ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

செவ்வாய், 31 அக்டோபர், 2017

முஸ்லிம்களே! இந்த கேள்வியை நீங்கள் எப்போதாவது கேட்டுள்ளீர்களா?

ஒவ்வொரு முஸ்லிமும் விரும்பி கேட்கும் கேள்வி இது தான்:

"இயேசு இறைவன் என்றால், அவர் எங்கு இப்படி சொல்லியுள்ளார் என்று எனக்கு பைபிளிலிருந்து காட்டமுடியுமா?"

ஒரு முறை, நான் மத்தேயு 4ம் அத்தியாயத்தை வாசித்துக்கொண்டு இருந்தேன். அப்போது திடீரென்று எனக்குள் ஒரு கேள்வி தோன்றியது, அதாவது "முஸ்லிம்கள் அனைவரும் இந்த கேள்வியை கேட்கும் படி ஏன் போதிக்கப்பட்டுள்ளார்கள்?" என்பதாகும்.

மத்தேயு நற்செய்தி நூலில், சாத்தான் அடிக்கடி இயேசுவிடம் சவால் விடுவதை காணமுடியும், அதாவது "நீ உண்மையாகவே தேவகுமாரன் என்றால், இதை செய்துக்காட்டு" என்று இயேசுவிடம் சவால் விட்டான்.

முஸ்லிம்கள் "இயேசு இறைவன் என்றுச் சொன்னால். . ." என்ற கேள்வியை கிறிஸ்தவர்களிடம் கேட்கிறார்கள். இதே கேள்வியைத் தான் சாத்தானும் இயேசுக் கிறிஸ்துவிடம் கேட்டான்.

நீங்கள் இந்த கேள்வியை கூர்ந்து கவனித்தால், இப்படிப்பட்ட கேள்வியைக் கேட்பது, ஆதாம் ஏவாள் காலத்திலிருந்தே  சாத்தானுடைய ஒரு யுக்தியாக உள்ளது என்பதை காணமுடியும்.

சாத்தான் அன்று ஏவாளிடம் என்ன கேட்டான் என்று உங்களுக்கு ஞாபகம் இருக்கின்றதா?  அவன் தேவனுடைய வார்த்தையை கீழ்கண்டவாறு சந்தேகம் உண்டாகும் படி கேள்வி கேட்டான்:

ஆதியாகமம் 3:1

. . . அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.

இங்கு சாத்தான் தேவனுக்கு சவால் விட்டான், தேவனுடைய வார்த்தைக்கு சவால் விட்டான்.

இயேசு சிலுவையில் அறைப்பட்ட அந்த நேரத்தில், அங்கு சாத்தான் கூட இருந்தான் என்று உங்களுக்குத் தெரியுமா?

மத்தேயு 27:39-43வரையுள்ள வசனங்களை  வாசித்துப் பாருங்கள். மக்களில் சிலர், பிரதான ஆசாரியர்கள் மற்றும் இதர யூத  தலைவர்கள், இயேசுவை எப்படி கேலி செய்தார்கள், சவால் விட்டார்கள் தெரியுமா? 

"நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கி வாa" என்று கேட்டார்கள்.

ஏதோன் தோட்டத்தில் சவால் விட்ட அதே சாத்தானின் யுக்தி தான், அப்போது இயேசுவின் தெய்வீகத்தைக் குறித்து சவால் விட்டது.

ஏதோன் தோட்டத்தில் சாத்தான் தானாகவே சவால் விட்டான். இயேசுவை சிலுவையில் அறையப்பட்டபோது, அவன் சவால் விட மனிதர்களை பயன்படுத்தினான். அது மட்டுமல்ல, இயேசுவின் தெய்வீகத்தைக் கேள்விகேட்க, யூத மத தலைவர்களையும் பயன்படுத்திக்கொண்டான். இன்று, சாத்தான் 1.5 மில்லியன் ஜனத்தொகைக் கொண்ட முஸ்லிம்களை அதே சவால் விட பயன்படுத்திக்கொண்டு இருக்கிறான். அதாவது, "இயேசு இறைவன் என்றால்,. . . " என்ற கேள்வியை முஸ்லிம்கள் கேட்கும் படி செய்திருக்கிறான்.

முஸ்லிம்களே! தூக்கத்திலிருந்து எழுந்திருங்கள்! உங்கள் கண்களையும் இருதயங்களையும் திறக்கப்பட முயற்சி செய்யுங்கள். சாத்தானின் தந்திரமான வலையில் விழாதீர்கள். நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று அவன் விரும்புகிறானோ, அதனை நீங்கள் அறியாமையில் செய்துக்கொண்டு இருக்கிறீர்கள். உங்களை அவன் அடிமைப் படுத்தி, தன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறான்.

அன்று சாத்தான் கிறிஸ்துவிற்கு சவால் விட்டான், இன்று அவனைப் பின்பற்றும் சிலர் கிறிஸ்துவை பின்பற்றுபவர்களிடம் அதே சவாலை விடுகிறார்கள்.  

ஆங்கில மூலம்: HAVE YOU EVER ASKED THIS QUESTION?

சொர்க்கம் போகும் வழி?

இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்திற்கும் இடையே இருக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இது தான்.

முஸ்லிம்களின் கூற்று: "நான் எல்லா மத சடங்குகளை சரியாக பின்பற்றுவேன், முடிந்த அளவிற்கு எல்லா நல்ல காரியங்களைச் செய்வேன், இதன் மூலமாக நான் சொர்க்கத்தில் அனுமதிக்கப்படலாம்".

கிறிஸ்தவர்களின் கூற்று: "நான் செய்யும் அனைத்து நற்காரியங்களும் என்னை சொர்க்கத்தில் கொண்டுச் சென்று விடுவதற்கு போதுமானதாக இல்லை. தேவன் செய்த காரியம் தான் என்னை சொர்க்கத்திற்குள் செல்ல உதவும்".

எந்த ஒரு மனிதனும் தன்னுடைய சொந்த நற்செயல்களினால் சொர்க்கம் சென்றடையமுடியாது என்று பைபிள் சொல்கிறது. தேவன் மட்டுமே நம்மை இரட்சித்து, நம்மை சொர்க்கத்தில் அனுமதிக்கமுடியும். பரிசுத்தமான தேவனுக்கு முன்பாக மனிதன் செய்யும் நல்ல செயல்கள் அனைத்தும் அழுக்கு படிந்த கந்தை துணிகளாகும். தேவன் தன்னிடம் சேருவதற்கு என்ன வழி என்று காட்டியுள்ளார்.  அவர் காட்டிய வழியை யார் ஏற்றுக்கொள்கிறாரோ, அவருக்கு தேவன் வாக்கு கொடுத்த பரலோகம் உறுதி செய்யப்பட்டு விடுகின்றது.

முஸ்லிம்களே! உங்களுக்கு ஒரு மிகப்பெரிய பிரச்சனை உள்ளது. எத்தனை நற்காரியங்கள் செய்தால், சொர்க்கம் செல்வதற்கு போதுமானதாக இருக்கும் என்ற எண்ணிக்கை உங்களுக்குத் தெரியாது. நீங்கள் இதுவரை செய்துக்கொண்டு வந்துக்கொண்டு இருக்கும் நற்செயல்களை அல்லாஹ் ஏற்றுக்கொண்டானா? இல்லையா? என்று உங்களுக்குத் தெரியாது, அல்லது கடைசி நிமிடத்தில் அல்லாஹ் உங்களை நரகத்தில் தள்ளிவிடவும் வாய்ப்பு இருக்கின்றது. உங்களுக்கு சொர்க்கமா? நரகமா? என்ற நம்பிக்கைக்கு கியாரண்டி கிடையாது.  ஒரு முக்கியமான கேள்வி, நீங்கள் செய்யும் நல்ல காரியங்கள் அனைத்தையும் "சுயமாக நீங்களே விரும்பிச் செய்கிறீர்களா?" அல்லது "சொர்க்கத்திற்கு செல்வதற்கான பயணச் சீட்டு கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் செய்கிறீர்களா?". இதனை நீங்கள் எப்போதாவது சிந்தித்து பார்த்து இருக்கின்றீர்களா?  நீங்கள் செய்யும் நல்ல காரியங்கள் அனைத்தும் "சுயநலத்துடன்" கூடியவைகளாக இருக்கின்றன என்பதை நீங்கள் உணரவில்லையா? சுயநலம் என்பது பாவம் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். விஷயம் இப்படி இருக்க, பரிசுத்தமான, நீதிபதியாகிய நல்ல இறைவன், சுயநலத்துடன் செய்யப்படும் காரியங்களை எப்படி ஏற்றுக்கொள்வான் என்று எதிர்ப்பார்க்கிறீர்கள்?

நான் இந்த நற்காரியங்களைச் செய்தால், அல்லாஹ் எனக்கு சொர்க்கம் கொடுப்பான் என்பது ஒரு சுயலமான நற்காரியமல்லவா? இதனை அல்லாஹ் அங்கீகரிப்பனா?

இறைவன் காட்டிய வழியை கிறிஸ்தவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள், அதனால் அவர்களுக்கு சொர்க்கம் சுதந்திரமாக கொடுக்கப்படுகின்றது. அந்த ஒரே வழியை பின்பற்றும் கிறிஸ்தவர்கள் "நல்ல காரியங்கள்" என்ற லஞ்சத்தை கொடுத்து சொர்க்கத்தை சம்பாதிக்கவேண்டிய அவசியமில்லை.

சொர்க்கத்தின் மக்களாக, உண்மையான கிறிஸ்தவர்கள், நல்ல காரியங்களை சுயநலமில்லாமல் செய்கிறார்கள். இந்த காரியங்கள் செய்தால் தான் சொர்க்கம் என்ற கோட்பாடு இல்லாமல், "நமக்கு சொர்க்கம் ஏற்கனவே வாக்களிக்கப்பட்டு இருப்பதினால், அதற்கு நன்றி செலுத்தும் வண்ணமாக நற்காரியங்களைச் செய்வோம்" என்று கிறிஸ்தவர்கள் கிரியை நடப்பிக்கிறார்கள். மேலும் நம்மை இறைவன் நேசித்தார், நமக்கு சொர்க்கமும் கொடுத்துள்ளார், கடைசியாக, சொர்க்கத்தில் அவரோடு நாம் இருக்கவும் அனுமதித்தார், எனவே ஒரு நன்றியுள்ள மனதோடு அவர் உண்டாக்கிய இதர மக்களுக்கு சுயநலமில்லாமல் உதவி செய்யவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் கிறிஸ்தவர்கள் "நற்கிரியைகள்" செய்கிறார்கள். தேவன் எப்படி உலக மக்களை நேசித்து அவர்களுக்கு நன்மைகள் செய்கிறாரோ, அவருடைய அன்பைப் பெற்ற  கிறிஸ்தவர்களும் அதே போல, உலக மக்களுக்கு நல்லதைச் செய்ய முயலுகின்றார்கள், முடிந்த அளவிற்குச் செய்கிறார்கள்.

இறைவன் காட்டிய அந்த வழி எது?

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14:6)

இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி . . . . நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். (யோவான் 10:9)

நீ ஒரு அடிமையா அல்லது மகனா?

முஸ்லிம்கள் தாங்கள் அல்லாஹ்வின் அடிமைகள் என்று நம்புகிறார்கள்.

இயேசுவை இரட்சகராகவும் தேவனாகவும் ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவர்கள், தாங்கள் தேவனின் பிள்ளைகள் (மகன்கள், மகள்கள்) என்று நம்புகிறார்கள்.

1) இஸ்லாம் - ஒரு அடிமை தன் எஜமானனோடு தனிப்பட்ட உறவு கொண்டு இருக்கமாட்டான்.

கிறிஸ்தவம் - ஒரு மகன் தன் தந்தையுடன் தனிப்பட்ட முறையில் சிறப்பான உறவு கொண்டு இருப்பான்.

அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)

2) இஸ்லாம் - எஜமானன் தன் அடிமையை பயன்படுத்திக் கொள்கிறான் (வேலை வாங்குகிறான்)

கிறிஸ்தவம் - தந்தை தன் மகனை வளர்க்கிறான்

அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார். (யோவான் 8:35)

3) இஸ்லாம் - அடிமை தனக்கு சம்பளம் கிடைக்கும் என்பதற்காக என் எஜமானனுக்கு  வேலை செய்கின்றான்

கிறிஸ்தவம் - ஒரு மகன் தன் தந்தையின் சொத்துக்கள் அனைத்தும் தனக்கே சுதந்தரமாக கிடைக்கும் என்ற நம்பிக்கை மற்றும் வாக்கு  இருப்பதினால், நன்றியுள்ள உள்ளத்தோடு தந்தைக்கு ஊழியம் செய்கின்றான்

4) இஸ்லாம் - அடிமை தேவனுடைய ராஜ்ஜியத்தை (எஜமானனின் இராஜ்ஜியத்தை) சுதந்தரிக்க முடியாது.

கிறிஸ்தவம் - குமாரன் தேவனுடைய இராஜ்ஜியத்தின் குடிமகனாக இருக்கிறான்

நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே;. . .  (ரோமர் 8:17)

5) முஸ்லிம்கள் தங்களை அல்லாஹ்  நரக நெருப்பில் தள்ளக்கூடாது என்ற பயத்தினால் அவனை தொழுதுக் கொள்கிறார்கள்.

கிறிஸ்தவர்கள், தங்களை தேவன் தம்முடைய சமூகத்தில் ஏற்றுக்கொண்டுவிட்டார் என்பதினால், அன்பின் வெளிப்பாடாக அவரை தொழுதுக்கொள்கிறார்கள்.

அந்தப்படி, திரும்பவும்பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். (ரோமர் 8:15)

6) முஸ்லிம்கள் அதிக மதிப்பெண்கள் பெறவேண்டும், அதன் மூலம் நரகத்திலிருந்து தப்பவேண்டும் என்பதறகாக அதிகதிகமாக 'தொழுகிறார்கள், மற்றும் குர்-ஆனை ஓதுகிறார்கள்'.

கிறிஸ்தவர்கள், தேவனோடு தங்களுக்கு  இருக்கும் உறவை இன்னும் பலப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காக, அதிகமாக ஜெபிக்கிறார்கள், மற்றும் அதிகமாக பைபிள் வாசிக்கிறார்கள்.

7) முஸ்லிம்கள், ரமளானில் நோன்பு இருக்கிறார்கள் ஏனென்றால், அது கட்டாயக் கடமை என்பதால்.

கிறிஸ்தவர்கள், அதிக நேரத்தை தேவனோடு செலவிடவேண்டும் என்பதற்காக உபவாசம் இருந்து ஜெபம் செய்து, தேவனோடு நெருங்குகிறார்கள், இது கட்டாயத்தின் பெயரில் எடுத்த முடிவு அல்ல, சுயவிருப்பத்தின் படி எடுத்த முடிவு ஆகும்.

8) முஸ்லிம்கள் தங்கள் தீய காரியங்களின் எண்ணிக்கையை விட, நல்ல காரியங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கவேண்டும் என்பதற்காக நற்காரியங்களைச் செய்கிறார்கள்.

கிறிஸ்தவர்கள் தங்கள் நற்காரியங்கள் மூலமாக தேவனுடைய பெயர் மகிமைப்படுத்தப்படவேண்டும் என்பதற்காக நற்காரியங்களைச் செய்கிறார்கள்.

இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. (மத்தேயு 5:16)

9) அல்லாஹ் தங்களை நிச்சயம் ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கை முஸ்லிம்களுக்கு கிடையாது.

பிதாவாகிய தேவன் இயேசுக் கிறிஸ்து மூலமாக தங்களை ஏற்றுக்கொண்டார் என்ற நம்பிக்கை கிறிஸ்தவர்களுக்கு உண்டு.

13. இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.

14. [குமாரனாகிய] அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. (கொலோசெயர் 1:13-14)

  • பரலோகத்திற்கு செல்லும் வழியை நீங்கள் விலை கொடுத்து வாங்க முடியாது.
  • பரலோகத்திற்கு செல்லும் வழியை நீங்கள் லஞ்சம் கொடுத்து வாங்க முடியாது.
  • பரலோகத்திற்கு செல்லும் வழியை நீங்கள் நற்காரியங்கள் செய்து சம்பாதிக்க முடியாது.
  • பரலோகத்திற்கு செல்லும் வழியை நீங்கள் சுயமாக சம்பாதிக்கமுடியாது.
  • பரலோகத்திற்கு செல்லும் வழியை நீங்கள் பொய் சொல்லி சம்பாதிக்கமுடியாது.
  • பரலோகத்திற்கு செல்லும் வழியை நீங்கள் பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளமுடியாது.
  • ஏனென்றால், அதற்கான விலையை உங்களுக்கு பதிலாக ஏற்கனவே செலுத்தியாகிவிட்டது.

 

 

எனக்கு அந்த விலை செலுத்தப்பட்டுள்ளது என்ற உண்மையை நீங்கள் ஏற்கலாம், அல்லது மறுக்கலாம். ஆனால், உங்களின் இந்த தீர்மானத்தின் மேல் தான் உங்கள் நித்தியம் நிர்ணயிக்கப்படுகின்றது. 

கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;

ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல; (எபேசியர் 2:8-9)

இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;

சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். (யோவான் 8:31,32)

ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள், (யோவான் 8:36)

ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய். (கலாத்தியர் 4:7)

ஆங்கில மூலம்: ARE YOU A SLAVE OR A SON? 

புதன், 18 அக்டோபர், 2017

ஒரு தாரமணம் (ஒற்றை மணவாழ்க்கை) என்பது ஆபத்தானதா?

ஈமெயில் உரையாடல்கள்

தலைப்பு: ஒரு தாரமணம் (ஒற்றை மணவாழ்க்கை)  என்பது ஆபத்தானதா?

தேதி: 23 ஏப்ரில் 2005

பொருள்: எயிட்ஸ்

ஹலோ,

நீங்கள் சுகமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். நான் ஒரு முஸ்லிம் ( சர்வ வல்லனாகிய  அல்லாஹ்விற்கு ஒப்புக்கொடுத்தவன்). . .

உங்கள் தளத்தில் நீங்கள் "மனித இனத்திற்கு இறைவனின் திட்டம் ஒரு தாரமணம் ஆகும் என்றும், இறைவனின் இந்த திட்டத்தை விட்டு நாம் விலகினால், நாம் துன்பத்துக்கு ஆளாகவேண்டிவரும் என்று எழுதியிருந்தீர்கள்".

நான் உங்களுக்கு இப்போது இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை விளக்குகிறேன். விபச்சாரம் மற்றும் சட்டவிரோதமான செக்ஸை இஸ்லாம் தடைசெய்கிறது. ஒரு ஆண் தனக்கு சட்டத்தின் படி திருமணமான பெண்களோடு மட்டுமே உடலுறவு வைத்துக்கொள்ளவேண்டும் என்று இஸ்லாம் வரையறுக்கிறது. திருமணத்திற்கு வெளியே உடலுறவு வைத்துக்கொள்வதை இஸ்லாம் தடைசெய்கிறது மற்றும் இது மிகப்பெரிய பாவமாக இஸ்லாம் கருதுகிறது. முஸ்லிம்களாகிய நாங்கள் இந்த தெய்வீக இஸ்லாமிய சட்டத்தை மிகவும் தீவிரமாக பின்பற்றுகிறோம். ஒரு உண்மையான முஸ்லிம் இஸ்லாம் தடை செய்தவற்றைச் செய்வதில்லை, அனுமதிக்கப்படாதவர்களோடு (சட்டவிரோதமான) உடலுறவு கொள்வதில்லை. இதன் விளைவாக, முஸ்லிம்களுக்கு எயிட்ஸ் போன்ற ஆபத்தான வியாதிகள் வருவதில்லை. ஒரு மனிதன் தவறான முறையில் உடலுறவு கொள்ளக்கூடாது என்பதற்காக, இஸ்லாம் அவனுக்கு திருமணத்தை சட்டமாக விதித்துள்ளது. இந்த தெய்வீக சட்டத்தை பின்பற்றும் முஸ்லிம்கள் எயிட்ஸ் போன்ற உயிர் வாங்கும் நோய்களிலிருந்து காக்கப்படுகிறார்கள்.

ஒரு தாரமணம் என்று சொல்லிக்கொண்டு, மக்கள் பல சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஒருதாரமணம் என்பது விபச்சாரத்தாலும், ஏமாற்றுத்தனத்தாலும், தரங்குறைவான வாழ்வாலும் நிரம்பியுள்ளது. உண்மை என்னவென்றால், ஒருதாரமணம் என்பது, மனிதனை பல பெண்களோடு உல்லாசமாக தவறான உடலுறவுகள் வைத்துக்கொள்ளவும், அவன் பொறுப்பற்றவனாகவும் இருக்க ஊக்குவிக்கிறது. ஒருதாரமணம் என்ற கோட்பாடானது, தீய ஆண்களை பாதுகாக்கும் ஒரு கவசமாக உள்ளது, ஆனால் கடைசியில் ஆண்களின் தீய ஆசைகளுக்கு உட்பட்டு பாதிக்கப்படுவது பெண்கள் தான்.

பலதாரமணம் என்பது ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த சமுதாயத்தில் அதிகமாக எதிர்க்கப்படுகின்ற ஒன்றாகும். ஏனென்றால், பல பெண்களை திருமணம் செய்துக்கொள்ளும் ஆண்களுக்கு பொறுப்புக்கள் அதிகரிக்கின்றன மற்றும் அவர்கள் தங்களின் பல மனைவிகளுக்கு நம்பிக்கையாளர்களாக இருக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அதாவது, பல மனைவிகளைக் கொண்ட ஆண்கள், அப்பெண்களுக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும் பொறுப்பாளிகளாகவும், பாதுகாவலர்களாகவும் மாறுகிறார்கள், இதனால் அவர்களுக்கு பொறுப்புக்கள் அதிகரிக்கின்றன.

தற்போது நாம் காணும் மேற்கத்திய சமுதாயத்தைப் பாருங்கள். இந்த சமுதாயங்களில் மக்கள் அதிகமாக திருமணமில்லாத உடலுறவுகளில் ஈடுபடுகிறார்கள், இதனால், பல "தகப்பான் பெயர் தெரியாத பிள்ளைகள்" பிறக்கிறார்கள், இளம்வயதிலேயே தகாதவகையில் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளும் பெண்கள் உருவாகிறார்கள். கடைசியாக, இவைகள் அனைத்தும் நாட்டின் வளர்ச்சிக்கும் தடையாக மாறுகிறது.

உலக சரித்திரத்தில் இதுவரை இருந்த பலதாரமண சமுதாயங்களில், ஒரு சமுதாயமும் பலதாரமணம் என்றால் இத்தனை திருமணங்கள் தான் செய்யவேண்டும் என்று கட்டுப்பாடு விதித்ததில்லை. இவ்விதமான சமுதாயங்களில் ஒருவர் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்துக் கொள்ளலாம். ஆனால், இஸ்லாம் மட்டுமே ஒருவர் எத்தனை (4) பெண்களை திருமணம் செய்துக்கொள்ளலாம் என்ற  கட்டுப்பாட்டை விதித்து, மேலும் அப்பெண்களை பராமரிக்கும் பொறுப்பையும் ஆண்கள் மீது சுமத்தியுள்ளது.

குர்-ஆன் 4:3

4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.

குர்-ஆனின் இந்த வசனம், ஆண்கள் ஒன்றுக்கு மேலான பெண்களை திருமணம் செய்ய அனுமதி அளித்துள்ளது மற்றும் இவர்களிடையே நீங்கள் நியாயமாக நடந்துக்கொள்ள முடிந்தால் மட்டுமே பல திருமணங்களை செய்துக்கொள்ளுங்கள் என்று நிபந்தனையும் விதிக்கிறது.

நேரம் ஒதுக்கி, என்னுடைய மெயிலை படித்ததற்காக என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


எங்களுடைய பதில்:

ஹலோ சகோதரரே ______,

நீங்கள் ஒருதாரமணத்தை சரியாக புரிந்துக்கொண்டுள்ளீர்கள் என்று நான் நினைக்கவில்லை. ஒரு விஷயத்தை மட்டும் உங்களோடு சேர்ந்து நானும் ஒப்புக்கொள்கிறேன். அதாவது மேற்கத்திய கலாச்சாரம் இந்த ஒருதாரமணத்தை கறைபடுத்தியுள்ளது என்பது மட்டும் உண்மையே. "ஒருதாரமணம் என்பது விபச்சாரத்தால் நிரம்பியுள்ளது"  என்று நீங்கள் எழுதியுள்ளீர்கள், இங்கு சரியான புரிதல் என்னவென்றால்

" ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு வாழும் ஒருவன், திடீரென்று இன்னொரு பெண்ணோடு விபச்சாரம் செய்தால், அதை எப்படி ஒருதாரமணம் என்று அழைக்கமுடியும்? அதை பலதாரமணம் என்று தான் அழைக்கவேண்டும். மோனோகமி (monogamy) என்ற வார்த்தையில் "mono" என்றால் "ஒன்று என்று அர்த்தம், இதற்கு வேறு அர்த்தமில்லை".

ஆகையால், ஒருதாரமணம் கொண்டவன், பல பெண்களோடு உல்லாசமாக வாழுகின்றான் என்றுச் சொல்வது, முரண்பட்ட கூற்றாகும். ஒரு ஆண் இரண்டாவது பெண்ணை தொட்டபொழுது அவன் பலதாரமணம் புரிபவனாகின்றான், ஒரு தாரமணத்தை அவமதித்தவனாகின்றான். ஏதாவது ஒன்று தான் இருக்கமுடியும், ஒரு ஆண் ஒருதாரமணமுள்ளவனாக இருக்கவேண்டும், அல்லது பலதாரமணம் புரிந்தவனாக இருக்கவேண்டும், ஒரே நேரத்தில் ஒருதாரமணமுள்ளவனாகவும், பலதாரமுள்ளவனாகவும் இருக்கமுடியாது. ஒன்றைச் செய்யும் போது மற்றொன்றை அவன் இழக்கிறான்.

பலதாரமணம் பெண்களுக்கு எதிரானது:

உங்கள் நம்பிக்கைக்கு எதிராக உள்ள உண்மை என்னவென்றால், ஒருதாரமணம் தான் பெண்களை பாதுகாக்கிறது, பலதாரமணம் அல்ல. ஒருதாரமணம் புரிந்த குடும்பத்தில் வாழும் பெண், தன் கணவனின் அன்பிற்காக தன் சக்களத்தியோடு (இன்னொரு மனைவியோடு) போட்டியிட வேண்டிய அவசியம் இருக்காது. மேலும், தன்னுடைய பிள்ளைகளின் நலன், இன்னொரு மனைவிற்கு பிறந்த பிள்ளைகளினால் கெடும் என்ற பயம் அப்பெண்ணுக்கு இருக்காது. தன் புருஷன் தனக்கு மட்டும் தான் என்ற நம்பிக்கையும், அதே நேரத்தில் தன் பிள்ளைகளுக்கு தகப்பனின் அன்பு முழுவதுமாக கிடைக்கும் என்பதில் அவளுக்கு முழு திருப்தி இருக்கும். 

உதாரணத்திற்கு, ஆபிரகாம் மற்றும் யாக்கோபு என்பவர்களின் வாழ்க்கையை கவனித்துப் பாருங்கள். ஆபிரகாமின் வாழ்வில் இருந்த இரு பெண்களாகிய சாராள் மற்றும் ஆகாருக்கு இடையே இறுக்கம் வளர்ந்து, மனக்கசப்பாக வெடித்தது. அதே போல இஸ்மாயீல் மற்றும் ஈசாக்குக்கு இடையேயும் பிரச்சனையும் சண்டைகளும் போட்டிகளும் இருந்தன. (ஆதியாகமம் புத்தகத்தை படிக்கவும்). மேலும், யாக்கோபு என்பவருக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள், ஆனால் அவர் ஒருவரை விட இன்னொருவரை அதிகமாக நேசித்தார். இதனால் தான் மற்ற மனைவிகளுக்கு பிறந்த பிள்ளைகள் யோசேப்பு என்றவரை கொன்றுபோடுவதற்கு பல யுக்திகளை செய்தார்கள். ஒரு மனைவிக்கு பிறந்து, சகோதரன் நிலையில் இருக்கும் யோசேப்பை, மற்ற மனைவிகளுக்கு பிறந்தவர்கள் கொல்ல முயன்றனர். இந்த யோசேப்பு என்பவன் தன் தந்தைக்கு பிடித்தமான மகனாகவும் இருந்தான். இவர்கள் அனைவரும் சேர்ந்து யோசேப்பை ஒரு அடிமையாக விற்றுப்போட்டார்கள். ஆனால், தேவன் இடைப்பட்டு, இந்த கொடூரமான செயலை இஸ்ரவேல் மக்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக மாற்றிவிட்டார் என்பது வேறு விஷயம். ஆனால், இப்படி சகோதர்ரகள் ஒருவரை ஒருவர் கொன்றுவிடும் நிலைக்கு காரணம் யாக்கோபின் பலதாரமணம் என்றுச் சொன்னால் அது மிகையில்லை.

இப்போது மோசே மூலமாக இறைவன் என்ன சொல்லியுள்ளார் என்பதை கவனிப்போம். 

ஆதியாகமம் 2:24

24. இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இயேசுவும்  இதையே கூறினார் (பார்க்க மத்தேயு 19:5 மற்றும் மாற்கு 10:7,8). நீங்கள் இங்கு கூர்ந்து கவனிக்கவேண்டும், இறைவன் ஒரு ஆணையும் ஒரு பெண்ணை மட்டுமே படைத்தார். ஒருவனுக்கு ஒருத்தி என்பது தான் இறைவனின் திட்டமும் நோக்கமும் என்பது இதன் மூலம் விளங்கும். ஆனால், மனிதனுக்கு வேறு ஆசைகளும், திட்டங்களும் இருந்தன. எரேமியா தீர்க்கதரிசி மூலமாக இறைவன் இப்படி கூறினார்:

எரேமியா 17:9

9. எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?

இறைவனின் திட்டத்திற்கு எதிராக ஓடும்படி மனிதன் தன் இதயத்திற்கு இடம் கொடுத்துவிட்டு, வழிவிலகி சென்றுவிட்டான்.

உங்களுக்கு விருப்பமான அனைத்து சட்டங்களையும் நீங்கள் மனிதன் மீது சுமத்தினாலும், அம்மனிதனின் இதயத்தை இறைவனுக்கு ஏற்றபடி மாற்றம் அடையச் செய்ய உங்களால் முடியாது. தீர்க்கதரிசி எரேமியா மூலமாக இறைவன் என்ன சொல்லியுள்ளார் என்பதை கவனிக்கவும். 

எரேமியா 31:33

33. அந்நாட்களுக்குப் பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

மனிதனுக்கு வெளியில் இருந்துக்கொண்டு அவனது உள்ளத்தை உங்களால் மாற்றமுடியாது. இறைவனால் மட்டுமே மனிதனின் இதயத்தை மாற்றமுடியும், அதுவும் அவர் அவனது உள்ளத்தில் இருந்துக்கொண்டு அதைச் செய்வார். ஆபிரகாமை ஒருமுறை கவனித்துப் பார்க்கவும்: 

ஆதியாகமம் 15:6 - 

அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.

நாம் நீதிமான்கள் ஆக்கப்படவேண்டுமென்றால், இறைவனின் மீதும் அவரது நற்செய்தி மீதும்  நாம் நம்பிக்கை வைக்கவேண்டும். மனிதனின் சட்டங்களை நாம் பின்பற்ற முயன்றால் நாம் நல்லவர்கள் போல நடிக்க முடியும் அவ்வளவு தான், ஆனால் அது நம்மை தேவனுக்கு முனபாக நீதிமான்களாக ஆக்காது. "தேவனுக்கு முன்பாக மனுஷன் நீதிமானாயிருப்பதெப்படி?"  (யோபு 9:2).

உங்கள் கடிதத்திற்காக நன்றி

இப்படிக்கு, உங்கள் சகோதரன்

தரியோ

இதர தொடுப்புக்கள்: http://www.injil.org/TWOR & http://goodseed.com/theprophetsenglish.aspx

ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/Emails/monogamy.htm 

பலதாரமணம் - குர்-ஆனிலும் பைபிளிலும்

ஈமெயில் உரையாடல்கள்

தேதி: 7 அக்டோபர் 2004

பொருள்:  பலதாரமணம் கட்டுரைப் பற்றியது

அஸ்ஸலாமு அலைக்கும்:

உங்களது தளத்திற்காக நன்றி. எப்போதெல்லாம் கிறிஸ்தவர்கள் இஸ்லாமுக்கு பதில் அளிக்கிறார்களோ, அப்போதெல்லாம் ஒரு முஸ்லிமாக, நான் இஸ்லாமை மெச்சிக்கொள்கிறேன். ஏனென்றால், இப்படிப்பட்ட கேள்வி பதில்கள் மற்றும் உரையாடல்கள் நம்மை ஆய்வு செய்வதற்கு காரணமாக இருக்கின்றன. இந்த ஆய்வுகள் நம்மை உண்மையான இஸ்லாமிடம் கொண்டுச் செல்லும், அதே நேரத்தில் கிறிஸ்தவத்தின் பொய் முகத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிடும்.

இப்போது உங்கள் பலதாரமணம் தொடுப்பு மற்றும் கட்டுரைப் பற்றி பார்ப்போம். பல நாடுகளில் ஆண்களின் ஜனத்தொகை பெண்களின் ஜனத்தொகை எண்ணிக்கையை விட அதிகமாக இருப்பதில்லை என்று நீங்கள் சொல்லியுள்ளீர்கள். மற்றும் CIA என்ற ஸ்தாபனத்தின் கணக்கெடுப்பு மேற்கோளையும் காட்டியுள்ளீர்கள். இதே CIA ஸ்தாபனம் தான் ஈராக்கில் அதிபயங்கர ஆயுதங்கள் உள்ளன என்றுச் சொன்னது என்று நான் நினைக்கிறேன்.

சென்சஸ் பீரோ தளத்தை நோட்டமிட்டால், நீங்கள் மேற்கோள் காட்டிய  சிஐஎ ஸ்தாபனம் சொன்ன கணக்கெடுப்புக்கு எதிரான கணக்கெடுப்பு அங்கு காணமுடியும். அதாவது, அமெரிக்காவிலே ஆண்களை விட பெண்கள் அதிகமாக மாறும் வயது வரம்பு 35 லிருந்து 39 ஆண்டுகள் வரை உள்ளது.

நீங்கள் தவறான தகவல்களைச் சொல்கிறீர்கள். மேலும் குர்-ஆன் சொல்லும் ஒரு முக்கியமான விவரத்தை பார்க்க தவறுகிறீர்கள், அதாவது "நீங்கள் ஒருவரையே திருமணம் செய்துக்கொள்ளுங்கள்" என்று குர்-ஆன் சொல்கிறது. பலதாரமணம் என்பது "அனாதைகளிடம் எப்படி நடந்துக்கொள்ளவேண்டும்" என்ற விவரம் பற்றி பேசும் போது தான் குர்-ஆன் குறிப்பிடுகின்றது. ஆக, ஒரு பெண் தன் வயதுக்கு ஏற்ற ஒருவனை திருமணம் செய்யும் அளவிற்கு அதே எண்ணிக்கையில் ஆண்கள் இருப்பார்களானால், பலதார மணத்திற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.

மேலும், நாங்கள் பலதாரமணம் பற்றி பரிந்து பேசவேண்டிய அவசியம் இல்லை, ஏனென்றால், உங்கள் பைபிளில் வரும் அனைத்து தீர்க்கதரிசிகளும் ஒரு மனைவிக்கு மேலாக திருமணம் செய்தவர்கள் தான். ஒரு எடுத்துக்காட்டுக்கு இவர்களைப் பாருங்கள்: ஆபிரகாம், மோசே, தாவீது மற்றும் சாலொமோன். கிறிஸ்தவ நாடுகள் என்றுச் சொல்லக்கூடிய மேற்கத்திய நாடுகளில், திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள் அதிகமாக உள்ளார்கள். மேலும் கிறிஸ்தவ நாடுகளில் தான் அதிகமாக விபச்சாரமும் இதர கேவலமான செயல்களும் அதிகமாக நடப்பதை காணமுடியும்.

ஆக, பலதாரமணம்  என்பது ஒரு தீயச்செயல் என்று நீங்கள் சொல்வதாக இருந்தால், உங்கள் இறைவனின் தீர்க்கதரிசிகளும் அதனை செய்தவர்கள் ஆகிறார்கள். ஆனால், "தேவன் திடீரென்று தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு, சட்டத்தை மாற்றிவிட்டார்" என்று நீங்கள் சொன்னால், இது இன்னொரு பொய்யாகும்.

இன்னும் நான் உங்கள் தளத்தின் கட்டுரைகளை அதிகமாக படிப்பேன். அதற்குள்ளாக, சிஐஎ கொடுத்த கணக்கெடுப்பு, சென்சஸ் பீரோ கொடுத்த கணக்கெடுப்பிற்கு முரண்படுகின்றது என்று நான் சொன்ன விவரத்தை ஆய்வு செய்யவும். அதாவது பெண்கள் தங்கள் 35 வயதில் தான் ஆண்களை விட அதிகமாக இருக்கிறார்கள் என்ற கணக்கெடுப்பைப் பார்க்கவும். அமெரிக்கவில் சிஐஎ கணக்கும், சென்சஸ் பீரோ கணக்கும் இந்த ஒரு விஷயத்தில் முரண்படுவதைக் காணுங்கள்.


எங்களுடைய பதில்:

உங்களுக்கு எங்கள் அன்பான வாழ்த்துதல்கள்.

இஸ்லாமும் கிறிஸ்தவமும் வித்தியாசப்படும் ஒரு முக்கியமான தலைப்பு பற்றி எழுத நீங்கள் நேரத்தை ஒதுக்கியதற்காக உங்களுக்கு நன்றி செலுத்துகிறோம். நீங்கள் ஒரு முதிர்ச்சி அடைந்த இஸ்லாமியர் என்பதில் சந்தேகமில்லை. மேலும் மனித இனம் சந்திக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் கேள்விகளுக்கும் இஸ்லாமிடம் பதில் உள்ளது என்று நீங்கள் நம்புகிறீர்கள் என்று தெரிகிறது. இது மட்டுமல்லாமல், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமுக்கு இடையே அடிப்படை வித்தியாசங்கள் இருப்பதை நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள்.

உங்கள் கேள்விகள் அனைத்துக்கும் பதில் சொல்வதற்கு நான் இன்னும் அதிகமாக ஆய்வு செய்யவேண்டியுள்ளது. இருந்த போதிலும், இஸ்லாமை நன்கு கற்றுத்தேர்ந்துள்ள சிலரிடம் நான் இதைப் பற்றி ஆலோசனை பெற்றுள்ளேன். அவர்கள் இஸ்லாமிய சட்டத்தின் (Islamic jurisprudence (Fiqh) viewpoint) அடிப்படையில் முன்வைக்கும் விவாத கேள்விகள், நீங்கள் முன்வைத்த கேள்விகளைக் காட்டிலும் வலுவானதாக  உள்ளது. இதன் அடிப்படையில் பார்க்கும் போது, நம் விவாதத்திற்கு குர்-ஆன் 4:3ம் வசனம் மையப்புள்ளி வசனமாக உள்ளது.

குர்-ஆன் 4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும். (முஹம்மது ஜான் தமிழாக்கம்).  

பலதாரமணத்தை மேற்கண்ட தெய்வீக வசனத்தின் மூலமாக அல்லாஹ் அனுமதித்ததற்கு காரணம், "சமுதாய நீதிக்காகத் தான்" என்று இஸ்லாமிய அறிஞர்கள் ஏகமனதுடன் சொல்கிறார்கள். அதாவது ஒரு சமுதாயத்தில் வாழும் "ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு பாதுகாவலன்" தேவை என்ற நல்ல நோக்கத்திற்காகத் தான் பலதாரமணம் அதிமதிக்கப்பட்டுள்ளது என்று சொல்கிறார்கள். ஒரு பெண்ணுடைய கணவன் மரித்துவிட்டால், அவளது பிள்ளைகள் அனாதைகள் ஆகிவிடுவார்கள். இந்த நேரத்தில் வேறு ஒரு ஆண் அப்பெண்ணை (விதவையை) திருமணம் செய்துக்கொண்டால், தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் சமுதாயத்தில் ஒரு பாதுகாப்பு கிடைக்கும். இதனால் தான் அல்லாஹ் பலதாரமணத்தை அனுமதித்தார் என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகின்றார்கள். 

மேலும், இஸ்லாமின் ஒரு முக்கியமான அம்சம், "முஹம்மதுவின் சுன்னா" என்று சொல்லக்கூடிய ஹதீஸ்களை பின்பற்றுவதாகும் (முஹம்மதுவின் சொல்லும் செயலும் அடங்கிய நூல்கள்  ஹதீஸ்கள் எனப்படுகின்றன). முஹம்மது நான்கிற்கும் அதிகமான திருமணங்களை புரிந்துள்ளார் என்றும், பெரும்பான்மையான அவரது திருமணங்கள், ஆட்சி அரசியல் காரணங்களுக்காக செய்யப்பட்டது என்றும் முஸ்லிம்களால் சொல்லப்படுகின்றது. இஸ்லாமில் திருமணம் என்பது எவ்வளவு முக்கியமானது என்றால், "ஒருவர் சன்னியாசியாக வாழ்வதை" முஹம்மது  தடுத்துள்ளார் என்பதிலிருந்து அறியலாம் (இஸ்லாமில் சன்னியாச மடங்களை கட்டாதீர்கள் என்பது அவரது கட்டளை, இது ஹதீஸ்களில் உள்ளது). தான் கொண்டுவந்த மார்க்கத்தை பின்பற்றுபவர்களைப் பார்த்து, முஹம்மது திருமணம் செய்துக்கொள்ளுங்கள், ஏனென்றால், இஸ்லாம்  மதமானது திருமணமத்தின் (திருமணத்தை அனுமதிக்கும்) மதமாக உள்ளது (அரபியில்: Al-Islaam deen-u-nnikaah) என்று கூறியுள்ளார்.

திருமணங்கள் செய்யப்பட்ட மனைவிகளுக்கு இடையே பாகுபாடு காட்டக்கூடாது என்றும் சொல்கிறார்கள், ஆனால் நடைமுறையில் பார்க்கும்  போது, தங்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய உரிமைகளை கொடுங்கள் என்று மனைவிகள் சண்டைகள் போட்டுக்கொள்வதை காணமுடியும்.  ஏனென்றால், ஏதாவது ஒரு மனைவிக்கு இதர மனைவிகளைக் காட்டிலும் அதிகமான உரிமையும், சலுகையையும் கணவன் கொடுத்திருப்பதினால், அவர்களிடையே சண்டைகள் உண்டாகின்றன. இப்படி ஏன் நடக்கிறது? இப்படி  நடக்க வாய்ப்பு உள்ளதா? என்று கேள்வி கேட்டால், ஆம் வாய்ப்பு உள்ளது என்பது தான் பதில். அதாவது ஒரு மனைவிக்கு வயது 50 இருக்கும், இன்னொரு மனைவிக்கு வயது 20 இருக்கும் அல்லது 20க்குள்ளாகவும் இருக்கும். இதனால், கணவன் பொதுவாக இளமையாக இருக்கும், அதாவது 16-18 வயது இருக்கும் மனைவியைச் சார்ந்து தான் இருப்பான், 50வயது மனைவியிடம் அதிக நேரம் செலவழிக்க பொரும்பான்மையாக விரும்பமாட்டான், இதனை ஒப்புக்கொள்கிறீர்களா நீங்கள்?  இஸ்லாமிய பெண்களுக்கு ஒரு நற்செய்தி என்னவென்றால், பெரும்பான்மையான முஸ்லிம் நாடுகளில் இன்று பலதாரமணம் அதிகமாக செய்யப்படுவதில்லை என்பதாகும். இதை விடுத்து, எந்த குடும்பங்களில் பலதாரமணம் உள்ளதோ, அக்குடும்பங்களில் சண்டை சச்சரவுகள் நிச்சயமாக இருக்கும்.

எனக்கு தெரிந்த பல முஸ்லிம்களிடம் நான் உரையாடும் போது, அவர்கள் கூறுவது இது தான் "பலதாரமணம் என்பது புத்தகங்களில் உள்ளது, அது குறைந்துக்கொண்டே வருகிறது, இது கடந்த கால பழக்கவழக்கமாக தற்கால மக்களால் பார்க்கப்படுகின்றது" என்பதாகும். எனக்கு மெயில் மூலமாக கேள்விகள் கேட்ட சகோதரரிடம் ஒரு சிறிய தனிப்பட்ட கேள்வி: உங்களுக்கு ஒன்றைவிட அதிகமான மனைவிகள் உள்ளார்களா? அல்லது எதிர்காலத்தில் பலதாரமணத்தில் ஈடுபடும் விருப்பம் உள்ளதா?

அடுத்ததாக, பைபிளில் வரும் நபிகளின் பலதாரமணம் பற்றி நீங்கள் எழுதிய விமர்சனத்திற்கு என் பதிலைத் தருகிறேன். உண்மையாகவே, பழைய ஏற்பாட்டு காலத்தின் நபிகளில் சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளை பெற்று இருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. மேலும், மோசேயின் மூலமாக கொடுக்கப்பட்ட சட்டத்திலும் பலதாரமணம் தடுக்கப்படவில்லை என்பதும் உண்மையே. மேலும், ஒட்டு மொத்த நபிமார்களை கவனித்தால், சிறும்பான்மையானவர்கள் மட்டுமே பலதாரமணத்தை புரிந்திருந்தார்கள், மற்றவர்கள் அனைவரும் ஒரே மனைவியுடன் தான் வாழ்ந்துள்ளார்கள் என்பது விளங்கும்.

அடுத்ததாக, உங்களின் ஆபிரகாம் மற்றும் மோசே பற்றிய விமர்சனத்திற்கு வருவோம். இவ்விருவரும் பலதாரமணம் புரிந்துள்ளார்கள் என்று நீங்கள் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். பைபிளில் எந்த வசனத்தில், இவ்விருவர் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மனைவிகளை திருமணம் செய்திருந்தார்கள் என்றுச் சொல்கிறது? உங்களால் வசன ஆதாரத்தைக் காட்டமுடியுமா? 

முதலாவதாக, ஆபிராகாமின் வாழ்வில், அவருக்கு ஒரே ஒரு மனைவி மட்டுமே இருந்தார், அது சாராள் ஆவார். இதே சாராள் தன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரோடு உடலுறவு கொண்டு நமக்கு அதன் மூலம் பிள்ளை பிறக்கட்டும் என்று ஆபிரகாமிடம் சொன்னார் என்பது உண்மை தான். ஆனால், ஆகார் ஆபிரகாமின் மனைவியாக எங்கும் குறிப்பிடப்படவில்லை.

இரண்டாவதாக, கேதுராள் என்ற பெண்ணை ஆபிரகாம் திருமணம் செய்துக்கொண்டது, சாராள் மரித்துவிட்டப்பிறகு தான். விஷயம் இப்படி இருக்க, எல்லா தீர்க்கதிரிசிகளும் பலதாரமணம் புரிந்தவர்கள் என்று நீங்கள் எப்படி சொல்கிறீர்கள்? (ஒருமனைவி உயிரோடு இருக்கும் பொது, இன்னொரு பெண்ணை திருமணம் செய்வது தான் பலதாரமணமாகும், மனைவி இறந்த பிறகு திருமணம் செய்வது பலதாரமணம் ஆகாது).

நீங்கள் பைபிளின் வசனங்களை படிக்கும் படி வேண்டிக்கொள்கிறேன். எந்தெந்த தீர்க்கதரிசிகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் இருந்தார்கள் என்ற ஒரு பட்டியலை பைபிளைப் படித்து, தயார் செய்யுங்கள். ஒரு மனைவியுடைய தீர்க்கதரிசிகளின் பெயர்களை உங்களுக்கு பயன்படும் என்று நான் இங்கு தருகிறேன்: ஆதாம், ஏனோக்கு, நோவா, யோசேப்பு, சாமுவேல், ஏசாயா, எரேமியா, ஆமோஸ், எலியா, யோனா, ஓசியா, சகரியா போன்றவர்களைச் சொல்லலாம். தாவிதுக்கும், சாலொமோனுக்கும் பல மனைவிகள் இருந்ததாக, குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் இந்த திருமணங்கள் பெரும்பான்மையாக அவர்கள் அரசர்களாக இருந்தபடியினால் செய்தார்கள் என்றுச் சொல்லலாமே தவிர, அவர்கள் தீர்க்கதரிசிகளாக இருந்ததால் தான் பல மனைவிகளை திருமணம் செய்து இருந்தார்கள் என்று சொல்லமுடியாது. இதுதவிர இஸ்ரேலை ஆண்ட இதர ராஜாக்களுக்கு கூட பல மனைவிகள் இருந்தார்கள், ஆனால் அவர்கள் தீர்ககதரிசிகளாக இருந்தவர்கள் அல்ல. ஒரு முக்கியமான விவரம் என்னவென்றால், முதன்முதலாக பலதாரமணம் செய்த ஒரு நபரைப்  பற்றி பைபிள் சொல்லும் போது, அதோடு கூட அவன் ஒரு கொலையும் செய்திருக்கிறான் என்றும் சொல்கிறது (ஆதியாகமம் 4:19-24).

மேலும் பைபிளை படிக்கும் ஒவ்வொருவரும் கவனிக்கும் ஒரு முக்கியமான விவரம், திருமணம் பற்றி இயேசு கூறிய விவரமாகும். அதாவது உலகம் படைக்கப்பட்ட காலத்திலிருந்தே  திருமணம் பற்றி தேவனின் திட்டம் "ஒருவனுக்கு ஒருத்தி" என்பதாகும், இதனை இயேசு தெளிவுப்படுத்தினார் ( மத்தேயு 19:1-10). இந்த சத்தியத்தை புதிய ஏற்பாடு அழுத்தம்திருத்தமாக கூறுகிறது, மேலும் திருமண பந்தத்தில் மூவர் இடம் பெறுவதாக, கூறுகிறது: கணவன்,மனைவி மற்றும் இவர்களின் உறவுகளுக்கு பாளமாக இருக்கும் தேவன். தேவனைப் பொறுத்தமட்டில் திருமணம் என்பது இருநபர்களின் நெருங்கிய நட்பு மற்றும் உறவின் வெளிப்பாடு ஆகும்.  இதைப் போலவே தேவனும் மக்களோடு நட்புடன் இருக்கவிரும்புகிறார் (எபேசியர் 5:22-23).

கிறிஸ்தவம் என்பது தேவனின் ஆதிகால வாக்குறுதிகளின் நிறைவேறுதலும்,  மற்றும் மனிதனைப் பற்றிய  தேவனின் திட்டம் வெளிப்பட்ட காலமாகும். தேவனின் இந்த திட்டத்தில்  பழைய ஏற்பாட்டிலிருந்து தொடர்ந்து வந்துக்கொண்டு இருக்கும் திருமணமும் ஒரு அம்சமாகும். இதனால் தான் பழைய  மற்றும் புதிய ஏற்பாட்டை ஒரே புத்தகமாக கிறிஸ்தவர்கள் பைபிள் என்ற பெயரில் பயன்படுத்துகிறார்கள். முதல் நூற்றாண்டில் தோன்றிய கிறிஸ்தவத்தினால், பழைய ஏற்பாட்டு தேவனின் எந்த திட்டங்கள் மாறிவிட்டனா?

இதைப் பற்றி ஆய்வு செய்ய, நாம் இயேசுவின் மலைப் பிரசங்கத்தை கவனிக்கவேண்டும். இந்த மலைப்பிரசங்கத்தில் இயேசு கீழ்கண்டவாறு கூறியுள்ளார்:

17. நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.

18. வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

19. ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்.

20. வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 5:17-20)

மேற்கண்ட வசனங்களில்  கிறிஸ்து இரத்தினச் சுருக்கமாக சொன்னது "மோசேயின் மூலமாக கொடுக்கப்பட்ட சட்டங்கள் மனிதன் தேவனோடு ஒன்று இணைவதில் நிறைவேறுகிறது" என்பதாகும். மோசேயின் சட்டம் ஒரு பாரமாக மனிதனுக்கு இருந்தது, ஏனென்றால், எல்லா கட்டளைகளையும் பரிபூரணமாக நிறைவேற்ற முடியாமல், மனிதன் தடுமாறிக்கொண்டு இருந்தான். இச்சட்டங்களின்  ஒரு நோக்கமே, மனிதன் எவ்வளவு முயற்சி எடுத்தாலும் சரி, அவனால் தேவன் எதிர்ப்பார்க்கும் அளவிற்கு பரிசுத்தமும், நீதியும் செய்யமுடியாது என்பதாகும். மேசியாவாகிய இயேசு கொண்டு வந்த பரிபூரணம் என்பது ஒட்டு மொத்த மனித இனத்துக்கு கிடைத்த நற்செய்தியாகும், மேலும் இதுவே நம்முடைய வாழ்விற்கும், இரட்சிப்பிற்கும் அர்தத்தை கொடுக்கின்றதாக உள்ளது. இதன் மூலமாக அனைத்தையும் நோக்கினால், திருமணம் பந்தங்கள் உட்பட, மனிதர்கள் மத்தியில் இருக்கும் உறவு முறைகளை சரியாக புரிந்துக்கொள்ளமுடியும். மேலும் திருமணம் பற்றிய சரியான புதிய உண்மைகள் நமக்கு புரியும். திருமணம் பற்றிய அனைத்து விவரங்களையும் இந்த சிறிய கடிதத்தில் எழுதமுடியாது,  ஆனால், திருமணம் பற்றிய ஒரு புதிய அர்தத்தை புரிந்துக்கொள்ள, இது தொடக்கமாக இருக்கும்.

ஆண் பெண்களின் விகிதாச்சாரம் இப்படி இருப்பதினால், இத்தனை திருமணம் செய்யலாம், அல்லது கணக்கு வேறுமாதிரியாக இருந்தால், ஒரே திருமணம் செய்யலாம் என்பதெல்லாம் கிறிஸ்தவத்தை பொறுத்தமட்டில் தேவையில்லாத ஒன்றாகும்*. ஆண்கள் மற்றும் பெண்களின் விகிதாச்சாரம் எப்படி இருந்தாலும், சரித்திரத்தை திரும்பிப் பார்த்தால், கிறிஸ்தவ பெண்கள் தங்கள் திருமணங்களை சரியான நிலையிலேயே நிர்வகித்துள்ளார்கள் என்பதை அறியலாம் (இங்கு நான் பெயரளவு கிறிஸ்தவர்களைக் குறிப்பிடவில்லை, உண்மையாக இயேசுவின் போதனைகளின் படி வாழும் பெண்களைக் குறிப்பிடுகிறேன்).

உங்கள் கடித்ததில் கிழ்கண்டவாறு குறிப்பிட்டு இருந்தீர்கள்:

//கிறிஸ்தவ நாடுகளில் தான் அதிகமாக விபச்சாரமும் இதர கேவலமான செயல்களும் அதிகமாக நடப்பதை காணமுடியும்//

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க மக்களின் கீழ்தரமான சிற்றின்ப  வாழ்க்கையைப் பார்க்கும் போது, இயேசுவை உண்மையாக நேசித்து அவர் வழிகளில் நடக்கும் கிறிஸ்தவர்கள் இரத்தக்கண்ணிர் வடிக்கிறார்கள் என்ற உண்மையை உங்களிடம் சொல்லிக்கொள்கிறேன். இன்னொன்றையும் சொல்லிக் கொள்கிறேன், மேற்கத்திய நாடுகளில் மட்டுமல்ல, எல்லா நாடுகளிலும் இந்த சிற்றின்ப தவறுகளினால் சமுதாயங்கள் கெட்டுவிடுகின்றன என்பதையும் காணமுடியும். இந்த விஷயத்துக்கு வந்தால், இஸ்லாமிய நாடுகளில் கூட இதே நிலை தான் உள்ளது. 

கடைசியாக, உங்கள் கேள்விக்கு இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தின் அடிப்படையில் பதில்கொடுக்க நான் முயன்றுள்ளேன்.  இந்த கடித உரையாடல் மூலமாக, நீங்கள் உண்மையை அறிந்துக்கொள்ளவேண்டும் என்று நான் தேவனிடம் வேண்டிக்கொள்கிறேன். இதைப் பற்றி நீங்கள் பதில் எழுதினால், முக்கியமாக உங்கள் வாதங்களுக்கு இஸ்லாமிய மேற்கோள்களை காட்டும் படி கேட்டுக்கொள்கிறேன் (குர்-ஆனின் வசனங்கள்,  ஹதீஸ்களின் எண்கள் போன்றவை). அதே போன்று, நீங்கள் பைபிள் பற்றி எழுதும் போது, பைபிளின் வசன மேற்கோள்களை கொடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். 

இப்படிக்கு

அன்புடன் 

தாமஸ்.

*அடிக்குறிப்பு: I don't see this point as being relevant to the discussion, but if you look at the site: www.census.gov/popest/archives/EST90INTERCENSAL/US-EST90INT-01.html the Census Bureau lists the US national population between 1990 and 2000, regardless of age. A rough average of the ratio between the two sexes works out to 1.038 females to one male, or 1038 females to 1000 males. This means that for every 1000 couples, there are 38 women remaining. It doesn't seem that a ratio of 1.038 is sufficient to justify more than one wife per man. If polygamy was instituted in the United States, very few men could have even 2 wives, much less 3 or 4. Any way you slice it, the ratio of men to women, no matter age or location, is too close to justify polygamy.

மோசே சந்தித்த எரியும் புதர் அனுபவத்திற்கும், முஹம்மது சந்தித்த குகை அனுபவத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசம் என்ன?

ஈமெயில் உரையாடல்கள்

தலைப்பு: மோசே சந்தித்த எரியும் புதர் அனுபவத்திற்கும், முஹம்மது சந்தித்த குகை அனுபவத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசம் என்ன? 

தேதி: 19 மே மாதம் 2005

முஹம்மது குகையில் சந்தித்த அனுபவத்திற்கும், மோசே எரியும் புதரில் சந்தித்த அனுபவத்திற்கும் இடையே இருக்கும் வித்தியாசங்களை எனக்கு சொல்லமுடியுமா? மேலும் இவ்விரண்டு அனுபவங்களில் ஏதாவது ஒன்றை ஒருவன் ஏன் நம்பவேண்டும்?


நம்முடைய பதில்:

அருமை சகோதரர் _______ அவர்களுக்கு வாழ்த்துதல்கள்.

எங்கள் தளத்தில் வந்து கட்டுரைகளை படித்ததற்கும், எங்களுக்கு எழுதுவதற்கு நேரம் ஒதுக்கியதற்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

முஹம்மது சந்தித்த குகை சந்திப்பிற்கும்,  மோசே சந்தித்த எரியும் புதர் அனுபவத்திற்கும் இடையே இருக்கும் ஒரு அடிப்படை வித்தியாசம், "அந்த அனுபவங்கள் நடப்பதற்கு முன்பும் பின்பும் என்ன நடந்தது" என்பதை கவனித்தால் புரிந்துவிடும்.

மோசேயின் தரிசனம்:

"தேவன் ஆபிரகாமோடும், இதர முந்தையை குடும்ப தலைவர்களோடும் செய்திருந்த உடன்படிக்கையை"  எரியும் புதர் அனுவத்தின் மூலமாக மோசே கற்றுக்கொண்டார். மோசேக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு, தேவனால் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் விவரங்கள் முன்னறிவிப்புக்களாக சொல்லப்பட்டது. அதாவது ஆபிரகாமின் சந்ததிகள் 400 ஆண்டுகளுக்கு மேலாக எகிப்தில் அடிமைகளாக வாழ்வார்கள் என்றும், அதன் பிறகு அவர்கள் ஒரு நாட்டைப்போன்று அதிக ஜனத்தொகையாக பெருகி அங்கிருந்து புறப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு சொல்லப்பட்டு இருந்தது. அந்த இஸ்ரேல் மக்களுக்கு எகிப்திலிருந்து விடுதலை வாங்கிக் கொடுக்க, தேவன் மோசேயை பயன்படுத்தப் போகிறார் என்று மோசேவிடம் தேவன் சொன்னார். தேவன் தம்முடைய பழமையான உடன்படிக்கையை, அந்த இரட்சிப்பை பூர்த்திச் செய்யப்போவதாக மோசேயிடம் தேவன் கூறினார். மோசேக்கு கிடைத்த அந்த எரியும் புதர் அனுபவம்,  முந்தைய காலத்தில் தேவன் தன் அடியார்களுக்கு வெளிப்படுத்திய வெளிப்பாடுகளோடு மட்டுமல்ல, மோசேக்கு பிறகு வெளிப்படப்போகிற வெளிப்பாடுகளோடும், தீர்க்கதரிசனங்களோடும், இயேசுவோடும் ஒத்துப்போனது. பரிசுத்த பைபிளின் செய்தியை அதன் அனைத்து புத்தகங்களிலும் ஒரு கோர்வையாக, முரண்பாடில்லாமல் இருப்பதை காணமுடியும். அதாவது 1500 ஆண்டுகளாக பல தீர்க்கதரிசிகள் மூலமாக எழுதப்பட்ட பைபிளின் செய்தி ஒரு கோர்வையாகயும், ஒரே அம்சத்தை கொண்டதாகவும் அவைகள் இருக்கின்றன. இதன் தொடக்கமாக தேவன் மோசேயை சந்தித்தார்.

முஹம்மதுவின் தரிசனம்:

முஹம்மது தான் சந்தித்த அந்த குகை அனுபவம் அல்லது தரிசனம், முந்தையை வேதங்களுக்கு எதிராக இருக்கிறது. ஆனால், அதே நேரத்தில் முந்தைய வேதங்களை கொடுத்த இறைவனும், குர்-ஆனை கொடுத்த இறைவனும் ஒருவரே என்றும் சொல்லிக்கொண்டு, முந்தைய வேதங்களை எதிர்க்கவும் செய்தது. இது மட்டுமல்ல, முஹம்மதுவிற்கு இறக்கப்பட்ட குர்-ஆன் வசனங்களும் முஹம்மதுவின் காலத்தின் போதே, அடிக்கடி மாறிக்கொண்டே இருந்தன. ஆரம்ப காலத்தில் முஹம்மதுவிற்கு இறக்கப்பட்ட குர்-ஆன் வசனங்களை, பிற்காலத்தில் வந்த குர்-ஆன் வசனங்கள் இரத்து செய்துவிட்டன, அதாவது செல்லாது என்றுச் சொல்லிவிட்டன.

"நான் ஏன் இந்த இரண்டு தரிசனங்களில் ஏதாவது ஒன்றை நம்பவேண்டும்?" என்ற கேள்வியை நீங்கள் கேட்டுள்ளீர்கள். இதற்கான என்னுடைய பதில் என்னவென்றால், "இந்த இரண்டு தரிசனங்களை நம்புவதைவிட, இவ்விரு மார்க்கங்களின் புத்தகங்களை(பைபிள் மற்றும் குர்-ஆன்) மக்கள் புரிந்துக்கொள்வது தான் முக்கியமானது" என்று நான் சொல்லுவேன். சிலர் "நான் இவ்விரு புத்தகங்களை அல்லது ஏதாவது ஒரு புத்தகத்தை நம்புவதில்லை" என்றுக் கூறுவார்கள். இப்படிச் சொல்பவர்கள், இவ்விரு புத்தகங்களையும் படித்து இருக்கமாட்டார்கள் என்பது தான் உண்மை. ஒரு புத்தகத்தை படிக்காமல், நான் அந்த புத்தகத்தை நம்பமாட்டேன் என்றுச் சொல்வது அறிவுடமையாகாது, அது படித்தவர்கள் செய்யும் வேலையல்ல. நான் ஒரு அறிவுரையை இங்கு கொடுக்கிறேன். நீங்கள் ஒரு குர்-ஆன் அத்தியாயத்தை எடுத்துக் கொள்ளுங்கள், அதை படியுங்கள். அதே போல ஒரு புத்தகத்தை பைபிளிலிருந்து தெரிந்தெடுத்துக் கொள்ளுங்கள், அதையும் படித்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு இவ்விரு புத்தகங்களில் உள்ள விவரங்களை ஆய்வு செய்துப்பாருங்கள். இவ்விரு புத்தகங்களில் உள்ள வித்தியாசங்களைப் பார்த்து, எந்த புத்தகத்தில் சொல்லப்பட்டதை நம்பலாம் என்று நீங்கள் முடிவு எடுங்கள். குர்-ஆனுக்காகவும், பைபிளுக்காகவும் நீங்கள் கடைத்தெருவுக்குச் சென்று அவைகளை விலை கொடுத்து வாங்கத்தேவையில்லை. இவ்விரண்டும் இணையத்தில் கிடைக்கின்றன, அவைகளை நீங்கள் படித்துப் பார்த்துக்கொள்ளலாம்.

பைபிளில் "யோவான் நற்செய்தி நூல்" என்று ஒரு நூல் உள்ளது, அதனை நீங்கள் படிக்க நான் ஆலோசனை கூறுகிறேன். இந்த புத்தகம் படிப்பதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். நான் ஒரு முஸ்லிமல்லாதவனாக இருப்பதினால், குர்-ஆனிலிருந்து எந்த ஸூராவை (அத்தியாயத்தை) படிக்கலாம் என்று நான் உங்களுக்கு  ஆலோசனை கூறமுடியாது. நீங்களாகவே ஒரு ஸூராவை தெரிவு செய்து படிக்கலாம். 

[தமிழாக்க ஆசிரியரின் ஆலோசனை: உண்மையாகவே நீங்கள் இந்த ஒப்பீடுதலைச் செய்யவிரும்பினால், பைபிளின் புதிய ஏற்பாட்டிலுள்ள முதல் நான்கு புத்தகங்களை படிக்கலாம் (மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான்). அதே போல, குர்-ஆனை எடுத்துக்கொண்டால், முதல் ஐந்து அத்தியாயங்களை படிக்க நீங்கள் தெரிவு செய்துக்கொள்ளலாம் (அத்தியாயங்கள் 1-5: அல்ஃபாத்திஹா, ஸூரத்துல் பகரா, ஸூரத்துல்ஆல இம்ரான், ஸூரத்துன்னிஸாவு & ஸூரத்துல் மாயிதா).

குர்-ஆன் மற்றும் பைபிளில் படித்த புத்தகங்களில் நீங்கள் கண்டுபிடித்த வித்தியாசங்களை ஒரு பட்டியலிடுங்கள். அதன் பிறகு எது உண்மையான வேதம் என்றும், எது சரியான மார்க்கமென்றும் வேண்டுதல் செய்யுங்கள். உண்மை இறைவன் நிச்சயம் உங்களுக்கு வழி காட்டுவான். இவ்விரு புத்தகங்களையும் ஒரே இறைவன் நிச்சயம் இறக்கியிருக்கமாட்டான், தனக்குத் தானே முரண்படமாட்டான் இறைவன்.]

முழு பைபிளில் சொல்லப்பட்டவைகளை சுருக்கமாக கற்றுக்கொள்ள விரும்பினால், அதற்கு இந்த புத்தகம் உதவும், இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.

புத்தகத்தின் பெயர்: All that the Prophets have Spoken

உங்கள் கேள்விக்கு நான் பதிலை கொடுத்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.

நன்றி

இப்படிக்கு

தரியோ

இது மட்டுமல்லாம, இன்னொரு கட்டுரையும் உங்களுக்கு பேருதவியாக இருக்கும்: Mohammed the prophet versus the prophets

திங்கள், 2 அக்டோபர், 2017

கிறிஸ்தவர்களை ஏன் மசூதிக்கு அழைத்துச் செல்கிறீர்கள்?

(ஆலன் அவர்களின் கடிதம் - ஜூலை 2014)

சில நேரங்களில் மக்கள் ஆச்சரிய குழப்பத்தில் இருப்பார்கள். நாம் கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்தவத்தை ஆழமாக கற்றுக்கொடுக்கவேண்டாமா? ஏன் கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாமை கற்றுக்கொடுத்துகொண்டு இருக்கிறோம்? மேலும் ஏன் கிறிஸ்தவர்களை மசூதிக்கு அழைத்துச்செல்கிறோம்? என்பன கேள்விகளை மக்கள் கேட்கிறார்கள். இது ஒரு முக்கியமான கேள்விதான் என்பதில் சந்தேகமில்லை.

இந்த கேள்விக்கு ஓர் வரியில் பதில் சொல்லவேண்டுமென்றால், கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாம் பற்றிய அறிவை போதிப்பதற்கான ஒரு வழிமுறை தான் அவர்களை மசூதிக்கு அழைத்துச்செல்வது.

கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாம் பற்றி கற்றுக்கொடுத்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் போது, கொடுக்கவேண்டிய முக்கியமான பயிற்சி "மசூதி பயிற்சி" ஆகும். பொதுவாகவே, கிறிஸ்தவ ஊழியர்களின் வட்டாரங்களில் இது மிகவும் அரிதான ஒன்றாகும். இந்த "பயிற்சி" நம்மை அந்த பெரிய ஊழிய தரிசனத்தை சிறப்பாக செய்ய உதவிபுரிகின்றது (மத்தேயு 28:19-20). கிறிஸ்தவர்கள் எந்த மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்க விரும்புகிறார்களோ, அம்மக்களைப் பற்றி அவர்கள் அறிந்துக் கொள்ளவேண்டியது மிகவும் அவசியம் என்று நான் திடமான நம்புகிறேன். உலக அளவில் ஒவ்வொரு நாளும் 38,000 முஸ்லிம்கள் கிறிஸ்து இல்லாமல் மரித்துக்கொண்டு இருப்பதினால், முஸ்லிம்களுக்கு நற்செய்தியை அறிவிக்க நாம் கிறிஸ்தவர்களை தயார்படுத்தவேண்டும்.

இப்போது நமக்குத் தோன்றும் கேள்வி இது தான்:

கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாமின் இறையியலை கற்றுக்கொடுப்பதும், அவர்களை மசூதிக்கு அழைத்துச் செல்வதும் ஆபத்தானதல்லவா? இதன் மூலம் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களாக மாறிவிட வாய்ப்பு  உள்ளதல்லவா?

உண்மையில், இது நடக்காது, அதாவது இஸ்லாமை கிறிஸ்தவர்களுக்கு கற்றுக்கொடுப்பதினால், கிறிஸ்தவர்கள் இஸ்லாமுக்கு மாறமாட்டார்கள், ஆனால் இதற்கு எதிராகத் தான் நடக்கும். இது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

கடந்த மாதம், "இம்பாக்ட் 360 (Impact 360)" என்ற ஸ்தாபனத்தோடு கூட்டுச் சேர்ந்து அட்லாண்டாவிற்கு வெளியே வாழும் கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாம் பற்றிய பயிற்சி அளிக்க நான் சென்று இருந்தேன். இந்த பயிற்சியின் ஆரம்பத்தில் ஒரு சிறிய நாடகம் போன்றதொரு நிகழ்ச்சியை செய்துக்காட்டினேன். இதில் என்னை ஒரு முஸ்லிமாக கற்பனை செய்துக்கொள்ளுங்கள், என் பெயர் சையத் என்று நினைத்துக்கொள்ளுங்கள் என்றுச் சொன்னேன். நான் ஒரு குர்-ஆனை எடுத்துக்கொண்டு, இஸ்லாமுக்காக கிறிஸ்தவர்களோடு வாதம் புரிந்தேன். இப்படிப்பட்ட நாடக நடிப்புப் பயிற்சி ஏன்? முஸ்லிம்களை மசூதிகளில் நாம் சந்திக்கும் போது, அவர்கள் எப்படிப்பட்ட கேள்விகளை கேட்பார்கள், அவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை கிறிஸ்தவர்கள் அறியவேண்டும் என்பதற்காகத் தான். இப்படிபட்ட பயிற்சி கொடுப்பதால், உண்மையாகவே முஸ்லிம்களை சந்திக்கும் போது, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கொடுக்க இது உதவியாக இருக்கும்.

இந்த நாடக பயிற்சியில், நான் (சையத்) முன்வைத்த கிறிஸ்தவத்திற்கு எதிரான வாதங்களுக்கும், கிறிஸ்தவ நம்பிக்கைப் பற்றிய கேள்விகளுக்கும்  கிறிஸ்தவ மாணவர்கள் பதில் கொடுக்க முயன்றார்கள். அவர்களால் சில வேளைகளில் பதில் கொடுக்கமுடியாமல் போனது. இதனால் உண்டான நன்மைகள் என்னென்ன? இந்த பயிற்சியின் மூலமாக, இஸ்லாமை அதிகமாக கற்றுக்கொள்ள கிறிஸ்தவர்கள் ஆர்வம் காட்டினார்கள். மேலும், இதைத் தொடர்ந்து நான் இஸ்லாம் பற்றி கற்றுக் கொடுத்தவைகளை ஆர்வமாக கேட்டார்கள்.

அந்த நாடக ஒத்திகைக்கு பிறகு, நான் இஸ்லாமிய இறையியலின் அடிப்படை பாடங்களையும், முஸ்லிம்களின் இஸ்லாமிய கடமைகளையும்  கற்றுக்கொடுத்தேன். கடைசியாக, முஸ்லிம்கள் கொடுக்கும் சவால்களுக்கு எப்படி பதில் அளிக்கவேண்டும் என்பதையும் கற்றுக்கொடுத்தேன். அதே நேரத்தில், இப்படிப்பட்ட உரையாடல்களில் நாம் அன்பாகவும், பொறுமையாகவும் பதில் சொல்லவேண்டியதின் அவசியத்தை அவர்களுக்கு போதித்தேன். இந்த பயிற்சி மற்றும் பாடங்களின் மூலமாக, கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களிடம் எப்படி பேசவேண்டும், எப்படி  நற்செய்தி சொல்லவேண்டும் என்பதை ஓரளவிற்கு கற்றுக்கொண்டார்கள்.

கிறிஸ்தவர்கள் வகுப்பில் இஸ்லாமிய பாடங்களை கற்றுக்கொண்ட பிறகு, களத்தில் இறங்கி அவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம் என்று முடிவு செய்தேன். நாம் அனைவரும் ஜார்ஜியாவில் உள்ள மிகப்பெரிய "அல்-ஃபரூக் மஸ்ஜித்" என்ற மசூதிக்குச் சென்றோம். அந்த மசூதி 46,000 சதுர அடிகளில் கட்டப்பட்ட பிரமாண்டான கட்டிடமாகும். 1100 முஸ்லிம்கள் ஒன்றாக நின்று தொழுதுக்கொள்ளும் அளவிற்கு அது பெரியதாக உள்ளது. அந்த மசூதிக்குள் செல்வதற்கு முன்பாக, நாங்கள் எங்கள் காலணிகளை கழற்றிவிட்டோம். எங்களோடு வந்த கிறிஸ்தவ மாணவிகள் இஸ்லாமிய முறைப்படியான உடைகளை போட்டுக்கொண்டார்கள், அதாவது தலைமுடியை மறைத்துக்கொண்டார்கள்.

அந்த மசூதியின் ஒரு தலைவர், மசூதியை எங்களுக்கு சுற்றிக்காண்பித்தார். அதன் பிறகு முஸ்லிம்கள் தொழுதுக்கொள்ளும்  அறையில் நாங்களும் அவர்களோடு உட்கார்ந்தோம்.  மேலும், அன்று ஒரு இஸ்லாமிய பிரசங்கத்தை (பயானை) நாங்கள் கேட்டோம். கடைசியாக, முஸ்லிம்கள் மக்காவிற்கு நேராக நின்று, தொழுதுக்கொண்டதை நாங்கள் அருகிலிருந்து பார்த்தோம்.  முஸ்லிம்கள் தொழுகையின் போது, உச்சரித்த குர்-ஆன் வசனங்கள் வந்திருந்த கிறிஸ்தவர்களை கவர்ந்தது, ஆனால்  அவைகளுக்குள்  ஒரு இருள் இருந்ததை காணமுடிந்தது.

தொழுகை முடிந்த பிறகு, இரண்டு முஸ்லிம் தலைவர்கள் எங்களை மேல்மாடிக்கு அழைத்துச் சென்று இஸ்லாம் பற்றி சொல்லிக்கொடுத்தார்கள். அவர்கள் சொல்லிக்கொண்டு இருந்த விவரங்களை என்னோடு வந்திருந்த கிறிஸ்தவ மாணவர்கள் சீக்கிரமாகவே புரிந்துக்கொண்டார்கள் மேலும் பல கேள்விகளையும் கேட்டார்கள். இந்த மாணவர்கள் என்னுடைய வகுப்பில் பல விவரங்களை ஏற்கனவே கற்றுக்கொண்டு இருந்தபடியினால், அவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் அங்கு இருந்ததில்லை. எனவே, அவர்கள் பல கேள்விகளை அமைதியான முறையில் கேட்டு, இஸ்லாமை சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருந்தவர்களுக்கு சவால்களானார்கள. நாங்கள் அந்த மசூதியில் செலவிட்ட நேரம் அனைத்தும் சுவாரசியமாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. அதன் பிறகு அந்த மசூதியிலிருந்து எங்கள் இடங்களுக்கு வந்தோம். வந்த பிறகு, அதுவரை நடந்த விவரங்களை நான் சுருக்கமாக அவர்களுக்கு விளக்கினேன், மேலும், அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில்களையும் கொடுத்தேன்.

சில கிறிஸ்தவர்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. இந்த அனுபவத்தின் மூலமாக நல்ல விளைவுகள் விளைந்தன. முதலாவதாக, இந்த அனுபவம் கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் பற்றிய விவரங்களை கற்றுக் கொடுத்தது. இயேசுவின் பிரதிநிதியாக இருக்கும் ஒவ்வொரு கிறிஸ்தவருக்கு இஸ்லாமை கோர்வையாகக் கற்றுக்கொள்வது முதலாவது முக்கியமான படியாகும். முஸ்லிம்களின் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சார விவரங்களை அதிகமாக நீங்கள் அறிந்துக்கொண்டால், அவர்களுக்கு ஊழியம் செய்யும் போது, அது பயன்படும்.

இரண்டாவதாக, இப்படிப்பட்ட அனுபவங்கள் இயேசுவின் பெரிய ஊழிய அழைப்பை நிறைவேற்ற கிறிஸ்தவர்களுக்கு  உதவி புரியும். ஒரு கிறிஸ்தவன் தான் சந்திக்க விரும்பும் மக்களை அறிந்துக்கொண்டால், அடுத்தபடியாக, அவர்களோடு நற்செய்தியை பகிர்ந்துக்கொள்ள களத்தில் தைரியமாக இறங்க முடியும். மேலும் 2 கொரிந்தியர் 5:18-20 வசனங்களில் சொல்லப்பட்டது போல, தேவனோடு அவர்களை ஒப்புரவாக்கும் ஊழியத்தைச் செய்ய தொடங்கலாம். இந்த மசூதி அனுபவம், கிறிஸ்தவர்களின் உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிந்துக்கொண்டு  இருக்கும் ஊழிய பாரத்தை இன்னும் அதிகமாக்கிவிட்டது. இதனால் தங்கள்  கடமையைச் செய்ய கிறிஸ்தவர்கள் அதிக உற்சாகம் கொள்ளுவார்கள். அதே நேரத்தில், உலகத்தில் அதிகமாக கவனிப்பாரற்று இருக்கும் மக்களை சந்திக்க ஆயத்தப்படுவார்கள்.

மூன்றாவதாக, இந்த அனுபவம் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் பற்றிய பல சந்தேகங்களை தீர்த்துவைக்கும். பொதுவாக மக்கள் முஸ்லிம்கள் பற்றி தவறாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். கதவுகள் மூடப்பட்ட  மசூதிக்குள் பல இரகசியங்கள் இருக்கின்றன என்று சந்தேகிக்கின்றனர். மசூதிக்குள் கிறிஸ்தவர்களை அழைத்துச் சென்று, முஸ்லிம்களோடு பேசும் போதும், அங்கு என்ன நடக்கிறது என்பதை காணும் போதும் இப்படிப்பட்ட தவறான எண்ணங்கள் அனைத்தும் நீங்கிவிடுகின்றன.  இதன் மூலமாக, நற்செய்தி சொல்லக்கூடிய வாசல் திறக்கப்படுகின்றது.  மேலும் கிறிஸ்தவர்கள் இயேசுவைப் போன்று முஸ்லிம்களை நல்மக்களாக பார்க்க முடிகின்றது.

மசூதிக்குள் நாங்கள் நுழையும் போது, ஒரு முஸ்லிம் பெண் எங்களுடைய கிறிஸ்தவ மாணவ குழுவை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தார் (அப்பெண் முஸ்லிம் என்று எங்களுக்கு எப்படி தெரியும்? அப்பெண் இஸ்லாமிய உடையில் இருந்தார்). கிறிஸ்தவ விசுவாசிகளில் பலர் முஸ்லிம் பெண்களோடு பேசுவதற்கு பயப்படுகிறார்கள். அவர்களோடு பேதும் போது எதிர்ப்பாராத விதமாக, ஏதாவது மனம் நோகடிக்கும்படி பேசிவிட்டால் என்ன நடக்கும் என்ற பயம் உண்டு. ஆனால், ஆச்சரியப்படும் விதமாக, அந்த முஸ்லிம் பெண் எங்களோடு வந்த பெண் கிறிஸ்தவர்களோடு வந்து பேசினார், மேலும் தானும் மசூதிக்குள் எங்களோடு வருவதற்கு அனுமதி பெற்றுக்கொண்டு, எங்களோடு மசூதிக்குள் வந்தார்கள். எங்கள் மசூதி சுற்றுலாவின் போது, அப்பெண் எங்கள் பெண்களோடு சரளமாக பேசிக்கொண்டு வந்தார்கள், மிகவும் நட்புடனும், அன்பாகவும் பேசிக்கொண்டு வந்தார்கள். எனவே, மசூதிக்கு வந்து முஸ்லிம்களோடு பேசுவதினாலும், அந்த சூழலை பார்ப்பதினாலும், கிறிஸ்தவர்களுக்கு இருக்கும் பல தவறான எண்ணங்கள் மாறிவிடுகின்றன. இதனால், முஸ்லிம்களோடு பேசுவது ஒரு சுவாரசியமான பயமில்லாத ஒன்றாக கிறிஸ்தவர்களுக்கு மாறிவிடுகின்றது.

நான்காவதாக, மேற்கண்ட மசூதி சுற்றுப்பயணமானது, முஸ்லிம்-கிறிஸ்தவர்களிடையே இருக்கும் நட்புறவை பலப்படுத்த உதவுகிறது. பலப்டுத்துகிறது என்றுச் சொல்வதைவிட சரிப்படுத்துகிறது என்றுச் சொல்லலாம். பல வேளைகளில், கிறிஸ்தவர்கள் பொதுவான இறையியல் கோட்பாடுகளின் அடிப்படையில் இவ்விரு பிரிவினருக்கிடையே "பாளங்களை" அமைக்க முயலுகின்றார்கள். அதாவது, நம் இரு மார்க்கங்களில் உள்ள சில பொதுவான விவரங்களை முன்னிறுத்தி, நம் மார்க்கங்கள் ஒன்றையே போதிக்கின்றன என்று சொல்கிறார்கள். இதன் மூலமாக முஸ்லிம்களை திருப்திபடுத்த, அவர்களின் சுவைக்கு ஏற்றபடி நம் அடிப்படை கோட்பாடுகளை அவர்களுக்கு போதிக்கிறார்கள். முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இடையே சாந்தியை உருவாக்குவதற்கு, இஸ்லாமையும், கிறிஸ்தவத்தையும் நாம் ஒட்டப்பார்த்தால், அதனால் எந்த பயனுமில்லை. மார்க்கங்களை ஒட்டமுயலாமல், கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் ஒட்டினால் தான் நல்ல பயனுண்டாகும். இரு நேர் எதிர் மார்க்கங்களை தீவிரமாக பின்பற்றும் நபர்கள் (கிறிஸ்தவர்கள் & முஸ்லிம்கள்) ஏன் நல்ல நண்பர்களாக இருக்கமுடியாது? நிச்சயமாக முடியும்.

கிறிஸ்தவர்களை மசூதிக்குள் அழைத்துச் செல்லும் போது, இவ்விருவருக்கும் இடையே இருக்கும் இடைவெளி நிச்சயமாக குறையும்.

ஐந்தாவதாக, முக்கியமான பயன்பாடு என்னவென்றால், கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ இறையியலை இன்னும் ஆழமாக கற்க இப்பயணம் உதவி புரியும். அதாவது, இஸ்லாம் என்பது இன்னொரு மதம் அல்ல, அது "கிறிஸ்தவதுக்கு எதிரான மதம் (Anti-Christian)" ஆகும். அதாவது இஸ்லாமின் கோட்பாடுகள் கிறிஸ்தவ கோட்பாடுகளை நேரடியாக எதிர்க்கிறது. இஸ்லாம் திரித்துவ தேவனை எதிர்க்கிறது, இயேசுவின் பிறப்பின் நோக்கத்தை எதிர்க்கிறது, அவரது மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் அவர் கொடுக்கும் இரட்சிப்பை எதிர்க்கிறது. எனவே, இஸ்லாம் ஒரு மதம் அல்ல, அது ஒரு அந்திக்கிறிஸ்தவ மதமாகும். கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களோடு பேசும் போது, சில நொடிகளிலேயே, தங்கள் கிறிஸ்தவ விசுவாசத்தை காத்துக்கொள்ள, பதில்களை சொல்லவேண்டிய நிலையில்  இருப்பார்கள். எனவே, கிறிஸ்தவர்களே, தங்கள் இறையியலை இன்னும் ஆழமாக கற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஊந்துதல் எப்போது கிறிஸ்தவர்களுக்கு கிடைக்கிறது? அவர்கள் முஸ்லிம்களோடு உரையாடும் போது அதன் அவசியத்தை கண்டுக்கொள்வார்கள்.

கடைசியாக, இந்த மசூதிப்பயணம் கிறிஸ்தவர்களுக்கு ஒரு நம்பிக்கையைத் தருகிறது. நீங்கள் முஸ்லிம்களோடு உரையாடி, இஸ்லாமிய மதத்தை படித்து கற்றுக்கொண்டு, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்லவேண்டும் என்று அறிந்துக் கொண்டு, அவர்களின் மசூதிக்குள் சென்று அங்கு நடக்கும் தொழுகையை பார்த்து, முஸ்லிம்களின் போதனைகளை கேட்கும் போது, உங்களுக்கு நற்செய்திச் சொல்ல தைரியமும், உற்சாகமும் வந்துவிடும். இனி முஸ்லிம்களுக்கு நற்செய்தி அறிவிப்பதற்கு உங்களுக்கு எந்த ஒரு தடையும் இல்லை என்று நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள். இயேசுவின் கடைசி கட்டளையாகிய உலகத்துக்குள் சென்று மக்களுக்கு நற்செய்தியை அறிவியுங்கள் என்ற கட்டளையை ஒரு புதிய வழியில் நிறைவேற்ற உற்சாகம் வரும். இது தான் இந்த பயணத்தின் மூலம் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

உண்மையில் கிறிஸ்தவர்களை மசூதிக்குள் அழைத்துச் சென்று அவர்களுக்கு இஸ்லாமை கற்றுக்கொடுக்கும் இந்தச் செயல், இயேசுவின் சீடர் பேதுருவிற்கும், பவுலடியாருக்கும், இயேசுவிற்கும் புதிதாகத் தோன்றாது. இவர்கள் அனைவரும் இப்படிப்பட்ட சூழலில் தங்களை தாங்களே வைத்துக்கொண்டு, அதாவது மற்றவர்களின் வட்டத்திற்குள் வைத்துக்கொண்டு தான் ஊழியம் செய்தார்கள். நற்செய்தி என்பது உலக மக்கள் அனைவருக்கும் கொண்டுச் செல்லவேண்டிய ஒன்றாகும். அவர்கள் தேவன் கொடுக்கும் மன்னிப்பை பெறவேண்டும் என்பது தான் சாராம்சம். முஸ்லிம்கள் தேவன் தரும் இந்த மன்னிப்பை பெறவில்லை என்பது மட்டுமல்ல, அவர்கள் தீவிரமாக அந்த மன்னிப்பை தெரிந்தே புறக்கணித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது தான் கசப்பான உண்மை. உண்மையில் சொல்லவேண்டுமென்றால், இந்த கட்டுரையை நீங்கள் படித்த நேரம் தொடங்கி, இப்போது முடிக்கும் வரைக்கும், 79 முஸ்லிம்கள் தேவன் கொடுக்கும் அன்பையும், மன்னிப்பையும் பெறாமல் தங்கள் நித்தியத்தை கழிக்க சென்றுவிட்டிருப்பார்கள் என்பது மனதை நோகடிக்கும் நிஜமாகும். இதே நிலை அடுத்த மூன்று நிமிடங்களிலும் நடக்க இருக்கிறது. மறுபடியும் அடுத்த மூன்று நிமிடங்களில் கூட இதே நிலை... இது தொடர்ந்துக்கொண்டு இருக்கப்போகிறது.

நாம் ஏன் நற்செய்தி அறிவிக்கவேண்டும் என்பதை இப்போது நீங்கள் சரியாக புரிந்துக்கொண்டு  இருந்திருப்பீர்கள். இது ஒரு குறிப்பிட்ட சாராரின் (மக்களின்) பிரச்சனை அல்ல. இது ஏதோ ஒரு சிறிய பிரச்சனை அல்ல. இது தான் மிகப்பெரிய ஒரே பிரச்சனை என்பதை நாம் அறியவேண்டும். இதன் விளைவை அளவிடமுடியாது. இது நற்செய்தி சம்மந்தப்பட்டது, இயேசுவின் வாழ்வு சம்மந்தப்பட்டது. இதன் அவசியத்தை அறிந்தபடியால் தான் நான் கிறிஸ்தவர்களை மசூதிக்கு சுற்றுப்பயணமாக அழைத்துச் செல்கிறேன்!