முஸ்லிம்கள் தாங்கள் அல்லாஹ்வின் அடிமைகள் என்று நம்புகிறார்கள்.
இயேசுவை இரட்சகராகவும் தேவனாகவும் ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவர்கள், தாங்கள் தேவனின் பிள்ளைகள் (மகன்கள், மகள்கள்) என்று நம்புகிறார்கள்.
1) இஸ்லாம் - ஒரு அடிமை தன் எஜமானனோடு தனிப்பட்ட உறவு கொண்டு இருக்கமாட்டான்.
கிறிஸ்தவம் - ஒரு மகன் தன் தந்தையுடன் தனிப்பட்ட முறையில் சிறப்பான உறவு கொண்டு இருப்பான்.
அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)
2) இஸ்லாம் - எஜமானன் தன் அடிமையை பயன்படுத்திக் கொள்கிறான் (வேலை வாங்குகிறான்)
கிறிஸ்தவம் - தந்தை தன் மகனை வளர்க்கிறான்
அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார். (யோவான் 8:35)
3) இஸ்லாம் - அடிமை தனக்கு சம்பளம் கிடைக்கும் என்பதற்காக என் எஜமானனுக்கு வேலை செய்கின்றான்
கிறிஸ்தவம் - ஒரு மகன் தன் தந்தையின் சொத்துக்கள் அனைத்தும் தனக்கே சுதந்தரமாக கிடைக்கும் என்ற நம்பிக்கை மற்றும் வாக்கு இருப்பதினால், நன்றியுள்ள உள்ளத்தோடு தந்தைக்கு ஊழியம் செய்கின்றான்
4) இஸ்லாம் - அடிமை தேவனுடைய ராஜ்ஜியத்தை (எஜமானனின் இராஜ்ஜியத்தை) சுதந்தரிக்க முடியாது.
கிறிஸ்தவம் - குமாரன் தேவனுடைய இராஜ்ஜியத்தின் குடிமகனாக இருக்கிறான்
நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே;. . . (ரோமர் 8:17)
5) முஸ்லிம்கள் தங்களை அல்லாஹ் நரக நெருப்பில் தள்ளக்கூடாது என்ற பயத்தினால் அவனை தொழுதுக் கொள்கிறார்கள்.
கிறிஸ்தவர்கள், தங்களை தேவன் தம்முடைய சமூகத்தில் ஏற்றுக்கொண்டுவிட்டார் என்பதினால், அன்பின் வெளிப்பாடாக அவரை தொழுதுக்கொள்கிறார்கள்.
அந்தப்படி, திரும்பவும்பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். (ரோமர் 8:15)
6) முஸ்லிம்கள் அதிக மதிப்பெண்கள் பெறவேண்டும், அதன் மூலம் நரகத்திலிருந்து தப்பவேண்டும் என்பதறகாக அதிகதிகமாக 'தொழுகிறார்கள், மற்றும் குர்-ஆனை ஓதுகிறார்கள்'.
கிறிஸ்தவர்கள், தேவனோடு தங்களுக்கு இருக்கும் உறவை இன்னும் பலப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காக, அதிகமாக ஜெபிக்கிறார்கள், மற்றும் அதிகமாக பைபிள் வாசிக்கிறார்கள்.
7) முஸ்லிம்கள், ரமளானில் நோன்பு இருக்கிறார்கள் ஏனென்றால், அது கட்டாயக் கடமை என்பதால்.
கிறிஸ்தவர்கள், அதிக நேரத்தை தேவனோடு செலவிடவேண்டும் என்பதற்காக உபவாசம் இருந்து ஜெபம் செய்து, தேவனோடு நெருங்குகிறார்கள், இது கட்டாயத்தின் பெயரில் எடுத்த முடிவு அல்ல, சுயவிருப்பத்தின் படி எடுத்த முடிவு ஆகும்.
8) முஸ்லிம்கள் தங்கள் தீய காரியங்களின் எண்ணிக்கையை விட, நல்ல காரியங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கவேண்டும் என்பதற்காக நற்காரியங்களைச் செய்கிறார்கள்.
கிறிஸ்தவர்கள் தங்கள் நற்காரியங்கள் மூலமாக தேவனுடைய பெயர் மகிமைப்படுத்தப்படவேண்டும் என்பதற்காக நற்காரியங்களைச் செய்கிறார்கள்.
இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. (மத்தேயு 5:16)
9) அல்லாஹ் தங்களை நிச்சயம் ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கை முஸ்லிம்களுக்கு கிடையாது.
பிதாவாகிய தேவன் இயேசுக் கிறிஸ்து மூலமாக தங்களை ஏற்றுக்கொண்டார் என்ற நம்பிக்கை கிறிஸ்தவர்களுக்கு உண்டு.
13. இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.
14. [குமாரனாகிய] அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. (கொலோசெயர் 1:13-14)
- பரலோகத்திற்கு செல்லும் வழியை நீங்கள் விலை கொடுத்து வாங்க முடியாது.
- பரலோகத்திற்கு செல்லும் வழியை நீங்கள் லஞ்சம் கொடுத்து வாங்க முடியாது.
- பரலோகத்திற்கு செல்லும் வழியை நீங்கள் நற்காரியங்கள் செய்து சம்பாதிக்க முடியாது.
- பரலோகத்திற்கு செல்லும் வழியை நீங்கள் சுயமாக சம்பாதிக்கமுடியாது.
- பரலோகத்திற்கு செல்லும் வழியை நீங்கள் பொய் சொல்லி சம்பாதிக்கமுடியாது.
- பரலோகத்திற்கு செல்லும் வழியை நீங்கள் பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளமுடியாது.
- ஏனென்றால், அதற்கான விலையை உங்களுக்கு பதிலாக ஏற்கனவே செலுத்தியாகிவிட்டது.
எனக்கு அந்த விலை செலுத்தப்பட்டுள்ளது என்ற உண்மையை நீங்கள் ஏற்கலாம், அல்லது மறுக்கலாம். ஆனால், உங்களின் இந்த தீர்மானத்தின் மேல் தான் உங்கள் நித்தியம் நிர்ணயிக்கப்படுகின்றது.
கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;
ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல; (எபேசியர் 2:8-9)
இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;
சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். (யோவான் 8:31,32)
ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள், (யோவான் 8:36)
ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய். (கலாத்தியர் 4:7)
ஆங்கில மூலம்: ARE YOU A SLAVE OR A SON?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக