சௌதி அரேபியாவில் கொண்டாடிய கிறிஸ்துமஸ்
Christmas in Saudi Arabia
பெறுநர் - To:
கிறிஸ்துவில் ஒரு விசுவாசிக்கு,
சௌதி அரேபியா.
உங்களுக்கு என் வாழ்த்துக்கள்,
நீங்கள் என்னை ஒருவேளை மறந்துப்போய் இருக்கலாம், ஆனால் நான் உங்களை நித்தியத்திலும் நியாபகத்தில் வைத்திருப்பேன்.
நவம்பர் மாதம் 1992ம் ஆண்டு, நான் அமெரிக்காவின் விமானப்படை(US Air Force) பிரிவின் சார்பாக 60 நாட்கள் சௌதி அரேபியாவில் பணிபுரியும் படி அனுப்பப்பட்டேன். இதனால் கிறிஸ்துமஸ் விடுமுறையிலும் நாம் சௌதியில் இருக்கவேண்டிய நிலையில் இருந்தேன், நான் மிகவும் வேதனை அடைந்தேன். ஏனென்றால், என்னுடைய மனைவி எங்கள் முதல் குழந்தையை தன் கருவில் சுமந்துக்கொண்டு இருந்தாள், இந்த கிறிஸ்துமஸ் கால விடுமுறையில் நான் அவளோடு செலவிட வேண்டும் என்று அதிகமாக விரும்பினேன்.
சௌதி அரேபியாவில் வந்து இறங்கியதும், என் மனவேதனை இன்னும் அதிகமானது, ஏனென்றால், இங்கு கிறிஸ்துமஸ் விடுமுறை கொண்டாட்டத்திற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மிகவும் அதிகமாக இருந்தது. அதாவது, எந்த தோரணங்களும் இருக்கக்கூடாது, கிறிஸ்தவ கூடுகைப் பற்றிய எந்த ஒரு போதுக் கூட்டமும் நடத்தலாகாது, கிறிஸ்தவ பாடல்களும் பாடப்படக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் எங்கள் முகாம்களில் கூட இல்லை என்பதை கேட்டதும், இன்னும் வேதனை அதிகமாகியது. அனேக ஆண்டுகள் தேவனுக்கு சேவை செய்யாமல் உலக வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்திய எனக்கு, இந்த சூழ்நிலை என் கிறிஸ்தவ நம்பிக்கையை மறுபடியும் புதுப்பித்துக் கொள்ள, கிறிஸ்துவின் பிறப்பை உண்மையாக கொண்டாட விடுமுறை கிடைக்குமா என்று ஏங்கினேன்.
கிறிஸ்துமஸ் நெருங்க நெருங்க, எனக்கு கோபம் கலந்த வருத்தம் அதிகமானது, இந்த கிறிஸ்துமஸ் காலங்களில் இருக்கவேண்டிய சந்தோஷ மனப்பான்மை மறைந்து என் வாழ்வே இருட்டாக தோன்றியது. கிறிஸ்துமஸ்ஸுக்கு முன்பாக சில பரிசுகளை வாங்கி என் மனைவிக்கு அனுப்பலாம் என்ற எண்ணத்தில், டிசம்பர் மாதம் நடுவில் கடைத்தெருவிற்குச் சென்றேன். இந்த நேரத்தில் தான் நான் உங்களை சந்தித்தேன். நான் உங்கள் கடையில் நுழைந்தேன். அனேக பொருட்களை தெரிந்தெடுத்தேன் மற்றும் அவைகளின் விலைகளுக்காக உங்களோடு பேரம் பேசினேன். நான் இப்படி விலை பேசிக்கொண்டு இருக்கும் போது, என் கோபக் கணலை அப்படியே உங்கள் மீது காட்டினேன். நீங்கள் ஒரு "முஸ்லீமாக இருப்பீர்கள்" என்று நினைத்து, உங்களுக்கு என் கோபம் பற்றி தெரியவரும் என்பதை நினைத்து உங்களோடு பேசிக்கொண்டு இருந்தேன். நான் உங்களோடு பேசும் போது, "இந்த பொருட்கள் கிறிஸ்துமஸ்ஸுக்காக வாங்குகிறேன்" என்றும், "இவைகளை கிறிஸ்துமஸ் பரிசுகளாக அனுப்பயுள்ளேன்" என்றும் அடிக்கடிச் சொன்னேன். உங்களுக்கு முன்பாக கிறிஸ்துவின் பெயரை அடிக்கடிச் சொல்லி, உங்களுக்கு இயேசுவின் பிறப்பில் உள்ள சந்தோஷத்தை உங்களுக்கு காட்டவேண்டும் என்று விரும்பி, இப்படி பேசினேன்.
