(M.M. அக்பர் மற்றும் தேங்கை முனீப், பஹ்ரைன் அவர்களுக்கு மறுப்பு)
எம். எம். அக்பர் என்ற கேரள இஸ்லாமிய அறிஞர், பைபிள் பற்றியும், குர்ஆன் பற்றியும் சொல்லியுள்ள செய்திகளை, தேங்கை முனீப் என்ற இஸ்லாமிய சகோதரர் தமிழில் மொழி பெயர்த்து இஸ்லாம் கல்வி தளத்தில் வெளியிடுகிறார். இஸ்லாமிய அறிஞர்களின் பைபிள் ஆராய்ச்சியின் தரம் எந்த அளவிற்கு உள்ளது என்பதை இந்த கட்டுரையில் நான் விளக்குகிறேன்.
M.M. அக்பர் அவர்கள் எழுதியது:
திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் - ஓர் ஒப்பீடு
(பகுதி 2)
மூலம்: M.M.அக்பர் - தமிழில் தேங்கை முனீப், பஹ்ரைன்
தீர்க்கதரிசிகளே தீமை புரிந்தனரா? . . .
6. இஸ்ரவேலரின் இரட்சகர் என பைபிள் கூறும் இயேசு கிறிஸ்து தாயை மதிக்காதவராகவும் (யோவான்: 2:5, 19:26) சகிப்புத்தன்மை இல்லாதவராகவும் (மத்தேயு 12:34, 12:39, யோவான் 8:44) முன்கோபம் உடையவராகவும் (யோவான் 2:13-17, மத்தேயு 21:19) திருமண விருந்தில் தண்ணீரை மதுவாக மாற்றி மக்களுக்குக் கொடுத்து அவர்களுக்குப் போதையூட்டியவராகவும் (யோவான் 2:1-11) அறிமுகப்படுத்துகின்றது.
Source: http://www.islamkalvi.com/religions/quran_bible_compare2.htm
Formats mine
1. முஸ்லீம்கள் தீர்க்கதரிசிகளுக்காக ஏன் அதிகமாக பரிந்துபேசுகிறார்கள்:
பைபிள் தீர்க்கதரிசிகளைப் பற்றி சொல்லும் போது அவர்கள் சாதாரண மனிதர்கள் போல, சில தவறுகள் செய்துள்ளார்கள் என்றும், அதற்கு தேவன் தண்டனைகளை கொடுத்துள்ளார் என்றும் சொல்கிறது. தீர்க்கதரிசிகளும் சாதாரண மனிதர்கள் தான், அவர்களும் தவறுகள் செய்துள்ளார்கள் என்று பைபிள் பாரபட்சம் காட்டாமல், உள்ளதை உள்ளது போலவே சொல்கிறது.
இதை முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்வது இல்லை. இவர்களின் கருத்துப்படி, தீர்க்கதரிசிகள் மிகவும் நல்லவர்கள், அவர்கள் தவறே செய்யமாட்டார்கள். அவர்களைப் பற்றி பைபிள் சொல்வது தவறு என்று இவர்கள் சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் பைபிள் சொல்வது போல, குர்ஆனும், ஹதீஸ்களும், முகமதுவின் வாழ்க்கை வரலாறும், தீர்க்கதரிசிகள் கூட பாவம் செய்துள்ளார்கள், இறைவனிடம் மன்னிப்பை கேட்டுள்ளார்கள் என்று சொல்கின்றன. இதைப் பற்றிய பதிலை தொடர் கட்டுரைகளாக நாம் காணலாம்.
சரி, ஏன் இஸ்லாமியர்கள் இப்படி சொல்கிறார்கள் என்று சிறிது சிந்துப்பார்த்தால், ஒரு உண்மை புரியும், அது என்னவென்றால், பைபிள் சொல்வது போல, தீர்க்கதரிசிகள் கூட தவறுகள் செய்வார்கள் என்று இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொண்டால், அது இவர்களுக்கு தலைவலியாக மாறும். எப்படி இவர்களுக்கு தலைவலியாக மாறும் என்று தெரிந்துக்கொள்ள மேலும் படியுங்கள். பைபிள் சொல்லும் தீர்க்கதரிசிகள் ஏதோ ஒரு சூழ்நிலையில் தவறு செய்ததாக சொல்கிறது, அந்த தவறினால் மற்றவர்கள் பாதிக்கப்பட்டு இருந்தால், அதற்கு உடனே தேவன் அவர்களுக்கு தண்டனை கொடுத்ததாக பைபிள் சொல்கிறது. பிறகு அந்த தீர்க்கதரிசிகள் அந்த தவறை மறுபடியும் செய்யாமல் இருந்தார்கள் என்று பைபிள் சொல்கிறது.
ஆனால், முகமதுவையும் ஒரு தீர்க்கதரிசியாக (நபியாக) ஏற்றுக்கொண்டால், இவர் பைபிள் சொல்லும் தீர்க்கதரிசிகள் போல ஒரு முறை தவறு செய்யாமல், அதை தொடர்ந்து செய்துள்ளார், இதில் ஒரு வித்தியாசம் என்னவென்றால், அல்லா இவர் செய்த எல்லா தவறுகளை கணக்கில் கொள்ளாமல், தண்டனை கொடுக்காமல் மன்னித்து, இவர் செய்யும் எல்லா செயல்களுக்கு அல்லாவே அங்கீகாரம் கொடுத்துள்ளார். எனவே, பைபிள் சொல்வது உண்மை என்று இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொண்டால், இவர்கள் உத்தமர் என்று பின்பற்றும் முகமதுவுடைய செயல்களும் தவறு தான் என்று இவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டி வரும். எனவே, தங்கள் முகமதுவை காப்பாற்ற மற்ற தீர்க்கதரிசிகளுக்கு இவர்கள் வக்காளத்து வாங்குகிறார்கள்.
இதில் இன்னொரு முக்கியமான விவரம் என்னவென்றால், குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் எங்கும் இயேசு பாவம் செய்ததாக சொல்லப்படவில்லை, அதாவது, முகமதுவை விட பல மடங்கு இயேசு நல்லவர் என்பதை இஸ்லாமிய புத்தகங்களே சொல்கின்றன. இயேசு நல்லவர், முகமது தவறுகள் செய்தார் என்று இஸ்லாமிய ஹதீஸ்கள் சொல்வதை சரி செய்ய, எந்த தீர்க்கதரிசியும் தவறு செய்யவில்லை என்று மழுப்புகிறார்கள இஸ்லாமியர்கள்.
இஸ்லாமியர்கள் சொல்வது தவறானது என்பதை விளக்குவதற்கு முன்பு, இவர்கள் இயேசுவைப் பற்றி இந்த கட்டுரையில் சொல்லியுள்ள சில விவரங்களுக்கு பதிலை சொல்லலாம் என்று கருதுகிறேன்.
M.M. அக்பர் அவர்கள் எழுதியது:
.....
.....
.....
6. இஸ்ரவேலரின் இரட்சகர் என பைபிள் கூறும் இயேசு கிறிஸ்து தாயை மதிக்காதவராகவும் (யோவான்: 2:5, 19:26) ....
2. இயேசு மரியாளை மதிக்கவில்லையா? யோவான்: 2:5, 19:26 வசனங்கள் என்ன சொல்கின்றன:
இஸ்லாமிய அறிஞர்கள் பைபிள் வசனங்களுக்கு எவ்வளவு அழகாக விளக்கம் அளிக்கிறார்கள் என்பதை இதன் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.
முதலாவது, அவர்கள் மேற்கோள் காட்டிய வசனத்தை பார்ப்போம்.
யோவான் 2:5 அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள்.
மேலே எம்.எம். அக்பர் அவர்கள் குறிப்பிட்ட வசனத்தை பாருங்கள், ஏதாவது புரிகிறதா? ஒன்றுமே புரியாது! ஏனென்றால், அவர்கள் குறிப்பிட்ட வசனமே தவறாக உள்ளது. உண்மையில் அவர்கள் மேற்கோள் காட்டியிருக்கவேண்டிய வசனம் யோவான் 2:4 ஆகும். அல்லது யோவான் 2:1-4 வரையுள்ள வசனங்களை குறிப்பிட்டு இருக்கவேண்டும்.
இது என்ன பெரிய தவறா? என்று நீங்கள் கேட்கலாம், இது பெரிய தவறு இல்லை, ஆனால், மற்றவர்களின் வேதங்களில் உள்ள வசனத்தை மேற்கோள் காட்டும் போது, குறைந்தபட்சம் ஒரு முறை சரிபார்ப்பது நல்லது. கட்டுரையின் மூல ஆசிரியர் எம். எம். அக்பர் அவர்களோ அல்லது மொழி பெயர்த்த முனீப் அவர்களோ இதை கவனிக்கவில்லை. இது ஒரு பெரிய தவறாக நான் குறிப்பிடவில்லை, ஆனால், இஸ்லாமிய அறிஞர்கள் எவ்வளவு மேலோட்டமாக மற்றவர்களின் வேதங்களின் வசனங்களை கையாளுகிறார்கள் என்பதை குறிப்பிடவந்தேன், அவ்வளவு தான். சரி, விவரத்திற்கு வருகிறேன்.
3. ஏன் இயேசு தன் தாயை ஸ்திரியே(பெண்ணே) என்று அழைத்தார்?
ஒரு முறை இயேசுவும், அவரது சீடர்களும், மரியாளும் ஒரு திருமணத்திற்கு சென்றார்கள். அப்போது, அங்கே திராட்சை ரசம் குறைவுப்பட்டது. இதை கவனித்து மரியாள், இயேசுவிடம் இவர்களுக்கு திராட்சை ரசம் குறைவுப்பட்டது, ஏதாவது (அற்புதம்) செய்யும் என்று கேட்டுக்கொண்டார்கள்.
அதற்கு பதிலாக இயேசு ஸ்திரியே என் வேளை இன்னும் வரவில்லை என்று சொல்கிறார்கள். இதை பைபிள் வசனங்கள் கொண்டு படியுங்கள், இதில் இயேசு மரியாளை எங்கு அவமதித்துள்ளார் என்பதை நீங்களே கண்டுபிடியுங்கள்.
யோவான் 2:1-5 மூன்றாம்நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். திராட்சரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை எனறாள். அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படிசெய்யுங்கள் என்றாள்.
பெண்ணே என் வேளை இன்னும்வரவில்லை, நான் எப்போது அற்புதங்கள் செய்யவேண்டும், எப்போது செய்யக்கூடாது என்று எனக்கு தெரியும். இறைவன் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் இப்படி மனிதர்களின் இடையூறு தேவையில்லை என்ற தோரணையில் இயேசு பதில் அளிக்கிறார். இதில் எந்த தவறும் இல்லை. இதே போல பல சந்தர்பங்களில், இயேசு என் வேளை இன்னும் வரவில்லை என்று சொல்லியுள்ளார் (யோவான் 7:6, 8, 30, 8:20).
பைபிள் காமண்டரி இதைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை பாருங்கள்:
"The mother of Jesus reported the matter to Him presumably knowing that He could save the situation. 4 Dear women, why do you involve me?(Gk: ti emoi kai soi): This is a translation of an idiom, both in classical Greek and Hebrew, meaning "leave me to follow my own course'. No one has any right of access to the Lord in this matter. (Page : 1236, Zondervan's Understand the Bible Reference Series, New International BIBLE COMMENTARY Based on the NIV. F. F. Bruce, General Editor).
4. தன் வேளை வரவில்லை என்று சொன்னாலும், மறுபடியும் இயேசு மரியாளின் மீதுள்ள அன்பினால் அற்புதம் செய்தார்:
நம் இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் விவரங்கள் எப்படி உள்ளது என்றால், இயேசுவின் தாய் அவரிடம் அற்புதம் செய்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லும் போது, இயேசு பெணணே "என்னை தொந்திரவு செய்யாதே" என்றுச் சொல்லி, மறுபடியும் மரியாள் இயேசுவிடம் அதிகமாக கேட்டுக்கொண்டும், அவர் "முடியாது என்றால் முடியாது" என்று தட்டிக்கழித்ததாக கற்பனை செய்துக்கொண்டு பைபிள் வசனத்திற்கு வியாக்கீனம் செய்கிறார்கள்.
ஆனால், உண்மையில் இயேசு "என் வேளை இன்னும் வரவில்லை" என்று சொல்லிவிட்டு, மறுபடியும் "சரி செய்கிறேன்" என்று ஒப்புக்கொண்டுள்ளார். பிறகு மரியாள், அந்த வேலைக்காரர்களை அழைத்து, அவர் சொல்லுகின்றபடி செய்யுங்கள் என்று சொல்ல, தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றுகிறார் இயேசு. இந்த விவரங்கள் எல்லாம், இஸ்லாமியர்கள் படிக்கமாட்டார்கள். அவர்களுக்கு இந்த வசனங்கள் பைபிளில் இருப்பது தெரியாது! அப்படி தெரிந்தாலும் வெளியே சொல்லமாட்டார்கள்.
யோவான் 2:6-8 யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரரிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள்.
இயேசு அனுமதி கொடுக்காமலா! மரியாள் வேலைக்காரர்களை பார்த்து இவர் சொல்கின்றபடி செய்யுங்கள் என்று சொல்லியுள்ளார்கள்? இயேசுவிற்கு மரியாளின் மீது மரியாதை இல்லாமலா அவர் அன்று அந்த திருமண வீட்டில் அற்புதம் செய்தார். சிந்திக்கவேண்டும்.
5. இயேசு "தான் வந்த வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தார்:"
இயேசு தான் எந்த வேலைக்காக வந்தாரோ அதை கச்சிதமாக செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்தார், "நீர் இதை செய்யுங்கள்" என்று அவருக்கு அறிவுரை சொல்லத்தேவையில்லை. ஒரு முறை யூத ஆசாரியர்கள் இயேசு செய்த பல அற்புதங்களை கண்டும், அவர் மீது விசுவாசம் வைக்காமல் "வேண்டுமென்றே அற்புதம் செய்துக்காட்டு" என்று சொல்லும் பொது, இயேசு செய்துக்காட்டவில்லை. இந்த விவரத்தைப் பற்றி, பி. ஜைனுல் ஆபீதீன் என்ற இஸ்லாமிய அறிஞருக்கு நான் அளித்த பதிலில் மிகவும் தெளிவாக காணலாம்.
1. பிஜேவிற்கு ஈஸா குர்ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 1எனவே, இயேசு தன் தாயை பெண்ணே என்று அழைத்தது ஒன்றும் பெரிய குற்றமில்லை. இஸ்லாமியர்கள், இயேசுவை ஒரு நபி என்று மட்டும் பார்க்கிறீர்கள், ஆனால், அவர் மேசியாவாகிய தேவன் என்பதை நீங்கள் அறியவில்லை. மரியாள் இவ்வுலகத்தில் பெயரளவிற்கு இயேசுவிற்கு தாயாக இருக்கிறார், ஆனால், அந்த மரியாளுக்கு "இயேசு" தேவனாக இருக்கிறார் என்பதை நீங்கள் மறக்கக்கூடாது. மரியாள் தான் இயேசுவிற்கு "அடிமை" என்றும், அவர் "தன் இரட்சகர் - Saviour" என்றும் சொல்லியுள்ளதை நாம் கவனிக்கவேண்டும்.
2. பிஜேவிற்கு ஈஸா குர்ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 2
லூக்கா 1:47 என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது. 1:48 அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்.
உலக மக்கள் மரியாளை "பாக்கியவதி" என்பார்கள், ஆனால், இயேசுவை விட மனிதர்கள்(மரியாள்) பெரியவர் இல்லையே. எனவே, இயேசுவை பின்பற்றிய சீடர்கள் போல மரியாளும் இயேசுவின் சீடர் ஆவார்கள். மரியாளுக்கும் இயேசு என்னும் இரட்சகர் தேவை.
6. சிலுவை நேரத்தில் மரியாளை பெண்ணே என்று அழைத்த இயேசு:
இயேசு சிலுவையில் தொங்கும் போது கூட ஒரு தாய்க்கு ஒரு சராசரி மனிதன் செய்யக்கூடிய(வேண்டிய) கடமையையும் இயேசு செய்துவிட்டுச்சென்றார். தன் சீடர்களில் எல்லாம் தான் அதிகமாக நேசித்த சீடனாகிய யோவானின் கையில் மரியாளை ஒப்படைத்து சென்றார் இயேசுக் கிறிஸ்து.
யோவான் 19:26 அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.
இயேசு மரியாளை அவமதிக்கவேண்டும் என்பதற்காக "ஸ்திரியே" என்று ஒரு திருமண விருந்தில் அழைத்தார் என்று இஸ்லாமியர்கள் குற்றம் சாட்டுகிறீர்கள். அப்படியானால், இந்த சிலுவை நேரத்தில் மரியாளின் மீது இயேசுவிற்கு என்ன கோபம் இருந்தது? அப்படி அவமதிக்கவேண்டும் என்று நினைத்து இருந்தால், ஏன் தனக்கு பிரியமான சீடனை மரியாளை பார்த்துக்கொள் என்று ஒப்படைக்கிறார்?
7. கிரேக்க வார்த்தை "gynai" மற்றும் அதன் உண்மைப்பொருள்:
இயேசு சொன்னதாக பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை "gynai" என்பதாகும். இதை தமிழில் "ஸ்திரி" அல்லது "பெண்" என்று மொழி பெயர்த்துள்ளார்கள்.
இந்த வார்த்தையை இயேசு மரியாளுக்கு பயன்படுத்தியது "ஒரு தாயை அவமதிப்பதாக ஆகும் " என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள். இந்த வார்த்தை இன்னும் யார் யாருக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை கவனித்தால், இஸ்லாமியர்களின் இந்த வாதம் தவறானது என்ற முடிவிற்கு வரலாம். இந்த கிரேக்க வார்த்தை மதிப்பின், அன்பின் அடிப்படையில் குறிப்பிடும் வார்த்தையாகும்.
1. கிரேக்க புலவர் "ஹோமர் - Homer " என்பவர் எழுதிய கவிதைகளில், ஒடிஸ்ஸியஸ்(Odysseus) என்பவர், தான் அதிகமாக நேசிக்கும் மனைவியை(Penelope) குறிப்பிடும் போது இந்த வார்த்தையை பயன்படுத்துகிறார். (Homer (ancient Greek: Ὅμηρος, Homēros) is a legendary ancient Greek epic poet, traditionally considered the author of the epic poems the Iliad and the Odyssey as well as some lesser-known poems. Source: http://en.wikipedia.org/wiki/Homer)
2. ரோம சாம்ராஜ்ஜியத்தின் அரசர் சீசர் அகஸ்தஸ், எகிப்து இராணியாகிய "கிளியோபாட்ராவை" குறிப்பிடும் போது, இந்த வார்த்தையையே பயன்படுத்துகின்றார்.
The Protestant commentator William Barclay writes:
"The word Woman (gynai) is also misleading. It sounds to us very rough and abrupt. But it is the same word as Jesus used on the Cross to address Mary as he left her to the care of John (John 19:26). In Homer it is the title by which Odysseus addresses Penelope, his well-loved wife. It is the title by which Augustus, the Roman Emperor, addressed Cleopatara, the famous Egyptian queen. So far from being a rough and discourteous way of address, it was a title of respect. We have no way of speaking in English which exactly renders it; but it is better to translate it Lady which gives at least the courtesy in it" (The Gospel of John, revised edition, vol. 1, p. 98).
In the same way, the Expositor's Bible Commentary, published by Zondervan, states:
Jesus' reply to Mary was not so abrupt as it seems. 'Woman' (gynai) was a polite form of address. Jesus used it when he spoke to his mother from the cross (19:26) and also when he spoke to Mary Magdalene after the Resurrection (20:15)" (vol. 9, p. 42).
The Wycliff Bible Commentary put out by Moody Press acknowledges in its comment on this verse, "In his reply, the use of 'Woman' does not involve disrespect (cf. 19:26)" (p. 1076).
Source:http://homepages.paradise.net.nz/mischedj/ct_theotokos.html
John 2:4 "Dear woman, why do you involve me?" Jesus replied. "My time has not yet come."
Critics often accuse Jesus of being rude to his mother here; however, as parallel phrases in Greek literature show, this is not a phrase of derision or rudeness but of loving respect (as our NIV correctly captures). Consider this relevant data:
The term here is "Jesus' normal, public way of addressing women" (John 4:21, 8:10, 19:26, 20:31; Mt. 15:28; Lk. 13:12). It is also a common address in Greek literature, and never has the intent of disrespect or hostility. [Brow.GJ, 99]. The same term is used in Josephus Antiquities 17.17 by Pheroras to summon his beloved wife. [Beas.J, 34]
Source: http://www.tektonics.org/gk/jesusrudemom.html
சிந்தித்துப்பாருங்கள், ஒருவன் தான் அதிகமாக நேசிக்கும் மனைவியை குறிப்பிடும்போதும், ஒரு அரசியை ஒரு அரசன் குறிப்பிடும்போதும் பயன்படுத்தியுள்ள அதே கிரேக்க வார்த்தையைத் தான் இயேசு தன் தாயுக்கு பயன்படுத்தியுள்ளார், இது மரியாளை அவமதிக்கவோ, கோபத்தாலோ சொன்னது இல்லை, மதிப்பின் அடிப்படையில் சொன்ன வார்த்தையாகும்.
இதை கவனத்தில் கொண்டு பார்க்கும்போது, இயேசு மரியாளை அவமதிக்கவேண்டும் என்பதற்காக "ஸ்திரியே" என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை, அதற்கு மாறாக மதிப்பின் அடிப்படையில் பயன்படுத்தியுள்ளார்.
கிரேக்கத்திலிருந்து புதிய ஏற்பாட்டை ஆங்கிலத்திலோ, தமிழிலோ மொழி பெயர்க்கும் போது, "Woman" என்று பயன்படுத்தியுள்ளார்கள். இதை "Lady" என்று மொழிபெயர்ப்பது தான் சிறந்தது என்று மேலே பார்த்த காமண்டரியில் சொல்லப்பட்டுள்ளது.
"The Protestant commentator William Barclay writes: ....We have no way of speaking in English which exactly renders it; but it is better to translate it Lady which gives at least the courtesy in it" (The Gospel of John, revised edition, vol. 1, p. 98). "
தமிழிலே பெண், அல்லது ஸ்திரி என்பதற்கு சமமான ஆங்கில வார்த்தை "Woman" என்பதாகும், ஆனால், "Lady" என்பதற்கு தமிழில் என்ன வார்த்தை உள்ளது என்பது சந்தேகமாக உள்ளது.
"உன் தாயையும் தந்தையையும் கணம் செய்வாயாக" என்று பழைய ஏற்பாடு சொல்வதை நிறைவேற்ற நான் வந்தேன் என்று சொன்ன அதே இயேசு, எப்படி மரியாளை அவமதிப்பார்?
அவன் அவரை நோக்கி: எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு: கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரம் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச் சாட்சி சொல்லாதிருப்பாயாக; உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக; உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பவைகளையே என்றார். (மத்தேயு 19:18-19 )
நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 5:17-18 )
8. பொதுவாக வெறுப்பு இன்றி பெண்களை குறிப்பிட இயேசு பயன்படுத்தும் வார்த்தை :
இயேசு பல சந்தர்பங்களில் பெண்களை குறிப்பிடும் போது, "ஸ்திரியே" என்று தான் அழைத்து பேசியுள்ளார், அது நம்பிக்கையை புகழும் போதும் சரி, மன்னிக்கும் போதும் சரி அல்லது சுகமாக்கி ஆறுதலான வார்த்தைகளை பேசும் போதும் சரி, இப்படித் தான் இயேசு குறிப்பிட்டுள்ளார். கீழே வரும் வசனங்களில் இயேசு சாதாரணமாக பேசினாரா? அல்லது அவமதிக்கும் வகையில் பேசினாரா? என்பதை சிந்தித்துப்பாருங்கள்.
நம்பிக்கையை மெச்சிக்கொள்ளும்போது: மத்தேயு 15:28 இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்.
சுகமாக்கிவிட்டு ஆறுதல்படுத்தும் போது: லூக்கா 13:12 இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ஸ்திரீயே , உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி,
நம்பிக்கையைப் பற்றிய சந்தேகத்தை தீர்க்கும்போது: யோவான் 4:21 அதற்கு இயேசு: ஸ்திரீயே , நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.
மன்னிக்கும் பொது: யோவான் 8:10 இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேரொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்.
உயிர்த்தெழுந்த பிறகு: யோவான் 20:15 இயேசு அவளைப் பார்த்து ஸ்திரீயே , ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.
8. தன்னை எதிர்த்த பெண்ணை கொலை செய்ய துடித்த முகமது:
இயேசு தன் தாயை "ஸ்திரியே" என்று அழைத்தார், இது ஒரு நபிக்கு இருக்கக்கூடிய தகுதி அல்ல. நபி என்பவர்கள் இப்படி சொல்லமாட்டார்கள் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள், முகமது தன்னை ஒரு பெண் எதிர்த்தாள் (அதுவும் பல பிள்ளைகளுக்கு தாய்) என்பதற்காக "எனக்காக அவளை கொல்பவர் யார்?" என்று கேட்டு, அந்தப் பெண்ணை கொலை செய்யவைத்தவர் முகமது. இது ஒரு நபிக்கு இருக்கக்கூடிய தகுதியா? (படிக்க "முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்")
தன் அனுமதி இல்லாமல், ஒரு மனிதன், தன் மனைவி "முகமதுவை" தொடர்ந்து திட்டிக்கொண்டு இருக்கிறாள் என்பதற்காக கொலை செய்துவிட்டு, முகமது கேட்கும் போது, நான் தான் செய்தேன் என்று சொல்லும் போது:
என்னை திட்டினால் எப்படி உன் மனைவியை நீ கொலை செய்வாய்?
அதுவும் ஒரு கர்ப்பிணிப் பெண் என்றுச் சொல்கிறாய்! எப்படி உன்னால் இது முடிந்தது?
என் அனுமதி இல்லாமல் இப்படி கொலை செய்ததால், இஸ்லாமுக்கு கெட்டப்பெயர் நீ கொண்டு வந்தாய்?
சட்டத்தை ஏன் கையில் எடுத்துக்கொண்டாய்? அரசு எடுக்கவேண்டிய முடிவை எப்படி நீ எடுத்தாய்?
என்று கேள்விகள் கேட்டு, முகமது அந்த மனிதனுக்கு தகுந்த தண்டனை அளிக்காமல், எல்லாருக்கும் முன்பாக, " சாட்சியாளர்களாக அமர்ந்திருப்போரே ! அவளின் இரத்தத்திற்கு பலி எடுக்கப்படாது." என்றுச் சொன்னதாக ஹதீஸ் சொல்கிறதே. இப்படிப்பட்டவரையா நீங்கள் நபி என்றும், இப்படிப்பட்ட மார்க்கத்தையா அமைதியின் மார்க்கம் என்றுச் சொல்கிறீர்கள்?
இயேசு தன் தாயை "ஸ்திரியே" என்று அழைத்தது பைபிளில் சொல்லப்பட்டதால், அது வேதமல்ல என்று சொல்லும் நீங்கள், உங்கள் முகமது, வயிற்றில் இருக்கும் பிள்ளையோடு கொன்ற ஒரு மனிதனுக்கு மன்னிப்பு அளித்தாரே, இந்த பெண்ணுக்காக பலி கொடுக்கப்படாது என்று சொன்னாரே, இவர் நபியா? இதை படிப்பவர்கள் சிந்திக்கட்டும்.( படிக்க : கர்ப்பிணி பெண்ணை கொன்ற மனிதனை தண்டிக்காத முகமது http://unmaiadiyann.blogspot.com/2008/01/blog-post_16.html)
முடிவுரை: அன்பான இஸ்லாமிய அறிஞர்களே, சிந்தியுங்கள், மரியாளை "ஸ்திரியே" என்று இயேசு சொன்னது, மரியாளை அவமதிக்க அல்ல என்பதை இதுவரைக்கும் கண்டோம். ஒரு முறை இயேசு மக்களுக்கு போதித்துக்கொண்டு இருக்கும் போது, உங்கள் தாயாரும் சகோதரரும் வெளியே உங்களுக்காக வெளியே காத்திருக்கிறார்கள் என்று அவருக்கு சொல்லப்பட்டபோது, என் தாய் யார்? என் சகோதரர் சகோதரிகள் யார்? என் பிதாவின் சித்தம் செய்பவர்களே என்று தன் சீடர்களை குறிப்பிட்டுச் சொன்னார்? இப்படி அவர் சொன்னதற்காக, அவருக்கு மரியாளின் மீது அன்பில்லை என்று பொருளா? . தன் சொந்த உலக குடும்பத்தைவிட, தேவனுடைய ஆன்மீக குடும்பத்தின் முக்கியத்துவம் அதிகம் என்பதை காட்டவே, இயேசு இவ்விதமாக சொன்னார்.
யார் யாருக்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், எப்போது கொடுக்கவேண்டும் என்று இயேசுவிற்கு நன்றாகத் தெரியும். எனவே, இயேசு மரியாளை "ஸ்திரியே" என்று சொல்லி அழைத்தது மரியாளை அவமதிப்பதற்காக அல்ல, உங்கள் குற்றச்சாட்டு ஆதாரமற்றது.
என் அடுத்த பதிலில், இயேசு சகிப்புத்தன்மை இல்லாதவர், முன்கோபமுடையவர், மக்களை போதையூட்ட அற்புதம் செய்தவர் போன்ற இஸ்லாமியர்களின் (இஸ்லாம் கல்வி தளம், எம்.எம். அக்பர் அவர்களின்) குற்றச்சாட்டிற்கு என் பதிலை தருகிறேன்.
1. இஸ்லாம் கல்விக்கு ஈஸா குர்ஆனின் இதர பதில்கள் :
1. எம். எம் அக்பருக்கு (இஸ்லாம் கல்விக்கு) பதில்: குர்ஆனில் குலறுபடிகள்
2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்ஆன் பதில் (குப்பை சடங்குகளை குப்பையில் போடச்சொன்ன இயேசு)
3. இஸ்லாம் கல்வி தள கட்டுரையும் 1 தீமோத்தேயு 2:5ம் வசனமும்: ஈஸா குர்ஆன் பதில்
2. பி.ஜைனுல் ஆபீதீன் அவர்களுக்கு ஈஸா குர்ஆனின் பதில்கள்
3. நேசமுடன் தளத்திற்கு ஈஸா குர்ஆனின் பதில்கள்
4. டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈஸா குர்ஆனின் பதில்கள்
5. இது தான் இஸ்லாம் தளத்திற்கு ஈஸா குர்ஆனின் பதில்கள்
Isa Koran Home Page | Back - Islam Kalvi Rebuttals Index Page |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக