைய தம்பியை மொபைளில் அழைத்து பேசுகின்றார். பொதுவாக, உமரின் தம்பி தான் சௌதியிலிருந்து அழைத்து பேசுவது வழக்கம், ஆனால், இந்த முறை ஒரு வித்தியாசத்திற்காக, உமரே தம் தம்பிக்கு அழைத்து 'இயேசு கூறிய நல்ல சமாரியன்' உவமையைப் பற்றி பேசுகின்றார்.

முஸ்லிம்களே நல்ல சமாரியன்கள்! 

உமர்: ஹலோ தம்பி, அஸ்ஸலாமு அலைக்கும்

தம்பி: வ அலைக்கும் ஸலாம் அண்ணே!

என்ன இது? நான் காண்பது கனவா? அல்லது நிஜமா? நீங்க எனக்கு ஃபோன் செய்து பேசுகிறீர்கள்? தம்பியோடு ரமளான் மாதத்தில் ஏதாவது விசித்திர விளையாட்டு விளையாட முடிவு செய்து இருக்கிறீர்களா?

உமர்: ஒன்றுமில்லை தம்பி. நேற்று நாம் பேசினோமே (முந்தைய கட்டுரை), அதைப் பற்றி ஏதாவது சிந்தித்தாயா?

தம்பி: இல்லை, அண்ணே! எனக்கு அதிக நேரம் தேவை. நாம் அதைப் பற்றி பிறகு பேசலாம். 

ஏதோ அத்தி பூத்தாற்போல எனக்கு ஃபோன் செய்துவிட்டீர்கள். இன்று ஏதாவது ஒரு உவமையைப் பற்றி பேசுவோமா?

உமர்: பேசலாமே! எனக்கு நேரமிருக்கிறது. நீயே சொல், எந்த உவமையைப் பற்றி பேசலாம்?

தம்பி: நல்ல சமாரியன் உவமையைப் பற்றி பேசலாமா? இந்த உவமையில் நீங்கள், எந்த ஒரு குற்றச்சாட்டையும் இஸ்லாம் மீது வைக்கமுடியாது! எப்படி வசதி? 

உமர்: ம்ம்...நல்ல சமாரியன் உவமையா? சரி பேசலாமே! 

தம்பி: இதோ நான் லூக்கா 10:29 - 37வரை படிக்கிறேன்.

உமர்: அடப்பாருடா! நீ ஏற்கனவே  இந்த உவமையைத் தான் என்னோடு பேசவேண்டும் என்று முடிவு செய்துவிட்டு தயாராக இருக்கிறாய் போல்  தெரிகிறது? உடனே லூக்கா 10:29 என்று சரியாகச் சொல்கிறாய்?

தம்பி: ஆமாம், உங்களுக்கு நானே ஃபோன் செய்து, இதைப் பற்றி பேசலாம் என்று நினைத்து இருந்தேன், நீங்களாகவே வந்து மாட்டிகிட்டீங்க! இதோ படிக்கிறேன்...

உமர்: வேண்டாம்.. படிக்கவேண்டாம்.. நானே அந்த உவமையை உனக்காக சிறிது மாற்றிச் சொல்லப்போகிறேன், கேள். 

[லூக்கா 10:29-37 வரை இக்கட்டுரையின் கடைசியில் கொடுத்திருக்கிறேன் படித்துக்கொள்ளுங்கள்]

தம்பி: ஓகே, சொல்லுங்கள்.

உமர்: ஒரு யூதன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்;

தம்பி: இருங்க இருங்க.. இயேசு சொன்ன உவமையில் "யூதன்" எங்கே இருக்கிறான், "ஒரு மனுஷன்" என்று தானே இயேசு  சொல்லியுள்ளார்.

உமர்: தம்பி, இயேசு யாருக்காக இந்த உவமையைச் சொல்கிறார் என்று படித்துப் பார், ஒரு நியாயசாஸ்திரி தன்னை நீதிமானாக காட்டுவதற்காக இயேசுவிடம் "எனக்கு பிறன் யார் என்று கேட்கிறான்", அந்த யூத நியாயசாஸ்திரிக்கு இயேசு பதில் அளிக்கிறார்.  எனவே, அந்த மனிதன் யூதனாக இருப்பதற்கு அதிய வாய்ப்பு உள்ளது. மேலும் எருசலேமிலிருந்து எரிகோ என்று இயேசு சொல்வதால், அவன் யூதனாக இருப்பதற்கு இன்னும் வாய்ப்பு அதிகம். அவன் யாராக இருந்துவிட்டு போகட்டும், நம் உவமையில் "அவன் யூதன்" என்று கருதிக்கொள்வோம், சரியா?

தம்பி: சரி, தொடருங்கள்..

உமர்: ஒரு யூதன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்;அவர்கள் அவன் உடைகளை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள்.

அப்பொழுது தற்செயலாய் ஒரு கிறிஸ்தவ போதகர் அந்த வழியே வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனார்.

தம்பி: மறுபடியும் பாருங்க! "கிறிஸ்தவ போதகர்" இந்த உவமையில் எங்கே வந்தார்!

உமர்:வருவார் தம்பி, வருவார். நாம் சிறிது உவமையை மாற்றி பார்த்துக்கொண்டு இருக்கிறோம். மையக்கருத்து ஒன்று தான், ஆனால் கதாபாத்திரங்களை சிறிது மாற்றிவிட்டேன்.

தம்பி: சரி, தொடருங்கள்.. இன்னும் யார் யார் வருவார்களோ!

உமர்:அந்தப்படியே ஒரு இந்து கோயில் பூசாரியும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனார்.

மறுபடியும் "இந்து கோயில் பூசாரி" ஏன் என்று கேள்வி கேட்காதே, நம் உவமையில் யார் வேண்டுமானாலும் வரலாம்.

தம்பி: சரி, உங்கள் ஆட்டத்தை கண்டினியூ பண்ணுங்க‌.

உமர்: பின்பு முஸ்லிம் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அந்த அடிபட்ட யூதனைக் கண்டு, மனதுருகி,. . .

தம்பி: நோ..நோ..நோ.. நான் இதனை ஒப்புக் கொள்ளமாட்டேன்...

உமர்: இன்னும் நான் உவமையை முடிக்கவே இல்லை...முதலில் நான் சொல்லிமுடிக்கட்டும், அதன் பிறகு உன் கேள்விகளை நீ கேட்கலாம்...

தம்பி: நீங்கள் தப்புத்தப்பா உவமையைச் சொல்கிறீர்கள்...

உமர்: என்னப்பா.. ஒரு யூதனுக்கு கற்பனைக் கதையிலும் உதவி செய்யமாட்டாயா? இப்படித்தான் இஸ்லாம் உனக்கு கற்றுக்கொடுத்திருக்கிறதா?...

தம்பி: இஸ்லாம் பற்றி தவறாக‌ சொல்லாதீங்க... 

சரி உங்க கதையைச் சொல்லுங்க‌, என்ன செய்வது, கேட்டுத்தொலைக்கிறேன்...

உமர்: ஏன் இப்படி அலட்டிக்கொள்கிறாய்! சரி மீதமுள்ளதைக் கேள்..

பின்பு முஸ்லிம் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அந்த அடிபட்ட யூதனைக் கண்டு, மனதுருகி, கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுய ஒட்டகத்தின் மேல் ஏற்றி, பக்கத்து ஊரில் உள்ள ஒரு மசூதியில் வைத்து, அவனைப் பராமரித்தான்.  மறுநாளிலே தான் புறப்படும்போது தன்னிடம் உள்ள பணத்தையும் கொடுத்து, அதற்கு மேலாக தன் கிரேடிட் கார்டையும் அந்த மசூதியின் இமாமிடத்தில் கொடுத்து : நீங்கள் இவனை விசாரித்துக் கொள்ளுங்கள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உங்களுக்குத் தருவேன் என்றான்.

தம்பி: அண்ணே! நிறுத்துங்க.. ஒரு யூதனை மசூதியில் வைத்து பராமரிப்பதா? கேட்கவே கொமட்டுது எனக்கு!

உமர்: ஏன் இப்படி கொமட்டுது உனக்கு? ஒரு நல்ல செயலை முஸ்லிம் செய்வதாகவும், அவனே 'இயேசு கூறிய நல்ல சமாரியன்' என்றும் சொன்னதில் என்ன தவறு?

தமிழ் நாட்டில் பார்க்கும்போது, முஸ்லிம்கள் சமுதாயத்திற்கு அதிக நன்மைகளைச் செய்கிறார்கள், சென்னையில் வெள்ளம் வந்து போது, முஸ்லிம்கள் அதிகமாக உதவி செய்தார்களே! இது உனக்கு ஞாபகம் இல்லையா?

தம்பி: அது வேறு இது வேறு, யூதனுக்கு ஒரு முஸ்லிம் கற்பனையில் கூட உதவி செய்வது என்பது நடக்கக்கூடாது.

உமர்: ஏன்? யூதர்கள் என்றால் உங்களுக்கு அவ்வளவு வெறுப்பு? மனிதனை வெறுத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று இஸ்லாம் கற்றுக்கொடுக்கின்றதா?

தம்பி: நான் உங்களுக்கு இரண்டு ஹதீஸ்களை காட்டுகிறேன், பாருங்கள், புகாரி ஹதீஸில் இப்படி உள்ளது:

ஸஹீஹ் புகாரி 2926 & 3593

2926. நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். 

நீங்கள் யூதர்களுடன் போரிடாத வரை இறுதி நாள் வராது. எந்த அளவிற்கென்றால் கல்லின் பின்னால் யூதன் ஒருவன் (ஒளிந்து கொண்டு) இருப்பான். அந்தக் கல், 'முஸ்லிமே! இதோ, என் பின்னே ஒரு யூதன் (ஒளிந்து கொண்டு) இருக்கிறான். அவனை நீ கொன்று விடு" என்று கூறும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

3593. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

யூதர்கள் உங்களுடன் போர் புரிவார்கள். அவர்களின் மீது (போரில்) உங்களுக்கு வெற்றியளிக்கப்பட்டு ஆதிக்கம் வழங்கப்படும். எந்த அளவுக்கென்றால், கல் கூட, 'முஸ்லிமே! இதோ, என் பின்னால் யூதன் ஒருவன் (ஒளிந்து கொண்டு) இருக்கிறான். அவனைக் கொன்றுவிடு" என்று கூறும். 

உமர்: இப்படிப்பட்ட இனவெறி ஹதீஸ்களை இன்னும் நீ நம்புகிறாயா? இனவெறியை முஸ்லிம்களின் உள்ளங்களில் அளவில்லாமல் ஊற்றிவிட்டார் முஹம்மது. முஸ்லிம்கள் யூதர்களுடன் போரிடாதவரை இறுதி நாள் வராதாம். மக்களிடையே சமாதானத்தை உண்டாக்காமல் வெறுப்பையும், சண்டை மனப்பான்மையையும் உண்டாக்கியவர் முஹம்மது.

தம்பி: இறைத்தூதர் முஹம்மதுவை ஏன் கேள்வி கேட்கிறீர்கள், இந்த ஹதீஸ்களை இறைத்தூதருக்குச் சொன்னவன் அல்லாஹ் தானே!

உமர்: சரி, உன் கணக்கிற்கே வருகிறேன். கியாமத் நாளில், மேற்கண்ட ஹதீஸில் வரும் யூதர்கள் யார்? அன்று முஹம்மது வாழ்ந்த போது, அவரை நபி என்று ஏற்றுக்கொள்ளாதவர்களா? அல்லது அவரோடு சண்டை போட்டவர்களா?

தம்பி:  இல்லை.. கியாமத் நாளில் எந்த யூதர்கள் உயிரோடு இருந்திருப்பார்களோ, அவர்கள் தான். அதாவது அடுத்த 10 அல்லது 100 ஆண்டுகள் கழித்து கியாமத் நாள் வந்தால், அப்போது இருக்கும் யூதர்கள் தான் அவர்கள்

உமர்: அடுத்த 10 அல்லது 100 ஆண்டுகளுக்கு பிறகு வாழும் யூதர்களுக்கும், இஸ்லாமுக்கும் என்ன சம்மந்தம்? அவர்களை கொள்ளும்படி, ஏன் கற்கள் பேசவேண்டும்? நமக்கு சம்மந்தமில்லாத, நம்மை ஒன்றுமே செய்யாத யூதர்களை ஏன் நாம் வெறுக்கவேண்டும்?

தம்பி: இறைத்தூதர் முஹம்மது காலத்து யூதர்கள் தீமை செய்தார்கள் அல்லவா? அதற்காக இன்றைய யூதர்கள் அல்லது நாளைய யூதர்கள் கொல்லப்படவேண்டும்!

உமர்: 1400 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழு தீமை செய்தால், இன்றுள்ள அதே இனம் தீமையை அனுபவிக்கவேண்டுமா? இது என்ன நியாயம்?

இன்று ஒரு குறிப்பிட்ட விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுள்ள  முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக மாறி, வன்முறையில் ஈடுபட்டு, உலக மக்களுக்கு தீமை செய்தார்கள். அதற்காக நம்மோடு வாழும் நல்ல முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று சொல்லலாமா? இது தவறு தானே!

ஒரு நாட்டில் தீவிரவாதத்தில் ஈடுபடும் முஸ்லிம்களின் செயல்களினால், வேறு நாட்டில் உள்ள முஸ்லிம்களை மற்ற மக்கள் தாக்குவது சரி என்றுச் சொல்கிறாயா?

உனக்கு கொஞ்சமாவது புத்தியுள்ளதா? ஒரு மனிதனைப் போலவா நீ பேசுகின்றாய்?

தம்பி: அதுவேறு இது வேறு, யூதன் வேறு முஸ்லிம் வேறு.

உமர்: அது எப்படி? அரேபியாவில் வாழ்ந்த ஒரு யூதக்குழு 1400 ஆண்டுகளுக்கு முன்பு செய்த குற்றத்திற்காக, இன்றுள்ள அல்லது அடுத்த 100 ஆண்டுகளுக்கு பிறகு பிறக்கும்  யூதனை எதிரியாக முஸ்லிம்களாகிய நீங்கள் பார்ப்பீர்களானால், நம் காலத்திலேயே நம் கண்களுக்கு முன்பாக, ஈஸ்டர் பண்டிகையின் போது, இலங்கையில் குண்டு வெடித்த முஸ்லிம்களுக்காக, நம்மைச் சுற்றியுள்ள முஸ்லிம்களை கொலை செய்யவேண்டும் என்று முடிவு செய்தால் அதனை நீ ஆதரிப்பாயா?

காட்டுமிராண்டியாக சிந்திக்கும் தம்பியே, கொஞ்சம் மனிதனாக சிந்திக்க பழக்கப்படு, உன் மூளையை அடகுவைத்துவிட்டு பேசுகின்றாயா என்ன?

தம்பி: நீங்கள் எதை ஆரம்பித்தீர்கள், இப்போது எதை பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்.

உமர்: நல்ல சமாரியன்களாக நம்மைச் சுற்றியுள்ள முஸ்லிம்கள் எத்தனைப் பேர் இருக்கிறார்கள். எவ்வளவு அன்போடும், பரிவோடும், மக்களுக்கு உதவி செய்துக்கொண்டும் முஸ்லிம்கள் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஒருவன் ஆபத்தில் இருந்தால், உடனே ஓடிச்சென்று அவனுக்கு உதவி செய்யும் கோடாணு கோடி முஸ்லிம்களின் கால்களை கழுவி நீ குடித்தாலும் உனக்கு புத்தி வராது தம்பி.  இப்படி வித்தியாசம் பார்க்காமல் உதவி செய்யும் மனிதர்களுக்கு உதாரணம் தான் 'நல்ல சமாரியன்' உவமை. அதனை நீ எடுத்துப் பேசும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அதனை சிறிது மாற்றிச் சொல்லி, ஜாதி இனம் மொழி நாடு பார்க்காமல் நாம் உதவி செய்யவேண்டும், அதனை ஒரு முஸ்லிம் செய்வதாகச் சொல்லி, அவனை நல்ல சமாரியனுக்கு ஒப்பிட்டுப் பேசினால், நீ சந்தோஷப்படுவாய் என்று நினைத்தால், துரு பிடித்த மூளையுள்ளவன் பேசுவது போல பேசுகிறாய் தம்பி, நான் ஏமாற்றமடைந்தேன்.

தம்பி: இன்னொரு உதாரணத்தைச் சொல்கிறேன், கேளுங்கள்.  ஆபிரகாம் கால பல்லி செய்த பாவத்திற்கு, அரேபியாவின் பல்லிக்கு கிடைத்த தண்டனையப் பாருங்கள், இந்த ஹதீஸை படித்தபிறகாவது உங்களுக்கு புத்தி வரும், உண்மை புரியும்.

ஸஹீஹ் முஸ்லிம் எண்: 3359. 

உம்மு ஷுரைக்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்திரவிட்டார்கள். மேலும், அவர்கள், 'அது இப்ராஹீம்(அலை) அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்டபோது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதிவிட்டுக் கொண்டிருந்தது" என்றும் கூறினார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் எண்: 4509

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பல்லியை முதலாவது அடியிலேயே கொன்றவருக்கு இவ்வளவு இவ்வளவு நன்மைகள் உண்டு. இரண்டாவது அடியில் கொன்றவருக்கு முதலாவது அடியில் கொன்ற வரைவிடக் குறைவாக இவ்வளவு இவ்வளவு நன்மைகள் உண்டு; மூன்றாவது அடியில் கொன்றவருக்கு இரண்டாவது அடியில் கொன்றவரைவிடக் குறைவாக நன்மை உண்டு. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 

உமர்: இப்படிப்பட்ட இன்னொரு உதாரணத்தைச் சொன்னால், செருப்பால் அடிப்பேன்.

[வாசகர்கள் மன்னிக்கவும், இப்படியும் கட்டுரையை எழுதுவார்களா? என்று கேட்காதீர்கள். இது என் தம்பிக்கும் எனக்கும் இடையே நடக்கும் உரையாடல். சில நேரங்கள் நாங்கள் இருவரும் இப்படி பேசிக்கொள்வது வழக்கம் தான்]

நீ முட்டாளாடா? உனக்கு புத்தியில்லையாடா? நீ படித்தவன் தானே!

ஆபிரகாம் காலத்தில் வாழ்ந்த பல்லி செய்த பாவத்திற்கு, 2500 ஆண்டுகளுக்குப் பிறகு அரேபியாவில் வாழும் பல்லிக்கு தண்டனைக் கொடுப்பது நியாயமா?

ஆபிரகாமை தீக்குண்டத்தில் போட்டபோது, அந்த அக்கினி இன்னும் அதிகமாக எரியவேண்டும் என்றுச்சொல்லி பல்லி ஊதியதாம் எனவே பல்லியை கொல்லவேண்டும் என்று முஹம்மது கூறினார். பாட்டிகூட இப்படி கற்பனை செய்துச் சொல்லாது, அவ்வளவு பழமைவாதியாக முஹம்மது சொல்லியுள்ளார். இதுமட்டுமா, ஒரே அடியில் பல்லியை கொன்றவருக்கு அதிக நன்மைகளாம், இரண்டு அடியில் கொன்றவருக்கு கொஞ்சம் குறைவான நன்மைகள் கிடைக்குமாம். நெருப்பை பல்லி ஊதி அனலை அதிகமாக்குமா? பல்லி என்ன டையனோசர் மாதிரி பெரியதாக இருந்ததா என்ன? 

இப்போது கேள்வி என்னவென்றால், ஆபிரகாம் காலத்தில் வாழ்ந்த பாலஸ்தீன பல்லி செய்த பாவத்திற்கு, 2500 ஆண்டுகளுக்குப் பிறகு அரேபியாவில் வாழும் பல்லிக்கு தண்டனைக் கொடுப்பது எந்த ஊர் நியாயம்?

தம்பி: என்னை செருப்பால் அடிப்பேன் என்றுச் சொல்கிறீர்கள், இது நியாயமா?. நானும் திருப்பிச் சொன்னால் என்ன செய்வீர்கள்?

உமர்: நீயும் சொல்! ஏன் தயங்குகிறாய்! உண்மை மார்க்கத்தை பின்பற்றிக்கொண்டு இருந்த உன்னை இஸ்லாமுக்கு தாரை வார்த்துவிட்டு, பல ஆண்டுகளாக, இன்னும் உனக்கு அறிவு வரும்படி என்னால் செய்யமுடியவில்லையல்லவா? அதற்காக எனக்கு இது நிச்சயம் வேண்டும் தம்பி.

தம்பி: இதற்காகத் தான் ஃபோன் செய்தீங்களா? அதுவும் ரமளான் மாதத்தில் என்னை அழைத்து பேசி, இப்படிச் சொல்வது சரியில்லை

உமர்: சில பேருக்கு சில நேரத்தில் வார்த்தைகளால் அடித்தால் புத்தி வராது, இப்படி விசேஷமான பொருளால் அடித்தால் தான் புத்தி தெளியும்.

இருந்தாலும் தம்பி! ஒரு பல்லியை கொல்வதற்கு இப்படி ஒரு கதையைச் சொன்னவரையா நீ பின்பற்றுகிறாய்? 

என்னை மன்னித்துவிடடா, நான் சொன்ன வார்த்தைகளை திரும்ப வாங்கிக் கொள்கிறேன்.

தம்பி: ஏன் முதலில் தேவையில்லாமல் வாயைவிடனும் அதன் பிறகு, ஏன் திரும்ப வாங்க வேண்டும். 

உமர்: இது உனக்காக திரும்ப வாங்கிக்கொண்டேன் என்று நினைக்கிறாயா? இல்லை இல்லை. இப்படி பல்லிக்கதையெல்லாம் நம்பும் உன்னை அடிக்க செருப்பை பயன்படுத்தினால், 'செருப்பு என் மீது கோபித்துக்கொள்ளும், தன்னை நான் அவமானப்படுத்திவிட்டதாக, அது நினைத்துவிடும் என்று' எண்ணி தான் அந்த வார்த்தைகளை திரும்ப வாங்கிக்கொண்டேன்.

தம்பி: உங்களுக்கு கொஞ்சம் திமிரு அதிகம் தான்.

உமர்: சரி, விஷயத்துக்கு வருகிறேன், இப்போவாதுச் சொல், நீ நல்ல சமாரியனா? இல்லையா?

தம்பி: நான் நல்ல சமாரியன் தான், ஆனால் யூதனுக்கு உதவி செய்யமாட்டேன்.

உமர்: மறுபடியும் பாருடா! தொடங்கிய இடத்திற்கே திரும்ப வந்திருக்கிறாய்!  சரி, கதையை மாற்றிச் சொல்கிறேன். நான் மேலே சொன்ன உவமையில், அடிபட்டு கிடந்தவன் ஒரு முஸ்லிம் என்று வைத்துக்கொள்வோம், அவனுக்கு உதவி செய்து, பராமரித்தவன் ஒரு யூதன் என்று வைத்துக்கொள்வோம்.

இது உனக்கு ஓகேவா?

தம்பி: ஒரு யூதனுடைய உதவி பெறுவதைவிட, அந்த செருப்பு அடியே மேல்,  போதும், நான் ஃபோன் வைக்கிறேன். 

இனி எனக்கு நீங்கள் ஃபோன் செய்யவேண்டாம்.

உமர்: இரு தம்பி, இன்னும் பேசலாம்....

தம்பி ஃபோன் வைத்துவிட்டான்.

அடிக்குறிப்புக்கள் 

1) நல்ல சமாரியன் உவமை: லூக்கா 10:29-37

29. அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாய் இயேசுவை நோக்கி: எனக்குப் பிறன் யார் என்று கேட்டான். 30. இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள்.

31. அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான். 32. அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.  

33. பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி, 34. கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான். 35. மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான். 36. இப்படியிருக்க, கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது என்றார். 37. அதற்கு அவன்: அவனுக்கு இரக்கஞ்செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும் போய் அந்தப்படியே செய் என்றார்.

இன்னொரு உவமையோடு சந்திப்போம்...

தேதி: 22nd April 2022


ரமளான் 2022 கட்டுரைகள்

முந்தைய ரமளான் கட்டுரைகள்

உமரின் பக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2022ramalan/2022-ramalan-9.html


புதன், 20 ஏப்ரல், 2022

ரமளான் 2022 - உவமை 8: நீ இறைவனின் இலவச கிருபையை பெற விரும்புகிறாயா? அல்லது உன் அமல்கள் (கந்தைத் துணி, இத்தா துணி) மூலமாக இறைவனின் தரத்தை எட்டிவிடலாமென கனவு காண்கிறாயா?

(ரமளான் 2022 தொடர் கட்டுரைகள்)

முந்தைய வேதங்களின் உவமைகளும் இஸ்லாமும்

ரமளான் 2022 ஆண்டின் முந்தைய கட்டுரைகளை கீழே படிக்கவும்:

முந்தைய ஏழாவது தொடர் கட்டுரையை படித்துவிட்டு, உமரின் தம்பி சௌதியிலிருந்து பல கேள்விகளுடன் மொபைளில் அழைத்து உமருடன் பேசுகின்றான். கிறிஸ்தவத்தின் அடிப்படை சத்தியம் இது தான்: "தேவனுடைய கிருபையால், மனிதன் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்படுகிறான்", இதனை உமரின் தம்பி சவால் செய்கின்றான், மற்றும் மனிதன் நீதியான செயல்களினால் (அமல்களினால்) இரட்சிக்கப்படமுடியும் என்று வாதம் செய்கின்றான்". 

வாருங்கள், அந்த உரையாடலை சிறிது சுவைத்துப் பார்ப்போம்.

இயேசுவின் படி மனிதன் எப்படி நீதிமானாக்கப்படுகிறான்?

கிருபையாலா? (அ) நீதியான செயல்களாலா(அமல்களினாலா)?

உமரின் மொபைளுக்கு தம்பி அழைத்து பேசுகின்றான்.

தம்பி: ஹலோ அண்ணே! அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மது அல்லாஹி வ பரகாதஹூ

உமர்: ஹலோ தம்பி, உன் மீதும் கர்த்தரின் கிருபையும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக. 

என்னடா இது, இன்னும் தம்பி அழைக்கவில்லையே! என்று யோசித்துக்கொண்டு இருந்தேன், இதோ ஆலயமணி சாரி மொபைள் மணி அடித்துவிட்டது. சரி, என்ன ஏவுகணைகளை என் மீது வீச தயாராக இருக்கிறாய்?

தம்பி:  என்ன அண்ணே எல்லாம் தெரிந்த நீங்களுமா! ஏவுகணைகள் என்றுச் சொல்லி என் மனதை புண்படுத்திவிட்டீர்கள்!

உமர்:  சாரிடா தம்பி. நான் 'அந்த' நோக்கத்தில் சொல்லவில்லை, உன் கேள்விகளை "ஏவுகணைகள்" என்றுச் சொன்னேன், தவறாக நினைக்காதே! எனக்குத் தெரியாதா "முஸ்லிம்கள் மிகவும் நல்லவர்களென்று"? என்னுடைய விமர்சனம் "இஸ்லாமிய‌  இறையியல் மீதும் அல்லாஹ் மீதும் தான், முஸ்லிம்கள் மீதல்ல" இதை நீ நன்றாக அறிவாய்! சக மனிதனை வெறுத்துவிட்டு, ஒரு கிறிஸ்தவன் அப்படி என்ன ஊழியம் செய்துவிடமுடியும்! இயேசுவும் இதனை ஒப்புக்கொள்ளமாட்டார்.

தம்பி:  சரி அண்ணா! என்னுடைய கேள்விகளை இப்போது கேட்கிறேன். என்னுடைய முதலாவது கேள்வி: உங்களுடைய‌ முந்தைய கட்டுரையில், எப்படி நீங்கள் பரிசேயர்களை (யூதர்களை) முஸ்லிம்களோடு ஒப்பிடலாம்?

உமர்: ஏன் ஒப்பிடக்கூடாது? இருவரின் பழக்கங்களும் ஒரே மாதிரியாக இருந்தால், ஒப்பிடக்கூடாதா?  பரிசேயர்களும் தங்கள் சுய நீதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், மக்கள் காணும்படி வெளிப்புற பக்தியை அதிகமாக காட்டிக்கொள்கிறார்கள், அவர்களுக்கு சமமாகவும், அதற்கு மேலாகவும் முஸ்லிம்களின் செயல்களும் இருக்கின்றன என்பதால் தான் ஒப்பிட்டேன். அன்றைக்கு பரிசேயர்கள் என்ன செய்தார்களோ, அதையே இன்று முஸ்லிம்கள் செய்கிறார்கள்! இதனால் தான் ஒப்பிட்டேன்.

இயேசு வாழ்ந்த காலத்தில் ஒருவேளை 'முஸ்லிம்களும்' இருந்திருந்தால், யூதர்கள் அவரிடம் வாங்கிக்கட்டிக்கொண்டது போல, நீங்களும் சரியாக கடிந்துக்கொள்ளப்பட்டு இருந்திருப்பீர்கள்!

தம்பி:  கிறிஸ்தவர்கள் பொதுவில் ஜெபிப்பதில்லையா? ஜெபக்கூட்டங்கள் என்ற பெயரில், பெரிய அளவில் கூட்டங்கள் நடத்துவதில்லையா? 

உமர்: நான் என் கட்டுரையில் கூட்டுத்தொழுகை பற்றி பேசவில்லையே தம்பி. ரமளான் மற்றும் பக்ரீத் பண்டிகைகளின் போது, பொது இடங்களில் கூட்டுத்தொழுகை நடத்துவது பற்றி நான் விமர்சிக்கவில்லையே! தனியாக அதிக பக்தியுள்ளவர்களாக காட்டும் படி, பேருந்து நிலையங்களில் மற்ற இடங்களில் தொழுகை நடத்துவதைப் பற்றித் தான் என் கேள்விகள் கேட்டேன்.

தம்பி:  சரி, ஒரு முக்கியமான கேள்விக்கு வருகிறேன்.  பரிசேய‌ன் மற்றும் ஆயக்காரன் உவமையின் படி, "கிறிஸ்தவர்கள் நீதியான செயல்களைச் செய்யத் தேவையில்லையா! உபவாசம் இருக்கத்தேவையில்லையா? தசமபாகம் கொடுக்கத்தேவையில்லையா"? இவைகளைச் செய்யாமல் அந்த ஆயக்காரனைப்போல‌ "என் மீது இரக்கமாக இரும்" என்று ஜெபம் செய்தால் மட்டும் போதுமா?

உமர்: நீ பல கேள்விகளை ஒரே கேள்வியில் கேட்கிறாய். நான் ஒவ்வொரு விவரமாக விவரிக்கிறேன் கேள். அந்த உவமையில் அந்த ஆயக்காரன் (வரி வசூல் செய்பவன்), தன் சுய நீதியை இறைவனுக்கு முன்பாக சொல்லிக்காட்டவில்லை,  ஒரு யூதனாக அவனும் உபவாசம் இருந்திருப்பான், அவனும் தசம பாகம் கொடுத்திருந்திருப்பான். ஆனால், இந்த‌ உவமையில் கவனிக்கவேண்டியது என்னவென்றால், "மனிதர்களாகிய நாம் எவ்வளவு நல்ல செயல்கள், பக்தியான காரியங்கள் (அமல்கள்) செய்தாலும், இறைவனுக்கு முன்பாக வரும் போது, அவனது அருளையும், கிருபையையுமே சார்ந்து இருக்கவேண்டுமே ஒழிய, நாம் "இறைவனின் சமூகத்துக்கு வரும் போது, தொழும்போது" நாம் செய்த நல்ல செயல்களை  சொல்லிக்காட்டக்கூடாது, மேலும் நான் இவனைப்போல இல்லை, அவனைப்போல இல்லை என்று மற்றவர்களோடு ஒப்பிடக்கூடாது".

நாம் செய்கின்ற அனைத்து நீதியான செயல்கள் தேவனுக்கு முன்பாக கந்தைத்துணிகளுக்கு சமமாகும். கீழ்கண்ட வசனத்தில்  ஏசாயா என்ற தீர்க்கதரிசி தம்மையும் சேர்த்துக்கொண்டு, "நாங்கள் அனைவரும்" என்றும், "எங்களுடைய நீதியெல்லாம்" என்றும் சொல்வதைப் பார்:

ஏசாயா 64:6 நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது.

Isaiah 64:6 All of us have become like one who is unclean, and all our righteous acts are like filthy rags; we all shrivel up like a leaf, and like the wind our sins sweep us away.

தமிழில் "கந்தைத் துணி" என்று மொழியாக்கம் செய்யப்பட்ட வார்த்தைகள், எபிரேய மூல மொழியில் "இத்தா பெகெத்(idâ beḡeḏ)" என்ற வார்த்தைகளாகும். அரபியில் "இத்தா காலம்"என்றால் என்னவென்று அனேகருக்கு தெரிந்திருக்கும். இஸ்லாமின் படி "இத்தா காலம்"  என்றால், ஒரு பெண்ணின் கணவன் மரித்துவிட்டாலோ, விவாகரத்து செய்துவிட்டாலோ, உடனே அப்பெண் திருமணம் செய்யாமல், மூன்று மாதங்கள் காத்திருந்து, தனக்கு மாதவிடாய் நடந்தபிறகு திருமணம் செய்யவேண்டும்.

மாதவிடாய் நேரத்தில் பெண்கள் பயன்படுத்தும் துணியைத்தான் "இத்தா பெகெத்(idâ beḡeḏ)" என்று எபிரேய மொழியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் படி பார்த்தால், பரிசுத்தரான‌ இறைவனின் பார்வையில், நம்முடைய நீதியான செயல்கள் அனைத்தும், பெண்கள் மாதவிடாய் நேரங்களில் பயன்படுத்தும் 'இரத்தத்தால் தோய்க்கப்பட்ட துணிகளுக்கு சமமாகும்" (கந்தைத் துணி என்று ஏசாயா வசனத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது). இப்படிப்பட்டவைகள் தான் நம்முடைய நீதியான செயல்கள். இவைகளை இறைவனுக்கு முன்பாகச் சொல்லி என்ன பயன்?

ஏசாயா 64:6 பற்றிய எபிரேய வசனத்தையும், இவ்வார்த்தைப் பற்றிய விவரங்களையும் கீழ்கண்ட தொடுப்புக்களில் சொடுக்கி படிக்க்லாம்.

https://www.blueletterbible.org/kjv/isa/64/6/t_conc_743006 

https://www.blueletterbible.org/lexicon/h5708/kjv/wlc/0-1/ 

  • Menstruation
  • filthy rag, stained garment (fig. of best deeds of guilty people)
  • STRONGS H5708:
  • † [עִדָּה] noun feminine menstruation, so Vrss (properly time, period); — plural absolute בֶּגֶד עִדִּים Isaiah 64:5 i.e. stained garment (figurative of best deeds of guilty people; || טָמֵא).

தம்பி:  அப்படியென்றால், கிறிஸ்தவர்கள் செய்யும் நற்செயல்கள் கூட கந்தைத் துணிகளுக்கு சமமா?

உமர்: ஆம், நாம் செய்யும் எல்லா நல்ல செயல்கள் உலகத்துக்கு முன்பாக மேன்மையாக தெரியும், ஆனால், பரிபூரண பரிசுத்தராகிய  தேவனுக்கு முன்பாக, அவைகள் கந்தைத் துணி போன்றதே (மாதவிடாய் நேரத்தில் இரத்தம் கசிந்த‌ நாப்கின் துணி போன்றதே! வாசகர்கள் மன்னிக்கவேண்டும், சில வேளைகளில் இப்படிப்பட்ட ஆய்வு விவரங்களை சொல்லித்தான் ஆகவேண்டும்.)

தம்பி:  ஆக, கிறிஸ்தவர்கள் நற்செயல்கள் செய்யக்கூடாது என்றுச் சொல்லவருகிறீர்களா? அனாதை இல்லங்கள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் போன்றவைகள் மூலமாக கிறிஸ்தவர்கள் நற்செயல்கள் செய்யக்கூடாதா?

உமர்: உனக்கு உண்மை புரியவில்லை தம்பி. இவைகளையெல்லாம் கிறிஸ்தவர்கள் நிச்சயம் செய்யவேண்டும். ஆனால், இவைகளை தேவனுக்கு முன்பாகச் சொல்லி, "இவைகளை நான் செய்வதினால், என்னை பரலோகில் நீங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கேட்கக்கூடாது, மற்றவர்களோடு தங்கள் நற்செயல்களை ஒப்பிடக்கூடாது, மற்றவர்களை தாழ்வாக பார்க்கக்கூடாது." இதனை நீ புரிந்துக்கொள்ளவேண்டும்.

மனிதன் தேவனின் கிருபையினால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றான், அவன் செய்த நற்செயல்களால் அல்ல. இதைத் தான் கீழ்கண்ட வசனங்கள் சொல்கின்றன.

தீத்து 3:5. நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.

எபேசியர் 2:8-10

8. கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; 9. ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல; 10. ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.

தம்பி:  கிருபையினால் மனிதன் இரட்சிக்கப்படுகின்றான் என்றுச் சொன்னால், "நற்செயல்களை ஏன் செய்யவேண்டும்"?

உமர்: மேலேயுள்ள 10வது வசனத்தை கவனிக்கவும், "நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்". கிருபையினால் இரட்சிக்கப்பட்டுவிட்ட பிறகு, அதன் வெளிப்பாடாக, நாம் நற்காரியங்களை செய்யவேண்டும், இதைத் தான் நாம் கிறிஸ்தவர்கள் மூலமாக கட்டப்பட்ட‌ மருத்துவ மனைகளாகவும், பள்ளிக்கூடங்களாகவும், சேவை ஊழியங்களாகவும் பார்க்கிறோம்.

தம்பி:  இதனை சரியாக புரிந்துக்கொள்ளவேண்டுமென்றால், "கிருபை + நற்காரியங்கள்" இந்த இரண்டையும் செய்தால் தான் மனிதன் இரட்சிக்கப்படமுடியும்? இது சரிதானே?

உமர்: இல்லை, இது தவறு, "கிருபையினால் விசுவாசத்தைக்கொண்டு மனிதன் இரட்சிக்கப்படுகிறான்". இப்படி இரட்சிக்கப்பட்டவர்கள் மூலமாக வெளிப்படும் விளைவு தான் "நற்செயல்கள்", ஆகையால், நற்ச்செயல்கள் மூலமாக இரட்சிக்கப்படுகிறோம் என்றுச் சொல்லக்கூடாது, தேவனுடைய கிருபை மூலமாகத் தான் இரட்சிப்பு உண்டாகிறது. இது சிறிது குழப்பமாக உனக்குத் தெரியும், ஆனால், இது தான் உண்மை.

தம்பி:  யூதர்களும், முஸ்லிம்களும் "தங்கள் நீதியான செயல்களால்" இரட்சிக்கப்படுகிறார்கள் (தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்கிறார்கள்), இதே போன்று கிறிஸ்தவர்கள் கிருபையினால் இரட்சிக்கப்படுகிறார்கள் என்று வைத்துக்கொள்ளலாமா? இவ்விரண்டும் உண்மையாக இருக்கலாம் அல்லவா?

உமர்: இது மிகவும் ஆபத்தான முடிவு மற்றும் புரிந்துக்கொள்ளுதல்.

இம்மூவரின் இறைவன் வெவ்வேறானவர்களாக‌ இருந்தால், இதற்கு சாத்தியமுண்டு, ஆனால், பிரச்சனை "இம்மூவர் வணங்கும் இறைவன் ஒருவரே" என்றுச் சொல்வதினால் தான்.

இதனால், ஏதாவது ஒன்று மட்டும் தான் உண்மையாக இருக்கமுடியும். பைபிளின் தேவனை நம்பினால், 'கிருபையால் தான் இரட்சிப்பு' என்பதை ஒப்புக்கொண்டாகவேண்டும். 

யெகோவா தேவன் வேறு, அல்லாஹ் வேறு என்று நம்பினால், நீ முஸ்லிம்களுக்காகச் சொல்வதை ஒப்புக்கொள்ளலாம். ஆனால், குர்ஆனின் படி, பைபிளை கொடுத்த இறைவன் தான் குர்‍ஆனையும் கொடுத்தானாம், இது உண்மையென்றால், நீ சொல்வது உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை.

தம்பி:  அப்படியென்றால், முஸ்லிம்கள், தங்கள் நீதியான அமல்களினால் இரட்சிக்கப்படமுடியாது என்றுச் சொல்லவருகிறீர்களா?

உமர்: இப்படி நேரடியாக கேள்வி கேட்டால் எப்படி தம்பி? பைபிளின் படி, இயேசுக் கிறிஸ்துவின் நற்செய்தியின் படி "ஆம், இது தான் உண்மை, நம்முடைய நீதியான செயல்கள் பரிசுத்த தேவனுக்கு முன்பாக கந்தைத்துணிகளுக்கு சமம் என்றால், எப்படி அவருக்கு முன்பாக நம்முடைய கந்தையான செயல்களை நம்பி நாம் நிற்கமுடியும்"? இது யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மட்டுமல்ல, கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும்.

தம்பி:  ஒரு முஸ்லிம் செய்யும் அமல்கள் (தொழுகைகள், நற்செயல்கள்) அனைத்தும் வீணா? இதனை எப்படி ஏற்றுக்கொள்வது?

உமர்: சரி, உன் கணக்குப்படியே வருகிறேன். ஒரு முஸ்லிம் அதாவது உன்னைப்போன்ற ஒரு நபர், தன்னுடைய 20வது வயதில், இஸ்லாமை தழுவுகின்றான் என்று வைத்துக்கொள்வோம், அடுத்த 50 ஆண்டுகள் (வயது 70 ஆகும்வரை) அவன், தினமும் ஐந்து வேளை தொழுகை செய்கின்றான், இதர நற்செயல்கள் செய்கின்றான் என்று வைத்துக்கொள்வோம்.

அவனுக்கு 70 வயது முடியும் போது, மரிக்கும் நேரம் அவனுக்கு தெரிந்துவிட்டது, அதாவது தன் உடல் நிலை சரியில்லை, மருத்துவர்களும் நாட்களை குறித்துவிட்டார்கள். இந்த நேரத்தில் அவனிடம் சென்று:

"நீங்கள் கடந்த 50 ஆண்டுகள், அதாவது 50 ஆண்டுகள் * 365  நாட்கள் * 5 முறை = 91,250 முறை தொழுகை செய்திருக்கிறீர்கள். இன்னும் மேலதிக உபரி தொழுகைகள், பண்டிகை கூட்டுத் தொழுகைகளைச் சேர்த்து, ஒரு லட்சம் முறை தொழுதிருக்கிறீர்கள், இன்னும் தானதர்மங்களும், ஜகாத்தும் கொடுத்து இருக்கிறீர்கள். இப்படிப்பட்ட நற்செயல்களை அமல்களைச் செய்த நீங்கள் மரிக்கும் போது, "அல்லாஹ் உங்களுக்கு சொர்க்கம் புக அனுமதிப்பான் என்ற நம்பிக்கை" இப்போது உங்களுக்கு உண்டா என்று கேட்டால்? அவருடைய பதில் என்னவாக இருக்கும்?

தம்பி! சொல். இந்த நிலையில் நீ இருந்தால், உன் பதில் என்னவாக இருக்கும்?

தம்பி: இதை நான் எப்படிச் சொல்லமுடியும், இதனை அல்லாஹ் தான் நிர்ணயிப்பான்! என் அமல்கள் (நற்செயல்கள்) என் தீய செயல்களை விட அதிகமாக இருந்தால், சொர்க்கம் தருவான், இல்லையென்றால் இல்லை.

உமர்:  "சொர்க்கத்தின் நிச்சயம்" எப்போது முடிவு செய்யப்படும்? உயிரோடு இருக்கும் போதா? அல்லது மரித்த பிறகா? 

தம்பி: "சொர்க்கத்தின் நிச்சயம்" உயிரோடு இருக்கும் போது முடிவு செய்யப்படாது, மரித்த பிறகு தான் முடிவு செய்யப்படும். அல்லாஹ் எடுக்கும் முடிவை மனிதன் எப்படி முன்கூட்டியே சொல்லமுடியும்?

உமர்: [இது தான் இஸ்லாமில் இருக்கின்ற மிகபெரிய ஓட்டை அல்லது தீமை]

ஒருவேளை, துர்திஷ்டவசமாக, உன் நற்செயல்கள், தீய செயல்களைவிட குறைவாக இருப்பது, மரித்த பிறகு தான் தெரியும் என்றுச் சொன்னால், உனக்கு அதனை சரி செய்ய வாய்ப்பு கிடைக்குமா?

அந்த நேரத்தில் அல்லாஹ் உன்னிடம் "உனக்கு இன்னொரு வாய்ப்பு தருகிறேன், இன்னும் 5 ஆண்டுகள் நான் தருகிறேன், நீ உலகில் சென்று(உயிர் பெற்று), அதிக அமல்களைச் செய்துவிட்டு வா என்று அல்லாஹ் அனுப்புவானா?". அப்படி அனுப்பினாலும், "அந்த ஐந்து ஆண்டுகளில், எப்படி கணக்கு வைத்து, உன் அமல்களை செய்வாய்? அந்த ஐந்தாண்டுகளில் சிந்தையிலும் ஒரு பாவமும் செய்யாமல், நீ வாழ்வாயா"?

தம்பி: இல்லை, இல்லை, இதற்கு வாய்ப்பு இல்லை, ஒரு முறை மரித்தால், கதை அதோடு முடிந்துவிடும். ஒருவேளை நீங்கள் சொல்வது போல நடந்தால், முடிந்தது கதை, "நான் மரித்து உயிர்த்தேன் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு, முன்பை விட இன்னும் அதிக கர்வம் கொண்டு, தீய செயல்களைச் செய்து, இன்னும் அதிகமான பாவங்களை தன் கணக்கில் மனிதன் சேர்த்துக்கொள்வான்" அல்லவா?

உமர்: அப்படியென்றால், உன் அமல்கள்/நீதியான நற்செயல்கள் மீது சார்ந்து வாழ்வது வீண் தானே!  உன் முடிவு என்னவாகும் என்று வாழும் போதே தெரியாமல் பயத்தோடு வாழ்வது மிகவும் மோசமான நிலையல்லவா? "நிச்சயம் இல்லாமல்", வாழ்ந்து என்ன பயன்? இப்படிப்பட்ட இறையியலை நம்பி வாழ்வது முத்திசாலித்தனமா? தம்பி!

தம்பி: நீங்கள் சொல்வது சரி தான். ஆனால், இதற்கு மாற்று என்ன இருக்கிறது?

உமர்: இதைத் தான் இஸ்லாமிய இறையியலில் உள்ள தவறு என்று நாங்கள் சொல்கிறோம். மனிதனின் நற்செயல்களை கணக்கில் கொண்டு, சொர்க்கம் நிச்சயிக்கப்படுவது என்பது நடைமுறை சாத்தியமில்லாதது.  50 ஆண்டுகள் (அ) 70 ஆண்டுகள் (அ) 100 ஆண்டுகள் ஒரு முஸ்லிம் வாழ்ந்தாலும், அவனது அமல்களின் நிலை, அவனை சொர்க்கம் சேர்க்குமா? இந்த நம்பிக்கை முஸ்லிம்களுக்கு உண்டா? 

பங்குச் சந்தையை நம்பி வாழ்ந்தவர்களும் உண்டு, கெட்டுப்போனவர்களும் உண்டு, ஒரு நம்பிக்கையின் பெயரில் கணக்குகள் போட்டு பங்குகள் வாங்குகிறோம். ஆனால், பங்குச் சந்தையை விட மிகவும் மோசமான இறையியலில் இஸ்லாம் உள்ளது. இங்கு கணக்கே நமக்கு தெரிவதில்லை. மரித்த பிறகு தனக்கு என்ன கிடைக்கும் என்று தெரியாத பட்சத்தில் வாழ்வது சரியானதா தம்பி?

இறைவனின் எதிர்ப்பார்க்கும் தரத்தின்படி மனிதன் வாழ்வது என்பது, நடக்காத ஒன்று. இதற்கு ஒரே தீர்வு, அந்த இறைவன் தன் "கிருபையால் மனிதனுக்கு இரட்சிப்பை, சொர்க்கத்திற்குள் நுழையும் வாய்ப்பை இலவசமாக கொடுப்பது தான்". இதைத் தான் கிறிஸ்தவம் "கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;" என்றுச் சொல்கிறது. ஆகையால், கிறிஸ்தவ இறையியலின் படி, மனிதன் தன் நற்செயல்களுக்காக பெருமை அடித்துக்கொள்ளமுடியாது. தன் நீதியான செயல்களால், இயேசு எனக்கு இரட்சிப்பு கொடுத்தார் என்றுச் சொல்லமுடியாது.

தம்பி, நீ இறைவனின் இலவச கிருபையை பெற விரும்புகிறாயா? அல்லது உன் அமல்கள் (கந்தைத் துணி, இத்தா துணி) மூலமாக அந்த இறைவனின் தரத்திற்கு மேலாக எட்டிவிடலாம் என்று நம்புகிறாயா?

தம்பி: அண்ணே! நான் குழம்பியுள்ளேன்! என்னை மறுபடியும் கிறிஸ்தவனாக்க முயலுகின்றீர்கள் போல தெரிகின்றது? 

உமர்: சத்தியத்தை உனக்குச் சொல்லியுள்ளேன், அது உன்னை விடுதலையாக்க நீ அனுமதித்தால், நீ உண்மையாக விடுதலையாவாய்!  இதுவரை நீ செய்த அனைத்து அமல்கள் உனக்கு உதவுமா? அந்த நம்பிக்கை உனக்கு உண்டா?  

தம்பி: போதும் போதும்! என்னை யோசிக்கவிடுங்க! நான் இன்னொரு முறை உங்களை அழைத்து பேசுவேன். குட் நைட்.

உமர்: குட் நைட் தம்பி.

இன்னொரு உவமையோடு சந்திப்போம்.

தேதி: 20th April 2022


ரமளான் 2022 கட்டுரைகள்

முந்தைய ஆண்டுகளின் ரமளான் கட்டுரைகள்

உமரின் பக்கம்

Source:https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2022ramalan/2022-ramalan-8.html

சனி, 16 ஏப்ரல், 2022

குர்‍ஆனின் படி "ஓ மர்யமுடைய மகன் ஈஸாவே!" என்று சீடர்கள் அழைத்தது ஏன்?

ஸூரா 5:112. "மர்யமுடைய மகன் ஈஸாவே! உங்கள் இறைவன் வானத்திலிருந்து எங்களுக்காக உணவு மரவையை (ஆகாரத் தட்டை) இறக்கி வைக்க முடியுமா?" என்று ஹவாரிய்யூன் (சீடர்)கள் கேட்டபோது அவர், "நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்" என்று கூறினார். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

இந்த வசனத்தில், இயேசுவின் சீடர்கள் அவரை "ஓ மர்யமுடைய மகன் ஈஸாவே" என்று அழைத்து பேசுகிறார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் இங்கு சந்தேகத்திற்குரிய அசாதாரணமான செயல் ஒன்றுமே தெரியவில்லை. ஆனால் குர்ஆனின் பெரும்பாலான வாசகர்கள் கவனிக்கத் தவறிய ஒரு நுட்பமான பிரச்சனை இங்கு உள்ளது.

குர்ஆனில் ஏறக்குறைய எல்லா இடங்களிலும் இயேசுவின் பெயர் குறிப்பிடப்படும்போது, அதைத் தொடர்ந்து "மர்யமின் மகன்" என்ற மேலதிக "பட்டப்பெயர்" சேர்க்கப்பட்டுள்ளதை கவனிக்கலாம்,  பார்க்க: குர்‍ஆன்  2:253, 4:171,  5:17, 5:72,  5:75,  5:110,  5:112, 5:114, 5:116, 9:31, 19:34, 23:50, 33:7 & 43:57.

இது உங்களுக்கு விசித்திரமாகத் தெரியவில்லையா?

குர்‍ஆன் 3:45ல் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது 

ஸூரா 3:45. மலக்குகள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;

ஒரு நிமிடம் பொறுங்கள், அவருடைய பெயர் "மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா" என்பதா? இப்படி யாராவது பெயர் வைப்பார்களா? ஈஸா என்பதும், மஸீஹ் என்பதும் பெயர்கள் என்றுச் சொன்னாலும் ஒப்புக்கொள்ளலாம், அது என்ன "மரியமின் மகன்" இப்படி யாராவது பெயரை சூட்டுவார்களா?  ஆம், இதைத்தான் குர்‍ஆன் அடிக்கடி தொடர்ச்சியாக நமக்கு சொல்லித் தருகிறது.

புதிய ஏற்பாட்டிலும், நற்செய்தி நூல்களிலும், ஒரு போதும் இயேசுவை "மரியமின் மகன்" என்று குறிப்பிடப்படவே இல்லை. ஒரே ஒரு இடத்தில் மட்டும் அதுவும் "அவர் மீது சந்தேகம் கொண்டு, அவரை விசுவாசிக்காதவர்கள் 'இவர் மரியாளின் மகனல்லவா' என்று சொன்னார்கள்.

மாற்கு 6:3. இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு யோசே யூதா சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும், இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறலடைந்தார்கள்.

இயேசுவின் சீடர்கள் இப்படித் தான் அவரை அழைத்து பேசினார்கள் என்று குர்‍ஆன் சொல்கிறது.

நற்செய்தி நூல்களில், இயேசுவின் சீடர்கள் அவரை அழைக்கும் போது, "ஆண்டவரே, எஜமானரே, ரபி, ஆசிரியரே" என்று அழைத்தார்கள் என்று நாம் அறிவோம். ஆனால், ஒரு போதும் "ஓ இயேசுவே" என்றோ, "மரியமின் மகன் இயேசுவே" என்றோ பெயர் குறிப்பிட்டு அழைத்ததாக நாம் காணமுடியாது. இப்படி பெயர்ச் சொல்லி அவரை அழைத்தால், தங்கள் ரபி மற்றும் ஆசிரியருக்கு அது அவமரியாதை என்று அவர்கள் கருதினார்கள்.

ஆனால், "மர்யமின் மகன்" என்ற பட்டப்பெயரை ஒவ்வொரு முறையும் சீடர்கள் இயேசுவிடம் பேசும் போது சேர்த்துக்கொண்டதாக அல்லாஹ் குர்‍ஆனில் கூறியுள்ளான். இது இயற்கைக்கு மாறான பேச்சு மட்டுமல்ல, அவமரியாதையும் கூட. மேலும் கேலி அல்லது அவநம்பிக்கையின் ஒரு வடிவமாக பயன்படுத்தப்பட்டாலொழிய, இப்படி கூறுவது சிறிதும் அர்த்தமுள்ளதாக இல்லை.

இப்படிப்பட்ட ஒரு விசேஷித்த விசித்திர சலுகையை குர்‍ஆன் யாருக்குமே கொடுக்கவில்லை என்பதை கவனிக்கவும். அதாவது

  • மூஸா நபி "இன்னாரின் மகன் மூஸாவே" என்று அவர் அழைக்கப்படவில்லை.
  • இப்றாஹீம் நபி "இன்னாரின் மகன் இப்றாஹீமே" என்று அவர் அழைக்கப்படவில்லை.
  • தாவூது நபி "இன்னாரின் மகன் தாவூதே" என்று அழைக்கப்படவில்லை.
  • அவ்வளவு ஏன், முஹம்மதுவை குறிப்பிடும் போது கூட "இன்னாரின் மகன் முஹம்மதுவே" என்று குர்‍ஆன் அழைப்பதில்லை.

ஆனால், இயேசுவிடம் வரும் போது மட்டும் "மரியமின் மகன்" என்று குர்‍ஆன் அடைமொழி கொடுத்து பேசுகிறது, ஏன்?

வியாபார கொடுக்கல் வாங்கல் காரியங்களின் போது, உடன்படிக்கைகளை எழுதும் போது, அப்துல்லாவின் மகன் முஹம்மது என்று எழுதப்படுவது வேறு, ஆனால், இருவர் நேருக்கு நேர் நின்று பேசும் போது, ஒவ்வொரு முறையும் "அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதுவே" என்று அழைத்து பேசமாட்டார்கள். இது நடைமுறையில் நடக்காத ஒன்று.

இப்போது ஒரே ஒரு கேள்வி நம் கண் முன் நிற்கிறது; "மரியமின் மகன்" என்ற சொற்களை ஏன் இயேசுவிடம் பேசும் போது ஒருவர் குறிப்பிடவேண்டும்?

இயேசுவிடம் நேரடியாக அவரது சீடர்கள் பேசும் போது, ஏன் "மர்யமின் மகன்" என்ற வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்தவேண்டும்? ஒரு வேளை "தாம் மர்யமின் மகன்" என்பது இயேசுவிற்கே தெரியாதா? இதனை அவர் அறியவில்லையா? இதனை ஒவ்வொரு முறையும் சீடர்கள் பேசும் போது குறிப்பிட்டு அவருக்கு அதனை ஞாபகப்படுத்துகிறார்களா? இது வேடிக்கையிலும் வேடிக்கையாக தெரியவில்லையா?

இதற்கான பதில் என்னவென்றால், "குர்‍ஆன் ஆக்கியோன் தன் சொந்த‌ இறையியல் விவரத்தை இங்கு நுழைக்க விரும்புகிறான், அதாவது, இயேசு "தேவ குமாரன் அல்ல", அவர் ஒரு சாதாரண "பெண்ணுக்கு பிறந்த ஒரு பிள்ளை தான்" என்ற தன் சொந்த கருத்தை குறிப்பிடவே குர்‍ஆனில் எல்லா இடங்களிலும் இதனை குறிப்பிடுகிறார் என்பது நமக்கு புரிகின்றது.

ஆனால், குர்‍ஆனின் படி "சீடர்கள் ஏன் அதனை பயன்படுத்தினார்கள்?"

முஸ்லீம்களின் கூற்றுப்படி, இயேசு தன்னை இறைமகன் என்று ஒருபோதும் சொல்லவில்லை, எனவே அவருடைய சீடர்கள் அத்தகைய கருத்தை முன்வைக்க வேண்டிய அவசியமில்லை.  அத்தகைய கருத்தைக் கூறுவது ஒரு கேலிக்குரிய, தேவையற்ற மற்றும் இழிவான செயலாக இருந்திருக்கும்.

இஸ்லாம் சொல்வதின்படி, இயேசு ஒரு நபி மட்டுமே என்ற கூற்றை ஒரு பேச்சுக்காக ஏற்றுக்கொண்டாலும்,  "இயேசு மரியாளின் குமாரன் என்றும், அவர் ஒரு தீர்க்கதரிசி மட்டுமே என்றும் சீடர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும், அப்படி இருக்கும் போது, சீடர்களின் பேச்சில் "மர்யமின் மகன்" என்ற அதிகபடியான சொற்களை அல்லாஹ் சுயமாக சேர்த்தது, ஒரு தில்லுமுல்லு செயலாகும் என்பதை நாம் புரிந்துக்கொள்ளலாம்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், "குர்ஆனின் ஆசிரியர் அல்லாஹ் தனது சொந்த வார்த்தைகளை சீடர்களின் வாயில் திணிக்கிறான். அவன் முந்தைய மக்கள் பேசிய வார்த்தைகளை மாற்றியும், சிலவற்றை இட்டுக்கட்டியும், தான் என்ன சொல்லவேண்டும் என்று விரும்புகிறானோ, அதனை சீடர்கள் சொன்னதாக சொல்லி ஒரு பொய்யான பிம்பத்தை உருவாக்க முயன்றுள்ளான்". அதாவது இயேசு இறைக்குமாரன் இல்லை என்ற தனது சொந்த கருத்தை நிலைநாட்ட, தேவையில்லாத இடங்களில் முட்டாள் தனமாக "மர்யமின் மகன்" என்ற அதிகபடியான சொற்களை இடையிடையே சொறுகியுள்ளான் என்பது இதன் மூலம் அறியலாம்.

தேதி: 16th April 2022