ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

Islam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Islam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 11 ஜூலை, 2008

குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் - பாகம் 1 - பைபிளில் இல்லாத குழந்தை அற்புதம் முகமது "காப்பி" அடித்தது தான்

 
குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் - பாகம் 1


[இயேசுவின் பிறப்பு சம்மந்தப்பட்ட குர்‍ஆன் வசனங்களில் உள்ள முரண்பாடுகள், பிழைகள், கட்டுக்கதைகள் போன்றவற்றை, தொடர் கட்டுரைகளாக நாம் இனி காணப்போகின்றோம்.]

இஸ்லாம் கல்விக்கு பதில்:

பைபிளில் இல்லாத குழந்தை அற்புதம் முகமது "காப்பி" அடித்தது தான்


முன்னுரை: இஸ்லாம் கல்வி தள கட்டுரை சொல்கின்றது, பைபிளைக் கண்டு குர்‍ஆன் "காப்பி" அடிக்கவில்லை, காரணம், பைபிளில் சொல்லாத பல அற்புதங்கள் குர்‍ஆனில் உள்ளது, எனவே, முகமது பைபிளிலிருந்து காப்பி அடிக்கவில்லை என்பது தெளிவு என்று எழுதியிருந்தார்கள். இயேசு குழந்தையாக இருக்கும் போது பேசியதாக குர்‍ஆன் சொல்லும் அற்புதம், இயேசு களிமண்ணினால் பறவை செய்து அதற்கு உயிர் கொடுத்த அற்புதம் இவைகள் பைபிளில் இல்லை, அதனால், பைபிளைக்கொண்டு காப்பி அடித்தது தான் குர்‍ஆன் என்று எப்படி கேட்கிறார்கள் கிறிஸ்தவர்கள் என்று கேள்வி எழுப்புகின்றது இஸ்லாம் கல்வி தளம்.

இஸ்லாம் கல்வி தளத்தில் கீழ் கண்டவாறு எழுதப்பட்டுள்ளது.
"ஈஸா அலைஹிஸ்ஸலாம் (இயேசு) அவர்களின் பிறப்பு முதல் பைபிளில் காணப்படாத ஏராளமான சம்பவங்களை திருக்குர்ஆன் விவரிக்கின்றது. ........
ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்கள்தொட்டில் குழந்தையாக இருக்கும்போதே நான் அல்லாஹ்வின் தூதராவேன் என்று கூறி மக்களிடம் பேசியதன் மூலம் தன் முதல் அற்புதத்தை வெளிப்படுத்தியமை (19: 29-33) களிமண்ணில் ஒரு பறவையைப் போன்ற உருவத்தைச் செய்து அதில் அவர் ஊதியபோது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு அது உயிருள்ள பறவையாக மாறியது (3:49) போன்ற தகவல்களும் பைபிளில் எங்கும் இல்லை. பைபிளைப் பார்த்து காப்பியடித்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனை உருவாக்கியிருப்பின் பைபிளில் எங்குமே காணக்கிடைக்காத தகவல்களை அவர்கள் எங்கிருந்து பெற்றனர்?
திருக்குர்ஆன் முற்றிலும் இறைவனால் அருளப்பட்டது! அதன் காரணமாகவே பைபிளின் எந்தப் பகுதியிலும் இடம்பெறாத பல உண்மைச் சம்பவங்களும் திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ளன."

Source: http://www.islamkalvi.com/portal/?p=622

பைபிளில் இல்லாத அற்புதங்கள் பற்றிய விவரங்களை முகமது எங்கே இருந்து பெற்றார்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர், நம் சகோதரர்கள். இக்கேள்விக்கு பதில் தான் இக்கட்டுரை.

குர்‍ஆனின் இந்த குழந்தை அற்புத விவரங்கள், காப்பி அடித்தது தான்:

பைபிளில் தான் இந்த அற்புதம் பற்றி சொல்லப்படவில்லையே பின் எப்படி, காப்பி என்று சொல்கிறீர்கள் என்று கேட்டால், இது பைபிளிலிருந்து காப்பி அடிக்கவில்லை, அதற்கு பதிலாக, முகமது காலத்திற்கு முன்பு இருந்த பல புராணக்கதைகள், கட்டுக்கதைகள் மற்றும் இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பல தள்ளுபடி ஆகமங்களிலிருந்து தான் முகமது இவைகளை சொல்லியுள்ளார். இவைகள் இப்படிப்பட்ட புத்தகங்கள்(Infancy of Gospel Thomas, Arabic Infancy of Gospel etc..)இறைவனின் வெளிப்பாடுகள் அல்ல என்று ஒதுக்கிவிட்ட புத்தகங்களிலிருந்து எடுத்து குர்‍ஆனில் சேர்த்துவிட்டு, இது தான் அல்லா இறக்கியது என்று சொல்லியுள்ளார் முகமது, அதையும் இஸ்லாமியர்கள் நம்பிவிட்டு, இக்கதைகள் பைபிளில் இல்லை, குர்‍ஆனில் மட்டுமே உள்ளது என்று பெருமைப்படுகிறார்கள்.

Details of Infancy Gospels of Jesus


1) The Encyclopedia Britannica(பிரிட்டனிகா என்சைக்லோபீடியா):

பிரிட்டனிகா என்சைக்லோபீடியா சொல்கிறது

The Encyclopedia Britannica comments: "The Gospel was known to him chiefly through apocryphal and heretical sources."

"முகமதுவிற்கு சுவிசேஷம் பற்றிய விவரங்கள், தள்ளுபடி ஆகமங்களிலிருந்து, வேறுபல ஆகமங்களிலிருந்து கிடைத்துயிருக்கும்".


Britannica Encyclopedia Says about Gospel of the Infancy of Christ

...of Mark, and Gospel of Philip) preserve some legends and myths found in the early Christian centres of Edessa, Alexandria, and Asia Minor. The First Gospel of the Infancy of Jesus (known also as the Arabic Infancy Gospel ), for example, recounts that, one day, Jesus and his playmates were playing on a rooftop and one fell down and...

Source:    http://www.britannica.com/eb/topic-208181/First-Gospel-of-the-Infancy-of-Jesus


2) Wikipedia Encyclopedia(விக்கிபீடியா கூற்றுப்படி):.

Wikipedia Encyclopedia says about Gospel of the Infancy of Christ

The Infancy Gospel of Thomas is a non-canonical text that was part of a popular genre, aretalogy, of the 2nd and 3rd centuries —

The text describes the life of the child Jesus, with fanciful, and sometimes malevolent, supernatural events, comparable to the trickster nature of the god-child in many a Greek myth. One of the episodes involves Jesus making clay birds, which he then proceeds to bring to life,
an act also attributed to Jesus in the Qur'an, thus indicating the text may have had substantial influence on Arabic tradition by the 7th century.

Source :  http://en.wikipedia.org/wiki/Infancy_Gospel_of_Thomas


Jesus creates birds in Infancy Gospel of Thomas and in Quran
Jesus creates birds

In the Qur'an, Jesus forms birds out of clay,

Quran : " I fashion for you out of clay the likeness of a bird, and I breathe into it and it is a bird [Qur'an [5:110]] "

This parallels an episode in the apocryphal Infancy Gospel of Thomas where he does the same:[24]

Infancy Gospel of Thomas :"
[Jesus] then made soft clay and shaped it into twelve sparrows.[25] "

The Infancy Gospel of Thomas was written, at the earliest,in the second century or, at the latest, in the sixth century.
Source : http://en.wikipedia.org/wiki/Legends_and_the_Qur'an


Jesus speaks in the cradle in Infancy Gospel of Thomas and in Quran
The Injilu 't Tufuliyyah or the Gospel of the Infancy of Jesus Christ, contains an Arabic translation of the Infancy Gospel of Thomas and additional narratives. This contains a narrative of Jesus speaking while an infant, also contained in the Qur'an.

Quran

" But she pointed to the babe. They said: "How can we talk to one who is a child in the cradle?" He [Jesus] said: "I am indeed a servant of Allah: He hath given me revelation and made me a prophet; And He hath made me blessed wheresoever I be, and hath enjoined on me Prayer and Charity as long as I live; (He) hath made me kind to my mother, and not overbearing or miserable; [Qur'an 19:29] "


Infancy Gospel of Thomas

" Jesus spake when he was in the cradle, and called out to his mother Mary:— "Verily I am Jesus, the Son of God, the Word, whom thou hast given birth to according to the good tidings given thee by the Angel Gabriel, and my Father hath sent me for the Salvation of the World."

Source: http://en.wikipedia.org/wiki/Legends_and_the_Qur'an



இந்த புத்தகத்தின் முதல் 3 வசனங்களிலேயே இயேசு குழந்தையாக இருக்கும் போது தன் தாயாகிய மரியாளிடம் பேசியதாக எழுதப்பட்டுள்ளது.


1st Gospel of the Infancy of Christ - Verse 2 and 3 இயேசு குழந்தையாக இருக்கும் போது பேசியதாக எழுதப்பட்டுள்ளது

வசனம் 2: இயேசு குழந்தையாக தொட்டிலில் இருக்கும்போதே தன் தாயாரிடம் பேசியதாக‌, அவர் கூறுகிறார்.

வசனம் 3: மரியாளே, காபிரியேல் தூதன் உனக்கு சொன்னது போல நான் தேவனுடைய குமாரனாகிய இயேசு, உலகத்தின் இரட்சிப்பிற்காக என் பிதா என்னை அனுப்பியுள்ளார்.

2. He relates that Jesus spoke even when he was in the cradle and said to his mother :

3. Mary, I am Jesus the Son of God, that word which you brought forth according to the declaration of the angel Gabriel to you, and my Father has sent me for the salvation of the world.


இந்த புத்தகத்தை முழுவதுமாக இங்கு படிக்கலாம்:

http://wesley.nnu.edu/biblical_studies/noncanon/gospels/infgos1.htm
http://www.pseudepigrapha.com/LostBooks/infancy1.htm
http://ministries.tliquest.net/theology/apocryphas/nt/infancy1.htm


இயேசு குழந்தையாக இருக்கும் போது பேசிய நிகழ்ச்சி முதல் முதலில் சொன்னது குர்-ஆன் இல்லை என்பது தான் உண்மை. மற்றும் இயேசு இப்படி பேசினார், என்பதற்கு ஆதாரமே இல்லை. அப்படி பேசியிருந்திருந்தால், இயேசுவின் சீடர்களே, எழுதியிருப்பார்கள். மரியாளும் அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்துள்ளார் என்பதை நாம் மறக்கக்கூடாது. இப்படி இயேசு செய்யாத அற்புதத்தை, மற்ற புத்தகங்களிலிருந்து "காபி" அடித்துவிட்டு, பைபிளில் சொல்லப்படவில்லை என்று பெருமையடித்தால் எப்படி?


இஸ்லாம் கல்வி சகோதரர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்று தான், அதாவது, இயேசுவின் பிறப்பு சம்மந்தப்பட்ட இந்த குழந்தையாக இருக்கும் போது பேசிய அற்புதம், மற்றும் களிமண் பறவையை உயிர் பெறச்செய்த அற்புதம், இவைகள் முகமது பைபிளிலிருந்து காப்பி அடிக்கவில்லை, மாறாக கிறிஸ்தவர்கள், யூதர்கள் எல்லாரும் தள்ளுபடி ஆகமங்கள் என்றும், இவைகள் இறைவனின் வெளிப்படுகள் அல்ல என்றும் ஒதுக்கி தள்ளிவிட்ட புத்தகங்களிலிருந்து அவர் காப்பி அடித்துள்ளார் என்பதை மட்டும் நாங்கள் ஒத்துக்கொள்கிறோம்.

முடிவுரை: இன்னும் இயேசுவின் பிறப்பு பற்றி குர்‍ஆன் சொல்லும் விவரங்களில் உள்ள முரண்பாடுகளையும், நடைமுறைக்கு ஏற்காத விவரங்களையும் கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த பாகத்தில் காணலாம்.

 

 

சனி, 21 ஜூன், 2008

Dr. ஜாகிர் நாயக் - முகமதுவின் பேரனை கொன்றவனுக்கு அல்லா அருள் புரிவானாக‌

Dr. ஜாகிர் நாயக் - முகமதுவின் பேரனை கொன்றவனுக்கு அல்லா அருள் புரிவானாக‌

(கர்பலா போர் - ஜாகிர் நாயக் - முஸ்லீம்களின் கண்டனம்)

முன்னுரை: டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் பேசுகிறார் என்றால், இஸ்லாமியர்களுக்கு அதிக மகிழ்ச்சி. ஆனால், அவரது சில வார்த்தைகள் முஸ்லீம்களிடையே கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது.

கர்பலா போரில் முகமதுவின் பேரனை கொன்ற யாஜித்(Yazid) என்ற ஒருவரை ஜாகிர் நாயக் புகழ்ந்து பேசியதாகவும் மற்றும் கர்பலா என்ற போரானது "ஒரு அரசியல் போர்" என்று ஜாகிர் நாயக் சொன்னதாகவும் கூறப்படுகிறது. (யாஜித்(Yazid) முகமதுவின் பேரனோடு சேர்த்து 72 முஸ்லீம்களை கொன்றதாக கூறப்படுகிறது)

பொதுவாக முகமதுவின் நெருங்கிய தோழர்களின் பெயரை பயன்படுத்தும் போது "அவர் மீது அல்லா அருள் புரிவானாக" எனபது போல பொருள் வரும் "Radiallah tala anho" (May Allah be pleased with him) என்ற வார்த்தைகளை இஸ்லாமியர்கள் பயன்படுத்துவார்கள். இந்த வார்த்தையை ஜாகிர் நாயக் அவர்கள் கர்பலா போரில் முகமதுவின் பேரனை கொன்ற "யாஜித்" என்பவருக்கு சொன்னார்.

இது மட்டுமல்ல, தன் வார்த்தைகளை ஜாகிர் நாயக் அவர்கள் திரும்ப பெறாமல், தன் வாதத்தை நியாயப்படுத்த ஒரு பத்வா(இஸ்லாமிய சட்டத்தை) உதாரணம் காட்டியதாக சொல்லப்படுகிறது.

1. அரப்நியூஸ் செய்தித்தாள் கீழ் கண்டவாறு கூறுகிறது:

(Zakir Naik's Remarks on Yazid Spark Anger Among Muslims Shahid Raza Burney, Arab News )


மும்பையில் நடந்த 10 நாள் அமைதி முகாமில், நாயக் அவர்கள் யஜித் என்பவரின் பெயரை கூறியபோது, அதோடு கூட "ரதிஅல்லா தால அன்ஹூ" என்று கூறினார் மற்றும் கர்பலா என்ற போர் ஒரு "அரசியல் போர்" என்று கூறினார். இந்த அவரது கருத்தை பல இந்திய முஸ்லிம்கள் கண்டனம் தெரிவித்தார்கள். ஷியா மற்றும் சுன்னி அறிஞர்கள் நாயக் அவர்கள் இதற்கு மன்னிப்பு கோரவில்லையானால், தன் கருத்தை திரும்ப பெறவில்லையானால் இதனால் பல விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கண்டனம் தெரிவித்தனர்.



ஷியா கோஜா ஜமாத்தின் தலைவர் சப்தார் கர்மாலி கூறும் போது:

"இமாம் ஹுசைன் அவர்களின் தியாக மரணத்தை அரசியல் ஆதாயத்திற்காக செய்தார் என்றுச் சொல்லி, கீழ்தரமாக பேசிவிட்டார். டாக்டர் நாயக்கின் இந்த கூற்று முஸ்லீம்களின் மனதை புண்படுத்திவிட்டது மற்றும் இது ஷியா சுன்னி பிரச்சனையாக மாறவாய்ப்புள்ளது" என்று கூறினார்.

உலேமா கவுன்சிலின் மௌலானா மஹ்மத் தர்யபடி கூறும் போது:

"முஸ்லிம்களின் ஒரு பகுதியினரின் மனதை புண்படுத்தியதற்காக அவர் வருத்தம் தெரிவித்தாலும், அவர் தன் விமர்சனத்தை திரும்ப பெறவில்லை, அதற்கு பதிலாக, தான் சொன்னது சரியானது என்பதை நிருபிக்க ஒரு பத்வாவை ஆதாரமாக காட்டியுள்ளார். அதாவது டாக்டர் நாயக் தன் விமர்சனத்தை வேண்டுமென்றே சொல்லியுள்ளார் என்று தெரிகிறது" என்றார்.

"இந்த நேரங்களில் நாம் அமைதி காக்க வேண்டும், முஹரம் சமயத்தில் நாம் இமாம் ஹுசைன் அவர்களின் தியாக மரணத்தை நியாபகப்படுத்தி மனதில் நிருத்தவேண்டுமே ஒழிய, டாக்டர் ஜாகிர் நாயக் செய்த தவறுகளைப் பற்றி விவாதிக்க வேண்டாம்" என்று அல்தாஃப் ஷைக் என்ற ஒரு கணிப் பொறியாளர் கூறினார்.

தேசிய‌ முஸ்லீம் பிரண்ட்(National Muslim Front) இயக்கத்தின் தலைவர் அஜிம் அலம்தார் கூறினார்:

"நாயக் இப்படி மன்னிக்க முடியாத விமர்சனத்தைச் செய்து, தன் காலை தன் வாயில் வைத்துக்கொண்டார். டாக்டர் நாயக் அவர்களின் பிரச்சனை என்னவென்றால், அவருக்கு ஈகோ(தற்பெருமை) பிரச்சனை உள்ளது, இஸ்லாமிய பிரச்சனைகளை குறித்து கருத்து தெரிவிப்பதற்கு தனக்கு அதிகாரம் உண்டென்று அவர் எண்ணுகின்றார், இதனால் சில நேரங்களில் பிரச்சனை மிகவும் பெரியதாக மாறிவிடுகிறது" என்றார்.

Source: Arab News . Com

2. THE TIMES OF INDIA : (Row Over Islamic Preachers Remarks)

ஹஜ் முடித்து திரும்பி வந்த நாயக் தன் சகோதரர் முகம்மத் நாயக் மூலமாக சொன்ன விவரம்: "அந்த அமைதி முகாமில் ஒரு கேள்வி கேட்கப்பட்ட போது, நான் யாஜித் ஐ கடிந்துக்கொள்ளவும் இல்லை, புகழவும் இல்லை. நான் அவர் மீது அல்லா கிருபை புரிவானாக என்று தான் சொன்னேன். மட்டுமல்ல, நான் சொன்னது சரியானது என்பதை நிருபிக்க தருல் உலோம் டியாபண்ட் பத்வாவும் உள்ளது என்றார்.

Naik, who returned from Haj on Wednesday, conveyed his reaction through his brother Mohammed Naik: "At the peace conference, while replying to a question, I neither condemned nor lauded Yazid. I did say 'May Allah be pleased with him' while mentioning Yazid. I can show the fatwas from seminaries like Darul Uloom Deoband supporting my stand."

Source : THE TIMES OF INDIA - Row over Islamic Preachers Remarks

3. இந்திய முஸ்லீம்கள் தளம் கட்டுரை கூறுகிறது: Mind Your Words Mr. Zakir Naik

பத்வாவை பற்றி அவர் சொன்னது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஜாகிர் நாயக் அவர்கள் புகழ்பெற்ற நல்ல இஸ்லாமிய அறிஞர் என்று நான் எப்போதும் நினைத்துக்கொண்டு இருப்பேன். இந்த பத்வாக்கள் என்னத்துக்கு பிரயோஜனபப்டும், குர்‍ஆன் தெளிவாக கீழ் கண்டவாறு சொல்லும் போது:

எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்;. இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான். (குர்‍ஆன் 4:93)

மற்றும் திரு நாயக் அவர்களுக்கு குர்‍ஆன் எல்லாம் மனப்பாடம் என்று நினைக்கிறேன்,

Source: Indian Muslims . In - Mind Your Words Mr. Zakir Naik

4. Islamic Insights.com : Zakir Naik Draws Ire With Karbala Comments

பெரும்பான்மையான சுன்னி அறிஞர்கள் மற்றும் சட்ட நிபுனர்களாகிய இபின் கதிர், இபின் தைமியா மற்றும் அஹமத் பின் ஹன்பல் போன்றவர்கள் யாஜித்தை கண்டித்துள்ளார்கள் மற்றும் யாஜிதை சபிப்பதும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

Most Sunni scholars and jurists, including Ibn Kathir, Ibn Taymiyya, and Ahmad bin Hanbal, have condemned Yazid and deemed it permissible to curse him.

Source: Islamic Insights . Com - Zakir Naik Draws Ire with Karbala Comments

5. ஜாகிர் நாயக்கிற்கு இந்திய முஸ்லீம்கள் கண்டனம்: (Press Conference to condemn Dr. Zakir Naik)

டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Press Conference to condenmn Dr. Zakir Naik 01 - YouTube Link Part 1



Press Conference to condenmn Dr. Zakir Naik 02 - You Tube Link Part 2



Press Conference to condemn Dr. Zakir Naik 03 - You Tube Link Part 3




Press Conference to condemn Dr. Zakir Naik 04 - You Tube Link Part 4




Press Conference to condemn Dr. Zakir Naik 05 - You Tube Link Part 5



டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் பேசிய வீடியோ: (இந்த வீடியோ யூடியூப்லிருந்து நீக்கப்பட்டு விட்டது.)

http://www.youtube.com/watch?v=k8xtVRy3960 (This video has been removed by the user)

டாக்டர் ஜாகிர் நாயக் அளித்த மறுப்பு

REPLY BY DR ZAKIR NAIK ON KARBALA & YAZID (YAZEED)
Dr. Naik's Response



இந்த செய்தி ஏன் கிறிஸ்தவ தளத்தில் பதிக்கப்படுகிறது:

பொதுவாக, குர்‍ஆன் வசனங்கள், ஹதீஸ் வசனங்கள் இல்லாத பொதுவான கட்டுரைகளை அல்லது இஸ்லாமியர்கள் பற்றிய செய்தி கட்டுரைகளை என் தளத்தில்(ஈஸா குர்‍ஆன்) நான் பதிப்பதில்லை. ஆனால், இந்த செய்தியை மட்டும் என் தளத்தில் பதிக்க நான் விரும்புகிறேன், ஏனென்றால்,

1. டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் எது சொன்னாலும், என்ன சொன்னாலும் மற்ற மார்க்கம் பற்றி எந்த தவறான கருத்தைச் சொன்னாலும் அதை அப்படியே பரிசோதித்துப் பார்க்காமல் அப்படியே கேட்கும் முஸ்லீம்கள், இப்போது தங்கள் நம்பிக்கைப் பற்றி இவர் சொன்ன விவரங்கள் தவறு என்று சொல்கிறார்கள். என‌வே, திரு ஜாகிர் நாய‌க் அவ‌ர்க‌ள் ஆக‌ட்டும், அல்ல‌து பிஜே அவ‌ர்க‌ள் ஆக‌ட்டும், அல்ல‌து வேறு யாராக‌ இருந்தாலும் ச‌ரி என்னோடு சேர்த்து, ஏதாவ‌து விவ‌ர‌ம் சொன்னால், அது ச‌ரியான‌தா என்று கேள்வி கேட்டு ஆதார‌ம் தேடிப் பார்க்க‌வேண்டும், அது தான் ச‌ரியான‌ வ‌ழிமுறை என்பதை இஸ்லாமியர்கள் அறிய வேண்டும்.

2. பெரும்பான்மையாக இபின் கதிர் போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் குர்‍ஆன் வசனங்களுக்கு, ஹதீஸ்களுக்கு சொல்லும் உரையை நான் என் கட்டுரைகளில் பயன்படுத்துகிறேன், அதையெல்லாம் நம் இஸ்லாமியர்கள் தவறு என்று சொல்லிவிடுவார்கள். ஆனால், இப்பொது தங்களுக்கு என்று ஒரு பிரச்சனை என்று வரும் போது, இபின் கதிர் போன்ற சுன்னி இஸ்லாமிய அறிஞர்களே, யாஜித்தை கண்டித்துள்ளார்கள், அப்படி இருக்கும் பொது, ஜாகிர் நாயக் எப்படி யாஜித்துக்கு மதிப்பு தரலாம் என்று கேட்கிறார்கள்.

3. ஜாகிர் நாயக் அவர்கள் யாஜித்துக்கு மதிப்பு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் கிறிஸ்தவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால், இஸ்லாமை ஜாகிர் நாயக் சரியாக புரிந்துக்கொள்ளவில்லை என்று அவர் மீது குற்றம் சுமத்தப்படும் போது எப்படி அவர் மற்றவர்களின் வேத வசனங்களுக்கு பொருள் தருகிறார், மற்றும் நான் சொல்வது தான் சரியானது நீங்கள் சொல்வது தவறானது என்றுச் சொல்கிறார் என்பது தான் எனக்கு ஆச்சரியத்தை தருகிறது.


முடிவுரை: தன் வினை தன்னைச் சுடும்.

ஞாயிறு, 15 ஜூன், 2008

பைபிள் மீது முஸ்லீம்களின் குற்றச்சாட்டு அம்பளம் - இஸ்லாமிய நபிகளும், பாவங்களும் - 2



இஸ்லாமிய நபிகளும், பாவங்களும் - 2

(பைபிள் மீது முஸ்லீம்களின் குற்றச்சாட்டு அம்பளம்)


தமிழ் கிறிஸ்தவர்களின் முன்னுரை: தமிழ் முஸ்லீம்கள் கடந்த சில மாதங்களாக பைபிளுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை சொல்லிக்கொண்டு வருகிறார்கள். அவைகளில் முக்கியமானது:





பைபிள் நபிகளை(தீர்க்கதரிசிகளை)ப் பற்றி தரம் குறைவாக விவரிக்கிறது என்ற குற்றச்சாட்டாகும்.




முக்கியமாக தாவீது உரியாவை கொன்று அவன் மனைவியை தன் மனைவியாக்கிக் கொண்ட நிகழ்ச்சி தவறானது, இப்படி அவர் செய்யவில்லை. பைபிள் தவறாக இப்படிச் சொல்கிறது. அல்லாவின் நபிகள் இப்படி அநியாயமாக ஒரு பெண்ணின் மீது மோகம் கொண்டு கொலை எல்லாம் செய்யமாட்டார்கள் என்று பலவாறு குற்றம் சாட்டுகிறார்கள்.



உரியாவின் மனைவியாகிய பெத்செபாளுக்கும் தாவீதுக்கும் பிறந்தவர் தான் சாலொமோன் என்று பைபிள் கூறுகிறது. ஆனால், இதற்கு உயர் மட்ட இஸ்லாமிய அறிஞர்கள் முதற்கொண்டு, சராசரி சாதாரண முஸ்லீம் வரை அனைவரும் பைபிளை இந்த விஷயத்தில் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால்:





1. தாவீது உரியாவின் மனைவி மீது மோகம் கொண்டார் என்றும்,

2. தாவீது உரியாவை திட்டமிட்டு கொன்றார் என்றும்,

3. தாவீதின் பாவத்தை அல்லா அவருக்கு உணர்த்தினார் என்றும்,

4. பிறகு தாவீது தன் பாவத்திற்காக அல்லாவிடம் பாவ மன்னிப்பு கோரினார் என்றும்




குர்‍ஆனின் வசனங்களும், இஸ்லாமிய பாரம்பரியமாகிய ஹதீஸ்களும், ஆரம்ப கால இஸ்லாமிய அறிஞர்களும், குர்‍ஆனுக்கு உரை எழுதிய இஸ்லாமிய அறிஞர்களும் ஏக மனதாக ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை மட்டும் நம் தமிழ் முஸ்லீம்கள் மறைக்கிறார்கள் அல்லது இவர்களுக்கு இதைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

நாம் முதல் பாகமாக, "இஸ்லாமிய நபிகளும், பாவங்களும் - 1" என்ற கட்டுரையை வெளியிட்டோம், இப்போது இரண்டாம் பாகமாக, தாவீது உரியாவை கொன்று அவன் மனைவியை எடுத்துக்கொண்ட விவரங்களை குர்‍ஆன் மற்றும் இஸ்லாமிய மூலங்களிலிருந்து அலசுவோம்.

பிஜே அவர்கள் முதல் புத்தம் புதிய இஸ்லாமிய தளங்கள் வரை அனைவரும் பைபிள் மீது இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இவர்கள் எல்லாருக்கும் எங்கள் பதிலாக இக்கட்டுரையை முன்வைக்கின்றோம்.

இஸ்லாமிய நபிகளும், பாவங்களும் பாகம் - 1ஐ படிக்க இங்கு சொடுக்கவும்

பாகம் 2 தொடர்கிறது...



இஸ்லாமிய நபிகளும், பாவங்களும் - 2

(பைபிள் மீது முஸ்லீம்களின் குற்றச்சாட்டு அம்பளம்)


Islam and the Sins of the Prophets By Sam Shamoun

கடைசி எடுத்துக்காட்டாக தாவீது மற்றும் பெத்செபாளைப் பற்றி சிந்திக்கப்போகிறோம். குர்‍ஆனிலே இந்த நிகழ்ச்சி சம்மந்தப்பட்ட சில மறைமுக குறிப்புக்கள் உள்ளன.





தாவீதை சந்தித்த இரண்டு வழக்காளிகள் பற்றி குர்‍ஆன் வசனங்கள் - குர்‍ஆன் 38:21-24,30


அந்த வழக்காளிகளின் செய்தி உமக்கு வந்ததா? அவர்கள் (தாவூது இறைவணக்கத்திற்காக அமைத்திருந்த) மிஹ்ராபின் சுவரைத் தாண்டி - (38:21)

தாவூதிடம் நுழைந்த போது அவர்; அவர்களைக் கண்டு திடுக்குற்றார்; அப்போது அவர்கள் கூறினார்கள்; "பயப்படாதீர்! நாங்களிருவரும் வழக்காளிகள்; எங்களில் ஒருவர் மற்றவர் மீது அநீதம் செய்திருக்கிறார்;; எங்களிருவருக்கிடையில் நீதத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பீராக! (அதில்) தவறிழைத்து விடாதீர்! எங்களைச் செவ்வையான பாதைக்கு நேர்வழி காட்டுவீராக!" (38:22)

(அவர்களில் ஒருவர் கூறினார்;) "நிச்சயமாக இவர் என்னுடைய சகோதரர்; இவரிடம் தொண்ணூற்றொன்பது ஆடுகள் இருக்கின்றன் ஆனால் என்னிடம் ஒரே ஓர் ஆடுதான் இருக்கிறது அவர் அதனையும் தனக்குக் கொடுத்துவிட வேண்டுமெனச் சொல்லி, வாதத்தில் என்னை மிகைத்து விட்டார்." (38:23)

(அதற்கு தாவூது;) "உமமுடைய ஆட்டை அவர் தம்முடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படிக் கேட்டது கொண்டு நிச்யசமாக அவர் உம்மீது அநியாயம் செய்து விட்டார்; நிச்சயமாகக் கூட்டாளிகளில் பெரும்பாலோர் - அவர்களில் சிலர் சிலரை மோசம் செய்து விடுகின்றனர்; ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்பவர்களைத் தவிர இத்தகையவர் சிலரே" என்று கூறினார்; இதற்குள்; "நிச்சயமாக நாமே அவரைச் சோதித்து விட்டோம்" என்று தாவூது எண்ணித் தம்முடைய இறைவனிடம் மன்னிப்பு கோரிக்குனிந்து விழுந்தவராக இறைவனை நோக்கினார். (38:24)

இன்னும் தாவூதுக்கு(ப் புதல்வராக) ஸுலைமானை வழங்கினோம்; சிறப்பான (நம்) நல்லடியார், நிச்சயமாக அவர் (எதிலும் நம்மையே) நோக்குபவர். (38:30)




இந்த கதை நமக்கு 2 சாமுவேல் 12:1 லிருந்து 14ம் வசனம் வரை உள்ள நிகழ்ச்சியை நியாபகப்படுத்துகிறது. இந்த நிகழ்ச்சியில் நாத்தான் என்பவர் தாவீது செய்த தவறை "ஒரு பணக்காரன் எப்படி தன் அயலகத்தானுடைய ஆட்டை ஏமாற்றி எடுத்துக்கொண்டார் என்று உவமையாக" சொல்லி வெளிப்படுத்தினார். ஆனால், குர்‍ஆன் மற்றும் பைபிள் சொல்லும் விவரங்கள் இரண்டிற்கும் உள்ள ஒரே ஒரு மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், நாத்தான் சொன்ன ஒரு உவமைக்கதையை குர்‍ஆன் ஒரு சரித்திர நிகழ்வாக மாற்றி சொல்லியுள்ளது!

இது குர்‍ஆனின் ஆசிரியருக்கு எது சரித்திர நிகழ்ச்சி என்பதை பகுத்தறியும் ஞானம் இல்லை என்பதை காட்டும் இன்னொரு அத்தாட்சியாகும்: மேலும் அறிய படிக்கவும்:




Quran External Contradictions
Quran's History Compressions



பொதுவாக, இரண்டு பேர் அரச சபைக்குச் சென்று தங்கள் பிரச்சனையை அரசரிடம் சொல்லி தீர்த்துக்கொள்ளும்படி முடிவு செய்தால் அதற்கு முன்பு பல முறை சிந்தித்துப்பார்ப்பார்கள். முக்கியமாக வழக்காடுபவர்கள் இரண்டு பேர் இருந்தால், நிச்சயமாக பல முறை யோசிப்பார்கள். ஒரு ஏழை, அரசர் தனிமையில் இருக்கும் போது, தன்னை ஏமாற்றிய பணக்காரனை தன்னோடு கூட‌ அரசரிடம் முதல் விசாரணைக்கு அழைத்துச் செல்லமுடியுமா என்பது கற்பனை செய்து பார்ப்பதும் கடினமே. அவ்வளவு ஏன், பொதுவாக அரசர் மக்களுக்கு முன்பாக அரச சபையில் இருக்கும் போதும் கூட அழைத்துச் செல்லமுடியாது. நிஜ உலக நிகழ்வுகளை நாம் கவனிக்கும் போது, ஏமாற்றப்பட்டவன் அல்லது நஷ்டமடைந்தவன் அரசரிடம் சென்று தன் வழக்கை முதலாவது சொல்லுவான். அதன் பிறகு தான் காவல் துறையினர் அல்லது அரச காவலாளிகள் சென்று குற்றம் இழைத்தவனை அரச நீதிமன்றத்திற்கு அழைத்துவருவார்கள். ஆனால், குர்‍ஆன் சொல்லும் நிகழ்ச்சியை கண்ணோக்கினால், இப்படி நடந்ததாக நிச்சயமாக தெரியவில்லை. ஒரு சரியான பகுத்தறிவுடன் நாம் இதை அனுகினால், பைபிள் சொல்லும் நிகழ்ச்சியே மிகவும் சரியானதாகவும்,மற்றும் உண்மையானதாகவும் இருக்கமுடியும் என்பதை நாம் கவனிக்கமுடியும். இந்த நிகழ்ச்சி பற்றிய மேலதிக விவரங்கள் இந்த கட்டுரையில் "I am ALL the Prophets" விவாதிக்கப்பட்டுள்ளது.

1. அல்-தபரி(Al-Tabari) சரித்திர நூலிலிருந்து ஆதாரம்:



இந்த நிகழ்ச்சியை மேலும் தொடர்ந்து பார்ப்போம். இதை படிக்கும் உங்களுக்கு இது ஆச்சரியமாக கூட‌ இருக்கலாம். இஸ்லாமிய ஆரம்ப கால அறிஞர்கள் குர்‍ஆன் சொல்லும் இந்த கதை "தாவீதையும், பெத்செபாளையும்" பற்றிய நிகழ்ச்சியை குறிக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இருந்தது இல்லை. கீழே கொடுப்பட்ட விவரங்கள் அல்-தபரி(Al-Tabari) என்ற சரித்திர நூலிலிருந்து எடுத்தது:



ஒரு நாள், தாவீது தன் முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபுக்கு இறைவனிடம் எவ்வளவு மதிப்பு இருந்ததோ அது போல மதிப்பு தனக்கும் தேவை என்று தன் இறைவனிடம் வேண்டிக்கொண்டார். இறைவன் எப்படி முற்பிதாக்களை சோதித்தாரோ மற்றும் பிறகு அவர்களுக்கு எப்படி கிருபை பொழிந்தாரோ அது போல, தன்னை சோதித்து, நல்ல பலனை தனக்கு அருளும்படி தாவீது இறைவனிடம் வேண்டிக்கொண்டார்.

முஹம்மத் பி. அல்ஹுசைன் அஹமத் பி. அல்முஃபட்டல் அஸ்பத் சொல்கிறார்:

அல்‍-சுத்தி கூறுகிறார், தாவீது தன் நேரத்தை மூன்று பாகங்களாக(நாட்களாக) பிரிந்திருந்தார். முதல் நாளை தன் மக்களோடு கழிப்பார், அடுத்த நாளை தன் இறைவனின் பாதத்தில் கழிப்பதற்கு ஒதுக்குவார், மற்றும் மூன்றாம் நாளை தன் மனைவிகளோடு கழிப்பதற்கு ஒதுக்குவார், அந்த சமயத்தில் அவருக்கு 99 மனைவிகள் இருந்தார்கள். அவர் புத்தகங்களில் படித்தார், ஆபிரகாமின், ஈசாக்கின் மற்றும் யாக்கோபின் விசேஷித்த தன்மையை அவர் கண்டுக்கொண்டார். இவைகளை அவர் படித்து கண்டுபிடித்த பிறகு, அவர்: "ஓ இறைவா! என் முற்பிதாக்கள் நல்ல நிலையை பெற்று இருந்தார்கள், அவர்களுக்கு இருந்த அதே நிலையை எனக்கும் அருளுங்கள்" என்று வேண்டிக்கொண்டார்.

பிறகு இறைவன் அவருக்கு அறிவித்தார்(Inspired him): "உன் முற்பிதாக்கள் பல விதங்களில் கடினமாக சோதிக்கப்பட்டார்கள், ஆனால் இதுவரை இப்படி நீ சோதிக்கப்படவில்லை. ஆபிரகாம் தன் மகனை பலி கொடுக்கும்படி சோதிக்கப்பட்டார், ஈசாக்கு தன் கண்பார்வையை இழந்தார், மற்றும் யாக்கோபு தன் மகனாகிய யோசேப்பிற்காக மிகவும் அதிக துக்கத்தை அனுபவித்தார். ஆனால், நீ இப்படிப்பட்ட எந்த சோதனையையும் இன்னும் அனுபவிக்கவில்லை" என்றார். அதற்கு தாவீது: "ஓ இறைவா! அவர்களை சோதித்து அவர்களுக்கு நீங்கள் எதை கொடுத்தீர்களோ, அதே போல என்னையும் சோதித்து எனக்கும் நன்மையை கொடுங்கள்" என்று வேண்டிக்கொண்டார்.

இறைவன் தாவீதுக்கு
"நீ சோதிக்கப்படப் போகிறாய், எனவே, நீ உன்னை காத்துக்கொள்" என்றார். இறைவன் விரும்பும் நேரம்வரும் வரை தாவீது காத்துக்கொண்டு இருந்தார். பிறகு சாத்தான் ஒரு பொன் புறாவின் உருவத்தில் வந்தான். தாவீது நின்றுக்கொண்டு தொழுதுக்கொண்டு இருக்கும் போது, அப்புறா அவர் பாதத்தின் அருகே வந்து அமர்ந்தது. இந்த செய்தியை சொல்பவர் தொடர்ந்துச் சொன்னார். தாவீது தன் கைகளால் அந்தப் புறாவை பிடிக்க முயன்றார், ஆனால், அது உடனே விலகிச்சென்றது. அவர் அதை தொடர்ந்துச் சென்றார், ஆனால், அப்புறா தூரமாகச் சென்று ஒரு மேற்கூறையில் நின்றது. அந்த புறா எங்கு நின்றது என்று தெரிந்துக்கொள்ள அவர் அதை தொடர்ந்துச் சென்றார்.

அங்கே ஒரு பெண் தன் வீட்டின் மேற் கூறையில் குளிப்பதை தாவீது கண்டார், அந்தப் பெண் மிகுந்த அழகுடையவளாக காணப்பட்டாள். அந்தப்பெண் திரும்பும் போது, தாவீதைக் காண நேரிட்டது, அவள் தன் தலைமுடியினால் தன் உடல் முழுவதையும் மூடிக்கொண்டாள். அதனால், அப்பெண்ணின் மீது, தாவீதின் ஆசை அதிகரித்தது.

தாவீது அந்த பெண்ணைப்பற்றிய விவரங்களை கேட்டனுப்பினார், அவளுடைய கணவன் இன்ன இன்ன இடத்தில் போருக்கு சென்றுள்ளார் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது. உரியாவை[Sam- Arabic, Ahriya/Awriya] ஒரு குறிப்பிட்ட எதிரி படைகளுக்கு முன்பாக அனுப்பும்படி அந்த யுத்த களத்தில் உள்ள தளபதிக்கு தாவீது ஒரு கட்டளையை எழுதி அனுப்பினார். தளபதி உரியாவை அப்படியே அனுப்பினார், ஆனால், அந்த எதிரிகளின் மீது உரியா வெற்றிக்கொண்டான். தளபதி உரியாவின் வெற்றியைப் பற்றி தாவீதுக்கு செய்தி அனுப்பினார். மறுபடியும் தாவீது, முன்பை விட பலசாலிகளான ஒரு குறிப்பிட்ட எதிரிகளுக்கு முன்பாக உரியாவை நிறுத்தும்படி சொல்லியனுப்பினார். தளபதியும் அப்படியே செய்தார், இந்த முறையும் உரியா அந்த எதிரிகள் மீது வெற்றிப்பெற்றார். இந்த இரண்டம் வெற்றியைப் பற்றி தளபதி மறுபடியும் எழுதி அனுப்பினார்.
தாவீது மறுபடியும் ஒரு குறிப்பிட்ட எதிரிகளுக்கு முன்பாக உரியாவை அனுப்பும்படி செய்தி அனுப்பினார். தளபதியும் அப்படியே செய்தார், இந்த மூன்றாம் முறை உரியா யுத்தத்தில் கொலை செய்யப்பட்டார்.

தாவீது உரியாவின் மனைவியை திருமணம் செய்துக்கொண்டார். அந்தப் பெண் தாவீதோடு வந்து சேர்ந்து சில நாட்களே ஆனபோது, இறைவனால் மனித வடிவில் அனுப்பப்பட்ட இரண்டு தூதர்கள், தாவீதை சந்திக்க வேண்டுமென்று அனுமதி கோரினார்கள். ஆனால், அந்த நாள் தாவீது இறைவனை தொழுதுக்கொள்ளும் நாள் என்பதால், காவலாளிகள் அவர்களை உள்ளே விடவில்லை. எனவே, அந்த இரண்டு பேரும் தாவீது இருக்கும் தனிமையான அறையின் உள்ளே ஆச்சரியமான விதத்தில் நுழைந்தார்கள். தாவீது தொழுதுக்கொண்டு இருந்ததால், இவர்கள் உள்ளே வந்தது பற்றி அறியவில்லை. ஆனால், திடீரென்று அவர்கள் தனக்கு முன்பாக உட்கார்ந்து இருப்பதைக் கண்டு திடுக்குற்றார்; அப்போது அவர்கள் கூறினார்கள்; "பயப்படாதீர்! நாங்களிருவரும் வழக்காளிகள்; எங்களில் ஒருவர் மற்றவர் மீது அநீதம் செய்திருக்கிறார்;; எங்களிருவருக்கிடையில் நீதத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பீராக! (அதில்) தவறிழைத்து விடாதீர்!" இதன் பொருள் தவறாக செயல்படாதீர் என்பதாகும். மற்றும் "எங்களைச் செவ்வையான பாதைக்கு நேர்வழி காட்டுவீராக!" தாவீது "உங்கள் வழக்கு என்ன என்று கேட்டார்", அதற்கு ஒருவன் "
இவர் என் சகோதரர், இவரிடம் தொண்ணூற்றொன்பது ஆடுகள் இருக்கின்றன, ஆனால் என்னிடம் ஒரு ஆடு மட்டும் தான் உள்ளது. இவர் தன்னிடம் உள்ள ஆடுகளின் எண்ணிக்கை நூறு ஆகவேண்டும் என்பதற்காக‌, என்னிடம் உள்ள அந்த ஒரு ஆட்டையும் எடுத்துக்கொள்ள விரும்புகிறார்" என்றார்.

தாவீது மற்றவனைப் பார்த்து, "இதற்கு உன் பதில் என்ன?" என்றுக் கேட்டார். அதற்கு அவன், "என்னிடம் 99 ஆடுகள் இருக்கின்றன, இந்த என் சகோதரனிடம் ஒரு ஆடு இருக்கின்றது, என்னிடம் உள்ள ஆடுகளின் எண்ணிக்கை 100 ஆக வேண்டும் என்பதற்காக, இவனிடம் உள்ளதை நான் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்" என்றான். அதற்கு தாவீது, "உன் சகோதரன் தன் ஆட்டை உனக்கு கொடுக்க விரும்பவில்லையானாலும், நீ அதை எடுத்துக்கொள்வாயா?" என்று கேட்டார். அதற்கு அவன், "ஆம், அவன் விரும்பவில்லையானாலும் நான் எடுத்துக்கொள்வேன்!" என்றான். தாவீது "அப்படியானால், அதை நீ எடுத்துக்கொள்ள நாங்கள் உன்னை அனுமதிக்கமாட்டோம்" என்றார். அதற்கு அவன் பதிலாக "உங்களால் அதை தடுக்க முடியாது" என்றான். தாவீது "நீ அதை எடுத்துக்கொள்ள முயற்சி செய்தால், உன்னை அங்கும் இங்குமாக அடிப்போம்" என்றார். [அஸ்பத் "அங்கும் இங்கும்" என்பதற்கு "உன் மூக்கிலும், நெற்றியிலும் அடிப்போம்" என்று பொருள் கூறுகிறார்.]
அதன் பிறகு அந்த மனிதன் "ஓ தாவீதே, அங்கும் இங்கும் அடி வாங்க நீ அதிகமாக தகுதியானவன், ஏனென்றால், உனக்கு 99 மனைவிகள் இருக்கிறார்கள், ஆனால் உரியாவிற்கு ஒரே ஒரு மனைவி உண்டு. ஆனால், அவன் போர்க்களத்தில் மரிக்கும் வரை நீ தொடர்ந்து செயல்பட்டு, அவன் மரித்த பிறகு அவன் மனைவியை திருமணம் செய்துக்கொண்டாய்" என்றான்.

தாவீது திரும்பி பார்க்கும் போது, தன் அறையில் யாரையும் காணவில்லை. பிறகு அவர் என்ன நடந்தது என்று புரிந்துக்கொண்டார், மற்றும் தான் எப்படி சோதிக்கப்பட்டார் என்பதையும் அறிந்துக்கொண்டார். அவர் தாழவிழுந்து அழுதார். அவர் அப்படி விழுந்துக்கிடந்து 40 நாட்கள் அளவும் அழுதுக்கொண்டு இருந்தார். ஒரு சில முக்கியமான தேவையின் போது மட்டும் தன் தலையை மேலே உயர்த்தினார், பிறகு மறுபடியும் விழுந்துகிடந்து அழுதுக்கொண்டே இருந்தார். அவர் தொழுதுக்கொண்டார், எதுவரைக்கும் என்றால், தன் கண்ணீரினால் மண் நனைந்து புல் முளைக்கும் நாட்கள் அளவிற்கு தொழுதுக்கொண்டார்.

நாற்பது நாட்கள் கடந்த பிறகு, இறைவன் அவருக்கு வெளிப்படுத்தினார்(Inspired), "ஓ தாவீதே, உன் தலையை மேலே எழுப்பு, நான் உன்னை மன்னித்து விட்டேன்." தாவீது சொன்னார், "ஓ இறைவா! நீ என்னை மன்னித்தாய் என்று நான் எப்படி அறிந்துக்கொள்வேன், ஏனென்றால், நீ யாருக்கும் நியாயத்தீர்ப்பில் தயவு தாட்சனை காட்டாத நீதிபதி அல்லவா? நியாயத்தீர்ப்பு நாளிலே உரியா தன் வலது அல்லது இடது கையிலே தன் தலையை வைத்துக்கொண்டு உனக்கு முன்பாக நிற்கும் போது, அவனுடைய கழுத்து நரம்புகளிலிருந்து இரத்தம் பீறிட்டுக்கொண்டு வெளியே வந்து உன் சிங்காசனத்தின் முன்பு விழும்போது, அவன் "ஓ இறைவா!, இந்த மனிதன் என்னை ஏன் கொலை செய்வித்தான்? என்று கேளுங்கள்" என்று கேட்பானே?" என்றார். இறைவன் மறுபடியும் தாவீதுக்கு வெளிப்படுத்தினார், "ஒரு வேளை நீ சொன்னது போலவே நடக்குமானால், நான் உரியாவை அழைத்து, உனக்காக எனக்கு ஒரு வெகுமதியாக கொடுக்கச்சொல்வேன், பிறகு அவன் உன்னை எனக்கு கொடுப்பான் மற்றும் அதற்கு பதிலாக நான் உரியாவிற்கு சொர்க்கத்தைக் கொடுப்பேன்." பிறகு தாவீது, "ஓ இறைவா! நீ என்னை மன்னித்துவிட்டாய் என்று இப்போது நான் அறிந்துக்கொண்டேன்" என்றார். அதன் பிறகு தான் மரிக்கும் நாள் வரை தாவீது வெட்கத்தினால், தன் கண்களை வானத்திற்கு நேரே ஏறெடுத்துப் பார்க்கவில்லை.

அலிப் ஷஹல் எனக்கு அறிவித்தார் – அல்-வலித் பி முஸ்லீம்- அப்த் அல்-ரஹ்மான் பி யாஜிப் பி ஜபீர் - அட அல்குரசானி:

தாவீது தான் செய்த பாவத்தை மறக்காமல் இருப்பதற்காக, அதை தன் கையின் உள்ளங்கையில் எழுதிவைத்துக்கொண்டார். எப்போதெல்லாம், அதை அவர் அதை பார்ப்பாரோ, அவரது கைகள் நடுக்கம் காணும்.

(The History of Al-Tabari, Volume III, The Children of Israel, trans. William M. Brunner [State University of New York Press, Alban 1991], pp. 144-146; bold emphasis ours - see the below Addendum for more of Al-Tabari)

அல் டபரியின் இந்த நிகழ்ச்சிப் பற்றி இன்னும் அறிய, இக்கட்டுரையின் கடைசியில் கொடுக்கப்பட்ட "பின் குறிப்புக்களை - Addendum " படிக்கவும்.



2. முஹம்மத் இபின் அப்த் அல்லா அல் கிசை கீழ் கணட விவரங்களைச் சொல்கிறார்:

தாவீது அந்த பறவையின் அழகில் மயங்கினார் மற்றும் அதன் அழகை விவரிக்க இயலாத ஒன்றாக கண்டார். அவர் தனக்குள், "இது நிச்சயமாக சொர்க்கத்தின் பறவைகளில் ஒன்றாக இருக்கவேண்டும்" என்று சொல்லிக்கொண்டார். அவர் கையினால் அதை பிடிக்க முயன்றார், ஆனால், அது கையில் சிக்காமல் பறந்துவிட்டது. தன் மாளிகையின்(Tower) அருகே இருந்த ஒரு குளத்தின் பக்கத்தில் இருந்த ஒரு மரம் வரை அந்த பறவை பறந்துச்சென்று, பிறகு மறைந்துவிட்டது. அவர் அந்த பறவையை தேடிக்கொண்டு இருக்கும் போது, அந்த குளத்தின் பக்கத்தில் உள்ள ஒரு மரத்தில் அதைக்கண்டார், சாதாரணமாக இஸ்ரவேல் பெண்கள் அந்த குளத்தில் குளிப்பது வழக்கம். தாவீது அந்த பக்கமாக வரும் போது, ஒரு பெண் தன் மேல் தண்ணீர் ஊற்றி குளிக்கும் சத்தத்தை அவர் கேட்டார். அந்தப்பெண் குளிப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். அந்தப்பெண் மிகவும் அழகுள்ளவள், அவளின் பெயர், பெத்ஷெபா என்பதாகும். அவள் ஹன்னானின் மகனான உரியாவின் மனைவி மற்றும் அவள் ஜோஷுவாவின் மகளாவாள். அந்த வருடமே அவளுக்கு திருமணமாகி இருந்தது, இன்னும் அவள் கர்ப்பமாகவில்லை. தாவீதின் சொந்தக்காரனான ஜருயாவின் மகனான நாபாலின் தலைமையின் கீழ் இப்பெண்ணின் கணவன் உரியா போர்க்களத்தில் இருந்தான், அவன் அங்கு கொல்ல‌ப்பட்டான். (தாவீது தன் இனத்தானான நாபாலிடம் உரியாவை யுத்தகளத்தில் முன்வரிசையில் நிறுத்தும்படி கட்டளையிட்டு சொல்லியனுப்பியதாகவும், நாபாலும் அப்படியே செய்ததாகவும், உரியா மரித்தவுடன், தாவீது உரியாவின் மனைவி பெத்செபாளை திருமணம் செய்துக்கொண்டதாகவும், அறிவிக்கப்பட்டது)

இறைவன் காபிரியேல் மற்றும் மிகாவேல் என்ற தூதர்களை அழகான உருவத்துடன் பூமிக்குச் சென்று, தாவீது செய்த பாவத்தை(Transgression) அவருக்கு தெரிவிக்கும்படி கட்டளையிட்டார். "இறைவா! வரம்பு மீறி தீமை செய்பவர்களை மன்னிக்காமல் இரும், மற்றும் ஒடுக்குகிறவர்களின் கைகளிலிருந்து ஒடுக்கப்படுபவர்களை பாதுகாத்தருளும்" என்று சொல்லி தொழுதுக்கொண்டு இருக்கும் போது, இரண்டு தூதர்கள் மாளிகையின் மேற்கூறையிலிருந்து மனித வடிவில் இறங்கி வந்தனர். அவர்கள் வழக்காளிகளாக சொல்லிக்கொண்டு வந்தனர், அவர்களில் ஒருவர் வலுவானவர், இன்னொருவர் பலவீனமானவர், இவர்கள் தாவீதுக்கு முன்பாக நின்றனர். தாவீது அவர்களை கண்டவுடன் மிகவும் நடுக்கமுற்றார் மற்றும் தன் கையில் இருந்த சங்கீத புத்தகத்தை(Book of Psalms) நழுவவிட்டார் மற்றும் பயத்துடன் காணப்பட்டார்.

அவர்கள், "சட்டத்தை மீறுகிறவர்கள் மீது கடுமையாக இருப்பரே, பயப்படாதீர், மற்றும் நாங்கள் சொல்வதை கேட்பீராக, நாங்கள் வெகு தூரமுள்ள இடத்திலிருந்து வந்துள்ளோம் என்றுச் சொன்னார்கள்.", அந்த வழக்காளிகளின் செய்தி உமக்கு வந்ததா? அவர்கள் (தாவூது இறைவணக்கத்திற்காக அமைத்திருந்த) மிஹ்ராபின் சுவரைத் தாண்டி - …. தாவூதிடம் நுழைந்த போது அவர்; அவர்களைக் கண்டு திடுக்குற்றார்; ….(38:21,22)

தாவீது தன் நியாயத்தீர்ப்பு அளிக்கும் ஆசனத்தில் உட்கார்ந்துக்கொண்டு, உங்கள் வழக்கு என்ன? என்று கேட்டார்.

காபிரியேல், "ஓ இறைவனின் தீர்க்கதரிசியே, இவர் என் சகோதரர், இவரிடம் 99 ஆடுகள் இருக்கின்றன, அவைகள் வெண்மையான வண்ணமுடையவைகள் மற்றும் கொழுத்த ஆடுகளும் கூட‌, பல முறை அவைகள் குட்டிகளையும் பெற்றுள்ளன; எனக்கு ஒரே ஒரு ஆடு மட்டும் உள்ளது: என் சகோதரர் என்னிடம், "உன்னிடம் உள்ள அந்த ஒரு ஆட்டை எனக்கு கொடுத்துவிடு" என்று கேட்கிறார், இதனால் அவர் என்னிடம் தொடர்ந்து வழக்காடிக்கொண்டு இருக்கிறார்( பார்க்க குர்‍ஆன் 38:24) என்றார். இதைப்பற்றி என் இறைவனிடம் நான் முறையிட்டேன், நீங்கள் பூமியில் அவரது பிரதிநிதியாக இருப்பதால், உங்களிடம் போகும்படிக்கு நாங்கள் அனுப்பப்பட்டோம்.

தாவீதின் கோபம் அதிகரித்தது மற்றும் அவர் "உன் சகோதரர் தன்னிடம் ஆடுகள் இருந்தும் உன்னுடையை ஆடுகளை கேட்பதால், அவர் தவறு செய்கிறார், ஒன்றாக சேர்ந்து வியாபாரம் செய்யும் மனிதர்கள் இப்படி ஒருவருக்கு ஒருவர் தீமை செய்வதுண்டு, அது போலத்தான் உன் சகோதரர் உனக்கு எதிரான தீமையை புரிந்துள்ளார்" என்றார் (பார்க்க குர்‍ஆன் 38:25)

மிகாவேல் பேசினார், "ஓ இறைவனின் தீர்க்கதரிசியே, நீங்கள் சரியான முடிவை(தீர்ப்பை) சொல்லவில்லை, ஏனென்றால், அவன் தன் கூட்டாளியாக இல்லாதவனுக்கு தீமை செய்யலாம் அல்லவா?"

இந்த வார்த்தகளைக் கேட்டு, தாவீது கோபத்தால் கொதித்தார், தன் கையில் ஒரு தடியை எடுத்துக்கொண்டு, "இந்த தடியால் உன்னை அடிப்பேன்" என்றார்.

தாவீதின் கையிலுள்ள தடியானது, "ஓ தாவீதே, இது தான் நீ சட்டத்தை மீறுபவர்களுக்கு அளிக்கும் தண்டனையாக இருக்குமானால், நீ ஒரு சட்டத்தை மீறியவன் தான்" என்று கத்தியது.

மிகாவேல் தூதன் புன்னகைத்து இப்படியாகச் சொன்னார், "என்னை விட தடியடி வாங்க நீர் அதிக தகுதியானவர், நீர் முதல் வழக்காளியின் வாதத்தை கேட்டு, பிரதிவாதியின் வாதத்தை கேட்காமலேயே தீர்ப்பு சொல்லியுள்ளீர்". இப்படியாகச் சொல்லி அவர்கள் இருவரும் எப்படி உள்ளே வந்தார்களோ அதே வண்ணமாக கூறையை தாண்டி மேலே எழும்பி சென்றுவிட்டனர். "நிச்சயமாக நாமே அவரைச் சோதித்து விட்டோம்" என்று தாவூது எண்ணித் தம்முடைய இறைவனிடம் மன்னிப்பு கோரிக்குனிந்து விழுந்தவராக இறைவனை நோக்கினார். ( பார்க்க குர்-ஆன் 38:24) " அவர் வேதனையோடு தன்னை தாழ்த்தி நாற்பது நாட்கள் அப்படியே விழுந்துகிடந்தார். தன் முகத்தின் சதை தொங்கும் அளவிற்கும், தன் கண்ணீரினால் பூமியில் புல் முளைக்கும் அளவிற்கும் அவர் அப்படியே விழுந்துகிடந்தார். இதைக்கண்டு தேவத்தூதர்கள் இறைவனிடம், "எங்கள் இறைவனே, உன்னுடைய தீர்க்கதரிசியும், மற்றும் பூமியில் உம் பிரதிநிதியாகவும் இருக்கின்ற இவர், எங்கள் கண்கள் கலங்கும்படி செய்கிறார், அவருடைய வரம்புமீறுதலைப் மன்னித்து, அவரின் பிதாவாகிய ஆதாமுடைய பின் மாற்றத்தை நீ மன்னித்த வண்ணமாக இவரது பின்மாற்றத்தையும் மன்னிப்பாயாக" என்று வருந்திக்கேட்டுக்கொண்டனர்.

"பேசாமல் இருங்கள்!" இறைவன் சொன்னார், "நான் இரக்கத்திலும் இரக்கமுள்ளவனாக இருக்கிறேன், என்னை தொழுதுக்கொள்பவர்களுக்காக என் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன, மற்றும் தன் தவறுக்காக மனஸ்தாபப்படுகிறவர்களின் மனஸ்தாபத்தை நான் அங்கீகரிப்பவனாக இருக்கிறேன்". (Tales of the Prophets (Qisas al-anbiya), translated by Wheeler M. Thacktson Jr. [Great Books of the Islamic World, Inc., 1997; Distributed by Kazi Publications, Chicago Il.], pp. 282-284)

3. குர்‍ஆன் 38:23-24 மற்றும் 26ம் வசனத்திற்கு இபின் அப்பாஸ் சொன்னதாக உள்ள உரை(Commentary):

(ஒரு ஆடு) என்றால் ஒரு மனைவி; (மற்றும் அவர் சொன்னார்: என்னிடம் கொடுத்துவிடு, மற்றும் அவன் தன் வார்த்தைகளால் வசப்படுத்தினான்) தாவீது உரியாவிற்கு என்ன செய்தார் என்பதை அவருக்கு புரியவைக்கவேண்டும் என்பதற்காக இவர்கள் இப்படி சொன்னார்கள். (Tanwîr al-Miqbâs min Tafsîr Ibn 'Abbâs; source; bold and underline emphasis ours)

தாவீது கூறினார்: அவனுக்கு அனேக ஆடுகள் இருந்தும், உன்னுடைய ஆட்டை அவர் கேட்டது மிகவும் தவறானது. இப்படித்தான் பல கூட்டாளிகள் மற்றும் சகோதரர்கள் ஒருவருக்கு எதிராக இன்னொருவர் வரம்புமீறி நடக்கிறார்கள். அல்லாவிற்கு பயந்து நன்மை செய்பவர்கள் மிகக்குறைவே. அவ்விருவர்கள் எங்கே இருந்து வந்தார்களோ அங்கேயே சென்று விட்டார்கள், தான் செய்த பாவத்திற்காக நாம் தான் அவரை சோதித்தோம் என்பதை தாவீது அப்போது உணர்ந்துக்கொண்டார். மற்றும் தாவீது தான் செய்த பாவத்திற்காக பாவ மன்னிப்பை தன் இறைவனிடம் கோரினார். அவர் சாஸ்டாங்கமாக விழுந்து தன் பாவத்திற்காக மனஸ்தாபப்பட்டு தொழுதுக்கொண்டார். அவர் செய்த செயலுக்காக மனம் வருந்தினார் . (Source; bold and underline emphasis ours)

((மற்றும் அவருக்கு இவ்விதமாக சொல்லப்பட்டது): ஓ தாவீதே! கவனியும்! உம்மை நாம் பூமியில் பிரதிநிதியாக ஆக்கினோம்) உம்மை நாம் இஸ்ரவேல் நாட்டு மக்களுக்கு ஒரு தீர்க்கதரிசியாக‌ இராஜாவாக நியமித்தோம்.(எனவே, மனிதர்களுக்கு சரியான முறையில் தீர்ப்பு வழங்கவும்) மக்களுக்கு நியாயமான தீர்ப்பு வழங்கவும்,( மற்றும் ஆசையை பின்பற்றவேண்டாம்) எப்படியென்றால்,
உரியாவின் மனைவியினிடத்தில் நீர் கொண்ட ஆசையைப்போல செய்யாதிரும். உரியா தாவீதின் உறவினனாக இருந்தார். (அல்லாவின் வழியிலிருந்து உம்மை விலகச்செய்வதாக இருந்தது) அல்லாவிற்கு கீழ்படியாதவாறு செய்தது. (கவனியுங்கள், யார் யாரெல்லாம் அல்லாவிற்கு) கீழ்படிவதை விட்டுவிட்டு தூரமாகச் செல்கிறார்களோ, நியாயத்தீர்ப்பு நாளை மறக்கிறார்களோ, அவர்களுக்கு பயங்கரமான ஆபத்து காத்துக்கொண்து இருக்கிறது (Source; bold and underline emphasis ours)

இதே மூலத்தொடுப்பு குர்-ஆன் 33:38ஐ குறித்து கீழ்கண்டவாறு கூறுகிறது:



[தமிழ் மொழியாக்க குறிப்பு: குர்-ஆன் 33:38 ல் சொல்லப்பட்ட நிகழ்ச்சி, முகமது தன் வளர்ப்பு மகனின் மனைவியை, தன் வளர்ப்பு மகன் விவாகரத்து செய்த பின்னர், திருமணம் செய்துக்கொண்ட நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்கிறது. வாசகர்களுக்கு சரியாக உரை புரியவேண்டும் என்பதற்காக, இவ்வசனம் இங்கு தரப்படுகிறது,ஆங்கில மூல கட்டுரையில் இந்த பத்தி இல்லை. குர்-ஆன் 33:38 நபியின் மீது அல்லாஹ் விதியாக்கியதை அவர் நிறைவேற்றுவதில் எந்தக் குற்றமும் இல்லை இதற்கு முன் சென்று போன (நபிமா)ர்களுக்கு ஏற்பட்டிருந்த அல்லாஹ்வின் வழி இதுவேயாகும் - இன்னும் அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட விதியாகும்.]

(இதில் விமர்சிப்பதற்கு எதுவும் இல்லை) இதில் நபி அவர்கள் எந்த பாவமும் செய்யவில்லை, குற்றமும் செய்யவில்லை, இந்த திருமணம் அல்லாவின் அங்கீகாரத்தால் நடக்கிறது. முகமதுவிற்கு (அவர் மீது சாந்தி உண்டாவதாக) முன்பு வாழ்ந்தவர்களுக்கும் அல்லா இப்படியே கட்டளையிட்டுள்ளான். இந்த வசனத்தில் "முன்பு வாழ்ந்தவர்கள்" என்றுச் சொல்வது, தாவீது உரியாவின் மனைவியை திருமணம் செய்த நிகழ்ச்சியை குறிக்கும். மட்டுமல்ல, இது பல்கிஸ் என்ற பெண்ணோடு சாலோமோன் செய்த திருமணத்தை குறிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இன்னும் அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட விதியாகும். (Source; bold and underline emphasis ours)

4. குர்-ஆன் 38:22 மற்றும் 24ம் வசனம் பற்றி "இரண்டு ஜலால்கள் - Two Jalals " என்றுச் சொல்லக்கூடிய இரண்டு இஸ்லாமிய அறிஞர்கள் எழுதிய உரையின் படி:

அவர்கள் தாவீது இருந்த அறைக்குள் நுழைந்தவுடன், தாவீது அவர்களைக்கண்டு திடுக்குற்றார். அவர்கள் சொன்னார்கள், "பயப்படாதீர், நாங்கள் இரண்டு வழக்காளிகள் (சிலர் "இரண்டு குழுக்கள்" என்று இதற்கு பொருள் சொல்கிறார்கள், ஏனென்றால், இந்த இடத்தில் பன்மையில் வினைச்சொல் வருவதனால், [of the verb dakhalū,], சிலர் இது இந்த இருவரை மட்டுமே குறிக்கும் என்றுச் சொல்கிறார்கள், அல்-காசிம் என்பவர் "ஒருவர் அல்லது அதற்கு மேலான நபர்களைக் குறிக்கும்" என்கிறார். இவர்கள் இருவரும் வழக்காளிகளாக உருவம் மாற்றி வந்த இரண்டு தூதர்களாவார்கள். குறிப்பிடப்பட்ட வழக்கு இவ்விரண்டு பேர்களின் இடையில் தான் நடந்தது, அதுவும் உண்மையாக அல்ல, தாவீது(அவர் மீது சாந்தி உண்டாவதாக) செய்த செயலைப் பற்றி எச்சரிக்கை செய்வதற்காக இவ்வழக்கு உருவாக்கப்பட்டது. அவர் தனக்கு 99 மனைவிகள் இருந்தும், ஒரே ஒரு மனைவியுள்ள ஒருவரின் மனைவியின் மீது ஆசைக்கொண்டார். அவர்(தாவீது) அப்பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். எங்களில் ஒருவர் மற்றவருக்கு எதிராக செயல்படுகிறார், எனவே, வரம்பைமீறாமல் எங்களுக்கு நீதி வழங்கவும், அநீதி இழைக்காமல், நேரான பாதையை எங்களுக்கு காட்டாவும். (Source; bold and underline emphasis ours)

அவர் கூறினார், "தன்னுடைய ஆடுகளோது சேர்த்துக்கொள்ள உன்னுடைய ஆட்டையும் அவர் கேட்டு அவர் தவறு செய்துவிட்டார். உண்மையில் கூட்டாளிகளில் பலர் ஒருவருக்கு எதிராக ஒருவர் செயல்படுகிறார்கள், நம்பிக்கைக் கொண்டு நல்ல செயல்கள் செய்யும் சிலரைத் தவிர, ஆனால் இப்படிப்பட்டவர்கள் சிலரே(mā emphasises the 'fewness')" . இந்த இரண்டு தூதர்களும் வானத்திற்கு எடுத்துக்கொண்டுச் செல்லும்போது, ஒருவர் மற்றவரிடம், "இவர் தனக்கு தானே நியாயத்தீர்ப்பை(Judgement) வருவித்துக்கொண்டார்" என்றுச் சொன்னார். தாவீது தன் தவறுப் பற்றி அப்போது உணர்ந்தார். இறைவன் ஒருவனே உயர்த்தப்படுவானாக, இறைவன் சொன்னார்: "அந்த பெண்ணைப்பற்றிய பரிட்சையை நாம் தான் தாவீதுக்கு வைத்தோம் என்று தாவீது நினைத்தார். அதனால், அவர் தன் இறைவனிடம் தாழவிழுந்து, மன்னிப்பைத் தேடினார் மற்றும் அவர் தொழுதுக்கொண்டு தன் தவறுக்காக மனம் வருந்தி வேண்டிக்கொண்டார். (Source; bold and underline emphasis ours)

5. தாவீது மற்றும் அந்த இரண்டு வழக்காளிகளின் நிகழ்ச்சியைப் பற்றி முஹம்மத் அசத் உடைய உரை:

"எங்களிடம் உள்ள மிகவும் பழமையான மூல ஆதாரங்களின் படி, நாங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் நிகழ்ச்சி, குர்‍ஆன் வசனங்கள் 21 லிருந்து 26 வரை உள்ள தர்மசங்கடமான நிகழ்ச்சியாகும். இந்த வசனங்கள் எழுப்பும் கேள்வி என்னவென்றால், இறைவன் தெரிந்தெடுக்கும் நபர்கள் முக்கியமாக நபிகள்(தீர்க்கதரிசிகள்), இறைவன் தாவீதுக்கு அளித்தது போல, இவர்களுக்கு ஞானத்தையும் நியாயம் தீர்க்க தேவையான அறிவையும் அளித்துள்ளார்.இப்படிப்பட்ட நபிகள் பாவம் செய்யமுடியுமா அல்லது ஒரு முறையாவது இவர்கள் பாவம் செய்துள்ளார்களா என்ற கேள்வியாகும். இதை வேறு வகையில் சொல்லவேண்டுமானால், சாதாரண மனிதர்கள் இயற்கையாக பாவ சுபாவம் என்ற குறைபாடு உள்ளவர்களாக இருப்பது போல, நபிகள்(தீர்க்கதரிசிகள்) கூட இயற்கையான பாவ சுபாவ குறைபாடுகள் உள்ளவர்கள் தானா? அல்லது இவர்கள் "ஒரு முறையும் பாவம் செய்யாமல் இருக்கும் – (Masum) " குணத்தை இறைவனிடமிருந்து பெற்றவர்களாக இருப்பார்களா?

"இஸ்லாமின் ஆரம்ப காலத்திலிருந்து அதிகார பூர்வமாக சொல்லப்பட்ட செய்திகளின் அடிப்படையில் பார்க்கும் போது, இந்த நிகழ்ச்சி மேலே சொல்லப்பட்ட கோட்பாட்டிற்கு(நபிகள் பாவம் செய்யமாட்டார்கள் என்ற கோட்பாட்டிற்கு) முரண்படுகிறது. அதிகார பூர்வமாக அறிவித்த நபர்களில் டபரி, பஹாவி மற்றும் நபித்தோழ‌ர்களாகிய அப்துல்லா இபின் அப்பாஸ், அனாஸ் இபின் மாலிக் போன்றாவர்கள் ஆவார்கள். இவர்கள் மட்டுமல்லாமல், நபித்தோஷர்களின் அடுத்த நேரடி தொடர்புடையவர்கள் கூட இதே நிகழ்ச்சியைச் சொல்கிறார்கள். நபிகள் என்பவர்கள் இயற்கையாகவே பாவம் செய்யமாட்டார்கள், அவர்கள் பரிசுத்தமானவர்கள் மற்றும் அவர்களின் உள்ளத்தில் நடக்கும் போராட்டத்தினால், அவர்கள் பாவமின்மை என்ற நிலையை அடைந்தார்கள் என்று காலப்போக்கில் இஸ்லாமிய அறிஞர்கள் சொந்தமாக உருவாக்கிய கோட்பாட்டுற்கு முரண்பட்டதாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நாம் பார்த்தால், நபிகளுக்கு இதனால் ஆன்மீக வலிமை கிடைக்குமே ஒழிய இது அவர்கள் பிறப்பிலிருந்து வந்த தகுதி அல்ல.

டபரி மற்றும் இஸ்லாமிய ஆரம்பகாலத்தில் உரை எழுதியவர்களின் அறிவிப்பின் படி,
தாவீது தன் வீட்டு கூறையிலிருந்து தற்செயலாக பார்க்க நேரிட்ட ஒரு அழகான பெண்ணின் மிது காதல் கொண்டார். அவளின் விவரங்களைச் சேகரித்த போது, அவள் தன்னிடம் இராணுவத்தில் பணிபுரியும் ஒரு இராணுவ வீரனாகிய உரியாவின் மனைவி என்று தெரியவந்தது. அப்பெண்ணின் மீது கொண்ட ஆசை தாவீதை மேற்கொண்டதால், தாவீது தன் தளபதியிடம், இந்த உரியாவை போர் நடக்குமிடத்தில் ஒரு குறிப்பிட்ட முன்வரிசையில் நின்று போரிட நிறுத்தி, அதன் மூலம் உரியா நிச்சயமாக மரணத்தை அடையவேண்டும் என்று கட்டளை பிரப்பித்தார். தாவீதின் கட்டளை அப்படியே நிறைவேற்றப்பட்டபோது, உரியா மரித்தார், தாவீது உரியாவின் மனைவியை திருமணம் செய்துக்கொண்டார் (இந்த பெண் தான் சாலோமோனின் தாயானாள்). இந்த நிகழ்ச்சி பைபிளின் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட நிகழ்ச்சிக்கு பெரும்பான்மையாக பொருந்துகிறது(2 சாமுவேல் 11ம் அதிகாரம்). இந்த பெண்ணின் பெயர் பெத்சேபாள் என்று பைபிள் கூறுகிறது. உரியாவின் மரணத்திற்கு முன்பே, தாவீது அப்பெண்ணோடு விபச்சாரம் செய்தார் என்று பைபிள் சொல்கிறது(வசனம் 4,5). இந்த குற்றச்சாட்டை முஸ்லீம்கள் அங்கீகரிப்பதில்லை, அதாவது கணவன் உயிரோடு இருக்கும் போது, அவன் மனைவியோடு விபச்சாரம் செய்வ‌து மிகப்பெரிய குற்றமாகும்: நான்காவது காலிபாவாகிய அலி இபின் அபிதலிப் கூற்றுப்படி(quoted by Zamakhshari on the authority of Sa'id ibn al- Mussayyab): "யாராவது தாவீதின் நிகழ்ச்சியை கதை சொல்பவர்கள் போல சொன்னார்களானால், நான் அப்படிப்பட்டவனுக்கு 160 சவுக்கு அடிகளை அடிப்பேன், ஏனென்றால், இது தான் நபிகள் அவதூறு செய்தார்கள் என்றுச் சொல்பவர்களுக்கு ஏற்ற தண்டனையாகும்(இது ஒரு சாதாரண மனிதன் மீது ஆதாரம் இல்லாமல் விபச்சாரம் செய்தார் என்று குற்றம் சுமத்துபவனுக்கு குர்‍ஆன் 24:4ன் படி 80 சவுக்கு அடிகள் தரப்படும் தண்டனையை குறிக்கிறது.) (Asad, Message of the Qur'an [Dar Al-Andalus Limited 3 Library Ramp, Gibraltar rpt. 1993], pp. 696-697, fn. 22)

இதுவரை நாம் பார்த்த விவரங்களிலிருந்து முக்கியமாக நாம் அறிவது என்னவென்றால், பெத்செபாளோடு உறவு கொள்வதற்கு முன்பாக தாவீது உரியாவை கொன்றார் என்பதாகும். தாவீது வேண்டுமென்றே திட்டம் தீட்டி உரியாவின் மனைவியை அடையவேண்டுமென்ற ஆசையினால், உரியாவை கொன்றார். ஆனால், பரிசுத்த பைபிளின் விவரங்களின் படி, தாவீது உரியாவை கொள்வதற்கு முன்பாகவே உரியாவின் மனைவியை கர்ப்பமாக்கினார். தாவீது தன் முந்தைய திட்டங்கள் ஒன்றும் பயனளிக்க வில்லை என்பதால் தான் கடைசியாக உரியாவை கொன்றார் என்று பைபிள் கூறுகிறது. உரியாவின் மனைவி தன் மூலம் தான் கர்ப்பமானாள் என்பதை மறைப்பதற்காக, முதலில் அரசனாகிய தாவீது உரியாவிற்கு அதிகமாக திராட்சை ரசம் குடிக்கக்கொடுத்து, நீ வீட்டிற்குச் சென்று உன் மனைவியோடு சந்தேஷமாக இரு என்று சொல்லி திட்டம் தீட்டினார், ஆனால், அது பயனளிக்கவில்லை என்பதால், உரியாவை கொன்றார் என்று பைபிள் சொல்கிறது (இந்த நிகழ்ச்சி பற்றிய முழுவிவரங்கள் 2 சாமுவேல் 11 மற்றும் 12ம் அதிகாரங்களில் காணலாம்)

குர்‍ஆன் மற்றும் ஹதீஸ்களைப் போல அல்லாமல், பைபிள் தேவனின் வெளிப்பாடாக இருப்பதால், இந்த நிகழ்ச்சியைப் பற்றி மிகவும் தெளிவாகவும் மற்றும் நடந்தது நடந்தது போலவும் சொல்கிறது. குர்‍ஆன் மற்றும் பைபிள் சொல்லும் விதத்தில் உள்ள வித்தியாசத்தை விடுத்து நாம் கவனித்தோமானால், தாவீதின் நடத்தையில் இருந்த பாவத் தன்மையை வெளிப்படுத்துகின்றன.
தாவீது உரியாவை அவன் மனைவியோடு உறவு கொண்டபிறகு கொன்றாரோ அல்லது அதற்கு முன்பு கொன்றாரோ, ஒன்று மட்டும் நிச்சயம், அதாவது, இறைவனின் பார்வையில் தாவீது பாவம் செய்த குற்றத்தை செய்தவராகிறார், அதாவது திருமணமான ஒரு பெண்ணின் மீது மோகம் கொண்டு அவர் இறைவனின் பார்வையில் பாவம் செய்தவராகிறார் (மத்தேயு 5:27-28, 31-32)



ஆக, தாவீது குற்றம் இழைத்து இருந்தும், இஸ்லாமியர்கள் அவர் குற்றம் செய்யாதவராக இருக்கிறார் என்று சொல்கிறார்கள். மற்றவனின் மனைவியை அடைய வேண்டும் என்ற எண்ணத்தோடு செய்த ஒரு திட்டமிட்ட கொலை (Premeditated Murder) என்பது மிகப் பெரிய பாவமாகும்.

அஸத் அவர்களின் கூற்றுப்படி, இந்த கதையை சொல்பவனுக்கு சவுக்கடி கொடுக்கப்படவேண்டும் என்று அலி உறுதி எடுத்தார் அல்லவா என்று இஸ்லாமியர்கள் இப்போது வாதம் புரிவார்கள். அதாவது ஆரம்பகால முஸ்லீம்கள் இந்த கதையை மறுத்தார்கள் அல்லவா என்று கூறுவார்கள். ஆனால், ஒன்றை கவனிக்கவேண்டும், அஸத் அவர்களின் கூற்றுப்படி, அலி இக்கதையை முழுவதுமாக தள்ளிவிடவில்லை, அதற்கு மாறாக "கதை கூறுகிறவர்கள் – Story-tellers" சொல்பவர்கள் போல இந்நிகழ்ச்சியை சொன்னால் தான் அவர் சவுக்கடி கொடுப்பேன் என்று கூறியிருக்கிறார் என்பதை கவனிக்கவேண்டும்.

சிலர் இந்த ஹதீஸ்கள் விவரங்கள் அனைத்தும் சரியானது அல்ல என்றுச் சொல்லி தள்ளிவிடுவார்கள். இப்படி யாராவது சொல்வார்களானால், அவர்களிடம் நாங்கள் இரண்டு கேள்விகளை கேட்கவிரும்புகிறோம்:

1. தன்னிடம் வந்த இரண்டு வழக்காளிகளைச் சந்தித்த பின்னர், தாவீது பாவ மன்னிப்பு வேண்டி இறைவனிடம் வேண்ட காரணமென்ன? அந்த இரு வழக்காளிகளின் கதை எப்படி தாவீது தான் ஒரு பாவி என்பதை இறைவன் முன்பு அங்கீகரிக்கும் படி செய்தது?
(What was the reason for David repenting after his encounter with two disputants? How does their story affect David's moral standing before God?)



2. சாலொமோன் தாவீதின் குமாரன் என்று குர்‍ஆன் அங்கீகரிக்கின்றது, அப்படியானால், சலொமோனின் தாய் யார்?
(Since the Quran agrees that Solomon is David's son, who then is Solomon's mother?)

பரிசுத்த பைபிள் இவ்விதமாக கூறுகிறது:

"பின்பு தாவீது தன் மனைவியாகிய பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி, அவளிடத்தில் போய், அவளோடே சயனித்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனுக்குச் சாலொமோன் என்று பேரிட்டான்; அவனிடத்தில் கர்த்தர் அன்பாயிருந்தார். அவர் தீர்க்கதரிசியாகிய நாத்தானை அனுப்ப, அவன் கர்த்தரின் நிமித்தம் அவனுக்கு யெதிதியா என்று பேரிட்டான்." (2 சாமுவேல் 12: 24-25)

சாலொமோன் தாவீதின் குமாரன் என்பதை குர்‍ஆன் அங்கீகரிப்பதால், பைபிள் சொல்வது போல, சாலொமோனின் தாய் பெத்செபாள் தான் என்பதை குர்‍ஆன் அங்கீகரித்தே ஆகவேண்டும், வேறு எந்த ஒரு வாய்ப்பும் குர்‍ஆனுக்கு இல்லை. ஒருவேளை இதனை தவிற்க‌ முஸ்லீம்கள் சலொமோனுக்கு தாய் என்பவள் இல்லவே இல்லை என்று சொல்லக்கூடும்! பெத்செபாள் சலொமோனின் தாய் இல்லை என்று் முஸ்லீம்கள் சொல்வார்கள் அல்லது பெத்செபாளும் தாவீதும் சட்டபூர்வமாகவே நியாயமான முறையின் படி தான் திருமணம் செய்துக்கொண்டார்கள், பிறகு பிறந்தவர் தான் சலொமோன் என்று சொல்லக்கூடும். ஆனால், ஒரு வேளை இப்படி முஸ்லீம்கள் சொன்னாலும், இன்னும் முதலாவது கேள்வி பதில் தரப்படாமல் அப்படியே உள்ளது.



இதுவரை நாம் கண்ட விவரங்கள் குர்‍ஆன் முழுமையானது அல்ல என்றும் மற்றும் சரியான விவரங்களை குர்‍ஆன் கொண்டு இருக்கவில்லை என்பதையும் நமக்கு நிருபிக்கின்றது (These factors prove that the Quran is an incomplete and imperfect record.)

இதுவரை மேலே நாம் கண்ட விவரங்கள் ஒரு உண்மைய மட்டும் தெளிவாக எடுத்துரைக்கின்றது. தாவீது பெத்செபாளோடு உடலுறவு கொண்டார் மற்றும் உரியாவை கொல்ல கட்டளை பிறப்பித்தார் என்பதை ஆரம்ப கால இஸ்லாமிய அறிஞர்கள் நம்பினார்கள் என்பது தெளிவு.

முஸ்லீம்களின் வாதங்களுக்கான நம்முடைய பரிசீலனை இதோடு முடிவடைகிறது. மகா வல்லமையுள்ள தேவனும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தில், நித்திய மகிமையோடு உயிர்த்தெழுந்த நம் ஆண்டவரின் ஊழியத்தில் அடியேன். அவருக்கே என்றேன்றும் மகிமை உண்டாவதாக, ஆமென். வாரும் இயேசு கிறிஸ்துவே, வாரும். எங்கள் உயிர்ந்தெழுந்த இயேசுவே உங்களை நாங்கள் நேசிக்கின்றோம்.



பின்குறிப்பு - ADDENDUM: அல் டபரி சரித்திர நூலிலிருந்து மீதமுள்ள விவரங்களை இந்த தொடுப்பை சொடுக்கி(Sins of Prophets - David - ADDENDUM) ஆங்கில கட்டுரையின் கடைசியில் உள்ள பின்குறிப்பை படித்துக்கொள்ளவும். நீண்ட கட்டுரையாக இருப்பதால் பின்குறிப்பை தவிர்க்கிறேன்.

Source: Sins of Prophet - David

ஆசிரியர் ஷமான் அவர்களின் இதர கட்டுரைகள்:

1. இஸ்லாமும், நபிகளின் பாவங்களும் பாகம் - 1

2. மாற்கு 16ன் சவால் ( The Challenge of Mark 16)


Isa Koran Home PageBack - Sam Shamoun Articles
1

திங்கள், 24 மார்ச், 2008

நேசமுடன் தளம் வெளியிட்ட செய்தி பொய்யா மெய்யா? - கிறிஸ்தவ பாதிரியார்கள் ஹஜ் செய்தார்கள்

 
கிறிஸ்தவ பாதிரியார்கள் ஹஜ் செய்தார்கள்: உண்மையா பொய்யா?

நேசமுடன் தளம் வெளியிட்ட செய்தி பொய்யா மெய்யா?


உமர் குறிப்பு: நேசமுடன் தளம் "கிறிஸ்தவ பாதிரிகள் ஜஹ் செய்தார்கள்" என்ற ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தது. அவர்கள் சொல்வது உண்மையா என்றுச் சொல்லி நான் ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். நேசமுடன் தளம் குறைந்தபட்சம் அவர்கள் சொல்லும் விவரங்களுக்கு தொடுப்புகளாவது கொடுங்கள் என்று நான் என் கட்டுரையில் கேட்டு இருந்தேன். நேசமுடன் தளத்தில் அத்தளத்தின் நிர்வாகியின் மெயில் ஐடியும் இருக்காது, மற்றும் நாம் பின்னூட்டம் தர வசதியும் இருக்காது. அவர் என்ன (பொய்) சொல்வாரோ அதை அப்படியே மக்கள் கேட்கவேண்டும். என் சந்தேகத்தை தீர்க்கும்படி நான் ஜனவரி 15ம் தேதி இந்த கட்டுரையை வெளியிட்டேன். ஆனால், இரண்டு மாதம்( 24th March 2008)ஆகியும் இன்னும் அதற்கு பதில் இல்லை. இந்த என் கட்டுரை Red Islam ( http://redislam.blogspot.com/2008/01/blog-post_15.html ) தளத்திலும் ஜனவரி 15ம் தேதி அன்றே வெளியிடப்பட்டது.

பொதுவாக, நான் சந்தேகம் என்று கேட்கும் கட்டுரைகளை என் தளத்தில் பதிப்பதில்லை, நான் தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்தில்(www.tamilchristians.com) அதை பதிப்பேன், என் இரண்டு தளங்களில்(http://www.geocities.com/isa_koran and http://isakoran.blogspot.com) பதிப்பதில்லை. இதோ, இந்த சந்தேகம் கேட்டு 60 நாட்களுக்கு மேல் ஆகிறது, அதாவது இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் பதில் வரவில்லை. அவர்கள் சொன்னது உண்மையாக இருந்தால் தானே பதில் வருவதற்கு. இரண்டு மாதங்கள் கழித்து இப்போது என் தளத்தில் இதை முதன் முறையாக பதிக்கிறேன். இவர்கள் பதில் சொல்லமாட்டார்கள் என்று நான் முன்னமே முடிவு செய்து இருந்தால், என் தளத்தில் அதை பதித்து இருப்பேன். ஆனால், இந்த செய்தியை பொருத்தவரையில் இவர்கள் பதில் சொல்வார்கள் என்று எண்ணினென். ஆனால், பயனில்லை. இவர்கள் பொய்யர்கள் என்று மறுபடியும் நிருபித்துவிட்டார்கள். வாழ்க இஸ்லாம், வாழ்க இஸ்லாம் தளங்கள்.




என் சந்தேகம் தீர்த்துவிடுங்கள் என்று நான் பதித்த கட்டுரை தொடர்கிறது


முன்னுரை: நம் தமிழ் நாட்டு இஸ்லாமியர்கள்(அறிஞர்கள்) கடந்த ஒரு ஆண்டு காலமாக அதி வேகமாக தளங்களை உருவாக்கிக்கொண்டு இஸ்லாமிய செய்தியை பதித்துக்கொண்டு வருகிறார்கள். கிறிஸ்தவ கட்டுரைகளை எழுதிக்கொண்டு வருகிறார்கள். சிலர் உண்மையை பொய் என்றுச் சொல்கிறார்கள். சிலர் பொய்யை உண்மை என்று சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.

இஸ்லாம் தளங்களில் பொய் செய்திகள்:

இவர்களில் சிலர்(கவனிக்கவும் "சிலர்") பல பொய்யான தகவல்களை கொடுத்துக்கொண்டு வருகிறார்கள்.

பல ஆயிரம் கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவ போதகர்கள் திடீரென்று இஸ்லாமுக்கு மாறினார்கள் என்று மிகவும் ஆவேசமாக கட்டுரை எழுதினார்கள்? ஆதாரம் எங்கே என்றுக் கேட்டால், "மௌனம்"...... பதில் இருக்காது.....

ஒரு உதாரணம் இதோ:

நேசமுடம் தள கட்டுரைக்கு: "இஸ்லாத்திற்கு எதிராக கிறிஸ்தவ அமைப்புகள் " , ஆதாரம் எங்கே என்று கேள்வி கேட்கப்பட்டது, இன்றுவரை பதில் இல்லை.

நேசமுடன் தளத்திற்கு ஈஸா குர்-ஆன் கேள்வி: "சந்தேகம் தீர்த்துவிடுங்கள் பிளீஸ்"

இது உண்மையானச் செய்தியா?

இதே நேசமுடன் தளம் இன்னொரு செய்தியை வெளியிட்டது, அதற்கு எந்த ஒரு மூல தொடுப்பையும் கொடுக்கவில்லை.

ஹஜ் கடமையை நிறைவேற்றிய முன்னாள் பாதிரியார்கள்

அபூசாலிஹ்

.....

.....

அலி கவுதமலா என்ற முன்னாள் கிறிஸ்தவ பாதிரியாரும் தனது ஹஜ் கடமையை இவ்வாண்டு நிறைவேற்றினார். .....

.....

செவர்டோ ரோயிஸ் (அலி கவுதமலா கிறிஸ்தவராய் இருந்த போது உள்ள பெயர்) திருக்குர்ஆனை ஒதிய போது அதனால் கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக தெரிவித்திருக்கிறார். குறிப்பாக திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமான அல்பகறாவை ஓதிய போதே சத்தியதீனுல் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்ததாக தெரிவிக்கிறார்.

தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதால் தனது வாழ்வே மறுமலர்ச்சி பெற்றதாகக் கூறுகிறார். குருமடம் என்ற பாதிரியார்களின் பயிற்சிக் கல்விக் கூடத்தில் தனது பட்டப்படிப்பை முடித்து கொண்ட செவர்டோ ரோயிஸ் அமெரிக்காவின் தெற்கு மாநிலத்தில் குயின் சிட்டியில் தனது பணியைத் தொடங்கினார். .....

.....



அழைப்பாளர் கமர் ஹுஸைன் அழைப்பு விடுத்த 'மார்க்கம்' பற்றிய விவாத அரங்கிற்கு 5000 பேர் வருகை புரிந்தனர். இதில் 147 பேர் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர். இந்த விவாத அரங்கை சவூதி தலைநகர் ரியாத்தை தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாத்தினை அறிமுகப்படுத்தும் சர்வதேச அமைப்பு நெறிப்படுத்தியது. இத்தகவலை அஷ்ரக் அல் அஸ்வத் செய்தி ஏடும் அல் ஜஸீராஹ் அரபி நாளேடும் வெளியிட்டுள்ளன.

source: http://neshamudan.blogspot.com/2008/01/blog-post_13.html




இவர் கொடுத்த ஒரே ஆதாரம், எந்த செய்தித்தாள்களில் இச்செய்தி வெளியானது என்று மட்டும் தான். அதுவும் அந்த செய்தித்தாள்களில்:

எந்த நாள் இச்செய்தி வெளியானது?

அதன் தொடுப்பு என்ன?

போன்ற விவரங்களை இவர் கொடுக்கவில்லை.


முஸ்லீம்களுக்கு ஒரு வேண்டுகோள்:

நான் பலமுறை சொல்லிவிட்டேன், ஒரு செய்தியை சொல்லும் பொது அதன் மூல தொடுப்பை(Source Link or URL) கொடுக்க வேண்டும், அது தான் இணையத்தில் கட்டுரை எழுதும் போது பின்பற்ற வேண்டிய குறைந்த பட்ச நல்ல பழக்கம். அது கூட உங்களிடம் இல்லாத போது, எங்கே சென்று முறையிடுவது?

1. நீங்கள் சொன்ன விவரம் சரியானதாக இருக்குமானால் அதை ஏன் தைரியமாக சொல்ல பயப்படுகிறீர்கள்?

2. அச்செய்தி எந்த மொழியில் இருந்தால் என்ன? ஆங்கிலமோ அரபியோ அதன் தொடுப்பை கொடுத்துவிட்டால், உங்கள் நேர்மை வெளிப்படும் இல்லையா? இது ஏன் புரியவில்லை உங்களுக்கு?

3. அல்லது இது கூட ஒரு பொய்யான தகவல் தானா?

4. நீங்கள் சொல்லும் செய்தி உண்மையானதா பொய்யா? என்று எப்படி நாங்கள் முடிவு செய்வது? செய்தியை சொல்வது நீங்களாயிற்றே எப்படி உண்மையை உங்களிடம் எதிர்ப்பார்ப்பது, நேசமுடன் தள நிர்வாகத்தவர்களே?

5. உங்கள் கட்டுரை உண்மையானதாக இருக்கலாம், நான் அதை மறுக்கவில்லை. ஆனால் ஆதாரம் எங்கே என்று தான் கேட்கிறேன். உங்களை நாங்கள் ந‌ம்பவேண்டிய அவசியம் என்ன?

இந்த செய்தி வெளியான செய்தித்தாள்களின் தொடுப்பை கொடுக்கமுடியுமா?

1. நீங்கள் நேர்மையானவர்களாக இருந்தால்?

2. உங்கள் நம்பிக்கை நேர்மையானதாக இருந்தால்?

3. நீங்கள் சொல்வது உண்மை என்று உங்களுக்கு நம்பிக்கை இருந்தால்?

4. இஸ்லாமுக்கு இந்த பாதிரியார்கள் மாறினார்கள் என்ற செய்தி உண்மையானதாக இருந்தால்


இக்கட்டுரையை கண்டவுடன், உடனே தேடிக்கண்டுபிடித்து, அதன் தொடுப்பை கொடுத்து, உங்கள் நேர்மையை நிருபித்துக்கொள்ளுங்கள்.

அப்படி தொடுப்பை கொடுப்பீர்களானால், நான் இதே கட்டுரையில் ஒரு பின்னூட்டம் இட்டு, நேசமுடன் இஸ்லாம் தளம் தன் நேர்மையை நிருபித்துவிட்டது, இச்செய்தி உண்மை தான் என்ற வரிகளை பதிப்பேன்.

அப்படி இல்லையானால், நேசமுடன் தளம் ஒரு பிராடு, பித்தலாட்டம், பொய், நேர்மையற்ற இஸ்லாம் தளம் "நேசமுடன்" தளம் என்று எல்லாரும், கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும், இந்துக்களும், நாத்தீகர்களும் நினைத்துக்கொள்வார்கள்.

இந்த தமிழ் கிறிஸ்தவர்கள் தளத்தில் ஒரு கட்டுரையை எழுதி இனி, கிறிஸ்த கட்டுரைகளை மூல தொடுப்புக்கள் இல்லாமல் எழுதும் தளங்களின் பெயர்கள் பட்டியல் இடப்படும். இனிவரும் சந்ததிகளுக்கு உங்கள் "உண்மை முகத்தை" அது காட்டும் என்பதை தாழ்மையுடம் சொல்லிக்கொள்கிறேன்.

உங்கள் தேடல் சுலபமாக சில தொடுப்புக்களை நான் தருகிறேன். நீங்கள் குறிப்பிட்ட செய்தித்தள்கள் இவைகள் என்று நம்புகிறேன்.

http://www.aawsat.com/ -- Arabic Edition

http://www.asharq-e.com/ -- English Edition

http://english.aljazeera.net

http://www.aljazeera.com/


நாங்கள் உங்களிடம் முதலில் எதிர்ப்பார்ப்பது நேர்மை, உங்கள் மார்க்கம் சரியானதா இல்லையா? என்பதைப் பற்றி பிறகு சிந்திக்கலாம்.

ஆமாம், உங்களுக்கு சராசரி இஸ்லாமிய சகோதரர்களிடமிருந்து ஏன் இப்படி செய்கிறீர்கள், ஏன் பொய்யான தகவலை தருகிறீர்கள் என்று கேள்வி கேட்டு மெயில்கள் வருவதில்லையா? ஆச்சரியமாக இருக்கிறதே?

Source: கிறிஸ்தவ பாதிரியார்கள் ஹஜ் செய்தார்கள்: உண்மையா பொய்யா?

நேசமுடன் தளத்தின் முதல் பொய்க் கட்டுரை: நேசமுடன் தளத்திற்கு ஈஸா குர்-ஆன் கேள்வி: "சந்தேகம் தீர்த்துவிடுங்கள் பிளீஸ்"

Isa Koran Home Page Back - Rebuttal Index page
1

வெள்ளி, 21 மார்ச், 2008

இஸ்லாம் இணையத்திற்கு பதில்: இஸ்லாம் சரியான மார்க்கம் என்று தெரிந்தும் கிறிஸ்தவர்கள் நிராகரிக்கின்றார்களா?

 
இஸ்லாம் இணையத்திற்கு பதில்:

இஸ்லாம் சரியான மார்க்கம் என்று தெரிந்தும் கிறிஸ்தவர்கள் நிராகரிக்கின்றார்களா?


முன்னுரை:

சமீப காலமாக இஸ்லாமிய கிறிஸ்தவ கட்டுரைகள் தமிழ் இணைய உலகில் உலா வந்துக்கொண்டு இருக்கின்றன.இதில் இஸ்லாமியர்கள் "நாங்கள் கேள்விகள் மட்டுமே கேட்போம், பதில் சொல்லமாட்டோம், மற்ற மார்க்கங்களின் வேதங்களில் கை வைத்து, எங்களுக்கு ஏற்ற விதத்தில் பொருள் கூறுவோம், அவர்கள் பதில் சொன்னால் அதை காதில் வாங்க மாட்டோம், எங்கள் குர்‍ஆனை அவர்கள் படித்து கேள்விகள் கேட்டால், இஸ்லாமுக்கும், முகமதுவிற்கும் அவதூறு செய்கிறார்கள் என்று ஓயாமல் சொல்லிக்கொண்டே இருப்போம், ஆனால், தப்பித்தவறியும் பதில் சொல்லமாட்டோம்" என்ற தோரணையில் இணைய தளங்களை நடத்திக்கொண்டு வருகின்றனர்.

இந்த கட்டுரையில், நாம், "இஸ்லாம் இணைய பேரவை" தளம் எழுதிய ஒரு கட்டுரைக்கான பதிலை காணப்போகிறோம். இந்த கட்டுரையில் இவர்களாகவே சில விஷயங்களை சுயமாக முடிவு செய்துவிட்டு அதை வெளியிட்டுள்ளனர்.

இவர்கள் சுயமாக எடுத்த முடிவு என்ன?

1. கிறிஸ்தவர்களுக்கு உண்மை மார்க்கம் இஸ்லாம் என்று தெரியுமாம்

2. அப்படி தெரிந்து இருந்தும், கிறிஸ்தவர்கள் வறட்டு கௌரவத்தால் இஸ்லாமை நிராகரிக்கிறார்களாம்
.

[என்னே கண்டுபிடிப்பு! நான் மட்டும் நோபல் யாருக்கு கொடுக்கலாம் என்று நிர்ணயிக்கும் குழுவில் இருந்தால், 2008ம் ஆண்டிற்கான நோபல் பரிசை இந்த கண்டுபிடிப்பிற்காக இதை எழுதவருக்கு கொடுக்க சிபாரிசு செய்வேன்.]

நான் இந்த கட்டுரையில் மேலே குறிப்பிட்ட இரண்டு குறிப்புகளுக்கு மட்டும் பதில் தரலாம் என்று விரும்புகிறேன். அதே நேரத்தில் இவர்களின் வாடிக்கையான கிளிப்பிள்ளை வார்த்தைகளுக்கும் பதில் ஆங்காங்கே சொல்லிவிடுகிறேன்.

இன்னும் அவர்கள் என்ன என்ன சொல்லியுள்ளார்கள் என்று நீங்களே படியுங்கள்:

இஸ்லாம் இணையம் எழுதியது:

வேதக்காரர்களான யூதர்களும் கிரிஸ்தவர்களும் உண்மை மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்று தெரிந்த பின்னரும் வறட்டு கௌரவத்தால் சத்தியத்தை நிராகரித்து இறைவேதத்தை இருட்டடிப்பு செய்தும், நவிமொழிகளை நாசவேளை செய்தும் உண்மைக்கு மாற்றமான செய்திகளை பரப்பிவருகிறார்கள். அல்குர்ஆனில் சில வசனங்களை மாற்றியமைத்து தனக்கு சாதகமான சூழ் நிலையை உருவாக்குகிறார்கள். இதுபோதுமல்லாது பல இணையதளங்களை நிறுவி அதன்மூலம் காபாவில் சிலைவணங்குதல், நபிகளார்(ஸல்) அவர்களின் குடும்பத்தை பழித்து வர்ணித்தல், காட்டுமிரான்டி மார்க்கம் என்பனபோன்ற எண்ணற்றக் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்ற வகையில் உண்மை எதுவென்று தெரிந்த பின்னரும் அவதூராக பரப்பிவருகிறார்கள். இதை இறைவன் அவர்களின் முகத்திறையை இவ்வாறு கிழிக்கிறான்,

வேதத்தையுடையோரே! சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள்? இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்? (அல்குர்ஆன் 3:71)

இப்படி பல ஆக்கங்களை நிறுவி முஸ்லிம்களின் உள்ளங்களில் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தி தவறான வழிக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதே அந்த கோர முகங்களின் நஞ்சு எண்ணமாகும். இவ்வாறு இணையதளத்தில் நிறுவப்பட்ட ஆக்கங்கள் புதிதாக இஸ்லாத்தை அறியவேண்டும் என்பதற்காக ஒருவர் விரும்பி தேடும்போது இதை பார்ப்பாரேயானால் விரண்டோடக்கூடிய ஒரு துர்பாக்கிய சூழ்நிலைதான் அங்கு உருவாகும். ஆகவே இப்படிப்பட்ட பல சூழ்ச்சிகளின் மூலம் இஸ்லாத்தின் எழுச்சியை அமுக்க நாடுகிறார்கள், ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை தங்களது விழிகளை உளியை கொண்டு குத்திக்கொண்டு இருக்கிறோம் என்று. இறைவன் அந்த வேதக்காரர்களின் கூறுகெட்டச் செயலை இவ்வாறு விவரிக்கிறான்.

வேதத்தையுடையோரில் ஒரு சாரார் உங்களை வழி கெடுக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி கெடுக்க முடியாது. எனினும் (இதை) அவர்கள் உணர்கிறார்களில்லை. (அல்குர்ஆன் 3:69)

Source:


1. இஸ்லாமியர்கள் அளவிற்கு அதிகமாகவே பயந்துள்ளார்கள்:

நாம் சிறுவயதிலே சில இடங்களை கடந்துச்செல்லும் போது, உதாரணத்திற்கு ஒரு பாழடைந்த வீட்டை கடந்துச்செல்லும் போது, அல்லது அதிகமாக மரங்கள் உள்ள இடத்தை கடந்துச்செல்லும் பொது, அல்லது ஆள் நடமாட்டம் இல்லாத கல்லரைகளை கடந்துச்செல்லும் போது, மனதிலே பயம் ஒரு புறம் இருந்தாலும், நமக்கு நாமே தைரியம் கொண்டு, ஏதோ ஒரு பாட்டை சத்தமாக பாடிக்கொண்டே, நடுங்கிக்கொண்டே அந்த இடத்தை கடந்துவிடுவோம். சிலர், "நான் பயப்படமாட்டேன், நான் தைரியமானவன், நான் ஒரு வீரன்" என்று சொல்லிகொண்டு ஓடோடி அந்த இடத்தை சீக்கிரமாக கடந்துவிடுவோம். முக்கியமாக கிராமங்களில் இருப்பவர்களுக்கு இந்த அனுபவம் இருக்கும். அந்த இடத்தை கடந்தபிறகு நிம்மதியாக நடந்துச்செல்வோம். உள்ளத்தின் ஆழத்தில் பயம் இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல், ஏதேதோ சொல்லிக்கொண்டு அந்த இடத்தை எப்படியாவது கடந்துப்போவோம்.

இதே போலத்தான் இஸ்லாமியர்களும், இவர்கள் கட்டுரைகளை கவனித்தீர்களானால்:

1. நாங்கள் வெற்றி பெற்றே தீருவோம்,

2. நீங்கள் எவ்வளவுதான் இடையூறுகளை ஏற்படுத்தினாலும் இஸ்லாம் என்கின்ற சத்திய ஒளிக்கு என்றைக்குமே திறையிட முடியாது

3. சத்தியம் ஜெயித்தே தீரும்,

4. யாரும் குர்‍ஆனுக்கு எதிராக ஒன்றும் செய்யமுடியாது,

5. சூரியனை கைகளால் மறைக்கமுடியாது,

6. சத்தியமார்க்கம் வெற்றிப்பெறும்

7. நாங்கள் பயப்படமாட்டோம்

இவர்களுக்கு பயம் வரும்போதெல்லாம், ஒரு கட்டுரையாவது இப்படி வெளியிட்டுக்கொண்டே இருப்பார்கள். இதை படிக்கும் இதர முஸ்லீம்கள் அப்படியே பொங்கிப்போவார்கள். குர்‍ஆன் வசனங்களுக்கு இவர்கள் அர்த்தத்தை மாற்றிச் சொல்கிறார்கள், இவர்கள் வெற்றிப்பெறமுடியாது, நாங்கள் தான் வெற்றிப்பெறுவோம் என்று ஓயாமல் கிளிப்பிள்ளைப்போல சொல்லிக்கொண்டே இருப்பார்களே தவிர, இவர்களாகவே குர்‍ஆன் வசனங்களுக்கு சரியான பொருள் கூறமாட்டார்கள், ஹதீஸ்களுக்கு பொருள் கூறமாட்டார்கள், அப்படி கூறுகிறவர்களின் அர்த்தம் தவறு என்றுச் சொல்வார்கள். இந்த வகையில் அவர்கள் எழுதிய கட்டுரைக்குத் தான் இப்போது நாம் பதிலை பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

சரி, இவர்களின் "கிறிஸ்தவர்கள் உண்மை மார்க்கம் இஸ்லாம் என்று தெரிந்தே நிராகரிக்கின்றனர்" என்ற குற்றச்சாட்டிற்கு பதிலை காண்போம்.

2. கிறிஸ்தவர்கள் உண்மை மார்க்கம் இஸ்லாம் என்று தெரிந்தே நிராகரிக்கின்றனரா?

உண்மையில் "கிறிஸ்தவர்கள் இஸ்லாம் தான் உண்மை மார்க்கம் என்று தெரிந்துவைத்து இருக்கிறார்கள்" என்றுச் சொல்ல உங்களால் எப்படி முடிகிறது. முஸ்லீம்களே! உங்களுக்கு இப்படி எழுதுவது அடிப்படை இல்லாமல் எழுதுவது போல தோன்றவில்லை? எங்களுக்கு எல்லாம் தெரிந்து தான் நாங்கள் எழுதுகிறோம் என்றுச் சொல்வீர்களானால், கீழ் கண்ட வரிகளை முதலில் படியுங்கள்:

"முஸ்லீம்கள் கிறிஸ்தவம் தான் உண்மை மார்க்கம் என்றும், முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்றும், குர்‍ஆன் என்பது இறைவன் அருளிய வேதம் இல்லை என்பதையும் நன்றாக தெரிந்து வைத்துக்கொண்டே, முஸ்லீம்கள் வறட்டு கௌரவத்தால், கிறிஸ்தவத்தை எதிர்க்கிறார்கள்"

என்று நான் சொன்னால் எப்படி இருக்கும்? எந்த காரணத்தால் இப்படி இவர் சொல்கிறார்? என்று கேட்கத்தோன்றுகிறது அல்லவா உங்களுக்கு? அதே போலத்தான், நானும் உங்களை கேட்கிறேன், எதை அடிப்படையாக வைத்துக்கொண்டு, "இஸ்லாம் உண்மை மார்க்கம்" என்று கிறிஸ்தவர்களுக்கு தெரியும் என்று நீங்கள் சொல்கிறீர்கள்? மனிதனின் உள்ளத்தில் இருப்பது தெரிந்துக்கொள்ள வேண்டுமானால், முதலாவது அம்மனிதன் அதை சொல்லவேண்டும், அல்லது நீங்கள் இறைவனாக இருக்கவேண்டும்?

இவை இரண்டும் இல்லாமல் எப்படி உங்களால் இப்படி பிரயோஜமில்லாத "அறிக்கைகளை" வெளியிடமுடிகிறது?

சரி, எங்கள் உள்ளங்களில் உள்ளதை நீங்கள் சொன்னதால், "கிறிஸ்தவர்கள் இஸ்லாம் பற்றி என்ன கருதியிருக்கிறார்கள் என்று சொல்லிவிடுகிறேன்."

3. "மார்க்கம் வேண்டாம்" என்றுச் சொல்பவனை இஸ்லாம் போல கிறிஸ்தவம் கொல்வதில்லை, அல்லது மனிதனை கொல்லச்சொல்லும் ஷரியா சட்டம் எங்களுக்கு இல்லை:

ஒரு முஸ்லீம் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ளும் பொது, எங்கே இவர்கள் தன்னை கொன்றுவிடுவார்கள் என்று பயந்துக்கொண்டு வாழுகிறான். பல இஸ்லாமிய நாடுகளிலும் இந்த சட்டம் உண்டு, அதாவது ஒருவன் இஸ்லாமை விட்டு கிறிஸ்தவனானால், அவனுக்கு மரண தண்டனை உண்டு. செய்திகளிலும் நாம் இதனை பார்க்கமுடியும். கிறிஸ்தவத்தில் இப்படி "கொடூரமான‌ சட்டமில்லை", விருப்பமிருப்பவன் இருக்கட்டும் இல்லையானால் போகட்டும், அவ்வளவு தான். வேண்டுமானால், அவன் குடும்ப நபர்கள் அவனுக்கு அறிவுரை கூறுவார்கள், புத்தி சொல்வார்கள், கேட்கமாட்டேன் என்றால் விட்டுவிடுவார்கள். ஆனால், பைபிள் அவனை கொல்லுங்கள் என்று குர்‍ஆன் போல சொல்வதில்லை.

உண்மை இப்படி இருக்க, ஒரு கிறிஸ்தவன் முஸ்லீமாக மாறினால் அவனுக்கு தன் "புதிய இஸ்லாமிய நம்பிக்கையை" வெளிக்காட்ட தடைகள் இல்லை. தன்னை கிறிஸ்தவர்கள் கொன்றுவிடுவார்கள் என்று அவன் பயந்து வாழவேண்டிய அவசியமில்லை. ஆனால், ஒரு முஸ்லீம் கிறிஸ்தவனானால், பல ஆண்டுகள் கடந்தும் தன் நம்பிக்கையை அப்படியே மூடி வைப்பான், காரணம் உயிர்... உயிர்... உயிர்.... மட்டுமல்ல, பல இஸ்லாமிய நாடுகளில் அவன் வாழும் இடத்தில் பிரச்சனை வரும், வேலையில் பிரச்சனை வரும். இப்படி பல கொடுமைகள் இஸ்லாமின் பெயரில் நடந்துக்கொண்டு இருக்கிறது.

நான் இங்கு சொல்லவிரும்புவது இது தான், பல முஸ்லீம்கள் "கிறிஸ்தவம் தான் உண்மை மார்க்கம் என்று நம்பியிருப்பார்கள்", ஆனால், வெளியே சொல்லமுடியாமல் தவிப்பார்கள். ஆனால், ஒரு கிறிஸ்தவன் முஸ்லீமாக மாறி தன்னை மறைத்துக்கொண்டு வாழமாட்டான், அப்படி அவனை மறைந்து வாழச்சொல்வீர்களா நீங்கள்! அடேங்கப்பா மலைகளை கவுத்துவிடமாட்டீர்கள் நீங்கள்?! உண்மை மார்கத்தை ஒருவன் ஏற்றுக்கொண்டாலும் அதற்கு இவர்கள் தடையாக இருக்கிறார்கள் என்றுச் சொல்லி, உலகை ஒரு வழி ஆக்கிவிடமாட்டீர்கள் நீங்கள்!

எனவே, நீங்கள் சொல்வது தவறு, ஒருவன் முஸ்லீமானால், அவன் உடனே அதை வெளிப்படுத்துவான், ஆனால், ஒரு முஸ்லீம் கிறிஸ்தவனானால், அவன் இழக்கவேண்டியது மிகவும் அதிகமாக இருக்கும். இதற்கு காரணம், இஸ்லாம் கொடூரம், கிறிஸ்தம் அமைதி என்பதால் தான்.

4.இஸ்லாம், "பொய் மார்க்கம்" என்று எல்லா கிறிஸ்தவர்களுக்கும் தெரியும்:

a) இன்னொரு வேதம், இன்னொரு நபி கிறிஸ்தவர்களுக்குத் தேவையில்லை:

பைபிளில் எங்களுக்கு தேவையான எல்லா கட்டளைகளும், நல்ல வழியும், இரட்சிப்பும் உண்டு. எனவே, இன்னொரு வேதம் எங்களுக்குத் தேவையில்லை. நான் ஒரு நபியை எழுப்புவேன், அவரை நம்புங்கள், அவரை அப்படியே அச்சடித்தது போல பின்பற்றுங்கள், அவரின் உடை, நடை பாவனையை அப்படியே காபி அடியுங்கள், என்று இயேசு எங்களுக்குச் சொல்லிவிட்டுப்போகவில்லை. பரிசுத்த ஆவியானவர் உங்கள் உள்ளங்களில் வருவார், அவர் உங்களை நீதியில், சத்தியத்தில் நடக்க உதவிச்செய்வார், நீங்கள் தவறு செய்ய முற்படும் பொது உங்களை கடிந்துக்கொள்வார்,எல்லாரிடத்திலும் அன்பு கூறுங்கள், அதன் மூலம் நீங்கள் என் சீடர்கள் என்று உலகம் அறிந்துக்கொள்ளட்டும் என்று பல அறிவுரைகளை கட்டளைகளை இயேசு கொடுத்துள்ளார். அப்படியே பெந்தகோஸ்தே நாளன்று, பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். குர்‍ஆனை கிறிஸ்தவர்கள் வேதம் என்று நம்புவதுமில்லை, முகமது ஒரு தீர்க்கதரிசி என்று நம்புவதுமில்லை, எங்களுக்கு இப்படிப்பட்ட வேதமும், நபியும் தேவையும் இல்லை. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எனவே, உங்கள் கிளிப்பிள்ளை அறிக்கைகளை நாங்கள் நம்பத்தயாராக இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

b) ஆட்டுத்தோலை போர்த்துக்கொண்ட ஓநாய்கள் வருவார்கள் என்றும் இயேசு எச்சரித்துள்ளார்:

இயேசுவின் நற்செய்தியையே நாங்கள் நம்புகிறோம். வேறு ஒரு நற்செய்தி(சுவிசேஷம்) எங்களுக்குத் தேவையில்லை. உலகத்தில் பல பேர் எழும்பி, பல பேரை குழப்புவார்கள் என்றும், ஆட்டுத்தோலை போர்த்துக்கொண்ட ஓநாய்கள் வருவார்கள் என்றும் இயேசு எச்சரித்துள்ளார்.

கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள் (மத்தேயு 7:15)


இப்படி பலபேர் "தங்களை இயேசுவிற்கு அடுத்த தீர்க்கதரிசிகள்" என்று சொல்லிக்கொண்டு வந்தார்கள், மரித்தார்கள். எனவே, நபி என்று சொல்லிக்கொண்டு வருபவர்களையும் போகிறவர்களையும் நாங்கள் நம்பவேண்டிய அவசியம் இல்லை.

c) வேறு ஒரு சுவிசேஷம் கொண்டுவருபவன் "சபிக்கப்பட்டவன்":

நாங்கள் நம்பியிருக்கின்ற சுவிசேஷம் தவிர வேறு ஒரு சுவிசேஷம் கொண்டுவருபவன், அவன் தேவதூதனே ஆனாலும், அவன் சபிக்கப்பட்டவன் என்று பைபிள் சொல்கிறது.

நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.(கலாத்தியர் 1:8,9)


இஸ்லாம் படி பார்த்தால், இந்த வசனத்தின் படி காபிரியேல் தூதன் சபிக்கப்பட்டவன். எனவே, கிறிஸ்தவர்கள் "இஸ்லாம் உண்மை மார்க்கம் அல்ல என்று தான்" நம்பியிருக்கிறார்கள். கிறிஸ்தவர்களில் "இஸ்லாம் தான் மெய் மார்க்கம்" என்று நம்புகிறவன், எப்போதோ இஸ்லாமுக்கு சென்று இருப்பான் அல்லவா? அவனவனுக்கு தன் தன் மார்க்கம் மெய்மார்க்கம். இதை நான் ஏன் எழுதவேண்டி வந்தது என்றால், "கிறிஸ்தவர்களின் நம்பிக்கையைப் பற்றிய அறிக்கையை" இஸ்லாமியர்களே முடிவு செய்து சொன்னதால், உண்மையை அழுத்தமாக சொல்லவேண்டி வருகிறது.

d) பெயரளவிற்காகக் கூட கிறிஸ்தவர்கள், முகமதுவை நபி என்று நம்பமாட்டார்கள்:

இயேசுவின் வாழ்க்கையை நாங்கள் படிக்கிறோம், அதன்படி வாழ முயற்சி எடுக்கிறோம். ஒருவேளை கிறிஸ்தவர்களாகிய எங்களில் சிலர், "இயேசு சொன்னது போல, உன்னைப்போல் பிறனையும்(அவன் இந்துவாக இருந்தாலும் சரி, முஸ்லீமாக இருந்தாலும் சரி, நாத்தீகனாக இருந்தாலும் சரி) நேசிப்பாயாக" என்ற கட்டளையை சரியாக பின்பற்ற தவறினாலும், அந்த கட்டளை மிகவும் உன்னதமானது, இறைவன் கொடுத்தது என்று ஏற்றுக்கொள்கிறோம். எங்கள் வழி அன்பின் வழி. இயேசு சொன்னது போல, நீங்கள் அன்புள்ளவர்களாக இருந்தால், நீங்கள் என் சீடர்கள் என்று உலகம் அறிந்துக்கொள்ளும், என்ற வார்த்தைக்கு இணங்க, நாங்கள் நடக்க விரும்புகிறோம். அதற்காகத்தான் நீங்கள் எவ்வளவு கேவலமான வார்த்தைகளை சொன்னாலும், எங்கள் இயேசுவைப்போல பொருத்துக்கொண்டு போய்க்கொண்டு இருக்கிறோம்.

ஒருவர் "தன்னை தீர்க்கதரிசி அதுவும் இயேசுவிற்கு அடுத்தபடியாக வந்தவர், உலகத்திற்கு வெளிச்சம் கொடுக்க வந்தவர், சத்திய மார்க்கம் பற்றி சொல்லவந்தவர் என்றுச் சொல்லும் போது, அவருக்கு என்னென்ன‌ குண‌ங்க‌ள் குறைந்த‌ ப‌ட்ச‌ம் இருக்க‌வேண்டும்" என்று எங்க‌ளுக்கு தெளிவாக‌த்தெரியும்.

இந்த வகையில் கிறிஸ்தவர்கள் முகமதுவின் வாழ்க்கையை முழுவதும் தெரிந்துக்கொண்ட பிறகு அவரை ஒரு "பெயரளவிற்காகவாவது, ஒரு நபியாக" நினைக்கவும் எங்களுக்கு மனம் இடம் கொடுப்பதில்லை.

உதாரணத்திற்கு: கிறிஸ்தவத்தில் ஒருவரை "பிஷப்பாக, போதகராக, மூப்பராக etc." நியமிக்க அவருக்கு இருக்கவேண்டிய குணங்கள் என்ன என்று பைபிள் சொல்கிறது. குறைந்த பட்சம் ஒரு போதகருக்கு இருக்கவேண்டிய இந்த குணங்களில், உலகத்தில் சத்திய மார்க்கத்தை பரப்ப வந்தவர் என்று இஸ்லாமியர்களால் சொல்லப்படும் முகமதுவிடம் இந்த குணங்களில் எத்தனை இருக்கிறது என்று நீங்களே சோதித்துப்பாருங்கள். சாதாரண மக்கள் நியமிக்கும் ஊழியர்களுக்கே இந்த தகுதிகள் இருக்கவேண்டும் என்று பைபிள் சொல்வதை படிக்கும் கிறிஸ்தவர்களுக்கு, அல்லா நியமித்த முகமதுவிற்கு எவ்வளவு தகுதிகள் இருக்கவேண்டும் தெரியாதா?

மூப்பருக்கு இருக்கவேண்டிய குணங்கள்:

குற்றஞ்சாட்டப்படாதவனும்,

ஒரே மனைவியையுடைய புருஷனும்,

துன்மார்க்கரென்றும் அடங்காதவர்களென்றும் பேரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவனிருந்தால் அவனையே ஏற்படுத்தலாம்.

ஏனெனில், கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக்காரனுக்கேற்றவிதமாய்,

குற்றஞ்சாட்டப்படாதவனும்,

தன் இஷ்டப்படி செய்யாதவனும்,

முற்கோபமில்லாதவனும்,

மதுபானபிரியமில்லாதவனும்,

அடியாதவனும்,

இழிவான ஆதாயத்தை இச்சியாதவனும்,

அந்நியரை உபசரிக்கிறவனும்,

நல்லோர்மேல் பிரியமுள்ளவனும்,

தெளிந்தபுத்தியுள்ளவனும்,

நீதிமானும்,

பரிசுத்தவானும்,

இச்சையடக்கமுள்ளவனும்,

ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும்,

எதிர்பேசுகிறவர்களைக் கண்டனம் பண்ணவும் வல்லவனுமாயிருக்கும்படி,

தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவனுமாயிருக்கவேண்டும்.(தீத்து 1:6-9)

சபையில் உதவிக்காரர்களின்(Deacon) தகுதிகள்

மேலும் உதவிக்காரரானவர்கள்

ஒரே மனைவியையுடைய புருஷருமாய்,

தங்கள் பிள்ளைகளையும்சொந்தக் குடும்பங்களையும் நன்றாய் நடத்துகிறவர்களுமாயிருக்கவேண்டும்.( 1 தீமோ 3:12)

சபையில் கண்காணிப்பவரின்(பிஷப்) தகுதிகள்:

ஆகையால் கண்காணியானவன்

குற்றஞ்சாட்டப்படாதவனும்,

ஒரே மனைவியை உடைய புருஷனும்,

ஜாக்கிரதையுள்ளவனும்,

தெளிந்த புத்தியுள்ளவனும்,

யோக்கியதையுள்ளவனும்,

அந்நியரை உபசரிக்கிறவனும்,

போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.

அவன் மதுபானப்பிரியனும்,

அடிக்கிறவனும்,

இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல்,

பொறுமையுள்ளவனும்,

சண்டைபண்ணாதவனும்,

பணஆசையில்லாதவனுமாயிருந்து,

தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும்,

தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும்.

ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்? அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது. அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனாயுமிருக்கவேண்டும்.(1 தீமோ 3:2-7)

கர்த்தருடைய ஊழியக்காரனுக்கு இருக்கவேண்டிய தகுதிகள்:

கர்த்தருடைய ஊழியக்காரன்

சண்டைபண்ணுகிறவனாயிராமல்,

எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும்,

போதகசமர்த்தனும்,

தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.

எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும், பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.(2 தீமோ 2:24-26)

நான் உங்களை குற்றப்படுத்த இதனை எழுதவில்லை, நாங்கள் இந்த தகுதிகள் உள்ளவர்களைத் தான் குறைந்த பட்சம் தேவனுடைய ஊழியக்காரர்களாக நியமித்துக்கொள்கிறோம். அப்படி இருக்கும் போது, இந்த தகுதிகளில் பலவற்றை இழந்துள்ள முகமதுவை எப்படி கிறிஸ்தவர்கள் "தீர்க்கதரிசி" என்று நம்புவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். அவர் சொன்னது தேவன் சொன்ன வேதம் என்று கிறிஸ்தவர்கள் நம்புவார்கள் என்று எப்படி முடிவு செய்தீர்கள்?

[இன்று நாம் காணும் உலகத்தில் இந்த குணங்கள் உள்ளவரையா நீங்கள் தேவனின் ஊழியக்காரர்களாக் நியமிக்கிறீர்கள், அப்படி சில ஊழியர்கள் இருப்பதாக தெரியவில்லையே என்று என்னைக் கேட்டால், இந்த தகுதிகள் இல்லாதவரை யாராவது போதகராக நியமித்தால், ரொம்ப நாட்கள் நிலைக்காது, அவரை நியமித்தவர் அதன் பலனை நிச்சயமாக அடைவார். செய்திகளில் சில ஊழியர்கள் சபை பணத்தை கலவாடினார்கள், பெண்களை ஏமாற்றிவிட்டார்கள் என்று நாம் படிக்கிறோமே, இவர்கள் எல்லாம் இந்த தகுதியில்லாத கேடகரி தான். இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி, நீங்களும் உங்கள் இஸ்லாமிய மசூதிகளில் நியமிக்கும் ஊழியருக்கு என்ன என்ன தகுதிகள் இருப்பவரை நியமிக்கிறீர்கள், மற்றுமுள்ள இமாம்கள், இன்னுமுள்ள ஊழியர்களை எப்படி நியமிக்கிறீர்கள் என்று எங்களிடம் பகிர்ந்துக்கொண்டால், தமிழ் மக்கள் அனைவரும் இஸ்லாம் பற்றியும் சிறிது அறிந்துக்கொள்வார்கள்]]

முடிவுரை: "கிறிஸ்தவர்கள் இஸ்லாமை உண்மை மார்க்கம்" என்று நம்பமாட்டார்கள் என்பதை பைபிளை அடிப்படையாகக் கொண்டு இன்னும் பல தகவல்களை கொடுக்கமுடியும், இந்த கட்டுரைக்கு இந்த தகவல்கள் போதும் என்று எண்ணுகின்றேன். மேலும் நீங்கள் ஏதாவது விவரம் கேட்டால் தருவேன்.

தமிழ் இஸ்லாமிய அறிஞர்களுக்கு: இயேசுவின் போதனைகளை கடைபிடிக்கும் எந்த நபரும் முகமதுவின் போதனையை நமபவேண்டுமானால், அது அற்புதம் என்று தான் சொல்லவேண்டும். நீ உன்னில் அன்பு கூருவதுபோல பிறனிடத்தில் அன்பு கூறவேண்டும் என்ற இயேசுவின் கட்டளையை நம்பும் கிறிஸ்தவன், அல்லாவின் பாதையில் போரிடு என்ற குர்‍ஆனின் கட்டளையை நம்புவது என்பது உலக அதியங்களில் ஒன்று.

நாங்கள் பைபிளை நம்புகிறோம், இயேசுவை நம்புகிறோம், அவ்வளவுத்தான், இஸ்லாம் உண்மை மார்க்கம் என்பதை நாங்கள் கனவிலும் நம்புவதில்லை.

Source: http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=12579#12579
 
 

வெள்ளி, 15 பிப்ரவரி, 2008

Answering PJ: இயேசு நியமித்த நேர்த்திமிகு தலைவர் "பேதுரு"

   
Answering PJ: இயேசு நியமித்த நேர்த்திமிகு தலைவர் "பேதுரு"

(பிஜே அவர்களின் "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்திற்கு ஈஸா குர்‍ஆன் மறுப்பு)


"இயேசுவிற்கு மனிதர்களை சரியாக மதிப்பிடத் தெரியவில்லை, தனக்குப் பின் கிறிஸ்தவத்தை தலைமை தாங்க பேதுருவை இயேசு நியமித்தது சரியானது அன்று" என்று "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்தில் பிஜே அவர்கள் கேள்வியை எழுப்புகிறார்.

பிஜே அவர்களது கணிப்பு தவறானது என்றும், ஆதாரமற்றது என்றும் என் முதல் கட்டுரையில் விளக்கினேன். இயேசுவிற்கு எத்தனை சீடர்கள் இருந்தார்கள் என்று கூட தெரிந்துக்கொள்ளாமல் பிஜே அவர்கள் கிறிஸ்தவ கட்டுரைகளை எழுதிக்கொண்டு இருக்கிறார். பிஜே அவர்களின் இந்த குற்றச்சாட்டிற்கு என் முதல் பதிலை கீழ் கண்ட கட்டுரையில் படிக்கலாம்.

பாகம் 1 : Answering PJ: "பின்னாகப் போ சாத்தானே" என்றார்


பாகம் 2 :

Answering PJ: இயேசு நியமித்த நேர்த்திமிகு தலைவர் "பேதுரு"


இந்த கட்டுரையில், "இயேசு நியமித்த நேர்த்தி மிகு தலைவர் பேதுரு " என்ற தலைப்பில் பதில் அளிக்கிறேன். பேதுருவை தலைவராக இயேசு நியமித்தது மிகவும் சரியான மதிப்பிடல் என்பதை இக்கட்டுரையில் விளக்குகிறேன். ஆதாரமே இல்லாமல், பேதுருவை விட சிறந்த சீடர்கள் இயேசுவிற்கு 9 பேர் இருந்தார்கள் என்று பிஜே அவர்கள் சொன்னது தவறானது என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.

பிஜே அவர்கள் எழுதியது:

பரலோகத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்தில் நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார். ( மத்தேயு 16:19)

பேதுருவை விடச் சிறந்த சீடர்கள் ஒன்பது பேர் இருக்கும் போது பேதுருவைச் சரியாக எடை போடாமல் அவனிடம் பரலோக ராஜ்ஜியத்தின் திறவுகோலை வழங்கியது கடவுள் செய்யக் கூடியதா? இயேசு கடவுளாக இருக்க முடியாது என்பதை இதிலிருந்து ஐயமற அறியலாம்.

Source: http://www.onlinepj.com/book/mahana11.htm



1. பேதுருவை தயார்படுத்திய இயேசு:

இயேசு தன் ஊழிய ஆரம்ப காலத்திலிருந்தே பேதுருவையும், யோவானையும், அவன் சகோதரன் யாக்கோபையும் பல முக்கியமான சந்தர்பங்களில் தன்னோடு கூட அழைத்துச் சென்றார். அற்புதங்கள் செய்யும் போது, இவர்களை தன்னோடு அழைத்துச்சென்றார்.

a) இயேசு பேதுருவை தன் சீடனாக அழைக்கும்போதே "கல்" என்ற பொருள் வரும் "கேபா" என்ற பெயரை வைத்தார். பெயருக்கு ஏற்றார் போல் எது நடந்தாலும் அசையாமல் உறுதியாய் இருக்கும்படி இயேசு பெயரை மாற்றுகிறார்.

யோவான் 1:42 பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து, நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம்.



b) ஒரு ஜெப ஆலைய தலைவனின் மகள் மரித்த செய்தி கேட்டவுடன் , இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் அழைத்துக்கொண்டு சென்று அற்புதம் செய்தார் (மாற்கு 5:35-42, லூக்கா 8:49-56). இந்த மூவர் தான் இயேசுவிற்கு பிறகு எருசலேம் சபைக்கு தலைமை தாங்கி வந்தனர்.

c) ஒரு முறை இயேசு இந்த மூவரை ஒரு உயர்ந்த மலைக்கு அழைத்துக்கொண்டுச் சென்று அங்கு அவர்கள் முன்பு "மறுரூபமானார்". மற்றும் எலியாயும், மோசேயும் இயேசுவோடு பேசியதை இவர்கள் கண்டார்கள். மட்டுமல்லாமல், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி "இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்கு செவிகொடுங்கள்" என்று சொல்லிற்று. (மாற்கு 9:2-10 , மத்தேயு 17:1-9, லூக்கா 9:28-36).

இந்த நிகழ்ச்சியை குறித்து பேதுரு சபைக்கு கடிதம் எழுதும் போது கூட, நாங்கள் கட்டுக்கதைகளை கேட்டு இப்படி ஊழியம் செய்யவில்லை, இயேசுவின் மகிமையை எங்கள் கண்களால் கண்டதால் பேசுகிறோம் என்று ஆணித்தரமாக எழுதுகிறார் (2 பேதுரு 1:16-18).

நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம். இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது, அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக்கேட்டோம் (2 பேதுரு 1:16-18)



இப்படியாக இயேசு தன் மகிமையை இந்த மூன்று முன்னனி சீடர்களுக்கு காட்டினார்.

d) எல்லா சீடர்களுக்கும் பிரதிநிதியாக பேதுரு இருக்கவேண்டும் என்று இயேசு கருதினார் . சில சயமங்களில் எல்லா சீடர்களிடம் கேள்விகள் கேட்பதற்கு பதிலாக, பேதுருவிடம் இயேசு கேள்விகள் கேட்கிறார்.

பின்பு, அவர் சீஷர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு, பேதுருவை நோக்கி , நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா? (மத்தேயு 26:40) & (மாற்கு 14:37)

அப்பொழுது அவர் பேதுருவையும் யோவானையும் அழைத்து, நாம் பஸ்காவைப் புசிக்கும்படிக்கு நீங்கள் போய், அதை நமக்கு ஆயத்தம் பண்ணுங்கள் என்றார்(லூக்கா 22:8)

தேவ தூதனும் அப்படியே சொன்னான்:

நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும், பேதுருவினிடத்திற்கும் போய்,உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அவர் உங்களுக்குச்சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று, அவர்களுக்குச்சொல்லுங்கள் என்றான். (மாற்கு 16:7)



e) கெத்சமனே தோட்டத்தில் கூட இந்த மூன்று சீடர்கள் மிகவும் நெருங்கி இருக்கவேண்டும் என்று இயேசு விரும்பி, மற்ற சீடர்களை தூரமாக இருக்கவைத்து, இந்த மூன்று சீடர்களை மட்டும் தன்னோடு வரும்படி, ஜெபிக்கும்படி இயேசு சொல்லியுள்ளார்.

அப்பொழுது, இயேசு அவர்களோடே கெத்சமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து, சீஷர்களை நோக்கி: நான் அங்கே போய் ஜெபம்பண்ணுமளவும் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி; பேதுருவையும், செபதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டுபோய், துக்கமடையவும், வியாகுலப்படவும் தொடங்கினார். (மத்தேயு 26:36-37)



f) கடைசியாக தன் சபையை மேய்க்கும் பொறுப்பை பேதுருவிடம் இயேசு தருகிறார்

அவர்கள் போஜனம்பண்ணின பின்பு, இயேசு சீமோன் பேதுருவை நோக்கி; யோனாவின்குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார்.அதற்கு அவன், ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர், என்ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார். மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி, யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னைநேசிக்கிறாயா என்றார், என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக்கேட்டபடியினாலே பேதுரு துக்கப்பட்டு, ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான்உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு, என் ஆடுகளை மேய்ப்பாயாகஎன்றார்(யோவான் 21:15, 17).



இப்படியாக இயேசு பேதுருவை பல முக்கியமான சமயங்களில் தன்னோடு வைத்துக்கொண்டு, பேதுருவை தயார்படுத்தினார். பேதுருவை மட்டுமல்ல யோவானையும், யாக்கோபையும் அப்படியே தயார் படுத்தினார், ஆனால், பேதுருவிடம் அதிக பொறுப்பை ஒப்படைத்தார்.

ஆனால், பிஜே அவர்கள் இதைப்பற்றியெல்லாம் ஒன்றும் தெரிந்துக்கொள்ளாமல், ஒரு நிகழ்ச்சியில் இயேசு பேதுருவை கடிந்துக்கொண்டதை மிகப்பெரிய குற்றமாக பாவித்து, பேதுரு தலைவன் பொறுப்பிற்கு தகுதியானவன் அல்ல என்று ஆதாரம் இல்லாமல் எழுதுகிறார். தவறே செய்யாதவன் தலைவன் இல்லை, தவறுகளை திருத்திக்கொள்பவன் தான் தலைவன் ஆவான்.

இயேசு பேதுருவை தலைவனாக மாற்றியது மட்டுமல்ல, ஒரு தலைவனுக்கு தேவையான குணங்கள் இயற்கையாக பேதுருவிடமும் இருந்தது, ஒரு துடிப்புள்ள தலைவனாக பேதுரு செயல்பட்டார், துன்ப நேரங்களில் முன் வரிசையில் நின்றார் இந்த பேதுரு.

பேதுருவின் தலைமைத்துவ குணங்கள் என்னவென்று சுருக்கமாக காணலாம்


a) மற்ற சீடர்களின் பிரதிநிதியாக பேதுரு தானே முன்வந்து பேசியுள்ளார்.

ஒரு தலைவனுக்கு இருக்கவேண்டிய குணங்களில் ஒன்று தன் நண்பர்களுக்காகவோ, தன் கூட இருப்பவர்களுக்காகவோ வாய்ப்பு கிடைக்கும் போது முதலாவது பேசி விவரங்களை தெரிந்துக்கொள்வது. இதை பேதுரு செய்துள்ளார். இயேசுவோடு 12 பேர் இருந்தாலும், அவர்களில் பல சந்தர்பங்களில் பேதுரு மற்றவர்களுக்காக பேசியுள்ளார்.

அப்பொழுது, பேதுரு அவரை நோக்கி: இந்த உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டும் என்றான். (மத்தேயு 15:15)

அப்பொழுது பேதுரு அவரை நோக்கி, இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே, என்று சொல்லத்தொடங்கினான். (மாற்கு 10:28)



இயேசு பொதுவாக எல்லா சீடர்களிடமும் கேட்கும் கேள்விகளுக்கு, பேதுரு தானே முந்திக்கொண்டு பதில் அளித்தார்.


அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். (மத்தேயு 16:15-16)



b) இயேசுவின் மீது திடமான நம்பிக்கை உள்ளவர் பேதுரு:

இயேசு ஒரு முறை "தன் மாம்சம் போஜனம் என்றும், தன் இரத்தம் பானமாக இருக்கிறது என்றும், இதை புசித்து, பானம் பண்ணுகிறவன்" என்றேன்றும் பிழைப்பான் என்று சொல்லும் போது, இது கடினமான உபதேசம் என்றுச் சொல்லி பல சீடர்கள் பின்வாங்கிப்போனார்கள், அப்போது இயேசு என்னை விட்டு போக மனதாக இருக்கிறீர்களா? என்று எல்லாரையும் கேட்டபோது, பேதுரு "ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே, நாங்கள் எங்கே போவோம், நீர் கிறிஸ்து" என்று அறிக்கையிட்டார். பல சீடர்கள் முறுமுறுக்கும் போது கூட,பேதுரு தன் நம்பிக்கையை வெளிப்படுத்தினார், மட்டுமல்ல, எல்லா சீடர்களுக்கு பதிலாக தானே பேசினார்.

அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள். அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார். சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான். (யோவான் 6:66-69)



c) விசுவாச வீரர் பேதுரு:

ஒரு முறை சீடர்கள் படகில் செல்லும் போது, காற்று பலமாக அடிக்கும் நேரத்தில், இயேசு தண்ணீரில் நடந்து அவர்களிடத்தில் வரும்போது, நீர் இயேசுவானால் நானும் தண்ணீரில் நடக்கட்டும் என்று தைரியமாக சொல்லி, இயேசுவின் அனுமதி பெற்று தண்ணீரில் நடந்தவர் இந்த பேதுரு. அப்படி நடந்து வரும் போது, காற்றையும், அலைகளையும் கண்டு பயந்து மூழ்கும் போது, இயேசு பேதுருவை பிடித்து தூக்கி எடுத்து மறுபடியும் இருவரும் படகு வரை தண்ணீரில் நடந்து வந்தது, ஒரு சாதாரண மனிதனான பேதுருவின் வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவம் ஆகும்.

பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக்கட்டளையிடும் என்றான். அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக கடலின்மேல் நடந்தான். காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான். உடனே இயேசு கையை நீட்டி அவனைப்பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார். அவர்கள் படவில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது. (மத்தேயு 14: 28-32)



பேதுரு தண்ணீரில் நடந்தாலும், பிறகு சந்தேகப்பட்டு மூழ்கினார் இல்லையா? என்று கேட்கலாம். ஆனால், இயேசுவின் வார்த்தைகளை நம்பி தண்ணீரில் முதல் அடி எடுத்து வைப்பதற்கு எவ்வளவு அதிக விசுவாசம் வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் .

d) பேதுருவின் அதிக அன்பு, இயேசுவின் வருகையை புரிந்துக்கொள்ள தடையாக இருந்தது:

பேதுரு மற்ற சீடர்கள் போல இயேசுவின் மீது அதிக அன்பு வைத்து இருந்தார், இன்னும் சொல்லப்போனால, அவர்களை காட்டிலும் அதிகமாகவே அன்பு வைத்து இருந்தார், பேதுரு இயேசுவை "மேசியாவாகிய கிறிஸ்து" என்று நம்பியிருந்தார், ஆனால், அந்த மேசிய எப்படி மக்களுக்கு விடுதலையை கொடுப்பார் என்பதை அறிந்துக்கொள்ள வில்லை. அதனால், தான் இயேசு தன் மரணம், பாடுகளைப் பற்றி விவரிக்கும் போது, பேதுரு புரிந்துக்கொள்ளாமல், இயேசுவை தனியாக அழைத்து இப்படி உமக்கு நடக்ககூடாது என்று கடிந்துக்கொண்டார்.

இயேசுவின் மீதுள்ள அதிகமான அன்பு அவரை இப்படி பேசச்சொல்லியது, நாம் நேசிக்கும் நபர்களுக்கு ஒரு ஆபத்து வரும் என்று தெரிந்தால், நாம் என்ன செய்வோம்? அப்படியே ஆகட்டும் என்று சொல்வோமா? இல்லை அல்லவா? அது போலவே, உங்களுக்கு சிலுவை பாடு வேண்டாம், மரணம் வேண்டாம், உயிர்த்தெழுதலும் வேண்டாம் என்று அறியாமையினால் இயேசுவிடம் சொல்லும் போது, இயேசு பேதுருவை கடிந்துக்கொள்கிறார்.

சிலுவை மரணம் வேண்டாமென்றும், உயிர்த்தெழுதல் வேண்டாமென்றும் சொன்ன பேதுருவைப் பார்த்து, இயேசு "பின்னாகப்போ சாத்தானே, நீ தேவனுக்கு ஏற்றவைகளை சிந்திக்காமல், மனிதருக்கு ஏற்றதை சிந்திக்கிறாய்" என்று கடிந்துக்கொள்கிறார்.

அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான். அவரோ திரும்பிப் பேதுருவைப்பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கேற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார். (மத்தேயு 16: 21-23)



ஆனால், பிஜே அவர்கள் இயேசு ஒரு முறை பேதுருவை கடிந்துக்கொண்டதை பெரிதுபடுத்தி "பேதுரு தலைமை பொறுப்பை ஏற்றுக்கொள்ள தகுதியானவர் இல்லை" என்று முடிவு செய்துவிட்டார்.

நாம் நம் பிள்ளைகளை கடிந்துக்கொள்வதில்லையா? ஒரு ஆசிரியர் தன் மாணவனை திட்டுவதில்லையா? நீங்கள் உங்கள் ஆசிரியரிடம் ஒரு அடி, அல்லது திட்டு வாங்கவில்லையா? அப்படி வாங்கினால், நாம் வாழ்க்கையில் விளங்காமல் போய்விடுவோமா? இல்லை பிஜே அவர்களே இல்லை, இன்று பெரிய பதவிகளில் இருக்கும் நபர்களை கேட்டுப்பாருங்கள், அவர்கள் எத்தனை முறை பெற்றோர்களால், ஆசிரியர்களால் கடிந்துக்கொள்ளப்பட்டார்கள் என்றுச் சொல்வார்கள். அவர்கள் வகுப்பில் பட்ட அந்த அவமானமே அவர்களை எப்படி நல்ல நிலைக்கு கொண்டுவந்தது என்று பெருமையாக சொல்லி இன்று சந்தோஷப்படுவார்கள். ஆனால், "இயேசு சிலுவையில் மரிக்கவில்லை, உயிர்த்தெழவில்லை" என்று ஓயாமல் 1400 ஆண்டுகளாக சொல்லிக்கொண்டு இருக்கும் இஸ்லாமியர்களை இயேசு என்ன சொல்லிக்கொண்டு இருப்பார் என்று சிந்தித்துப் பாருங்கள்.

எனவே, ஒரு முறை இயேசு பேதுருவை கடிந்துக்கொண்டது ஒன்றும் பெரிய தவறில்லை.

e) இயேசுவை பாதுகாப்பதாக நினைத்து, வாளை எடுத்த பேதுரு:

இயேசுவிற்கு ஒரு ஆபத்து என்று வரும்போது, யுதர்கள் சிப்பாய்களோடு வந்து இயேசுவை கைது செய்யும் போது, வாளை எடுத்து ஒரு சிப்பாயின் காதை வெட்டியவர், இந்த பேதுரு. இவர் செய்தது தவறு என்று இயேசு சொன்னது உண்மையென்றாலும், 12 சீடர்கள் இருக்கும் போது, தன் தலைவனுக்கு ஒரு தீங்கு வரும் போது அதை எதிர்த்து நின்ற இந்த பேதுருவை இயேசு தன் சபைக்கு தலைமை தாங்க நியமித்தது ஒன்றும் ஆச்சரியமில்லையே!

அப்பொழுது சீமோன்பேதுரு, தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்; அந்த வேலைக்காரனுக்கு மல்குஸ் என்று பெயர். அப்பொழுது இயேசு பேதுருவை நோக்கி: உன் பட்டயத்தை உறையிலேபோடு; பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ என்றார். (யோவான் 18:10-11)



இங்கு நான் பேதுரு செய்தது சரியானது என்று சொல்லவில்லை, ஆனால், உலகபிரகாரமாக பார்க்கும் போது தன் குருவிற்கு வரும் ஆப‌த்தை கண்டு பேதுருவினால் சும்மா இருக்கமுடியவில்லை என்று சொல்லவந்தேன்.

f) இயேசுவிற்கு என்ன நடக்கும் என்று அறிய ஆவலோடு நீதிமன்றம் வரை சென்றவர் இந்த பேதுரு:

சீமோன்பேதுருவும் வேறொருசீஷனும் இயேசுவுக்குப் பின்சென்றார்கள். அந்தச் சீஷன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்ததினால், இயேசுவுடனேகூடப் பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் பிரவேசித்தான். பேதுரு வாசலருகே வெளியே நின்றான். அப்பொழுது பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்த மற்றச் சீஷன் வெளியே வந்து, வாசல் காக்கிறவர்களுடனே பேசி பேதுருவை உள்ளே அழைத்துக்கொண்டுபோனான். (யோவான் 18:15-16)

பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரமனைவரைக்கும் வந்து, உள்ளே பிரவேசித்து, முடிவைப்பார்க்கும்படி சேவகரோடே உட்கார்ந்தான். (மத்தேயு 26:58)



இயேசுவை யூத ஆசாரியர்கள் பிடித்துச் சென்ற போது, பேதுருவும் மற்ற சீடர்களும் ஓடிச்சென்றவர்கள் தான், ஆனால், பேதுருவும் இன்னும் ஒரு சீடனும் இயேசுவை கொண்டுச்சென்ற பிரதான ஆசாரியன் வீடுவரைக்கு சென்று முடிவு என்ன ஆகிறது என்று பார்க்க சென்றார்கள்.

மற்ற 9 பேர் ஓடிப்போனார்கள். இந்தச் செயல் மற்ற சீடர்களை விட பேதுருவும், இன்னொரு சீடனும் சிறிது முக்கியமானவர்களாக பிஜே அவர்களுக்கு தெரியவில்லையா? ஒரு வேளை இப்படி இயேசுவை விட்டு ஓடிப்போன 9 பேர் தான் தலைமை பொறுப்பிற்கு தகுதியானவர்கள் என்று பிஜே அவர்கள் கருதிவிட்டாரோ? இவர்களைத் தான் பிஜே அவர்கள் தன் புத்தகத்தில் பேதுருவை விட சிறந்த்வர்கள் என்று குறிப்பிடுகிறாரோ?

அப்படியானால், பேதுரு ஏன் இயேசுவை அங்கு மறுதலித்தார்? என்று கேட்கலாம். பேதுரு ஒரு மகான் இல்லை அவர் ஒரு மனிதர் தான். அவர் ஒரு மீனவர் தான். தன் குருவிற்கு ஒரு ஆபத்து என்று வரும் போது கூட, பயந்துக்கொண்டு தான் அவர் பிரதான ஆசாரியன் வீடு வரைக்கும் வந்து காத்துக்கொண்டு இருக்கிறார். தன்னை திடீரென்று ஒரு பெண் கண்டுபிடித்து நீயும் இயேசுவோடு இருந்தவன் என்று சொல்லும் போது, இயேசுவை மறுதலித்தார். இது தவறு தான், எப்படியாவது தப்பித்து போகவேண்டும் என்ற எண்ணத்தில் பேதுரு இந்த இடத்தில் "பொய் சொல்கிறார் ". ஆனால், மறுபடியும் அதை நினைத்து மனம் கசந்து அழுது திருந்திவிட்டார் இல்லையா? அது தான் முக்கியம்.

எந்த வாய் இயேசு எனக்கு தெரியாது என்று சொன்னதோ, அதே வாய் அதே எருசலேமில் பல ஆயிரம் மக்களுக்கு இயேசுவைப்பற்றி பிரசங்கம் செய்தது, முதல் பிரசங்கத்திலேயே 3000 பேர் இயேசுவை ஏற்றுக்கொண்டதாக அப்போஸ்தலர் நடபடிகள் சொல்கின்றது.

பிஜே அவர்களே, நீங்கள் பேதுரு எப்படி விழுந்தார் என்று பார்க்கிறீர்கள், ஆனால்,இயேசு பேதுரு விழுந்து எழுந்த பிறகு என்ன செய்யப்போகிறார் என்று பார்த்தார். நீ குணப்பட்ட பின்பு என் மந்தையை மேய்ப்பாயாக என்று இயேசு பேதுருவின் எதிர்காலத்தைப் பற்றி சொல்கிறார்.

g) சபை பொறுப்பை பேதுருவின் கையில் கொடுத்த இயேசு:

பேதுரு சுருசுருப்பானவர், மற்ற சீடர்களை விட சிறிது அதிக பிரசங்கித்தனம் உள்ளவர் (முந்திரிக்கொட்டை என்று சொல்வோமே அதுபோல), விசுவாசத்தில் தீரர், தண்ணீரில் நடந்தவர், தன் குருவை காப்பாற்ற முன்வந்தவர், அதே நேரத்தில் அறியாமையினால் பேசும் போது, இயேசுவால் கடிந்துக்கொள்ளப்பட்டவர். இயேசுவோடு பல அற்புதங்கள் நடைபெறும் போது, அவரோடு இருந்தவர்.

நீங்கள் என்னை யார் என்று நினைக்கிறீர்கள் என்று 12 சீடர்களை இயேசு கேட்டபோது, "நீர் ஜீவனுடைய தேவனுடைய குமாரன், கிறிஸ்து" என்று அறிக்கையிட்டவர் பேதுரு. இப்படிப்பட்டவரிடம் பரலோகத்தின் திறவுகோலை இயேசு கொடுப்பேன், என்று சொன்னது ஆச்சரியமில்லையே.

h) முதல் சுவிசேஷ கூட்டத்தில் பேசிய சுவிசேஷகர் பேதுரு:

இயேசு பரமேறிய பிறகு பெந்தகோஸ்தே நாளன்று, பல ஆயிரம் பேர் கூடி இருக்கும்போது, தான் பொய் சொன்ன அதே மக்களைப் பார்த்து, தைரியமாக எழுந்து நின்று, முதல் சுவிசேஷ கூட்டத்தில் பேசி, 3000 பேரை தேவனின் மந்தையில் சேர்த்த பெருமைக்கு சொந்தக்காரர் இந்த பேதுரு அல்லாமல் வேறு யார் இருக்கமுடியும்?


அப் 2:14. அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாய், யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.

அப் 2:23. அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்.

அப் 2:24. தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது.

அப் 2:41. அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.



இப்பொழுது சொல்லுங்கள், பேதுரு ஒரு கோழையா? வீரனா? மக்கள் குழப்பத்தில் இருக்கும் போது, எழுந்து நின்று அவர்கள் குழப்பதை தீர்த்தார் இந்த பேதுரு. இது ஒரு தலைவனுக்கு இருக்கவேண்டிய தகுதியா இல்லையா? இவைகள் உங்களுக்கு தெரியவில்லையா பிஜே அவர்களே?

i) அரசர்களுக்கு, ஆசாரியர்களுக்கு முன்பாக‌ தைரியமாக சாட்சி கொடுத்த பேதுரு:

பேதுரு யோவானோடு சேர்ந்து தேவாலயத்திற்கு சென்ற போது அங்கு ஒரு முடவன் நடக்க இயேசுவின் பெயரிலே அற்புதம் செய்து, பிறகு அதே தேவாலயத்தில் மிகவும் நீண்ட பிரசங்கம் செய்தார் ( அப்போஸ்தலர் நடபடிகள் அதிகாரங்கள் 3, 4).

யூதாஸுக்கு பதிலாக இயேசுவை கண்களால் கண்டவர் ஒருவர் சாட்சியாக வேண்டும் என்றுச் சொல்லி ஒரு சீடனை 11 பேரோடு சேர்த்துக்கொள்ள முயற்சி எடுத்தவர் இந்த பேதுரு (அப் 1:15-1:26 வரை).

பேதுருவையும் யோவானையும் ஆசாரியர்கள் கைது செய்து, விசாரிக்கும் போது பேதுரு தன் நம்பிக்கையை குறித்து மிகவும் தைரியமாக சாட்சி சொன்னார். இவரது தைரியத்தை குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். ஒரு பெண்ணுக்கு பயந்து பொய் சொன்ன அதே பேதுரு, இங்கு அரசர்களுக்கும், நீதிபதிகளுக்கும், ஆசாரியர்களுக்கும் முன் நின்று தைரியமாக சாட்சி பகருகின்றார். "ஆமாம், இயேசு உயிர்த்தெழுந்தார் " என்று சாட்சி சொல்கிறார். இதை தைரியம் என்று சொல்லாமல் வேறு என்னவென்றுச் சொல்வது. இதை பிஜே அவர்கள் கவனிக்கவில்லையோ?

அப் 4:13. பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள்.14. சொஸ்தமாக்கப்ட்ட மனுஷனன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்பேச அவர்களுக்கு இடமில்லாதிருந்தது.

இன்னொரு முறை, ஆசாரியர்கள் இனி இயேசுவைப்பற்றி பேசக்கூடாது என்று கட்டளையிட்டபோது, பயப்படாமல், உனக்கு கீழ்படிவதை பார்க்கிலும் தேவனுக்கு கீழ்படிவது நல்லது என்று தைரியமாக பேசினார் இந்த பேதுரு.

அப் 5: 28. நீங்கள் அந்த நாமத்தைக்குறித்துப் போதகம்பண்ணக்கூடாதென்று நாங்கள் உங்களுக்கு உறுதியாய்க் கட்டளையிடவில்லையா. அப்படியிருந்தும், இதோ, எருசலேமை உங்கள் போதகத்தினாலே நிரப்பி, அந்த மனுஷனுடைய இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தவேண்டுமென்றிருக்கிறீர்கள் என்று சொன்னான்.29. அதற்குப் பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும், மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.30. நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலைசெய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி,31. இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார்.32. இந்தச் சங்கதிகளைக்குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம் . தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள்.



எருசலேமில் மாத்திரம் அல்லாமல், சமாரியாவிற்கும் சென்று ஊழியம் செய்தார். பேதுரு மிஷனரி ஊழியராக லித்தா, யோப்பா நாடுகளுக்கும் சென்று வந்தார் (அப் 9, 10 அதிகாரங்கள் ). இன்னும் அவரைப் பற்றி சொல்லிக்கொண்டு போகலாம்.

கல்லை மாணிக்கம் ஆக்கும் இயேசு: 

பைபிளை பொருத்தமட்டில், ஒரு மனிதன் பழைய ஏற்பாட்டு நபராக இருந்தாலும் சரி, புதிய ஏற்பாட்டு நபராக இருந்தாலும் சரி, அவனை தேவன் தெரிந்தெடுக்கும் போது, அவன் பூரண குண லட்சணங்கள் உடையவனாக, தகுதி உடையவனாக இருப்பதில்லை, தேவன் அவனை அழைத்து தன் வேலைக்காக அவனை தகுதிப்படுத்தி, கற்றுக்கொடுக்கவேண்டிய பாடங்களை கற்றுக்கொடுத்து, பயன்படுத்திக்கொள்கிறார். இதே போலத்தான் பேதுருவும், கோழையாகவும், சிந்திக்காமல் சீக்கிரத்தில் பேசுகிறவராகவும் இருந்தார், இயேசுவை மறுதலித்தார், இருந்தாலும் அவரையே இயேசு பயன்படுத்திக்கொண்டார். இதோ இன்று நம்முன் "கிறிஸ்தவம் இயேசுவின் தெரிந்தெடுப்பு மிகச்சரியானது என்று சாட்சி பகருகின்றது". இதற்கு தன்னை முழுவதுமாக ஒப்புக்கொடுத்த பேதுருகூட ஒரு காரணம் என்றுச் சொன்னால், அது மிகையாகாது. 

முடிவுரை:

கடைசியாக, பிஜே அவர்களே உங்கள் கணிப்பு தவறு, இயேசுவின் தெரிந்தெடுப்பு தான் மிகச்சரியானது என்பதை இதுவரை நாம் பார்த்த விவரங்களிலிருந்து அறிந்துக்கொள்ளலாம்.

பிஜே அவர்களுக்கு ஒரு சவால்: உங்கள் கணிப்பு சரியானது என்றும், பேதுருவைத் தவிர மற்ற சீடர்கள் 9 பேர் (உங்கள் கணக்குப்படி) தலைமை பொறுப்பிற்கு தகுதியானவர்கள் என்று நிருபியுங்கள். பேதுரு தான் மிகச்சரியானவர் என்பதை நான் விவரித்தேன், என் பங்கு முடிந்துவிட்டது, உங்கள் பங்கு உள்ளது அதை நிருபித்து, உங்கள் நிலையை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

இயேசு பேதுருவை தலைவனாக மாற்றுகிறேன் என்றுச் சொல்லி, மற்ற சீடர்களை குறைவாக மதிப்பிடவில்லை, இதற்கு பதிலாக "உங்களில் தலைவனாக இருக்கவிரும்புகிறவன் மற்றவர்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று சொல்லி எச்சரித்தார் ". இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக தானே சீடர்களின் கால்களை கழுவினார். தன்னை ஒரு நல்ல எடுத்துக்காட்டாக விட்டுச்சென்றார் (இயேசு(கடவுள்) சீடர்களின் கால்களை கழுவலாமா? என்ற தலைப்பில் பிஜே அவர்கள் முன்வைத்த ஒரு கேள்விக்கு என் பதிலை மற்றுமொரு கட்டுரையில் விவரிக்கிறேன்.)

மற்ற சீடர்களும் பேதுருவின் தலைமையை மிகவும் ஆனந்தமாக ஏற்றுக்கொண்டு அவரோடு கூட சேர்ந்து ஊழியம் செய்தார்கள்.

இன்று இஸ்லாமுக்கு சவால் விட்டு வீரநடை போட்டுக்கொண்டு இருக்கும் கிறிஸ்தவத்தின் அஸ்திபாரம் இயேசு என்றுச் சொன்னால், அதன் மிது தலை நிமிர்ந்து நிற்கும் தூண்கள், அவரது சீடர்களாகிய அப்போஸ்தலர்கள் ஆவார்கள். அவர்களில் ஒரு தூண் தான் பேதுரு என்பவர். கிறிஸ்தவம் இன்று ஒரு ஆலமரம் போல மிகப்பெரிய மரமாகி எல்லாருக்கும் நிழல்கொடுத்துக்கொண்டு இருக்கிறதென்றால், இதற்கு முதல் காரணம், அன்று இயேசு எடுத்த சரியான முடிவு தான் என்பதை தாழ்மையுடம் இஸ்லாமிய உலகிற்கு முக்கியமாக பிஜே அவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்.

இதோடு பிஜே அவர்களின் "இயேசுவிற்கு மனிதர்களை மதிப்பிட தெரியவில்லை " என்ற தலைப்பிற்காக என் பதில்களை முடித்துக்கொண்டு, என் அடுத்த பதிலை சந்திக்கும் வரை கர்த்தருடைய கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக என்று கூறி முடிக்கிறேன்.



பிஜே அவர்களுக்கு ஈஸா குர்ஆனின் இதர பதில்கள்:

1. பி.ஜைனுல் ஆபிதீனும், திரித்துவமும் & பவுலும்: பதில்

2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்ஆன் பதில்

3. பி.ஜைனுல் ஆபிதீனும் பரிசுத்த ஆவியும் : ஈஸா குர்‍ஆன் பதில்

4. பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 1

5. பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 2

6. Answering - PJ: இயேசு நறுமணம் பூசிக்கொள்ள ஆசைப்படுவாரோ?

7. Answering PJ: "பின்னாகப் போ சாத்தானே" என்றார் - Part 1



Isa Koran Home Page Back - Answering PJ index Page
1