ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

பிஜே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிஜே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 27 மார்ச், 2020

நபியாக நியமிப்பதற்கு முன்பு முஹம்மது வழிக்கேட்டில் இருந்தாரா?

கி.பி 610 க்கு முன்னர், அதாவது ஜீப்ரீல் தூதன் முஹம்மது அவர்களை முதன் முதலாக குகையில் சந்திப்பதற்கு முன்பு அவரது வாழ்க்கையைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

முஹம்மதுவின் வாழ்க்கையின் முதல் 40 ஆண்டுகளில், அவர் இஸ்லாம் அல்லது முஸ்லிம் என்ற வார்த்தையைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. அவர் குர்‍ஆனைப் பற்றியும் கேள்விப்படவில்லை. ஒருபோதும் ஷஹதா (இஸ்லாமிய விசுவாச அறிக்கையை) ஓதவில்லை அல்லது ஒரு நாளைக்கு 5 முறை இன்று முஸ்லிம்கள் செய்வது போன்று, சிரம் பணிந்து தொழுகையை நடத்தவில்லை. முஹம்மது தனது வாழ்க்கையின் முதல் 40 ஆண்டுகள், ஒரு முஸ்லீமாகவோ அல்லது அல்லாஹ்வின் தீர்க்கதரிசியாகவோ அல்லது அல்லாஹ்வின் மதத்தைப் பின்பற்றுபவராகவோ வாழவில்லை.

அவர் நபியாக மாறுவதற்கு முன்பு, குகைகளில் சுற்றித் திரிந்தார்.
அவருக்குத் தெரிந்த ஒரே “அல்லாஹ்” தலைமுறை தலைமுறைகளாக காபாவில் அமைதியாக அமர்ந்திருந்த 360 சிலைகளில் ஒரு சிலை தான் அல்லாஹ். முஹம்மதுவின் குடும்பத்தினர் காபாவை பராமரித்துக்கொண்டு இருந்தனர் (கோயில் தர்மகர்த்தா என்றுச் சொல்வோமே, அது போல அவரின் குடும்ப வம்சத்தார் காபாவின் தர்மகர்த்தாவாக இருந்தனர்).

அல்லாஹ்விற்கு மூன்று மகள்கள் இருந்தனர், அவர்களின் பெயர்களாவன: அல்-லத், அல்-மனாத் மற்றும் உஸ்ஸா ஆகும். அல்லாஹ்வின் இந்த மகள்களின் சிலைகளோடு சேர்த்து, அல்லாஹ்வின் சிலையையும், மற்றுமுள்ள சிலைகளையும் சுத்தம் செய்வது அவர்களின் வேலையாக இருந்தது. இந்த வேலையை ஒரு கால அட்டவணை போட்டுக்கொண்டு ஒவ்வொரு வம்சத்தினராக செய்துக்கொண்டு இருந்தனர். அங்கிருந்த பழங்குடியினரான மக்காவினரும், இதர சுற்றுமுள்ள இன மக்களும்  வழிபடுவதற்கும் பிரார்தனைகள் செய்வதற்கும் வரிசைக்கிரமமாக அந்த 360 சிலைகள் காபாவில் வைக்கப்பட்டு இருந்தன.

முஹம்மது கேள்விப்பட்ட முந்தைய தீர்க்கதரிசிகள் அனைவரும், அவருடைய வர்த்தகத்தின் போது, அவரோடு தொடர்பு கொண்ட யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் தான். அந்த தீர்க்கதரிசிகள் யாரும் முஹம்மது வணங்கிக்கொண்டு இருந்த அந்த காபாவின் 360 சிலைகளைப் பற்றி எதுவும் பேசவில்லை. ஆனால் முஹம்மது மற்றும் அவரது தந்தை அப்துல்லாஹ்  அவர்களும் (பொருள்: அல்லாஹ்வின் அடிமை) மற்றும் அவரது முழு கோத்திரமும் அந்த பழங்குடியினரின் 360 சிலைகளையே வணங்கிக்கொண்டு இருந்தனர்.

முஹம்மது தமது முதல் நாற்பது ஆண்டுகள், காபாவில் இருந்த  360 சிலைகளை வணங்கிக் கொண்டு இருந்த ஒரு “பல தெய்வவழிப்பாட்டு பழங்குடியினராகவே” வாழ்ந்தார்.  முஸ்லிம்கள் இதை மறுக்க விரும்புகிறார்கள். ஆனால், அந்த நாற்பது ஆண்டுகளில்  (ஜஹலியாவின் காலத்தில்), அந்த பல தெய்வ சிலைகளை வணங்கும் பழக்கங்களை, தொழுகை முறைகளை முஹம்மது எதிர்த்ததாக, நிராகரித்ததாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை. 

என்றைக்கு அவர் தன்னை முதல் முஸ்லிமாக அறிமுகம் செய்தாரோ, ஒரு புதிய மதத்தை  அறிமுகம் செய்தாரோ, அந்த மதத்திற்காக கட்டளைகளையும், ஐந்து தூண்களையும், இதர தொழுகைகளையும், குர்‍ஆன் ஓதுதலையும் அறிமுகம் செய்தாரோ, அன்று தான் அவர் அந்த பல தெய்வ வழிப்பாட்டு சிலைகளை எதிர்க்க நிராகரிக்க ஆரம்பித்தார்.

முஹம்மது ஒரு பேகன் (பல தெய்வ வழிப்பாட்டுக்காரர்) என்பதை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், ஆனால், குர்‍ஆன் முஸ்லிம்களின் நம்பிக்கைக்கு எதிராகவே சாட்சி சொல்கிறதே! முஹம்மது நபியாக மாறுவதற்கு முன்பு  பல சிலைகளை வணங்கிக்கொண்டு இருந்தார் என்றுச் சொல்கிறதே! முஹம்மதுவிற்கு தாம் வெளிப்பாடு கொடுப்பதற்கு முன்பு, முஹம்மது அறியாதவராக இருந்தார் என்று அல்லாஹ் ஒப்புக்கொள்கின்றான்.

குர்‍ஆன் 42:52 ஐ ஐந்து தமிழாக்கங்களில் படிப்போம்:

டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்:
42:52. (நபியே!) இவ்வாறே நாம் நம்முடைய கட்டளையில் ஆன்மாவானதை (குர்ஆனை) வஹீ மூலமாக உமக்கு அறிவித்திருக்கிறோம்; (அதற்கு முன்னர்) வேதம் என்பதோ ஈமான் என்பதோ என்னவென்று நீர் அறிபவராக இருக்கவில்லை - எனினும் நாம் அதை ஒளியாக ஆக்கி, நம் அடியார்களில நாம் விரும்பியோருக்கு இதைக் கொண்டு நேர்வழி காட்டுகிறோம் - நிச்சயமாக நீர் (மக்களை) நேரான பாதையில் வழி காண்பிக்கின்றீர்.
 அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:
42:52. (நபியே!) இவ்வாறே உங்களுக்கு நம்முடைய கட்டளையை வஹீயின் மூலமாக அறிவிக்கின்றோம். (இதற்கு முன்னர்) நீங்கள் வேதம் இன்னதென்றும், நம்பிக்கை இன்னதென்றும் அறிந்தவராக இருக்கவில்லை. ஆயினும், (இந்த வேதத்தை உங்களுக்கு நாம் வஹீ மூலம் அறிவித்து) அதனை ஒளியாகவும் ஆக்கி, நம் அடியார்களில் நாம் விரும்பியவர்களுக்கு அதனைக் கொண்டு நேரான வழியைக் காண்பிக்கின்றோம். (நபியே!) நிச்சயமாக நீங்கள் (அதன் மூலம் மக்களுக்கு) நேரான வழியைக் காண்பிக்கின்றீர்கள்.
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:
42:52. மேலும், இவ்வாறே (நபியே!) நம் கட்டளையின் வாயிலாக ஒரு ரூஹை* உமக்கு வஹி அறிவித்தோம். வேதம் என்பதென்ன, ஈமான் (இறைநம்பிக்கை) என்றால் என்ன என்பதெல்லாம் உமக்குத் தெரியாதிருந்தது. ஆனால் அந்த ரூஹை நாம் ஒளியாக ஆக்கினோம். நம் அடியார்களில் நாம் நாடுவோருக்கு அதன்மூலம் வழிகாட்டுகிறோம். திண்ணமாக, நீர் நேரியவழியைக் காட்டிக் கொண்டிருக்கின்றீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்
42:52. (நபியே!) இவ்வாறே உமக்கு நம்முடைய கட்டளையின் (குர் ஆனாகிய) உயிரானதை வஹீ மூலமாக அறிவிக்கின்றோம், (இதற்கு முன்னர்) நீர் வேதம் என்றால் என்ன, இன்னும் விசுவாசம் என்றால் என்ன என்பதை அறிந்தவராக இருக்கவில்லை, ஆயினும், (இவ்வேதத்தை உமக்கு வஹீ மூலம் அறிவித்து) இதனைப் பிரகாசமாகவும் ஆக்கி, நம் அடியார்களில் நாடியவர்களுக்கு இதனைக்கொண்டு நாம் நேர் வழி செலுத்துகின்றோம், (நபியே!) நிச்சயமாக நீர், (மனிதர்களுக்கு) நேரான வழியின்பால் வழிகாட்டுவீர்.
பீஜே தமிழாக்கம்:
42:52. இவ்வாறே நமது கட்டளையில் உயிரோட்டமானதை உமக்கு அறிவித்தோம். வேதம் என்றால் என்ன? நம்பிக்கை என்றால் என்ன என்பதை (முஹம்மதே!) நீர் அறிந்தவராக இருக்கவில்லை[344] மாறாக நமது அடியார்களில் நாம் நாடியோருக்கு நேர்வழி காட்டும் ஒளியாக இதை ஆக்கினோம். நீர் நேரான பாதைக்கு அழைக்கிறீர்.  
குறிப்பு: அடிக்குறிப்பில் கொடுக்கப்பட்ட பீஜே அவர்களின் விளக்கத்தை படிக்கவும்.

40 ஆண்டுகளாக, முஹம்மது ஒரு போதும் ஸலாத் (அல்லாஹ்வை தொழுதுக்கொள்வது) செய்யவில்லை. மாறாக, பேய்கள் வசிப்பதாகச் சொல்லப்படும் இருண்ட குகைகளில் தியானங்களை செய்துக்கொண்டு இருந்தார்.

இங்கு ஒரு கேள்வி எழுகின்றது, அதாவது இஸ்லாம் பற்றியும், குர்‍ஆன் பற்றியும் எதையும் அறியாதவராக இருந்த காலத்தில், அந்த குகையில் அவர் எதனை தியானம் செய்துக்கொண்டு இருந்தார்? தன்னைப் பற்றி எதையுமே, தன் வேதம் பற்றி ஒன்றுமே அறியாத காலத்தில் முஹம்மது செய்த அந்த தியானச் செயலை அல்லாஹ் அங்கீகரித்திருப்பானா?

மூலம்: http://www.faithbrowser.com/the-life-of-muhammad-before-the-revelations/

அடிக்குறிப்பு:

[1] குர்‍ஆன் 42:52க்கு பீஜே கொடுத்த விளக்கம்

344. பிறக்கும் போதே நபியா?

இவ்வசனங்களில் (28:86, 42:52) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், ஈமான் எனும் இறை நம்பிக்கை குறித்து அவர்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறப்படுகிறது.

இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்து சொல்லப்பட்டு வரும் கட்டுக்கதைக்கு மரண அடியாக அமைந்துள்ளது.

முதல் மனிதரான ஆதம் நபியை இறைவன் படைப்பதற்கு முன்பே முஹம்மது (ஸல்) அவர்களை நபியாக அல்லாஹ் நியமித்து விட்டான் என்பதும், இதனால் அவர்கள் பிறக்கும் போதே நபியாகப் பிறந்தார்கள் என்பதும் தான் அந்தக் கட்டுக் கதை.

பிறக்கும் போதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராகப் பிறந்தார்கள் என்றால் நம்பிக்கை என்றால் என்னவென்று உமக்குத் தெரியாது; வேதம் என்றால் என்னவென்று உமக்குத் தெரியாது என்று 42:52 வசனத்தில் அல்லாஹ் கூறுவானா?

இறைத்தூதராக நியமிக்கப்பட்டவருக்கு ஈமான் இல்லாமல் இருக்குமா? வேதம் என்றால் என்ன என்று தெரியாமல் இறைத்தூதராக இருக்க முடியுமா? என்று சிந்தித்துப் பார்த்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பதாவது வயதில் இறைத்தூதராக நியமிக்கப்படுவதற்கு முன் நபியாக இருக்கவுமில்லை, தாம் இறைத்தூதராக நியமிக்கப்படுவோம் என்று அறிந்திருக்கவுமில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

இறைச்செய்தி வந்த பிறகு தமக்கு வந்தது இறைச்செய்தி தான் என்பதை ஆரம்பத்தில் அவர்களால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. வரகா என்பவர் உறுதி செய்த பிறகுதான் அவர்களுக்கே அது உறுதியானது. (பார்க்க: புகாரி 4, 3392, 4954, 6982)

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறக்கும் போதே நபியாகப் பிறந்தார்கள் என்பதும், உலகம் படைக்கப்படுவதற்கு முன்பே அவர்கள் நபியாக நியமிக்கப்பட்டு விட்டார்கள் என்பதும் கட்டுக்கதை என்பதை இவ்வசனங்களில் இருந்து அறியலாம்.

சனி, 13 மார்ச், 2010

பீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை

பீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை



முன்னுரை: பீஜே அவர்களின் அதிகார பூர்வமான தளத்தில் "இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை" என்ற பெயரில் ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது. இயேசு இறைமகனா என்ற புத்தகத்தின் ஒன்பதாம் பதிப்பில் வரவிருக்கும் விவரங்களில் ஒரு பாகத்தை அக்கட்டுரையில் வெளியிடுவதாகச் சொல்லியிருந்தார்கள். அவரின் இந்த புத்தகத்திற்கு பதில்கள் தர நான் கடனாளியாக இருக்கிறேன், கர்த்தருக்கு சித்தமானால், தொடர்ந்து பதில்களை தந்து, பீஜே அவர்களின் பைபிள் பற்றிய விரிவுரையை மக்கள் அறியும் படி செய்வேன். 



பீஜே அவர்கள் பைபிள் விவரங்கள் பற்றி எவ்வளவு அறியாமையில், மேலோட்டமாக கட்டுரைகளை எழுதுகிறார் என்பதை நாம் தொடர் பதிலாக காணலாம். இக்கட்டுரையில் அவரது முதல் கேள்விக்கு சுருக்கமாக பதில் அளிக்கப்படுகிறது, தேவைப்பட்டால், விவரமாக பதில்கள் தரப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.



பீஜே அவர்கள் எழுதியவைகள்


இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை


கிறித்தவ நண்பர்கள் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயத்தை நாம் இங்கே சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.


நீங்கள் இயேசுவை உண்மையாகவே மதிப்பவர்களாக இருந்தால் இயேசு தான் உலகில் வாழும் போது எதைச் சொன்னாரோ அதை ஏற்று நடக்க வேண்டும்.


அவர் இந்த உலகில் வாழும் போது தன்னைக் கடவுள் என்றோ கடவுளின் தன்மை பெற்றவர் என்றோ கடவுளின் அவதாரம் என்றோ அவர் கூறவில்லை.


மூலம்: http://www.onlinepj.com/vimarsanangal/iyesuvuku_sammanthamillai/


"இயேசு நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்" என்று சொல்லியுள்ளாரா?




கேள்வி:


கிறிஸ்தவர்கள் நினைப்பது போல பைபிளில் எங்கேயாவது "இயேசு நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்" என்று சொல்லியுள்ளாரா? தயவு செய்து காட்டமுடியுமா?


பதில்:


என்னிடம் இந்த கேள்வி அனேக முறை கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்வியைப் பற்றிய ஒரு சுருக்கமான மற்றும் முக்கியமான பதிலாக இக்கட்டுரை அமையும் என்று நான் நினைக்கிறேன்.


"நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்" என்று இயேசு சொல்லவில்லை.


ஒரு எடுத்துக்காட்டிற்காக, உண்மையாகவே ஒரு மனிதன் உங்களிடம் வந்து, "நான் தான் இறைவன், என்னை வணங்குங்கள்" என்று சொன்னால், நீங்கள் என்ன செய்வீர்கள்?


அவர் இறைவன் தான் என்று நம்பி உடனே அவரிடம் நம்பிக்கை வைப்பீர்களா?


அவரை இறைவன் என்று நம்பி உடனே அவரை தொழுதுக்கொள்ள/வணங்க ஆரம்பித்துவிடுவீர்களா?


மேலே சொன்னது போல, ஒரு நபர் உரிமை கொண்டாடி சொல்லும் போது, ஒரு சராசரி மனிதன் அதுவும் "ஒர் இறைக்கொள்கையுடைய மனிதன்" இப்படிப்பட்ட உரிமைக் கொண்டாடும் நபர் மீது "தேவ தூஷணம் அல்லது இறைக் குற்றம்" சுமத்துவான். நீங்களும் இப்படிப்பட்ட குற்றத்தைத் தான் அப்படிப்பட்டவர் மீது சுமத்துவீர்கள் என்று நம்பலாம். திடீரென்று ஒருவர் வந்து "நான் தான் இறைவன்" என்றுச் சொன்னால் அதனை நம்ப மறுக்கும் நீங்கள், இயேசு மட்டும் "எல்லாரிடமும் சென்று நான் தான் இறைவன், என்னை வணங்குங்கள்" என்று நேரடியாகச் சொல்லவேண்டும் என்று எப்படி எதிர்ப்பார்க்கிறீர்கள். நீங்களே ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாத ஒன்றை இயேசு சொல்லவேண்டும் என்று எப்படி எதிர்ப்பார்க்கிறீர்கள்? இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை ஒருவர் சொல்வாரானால், மனிதர்கள் உடனே அவருக்கு "பைத்தியக்காரர்" பட்டம் கட்டி ஒதுக்கிவிடுவார்கள். இயற்கையாகவே மனிதர்கள் இப்படிப்பட்ட வாதத்தை வெறுமனே ஏற்கமாட்டார்கள் என்பதை மற்ற எல்லா மனிதர்களைக் காட்டிலும் இயேசுவிற்கு நன்றாக தெரிந்திருந்தபடியினால் தான், அவர் நேரடியாக இப்படிப்பட்ட வாதத்தை வைக்கவில்லை. இப்படி வெறுமனே சொல்வது ஒரு முட்டாள் தனம் என்பதினால் தான் அவர் அப்படி நேரடியாகக் கூறவில்லை. ஆனால், தான் ஒரு இறைவன் என்பதை அவர் மறைமுகமாக பல வழிகளில் காட்டியுள்ளார், மற்றும் இந்த இதர வழிகளே "இயேசு இறைவன்" என்பதை நிருபிக்க போதுமானதாகும்.


நீங்கள் ஒருவேளை இறை விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடையவராக இருக்கலாம், அதே நேரத்தில் யாராவது வந்து நான் தான் இறைவன் என்றுச் சொன்னால், அதனை உடனே நம்பிவிடாமல், அதைப் பற்றி ஆராய்கிறவராக இருக்கலாம். இறைவன் மனித உருவில் வரமாட்டார் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால், சர்வ வல்லவராகிய இறைவன் மனித உருவில் வந்தால் அவரது வல்லமைகள் குறைந்துவிடுமா? நீங்கள் இறைவனால் எல்லாம் முடியும் என்று நம்புகிறீர்கள், அப்படி இருக்கும் போது, இப்படிப்பட்ட இறைவன் நான் தான் என்று ஒருவர் சொன்னால், உடனே நம்பிவிடுவீர்களா? அப்படி சொன்னவரிடமிருந்து ஆதாரங்களை எதிர்ப்பார்க்கமாட்டீர்கள்? நிச்சயமாக எதிர்ப்பார்ப்பீர்கள். ஒரு வேளை, நான் தான் இறைவன் என்று ஒருவர் சொன்னவுடன், அவரிடம் எந்த ஒரு ஆதாரத்தையும் பார்க்காமல் அவரை வணங்க ஆரம்பித்துவிட்டால், நீங்கள் இறைக்குற்றம் புரிந்தவராக கருதப்படுவீர்கள். அதே நேரத்தில், தான் ஒரு இறைவன் என்று முழு ஆதாரங்களையும் கொடுத்துவிட்ட பிறகும், அவரை வணங்க மறுப்பீர்களானால், இறைவனின் பார்வையில் இதுவும் மிகப்பெரிய குற்றமாக கருதப்படும்.


எல்லாவற்றிற்கும் மேலாக கடைசியாக தேவையானது எதுவென்றால், "நான் தான் இறைவன், என்னை வணங்குங்கள்" என்ற எழுத்தின்படியான வரிகள் உள்ளனவா என்பதல்ல, அதற்கு பதிலாக, அவர் இறைவன் என்பதை பல வகைகளில் தெளிவாக அவர் நிருபித்து, ஆதாரத்தை வைத்துச் சென்றுள்ளாரா என்பது தான் மிகவும் முக்கியமானது. இயேசு இறைவன் என்ற வாதத்தை அவர் "வார்த்தையில் மட்டும் தான் சொல்லவேண்டும்" என்பதல்ல, இதர வழிகளில் அவர் அதனை தெளிவாக நிருபித்துள்ளாரா என்பது தான் முக்கியமானது. இயேசு தன் இறைத்தன்மையை தெளிவாக நிருபித்து இருக்கும்போது, அவரை வணங்க வேண்டியது உங்கள் கடமையாக இருக்கிறது. நீங்கள் நினைக்கும் வரிகளே அல்லது வார்த்தைகளே அவர் சொல்லயிருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது தவறானதாகும். நாம் இறைவனை அங்கீகரிப்பதற்கு முன்பு, இந்த வகையிலே அல்லது வழியிலே தான் நீங்கள் உங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று நாம் இறைவனுக்கு கட்டளைகளைக் கொடுத்து வரையறுக்கமுடியாது.


உதாரணத்திற்கு, யோவான் நற்செய்தி நூலில், நித்திய வாழ்வு பற்றி இயேசு கூறும் போது:


"நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;" (யோவான் 11:25). என்று கூறினார்.


இயேசு, தன் மீது நம்பிக்கை வைக்கும் மனிதர்களுக்கு நித்திய வாழ்வை கொடுப்பேன் என்று கூறுகிறார். இந்த வாதத்தை ஒரு இறைவன் தவிர வேறு யாராவது சொன்னால், அது தேவதூஷண பாவமாகும். இதனை இறைவன் மட்டுமே சொல்லமுடியும். இது மிகவும் முக்கியமான இறைவனுக்குத் தகுந்த உரிமைக் கொண்டாடலாகும். இப்படிப்பட்ட வாதத்தை முன்வைப்பதற்கு இயேசு ஏதாவது செய்தாரா, இந்த அதிகார வார்த்தைகளுக்கு தகுந்த நிருபனத்தை அவர் முன்வைத்தாரா? இந்த வாதம் புரிந்த அதே நாளில் என்ன செய்தார் என்பதை வேதம் பல விவரங்களைச் சொல்கிறது, இதன் பிறகு கடைசியாக நாம் வாசிக்கின்றோம்:


"இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்." (யோவான் 11:43,44).


நீங்கள் நற்செய்தி நூல்களை கவனமாக வாசிக்கும் போது, கீழ்கண்ட விவரங்களை தெளிவாகக் காணலாம்:


1) இயேசு, தான் ஒரு இறைவன் என்ற தோரணையிலேயே அதிகாரமுடையவராக பேசினார்.


2) இயேசு, தான் ஒரு இறைவன் என்ற முறையிலேயே அதிகாரமுடையவராக நடந்துக்கொண்டார்.


3) இயேசு, தனக்கு எல்லாவற்றையும் செய்ய அதிகாரமுண்டு என்பதை பல அற்புதங்கள், அதிசயங்களை செய்துக்காட்டி தன் இறைத் தன்மையை நிருபித்தார்.


தம்முடைய சீடர்களுடன் 3 ஆண்டுகள் வாழ்ந்த‌ பிறகு ஒரு சீடன் , "பிதாவை (இறைவனை) எங்களுக்கு காட்டும்" என்று கேட்டபோது:


அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? ..... நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள். (யோவான் 14:9-11)


இயேசு தன் சீடர்களும், மற்றும் தன்னைச் சுற்றி இருக்கும் இதர மக்களும் தன்னுடைய இறைத் தன்மையை அதிகாரம் நிறைந்த தம்முடைய வார்த்தைகளைக் கண்டு தெரிந்துக்கொள்ளவேண்டுமென்றும், இன்னும் இறைவனால் மட்டும் செய்யமுடியக்கூடிய அற்புதங்களை தான் செய்வதைக் கண்டும் தெரிந்துக்கொள்ளவேண்டும் என்றும் எதிர்பார்த்தார். இயேசு தான் ஒரு இறைவன் என்பதற்கு அனேக ஆதாரங்களை கொடுத்துள்ளார், எனவே இனி நீங்கள் தான் உங்கள் முடிவை எடுக்கவேண்டும்.


எந்த மனிதனானாலும் தான் ஒரு இறைவன் என்று சொல்லக்கூடும், சிலர் இன்னும் மேலே சென்று நான் தான் உலகை உண்டாக்கிய இறைவன், நான் ஆதியிலிருந்து இருக்கிறேன் என்றும் சொல்லக்கூடும். ஆனால், உண்மையான இறைவனால் மட்டுமே தான் ஒரு இறைவன் என்ற ஆதாரங்களை நிருபனங்களைத் தரமுடியும், மற்ற யாராலும் முடியாது. இறைவன் நமக்கு தேவையான ஆதாரங்களை கொடுத்து இருக்கும் பட்சத்தில், தன்னை வணங்கும் படியாக "எழுத்தின் படியான நேரடியான கட்டளை" தேவையில்லை. எந்த ஒரு ஆதாரமும் கொடுக்காமல், அற்புதங்களும் செய்யாமல், "நான் தான் இறைவன்" என்றுச் சொல்வது, ஒரு இறைவனுக்கு எந்த ஒரு மேன்மையையும் கொடுக்கப்போவதில்லை. ஒரு இறைவனின் உண்மை இறைத்தன்மை, அவரது செயல்களில் வெளிப்படும். இப்படி இல்லாமல், நான் தான் இறைவன் என்ற வாதத்தை உலகத்தில் எல்லாரும் முன்வைக்கமுடியும், இதனால் எந்த பயனும் இல்லை. தான் ஒரு இறைவன் என்ற நிருபனத்தை மிகவும் ஆணித்தரமாக கொடுத்துவிட்ட பிறகு, இதனை வார்த்தையில் சொல்லவேண்டிய அவசியமில்லை. திறந்த மனதுடன் இந்த ஆதாரங்களைக் காணும் நபர்கள் உண்மையான இறைவன் யார் என்பதை கண்டுக்கொள்வார்கள், அப்படியில்லாமல், இயேசு "நான் இறைவன்" என்று நேரடியாக சொல்லியிருந்தாலும் இந்த நிருபனங்களை நிராகரித்துவிட்டவர்கள் நம்பப்போவதில்லை. அவரது உண்மை இறைத்தன்மையை நீங்கள் அறிந்து இருந்தால், அவரை தொழுதுக்கொள்வது தான் சரியான பதிலாகும்.


இது மிகவும் முக்கியமான விஷயம் என்றும் இதனை நம்புவது சிலருக்கு கடினம் என்றும் எனக்குத் தெரியும். இதனால், தான் இயேசுவின் சீடர்களுக்கும் இதனை புரிந்துக்கொள்ள சில காலம் பிடித்தது. இயேசுவின் அனைத்து வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் சரியான விளக்கத்தை இயேசுவின் சீடர்கள் புரிந்துக்கொண்டது, அவரது மரணத்திற்கு பிறகு மற்றும் உயிர்த்தெழுத்த இயேசுவை அவர்கள் கண்ட பிறகு தான்.


யோவான் நற்செய்தி நூலின் 20ம் அதிகாரத்தின் கடைசியிலும், மத்தேயு நற்செய்தி நூலின் 28ம் அதிகாரத்திலும் நாம் இதனை காணலாம். அதாவது தன்னை அவர்கள் இறைவன் என்று தொழுதுக்கொள்வதையும், அதனை இயேசு ஆமோதிப்பதையும் காணலாம். ஆனால், அவர் அந்த தொழுதுக்கொள்ளுதலை அவர்களிடம் கட்டாயப்படுத்தி அதற்கு முன்பாக எதிர்பார்க்கவில்லை, அதே நேரத்தில் தன்னை தொழுதுக்கொள்வதை அவர் அங்கீகரித்தார் மற்றும் அது தான் சரியானது என்பதை ஆமோதித்தார்.


உங்களின் வாதம், "நான் இறைவன், என்னை வணங்குங்கள்" என்று இயேசு சொல்லவில்லையே என்பதாகும். இந்த வார்த்தைகளை அப்படியே அவர் சொல்லவில்லை, ஆனால், இந்த வரிகளை விட அதிகமாக, அவர் பல வழிகளில் தன் இறைத் தன்மையை நிருபித்தார். உங்கள் மனக்கண்களை திறந்து உண்மையைக் கண்டுக்கொள்ளுங்கள். ஆங்கில மூலம்


இதர கட்டுரைகள்:

ஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும்

உமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு !?!



சனி, 23 ஜனவரி, 2010

உமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு !?!

உமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு !?!
 
முன்னுரை: 2007ம் ஆண்டின் கடைசியில் இஸ்லாமிய அறிஞர்களுக்கு எழுத்து விவாதம் புரிய ஒரு அழைப்பு விடுத்து இருந்தேன். அதற்கு இவ்வாண்டு (2010) பீஜே அவர்கள் "எழுத்துவிவாதம் முடியாது, நேரடி விவாதம் புரிய தயாரா?" என்று கேட்டு இருந்தார், அதற்கு நான் முடியாது, எழுத்துவிவாதம் என்றால் ஒப்புக்கொள்கிறேன் என்று பதில் அளித்தேன், அதனை இங்கு படிக்கவும்: ஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும் (http://isakoran.blogspot.com/2010/01/1.html).


இதற்கு பீஜே அவர்கள், "எழுத்து விவாதத்தை நான் ஏற்கமாட்டேன், அப்படி ஏற்கவேண்டுமென்றாலும், விவாதம் புரிபவர் நேரடியாக வரவேண்டும், விலாசம் தரவேண்டும், தந்தையின் பெயரை தரவேண்டும், அதன் பிறகு தான் 'விவாதம் எழுத்தா... நேரடியா' என்று தீர்மானம் எடுக்கப்படும் என்று கூறிவிட்டார்". மட்டுமல்ல, இஸ்லாமிய அறிஞர்களுக்கு அருமையான ஒரு ஆலோசனையையும் பீஜே அவர்கள் கொடுத்துள்ளார்.

ஒரு மூத்த இஸ்லாமிய ஊழியர் எப்படியெல்லாம் வார்த்தைகளை உபயோகப்படுத்தியுள்ளார் என்பதை இப்போது காணலாம்.
 
பீஜே அவர்கள் எழுதியது

இதற்கு நமது பதில்

கடிதம் மூலம் விவாதம் என்றாலும் நேரடி விவாதம் என்றாலும் விவாதிப்பவர் யார் என்பது தெரிய வேண்டும். ஏதோ ஒரு பெயரில் ஒளிந்து கொண்டு எதையாவது எழுதுபவனுடன் விவாதிப்பது நிழலுடன் விவாதிப்பதாகும்.
 
ஈஸா குர்ஆன்

பீஜே அவர்களே நான் "எதையாவது" எழுதுபவன் அல்ல, உண்மை இஸ்லாமை தமிழ் முஸ்லீம்களுக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். இஸ்லாம் குறித்து நீங்கள் உங்கள் சொற்பொழிவுகளில் சொல்லாத, சொல்லமுடியாத விஷயங்களை நான் உங்கள் ஆதார நூல்களிலிருந்து எடுத்துச் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் (இஸ்லாமியர்கள்) எப்படி விமர்சித்தாலும் மற்றவர்கள் நல்லவர்களாக நடந்துக்கொள்வதால் தைரியமாக நீங்கள் மேடையில் பேசுவீர்கள். ஆனால், எங்கள் நிலை இப்படி இல்லையே.

"எங்கள் உயிரினும் மேலான எங்கள் நபிப் பற்றி அவதூறாக பேசிவிட்டார் என்றுச் சொல்லி, வன்முறையில் ஈடுபட காத்திருக்கும் அமைதி மன்னர்கள் சிலர் இஸ்லாமில் இருப்பதால் தான், முகத்தை மறைத்து எழுதவேண்டியுள்ளது".

இஸ்லாமியர்களின் வெறி எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு உதாரணத்தை பாருங்கள்.

 
பாங்களாதேஷ் நாட்டில் ஒரு இஸ்லாமியர் ஒரு நகைச்சுவை கார்ட்டூனை வரைந்தார், தான் வேலை செய்யும் பத்திரிக்கையில் பிரசுரித்தார். அதாவது ஒரு சிறுவன் கையில் பூனையை வைத்திருப்பான், அப்போது ஒரு இஸ்லாமியர் அவரிடம் இந்த பூனையின் பெயர் என்ன என்று கேட்டபோது, அந்த சிறுவன் இதன் பெயர் "முஹம்மது பூனை" என்று சொன்னானாம். அதாவது, இஸ்லாமியர்களில் அனேகர் தங்கள் பெயர்களில் "முஹம்மது" என்ற வார்த்தையை சேர்த்துக்கொள்வது வழக்கமாக இருப்பதால், அந்த சிறுவன் அப்படிச்சொன்னான்.

நடந்தது என்ன? வன்முறை வெடித்தது. கார்ட்டூன் வரைந்த அந்த வாலிபன் மன்னிப்பு கோரினான், நான் வேண்டுமென்று இப்படிச் செய்யவில்லை, தெரியாமல் நடந்துவிட்டது என்று கூறினான், அந்த செய்தித்தாளும் மன்னிப்பு கோரியது. வன்முறை குறையவில்லை, அதனால் அந்த வாலிபனை காவலர்கள் கைது செய்து பாதுகாப்பு வேண்டி சிறையில் அடைத்தாரகள்.

இந்த கார்ட்டூனை நைஜீரியாவில் சில அமைதி மன்னர்கள் இணையத்தில் கண்டு, நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வேறு கண்டத்தில் வாழும் நைஜீரிய கிறிஸ்தவர்களை தாக்கி கொன்றார்கள்.

புத்தி என்று ஒன்று இருந்தால், ஒரு இஸ்லாமியரால் பாங்களாதேஷ் நாட்டில் தவறுதலாக வரைந்த ஒரு கார்டூனுக்காக நைஜீரியாவில் கொலை செய்வார்களா? வன்முறையில் ஈடுபடுவார்களா?

இந்த ஒரு உதாரணமே போதும் என்று நினைக்கிறேன்.
 
பீஜே அவர்கள் எழுதியது

விவாதத்தில் ஒழுங்காக வாதங்களை எடுத்து வைக்கா விட்டால் அத்னால் கேவலம் வரும் என்ற் அச்ச்ம் தான் ஒருவனை சரியாக விவாதிக்க வைக்கும். உண்மையின் அடிப்படையில் விவாதிக்க வைக்கும். முகமூடி போட்டுக் கொண்டவனுக்கு இந்த நிலை இல்லை.
 
ஈஸா குர்ஆன்

பீஜே அவர்களே! ஒருவன் நேர்மையானவனாக இருந்தால், உண்மையுள்ளவனாக இருந்தால், எழுத்து மூலமாக பொய்களை வீசவேண்டிய அவசியமென்ன? ஆனால், நேர்மையில்லாதவன் தன் பிழைப்பிற்காக பொய்களையும், நீதியை அநீதி என்றும் அநீதியை நீதி என்றும் மேடையிலும் பேசுவான். ஈஸா குர்ஆன் தளம் மூன்று ஆண்டுகளாக செயல்படுகிறது. அனேக கட்டுரைகள் உள்ளன. இதே போல, ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளமும் உள்ளது, இன்றுவரை கிட்டத்தட்ட 100 கட்டுரைகள் பதிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு நான் சவால் விடுகிறேன், உங்களால் முடிந்தால் எங்கள் கட்டுரைகளை பதித்து, அதற்கு பதில் தாருங்கள். அப்போது எனக்கு அவமானம், கேவலம் தானாக வரும். பதில் கொடுக்க தயாரா? எங்கள் தளங்களின் தொடுப்புக்களை கொடுக்க தயாரா?

நான் பதிக்கும் கட்டுரைகளில் சொல்லப்படும் செய்திகள் உண்மையா இல்லையா என்பதை அவைகளை படிப்பவர்களுக்கு புரியும். மற்றும் எங்கள் கட்டுரைகளில் உண்மை இருக்கின்றதா இல்லையா என்பதை உங்களைப் போன்றவர்கள் தங்கள் தளங்களில் எங்கள் கட்டுரைகளின் தொடுப்புக்களை கொடுக்காமலேயே பதில் எழுதும் நிலையை கவனித்தாலும் தெரிந்துவிடும்.
 
பீஜே அவர்கள் எழுதியது

எனவே ஈஸா நபிக்குத் தான் தந்தை இல்லை என்பதை நம்ப முடியும். அதற்காக இவர்களுக்கும் தந்தை இல்லையா? முகவ்ரி இல்லையா? எழுத்து மூலம் விவாதிப்பது என்றாலும் அதற்காக ஒப்பந்தம் செய்ய வேண்டும்.
 
ஈஸா குர்ஆன்

ஒருவரின் முகவரி தெரிந்தால் தான் நீங்கள் நம்புவீர்களோ...

ஒருவரின் முகத்தை பார்த்தால் தான் அவர் பேசுவதில் உண்மை இருக்கும் என்பதை நம்புவீரகளோ?

ஒப்பந்தம் என்றால் கட்டுரைகளிலும், மெயில்களிலும் எழுதி அனுப்பிகொண்டு, அவைகளை தங்கள் தளங்களில் பதித்து அதன் படி நடந்துக்கொண்டால் அது ஒப்பந்தமாகாதோ?

ஒரு மனிதனுக்கு அவன் பேசும் அல்லது எழுதும் வார்த்தைகளே போதும், உண்மையுள்ளவனாக நடந்துக்கொள்வதற்கு. நேர்மை மேடையில் மட்டுமல்ல, எழுத்துக்களிலும் இருக்கவேண்டும்.

நீங்கள் எத்தனை மேடையில் பேசியிருக்கிறீர்கள், எவ்வளவு பொய்யையும் புரட்டையும் பேசியுள்ளீர்கள், நீங்கள் உண்மைக்கும் சத்தியத்திற்கும் பயந்து நெர்மையானவராகவா நடந்துக்கொண்டீர்கள்? வாய்க்கு வந்தபடி பைபிள் வசனங்களுக்கு பொருள் கூறியுள்ளீர்கள். சரியாக ஆராயாமல் உங்கள் உள்ளத்தில் பட்டதெல்லாம் சொல்லியுள்ளீர்கள், கேட்க ஆள் இல்லை என்ற நினைப்பை விட்டுவிடுங்கள். கர்த்தருக்கு சித்தமானால், இனி உங்களின் நேர்மையை சோதிக்கும் பதில்கள் உங்கள் வரிகளிலிருந்தே வெளிக்காட்டுவோம். கிறிஸ்தவம் பற்றியும், இயேசு பற்றியும் நீங்கள் கூறியுள்ள, எழுதியுள்ள அனைத்து விமர்சனங்களுக்கும், பொய்களுக்கும் பதில்கள் சொல்லப்போகிறோம், அப்போது தெரியும், யார் உண்மை பேசுகிறார்கள் யார் பொய்யை பேசுகிறார்கள் என்று.

முஸ்லீம்கள் நேர்மையானவர்களாக இருந்தால், வன்முறையில் ஈடுபடாதவர்களாக இருந்தால் எங்களைப் போன்றவர்கள் ஏன் மறைந்து இருந்து எழுதவேண்டும்?
 
பீஜே அவர்கள் எழுதியது

தன்னை அடையாளம் காட்டி விட்டு விவாதம் பற்றி பேசட்டும். அதன் பின் எழுத்து விவாதமா நேரடி விவாதமா என்பது பற்றி முடிவு செய்யலாம் என்று பதில் கொடுங்கள்.
 
ஈஸா குர்ஆன்

உங்களின் இந்த வரிகள் மூலமாகவே தெரிந்துவிடுகிறது நீங்கள் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறீர்கள் என்று, விவாதம் புரிய அல்ல, விவகாரம் செய்ய.
 
பீஜே அவர்கள் எழுதியது

இந்த இடத்தில் முஸ்லிம் எழுத்தாளர்களுக்கு முக்கிய ஆலோசனை ஒன்றை நாம் சொல்ல வேண்டியுள்ளது.

முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாம் குறித்து விமர்சனம் செய்தால் அவர்களை இரண்டு வகையாக பிரித்து பார்க்க வேண்டும். முகவரியோடு விமர்சித்தால் அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். நாமும் சில கேள்விகள் கேட்க வேண்டும். முகவரி இல்லாமல் நீங்கள் குறிப்பிடுவது போல் பெட்டையைப் போல் ஒளிந்து கொண்டு எதையாவ்து எழுதினால் எழுத்துவதற்கு பதில் கொடுக்காமல் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்.
 
ஈஸா குர்ஆன்

நல்ல ஆலோசனை.

ஆனால், நாங்கள் அப்படி இல்லை, ஒருவர் விமர்சித்தால் அவர் பெயரைச் சொன்னாலும் பதில் தருவோம், பெயர் குறிப்பிடாமல் இருந்தாலும் பதிலைத் தருவோம், அவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மரித்து மண்ணோடு மண்ணாக மாறி அழிந்துவிட்டவராக இருந்தாலும் பதிலைத் தருவோம்.

ஆடத்தெரியாதவள் மேடை சரியில்லை என்றுச் சொன்னாளாம். அது போல தான் உங்கள் வாதம் உள்ளது. தவறாக யாராவது விமர்சித்தால் உடனே அதற்கு பதில் கொடுத்து சத்தியத்தை நிலை நாட்டுவதை விட்டுவிட்டு, பெயர் தெரிந்தால் தான் முகம் காட்டினால் தான் நான் பதில் கொடுப்பேன் என்பதிலிருந்து தெரிந்துவிடுகிறது.... இஸ்லாமை எழுத்துக்கள் மூலமாக காப்பாற்ற முயற்சிப்பது மிக மிக கடினம் என்று.
 
பீஜே அவர்கள் எழுதியது

பைபிளீல் உள்ள செக்ஸ் கதைகள், ஒருத்தன் பொண்டாட்டியை ஒருத்தன் எடுத்துக் கொள்வது, இன்னும் சொல்லி முடியாத அசிங்கங்களைக் கேட்டு இதர்கு பதில் சொல் என்று கேடக் வேண்டும். பாதிரியார் லீலைகைள் க்ன்னிகாஸ்திரி லீலைகள் குறித்து ஆதாரப்பூர்வமான் செய்திகளை எழுதி கடுமையாக் விமர்சிக்க வேண்டும்.
 
 
ஈஸா குர்ஆன்

பீஜே அவர்களே... அவ்வளவு என்ன அவசரம் சொல்லுங்கள். எழுதிய நான்கு வரிகளில் ஐந்து எழுத்துபிழைகளா?

நிதானமாக எழுதி, மறுபடியும் ஒரு முறை படித்துப்பார்த்து பதியுங்கள். எழுத்துப் பிழை வருவது சகஜம் தான் ஆனால், குர்ஆனை மொழியாக்கம் செய்த, அனேக புத்தகங்களை எழுதிய, அனேக மேடைகளைக் கண்ட உங்கள் வரிகளிலுமா இவ்வளவு பிழைகள்?

நேற்று முளைத்த காளானைப்போல உள்ள என்னைப் போன்றவன் எழுதுவதில் எழுத்து பிழை இருந்தால், சகித்துக்கொள்ளலாம். உங்கள் வரிகளிலுமா? ஒரு மூத்த இஸ்லாமிய அறிஞரா இப்படி எழுதுகிறார்... ஆச்சரியமாக உள்ளது.

அடுத்ததாக, செக்ஸ் பற்றி, லீலைகள் பற்றி சொல்லியுள்ளீர்கள். முதலில் உங்கள் முஹம்மது பற்றி எல்லாவற்றையும் அறிந்துக்கொண்டு எழுதுங்கள், குர்ஆன் பற்றி தெரிந்துக்கொண்டு எழுதுங்கள். இப்போதைக்கு இதைத்தான் நான் சொல்வேன், ஏனென்றால் குர்ஆனை மொழியாக்கம் செய்த ஒரு பெரிய ஊழியரிடம் நான் பேசிக்கொண்டு இருக்கிறேன் என்ற உணர்வு இருப்பதால் நேரம் வரும் போது, தகுந்த இடத்தில் பதிலைத் தருவேன்.

(வாசகர் கவனத்திற்கு: குர்ஆனை மொழியாக்கம் செய்து விளக்கவுரை கொடுத்தவரிடம்... குர்ஆனை கற்றுக்கொள்ளுங்கள் என்று கேட்பது அதிகப்பிரசங்கித் தனம் என்று எண்ணாதீர்கள், காரணம் அவரது குர்ஆன் விளக்கவுரையில் அவர் கூறிய விவரங்களுக்கு நான் விளக்கமளித்த பிறகு வாசகர்கள் புரிந்துக்கொள்வீர்கள்).


பிறகு பாதிரிகளைப் பற்றி எழுதியுள்ளீர்கள்... என்ன செய்வது பீஜே அவர்களே, கிறிஸ்தவ பாதிரிகளிலும், கன்னியாஸ்திரிகளிலும் முஹம்மதுவை பின்பற்றி நடப்பவர்கள் சிலர் இருந்துவிடுவதுண்டு... என்ன செய்வது!

அப்படிப்பட்டவர்களைக் கொண்டு கிறிஸ்தவத்தை எடைபோடுவது சரியா...? ஆனால், உங்கள் முஹம்மதுவைக் கொண்டு இஸ்லாமை எல்லாரும் நன்றாக எடைப்போடலாம்...

பீஜே அவர்கள், இஸ்லாமியர்களுக்கு கிறிஸ்தவத்தை கடுமையாக விமர்சியுங்கள் என்று உரிமையை கொடுத்துள்ளார். எனவே, இதே உரிமையை கிறிஸ்தவர்களும் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு, ஆதார பூர்வமான விவரங்களுடன், குர்‍ஆன் ஹதீஸ்களின் துணையுடன் "இஸ்லாமை கடுமையாக விமர்சிக்கலாம்". ஏனென்றால், இஸ்லாம் உரிமைகளை சமமாக எல்லாருக்கும் தரும் மார்க்கம் தானே!?! எங்களுக்கு உரிமையை கொடுத்தமைக்காக பீஜே அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
பீஜே அவர்கள் எழுதியது

எங்கே அடித்தால் வலிக்குமோ அங்கே அடிக்க வேண்டும்.தூண்டி விடும் பாதிரிகள் கூட்டத்துக்கு இவர்கள் யார் என்பது தெரியும். தம்து மத நம்பிக்கையே ஆட்டம் காணும் போது அடங்குவார்கள். விரைவில் இந்தப் பணீயையும் நாம் செய்ய விருக்கிறோம். இன்ஷா அல்லாஹ்.
 
ஈஸா குர்ஆன்

இப்போது தான் எனக்கு புரிந்துள்ளது, நாங்கள் அடித்துக்கொண்டு இருக்கின்ற இடம் சரியான இடம் தான் என்று.

எங்கள் கட்டுரைகளுக்கு பதிலைத் தராதீர்கள் என்று மற்ற இஸ்லாமியர்களுக்கு எந்த ஆலோசனை கொடுத்தீர்களோ.. அந்த ஆலோசனையை நீங்களே முறித்துவிட்டு, நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு உங்களின் இதே தளத்தில் பதிலைத் தரும் காலம் மிக சமீபமாக உள்ளது.

உங்களின் ஆலோசனையை மற்றவர்கள் பின்பற்றக்கூடும், ஆனால், நீங்கள் அதனை முறித்துவிடும் காலம் வருகிறது....

கேளுங்கள் பீஜே அவர்களே...

கேள்விகளை கேளுங்கள்...

எதை வேண்டுமானாலும் கேளுங்கள்...

ஆனால், ஜாக்கிரதை.......

நீங்கள் பின்பற்றுவது குர்ஆனை... முஹம்மதுவை... அவர் நடந்துக்கொண்ட விதத்தை...

என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

முடிவுரை:

ஆக, பீஜே அவர்கள் எழுத்து விவாதத்திற்கு வரமாட்டார்கள். எங்கள் இஸ்லாமிய கட்டுரைகளுக்கு பதில்களைத் தராதீரகள் என்று அறிவுரை கூறியுள்ளார்கள். இந்த அறிவுரையை இவர் பின்பற்ற முடியுமா... காலம் தான் பதில் சொல்லும்... இப்போது தான் 2010 ஆண்டு ஆரம்பித்துள்ளது... இன்னும் அனேக நாட்கள் உள்ளது இவ்வாண்டு முடிவதற்குள்...

நான் அடிக்கடி எழுதுவதுண்டு "இஸ்லாமியர்களை பேசவிடுங்கள்... இஸ்லாமை விளக்க விடுங்கள்... அவர்கள் அதிகமாக பேச வேண்டும் எழுதவேண்டும், அப்போது தான் நமக்கு எழுத வாய்ப்பு கிடைக்கும்".

எனவே, பீஜே அவர்கள் செய்வேன் என்றுச் சொன்ன "அந்த பணியை" அவ‌ர் செய்ய வேண்டும்...அப்போது தான் எங்கள் பணியை நாங்கள் செய்யமுடியும். உங்கள் கேள்விகளை எதிர் நோக்கியிருக்கும்.... உங்கள் வாசகன் ஈஸா குர்ஆன் உமர்.

சனி, 21 ஜூன், 2008

Dr. ஜாகிர் நாயக் - முகமதுவின் பேரனை கொன்றவனுக்கு அல்லா அருள் புரிவானாக‌

Dr. ஜாகிர் நாயக் - முகமதுவின் பேரனை கொன்றவனுக்கு அல்லா அருள் புரிவானாக‌

(கர்பலா போர் - ஜாகிர் நாயக் - முஸ்லீம்களின் கண்டனம்)

முன்னுரை: டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் பேசுகிறார் என்றால், இஸ்லாமியர்களுக்கு அதிக மகிழ்ச்சி. ஆனால், அவரது சில வார்த்தைகள் முஸ்லீம்களிடையே கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது.

கர்பலா போரில் முகமதுவின் பேரனை கொன்ற யாஜித்(Yazid) என்ற ஒருவரை ஜாகிர் நாயக் புகழ்ந்து பேசியதாகவும் மற்றும் கர்பலா என்ற போரானது "ஒரு அரசியல் போர்" என்று ஜாகிர் நாயக் சொன்னதாகவும் கூறப்படுகிறது. (யாஜித்(Yazid) முகமதுவின் பேரனோடு சேர்த்து 72 முஸ்லீம்களை கொன்றதாக கூறப்படுகிறது)

பொதுவாக முகமதுவின் நெருங்கிய தோழர்களின் பெயரை பயன்படுத்தும் போது "அவர் மீது அல்லா அருள் புரிவானாக" எனபது போல பொருள் வரும் "Radiallah tala anho" (May Allah be pleased with him) என்ற வார்த்தைகளை இஸ்லாமியர்கள் பயன்படுத்துவார்கள். இந்த வார்த்தையை ஜாகிர் நாயக் அவர்கள் கர்பலா போரில் முகமதுவின் பேரனை கொன்ற "யாஜித்" என்பவருக்கு சொன்னார்.

இது மட்டுமல்ல, தன் வார்த்தைகளை ஜாகிர் நாயக் அவர்கள் திரும்ப பெறாமல், தன் வாதத்தை நியாயப்படுத்த ஒரு பத்வா(இஸ்லாமிய சட்டத்தை) உதாரணம் காட்டியதாக சொல்லப்படுகிறது.

1. அரப்நியூஸ் செய்தித்தாள் கீழ் கண்டவாறு கூறுகிறது:

(Zakir Naik's Remarks on Yazid Spark Anger Among Muslims Shahid Raza Burney, Arab News )


மும்பையில் நடந்த 10 நாள் அமைதி முகாமில், நாயக் அவர்கள் யஜித் என்பவரின் பெயரை கூறியபோது, அதோடு கூட "ரதிஅல்லா தால அன்ஹூ" என்று கூறினார் மற்றும் கர்பலா என்ற போர் ஒரு "அரசியல் போர்" என்று கூறினார். இந்த அவரது கருத்தை பல இந்திய முஸ்லிம்கள் கண்டனம் தெரிவித்தார்கள். ஷியா மற்றும் சுன்னி அறிஞர்கள் நாயக் அவர்கள் இதற்கு மன்னிப்பு கோரவில்லையானால், தன் கருத்தை திரும்ப பெறவில்லையானால் இதனால் பல விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கண்டனம் தெரிவித்தனர்.



ஷியா கோஜா ஜமாத்தின் தலைவர் சப்தார் கர்மாலி கூறும் போது:

"இமாம் ஹுசைன் அவர்களின் தியாக மரணத்தை அரசியல் ஆதாயத்திற்காக செய்தார் என்றுச் சொல்லி, கீழ்தரமாக பேசிவிட்டார். டாக்டர் நாயக்கின் இந்த கூற்று முஸ்லீம்களின் மனதை புண்படுத்திவிட்டது மற்றும் இது ஷியா சுன்னி பிரச்சனையாக மாறவாய்ப்புள்ளது" என்று கூறினார்.

உலேமா கவுன்சிலின் மௌலானா மஹ்மத் தர்யபடி கூறும் போது:

"முஸ்லிம்களின் ஒரு பகுதியினரின் மனதை புண்படுத்தியதற்காக அவர் வருத்தம் தெரிவித்தாலும், அவர் தன் விமர்சனத்தை திரும்ப பெறவில்லை, அதற்கு பதிலாக, தான் சொன்னது சரியானது என்பதை நிருபிக்க ஒரு பத்வாவை ஆதாரமாக காட்டியுள்ளார். அதாவது டாக்டர் நாயக் தன் விமர்சனத்தை வேண்டுமென்றே சொல்லியுள்ளார் என்று தெரிகிறது" என்றார்.

"இந்த நேரங்களில் நாம் அமைதி காக்க வேண்டும், முஹரம் சமயத்தில் நாம் இமாம் ஹுசைன் அவர்களின் தியாக மரணத்தை நியாபகப்படுத்தி மனதில் நிருத்தவேண்டுமே ஒழிய, டாக்டர் ஜாகிர் நாயக் செய்த தவறுகளைப் பற்றி விவாதிக்க வேண்டாம்" என்று அல்தாஃப் ஷைக் என்ற ஒரு கணிப் பொறியாளர் கூறினார்.

தேசிய‌ முஸ்லீம் பிரண்ட்(National Muslim Front) இயக்கத்தின் தலைவர் அஜிம் அலம்தார் கூறினார்:

"நாயக் இப்படி மன்னிக்க முடியாத விமர்சனத்தைச் செய்து, தன் காலை தன் வாயில் வைத்துக்கொண்டார். டாக்டர் நாயக் அவர்களின் பிரச்சனை என்னவென்றால், அவருக்கு ஈகோ(தற்பெருமை) பிரச்சனை உள்ளது, இஸ்லாமிய பிரச்சனைகளை குறித்து கருத்து தெரிவிப்பதற்கு தனக்கு அதிகாரம் உண்டென்று அவர் எண்ணுகின்றார், இதனால் சில நேரங்களில் பிரச்சனை மிகவும் பெரியதாக மாறிவிடுகிறது" என்றார்.

Source: Arab News . Com

2. THE TIMES OF INDIA : (Row Over Islamic Preachers Remarks)

ஹஜ் முடித்து திரும்பி வந்த நாயக் தன் சகோதரர் முகம்மத் நாயக் மூலமாக சொன்ன விவரம்: "அந்த அமைதி முகாமில் ஒரு கேள்வி கேட்கப்பட்ட போது, நான் யாஜித் ஐ கடிந்துக்கொள்ளவும் இல்லை, புகழவும் இல்லை. நான் அவர் மீது அல்லா கிருபை புரிவானாக என்று தான் சொன்னேன். மட்டுமல்ல, நான் சொன்னது சரியானது என்பதை நிருபிக்க தருல் உலோம் டியாபண்ட் பத்வாவும் உள்ளது என்றார்.

Naik, who returned from Haj on Wednesday, conveyed his reaction through his brother Mohammed Naik: "At the peace conference, while replying to a question, I neither condemned nor lauded Yazid. I did say 'May Allah be pleased with him' while mentioning Yazid. I can show the fatwas from seminaries like Darul Uloom Deoband supporting my stand."

Source : THE TIMES OF INDIA - Row over Islamic Preachers Remarks

3. இந்திய முஸ்லீம்கள் தளம் கட்டுரை கூறுகிறது: Mind Your Words Mr. Zakir Naik

பத்வாவை பற்றி அவர் சொன்னது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஜாகிர் நாயக் அவர்கள் புகழ்பெற்ற நல்ல இஸ்லாமிய அறிஞர் என்று நான் எப்போதும் நினைத்துக்கொண்டு இருப்பேன். இந்த பத்வாக்கள் என்னத்துக்கு பிரயோஜனபப்டும், குர்‍ஆன் தெளிவாக கீழ் கண்டவாறு சொல்லும் போது:

எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்;. இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான். (குர்‍ஆன் 4:93)

மற்றும் திரு நாயக் அவர்களுக்கு குர்‍ஆன் எல்லாம் மனப்பாடம் என்று நினைக்கிறேன்,

Source: Indian Muslims . In - Mind Your Words Mr. Zakir Naik

4. Islamic Insights.com : Zakir Naik Draws Ire With Karbala Comments

பெரும்பான்மையான சுன்னி அறிஞர்கள் மற்றும் சட்ட நிபுனர்களாகிய இபின் கதிர், இபின் தைமியா மற்றும் அஹமத் பின் ஹன்பல் போன்றவர்கள் யாஜித்தை கண்டித்துள்ளார்கள் மற்றும் யாஜிதை சபிப்பதும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

Most Sunni scholars and jurists, including Ibn Kathir, Ibn Taymiyya, and Ahmad bin Hanbal, have condemned Yazid and deemed it permissible to curse him.

Source: Islamic Insights . Com - Zakir Naik Draws Ire with Karbala Comments

5. ஜாகிர் நாயக்கிற்கு இந்திய முஸ்லீம்கள் கண்டனம்: (Press Conference to condemn Dr. Zakir Naik)

டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Press Conference to condenmn Dr. Zakir Naik 01 - YouTube Link Part 1



Press Conference to condenmn Dr. Zakir Naik 02 - You Tube Link Part 2



Press Conference to condemn Dr. Zakir Naik 03 - You Tube Link Part 3




Press Conference to condemn Dr. Zakir Naik 04 - You Tube Link Part 4




Press Conference to condemn Dr. Zakir Naik 05 - You Tube Link Part 5



டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் பேசிய வீடியோ: (இந்த வீடியோ யூடியூப்லிருந்து நீக்கப்பட்டு விட்டது.)

http://www.youtube.com/watch?v=k8xtVRy3960 (This video has been removed by the user)

டாக்டர் ஜாகிர் நாயக் அளித்த மறுப்பு

REPLY BY DR ZAKIR NAIK ON KARBALA & YAZID (YAZEED)
Dr. Naik's Response



இந்த செய்தி ஏன் கிறிஸ்தவ தளத்தில் பதிக்கப்படுகிறது:

பொதுவாக, குர்‍ஆன் வசனங்கள், ஹதீஸ் வசனங்கள் இல்லாத பொதுவான கட்டுரைகளை அல்லது இஸ்லாமியர்கள் பற்றிய செய்தி கட்டுரைகளை என் தளத்தில்(ஈஸா குர்‍ஆன்) நான் பதிப்பதில்லை. ஆனால், இந்த செய்தியை மட்டும் என் தளத்தில் பதிக்க நான் விரும்புகிறேன், ஏனென்றால்,

1. டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் எது சொன்னாலும், என்ன சொன்னாலும் மற்ற மார்க்கம் பற்றி எந்த தவறான கருத்தைச் சொன்னாலும் அதை அப்படியே பரிசோதித்துப் பார்க்காமல் அப்படியே கேட்கும் முஸ்லீம்கள், இப்போது தங்கள் நம்பிக்கைப் பற்றி இவர் சொன்ன விவரங்கள் தவறு என்று சொல்கிறார்கள். என‌வே, திரு ஜாகிர் நாய‌க் அவ‌ர்க‌ள் ஆக‌ட்டும், அல்ல‌து பிஜே அவ‌ர்க‌ள் ஆக‌ட்டும், அல்ல‌து வேறு யாராக‌ இருந்தாலும் ச‌ரி என்னோடு சேர்த்து, ஏதாவ‌து விவ‌ர‌ம் சொன்னால், அது ச‌ரியான‌தா என்று கேள்வி கேட்டு ஆதார‌ம் தேடிப் பார்க்க‌வேண்டும், அது தான் ச‌ரியான‌ வ‌ழிமுறை என்பதை இஸ்லாமியர்கள் அறிய வேண்டும்.

2. பெரும்பான்மையாக இபின் கதிர் போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் குர்‍ஆன் வசனங்களுக்கு, ஹதீஸ்களுக்கு சொல்லும் உரையை நான் என் கட்டுரைகளில் பயன்படுத்துகிறேன், அதையெல்லாம் நம் இஸ்லாமியர்கள் தவறு என்று சொல்லிவிடுவார்கள். ஆனால், இப்பொது தங்களுக்கு என்று ஒரு பிரச்சனை என்று வரும் போது, இபின் கதிர் போன்ற சுன்னி இஸ்லாமிய அறிஞர்களே, யாஜித்தை கண்டித்துள்ளார்கள், அப்படி இருக்கும் பொது, ஜாகிர் நாயக் எப்படி யாஜித்துக்கு மதிப்பு தரலாம் என்று கேட்கிறார்கள்.

3. ஜாகிர் நாயக் அவர்கள் யாஜித்துக்கு மதிப்பு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் கிறிஸ்தவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால், இஸ்லாமை ஜாகிர் நாயக் சரியாக புரிந்துக்கொள்ளவில்லை என்று அவர் மீது குற்றம் சுமத்தப்படும் போது எப்படி அவர் மற்றவர்களின் வேத வசனங்களுக்கு பொருள் தருகிறார், மற்றும் நான் சொல்வது தான் சரியானது நீங்கள் சொல்வது தவறானது என்றுச் சொல்கிறார் என்பது தான் எனக்கு ஆச்சரியத்தை தருகிறது.


முடிவுரை: தன் வினை தன்னைச் சுடும்.

வியாழன், 6 மார்ச், 2008

Answering Islamkalvi : காபாவிற்குள் கள்ள(அநியாய) வியாபாரம் செய்ய அனுமதியுண்டா?


Answering Islamkalvi : காபாவிற்குள் கள்ள(அநியாய) வியாபாரம் செய்ய அனுமதியுண்டா?

இஸ்லாம் கல்விக்கு(எம்.எம். அக்பர் அவர்களுக்கு) ஈஸா குர்‍ஆன் மறுப்பு


என்ன கேள்வி இது? மக்காவில் உள்ள காபாவில் மட்டுமல்ல, உலகத்தில் எந்த நாட்டிலும் சரி, கள்ள வியாபாரம், அநியாய வியாபாரத்தை செய்ய இஸ்லாம் அனுமதிப்பதில்லை என்று நீங்கள் சொல்வீர்கள். நீங்கள் சொல்வது உண்மை தான் இதை மனதில் வைத்துக்கொண்டு மேலும் படியுங்கள்.

காபாவில் ஹஜ் சமயத்தில் கீழ் கண்டவாறு கள்ள(அநியாய) வியாபாரம் நடந்தால்?

இஸ்லாமியர்கள் புனித நகரம் என்றும், புனித ஸ்தலம் என்றும் சொல்லும் மக்காவில் ஹஜ் செய்வதற்கு உலக நாடுகளிலிருந்து அதிக பணம் செலவு செய்து மக்கள் குவிந்துள்ளனர். ஹஜ் செய்ய வந்த ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் மட்டில்லா மகிழ்ச்சி, பல பாடுகள் பட்டு, கஷ்டப்பட்டு வந்தாலும் மக்காவில் கால் வைத்தவுடன், எல்லா கஷ்டங்களும் மறந்துவிட்டது போல ஒரு உள்ளுணர்வு. இஸ்லாமின் ஐந்தாவது கடமையை நிறைவேற்ற தனக்கு கிடைத்த வாய்ப்பை நினைத்து அல்லாவிற்கு நன்றி சொல்லிக்கொண்டு மக்காவில் வந்து இறங்கினார்கள். ஹஜ் செய்ய வந்தவர்கள் ஒரு மிருகத்தை(ஆடு, மாடு ..) பலியிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது, அந்த ஆடானது எந்த குறைபாடும் அற்றதாக இருக்கவேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.

இனி நாம் மேற்கொண்டு படிக்கப்போவது ஒரு கற்பனை என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

பல நாடுகளிலிருந்து வந்தவர்கள் இப்படி ஆடுகளை வாங்க வரும் போது:

1) மக்காவில் உள்ள அதிகாரிகள், யாத்திரை வந்தவர்களிடம் அநியாயமாக‌ பணம் கேட்டு வாங்கி, ஆடுகளை விற்றால்?

2) மக்கள் கொண்டு வரும் ஆடுகளில் வேண்டுமென்றே குறை உள்ளது என்று சொல்லி காபாவை கவனித்துக்கொள்ளும் அதிகாரிகள் , "தங்களிடம் ஆடுகளை வாங்கினால் தான் அது செல்லுபடியாகும், அவைகளைத் தான் அல்லாவிற்கு பலியிடவேண்டும்" என்று சொன்னால்?

3) ஒரு எடுத்துக்காட்டுக்காக, இந்திய ரூபாயின்படி 4000 மதிப்புள்ள ஒரு ஆட்டை அநியாய லாபம் வைத்து 8000 ரூபாய் என்றுச் சொல்லி விற்று அதை தங்கள் பைகளில் போட்டுக்கொண்டால்?

4) தங்களிடம் அதிக பணம் இல்லாமல்,பல ஆயிர மைல்களிலிருந்து வந்த ஏழை முஸ்லீம்களின் நிலை பற்றி காபாவின் அதிகாரிகள் கவலைப்படாமல் அவர்களை ஏமாற்றிக்கொண்டு இருந்தால்?

5) கடைசியாக, காபாவைச் சுற்றிலும் தொழுதுக்கொள்ள இருக்கும் இடத்திலும் வியாபார கடைகளை வைத்து, மக்கள் தொழுதுக்கொள்ள தடைவிதித்து இதே போல இஸ்லாமுக்கு ஏற்காத பல‌ செயல்களை செய்தால்?

இப்படியெல்லாம் நடந்தால், ஒரு முஸ்லீமாக இதை படிக்கும் நீங்கள் என்ன செய்வீர்கள்?

ஒரு வேளை இப்படி முகமதுவின்(முகமது மக்காவை ஆக்கிரமித்த பிறகு) காலத்தில் நடந்து இருந்தால்? அவர் என்ன செய்து இருப்பார்?

இப்போது தமிழ் நாட்டில் உள்ள இஸ்லாமிய அறிஞர்கள், இமாம்கள் இப்படி நடக்கிறது என்று அவர்களுக்குத் தெரிந்தால் ? என்ன செய்வார்கள்?

இப்படி அநியாயமாக வியாபாரம் செய்பவர்களை துரத்துவீர்கள் அல்லவா! காபாவை ஒரு வியாபார சந்தையாக மாற்ற அனுமதிக்கமாட்டீர்கள் அல்லவா!, ஆனால், இஸ்லாம் கல்வியில் வெளியான கட்டுரை சொல்கிறது, எம். எம். அக்பர் என்ற இஸ்லாமிய அறிஞரும், அக்கட்டுரையை தமிழாக்கம் செய்த‌ முனீப் அவர்கள் கீழ் கண்டவாறு சொல்கிறார்கள்:


1) இப்படி இறைவனுடைய இடத்தில் இப்படி அநியாயம் நடந்தால், இஸ்லாமிய நபிகள் ஒன்றும் செய்யமாட்டார்கள், செய்யக்கூடாது.

2) அந்த வியாபாரிகளை துரத்தமாட்டார்கள்

3) அவர்கள் மீது கோபம் கொள்ளமாட்டார்கள். ஏனென்றால்,

4) அல்லாவின் நபிகள்(தீர்க்கதரிசிகள்) முன்கோபம் கொள்ளமாட்டார்கள்.


அப்படி முன்கோபம் கொள்வது "நபிகள் தீமைக‌ள், பாவங்கள் புரிந்ததிற்கு சமம்", குர்‍ஆன் இதை எப்போதும் அங்கீகரிக்காது. என்று கேரள இஸ்லாமிய அறிஞர் தன் கட்டுரையில் எழுதுகிறார், இதை தேங்கை முனீப் அவர்கள் தமிழாக்கம் செய்ய‌, இஸ்லாம் கல்வி அதை வெளியிட்டுள்ளது.

இல்லையே, இஸ்லாமிய அறிஞர் எம். எம். அக்பர் இப்படி எழுதியிருக்கமாட்டரே என்று சொல்கிறீர்களா? மேற்கொண்டு அவர் என்ன எழுதினார் என்று கீழே படியுங்கள்:


இஸ்லாம் கல்வி(எம்.எம்.அக்பர்/தேங்கை முனீப் அவர்கள்) எழுதியது:

தீர்க்கதரிசிகளே தீமை புரிந்தனரா?

3. இறைத்தூதர்களின் வரலாற்றைக் கூறுமிடத்து புரோகித வர்க்கத்தின் கற்பனையில் உருவான பல அபத்தமான கருத்துக்கள் பைபிளில் நிறைந்து காணப்படுகின்றன. தங்கள் மன இச்சைகளுக்கேற்ப அவர்களின் வரலாற்றைத் திரித்து, வெளியில் சொல்வதற்கே வெட்கக் கேடான பல தீமைகளையும் தீர்க்கதரிசிகள் எனப்படுவோர் புரிந்ததாக பைபிளைத் தொகுத்தவர்கள் கதை கட்டியுள்ளனர். ...

...

6. இஸ்ரவேலரின் இரட்சகர் என பைபிள் கூறும் இயேசு கிறிஸ்து தாயை மதிக்காதவராகவும் (யோவான்: 2:5, 19:26) சகிப்புத்தன்மை இல்லாதவராகவும் (மத்தேயு 12:34, 12:39, யோவான் 8:44) முன்கோபம் உடையவராகவும் (யோவான் 2:13-17, மத்தேயு 21:19) திருமண விருந்தில் தண்ணீரை மதுவாக மாற்றி மக்களுக்குக் கொடுத்து அவர்களுக்குப் போதையூட்டியவராகவும் (யோவான் 2:1-11) அறிமுகப்படுத்துகின்றது.


Source : http://www.islamkalvi.com/religions/quran_bible_compare2.htm Formats mine



மேலே படித்த பகுதியில், "இயேசு முன்கோபம் உடையவர் என்று" எம். எம். அக்பர் சொல்கிறார்.

இதற்கு அவ‌ர் முன்வைக்கும் ஆதார வசனங்கள் இவைகள்: யோவான் 2:13-17, மத்தேயு 21:19. இந்த இரண்டு ஆதாரங்களில், முதலாவது ஆதாரமாக அவர்கள் முன்வைத்த யோவான் 2:13-17ம் வசனங்களை நான் இக்கட்டுரையில் விளக்குகிறேன். அடுத்த ஆதாரத்தை வேறு ஒரு பதிலில் தருகிறேன்.



[ நபிகள் என்பவர்கள் முன்கோபம் கொள்ளமாட்டார்கள் என்பது இவர்களின் கருத்து, "எனக்காக இந்த பெண்ணை, இந்த ஆணை யார் ஒரு கைபார்க்கப்போகிறார்கள்(கொலை செய்யப்போகிறார்கள்)?" என்று யார் சொன்னார்கள் என்று இவர்களுக்குத் தெரியும், இருந்தாலும் இப்படி அடிப்படை இல்லாத வாதங்களை முன்வைக்கிறார்கள். (இயேசு தன் தாயாகிய மரியாளை மதிக்கவில்லை என்ற இவர்களது குற்றச்சாட்டிற்கு என் பதிலை இங்கு காணலாம் : Answering IslamKalvi: இயேசு தன் தாயை அவமதித்தாரா?) இஸ்லாமிய அறிஞர்கள் எவ்வளவு அறியாமையில் இருக்கிறார்கள் என்பது இதிலிருந்து நமக்கு தெளிவாக தெரிந்துவிடும். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், முகமது பற்றி மற்றவர்களுக்கு தெரியாது என்றே இவர்கள் நினைத்து எழுதுகிறார்கள், பேசுகிறார்கள்.]

1. வசனங்கள் யோவான் 2:13-17 என்ன சொல்கின்றன:

காபாவில் கள்ள வியாபாரம் செய்ததாக கற்பனை செய்ததிற்கும், இயேசு முன்கோபம் உடையவர் என்று எம். எம். அக்பர் அவர்கள் சொல்வதற்கும் என்ன சம்மந்தம் உள்ளது என்று குழப்பமாக உள்ளதா? முதலாவது அவர் மேற்கோள் காட்டிய பைபிள் வசனம் யோவான் 2:13-17 வரை படித்துப்பார்ப்போம். இஸ்லாமியர்கள் மக்கா மதினாவிற்கு அடுத்து "மூன்றாவது புனிதஸ்தலமாக" கருதும், எருசலேம் தேவாலயத்தில் இயேசு கோபப்பட்டது தவறு என்றும், அதுவும் இப்படிப்பட்ட தவறு ஒரு "தீர்க்கதரிசி" என்பவர் செய்ய மாட்டார் என்றும் எம். எம். அக்பர் அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.


யோவான் 2:13. பின்பு யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போய், 14. தேவாலயத்திலே ஆடுகள் மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், காசுக்காரர்உட்கார்ந்திருக்கிறதையும் கண்டு, 15. கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டுபண்ணி, அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு,காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக்கவிழ்த்துப்போட்டு, 16. புறாவிற்கிறவர்களை நோக்கி, இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள்; என்பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார். 17. அப்பொழுது, உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்ததுஎன்று எழுதியிருக்கிறதை அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்தார்கள்.



இந்த வசனங்களில், நான் மேலே சொல்லப்பட்டது போலவே, பஸ்கா என்ற பண்டிகையன்று மக்கள் எருசலேம் ஆலயத்தில் கூடி தேவனுக்கு பலியிட்டு, அவரை தொழுதுக்கொள்ள வந்துள்ளார்கள். ஆனால், ஆலயத்திற்குள் யூத ஆசாரியர்கள்(ஆலயத்தை பராமரிப்பவர்கள்) ஆடுகளை, புறாக்களை விற்க ஆலயத்திற்குள் அனுமதி அளித்து, அநியாயமாக மக்களிடம் பணம் வசூலித்தார்கள், இதைக் கண்டு இயேசு கோபமுற்று வியாபாரம் செய்யும் மனிதர்களை துரத்தி, தேவனுடைய ஆலயம் என்பது தேவனுடன் உறவாடும் இடம், ஜெபிக்கும் இடம் அதை வியாபார வீடாக்காதீர்கள் என்று சொல்லி எல்லாரையும் துரத்துகிறார், இதை எம். எம். அக்பர் அவர்கள், "இயேசு முன்கோபம் உடையவர்" என்றுச் சொல்கிறார். இயேசு தேவனுக்கு பலியிடுடக்கூடாது என்று சொல்லவில்லை, ஆனால், பல மைல்கள் கடந்து தேவனை தொழுதுக்கொள்ள வரும் பிரயாணிகளிடம் அதிக பணம் வசூலிப்பதைத் தான் அவர் விரும்பவில்லை. மட்டுமல்ல, ரோம அரசாங்க நாணயத்தில் ஒரு பக்கம் ரோம அரசரின் உருவமும், அடுத்த பக்கம் ரோம கடவுளின் உருவம் இருப்பதால், யூதர்கள் ஆலய காணிக்கைக்காக தனி "நாணயம்" வைத்து இருந்தனர், ஆலயத்தில் காணிக்கை கொடுக்க விரும்புகிறவர்கள், ரோம அரசாங்க நாணயத்திற்கு பதிலாக, யூத நாணயமாக மாற்றிக்கொண்டு அதைத் தான் காணிக்கையாக சமர்பிக்கமுடியும். இப்படி நாணய மாற்றம் செய்வதற்கும் அதிக கட்டணத்த(கமிஷன்) யூத ஆசாரியர்கள் வசூலித்துள்ளனர், எனவே தான் இயேசு "காசுக்காரர்களையும்" துரத்திவிட்டார். தேவனுடைய ஆலயத்தை "வியாபார வீடாக்காதீர்கள்" என்றார்.

2. பஸ்கா பண்டிகையின் முக்கியத்துவம்: (யூதர்களைவிட முஸ்லீம்களுக்கு அதிக உரிமையாம் முகமது சொல்கிறார்)

இஸ்ரவேல் மக்கள் பல நூற்றாண்டுகள் எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்த போது, பல அற்புதங்கள் செய்து தேவன், மோசேயின் தலைமையின் கீழ் அவர்களை எகிப்திலிருது அழைந்துவந்தார், எகிப்திலிருந்து புறப்பட்ட நாளை நினைவு கூறும்படியாக "பஸ்காவை திருவிழாவாக, பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து செய்யுங்கள்" என்று தேவன் கட்டளையிட்டார். தேவாலயம் கட்டின பிற்பாடு இந்த நாளன்று பல ஊர்களிலிருந்தும், நாடுகளிலிருந்தும் யுத மக்கள் நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்து வந்து தேவனை எருசலேம் ஆல‌யத்தில் தொழுதுக்கொள்ள வருவார்கள்.

இப்படிப்பட்ட மக்களை ஏமாற்றி அவர்களிடம் பணம் பறிக்கும் வேலையை "தேவனுடைய சந்நிதானத்திலேயே" ஆலயத்தை பராமரிப்பவர்கள் செய்ததால், இயேசு கோபமுற்றார், இது தவறா?

1. காபாவில் இதே போல சூழ்நிலை நடந்தேறினால், நீங்கள் கோபப்படாமல் இருப்பீர்களா?

2. உங்கள் முகமது கோபப்படமாட்டாரா?

3. இஸ்லாமிய அறிஞர்கள், இமாம்கள் என்ன செய்வார்கள், அப்படி செய்யட்டும் என்று விட்டுவிடுவார்களா?

4. முக்கியமாக, எம். எம். அக்பர் அவர்கள் என்ன செய்வார்? இஸ்லாம் கல்வி தளம் நிர்வாகிகள் என்ன செய்வார்கள்? தேங்கை முனிப் அவர்கள் என்ன செய்வார்கள்? மக்காவில், காபாவில் எது நடந்தால் எனக்கென்ன என்று அப்படியே விட்டுவிடுவார்களா?


இஸ்லாமியகர்களுக்கு எப்படி பக்ரீத் பண்டிகை முக்கியமோ, அதே போல, யுத மக்களுக்கும் "பஸ்கா பண்டிகை" முக்கியம், உண்மையைச் சொன்னால், முஸ்லீம்களுக்கும் இந்த பண்டிகை முக்கியம் தான்.


பஸ்கா நாளன்று நொம்பு(உபவாசம்) இருந்த முகமது:

யூதர்கள் "தங்களை மோசே மூலமாக எகிப்திலுருந்து விடுதலையாக்கிய நாளாகிய பஸ்கா அன்று நோம்பு(உபவாசம்) இருந்தார்கள், இதைக் கண்டு யூதர்களைவிட இஸ்லாமியர்களுக்குத் தான் இந்த பஸ்கா நாளில் உபவாசம் இருப்பதற்கு அதிக உரிமை இருப்பதாகச் சொல்லி, முகமதுவும் நோம்பு இருந்தார், அதே போல தன் தோழர்களையும் நோம்பு நோற்கச் சொன்னார். பின்னர், ரம்ஜான் மாத நோம்பு கட்டளை வந்தபின்னர், இதை விட்டுவிட்டார். ஆக, பஸ்கா பண்டிகையில் முகமது நோம்பு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3397

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்தபோது யூதர்கள் ஒரு நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள் அதாவது ஆபீ _ராவுடைய (முஹர்ரம் 10வது) நாளில் (யூதர்கள்) நோன்பு நோற்று வந்ததை இப்னு அப்பாஸ்(ரலி) குறிப்பிடுகிறார்கள் - யூதர்கள், 'இது மாபெரும் நாள். மூஸா(அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான்; ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். எனவே, மூஸா(அலை) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் நோன்பு நோற்றார்கள்" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நான் அவர்களை விட மூஸா அவர்களுக்கு, மிக நெருக்கமானவன்" என்று கூறிவிட்டு, அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் (உபரியான) நோன்பு நோற்கும்படி ஆணையிட்டார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 63, எண் 3942

அபூ மூஸா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் மதீனா நகருக்குள் நுழைந்தார்கள். அப்போது யூதர்களில் சிலர் (முஹர்ரம் மாதம் 10ஆம் நாளான) ஆபீ _ரா நாளைக் கண்ணியப்படுத்தி அதில் நோன்பு நோற்றுவந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள், 'அந்த நாளில் நோன்பு நோற்க நாமே அதிக உரிமையுடையவர்கள்" என்று சொல்லி அந்த நாளில் நோன்பு நோற்கும் படி (முஸ்லிம்களுக்கு) உத்தரவிட்டார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4680

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்


நபி(ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து) மதீனாவுக்கு வந்தார்கள். (அங்கு) ஒதர்கள் 'ஆபீ _ரா' (முஹர்ரம் 10ஆம் நாள்) நோன்பு நோற்குக் கொண்டிருந்தார்கள். அன்றி அவர்கள், 'இது மூஸா(அலை) அவர்கள் ஃபிர்அவ்னை வெற்றிகொண்ட நாள்' என்று கூறினார்கள்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள் தம்தோழர்களிடம், '(ஒதர்களான) இவர்களைவிட மூஸா(அலை) அவர்களுக்கு நீங்கள்தாம் அதிக உரிமையுடையவர்கள்; எனவே, (அந்நாளில்) நீங்கள் நோன்பு நோற்பீர்களாக!' என்று கூறினார்கள். 3



நாமும் இன்று பஸ்கா கொண்டாடவேண்டும் என்று நான் சொல்லவில்லை, ஆனால், இஸ்லாமியர்களுக்கும் இந்த பண்டிகையை கொண்டாடிய உரிமை இருப்பதாக முகமது சொன்னதை முன்வைத்தேன் அவ்வளவு தான்.


3. எருசலேம் ஆலயமும்(இஸ்லாமியர்களின் கருத்துப்படி மூன்றாவது புனிதஸ்தலம் எருசலேம் ஆலயமும்) காபாவும்:

காபாவை முஸ்லீம்கள் புனிதம் என்று கருதினால், யூதர்களுக்கு எருசலேமில் உள்ள ஆலயம் புனிதம். காபாவை ஆதாம், ஆபிரகாம், இஸ்மவேல் இப்படி பலரால் கட்டப்பட்டது என்று எந்த ஆதாரமும் இல்லாமல் இஸ்லாமியர்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். குர்‍ஆன் ஹதீஸ்களின் விவரங்கள் தவர ஆதாமோ, ஆபிரகாமோ காபாவை கட்டியதாக எந்த ஆதாரத்தையும் இஸ்லாமியர்கள் காட்டமுடியாது. ஆனால், எருசலேம் ஆலயம் சாலோமோனால் கட்டப்பட்டது என்று பல ஆதாரங்கள் உள்ளன. இதை குர்‍ஆனும் ஏற்றுக்கொள்கிறது.

முகமது மதினாவிற்கு செல்லும் வரை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு அதிகமாக தினமும் தொழும் போது, தன் முகத்தை எருசலேம் ஆலயத்திற்கு நேராக (கிப்லா) வைத்தே நமாஜ் செய்தார், மற்றவர்களும் அப்படியே செய்தார்கள். காபா விக்கிரகங்களின் கொட்டகையாக இருந்தது, அப்படி விக்கிரகங்கள் காபாவில் இருக்கும் போதே முகமதுவும், மற்றவர்களும் அதற்கு நேராக நின்றே பல ஆண்டுகள் தொழுதுள்ளனர். மக்காவை முகமது ஆக்கிரமித்த பிறகு தான் காபாவில் உள்ள விக்கிரகங்களை நீக்கினார். அதாவது இஸ்லாமிய ஆரம்ப வருடங்களில் முதல் பாதியை(10 - 12 வருடங்கள்) எருசலேமை நோக்கியே முஸ்லீம்கள், முகமதுவோடு சேர்ந்து நமாஜ் செய்தனர். அடுத்த பாதியை 360 விக்கிரகங்கள் இருக்கும் காபாவை நோக்கியே நமாஜ் செய்தனர்.

ஆக, காபாவை விட அதிக மேன்மை எருசலேம் ஆலயத்திற்கு இருக்கிறது. இப்படிப்பட்ட இடத்தை யூத ஆசாரியர்கள் வியாபார இடமாக மாற்றியதை இயேசு விரும்பவில்லை. தேவனுடைய ஆலயம்(உங்களுக்கு புரியும் படி சொல்லவேண்டுமானால், சாலோமோனால் அல்லாவிற்கு கட்டிய ஆலயம்) இப்படி வியாபார சந்தையாக மாற்றப்பட்டு இருக்கும் போது, "இயேசு சும்மா பார்த்துக்கொண்டு இருப்பாரா?"

[இப்படி இயேசு செய்தார் என்றுச் சொல்லி, இஸ்லாமின் ஜிஹாதிற்கு பரிந்துப்பேசாதீர்கள், இயேசு கையில் கத்தி எடுக்கவில்லை, அவதூறு வார்த்தைகளை பேசவில்லை, சண்டை போடவில்லை, தன் சீடர்களுக்கு இவர்களை எனக்காக கொன்று வாருங்கள் என்று கட்டளையிடவில்லை]

காபாவை வியாபார சந்தையாக மாற்றினால் நீங்கள் சும்மா இருப்பீர்களா?

அதுவும் ஹஜ் செய்யப்படும் போது, இறைவன் சம்மந்தப்பட்ட பொருட்களை அநியாய விலைக்கு விற்க அனுமதி உண்டா? சிந்தித்துப்பாருங்கள்.


ஏதோ அறைகுறையாக படித்தோமா, எழுதினோமா என்று இல்லாமல், ஏன் எப்படி எதற்கு இயேசு இப்படி செயல்பட்டார் என்று சிந்தித்துப்பாருங்கள்.


4. கோபமே படக்கூடாது என்று பைபிள் சொல்கிறதா?

கோபம் படக்கூடாது என்று பைபிள் சொல்லவில்லை, கோபம் வரும் போது, பாவம் செய்யாமல் இருங்கள் என்று தான் சொல்கிறது.


எபேசியர்: 4:26. நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள், சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது;



கோபப்படுவது தவறில்லை, ஆனால், அதை சரியான விதத்தில் கையாள வேண்டும். கோபத்தில் எடுக்கும் முடிவுகள் நம் வாழ்க்கையை சில நேரங்களில் அழித்துவிடுகிறது, அதை சரியாக கையாளவேண்டும் என்று தான் இந்த வேத வசனம் சொல்கிறது.

இந்த நேரத்தில் அரிஸ்டாட்டில் சொன்ன ஒரு வாக்கியத்தை கவனிப்பது நல்லது.


"எல்லாருக்கும் கோபம் வரும், இது சுலபம் தான். ஆனால், சரியான நபரிடம், சரியான நேரத்தில், சரியான காரணத்திற்காக, சரியான விதத்தில் நம் கோபத்தை வெளிப்படுத்துவது தான் மிகவும் கடினமானது மற்றும் அது நம் சக்திக்கு அப்பாற்பட்டது" அரிஸ்டாட்டில்

Aristotle: "Anyone can become angry - that is easy, but to be angry with the right person at the right time, and for the right purpose and in the right way - that is not within everyone's power and that is not easy." Source: http://thinkexist.com/quotation/anyone_can_become_angry-that_is_easy-but_to_be/12809.html


இயேசு ஏன் கோபப்பட்டார்? என்பதற்காக காரணத்தை இன்னும் தெளிவாக அறிந்துக்கொள்ள GodQuestions.org என்ற தளத்தில் கொடுக்கப்பட்ட பதிலை கிழே கொடுக்கின்றேன்.

1) His anger had the proper motivation . In other words, He was angry for the right reasons. Jesus' anger did not arise from petty arguments or personal slights against Him. There was no selfishness involved.

2) His anger had the proper focus. He was not angry at God or at the "weaknesses" of others. His anger targeted sinful behavior and true injustice.

3) His anger had the proper supplement. Mark 3:5 says that His anger was attended by grief over the Pharisees' lack of faith. Jesus' anger stemmed from love for the Pharisees and concern for their spiritual condition. It had nothing to do with hatred or ill will.

4) His anger had the proper control . Jesus was never "out of control," even in His wrath. The temple leaders did not like His cleansing of the temple (Luke 19:47), but He had done nothing amiss. He controlled His emotions; His emotions did not control Him.

5) His anger had the proper duration. He did not allow His anger to turn into bitterness; He did not hold grudges. He dealt with each situation properly, and He handled anger in good time.

6) His anger had the proper result . Jesus' anger had the inevitable consequence of godly action. Jesus' anger, as with all His emotions, was held in check by the Word of God; thus, Jesus' response was always to accomplish God's will.

Source: http://www.gotquestions.org/Jesus-angry.html

இயேசு தன் கோபத்தை சரியான நேரத்தில்(பஸ்கா பண்டிகை),
சரியான நபர்கள் மீது( அநியாயம் செய்யும் வியாபாரிகள் மீது),
சரியான காரணத்திற்காக( தேவாலயத்தை வியாபார இடமாக மாற்றியதால்) மற்றும்
சரியான விதத்தில்(ஒரு சாட்டையை உண்டுபண்ணி,வியாபாரிகளை துரத்திவிட்டார், கத்தி எடுத்துக்கொண்டு அவர்களை தாக்க முயலவில்லை )
வெளிப்படுத்தினார்.


5. முகமது கோபப்பட்டதாக உள்ள விவரங்கள்:

சரியான காரணத்திற்கு இயேசு கோபப்பட்டதற்கு "அவர் முன்கோபமுள்ளவர்" என்று பைபிள் சொல்கிறது என்று எழுதும் இஸ்லாமிய அறிஞர்களே:

a) உங்கள் முகமது கோபப்படமாட்டாரா?

b) கோபம் கொள்ளாமலா கொலைகள், கொள்ளைகள், யுத்தங்கள் செய்தார் முகமது?

c) எனனவோ, உலகத்திலேயே முகமது தான் "சமாதானப் புறா" என்பது போல எழுதுகிறீர்கள்?


இதோ தன்னை "எதிர்த்தவர்களின் இரத்தம் யார் குடிப்பார்கள்?" என்று கேட்ட முகமதுவின் உண்மை நிலை: கோபப்படாமலா இந்த வார்ததைகளை அவர் சொல்லியிருப்பார்? இது உங்களுக்கு எப்படி தோன்றுகிறது, சிந்தித்துப்பாருங்கள்:

1.முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்(MUHAMMAD'S USE OF TORTURE)


2. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்

"எனக்காக இந்த முட்டாளை யார் ஒரு கைபார்க்கப்போகிறீர்கள்?" என்று நபி கேட்டார். இதைக்கேட்டு, சலிம் பி. உமர் சென்று அபு அபக்கை கொன்றுவிட்டு வந்தான்.

அந்த பெண் சொன்னதை நபி கேள்விப்பட்டவுடனே, "எனக்காக இந்த மர்வானின் மகளை யார் பூமியிலிருந்து நீக்கப்போகிறார்கள்?" என்று கேட்டார். அப்போது "உமர் பி. அதிய அல்கத்மி" என்பவர் நபியோடு இருந்ததால், நபி சொன்னதை கேட்டுக்கொண்டு இருந்தார், மற்றும் அன்று இரவே, அந்த பெண்ணின் வீட்டிற்குச் சொன்று, அவளை கொன்றுவிட்டார். மறுநாள் காலை அவர் நபியிடம் வந்து, அவர் என்ன செய்தார் என்றுச் சொன்னார். அதற்கு நபி "ஓ உமர், நீ இறைவனுக்கும் அவரது நபிக்கும் உதவி புரிந்தாய்!" என்றார்.



முகமது கோபப்பட்டதாக இஸ்லாமிய தளங்களில்(ஹதீஸ்களில்) உள்ள சில ஆதாரங்கள்:

கீழே கொடுக்கப்பட்ட விவரங்களை படித்துப்பாருங்கள், முகமது ஏன் கோபப்பட்டார் என்று இஸ்லாமிய தளம் ஒன்று சொல்லியுள்ளது, ஹதீஸ்களும் சொல்கின்றன. இந்த விவரத்தை நான் ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், "நியாயமான காரியங்களில் இயேசு கோபப்பட்டதை பெரிது படுத்தி, அது தவறு என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள், முகமது எந்த காரணங்களுக்காக கோபப்பட்டுள்ளார் என்றுப் பாருங்கள்."

நீங்கள் சொல்லலாம், கீழே உள்ள ஹதீஸ்கள் படி முகமது கோபப்பட்டது நியாயமான காரணங்கள் என்று, அதைத் தான் நானும் சொல்கின்றேன், முகமது கோபப்பட்ட காரணங்களை விட இயேசு கோபப்பட்ட காரணம் இன்னும் வலியது என்பதை நான் உங்கள் எல்லாருக்கும், இஸ்லாம் கல்வி தளத்திற்கும், எம். எம். அக்பர், தேங்கை முனீப் அவர்களுக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த ஹதீஸ்கள் பற்றியும், முகமது கோபப்பட்ட நிகழ்ச்சிகளில் உள்ள நியாயத்தை பற்றியும் வேறு ஒரு கட்டுரையில் காணலாம்.


பாகம் 6, அத்தியாயம் 78, எண் 6110

அபூ மஸ்ஊத் உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து. 'இறைத்தூதர் அவர்களே!) இன்ன மனிதர் எங்களுக்குத் தொழுகையை நீட்டுவதால் நான் அதிகாலை(க் கூட்டு)த் தொழுகைக்கு (ஃபஜ்ருடைய ஜமாஅத்திற்கு)ச் செல்வதில்லை' என்று கூறினார். இதைக் கேட்டதும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஆற்றிய உரையின்போது முன் எப்போதும் இல்லாத அளவுக்குக் கடிமையாகக் கோபம் கொண்டதை கண்டேன். அப்போது அவர்கள், 'மக்களே! (வணக்க வழிபாடுகளில்) வெறுப்பை ஏற்படுத்துகிறவர்களும் உங்களில் உள்ளனர். உங்களில் யாரேனும் மக்களுக்கு (தலைமையேற்றுத்) தொழுகை நடத்தினால் அவர் சுருக்கமாகத் தொழுகை நடத்தட்டும். ஏனெனில், மக்களில் நோயாளிகளும் முதியோரும் அலுவல் உடையோரும் இருக்கின்றனர்' என்று கூறினார்கள்.

The Prophet as a Man — 36: Things That Made the Prophet Angry

http://www.islamawareness.net/Anger/prophet_angry.html

Zayd ibn Thabit reports: "The Prophet chose a place where he went out at night to pray. Some men saw him doing that and they prayed with him. They came every night to do that. One night, the Prophet did not come out to join them. They started to make some noises, like little coughs, and then they raised their voices, and even threw pebbles at his door. He came out to them angry and said: "Look you people! You continued doing what you did until I thought it might be made obligatory for you. Pray in your own home,because the best prayer a person can offer is that he offers at home, except for obligatory prayers." (Related by Al-Bukhari, Abu Dawood and Al-Nassaie).

The Prophet might get angry at something said or done by one of his companions, which suggests the violation of God's law. Zayd ibn Khalid reports: "A man asked the Prophet about what one might find in the street, without knowing its owner. What to do with it. The Prophet said to him: 'Publicize it for a year, and then make sure to know its description and spend it. Should its owner come up, give it back to him.' The man said: 'What about a lost sheep?' The Prophet said: 'It belongs to you, your brother or the wolf.' The man further asked: 'What about a lost camel?' The Prophet's face was reddened with anger at this question, then he said to the man: 'What do you want with it? It has its own hoofs and drink until its owner finds it.'" (Related by Al-Bukhari, Muslim, Abu Dawood, Al-Tirmidhi and Ibn Majah).



6. எம். எம். அக்பர் "இயேசுவிற்கு முன்கோபம்" என்றுச் சொல்கிறார், அது உண்மையா?


எம்.எம்.அக்பர் அவர்கள் "இயேசு முன்கோபமுள்ளவர் என்றுச் சொல்கிறார்கள்", அதாவது முன்கோபமென்றால், ஒரு நிகழ்ச்சியை கண்டமாத்திரத்தில், முன் பின் யோசிக்காமல் கோபப்படுவது என்று பொருள். எம். எம். அக்பர் அவர்கள் கவனிக்க தவறிய ஒரு விவரம் என்னவென்றால், "இயேசு அந்த எருசலேம் ஆலத்தைச் சுற்றியே" தன் முப்பது வருடங்கள் "நாசரேத்து" என்னும் ஊரில் வாழ்ந்துள்ளார். நாசரேத்துக்கும் எருசலேமுக்கும் இடையே 80-90 மைல்கள் தூரம் உள்ளது என்று கணக்கிடப்படுகிறது.

ஒவ்வொரு யூத ஆண் மகனும் ஒரு வருடத்தில் 3 முறை எருசலேம் தேவாலயத்திற்கு வரவேண்டும் என்பது தேவனிடம் கட்டளை.


யாத்திராகமம் 34:23 வருஷத்தில் மூன்றுதரம் உங்கள் ஆண்மக்கள் எல்லாரும் இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய ஆண்டவரின் சந்நிதியில் வரக்கடவர்கள்.



இதன் படி பார்த்தால், 33 வருடங்களில் 99 முறை எருசலேமுக்கு வந்து இருந்திருப்பார், இயேசு மோசேயின் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற வந்தேன் என்று சொல்லியுள்ளார்(மத்தேயு 5:17). மட்டுமல்ல, முதல் ஆண் குழந்தையை கர்த்தருக்காக ஒப்புக்கொடுக்க, மரியாளும் யோசேப்பும் இயேசு குழந்தையாக இருக்கும் போது, ஒரு முறை எருசலேமுக்கு வந்துள்ளார்கள், மொத்தம் குறைந்தபட்சம் 100 முறையாவது, இயேசு நாசரேத்து ஊரிலிருந்து எருசலேமுக்கு வந்து தேவாலத்தில் கால் வைத்து இருக்கவேண்டும். (குழந்தையாக இருக்கும் போது எருசலேம் வந்து என்ன பயன் என்று கேட்காதீர்கள், ஒரு யுதனுக்கும், எருசலேமுக்கும் உள்ள முக்கியத்துவத்தை கூறவந்தேன். மட்டுமல்ல, இயேசுவிற்கு 18 வயதிற்கு பின்பு 33 வயதுவரை கணக்கு எடுத்துக்கொண்டாலும், 15 ஆண்டுகளில் 45 முறை அவர் எருசலேம் தேவாலயத்தில் கால் வைத்து இருந்திருப்பார்.)

லூக்கா 2:23 முதற்பேறான எந்த ஆண்பிள்ளையும் கர்த்தருக்குப் பரிசுத்தமானதென்னப்படும் என்று கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி அவரைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கவும், 2:24 கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி, ஒரு ஜோடு காட்டுப்புறாவையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகச் செலுத்தவும், அவரை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்.



பணம் படைத்தவர்கள் பலியாக ஆடுகளை கொடுக்கலாம், பாவம் ஏழை யோசேப்பு என்ன செய்வார், இரண்டு ஜோடி காட்டுப்புறாவையே அவரால் இயேசுவிற்காக கொடுக்கமுடிந்தது.

ஒவ்வொரு வருடமும் பஸ்காவை கொண்டாட எருசலேம் வந்த இயேசு:

இயேசு குழந்தையாக இருந்த போதிலிருந்தே, மோசேயின் பிரமாணத்தின்படி ஒவ்வொரு ஆண்டும், தன் பெற்றோரோடு எருசலேம் ஆலயத்திற்கு வந்துள்ளார்.

லூக்கா 2:41 அவருடைய தாய் தகப்பன்மார் வருஷந்தோறும் பஸ்கா பண்டிகையில் எருசலேமுக்குப் போவார்கள். 2:42 அவருக்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகை முறைமையின்படி எருசலேமுக்குப் போய், 2:43 பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பிவருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்; இது அவருடைய தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது.



நான் ஏன் இவ்வளவு ஆதாரங்களை கொடுக்கிறேன் என்றால், எம். எம். அக்பர் அவர்கள் சொல்வது பொய் என்பதை நிருபிக்கத்தான். அதாவது, இயேசு ஒரு முன்கோபி அல்ல. முப்பது ஆண்டுகளாக எருசலேம் ஆலயத்திற்கு வருடத்திற்கு குறைந்தபட்சம் மூன்று முறை ஒவ்வொரு ஆணும் வரவேண்டும் என்ற பிரமாணத்தின்படி வந்து, ஆலயத்தில் நடக்கும் எல்லா விவரங்களையும் தெரிந்துக்கொண்டவர். முப்பது ஆண்டுகள் ஒன்றும் செய்யாமல், தன் ஊழியம் ஆரம்பித்த பிறகு சரியான நேரம் பார்த்து அவர்களை கடிந்துக்கொள்கிறார்.

எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், தான் ஒரு மேசியாவாக இருந்தும்(மஸிஹா என்றால் என்ன என்றே தெரிந்துக்கொள்ளாமல், இயேசுவை குறிப்பிடும்போதெல்லாம் குர்‍ஆன் ஈஸா மஸீஹா என்று சொல்கிறது), உலகத்தில் மீது ஆதிக்கம் படைத்தவராக இருந்தும், 30 ஆண்டுகள், ஒன்றும் கடிந்துக்கொள்ளாமல் எப்படி அவரால் இருக்கமுடிந்தது என்பது தான்? [மோசேயின் பிரமாணத்தின் படி 30 ஆண்டுகள் நிரம்பியவர்கள் தான் தேவனுடைய ஆசாரியராக ஊழியம் செய்யவேண்டும் (எண் 4:3)]


ஆக, பல ஆண்டுகள் கண்டு, கேட்டுத் தான் கடைசியாக இயேசு இந்த தேவாலயத்திற்குள் உள்ள வியாபாரிகளை துரத்தினார், எம். எம். அக்பர் அவர்கள் சொன்னது மிகவும் ஒரு தவறான செய்தியாகும்.

முடிவுரை: எனக்கு அருமையான இஸ்லாமிய அறிஞர்களே, உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள், மக்காவிலும் காபாவையும் "கள்ளர் குகையாக்கினால்" நீங்கள் சும்மா இருப்பீர்களோ? உங்கள் முகமது சும்மா இருந்துவிட்டு இருப்பாரோ? மக்காவை ஆக்கிரமித்தவுடன் "காபாவில்" உள்ள அனைத்துவிக்கிரகங்களையும் அவர் அகற்றினாரே, அது ஏன்? காபாவின் மீது அவருக்குள்ள நம்பிக்கை அல்லவா?

அது போலத்தான், இயேசுவிற்கும் தன் வீடு இப்படி கள்ளர் குகை ஆவதை அவர் விரும்பவில்லை, அதற்காக அவர் கையில் கத்தியை எடுக்கவில்லை, வியாபாரிகளை துரத்தினார், ஆசாரியர்களை கடிந்துக்கொண்டார், விழாவிற்கு வந்திருந்த எல்லா நாட்டு மக்களுக்கும் தேவாலயத்தின் மீதுள்ள பற்றை அதிகரிக்கச்செய்தார். தன் தேவாலயத்தின் மீதுள்ள பக்திவைராக்கியத்தால் எரிக்கப்பட்டு இருந்தார் (சங்கீதம் 69:9). எனவே, நியாயத்திற்காக கோபப்படுவது தவறல்ல, முகமதுவைப் போல அவர் மற்றவர்களை கொல்ல கோபப்படவில்லை, தன்னை கொடுமைப்படுத்தியவர்களை பற்றி பேசும் போது கூட "பிதாவே,இவர்களை மன்னியும், இவர்கள் அறியாமையில் இருக்கிறார்கள்" என்பது அவர் சித்தாந்தம். தன் கடைசி வார்த்தைகளே, தன்னை குத்தினவர்களுக்காக வேண்டிக்கொள்வது தான் என்பதிலிருந்து புரிந்துக்கொள்ளுங்கள், கிறிஸ்தவம் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்பதை. தாயைப் போல பிள்ளை, நூலைப்போல சேலை என்ற பழமொழி எப்படி கிறிஸ்துவிற்கும், கிறிஸ்தவர்களுக்கும் பொருந்துகிறது என்றும், முகமதுவிற்கும், இன்றுள்ள முஸ்லீம்களுக்கும் அது அப்படியே பொருந்துகிறது என்பது சிந்தித்துப்பாருங்கள்.

[இந்த இடத்தில் இயேசு கற்களால் பிரமாண்டமாக கட்டப்பட்ட ஆலயத்தைப் பற்றி அக்கரை கொள்ளவில்லை, மாறாக மக்கள் தேவனை தொழுதுக்கொள்ளும் இடமாக அவர் அதை பார்க்கிறார், இயேசுவின் காலத்தில் இருந்த ஆலயத்தை ஏரோது புதுப்பித்துக்கொண்டு இருந்தார், பிரமாண்டமான அந்த ஆலயத்தை காட்டி ஒரு முறை சீடர்கள், ஆச்சரியப்படும் போது, இவைகள் இடிக்கப்படும், ஒரு கல்லின் மீது இன்னொரு கல் இருக்காது என்றார், அப்படியே கி.பி. 70ல் அந்த ஆலயம் அழிக்கப்பட்டது. முகமதுவின் காலத்தில் இந்த ஆலயமே எருசலேமில் இல்லை, ஆனால், முகமது ஒரு நாள் இரவு சென்று அதை பார்த்ததாகவும், இயேசுவை கண்டு பேசியதாகவும் கதை விடுகிறார்]

கடந்த நூற்றாண்டு முதல் இந்த 21ம் நூற்றாண்டு வரையிலும், உலக சமாதானத்திற்கு பங்கம் விளைவித்துக்கொண்டு இருக்கின்ற எருசலேமிலுள்ள தேவாலயத்தில், அதாவது, யூதர்களின் முதல் மற்றும் கடைசி புனித ஸ்தலமான எருசலேமிலுள்ள தேவாலயத்தில், இஸ்லாமியர்களின் மூன்றாவது புனித ஸ்தலம் என்று கருதப்படுகின்ற எருசலேமிலுள்ள தேவாலயத்தில், உலக கிறிஸ்தவர்கள் மிகவும் அதிகமாக சுற்றுலா செல்ல விரும்பக்கூடிய இடமான எருசலேமின் தேவாலயத்தில் இயேசு கோபப்பட்டு வியாபாரிகளை ஆலயத்திலுருந்து துரத்தியது தவறில்லை, மட்டுமல்ல "நபிகள்" கோபம் அல்லது முன்கோபம் கொள்ளமாட்டார்கள் என்று உங்களுடைய வாதம் மிகவும் தவறானது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.உங்களுடைய இந்த வாதம் "முகமதுவிற்கே" ஏற்றதாக இருக்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

முகமது தன் வாழ்நாளில் கோபப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்தோமானால், அவரது செயல்களை தொகுத்தோமானால், அவரை ஒரு "தீர்க்கதரிசி" என்று சொல்ல முஸ்லீம்கள் தயங்குவீர்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். எனவே, பைபிள் பற்றியும்,இயேசுவைப் பற்றியும் எழுதும் போது மிகவும் நேர்மையாக எழுதும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த பதிலில் சந்திக்கும் வரை, கர்த்தரின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக.ஆமென்.




1. இஸ்லாம் கல்விக்கு ஈஸா குர்ஆனின் இதர பதில்கள் :

1. எம். எம் அக்பருக்கு (இஸ்லாம் கல்விக்கு) பதில்: குர்ஆனில் குலறுபடிகள்

2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில் (குப்பை சடங்குகளை குப்பையில் போடச்சொன்ன இயேசு)

3. இஸ்லாம் கல்வி தள கட்டுரையும் 1 தீமோத்தேயு 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்

4. இஸ்லாம் கல்விக்கு பதில்: இயேசு த‌ன் தாயை (மரியாளை) அவமதித்தாரா?

4.1 இந்த கட்டுரைக்கு பதில் அளித்த "ஏகத்துவம்" தளத்திற்கு, உமரின் மறுமொழியை இங்கு படிக்கலாம்.


2. பி.ஜைனுல் ஆபீதீன் அவர்களுக்கு ஈஸா குர்ஆனின் பதில்கள்

3. நேசமுடன் தளத்திற்கு ஈஸா குர்ஆனின் பதில்கள்

4. டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈஸா குர்ஆனின் பதில்கள்

5. இது தான் இஸ்லாம் தளத்திற்கு ஈஸா குர்ஆனின் பதில்கள்



Isa Koran Home Page Back - Islam Kalvi Rebuttals Index  Page
1
 

சனி, 1 மார்ச், 2008

சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை

 
சுவர்னதென்றலுக்கு பதில்: பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை


"சுவர்ன தென்றல்" என்ற தளம் "சத்தியத் தொடர் -‍ 1" என்ற கட்டுரையில் "பைபிளில் முகமது பற்றிய தீர்க்கதரிசன வசனங்கள்" உள்ளன, அவைகளை கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் பார்க்க தவறுகின்றனர் என்று சொல்லப்பட்டுள்ளது. பைபிளிலிருந்து சில வசனங்களை குறிப்பிட்டு இந்த வசனங்களில் குறிப்பிட்டு இருப்பது "முகமதுவைத் தான்" என்று சுவர்ன தென்றல் தளம் சொல்கிறது. ஏற்கனவே, ஈஸா குர்‍ஆன் தளத்தில் இதைப் பற்றி நான் சில பதில்களை கொடுத்துள்ளேன், அவைகளை "சுவர்ன தென்றலுக்கு" என் பதிலாக முன்வைக்கின்றேன்.

முகமது பற்றி பைபிள் வசனங்கள் என்று சுவர்ன தென்றல் தளம் சுட்டிக்காட்டும் வாதங்கள்:


1. "வேறு ஒரு தேற்றரவாளன்" வருவார் என்று இயேசு சொன்னது முகமதுவைத் தான் (யோவான் 14:16, யோவான் 15:26, யோவான் 16:7-11, யோவான் 16:3)

2. மோசே வருவார் என்று சொன்ன தீர்க்கதரிசி முகமது தான் (உபாகமம் 18:17-19)

3. உன்னதப்பாட்டு என்ற புத்தகத்தில் 5:16ம் வசனத்தில் "முகமது" என்ற வார்த்தை வருகிறது, எபிரேய மொழியிலிருந்து மொழி பெயர்க்கும் போது, திட்டமிட்டு கிறிஸ்தவர்கள் அதை மறைத்துவிட்டார்கள்.


மேலே சொல்லப்பட்ட கேள்விகளுக்கு பதிலை தருவதோடு கூட, இன்னும் சில இஸ்லாமியர்கள்(இது தான் இஸ்லாம் தளம்) வேறு பல வசனங்களையும் குறிப்பிட்டு "இந்த வசனங்களில் சொல்லப்பட்டவர் முகமது தான்" என்ற வாதத்தை முன்வைக்கின்றனர், அவைகளையும் குறிப்பிட்டு என் பதிலை தருகிறேன். கீழ் கண்ட இரண்டு பதில்கள் "இது தான் இஸ்லாம்" தளத்தின் "இயேசுவிற்கு நேர்ந்ததென்ன?" என்ற கட்டுரை தொடர்களுக்கு கொடுக்கப்பட்ட பதில்களாகும். இவைகளை படிக்க இந்த தொடுப்பை க்ளிக் செய்யவும்.

4. இது தான் இஸ்லாம் தள வாதம்: உபாகமம் 33:1-3 வசனங்களில் முகமது பற்றி சொல்லப்பட்டுள்ளது

5. இது தான் இஸ்லாம் தள வாதம்: ஆபகூக் 3:3 குறிப்பிடுவது முகமதுவைத் தான

சுவர்ன தென்றலுக்கு ஈஸா குர்‍ஆன் மறுப்பு:
முதலாவது, உங்கள் அணுகுமுறைக்காக தமிழ் கிறிஸ்தவர்கள் சார்ப்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மென்மையான முறையில் நீங்கள் உங்கள் வாதங்களை முன்வைத்ததற்காக எங்கள் நன்றி. கருத்துக்களில் வித்தியாசம் வரலாம், அதற்காக கோபப்படாமல், அமைதியான முறையில் நீங்கள் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்காக கட்டுரையை எழுதியிருக்கிறீர்கள்.

நான் மேலே சொன்னது போல, மொத்தம் 5 வாதங்களுக்காக என் பதிலை தருகிறேன். உண்மையில் முகமது பற்றி எந்த ஒரு குறிப்பும் பைபிளில் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். சரியான அணுகுமுறையில் பைபிள் வசனங்களை படித்தால் இதனை புரிந்துக்கொள்ளமுடியும்.

இந்த ஐந்து வாதங்களில் மூன்று வாதங்களுக்கு எங்களிடம் தமிழில் கட்டுரை உள்ளது. மீதி இரண்டு வாதங்களுக்கு ஆங்கில தொடுப்புகளை நான் தருகிறேன். உண்மையில் உங்களுக்கு உங்கள் கணிப்பு மீது(முகமது பற்றி பைபிளில் சொல்லப்பட்டுள்ளது என்ற ) நம்பிக்கை இருந்தால், கொடுக்கப்படும் ஆங்கில தொடுப்புகளில் சென்று படிக்கவும், ஏதாவது சந்தேகம் வந்தால், மறுப்பு எழுத நினைத்தால், ஆங்கில கட்டுரைக்கும் செர்த்து எங்களிடம் கேட்கலாம், அதற்கு பதில் தர ஈஸா குர்‍ஆன் தளம் கடமைப் பட்டுள்ளது.
 

சுவர்ன தென்றலின் வாதம் 1: "வேறு ஒரு தேற்றரவாளன்" வருவார் என்று இயேசு சொன்னது முகமதுவைத் தான் (யோவான் 14:16, யோவான் 15:26, யோவான் 16:7-11, யோவான் 16:3)


எங்கள் பதில்: இயேசு வேறு ஒரு தேற்றரவாளன் என்றுச் சொன்னது முகமதுவை அல்ல, அவர் குறிப்பிட்டது, "பரிசுத்த ஆவியானவரை" என்பதை இந்த கட்டுரை பல வசன ஆதாரங்கள் வைத்து விவரிக்கிறது. இதை படிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
யோவான் 14:16 வேறொரு தேற்றரவாளன் என்று இயேசு குறிப்பிடுவது முகமதுவையா?


சுவர்ன தென்றலின் வாதம் 2: மோசே வருவார் என்று சொன்ன தீர்க்கதரிசி முகமது தான் (உபாகமம் 18:17-19)


எங்கள் பதில்:
Is Muhammad Foretold in the Bible? by John Gilchrist
இக்கட்டுரையில் ஆசிரியர், கீழ்கண்ட தலைப்புகளில் பதில் மிகவும் தெளிவாக அளிக்கிறார்.
Contents:
MUHAMMAD IN THE BIBLE?
MOSES AND THE PROPHET
1. The Word of God in the Prophet's mouth
2. A prophet from among their Brethren
3. A Prophet like unto Moses
4. Jesus - the Prophet like unto Moses
JESUS AND THE COMFORTER
BIBLIOGRAPHY 


சுவர்ன தென்றலின் வாதம் 3: உன்னதப்பாட்டு என்ற புத்தகத்தில் 5:16ம் வசனத்தில் "முகமது" என்ற வார்த்தை வருகிறது, எபிரேய மொழியிலிருந்து மொழி பெயர்க்கும் போது, திட்டமிட்டு கிறிஸ்தவர்கள் அதை மறைத்துவிட்டார்கள்.

எங்கள் பதில்: சுவர்ன தென்றலுக்கு ஈஸா குர்‍ஆன் தளத்தின் அடுத்த பதில் இந்த வசனத்தைப் பற்றியதாக இருக்கும்.
1) Does Song of Songs mention Muhammad's name?
2) Is Mohammed Mentioned in Song of Songs?
இது தான் இஸ்லாம் தள வாதம் 4: : உபாகமம் 33:1-3 வசனங்களில் முகமது பற்றி சொல்லப்பட்டுள்ளது

எங்கள் பதில்: உபாகமம் 33:1-2 வசனங்கள் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல?
இது தான் இஸ்லாம் தள வாதம் 5: ஆபகூக் 3:3 குறிப்பிடுவது முகமதுவைத் தான்

எங்கள் பதில்: ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
இந்த ஐந்து வாதங்கள் பற்றி இதர கட்டுரைகளை கீழே உள்ள தொடுப்புகளில் படிக்கவும்:

1. THE DEUTERONOMY DEDUCTIONS: Two Short, Sound, Simple Proofs that Muhammad Was a False Prophet By David Wood (முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி என்பதற்கு சுலபமான மற்றும் வலுவான இரண்டு ஆதாரங்கள், மோசே வருவார் என்று சொன்னது முகமதுவைத் தான் என்று இஸ்லாமியர்கள் கூறும் வசனங்களிலிருந்தே )

2. Muhammad in the Bible? An Analysis of the Muslim Appeal to Biblical Prophecy By David Wood

3. Is Muhammad Foretold in the Bible? by John Gilchrist

4. Are there Prophecies about Muhammad in the Bible?

5. Miscellaneous Muslim Objections to the Gospel B. PROPHECIES TO MUHAMMAD IN THE BIBLE.

6. ALLEGED PROPHECIES IN THE BIBLE POINTING TO MOHAMMED

7. The 'Goose and Gander' Issue Shibli Zaman's Inconsistencies

மேலே உள்ள கட்டுரைகளை படித்து, உங்கள் கருத்தை தருவீர்களானால், மறுபடியும் இந்த தலைப்புக்கள் அனைத்தையும் குறித்தும் என் பதிலை உங்கள் மறுப்பிற்கு ஏற்றாற் போல தருகிறேன். மேலே உள்ள பல ஆங்கில கட்டுரைகளை மொழி பெயர்க்க அனுமதி ஆன்சரிங் இஸ்லாம் ( http://www.answering-islam.org ) ஈஸா குர்‍ஆனுக்கு கொடுத்துள்ளது, கர்த்தருக்கு சித்தமானால் நேரம் கிடைக்கும் போது அதை மொழிபெயர்க்கிறேன். அதுவரை ஆங்கிலத்தில் உள்ளதை படித்துக்கொள்ளவும். அதிலிருந்து கேள்விகள் கேட்டாலும் நான் பதில் தர முயற்சிப்பேன்.

சுவர்னதென்றல் தளம் எழுதியது:
Source: http://suvanathendral.blogspot.com/2008/02/1_25.html

தலைப்பு: இயேசு நாதர்
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பற்றி பைபிள் : சத்தியத் தொடர்-1
அபூ அரீஜ், அல்-கப்ஜி

'நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன். அப்போது என்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாக வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருள்வார்.' (யோவான் 14:16)

'பிதாவிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக் குறித்துச் சாட்சி கொடுப்பார்' (யோவான் 15:26)

'நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். நான் போகிறது உங்களுக்குப் பிரயேஜனமாயிருக்கும். நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார். நான் போவேனாகில் அவரை உங்களிடத்தில் அனுப்புவேன்' (யோவான் 16:7-11)

'சத்திய ஆவியாகிய அவர் வரும்போது சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார். அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல் தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ் சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்' (யோவான் 16:3)

'ஆகையால் தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கணிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்' (மத்தேயு 21:43)

'அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி, அவர்கள் சொன்னது சரியே. உன்னைப் போல ஒரு தீர்க்க தரிசியை நான் அவர்களுக்கூக அவர்கள் சகோதரர்களிடமிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன். நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். என் நாமத்திலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகேடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்' (உபாகமம் 18:17-19)

அன்பார்ந்த கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளே!
சற்று சிந்தித்து, பின் வரும் வினாக்களுக்கு விடை காண முன்வாருங்கள்: -

1) மேலேயுள்ள வாக்கியங்களில் கூறப்பட்டுள்ள, வரப்போகிற சத்திய ஆவியான தேற்றரவாளன் யார்?
2) அவர் சொல்லப் போகிற விடயங்கள் யாவை?
3) கர்த்தரின் நாமத்திலே அவர் சொல்லும் வார்த்தைகளுக்குச் செவிகேளாதவனின் நிலை என்ன?

கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளே, அந்த தேற்றரவாளர் வேறு யாருமில்லை. இந்த அகில உலக மக்களுக்கும் கர்த்தரின் சத்திய வாக்கினை எடுத்துக் கூறி மக்களை நல்வழி கூறி கர்த்தருடைய நேர்வழியை காட்டிய முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஆவார்கள்.

ஹீப்ரு மொழியிலிருந்து ஏனைய பாஷைகளுக்கு பைபிளை மொழி பெயர்க்கப்பட்ட போது, 'முஹம்மது' என்ற பெயர் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தும் அதனை திட்டமிட்டு மறைத்து விட்டனர். உண்மை தானாகவே வெளிச்சத்திற்கு வந்து விட்டது. (பைபிளின் மூல நூலில் சாலமன் பாடல்கள் 5:16 ல் 'முஹம்மதிம்' என்று இருந்த பெயரை மொழி பெயர்க்கும் போது மாற்றி விட்டனர். ஹீப்ரு மொழியில் 'திம்' என்ற அடைமொழி மரியாதையைக் குறிக்கும் சொல்லாகும்)

முஹம்மது என்ற பெயரை திரித்து தேற்றரவாளர் எனக் கூறப்பட்ட என்ற அந்த தீர்க்கதரிசி கூறிய விடயங்கள் தான் சத்திய மார்க்கமான இஸ்லாம்.

கர்த்தரின் நாமத்திலே அவர் (முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறிய வார்த்ததைகளுக்கு கட்டுப்படாதவர்களை மறுமையில் கர்த்தர் தண்டிப்பார். (உபாகமம் 18:17-19)

எனவே என தருமை கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே, முஹம்மது (ஸல்) அவர்கள் குறித்தும் மற்றும் இஸ்லாம் குறித்தும் பைபிள் கூறும் கருத்துக்களை நீங்கள் சற்று நடுநிலையோடு சிந்தித்து தெளிவு பெற வேண்டுகிறோம்.

புதன், 20 பிப்ரவரி, 2008

இஸ்லாம் கல்விக்கு பதில்: இயேசு த‌ன் தாயை (மரியாளை) அவமதித்தாரா?

 
இஸ்லாம் கல்விக்கு பதில்: இயேசு த‌ன் தாயை (மரியாளை) அவமதித்தாரா?

(M.M. அக்பர் மற்றும் தேங்கை முனீப், பஹ்ரைன் அவர்களுக்கு மறுப்பு)


எம். எம். அக்பர் என்ற கேரள இஸ்லாமிய அறிஞர், பைபிள் பற்றியும், குர்‍ஆன் பற்றியும் சொல்லியுள்ள செய்திகளை, தேங்கை முனீப் என்ற இஸ்லாமிய சகோதரர் தமிழில் மொழி பெயர்த்து இஸ்லாம் கல்வி தளத்தில் வெளியிடுகிறார். இஸ்லாமிய அறிஞர்களின் பைபிள் ஆராய்ச்சியின் தரம் எந்த அளவிற்கு உள்ளது என்பதை இந்த கட்டுரையில் நான் விளக்குகிறேன்.

M.M. அக்பர் அவர்கள் எழுதியது:

திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் - ஓர் ஒப்பீடு

(பகுதி 2)

மூலம்: M.M.அக்பர் - தமிழில் தேங்கை முனீப், பஹ்ரைன்

தீர்க்கதரிசிகளே தீமை புரிந்தனரா? . . .

6. இஸ்ரவேலரின் இரட்சகர் என பைபிள் கூறும் இயேசு கிறிஸ்து தாயை மதிக்காதவராகவும் (யோவான்: 2:5, 19:26) சகிப்புத்தன்மை இல்லாதவராகவும் (மத்தேயு 12:34, 12:39, யோவான் 8:44) முன்கோபம் உடையவராகவும் (யோவான் 2:13-17, மத்தேயு 21:19) திருமண விருந்தில் தண்ணீரை மதுவாக மாற்றி மக்களுக்குக் கொடுத்து அவர்களுக்குப் போதையூட்டியவராகவும் (யோவான் 2:1-11) அறிமுகப்படுத்துகின்றது.

Source: http://www.islamkalvi.com/religions/quran_bible_compare2.htm
Formats mine



1. முஸ்லீம்கள் தீர்க்கதரிசிகளுக்காக ஏன் அதிகமாக பரிந்துபேசுகிறார்கள்:

பைபிள் தீர்க்கதரிசிகளைப் பற்றி சொல்லும் போது அவர்கள் சாதாரண மனிதர்கள் போல, சில தவறுகள் செய்துள்ளார்கள் என்றும், அதற்கு தேவன் தண்டனைகளை கொடுத்துள்ளார் என்றும்  சொல்கிறது. தீர்க்கதரிசிகளும் சாதாரண மனிதர்கள் தான், அவர்களும் தவறுகள் செய்துள்ளார்கள் என்று பைபிள் பாரபட்சம் காட்டாமல், உள்ளதை உள்ளது போலவே சொல்கிறது.

இதை முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்வது இல்லை. இவர்களின் கருத்துப்படி, தீர்க்கதரிசிகள் மிகவும் நல்லவர்கள், அவர்கள் தவறே செய்யமாட்டார்கள். அவர்களைப் பற்றி பைபிள் சொல்வது தவறு என்று இவர்கள் சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் பைபிள் சொல்வது போல, குர்‍ஆனும், ஹதீஸ்களும், முகமதுவின் வாழ்க்கை வரலாறும், தீர்க்கதரிசிகள் கூட பாவம் செய்துள்ளார்கள், இறைவனிடம் மன்னிப்பை கேட்டுள்ளார்கள் என்று சொல்கின்றன. இதைப் பற்றிய பதிலை தொடர் கட்டுரைகளாக நாம் காணலாம்.

சரி, ஏன் இஸ்லாமியர்கள் இப்படி சொல்கிறார்கள் என்று சிறிது சிந்துப்பார்த்தால், ஒரு உண்மை புரியும், அது என்னவென்றால், பைபிள் சொல்வது போல, தீர்க்கதரிசிகள் கூட தவறுகள் செய்வார்கள் என்று இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொண்டால், அது இவர்களுக்கு தலைவலியாக மாறும்.  எப்படி இவர்களுக்கு தலைவலியாக மாறும் என்று தெரிந்துக்கொள்ள மேலும் படியுங்கள். பைபிள் சொல்லும் தீர்க்கதரிசிகள் ஏதோ ஒரு சூழ்நிலையில் தவறு செய்ததாக சொல்கிறது, அந்த தவறினால் மற்றவர்கள் பாதிக்கப்பட்டு இருந்தால், அதற்கு உடனே தேவன் அவர்களுக்கு தண்டனை கொடுத்ததாக பைபிள் சொல்கிறது. பிறகு அந்த தீர்க்கதரிசிகள் அந்த தவறை மறுபடியும் செய்யாமல் இருந்தார்கள் என்று பைபிள் சொல்கிறது.

ஆனால், முகமதுவையும் ஒரு தீர்க்கதரிசியாக (நபியாக)  ஏற்றுக்கொண்டால், இவர் பைபிள் சொல்லும் தீர்க்கதரிசிகள் போல ஒரு முறை தவறு செய்யாமல், அதை தொடர்ந்து செய்துள்ளார், இதில் ஒரு வித்தியாசம் என்னவென்றால், அல்லா இவர் செய்த எல்லா தவறுகளை கணக்கில் கொள்ளாமல், தண்டனை கொடுக்காமல் மன்னித்து, இவர் செய்யும் எல்லா செயல்களுக்கு அல்லாவே அங்கீகாரம் கொடுத்துள்ளார். எனவே, பைபிள் சொல்வது உண்மை என்று இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொண்டால், இவர்கள் உத்தமர் என்று பின்பற்றும் முகமதுவுடைய செயல்களும் தவறு தான் என்று இவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டி வரும். எனவே, தங்கள் முகமதுவை காப்பாற்ற மற்ற தீர்க்கதரிசிகளுக்கு இவர்கள் வக்காளத்து வாங்குகிறார்கள்.

இதில் இன்னொரு முக்கியமான விவரம் என்னவென்றால், குர்‍ஆனிலும், ஹதீஸ்களிலும் எங்கும் இயேசு பாவம் செய்ததாக சொல்லப்படவில்லை, அதாவது, முகமதுவை விட பல மடங்கு இயேசு நல்லவர் என்பதை இஸ்லாமிய புத்தகங்களே சொல்கின்றன. இயேசு நல்லவர், முகமது தவறுகள் செய்தார் என்று இஸ்லாமிய ஹதீஸ்கள் சொல்வதை சரி செய்ய, எந்த தீர்க்கதரிசியும் தவறு செய்யவில்லை என்று மழுப்புகிறார்கள இஸ்லாமியர்கள்.

இஸ்லாமியர்கள் சொல்வது தவறானது என்பதை விளக்குவதற்கு முன்பு, இவர்கள் இயேசுவைப் பற்றி இந்த கட்டுரையில் சொல்லியுள்ள சில விவரங்களுக்கு பதிலை சொல்லலாம் என்று கருதுகிறேன்.



M.M. அக்பர் அவர்கள் எழுதியது:  
.....
.....
.....
6. இஸ்ரவேலரின் இரட்சகர் என பைபிள் கூறும் இயேசு கிறிஸ்து தாயை மதிக்காதவராகவும் (யோவான்: 2:5, 19:26) ....



2. இயேசு மரியாளை மதிக்கவில்லையா? யோவான்: 2:5, 19:26 வசனங்கள் என்ன சொல்கின்றன:

இஸ்லாமிய அறிஞர்கள் பைபிள் வசனங்களுக்கு எவ்வளவு அழகாக விளக்கம் அளிக்கிறார்கள் என்பதை இதன் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.

முதலாவது, அவர்கள் மேற்கோள் காட்டிய வசனத்தை பார்ப்போம்.


யோவான் 2:5 அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள்.



மேலே எம்.எம். அக்பர் அவர்கள் குறிப்பிட்ட வசனத்தை பாருங்கள், ஏதாவது புரிகிறதா? ஒன்றுமே புரியாது! ஏனென்றால், அவர்கள் குறிப்பிட்ட வசனமே தவறாக உள்ளது. உண்மையில் அவர்கள் மேற்கோள் காட்டியிருக்கவேண்டிய வசனம் யோவான் 2:4 ஆகும். அல்லது யோவான் 2:1-4 வரையுள்ள வசனங்களை குறிப்பிட்டு இருக்கவேண்டும்.

இது என்ன பெரிய தவறா? என்று நீங்கள் கேட்கலாம், இது பெரிய தவறு இல்லை, ஆனால், மற்றவர்களின் வேதங்களில் உள்ள வசனத்தை மேற்கோள் காட்டும் போது, குறைந்தபட்சம் ஒரு முறை சரிபார்ப்பது நல்லது. கட்டுரையின் மூல ஆசிரியர் எம். எம். அக்பர் அவர்களோ அல்லது மொழி பெயர்த்த முனீப் அவர்களோ இதை கவனிக்கவில்லை. இது ஒரு பெரிய தவறாக நான் குறிப்பிடவில்லை, ஆனால், இஸ்லாமிய அறிஞர்கள் எவ்வளவு மேலோட்டமாக மற்றவர்களின் வேதங்களின் வசனங்களை கையாளுகிறார்கள் என்பதை குறிப்பிடவந்தேன், அவ்வளவு தான். சரி, விவரத்திற்கு வருகிறேன்.


3. ஏன் இயேசு தன் தாயை ஸ்திரியே(பெண்ணே) என்று அழைத்தார்?

ஒரு முறை இயேசுவும், அவரது சீடர்களும், மரியாளும் ஒரு திருமணத்திற்கு சென்றார்கள். அப்போது, அங்கே திராட்சை ரசம் குறைவுப்பட்டது. இதை கவனித்து மரியாள், இயேசுவிடம் இவர்களுக்கு திராட்சை ரசம் குறைவுப்பட்டது, ஏதாவது (அற்புதம்) செய்யும் என்று கேட்டுக்கொண்டார்கள்.

அதற்கு பதிலாக இயேசு ஸ்திரியே என் வேளை இன்னும் வரவில்லை என்று சொல்கிறார்கள். இதை பைபிள் வசனங்கள் கொண்டு படியுங்கள், இதில் இயேசு மரியாளை எங்கு அவமதித்துள்ளார் என்பதை நீங்களே கண்டுபிடியுங்கள்.


யோவான் 2:1-5 மூன்றாம்நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். திராட்சரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை எனறாள். அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படிசெய்யுங்கள் என்றாள்.



பெண்ணே என் வேளை இன்னும்வரவில்லை, நான் எப்போது அற்புதங்கள் செய்யவேண்டும், எப்போது செய்யக்கூடாது என்று எனக்கு தெரியும். இறைவன் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் இப்படி மனிதர்களின் இடையூறு தேவையில்லை என்ற தோரணையில் இயேசு பதில் அளிக்கிறார். இதில் எந்த தவறும் இல்லை. இதே போல பல சந்தர்பங்களில், இயேசு என் வேளை இன்னும் வரவில்லை என்று சொல்லியுள்ளார் (யோவான் 7:6, 8, 30, 8:20).


பைபிள் காமண்டரி இதைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை பாருங்கள்:

"The mother of Jesus reported the matter to Him presumably knowing that He could save the situation. 4 Dear women, why do you involve me?(Gk: ti emoi kai soi): This is a translation of an idiom, both in classical Greek and Hebrew, meaning "leave me to follow my own course'. No one has any right of access to the Lord in this matter. (Page : 1236, Zondervan's Understand the Bible Reference Series, New International BIBLE COMMENTARY Based on the NIV. F. F. Bruce, General Editor).

4. தன் வேளை வரவில்லை என்று சொன்னாலும், மறுபடியும் இயேசு மரியாளின் மீதுள்ள அன்பினால் அற்புதம் செய்தார்:

நம் இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் விவரங்கள் எப்படி உள்ளது என்றால், இயேசுவின் தாய் அவரிடம் அற்புதம் செய்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லும் போது, இயேசு பெணணே "என்னை தொந்திரவு செய்யாதே" என்றுச் சொல்லி, மறுபடியும் மரியாள் இயேசுவிடம் அதிகமாக கேட்டுக்கொண்டும், அவர் "முடியாது என்றால் முடியாது" என்று தட்டிக்கழித்ததாக கற்பனை செய்துக்கொண்டு பைபிள் வசனத்திற்கு வியாக்கீனம் செய்கிறார்கள்.

ஆனால், உண்மையில் இயேசு "என் வேளை இன்னும் வரவில்லை" என்று சொல்லிவிட்டு, மறுபடியும் "சரி செய்கிறேன்" என்று ஒப்புக்கொண்டுள்ளார். பிறகு மரியாள், அந்த வேலைக்காரர்களை அழைத்து, அவர் சொல்லுகின்றபடி செய்யுங்கள் என்று சொல்ல, தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றுகிறார் இயேசு. இந்த விவரங்கள் எல்லாம், இஸ்லாமியர்கள் படிக்கமாட்டார்கள். அவர்களுக்கு இந்த வசனங்கள் பைபிளில் இருப்பது தெரியாது! அப்படி தெரிந்தாலும் வெளியே சொல்லமாட்டார்கள்.


யோவான் 2:6-8 யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரரிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள்.



இயேசு அனுமதி கொடுக்காமலா! மரியாள் வேலைக்காரர்களை பார்த்து இவர் சொல்கின்றபடி செய்யுங்கள் என்று சொல்லியுள்ளார்கள்? இயேசுவிற்கு மரியாளின் மீது மரியாதை இல்லாமலா அவர் அன்று அந்த திருமண வீட்டில் அற்புதம் செய்தார். சிந்திக்கவேண்டும்.

5. இயேசு "தான் வந்த வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தார்:"

இயேசு தான் எந்த வேலைக்காக வந்தாரோ அதை கச்சிதமாக செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்தார், "நீர் இதை செய்யுங்கள்" என்று அவருக்கு அறிவுரை சொல்லத்தேவையில்லை. ஒரு முறை யூத ஆசாரியர்கள் இயேசு செய்த பல அற்புதங்களை கண்டும், அவர் மீது விசுவாசம் வைக்காமல் "வேண்டுமென்றே அற்புதம் செய்துக்காட்டு" என்று சொல்லும் பொது, இயேசு செய்துக்காட்டவில்லை. இந்த விவரத்தைப் பற்றி, பி. ஜைனுல் ஆபீதீன் என்ற இஸ்லாமிய அறிஞருக்கு நான் அளித்த பதிலில் மிகவும் தெளிவாக காணலாம்.

1. பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 1

2. பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 2

எனவே, இயேசு தன் தாயை பெண்ணே என்று அழைத்தது ஒன்றும் பெரிய குற்றமில்லை. இஸ்லாமியர்கள், இயேசுவை ஒரு நபி என்று மட்டும் பார்க்கிறீர்கள், ஆனால், அவர் மேசியாவாகிய தேவன் என்பதை நீங்கள் அறியவில்லை. மரியாள் இவ்வுலகத்தில் பெயரளவிற்கு இயேசுவிற்கு தாயாக இருக்கிறார், ஆனால், அந்த மரியாளுக்கு "இயேசு" தேவனாக இருக்கிறார் என்பதை நீங்கள் மறக்கக்கூடாது. மரியாள் தான் இயேசுவிற்கு "அடிமை" என்றும், அவர் "தன் இரட்சகர் - Saviour" என்றும் சொல்லியுள்ளதை நாம் கவனிக்கவேண்டும்.

லூக்கா 1:47 என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது. 1:48 அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்.



உலக மக்கள் மரியாளை "பாக்கியவதி" என்பார்கள், ஆனால், இயேசுவை விட மனிதர்கள்(மரியாள்) பெரியவர் இல்லையே. எனவே, இயேசுவை பின்பற்றிய சீடர்கள் போல மரியாளும் இயேசுவின் சீடர் ஆவார்கள். மரியாளுக்கும் இயேசு என்னும் இரட்சகர் தேவை.


6. சிலுவை நேரத்தில் மரியாளை பெண்ணே என்று அழைத்த இயேசு:

இயேசு சிலுவையில் தொங்கும் போது கூட ஒரு தாய்க்கு ஒரு சராசரி மனிதன் செய்யக்கூடிய(வேண்டிய) கடமையையும் இயேசு செய்துவிட்டுச்சென்றார். தன் சீடர்களில் எல்லாம் தான் அதிகமாக நேசித்த சீடனாகிய யோவானின் கையில் மரியாளை ஒப்படைத்து சென்றார் இயேசுக் கிறிஸ்து.

யோவான் 19:26 அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.



இயேசு மரியாளை அவமதிக்கவேண்டும் என்பதற்காக "ஸ்திரியே" என்று ஒரு திருமண விருந்தில் அழைத்தார் என்று இஸ்லாமியர்கள் குற்றம் சாட்டுகிறீர்கள். அப்படியானால், இந்த சிலுவை நேரத்தில் மரியாளின் மீது இயேசுவிற்கு என்ன கோபம் இருந்தது? அப்படி அவமதிக்கவேண்டும் என்று நினைத்து இருந்தால், ஏன் தனக்கு பிரியமான சீடனை மரியாளை பார்த்துக்கொள் என்று ஒப்படைக்கிறார்?


7. கிரேக்க வார்த்தை "gynai" மற்றும் அதன் உண்மைப்பொருள்:

இயேசு சொன்னதாக பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை "gynai" என்பதாகும். இதை தமிழில் "ஸ்திரி" அல்லது "பெண்" என்று மொழி பெயர்த்துள்ளார்கள்.

இந்த வார்த்தையை இயேசு மரியாளுக்கு பயன்படுத்தியது "ஒரு தாயை அவமதிப்பதாக ஆகும் " என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள். இந்த வார்த்தை இன்னும் யார் யாருக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை கவனித்தால், இஸ்லாமியர்களின் இந்த வாதம் தவறானது என்ற முடிவிற்கு வரலாம். இந்த கிரேக்க வார்த்தை மதிப்பின், அன்பின் அடிப்படையில் குறிப்பிடும் வார்த்தையாகும்.

1. கிரேக்க புலவர் "ஹோமர் -  Homer " என்பவர் எழுதிய கவிதைகளில், ஒடிஸ்ஸியஸ்(Odysseus) என்பவர், தான் அதிகமாக நேசிக்கும் மனைவியை(Penelope) குறிப்பிடும் போது இந்த வார்த்தையை பயன்படுத்துகிறார்.  (Homer (ancient Greek: Ὅμηρος, Homēros) is a legendary ancient Greek epic poet, traditionally considered the author of the epic poems the Iliad and the Odyssey as well as some lesser-known poems.  Source: http://en.wikipedia.org/wiki/Homer)

2. ரோம சாம்ராஜ்ஜியத்தின் அரசர் சீசர் அகஸ்தஸ், எகிப்து இராணியாகிய "கிளியோபாட்ராவை" குறிப்பிடும் போது, இந்த வார்த்தையையே பயன்படுத்துகின்றார்.

The Protestant commentator William Barclay writes:

"The word Woman (gynai) is also misleading. It sounds to us very rough and abrupt. But it is the same word as Jesus used on the Cross to address Mary as he left her to the care of John (John 19:26). In Homer it is the title by which Odysseus addresses Penelope, his well-loved wife. It is the title by which Augustus, the Roman Emperor, addressed Cleopatara, the famous Egyptian queen. So far from being a rough and discourteous way of address, it was a title of respect. We have no way of speaking in English which exactly renders it; but it is better to translate it Lady which gives at least the courtesy in it" (The Gospel of John, revised edition, vol. 1, p. 98).

In the same way, the Expositor's Bible Commentary, published by Zondervan, states:

Jesus' reply to Mary was not so abrupt as it seems. 'Woman' (gynai) was a polite form of address. Jesus used it when he spoke to his mother from the cross (19:26) and also when he spoke to Mary Magdalene after the Resurrection (20:15)" (vol. 9, p. 42).

The Wycliff Bible Commentary put out by Moody Press acknowledges in its comment on this verse, "In his reply, the use of 'Woman' does not involve disrespect (cf. 19:26)" (p. 1076).

Source:http://homepages.paradise.net.nz/mischedj/ct_theotokos.html

John 2:4 "Dear woman, why do you involve me?" Jesus replied. "My time has not yet come."

Critics often accuse Jesus of being rude to his mother here; however, as parallel phrases in Greek literature show, this is not a phrase of derision or rudeness but of loving respect (as our NIV correctly captures). Consider this relevant data:

The term here is "Jesus' normal, public way of addressing women" (John 4:21, 8:10, 19:26, 20:31; Mt. 15:28; Lk. 13:12). It is also a common address in Greek literature, and never has the intent of disrespect or hostility. [Brow.GJ, 99]. The same term is used in Josephus Antiquities 17.17 by Pheroras to summon his beloved wife. [Beas.J, 34]


Source: http://www.tektonics.org/gk/jesusrudemom.html


சிந்தித்துப்பாருங்கள், ஒருவன் தான் அதிகமாக நேசிக்கும் மனைவியை குறிப்பிடும்போதும், ஒரு அரசியை ஒரு அரசன் குறிப்பிடும்போதும் பயன்படுத்தியுள்ள அதே கிரேக்க வார்த்தையைத் தான் இயேசு தன் தாயுக்கு பயன்படுத்தியுள்ளார், இது மரியாளை அவமதிக்கவோ, கோபத்தாலோ சொன்னது இல்லை, மதிப்பின் அடிப்படையில் சொன்ன வார்த்தையாகும்.

இதை கவனத்தில் கொண்டு பார்க்கும்போது, இயேசு மரியாளை அவமதிக்கவேண்டும் என்பதற்காக "ஸ்திரியே" என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை, அதற்கு மாறாக மதிப்பின் அடிப்படையில் பயன்படுத்தியுள்ளார்.

கிரேக்கத்திலிருந்து புதிய ஏற்பாட்டை ஆங்கிலத்திலோ, தமிழிலோ மொழி பெயர்க்கும் போது, "Woman" என்று பயன்படுத்தியுள்ளார்கள். இதை "Lady" என்று மொழிபெயர்ப்பது தான் சிறந்தது என்று மேலே பார்த்த காமண்டரியில் சொல்லப்பட்டுள்ளது.


"The Protestant commentator William Barclay writes: ....We have no way of speaking in English which exactly renders it; but it is better to translate it Lady which gives at least the courtesy in it" (The Gospel of John, revised edition, vol. 1, p. 98). "

தமிழிலே பெண், அல்லது ஸ்திரி என்பதற்கு சமமான ஆங்கில வார்த்தை "Woman" என்பதாகும், ஆனால், "Lady" என்பதற்கு தமிழில் என்ன வார்த்தை உள்ளது என்பது சந்தேகமாக உள்ளது.

"உன் தாயையும் தந்தையையும் கணம் செய்வாயாக" என்று பழைய ஏற்பாடு சொல்வதை நிறைவேற்ற நான் வந்தேன் என்று சொன்ன அதே இயேசு, எப்படி மரியாளை அவமதிப்பார்?


அவன் அவரை நோக்கி: எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு: கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரம் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச் சாட்சி சொல்லாதிருப்பாயாக; உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக; உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பவைகளையே என்றார். (மத்தேயு 19:18-19 )

நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 5:17-18 )



8. பொதுவாக வெறுப்பு இன்றி பெண்களை குறிப்பிட இயேசு பயன்படுத்தும் வார்த்தை :

இயேசு பல சந்தர்பங்களில் பெண்களை குறிப்பிடும் போது, "ஸ்திரியே" என்று தான் அழைத்து பேசியுள்ளார், அது நம்பிக்கையை புகழும் போதும் சரி, மன்னிக்கும் போதும் சரி அல்லது சுகமாக்கி ஆறுதலான வார்த்தைகளை பேசும் போதும் சரி, இப்படித் தான் இயேசு குறிப்பிட்டுள்ளார். கீழே வரும் வசனங்களில் இயேசு சாதாரணமாக பேசினாரா? அல்லது அவமதிக்கும் வகையில் பேசினாரா? என்பதை சிந்தித்துப்பாருங்கள்.


நம்பிக்கையை மெச்சிக்கொள்ளும்போது: மத்தேயு 15:28 இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்.

சுகமாக்கிவிட்டு ஆறுதல்படுத்தும் போது: லூக்கா 13:12 இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ஸ்திரீயே , உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி,

நம்பிக்கையைப் பற்றிய சந்தேகத்தை தீர்க்கும்போது: யோவான் 4:21 அதற்கு இயேசு: ஸ்திரீயே , நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.

மன்னிக்கும் பொது: யோவான் 8:10 இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேரொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்.

உயிர்த்தெழுந்த பிறகு: யோவான் 20:15 இயேசு அவளைப் பார்த்து ஸ்திரீயே , ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.



8. தன்னை எதிர்த்த பெண்ணை கொலை செய்ய துடித்த முகமது:

இயேசு தன் தாயை "ஸ்திரியே" என்று அழைத்தார், இது ஒரு நபிக்கு இருக்கக்கூடிய தகுதி அல்ல. நபி என்பவர்கள் இப்படி சொல்லமாட்டார்கள் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள், முகமது தன்னை ஒரு பெண் எதிர்த்தாள் (அதுவும் பல பிள்ளைகளுக்கு தாய்) என்பதற்காக "எனக்காக அவளை கொல்பவர் யார்?" என்று கேட்டு, அந்தப் பெண்ணை கொலை செய்யவைத்தவர் முகமது. இது ஒரு நபிக்கு இருக்கக்கூடிய தகுதியா? (படிக்க "முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்")

தன் அனுமதி இல்லாமல், ஒரு மனிதன், தன் மனைவி "முகமதுவை" தொடர்ந்து திட்டிக்கொண்டு இருக்கிறாள் என்பதற்காக கொலை செய்துவிட்டு, முகமது கேட்கும் போது, நான் தான் செய்தேன் என்று சொல்லும் போது:

என்னை திட்டினால் எப்படி உன் மனைவியை நீ கொலை செய்வாய்?

அதுவும் ஒரு கர்ப்பிணிப் பெண் என்றுச் சொல்கிறாய்! எப்படி உன்னால் இது முடிந்தது?

என் அனுமதி இல்லாமல் இப்படி கொலை செய்ததால், இஸ்லாமுக்கு கெட்டப்பெயர் நீ கொண்டு வந்தாய்?

சட்டத்தை ஏன் கையில் எடுத்துக்கொண்டாய்? அரசு எடுக்கவேண்டிய முடிவை எப்படி நீ எடுத்தாய்?


என்று கேள்விகள் கேட்டு, முகமது அந்த மனிதனுக்கு தகுந்த தண்டனை அளிக்காமல், எல்லாருக்கும் முன்பாக, " சாட்சியாளர்களாக அமர்ந்திருப்போரே ! அவளின் இரத்தத்திற்கு பலி எடுக்கப்படாது." என்றுச் சொன்னதாக ஹதீஸ் சொல்கிறதே. இப்படிப்பட்டவரையா நீங்கள் நபி என்றும், இப்படிப்பட்ட மார்க்கத்தையா அமைதியின் மார்க்கம் என்றுச் சொல்கிறீர்கள்?

இயேசு தன் தாயை "ஸ்திரியே" என்று அழைத்தது பைபிளில் சொல்லப்பட்டதால், அது வேதமல்ல என்று சொல்லும் நீங்கள், உங்கள் முகமது, வயிற்றில் இருக்கும் பிள்ளையோடு கொன்ற ஒரு மனிதனுக்கு மன்னிப்பு அளித்தாரே, இந்த பெண்ணுக்காக பலி கொடுக்கப்படாது என்று சொன்னாரே, இவர் நபியா? இதை படிப்பவர்கள் சிந்திக்கட்டும்.( படிக்க : கர்ப்பிணி பெண்ணை கொன்ற மனிதனை தண்டிக்காத முகமது http://unmaiadiyann.blogspot.com/2008/01/blog-post_16.html)


முடிவுரை: அன்பான இஸ்லாமிய அறிஞர்களே, சிந்தியுங்கள், மரியாளை "ஸ்திரியே" என்று இயேசு சொன்னது, மரியாளை அவமதிக்க அல்ல என்பதை இதுவரைக்கும் கண்டோம். ஒரு முறை இயேசு மக்களுக்கு போதித்துக்கொண்டு இருக்கும் போது, உங்கள் தாயாரும் சகோதரரும் வெளியே உங்களுக்காக வெளியே காத்திருக்கிறார்கள் என்று அவருக்கு சொல்லப்பட்டபோது, என் தாய் யார்? என் சகோதரர் சகோதரிகள் யார்? என் பிதாவின் சித்தம் செய்பவர்களே என்று தன் சீடர்களை குறிப்பிட்டுச் சொன்னார்? இப்படி அவர் சொன்னதற்காக, அவருக்கு மரியாளின் மீது அன்பில்லை என்று பொருளா? . தன் சொந்த உலக குடும்பத்தைவிட, தேவனுடைய ஆன்மீக குடும்பத்தின் முக்கியத்துவம் அதிகம் என்பதை காட்டவே, இயேசு இவ்விதமாக சொன்னார்.

யார் யாருக்கு என்ன  முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், எப்போது கொடுக்கவேண்டும் என்று இயேசுவிற்கு நன்றாகத் தெரியும். எனவே, இயேசு மரியாளை "ஸ்திரியே" என்று சொல்லி அழைத்தது மரியாளை அவமதிப்பதற்காக அல்ல, உங்கள் குற்றச்சாட்டு ஆதாரமற்றது.

என் அடுத்த பதிலில், இயேசு சகிப்புத்தன்மை இல்லாதவர், முன்கோபமுடையவர், மக்களை போதையூட்ட அற்புதம் செய்தவர் போன்ற இஸ்லாமியர்களின் (இஸ்லாம் கல்வி தளம், எம்.எம். அக்பர் அவர்களின்) குற்றச்சாட்டிற்கு என் பதிலை தருகிறேன்.



1. இஸ்லாம் கல்விக்கு ஈஸா குர்ஆனின் இதர பதில்கள் :

1. எம். எம் அக்பருக்கு (இஸ்லாம் கல்விக்கு) பதில்: குர்ஆனில் குலறுபடிகள்

2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில் (குப்பை சடங்குகளை குப்பையில் போடச்சொன்ன இயேசு)

3. இஸ்லாம் கல்வி தள கட்டுரையும் 1 தீமோத்தேயு 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்


2. பி.ஜைனுல் ஆபீதீன் அவர்களுக்கு ஈஸா குர்ஆனின் பதில்கள்

3. நேசமுடன் தளத்திற்கு ஈஸா குர்ஆனின் பதில்கள்

4. டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈஸா குர்ஆனின் பதில்கள்

5. இது தான் இஸ்லாம் தளத்திற்கு ஈஸா குர்ஆனின் பதில்கள்



Isa Koran Home Page Back - Islam Kalvi Rebuttals Index  Page
1