ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

இனிய மார்க்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இனிய மார்க்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 31 ஜூலை, 2008

இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - அபுமுஹை கட்டுரைகளில்

இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி

(அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
 
 
 
முன்னுரை: இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்று முஸ்லீம்கள் ஏகமாக சொல்கிறார்கள். ஆனால், முகமது மற்ற நாட்டு மன்னர்களுக்கு எழுதிய கடிதங்களே போதும், நமக்கு இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்பதை அறிந்துக்கொள்வதற்கு. மற்ற நாட்டு மன்னர்களுக்கு முகமது கடிதங்கள் மூலம் அழைப்பு விடுத்தார், அபுமுஹை அவர்கள் அக்கடிதங்களின் தமிழ் மொழியாக்கத்தை பதித்துள்ளார். இக்கடிதங்களை ரஹீக் என்ற புத்தகத்திலிருந்து பதித்ததாக, அபுமுஹை அவர்கள் குறிப்பு எழுதியுள்ளார்கள்.

இக்கட்டுரையில் நாம் கீழ் கண்ட இரண்டு விவரங்களைக் காணப்போகிறோம்.

1) தமிழில் மொழிபெயர்க்கும் போது, வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்து, "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்" என்பதை காட்ட‌ முயற்சி செய்த தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள்.

2) இக்கடிதங்கள் நமக்கு எதை போதிக்கின்றன, இஸ்லாம் அமைதி மார்க்கமா அல்லது மற்றவர்களை பயப்படவைத்து, வாளால் பரவிய மார்க்கமா?





1) தமிழில் மொழிபெயர்க்கும் போது, வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்து, "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்" என்பதை காட்ட‌ முயற்சி செய்த தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள்


முகமது எட்டு அரசர்களுக்கு கடிதம் மூலம் இஸ்லாமை தழுவும் படி அழைப்பு விடுத்ததாக அபூமுஹை அவர்கள் கட்டுரைகளை எழுதியுள்ளார்கள். இக்கடிதங்கள் ஆங்கிலத்தில் முஹம்மத் டாட் நெட் என்ற தளத்தில் பதிக்கப்பட்டுள்ளது. பஹ்ரைன் நாட்டு மன்னருக்கு முகமது அனுப்பிய முதலாவது கடிதம் கிடைக்காததால், அதை நான் இக்கட்டுரைக்கு எடுத்துக்கொள்ளவில்லை, அக்கட்டுரையை படிக்க இங்கே சொடுக்கவும்.

இந்த கட்டுரைகளில் சிலவற்றில், எங்கெல்லாம் இஸ்லாமைக் கொண்டு முகமது மற்றவர்களை பயப்பட வைத்தாரோ, அங்கெல்லாம் நம் தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள் அவ்வார்த்தைகளை மறைத்து, "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் போல" காட்சி அளிக்கும் படி மொழிபெயர்த்துள்ளார்கள்.

அவைகளைப் பற்றிய விவரங்களை கீழே காணலாம்:

ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு நமக்கு உபயோகமாக இருக்கும் என்பதால், இக்கடிதங்களை ஆங்கிலத்தில் நான் கீழே பதித்து, அதன் பக்கத்தில் நம் தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள் தமிழில் மொழிபெயர்த்த விவரஙகளைத் தருகிறேன். முழு கடிதங்களைப் படிக்க கொடுக்கப்பட்ட தமிழ் அல்லது ஆங்கில தொடுப்புக்களை சொடுக்கவும்.

வரிசை எண் எந்த நாட்டு அரசனுக்கு இக்கடிதம் அனுப்பப்பட்டது தமிழில்(அபூமுஹை த‌ள‌ம் எழுதிய‌து) இக்கடிதம் ஆங்கில‌த்தில்
1. அபிசீனியா மன்னர் நஜ்ஜாஷிக்கு ….. நான் உமக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். நிச்சயமாக நான் இஸ்லாமியத் தூதராவேன். நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய். .......

Source: http://abumuhai.blogspot.com/2008/07/1.html
…. I call you unto the fold of Islam; if you embrace Islam, you will find safety, ….

Source:
A Deputation to Abyssinia (Ethiopia)
2. எகிப்து மன்னருக்கு நான் உங்களுக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. ஈடேற்றம் அடைவீர்.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/2.html
… I invite you to accept Islam. Therefore, if you want security, accept Islam.

Source:
Letter to the Vicegerent of Egypt, called Muqawqas
3. பாரசீக மன்னருக்கு நீங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் ஈடேற்றம் பெறுவீர்கள்.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/3.html
…… Accept Islam as your religion so that you may live in security,….

Source: A Letter to Chosroes, Emperor of Persia
4. ரோம் நாட்டு மன்னருக்கு ….நேர்வழியை பின்பற்றியவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! இஸ்லாமை ஏற்றுக்கொள் ஈடேற்றம் அடைவாய்….

Source: http://abumuhai.blogspot.com/2008/07/4.html
……I invite you to embrace Islam so that you may live in security.

Source:
The Envoy to Caesar, King of Rome
5. யமாமா நாட்டு அரசருக்கு ….குதிரையும் ஒட்டகமும் எதுவரை செல்ல முடியுமோ அதுவரை எனது மார்க்கம் வெற்றி பெரும். இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள். ஈடேற்றம் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் உள்ள பகுதிகளையெல்லாம் உங்களுக்கே தந்துவிடுகிறேன்.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/67.html
… Be informed that my religion shall prevail everywhere. You should accept Islam, and whatever under your command shall remain yours."

Source:
A Letter to Haudha bin 'Ali, Governor of Yamama
6. சிரியா நாட்டு மன்னருக்கு அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, ஹாரிஸ் இப்னு அபூ ஷமீருக்கு எழுதியது. நேர்வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனை உண்மையாக ஏற்றுக் கொண்டவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! தனக்கு இணை துணை இல்லாத ஏகனான அல்லாஹ் ஒருவனையே நீர் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று நான் உங்களை அழைக்கிறேன். அப்படி செய்தால் உங்கள் ஆட்சி உங்களிடமே நிலைத்திருக்கும்.''

அஸத் இப்னு குஸைமா கிளையைச் சேர்ந்த ஷுஜா இப்னு வஹப் இக்கடிதத்தை எடுத்துச் சென்றார்.
இவர் ஹாரிஸிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அதைத் தூக்கி எறிந்துவிட்டு''என்னிடமிருந்து எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும். இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன்'' என்று கர்ஜித்தான். இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/67.html
From Muhammad, Messenger of Allâh to Al-Harith bin Abi Shamir. Peace be upon him who follows true guidance, believes in it and regards it as true. I invite you to believe in Allâh Alone with no associate, thenceafter your kingdom will remain yours."

Shuja' bin Wahab had the honour of taking the letter to Harith, who upon hearing the letter read in his audience, was madly infuriated and uttered:
"Who dares to disposs me of my country, I'll fight him (the Prophet)," and arrogantly rejected the Prophet's invitation to the fold of Islam.

Source:
A Letter to Harith bin Abi Shamir Al-Ghassani, King of Damascus
7. ஓமன் நாட்டு அரசருக்கு நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.'

Source: http://abumuhai.blogspot.com/2008/07/8.html
If you two accept Islam, you will remain in command of your country; but if you refuse my Call, you've got to remember that all your possessions are perishable. My horsemen will appropriate your land, and my Prophethood will assume preponderance over your kingship."

Source:
Letter to the King of 'Oman, Jaifer, and his Brother 'Abd Al-Jalandi


2) இக்கடிதங்கள் நமக்கு எதை போதிக்கின்றன, இஸ்லாம் அமைதி மார்க்கமா அல்லது மற்றவர்களை பயப்படவைத்து, வாளால் பரவிய மார்க்கமா?

மேலே உள்ள சில கட்டுரைகளில்,

ஆங்கிலத்தில் "
if you embrace Islam, you will find safety" என்று உள்ளதை

தமிழில் "
நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய்" என்று மொழிபெயர்த்துள்ளார்கள்.

ஆங்கிலத்தில் உள்ள வரிகளில் "ஒரு நிபந்தனை" இருப்பதை காணமுடியும், அதாவது, "நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், பாதுகாப்பாக இருப்பீர்கள்" என்று உள்ளது. இதன் உள் அர்த்தம் என்ன? "நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளவில்லையானால், பாதுகாப்பாக இருக்கமாட்டீர்கள், அதாவது நான் வந்து போர் புரிந்து, உங்கள் மீது வெற்றிக்கொள்வேன்" என்று பொருள். இந்த விவரத்தை மிகவும் தெளிவாக, முகமது ஓமன் நாட்டு மன்னருக்கு எழுதிய கடிதத்தில் விவரித்துள்ளார்.


ஓமன் நாட்டுக்கு முகமதுவின் கடிதம்:

...நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.'


...If you two accept Islam, you will remain in command of your country; but if you refuse my Call, you've got to remember that all your possessions are perishable. My horsemen will appropriate your land, and my Prophethood will assume preponderance over your kingship."

மேலே உள்ள கடிதத்தில் முகமது சொல்வதை கவனியுங்கள். ஓமன் நாட்டு அரசர் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், தன் நாட்டை தானே ஆட்சி செய்யலாமாம். யார் யாருக்கு ஆட்சிப் பொறுப்பை தருவது? நான் ஆட்சி செய்யும் நாட்டில், எனக்கு யாரோ ஒருவர் கடிதம் அனுப்பி, இஸ்லாமை ஏற்றுகொள், அப்போது நீயே உன் நாட்டை ஆட்சி செய்யலாம் என்று சொன்னால், நான் என்ன காதில் பூவைத்து இருப்பேனா? ஒருவேளை எனக்கு இராணுவ பலம் குறைவாக இருந்தால், தோற்றுப்போவேன் என்ற பயத்துடன் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளமுடியும் [அப்படி தோற்றுப்போவேன் என்ற பயத்துடன் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இதனால் அல்லாவிற்கும், இஸ்லாமுக்கும் என்ன மேன்மை சொல்லுங்கள்?]. எனக்கு இராணுவ பலம் அதிகமாக இருந்தால், முகமதுவோடு போர் புரிவேன். எது எப்படியானாலும், இது தான் அல்லாவின் தீனை பரப்பும் விதமா? சிந்தியுங்கள்.

ஒரு வேளை முஸ்லீம்கள் இக்கடிதங்களுக்கு "அப்படி அர்த்தம் இல்லை, கிறிஸ்தவர்கள் பொய் சொல்கிறார்கள்" என்று சொல்லக்கூடும். ஆனால், சிரியா அரசன், இக்கடிதம் படித்து என்ன சொன்னார் என்பதை சிறிது படித்துப்பார்த்தால் புரியும், இஸ்லாமை முகமது எப்படி பரப்பினார் என்பதை. அந்த அரசன் "என்னிடத்திலிருந்து என் ஆட்சியை யார் பிடுங்க முடியும்?" என்றுச் சொல்கிறான், அப்படியானால், அக்கடிதத்தில் என்ன எழுதியிருக்கும் என்று தெரிந்துக்கொள்ள ஆராய்ச்சி செய்யவேண்டிய அவசியமில்லை.


அஸத் இப்னு குஸைமா கிளையைச் சேர்ந்த ஷுஜா இப்னு வஹப் இக்கடிதத்தை எடுத்துச் சென்றார். இவர் ஹாரிஸிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அதைத் தூக்கி எறிந்துவிட்டு''என்னிடமிருந்து எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும். இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன்'' என்று கர்ஜித்தான். இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை.


Shuja' bin Wahab had the honour of taking the letter to Harith, who upon hearing the letter read in his audience, was madly infuriated and uttered: "Who dares to disposs me of my country, I'll fight him (the Prophet)," and arrogantly rejected the Prophet's invitation to the fold of Islam.


சிலர் சொல்லக்கூடும், முகமதுவின் இக்கடிதங்களுக்கு பலர் ஆமோதம் அளித்தார்கள், இஸ்லாமியர்களாக மாறினார்கள் என்று. உண்மை தான் பலர் அமோதம் அளித்தார்கள், சிலர் எதிர்த்தார்கள். இங்கு பிரச்சனை "இஸ்லாமின் கோட்பாடுகள், கட்டளைகள்" மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி இருந்ததா இல்லையா என்பதல்ல? முகமது இஸ்லாமை பரப்பிய விதம் சரியா? உடனே, முகமதுவை விட்டுவிட்டு மற்ற அரசர்களின் பெயர்களை குறிப்பிட்டு, இந்த நாட்டில் இப்படி அமைதியான முறையில் இஸ்லாம் பரவியது என்று சொல்லவேண்டாம், இப்போது கேள்வி, முகமது இஸ்லாமை எப்படி பரப்பினார்? என்பது தான். முகமதுவின் கடிதங்களில் உள்ள உண்மை என்ன? என்பதைப் பற்றியது தான்.



முகமது இஸ்லாமை வாளால் தான் பரப்பினார்:

இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்பதை காட்ட முஸ்லீம்கள், பல நாடுகளின் சரித்திரத்தைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால், முகமது எப்படி பரப்பினார் என்பதை இக்கடிதங்கள் படம் பிடித்துக்காட்டுகின்றன. இதற்கு முஸ்லீம்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? நான் ஒரு கேள்வியை கேட்கட்டும், அதாவது உலகத்தில் பல இஸ்லாமிய நாடுகள் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு நாட்டிற்கு, இந்திய அரசாங்கம் அல்லது வேறு ஒரு மேற்கத்திய நாடு அல்லது இராணுபலம் அதிகமாக உள்ள நாடு, கீழ் கண்டவாறு கடிதம் எழுதி அனுப்பினால், எப்படி இருக்கும்.


மான்புமிகு சூடான்/பாகிஸ்தான்/சௌதி அரேபியா etc... நாட்டு அதிபருக்கு, இந்தியாவின்/சைனாவின்/அமெரிக்காவின்/ஜெர்மனியின் etc... நாட்டு அதிபர் எழுதிக்கொள்வது. உங்களுக்கு சாந்தி உண்டாகட்டும்.

நாங்கள் a/b/c/x/y/z etc.. என்ற இறைவனை வணங்குகிறோம், மற்றும் இத்தெய்வமே உண்மையானவர். எனவே, உங்கள் அல்லாவை தொழுவதை இனி விட்டுவிடுங்கள். நீங்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டுமானால், இந்துத்துவத்தை / கிறிஸ்தவத்தை / புத்தமதத்தை / etc... ஏற்றுக்கொள்ளுங்கள், அப்போது பாதுகாப்பாக இருப்பீர்கள். நீங்க‌ள் இஸ்லாமை விட்டு விட்டு எங்கள் தெய்வ‌ங்க‌ளை ஏற்றுக்கொள்ள‌வில்லையானால், எங்க‌ள் இராணுவ‌ம் உங்க‌ள் நாட்டில் வ‌ந்து இற‌ங்கும், எங்க‌ள் வ‌லிமையை உங்க‌ளுக்கு காட்டுவோம். எங்க‌ள் மார்க்க‌த்தை ஏற்று, உங்க‌ள் இஸ்லாமை விட்டு விடுங்க‌ள் என்று உங்க‌ளுக்கு அழைப்பு விடுக்கிறோம். அப்ப‌டி நீங்க‌ள் மாற‌வில்லையானால், அல்லாவை வ‌ண‌ங்கும் மூஸ்லீம்க‌ளின் பாவ‌ங்க‌ள் எல்லாம் உங்க‌ள் மேல் சும‌ரும் என்ப‌தை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த மேலே உள்ள கடிதத்திற்கும், முகமது அனுப்பின கடிதங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று நினைக்கிறீர்கள். இதை படித்தவுடன் கோபம் வரவில்லையா உங்களுக்கு? அப்படித்தான், முகமதுவும் தன் தெய்வமாகிய அல்லாவை பரப்ப, ஆயுதத்தையும், போரையும், சர்வாதிகாரத்தையும் பயன்படுத்தினார். அதற்கு இக்கடிதங்களே சாட்சிகள். இக்கடிதங்களையும், அவைகளில் உள்ள செய்திகளையும், உலகத்தில் உள்ள மக்களுக்கு எப்படி விளக்குவீர்கள்? என்ன நியாயத்தை கற்பிப்பீர்கள்? சாதாரணமாக, கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தாமல், பொன்னுக்கும் மண்ணுக்கும் ஆசைப்பட்டு பல அரசர்கள் பக்கத்து நாட்டு அரசர்கள் மீது போர் தொடுப்பார்கள். ஆனால், தன்னை ஒரு இறைவனின் தூதன் என்றுச் சொல்லிக்கொண்டு, உலகத்திற்கு அமைதியை கொடுப்பேன் என்றுச் சொல்லிக்கொண்டு, இரத்தம் சிந்தியது சரிதானா என்று சிந்தித்துப் பாருங்கள். இப்படியும் ஒரு மதத்தை பரப்பனுமா? என்று உங்களை நீங்களே கேள்வியை கேட்டுப்பாருங்கள்.

முகமதுவை விட மற்ற இஸ்லாமிய அரசர்கள் நல்லவர்கள் என்று சொல்லும் இஸ்லாமியர்கள்:

இஸ்லாமை பரப்ப இஸ்லாமிய அரசர்கள் வாளைப்பயன் படுத்தவில்லை, அவர்கள் தங்கள் நல்ல நடத்தையினால் தான் பரப்பினார்கள் என்றுச் சொல்லி, இஸ்லாமுக்காக பரிந்துப்பேசும் இஸ்லாமியர்கள் ஒன்றை கவனத்தில் வைக்கவேண்டும். இப்படி நீங்கள் செய்வதினால், நீங்கள் மேற்கோள் காட்டும் இஸ்லாமிய அரசர்கள், "முகமதுவை விட நல்லவர்களாக இருந்தார்கள்" என்பதை மறைமுகமாக நீங்கள் சொல்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் முகமது கடிதங்களை அனுப்பி, அரசர்களை இஸ்லாமுக்கு அழைத்து, வரவில்லையானால் தொலைத்துவிடுவேன் என்று பயமுறுத்தி இஸ்லாமை பரப்பினார், ஆனால், அவரை பின்பற்றியவர்கள் அப்படி செய்யவில்லை என்று நீங்கள் சொல்வதினால், என்ன தவறு செய்துள்ளீர்கள் என்று சிந்தித்துப்பாருங்கள்.

முடிவுரை: இஸ்லாமிய நண்பர் அபூமுஹை அவர்களுக்கு, நீங்கள் எழுதிய கட்டுரைகள் ஒரு குறிப்பிட்ட புத்தகத்திலிருந்து எடுத்து எழுதினீர்கள் என்று சொல்லியுள்ளீர்கள். நான் கேட்க விரும்பும் கேள்வி: அப்புத்தகத்திலே இப்படி உண்மையை மறைத்து இஸ்லாம் ஒரு அமைதி மதம் போல காட்டித் தான் எழுதியிருந்ததா? அல்லது நீங்கள் அதனை மறைத்து எழுதினீர்களா?

எது எப்படியானால், அப்புத்தகம் எழுதியவரும் ஒரு முஸ்லீம் தானே, இக்கடிதங்களில் உள்ள பொருளை எங்களுக்கு விளக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். மட்டுமல்ல, உங்கள் நபி அன்று செய்தது இன்று கூட மக்கள் அல்லது நாடுகள் பின்பற்ற தகுந்தது என்றுச் சொல்லும் முஸ்லீம்கள், இப்படி இன்றுள்ள உலகில் கடிதம் மூலமாக பயமுறுத்தி மதத்தை பரப்ப நீங்கள் அனுமதிப்பீர்களா? அல்லது பாகிஸ்தானுக்கு, ஈரானுக்கு அல்லது சௌதி அரேபியாவிற்கு ஒரு கடிதம் அனுப்பினால், அவர்கள் என்ன பதில் தருவார்கள்? அக்கடிதம் அனுப்பியவர்களோடு போர் செய்வார்களா அல்லது இஸ்லாமை விட்டுவிட்டு வேறு மார்க்கத்திற்கு மாறிவிடுவார்களா?

காதுள்ளவன் கேட்கக்கடவன்
 
 

வியாழன், 24 ஜூலை, 2008

"கிறிஸ்தவன் பார்வை" என்ற தள பதிவு பற்றிய ஒரு "கிறிஸ்தவனி(உமரி)ன் பார்வை"



"கிறிஸ்தவன் பார்வை" என்ற தள பதிவு பற்றிய "ஒரு கிறிஸ்தவனின் பார்வை"







முன்னுரை: கிறிஸ்டியன்ஸ் பார்வை என்ற தளத்தில், என்னைப் பற்றி ஒரு சில வரிகள் எழுதப்பட்டு இருந்தது, அதற்கான என் பதிலை இந்த பதிவில் காணலாம். என் கட்டுரைக்கு பின்னூட்டமிட்டிருந்த ஒரு அனானிமஸ்ஸுக்கு பதில் அளித்து இருந்தேன், அதைப் பற்றி, விமர்சனத்திற்கு என் பதிலை இந்த பதிவில் காணலாம்.






ChristianPaarvai said:
//



Source: http://christianpaarvai.blogspot.com/2008/07/1_21.html



முஸ்லிம்களின் போற்றுதற்குரிய தலைவரான உமர் (ரழி) அவர்களின் பெயரில் ஒளிந்து கொண்டு ஒரு கிறிஸ்தவர் இப்போது இஸ்லாத்தை விமர்சித்து வருகிறார். அன்று உமர் (ரழி) அவர்களின் வாழ்வில் ஒளி விளக்காய் அமைந்த குர்ஆன் மீது சேறு வாரி இறைக்கின்றார்! முஸ்லிம்களிடம் குர்ஆன் உள்ளவரை அவர்களை அசைக்க முடியாது என்று அறிந்து கொண்ட மிஷினரிகளின் விலை குறைந்த தந்திரம் இது.//


Umar said:

நீங்கள் பைபிளை விமர்சிப்பதில்லையா? பைபிளை விமர்சிப்பதை உங்கள் நபி 7ம் நூற்றாண்டிலேயே ஆரம்பித்துவிட்டாரே?


முஸ்லீம்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? சொல்லுங்கள்.



உங்கள் குர்‍ஆன் சொல்வதை, உங்கள் நபி சொல்வதை நம்புவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு என்பதை நான் அறிவேன், அதே நேரத்தில் எங்கள் வேதம் சொல்வதை நம்புவதற்கு எங்களுக்கு உரிமை உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும்.



எங்கள் வேதம் பற்றி நீங்கள் விமர்சிக்கும் போது, அதற்கு பதில் தருவதும் எங்கள் கடமை, அதே நேரத்தில் பைபிளை நீங்கள் விமர்சிப்பதால், உங்கள் குர்‍ஆன் பற்றியும் நாங்கள் சில சந்தேகங்கள், உண்மைகளை நாங்கள் சொல்கிறோம், அவ்வளவு தான், இதில் விரோதிப்பதற்கு ஒன்றுமில்லை.





//குர்ஆன் மீது சேறு வாரி இறைக்கின்றார்//





7ம் நூற்றாண்டில் வந்து பைபிள் மீது சேறு வாரி இறைத்தது யார்?
உங்கள் முகமது அன்று ஆரம்பித்த வேலையை இன்றும் செய்துக்கொண்டு இருப்பவர்கள் யார்?



நீங்கள் மட்டும் பைபிள் மீது சேறுவாரி இறைப்பது சரியாகுமா?



நீங்கள் எது சொன்னாலும், கிறிஸ்தவர்கள் சும்மா இருக்கவேண்டும் அதைத் தானே நீங்கள் எதிர்ப்பார்ப்பது? உங்களுக்கு பதில் அளிக்கக்கூடாது, அதே நேரத்தில் கேள்வியும் கேட்கக்கூடாது? கேள்வி கேட்டால், சேறு வாரி இறைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு வேறு? இது என்ன நியாயம் என்றுச் சொல்லுங்கள்?






ChristianPaarvai said:
// முஸ்லிம் பெயரை வைத்துக் கொண்டு எதையேனும் சொன்னால் முஸ்லிம்களை ஏமாற்றி விடலாம் என்று நினைக்கின்றனர். //



Umar said:

மன்னிக்கனும் நண்பரே மன்னிக்கனும். என்னைப் பொருத்தவரையில், நான் உமர் என்ற பெயர் வைத்துக்கொண்டு யாரையும் ஏமாற்றவில்லை.


1) என் கட்டுரைகளின் தலைப்பிலேயே, என் செய்தியை பெரும்பான்மையாக சொல்லி விடுவேன். "இஸ்லாமுக்கு பதில்/மறுப்பு" என்று தெளிவாக சொல்லிவிடுவேன். என் கட்டுரைகளை படிப்பதற்கு முன்பாகவே, இது ஒரு இஸ்லாமுக்கு பதில் சொல்லும் கட்டுரை என்ற எண்ணத்தை என் கட்டுரையை வாசிப்பவர்களின் உள்ளத்தில் கொடுத்துவிடுகிறேன்.உங்களைப்போல, மூல தொடுப்புக்களை கொடுக்காமல், வாசகர்களை வஞ்சிக்கமாட்டேன்.





2) பெரும்பான்மையாக என் கட்டுரைகளின் முதல் பத்தியிலேயே "முன்னுரை/குறிப்பு" என்று எழுதி, அந்தக் கட்டுரையில் எதைப்பற்றி விவாதிக்கப்போகிறேன் என்று விவரமாக எழுதிவிடுவேன். என் கட்டுரைகளை படிப்பவர்கள் முதல் பத்தியிலேயே இது ஒரு கிறிஸ்தவ கட்டுரை என்பதை அறிந்துக்கொள்வார்கள். பின் அவர்களுக்கு விருப்பம் இருந்தால், மேலே படிப்பார்கள், வேண்டாமென்றால் விட்டுவிடுவார்கள்.





3) இஸ்லாமியர்கள் சிலர் செய்வது போல, தங்களை கிறிஸ்தவர்களாக காட்டிக்கொண்டு, எனக்கு அறிவுரை சொல்வது போல, என்னை ஒரு முஸ்லீமாக காட்டிக்கொண்டு, யாருக்கும் தெரியாமல் மற்ற முஸ்லீம்களுக்கு அறிவுரை சொல்வது போல சொல்லமாட்டேன். உதாரணத்திற்கு, ஒரு இஸ்லாமியர் தன்னை கிறிஸ்தவரைப் போல காட்டிக்கொண்டு எனக்கு பின்னூட்டம் இட்டுள்ளார். இப்படியெல்லாம் நான் செய்வதில்லை.





4) எல்லா கட்டுரைகளிலேயும் என்னை ஒரு கிறிஸ்தவன் என்று தான் காட்டியுள்ளேனே ஒழிய, ஒரு முஸ்லீமாக நான் காட்டிக்கொள்வதில்லை.







ChristianPaarvai said:
//ஏற்கெனவே தங்களது இணைய தளத்துக்கு ஈஸா குர்ஆன் என்று வைத்து வம்பில் மாட்டியுள்ளனர். இதற்கு முன் அனானிமசுக்கு பதிலளிக்கையில் இந்த உண்மையை உளறி விட்டனர். பெயர் வைத்ததற்காக வருத்தப் படுவதாகவும் வைத்து விட்டதால் எடுக்க முடியவில்லை என்ற வாசகத்தை மட்டும் தந்திரமாக நீக்கி விட்டனர். //



Umar said:

என் தளத்திற்கு "ஈஸா குர்‍ஆன்" என்று வைத்து என்ன வம்பில் மாட்டிக்கொண்டேன் சொல்லுங்கள் பார்க்கலாம்? யாராவது காபிரைட் வழக்கு தொடர்ந்தார்களா? இந்த உளறும் வேலை என்னுடையது கிடையாது, அதனால், தான் நான் எப்போதும் சொல்வதுண்டு, முஸ்லீம்களை பேசவிடுங்கள், அப்போது தான் உண்மை வெளிப்படும் என்று.


என் தளத்திற்கு ஏன் இந்த பெயர் வைத்தேன் என்று போன வருடமே (செப்டெம்பர் 2007) நான் ஒரு கட்டுரையை எழுதி அதற்கு பதில் அளித்துள்ளேன்.
பார்க்க:



-----------------
கட்டுரை: கேள்வியும் நானே பதிலும் நானே

1. உங்கள் தளத்தின் நோக்கம் என்ன? உங்கள் தளத்திற்கு "ஈஸா குர்-ஆன்" என்ற பெயர் வைத்ததற்கான காரணம் என்ன?





என் தளத்தின் நோக்கம், இயேசுவைப் பற்றியும், பைபிளைப் பற்றியும் இஸ்லாமியர்கள் பறப்பிக்கொண்டு வரும் சில தவறாக கோட்பாடுகள் தவறு என்று தகுந்த ஆதாரங்களோடு எடுத்துச் சொல்வதாகும். பைபிளின் "தேவன்" குர்-ஆனின் "அல்லா" இல்லை என்பதை உலகிற்கு முக்கியமாக தமிழ் மக்களுக்குச் சொல்வதாகும்.



இயேசுவை தேவனின் வார்த்தை என்று பைபிள் சொல்கிறது, அது போல "குர்-ஆனை" இஸ்லாமியர்கள் இறைவனின் வார்த்தை என்றுச் சொல்கிறார்கள். எனவே தான் "ஈஸா குர்-ஆன்" என்று பெயர் வைத்தேன்.



Sources:
http://isakoran.blogspot.com/2007/09/1.html
http://www.geocities.com/isa_koran/tamilpages/QandA/QandAUmar/UmarQandA-1.htm
http://tamilchristians.com/modules.php?file=viewtopic&name=Forums&p=5710






நான் என்னவோ, "குர்‍ஆன்" என்ற பெயரையும், "உமர்" என்ற பெயரையும் வைத்துக்கொண்டு, உலகத்தையே சூரையாடிவிட்டதாக சொல்கிறீர்கள்.





உங்கள் நபி, பைபிளோடு தன்னை சம்மந்தப்படுத்திக்கொண்டு, தீர்க்கதரிசிகளில் தான் கடைசியானவர் என்று தன்னை காட்டிக்கொண்டு, இறைவசனம் என்றுச் சொல்லி, முந்தைய வேதங்களில் உள்ளவற்றை ஆங்காங்கே சில விவரங்களைச் சொல்ல அவருக்கு உரிமை இருக்கும் போது, வெறும் "குர்‍ஆன்" என்ற பெயரும், "உமர்" என்ற பெயரையும் வைத்துக்கொள்ள எனக்கு உரிமையில்லையா?





இப்படி பைபிளின் தீர்க்கதரிசிகளின் பெயர்களை சொந்தம் கொண்டாடியது உங்கள் முகமது என்பதை மறக்கவேண்டாம்.





எனவே, 7ம் நூற்றாண்டில் திடீரென்று ஒருவர் வந்து, நானும் ஒரு நபி தான், என்னை இறைவன் அனுப்பினார் என்றுச் சொல்லி, பைபிளோடு தன்னை சம்மந்தப்படுத்த உரிமை உங்கள் நபிக்கு இருக்கும் போது, என் தளத்திற்கு "ஈஸா குர்‍ஆன்" என்ற பெயர் வைத்தால், என்ன குடிமுழுகிவிடும் சொல்லுங்கள்.
-----------------





ChristianPaarvai said:
// கிறித்தவ சபையினரே! கிறித்தவர்களாகிய உங்களுக்கு முஸ்லிம் பெயர் எதற்கு? உங்கள் புரட்டுகளைப் பற்றி நாங்கள் எழுதும் போது நாங்கள் கிறித்தவ பெயரைப் பயன் படுத்துதில்லை. //


Umar Said:

இஸ்லாமியர்களே, உங்கள் நபிக்கு பைபிளோடு சம்மந்தமெதற்கு? யூதர்களின் மற்றும் கிறிஸ்தவர்களின் விவரங்களின் அவசியமெதற்கு? சொல்லுங்கள்.


என்னவோ, இஸ்லாமிய பெயர் வைத்தால், உடனே முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களாக மாறிவிடுவது போல கவலைப்படுகிறீர்கள்?



உங்கள் புரட்டுக்களைப் பற்றி எங்களுக்குத் தெரியாதா என்ன? பொய்களை அள்ளிவீசுவதில், தில்லு முல்லு செய்வதில் உங்களை யார் ஜெயிக்கமுடியும் சொல்லுங்கள்?



உங்கள் முகமது, தன்னை ஒரு தீர்க்கதரிசி என்றுச் சொல்லி, உண்மையான தேவனின் தீர்க்கதரிசிகளாகிய மோசே, எலியா, யோவான் பட்டியலில் தன்னை இணைத்துக்கொண்டாரே, இதை விடவா ஒரு புரட்டு இருக்கமுடியும்?



முகமது தன்னை ஒரு நபி என்றுச் சொல்லட்டும், அதை நீங்கள் நம்புங்கள், இதில் தவறில்லை, ஆனால், பைபிளைப் பற்றி விமர்சிக்க அவருக்கு என்ன அதிகாரம் உண்டு? அவரை மற்றவர்கள் நம்பவேண்ட அவசியமென்ன?



உங்கள் தளத்தின் பெயர் "கிறிஸ்டியன் பார்வை" என்று வைத்துள்ளீர்கள்.



யாராவது முதலாவது உங்கள் தள பெயரைப் பார்த்தால், ஏதோ ஒரு கிறிஸ்தவன் தளம் என்று நினைக்கத்தோன்றும். இருந்தாலும், ஏன் வைத்தீர்கள் என்று நான் கேட்கமாட்டேன், ஏனென்றால் பெயரில் ஒன்றுமில்லை, சொல்லும் செய்தியில் தான் எல்லா விவரங்களும் உள்ளன. ஏன் "கிறிஸ்தவன்(ம்)" என்ற வார்த்தையை பயன்படுத்தினீர்கள் என்று உங்களை எந்த கிறிஸ்தவனும் கேட்கமாட்டான், காரணம், "கிறிஸ்தவம்" என்ற பெயர் வைத்த மாத்திரத்தில், எல்லா கிறிஸ்தவனும் முஸ்லீமாக மாறிவிடப்போவதில்லை.





ChristianPaarvai said:
//உங்கள் பெயரை வைத்து எழுத வேண்டிய அவலநிலை எங்களுக்கு இல்லை. காரணம் உங்கள் புரட்டு வாதங்களுடன் மோதுவதற்கு எங்களுக்கு எந்தக் குறுக்கு வழியும் தேவையில்லை. //





Umar said:



எங்கள் பெயரை வைத்துக்கொண்டு எழுதவேண்டிய அவல நிலை உங்கள் நபிக்கு உண்டு. யூதர்களின் மற்றும் கிறிஸ்தவர்களின் விவரங்களை பயன்படுத்தி, தன்னை ஒரு நபியாக, உண்மையான இறைவன் தன்னை தெரிந்துக்கொண்டார் என்றுச் சொல்லி தன் விருப்பத்திற்கு ஏற்றார் போல தீர்க்கதரிசனங்கள் என்ற பெயரில் வசனங்களைச் சொல்லி வாழ்ந்தவர் உங்கள் நபி. இல்லை இல்லை, முகமது அவர்கள் சொன்னது உண்மையான தீர்க்கதரிசனங்களே என்று நீங்கள் சொல்வீர்கள். நல்லது அது உங்கள் நம்பிக்கை, இதில் தவறு இல்லை. ஆனால், கிறிஸ்தவர்களை விமர்சிக்க அவருக்கு ஏது அதிகாரம்?



எங்களுக்கு குறுக்குவழி தேவையில்லை நண்பரே, உங்களுக்குத்தான் குறுக்குவழி தேவையாக உள்ளது.



இஸ்லாமிய நாடுகளில் ஒரு முஸ்லீம் கிறிஸ்தவனாக மாறினால், அவனை கொள்ளவேண்டும் என்றுச் சொல்லி, சட்டத்தை இயற்றி இஸ்லாமை தக்கவைத்துக்கொள்வது ஒரு குறுக்கு வழி இல்லையா? விமர்சிப்பவர்களை கொன்றுவிட்டால், எதிரியே இருக்கமாட்டான் என்று கொல்வது குறுக்கவழி இல்லையா?



ஒருவன் இஸ்லாமை விட்டு போனால் போகட்டும், குர்‍ஆனுக்கு மனிதர்களை தன்னிடம் இழுத்துக்கொள்ளும் தன்மை உண்டு, உண்மை உண்டு, எனவே, இஸ்லாமை விட்டு வெளியேறுபவனை கொல்லவேண்டாம் என்று இஸ்லாமிய நாடுகளில் சட்டமியற்ற முடியுமா?




நான் இன்று இஸ்லாமுக்கு ஒரு சவால் விடுகிறேன், உலகத்தில் இஸ்லாமை விமர்சிப்பவர்களை ஒன்றும் செய்யமாட்டோம் என்றுச் சொல்லி சட்டத்தை இயற்றி வாழ்ந்துப் பாருங்கள், இஸ்லாமை விமர்சிப்பவர்களுக்கு தீங்கை இழக்காமல் இருந்துக் காட்டுங்கள். அப்போது, உங்கள் இஸ்லாமின் நிலை என்னவாகும் என்று கற்பனை செய்துபார்க்க முடியுமா?



என் கட்டுரைகளில் யார் எழுதுகிறார்கள் என்பதை விட, என்ன எழுதுகிறேன் என்பதைத் தான் வாசகர்கள் அறிய வேண்டும் என்று விரும்புகிறேன்.





ChristianPaarvai said:
// எங்களிடம் இறைவேதம் என்ற பலமான ஆயுதம் உள்ளது. வாருங்கள்! ஒளிந்து கொண்டு கூக்குரலிடாதீர்கள்! உங்களின் கோமாளிக் கூத்தை விட்டு விட்டு இணையப் பேரவை சகோதரர்களின் அழைப்புக்கு பதிலளித்து பகிரங்கமாக வெளியே வாருங்கள். எப்போது வருகிறீர்கள்?



அனானிமசுக்கு பதில்



இப்போதெல்லாம் பதிவெழுத நேரமில்லாததாலோ என்னவோ அனானிமசுகளுக்கு அளித்த பதிலை மறு பதிவு செய்து வருகிறார்கள். எது எவ்வாறாயினும் அனானிமஸ் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளித்ததிலும் பல மழுப்பல்கள். சில விமர்சனங்கள். அவை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். அனானிமசின் கேள்விகளும் உமர் (என்ற பெயரில் ஒளிந்துள்ள கிறித்தவனி)ன் மழுப்பல்களும் தெளிவான விளக்கங்களும். அடுத்தடுத்த பகுதிகளில் இன்ஷா அல்லாஹ்.



Source: http://christianpaarvai.blogspot.com/2008/07/1_21.html



//


Umar Said:

நீங்கள் அமைதியானவர்களாக இருந்தால், உங்கள் முன் வந்து விவாதிக்க நாங்கள் தயார்? ஆனால், உங்களை யார் நம்புவார்கள்?


மேடையில் விவாதம் என்றுச் சொல்லி, மேடையில் நீங்கள் பேசிக்கொண்டு இருப்பீர்கள், ஆனால், யாரோ ஒரு முஸ்லீம் எங்கள் மீது கல்லெரிவார், இது எங்களுக்கு வேண்டுமா? உங்களை நம்பலாம், ஆனால், எல்லா இஸ்லாமியர்களை நம்பமுடியாது?



இப்படி எங்களுக்கு தீங்கிழைப்பது நியாயமா என்று நாங்கள் கேட்டால், "அவர்களுக்கு மார்க்க அறிவு கிடையாது, இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள்" என்று சொன்ன வேதாந்தமே மறுபடியும் சொல்வீர்கள், ஆனால், நஷ்டமடைவது யார்? நாங்கள் தான்.



உங்களால் மேடையில் தான் பேசமுடியுமா? எழுத்து மூலம் விவாதிக்க முடியாதா? வீரர்களாக இருந்தால், எழுத்து விவாதத்திற்கு வாருங்கள்.



நாங்கள் கோழைகள் தான், வாளுக்கு, அடிகளுக்கு நாங்கள்(மன்னிக்கனும் முக்கியமாக நான்) பயப்படுகின்றோம். ஐந்தறிவு படைத்த மிருகங்கள் இருக்கும் காட்டில் யாராவது பாதுகாப்பு இல்லாமல் நுழைய முடியுமா?
அதுபோலத் தான், நாங்கள் பாதுகாப்பை கருதி மறைந்து எழுதுகிறோம்.



நீங்கள் தான் வீரர்கள் என்றுச் சொல்கிறீர்களே, எழுத்து விவாதத்திற்கு வருவது தானே? முகமதுவின் வாழ்க்கையை உலக மக்கள் அறிய விவாதிப்பது தானே?



உங்களிடம் தான் உண்மை சத்தியம் உண்டே, அப்படியானால், ஏன் எழுத்து விவாதத்திற்கு பயப்படுகிறீர்கள்?





யார் கோழை / யார் வீரன்:
----------------------------------------------





ஒரு சில இஸ்லாமிய தளம் தவிர மற்ற அனைத்து இஸ்லாமிய தளங்களும், வீராவேசத்தொடு பதில் எழுதுவார்கள், ஆனால், எந்த கட்டுரைக்கு பதில் எழுதுகிறார்கள் அதன் தொடுப்பு என்ன? என்று பதிக்கமாட்டார்கள் ஏன்? பயம், எங்கள் கட்டுரைகளை படித்து, உண்மையை முஸ்லீம்கள் தெரிந்துக்கொள்வார்கள் என்ற பயம். அவர்கள் சொல்வது பொய் என்பதை சாதாரண முஸ்லீம்கள் அறிந்துக்கொள்வார்கள் என்ற பயம். வீரம் என்பது வெறும் கட்டுரைகளையும், பதில்களையும் எழுதுவது அல்ல, அதற்கு பதிலாக யாருக்கு பதில் எழுதுகின்றோம் என்பதை தொடுப்புடன் எழுதினால், அதைத்தான் வீரம் எனலாம், அதைவிட்டுவிட்டு, நாங்கள் பதில் தருகிறோம் என்று அனானிமஸ்ஸாக எழுதுவதில்லை.




ஆனால், நாங்கள் அப்படி அல்ல, யாருக்கு பதில் எழுதுகிறோம் என்று முஸ்லீம் தளத்தின் தொடுப்பையும் கொடுப்போம், ஏன் தெரியுமா? இஸ்லாமை ஒருவன் அறிய அறிய, அதன் உண்மையை புரிந்துக்கோள்வான், மற்றும் இஸ்லாம் பற்றி சிந்திப்பவன், உண்மையாகவே, அதை விட்டு வெளியே வந்துவிடுவான். அதனால், தான் அமெரிக்காவில் இஸ்லாமுக்கு மாறுபவன் சில ஆண்டுகளிலேயே 75% பேர், இஸ்லாமை விட்டு வெளியேறி விடுகின்றனர்.



அதனால், தான் நாங்கள் எந்த இஸ்லாமிய தொடுப்பையும் கொடுக்க தயங்குவதில்லை. நாங்கள் எங்கள் கட்டுரைகளை படிக்கும் கிறிஸ்தவர்களை உங்கள் இஸ்லாமிய கட்டுரைகளை படிக்க உட்சாகப்படுத்துகிறோம், அதனால், தான் இஸ்லாமிய தள தொடுப்புக்களைக் கொடுக்கிறோம்.





உதாரணத்திற்கு, என் தளத்திலோ, அல்லது தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்திலோ, சென்று பாருங்கள், எத்தனை கட்டுரைகளில் இஸ்லாமிய தள தொடுப்புக்கள் இருக்கின்றன என்று. அதே போல, உங்கள் இஸ்லாமிய தளங்களில் எத்தனை தளங்களில் எங்கள் தள கட்டுரைகளின் தொடுப்பை கொடுத்துள்ளீர்கள். இதுவே போதும், நீங்கள் பயந்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதற்கு, உங்களுக்கு உங்கள் பலமான இறைவேதம் மீது எவ்வளவு நம்பிக்கை இருக்கின்றது என்று?





எங்கள் நம்பிக்கை என்னவென்றால், இயேசுவின் போதனைகளை படிக்கும் ஒரு கிறிஸ்தவன், பெரும்பான்மையாக முகமதுவின் போதனைகளால் எந்த காலத்திலும் மயங்க மாட்டான் என்ற நம்பிக்கைத் தான். இப்படிப்பட்ட நம்பிக்கை உங்களுக்கு உண்டா? அப்படி இருக்குமானால், எங்கள் தள தொடுப்புக்களை தைரியமாக தாருங்கள்.



இன்னும் சிலர் இருக்கிறார்கள், பல ஆயிர‌ கிறிஸ்தவர்கள் இஸ்லாமை தழுவினார்கள் என்று எழுதுவார்கள், ஆனால், எந்த ஒரு ஆதாரத்தையும் தரமாட்டார்கள்.



இன்னொரு குழு உள்ளது, அவர்கள், ஈஸா குர்‍ஆன் என்ற பெயரையும் எழுத பயப்படுவார்கள், உமர் என்ற என் பெயரையும் பயன்படுத்த பயப்படுவார்கள். "ஒரு கிறிஸ்தவர் எழுதுகிறார்" என்பார்கள், ஆனால், பெயரை குறிப்பிடமாட்டார்கள். இப்படி பயந்துப்போய் கட்டுரையை எழுதுபவர்கள் நீங்கள்.



ஆனால், உங்களிடம்(கிறிஸ்தவ பார்வை தளத்திடம்) நான் எதிர்ப்பார்ப்பது, (நான் பதில் எழுதும் ஒவ்வொரு தளத்திற்கும் இந்த வேண்டுதலை வைத்துள்ளேன், ஆனால், செவிடன் காதில் ஊதிய சங்கு தான்)

உங்கள் இஸ்லாம் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால்?

உங்கள் நபி உண்மையிலேயே ஒரு நபி என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால்?


குர்‍ஆனை யார் குற்றப்படுத்தினாலும், அது செல்லுபடியாகாது, குர்‍ஆன் தான் கடைசியில் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை இருந்தால்?

எங்கள் கட்டுரைகளைப் படித்தால், முஸ்லீம்கள் இஸ்லாமின் மீது சந்தேகம் கொள்ளமாட்டார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால்?




எங்களுக்கு பதில் அளிக்கும் போது, எங்கள் தள கட்டுரைகளின் தொடுப்புக்களை வெளியிடுங்கள், பெயர்களை வெளியிடுங்கள். நீங்களும் இப்படி வெளியிடவில்லையானால், உங்களையும் அந்த பட்டியலில் இணைய நண்பர்கள் சேர்த்துவிடுவார்கள், மட்டுமல்ல, இஸ்லாம் ஒரு போலி என்பதை உலகம் இதன் மூலம் அறிய‌ நீங்கள் உதவி செய்கிறவர்களாக இருப்பீர்கள்.

கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த பதிலில் சந்திக்கலாம்.

செவ்வாய், 8 ஏப்ரல், 2008

19 காரணங்கள்: ஏன் கௌரவமான மனிதர்களில் பலர் முஸ்லீம்களாக மாற விரும்புவதில்லை?


19 காரணங்கள்: ஏன் கௌரவமான மனிதர்களில் பலர் முஸ்லீம்களாக மாற விரும்புவதில்லை

19 Reasons why many Honorable People Don't Want to Be Muslims

மற்றவர்களை இஸ்லாமியர்களாக மாற்ற விரும்பும் முஸ்லீம்கள், "ஏன் உண்மையை அறிய விரும்பும் மனிதர்கள், இஸ்லாமை நம்புவதில்லை?" என்ற கேள்வியின் பதிலை தெரிந்துக்கொள்ள விரும்பக்கூடும். இதற்கு சில முக்கியமான காரணங்கள் உண்டு, இந்த கட்டுரையில் அந்த காரணங்களை ஒவ்வொன்றாக காணலாம். இந்த காரணங்களில் ஒன்று உண்மையாக இருந்தாலும், அது இஸ்லாம் உண்மையான மார்க்கம் இல்லை என்பதை தெளிவாக்கிவிடும். இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்ட தொடுப்புக்கள் ஒவ்வொரு காரணத்தையும் தெளிவாக விளக்கும்.

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டு இருக்கும் பட்டியல், குற்றப்படுத்தும் தோரணையில் அல்லாமல், சொல்லப்படும் எல்லா காரணங்களுக்கும் தேவையான எல்லா ஆதாரங்களையும் தருகிறது. இந்தக் கட்டுரை சில காரணங்களை சுருக்கமாக‌ விளக்குகிறது, முழுவிவரங்களையும் தெரிந்துக்கொள்ள கொடுக்கப்பட்ட தொடுப்புக்களில் சென்று படிக்கவும்.



இஸ்லாம் முந்தைய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நிராகரிக்கிறது

ISLAM DENIES WORDS OF PREVIOUS PROPHETS


1. முஸ்லீம்கள், முந்தைய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நிராகரிக்கிறார்கள், அவ்வசனங்கள் திருத்தப்பட்டன என்று வாதாடுகிறார்கள். இயேசு முந்தைய வேத சட்டத்தையும், இன்ஜீலையும்(சுவிசேஷத்தையும்) உண்மைய்ப்படுத்தக் கூடியவராக இருந்தார் என்று குர்‍ஆனில் சூரா 5:46-48 சொல்கிறது. மற்றும் சவக்கடல்(Dead Sea Scrolls) பகுதியில் கிடைத்த பிரதிகளில் இயேசுவின் காலத்தில் இருந்த பழைய ஏற்பாட்டு பிரதிகள் கூட இருந்தன. படிக்க‌: http://www.muslimhope.com/DeadSeaScrolls.htm

மோசே மூலமாக கொடுத்த தன் சட்டத்தை பாதுகாக்கவும், இயேசுவிற்கு கொடுத்த இன்ஜீலையும் பாதுகாக்க அல்லாவினால் முடியவில்லையானால், குர்‍ஆனில் கொடுத்த அவரது வசனங்களையும் பாதுகாக்க அல்லாவினால் முடியாது. குர்‍ஆனுக்கு முன் இறக்கிய தன் வேதத்தையும் அல்லா பாதுகாத்து இருக்கவேண்டும். படிக்க: http://www.biblequery.org/History/ChurchHistory/WhatEarlyChristiansTaught.htm

2. தீர்க்கதரிசிகளின் போதனையாகிய "தேவன் பிதாவாக இருக்கிறார்" என்பதை இஸ்லாம் நிராகரிக்கிறது.

தேவன் நமக்கு தந்தையாக இருக்கிறார் என்பதை யுதர்களும், கிறிஸ்தவர்களும் நம்புகிறார்கள் மற்றும் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் "தேவன் பிதாவாக இருப்பதாக" நாம் பல விவரங்களைக் காணலாம். படிக்க:
http://www.muslimhope.com/FatherhoodOfGod.htm

அதாவ‌து, ச‌ரீர பிர‌கார‌மாக‌ தேவ‌ன் ந‌ம‌க்கு த‌ந்தையாக‌ இல்லை, அத‌ற்கு ப‌திலாக‌ எல்லா விசுவாசிக‌ளையும் அவ‌ர் த‌ன் பிள்ளைக‌ளாக கருதுகிறார் ம‌ற்றும் முக்கிய‌மாக‌ இயேசுவை அவ‌ர் உல‌க‌தோற்ற‌த்திற்கு முன்பே த‌ன் பிள்ளையாக பெற்றார். இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த வேத பிரதிகளிலும் "தேவன் நமக்கு தந்தையாக" இருக்கிறார் என்பதை தெளிவாக காணமுடியும். படிக்க: http://www.muslimhope.com/DeadSeaScrolls.htm

3. இயேசு தான் ஒரு தேவகுமாரன் என்று போதித்தார் மற்றும் தன்னை தேவனாக தொழுதுக்கொள்வதை அவர் ஏற்றுக்கொண்டார். குர்‍ஆன் இதை நிராகரிக்கிறது:

இயேசு இப்படித்தான் போதித்தார் என்று ஆரம்ப கால புறசமய எழுத்தாளர்கள்(early pagan writers) இதை அங்கீகரித்துள்ளனர். படிக்க:
Proving for Muslims That Jesus is God (and Lord) - http://www.muslimhope.com/JesusIsGod.htm

4. அல்லா ஏமாற்றுகிறார் : இயேசுவை பின்பற்றின எல்லாரையும் அல்லா ஏமாற்றினார்: இறைவன் என்பவர் பொய் சொல்வதில்லை என்று பைபிள் சொல்கிறது. (எண்ணாகமம் 23:19, 1 சாமுவேல் 15:29). குர்‍ஆன் சொல்கிறது, "அல்லா, சதி செய்பவர்களில் எல்லாம் மிகப்பெரிய சதிகாரர்". தன்னை பின்பற்றினவர்களை எல்லாம்(இயேசுவின் சீடர்களை) அல்லா முட்டாளாக்கினார். அதாவது, இயேசு சிலுவையில் அறையப்பட்டதாகவும், அவர் மறுபடியும் மரித்தோரிலிருந்து எழுந்திருந்ததாகவும் அவர்கள் நினைக்கச்செய்தார். படிக்க: http://www.muslimhope.com/DeceptionInIslam.htm



குர்‍ஆனில் உள்ள சில பிழைகள்(தவறுகள்)

SOME ERRORS IN THE QUR'AN


5. ஜுல் கர்னைன்: சூரியன் சேறு கலந்த நீரில் மூழ்குவது இல்லை:

இரவிலே சூரியன் சேறு கலந்த நீரில் மூழ்குகிறது என்று சூரா 18:85-86 சொல்கிறது என்று இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்கள் நம்பினார்கள், இது பல முஸ்லீம்களை சமீக காலம் வரை நம்பச்செய்தது. இதைப் பற்றி மேலும் அறிய படியுங்கள்:
http://www.muslimhope.com/ZulQarnain.htm and http://www.muslimhope.com/AstronomyAndTheQuran.htm

6. முகமதுவின் "இரவு பிரயாண" சமயத்தில், எருசலேமில் எந்த மசூதியும் இல்லை (சூரா 17:1):

யூதர்களின் தேவாலயம் அழிக்கப்பட்ட இடத்தில் மற்றும் முகமதுவிற்கு பிறகு உருவான அல்‍அக்ஸர் மசூதி பற்றி முகமதுவின் காலத்தில் இஸ்லாமியர்கள் எழுதிவைத்தது ஒரு தவறாகும்(garbage dump). உண்மையில் இல்லாத இடத்தைச் "சென்று பார்த்தேன்" என்று முகமது சொல்லியுள்ளார். இந்த விவரம், இஸ்லாமியர் அல்லாதவர்கள் "ஏன் பாலஸ்தீனர்கள் அல்‍அக்ஸர்க்காக போர் செய்வோம் என்றுச் சொல்கிறார்கள் என்ற‌" கேள்வியை எழுப்புவதற்கு காரணமாக உள்ளது. இதைப் பற்றி மேலும் அறிய படியுங்கள்:
http://www.muslimhope.com/NightJourney.htm

குர்‍ஆனில் திருத்தங்கள்

CHANGES IN THE QUR'AN


7. பெரிய திருத்தம்: சூரா 53ல் இருந்த "அல்லாவின் மகள்கள்"

ஆரம்ப கால நான்கு இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்களும், அதற்கு பின்பு வந்த ஏழு இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்களும், குர்‍ஆனின் சூரா 53 கீழ் கண்டவாறு இருந்தது என்று எழுதிவைத்துள்ளார்கள்.

நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா? மற்றும் மூன்றாவதான "மனாத்"தையும் (கண்டீர்களா?) "இவைகள் உயரத்தில் பறக்கும் பறவைகள், உண்மையாகவே இவர்களின் மத்தியஸ்தம் அங்கீகாரத்துடன் ஏற்றுக்கொள்ளப்படும்"
("Have ye seen [the pagan goddesses] Lat, and 'Uzza, And another, the third, Manat? These are the exalted cranes (intermediaries) Whose intercession is to be hoped for.")

அல்லாவின் வசனங்கள் முகமதுவிற்கு வெளிப்படுத்தப்பட்ட போது, சாத்தான் சில பொய்யான வசனங்களை முகமதுவிற்கு வெளிப்படுத்தினான் என்று ஹதீஸும் குர்‍ஆனும் ஒத்துக்கொள்கிறது. படிக்க: http://www.muslimhope.com/DaughtersOfAllah.htm

8. கூடுதலான‌ (அ) குறைவான வசனங்கள்(Variants):

முகமதுவுடைய உதவியாளர் "உபைய் பின் கைப்" மற்றும் இதர மக்களிடம் இருந்த‌ குர்‍ஆனின் வசனங்கள் சிலரிடம் கூடுதலாகவும், சிலரிடம் குறைவாகவும் இருந்தன. குர்‍ஆனின் மாற்றங்கள் இல்லை என்று முஸ்லீம்கள் சொல்வது ஒரு பெரிய பொய்யாகும். படிக்க:
http://www.muslimhope.com/QuranVariants.htm

இரத்து செய்யப்பட்ட வசனங்கள் என்றுச் சொல்லி குர்‍ஆனிலிருந்து நீக்காமல் அப்படியே விட்டுவிட்ட வசனங்கள் தவிர, ஹதீஸ்களும், மற்றும் இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்களும் குர்‍ஆனிலிருந்து அமைதியாக நீக்கிவிட்ட வசனங்கள், மற்றும் அதிகாரங்கள் பற்றியும் சொல்லியுள்ளார்கள். இப்போது புதிதாக கண்டெடுக்கப்பட்ட பிரதியாகிய சனா/யேமினி குர்‍ஆனில்(San'a/Yemeni Qur'an) கூட பல மாற்றங்கள் இருப்பதை காணலாம்.



முகமது மற்றும் ஆரம்பகால முஸ்லீம்களின் "வன்முறை" செயல்கள்

VIOLENCE OF MOHAMMED AND EARLY MUSLIMS


9. முகமது மக்களை கொடுமைசெய்ய குறைந்தபட்சம் இரண்டுமுறை கட்டளையிட்டார்:

கினானா பின் அல்ரபி பொக்கிஷங்கள் எங்கே இருக்கின்றன என்று முகமதுவிற்கு சொல்லாத காரணத்தால், அவர் கொஞ்சம் கொஞ்சமாக கொளுத்தப்பட்டார். மேலும் அறிய படியுங்கள்:
http://www.muslimhope.com/WarInIslam.htm

10. மற்றவர்களை கொல்லும்படி முகமது கட்டளையிட்டார்:

அ) கப் பின் அஷ்ரப் அல்லாவையும் முகமதுவையும் அவமதித்தார். இவரை கொள்ள ஒரு மனிதன் முகமதுவின் அனுமதியோடு அஷ்ரப்போடு சேர்ந்துக்கொண்டார். இந்த மனிதனை அஷ்ரப் நம்பினார், ஆனால், அந்த மனிதர் அஷ்ரபை கொன்றுவிட்டான். அஷ்ரபை கொல்ல எந்த பொய்யையாவது சொல்லி கொல்லும்படி முகமது அனுமதி அளித்தார்.

ஆ) அபு ரபி இவர் இராணுவ அல்லது அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டார்.

இ) மக்காவின் தலைமை அதிகாரி அபு ரபியை கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டது.

ஈ) அல் அஸ்வத், இவர் தன்னை ஒரு தீர்க்கதரிசி (நபி) என்று சொல்லிக்கொண்டார், அதனால், இவரின் வாயை மூட வன்முறையை முகமது பயன்படுத்தி, இவரை கொன்றார்.

உ) கலிட் பின் சுஃப்யான் (முகமது தனக்கு எதிராக இந்த மனிதன் ஒரு கூட்டத்தை தயார்படுத்திக்கொண்டு இருக்கிறார் என்று கேள்விப்பட்டு, இவரை கொன்றார்)

ஊ) யாஸர் பின் ரிஜம் ( இவரை கொல்லும்படி முகமது கட்டளையிடவில்லை, இருந்தாலும், இவர் முதலில் முஸ்லீமாக மாறுவேன் என்றும் சொல்லி, பிறகு பின் வாங்குகிறார் என்று இதர முஸ்லீம்கள் கேள்விப்பட்டு இவரை கொன்றுப்போட்டார்கள்)

இந்த நிகழ்ச்சிகள் பற்றி அறிய படியுங்கள்:http://www.muslimhope.com/Assassinations.htm

11. முகமது வாளினால் இஸ்லாமை பரப்பினார்:

எதிர்பாராத விதத்தில் முகமது திடீரென்று மக்களின் மீது தாக்குதல் நடத்த கட்டளையிட்டார். இஸ்லாம் என்றால் "அமைதி" என்று பொருள் என்றுச் சொன்னால், 10 ஆண்டு காலத்தில் ஏன் 82 தாக்குதல்கள் நடந்ததன்? மேலும் அறிய படிக்கவும்:
http://www.muslimhope.com/WarInIslam.htm and http://www.muslimhope.com/BanuMustaliq.htm



பெண்கள் மற்றும் திருமணம் பற்றி இஸ்லாமின் பார்வை

ISLAMIC VIEW OF WOMEN AND MARRIAGE


12. உங்கள் வலக்கை சொந்தமாக்கிக் கொண்டவர்கள்:

ஒவ்வொரு முஸ்லீமுக்கு நான்கு மனைவிகள் தவிர, கணக்கிலடங்கா அடிமைப்பெண்களையும், போரில் கைதான பெண்களையும் தாங்கள் உடலுறவு கொள்ள‌ பயன்படுத்திக்கொள்ளலாம், அந்த பெண்களுக்கு விருப்பமில்லையானாலும் சரி. மேலும் அறிய படிக்க:
http://www.muslimhope.com/WomenInIslam.htm and http://www.muslimhope.com/RightHand.htm

13. பெண்கள் ஆண்களைவிட குறைவானவர்கள்: மாதத்தில் சில நாட்களில் அவர்கள் தொழுகை செய்யக்கூடாது, பெண்களுக்கு அறிவு குறைவு, இவர்கள் தான் நரகத்தில் அதிகமாக காணப்படுவார்கள்:

இஸ்லாமிய மேதாவி அல்-கஜாலி(al-Ghazali 1058-1111 கி.பி) 18 வழிகளில் பெண்கள் ஆண்களைவிட குறைவானவர்கள் என்று குறிப்பிடுகிறார். அவைகள்:

ஒரு பெண்ணின் சாட்சி ஒரு ஆணின் சாட்சியில் பாதியாகும்

ஒரு ஆண் பல மனைவிகளை திருமணம் செய்யலாம், ஆனால், பெண்ணுக்கு ஒரு கணவன் தான்.

ஆண்களைப் போல ஒரு பெண் மிகவும் சுலபமாக விவாகரத்து செய்யமுடியாது.

மனைவி என்பவள் வீட்டிலேயே இருக்கவேண்டும்

ஒரு பெண் தன் தலையை மூடிக்கொண்டே இருக்கவேண்டும்

ஆண்கள் மட்டும் தான் வெள்ளிக்கிழமை நாட்களில், மற்றும் பண்டியை நாட்களில் மட்டும் சவ அடக்கத்திற்கு ஆஜராகவேண்டும்.

ஒரு பெண் "ஒரு நீதிபதியாகவோ" அல்லது "ஒரு ஆட்சி செய்யும் தலைவியாகவோ இருக்கக்கூடாது".

மேலும் அறிய படிக்க: http://www.muslimhope.com/WomenInIslam.htm

14. முஸ்தஹில் மற்றும் முடா அருவருப்பான செயல்கள் (Mustahil and Mu'tah – they sound disgusting)

ஒரு முஸ்லீம் திரும்பப்பெறாத விவாகரத்தை செய்துவிட்டால், அந்தப்பெண் மறுபடியும் அந்த பழைய கணவனோடு சேர்ந்து வாழவேண்டுமானால், இந்தப் பெண் வேறு ஒரு ஆணோடு திருமணம் செய்யவேண்டும், பிறகு தான் தன் பழைய கணவனோடு சேர்ந்து வாழவேண்டும். இப்படிப்பட்ட வேலைக்காக உள்ள மனிதனைத் தான் முஸ்தஹில் என்பார்கள். முடா என்றுச் சொல்வது "தற்காலிகமான திருமணமாகும்", அதாவது, ஒரு முஸ்லீம் ஒரு பெண்ணை சில மணித்துளிகளுக்காக அல்லது அதற்கும் அதிகமாக காலத்திற்காக திருமணம் செய்துக்கொள்வதாகும், ஆனால், இது விபச்சாரம் என்று எண்ணப்படாது. சுன்னி முஸ்லீம்கள் "முகமது இதை ஒரு குறிப்பிட்ட காலத்திற்காகத் தான் அனுமதித்தார்" என்றுச் சொல்கிறார்கள். ஆனால், ஷிய முஸ்லீம்கள் இந்த "தற்காலிகமான திருமணம்" என்பது இன்று கூட பின்பற்றத்தகுந்தது என்றுச் சொல்கிறார்கள், மற்றும் இன்று கூட இதை ஈரான் மற்றும் இதர இடங்களில் பின்பற்றுகிறார்கள். மேலும் அறிய படிக்க:
http://www.muslimhope.com/WomenInIslam.htm

15. ஏன் முகமது 8 லிருந்து 9 வயது உள்ள சிறுமியை திருமணம் செய்துக்கொண்டார்? முகமதுவின் இந்த செயல், ஆப்ரிக்காவில் மற்றும் இதர இடங்களில் உள்ள வாலிப முஸ்லீம் பெண்களுக்கு சொல்லமுடியாத வேதனையையும், உடல் சம்மந்தப்பட்ட பிரச்சனையையும் கொடுத்துள்ளது. மேலும் அறிய படிக்க http://www.muslimhope.com/AishaNine.htm



இயற்கைக்கு மாறான நடத்தையுள்ள முகமது

THE UNUSUAL CHARACTER OF MOHAMMED


16. ஏன் முகமதுவிற்கு இத்தனை மனைவிகள் தேவைப்பட்டது?

முகமதுவின் வளர்ப்பு மகன் தன் மனைவியை(ஜைனப் பின்ட் ஜஷ்) விவாகரத்து செய்துவிட்டபிறகு, முகமது அப்பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். முகமதுவின் மற்ற மனைவிகளான "ஷஃபியா" மற்றும் "ஜுவர்ரியா பின்ட் ஹரித்" என்பவர்கள் விதவைகளானார்கள் ஏனென்றால், முகமது தான் இப்பெண்களின் கணவர்களை இதற்கு முன்பே கொன்றார். சில பெண்கள் முகமதுவின் திருமண விண்ணப்பத்தை நிராகரித்தனர், முகமது விவாகரத்து செய்த விவரங்களையும் இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்கள் எழுதியுள்ளார்கள். முகமதுவிற்கு வைப்பாட்டிகளும் இருந்தனர். மேலும் அறிய படியுங்கள்:
http://www.muslimhope.com/WhyDidMohammedGetSoManyWives.htm

17. தீய சக்தியால் பீடிக்கப்பட்டு இருந்தார் (Bewitched):

இறைவனின் உண்மையான தீர்க்கதரிசி எப்படி ஒரு தீயசக்தியின் சக்திக்கு (பில்லி சூன்யம் கட்டுக்கு உட்பட்டார்) கட்டுப்படமுடியும்? இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஹதீஸ்களில் 11 இடங்களில் சொல்லப்பட்டு உள்ளது, இந்த ஹதீஸ்கள் தான் சுன்னி இஸ்லாமின் ஷரியா சட்டத்தொகுப்பிற்கு அடிப்படை. மேலும் அறிய படியுங்கள்:
http://www.muslimhope.com/IslamAndScience.htm

18. வித்தியாசமான மூட பழக்கவழக்கங்கள் (Odd Superstitions):

முகமது சொன்னதாக ஹதீஸ்கள் பல விவரங்களைச் சொல்கின்றன, அதாவது "கண் திருஷ்டி" உண்மை என்று முகமது சொன்னதாக ஹதீஸ் உள்ளது. எப்போதெல்லாம் மலம் கழிக்கிறோமோ அப்போதெல்லாம் ஒற்றைப்படை எண்களில் கற்களை பயன்படுத்துங்கள் என்றும், உங்கள் மூக்கை ஒற்றைப்படை எண்களில் கழுவுங்கள் என்றும், தொழுகை செய்யும்போது ஒற்றைப்படை எண்களில் தொழுவுங்கள் என்றும், கண்களுக்கு மருந்துபோடும்போது(கழுவும் போது) ஒற்றைப்படை எண்களில் கழுவவேண்டும் என்றும் முகமது சொன்னதாக ஹதீஸ்கள் உள்ளன. நீங்கள் கால்களில் செருப்புக்களை போடும்போது, முதலில் வலது கால் செருப்பை போடவேண்டும், அதே போல‌ செருப்பை கழற்றும்போது, இடது கால் செருப்பை முதலில் கழற்றவேண்டும் என்றும் முகமது சொல்லியுள்ளார். நீங்கள் சாப்பிடும் போது "வலது கையினால் சாப்பிடுங்கள்", ஏனென்றால், இடது கையினால் "சாத்தான்" சாப்பிடுகிறான் என்று சொல்லியுள்ளார். இதைப்பற்றி மேலும் அறிய படியுங்கள்:
http://muslimhope.com/IslamAndScience.htm and http://muslimhope.com/IslamAndMedicine.htm

19. கல்லரைக்குள்(சமாதிக்குள்) சித்திரவதை (Torment of the grave):

முகமதுவே பயந்த ஒரு விஷயம் இருக்குமானால், அது "சமாதிக்குள் சித்திரவதை அனுபவிப்பது" என்பதைப் பற்றித் தான். இதன் பொருள் "நரகத்தில் அனுபவிக்கும் சித்திரவதைப் பற்றியது அல்ல, இது சமாதி செய்யப்பட்ட இடத்திலேயே(மண்ணுக்குள்) அனுபவிக்கும் சித்திரவதை பற்றியதாகும்". முகமது, இந்த சித்திரவதையை மற்றவர்கள், மற்றும் தன்னை பின்பற்றுகிறவர்கள், ஏன் தானே அனுபவிக்கக்கூடாது என்று பயந்து இருந்தார். இதைப்பற்றி மேலும் அறிய படியுங்கள்:
http://www.muslimhope.com/TormentOfTheGrave.htm

மூலம்: http://www.muslimhope.com/19ReasonsWhyManyHonorablePeopleDontWantToBeMuslims.htm

மேலும் விவரங்களுக்கு இங்கு சொடுக்கவும்: http://www.muslimhope.com

Isa Koran Home Page Articles Index
1
 

ஞாயிறு, 16 மார்ச், 2008

இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்

Answering IslamKalvi:
இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்



முன்னுரை: தலைப்பே ஒரு விதமாக உள்ளதே என்று திகைக்கவேண்டாம், எல்லாம் காரணமாகத்தான் இந்த தலைப்பை நான் வைத்தேன். அதாவது, இஸ்லாம் கல்வியில் வெளியான கட்டுரையில் இயேசுவைப்பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு நாம் தொடர்ச்சியாக பதில்களை கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். இந்த கட்டுரையில், எம். எம். அக்பர் அவர்கள் முன்வைக்கும் திராட்சை ரசம் குற்றச்சாட்டிற்கு என் பதிலை தருகிறேன்.

எம். எம். அக்பர் அவர்கள் எழுத, தேங்கை முனீப் அவர்கள் மொழிபெயர்க்க, இஸ்லாம் கல்வி வெளியிட்ட கட்டுரையிலுருந்து சில வரிகள்:

தீர்க்கதரிசிகளே தீமை புரிந்தனரா?

...

6. இஸ்ரவேலரின் இரட்சகர் என பைபிள் கூறும் இயேசு கிறிஸ்து ...... திருமண விருந்தில் தண்ணீரை மதுவாக மாற்றி மக்களுக்குக் கொடுத்து அவர்களுக்குப் போதையூட்டியவராகவும் (யோவான் 2:1-11) அறிமுகப்படுத்துகின்றது. ...

Source: http://www.islamkalvi.com/religions/quran_bible_compare2.htm
Formats mine



எம். எம். அக்பர் அவர்களின் குற்றச்சாட்டு:

ஒரு திருமண விருந்தில் இயேசு தண்ணீரை மதுவாக மாற்றினார். அதை மக்களுக்கு கொடுத்து அவர்களுக்கு போதையூட்டினார்.

இந்த முடிவுக்கு எம். எம். அக்பர் அவர்கள் எப்படி வந்தார்கள் என்று கேட்டால்?

a) அவர் யோவான் 2 : 1-11 வசனங்களை படித்துள்ளார்,

b) அதைப்பற்றி ஆராய்ச்சி செய்துள்ளார்,

c) சிந்தித்துள்ளார்,

d) கடைசியாக தன் கண்டுபிடிப்பை சொல்லியுள்ளார்.

இது தான் இஸ்லாமிய அறிஞரின் ஆராய்ச்சியின் முடிவு.

10ம் வகுப்பு படிக்கும் மாணவன் அல்லது மாணவிக்கு ஒரு பரிட்சை:

நான் இந்த யோவான் 2:1-11 வசனங்களை 10ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கோ, மாணவிக்கோ கொடுத்து, இவ்வசனங்களை படிக்கச்சொல்லி, கீழ் கண்ட சில கேள்விகளுக்கு பதில் தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள். இந்த மாண(வி)வன் என்ன பதில் சொல்வா(ள்)ன் என்பதை, இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் யாராக இருந்தாலும் சிந்தித்துப்பாருங்கள். பிறகு நாம் இஸ்லாமிய அறிஞர் எம். எம். அக்பர் அவர்களின் ஆராய்ச்சியைப்பற்றி சிறிது சிந்திப்போம்.

கீழ் கண்ட இரண்டு பத்திகளை படித்து கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் எழுதவும்:

யோவான் 2:1-11 வசனங்கள்:


மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள்.இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். திராட்சரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். அதற்கு இயேசு; ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார்.அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள் என்றாள்.

யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டு போங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள். அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து:எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசிகுறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான். இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்; அவருடைய சீஷர்கள் அவர்டத்தில் விசுவாசம் வைத்தார்கள்.



கேள்விகள்:



கேள்வி 1: திருமணத்திற்கு யார் யார் அழைக்கப்பட்டு இருந்தார்கள்?

A) மரியாளும் இயேசுவும்

B) மரியாளும், இயேசுவின் சீடர்களும், மற்றும் இயேசுவும் அழைக்கப்பட்டு இருந்தார்கள்.

C) இயேசுவின் சீடர்களும், மரியாளும்

10ம் வகுப்பு மாண(வியின்)வனின் பதில்: B

கேள்வி 2: யூதர்களின் திருமணங்களில்(குறைந்த பட்சம் இந்த திருமணத்தில்) திராட்சை ரசம் என்பது, திருமண விருந்தில் ஒரு பாகமா? இல்லையா?

A) திருமண விருந்துகளில் (குறைந்த பட்சம் இந்த திருமணத்தில்) திராட்சை ரசமும் ஒரு பாகம் தான்.

B) இல்லை, யூத திருமண விருந்துகளில் (குறைந்த பட்சம் இந்த திருமணத்தில்) திராட்சை ரசம் ஒரு பாகம் அல்ல.

10ம் வகுப்பு மாண(வியின்)வனின் பதில்: A

கேள்வி 3: இயேசு ஏன் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றினார்?

A) திருமண விருந்தில் திராட்சை ரசம் பற்றாக்குறை ஏற்பட்டதால்.

B) திராட்சை ரசம் பற்றாக்குறை இல்லை, இருந்தும் வேண்டுமென்றே மக்களுக்கு போதையூட்டவேண்டும் என்ற கெட்ட தீய எண்ணத்தோடு இயேசு அற்புதம் செய்தார்.

C) இயேசுவின் தாய் மரியாள், இயேசுவை வேண்டிக்கொண்டதால்.

D) A மற்றும் C இவை இரண்டும்.

10ம் வகுப்பு மாண(வியின்)வனின் பதில்: D

கேள்வி 4: இந்த நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்ட திராட்சை ரசம் என்பது "போதை அளிப்பதாக கருதப்பட்டு ஒரு குறிப்பிட்ட விருந்தினர்களுக்கு(பெரியவர்களுக்கு ) மட்டும் பரிமாறப்பட்டதா"?

அல்லது

போதை தரும் ரசமாக இல்லாமல், சாதாரண விருந்து திராட்சை ரசமாக எல்லாருக்கும் பரிமாறப்பட்டதா?


A) பெரியவர்களுக்கு மட்டும் பரிமாறப்பட்டது

B) எல்லாருக்கும் பரிமாறப்பட்டது. பெரியவர்களுக்கும், குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் பரிமாறப்பட்டதாக எந்த தகவலும் இந்த பத்தியில் இல்லை.

10ம் வகுப்பு மாண(வியின்)வனின் பதில்:B

கேள்வி 5: திருமணவிருந்தில் இப்படி திராட்சை ரசம் பரிமாறப்பட்டது, யூதர்களின் திருமண முறையில் இல்லாததால், விருந்தினர்கள் தங்கள் முன் வைக்கப்பட்ட திராட்சை ரசம் குறித்து, "இப்படி போதை தரும் பொருளை எப்படி திருமணத்தில் பரிமாறினாய்?" என்று கேள்வி கேட்டு விருந்துக்கு அழைத்தவரிடம் முறையிட்டார்களா? மற்றும் எதுவும் சாப்பிடாமல் எழுந்துவிட்டார்களா?

A) ஆம், திராட்சை ரசம் திருமணங்களில் சாதாரணமாக பரிமாறப்படும் பொருளாக இல்லாததினால், விருந்தாளிகள் விருந்துக்கு அழைத்தவரை திட்டி, எழுந்து போய் விட்டார்கள்.

B) இல்லை, யூதர்கள் திருமணங்களில் பயன்படுத்தும் போதையில்லாத திராட்சை ரசம் என்பதால், விருந்துக்கு அழைத்தவரை கூப்பிட்டு, நல்ல ரசத்தை கடைசி வரை வைத்ததற்காக அவரை புகழ்ந்தார்கள்.

10ம் வகுப்பு மாண(வியின்)வனின் பதில்: B

கேள்வி 6: இயேசு திராட்சை ரசமாக மாற்றியதை குடித்துவிட்டு, விருந்தாளிகள், எல்லாரும் போதையில் திளைத்து, சண்டை போட்டுக்கொண்டு, ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டு, திருமண விருந்தின் சந்தோஷத்தை கெடுத்தார்களா? இதனால், கோபமுற்ற திருமண விருந்துக்கு அழைத்தவர், இயேசுவை அழைத்து ஏன் இப்படி செய்தீர் என்று கேட்டாரா?

A) இல்லை, படித்த பாகத்தில் இப்படி நடந்ததாக எந்த தகவலும் இல்லை.

B) ஆம், இப்படியே நடந்தது, மாப்பிள்ளை இயேசு கடிந்துக்கொண்டார்.எல்லாரும் போதையில் திருமண விருந்தின் மகிழ்ச்சியை கெடுக்கும் அளவிற்கு பிரச்சனை செய்தார்கள்.

10ம் வகுப்பு மாண(வியின்)வனின் பதில்: A



மேற்கண்ட 6 கேள்விகளுக்கும் ஒரு 10ம் வகுப்பு மாணவன் என்ன பதில் சொல்வான் என்று நானே பதில் கொடுத்துள்ளேன். இதை படிக்கும் நீங்கள், மேலே உள்ள 11 வசனங்களை படித்து புரிந்துக்கொண்டு, நான் கொடுத்த பதில்கள் சரியானவையா இல்லையா என்று சோதித்துப்பாருங்கள்.

[நீங்கள் ஒருவேளை நாத்தீகராக இருப்பீரானால், இயேசு எப்படி அற்புதம் செய்யமுடியும், இதை நாங்கள் நம்பத்தயாராக இல்லை என்றுச் சொல்வீர்கள். ஆனால், நான் சொல்வது என்னவென்றால், இந்த வசனங்கள் உண்மை என்று எண்ணி பதிலைத் தாருங்கள் என்பது தானே தவிர, அற்புதம் செய்தாரா இல்லையா என்பது இங்கு கேள்வியில்லை]

மேலேயுள்ள 11 வசனங்களை, எம். எம். அக்பர் அவர்கள் கீழ்கண்டவாறு புரிந்துக்கொண்டுள்ளார்.


மற்றுமொரு முறை அவர் எழுதியதை படித்துப்பார்க்கவும்:

6. இஸ்ரவேலரின் இரட்சகர் என பைபிள் கூறும் இயேசு கிறிஸ்து ...... திருமண விருந்தில் தண்ணீரை மதுவாக மாற்றி மக்களுக்குக் கொடுத்து அவர்களுக்குப் போதையூட்டியவராகவும் (யோவான் 2:1-11) அறிமுகப்படுத்துகின்றது.



 

1) இந்த திருமணத்தில் பரிமாறப்பட்ட திராட்சை ரசம் "போதை தரக்கூடியது" என்று தவறாக கருதிவிட்டார் எம். எம். அக்பர் அவர்கள்.

2) அதாவது, சில இந்திய திருமணங்களில் காண்பது போல, மாப்பிள்ளை தன் நண்பர்களுக்கு நல்ல விருந்து கொடுப்பார், அதாவது மதுபானங்களை வாங்கி நண்பர்களுக்கு தனியாக ஹோட்டல்களில் அறைபோட்டு கொடுப்பார். அவர்கள் இரவெல்லாம் குடித்து கும்மாளம் போடுவார்கள். இப்படி நடந்ததாக இவர் எண்ணிவிட்டார் (மக்கனிக்கவும், எண்ணிவிடவில்லை, வேண்டுமென்றே தெரிந்தே இப்படி எழுதுகிறார்).

3) திராட்சை ரசத்திற்கும் போதை தரும் திராட்சை ரசத்திற்கும் நம் இஸ்லாமிய அறிஞர் எம். எம். அக்பர் அவர்களுக்கு வித்தியாசம் தெரியாமல் போய் விட்டது. [ஆனால், இஸ்லாமிய சொர்க்கத்தில் அல்லா முஸ்லீம்களுக்காக ஓடவிட்டு இருக்கும் "மதுபான நதியில்" எடுத்துக்குடித்தால், போதையிருக்காது என்று அவருக்குத் தெரியும்.]

எம். எம். அக்பர் அவர்களுக்கு சில கேள்விகள்:

1) முதலாவது, நீங்கள் யோவான் 2:1:11 வரையுள்ள வசனங்களை உண்மையாக படித்து தான் இந்த வரிகளை எழுதினீர்களா?

2) யூத திருமணங்களில் திராட்சை ரசம் பரிமாறுவது ஒரு பொதுவான பழக்கம் என்பதை மேற்கண்ட 11 வசனங்களை படித்தும் உங்களுக்கு விளங்கவில்லையா?

கீழ் கண்ட வசனங்களை படித்துப்பாருங்கள், இந்த வசனங்கள் எதை உங்களுக்கு தெரிவிக்கிறது?


யோவான் 2:9 அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து:

யோவான் 2:10 எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசிகுறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான்


(உங்களுக்கு முஸ்லீம்கள் திருமணங்களுக்கு கால தாமதாக சென்ற பழக்கமில்லை போல் இருக்கிறது, அப்படி சென்று இருந்தீர்களானால், உங்களுக்கு புரிந்திருக்கும், அதாவது காலதாமதாக வந்தால் என்ன கிடைக்கும் என்று, வெறும் பிரியாணி மட்டும் தான் கிடைக்கும், அதில் துண்டுகள் இருக்காது ஏனென்றால், முதலில் எல்லாருக்கும் திருப்தியாக பரிமாறிவிடுவார்கள். பெரும்பான்மையாக நடுத்தர குடும்ப திருமணங்களில் இப்படி நடப்பது உண்டு.)

3) திராட்சை ரசம் எந்தெந்த சூழ்நிலையில் பைபிள் காலங்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று நீங்கள் படித்துள்ளீர்களா?

4) நீங்கள் மேற்கோள் காட்டிய வசனங்களில், மக்கள் குடித்து "போதை கொண்டு" கும்மாளம் போட்டதாக அல்லது மதி மயங்கியதாக ஏதாவது ஆதாரம் காட்டமுடியுமா?



எம். எம். அக்பர் அவர்களுக்கு சவால்:

யூதர்களுக்கு திராட்சை ரசம் திருமண விருந்துகளில் பரிமாறப்படுவது பழக்கமில்லை, அதை முதல் முதலில் இயேசு தான் புகுத்தினார், மக்களை போதைக்கு உட்படுத்தினார் என்று உங்களால் நிருபிக்கமுடியுமா?

பழைய ஏற்பாட்டு, புதிய ஏற்பாட்டு காலங்களில் மக்கள் திராட்சை ரசத்தை தினமும் பயன்படுத்தவில்லை, திருமண விருந்துகளில் போதை இல்லாத ரசத்தை பயன்படுத்த வில்லை. இயேசு மட்டும் தான் அதை முதல் முதலில் இப்படி அற்புதம் செய்து, மக்களை போதைக்கு உட்படுத்தினார் என்று உங்களால் நிருபிக்க முடியுமா?


திராட்சை ரசம் பற்றிய சிலவிவரங்கள்:

திராட்சை ரசத்தை பழங்களிலிருந்து பிழியும் போது, அதில் போதை இருக்காது, அதை சரியான அளவில் எடுத்துக்கொண்டால், அது நன்மையைத் தரும். அதே நேரத்தில் பல நாட்கள் அந்த இரசத்தை அப்படியே வைத்தால், அதில் ஆல்கஹால் உருவாகி அது ஒரு போதைப் பொருளாக மாறிவிடும். ஆனால், அந்த போதை தரும் மதுபானத்தையே முஸ்லீம்கள் குடிக்கலாம் என்று அல்லா ஆரம்பத்தில் அனுமதி கொடுத்துள்ளாரே

அல்லா மதுபானத்தையே(Strong Drink) ஆரம்ப காலத்தில் அனுமதித்து இருந்ததாக குர்‍ஆன் வசனம் சொல்கிறதே.


(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்;. நீர் கூறும்; "அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது" ....... (குர்‍ஆன் 2:219)



இந்த கானா ஊர் திருமணத்தில் விருந்தினருக்கு கொடுத்தது, போதை இல்லாத ரசமாகும். நீங்கள் இல்லை என்று வாதாடமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால், ஒருவன் தன் திருமணத்திற்கு அழைக்கும் அனைவருக்கும் சாப்பிடும்போது, மிகவும் அதிக அளவு போதைத் தரும் ரசத்தை கொடுத்து, அவர்கள் அதை அதிகமாக சாப்பிட்டு, போதை அடைந்து திருமண வீட்டை ஒரு சந்தையாக மாற்ற விரும்புவானா? சிந்தித்துப்பாருங்கள்.

தன் மகனை ஆசீர்வதிக்கும் போது, ஈசாக்கு கீழ் கண்டவாறு ஆசீர்வதிக்கிறார்:

தேவன் உனக்கு வானத்துப்பனியையும் பூமியின் கொழுமையையும் கொடுத்து, மிகுந்த தானியத்தையும் திராட்சரசத்தையும் தந்தருளுவாராக.(ஆதியாகமம் 27:28)



அந்த காலத்தில் அவர்கள் இடங்களுக்கு ஏற்ப பயிர்வகைகளை பயிரிட்டனர், அதனால், தானியமும்,திராட்சை இரசமும் குறையாமல் இருக்கவேண்டும் என்று ஆசி வழங்கினர். தானியமும் திராட்சை இரசமும் அவர்களுக்கு செழுமையை குறிக்கிறது, இவைகள் அவர்களது பயிர்வகைகள் ஆகும். இதே இந்தியாவாக இருந்திருக்குமானால், அரிசியும்,பருப்பு, பாலும் தேனும் நெய்யும் என்றுச் சொல்லி ஆசீர்வதித்து இருப்பார்கள்.

தேவன் மக்களை ஆசீர்வதிக்கும் போதும், திராட்சை பயிர் வகையைப்பற்றியும் குறிப்பிடுகிறார்:

உன்மேல் அன்புவைத்து, உன்னை ஆசீர்வதித்து, உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் உன்னைப் பெருகப்பண்ணி, உன் கர்ப்பக்கனியையும், உன் நிலத்தின் கனிகளாகிய உன் தானியத்தையும், உன் திராட்சரசத்தையும், உன் எண்ணெயையும், உன் மாடுகளின் பலனையும், உன் ஆட்டுமந்தைகளையும் ஆசீர்வதிப்பார். (உபாகமம் 7:13)

நீ உன் தானியத்தையும் உன் திராட்சரசத்தையும் உன் எண்ணெயையும் சேர்க்கும்படிக்கு, நான் ஏற்றகாலத்தில் உங்கள் தேசத்தில் முன்மாரியையும் பின்மாரியையும் பெய்யப்பண்ணி, (உபாகமம் 11:14)



இதே திராட்சை ரசம் போதையுள்ளதாக மாறின மதுபானத்தை குறித்து எச்சரிக்கை:

மதுபானப்பிரியரையும் மாம்சப்பெருந்தீனிக்காரரையும் சேராதே. (நீதிமொழிகள் 23:20)

நீதிமொழிகள்: 23:29-33

ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்? மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே .

மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும்.

முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்.உன் கண்கள் பரஸ்திர்களை நோக்கும்; உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும்.

1 தீமோ 3:3

அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பணஆசையில்லாதவனுமாயிருந்து,



புதிய ஏற்பாட்டு காலத்தில் போதையில்லாத திராட்சை ரசத்தையும் சாப்பிடுவதையும் நிறுத்திவிட்டார்கள். இன்னும் திராட்சை ரசத்தைப்பற்றி அதிகமாக எழுதலாம், ஆனால், இப்போதைக்கு இது போதும், யாராவது இக்கட்டுரைக்கு மறுப்பு அல்லது பதில் எழுதுவீர்களானால், மற்ற விவரங்களை தருகிறேன்.

இஸ்லாமும் மதுபானமும்: முஸ்லீம்கள் குடித்து போதைக்கொண்டு நமாஜ் செய்ய அனுமதித்த அல்ல

எம். எம். அக்பர் அவர்கள், இயேசு ஒரு திருமண விருந்தில் போதையில்லாத திராட்சை இரசத்தை மக்களுக்காக கொடுத்ததை குற்றம் சாட்டுகிறார், ஆனால், இஸ்லாம் மதுபானம் பற்றி என்ன சொல்கிறது என்று கவனித்தாரோ இல்லையோ?

முகமது நபியாக தன்னை வெளிக்காட்டிய பிறகு கூட இஸ்லாமிய மக்கள் குடிக்கவும், போதைக்கொள்ளவும் அல்லா அனுமதி அளித்துள்ளார்.

1. குடிக்க அல்லாவின் அனுமதி:

மதுபானம் குடிக்கலாமா இல்லையா என்று முகமதுவிடம் முஸ்லீம்கள் கேட்ட போது, அல்லா மதுபானத்தை தடை செய்யாமல், மதுபானம் குடிப்பதில் நன்மையும் இருக்கிறது தீமையும் இருக்கிறது. நன்மையை விட தீமை தான் அதிகம் என்றுச் சொன்னாரே தவிர, பாருங்கள் முஸ்லீம்களே இனி நீங்கள் குடிக்கவேண்டாம் இது என் கட்டளை என்று சொல்லவில்லை. அதனால், முஸ்லீம்கள் குடித்தார்கள், போதை கொண்டார்கள். அல்லா மதுபானத்தையே(Strong Drink) ஆரம்ப காலத்தில் அனுமதித்து இருந்ததாக குர்‍ஆன் வசனம் சொல்கிறதே.


(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்;. நீர் கூறும்; "அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது" ....... (குர்‍ஆன் 2:219)



இவ்வசனம் இறக்கிய பிறகு முஸ்லீம்கள் குடியை நிறுத்தவில்லை, காரணம் அல்லா தடை செய்யவில்லையே அதனால் தான்.

2. குடித்து போதை கொண்டு, நமாஜ் செய்யும் போது உளரும் முஸ்லீம்கள்:

அல்லா மதுபானத்திற்கு அனுமதி அளித்தவுடன் முஸ்லீம்கள் நன்றாக குடிக்க ஆரம்பித்தார்கள். எந்த அளவிற்கு என்றால், நமாஜ் செய்யும் போது, சொல்லப்படும் சூராக்களை குடிமயக்கத்தில் தாறுமாறாக சொல்ல ஆரம்பித்தார்கள். பாவம் அல்லா என்ன செய்வார்? மறுபடியும் ஒரு வசனத்தை இறக்கினார். "மதுபான தடை வசனம்" அல்லா இறக்கியிருப்பார் என்று நினைக்கிறீர்களா? உங்கள் கணிப்பு தவறு. அதாவது, முஸ்லீம்களே குடியுங்கள் பரவாயில்லை, ஆனால், குடித்து நமாஜ் செய்யும் போது, போதையில் உளரும் அளவிற்கு குடித்துவிட்டால், தொழுகைக்கு வரவேண்டாம் என்று அல்லா வசனம் இறக்கினார். முஸ்லீம்களின் "குடியை நிறுத்தக்கூடாது என்பதில்" அல்லா எவ்வளவு அக்கரை உள்ளவராக இருக்கிறார் பாருங்கள். அல்லாவை விட நம் நாட்டு மருத்துவர்களே மேல், மதுசாப்பிட்டாலும் கொஞ்சமாக சாப்பிடுங்கள், அதிகமாக எடுத்துக்கொள்ளவேண்டாம், முடிந்தால் விட்டு விடுங்கள் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். ஆனால், அல்லா இப்படி இல்லை, குடியுங்கள், போதை ஏறட்டும், அப்படி ஏறினால், தொழுகைக்கு வராதீர்கள், தொழுகைக்கு வரவேண்டுமானால், அதற்கு முன்பு குடிக்காதீர்கள் என்றார். என்னே தெய்வம்!


(குர்‍ஆன் 4:43) நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்;. ........ நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.



இந்த வசனத்தை நன்றாக கவனியுங்கள், யாரை குறிப்பிட்டு அல்லா இந்த வசனத்தை இறக்குகிறார்? முஸ்லீம்களை குறித்து தான் என்பது தெள்ளத்தெளிவு. பாவம் அல்லா, குடிபோதையில் நாக்கு குழம்பி தொழுகையில் ஓதும் சூராக்கள் புரியாமல் போகும் அளவிற்கு போதை இருக்குமானால் முஸ்லீம்களுக்கு, தொழுகைக்கு வராதீர்கள் என்று கட்டளையிடுகிறார். அப்படியென்றால், எப்போதும் ஸ்டடியாக பேசும் குடிக்காரன் நமாஜ் படிக்கலாம். அல்லது தொழுகை ஆன பிறகு நாக்கு குழம்பும் அளவிற்கு குடிக்கலாம் என்று தானே இதன் பொருள்.

The Prohibition of Approaching Prayer When Drunk or Junub:

Allah forbade His believing servants from praying while drunk, for one does not know the meaning of what he is saying in that state, and He forbade them from attending the Masjids while sexually impure, except when one is just passing through the Masjid from one door to another. This Ayah was revealed before alcohol consumption was completely prohibited, as evident by the Hadith that we mentioned in Surat Al-Baqarah when we explained Allah's statement,

Source: http://www.qtafsir.com/index.php?option=com_content&task=view&id=660&Itemid=59



சரி, இந்த வசனம் இறங்கிய பிறகு தொழுகைக்கு வரும்போது மட்டும் முஸ்லீம்கள் குடிக்கவில்லை என்பது தெளிவு. ஏனென்றால், அல்லா எதை முகமது மூலம் சொன்னாலும் அப்படியே முஸ்லீம்கள் கேட்பார்கள். எனவே, தொழுமை நேரம் தவிர மற்ற நேரங்களில் குடித்தார்கள், போதையில் மயங்கினார்கள் நம் அருமை இஸ்லாமிய நபித்தோழர்கள். அதாவது முகமது நபியாக தன்னை காட்டிவிட்ட பிறகு, குர்‍ஆனின் வசனங்கள் இறங்கிக்கொண்டு இருக்கும் போது, மதுபானம் குடிப்பது தடை செய்யப்படவில்லை. நான் கேட்கிறேன், இஸ்லாமிய அறிஞர்களே, மதுபானம் தடை வரும் வரை, முஸ்லீம்கள் குடித்தார்களா? இல்லையா?

இந்த வசனத்தின் படி சில முஸ்லீம்கள் குடித்துவிட்டு, தொழும் போது, சொல்லப்படும் குர்‍ஆன் சூராக்களை மாற்றி மாற்றி சொல்லியுள்ளார்கள், போதை மூளைக்கு ஏறினால் வார்த்தைகள் எப்படி சரியாக இருக்கும். எனவே, அல்லா, தம்பிகளா, நமாஜுக்கு வரும் போது மட்டும் குடிக்காதீர்களடா! ஏனென்றால், வார்த்தைகள் சரியாக வராது என்று வசனத்தை இறக்குகிறார். ஆக, மதுபான தடை வசனம் வரும் வரை முஸ்லீம்கள் குடித்தார்கள். இதற்கு முகமதுவும் அனுமதி அளித்துள்ளார்.


16:67 பேரீச்சை, திராட்சை பழங்களிலிருந்து மதுவையும், நல்ல ஆகாரங்களையும் நீங்கள் உண்டாக்குகிறீர்கள்; நிச்சயமாக இதிலும் சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.

(And from the fruits of date palms and grapes, you derive strong drink) This indicates that it was permissible to drink it before it was forbidden. It also indicates that strong drink (i.e., intoxicating drink) derived from dates is the same as strong drink derived from grapes. Also forbidden are strong drinks derived from wheat, barley, corn and honey, as is explained in detail in the Sunnah.

http://www.qtafsir.com/index.php?option=com_content&task=view&id=2965&Itemid=71



வெங்காய பூண்டு வாடை, மதுபான வாடையை விட தீயது:

சிறிது இங்கு கவனியுங்கள், பல ஆண்டுகள் மக்கள் குடித்துவிட்டு, குடித்த வாடையோடு வந்தாலும் அல்லா தொழுகைக்கு அனுமதியளித்துள்ளார். ஆனால், பூண்டு, வெங்காயம் என்பது மிகவும் தீய‌ வாடையாக‌ மாறிவிட்டது. பூண்டு வெங்காய வாசனையை விட மதுபான வாசனை அல்லாவிற்கு பெரிய பிரச்சனையாக இல்லை. பூண்டு வெங்காயம் உண்பவர் தொழுகைக்கு வரவேண்டியது இல்லை என்று முகமது சொல்லியுள்ளார்.இதை உண்டு முகமதுவுடன் தொழக்கூடாது ஏன்? "பூண்டு வெங்காய வாடை" வரும். ஆனால், மதுபானம் அறுந்தினவர் தொழலாம். இப்படி மதுபானத்திற்கு சொல்லியிருப்பாரா? [பூண்டு வெங்காய வாடை நல்லது என்று நான் சொல்ல வரவில்லை]


பாகம் 1, அத்தியாயம் 10, எண் 855

ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

"பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிடுகிறவர் நம்முடைய பள்ளியைவிட்டு விலம் அவரின் இல்லத்திலேயே அமர்ந்து கொள்ளட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் பல விதமான துர்வாடையுடைய தாவரங்கள் கொண்டு வரப்பட்டன. அது பற்றி நபி(ஸல்) அவர்கள் விபரம் கேட்டபோது அதிலுள்ள கீரை வகைகள் பற்றி விளக்கம் தரப்பட்டது.

தம்முடன் இருந்த ஒரு தோழருக்கு அதைக் கொடுக்குமாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தத் தோழர் சாப்பிட விரும்பாமலிருப்பதைக் கண்டபோது 'நீர் உண்ணுவீராக! நீர் சந்திக்காத (பல விதமான) மக்களிடம் நான் தனிமையில் உரையாட வேண்டியுள்ளது. (இதன் காரணமாகவே நான் சாப்பிடவில்லை.)' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 856

அப்துல் அஸீஸ் அறிவித்தார்.

ஒருவர் அனஸ்(ரலி) அவர்களிடம் 'வெங்காயம் பற்றி நபி(ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்' என்று கேட்டதற்கு அனஸ்(ரலி) 'அச்செடியிலிருந்து (விளைவதை) உண்ணுகிறவர் நம்மை நெருங்க வேண்டாம்' அல்லது 'நம்முடன் தொழ வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' எனக் குறிப்பிட்டார்கள்.

3. கடைசியாகத்தான் அல்லா மதுபான தடையை கொண்டுவந்துள்ளார்:

பல ஆண்டுகள் முஸ்லீம்கள் குடித்தார்கள், வெறித்தார்கள், தப்பு தப்பாக குர்‍ஆன் சூராக்களை ஓதினார்கள், அல்லா நாமாஜ் செய்யும் போது மட்டும் குடிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டார், ஆனால் தடை விதிக்கவில்லை. கடைசியாகத்தான் அவர் கட்டளை கொடுக்கிறார்.

(குர்‍ஆன் 5:90 )ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.



குடிப்பது ஷைத்தானின் செயல் என்று குர்‍ஆன் 5:90 யில் சொல்லும் அல்லாவிற்கு இந்த செயல் ஷைத்தானின் செயல் என்று ஆரம்பத்தில் தெரியவில்லையா? இந்த வசனத்திற்கு பிறகு முஸ்லீம்கள் மதுபானம் குடிப்பதை நிறுத்திவிட்டார்கள் மற்றும் இதன் பிறகு மக்காவிற்கு ஹஜ்ஜிற்கு செல்லவேண்டும், பிரயாணத்தின் போது இடையில் சண்டை போட்டுக்கொண்டு எங்கே இவர்கள் பிரச்சனை செய்வார்கள் என்று அல்லா நினைத்து இவ்வசனத்தை இறக்கியுள்ளார் என்று கீழ்கண்ட தொடுப்பில்(http://www.answering-islam.org/Authors/Arlandson/drinking.htm) சொல்லப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது என்னவென்றால், கிட்டத்தட்ட 23 ஆண்டுகள், முகமது நபித்துவம் வகித்தார், குர்‍ஆனில் உள்ள 114 அதிகாரங்கள் உள்ளன. இந்த மதுபானம் தடை செய்யப்பட்ட அதிகாரம் 5ம் அதிகாரம் ஆகும், இது கடையில் வெளிப்பட்டுள்ளது என்று இஸ்லாமியர்கள் சொல்வார்கள், அதாவது அதிகாரங்கள் வெளிப்பட்ட வரிசையைச் சொன்னால், இந்த 5வது அதிகாரம் 112வதாக வெளிப்பட்டதாம்(Source : http://www.submission.org/Q-T.html).

அதாவது கிட்டத்தட்ட 18-19 வருடங்கள், குடித்துள்ளார்கள முஸ்லீம்கள். கடைசியாகத்தான் அல்லாவிற்கு கொஞ்சம் ஞானம் வந்து,அவர் மதுபானத்தை தடை செய்துள்ளார்.

Maududi says that Sura 5 was revealed in the timeframe of AD 628 and 629, so it is a late sura (Muhammad dies of a fever in AD 632). It lays down rules for a growing community after the Treaty of Hudaybiyah in AD 628 in which Muslims were promised a free and unmolested pilgrimage to Mecca a year later, which took place. So it was important for Muslims to prepare themselves and to give up all intoxicants. Hence, these two verses came down from Allah:

5:90 You who believe, intoxicants and gambling, idolatrous practices, and [divining with] arrows are repugnant acts—Satan's doing: shun them so that you may prosper. 91 With intoxicants and gambling, Satan seeks only to incite enmity and hatred among you, and to stop you remembering God and prayer. Will you not give them up?

Source: http://www.answering-islam.org/Authors/Arlandson/drinking.htm Formats mine



நான் இதோடு என் கட்டுரையை முடித்துக்கொள்கிறேன்.

ஒரு கேள்வி: அல்லா முகமது மூலமாக தன் வசனங்களை 18 வருடங்கள் இறக்கும் போது கூட முஸ்லீம்கள் குடித்துக்கொண்டு இருந்தார்கள், அதுவும் போதையில்லாத திராட்சை இரசமல்ல, போதையுள்ள ரசத்தை குடித்தார்கள்.

அதாவது கி.பி. 628-29 என்று வைத்துக்கொண்டால், அதற்கு முன்பு யூதர்கள்,கிறிஸ்தவர்களுக்கு அல்லா இதன் தடை விதிக்கவில்லை என்று தானே அர்த்தம்.

ஆனால், எம். எம். அக்பர் அவர்கள் எப்படி இயேசு போதையுண்டாக்கினார் என்று குற்றம் சாட்டுகிறார்?

உங்கள் அல்லா தான் யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இறைவன் என்றுச் சொல்லும் நீங்கள், அவர் மதுபானத்தை தடை செய்தது முகமதுவின் கடைசி காலத்தில் அல்லவா? அப்படியானால், கிறிஸ்தவர்கள் குடிக்க அனுமதி அல்லா கொடுத்துள்ளார் என்று தான் பொருள் அல்லவா?

ஆனால், ஒரு உண்மையை உங்களுக்குச் சொல்கிறேன், புதிய ஏற்பாடு மதுபானத்தை ஏற்கனவே தடை செய்துவிட்டது. அப்படியானால், மதுபானம் தீமை என்பதை அல்லா தெரிந்துக்கொள்வதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே பைபிளின் தேவன் அதை தடை செய்துள்ளாருங்கோ...


இந்த கட்டுரையை நான் மேலோட்டமாகத்தான் எழுதியுள்ளேன், நம் தமிழ் நாட்டின் இஸ்லாமிய அறிஞர்கள் எனக்கு கேள்விகள் கேட்டாலோ, மறுப்பு எழுதினாலோ, பதில் எழுதினாலோ, அப்போது விவரமாக இஸ்லாமும் மதுபானமும் என்ற பொருளில் எழுத முயற்சிப்பேன்.. இஸ்லாமிய அறிஞர்களே, எம். எம். அக்பர் அவர்களே, இயேசு தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றி தன் சிடர்களுக்கு குடிக்கவில்லை, இயேசுவின் சீடர்கள் யாரும் குடித்துவிட்டு, போதையுடன் ஜெபிக்கவில்லை. மற்றும் அது போதை தரும் ரசமுமில்லை என்பதை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். இன்னொரு விவரம், உங்கள் குர்‍ஆனில் அல்லா மதுபானம் தடை செய்தது உண்மையானால், இயேசுவின் காலத்தில் உள்ள மக்கள் அதை உண்பதில் என்ன தவறு இருக்கிறது, இதற்கு காரணம் அல்லா தானே. இனி எந்த குற்றச்சாட்டையும் பைபிள் மீது வைக்கும் போது, முதலாவது உங்கள் குர்‍ஆனில் அது பற்றி என்ன சொல்லியுள்ளது, இஸ்லாம் என்ன சொல்கிறது என்று தெரிந்துக்கொண்டு எழுதினால்... உங்களுக்கு சிறிது நன்றாக இருக்கும், எனக்கும் நேரம் மிச்சமாகும்.

இஸ்லாமில் மதுபானம் பற்றி மேலும் அறிய விரும்பினால், கீழ்கணட தொடுப்புகளில் படிக்கலாம்:


1. Muhammad, the Quran, and Prohibition(Islam's punishments for drinking and gambling)

2. Qur'an Contradiction: Fully Detailed Or Incomplete? E.g., The Statements On Wine

3. Islam And Wine Consumption Examining Muslim Arguments against The Bible in light of Islam's Gradual Prohibition of Wine Consumption

4. Wine: Allah's Provision or Shaitan's Abomination?

5. WINE IN ISLAM



1. இஸ்லாம் கல்விக்கு ஈஸா குர்ஆனின் இதர பதில்கள் :

1. எம். எம் அக்பருக்கு (இஸ்லாம் கல்விக்கு) பதில்: குர்ஆனில் குலறுபடிகள்

2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில் (குப்பை சடங்குகளை குப்பையில் போடச்சொன்ன இயேசு)

3. இஸ்லாம் கல்வி தள கட்டுரையும் 1 தீமோத்தேயு 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்

4. இஸ்லாம் கல்விக்கு பதில்: இயேசு த‌ன் தாயை (மரியாளை) அவமதித்தாரா?

4.1 இந்த கட்டுரைக்கு பதில் அளித்த "ஏகத்துவம்" தளத்திற்கு, உமரின் மறுமொழியை இங்கு படிக்கலாம்.


5. காபாவிற்குள் கள்ள(அநியாய) வியாபாரம் செய்ய அனுமதியுண்டா?



Isa Koran Home Page Back - Islam Kalvi Rebuttals Index  Page

சனி, 8 மார்ச், 2008

Ans Tamil Islam: ஏன் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் போல கேள்வி‍ பதில் நிகழ்ச்சியை நடத்துவதில்லை?

ஏன் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் போல கேள்வி‍ பதில் நிகழ்ச்சியை நடத்துவதில்லை?


முன்னுரை: தமிழ் இஸ்லாம் கேள்வி பதில் என்ற தளத்தில் கீழ் கண்ட கருத்தை குற்றச்சாட்டாக அல்லாமல் ஒரு செய்தியாக தெரிவித்துள்ளார்கள்.

1. கிறிஸ்தவத்தில் மக்கள் கேள்வி கேட்காமல் நம்பவேண்டிய நிலை உள்ளது.

2. இஸ்லாம் தளங்களைப் போல கிறிஸ்த தளங்களில் மக்கள் கேள்விகள் கேட்கும் வசதி செய்துத்தரப்படவில்லை.

3. கிறிஸ்தவ ஊழியர்கள் கூட "கிறிஸ்தவ கேள்வி பதில்கள்" என்ற நிகழ்ச்சிகளை நடத்துவதும் இல்லை.

4. ஆனால், இஸ்லாம் தளங்களில் கேள்விகள் கேட்கும் வசதி உள்ளது, பல நிகழ்ச்சிகள் கேள்விபதிலுக்காக இஸ்லாமிய ஊழியர்கள் நடத்துகிறார்கள்.


இஸ்லாமியர்களின் இந்த கருத்து மிகவும் நியாயமானதாக தென்படுகிறது. என் பதிலை படிப்பதற்கு முன்பு, இஸ்லாமிய தளம் எழுதியதை ஒரு முறை படிக்கவும்.


..... அப்போது,ஹிந்துத்துவத்திலும் - கிறிஸ்த்துவத்திலும் (நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி) கேள்விகள் கேட்காமல் நம்ப வேண்டும் என்ற நிலை இருப்பதை உணர்வீர்கள்.

இஸ்லாத்தில் அந்த நிலை இல்லை. இதற்கு மிக சிறிய அளவில் ஓர் உதாரணம் சொல்ல முடியும். இதுதான் இஸ்லாம் என்ற இந்த இணையத் தளம் உட்பட தமிழில் இஸ்லாமிய பிரச்சாரம் செய்யும் பல இணையங்கள் உள்ளன. அவற்றில் பல தளங்கள் 'மாற்றுமதத்தவர்கள் இஸ்லாம் பற்றி கேள்வி கேட்கலாம்' என்ற வசதியை செய்து வைத்துள்ளன. இது போன்ற வசதி பிற மத இணையங்களில் (தமிழில்) கிடைக்குமா? அந்த மதங்கள் பற்றி கேள்விக் கேட்டு - விவாதித்து அறிந்துக் கொள்ளலாமே.. என்று நாங்களும் தேடிக் கொண்டிருக்கிறோம். எங்களுக்குக் கிடைக்கவில்லை. (நீங்கள் அறிந்தால் தெரிவியுங்கள்). ....
....
பால் தினகரன் உட்பட அதே அடிப்படையில் அமைந்த பல குழுக்கள் கைகளில் பைபிளை வைத்துக் கொண்டு 'கர்த்தரை விசுவாசியுங்கள்' என்ற பிரச்சாரத்தை முன் மொழிந்துக் கொண்டிருக்கின்றன. கூட்டத்திற்கு வரும் மக்களுக்கு அற்புதங்கள் பற்றிக் கூறவும் அவர்களில் பலவீனமானவர்களை அழவைக்கவும் தான் இவர்களால் முடியுமே தவிர "எவரும் கிறிஸ்த்துவம் பற்றி, பைபிள் பற்றி இங்கு பகிரங்கமாகக் கேள்விக் கேட்கலாம்" என்று அவர்களால் சொல்ல முடிவதில்லை. (அவர்களின் பணிகளை குறைச் சொல்வதற்காக இதை நாம் இங்கு குறிப்பிடவில்லை. கேள்விகளுக்கு இடங்கொடுக்காத நிலையை சுட்டிக் காட்டுவதற்காகத் தான் குறிப்பிடுகிறோம்).

இஸ்லாத்தை குர்ஆனிலிருந்தும் நபியின் வாழ்விலிருந்தும் கற்றுணர்ந்த அடிப்படைவாதிகள் மாற்றுக் கொள்கையுடையவர்களிடமிருந்து கேள்விகளை சந்திப்பதில் சற்றும் சலைத்தவர்களல்ல. ஏனெனில் இஸ்லாம் வளர்ந்தது அந்த அடிப்படையில் தான்.

'நீங்கள் அறியாதவற்றை வேதஞானம் உள்ளவர்களிடம் கேள்விக் கேட்டு அறிந்துக் கொள்ளுங்கள்' என்கிறது குர்ஆன். (16:43)

கேள்வி ஞானம் ஊக்கப்படுத்தப்பட்டுள்ள மார்க்கத்தில் போய் 'கேள்வி ஞானத்திற்கு இடமில்லை' என்று எதை வைத்து முடிவு செய்தீர்கள்?

Source: http://tamilislam-qa.blogspot.com/2008/02/blog-post_10.html

Formats Mine



ஈஸா குர்‍ஆன் பதில்:

இஸ்லாமியர்களின் இந்த கருத்திற்காக நான் என் பதிலை கீழ் கண்ட தலைப்புகளில் தரவிரும்புகிறேன்.

1. ஏன் இஸ்லாமியர்கள் அதிகமாக கேள்விபதில் வசதியை செய்து கொடுத்துள்ளார்கள், கேள்வி‍பதில் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். ஏன் கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சியை நடத்துவதில்லை.

2. கிறிஸ்தவத்தில் கேள்வி கேட்காமல் சொல்வதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கட்டாயமுண்டா? கிறிஸ்தவ கேள்வி பதில் தளங்கள் உள்ளனவா? கிறிஸ்தவர்கள் பதில் சொல்லாமல் ஒளிந்துக்கொள்கிறார்களா?





1. ஏன் இஸ்லாமியர்கள் அதிகமாக கேள்விபதில் வசதியை செய்து கொடுத்துள்ளார்கள், கேள்வி‍பதில் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். ஏன் கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சியை நடத்துவதில்லை.

"இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சிகளை" யார் யார் நடத்துகிறார்கள் என்று இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரையும், தமிழ் நாட்டிலுள்ளவர்களையும் கேட்டால், பெரும்பான்மையாக மாற்று மதத்தவர்களும் உடனே பதில் சொல்லிவிடுவார்கள். அதாவது, உலக அளவில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை திரு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் நடத்துகிறார். அதே போல, தமிழ் நாட்டில் (எனக்கு தெரிந்த மட்டில்) புகழ் பெற்ற நிகழ்ச்சியாகிய உள்ள "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" என்ற நிகழ்ச்சியை திரு பி. ஜைனுல் ஆபீதீன் அவர்கள் நடத்திக்கொண்டு வருகிறார்கள். இந்த விவரங்கள் எல்லாருக்கும் தெரியும், இன்னும் பல நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடந்துக்கொண்டு இருக்கின்றன.

சரி, அப்படியானால், இப்படிப்பட்ட கிறிஸ்தவ கேள்வி பதில் நிகழ்ச்சிகளை யார் நடத்துகிறார்கள்? குறைந்த பட்சம் ஒரு பெயரைச் சொல்லுங்கள் ? என்று நாம் கேட்டால் பெரும்பான்மையாக "கிறிஸ்தவர்களிலிருந்தே" பதில் வராது? அது ஏன்? சரி கிறிஸ்தவ போதகர்கள், ஊழியர்களின் பெயரைச் சொல்லுங்கள் என்று கேட்டால், உடனே குறைந்தது 10 பேரின் பெயரை அதிகமாக சிந்திக்காமலேயே சொல்லிவிடுவார்கள் கிறிஸ்தவர்கள். கிறிஸ்தவர்களுக்கு சந்தேகங்கள் இல்லையா? மாற்று மதத்தவர்கள் கிறிஸ்தவ கேள்விகளை கேட்கமாட்டார்களா? என்ற கேள்விகள் எல்லாருக்கும் எழும்பும்.

இக்கட்டுரை முழுவதுமாக படிப்பீர்களானால், உங்களால் இவைகளுக்கு பதிலை கண்டுக்கொள்ளமுடியும்.

ஏன் இஸ்லாம் பல நிகழ்ச்சிகளை நடத்துகிறது, ஏன் கிறிஸ்தவம் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை? இந்த கேள்விக்கான பதிலை இனி பார்ப்போம். இஸ்லாமிய சகோதரர்கள் இப்படி நான் எழுதுகிறேன் என்று என் மேல் கோபப்படவேண்டாம், நான் எழுதுவதில் யதார்த்தம் உள்ளதா இல்லையா என்பதை சிந்தியுங்கள். இஸ்லாமியர்கள் அதிகமாக கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு 6 காரணங்கள் இருப்பதாக நான் கருதுகிறேன். இந்த காரணங்களை மேலிருந்து கீழாக (Count Down 6 to 1) ஒவ்வொன்றாக விளக்குகிறேன்.

காரணம் 6: தீவிரவாதிகள் தங்கள் செயலுக்கு இஸ்லாமின் பெயரை பயன்படுத்துவதினால், "இஸ்லாம் அமைதி மதம்" என்பதை காட்ட பல நிகழ்ச்சிகள் தேவைப்படுகிறது:

ஏன் இஸ்லாமியர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை அதிகமாக நடத்துகிறார்கள் என்று சிந்திப்பீர்களானால், இதற்குள்ள பல காரணங்களில் இந்த ஆறாவது காரணமும் ஒன்று என்று நான் சொல்வேன்.

இஸ்லாம் அமைதி மார்கமா இல்லையா என்பதைப்பற்றி இங்கு நான் சொல்லவரவில்லை, தீவிரவாதிகள் தங்கள் ஒரு கையில் துப்பாக்கியுடனும், மறுகையில் குர்‍ஆனையும் ஏந்திக்கொண்டு நிற்பதைத் தான் சொல்கிறேன். "தீவிரவாதிகள் இஸ்லாமியர்கள்" இல்லை என்று இஸ்லாமியர்கள் கூட்டங்களில், நிகழ்ச்சிகளில் பேசுவார்கள். ஆனால், தீவிரவாதிகள் தங்களை "இஸ்லாமியர்கள்" என்று தான் உலகத்திற்கு அடையாளம் காட்டிக்கொள்கிறார்கள். அல்லாவின் வழியில் தாங்கள் இந்த (தீவிரவாத) செயல்களை செய்கின்றனர் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

இப்படி தீவிரவாதிகள் தங்களை ஒரு இஸ்லாமியர்களாக காட்டிக்கொள்வதால், இஸ்லாமிய அறிஞர்கள் "இஸ்லாமை பரப்புவதற்கு" இது ஒரு தடையாக இருப்பதால், பல நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். மக்கள் இஸ்லாமை ஒரு அமைதி மார்க்கம் என்று 'அங்கீகரிக்கவேண்டும்' என்பதற்காக மக்களை கேள்விகள் கேட்கச்சொல்லி அதற்கு பதில் அளித்து வருகின்றனர்.

எந்த ஒரு இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சியை பாருங்கள், குறைந்த பட்சம் ஒரு கேள்வியாவது மாற்று மத நண்பர்கள் "இஸ்லாமிய தீவிரவாதிகள் பற்றி, ஜிஹாத் பற்றி" கேட்பார்கள். அதாவது, மாற்று மத அன்பர்களின் மனதில் "இஸ்லாம் ஒரு தீவிரவாத மார்க்கம்" என்பதை தீவிரவாதிகள் விதைத்துவருகின்றனர்.இஸ்லாமை ஒரு தீவிரவாத மார்க்கமாக இஸ்லாமியர்கள் காட்டினாலும், வலியவந்து மாற்று மதத்தவர்கள் "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமாக" கருதவேண்டும் என்று இஸ்லாமிய அறிஞர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதற்காக ஊடகங்கள் தவறான செய்தியை பரப்புகிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆக, இஸ்லாமுக்கு தீவிரவாதிகள் கொண்டுவரும் கெட்டபெயரை மாற்றவேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் மூலமாக இஸ்லாமிய அறிஞர்கள் நடத்திவருகின்றனர். இப்படிப்பட்ட தீவிரவாதிகள் "இஸ்லாமியர்கள் இல்லை, இது தவறு, இஸ்லாம் இதை அனுமதிப்பதில்லை" என்று சொல்லிவருகின்றனர்.

கிறிஸ்தவத்தை எடுத்துக்கொண்டால், இப்படிப்பட்ட பிரச்சனை இல்லை. கிறிஸ்தவ பெயரை பயன்படுத்தி யாரும் தீவிரவாத செயலில் ஈடுபடுவதில்லை, ஒரு கையில் துப்பாக்கியுடம், மறு கையில் பைபிளை ஏந்திக்கொண்டு யாரும் போஸ் கொடுப்பதில்லை."அமெரிக்கா போன்ற நாடுகளின் தலைவர்கள் கிறிஸ்தவர்கள் தான், அவர்கள் செய்யும் அராஜத்திற்கு அளவே இல்லை" என்று சிலர் சொல்லலாம். ஆனால், அவர்கள் ஒரு அரசாங்க தலைவராக இருந்து செய்கின்றனர், நான் செய்யும் செயல்களுக்கு பைபிள் தான் காரணம் என்று சொல்வதில்லை. எனவே, சாதாரண மக்கள் இதை பெரிய தவறாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள். எனவே, கிறிஸ்தவர்களுக்கு கெட்டபெயரை உண்டாக்க தீவிரவாதிகள் இல்லை.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவர்களால் தொடரப்பட்ட "குருசேடர்கள்" யுத்தம் பற்றி என்ன சொல்வீர்கள் என்று யாரும் கிறிஸ்தவத்தின் மீது குற்றம் சுமத்தவும் வாய்ப்பு இல்லை. இதற்கு இரண்டு காரணங்கள், 1) பைபிள் இதை அனுமதிப்பதில்லை, 2) தற்கால எந்த கிறிஸ்தவ போதகரும் அதை சரி என்றுச் சொல்லி, இப்போதும் அது போல கிறிஸ்தவர்கள் போர்கள் இயேசுவிற்காக செய்யலாம் என்று வக்காளத்து வாங்குவதில்லை.

எனவே, கிறிஸ்தவத்திற்கு அதிகமாக கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்தி மக்களின் மனதில் விதைக்கப்பட்ட விதையை எடுக்கவேண்டிய அவசியமில்லை, ஆனால், இஸ்லாமுக்கு அவசியமுண்டு, இன்னமும் இருக்கும்.

காரணம் 5. இஸ்லாமிய நாடுகளின் செயல்கள், தண்டனைகள் (ஷரியா சட்டம்):

இஸ்லாமியர்கள் அதிகபடியான கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்துவதற்கான அடுத்த காரணமாக நான் இதை கருதுகிறேன்.

இஸ்லாமிய நாடுகள் இஸ்லாமிய சட்டம் என்றுச் சொல்லி, "ஷரியா சட்டம்" என்பதை தங்கள் நாடுகளில் அமுல் படுத்துவருகின்றனர்.

எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியான "ஷரியா சட்டம்" இல்லை, ஒவ்வொரு நாடுகளுக்கும் வித்தியாசமான சட்டம் உள்ளது. ஷரியா சட்டம் மூலமாக மக்களுக்கு தண்டனை கொடுக்கப்படும் போது, அது ஊடகங்கள் மூலமாக உலகம் முழுவதும் சென்றடைகிறது. சில சட்டங்கள் மிகவும் கொடுமையான தாக இருப்பதால் (கல்லெரிந்து கொல்லுதல், சாட்டை அடி அடித்தல், கைகளை வெட்டுதல்) சாதாரண மாற்று மத மக்களின் மனதில் இது "இஸ்லாம் பற்றிய தவறான பாதிப்பை" ஏற்படுத்துகிறது. மட்டுமல்ல, இஸ்லாமிய தண்டனைகள் ஊர் மக்களுக்கு முன்பாக நிறைவேற்றுகின்றன சில இஸ்லாமிய நாடுகள். குறைந்த பட்சம், தண்டனைகளை சிறைச்சாலைகளிலாவது நிறைவேற்றுவதில்லை. ஜனநாயக நாடுகளில், மத சார்பற்ற நாடுகளில் வாழும் சாதாரண மனிதனுக்கு(முஸ்லீமுக்கு கூட) இது மனதிற்கு மிகவும் சஞ்சலத்தை தருகிறது.

உதாரணத்திற்கு சில தண்டனைகள்:


1) மலேசியா நாட்டில் திருமணமான இருவரை ஷரியா சட்டம் மூலமாக பிரித்துவிட்டார்கள், இருவரும் வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள் என்பதால்..

2) கர்ப்பிணி பெண்ணாக இருந்தாலும், விபச்சாரம் செய்தாள் என்றுச் சொல்லி, சாட்டையால் அடித்து தண்டிக்கவேண்டும் என்று சில நாடுகளின் ஷரியா சட்டம் சொல்கிறது. Human Rights News, BBC News, Religious Tolerance . Org

3) இந்தியாவிலும், விவாகரத்து செய்த கணவனை மறுபடியும் திருமணம் செய்யவேண்டுமென்றால், வேறு ஒரு மனிதனை தற்காலிகமாக திருமணம் செய்யவேண்டும் என்றுச் சொல்லி, ஊர் இஸ்லாமிய பெரியவர்கள் சொன்னதால், அந்த பெண் தற்கொலை செய்துவிட்ட செய்தியை நாம் அறிவோம்.

இப்படி பல ஷரியா சட்டங்கள் வேடிக்கையாகவும், பயங்கரமாகவும் இருப்பதால், மனிதர்களின் மனதில் "இஸ்லாம் பற்றி உள்ள" கருத்தை மாற்றவேண்டும் என்பதற்காக இஸ்லாமிய அறிஞர்கள் பல நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம், ஓரளவிற்கு இஸ்லாமுக்கு நல்ல பெயரை கொடுக்கவேண்டும் என்று விரும்புகின்றனர்.

ஆனால், கிறிஸ்தவத்திற்கு இந்த பிரச்சனையும் இல்லை, அதாவது எந்த நாடும் "பைபிள் சட்டம்" என்றுச் சொல்லி, சட்டத்தை அமுல் படுத்தவில்லை. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டம் மூலமாகத்தான் எல்லா நாடுகளும் ஆளப்படுகின்றன. ஒருவேளை ஏதாவது ஒரு நாட்டில் தண்டனை மிகவும் கடுமையாக இருந்தாலும், அது பைபிளுக்கு கெட்ட பெயரை கொண்டு வராது. ஏனென்றால், இயேசு தன் அரசை மக்களின் மனதில் நிறுவ வந்தாரே ஒழிய பாராளுமன்றத்தில் அல்ல. அரசியலையும், ஆன்மீகத்தையும் பிரித்து இயேசு தன் வழியை மக்களிடம் போதித்த படியால், எந்த கிறிஸ்தவ நாட்டின் செயலுக்கும் இயேசு பொறுப்பு வகிக்கமுடியாது. மக்களின் மனதை மாற்ற பல கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்தவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

(உலகத்தில் எந்த நாடும் கிறிஸ்தவ நாடு கிடையாது, கிறிஸ்தவர்களின் சதவிகிதம் அதிகம் இருக்கலாம், ஆனால், சட்டம் பைபிளின் சட்டம் கிடையாது, "இந்த அரசை அமைக்க இந்த சட்டங்களை அமுல் படுத்துங்கள்" என்று பைபிள் சொல்வதுமில்லை)

இஸ்லாம் ஒரு ஆன்மீக மார்க்கமாக மட்டும் இருந்திருக்குமானால், இந்த பிரச்சனை வந்திருக்காது, அரசியலும் ஆன்மீகமும் ஒன்றாக கலந்துள்ள மார்க்கமாக இஸ்லாம் உள்ளதால், "இஸ்லாமிய அரசியல்" மூலமாக நடக்கும் தவறான செயல்களுக்கு, "இஸ்லாமிய ஆன்மீகம்" பாதிக்கப்படுகிறது. இதை திருத்தவே கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நடக்கிறது என்று நான் கருதுகிறேன்.

காரணம் 4. இஸ்லாமிய அறிஞர்களின், இமாம்களின் "அறிக்கைகள்" சொற்பொழிவுகள்:


ஒரு மார்கத்தின் ஊழியர்களின் பேச்சுக்கள் எப்போதும் பெரும்பான்மையாக அம்மார்க்கத்திற்கு நல்ல பெயரை கொண்டுவரும். இஸ்லாமிய ஊழியர்களின் பேச்சுக்கள் இஸ்லாமியர்களுக்கு வேண்டுமானால் அது "சரி" என்று படலாம், ஆனால், மாற்று மதமக்களுக்கு அது "இஸ்லாம் பற்றி" தவறான கருத்தை கொடுக்கிறது.

சில உதாரணங்கள்:

டாக்டர் ஜாகிர் நாயக்கிடம் "ஒசாமா பின் லாடன் செய்வது சரியா? இல்லையா? உங்கள் கருத்தை சொல்லுங்கள்?" என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் கீழ் கண்ட பதிலை அளிக்கிறார்கள்:


"ஒசாமா பின் லாடன் இஸ்லாமின் எதிரியுடன் போர் புரிந்தால், நான் அவரோடு இருக்கிறேன். எனக்கும் அவருக்கும் தனிப்பட்ட முறையில் நட்பு இல்லை... இருந்தாலும் நான் அவருக்காக இருக்கிறேன். ஒசாமா அமெரிக்கா என்ற மிகப்பெரிய தீவிரவாதியோடு தீவிரவாதம் புரிந்தால், நான் அவரோடு இருக்கிறேன். ஒவ்வொரு முஸ்லீமும் தீவிரவாதியாக இருக்கவேண்டும்....."

If he is on the truth and if he fighting the enimies of the Islam. I am for him. ..... If he is terrorizing (the America) the terrorist, I am with him.... every muslim should be terrorist.....


http://www.youtube.com/watch?v=Bxk5AAA5FbI




இதை படித்தவுடம் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது என்று என்னோடு சண்டைக்கு வராதீர்கள். நான் சொல்வதை கவனியுங்கள்.

இஸ்லாமிய உலகம் தவிர மற்ற உலக நாடுகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையாக "ஒசாமா பின் லாடன்" செய்வது தவறான செயல், என்று நம்புகின்றனர். இஸ்லாமிய அறிஞர்களில் சிலர் (வேண்டா வெறுப்போடு) "அவர் செய்வது தவறு தான்" என்று சொல்லிக்கொண்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில், இஸ்லாமுக்கு நல்லபெயர் கொண்டுவரவேண்டிய ஒரு அறிஞர், "நான் ஒசாமா பின் லாடன் கட்சி தான்" ஏனென்றால், அவர் இஸ்லாமின் எதிரியோடு போராடுகிறார் என்று சொன்னால்.இஸ்லாமியர்கள் அல்லாத மக்கள், அதாவது இந்துக்கள், கிறிஸ்தவர்கள் இன்னுமுள்ளவர்க‌ள் என்ன நினைப்பார்கள், இஸ்லாமையும், பின் லாடனையும் ஒன்று சேர்த்து நினைத்துக்கொள்வார்கள். அதாவது, பின் லாடனின் இந்த தீவிரவாத செயல்களுக்கு இஸ்லாம் தான் காரணம் என்று நினைப்பார்களா இல்லையா?

ஆனால், பல இஸ்லாமிய அறிஞர்கள் கூட்டங்கள் போட்டு, மேடைகளில் "இஸ்லாம் எப்போதும் வன்முறையை, தீவிரவாத செயல்களை ஆதரிப்பதில்லை" என்று சொல்கிறார்கள். இதனால், மக்கள் குழம்பிப்போய், "இஸ்லாமும் தீவிரவாதமும் ஒன்று தான் போல் இருக்கிறது" என்று நினைத்துக்கொண்டு, இப்படி இஸ்லாமியர்கள் நடத்தும் எந்த ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியானாலும் சரி, முக்கியமாக "தீவிரவாதம் பற்றி" ஒரு கேள்வியை கேட்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, இன்னொரு நிகழ்ச்சியை நான் சொல்லவிரும்புகிறேன், எகிப்து பல்கலை கழக பேராசிரியர், ஒரு ஆணும் பெண்ணும் தனியாக அறைகளில் கம்பனிகளில் வேலை செய்யக்கூடாது, இது இஸ்லாமில் அனுமதிக்கப்பட்டது இல்லை, அப்படி வேலை செய்யவேண்டுமானால், அந்தப் பெண், தன்னுடன் வேலை செய்யும் ஆண்களுக்கு தன் பாலை குடிக்க கொடுத்தால் போதும், அந்த ஆண் குடித்தால் போதும் அவர்கள் இனி ஒரு அறையில் தங்கள் அலுவல்கள் வேலையை செய்யலாம் என்றும், இப்படி செய்வதை முகமதுவே அனுமதித்தார் என்று ஹதிஸை காட்டி அறிக்கை வெளியிட்டார். உலகமே இஸ்லாமை கண்டு சிரித்தது, உடனே இஸ்லாமிய அறிஞர்கள் இது தவறு என்று சொன்னார்கள், மறுபடியும் அவர் தனது அறிக்கையை வாபஸ் வாங்கிவிட்டார்.

இப்படி இஸ்லாமை காப்பாற்றுகிறோம், அதற்கு நல்லபெயர் கொண்டு வருகிறோம் என்றுச் சொல்கின்ற இஸ்லாமிய அறிஞர்களே இப்படி அறிக்கை விடுகின்றனர். இதனால், மக்களின் குழப்பத்தை தீர்க்க, இஸ்லாமைப்பற்றி மக்கள் கேள்விப்படுவது தவறு என்றுச் சொல்ல இஸ்லாமிய அறிஞர்கள் படாதபாடு பட்டு, நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.

இப்படிப்பட்ட பிரச்சனை கிறிஸ்தவ ஊழியர்களுக்கு இல்லை. எந்த ஒரு கிறிஸ்தவ போதகரும் இப்படி "பத்வாவை" அறிக்கையிட்டு மாட்டிக்கொள்வதில்லை. இதனால், கிறிஸ்தவ ஊழியர்கள் பெரிய கூட்டங்கள் போட்டு, கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம் என்று சொல்லவேண்டிய அவசியமில்லை. வேண்டுமானால், செய்தித்தாள்களில் சில நேரங்களில் படிப்பது போல, ஒரு சில கிறிஸ்தவ போதகர்கள் இந்த பெண்ணை கற்பழித்துவிட்டார்கள், ஆலயபணத்தை தின்றுவிட்டார்கள், பணவிஷயத்தில் உண்மையாக இல்லை என்று செய்தித்தாள்களில் படிக்க நேரிடும். இப்படிப்பட்ட தவறுகள்(கற்பழித்தல், பணத்தை ஏமாற்றுதல்..) போன்றவை மற்ற மார்க்கங்களிலும் இருப்பதால், சராசரி மக்கள் இதை படித்து மறந்துவிடுவார்கள். இதற்காக, கிறிஸ்தவ கூட்டங்களில் பங்கு பெற்று, இப்படி ஒரு கிறிஸ்தவ போதகர் செய்தாராமே என்று கேள்விகள் கேட்கமாட்டார்கள். பைபிள் இப்படி செய்யும்படி சொல்லவில்லை என்று எல்லாருக்கும் தெரியும். இதே போல இந்துக்களின் வேதங்களிலும் திருடு, கற்பழி என்று சொல்வதில்லை, யாரோ ஒரு சாமியார் செய்தால், மக்கள் செய்திகளில் படித்துவிட்டு, மறந்துவிடுவார்கள், அதற்காக கூட்டம் போட்டு, இவர் செய்தது சரியானது தான் என்று கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்தமாட்டார்கள், இதனை கவனிக்கமாட்டார்கள். இங்கு நான் கிறிஸ்தவ போதகர்கள் செய்யும் இந்த செயல்கள் சரியானது என்றுச் சொல்லவில்லை, ஆனால், இப்படிப்பட்ட செயல்கள் எல்லா மதங்களிலும் உள்ள ஊழியர்கள் ஆங்காங்கே இருப்பதால், மக்கள் இதனை பெரிதாக நினைக்கமாட்டார்கள்.

இங்கு நான் சொல்லவந்த செய்தி, இஸ்லாமிய அறிஞர்கள் போல, கிறிஸ்தவ போதகர்கள் அடிப்படை சட்டங்களில் கைவைத்து மக்களை குழப்ப முயற்சி எடுப்பதில்லை அதனால், கிறிஸ்தவ மக்கள் தங்கள் அடிப்படை சட்டங்களில் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால், இஸ்லாமிய அறிஞர்கள் அடிப்படை சட்டங்களில் கைவைத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பொருள் கூறி தங்கள் மார்க்கத்திற்கே கேடு விளைவிக்கிறார்கள் என்று சொல்லவந்தேன், அதனால், தான் பல கூட்டங்கள் நடத்துகிறார்கள் இஸ்லாமியர்கள்.

உதாரணத்திற்கு நம் தமிழ் நாட்டின் இஸ்லாமிய குழுக்களை எடுத்துக்கொள்ளுங்கள், ஒரு குழுசொல்லும் இப்படித் தான் செய்யவேண்டும், முகமது இப்படித்தான் செய்தார் என்று, மற்ற குழு சொல்லும் இப்படி அல்ல, அவருக்கு மார்க்க அறிவு குறைவு இது வேறுவிதத்தில் செய்யவேண்டும் என்று. இவர்களின் இந்த செயல்களைப் பார்த்து மக்கள் குழம்பிப்போனால், மறுபடியும் அதற்கும் ஒரு கூட்டம் போட்டு, "இஸ்லாமிய கொள்கை" சரியாக நாங்கள் விளக்குகிறோம், எங்களிடம் கேள்வி கேட்டால் பதில் சொல்கிறோம் என்று சொல்கிறீர்கள்.

ஏன், இஸ்லாமிய அறிஞர்கள் "கேள்வி பதில்" நிகழ்ச்சிகளை அதிகமாக நடத்துகிறார்கள் என்று இப்போது எல்லாருக்கும் புரிந்திருக்கும்.

எங்களுக்கு இந்த பிரச்சனை இல்லை, பால் தினகரன் அவர்கள் "இயேசு இப்படித்தான் சாப்பிட்டார், உட்கார்ந்தார், இத்தனை சென்டிமீட்டரில் தாடிவைத்திருந்தார், தனக்கு தும்மல் வரும் போது, இந்த அதிகாரத்தில் இந்த வசனத்தை சொன்னார்" என்று சொல்வதில்லை. அதற்கு மாறாக " இயேசு அழைக்கிறார்" என்று தான் சொல்கிறார். மற்றொரு கிறிஸ்தவ ஊழியர், பால் தினகரன் அவர்கள் சொன்னது தவறு, இயேசு தும்மல் வரும்போது, இந்த வசனத்தைத் தான் சொன்னார் என்று அவருக்கு எதிராக மாற்றிச் சொல்வதில்லை, அதற்கு பதிலாக, "இயேசு உன்னை சுகமாக்குகிறார்" என்று சொல்கிறார். இதனால், கிறிஸ்தவர்கள் குழம்புவதில்லை. ஓஹோ! இயேசு அழைத்து சுகமாக்குகிறாரோ என்று நினைத்து இந்த ஊழியரின் கூட்டத்திலும் பங்கு பெருகின்றனர், அந்த ஊழியரின் கூட்டத்திலும் பங்கு பெருகின்றனர். மற்ற மக்கள் இந்த இரு ஊழியர்களின் செய்திகளில் குழம்பிப்போவதுமில்லை. கிறிஸ்தவர்களாகிய நாங்கள் அடிப்படை கோட்பாடுகளை எங்கள் பைபிளை படித்தே தெரிந்துக்கொள்கிறோம் இவர் இப்படி சொன்னார், அவர் அப்படி சொன்னார் என்று குழம்புவதில்லை. ஒருவேளை யாராவது குழப்பினாலும் எங்கள் மொழியில் பைபிள் எங்கள் கைகளில் இருப்பதால், அதை படித்து எங்கள் சபை போதகரிடம் கேட்டு இன்னும் அதிகமாக தெரிந்துக்கொள்கிறோம்.


காரணம் 3. ஹதீஸ்கள்:

இன்று இஸ்லாமியர்கள் முக்கியமாக நம் தமிழ் நாட்டில் பல பிரிவாக பிரிந்து இருப்பதற்கு காரணம் ஹதீஸ்கள் என்றுச் சொன்னால், அது மிகையாகாது. ஆனால், "ஹதீஸ்கள்" என்பது அல்லாவின் ஏற்பாடு தான் என்பது கவனிக்கத்தக்கது.

இந்த ஹதீஸ்படி இது தான் "அடிப்படை" என்று ஒரு குழு சொல்கிறது. இல்லை இல்லை, குர்‍ஆனோடு மோதும் எந்த ஹதீஸையும் நாம் நம்பவேண்டியதில்லை என்று வேறு ஒரு குழு சொல்கிறது. இதில் இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால், முகமதுவின் உண்மை வாழ்க்கை, அவரது திருமண வாழ்க்கை, அரசியல் ஆன்மீக வாழ்க்கை போன்றவற்றை நாம் அதிகமாக ஹதீஸ்கள், சீராக்கள்(முகமதுவின் வாழ்க்கை சரிதை) மூலமாகத்தான் தெரிந்துக்கொள்கிறோம்.

ஒரு மனிதன் அவன் யாராக இருந்தாலும் சரி, ஹதீஸ்களை படித்தால், அவனுக்கு வரும் சந்தேகத்தை தீர்ப்பதற்கு எத்தனை "கேள்வி பதில்" நிகழ்ச்சிகள் நடத்தினாலும் போதாது. இத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், இது வரை இஸ்லாமிய உலகம் ஒன்றாக இனைந்து, இது தான் சரியான ஹதீஸ்கள் என்று ஒரு முடிவிற்கு வரவில்லை என்பதிலிருந்து பார்த்துக்கோள்ளுங்கள், ஒருவன் இஸ்லாமை முழுவதுமாக அறிந்துக்கொள்வதற்கு முன்பாக அவன் மரித்துவிடுவான் என்று எண்ணுகின்றேன்.

ஒவ்வொரு இஸ்லாமிய நாட்டிற்கும் தனித்தனி இஸ்லாமிய ஷரியா சட்டம். உலக இஸ்லாமிய நாடுகள் ஒன்றாக கூடி இது தான் சரியான "ஷரியா சட்டம்" என்று ஏற்றுக்கொள்வார்களா? அப்படி ஏற்றுக்கொள்ளும் சட்டம் எல்லா நாடுகளுக்கும்(வளர்ச்சி அடைந்த நாடுகள், வளர்ந்துக்கொண்டு இருக்கும் நாடுகள், வளர்ந்த நாடுகள்) பொருந்துமா?

இப்படி இஸ்லாமின் அடிப்படையை பெரும்பான்மையாக ஹதீஸ்களிலிருந்து எடுத்துக்கொள்ள வாய்ப்பு கொடுத்த அல்லாவிற்கு இந்த பிரச்சனை புரியவில்லை, ஆனால், இன்றைய இஸ்லாமிய அறிஞர்கள் "ஹதீஸ்களினால்" வரும் குழப்பங்களை தீர்க்க பல நிகழ்ச்சிகள் நடத்தவேண்டி வருகிறது.

ஆனால், இப்படிப்பட்ட பிரச்சனை கிறிஸ்தவர்களுக்கு இல்லை, எங்கள் அடிப்படை சட்டங்கள் மிகக்குறைவு, "கிறிஸ்து, சிலுவை, உயிர்த்தெழுதல், இரட்சிப்பு,கிறிஸ்துவின் இரண்டாம் வருகை" அவ்வளவு தான். இஸ்லாமைப்போல அல்லாமல், ஜப்பானில் வாழும் ஜப்பான் கிறிஸ்தவன் ஜப்பான் முறையிலான உடை அணிவான், இந்தியாவில் வாழ்பவன் இந்திய முறைப்படி உடை அணிவான், அமெரிக்காவில் வாழ்பவன் அந்நாட்டு உடை அணிவான். ஆனால் என்ன? எந்த நாட்டு உடை அணிந்தாலும் சமுதாயத்திற்கு ஏற்ற நாகரீகமான உடை அணிந்தால் போதும் என்றுச் கற்றுக்கொடுக்கப்படுகிறோம், அவ்வளவு தான்.

இயேசு எப்படி வாழ்ந்தார், எப்படி தாடி வைத்தார், எப்படி சாப்பிட்டார் எப்படி தூங்கினார், போன்றவற்றிற்கு கிறிஸ்தவ(ம்)ர்கள் முக்கியத்தும் கொடுப்பதில்லை, ஆனால், அவர் "நமக்காக என்ன செய்தார்? என்ன சொன்னார்? நாம் எப்படி வாழவேண்டும் என்றுச் சொன்னார்?" போன்றவற்றிற்கு மட்டும் நாங்கள் முக்கியத்துவம் கொடுப்பதால், எங்களுக்கு குழப்பம் இல்லை. கேள்வி பதில் நிகழ்ச்சிகள் எங்களுக்கு அதிகமாக தேவையில்லை.

இன்றும் இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சிகளை கவனித்துப்பாருங்கள், பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்தும் "இந்த ஹதீஸில் இப்படி உள்ளதே, வேறு ஹதீஸ் இப்படி சொல்கிறாரே நாங்கள் எதை பின்பற்றுவது?" போன்ற கேள்விகளாகவே இருக்கும். எனவே, அருமை இஸ்லாமிய அறிஞர்களே, எங்களுக்கு உங்களைப்போல குழப்பங்கள் குறைவு, எனவே எங்களுக்கு அதிக நிகழ்ச்சிகள் கேள்வி பதிலுக்காக தேவையில்லை. பைபிளில் படிக்கும் சத்தியங்களை இன்னும் ஆழமாக தெரிந்துக்கொள்ள அவ்வசனங்களில் நாங்கள் சொற்பொழிவை கேட்கவும், எங்கள் மனதிலே மாறுதல் அடையவும் நாங்கள் கூட்டங்களுக்குச் செல்கிறோம், எங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள அல்ல.(சந்தேகங்கள் இருந்தால் தானே தீர்த்துக்கொள்ளமுயற்சி எடுக்கவேண்டும்)

காரணம் 2. முகமது:


ஹதீஸ்களை விட முகமதுவிற்கு நான் இரண்டாவது இடம் கொடுத்தேன், ஏனென்றால், இவரது வாழ்க்கை தான் ஹதீஸ்களில் இருப்பது. இன்று நாம்(மாற்று மார்க்கத்தவர்கள்) முஸ்லீம்களிடம் பேசும் போது, அவர்கள் "எங்கள் குர்‍ஆன் இப்படி, அப்படி, அற்புதம், அறிவியல், சரித்திரம் என்று அடிக்கிக்கொண்டே போவார்கள், பெருமைப்படுவார்கள்". திடீரென்று, முகமதுவின் வாழ்க்கையைப் பற்றி சில கேள்விகள் கேட்டால், போதும் உடனே அவர்களின் முகநாடி மாறும் ஏன்?

இஸ்லாமியர் அல்லாதவர்கள் பெரும்பான்மையாக கேட்கும் கேள்விகள்:

a) ஏன் முகமது வன்முறை மூலமாக தன் ஆட்சியை அமைத்தார்?

b) அவர் ஏன் 10க்கும் அதிகமான திருமணங்களை செய்துக்கொண்டார்?

c) முகமதுவிற்கு 50க்கும் அதிகமான வயது இருக்கும் போது, 6 வயது சிறுமியை(தன் பேத்தி வயதில் இருக்கும்) திருமணம் செய்துக்கொண்டார்?
d) அப்பெண்ணுக்கு 9 வயதாகும் போது ஏன் தன்னுடன் தாம்பத்திய வாழ்க்கையில் சேர்த்துக்கொண்டார்? இன்று இது போல யாராவது செய்தால், அது சமுதாயத்திற்கு ஏற்றதாக இருக்குமா?

e) தன் மருமகளை(வளர்ப்பு மகனின் மனைவியை) ஏன் திருமணம் செய்துக்கொண்டார்?

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த கேள்விகளைப் பற்றி நான் இப்போது விளக்கப்போவதில்லை. இப்படிப்பட்ட கேள்விகளை மக்கள் கேட்டால், அதனை விளக்க இஸ்லாமியர்கள் பல இலட்சங்கள் செலவு செய்து, இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், ஏன் இஸ்லாமியர்களுக்கும் கூட‌ பதில் கொடுக்க நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.

ஆனால், இந்த பிரச்சனை கிறிஸ்தவர்களுக்கு இல்லை. எங்கள் இயேசு ஒரு பரிசுத்தமான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுச் சென்றார், மற்றவர்கள் விரல் நீட்டும் அளவிற்கு ஒரு கீழ் தரமான வாழ்க்கையை அவர் வாழவில்லை. எனவே, இப்படிப்பட்ட கேள்விகள் கிறிஸ்தவத்தை நோக்கி கேட்கப்படுவதில்லை. அதனால், இஸ்லாமைப் போல பல கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

(இந்த இடத்தில், நாத்தீகர்களும், மற்ற மத அன்பர்களும் "பைபிளில் இயேசு பற்றி நல்லவிதமாக எழுதிவிட்டு சென்று விட்டார்கள் அவரது சீடர்கள், இயேசு எப்படி வாழ்ந்தாரோ நமக்கு எப்படி தெரியும்" என்று கேட்கலாம். எங்கள் வேதத்தில் சொல்லப்பட்டதை நாங்கள் நம்புகிறோம், இதனால், மற்றவர்களுக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் எங்களுக்கு இருப்பதில்லை. ஆனால், இஸ்லாமியர்களின் வேதத்தில், ஹதீஸ்களில் முகமதுவின் (நல்ல) வாழ்க்கையைப் பற்றி மிகவும் தெள்ளத்தெளிவாக புட்டு புட்டு சொல்லிவிட்டதால், அவர்களுக்கு இப்பொது தங்கள் முகமதுவின் வாழ்க்கையை நமக்கு விளக்கவேண்டிய கடமை அவர்களுக்கு அதிகம் என்றுச் சொல்கிறேன்.)

"சரி முகமது அந்த காலத்து மனிதர், அந்த காலத்து பழக்கங்கள் படி தான் வாழ்ந்தார் இதில் ஒன்றும் தவறு இல்லை. ஆனால், இன்று நாம் வாழவேண்டிய முறை, பின்பற்றவேண்டிய முறை அது அல்ல, எனவே, முகமதுவின் வாழ்க்கையை நாம் பின்பற்ற வேண்டியதில்லை என்று" இன்று இஸ்லாமியர்கள் சொல்வார்களானால், யாரும் கேள்விகள் கேட்கப்போவதில்லை, ஆனால், இஸ்லாமியர்கள் என்ன செய்கிறார்கள், அவரது வாழ்க்கை இன்று கூட வாழ, பின்பற்றத்தகுந்தது என்றுச் சொல்லும் போது, மற்றவர்களுக்கு மனதிலே எங்கோ அறிக்கும். என்வே, அதனை அடக்கமுடியாமல், கேள்வியாக கேட்டுவிடுகின்றனர்.

எனவே, இஸ்லாமை நோக்கி விரல் நீட்டுவதற்கு முகமதுவின் வாழ்க்கையும் ஒரு காரணமாகிவிட்டதால், அவரது வாழ்க்கையை இன்றும் நாம் பின்பற்றலாம் என்று இஸ்லாமியர்கள் சொல்வதால், பலருக்கு( இஸ்லாமியர்களுக்கும் சேர்த்துதான்) பல கேள்விகள் எழுகின்றன. இதனை சரிசெய்ய பதில் கொடுக்க இஸ்லாமிய அறிஞர்கள் படுகின்ற பாடு, அடேங்கப்பா? வார்த்தைகளில் சொல்லமுடியாது.

கிறிஸ்தவர்களுக்கு இந்த பிரச்சனை இல்லை. அதே போல, பைபிளில் இயேசுவிற்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி மற்றவர்கள் கேள்விகள் எழுப்பினால், விரலை நீட்டினால், அவர்கள் தங்கள் விரல்களை நீட்டுவதற்கு முன்பே, அவர்களின்(பழைய ஏற்பாட்டு காலத்தில் வாழ்ந்தவர்களின்) நேர்மையற்ற வாழ்க்கையை பைபிள் படம் பிடித்து காட்டிவிடுகின்றது. கிறிஸ்தவர்களும் ஆமாம், இந்த மனிதர் இந்த தவறு செய்தார், ஆபிரகாம் பொய் சொன்னார்? தன் மனைவியை தன் உயிருக்கு பயந்து சகோதரி என்று ஒரு இராஜாவிடம் பொய் சொன்னார், என்று நாங்களே சொல்லிவிடுகின்றோம். எனவே, யாரும் கேள்விகள் கேட்பதில்லை.

எனவே, எனதருமை இஸ்லாமிய அறிஞர்களே, மேதாவிகளே, எங்களுக்கு உங்களைவிட இயேசுவின் வாழ்க்கையை மக்களுக்கு விளக்கவேண்டிய அவசியம் மிக மிக குறைவு. அதனால், கேள்வி பதில் நிகழ்ச்சிகளும் குறைவு. உங்களுக்குத்தான் அதிக தேவை இருக்கிறது.


காரணம் 1. குர் ஆன்:

இஸ்லாமியர்கள் அதிக அளவில் "இஸ்லாம் கேள்வி பதில்கள்" நடத்துவதற்கு முக்கிய காரணமாக, முதல் காரணமாக இருப்பது குர்‍ஆன் என்று நான் சொல்வேன். ஏனென்றால், இன்று இஸ்லாமிய நாடுகளில் உள்ள ஷரியா சட்டம், முஸ்லீம்களின் செயல்பாடுகள் அனைத்தும் குர்‍ஆன் மீதே ஆதாரப்பட்டுள்ளது. சில இஸ்லாமிய அறிஞர்கள், குர்‍ஆனோடு மோதும் ஹதீஸ்கள் தவறானது என்று சொல்கிறார்கள், சிலர் இதை மறுக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணமாக நாம் குர்‍ஆனைத் தான் சொல்லமுடியும்.

குர்‍ஆன் ஒரு ஒழுங்காக அமைக்கப்படவில்லை, அதாவது குர்‍ஆனில் சொல்லப்படும் விவரங்கள் அனைத்தும் ஒரு வரிசையாக சொல்லப்படவில்லை. எந்த சூழ்நிலையில் என்ன வசனம் இறங்கியது என்று ஹதீஸ்களின் உதவியின்று கண்டுபிடிப்பது மிகவும் கடினம். அதிலும், இஸ்லாமியர் அல்லாதவர் குர்‍ஆனை படித்தால் அவருக்கு பெரும்பான்மையான வசனங்கள் புரியாது. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், குர்‍ஆனை அரபியில் படிக்கத்தான் இஸ்லாமிய அறிஞர்கள் ஊக்கப்படுத்துகிறார்கள். இதனால், பல சந்தேகங்கள் இஸ்லாமியர்களுக்கும் உண்டு, இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கும் உண்டு.

கேள்வி பதில் நிகழ்ச்சிகளில் இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகளை கவனித்தீர்களானால், அவைகள் பெரும்பான்மையாக "இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகளைப் பற்றியதாகவே" இருக்கும். நமாஜ் பற்றி, உடல் சுத்தம் பற்றி, எத்தனை முறை குளிக்கவேண்டும், எப்போது குளிக்கவேண்டும், குறிப்பிட்ட சூழ்நிலையை சொல்லி இதன் பிறகு குளித்தபிறகு தான் நமாஜ் செய்யவேண்டுமா? போன்ற கேள்விகளாகவே இருக்கும். இதை எல்லாம் குர்‍ஆனில் காணமுடியாது, இவைகளைப் பற்றி ஹதீஸ்களில் பெரும்பான்மையாக காணமுடியும்.

எனவே, ஒரு முஸ்லீமுக்கு தேவையான அடிப்படை கோட்பாடுகள் அனைத்தும் குர்‍ஆனிலிருந்து கிடைப்பதில்லை. சரி, ஹதீஸ்கள் படித்து முஸ்லீம்கள் தெரிந்துக்கொள்ளலாம் என்று நினைத்தால், ஒவ்வொரு இஸ்லாமிய ஊழியரும் வித்தியாசமாக பதில்களை சொல்வார்கள், எனவே, முக்கியமாக இஸ்லாமியர்களுக்கே பல சந்தேகங்கள் குர்‍ஆனில் உண்டு, அதற்காகத்தான் அதிகமான கேள்வி பதில் நிகழ்ச்சிகள் இஸ்லாமுக்கு தேவைப்படுகிறது.துருக்கி நாட்டின் அரசாங்கம் குர்‍ஆன், மற்றும் ஹதீஸ்களுக்கு 21ம் நுற்றாண்டிற்கு ஏற்ற பொருள் கூற பல பேராசிரியர்களையும், இஸ்லாமிய மேதாவிகளையும் அழைத்து கு‍ர்‍ஆனுக்கு சரியான பொருள் கூறும்படி கேட்டுக்கொண்டுள்ளதாம். அதாவது, 7ம் நுற்றாண்டு முதல் உள்ள குர்‍ஆன் மொழிபெயர்ப்புகள், உரைகளை நம்பாமல், அதாவது அவைகள் சரியானவை அல்ல என்று முடிவு கட்டிவிட்டு, குர்‍ஆனுக்கு புதிய உரையை எழுத முயற்சி எடுத்துள்ளது. அதாவது, உலகமெங்கும் அல்லாவின் வார்த்தையாகிய குர்‍ஆனை பரப்ப மதினாவில் அச்சடிக்கப்படும் குர்‍ஆனின் மொழியாக்கத்தையும் துருக்கி நாடு "சரியான மொழியாக்கம்" என்று அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம்.(இதைப்பற்றி இங்கு படிக்கவும்:துருக்கி ஷரியா சட்டம் திருத்த முயற்சி (English : http://www.guardian.co.uk/world/2008/feb/27/turkey.islam)

ஆனால், கிறிஸ்தவர்களுக்கு அப்படியில்லை, எங்களுக்கு தேவையான எல்லா கோட்பாடுகளையும், சத்தியங்களையும் நாங்கள் பைபிளை தமிழில் படிப்பதினால் தெரிந்துக்கொள்கிறோம். மட்டுமல்ல, எங்களுக்கு இஸ்லாம் பழக்கவழக்கங்கள் போல, இத்தனை முறை கைகளை இந்த சூராக்களை சொல்லி கழுவவேண்டும், நகாஜ் படிக்கும் போது இத்தனை முறை எழுந்திருக்கவேண்டும், உட்காரவேண்டும், விரல்களை ஆட்டவேண்டும் போன்ற விதிமுறைகள் இல்லை. ஒரு பயனுமில்லாத பழக்கவழங்கள் மூலமாக பைபிள் மக்களை குழப்புவதில்லை, அதனால் அவைகளை விளக்கவேண்டிய அவசியமும் கிறிஸ்தவ ஊழியர்களுக்கு இல்லை. கிறிஸ்தவம் உள்ளத்தின் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க எங்களுக்கு கற்றுக்கொடுக்கிறது. உடல் தூய்மை, ஆரோக்கியம் போன்றவைகளை எந்த நாட்டில் நாங்கள் வாழுகின்றோமோ அந்த நாட்டின் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி நாங்கள் உடல் தூய்மையை, ஆரோக்கியத்தை அடைந்து வாழ்ந்துவிடுகிறோம்.

குர்‍ஆன் பைபிளோடு ஒப்பிடும் அளவிற்கு அதற்கு தகுதியில்லை என்று கீழ்கண்ட‌ கட்டுரை சுட்டிக்காட்டுகிறது, இது உண்மையா இல்லையா என்பதை இந்த கட்டுரையை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி? ஆசிரியர்: சாமுவேல் கிரீன்


COMPARING THE BIBLE AND THE QUR'AN (How to do it Accurately) By Samuel Green

ஆக, குர்‍ஆன் மூலமாக வரும் குழப்பங்களை தீர்க்க உங்களுக்கு அதிகமான நிகழ்ச்சிகள் தேவைப்படுகிறது. எங்களுக்கு அப்படி இல்லை, எனவே கிறிஸ்தவ ஊழியர்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்த விவரங்கள் குறித்து தங்கள் பிரசங்க பீடங்களில் நின்று மக்களுக்கு சொற்பொழிவு ஆற்றினாலே போதும்.



2. கிறிஸ்தவத்தில் கேள்வி கேட்காமல் சொல்வதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கட்டாயமுண்டா? கிறிஸ்தவ கேள்வி பதில் தளங்கள் உள்ளனவா? கிறிஸ்தவர்கள் பதில் சொல்லாமல் ஒளிந்துக்கொள்கிறார்களா?

கிறிஸ்தவத்தில் கேள்வி கேட்க வாய்ப்பு இல்லை என்று இஸ்லாமியர்கள் சொல்லும் செய்தி மிகவும் தவறானது. உண்மையைச் சொன்னால், இஸ்லாம் மட்டுமே கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற நிர்பந்தத்தில் மக்களை அடிமையாக்கிக்கொண்டு இருக்கிறது என்று அனுதினமும் நாம் இஸ்லாமிய நாட்டு செய்திகளில் காணமுடியும்.

பல இஸ்லாமிய நாடுகளில் ஒரு முஸ்லீம் இஸ்லாமை விட்டு வெளியேறினால் பொதும், இனி அந்த நாட்டில் அவன் வாழ்வதற்கே வழியில்லமல் போய் விடும், எகிப்தில் சிறைச்சாலையில் பல பேர் இப்படி கொடுமை படுத்தப்படுகிறார்கள். ஆப்கனிஸ்தானில் ஒரு முஸ்லீம் கிறிஸ்தவத்தை தழுவினார் என்பதற்காக அவன் கொல்லப்படவேண்டும் என்று சொல்லி, கொடுமைப்படுத்திய செய்தியை நாம் கேட்டு இருக்கிறோம். மலேசியாவில் பல ஆண்டுகளாக தம்பதிகளாக வாழ்ந்த நல்ல குடும்பத்தை, ஒருவர் இந்து என்பதால், கணவனையும் மனைவியையும் பிரித்த பெருமை இஸ்லாமிய ஷரியா சட்டத்திற்கு அல்லாமல் வேறு எந்த சட்டத்திற்கு வரும் சொல்லுங்கள். இப்படி சொல்லிக்கொண்டு போகலாம், இதற்கு எதிராக இஸ்லாமிய நாட்டில் யாராவது கேள்வி கேட்கமுடியுமா?

ஆனால், இந்தியா ஒரு இஸ்லாமிய நாடாக இல்லாததால், இங்கு இருக்கும் இஸ்லாமிய அறிஞர்கள் இஸ்லாமைப்பற்றி பெருமையாக சொல்லிக்கொள்கிறார்கள்.

ஒரு பத்திரிக்கை நிறுபர் இணையத்திலிருந்து "இஸ்லாமிய நாடுகளில் பெண்களின் உரிமைகள்" என்ற தலைப்புப் பற்றி கட்டுரையை படித்ததற்காக, அவருக்கு மரண தண்டனை விதித்தார்களாம், ஆப்கனிஸ்தானில். இது தான் கேள்வி கேட்டால் பதில் தர நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று சொல்பவர்களுக்கு அழகா? இவர் பரிதாபத்திற்கு உரியவர், அதாவது கேள்வியும் கேட்கவில்லை, படித்தார் அவ்வளவு தான், அதற்கே இந்த தண்டனை, ஒரு வேளை இவர் படித்து கேள்வி கேட்டு இருந்தால்? கேள்வி கேட்ட அந்த அரங்கத்திலேயே மரித்து இருப்பார் என்று எண்ணுகின்றேன்.

Young journalist sentenced to death in Afghanistan for reading about women's rights on the internet

A 23-year old has been sentenced to death for downloading information about women's rights in Afghanistan.

Journalist Pervez Kambaksh was reading about the role of women in Islamic socieites.
Source: http://www.dailymail.co.uk/pages/live/articles/news/news.html?in_article_id=511423&in_page_id=1770


அருமையான சுதந்திர நாடுகளில் சுகமாக வாழும் இஸ்லாமிய அறிஞர்களே, தமிழ் இஸ்லாமிய அறிஞர்களே, இஸ்லாம் பற்றி எங்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கு பதிலாக, உங்கள் இஸ்லாமிய சகோதரர்கள், சகோதரிகள் இஸ்லாமிய நாடுகளில் ஆயிரக்கணக்கானவர்கள் இஸ்லாமைப்பற்றி அதிகமாக அறிந்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக படித்ததற்கும், கேள்வி கேட்டதற்கும் அழிந்துக்கொண்டு இருக்கிறார்கள், அவர்களுக்கு உங்கள் இஸ்லாமைப்பற்றி போதியுங்கள். பிறகு வந்து எங்களுக்கு விளக்குங்கள்.

நாளைக்கு இந்தியாவும் ஒரு இஸ்லாமிய நாடாக மாறினால், கேள்விகள் கேட்கும் எங்கள் மேல் முதல் கல் எறிபவர்கள் கூட நீங்களாகத்தான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இப்போது இந்நாடு ஒரு ஜனநாயக நாடு எனவே, "நீங்கள் கேள்விகள் கேட்டால் நிதானமாக பதில் தருவோம், உங்களுக்கு உங்கள் மதம், எங்களுக்கு எங்கள் மதம்" என்று வேதாந்தம் பேசுவீர்கள். உண்மை இஸ்லாமை இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் பார்க்கமுடியாது, இஸ்லாமிய நாடுகளில் மட்டும் தான் பார்க்கமுடியும்.

ஆனால், கிறிஸ்தவமார்க்கத்தில் இஸ்லாம் போல‌ கேள்விகள் கேட்பவர்களை கொலை செய்வதில்லை. அப்படி செய்யும்படி பைபிள் சொல்வதும் இல்லை. கேள்விகள் கேட்கும் நபர்களுக்கு சரித்திர விவரங்களோடு, ஆதாரங்களோடு பதில் தருகிறோம். வேண்டுமானால், தமிழில் இப்படிப்பட்ட தளங்கள் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளமுடியுமே தவிர, ஆங்கிலத்தில் நூற்றுக்கணக்கான தளங்கள், புத்தகங்கள் உள்ளன.

கிறிஸ்தவ கேள்வி பதில் ஆங்கில தளங்களில் சில:


1. Answering-Islam.org: உலகத்திலேயே முஸ்லீம்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தரும் முதல் தரமான தளம்.உலகத்தில் எந்த ஆங்கில இஸ்லாமிய தளம் எந்த கேள்வியை முன்வைத்தாலும், அதற்கு பதில் இந்த தளத்தில் காணலாம்.

http://www.answering-islam.org/

இத்தளத்தை இஸ்லாமிய உலகத்திற்கு சிம்ம சொப்பனம் என்று கூறுவேன். இத்தளத்தில் பல நூறு புத்தகங்கள், ஆயிரகணக்கான கட்டுரைகள், கேள்விகளுக்கு பதில்கள், இஸ்லாமியர்களுக்கு மறுப்புக்கள் என்று பல கட்டுரைகள் காணக்கிடக்கின்றன.பல மொழிகளிலும் இத்தளம் உள்ளது. கூடிய சீக்கிரத்தில் இத்தளத்தின் ஆங்கில கட்டுரைகள் தமிழிலும் வரப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தளத்தில் நம் இந்திய நாட்டில் திருமகன் திரு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் குற்றச்சாட்டிற்கு மறுப்பு அளிக்கப்பட்டுள்ளது, ஆனால், இதுவரை ஜாகிர் நாயக் அவர்கள் இவர்கள் சொல்வது தவறு என்றுச் சொல்லி, தன் தளத்தில் ஆதாரபூர்வமான கட்டுரைகள், மறுப்புக்கள் எழுதமாட்டார்.

இந்த தளத்தின் தலைப்புகளில் சில:

Introductory Articles | The Bible | Basic Christianity | Whey they Converted | Index to Islam | The Quran | Muhammad | Polemics Rebuttals | Women in Islam | Under Islamic Rule | Islam and Terrorism | Email Dialogs | Question and Answers | Other Topics | New Artilces | Other Languages | Individual Authors |

இத்தளத்தின் கட்டுரைகள் சிலவற்றை நான் இவர்களின் அனுமதி பெற்று மொழிபெயர்த்துள்ளேன், அவைகளைப் பற்றி நம் தமிழ் நாட்டு இஸ்லாமிய அறிஞர்கள் முச்சு விடுவதில்லை.

கீழ்கண்ட கட்டுரைகள் ஆன்சரிங் இஸ்லாம் தளத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் ஆகும்.

1. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

2. ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸீஹா (Allah Starts Christianity...by Accident)

3. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?

4. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும

5. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் (திய வான் கோவின் கொலை)

2. Bible Query . com : ஆயிரக்கணக்கான பைபிள் கேள்விகளுக்கு பல தலைப்புகளில் பதில்கள்:(7300 க்கும் அதிகமான கேள்விகளுக்கு பதில்கள்)

http://www.biblequery.com/ and http://www.muslimhope.com/

இந்த தளத்தில் கீழ்கண்ட தலைப்புகளில், கீழ்கண்ட எண்ணிக்கையில் பதில்கள் சொல்லப்பட்டுள்ளது:

| Archaeology / history 582 | Original language 380 | Practice 717 | Doctrine 875 | Logic 588 | Unclassified 1125 | Manuscripts 364 | Translations today 696 | Experience 1119 | Prophecy 284 | Science 80 | False religions 510 |

3. Answer-Islam.Org ஆன்சரிங் இஸ்லாம் போல இஸ்லாமிய அறிஞர்களுக்கு மறுப்பு கட்டுரைகளை எழுதும் தள‌ம்

http://www.answer-islam.org/

4. Stand To Reason தளம்: நவீன காலத்தில் சமுதாயத்தில் மனிதன் சந்திக்கும் பல பிரச்சனைகள் மூலமாக எழும் கேள்விகளுக்கு, பைபிள் முலமாக பதில்கள், ரேடியோ கேள்வி பதில் நிகழ்ச்சிகள்

http://www.str.org/site/PageServer?pagename=homepage

இந்த தளத்தின் கேள்வி பதில்களின் தலைப்புகள்: | Apologetics | Bio-Ethics | Christianity And Culture | Ethics | Miscellaneous | Philosophy | Science | Theology |

5. Let us Reason தளம்:

http://www.letusreason.org/

இந்த தளத்தின் கேள்வி பதில்களின் தலைப்புகள்:

|Response to all the Religions| Historic true Christianity | Cults | Escaping the Cults | Apologetics | Current Trends | Bible Doctrines | Bible explanations | Trinity / Deity | World Religions |

6. Christian Think Tank தளம்:

http://www.christian-thinktank.com/

இந்த தளத்தின் கேள்வி பதில்களின் தலைப்புகள்:

Thinking of approaching God? | Series, Syllabi, and Larger Studies | Of Interest to Followers of Other Religions | Philosophical/Theological Topics | The Christian Experience |

7. Chrsitian Answers.Net தளம்: 42 மொழிகளில் கேள்வி பதில்களை இத்தளத்தில் நாம் காணலாம்.

http://www.christiananswers.net/

8. History Cart. Com தளம்: சரித்திர ஆதாரங்களோடு கூடிய பதில்கள், பைபிளில் பழைய, புதிய ஏற்பாட்டின் எபிரேய கிரேக்க பிரதிகளின் புகைப்படங்கள், பழைய ஏற்பாட்டு சரித்திர கண்டுபிடிப்புகளின் விவரங்கள் என்று பல விவரங்களை இந்த தளத்தில் காணலாம்.

http://historycart.com/

9. Answers in Genesis தளம்: இந்த தளத்தின் முக்கிய நோக்கம், பைபிளின் முதல் புத்தகமாகிய ஆதியாகமம் பற்றிய கேள்விகளுக்கு பதில்கள் அளிப்பது.

http://www.answersingenesis.org/

10. Got Questions.org தளம்: இந்த தளத்தில் 141,555 கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. தமிழிலும் கேள்வி பதில்கள் உள்ளன. மட்டுமல்ல, 72 மொழிகளில் கேள்விகள் மொழிபெயர்க்கப்பட்டு பதியப்பட்டுள்ளது.

http://www.gotquestions.org/ - 141,555 Bible Questions Answered!

அருமையான இஸ்லாமிய அறிஞர்களே, இப்படி அனேக தளங்கள் கிறிஸ்தவ கேள்வி பதில்களுக்காக உள்ளன. எடுத்துக்காட்டுக்காக சில தளங்களை மட்டுமே நான் கொடுத்தேன். இவைகள் அனைத்தும் பைபிள் பற்றி நாத்தீகர்களால் கேட்கப்படும் சரித்திர, விஞ்ஞான மற்றும் அகழ்வாராய்ச்சி கேள்விகளுக்கும், இஸ்லாமியர்களின் கேள்விகளுக்கும் பதில் தரும் தளங்கள்.

எனவே, கேள்விகள் கேட்க கிறிஸ்தவத்தில் வாய்ப்பு இல்லை என்றுச் சொல்லாதீர்கள், கிறிஸ்தவம் ஒரு அரசியல் மார்க்கமல்ல, இது ஒரு ஆன்மீக மார்க்கம். கட்டாயப்படுத்தி அதிக நாட்கள் எந்த மார்க்கத்திலும் யாரையும் நீடித்து நிலைத்துவைக்க முடியாது, வேண்டுமானால், இஸ்லாமிய நாடுகளில் "உயிருக்கு பயந்து" இஸ்லாமியர்கள் போல நடிப்பவர்கள் இலட்சக்கணக்கில் இருக்கிறார்கள். இஸ்லாமிய நாடுகளில் "நீங்கள் உங்கள் மனதின் விருப்பத்தின்படி எந்த மதத்திற்கும் மாறலாம், கட்டாயமில்லை, கொல்லப்படமாட்டீர்கள் என்று சட்டம் கொண்டுவந்து, அதை சரியான முறையில் நடைமுறைப்படுத்திப் பாருங்கள், சில ஆண்டுகளில் எத்தனை மசூதிகள் காலியாக கிடக்கும் என்று. எனவே, இந்தியாவில் இஸ்லாமை வெளிப்படுத்தும் விதம் வேறு, இஸ்லாமிய நாடுகளில் வெளிப்படுத்தும் விதம் வேறு. உங்கள் "இந்திய இஸ்லாமை" பார்த்து யாரும் மயங்கிவிட தயாராக இல்லை, எல்லாரும் உலக செய்திகளை படிக்கிறார்கள்.

எனவே, குர்‍ஆன் இஸ்லாமின் அடிப்படையாக இருக்கும் வரை, முகமது உங்கள் வழிகாட்டியாக இருக்கும்வரை, தீவிரவாதிகள் தங்கள் கைகளில் குர்‍ஆனை தூக்கி காட்டிக்கொண்டு இருக்கும் வரை உங்கள் இந்த கேள்வி பதில் நிகழ்ச்சிகள் குறையாது.

அறிவுப்பூர்வமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்ல எங்களுக்கு தளங்கள் உண்டு, புத்தகங்கள் உண்டு, ஊழியர்கள் உண்டு. தமிழில் தான் இன்னும் இப்படிப்பட்ட தளங்கள் இல்லை என்பது வருத்தப்படவேண்டிய விஷயம். ஏற்கனவே, தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளமும்(www.tamilchristians.com), ஈஸா குர்‍ஆன் தளமும்(www.geocities.com/isa_koran) மிக மிக சிறிய அளவில் இந்த வேலையை ஆரம்பித்துள்ளது. அதே போல சில கிறிஸ்தவ சகோதரர்களும் தங்கள் கேள்விகளை கேட்டு பதில்களை பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். இப்போது தான் தமிழ் கிறிஸ்தவர்கள் பதில் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். இன்னும் சிலபேர் உலக இஸ்லாமிய செய்தியை தங்கள் தளங்களில் பதித்துக்கொண்டு, சில நேரங்களில் இஸ்லாமியர்களுக்கு மறுப்பு எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ் கிறிஸ்தவர்களிடையே இஸ்லாம் பற்றிய விழுப்புணர்வு இப்போது தான் சிறிது சிறிதாக வளர்ந்துக்கொண்டு இருக்கிறது. இன்னும் சில‌ ஆண்டுகளில் நீங்கள் எதிர்பார்ப்பது போல, தமிழிலும் கிறிஸ்தவ கேள்வி பதில் தளங்கள் வரும் என்று நான் நிச்சயமாக கூறமுடியும். காதுள்ளவன் கேட்கக்கடவன், கண்ணுள்ளவன் பார்க்கக்கடவன்.

ஆக, நீங்கள் அதிகமாக இஸ்லாம் கொள்கை விளக்க கூட்டங்கள், கேள்வி பதில் கூட்டங்கள் நடத்துவதற்கு காரணங்கள், குர்‍ஆனும், முகமதுவின் வாழ்க்கையும், ஹதீஸ்களும், இஸ்லாமிய அறிஞர்களும், ஷரியா சட்டமும், தங்களை இஸ்லாமியர்களாக அடையாளம் காட்டும் தீவிரவாதிகளும் தான் காரணம் என்று நான் கருதுகிறேன்.கிறிஸ்தவத்திற்கு இந்த பிரச்சனை இல்லை என்பதால், கேள்வி பதில் நிகழ்ச்சிகள் கிறிஸ்தவர்களுக்கு அதிகமாக தேவையில்லை.


Source: www.geocities.com/isa_koran