இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்திற்கும் இடையே இருக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இது தான்.
முஸ்லிம்களின் கூற்று: "நான் எல்லா மத சடங்குகளை சரியாக பின்பற்றுவேன், முடிந்த அளவிற்கு எல்லா நல்ல காரியங்களைச் செய்வேன், இதன் மூலமாக நான் சொர்க்கத்தில் அனுமதிக்கப்படலாம்".
கிறிஸ்தவர்களின் கூற்று: "நான் செய்யும் அனைத்து நற்காரியங்களும் என்னை சொர்க்கத்தில் கொண்டுச் சென்று விடுவதற்கு போதுமானதாக இல்லை. தேவன் செய்த காரியம் தான் என்னை சொர்க்கத்திற்குள் செல்ல உதவும்".
எந்த ஒரு மனிதனும் தன்னுடைய சொந்த நற்செயல்களினால் சொர்க்கம் சென்றடையமுடியாது என்று பைபிள் சொல்கிறது. தேவன் மட்டுமே நம்மை இரட்சித்து, நம்மை சொர்க்கத்தில் அனுமதிக்கமுடியும். பரிசுத்தமான தேவனுக்கு முன்பாக மனிதன் செய்யும் நல்ல செயல்கள் அனைத்தும் அழுக்கு படிந்த கந்தை துணிகளாகும். தேவன் தன்னிடம் சேருவதற்கு என்ன வழி என்று காட்டியுள்ளார். அவர் காட்டிய வழியை யார் ஏற்றுக்கொள்கிறாரோ, அவருக்கு தேவன் வாக்கு கொடுத்த பரலோகம் உறுதி செய்யப்பட்டு விடுகின்றது.
முஸ்லிம்களே! உங்களுக்கு ஒரு மிகப்பெரிய பிரச்சனை உள்ளது. எத்தனை நற்காரியங்கள் செய்தால், சொர்க்கம் செல்வதற்கு போதுமானதாக இருக்கும் என்ற எண்ணிக்கை உங்களுக்குத் தெரியாது. நீங்கள் இதுவரை செய்துக்கொண்டு வந்துக்கொண்டு இருக்கும் நற்செயல்களை அல்லாஹ் ஏற்றுக்கொண்டானா? இல்லையா? என்று உங்களுக்குத் தெரியாது, அல்லது கடைசி நிமிடத்தில் அல்லாஹ் உங்களை நரகத்தில் தள்ளிவிடவும் வாய்ப்பு இருக்கின்றது. உங்களுக்கு சொர்க்கமா? நரகமா? என்ற நம்பிக்கைக்கு கியாரண்டி கிடையாது. ஒரு முக்கியமான கேள்வி, நீங்கள் செய்யும் நல்ல காரியங்கள் அனைத்தையும் "சுயமாக நீங்களே விரும்பிச் செய்கிறீர்களா?" அல்லது "சொர்க்கத்திற்கு செல்வதற்கான பயணச் சீட்டு கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் செய்கிறீர்களா?". இதனை நீங்கள் எப்போதாவது சிந்தித்து பார்த்து இருக்கின்றீர்களா? நீங்கள் செய்யும் நல்ல காரியங்கள் அனைத்தும் "சுயநலத்துடன்" கூடியவைகளாக இருக்கின்றன என்பதை நீங்கள் உணரவில்லையா? சுயநலம் என்பது பாவம் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். விஷயம் இப்படி இருக்க, பரிசுத்தமான, நீதிபதியாகிய நல்ல இறைவன், சுயநலத்துடன் செய்யப்படும் காரியங்களை எப்படி ஏற்றுக்கொள்வான் என்று எதிர்ப்பார்க்கிறீர்கள்?
நான் இந்த நற்காரியங்களைச் செய்தால், அல்லாஹ் எனக்கு சொர்க்கம் கொடுப்பான் என்பது ஒரு சுயலமான நற்காரியமல்லவா? இதனை அல்லாஹ் அங்கீகரிப்பனா?
இறைவன் காட்டிய வழியை கிறிஸ்தவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள், அதனால் அவர்களுக்கு சொர்க்கம் சுதந்திரமாக கொடுக்கப்படுகின்றது. அந்த ஒரே வழியை பின்பற்றும் கிறிஸ்தவர்கள் "நல்ல காரியங்கள்" என்ற லஞ்சத்தை கொடுத்து சொர்க்கத்தை சம்பாதிக்கவேண்டிய அவசியமில்லை.
சொர்க்கத்தின் மக்களாக, உண்மையான கிறிஸ்தவர்கள், நல்ல காரியங்களை சுயநலமில்லாமல் செய்கிறார்கள். இந்த காரியங்கள் செய்தால் தான் சொர்க்கம் என்ற கோட்பாடு இல்லாமல், "நமக்கு சொர்க்கம் ஏற்கனவே வாக்களிக்கப்பட்டு இருப்பதினால், அதற்கு நன்றி செலுத்தும் வண்ணமாக நற்காரியங்களைச் செய்வோம்" என்று கிறிஸ்தவர்கள் கிரியை நடப்பிக்கிறார்கள். மேலும் நம்மை இறைவன் நேசித்தார், நமக்கு சொர்க்கமும் கொடுத்துள்ளார், கடைசியாக, சொர்க்கத்தில் அவரோடு நாம் இருக்கவும் அனுமதித்தார், எனவே ஒரு நன்றியுள்ள மனதோடு அவர் உண்டாக்கிய இதர மக்களுக்கு சுயநலமில்லாமல் உதவி செய்யவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் கிறிஸ்தவர்கள் "நற்கிரியைகள்" செய்கிறார்கள். தேவன் எப்படி உலக மக்களை நேசித்து அவர்களுக்கு நன்மைகள் செய்கிறாரோ, அவருடைய அன்பைப் பெற்ற கிறிஸ்தவர்களும் அதே போல, உலக மக்களுக்கு நல்லதைச் செய்ய முயலுகின்றார்கள், முடிந்த அளவிற்குச் செய்கிறார்கள்.
இறைவன் காட்டிய அந்த வழி எது?
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14:6)
இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி . . . . நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். (யோவான் 10:9)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக