ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

 1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
 2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
 3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
 4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
 5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
 6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
 7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
 8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
 9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
 10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
 11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
 12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
 13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
 14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
 15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
 16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
 17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
 18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
 19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
 20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
 21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
 22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
 23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
 29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
 30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
 31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
 32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
 33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
 34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
 35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
 36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
 37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
 38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
 39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
 40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
 41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
 42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
 43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
 44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
 45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
 46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
 47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
 48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
 49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
 50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
 51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
 53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
 54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
 55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
 56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
 57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

 1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
 2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
 3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
 4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
 5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
 6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
 7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
 8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
 9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
 10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
 11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
 12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
 13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
 14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
 15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
 16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
 17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
 18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
 19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
 20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
 21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
 22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
 23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
 24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
 25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
 26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
 27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
 28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
 29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
 30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
 31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
 32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
 33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
 34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
 35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
 36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
 37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
 38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
 39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
 40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
 41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
 43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
 44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
 45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
 46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
 47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
 48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
 49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

திங்கள், 9 ஜூலை, 2007

இயேசுவின் வரலாறு 5 : மறுப்புக் கட்டுரை பாகம் 1

 
இயேசுவின் பிறப்பு விவரங்கள் - பைபிளிலும்,கும்-ஆனிலும்
(ஒரு மறுப்புக் கட்டுரை - 5)தமிழ்முஸ்லீம் என்ற வெப்தளத்தில் ஜி. நிஜாமுத்தீன் அவர்கள் எழுதிய "இயேசுவிற்கு நேர்ந்ததென்ன" என்ற தொடர் கட்டுரையின் நான்கு பாகங்களுக்கு நாம் மறுப்பைப் பார்த்துள்ளோம். இப்போது நாம் ஐந்தாவது தொடரின் மறுப்பைப் பார்ப்போம்.


தொடர் - 1 ன் மறுப்புக்கட்டுரையை இங்கு காணலாம்.
தொடர் - 2ன் மறுப்புக்கட்டுரையை இங்கு காணலாம்.
தொடர் - 3ன் மறுப்புக்கட்டுரையை இங்கு காணலாம்.
தொடர் - 4ன் மறுப்புக்கட்டுரையை இங்கு காணலாம்.


நிஜாமுத்தீன் எழுதிய தொடர் - 5 ஐ இங்கு கணலாம். (http://www.tamilmuslim.com/)


நிஜாமுத்தீன் எழுதிய தொடர் - 5ன் மறுப்பு


நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியதை பச்சை வண்ணத்தில் கொடுக்கப்படுகிறது. என் மறுப்பு அதை தொடர்ந்து தரப்படுகிறது.இந்த தொடரில், நீஜாமுத்தீன் அவர்கள் பைபிளுக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகளை வைக்கிறார்.அ) இயேசுவின் உண்மை வரலாறு குர்-ஆனில் மட்டும் தான் கிடைக்கும், பைபிளில் கிடைக்காது என்று கூறுகிறார்.ஆ) பைபிளில் சொல்லப்படாத "குழந்தை இயேசு அற்புதம்".இந்த இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் சுருக்கமாக, இந்த கட்டுரையில் பதில் அல்லது மறுப்பு ஆதாரங்களோடு காண்போம்.
நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:


இயேசுவிற்கு நேர்ந்ததென்ன..!


பைபிளில் சொல்லப்படாத குழந்தை அற்புதம் (தொடர்-5)


பரங்கிப்பேட்டை ஜி. நிஜாமுத்தீன்


இக்கட்டுரைப் பற்றி கருத்து மேலதிக விளக்கம் சொல்ல எண்ணுபவர்கள் கீழ் கண்ட லிங்கில் பதிக்கலாம்.

http://idhuthanislam.blogspot.com/2006/09/5.html


இதுவரை வந்த நான்குத் தொடர்களில் இயேசுவின் தாயார் மரியாள் எந்த ஆணும் தீண்டாத நிலையில் கர்ப்பம் தரிக்க தயாராக வேண்டிய அவசியத்தையும், மன ரீதியாக அவரை இறைவன் தயார் படுத்திய விபரத்தையும் கண்டோம். இனி பைபிள் கண்டுக் கொள்ளாத குர்ஆன் மிக அற்புதமாக சொல்லக் கூடிய இயேசுவின் பால்ய நிலையைக் காண்போம். பிறந்த குழந்தை தன் தாயின் களங்கத்தை துடைத்தெறியும் விதமாகவும், தன்னைப் பெற்றெடுத்தத் தாய் எத்துனை புனிதமானவள் என்பதையும் காலாகாலத்திற்கும் மக்கள் விளங்கும் விதத்தில் அற்புதம் செய்தது. ஆனால் இதைப் பற்றி பைபில் கண்டுக் கொள்ளவே இல்லை. ஏன் இந்த வித்தியாசம்? அதை அறிவோம்.என் மறுப்பு:


மரியாளின் கற்பிற்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் குர்-ஆன் இயேசுவின் பிறப்பைப் பற்றி நிகழ்ச்சிகளைச் சொல்கிறது. ஆனால், பைபிளில் மரியாளுக்கு எந்த களங்கமும் வராத விதத்தில் யோசேப்பிற்கு தெரியப்படுத்தி, மரியாளை யோசேப்பு தன்னிடத்தில் சேர்த்துக்கொள்ளும் படி செய்துள்ளார். எனவே, எது உண்மை என்பது இக்கட்டுரையை படிப்பவர்களுக்கு தெரியவரும்.


நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:


பைபிளில்.18 இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியால் கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. 19. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். 20. அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. 21. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். 22. தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. 23. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம். 24. யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு; 25. அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான் (மத்தேயு அதிகாரம் 1)

--------------------------------------------------------------------------------

4. அப்பொழுது யோசேப்பும் தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி, 5. கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப்போனான். 6. அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது. 7. அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். (லூக்கா அதிகாரம் 2)

--------------------------------------------------------------------------------

இயேசுவின் பிறப்புப் பற்றி அதாவது மரியாள் கர்ப்பம் தரித்து குழந்தைப் பெற்றெடுத்த பொழுதுவரை உள்ள விபரங்களை மத்தேயும் - லூக்காவும் மேற்கண்டவாறு சொல்லியுள்ளார்கள்.என் மறுப்பு:
பைபிளில் சொல்லப்பட்டது தான் சரியான தகவல் என்பதை இது வரை நாம் பார்த்த நான்கு மறுப்புக் கட்டுரைகளே நிருபிக்கின்றன.நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:


பரிசுத்த ஆவியால் மரியாள் கர்ப்பம் தரித்தால் என்பதில் சுவிஷேசம் எழுதியவர்களுக்கு மத்தியில் ஒத்த கருத்து உள்ளது. இனி குர்ஆன் இதுபற்றி என்ன சொல்கிறது என்பதை பார்த்து விட்டு வருவோம்.குர்ஆனில்.வானவர்கள் (மரியாளி)மரியமிடம் கூறினார்கள்: நிச்சயமாக இறைவன் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகன் பிறக்கப்போவது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அவர் பெயர் மஸீஹ், மர்யமின் மகன் ஈஸா (மரியாளின் மகன் இயேசு) என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார். (அல்குர்ஆன் 3:45)இது மரியமுக்கு (மரியாளுக்கு) சொல்லப்பட்ட சுப செய்தியாகும். இப்படி நடக்க வாய்ப்புள்ளதா.. என்ற சந்தேகம் மரியமுக்கு (மரியாளுக்கு) ஏற்படுகின்றது. அந்த சந்தேகத்தை அவர் வெளிபடுத்தவும் செய்கிறார்.(மர்யம் இறைவனிடம்) கூறினார்: 'என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?' (அதற்கு) அவன் கூறினான்: 'அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் 'ஆகுக' எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.' (அல் குர்ஆன் 3:47)


என் மறுப்பு:1. அல்லா ஏன் "இயேசுவை குறிப்பிடும் போது மரியாளின் குமாரன்" என்றுச் சொல்கிறார், இதனால் என்ன சொல்ல வருகிறார்?இயேசு மரியாளின் மகன் என்று புதிய ஏற்பாட்டில் "ஒரு இடத்தில்" மட்டும் தான் வருகிறது. அதுவும் தேவனோ அல்லது அவரது சீடர்களோ சொன்னது இல்லை, யூதர்கள் சொன்னது. பார்க்க மாற்கு: 6: 1-3


மாற்கு 6: 1-3
1. அவர் அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தாம் வளர்ந்த ஊருக்கு வந்தார்;அவருடைய சீஷரும் அவரோடேகூட வந்தார்கள்.


2. ஓய்வு நாளானபோது, ஜெபஆலயத்தில் உபதேசம்பண்ணத்தொடங்கினார்.அநேகர் கேட்டு, ஆச்சரியப்பட்டு, இவைகள் இவனுக்கு எங்கே இருந்துவந்தது? இவன் கைகளினால் இப்படிபட்ட பலத்த செய்கைகள் நடக்கும்படிஇவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது?


3. இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபுயோசே யூதா சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் அல்லவா? இவன்சகோதரிகளும், இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? என்றுசொல்லி, அவரைக் குறித்து இடறலடைந்தார்கள்.புதிய ஏற்பாட்டில் இந்த (மாற்கு: 6: 1-3)இடம் தவிர "மரியாளின் குமாரன்" என்று வேறு எங்கும் நாம் பார்க்கமுடியாது.இயேசுவை குறிப்பிடும் இடங்களில் எல்லாம் "மரியாளின் மகன்" என்று அவரை குர்-ஆன் அறிமுகம் செய்கிறது. இதற்கு பல காரணங்கள் உண்டு.1. இயேசு "தேவனின் குமாரன்" என்று எல்லா கிறிஸ்தவர்களும் முகமது காலத்தில் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். முகமதுவும் அப்படியே "தேவக்குமாரன்" என்றுச் சொன்னால், இஸ்லாம் பொய்யாகிவிடும் என்பதால் அவர் இயேசுவை "மரியாளின் மகன்" என்றுச் சொன்னார்.2. இயேசுவின் தெய்வீகத்தன்மையை மறுக்கவேண்டும் என்பதனால், இயேசுவை "மரியாளின் மகன்" என்று அடிக்கடி முகமது சொல்லியுள்ளார், இயேசு "அல்லாவுடைய ரூவால்" ( பரிசுத்த ஆவியால்) பிறந்தாலும் சரி.3. மற்ற தீர்க்கதரிசிகளைப் போல இயேசுவும் ஒரு "தீர்க்கதரிசி" மட்டும் தான் என்றுக் காட்ட "மரியாளின் மகன்" என்று அறிமுகப்படுத்துகிறது குர்-ஆன்.2. அல்லா ஏன் "இயேசுவை குறிப்பிடும் போது மஸீஹா" என்றுச் சொல்கிறார், இதனால் என்ன பிரச்சனை?(அல்லாவின் அறியாமை:)என்னதான் இயேசுவின் தெய்வீகத்தன்மையை மறுப்பதற்கு இயேசு "மரியாளின் மகன்" என்று அல்லா சொன்னாலும், தன்னை அறியாமலேயே "இயேசுவை மஸீஹா" என்றுச் சொன்னதினால், யூதர்களும், கிறிஸ்தவர்களும், அல்லாவின் வசனத்தை இறைவனின் வசனமாக ஏற்றுக்கொள்ளவில்லை.காரணம் என்ன?"மஸீஹா" என்றால் என்ன? அது இயேசுவிற்கு பொருந்தும் என்று ஏன் கிறிஸ்தவர்கள் சொல்கிறார்கள். யூதர்கள் ஏன் இன்னும் அந்த "மஸீஹா" வின் வருகைக்காக எதிர் நோக்கியுள்ளனர்?அல்லா இயேசுவின் பிறப்பைப் பற்றி முதன்முதலில் அறிமுகம் செய்யும்போது. இயேசுவின் பெயரை "மேசிய" (அ) "மஸிஹா" (Messiah) என்றுச் சொல்கிறார். குர்-ஆன் பதினோரு முறை இயேசுவை "மஸீஹா" என்றுக்கூறுகிறது.


குர்-ஆன்
குர்-ஆன் 3:45
மலக்குகள் கூறினார்கள்; 'மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;குர்-ஆன் 4:157 இன்னும், 'நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹைகுர்-ஆன் 4:171 வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ்குர்-ஆன் 4:172 (ஈஸா) மஸீஹும், (அல்லாஹ்வுக்கு) நெருக்கமான மலக்குகளும் அல்லாஹ்வுக்குகுர்-ஆன் 5:17 திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்ததையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். 'மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருடைய தாயாரையுமகுர்-ஆன் 5:72 'நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்" என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்:குர்-ஆன் 5:75 மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை,குர்-ஆன் 9:30 யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் எள்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்;குர்-ஆன் 9:31 அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்;


எப்போது இயேசுவை "மஸீஹா" என்று அறிமுகம் செய்தாரோ, அப்போதே இஸ்லாமுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் அல்லா, தன்னை அறியாமலேயே.3. பைபிளில் மஸீஹா ( மேசியா ) :எபிரேய மொழியில் "மஸீஹா" (Messaih)என்றால் "அபிஷேகம் செய்யப்பட்டவர்" (Anointed) என்றுப்பொருள். கிரேக்க மொழியில் இதையே "கிறிஸ்தோஸ்" என்றுச் சொல்வார்கள். இவ்வார்த்தை தான் "கிறிஸ்து" என்று சொல்கிறோம்.பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசிகளையும், இராஜாக்களையும், எண்ணையால் அபிஷேகம் செய்வார்கள் ( தலையில் ஊற்றுவார்கள்). யாத் 30:22-31, 1 சாமுவேல் 10:1, 16:12-13.கோரேசு என்ற அரசனை கூட தேவன் மேசிய (அபிஷேகம் செய்யப்பட்டவர்) என்றுச் சொல்கிறார்.ஏசாயா: 45:1. கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை விழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும், அவனைப்பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதவது,

ஆனால் பழைய ஏற்பாட்டில் தேவன் ஒரு "மேசியாவை" மட்டும் குறிப்பிட்டு பல அற்புதமான வசனங்கள் சொல்லியுள்ளார். அவர் யார் ? அவர் மற்ற அரசர்களைப்போல இல்லை. அவர் வித்தியாசமானவர்.
சங்கீதம்: 2:1 - 11


1. ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்?


2. கர்த்தருக்கு விரோதமாகவும் அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி,


3. அவர்கள் கட்டுகளை அறுத்து அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம் என்கிறார்கள்.


4. பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.


5. அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களோடே பேசி, தமது உக்கிரத்திலே அவர்களைக் கலங்கப்பண்ணுவார்.

6. நான் என்னுடைய பரிசுத்தபர்வதமாகிய சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்றார்.


7. தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி, நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்


8. என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;


9. இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார்.


10. இப்போதும் ராஜாக்களே, உணர்வடையுங்கள் பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள்.


11. பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.


12. குமாரன் கோபங்கொள்ளாமலும் நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.


சங்கீதம்: 110 : 1, 4
1. கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி, நான் உம்முடைய சத்துருக்களை உமக்கு பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.4. நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம் மாறாமலுமிருப்பார்.
இந்த மேசிய எப்படிப்பட்டவர், மேலே பார்த்த வசனங்கள் நமக்குச் சொல்கிறது. இவர்:1. தேவனுடைய குமாரன் . சங்கீதம்: 2:72. ஜாதிகளை(Countries) சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை சொந்தமாகவும் பெற்றுக்கொள்வார் சங்கீதம்: 2:83. இருப்புக்கோலால் நொறுக்குவார் , குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவார் சங்கீதம்: 2:94. ராஜாக்களே, உணர்வடையுங்கள் பூமியின் நியாயாதிபதிகளே, இவரைப்பற்றி எச்சரிக்கையாயிருங்கள் சங்கீதம்: 2:105. குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு அவரை முத்தஞ்செய்யுங்கள் சங்கீதம்: 2:116. தேவனுடைய வலது பாரிசத்தில் உட்காருவார். சங்கீதம்: 110:17. நிரந்தரமாக அவர் ஆசாரியராக இருப்பார். சங்கீதம்: 110:4

இந்த மேசிய மற்ற தீர்க்கதரிசிகளைப்போல, இராஜாக்களைப்போல அல்ல, இவர் இராஜாதி இராஜாவாக இருப்பார். எல்லாரையும் விட மேலானவராக இருப்பார். இவரைத் தான் கிறிஸ்தவர்கள் "மேசிய" என்றும், "கிறிஸ்து" என்று அழைத்தார்கள்.

மேசியா என்றால் என்னவென்று பொருள் தெரியாமல், அல்லா இயேசுவின் பெயர் "மஸீஹா" என்று சொல்லிவிட்டார். அல்லா "இயேசுவை மேசியா என்றுச் சொன்னதினால், இயேசு ஒரு தேவ குமாரன் என்றும், இராஜாதி இராஜா என்றும் " தன்னை அறியாமலேயே சொல்லியுள்ளார். தன் தலை மிது தானே மண்ணை அள்ளி போட்டுக்கொண்ட கதை தான்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

இறைவன் இதை மட்டும் சொல்லாமல் மேலும் இரு செய்திகளை சொல்கிறான். ஏற்கனவே ஜகரிய்யா வீட்டில் வளர்ந்த மரியம் அவர்கள் உளவியல் ரீதியாக தயாராகி இருந்ததை முந்தைய தொடர்களில் கண்டோம். அதோடு சேர்த்து இறைவனின் இரு சந்தோஷமான செய்திகளும் மரியமை (மேரியை) அடைகின்றது. 1) உலகப் பெண்களில் அவர் சிறந்தவராக தேர்ந்தெடுக்கப்பட்டது. மரியமே! உம்மை இறைவன் தேர்வு செய்து தூய்மையாக்கி உலக பெண்கள் அனைவருக்கும் மேலாக உம்மை சிறப்பித்துள்ளான் என்று வானவர் கூறினார். (அல் குர்ஆன் 3:42) 2) குழந்தையால் ஏற்படும் சிறப்பும் பாதுகாப்பும். (உமக்கு பிறக்கும் குழந்தையாகிய அவர்) தொட்டில் பருவத்திலும் இளமையிலும் மக்களிடம் பேசுவார். மேலும் நல்லவர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார். (அல் குர்ஆன் 3:46) இந்த உரையாடல்கள் நடந்தப்பின்பு மரியம் கர்ப்பம் தரிக்கிறார். இறைவனின் வல்லமையை அவரது கர்ப்பப்பை உணர்கின்றது. காலங்கள் நகர்கின்றன. மரியமின் கர்ப்பம் அவர் வளர்ந்த வீட்டில் இருந்தவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை. ஏனெனில் அதே வீட்டில் மாதவிடாயெல்லாம் நின்று போய் கிழட்டுத் தன்மை தட்டி விட்ட ஜகரிய்யாவின் மனைவி (எலிசபத்து)க்கு யஹ்யா என்ற மகன் பிறந்துள்ளார். கணவனும் மனைவியுமாக இருப்பதால் அவர்களின் குழந்தையை அவர்கள் வாழ்ந்த பகுதி மக்கள் சந்தேகக் கண் கொண்டு பார்த்திருக்க மாட்டார்கள். முதிர்ந்த வயதில் குழந்தை பிறந்தாலும் இறைவனின் வல்லமை என்று அந்த மக்கள் விளங்கி இருப்பார்கள்.

என் மறுப்பு:


மரியம் உலக பெண்களில் சிறந்தவர் என்பதில் எந்த கிறிஸ்தவருக்கும் சந்தேகமில்லை. உண்மையிலேயே மரியம் சிறந்தவர் தான். அவர் மட்டுமல்ல, அவர் கணவராகிய இயேசுவின் வளர்ப்புத் தந்தையும் சிறந்தவர்.


நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

ஆனால் மரியமைப் பொருத்தவரை அந்தப் பகுதி மக்களுக்கு இந்த நம்பிக்கை வர வாய்ப்பில்லை. ஏனெனில் அவர் திருமணமாகாத கன்னிப் பெண்ணாக இருக்கிறார். இந்த சந்தர்பத்தில் அவர் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தால் எந்த மனித கண்ணும், மனமும் அதை வேறுவிதமாகத்தான் நோக்கும். அதனால் மர்யம் அவர்கள் கருவளர்ந்தப் பின்பு பேரீத்தப்பழங்களும் நீரோடையும் உள்ள ஒரு தூரமான இடத்தைப் பார்த்து அங்கு சென்று விடுகிறார்கள். அந்த இடத்தின் நிகழ்வுகளை குர்ஆன் சொல்கின்றது. கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார். பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. ''நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?'' என்று அவர் கூறினார். ''கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்'' என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார். ''பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தை உலுக்குவீராக! அது உம் மீது பசுமையான பழங்களைச் சொரியும்'' (என்றார்)

என் மறுப்பு:


குர்-ஆன் விளக்கும் இயேசுவின் பிறப்பு நிகழ்ச்சி நடைமுறைக்கு எவ்வளவு முரணாக இருப்பதை நாம் காணலாம்.

//அதனால் மர்யம் அவர்கள் கருவளர்ந்தப் பின்பு பேரீத்தப்பழங்களும் நீரோடையும் உள்ள ஒரு தூரமான இடத்தைப் பார்த்து அங்கு சென்று விடுகிறார்கள்.//

குர்-ஆன் சொல்கிறது,

1. மரியாளின் பெற்றோர்கள் மரித்துவிடவே, வில் எரிந்து மரியாள் யார் வீட்டில் இருக்கவேண்டும் என்று முடிவு செய்தார்கள். மரியாள், தேவ மனிதர் ஜகரியா(சகரியா) வீட்டில் வளர்க்கப்பட்டார்கள்.

2. அல்லா, மரியாளுக்கு உணவு அளித்து அற்புதம் செய்தார்.

3. ஜகரியாவிற்கும் வயதான காலத்தில் ஒரு குழந்தையை கொடுத்தார். இதுவும் ஒரு அற்புதம்.

4. மரியாளுக்கு காபிரியேல் தூதன் இயேசுவின் பிறப்புச் செய்தியைச் சொன்னார், மரியாள் பரிசுத்த ஆவியால் கர்ப்பம் தரித்தார்கள்.

5. ஊருக்கு வெளியே தூரமான இடத்திற்கு மரியாள் தஞ்சம் புகுந்தார்.

6. மரியாள் அங்கேயே இயேசுவை பெறுகிறார்கள்.

இதனால் இப்போது பிரச்சனை என்ன? என்று கேள்வி கேட்கலாம். முதலில் கீழே உள்ள கேள்விகளை படியுங்கள், குர்-ஆன் சொல்வது சாத்தியம் தானா என்று அப்போது புரியும்?


1. மேற்கண்ட செய்திகளை படிக்கும் போது, மரியாள் ஜகரியா வீட்டில் சேர்க்கப்பட்டது, ஊரில் எல்லாருக்கும் தெரிந்த செய்தி . (இப்போது இருப்பது போல பல இலட்ச மக்கள் ஒரு ஊரில் இருந்திருக்க மாட்டார்கள்.)

2. ஜகரியா தேவ மனிதர் எனவே, அவர் வீட்டில் யார் யார் இருக்கிறார்கள் என்று எல்லாருக்கும் தெரியும் .

3. குர்-ஆன் சொல்வது போல, மரியாள் கர்ப்பம் ஆனவுடன், அல்லது சில மாதங்கள் கழித்து கூட, தனியாக ஒரு இடத்திற்கு சென்று விட்டால்? ஊர்க்காரர்களுக்கு அது தெரியாமல் போகுமா ?

4. மரியாளுக்கு அல்லா, உணவு அளித்து அற்புதம் செய்தபோது, அது ஊரில் எல்லாருக்கும் தெரிந்து இருக்கும், ஊரில் மரியாள் ஒரு முக்கியமான "நபராக", எல்லாருக்கும் தெரிந்த புகழ்பெற்ற நபராக மாறியிருந்திருப்பார்கள்.

5. இந்த சூழ்நிலையில், சில மாதங்கள் (1-9 மாதங்கள்), மரியாள், ஜகரியாவின் வீட்டில் இல்லாமல் போனால், ஊர்காரருக்கு தெரியாமல் போகுமா?

6. ஜகரியாவிடம் இதைப்பற்றிக் மக்கள் கேட்டுயிருப்பார்களே, ஜகரியாவின் பதில் என்னவாக இருந்திருக்கும்? இதற்கு குர்-ஆனில் பதில் இல்லை.

7. ஜகரியா ஒன்றும் சாதாரண மனிதன் இல்லை, தன் வீட்டில் இரண்டு அற்புதங்கள் இதுவரை நடந்துள்ளது. யஹ்யா(யோவான்) பிறப்பு ஒரு அற்புதம், மரியாளுக்கு அல்லா, உணவு அளித்தது ஒரு அற்புதம்.

8. ஊரைவிட்டு எவ்வளவு தூரம் சென்றாலும், மக்கள் மரியாளை கண்டுயிருப்பார்கள். அப்போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரிந்துயிருக்கும். உடனே, யூதர்களின் முறைமையின் படி, கல்லெரிந்து கொன்றுயிருப்பார்கள். இதற்கு குர்-ஆனிடம் பதில் இல்லை.

9. பல மாதங்கள் ஒரு பெண் அதுவும் கர்ப்பமான ஒரு பெண், மனித நடமாட்டமில்லாத இடத்தில் எப்படி இருக்கமுடியும் ? உணவு, பாதுகாப்பு, உடை, மிருகங்களிலிருந்து பாதுகாப்பு, ஒரு காட்டில் அல்லது பாலைவனத்தில் எப்படி கிடைக்கும் ? இதற்கு பதில் உண்டா?

10. உலக பெண்களில் உயர்ந்த இடத்தை கொடுத்த பெண்ணிற்கு அல்லா கொடுக்கும் சன்மானம் இது தானா?


பிரசவ வலியால் துடித்த மரியாள், உணவுக்கு ஏற்பாடு செய்த அல்லா!

மரியாள் பிரசவ வலியால் துடித்துக்கொண்டு இருக்கிறார், ஆனால், அல்லா மரியாளுக்கு வலி போக்கும் மார்க்கத்தை காட்டவில்லை. அதற்கு பதிலாக உணவுக்கு வழி காட்டுகிறார். குழந்தை பிறந்த பிறகு தான் உணவு தேவைப்படுமே தவிர, வலி எடுக்கும் போது இல்லை. இது எல்லா பெண்களுக்கும், ஆண்களுக்கும் தெரிந்த விஷயம்.

இதில் இன்னொரு பிரச்சனை என்னவென்றால், மரியாள் ஏற்கனவே, பேரிச்ச மரங்கள்(உணவு), நீரோடை உள்ள இடத்தில் தான் இருக்கிறார்(குர்-ஆன் படி).

அப்படி இருக்கும் போது, பிரசவ வலியால் மரியாள் துடிக்கும் போது,
நீரோடையை அல்லா ஏன் உருவாக்கி தருகிறேன் என்றுச் சொல்கிறார்?
ஏற்கனவே, உணவு, நீர் மரியாள் இருக்கும் இடத்தில் உண்டே?

பிரசவ வலியால் துடிக்கும் மரியாள், பேரிச்சை மரத்தின் அடிபாகத்தை உலுக்கச் சொன்ன அல்லா:

என்ன கொடுமையடா இது?


மரியாள் தன் உயிரே போகும் அளவிற்கு வலியால் துடித்துக்கொண்டு இருக்கிறார். இதற்கு முன்பே செத்துப் போயிருந்தால், நலமாக இருக்குமே என்று கதரும் அளவிற்கு அவர் வலி அதிகமாகியது.

ஆனால், அல்லா என்ன சொல்கிறார் என்றுப் பாருங்கள்.

//''பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தை உலுக்குவீராக! அது உம் மீது பசுமையான பழங்களைச் சொரியும்'' (என்றார்) //


வலியால் துடிக்கும் பெண் உணவுக்காக அதுவும், "பேரிச்சை மரத்தின் அடிபாகத்தை" பிடித்து உலுக்கவேண்டுமாம்.

ஒருவேளை இதை படிப்பவர்கள் பெண்களாக (அதுவும் பிள்ளைகளை பெற்றவர்களாக) இருந்தால், இது சாத்தியமா அல்லது இது சரிதானா, நியாயமா? என்று சிந்தித்துப் பாருங்கள்.

இது தான் உலக பெண்களிலெல்லாம் உயர்ந்த இடத்தை பிடித்த பெண்ணிற்கு அல்லா காட்டும் அன்பா?

குழந்தை பெறும் போது வலி வரக்கூடாது என்று நான் சொல்லவரவில்லை. அந்த நேரத்தில் அல்லா சொன்ன வார்த்தை அல்லது செய்யச் சொன்ன செயல், உலகத்தில் வேறு எந்த பெண்ணுக்காவது வந்திருக்குமா? இப்படிச் சொல்வது அறிவுடமையாகுமா? சிந்தியுங்கள்.

குழந்தை பிறந்த பிறகு தேவைப்படுமே அந்த உணவைப் பற்றி அல்லா சொல்கிறார் என்றுச் சொல்லாதீர்கள். பிரசவ வலி உயிரை குடிக்கும்போது, சாப்பாட்டிற்கு தேவையானவற்றை சேகரித்துக்கொள் என்றுச் சொல்வது எந்த வகையில் அறிவுடமையாகும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

அல்லா சொன்னாலும், சொல்லாவிட்டாலும், தனக்கு பசித்தால் மரியாள் சாப்பிடாமல் இருந்திருப்பார்களா? அவர் தான் பல மாதங்களாக நீரோடையும் (தண்ணீரும்), பேரிட்சை மரங்கள் (உணவு) உள்ள இடத்தில் இருக்கிறார்களே?


முடிவாக,

1. மரியாள் இப்படி தூரமான இடத்திற்கு சென்றது, நடைமுறைக்கு ஒத்துவராக ஒரு செய்தி.

2. பிரசவ வலி எடுக்கும் போது, சாப்பாட்டு பற்றிப் பேசுவதும், ஒரு சம்மந்தமில்லாத செய்தி.

3. மொத்தத்தில் குர்-ஆன் சொல்லும் இச்செய்திகளை அறிவுடமையுடையவர்கள் ஏற்றுக்கொள்வதற்கு எந்த ஒரு சரியான ஆதாரமும் இல்லை.


நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:


நீர், உண்டு பருகி மன நிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் ''நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன்'' என்று கூறுவாயாக ! (அல் குர்ஆன் 19: 22-26)

என் மறுப்பு:


"பேச மாட்டேன்" என்று "பேசச் சொன்ன" அல்லா:

இந்த வசனத்தில் அறியாமை எப்படி வெளிப்படுகிறது என்றுப் பாருங்கள். இங்கு குர்-ஆன் எப்படி முரண்படுகிறது என்றுப் பாருங்கள்:


1. இவ்வசனத்தின் படி பார்த்தால், மனிதர்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் மரியாள் இருப்பதாக அறிகிறோம்.

2. நான் இறைவனுக்கு நோம்பு "மௌன விரதம்" இருக்கிறேன் என்று, மரியாள் சொன்ன மாத்திரத்தில், அந்த விரதம் கலைந்துவிடாதா?

1. மனிதர்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் மரியாள் இருப்பதாக அறிகிறோம்.

நான் மேலே சொன்னது போலவே, "மனிதர்களில் யாரையாவது நீ கண்டால்" என்று அல்லா சொல்வதிலிருந்து புரிந்துவிடுகிறது, மரியாள் மனித நடமாட்டம் உள்ள இடத்திலே தான் இருக்கிறார் அல்லது மனிதர்களின் நடமாட்டம் உள்ள இடத்தின் அருகாமையில் இருக்கிறார். அப்படி மனிதர்கள் கண்டுயிருந்தால், யூதர்கள் கல்லெரிந்தல்லவா கொன்று இருப்பார்கள்? அந்த இடத்திற்கு 9 மாதங்களாக ஒரு மனிதனும் அவ்வழியாக வரவில்லையா?

2. நான் இறைவனுக்கு நோம்பு "மௌன விரதம்" இருக்கிறேன் என்று, மரியாள் சொன்ன மாத்திரத்தில், அந்த விரதம் கலைந்துவிடாதா?

முன்னுக்கு பின் முரணாக ஒரு வார்த்தையை அல்லா சொல்கிறார். பேச மாட்டேன் என்று நோம்பு(விரதம்) இருந்தால், யாராவது கேட்கும் போது "பேச மாட்டேன்,விரதம் இருக்கிறேன்" என்றுச் சொன்னால், விரதம் கலைந்து விடும் அல்லவா, மற்றும் கேட்கிறவன் என்ன நினைப்பான்? பேச மாட்டேன் என்று விரதம் இருந்து பேசிவிட்டாளே என்று நினைக்கமாட்டான்?

ஒரு வேளை, மரியாள் அல்லா சொல்வது போல் சொல்லியிருந்தாலும், அல்லது சைகை காட்டி பேசியிருந்தாலும், "குழந்தை யாருடையது" என்று அடுத்த கேள்வி கேட்டுயிருக்க மாட்டான் அவன்? இதற்கெல்லாம், குர்-ஆனில் பதில் இல்லை.

இயேசுவின் வரலாறு 5 : மறுப்புக் கட்டுரை பாகம் 1 முற்றிற்று

David

கருத்துகள் இல்லை: