ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

பதிலும் நானே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிலும் நானே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 ஏப்ரல், 2008

ஏகத்துவத்திற்கு பதில்: குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்

ஏகத்துவத்திற்கு பதில்: குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்

முன்னுரை: ஏகத்துவ இப்ராஹிம் அவர்கள் நான் "சொல்லாத விவரத்தை" சொன்னதாக கற்பனை செய்துக்கொண்டு என் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் என் மீது சாற்றும் குற்றம்:

கட்டுரை: 'கிறிஸ்தவர்கள் ஏன் இஸ்லாமியர்கள் போல் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்துவதில்லை'

குற்றச்சாட்டு: இக்கட்டுரையில் "இஸ்லாமியர்கள் நடத்தும் கேள்வி பதில் நிகழ்ச்சிகளில் வெறும் தீவிரவாதத்தைப் பற்றி மட்டும் தான் கேள்விகள் கேட்கப்படுகின்றது என்ற தோரணையில் " நான் எழுதியதாக அவர் குற்றம் சாட்டுகிறார்.

இப்படி நான் எழுதினேனா? அல்லது இவர் வேண்டுமென்றே மாற்றிச் சொல்கிறாரா? என்பதை அறிவதற்கு முன்பாக, அவர் எழுதியதை படிக்கவும்:

ஏகத்துவ இப்ராஹிம் அவர்கள் எழுதியது:

அது போக இதற்கு முன் நீங்கள் எழுதின வேறு சில மறுப்பக்கட்டுரைகளின் லட்சனம் என்ன?

சமீபத்தில் நீங்கள் எழுதின 'கிறிஸ்தவர்கள் ஏன் இஸ்லாமியர்கள் போல் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்துவதில்லை' என்ற கட்டுரையில் நீங்கள் எழுதியதைப் பார்த்தால் பரிதாபப்படுவதைத் தவிர வேறொன்றும் கிடையாது.

உலகம் முழுவதும் பலமொழகளிலும் இஸ்லாமியர்கள் நடத்தும் மாற்றுமதத்தவர்களின் கேள்விபதில் நிகழ்ச்சிகள் பிரசித்திப்பெற்றவை. அந்நிகழ்ச்சிகளில் இஸ்லாமியர்களைப் பற்றிய சந்தேகங்களை மட்டுமே நாங்கள் கலைவது போலவும் - மற்ற கேள்விகளான குர்ஆன், ஹதீஸ்கள் பற்றிய சந்தேகங்களோ அல்லது எங்களின் நம்பிக்கைகள், வணக்கவழிபாடுகள், கொள்கைகள் பற்றிய சந்தேகங்களோ கேட்கப்படுவதில்லை என்பது போல் நீங்கள் எழுதி இருப்பது உங்களின் அறியாமையின் உச்சக்கட்டம்.

'மாற்றுமத்தவர்களின் நேரடி கேள்வி பதில் நிகழ்சிகளில்' குர்ஆன் பற்றி கேட்கப்படுகின்றது. இஸ்லாத்தின் நம்பிக்கைகள் பற்றி கேட்கப்படுகின்றது. குர்ஆனில் முரண்பாடு இருக்கின்றதா? என்று கேட்கப்படுகின்றது. குர்ஆன் அறிவியலுக்கு ஒத்துபோவில்லையே? என்று கேட்கப்படுகின்றது. ஏன் உங்களைப்போண்றோர் பரப்பும் அவதூறுப் பிரச்சராங்களுக்கான விளக்கங்கள் கேட்கப்படுகின்றது. இப்படி எல்லாவிதமான கேள்விளும்; கேட்கப்படுகின்றன. ஆனால் இந்த உண்மைகளை மறைக்க வேண்டும் என்பதற்காக, வேண்டும் என்றே நீங்கள் 'வெறும் தீவிரவாதத்தைப் பற்றி மட்டும்தான் கேட்கப்படடுகின்றது என்பது போல் எழுதி இருக்கின்றீர்கள். காரணம் அப்பொழுது தான் கிறிஸ்தவத்தில் தீவிரவாதம் பற்றிய பிரச்சனையோ அல்லது மற்றபிரச்சனையோ இல்லை என்று எழுதி, எங்களுக்கு அது போண்ற நிகழ்ச்சிகள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று மறுக்கலாம் என்பதற்காக.


Source: http://egathuvam.blogspot.com/2008/03/blog-post_19.html
( formats are mine)

1. வெறும் தீவிரவாதம் பற்றிய கேள்விகள் மட்டும் தான் கேட்கப்படுகின்றது என்று நான் எழுதினேனா?

கிறிஸ்தவர்கள் ஏன் இஸ்லாமியர்கள் போல கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை என்ற கட்டுரையில் நான் ஆறு தலைப்புக்களில் என் கருத்தை சொல்லியுள்ளேன்.

காரணம் 6: தீவிரவாதிகள் தங்கள் செயலுக்கு இஸ்லாமின் பெயரை பயன்படுத்துவதினால், "இஸ்லாம் அமைதி மதம்" என்பதை காட்ட பல நிகழ்ச்சிகள் தேவைப்படுகிறது:

காரணம் 5. இஸ்லாமிய நாடுகளின் செயல்கள், தண்டனைகள் (ஷரியா சட்டம்):

காரணம் 4. இஸ்லாமிய அறிஞர்களின், இமாம்களின் "அறிக்கைகள்" சொற்பொழிவுகள்:

காரணம் 3. ஹதீஸ்கள்:

காரணம் 2. முகமது:

காரணம் 1. குர் ஆன்:

இந்த ஆறு தலைப்புக்களில் நான் இரண்டு தலைப்புகளில்(காரணம் 6 மற்றும் காரணம் 4) மட்டுமே தீவிரவாதம் பற்றி எழுதியுள்ளேன். அதுவும், இஸ்லாம் தீவிரவாதத்தை பரப்புகிறது என்று எழுதவில்லை. அதற்கு பதிலாக, இஸ்லாமுக்கு ஆதரவாக நான் எழுதியுள்ளேன். மற்ற நான்கு தலைப்புக்களில் "தீவிரவாதம்" என்ற வார்த்தையையும் நீங்கள் காணமுடியாது. இப்ராஹிம் அவர்களே உங்களால் முடிந்தால் கண்டுபிடியுங்கள்.

காரணம் 6: தீவிரவாதிகள் தங்கள் செயலுக்கு இஸ்லாமின் பெயரை பயன்படுத்துவதினால், "இஸ்லாம் அமைதி மதம்" என்பதை காட்ட பல நிகழ்ச்சிகள் தேவைப்படுகிறது:

காரணம் 4. இஸ்லாமிய அறிஞர்களின், இமாம்களின் "அறிக்கைகள்" சொற்பொழிவுகள்:

ஆனால், இப்ராஹிம் அவர்களுக்கோ எல்லா தலைப்புக்களிலும் "தீவிரவாதம்" என்ற வார்த்தை தென்பட்டு உள்ளது. இன்னொரு முறை என் கட்டுரையை அவர் படித்தால் நன்றாக இருக்கும்.

2. இந்த இரண்டு தலைப்புக்களில் நான் எழுதியது என்ன? (நான் எதைச் சொல்ல முயன்றுள்ளேன்)

குறைந்த பட்சமாக இந்த இரண்டு தலைப்புகளிலாவது, "தீவிரவாதம்" பற்றி தான் எல்லா கேள்விகளும் கேட்கப்படுகிறது என்றாவது நான் எழுதி இருக்கிறேனா? என்று பார்க்கலாம்.

காரணம் 6ல் நான் சொன்ன செய்தி: "தீவிரவாதிகள் தங்கள் ஒரு கையில் குர்‍ஆனை வைத்துக்கொண்டு, மற்றொரு கையில் துப்பாகியுடன் உலக மக்களுக்கு தங்களை காட்டிக்கொள்வதால், இஸ்லாமுக்கு அவதூறு(கெட்ட) பெயர் என்று எழுதினேன்.

நான் எழுதியது:

காரணம் 6: தீவிரவாதிகள் தங்கள் செயலுக்கு இஸ்லாமின் பெயரை பயன்படுத்துவதினால், "இஸ்லாம் அமைதி மதம்" என்பதை காட்ட பல நிகழ்ச்சிகள் தேவைப்படுகிறது:

ஏன் இஸ்லாமியர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை அதிகமாக நடத்துகிறார்கள் என்று சிந்திப்பீர்களானால், இதற்குள்ள பல காரணங்களில் இந்த ஆறாவது காரணமும் ஒன்று என்று நான் சொல்வேன்.

இஸ்லாம் அமைதி மார்கமா இல்லையா என்பதைப்பற்றி இங்கு நான் சொல்லவரவில்லை, தீவிரவாதிகள் தங்கள் ஒரு கையில் துப்பாக்கியுடனும், மறுகையில் குர்‍ஆனையும் ஏந்திக்கொண்டு நிற்பதைத் தான் சொல்கிறேன். "தீவிரவாதிகள் இஸ்லாமியர்கள்" இல்லை என்று இஸ்லாமியர்கள் கூட்டங்களில், நிகழ்ச்சிகளில் பேசுவார்கள். ஆனால், தீவிரவாதிகள் தங்களை "இஸ்லாமியர்கள்" என்று தான் உலகத்திற்கு அடையாளம் காட்டிக்கொள்கிறார்கள். அல்லாவின் வழியில் தாங்கள் இந்த (தீவிரவாத) செயல்களை செய்கின்றனர் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

இப்படி தீவிரவாதிகள் தங்களை ஒரு இஸ்லாமியர்களாக காட்டிக்கொள்வதால், இஸ்லாமிய அறிஞர்கள் "இஸ்லாமை பரப்புவதற்கு" இது ஒரு தடையாக இருப்பதால், பல நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். மக்கள் இஸ்லாமை ஒரு அமைதி மார்க்கம் என்று 'அங்கீகரிக்கவேண்டும்' என்பதற்காக மக்களை கேள்விகள் கேட்கச்சொல்லி அதற்கு பதில் அளித்து வருகின்றனர்.

எந்த ஒரு இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சியை பாருங்கள், குறைந்த பட்சம் ஒரு கேள்வியாவது மாற்று மத நண்பர்கள் "இஸ்லாமிய தீவிரவாதிகள் பற்றி, ஜிஹாத் பற்றி" கேட்பார்கள். அதாவது, மாற்று மத அன்பர்களின் மனதில் "இஸ்லாம் ஒரு தீவிரவாத மார்க்கம்" என்பதை தீவிரவாதிகள் விதைத்துவருகின்றனர்.இஸ்லாமை ஒரு தீவிரவாத மார்க்கமாக இஸ்லாமியர்கள் காட்டினாலும், வலியவந்து மாற்று மதத்தவர்கள் "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமாக" கருதவேண்டும் என்று இஸ்லாமிய அறிஞர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதற்காக ஊடகங்கள் தவறான செய்தியை பரப்புகிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆக, இஸ்லாமுக்கு தீவிரவாதிகள் கொண்டுவரும் கெட்டபெயரை மாற்றவேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் மூலமாக இஸ்லாமிய அறிஞர்கள் நடத்திவருகின்றனர். இப்படிப்பட்ட தீவிரவாதிகள் "இஸ்லாமியர்கள் இல்லை, இது தவறு, இஸ்லாம் இதை அனுமதிப்பதில்லை" என்று சொல்லிவருகின்றனர்.

கிறிஸ்தவத்தை எடுத்துக்கொண்டால், இப்படிப்பட்ட பிரச்சனை இல்லை. கிறிஸ்தவ பெயரை பயன்படுத்தி யாரும் தீவிரவாத செயலில் ஈடுபடுவதில்லை, ஒரு கையில் துப்பாக்கியுடம், மறு கையில் பைபிளை ஏந்திக்கொண்டு யாரும் போஸ் கொடுப்பதில்லை….. …..

…..

எனவே, கிறிஸ்தவத்திற்கு அதிகமாக கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்தி மக்களின் மனதில் விதைக்கப்பட்ட விதையை எடுக்கவேண்டிய அவசியமில்லை, ஆனால், இஸ்லாமுக்கு அவசியமுண்டு, இன்னமும் இருக்கும்.

இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் யாராக இருந்தாலும் சரி, நான் சொல்லவந்த செய்தி என்ன என்பதை சிந்தித்துப்பாருங்கள்.

a) இஸ்லாமிய நிகழ்ச்சிகளில் "தீவிரவாதம்" பற்றிய கேள்விகள் தான் அதிகமாக கேட்கிறார்கள் என்று நான் எழுதியுள்ளேனா?

b) தீவிரவாதத்திற்கு காரணம் இஸ்லாம் என்று மேலே உள்ள வரிகளில் சொல்லியுள்ளேனா?


இதற்கு பதிலாக, இஸ்லாமுக்கு ஆதரவாக நான் எழுதியுள்ளேன். தீவிரவாதிகளின் செயல்களால்(தங்கள் கைகளில் குர்‍ஆனை வைத்து நிற்பதால்) இஸ்லாமுக்கு அவதூறு என்று எழுதினேன்.

உண்மையைச் சொன்னால், இந்த வரிகளை நீங்கள் சொல்லவேண்டும், இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லவேண்டும், "அமைதி இஸ்லாமுக்கு சில தீவிரவாதிகளால் அவதூறு என்று நீங்கள் சொல்லவேண்டுமே" ஒழிய நான் சொல்லாதவற்றை என்மேல் குற்றம் சுமத்தக்கூடாது.

நான் எழுதிய கீழ் கண்டவரிகளுக்கு என்ன பொருள் என்று இதை படிப்பவர்கள் தெரிந்துக்கொள்ளுங்கள்.

எந்த ஒரு இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சியை பாருங்கள், குறைந்த பட்சம் ஒரு கேள்வியாவது மாற்று மத நண்பர்கள் "இஸ்லாமிய தீவிரவாதிகள் பற்றி, ஜிஹாத் பற்றி" கேட்பார்கள். அதாவது, மாற்று மத அன்பர்களின் மனதில் "இஸ்லாம் ஒரு தீவிரவாத மார்க்கம்" என்பதை தீவிரவாதிகள் விதைத்துவருகின்றனர்

மாற்று மதத்தவர்களின் "சந்தேகத்திற்கு காரணம் தீவிரவாதிகள்" என்று எழுதினேன், இது உண்மையில்லையா?

சரி போகட்டும், இப்போது நேரடியாக ஏகத்துவ இப்ராஹிம் அவர்களுக்கும், தமிழ் முஸ்லீம்களுக்கும் சில நேரடிக் கேள்விகள், இதற்கு பதில் தாருங்கள்:

1."இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம், தீவிரவாத செயல்களை இஸ்லாம் ஆதரிப்பதில்லை" என்றுச் சொல்கிறீர்கள். அப்படியானால், தீவிரவாதிகள் தங்கள் கைகளில் துப்பாக்கியும், குர்‍‍ஆனையும் ஏந்திக்கொண்டு மக்களுக்கு தங்களை காட்டிக்கொள்வது: சரியா? தவறா?

2. ஒரு நல்ல முஸ்லீமின் வாயினால் சொல்லப்படும் குர்‍ஆன் வசனங்கள் மற்றும் அல்லாஹு அக்பர் போன்ற வார்த்தைகளை, தீவிரவாதிகள் சொல்வதினால், மாற்று மதத்தவர்கள் இஸ்லாம் பற்றி தவறாக நினைக்க வாய்ப்பு உள்ளது என்று நான் சொல்கிறேன், இது சரியா? தவறா?

3. "இது தவறு, தீவிரவாதிகள் இப்படி செய்யக்கூடாது" என்று சொல்வீர்களானால், இதை நான் சொன்னால் மட்டும் தவறாக மாறிவிடுமா?

4. தீவிரவாதிகள் இப்படி செய்வது சரியானது என்றுச் சொல்வீர்களானால், மாற்று மதத்தவர்களின் சந்தேகம் இன்னும் வலுவடையும்.


இந்த கேள்விகளுக்கு உங்கள் (முஸ்லீம்களின்) பதில் என்ன? நான் அடுத்த தலைப்பிற்குச் செல்கிறேன்.

காரணம் 4ல் நான் சொன்ன செய்தி: இந்த காரணத்தில் நான் சொன்ன செய்தி, சில இஸ்லமிய அறிஞர்களின் "அறிக்கைகள், சொற்பொழிவுகள்", மாற்று மத நண்பர்களின் மனதில் இஸ்லாம் பற்றிய தவறான எண்ணங்கள் வருவதற்கு காரணமாக உள்ளது என்றேன், இது சரியா அல்லது தவறா?

இதற்கு நான் இரண்டு உதாரணங்களை கொடுத்தேன், முதலாவது, ஜாகிர் நாயக் அவர்கள் பின்லாடனைப் பற்றிச் சொன்ன தனது கருத்தையும், இரண்டாவது, ஒரு இஸ்லாமிய அறிஞர், ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் அலுவல்களை செய்யும் போது தனி அறையில் இருக்கக்கூடாது, அப்படி இருக்கவேண்டுமானால், அந்தப் பெண் இந்த ஆணுக்கு தன் தாய்ப்பாலை குடிக்க கொடுக்கவேண்டும் என்றுச் சொன்ன செய்தியைச் சொன்னேன். இப்படி இஸ்லாமியர்கள் தங்கள் கருத்துக்களால் விளையும் விளைவுகளை சிந்திக்காமல், பேசுவதால் இஸ்லாம் பற்றி மற்றவர்கள் குழம்புகிறார்கள் என்றேன். இது தவறா?

காரணம் 4. இஸ்லாமிய அறிஞர்களின், இமாம்களின் "அறிக்கைகள்" சொற்பொழிவுகள்:

ஒரு மார்கத்தின் ஊழியர்களின் பேச்சுக்கள் எப்போதும் பெரும்பான்மையாக அம்மார்க்கத்திற்கு நல்ல பெயரை கொண்டுவரும். இஸ்லாமிய ஊழியர்களின் பேச்சுக்கள் இஸ்லாமியர்களுக்கு வேண்டுமானால் அது "சரி" என்று படலாம், ஆனால், மாற்று மதமக்களுக்கு அது "இஸ்லாம் பற்றி" தவறான கருத்தை கொடுக்கிறது.

சில உதாரணங்கள்:

டாக்டர் ஜாகிர் நாயக்கிடம் "ஒசாமா பின் லாடன் செய்வது சரியா? இல்லையா? உங்கள் கருத்தை சொல்லுங்கள்?" என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் கீழ் கண்ட பதிலை அளிக்கிறார்கள்: "ஒசாமா பின் லாடன் இஸ்லாமின் எதிரியுடன் போர் புரிந்தால், நான் அவரோடு இருக்கிறேன். எனக்கும் அவருக்கும் தனிப்பட்ட முறையில் நட்பு இல்லை... இருந்தாலும் நான் அவருக்காக இருக்கிறேன். ஒசாமா அமெரிக்கா என்ற மிகப்பெரிய தீவிரவாதியோடு தீவிரவாதம் புரிந்தால், நான் அவரோடு இருக்கிறேன். ஒவ்வொரு முஸ்லீமும் தீவிரவாதியாக இருக்கவேண்டும்....."

If he is on the truth and if he fighting the enimies of the Islam. I am for him. ..... If he is terrorizing (the America) the terrorist, I am with him.... every muslim should be terrorist.....

http://www.youtube.com/watch?v=Bxk5AAA5FbI

……..

……..

இஸ்லாமிய உலகம் தவிர மற்ற உலக நாடுகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையாக "ஒசாமா பின் லாடன்" செய்வது தவறான செயல், என்று நம்புகின்றனர். இஸ்லாமிய அறிஞர்களில் சிலர் (வேண்டா வெறுப்போடு) "அவர் செய்வது தவறு தான்" என்று சொல்லிக்கொண்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில், இஸ்லாமுக்கு நல்லபெயர் கொண்டுவரவேண்டிய ஒரு அறிஞர், "நான் ஒசாமா பின் லாடன் கட்சி தான்" ஏனென்றால், அவர் இஸ்லாமின் எதிரியோடு போராடுகிறார் என்று சொன்னால்.இஸ்லாமியர்கள் அல்லாத மக்கள், அதாவது இந்துக்கள், கிறிஸ்தவர்கள் இன்னுமுள்ளவர்க‌ள் என்ன நினைப்பார்கள், இஸ்லாமையும், பின் லாடனையும் ஒன்று சேர்த்து நினைத்துக்கொள்வார்கள். அதாவது, பின் லாடனின் இந்த தீவிரவாத செயல்களுக்கு இஸ்லாம் தான் காரணம் என்று நினைப்பார்களா இல்லையா?

ஆனால், பல இஸ்லாமிய அறிஞர்கள் கூட்டங்கள் போட்டு, மேடைகளில் "இஸ்லாம் எப்போதும் வன்முறையை, தீவிரவாத செயல்களை ஆதரிப்பதில்லை" என்று சொல்கிறார்கள். இதனால், மக்கள் குழம்பிப்போய், "இஸ்லாமும் தீவிரவாதமும் ஒன்று தான் போல் இருக்கிறது" என்று நினைத்துக்கொண்டு, இப்படி இஸ்லாமியர்கள் நடத்தும் எந்த ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியானாலும் சரி, முக்கியமாக "தீவிரவாதம் பற்றி" ஒரு கேள்வியை கேட்கிறார்கள்.

இந்த தலைப்பிலும், "இஸ்லாமும் தீவிரவாதமும் ஒன்று" என்று நான் சொல்லவில்லை. ஆனால், சில இஸ்லாமிய அறிஞர்கள் மாற்று மத மக்களின் இதயங்களில் இப்படிப்பட்ட எண்ணங்களை விதைக்கிறார்கள் என்றேன். அதனால், மக்கள் இப்படிப்பட்ட கூட்டங்களில் தங்கள் சந்தேகங்களை கேட்கிறார்கள் என்றேன். இது தவறா? நீங்கள் சொல்லவேண்டியவைகளை நான் இந்த கட்டுரையில் சொல்லியுள்ளேன்.

3. இஸ்லாம் பற்றிய இதர கேள்விகளை கேட்கிறார்கள் என்று நான் சொல்லவில்லையா?

இப்ராஹிம் அவர்கள் சொல்கிறார்கள், கேள்விபதில் நிகழ்ச்சிகளில் பலவகையான கேள்விகள் கேட்கப்படுகின்றன என்றார். நானும் தான் இதைச் சொன்னென்.

இப்ராஹிம் அவர்கள் எழுதியது:

உலகம் முழுவதும் பலமொழகளிலும் இஸ்லாமியர்கள் நடத்தும் மாற்றுமதத்தவர்களின் கேள்விபதில் நிகழ்ச்சிகள் பிரசித்திப்பெற்றவை. அந்நிகழ்ச்சிகளில் இஸ்லாமியர்களைப் பற்றிய சந்தேகங்களை மட்டுமே நாங்கள் கலைவது போலவும் - மற்ற கேள்விகளான குர்ஆன், ஹதீஸ்கள் பற்றிய சந்தேகங்களோ அல்லது எங்களின் நம்பிக்கைகள், வணக்கவழிபாடுகள், கொள்கைகள் பற்றிய சந்தேகங்களோ கேட்கப்படுவதில்லை என்பது போல் நீங்கள் எழுதி இருப்பது உங்களின் அறியாமையின் உச்சக்கட்டம்.

'மாற்றுமத்தவர்களின் நேரடி கேள்வி பதில் நிகழ்சிகளில்' குர்ஆன் பற்றி கேட்கப்படுகின்றது. இஸ்லாத்தின் நம்பிக்கைகள் பற்றி கேட்கப்படுகின்றது. குர்ஆனில் முரண்பாடு இருக்கின்றதா? என்று கேட்கப்படுகின்றது. குர்ஆன் அறிவியலுக்கு ஒத்துபோவில்லையே? என்று கேட்கப்படுகின்றது. ஏன் உங்களைப்போண்றோர் பரப்பும் அவதூறுப் பிரச்சராங்களுக்கான விளக்கங்கள் கேட்கப்படுகின்றது. இப்படி எல்லாவிதமான கேள்விளும்; கேட்கப்படுகின்றன. ஆனால் இந்த உண்மைகளை மறைக்க வேண்டும் என்பதற்காக, வேண்டும் என்றே நீங்கள் 'வெறும் தீவிரவாதத்தைப் பற்றி மட்டும்தான் கேட்கப்படடுகின்றது என்பது போல் எழுதி இருக்கின்றீர்கள்.

நான் எழுதியது:

………இன்றும் இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சிகளை கவனித்துப்பாருங்கள், பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்தும் "இந்த ஹதீஸில் இப்படி உள்ளதே, வேறு ஹதீஸ் இப்படி சொல்கிறாரே நாங்கள் எதை பின்பற்றுவது?" போன்ற கேள்விகளாகவே இருக்கும். .....

……..

கேள்வி பதில் நிகழ்ச்சிகளில் இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகளை கவனித்தீர்களானால், அவைகள் பெரும்பான்மையாக "இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகளைப் பற்றியதாகவே" இருக்கும். நமாஜ் பற்றி, உடல் சுத்தம் பற்றி, எத்தனை முறை குளிக்கவேண்டும், எப்போது குளிக்கவேண்டும், குறிப்பிட்ட சூழ்நிலையை சொல்லி இதன் பிறகு குளித்தபிறகு தான் நமாஜ் செய்யவேண்டுமா? போன்ற கேள்விகளாகவே இருக்கும்…….


மேலே நான் சொன்னதை கவனித்துப்பாருங்கள், நான் சொன்னதும், இப்ராஹிம் அவர்கள் சொன்னதும் ஒன்றாக இல்லையா?. தீவிரவாதம் பற்றிய கேள்விகள் தான் கேட்கிறார்கள் என்று நான் எழுதியுள்ளேனா?

பெரும்பான்மையாக இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகள் பற்றிய கேள்விகள் தான் இருக்கும் என்று நான் சொன்னதை விட்டுவிட்டு,

கேட்கப்படும் கேள்விகளில் குறைந்த பட்சம் ஒரு கேள்வி "தீவிரவாதம்" பற்றி இருக்கும் என்று சொன்னதை மட்டும் எடுத்துக்கொண்டு


எப்படி என் மீது குற்றம் சுமத்துகிறீர்கள் நீங்கள்? "பெரும்பான்மையாக" என்ற வார்த்தைக்கும், "குறைந்தபட்சம் ஒரு கேள்வி" என்ற வார்த்தைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம், இப்ராஹிம் அவர்களுக்கு தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

அதாவது 6 தலைப்புக்களில்(100%), 2 தலைப்புக்களில்(34%) மட்டும் தான் நான் தீவிரவாதம் என்ற வார்த்தையையே பயன்படுத்தியுள்ளேன். இதிலும் இஸ்லாமுக்கோ, குர்‍ஆனுக்கோ தீவிரவாதத்தை சம்மந்தப்படுத்தவில்லை. தீவிரவாதிகளின் செயல்கள், சில அறிஞர்களின் அறிக்கைகள், இஸ்லாமை மக்கள் புரிந்துக்கொள்ள தடையாக உள்ளது என்றேன். இது உண்மையில்லையா?

முடிவுரை:

முடிவாக இப்ராஹிம் அவர்களே, நான் என்ன எழுதினேனோ அதைப் பற்றி நீங்கள் விமர்சித்தால் போதும், அதற்கு மேலே போகவேண்டாம். உங்கள் இஸ்லாமியர்கள் எங்கள் கட்டுரைகளை படிக்கக்கூடாது என்று உங்களுக்கு விருப்பமிருந்தால், வெளிப்படையாக உங்கள் இஸ்லாம் சகோதரர்களுக்குச் சொல்லுங்கள், உங்கள் தளங்களில் கட்டுரைகளை எழுதுங்கள், அதை விட்டுவிட்டு, "இஸ்லாம் ஒரு தீவிரவாத மதம்" என்று இவர்கள் சொல்கிறார்கள் என்று எங்கள் மீது குற்றம் சாட்டினால், யாரும் என் கட்டுரைகளை படிக்கமாட்டார்கள் என்ற உங்கள் யுக்தி செல்லுபடியாகாது. முக்கியமான தலைப்புகளைப் பற்றி நான் எழுதும் போது, குர்‍ஆன், மற்றும் ஹதீஸ்கள் ஆதாரம் இல்லாமல் எழுதமாட்டேன். எனவே, இன்னொரு முறை என் கட்டுரையை படிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி வேண்டுமானால், வேறு ஒரு கட்டுரையில் விளக்குகிறேன். இந்த கட்டுரையை பொருத்தமட்டில், நான் அதை சொல்லவில்லை, நடுநிலையோடு தான் "தீவிரவாதம்" என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளேன். நான் சொல்லாத விவரத்தை சொன்னதாக எழுதுகிறீர்கள், "இதைத்தான் குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்" என்று சொல்வார்களோ!

ஏகத்துவத்தின் தற்போதைய கட்டுரைக்கு ஈஸா குர்‍ஆனின் இதர பதில்கள்:

1. உவமைக்கு உண்மைக்கும் வித்தியாசம் அறியா அறிஞர்கள் : பாகம் - 2 எசேக்கியேல் 23 மறுவிசாரணை

2. ஏகத்துவத்திற்கு பதில்: யாகாவா ராயினும் "நா" காக்க‌ (இஸ்லாம் சகிப்புத்தன்மையற்ற மார்க்கம் என்று அடையாளம் காட்டும் இஸ்லாமியர்கள்)



Isa Koran Home Page Back - Egaththuvam Rebuttal Index page

வெள்ளி, 11 ஏப்ரல், 2008

ஏகத்துவத்திற்கு பதில்: கிறிஸ்தவர்கள் விஷம் அருந்த தயாரா? விஷம் சாப்பிட்ட நபி மரித்தும்போனார்.

(http://egathuvam.blogspot.com/2008/03/blog-post_19.html)
The Challenge of Mark 16

மாற்கு 16ன் சவால்

Sam Shamoun

அஹமத் தீதத் மற்றும் ஜாகிர் நாயக் போன்ற இஸ்லாமிய அறிஞர்கள், கிறிஸ்தவத்திற்கு எதிராக வாதம் புரியும் போது, பொதுவாக அவர்கள் பயன்படுத்தும் ஒரு யுக்தி என்னவென்றால், மாற்கு 16ம் அதிகாரம் வசனங்கள் 14 லிருந்து 18 வரை குறிப்பிட்டு கிறிஸ்தவர்களுக்கு சவால் விடுவார்கள். முக்கியமாக, இயேசு தன்னை நம்புகிறவர்களுக்கு உறுதி அளிக்கும் வண்ணமாக, "தன்னை நம்புகிறவர்களுக்கு எந்த சேதமும் வராது, அதாவது விஷத்தை குடித்தாலும் உங்களை அது ஒன்றும் செய்யாது" என்றுச் சொன்ன வசனங்களை இஸ்லாமிய அறிஞர்கள் மேற்கோள் காட்டுவார்கள்.

அதன்பின்பு பதினொருவரும் போஜனபந்தியிலிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற்போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும் அவர்களைக் கடிந்துகொண்டார். பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதிஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். (மாற்கு 16:14-18)

இந்த சவாலை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று ஒரு கிறிஸ்தவன் சொன்னால், உடனே, இந்த கிறிஸ்தவருக்கு இயேசுவின் மீது உண்மையான நம்பிக்கை இல்லை என்று இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லிவிடுவார்கள்.

இயேசு இந்த வசனங்களில் சொன்ன அர்த்தத்தை மாற்றி இஸ்லாமியர்கள் வேறு விதமாக பொருள் கூறுகிறார்கள். அதாவது, ஒரு வேத வசனத்திற்கு சரியான பொருள் கூறவேண்டுமானால், மற்ற வசனங்களின் வெளிச்சத்தில் அதற்கு பொருள் கூறவேண்டும். இதை நாம் செய்தோமானால், இயேசு சொன்ன வசனங்களுக்கு உண்மையான பொருளை நாம் கண்டுக்கொள்ள முடியும்:

அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும். ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும், உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும், எழுதியிருக்கிறது என்று சொன்னான். அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார். (லூக்கா 4:19-12)

இந்த வசனங்களில், இயேசு தன்னை பின்பற்றுகிறவர்களை அழைத்து, நீங்கள் போய் எங்கெல்லாம் பாம்புகள் இருக்கின்றனவோ அவைகளை உங்கள் கைகளால் எடுங்கள், மற்றும் விஷமிருந்தால் அதையும் குடியுங்கள் என்றுச் சொல்லவில்லை. இந்த இடத்தில் இயேசு சொன்ன செய்தி, "எதிரியானவன் எந்த வழிமுறைகளில் விசுவாசிகளின் முயற்சிகளை தடை செய்யவேண்டும் என்று நினைத்து செயல்பட்டாலும், அது ஒரு பொருட்டல்ல, அவன் வெற்றி பெறவே முடியாது" என்பதாகும் (Christ's point was that no matter what the enemy tries to do in thwarting the efforts of the believers, he will never succeed.) இது முழுக்க முழுக்க இயேசு அளித்த உறுதியாகும், மற்றும் அவருடைய சித்தம் நம்முடைய வாழ்க்கையில் நடைபெறுவதற்கு, அவர் கொடுத்த இந்த அதிகாரம் எல்லா விசுவாசிகள் மீதும் உள்ளது.(This is based solely on the promises of Christ that his authority rests upon all true believers to accomplish his will in our lives: )

பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள். அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன். இதோ, சர்ப்பங்களையும் தோள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது. ஆகிலும் ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார். (லூக்கா 10:17-20)

அதே போல, பரிசுத்த வேதாகமம், இயேசு மாற்கு 16ம் அதிகாரத்தில் சொன்ன உறுதிமொழி எப்படி உண்மையான விசுவாசிகளின் வாழ்க்கையில் நிறைவேறியது என்றும் சாட்சி பகருகிறது:

பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். வானத்தின்கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள். அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள். எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா? அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி? பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா, பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனேபட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கதமைந்தவர்களும், கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள். எல்லாரும் பிரமித்துச் சந்தேகப்பட்டு, இதென்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். (அப்போஸ்தலர் 2:1-12)

அப்போஸ்தலருடைய கைகளினாலே அநேக அடையாளங்களும் அற்புதங்களும் ஜனங்களுக்குள்ளே செய்யப்பட்டது. எல்லாரும் ஒருமனப்பட்டுச் சாலோமோனுடைய மண்டபத்தில் இருந்தார்கள். மற்றவர்களில் ஒருவரும் அவர்களுடனே சேரத் துணியவில்லை. ஆகிலும் ஜனங்கள் அவர்களை மேன்மைப்படுத்தினார்கள். திரளான புருஷர்களும் ஸ்திரீகளும் விசுவாசமுள்ளவர்களாகிக் கர்த்தரிடமாக அதிகமதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள். பிணியாளிகளைப் படுக்கைகளின் மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள். சுற்றுப்பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் பிணியாளிகளையும் அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களையும் எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவர்களெல்லாரும் குணமாக்கப்பட்டார்கள். (அப்போஸ்தலர் 5:12-16)

பவுலின் கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார்.அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டு வந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களை விட்டுப் புறப்பட்டன. அப்பொழுது தேசாந்தரிகளாய்த்திரிகிற மந்திரவாதிகளாகிய யூதரில் சிலர் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து: பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள். பிரதான ஆசாரினாகிய ஸ்கேவா என்னும் ஓர் யூதனுடைய குமாரர் ஏழுபேர் இப்படிச் செய்தார்கள். பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி, பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து, பலாத்காரம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிருவாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப்போனார்கள். இது எபேசுவிலே குடியிருந்த யூதர் கிரேக்கர் அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லாரும் பயமடைந்தார்கள்; கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது. (அப்போஸ்தலர் 19:11-17)

பவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின்மேல் போடுகையில், ஒரு விரியன்பாம்பு அனலுறைத்துப் புறப்பட்டு அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது. விஷப்பூச்சி அவன் கையிலே தொங்குகிறதை அந்நியராகிய அந்தத் தீவார் கண்டபோது, இந்த மனுஷன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் சமுத்திரத்துக்குத் தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்கவொட்டவில்லையென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். அவன் அந்தப் பூச்சியைத் தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான். அவனுக்கு வீக்கங்கண்டு, அல்லது அவன் சடிதியாய் விழுந்து சாவானென்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; நெடுநேரமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தும், ஒரு சேதமும் அவனுக்கு வராததைக் கண்டபோது, வேறு சிந்தையாகி, இவன் தேவனென்று சொல்லிக்கொண்டார்கள். தீவுக்கு முதலாளியாகிய புபிலியு என்னும் பேர்கொண்டவனுடைய நிலங்கள் அந்த இடத்திற்குச் சமீபமாயிருந்தது; அவன் எங்களை ஏற்றுக்கொண்டு, மூன்று நாள் பட்சமாய் விசாரித்தான். புபிலியுவினுடைய தகப்பன் ஜுரத்தினாலும் இரத்தபேதியினாலும் வருத்தப்பட்டுக் கிடந்தான்; பவுல் அவனிடத்திற்குப் போய் ஜெபம்பண்ணி, அவன் மேல் கைகளை வைத்து, அவனைக் குணமாக்கினான். இது நடந்தபின்பு, தீவிலே இருந்த மற்ற வியாதிக்காரரும் வந்து, குணமாக்கப்பட்டார்கள். (அப்போஸ்தலர் 28:3-9)

இதுமட்டுமல்லாமல், விஷம் பற்றியும், சேதமடையாமல் இருப்பது பற்றியும் ஒரு ஆவிக்குரிய பொருள் கூட உள்ளது. "பொல்லாத மனுஷனுடைய நாக்கு விஷமுள்ள பாம்பு போல உள்ளது என்றும், இப்படிப்பட்டவன் தன்னுடைய பொய்யினாலும், ஏமாற்று வார்த்தைகளினாலும், நல்ல விசுவாசிகளை அழிக்க முயற்சி செய்கிறான்" என்று பரிசுத்த வேதாகமம் சொல்கிறது:

கர்த்தாவே, பொல்லாத மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்; கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி இரட்சியும். அவர்கள் தங்கள் இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து, யுத்தஞ்செய்ய நாள்தோறும் கூட்டங்கூடுகிறார்கள். சர்ப்பத்தைப்போல் தங்கள் நாவைக் கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின்விஷம் இருக்கிறது. கர்த்தாவே, துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி, கொடியவனுக்கு என்னை விலக்கி இரட்சியும்; அவர்கள் என் நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள். (சங்கீதம் 140:1-4)

அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது; (ரோமர் 3:13)

நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம்நிறைந்ததுமாயிருக்கிறது. (யாக்கோபு 3:8)

இயேசு வைத்த பரிட்சையில் முகமது தோற்றுப்போனார்

கடைசியாக, இயேசு வைத்த பரிட்சையில் முகமது தோற்றுப்போனார். அதாவது, யாரோ செய்த செய்வினை என்றுச் சொல்லக்கூடிய பில்லிசூன்யத்தால் முகமது பீடிக்கப்பட்டதுமல்லாமல், அவர் சாப்பிட்ட ஒரு விஷத்தால் மரித்தும் போனார்!


பாகம் 3, அத்தியாயம் 58, எண் 3175

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களுக்கு (ஒரு குறுகிய காலத்திற்கு) சூனியம் வைக்கப்பட்டது. அதன் வாயிலாக, தாம் செய்யாத ஒரு செயலைத் தாம் செய்திருப்பதாக அவர்கள் எண்ணிக் கொள்ளும்படி அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது.
(அல்-புகாரி)


பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3268

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது. எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்தது போன்று அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது. இறுதியில் ஒரு நாள், அவர்கள் பிரார்த்தனை செய்த வண்ணமிருந்தார்கள். பிறகு சொன்னார்கள்; 'என் (மீது செய்யப்பட்டுள்ள சூனியத்திற்கான) நிவாரணம் எதில் உள்ளதோ அதை எனக்கு அல்லாஹ் அறிவித்துவிட்டதை நீ அறிவாயாக? என்னிடம் (கனவில்) இரண்டு பேர் (இரண்டு வானவர்களான ஜிப்ரீலும், மீக்காயிலும்) வந்தனர். அவர்களில் ஒருவர் (ஜிப்ரீல்) என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் (மீக்காயில்) என்னுடைய கால்மாட்டில் அமர்ந்தார். ஒருவர் மற்றொருவரிடம் (மீக்hயில் ஜிப்ரீலிடம்), 'இந்த மனிதரைப் பீடித்துள்ள நோய் என்ன?' என்று கேட்டார். மற்றொருவர் (ஜிப்ரீல்), 'இவருக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது" என்று பதிலளித்தார். அதற்கு அவர், 'இவருக்கு சூனியம் வைத்தது யார்?' என்று கேட்க, (ஜிப்ரீல்) அவர்கள், 'லபீத் இப்னு அஃஸம் (என்னும் யூதன்)" என்று பதிலளித்தார். '(அவன் சூனியம் வைத்தது) எதில்?' என்று அவர் (மீக்காயில்) கேட்க அதற்கு, 'சீப்பிலும், (இவரின்) முடியிலும், ஆண் (பேரீச்சம்) பாளையின் உறையிலும்" என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அதற்கு அவர், 'அது எங்கே இருக்கிறது" என்று கேட்க, '(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) 'தர்வான்' எனும் கிணற்றில்" என்று பதிலளித்தார்கள்.

(இதைச் சொல்லி முடித்த) பிறகு, நபி(ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்தபோது என்னிடம், 'அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ளன" என்று கூறினார்கள். நான், 'அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்திவிட்டான். (அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாம்) குழப்பத்தைக் கிளப்பி விடும் என்று நான் அஞ்சினேன்" என்று பதிலளித்தார்கள். பிறகு, அந்தக் கிணறு தூர்க்கப்பட்டுவிட்டது.
(அல்-புகாரி)


பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5763

ஆயிஷா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு 'பன}ஸுரைக்' குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்பான் சூனியம் செய்தான். இதையடுத்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் செய்திராத ஒன்றைத் தாம் செய்து கொண்டிருந்ததாகப் பிரமையூட்டப்பட்டார்கள். இறுதியில், அவர்கள் 'ஒரு நாள்' அல்லது 'ஓரிரவு' என்னிடம் வந்தார்கள். ஆயினும், அவர்கள் (என் மீது கவனம் செலுத்தாமல்) தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தார்கள்.

பிறகு (என்னிடம் கூறினார்கள்:) ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? எந்த(ச் சூனியம்) விஷயத்தில் தெளிவைத் தரும்படி இறைவனிடம் நான் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான். (கனவில்) என்னிடம் (வானவர்) இரண்டு பேர் வந்தனர். அவ்விருவரில் ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், 'இந்த மனிதரின் நோய் என்ன?' என்று கேட்டார். அத்தோழர், 'இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது' என்று சொல்ல, முதலாமவர் 'இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்?' என்று கேட்டார். தோழர், 'லபீத் இப்னு அஃஸம் (எனும் யூதன்)' என்று பதிலளித்தார். அவர், 'எதில் வைத்திருக்கிறான்?' என்று கேட்க, சீப்பிலும், சிக்கு முடியிலும், ஆண் பேரீச்சம் பாளையின் உறையிலும்' என்று பதிலளித்தார். அவர், 'அது எங்கே இருக்கிறது?' என்று கேட்க, மற்றவர், '(பன} ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) 'தர்வான்' எனும் கிணற்றில்' என்று பதிலளித்தார். இதைச் சொல்லி முடித்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று (பாளை உறையை வெளியே எடுத்துவிட்டுத் திரும்பி) வந்து, 'ஆயிஷா! அதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போல் உள்ளது; அதன் பேரீச்ச மரங்களின் தலைகள் ஷைத்தானின் தலைகளைப் போன்று உள்ளன' என்று கூறினார்கள்.

நான், 'இறைத்தூதர் அவர்களே! அ(ந்தப் பாளை உறைக்குள் இருப்ப)தைத் தாங்கள் வெளியே எடுக்கவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல்லாஹ் எனக்கு (அதன் பாதிப்பிலிருந்து) குணமளித்துக் காப்பாற்றிவிட்டான். அதை வெளியே எடுப்பதன் மூலம் மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாம்) குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன் (எனவேதான் அதை நான் வெளியே எடுக்கவில்லை)' என்று கூறினார்கள். பிறகு அந்தக் கிணற்றைக் தூர்த்துவிடும்படி அவர்கள் கட்டளையிட அவ்வாறே அது தூர்க்கப்பட்டது. (அல்-புகாரி)


பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6391

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைத் தாம் செய்துவிட்டதாக இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பிரமையூட்டப்பட்டது.

நபி(ஸல்) அவர்கள் (ஒரு நாள்) தம் இறைவனிடம் பிரார்த்தித்த பிறகு (என்னிடம்), '(ஆயிஷா!) தெரியுமா? எந்த விஷயத்தில் தெளிவைத் தரும்படி நான் இறைவனிடம் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான்' என்று கூறினார்கள். அதற்கு நான், 'அது என்ன? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்டேன். அப்போது (பின்வருமாறு) கூறினார்கள்.

(கனவில்) என்னிடம் (வானவர்கள்) இரண்டு பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைமாட்டிலும் மற்றொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவர்களில் ஒருவர் தம் தோழரிடம், 'இந்த மனிதரின் நோய் என்ன? என்று கேட்டதற்கு அவரின் தோழர், 'இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது' என்று பதிலளிக்க முதலாமவர், 'இவருக்குச் சூனியம் வைத்தது யார்?' என்று வினவியதற்கு 'லபீத் இப்னு அஃஸம்' என்று தோழர் பதிலளித்தார். 'அவன் எதில் (சூனியம் வைத்தான்)? என்று கேட்க, 'சீப்பிலும் சிக்கு முடியிலும், பேரீச்சம் பாளையின் உறையிலும்' என்று பதிலளித்தார். அவர், 'அது எங்கே உள்ளது?' என்று கேட்க, மற்றவர், 'தர்வானில் உள்ளது' என்றார். 'தர்வான்' என்பது பன}ஸுரைக் குலத்தாரிடையேயிருந்த ஒரு கிணறாகும்.

பிறகு அங்கு சென்று (பார்வையிட்டு)விட்டு என்னிடம் வந்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! அக்கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்றுள்ளது. அதன் பேரீச்சம் மரங்கள் சாத்தானின் தலையைப் போன்று இருந்தன' என்று குறிப்பிட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்து என்னிடம் அக்கிணற்றைப் பற்றித் தெரிவித்தபோது நான், 'இறைத்தூதர் அவர்களே! அ(ந்தப் பாளை உறைக்குள்ள இருப்ப)தைத் தாங்கள் வெளியில் எடுக்கவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள்'எனக்கோ அல்லாஹ் (அதன் பாதிப்பிலிருந்து) நிவாரணமளித்துவிட்டான். (அதை வெளியே எடுப்பதன் மூலம்) மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாம்) குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன் (எனவேதான் அதை வெளியே எடுக்கவில்லை)' என்றார்கள்.

ஆயிஷா(ரலி) அவர்களிடமிருந்து உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் வழியாக வரும் ஓர் அறிவிப்பில், 'நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்; பிரார்த்தித்தார்கள். (திரும்பத் திரும்பப் பிரார்த்தித்தார்கள்)' என்று கூடுதலாக இடம் பெற்றுள்ளது. (அல்-புகாரி)



விஷம் தோய்க்கப்பட்ட உணவை சிறிது உண்ட முகமது



பாகம் 3, அத்தியாயம் 51, எண் 2617

அனஸ்(ரலி) அறிவித்தார்.

யூதப் பெண் ஒருத்தி நபி(ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி(ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். 'அவளைக் கொன்று விடுவோமா?' என்று நபி(ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், 'வேண்டாம்" என்று கூறிவிட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன். (அல்-புகாரி)

இபின் சௌத் தொகுத்த சரிதை " the Kitab al-Tabaqat al-Kabir (Book of the Major Classes), Volume 2, p. 249:" லிருந்து

ஒரு யூதப்பெண் விஷம் தோய்க்கப்பட்ட‌ ஒரு பெண் ஆட்டின் தொடையை நபி(ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்தாள். அதிலிருந்து ஒரு சிறிய துண்டை அவர் எடுத்துக்கொண்டார், தன் வாயில் போட்டுக்கொண்டார், அதை மென்று மறுபடியும் அதை துப்பிவிட்டார். பிறகு தன் தோழர்களுக்கு இவ்விதமாகச் சொன்னார்: "நிறுத்துங்கள், உண்மையாகவே இந்த ஆட்டுத்தொடையில் விஷம் உள்ளது என்று இது என்னிடம் சொல்லியது". பின்பு, அந்த யூதப்பெண்ணை அழைத்துவரச்சொல்லி, அவளிடம்: "இந்த வேலையை செய்வதற்கு உன்னை தூண்டியது எது?" என்று கேட்டார். அவள் பதில் அளித்தாள்: " நீங்கள் உண்மையானவரா என்பதை தெரிந்துக்கொள்ளத் தான் நான் இப்படி செய்தேன், நீங்கள் உண்மையானவராக இருப்பீரானால், அல்லா அதை உங்களுக்கு தெரிவிப்பார், மற்றும் நீங்கள் ஒரு பொய்யராக இருப்பீரானால், நான் என் மக்களை உங்கள் கைகளிலிருந்து தப்புவித்துக்கொள்வேன்"

மற்றும்

அல்லாவின் ரஸூலும் அவரது தோழர்களும் அதிலிருந்து சாப்பிட்டார்கள். அந்த ஆடு : "நான் விஷமூட்டப்பட்டுள்ளேன்" என்று சொல்லியது. அவர்(முஹம்மத்) தன் தோழர்களிடம் "உங்கள் கைகளை அப்படியே வையுங்கள், இதில் விஷமுள்ளது என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது!" என்றார். அவர்கள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டார்கள், ஆனால், பிஷர் இபின் அல்-பரா(but Bishr Ibn al-Bara expired) என்பவர் மரித்துவிட்டார். அல்லாவின் தூதர் அந்த யூதப்பெண்ணை அழைத்துவரச்சொல்லி, அவளிடம்: "இந்த வேலையை செய்வதற்கு உன்னை தூண்டியது எது?" என்று கேட்டார். . அவள் பதில் அளித்தாள்: " நீங்கள் உண்மையான நபியா என்பதை தெரிந்துக்கொள்ளத் தான் நான் இப்படி செய்தேன், நீங்கள் உண்மையான நபியாக இருப்பீர்களானால் இது உம்மை பாதிக்காது இருப்பீரானால், மற்றும் நீங்கள் ஒரு அரசராக இருப்பீரானால், நான் என் மக்களை உங்கள் கைகளிலிருந்து தப்புவித்துக்கொள்வேன்". அவளை கொல்லும் படி அவர் கட்டளையிட்டார், அந்த பெண் கொல்லப்பட்டாள்.

அல்-ட‌பரியின் சரித்திர தொகுப்பிலிருந்து (From al-Tabari's History, Volume 8, p. 124: )

அல்லாவின் தூதர் வியாதிப்பட்டு அதனால் மரித்துப்போனார், அப்படி வியாதிப்பட்ட கால கட்டத்தில், பிஷருடைய தாயார் அவரை பார்க்க வந்தார்கள், அவர்களிடம் ரஸுல் இப்படியாகச் சொன்னார்: "பிஷரின் தாயே, உங்கள் மகன் பிஷரோடு கெய்பர் என்ற இடத்தில் நான் உண்ட அந்த உணவினால், இப்போது கூட என் தொண்டை அறுந்துவிடும் போல வலியை உணருகிறேன்".

இதுவரை நாம் கண்ட விவரங்களின் வெளிச்சத்தில், நாம் கீழ்கண்ட‌ முடிவுக்குத் தான் வரமுடியும்.

தன்னுடைய தீர்க்கதரிசியை பில்லிசூன்யத்திலிருந்தும் மற்றும் விஷத்திலிருந்தும் காப்பாற்ற அல்லாவிற்கு சக்தியில்லாமல் இருந்தது, இதனால், இயேசு அல்லாவைவிட அதிக சக்தியுள்ளவர் என்றும், மற்றும் அல்லாவை விட உயர்ந்தவர் என்றும் நாம் முடிவு செய்யலாம். அல்லது முகமது இறைவனின் உண்மையான தீர்க்கதரிசி(நபி) அல்ல என்பதை முடிவு செய்யலாம்.

இதில் எது சரி என்பதை இந்த கட்டுரையை படிக்கும் வாசகர்களே முடிவு செய்யட்டும்.

மூலகட்டுரை:
http://www.answering-islam.org/Responses/Naik/mk16challenge.htm


டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு:

1.
டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் யோவான் 1:1 (டாக்டர் ஜாகீர் நாயக் அவர்களும் கிரேக்க மொழியும்:)

2.
ஆதரவிற்கு ஏமாற்றுதல் ஒரு ஆயுதம்: டாக்டர் ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது

3. டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஆன்சரிங் இஸ்லாம் தள மறுப்புக் கட்டுரைகள்(ஆங்கிலம்)

மேலும் படிப்பதற்கு:


4. Examining A Muslim's Defense of Muhammad's Bewitchment : Part 1

5.
Examining A Muslim's Defense of Muhammad's Bewitchment : Part 2

6.
More on Muhammad and Poison:(Examining Abdullah Smith's War on Islam As Well as His Continuous Intellectual Suicide Mission)

Source : http://www.geocities.com/isa_koran

புதன், 9 ஏப்ரல், 2008

ஏகத்துவத்திற்கு பதில்: யாகாவா ராயினும் "நா" காக்க‌

ஏகத்துவத்திற்கு பதில்: யாகாவா ராயினும் "நா" காக்க‌

 

முன்னுரை: கிறிஸ்தவர்கள் இஸ்லாமுக்கு அவதூறை பரப்புகிறார்கள் என்று இப்ராஹிம் அவர்கள் மிகவும் காரசாரமாக பதில் (http://egathuvam.blogspot.com/2008/03/blog-post_19.html)  அளித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட கட்டுரைக்கு பதில் என்றுச் சொல்லாமல், ஒட்டு மொத்தமாக ஒரு பெரிய சத்தத்தோடு பதில் அளித்துள்ளார். இஸ்லாமுக்கே உரித்தான பாணியில் கிறிஸ்தவர்களைத் திட்டியும் எழுதியுள்ளார், அல்லாவின் நல்லடியார் இபரஹிம் அவர்கள். சரி, அவர் என்ன எழுதியுள்ளார்? என்பதை இந்த கட்டுரையில் காணலாம். இவர்களது இந்த கட்டுரைக்கு என் முதல் பதிலை இங்கு படிக்கலாம்:

 

ஏகத்துவத்திற்கு பதில் : உவமைக்கு உண்மைக்கும் வித்தியாசம் அறியா அறிஞர்கள் : பாகம் 2

 

 

1. யாகாவா ராயினும் "நா" காக்க‌:

 

இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள், இஸ்லாமில் சகிப்புத்தன்மை அதிகம் என்று மேடையில் முழங்கும் இஸ்லாமியர்கள், மேடையில் மட்டும் தான் "அமைதி" காக்கிறார்கள், மேடையை விட்டு இறங்கிவந்துவிட்டால், சுனாமி தான்.

 

"இஸ்லாமியர்களுக்கு கேள்விகளையும், பதில்களையும் முன்வைக்கும்" நபர்களுக்கு முக்கியமாக கிறிஸ்தவர்களுக்கு இவர்கள் சூட்டும் புகழாரங்கள் என்னவென்று சிறிது பார்ப்போம். கீழே உள்ள புகழாரங்கள் அனைத்தும் பல கட்டுரைகளிலிருந்து எடுத்தது அல்ல, இவைகள் அனைத்தும் ஒரே கட்டுரையிலிருந்து எடுத்தது. இஸ்லாமுக்கு சகிப்புத்தன்மை அதிகம் என்றுச் சொல்லும் அமைதி புறாக்கள் எழுதியதை படியுங்கள்.

 

 

1) சமீபகாலமாக இணையத்தளங்கள் மூலம் சில விஷமிகள், குறிப்பாக கிறஸ்தவர்கள் -

2) அவர்கள் அதை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு விடக்கூடாது என்ற குறுகிய நோக்கத்துடன் தங்களது விஷமப்பிரச்சாரத்தை இணையத்தளங்களின் மூலம் ஏற்படுத்தி வருகின்றனர்.

3) நாம் எழுதிய கட்டுரையை - அறிவுப்பூர்வமான காரணங்களைக்கொண்டு மறுக்கத் திராணியற்றவர்கள்,

4) எந்த முகத்தைவைத்து இதை எழுதினார்கள்? பதில் பற்றி பேச இவர்களுக்கு என்ன அறுகதை இருக்கின்றது?

5) இவாகள் எந்தக்கட்டுரையில் எமக்கோ அல்லது எமது சகோதரர்களுக்கோ அறிவுப்பூர்வமான - ஆதாரப்பூர்வமான பதில் எழுதிவிட்டார்கள்? இதைச் சொல்ல இவர்களுக்கு வெட்கமாக இல்லையா?

6) இவரகள் எழுதிய பதிலின் லட்சனங்களை நாம் பார்ப்பதற்கு முன்பாக

7) சில நபிமொழிகளுக்குரிய விளக்கங்களைத் திரித்தும் - பொய்யானத் தகவல்களைக் கூறியும் சில விஷமக்கட்டுரைகளை வெளியிட்டார்கள்.

8) இந்த விவாத அழைப்பை ஏற்க திரானியற்ற இந்தக் கயவக் கும்பல் ஒழிந்துக்கொண்டு

9) நீங்கள் பதில் என்றப்பெயரில் - யார் எடுத்த வாந்தியைத் திருப்பி எடுக்கின்றீர்களோ,

10) அந்த நோயாளிகளை அழைத்து வந்தாளும்

11) நீங்கள் எந்த வெளிநாட்டு கைக்கூலிக்கு ஆசைப்பட்டு இப்படிப்பட்ட விஷமப்பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றீர்களோ

12) அந்த வெளிநாட்டு விஷமிகளை அழைத்து வந்தாலும்

13) இப்படி எமது சகோதரர்களின் அரைகூவலுக்கு பயந்து ஓடி ஒழிந்த இந்தக் கயவர்கள்கூட்டம்

14) அதற்கு திரானியற்ற இந்தக் கயவர்கள்தான் ஜாகிர் நாயக்கிற்கு பதில் என்று தங்கள் தளத்தில் எழுதினர். இது தான் இவர்கள் எழுத்தின் - நமக்கு கொடுக்கக்கூடிய பதிலின் - லட்சனம்.

15) இவர்கள் நம்மவர்களுக்கு அளித்த பதிலின் லட்சனம். அடுத்து இவரின் பதிலின் லட்சனத்திற்கு வருவோம்.

16) எவரோ ஒருவர் எடுத்த வாந்தியை அப்படியே திருப்பி எடுத்துள்ளார்கள்

17) 'இதோ எழுதிட்டோம்ல மறுப்பு' என்று கூத்தட்டித்துக்கொண்டால் தான் உண்டு.

18) அது போக இதற்கு முன் நீங்கள் எழுதின வேறு சில மறுப்பக்கட்டுரைகளின் லட்சனம் என்ன?

19) ஏனெனில் இந்த உன்மையடியான் - ஈசா குர்ஆன் அன் கோவிற்கு இது பற்று ஒன்றும் தெரியாது.

20) அடுத்து இவர்கள், நமது சகோதரர்கள் எழுதிய இன்னும் பல கட்டுரைகளுக்கு மறுப்பு என்றப் பெயரில் எதை எதையோ உளறித் தள்ளியுள்ளார்கள்.

 21) நாளுக்கு நாள் எதையாவது உளரிக்கொட்டிக்கொண்டு இருப்பார்கள்

 

2. அன்பான இஸ்லாமிய நண்பர்களே! "சகிப்புத்தன்மை என்றால் என்ன?" :

 

ஒரு இந்துவோ, கிறிஸ்தவனோ இஸ்லாமுக்கு மாறும் போது, அவனோடு நாங்கள் தோலோடு தோல் சேர்த்து அல்லாவை தொழுதுக்கொள்கிறோம்,நாங்கள் வேறுபாடு பார்ப்பதில்லை ஏனென்றால், இஸ்லாம் சகிப்புத்தன்மையுள்ளது என்றுச் சொல்லும் இஸ்லாமியர்களே!

 ஒரு முஸ்லீமிடம் நீங்கள் சகிப்புத்தன்மையோடு இருப்பது என்பது சுலபம், ஒரு கிறிஸ்தவன் இன்னொரு கிறிஸ்தவனிடம் சகிப்புத்தன்மையோடு இருப்பது என்பது சுலபம். அதே போல ஒரு இந்துவை இன்னொரு இந்து சகித்துக்கொள்வது என்பது சுலபம். இவர்கள் இருவரின் அடிப்படை நம்பிக்கையும் ஒன்று தானே.

 

 

இஸ்லாம் சகிப்புத்தன்மை உள்ளது என்று நீங்கள் சொல்லவேண்டுமானால், உங்கள் சகிப்புத்தன்மையை முஸ்லீமிடம் அல்ல, மற்றவர்களிடம் காட்டவேண்டும். இஸ்லாமுக்கு கேள்விகள் கேட்டு, பதில்கள் தருகிறோம் என்ற காரணத்தால், இப்படி தரம் குறைவாக திட்டுகின்றீர்களே, உங்களிடம் எங்கே சகிப்புத்தன்மை உள்ளது? நீங்களும் தான் பைபிளில் உள்ள அனைத்தும் கற்பனை என்றுச் சொல்கிறீர்கள்,யூதர்களும், கிறிஸ்தவர்களும் அல்லாவின் வார்த்தைகளாகிய அவரது முந்தைய வேதத்தை திருத்திவிட்டார்கள் என்று (முஸ்லிம்கள் தான் அவர்கள் திருத்தும் போது, பக்கத்தில் இருந்து பார்த்தது போல) சொல்லுகின்றீர்கள். அதற்காக நாங்கள் உங்களை திட்டுகின்றோமா? திட்டுவதற்கு பதிலாக எங்களால் முடிந்த மற்றும் எங்களுக்கு (முக்கியமான எனக்கு) தெரிந்த பதிலை தருகிறோம்.

 

 

ஒரே கட்டுரையில் கிறிஸ்தவர்களை நீங்கள் சொன்ன புகழாரங்கள்:

 

விஷமிகள்,

விஷமப்பிரச்சாரம்,

மறுக்கத் திராணியற்றவர்கள்,

எந்த முகத்தைவைத்து இதை எழுதினார்கள்?

சொல்ல இவர்களுக்கு வெட்கமாக இல்லையா?,

இவரகள் எழுதிய பதிலின் லட்சனங்களை,

விஷமக்கட்டுரைகளை,

கயவக் கும்பல்,

யார் எடுத்த வாந்தியைத் திருப்பி எடுக்கின்றீர்களோ,

நோயாளிகள்,

வெளிநாட்டு கைக்கூலிக்கு, 

வெளிநாட்டு விஷமிகளை,

பயந்து ஓடி ஒழிந்த இந்தக் கயவர்கள்கூட்டம் ,

திரானியற்ற இந்தக் கயவர்கள்தான்,

கூத்தட்டித்துக்கொண்டால் தான் உண்டு,

இந்த உன்மையடியான் - ஈசா குர்ஆன் அன் கோவிற்கு,

எதை எதையோ உளறித் தள்ளியுள்ளார்கள்.

 

இந்த மேலே உள்ள எல்லா வார்த்தைகளையும் உங்களுக்குச் சொல்ல எங்களுக்கு அதிக நேரம் பிடிக்காது, இருந்தாலும், நாங்கள் உங்களை ஆசீர்வதிக்கிறோம், உங்களை திட்டுவதில்லை. காரணம் என்ன தெரியுமா? எங்களுக்கு வழி காட்டியவர் சென்று வந்த பாதையில் தான் நாங்களும் செல்கிறோம். நீங்கள் உங்களுக்கு வழிகாட்டியாக இருந்தவரை பின்பற்றுகிறீர்கள். இஸ்லாம் சகிப்புத்தன்மை உள்ளது என்பது உண்மையாக இருக்குமானால், இப்படி எல்லாம் நீங்கள் எழுதமாட்டீர்கள். இயேசு சொன்ன வார்த்தைகள் எப்படி உண்மையாக இருக்கிறது என்றுப்பாருங்கள்:

 

 

மத்தேயு 7:16-20:

 

அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?

அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்.

நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது;  கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது.

நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும்.

ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.

 

3. இஸ்லாமை சகிப்புத்தன்மையற்ற மார்க்கமாக நீங்கள் அடையாளம் காட்டிக்கொண்டு இருக்கிறீர்கள்:

 

ஏதோ மேடையில் பேசினால், கேட்பவர்கள் சில நாட்களுக்குள் மறந்துப்போய் விடுவார்கள் என்ற எண்ணத்தில் நீங்கள் "எழுத்துக்களை, கட்டுரைகளை" பயன்படுத்துகிறீர்கள். ஆனால், இது தவறு. உங்கள் கட்டுரைகள் பல தளங்களில் பதிக்கப்பட்டு, ஆயிரமாயிரமான பேர், பல ஆண்டுகள் படிப்பார்கள். படிப்பவர்கள் எல்லாரும், இஸ்லாமியர்களாக மட்டுமே இருப்பார்கள் என்றும், அப்படி இஸ்லாமியர்களாக இருந்தாலும், நீங்கள் மற்றவர்களை திட்டுவதை அங்கீகரிப்பார்கள் என்று நினைத்துவிடவேண்டாம். வன்முறையை எதிர்ப்பவன் இஸ்லாமிலும் உண்டு, வன்முறையை ஆதரிக்கிறவன் கிறிஸ்தவத்திலும் உண்டு. எல்லா மார்க்க மக்களில் இப்படி பல கருத்துக்கள் கொண்ட மக்கள் உண்டு என்பதை கவனத்தில் கொள்ளவும்.

 

நம் எழுத்துக்கள் நாம் யார்? நம் மனநிலை என்ன? என்பதை சமுதாயத்திற்கு அடையாளம் காட்டிவிடும், உங்கள் கட்டுரைகளை படிப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, இஸ்லாம் ஒரு அமைதியான மதம் என்பதை ஏற்றுக்கொள்வதற்கு தயக்கம் காட்டுவார்கள். உங்களின் இந்த வார்த்தைகளினால், இஸ்லாமுக்கு ஒரு அவதூறு பெயரை நீங்களே கொடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள். இதை மனதில் வைத்துக்கொண்டு எழுதவும்.

 

நாங்கள் ஆரோக்கியமான  விவாதங்கள், ஆதாரத்தோடு கருத்து பரிமாற்றங்கள் நடைபெறவேண்டும் என்று விரும்புகிறோம். நீங்கள் முன்வைத்த பைபிள் சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கு நாங்கள் பதில் தருவது போல, நீங்களும் பதில் தாருங்கள், நீங்கள் தான் ஆதாரபூர்வமாக, அறிவு பூர்வமாக ஆதாரங்களை முன்வைத்து  பதில் தருபவர்கள் என்றுச் சொல்லிக்கொள்கிறீர்களே, பின் ஏன் இவ்விதம் கோபப்பட்டு எழுதுகிறீர்கள்?

 

இஸ்லாம் சகிப்புத் தன்மையுள்ளது என்றுச் சொல்வது மட்டுமல்ல, அதை நிரூபிப்பதும் உங்கள் கையில் தான் உள்ளது. எதிர்ப்பே இல்லாத போது, நாங்கள் சகிப்புத்தன்மை உள்ளவர்கள் என்று முழங்குவது சுலபம், ஆனால், உண்மையான எதிர்ப்பு இருக்கும்போது, "சகிப்புத்தன்மையை", இஸ்லாமின் அமைதி முகத்தை காட்டும் சமயம் இது தான் என்று கருதி செயல்படவேண்டும்.

 

 

முடிவுரை: ஏகத்துவம் எழுதிய இந்த கட்டுரையின் மற்ற பகுதிகளுக்கு என் பதிலை அடுத்த கட்டுரையில் தருகிறேன். ஒவ்வொரு தலைப்பாக எடுத்து பதில் சொல்வது தான் சிறந்தது என்று நான் கருதுகிறேன். ஏன் நேரடி மேடை விவாதத்திற்கு வரமறுக்கிறீர்கள்? ஜாகிர் நாயக்கிடம், பிஜே அவர்களிடம் மேடையில் கேள்விகள் கேட்கலாம் அல்லவா? மாற்கு 16ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டது போல, விசுவாசிப்பவர்களால் நடக்கும் அடையாளம் பற்றி என்ன பதில்? விஷத்தை குடிக்க தயாரா? போன்ற கேள்விகளை அவர் கேட்டுள்ளார். ஒவ்வொன்றிற்கும் பதில் கூடிய சீக்கிரமே தரமுயற்சி செய்கின்றேன். எனக்கு கிடைக்கும் சமயத்தில் முடிந்த அளவிற்கு வாரம் ஒரு கட்டுரை அல்லது  பதிலை தர நான் முயற்சி செய்துக்கொண்டு இருக்கிறேன்.

 

 

இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களை எப்படி திட்டினாலும் நாங்கள் நிதானம் இழக்கமாட்டோம். அதற்கு பதிலாக, எங்கள் மறுப்புக்களை இன்னும் ஆழமாகவும், பிழையில்லாமலும் எழுத முயற்சி செய்வோம்.

 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாங்கள் செய்யவேண்டியவைகள்:

 

என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்;

சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்;... (மத்தேயு 5:11-12)

 

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்(மத்தேயு 5:44)

 

உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக  ஜெபம்பண்ணுங்கள்(லூக்கா 6:28).

 

உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றிச் சபியாதிருங்கள்(ரோமர் 12:14).

 

தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்(1 பேதுரு 3:9).

 

 

 

திங்கள், 24 செப்டம்பர், 2007

கேள்வியும் நானே, பதிலும் நானே - 1

    
கேள்வியும் நானே, பதிலும் நானே - 1


நம் தளத்தில் இஸ்லாம் பற்றிய கட்டுரைகள் வருகின்றன. சில கிறிஸ்தவர்களுக்கு இது தர்மசங்கடமாக இருக்கலாம். அதாவது, இப்படி நேரடியாக கட்டுரை எழுதாமல், அவர்களுக்காக ஜெபிக்கலாம் அல்லவா என்ற சந்தேகம், இன்னும் பல கேள்விகள் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த பதிவில் சில விவரங்களை கொடுக்கலாம் என்று நினைத்து, நானே கேள்விகளையும், பதிலையும் எழுதுகிறேன். நமக்கு கேள்விகள் மெயில் மூலமாக வந்தது என்றுச் பொய் சொல்லி நம்மால் கட்டுரைகள் எழுதமுடியாது. எனவே, தான் தலைப்பு : கேள்வியும் நானே, பதிலும் நானே என்று வைத்தேன். என் மெயில் விலாசம்: isa.koran@gmail.com or isa_koran@yahoo.co.in


1. உங்கள் தளத்தின் நோக்கம் என்ன? உங்கள் தளத்திற்கு "ஈஸா குர்-ஆன்" என்ற பெயர் வைத்ததற்கான காரணம் என்ன ?


என் தளத்தின் நோக்கம், இயேசுவைப் பற்றியும், பைபிளைப் பற்றியும் இஸ்லாமியர்கள் பறப்பிக்கொண்டு வரும் சில தவறாக கோட்பாடுகள் தவறு என்று தகுந்த ஆதாரங்களோடு எடுத்துச் சொல்வதாகும். பைபிளின் "தேவன்" குர்-ஆனின் "அல்லா" இல்லை என்பதை உலகிற்கு முக்கியமாக தமிழ் மக்களுக்குச் சொல்வதாகும்.

இயேசுவை தேவனின் வார்த்தை என்று பைபிள் சொல்கிறது, அது போல "குர்-ஆனை" இஸ்லாமியர்கள் இறைவனின் வார்த்தை என்றுச் சொல்கிறார்கள். எனவே தான் "ஈஸா குர்-ஆன்" என்று பெயர் வைத்தேன்
.


2. உங்கள் கட்டுரைகள் இஸ்லாமியர்களின் நம்பிக்கையை புண்படுத்தும் என்று நினைக்கிறேன். நான் நினைக்கிறது சரியா?


முதன் முதலில் 7ம் நூற்றாண்டில் முகமது "யூதர்களின் மற்றும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கைகள் தவறு", என்று சொன்னார். மக்கா மக்களின் வணக்க வழிபாடு தவறு என்றுச்சொன்னார். அப்போது அவர்கள் மனது புண்பட்டது. முகமது "உண்மை" என்று நம்பின தன் செய்தியைச் சொல்லும் போது, சிலருக்கு அது வேதனையை கொடுக்குமே என்பதற்காக, தன் செய்தியை சொல்லாமல் இருந்துவிட்டாரா! இல்லையே?

இயேசு தேவனின் குமாரன் இல்லை என்று சொன்னார்? கிறிஸ்தவர்கள் புண்பட்டார்கள். இப்போதும் இஸ்லாமியர்கள் அதையே செய்கின்றனர்.

இதில் புண்படுவதற்கு ஒன்றுமில்லை, சொல்லும் செய்தி உண்மையா இல்லையா என்று அவரவர் மனதிற்கு தெரியும். உண்மையென்று உங்கள் மனது சொன்னால், நம்புங்கள். இல்லையென்றால் விட்டுத்தள்ளுங்கள்.

இதைத் தான் நான் கிறிஸ்தவர்களுக்கு சொல்வேன். யாராவது இயேசுவைப் பற்றி விமர்சித்தால், உங்களுக்கு பதில் சொல்லமுடிந்தால் சொல்லுங்கள், இல்லையானால் விட்டுவிடுங்கள். விமர்சிப்பவர்கள் மீது அவதூறான வார்த்தைகளைச் சொல்லாதீர்கள்.

காயத்திற்கு மருந்து போடும் போது வலிக்கத்தான் செய்யும், அதற்காக நாம் மருந்துக்களே பயன்படுத்தாமல் இருக்கமுடியுமா? வியாதி போவது எப்படி?

இருந்தாலும், என் கட்டுரைகளில் பெரும்பான்மையாக வசன ஆதாரம் இல்லாமல் எதையும் முன்வைக்க மாட்டேன். மற்றும் "தறுதலைகள்", "காரி உமிழ்வார்கள்" என்று "இஸ்லாம் இணைய பேரவை" சொல்வதைப் போல நான் எழுதமாட்டேன், விமர்சிப்பவர்களை திட்டமாட்டேன்.

ஒரு வேளை நான் சொன்ன ஆதாரம் அல்லது செய்தி தவறாக இருக்கிறது என்று நிருபிக்கப்பட்டால், உடனே நான் அதை என் கட்டுரையிலிருந்து எடுத்துவிடுவேன், அல்லது ஒரு குறிப்பு செய்தியை அதைப் பற்றி தெரிவிப்பேன்.

எல்லாரையும் நேசிக்கும்படி என் வேதம் சொல்கிறது. எனவே, இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்துவது என் நோக்கமல்ல? எனக்கு தெரிந்த சில உண்மைகளைச் சொல்வது தான் என் நோக்கம்.

யாருடைய மனதாவது புண்பட்டு இருக்குமானால், என்னை மன்னிக்கும்படி வேண்டுகிறேன். அதற்காக நான் கட்டுரை எழுதுவதை நிறுத்தமுடியாது.

லூக்கா 8:16 ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பாத்திரத்தினாலே மூடவுமாட்டான், கட்டிலின்கீழே வைக்கவுமாட்டான்; உள்ளே பிரவேசிக்கிறவர்கள் அதின் வெளிச்சத்தைக் காணும்படிக்கு அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்.


3. இஸ்லாமைப் பற்றி விமர்சிக்க கிறிஸ்தவத்தில் அனுமதியுண்டா? பைபிளிலிருந்து ஏதாவது ஒரு வசனத்தை ஆதாரமாக காட்டமுடியுமா ?

என் கட்டுரைகள் "இஸ்லாமை விமர்சிக்கின்றன" என்றுச் சொல்வதை விட "என் நம்பிக்கையைப் பற்றிய இஸ்லாமிய கேள்விகளுக்கு" அவைகள் பதிலாக அமைகின்றன எனலாம். இருந்தாலும், என்னை பொருத்தமட்டில், ஆரோக்கியமான விமர்சனம் நல்லது.

கிறிஸ்தவத்தில், ஒரு தேவனுடையை ஊழியக்காரன் எதிர் பேசுகிறவர்களுக்கும், மற்றவர்களுக்கும் சாந்தமாக பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளான்.


2 தீமோத்தேயு: 2:24. கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.25. எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும்,26. பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.


ஒரு தேவனுடைய ஊழியக்காரன் "கிறிஸ்தவர்களுக்கு கட்டுக்கதைகள்" சொல்லி அவர்களை சத்தியத்திலிருந்து சிலர் விலகச் செய்வதை காணும் போது, அவர்களுக்கு புத்திச் சொல்லவேண்டும், கண்டனம் செய்யவேண்டும்.

2 தீமோத்தேயு: 4:1. நான் தேவனுக்கு முன்பாகவும் உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது,2. சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.3. ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,4. சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.5. நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.

சில நேரங்களில் கடிந்துக்கொள்ளவேண்டிய அவசரம் வரலாம். இதைத் தான் தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளமும் செய்துக்கொண்டு இருக்கிறது.


தீத்து: 1:13. இந்தச் சாட்சி உண்மையாயிருக்கிறது; இது முகாந்தரமாக, அவர்கள் யூதருடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தை விட்டு விலகுகிற மனுஷருடைய கற்பனைகளுக்கும் செவிகொடாமல்,14. விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள்.


இப்படி இஸ்லாமியர்களுக்கு பதில் சொல்வதும், கிறிஸ்தவர்களுக்கு எச்சரிக்கை செய்வதும் ஒரு ஊழியக்காரனின் கடமையாகும். ஒவ்வொரு விசுவாசியும் தேவனுடைய ஊழியக்காரனே.


4. உங்கள் கட்டுரைகளைப் படிக்கும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை தவறாக புரிந்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது என்று நினைக்கிறேன் .


கிறிஸ்தவர்கள் அப்படி தவறாக புரிந்துக்கொள்ள வாய்ப்புக்கள் மிக மிக குறைவு, காரணம்:

1. கிறிஸ்தவர்கள் பைபிளை படிக்கிறார்கள்(படிக்கனும்), எனவே, எது சரி எது தவறு என்று சரியாக நிதானிக்க அவர்களால் முடியும்.

2. ஆலயத்திற்குச் செல்லும் கிறிஸ்தவன் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் தன்னைத் தான் சோதித்து அறிவான், போதகரின் போதகத்தைக் கேட்கிறான். எனவே, அவன் எல்லாரையும் நேசிக்கவேண்டும் என்ற இயேசுவின் கட்டளையை பின்பற்ற வேண்டும்.

3. பைபிளில் இல்லாத வார்த்தைகளை நாம் அவர்களுக்குச் சொன்னால் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அல்லா குர்-ஆனில் சொன்னது போல "யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் நண்பர்களாக" ஏற்றுக்கொள்ளவேண்டாம் என்று, பைபிள் சொல்வதில்லை. முஸ்லீம்களையும் மற்ற மார்க்கத்தை பின்பற்றுபவர்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளவேண்டாம் என்று நான் சொன்னால், எந்த ஒரு கிறிஸ்தவனும் ஏற்றுக்கொள்ளமாட்டான்.

4. இன்னும் சொல்லப்போனால், ஒரு கிறிஸ்தவன் இஸ்லாமை அதிகமாக அறியும் போது, அவன் முஸ்லீம்களுக்காக அதிகமாக தேவனிடம் வேண்டுதல் செய்வான், அதற்கு பதிலாக விரோதிக்கமாட்டான்(விரோதிக்கக்கூடாது).

5. தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்தில் இஸ்லாமிய கட்டுரைகள், செய்திகளை எல்லாரும் படிக்கிறார்கள், பதிவுசெய்கிறார்கள். இருந்தாலும், அதை படிக்கும் வாசகர்கள் என்ன பதில்(பின்னூடல்) எழுதுகிறார்கள் என்று பாருங்கள். முஸ்லீம்களுக்காக ஜெபிப்போம், காத்திருப்போம் தேவன் உதவிசெய்வார் என்று எழுதுகிறார்களே தவிர, அவர்கள் அழிக்கப்படவேண்டும் என்று யாரும் எழுதுவதில்லை. அது தான் கிறிஸ்துவம், இதைத் தான் இயேசு போதித்தார்.

எனவே, கிறிஸ்தவர்கள் தவறாக புரிந்துக்கொள்ளமாட்டார்கள். அப்படி நினைப்பவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல.


5. உங்களின் இந்த முயற்சி நல்ல பலனைத் தரும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா ?


கட்டாயமாக பலன் தரும். முக்கியமாக இஸ்லாமியர்களுக்கு பதில் சொல்வது, ஆங்கிலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்புலிருந்து நடந்துவருகிறது. ஆனால், இந்தியாவில் அது குறைவு, சொல்லப்போனால் இல்லை என்றே சொல்லலாம்.

இப்போது சிலர் எழுத ஆரம்பித்துள்ளார்கள், முக்கியமாக தமிழ் கிறிஸ்தவ தள வாசகர்கள் "மைகோவை", " தேவன்", "ரமேஷ்பிஸ்", மற்றும் தனி தளம் மூலம் கட்டுரைகளை பதிக்கும் "உண்மையடியான்" என்றுச் சொல்லி பலர் எழும்பியுள்ளனர். இன்னும் சில ஆண்டுகளில் பலர் எழுத ஆரம்பிப்பார்கள். எத்தனையோ பேருக்கு எழுதவேண்டும் என்ற ஆவல் இருக்கிறது, ஆனால், இப்போது தான் அதற்கு வாய்ப்பு "தமிழ் கிறிஸ்டியன்ஸ்" தளம் மூலமாக உருவாகியுள்ளது.

முக்கியமாக ஆங்கிலத்தில் அனேக கட்டுரைகள் இணையத்தில் கிடைக்கிறது. அதாவது இவைகளை மொழிபெயர்த்தாலே போதும், இஸ்லாமியர்கள் முன்வைக்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிடும். நாம் ஒன்றும் தனியாக கட்டுரைகளை எழுதவேண்டியதில்லை.

கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாமைப் பற்றிச் சொல்வதும், இஸ்லாமியர்களுக்கு இயேசுவைப் பற்றிச் சொல்வதுமே என் தளத்தின் முக்கிய நோக்கமாகும்.


6. ஒருவேளை உங்கள் முயற்சியினால், ஒரு நன்மையும் விளையவில்லை என்று வைத்துக்கொள்வோம்? அப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?


இது என் வேலை இல்லை. இது தேவனின் வேலை. எனக்கு கிடைக்கும் ஒரு சில மணித்துளிகளை பயன்படுத்தி சில கட்டுரைகளை எழுதுகிறேன், அவ்வளவு தான். எங்களுடைய வேலை விதையை விதைப்பது(தூவுவது), நீர் பாய்ச்சுவது அவ்வளவு தான், விளையச் செய்து தேவன் தான்.

இன்றைக்கு செடி நடுகிறோம், அது உடனே பலன் தருவதில்லை. அதற்கு பல ஆண்டுகள் ஆகும், அப்போது தான் அதன் கனிகளை நம் கண்களில் காணமுடியும். அது வரையில் நாம் அவசரப்படுவதில் அர்த்தமில்லை.

சங்கீதம் 126:6 அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.

எனவே, பலன் உண்டா இல்லையா என்பது இப்போது கேள்வியில்லை.

பலன் விளையவில்லை என்று சொல்லமுடியாது. ஏற்கனவே பலன் விளைந்துவிட்டது. அதாவது தமிழிலே பல இஸ்லாமிய தளங்கள் உருவாகியுள்ளன. கேள்விகள் கேட்டு பதில் கொடுத்தால் தானே விவரங்கள் புரியும். அனேக இஸ்லாமிய சகோதரர்கள் பைபிள் சம்மந்தப்பட்ட கட்டுரைகளை எழுதுகிறார்கள்.

தமிழ் முஸ்லீம், இது தான் இஸ்லாம் தளமும் தொடர்ந்து கிறிஸ்தவ தலைப்பில் கட்டுரைகளை எழுதுகிறார்கள். அவைகளுக்கு பதில்கள் தரப்படுகின்றன. பல ஆயிரம் பேர் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். எத்தனையோ கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாம் பற்றிய அறிவு பெருகிக்கொண்டு இருக்கிறது. மற்றும் பல இஸ்லாமியர்களுக்கும் உண்மை கிறிஸ்தவம் என்னவென்று புரிந்து இருக்கும். எனவே காத்திருப்போம், ஜெபிப்போம், ஜெயம் பெருவோம்.


7. கிறிஸ்தவர்கள் முதல் முதலில் எப்போது இப்படி இஸ்லாமுக்கு பதில்கள், மறுப்புக்கள் எழுதினார்கள்?


முதன் முதலில் என்று சொல்லவேண்டுமானால், முகமதுவின் காலத்திலேயே கிறிஸ்தவர்களும், யூதர்களும் நேரடியாக அவரிடமே சில கேள்விகளை கேட்டுயிருப்பதை சொல்லமுடியும். ஆனால், எனக்கு தெரிந்த ஒரு விவரத்தை சொல்லவிரும்புகிறேன்.

அதாவது முஸ்லீம் காலிஃபா "அல்-மாமுன் (கி.பி. 813 to 833)" என்பவரின் அரச சபையில் இப்படி ஒரு "கேள்வி பதில்" நிகழ்ச்சி நடந்ததாக ஒரு புத்தகம் உள்ளது.

இந்த கருத்து பரிமாற்றம் கிறிஸ்தவரான அல்-கின்டி(Al-Kindy) மற்றும் முஸ்லீமான ஹாஷிமி(Al-Hashimi ) என்பவருக்கும் இடையே நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த பரிமாற்றம் பாதுகாப்பை கருதி, அரச சபையில் நடத்தப்படாமல், தனியே நடந்ததாக சொல்லபடுகிறது.

இந்த புத்தகத்தில் முதலாவது, கிறிஸ்தவரகளை இஸ்லாமுக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்படுகிறாதாம், அதனை கிறிஸ்தவர் மறுத்து, இஸ்லாமியர்களை கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ளும்படி அழைப்பு விடுப்பதாக உள்ளதாம். இந்த புத்தகத்தில் கிறிஸ்தவர் கொடுக்கும் பதில் சுமாராக புத்தகத்தின் மொத்த அளவில் ஏழில் ஆறு பாகம் உள்ளதாம். நான் சில பக்கங்களை மட்டுமே படித்தூள்ளேன்.

இந்த புத்தகத்தை 1880ல் வில்லியம் முர் என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்தார்.


1. Apology_of_al-Kindy ஆங்கிலத்தில் இங்கு படிக்கலாம்

2.
Download Apology_of_al-Kindy in PDF format

3. Download Apology_of_al-Kindy zip format

4. About Abd_al-Masih_ibn_Ishaq_al-Kindi in Wikipedia

5. About Apology_of_al-Kindy_(book) in Wikipedia


Quote:
Reference: William Muir, The Apology of Al Kindy, Written at the Court of Mâmûm (Circa A.H. 215; A.D. 830), In Defence Of Christianity Against Islam, Society For Promoting Christian Knowledge, London, England, Second Edition, 1887, pp. 122.

Background: Abd al-Masih ibn Ishaq al-Kindi wrote an apology of the Christian faith to al-Hashimi while serving in the court of the Caliph Al-Mamun in approximately the year A.H. 215 (A.D. 830). This edition of the text was originally prepared by Sir William Muir and first published in 1887. Muir gives the historical setting of the dialogue between al-Kindi and al-Hashimi and includes extensive quotations from this ancient work.


Source:
http://en.wikipedia.org/wiki/Apology_of_al-Kindy_(book)

The Apology (or Risāla) purports to be a record of a dialogue between a Muslim and a Christian. In fact, the book contains two apologies: The Muslim first invites the Christian to embrace Islam. The Christian declines this and in turn invites the Muslim to embrace Christianity. The Christian's answer comprises some six sevenths of the text.

The two participants are referred to by pseudonyms, according to the text to secure their safety. [4]. The Muslim participant, called "Abd-Allah ibn Ismail al-Hashimy" (which translates as "Servant of Allah, son of Ishmael, from the clan Banu Hashim), is described as a cousin of the unnamed Caliph, living in the Caliph's castle and being well versed in Christian theology. He is also described as having a close and trusted Christian friend called "Abd al-Masih ibn Ishaq al-Kindi" (which translates as "Servant of the Messiah, son of Isaac, from the clan Banu Kindah").

In his preface, Muir identifies the Caliph, who remains unnamed in the epistles, as Al-Ma'mun, who reigned from 813 to 833, arguing that


http://en.wikipedia.org/wiki/Abd_al-Masih_ibn_Ishaq_al-Kindi

Abd al-Masih ibn Ishaq al-Kindi (Arabic,عبد المسيح ابن اسحاق الكندي )(English: servant of Messiah, son of Isaac, from the clan of Kindah) is the alias of a Christian character in the medieval theological work Apology of al-Kindy. The book was translated into Latin by a team working for Peter the Venerable, and into English by Sir William Muir. Abd al-Masih ibn Ishaq al-Kindi lived in the 9th century.


இவைகள் ஒரு சில விவரங்கள் மட்டுமே, முழுவிவரத்திற்கு கொடுக்கப்பட்ட தொடுப்புக்களில் சென்று பார்க்கவும். இன்னும் பலர் இப்படி பல காலங்களில் பதில் கொடுத்துள்ளார்கள். இப்புத்தகத்தை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.


8. உங்கள் கட்டுரைகளில், முஸ்லீம்களுக்கு "குர்-ஆனை", "ஹதீஸ்களை", "முகமதுவின் சரிதைகளை" படிக்கும் படி சொல்கிறீர்களே, இது கொஞ்சம் அதிமாக படவில்லை உங்களுக்கு? கிறிஸ்தவர்களைப் பார்த்து நீங்கள் பைபிள் படியுங்கள் என்று ஒரு இஸ்லாமியர் சொன்னால் எப்படி இருக்கும் ?


முதலாவது ஒன்றை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும், அது என்னவென்றால், இஸ்லாமியர்கள் முதலாவது குர்-ஆனை படிக்க ஆரம்பிப்பது அரபியில் தான். தங்கள் தாய் மொழியில் இல்லை. இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் சில நல்ல வசனங்கள், ஹதிஸ்கள் மட்டும் தான் அவர்களுக்கு தெரியும், அதாவது நான் சொல்வது ஒரு சராசரி சாதாரண முஸ்லீமைப்பற்றி. அதனால், தான் நான் அவர்களை குர்-ஆனை படிக்கும் படி சொல்கிறேன். ஹதீஸ்களை படிக்கும்படி சொல்கிறேன். குர்-ஆனை அரபியில் படிக்க உட்சாகப்படுத்தும் அளவிற்கு, தங்கள் தாய்மொழியில் படிக்க இஸ்லாமியர்கள் உட்சாகப்படுத்துவதில்லை. நான் சொல்வது இந்திய முஸ்லீம்களைப் பற்றி. அவர்கள் அப்படி தாய் மொழியில் படித்தால், சில உண்மைகள் அவர்களுக்கு புரியும் என்பது என் கருத்து.

ஆனால், கிறிஸ்தவர்களின் நிலை அப்படி இல்லை. எல்லாரும் தங்களுக்கு தெரிந்த மொழியில் அதுவும் பல மொழிகளில் படிக்கிறார்கள். ஆகையினால், கிறிஸ்தவர்களைப் பார்த்து பைபிளை படி என்றுச் சொன்னால், அவர்கள் அமோதிப்பார்கள்.

1. முகமதுவும் அவருடைய தோழர்களும் 10 ஆண்டுகளுக்கு மேலாக "எருசலேமில் உள்ள தேவலயத்தை" நோக்கியே தொழுதார்கள் என்றும், பிறகு தான் அதை "விக்கிரகங்கள் இருக்கும்" காபாவிற்கு முகமது மாற்றினார் என்று எத்தனை முஸ்லீம்களுக்குத் தெரியும்?

2. முகமதுவிற்கு முந்தைய வேதம் அல்லது நபிகள் பற்றி சந்தேகம் வந்தால், அதை தீர்த்துக்கொள்ள யூதர்களையும் அல்லது கிறிஸ்தவர்களை கேட்டு தெரிந்துக்கொள் என்று அல்லா அவருக்கு கட்டளை கொடுத்துள்ளது எத்தனை முஸ்லீம்களுக்குத் தெரியும்?


3. முகமது எத்தனை போர்கள் புரிந்தார் என்று எத்தனை முஸ்லீம்களுக்குத் தெரியும்?

4. முஸ்லீம்களுக்கு தங்கள் மனைவிகளை அடிக்க அல்லா அனுமதி கொடுத்த வசனம் குர்-ஆனில் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

5. முகமதுவிற்கு எத்தனை மனைவிகள் என்று எத்தனை முஸ்லீம்களுக்கு தெரியும்?



இப்படி சொல்லிக்கொண்டு போகலாம், அதனால் தான் முதலாவது அவர்கள் மார்க்கம் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள் என்றுச் சொல்கிறேன்.

கிறிஸ்தவம் என்னவென்று தெரிந்துக்கொள்ளவேண்டுமா - இயேசுவின் வாழ்க்கையைப் படி.
இஸ்லாம் என்னவென்று தெரிந்துக்கொள்ளவேண்டுமா - முகமதுவின் வாழ்க்கையைப் படி.


மட்டுமல்ல, கிறிஸ்தவர்களுக்கும் நான் குர்-ஆன் படியுங்கள், ஹதீஸ் படியுங்கள் என்று சொல்கிறேன். இப்படி ஒரு முஸ்லீம் தளத்தில் " இஸ்லாமியர்களே நீங்கள் பைபிள் படியுங்கள், படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்" என்று இஸ்லாமிய அறிஞர்கள் தங்கள் வாசகர்களுக்கு சொல்லமுடியுமா?


9. இப்படி கட்டுரைகளை எழுதுவதற்கு பதிலாக பல இஸ்லாமிய அறிஞர்கள் நடத்தும் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம், டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று அங்கு கேள்விகள் கேட்கலாம் அல்லவா? உங்களுக்கு இன்னும் உதவியாக இருக்கும் அல்லவா ?


இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் அனேகமாக நாம் கேள்வி கேட்கத்தான் அனுமதிக்கப்படுகிறோமே ஒழிய பதில் சொல்ல அல்ல. அது மட்டுமல்லாமல், நமக்கு கொடுக்கப்படும் சில மணித்துளிகளில் நாம் என்ன சொல்லவருகிறோம் என்று சொல்வதற்கு முடிவதில்லை. எனவே, இவைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை.

ஆனால், இப்படி இணையத்தில் கட்டுரைகள், கேள்வி பதில்கள் எழுதுவதினால், நிறைய விவரங்களை ஆதாரங்களை நாம் சொல்லமுடியும். எனவே, நான் கிறிஸ்தவர்களை கேட்டுக்கொள்வேன், இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கு பெருங்கள், ஆனால், கேள்விகள் எதுவும் கேட்கவேண்டாம். அதனால், ஒரு நன்மையும் நமக்கு உண்டாகப்போவதில்லை. ஏதாவது சொல்லவேண்டுமென்றால், இணையத்தில் எழுதுங்கள் இதனால் அதிக நன்மைகள் விளையும்.
10. நீங்கள் கிறிஸ்தவர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

இன்றைய காலகட்டத்தில் அனேக இஸ்லாமிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. அவைகளில் பல கிறிஸ்தவ கேள்விகளுக்கும் அவர்கள் குர்-ஆன் அடிப்படையில் பதில் சொல்கிறார்கள். இந்நிகழ்ச்சிகளில் பங்கு பெருங்கள்.

குர்-ஆனையும், ஹதீஸ்களையும் படியுங்கள், அப்போது தான் பைபிள் சொல்லும் செய்திக்கும், குர்-ஆன் சொல்லும் செய்திக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் புரியும்.

இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் செய்தியை மட்டும் கேட்டுவிட்டு இது தான் இஸ்லாம் என்று நினைக்கவேண்டாம். அது மிகப்பெரிய தவறு. இஸ்லாமில் உள்ள சில நல்ல விவரங்களை மட்டும் தான் அவர்கள் முன்வைப்பார்கள், எனவே நீங்களாகவே குர்-ஆனை, ஹதீஸ்களை படியுங்கள். அப்போது தான் உண்மை விளங்கும்.

உதாரணத்திற்கு, ஒருவன் இஸ்லாமில் சேர்ந்துவிட்ட பிறகு அதிலிருந்து வெளியே வந்துவிட்டால், அவனுக்கு இஸ்லாமில் மரண தண்டனை உண்டு. பல இஸ்லாமிய நாடுகளில் இப்படி ஷரியா சட்டம் உண்டு. அதை இஸ்லாமியர்கள் முதலில் உங்களுக்கு சொல்லமாட்டார்கள். டாக்டர் ஜாகிர் நாயக் கூட சொல்லியிருக்கிறார், இஸ்லாமிய நாடுகளில் ஒரு முஸ்லீம் வேறு மதத்திற்கு மாறினால், அவனுக்கு மரணதண்டனை என்று. தெரியாமல் உள்ளே நிழைந்துவிட்டீர்கள், பிறகு எக்காரணத்தைக் கொண்டும் வெளியே வரமுடியாது.

இந்தியாவில் அப்படி சட்டம் இல்லை என்றுச் சொல்லலாம், ஆனால், இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி நடக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு வேளை இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி நடக்குமானால், ஷரியா சட்டம் கொண்டுவந்தால், நிச்சயமாக இதே ஜைனுல் ஆபிதீன் அவர்கள், ஜாகிர் நாயக் அவர்கள் இதற்கு அனுமதி அளிப்பார்கள்.

எனவே, எச்சரிக்கையாக இருக்கவேண்டுகிறேன்.

மத்தேயு: 7:15. கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். 16. அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? 17. அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். 18. நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது. 19. நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். 20. ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.


கர்த்தருக்கு சித்தமானால் தொடரும்...

Isa Koran Home Page Back - Question and Answers Index page
1