பிறகு நடந்தது தான் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது! நான் இன்னும் என்ன பொருட்கள் வாங்க உள்ளீர்கள் என்று நீங்கள் என்னை கேட்டீர்கள். நான் வாங்க வேண்டிய மீதி பொருட்களை உங்களுக்குச் சொன்னேன். நீங்கள் என் எல்லா பொருட்களையும் பணம் செலுத்துமிடத்தில் அனுப்பிவிட்டு, மெல்லிய குரளில் என்னிடம் "இந்த பொருட்களை என் சார்பாக கிறிஸ்துமஸ் பரிசாக பெற்றுக்கொள்ளுங்கள், நானும் ஒரு கிறிஸ்தவன் தான்" என்றுச் சொல்லி, எனக்கு பரிசுகளை கொடுத்தீர்கள். பிறகு, இன்னும் மெல்லிய குரலில், "தயவு செய்து, இப்படி நான் கிறிஸ்துமஸ் பரிசுகள் உங்களுக்கு கொடுத்ததாக வெளியே யாரிடமும் சொல்லவேண்டாம், அப்படி சொல்வீர்களானால், நான் என் கடையை முழுவதுமாக இழக்கவேண்டி வரும்" என்றுச் சொன்னீர்கள்.
உங்களின் இந்த வார்த்தைகளை கேட்டவுடன், நான் எவ்வளவு பாக்கியவான் என்பதை உணர்ந்தேன். என் வாழ்வின் முதல் 30 ஆண்டுகள் நான் தேவனை தொழுதுக்கொண்டேன், ஜெபித்தேன், நான் விரும்பியபடி கிறிஸ்துமஸ்ஸை கொண்டாடினேன். உங்களைப்போல அல்லாமல், எந்த ஒரு நாடும், எந்த ஒரு குழுவும் அல்லது குடும்ப நபர்களும் என்னை கொடுமைப்படுத்தியதை நான் கண்டதே இல்லை. நீங்கள் வாழும் உலகின் ஒரு சிறிய பகுதியை இன்று நான் கண்டேன். ஒரு சௌதி கிறிஸ்தவராக நிங்கள் இருப்பதினால் உங்களுக்கு காத்திருக்கும் ஆபத்தைக் கண்டேன். நீங்கள் என்னிடம் பகிர்ந்துக் கொண்ட விஷயம் வெளியே தெரிந்தால் உங்களுக்கு நடக்கும் விபரீதங்களைக் கண்டேன். உங்களுடைய தைரியத்தையும் அதே நேரத்தில் அன்பையும் கண்டு வியப்பில் ஆழ்ந்துள்ளேன்.
நீங்கள் அன்று இரவு எனக்கு மூன்று பரிசுகளைக் கொடுத்தீர்கள்.முதலாவதாக, உங்களிடம் நான் விலைக்கு வாங்கிய பொருட்கள் மிகவும் அழகானவைகள், மற்றும் எனக்கு பரிசுகளாக நீங்கள் கொடுத்த பொருட்கள் இன்னும் அருமையானவைகள், ஏனென்றால், அவைகளில் கொடுப்பவரின் இருதயத்தைக் கண்டேன். இரண்டாவதாக, உங்களின் வார்த்தைகள் என்னை தொட்டது, என் விடுமுறை நாட்களை எனக்கு மறுபடியும் கொடுக்கப்பட்டது போல இருந்தது, மற்றும் கிறிஸ்து என் உள்ளத்தில் வாழும் ஒவ்வொரு நாளும் கிறிஸ்துமஸ் என்பதை நான் உணரச் செய்தது. கடைசியாக, நீங்கள் உங்கள் சாட்சியை என்னிடம் பகிர்ந்துக்கொண்டீர்கள், பணம் செலுத்துகின்ற அந்த இடத்தில்(Cash Counter) மெல்லிய குரலில் சொன்ன அந்த சாட்சியே, இதுவரை நான் கெட்ட சாட்சிகளிலெல்லாம் மிகவும் சத்தம் உயர்த்தி சொல்லப்பட்ட சாட்சியாகவும், உயிருள்ள சாட்சியாகவும் நான் உணருகிறேன். உங்களின் அந்த சாட்சி தான் என்னை உற்சாகப்படுத்தியது, மற்றும் தேவனை துதிக்கும் படி எனக்கு கிடைத்திருக்கின்ற சுதந்திரத்திற்காக தேவனை தொடர்ந்து துதிக்கும்படிச் செய்தது. மற்றும் உலகில் உள்ள அவரது பிள்ளைகள் அனைவரோடும் அவர் இருந்து, அவர்கள் இரகசியமாக தேவனை துதிக்கும் போது, இப்படி மெல்லிய குரலில் தங்கள் சாட்சிகளைச் சொல்லி மற்றவர்களை உற்சாகப்படுத்தும்போது, அவர்களை பாதுகாக்கும் படி ஜெபிக்கவும் என்னை உற்சாகப்படுத்தியது.
இந்த கிறிஸ்துமஸ் நாளன்று, யார் யாரெல்லாம் கிறிஸ்துவின் பிறப்பை இரகசியமாக கொண்டாடுகிறார்களோ, அப்படிப்பட்ட சகோதர சகோதரிகளோடு என் இருதயம் இருக்கிறது. ஒரு நாள் நாம் அனைவரும் தேவனின் இராஜ்ஜியத்தில் அவருக்கு முன்பாக நின்று சுதந்திரமாக நின்று தொழுதுக்கொள்ளும் நாளுக்காக எதிர்ப்பார்த்துக் கொண்டு இருக்கும், உங்கள் கிறிஸ்த சகோதரன்.
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
இப்படிக்கு
கிறிஸ்துவிற்குள் உங்களுக்கு நன்றியுள்ள ஒரு சகோதரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக