ஆன்சரிங் இஸ்லாம் ஈமெயில் உரையாடல்கள்
தலைப்பு: கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
தேதி: 31 மே 2005
தலைப்பு: இறைவனின் கடைசி இறைத்தூதரின் பெயரை குறிப்பிடும் போது "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று பயன்படுத்துங்கள்?
அன்புள்ள ஐயா,
உங்கள் வாதங்கள் கோர்வையாக உள்ளது ஆனால், அதில் பகுத்தறிவு இல்லை. இறைவனின் கடைசி தூதரின் பெயரை குறிப்பிடும் போது "அவர் மீது சாந்து உண்டாவதாக" என்று நீங்கள் பயன்படுத்தவேண்டும் என்று உங்களுக்கு இஸ்லாமியனாகிய நான் அறிவுரை கூறுகிறேன். இப்படி பயன்படுத்துவது உங்கள் நம்பிக்கைக்கு (வாதங்களுக்கு) இடையூராக இருக்காது என்று நம்புகிறேன்.
மரியாதையுடன் இப்படிக்கு
Xxxxxxxx
எங்கள் பதில்:
உங்களுக்கு எங்கள் வாழ்த்துதல்கள்.
உங்கள் ஈமெயிலுக்காக நன்றி.
எங்களுடைய ஆன்சரிங் இஸ்லாம் கட்டுரைகளில் ஏன் நாங்கள் "அவர் மீது சாந்து உண்டாகட்டும் (PBUH)" என்று பயன்படுத்துவதில்லை என்பதற்கு சில காரணங்கள் உள்ளன.
(குறிப்பு: ஆங்கிலத்தில் "PBUH" என்று கூறினால் "peace be upon him" என்று அர்த்தம். அரபியில் "Salla Allahu Alaihi Wa Sallam (SAW)" என்பார்கள், இதன் பொருள் : "அல்லாஹ்வின் ஜெபங்கள் மற்றும் சாந்தி அவர் மீது இருப்பதாக".)
இவ்விரண்டும் கீழ்கண்ட குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள். (குர்ஆன் 33:56)
"அவர் மீது சாந்தி உண்டாகட்டும்" என்று கூறினாலோ அல்லது "ஸல்" என்று கூறினாலோ, முஹம்மது மீது சாந்தியும் ஜெபங்களும் உண்டாவதாக என்று பொருள். இவ்விரண்டில் எதனை நாம் பயன்படுத்தினாலும், அது ஏற்கனவே மரித்து தன் முடிவு நிர்ணயிக்கப்பட்ட ஒரு மனிதன் மீது ஆசீர்வாதத்தை கொடுக்கும் படி வேண்டிக்கொள்வதாக இருக்கிறது. அதே நேரத்தில் எங்கள் வேதம் கீழ்கண்டவாறு கூறுகிறது:
அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே (எபிரேயர் 9:27)
ஆக, ஒரு மனிதன் மரித்துவிட்டால், அந்த நபர் அல்லது சகோதரி, ஒன்று இறைவனிடமிருந்து பிரிக்கப்பட்டு துன்பம் அனுபவித்துக்கொண்டு இருக்கவேண்டும் அல்லது இறைவனுடைய பிரசன்னத்தின் மகிழ்வினால் நிரம்பி சந்தோஷத்தோடு இருக்கவேண்டும். ஆக, மேற்கண்ட இரண்டு நிலைகளில் ஏதாவது ஒரு நிலையில் இருக்கும் ஒரு நபருக்கு, உலகத்தில் உயிரோடு வாழ்பவர்களின் வேண்டுதல்கள் பாதிக்காது (இதனால் எந்த ஒரு உபயோகமும் இல்லை). ஒரு மனிதர் மரித்துவிட்டபிறகு அவருக்காக வேண்டுதல் செய்வது வீணான செயல் இதனால் உபயோகம் ஒன்றுமில்லை.
இன்னொரு முக்கியமான விவரம் என்னவென்றால், முஹம்மதுவின் பெயரை நாம் கூறும்போது, அதோடு கூட ஆசீர்வாதத்தையும் வேண்டுதல்களையும் நாம் சேர்த்து சொன்னால், "முஹம்மது உண்மையாகவே இறைவனின் தூதர்" என்று நாங்கள் (கிறிஸ்தவர்கள்) அங்கீகரித்தது போல் ஆகிவிடும். ஆக, பைபிளின் தெளிவாக வெளிப்பாடுகளின் படி, நாங்கள் முஹம்மதுவை நம்புவதில்லை, அவர் ஒரு நபி என்று நம்புவதில்லை.
கிறிஸ்தவனாகிய நான் உங்களிடம் வந்து, இனி "ஈஸா (இயேசு)" என்று நீங்கள் பயன்படுத்தும் போதெல்லாம் (கூறும் போதெல்லாம்) "ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்து" என்று கூறுங்கள் என்றுச் சொன்னால் அது சரியாக உங்களுக்கு தென்படுமா? "இயேசுவை ஆண்டவர்" என்று அழைப்பது, அவர் பழைய ஏற்பாட்டின் சர்வ வல்லவரான தேவனை குறிப்பிடுவதாக இருக்கும். (அடோனய் = பழைய ஏற்பாட்டில் ஆண்டவர்).
இப்படி நீங்கள் இயேசு ஆண்டவர் என்று அழைத்தால், அது உங்கள் இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிரானது என்பதை அறிந்தும், நீங்கள் இயேசுவை இப்படி அழைக்கத்தான் வேண்டும் என்று நான் உங்களுக்கு கட்டளையிட்டு நேரத்தை வீணடிக்கமுடியுமா? இருந்த போதிலும் வேதம் தெளிவாக கீழ்கண்டவிதமாக கூறுகிறது:
ரோமர் 10:9
என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
இந்த சந்தர்ப்பத்தில் ஒரு கேள்வியை உங்களிடம் கேட்கட்டும்: இன்று நீங்கள் இயேசுவை பின்பற்றுபவராக மாற விரும்புகிறீர்களா? இன்று நீங்கள் மரித்தால் எங்கு போவீர்கள்? நீங்கள் போகும் இடம் துன்பம் நிறைந்த இடமா? அல்லது இறைவனின் பிரசன்னம் இருக்கும் இடமா? இதில் எதை நீங்கள் தெரிந்தெடுக்கப் போகிறீர்கள்? எல்லா தீர்க்கதரிசிகள் சொன்ன சத்தியமாம் இயேசுக் கிறிஸ்து மீது நம்பிக்கை வைத்து, உங்கள் வாயினால் அவர் தான் இறைவன் என்று நம்புங்கள் என்று உங்களை நான் அழைக்கிறேன். நீங்கள் எடுக்கும் இந்த முடிவிற்காக ஒருபோதும் நீங்கள் மனம் வருந்தமாட்டீர்கள்.
இயேசு தாமாகவே சொன்ன இந்த வார்த்தைகளை கவனித்துப்பாருங்கள்:
யோவான் 5:24
என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
உங்களுக்கு சமாதானம்
லாசரஸ்
முஹம்மதுவின் மீது "சாந்தியை" கூறும் இந்த வார்த்தைகளைக் குறித்து மேலும் அறிய, இந்த தொடுப்பை (http://www.answering-islam.org/Index/P/pbuh.html) சொடுக்கவும்
ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/Emails/pbuh.htm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக