பர்னபா சுவிசேஷம் என்ற ஒரு மோசடி புத்தகத்தை நாம் ஆய்வு செய்துக்கொண்டு இருக்கிறோம். இதுவரை கொடுத்த பதில்களை கீழே படிக்கலாம்:
தற்போதைய கட்டுரையில் இன்னொரு சுவாரசியமான விவரத்தைப் பார்ப்போம். இதுவரை பர்னபா சுவிசேஷத்தை தலையில் வைத்துக்கொண்டு ஆடிக்கொண்டு இருந்த முஸ்லிம்கள் அனைவரும், இந்த கட்டுரையில் சொல்லப்படும் விவரங்களைப் பார்த்து, அப்புத்தகத்தை தூக்கி எறிவார்கள். ஏனென்றால், பர்னபா சுவிசேஷம் குர்-ஆனை அல்லவா தூக்கி எறிந்துள்ளது?
உப தலைப்புக்கள்:
1) குர்-ஆனின் படி, 'இயேசு மஸீஹ் (மேசியா)' ஆவார்
2) பர்னபா சுவிசேஷத்தின் படி, 'முஹம்மது மஸீஹ் (மேசியா)' ஆவார்
3) யார் சொல்வது உண்மை? குர்-ஆன் சொல்வதா? (அ) பர்னபா சுவிசேஷம் சொல்வதா?
4) முடிவுரை
-----------------
1) குர்-ஆனின் படி, 'இயேசு மஸீஹ் (மேசியா)' ஆவார்
குர்-ஆனின் கீழ்கண்ட வசனங்களில், 'இயேசு தான் மஸீஹா' என்று தெளிவாக சந்தேகத்துக்கு இடமில்லாதபடி சொல்லப்பட்டுள்ளது.
குர்ஆன் 3:45. மலக்குகள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்;மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;
குர்ஆன் 4:157. இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹைகொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); . . ..
குர்ஆன் 4:171. வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; . . .
குர்ஆன் 5:17. திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா) தான்அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்தகையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். "மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால், (அதிலிருந்து அவர்களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்" என்று (நபியே!) நீர் கேளும்; . . . .
குர்ஆன் 5:72. "நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா)தான் அல்லாஹ்" என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: . . .
குர்ஆன் 5:75. மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை, இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர். . . . .
குர்ஆன் 9:30. யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; . . . .
குர்ஆன் 9:31. அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும்தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; . . . .(முஹம்மது ஜான் தமிழாக்கம்)
'மஸீஹ்' என்ற பட்டப்பெயரை குர்-ஆன் இயேசுவிற்கு மட்டுமே சூட்டுகிறது என்பதை கவனத்தில் வைக்கவும் (இவ்விவரத்தை குர்-ஆன், பைபிளிலிருந்து எடுத்து மறுமதிவு செய்துள்ளது என்பது வேறு விஷயம்).
2) பர்னபா சுவிசேஷத்தின் படி, 'முஹம்மது மஸீஹ் (மேசியா)' ஆவார்
பர்னபா சுவிசேஷம் தான் உண்மையான இன்ஜில் என்றும், பர்னபா என்பவர் தான் இயேசுவின் உண்மையான சீடர் என்றும் முஸ்லிம்கள் தங்கள் குர்-ஆன் மொழியாக்கங்களில், இதர தளங்களில், புத்தகங்களில் எழுதிக்கொண்டு வருகிறார்கள்.
உதாரணத்திற்கு, தமிழ் நாடு தௌஹித ஜமாத் ஆசிரியர் குழு வெளியிட்ட குர்-ஆன் தமிழாக்கத்தில் கீழ்கண்ட விதமாக எழுதப்பட்டுள்ளது:
தமிழ் நாடு தௌஹித ஜமாத் குர்-ஆன் தமிழாக்கம், விளக்க எண்: 456 (அவர்களின் தளத்திலிருந்து எடுக்கப்பட்ட நாள்: 30 மே 2018)
மேற்கண்ட விளக்கத்தின் படி,
• குர்-ஆன் சொல்லும் விவரத்துக்குத் தான் வலுவான ஆதாரம் சரித்திரத்தில் உள்ளதாம்,
• பர்னபா தான் இயேசுவின் நேரடி சீடராம்!
• மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் போன்றவர்களில் இயேசுவின் நேரடி சீடர்கள் இல்லையாம்.
• இயேசுவைப் பற்றி இஸ்லாம் சொல்வதைப்போலவே பர்னபா சுவிசேஷமும் சொல்வதால், கிறிஸ்தவ மதகுருக்கள், இதை நீக்கிவிட்டார்களாம்!
ஆய்வுகள் எதையுமே செய்யாமல், மனம் போன போக்கில் எழுதுவது முஸ்லிம்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. சரி வாருங்கள், இஸ்லாமின் கோட்பாடுகளுக்கு ஆதாரமாக முஸ்லிம்கள் காட்டும் பர்னபா சுவிசேஷம் இயேசு மற்றும் முஹம்மது பற்றிச் சொல்லும் பல விவரங்களில் 'மஸீஹா' என்பதைப் பற்றி மட்டும் சுருக்கமாக காண்போம்.
பர்னபா சுவிசேஷமும் 'மஸீஹ்' முஹம்மதுவும்:
கிழ்கண்ட வசனங்களில், இயேசு 'கிறிஸ்து' இல்லையென்றும், முஹம்மது தான் 'கிறிஸ்து' என்றும் இப்புத்தகம் சொல்கிறது. முஸ்லிம்களுக்கு 'கிறிஸ்து' என்றால் அரபியில் 'மஸீஹா' என்று பொருள் என்று தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
1. Chapter 42. Wherefore they sent the Levites and some of the scribes to question him, saying: "Who are you?" Jesus confessed, and said the truth: "I am not the Messiah."
2. Chapter 82. The woman said: "O Lord, perhaps you are the Messiah." Jesus answered: "I am indeed sent to the House of Israel as a prophet of salvation; but after me shall come the Messiah, sent of God to all the world; for whom God has made the world.
3. Chapter 83. After the prayer of midnight; the disciples came near to Jesus, and he said to them: "This night shall be in the time of the Messiah, Messenger of God, the jubilee every year that now comes every hundred years.
4. Chapter 96. Therefore I pray you tell us the truth, are you the Messiah of Godwhom we expect?" Jesus answered: "It is true that God has so promised, but indeed I am not he, for he is made before me, and shall come after me."
5. Chapter 97 Jesus answered: "As God lives, in whose presence my soul stands, I am not the Messiah whom all the tribes of the earth expect,
6. Chapter 97 Then said the priest: "How shall the Messiah be called, and what sign shall reveal his coming?" …" Muhammad is his blessed name."
7. Chapter 198. but since I have confessed, not only that I am not God, as is the truth, but have confessed also that I am not the Messiah,
8. Chapter 206. When day was come, Jesus went up to the Temple with a great multitude of people. Whereupon the high priest drew near, saying: 'Tell me, O Jesus, have you forgotten all that you did confess, that you are not God, nor son of God, nor even the Messiah?' Jesus answered: 'No, surely, I have not forgotten; for this is my confession which I shall bear before the judgment seat of God on the day of judgment. For all that is written in the Book of Moses is most true, inasmuch as God our creator is [God] alone, and I am God's servant and desire to serve God's Messenger whom you call Messiah.'
'மஸீஹ்' பற்றி இயேசு சரமாரியாக பேசிய வசனங்கள் பர்னபா சுவிசேஷத்தில் மேற்கண்ட விதமாக உள்ளது. பல சந்தர்பங்களில் 'நீர் மஸீஹாவா?' என்று இயேசுவிடம் கேட்டபோது, உடனே இயேசு 'இல்லை, நான் மஸீஹ் இல்லை' என்று மறுத்துள்ளார். இது மட்டுமல்ல, 'நாம் அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் மஸீஹ் முஹம்மது ஆவார்' என்றும் அவர் சொன்னதாக பர்னபா சுவிசேஷம் சொல்கிறது.
3) யார் சொல்வது உண்மை? குர்-ஆன் சொல்வதா? (அ) பர்னபா சுவிசேஷம் சொல்வதா?
நாம் இதுவரை குர்-ஆன் சொல்லும் விவரத்தையும் பார்த்தோம், பர்னபா சுவிசேஷம் சொல்வதையும் பார்த்தோம்.
குர்-ஆனின் படி --> 'இயேசு தான் மஸீஹா', முஹம்மது வெறும் இறைத்தூதர் தான்
பர்னபா நூலின் படி --> இயேசு வெறும் இறைத்தூதர் ஆவார், 'முஹம்மது தான் மஸீஹா'
முஸ்லிம்கள் இப்போது என்ன முடிவை எடுக்கப்போகிறார்கள்? அவர்களின் விருப்பத்திற்கே விட்டுவிடுகிறேன்.
பர்னபா சொல்வதை ஏற்றுக்கொண்டு, குர்-ஆனை புறக்கணிக்கப்போகிறார்களா? பர்னபா என்பவர் இயேசுவின் நேரடி சீடர் என்று வக்காளத்து வாங்கும் தமிழ் நாடு தௌஹித் ஜமாத் போன்ற இயக்கங்கள், குர்-ஆன் சொல்வது பொய், அல்லாஹ் சொல்வது பொய், முஹம்மது சொன்னது பொய், பர்னபா சுவிசேஷம் சொல்வது தான் மெய் என்றுச் சொல்லப்போகிறார்களா?
அல்லது
தாங்கள் செய்த தவறை உணர்ந்து, தங்கள் குர்-ஆன் தமிழாக்க விளக்கம் எண் 456ஐ நீக்கப்போகிறார்களா? பொறுத்திருந்துப் பார்ப்போம்.
முடிவுரை:
இந்த கட்டுரையில், குர்-ஆனின் போதனைகளுக்கு நேர் எதிராக போர்க்கொடி தூக்கிய பர்னபா சுவிசேஷத்தின் விவரத்தை சுருக்கமாகக் கண்டோம்.
குர்-ஆன் ஒரு முறை கூட முஹம்மதுவை மஸீஹா என்று அழைப்பதில்லை, ஆனால், அனேக இடங்களில் இயேசுவை மஸீஹ் என்று அழைக்கிறது. இது தவறு என்று பர்னபா சொல்கிறது, அதாவது முஹம்மது தான் மஸீஹா, இயேசு மஸீஹா இல்லை என்றுச் சொல்கிறது. இதுவரை பர்னபாவை தலையில் வைத்துக்கொண்டு ஆட்டம் போட்டுக்கொண்டு இருந்த முஸ்லிம்கள், என்னசெய்வதென்று புரியாமல் தவிக்கிறார்கள், தவிக்கப்போகிறார்கள்.
இதன் மூலம் அறிவதென்ன? அரைகுறை ஞானம் ஆபத்து. பைபிளை குற்றப்படுத்த, குர்-ஆனின் போதனைகளை நியாயப்படுத்த முஸ்லிம்கள் எடுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிவடைகின்றன. இனியாவது, ஒரு விவரத்தைச் சொல்வதற்குமுன், ஆய்வு செய்து, புரிந்துக்கொண்டு எழுதுவார்களா முஸ்லிம்கள்!
பர்னபா சுவிசேஷத்தின் இன்னொரு முரண்பாட்டை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
தேதி: 3 - ஜூன் - 2018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக