மாற்கு சுவிசேஷத்தில் (12:1-12), இயேசு குத்தகைக்காரர்கள் பற்றி ஒரு உவமையைச் சொன்னார். இந்த உவமையை கவனமாக படித்து, இயேசு உண்மையில் அதில் என்ன சொல்கிறார் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
சுருக்கமாக சொல்வதென்றால், ஒரு மனிதன் திராட்சை தோட்டத்தை உருவாக்கி, அதனை சில விவசாய குத்தகைக்காரர்களுக்கு 'குத்தகைக்கு' விட்டுச் சென்றார். சில மாதங்கள் கடந்த பிறகு, தனக்கு வரவேண்டிய அறுவடையை (வாடகையை) கொடுங்கள் என்றுச் சொல்லி, தன்னுடைய வேலைக்காரர்களை ஒருவருக்கு பின்னால் ஒருவராக சிலரை அனுப்புகிறார். அந்த குத்தகைக்காரர்கள் தோட்டத்தின் எஜமான் அனுப்பிய வேலைக்காரர்களில் சிலரை அடித்து வெறுங்கையாக அனுப்பிவிடுகிறார்கள், சிலரை கொன்றும், சிலரை அவமானப்படுத்தியும் அனுப்பிவிடுகிறார்கள்.
இந்த கதையின் மையக்கருத்து என்ன? அல்லது இதன் மூலமாக இயேசு எவைகளைச் சொல்ல விரும்புகிறார்?
இந்த கதையில் வரும் தோட்டக்காரர் (எஜமான்) இறைவன் ஆவார். அவருடைய வேலைக்காரர்கள் என்பவர்கள், அவர் காலங்காலமாக அனுப்பிய தீர்க்கதரிசிகள் (நபிகள்) ஆவார்கள். மக்கள் அந்த தீர்க்கதரிசிகளில் சிலரை கேவலப்படுத்தினார்கள், சிலரை கொடுமைப்படுத்தினார்கள், சிலரை கொன்றார்கள்.
தன் வேலையாட்களை (நபிகளை/தீர்க்கதரிசிகளை) அனுப்பியும் ஒன்றும் நடக்காதபோது, அந்த தோட்டத்தின் எஜமான் என்ன செய்தான்? இப்போது மூன்று வசனங்களை படிப்போம்.
6. அவனுக்குப்பிரியமான ஒரே குமாரன் இருந்தான்; என் குமாரனுக்கு அஞ்சுவார்களென்று சொல்லி, அவனையும் கடைசியிலே அவர்களிடத்தில் அனுப்பினான்.
7. தோட்டக்காரரோ: இவன் சுதந்தரவாளி, இவனைக் கொலைசெய்வோம் வாருங்கள்; அப்பொழுது சுதந்தரம் நம்முடையதாகும் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு;
8. அவனைப் பிடித்துக் கொலைசெய்து, திராட்சத்தோட்டத்துக்குப் புறம்பே போட்டுவிட்டார்கள். (மாற்கு 12:6-8)
இயேசுவின் மேற்கண்ட உவமையின் மூலமாக எவைகளை கற்கிறோம்?
நாம் மூன்று சத்தியங்களை கற்கிறோம்:
1) தம்முடைய அனைத்து தீர்க்கதரிசிகளையும் அனுப்பிவிட்ட பிறகு தேவன், தம்முடைய ஒரே பேரான குமாரனை அதாவது இயேசுவை கடைசியாக அனுப்பினார்.
2) தம்முடைய குமாரனுக்கு அடுத்தபடியாக, வேறு எந்த ஒரு நபியையும், இறைத்தூதரையும் தேவன் அனுப்பவில்லை.
3) அவர் அனுப்பிய குமாரனை, அந்த குத்தகைக்காரர்கள் கொலை செய்தார்கள்.
[மேற்கண்ட உவமையில் அந்த தோட்டத்தின் எஜமான் அந்த தீய குத்தகைக்காரர்களை என்ன செய்தார் என்பதை நீங்கள் மாற்கு 12:1-12 வரை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்]
1. பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன்,
2. இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.
3. இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார். (எபிரேயர் 1:1-3)
(இயேசுவிற்கு பிறகு, தேவன் எந்த ஒரு தீர்க்கதரிசியையும் அனுப்பவில்லை, அனுப்பவேண்டிய அவசியமும் இல்லை. முஹம்மது தன்னை 'பைபிளின் இறைவன்' தான் அனுப்பினார் என்றுச் சொன்னதிலிருந்து, அவர் ஒரு பொய் தீர்க்கதரிசி என்று நிரூபனமாகிறது)
ஆங்கில மூலம்: THE LAST ONE SENT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக