ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

 1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
 2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
 3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
 4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
 5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
 6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
 7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
 8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
 9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
 10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
 11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
 12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
 13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
 14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
 15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
 16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
 17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
 18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
 19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
 20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
 21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
 22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
 23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
 29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
 30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
 31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
 32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
 33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
 34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
 35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
 36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
 37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
 38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
 39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
 40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
 41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
 42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
 43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
 44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
 45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
 46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
 47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
 48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
 49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
 50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
 51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
 53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
 54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
 55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
 56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
 57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

 1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
 2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
 3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
 4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
 5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
 6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
 7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
 8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
 9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
 10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
 11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
 12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
 13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
 14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
 15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
 16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
 17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
 18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
 19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
 20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
 21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
 22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
 23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
 24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
 25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
 26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
 27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
 28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
 29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
 30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
 31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
 32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
 33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
 34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
 35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
 36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
 37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
 38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
 39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
 40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
 41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
 43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
 44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
 45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
 46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
 47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
 48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
 49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வெள்ளி, 6 ஜூலை, 2007

இயேசுவின் வரலாறு - 4 மறுப்புக் கட்டுரை - 4

இயேசுவின் வரலாறு - 4 மறுப்புக் கட்டுரை - 4தமிழ்முஸ்லீம் என்ற வெப்தளத்தில் ஜி. நிஜாமுத்தீன் அவர்கள் எழுதிய "இயேசுவிற்கு நேர்ந்ததென்ன" என்ற தொடர் கட்டுரையின் மூன்று பாகங்களுக்கு நாம் மறுப்பைப் பார்த்துள்ளோம். இப்போது நாம் நான்காவது தொடரின் மறுப்பைப் பார்ப்போம்.

தொடர் - 1 ன் மறுப்புக்கட்டுரையை இங்கு காணலாம்.

தொடர் - 2ன் மறுப்புக்கட்டுரையை இங்கு காணலாம்.

தொடர் - 3ன் மறுப்புக்கட்டுரையை இங்கு காணலாம்.

நிஜாமுத்தீன் எழுதிய தொடர் - 4 ஐ இங்கு கணலாம். (www.tamilmuslim.com)
நிஜாமுத்தீன் எழுதிய தொடர் - 4 ஐ இங்கு கணலாம். (http://idhuthaanislam.blogspot.com/)

--------------------------------------------------------------------------------

நிஜாமுத்தீன் எழுதிய தொடர் - 4ன் மறுப்பு


நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியதை பச்சை வண்ணத்தில் கொடுக்கப்படுகிறது. என் மறுப்பு அதை தொடர்ந்து தரப்படுகிறது.

இந்த தொடரில், நீஜாமுத்தீன் அவர்கள் பைபிளுக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகளை வைக்கிறார்.

1) இயேசுவின் பரிசுத்ததன்மைக்கு பங்கம் விளைவிக்கும் விவரங்கள் மத்தேயுவின் வம்ச பட்டியலில் உள்ளது.


2) பைபிளில் சொல்லப்படாத "இயேசு குழந்தை அற்புதம்".இந்த இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் சுருக்கமாக, இந்த கட்டுரையில் பதில் அல்லது மறுப்பு ஆதாரங்களோடு தரப்படுகிறது.


நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

மரியாளின் கர்ப்பம் (பைபிள் என்ன சொல்கிறது?)

பரங்கிப்பேட்டை ஜி.நிஜாமுத்தீன்

தொடர்:4

பைபிள் என்பது கிறிஸ்துவர்களின் நம்பிக்கைப்படி வேத புத்தகமாகும். அவர்களுக்குள் இருக்கும் இரு பெரும் பிரிவினரான கத்தோலிக்க பிரிவினரிடம் உள்ள பைபிளுக்கும் - மற்றொரு பிரிவினரான புராட்டஸ்டண்ட் பிரிவினரிடம் உள்ள பைபிளுக்கும் நிறைய வேறுபாடுகள் ஆகமங்களில் கூடுதல் குறைவு வரலாற்று முரண்பாடுகள் ஆகியவை உள்ளன. நாம் இங்கு எடுத்துக் காட்டும் பைபிள் வசனங்கள் அனைத்தும் இந்திய வேதாகம சங்கம் பெங்களுர் என்ற முகவரியுடன் வெளியிடப்பட்ட பைபிளிலிருந்துதான் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

என் மறுப்பு:

நம் இஸ்லாமிய நண்பர் பைபிளின் விலாசம் சரியாக சொன்னதால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவரிடம் ஒரு பைபிள் உள்ளது என்று இப்போது நிச்சயமாகச் சொல்லலாம். பைபிளில் எந்த வரலாற்று முரண்பாடும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். முரண்பாடு என்ன என்று தெரிவித்தால், அதற்கான பதிலைத் தர தயாராக உள்ளேன். ஆனால், குர்-ஆன் தன் வரலாற்று முரண்பாடுகளுக்கு தாக்குபிடிக்குமா என்பது தான் சந்தேகம்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:


புதிய ஏற்பாட்டின் முந்தய நான்கு சுவிசேஷங்கள் மத்தேயு - மார்க்கு - லூக்கா - யோவான் ஆகியவையாகும். இந்த நான்கு புத்தகங்களும் இயேசுவின் வரலாற்றை கூறுவதற்காக எழுதப்பட்டவையாகும். இவற்றில் மத்தேயும் - லூக்காவும் இயேசுவின் வம்சங்களைப் பற்றி தலைமுறை விபரங்கள் உட்பட கூறியுள்ளார்கள். (மத்தேயு குறிப்பிடும் தலைமுறைப்பட்டியல் பின்னர் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டது. காரணம் இயேசுவின் பரிசுத்தத்தன்மையi கேள்விக்குறியாக்கும் விபரமும், தலைமுறைகளின் கால அளவு கோளாறுகளுமேயாகும்)


என் மறுப்பு:மத்தேயுவில் காணப்படும் "தலைமுறை பட்டியல்" விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது என்றும், இயேசுவின் பரிசுத்த தன்மைக்கு பங்கம் விளைவிப்பதாகவும், கால அளவு கோளாறுகள் உள்ளதாக, அடைகுறிக்குள் சொல்லியிருக்கிறார். அது என்ன என்று விவரமாக சொல்லியிருந்தால் நன்றாக இருந்துயிருக்கும். ஆனால் சொல்லவில்லை. இருந்தாலும், எனக்கு தெரிந்த சில விவரங்களை தரலாம் என்று எண்ணுகிறேன்.

நான்கு சுவிசேஷங்களும், நான்கு வகையான பிரிவினருக்காக எழுதப்பட்டது என்று வேதபண்டிதர்கள் சொல்கிறார்கள்.

1. மத்தேயு : இஸ்ரவேல் மக்களுக்காக எழுதப்பட்டது. எனவே தான் யூதர்களின் இலக்கிய மொழியாகிய எபிரேய மொழியில் எழுதப்பட்டது.

2. மாற்கு : ரோமர்களுக்காக ஏழுதப்பட்டது.

3. லூக்கா : கிரேக்க மக்களுக்காக அதாவது எல்லாவற்றையும் ஆராய்ந்து, ஞானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்களுக்காக எழுதப்பட்டது.

4. யோவான் : விசுவாசிகளுக்காவும், மற்றும் சாதாரண மக்களுக்காகவும் எழுதப்பட்டது.

1. வம்ச பட்டியலின் நோக்கம்:

மத்தேயு சுவிசேஷம் இயேசுவை "யூதர்களின் இராஜா ( The King of Jews)" என்று காட்டுவதற்கும், தாவிதின் (தாவுத்) சிம்மாசனத்தில் இராஜாவாக உட்கார வந்தவர் என்பதை யூதர்களுக்கு தெரிவிக்கவும் எழுதப்பட்டது.


ஆனால், லூக்கா சுவிசேஷம் இயேசுவை ஒரு "தேவகுமாரன் (The Son of God)" என்பதை தெரிவிக்கிறது. எனவே, லூக்காவில் வரும் வம்சாவழி பட்டியல், ஆதாம், மற்றும் தேவன் வரை நீட்டுபோகிறது. மத்தேயுவில் ஆபிரகாம் வரை மட்டும் தான் கொடுக்கப்பட்டுள்ளது. மத்தேயு வம்ச பட்டியல், இயேசுவின் வளர்ப்பு தந்தையாகிய "யோசேப்புவின்" வழியாக தாவிது, ஆபிரகாம் வரை வம்ச தலைவர்களின் பெயர்களைச் சொல்கிறது. ஆனால், லூக்கா வம்ச பட்டியல், இயேசுவின் தாயாகிய "மரியாளின்" வழியாக, தாவிது, ஆபிரகாம், ஆதாம், மற்றும் தேவன் வரை சொல்லப்பட்டுள்ளது.

2. மத்தேயு வம்ச பட்டியலில் கால அளவு கோளாறுகள் உள்ளதா?

நிஜாமுத்தீன் அவர்கள் சொல்வது போல, கால அளவு கோளாறு இப்பட்டியலில் இல்லை.

2.1 மத்தேயுவின் பட்டியல் ஒரு சுருக்கப்பட்ட(Abridged) பட்டியல்:

மத்தேயு பட்டியலை சுருக்கி தந்துள்ளார். மற்றும் இதை மூன்று விதமாக பிரித்துள்ளார்.

அ) ஆபிரகாமிலிருந்து தாவிது இராஜா வரை ( மத்தேயு 1:2-6)

ஆ) தாவிது இராஜா முதல், பாபிலோனுக்கு அடிமைகளாக கொண்டுபோகும்வரை (மத்தேயு 1:6-11)

இ) அங்கிருந்து விடுதலையாகி, இயேசுவின் பிறப்புவரை (மத்தேயு 1:12-16)

உண்மையில் ஆபிரகாம் முதல் இயேசு கிறிஸ்து வரை, ஒவ்வொரு பிரிவிற்கும் 14 தலைமுறை மட்டும் இல்லை, இன்னும் அதிகமாகவே உள்ளது, இதை நாம் லூக்காவின் வம்ச பட்டியல் மற்றும் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட பட்டியலைப் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம். மத்தேயு இதை வேண்டுமென்றே சுருக்கி தந்துள்ளார். மூன்று காரணங்களுக்காக இப்படி சுருக்கியிருக்கலாம என்று வேத அறிஞர்கள் கூறுகின்றனர்.

1) மனப்பாடம் செய்வதற்கு சுலபமாக இருக்கும் என்று இப்படி சுருக்கியிருக்கலாம்.

2) யூதர்களின் வழக்கப்படி, ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பொருள் உண்டு. எண் 7 என்பது முழுமையைக் குறிக்கும். எனவே 14 (7*2) பெயர்களை மட்டும் தான் அவர் தெரிந்தெடுத்தார் என்று வேறு சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

3) சில அறிஞர்களின் கருத்து வேறு மாதிரியாக உள்ளது. இயேசு தாவிதின் குமாரன் என்று காட்டுவதற்காக எபிரேய மொழியில் DAVID என்ற பெயரில் உள்ள மெய் எழுத்துக்களின் (DVD)கூட்டுத்தொகை 14 என்றுவருவதால், மத்தேயு இப்படி 14 வம்சங்களின் பெயர்களை மட்டும் தான் தேர்ந்தெடுத்தார் என்று கருதுகின்றனர்.எபிரேய மொழியில் உயிர் எழுத்துக்கள் இல்லை. D என்பது எபிரேய மொழியில் 4 வது எழுத்து, V என்பது 6 வது எழுத்து. மொத்த கூட்டுத்தொகை 14 என்று வருவதால், மத்தேயு 14 வம்சங்களின் பெயர்களை மட்டும் தன் பயன்படுத்தினார்.

D = 4
V = 6
D = 4
------------------
Total = 14
------------------

எபிரேய எழுத்துக்களை இங்கு காணலாம். http://en.wikipedia.org/wiki/Hebrew_alphabet

மத்தேயு ஏன் இப்படி சுருக்கவேண்டும்(சில பெயர்களை விட்டுவிட வேண்டும்), இதற்கு அனுமதி உண்டா என்று கேட்டால்? உண்டு. பழைய ஏற்பாட்டின் எஸ்றா 7:3 மற்றும் 1 நாளாகமம் 6:7-10 வரை உள்ள வசனங்களை ஒப்பிட்டுப் பார்க்கவும்.

2.2 இரண்டாவது பிரிவில் 13 பெயர்கள் மட்டும் உள்ளது , அது ஏன்?

உண்மையில் இந்த பிரிவிலும் 14 பெயர்கள் உள்ளது. காரணம், வசனம் 1:6ஐ நாம் பார்த்தால், "தாவிது இராஜாவின் பெயர் முதல் பிரிவிலும் வரும், இரண்டாவது பிரிவிலும் வரும். எனவே, இரண்டாவது பிரிவிலும் 14 பெயர்கள் உள்ளது.2.3 மத்தேயு பட்டியல் சரியானது தான் என்பதற்கு ஆதாரம்:

யூதர்கள் தங்கள் வம்ச பட்டியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். எனவே தான், பழைய ஏற்பாட்டிலும் ஆங்காங்கே வம்ச பட்டியல் வருவதை காணலாம். இவைகளை அவர்கள் தங்கள் சொத்துக்களை விட அதிகமாக பாதுகாத்தனர். மட்டுமில்லாது, இயேசுவின் காலத்தில் வம்ச பட்டியல் அரசாங்க அலுவலகத்தில் இல்லாமல், அதை தேவாலயத்தில் வைத்துயிருந்தனர். சாதாரண மக்கள் கூட தேவாலய ஆசாரியர்களின் அனுமதி பெற்று, அதை பார்க்க முடியும்.

இயேசுவை வெறுத்த ஆசாரியர்கள், இயேசுவின் தெய்வீகத்தன்மையை மறுத்தனர், மற்றும் கேள்வி கேட்டனர். ஆனால், அவர் மரியாளின் மகன் என்பதும், தாவிது வம்சத்தில் வந்தவர் என்பதில் அவர்கள் சந்தேகம் எழுப்பவில்லை. பார்க்க மாற்கு: 6: 1-3

1. அவர் அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தாம் வளர்ந்த ஊருக்கு வந்தார்;அவருடைய சீஷரும் அவரோடேகூட வந்தார்கள்.
2. ஓய்வுநாளானபோது, ஜெபஆலயத்தில் உபதேசம்பண்ணத்தொடங்கினார்.அநேகர் கேட்டு, ஆச்சரியப்பட்டு, இவைகள் இவனுக்கு எங்கே இருந்துவந்தது? இவன் கைகளினால் இப்படிபட்ட பலத்தசெய்கைகள் நடக்கும்படிஇவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது?
3. இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபுயோசே யூதா சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் அல்லவா? இவன்சகோதரிகளும், இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? என்றுசொல்லி, அவரைக் குறித்து இடறலடைந்தார்கள்
.

2.4 முதல் நூற்றாண்டு யூதர்களின் அமைதி:

முதல் நூற்றாண்டு யூதர்கள் படித்தவர்கள், அவர்கள் தங்களின் வம்ச பட்டியலை நன்கு அறிந்துயிருந்தனர், மட்டுமில்லாது எந்த எதிர்ப்பும் இல்லாமால் அவைகளை ஆராயும் வாய்ப்பும் அவர்களுக்கு இருந்தது.

சுவிசேஷங்கள் மற்றும் புதிய ஏற்பாட்டு எல்லா புத்தகங்கள், முதல் நூற்றாண்டு 90க்குள் எழுதியாகிவிட்டது. ஒருவேளை இந்த பட்டியல் தவறாக இருந்துயிருக்குமானால், யூத ஆசாரியர்கள், கிறிஸ்தவர்களின் விரோதிகள், தங்களிடம் உள்ள பட்டியலோடு, சுவிசேஷ பட்டியலை சரி பார்த்துயிருப்பார்கள். தவறாக இருந்துயிருக்குமானால், பெரிய எதிர்ப்பு, மற்றும், இதனால் பல பிரச்சனைகள் கிளப்பியிருக்கும். ஆனால், முதல் நூற்றாண்டு எல்லா கிறிஸ்தவ எதிர்ப்பும், இயேசு தெய்வமில்லை, சீடர்கள் பொய் சொல்கிறார்கள், என்றுச் சொல்லி அவர்களை சிறையில் அடைத்தார்களே தவிர, வம்ச பட்டியலில் தவறு உள்ளது என்று யாரும் குறைகூறைல்லை. எனவே, இப்பட்டியல் சரியானது என்று நாம் உறுதியாகக் கூறலாம்.

3. இயேசுவின் பரிசுத்ததன்மைய கேள்விக்குறியாக்கும் விவரம் :


இயேசுவின் பரிசுத்ததன்மைய கேள்விக்குறியாக்கும் விவரம் மத்தேயுவில் உள்ளது என்று நிஜாமுத்தீன் அவர்கள் சொல்கிறார். அது என்னவாக இருக்கும் என்று நாம் பார்க்கலாம்.

சாதாரணமாக, யூதர்கள், தங்கள் வம்சாவழி பட்டியலில், பெண்களின் பெயர்களை சேர்க்கமாட்டார்கள். ஆனால், மத்தேயு சுவிசேஷத்தில் 5 பெண்களின் பெயர்கள் உள்ளது. இவர்கள் ஐவரும் வித்தியாசமான பின்னணியை உடையவர்கள்.

1. தாமார் (ஆதியாகமம்: 38:6-30)

2. ராகாப் (யோசுவா: 2:1-24)

3. ரூத் (ரூத் 1:1-4:22 )

4. பெத்செபாள் (2 சாமுவேல் 11:1-27 )

5. மரியாள் (மத்தேயு 1:18-25, லூக்கா1:26-56 )

இவர்களில் தாமார், ராகாப், ரூத் என்பவர்கள் மூவரும், யூதர்கள் இல்லை. இவர்கள் புற இன மக்கள்.

"ஆபிரகாம், ஈசாக்கு, தாவீது போன்றோர் விசுவாச வீரர்கள் என்றால், கறைபட்ட வாழ்க்கைப் பின்னணியைக் கொண்டவர்கள் ராகாப், மற்றும் தாமார் ஆகியோர். பாரேஸ், ஆராம், நாகசோன், ஆகீம் ஆகியோர் வெறும் சாதாரண மனிதர்கள் என்றால்,கீழ்மக்களாக(கெட்டவர்களாக) வாழ்ந்தோர் அபியாவும், மனாசேயும். மனித தோல்விகளோ, பாவங்களோ வரலாற்றில் செயலாற்றும் தேவனை தடுத்துவிடவில்லை. அனைத்து தரப்பு மக்களையும், தமது குமாரனை உலகிற்கு அனுப்பும் பாதையில் தேவன் பயன்படுத்திக்கொண்டார். அதில் யூதன், புறஜாதி, என்ற வேறுபாட்டையும் பார்க்கவில்லை." (தானியேல் ரெஃபரன்ஸ் வேதாகமம் ).

இயேசு தேவகுமாரன் என்றுச் சொன்னால், ஏன் அவர் வம்ச வழியில் உள்ளவர்கள் சிலர் கறைபட்டுள்ளவர்கள் இருக்கிறார்கள் என்று கேட்கிறீர்களா? உலகத்தில் பிறந்த எல்லா மனிதனும் பாவி தான். தேவனுக்கு முன்பாக எல்லாருடைய நீதி, நியாயங்கள், எல்லாம் கந்தை துணி போன்றது தான். இயேசு யூதர்களுக்கு மட்டுமல்ல, புறஜாதிகளுக்கும்(எல்லாருக்கும்), பாவிகளுக்கும் வெளிச்சம் கொடுக்க வந்தார், என்பது அவருடைய வம்ச வரலாறில் வரும் வித்தியாசமான பின்னணிகள் உடைய மனிதர்களே சாட்சிகள்.

இயேசுவின் தாய் எப்படிப்பட்டவர்கள் என்று பாருங்கள், அவருடைய பக்தியையும், நம்பிக்கைத் தன்மையையும் பாருங்கள், அது போதும் .

ஒரு வேளை, நம் ஒவ்வொருவருடைய மன எண்ணங்களை இறைவன், படம் பிடித்து, நமது பெற்றோருக்கும், சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் காட்டினால், எப்படியிருக்கும் என்று நினைத்துப்பாருங்கள்? நாம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கமுடியாது. வெட்கத்தால், தலைகுனியவேண்டிவரும். நம்முடைய எண்ணங்கள் ஒரு வேசியினுடைய பாவத்தைவிட மிக மோசமாக இருக்கும்.

ஆனால், இறைவன் மிகவும் அன்புள்ளவர் என்பதால், இந்த நாள் வரை நாம் உயிரோடு இருக்கிறோம். பைபிளில் பழையஏற்பாட்டில் வரும் நபர்களின் நீதியான வாழ்க்கை மட்டுமில்லை, அவர்களின் மோசமான வாழ்க்கையை கூட தேவன் நமக்கு தெரிவிக்கிறார். காரணம் அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்களே அல்லாமல் வேறுயில்லை என்பதை நமக்கு காட்டுவதற்கு.

தேவனுக்கு சித்தமானால், மத்தேயுவில், லூக்காவில் வரும் பட்டியலைப் பற்றி ஒரு கட்டுரையை இன்னும் பல விமர்சனங்களுக்கு பதில் தரும்படியாக விவரமாக காணலாம்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

இயேசுவின் வரலாற்றை தெரிந்துக் கொள்வதற்கு இவர்கள் குறிப்பிடும் தலைமுறைகளை ஓரளவு அறிந்துக் கொள்வது நல்லது.

மத்தேயு - அதிகாரம் ஒன்று.

ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு. ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான், ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான், யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரனையும் பெற்றான். யூதா பாரேசையும், சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான், என்ரோம் அராமைப் பெற்றான். ஆராம் அமினதாபைப் பெற்றான், அம்மினத்தாப் நாகசோனைப் பெற்றான், நாகசோன் சால்மோனைப் பெற்றான். ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான், தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலமோனைப் பெற்றான். இப்படியாக தொடரும் வம்ச பட்டியலில் எலியூத் எலேயாசாரைப் பெற்றான், அவன் மாத்தாளைப் பெற்றான், மாத்தான் யாக்கோபைப் பெற்றான், யாக்கோபு மரியாளின் புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான், அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார். இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் அபிராம் முதல் தாவீது வரை பதினாலு தலைமுறைகளும் தாவீது முதல் பாபிலோனுக்கு சிறைப்பட்டுப் போன காலம் வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம் பாபிலோனுக்கு சிறைப்பட்டுப் போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம். (ஆரம்ப பதினேழு வசனங்கள்) இயேசு கிறிஸ்த்துவினுடைய ஜனனத்தின் விபரமாவது அவருடைய தாயாகிய மரியாள் யோசோப்புக்கு நியமிக்கபட்டிருக்கையில் அவர்கள் கூடி வருமுன்னே அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.

அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனமில்லாமல் இரகசியமாக அவளை தள்ளிவிட யோசனையாயிருந்தான். அவன் இப்படி சிந்தித்துக் கொண்டிருக்கையில் கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு 'தாவீதின் குமாரனாகிய யேசேப்பே! உன் மனைவியாகிய மரியளை சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே. அவளிடத்தில் உற்பத்தியாகி இருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள் அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். தீர்க்கதரிசிகளின் மூலமாய் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும் படி இதெல்லாம் நடந்தது. அவன் இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள் அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம். (அதிகாரம் ஒன்று முடிய உள்ள வசனங்கள்)

லூக்கா வரலாற்றை எப்படி ஆரம்பிக்கிறார் பாருங்கள்

மகா கனம் பொருந்திய தெயோப்பிலுவே நாங்கள் முழு நிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை, ஆரம்ப முதல் கண்ணார கண்டு வசனங்களை போதிக்கிறவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தப்படியே அவைகளை குறித்து அனேகம் பேர் சரித்திரம் எழுத ஏற்பட்டப்படியினால், ஆரம்ப முதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தரிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விஷேஷங்களில் நிச்சயமாய் நீ அறிய வேண்டும் என்று, அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய் தோன்றிற்று. (லூக்கா ஆரம்ப நான்கு வசனங்கள்) அபியா எனும் ஆசாரிய வகுப்பில் சகரிய்யா என்ற பெயர் கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி பெயர் எலிசபத்து. எலிசபத்து மலடியாய் இருந்தபடியால் அவளுக்கு பிள்ளையில்லாமலிருந்தது. இருவரும் வயது சென்றவர்களாயும் இருந்தார்கள். கர்த்தருடைய தூதன் ஒருவன் தூப பீடத்தின் வலது பக்கம் நின்று அவனுக்கு தரிசனமானான். சகரிய்யா அவனைக் கண்டு கலங்கி பயமடைந்தான். தூதன் அவனை நோக்கி சகரிய்யாவே பயப்படாதே. உன் மனைவி எலிசபத்து உமக்கு ஒரு குமாரனைப் பெறுவாள். அவனுக்கு யோவான் என்று பெயரிடுவாயாக. அவன் கர்த்தருக்கு முன்பாக பெரியவனாய் இருப்பான். திராட்சை ரசமும் மதுவும் குடியான். தன் தாயின் வயிற்றிலிருக்கும் போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்;. (லூக்கா 5 - 15 வசனங்கள்.)

இயேசுவின் வரலாற்றை பைபிளிலிருந்து தெரிந்துக் கொள்ள பைபிள் கூறும் வம்சா வழி தலைமுறைகளை ஓரளவு தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதையும் அந்த பட்டியலின் விபரத்தையும் கண்டோம் உலகில் ஒரு பெரும் சமூகத்தினரால் மிக முக்கியமானவராக கருதப்படும் இயேசுவின் உண்மை நிலைகளை தெரிந்துக் கொள்வதற்காக இந்த தொடர் எழுதப்படுகிறது. கிறிஸ்தவர்களில் ஒருசாராரின் நம்பிக்கைப்படி இயேசு கிறிஸ்து கடவுளின் மகனாக போற்றபடுகிறார் . முஸ்லிம்கள் இதை மறுத்து இயேசு கடவுளின் குமாரனல்ல அவர் மிக சிறந்த ஒரு தேவ தூதர் - கடவுளால் அனுப்பபட்ட தூதர் என்கின்றனர். நேர் எதிரான இந்த முரண்பாட்டை களைய வேண்டுமானால் இரு கருத்துடையவர்களும் அவரவர்களும் புனிதமாக கருதும் வேதங்களிலிருந்துதான் முயற்சிக்க வேண்டும். அந்த அடிப்படையில் இயேசு பற்றி குர்ஆனிலும் பைபிளிலும் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.என் மறுப்பு://கிறிஸ்தவர்களில் ஒருசாராரின் நம்பிக்கைப்படி இயேசு கிறிஸ்து கடவுளின் மகனாக போற்றபடுகிறார்.//

எந்த மக்கள் "இயேசு தேவனுடைய குமாரன்" என்று நம்புகின்றார்களோ, அவர்கள் தான் "கிறிஸ்தவர்கள் " என்று அழைக்கப்படுகிறார்கள். இயேசு தேவகுமாரன் அல்ல என்று நம்பிகிறவர்கள், அவர்கள் கிறிஸ்தவ பெற்றோருக்கு பிறந்தாலும், கிறிஸ்தவ பெயரை உடையவராக இருந்தாலும், அவர்கள் "கிறிஸ்தவர்கள்" அல்ல.

"அல்லா தவிர வேறு இறைவன் இல்லை, முகமது அல்லாவுடைய தூதர்" என்று சொல்கிறவனே (நம்புகிறவனே) முஸ்லீம் ஆவான், அப்படி நம்பாதவன் முஸ்லீம் பெயரை பெற்றுயிருந்தாலும், முஸ்லீம் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அவன் முஸ்லிம் இல்லை. சரிதானே?

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

திருமணம் செய்யாமல் - கன்னிக் கழியாமல் இருந்த மரியாளும், திருணம் செய்து குழந்தைப் பேறு இல்லாமல் முதிர்ந்த வயதை அடைந்து மாதவிடாயெல்லாம் நின்று போன கிழ வயதிலிருந்த சகரிய்யாவின் மனைவி எலிசபத்தும் ஒரே நேரத்தில் - சில மாத இடைவெளியில் (பைபிள்) கர்ப்பம் தரிக்கிறார்கள். மரியாளைப் பார்த்து சுப செய்தி சொன்ன அதே வானவர் சகரிய்யாவிற்கும் சுப செய்தி சொல்லி செல்கிறார்.

லூக்காவின் வராலாறு தொடர்கிறது.

தாவீது வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையிடத்திற்கு தேவனாலேயே அனுப்பட்ட தூதன் வந்தான். அந்தக் கன்னிகையின் பெயர் மரியாள். அவளிருந்த விட்டில் அவன் பிரவேசித்து கிருபைப் பெற்றவளே வாழ்க, கர்த்தர் உன்னுடன் இருக்கிறார் ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசிர்வதிக்கப்பட்டவள் என்றான். நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய் அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக. அவர் பெரியவராய் இருப்பார் உன்னதமானவருடைய குமாரன் எனப்படுவார். கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தை என்றென்றும் அரசாளுவார் அவருடைய ராஜ்யத்திற்கு முடிவிராது என்றான். அதற்கு மரியாள் தேவ தூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள். தேவ தூதன் அவளுக்கு பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும். உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும். அதனால் உன்னிடம் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் எனப்படும். (லூக்கா அதிகாரம் 1 வசனங்கள் 27 - 35)

முந்தய தொடரில் இயேசுவின் பிறப்புப் பற்றி குர்ஆனில் சொல்லப்பட்ட விபரங்களை கண்டோம். பைபிளில் லூக்கா மட்டுமே மேற்கண்ட விபரங்களை கூறுகிறார். மாற்கு - மத்தேயு - யோவானில் இந்த விபரங்கள் கூறப்படவில்லை.

இயேசுவின் குழந்தை அற்புதம் பற்றி பைபிளில் எங்குமே சொல்லப்படவில்லை. ஆனால் குர்ஆன் அதை மிக அற்புதமாக விவரிக்கின்றது. அந்த அற்புதங்களை விரிவாக அறியுமுன் மரியாளுக்கு சொல்லப்பட்ட சுப செய்தி பற்றிய வார்த்தைகளின் ஆழத்தை நாம் விளங்குவோம்.

என் மறுப்பு:

//இயேசுவின் குழந்தை அற்புதம் பற்றி பைபிளில் எங்குமே சொல்லப்படவில்லை. ஆனால் குர்ஆன் அதை மிக அற்புதமாக விவரிக்கின்றது.//

பிரிட்டனிகா என்சைக்லோபீடியா சொல்கிறது "முகமதுவிற்கு சுவிசேஷம் பற்றிய விவரங்கள், தள்ளுபடி ஆகமங்களிலிருந்து, வேறுபல ஆகமங்களிலிருந்து கிடைத்துயிருக்கும்".

The Encyclopedia Britannica comments: “The Gospel was known to him chiefly through apocryphal and heretical sources.”

குர்-ஆன் சொல்லுகின்ற, "இயேசு குழந்தையாக இருக்கும் போது செய்த அற்புதம்", எகிப்து தேசத்தில் தோன்றிய அரபி தள்ளுபடி ஆகமமான "The first Gospel of the Infancy of Christ" என்ற புத்தகத்திலிருந்து எடுத்தது.

a) Infancy Gospel of Jesus :

இந்த தள்ளுபடி புத்தகம், இயேசுவின் சீடர்களால் எழுதப்பட்டதல்ல. இது 2ம் அல்லது 3ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. ஆனால், புதிய ஏற்பாட்டின் சுவிசேஷங்கள் எல்லாம், முதல் நூற்றாண்டிலேயே எழுதி முடிக்கப்பட்டது.

b) Wikipedia Encyclopedia says about Gospel of the Infancy of Christ

The Infancy Gospel of Thomas is a non-canonical text that was part of a popular genre, aretalogy, of the 2nd and 3rd centuries —

The text describes the life of the child Jesus, with fanciful, and sometimes malevolent, supernatural events, comparable to the trickster nature of the god-child in many a Greek myth. One of the episodes involves Jesus making clay birds, which he then proceeds to bring to life, an act also attributed to Jesus in the Qur'an, thus indicating the text may have had substantial influence on Arabic tradition by the 7th century.

Source : http://en.wikipedia.org/wiki/Infancy_Gospel_of_Thomas

c) Britannica Encyclopedia Says about Gospel of the Infancy of Christ

...of Mark, and Gospel of Philip) preserve some legends and myths found in the early Christian centres of Edessa, Alexandria, and Asia Minor. The First Gospel of the Infancy of Jesus (known also as the Arabic Infancy Gospel ), for example, recounts that, one day, Jesus and his playmates were playing on a rooftop and one fell down and...

Source: http://www.britannica.com/eb/topic-208181/First-Gospel-of-the-Infancy-of-Jesus

இந்த புத்தகத்தின் முதல் 3 வசனங்களிலேயே இயேசு குழந்தையாக இருக்கும் போது தன் தாயாகிய மரியாளிடம் பேசியதாக எழுதப்பட்டுள்ளது.

1st Gospel of the Infancy of Christ - Verse 2 and 3 இயேசு குழந்தையாக இருக்கும் போது பேசியதாக எழுதப்பட்டுள்ளது

வசனம் 3: மரியாளே, காபிரியேல் தூதன் உனக்கு சொன்னது போல நான் தேவனுடைய குமாரனாகிய இயேசு, உலகத்தின் இரட்சிப்பிற்காக என் பிதா என்னை அனுப்பியுள்ளார்.

Verse 2. He relates that Jesus spoke even when he was in the cradle and said to his mother :

Verse 3. Mary, I am Jesus the Son of God, that word which you brought forth according to the declaration of the angel Gabriel to you, and my Father has sent me for the salvation of the world.


இந்த புத்தகத்தை முழுவதுமாக இங்கு படிக்கலாம்:

http://wesley.nnu.edu/biblical_studies/noncanon/gospels/infgos1.htm
http://www.pseudepigrapha.com/LostBooks/infancy1.htm
http://ministries.tliquest.net/theology/apocryphas/nt/infancy1.htm

இப்படி 2ம் அல்லது 3ம் நூற்றாண்டில் உருவான புத்தகங்களில் வரும் நிகழ்ச்சிகளை மாற்றி குர்-ஆனில் முகமது சேர்த்துவிட்டார். இயேசு குழந்தையாக இருக்கும் போது பேசிய நிகழ்ச்சி முதல் முதலில் சொன்னது குர்-ஆன் இல்லை என்பது தான் உண்மை. மற்றும் இயேசு இப்படி பேசினார், என்பதற்கு ஆதாரமே இல்லை. அப்படி பேசியிருந்திருந்தால், இயேசுவின் சீடர்களே, எழுதியிருப்பார்கள். மரியாளும் அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்துள்ளார் என்பதை நாம் மறக்கக்கூடாது. இப்படி இயேசு செய்யாத அற்புதத்தை, மற்ற புத்தகங்களிலிருந்து "காபி" அடித்துவிட்டு, பைபிளில் சொல்லப்படவில்லை என்று பெருமையடித்தால் எப்படி?

இப்படி ஒரு புத்தகம்(1st Gospel of the Infancy of Christ ) உலகத்தில் இல்லை என்று உங்களால் சொல்லமுடியுமா? சரித்திரம் சொல்கிறது, அது இன்னும் நம்மிடம் உள்ளது.

அப்படி அப்புத்தகம் இருந்திருந்தாலும், முகமதுவிற்கு அது தெரியாது என்று சொல்கிறீர்களா? இந்த புத்தகமே முதலில் எழுதப்பட்டது, அரபி மொழியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, கி.பி 2-3 நுற்றாண்டில் அரபியில் எழுதிய புத்தகம், 7ம் நுற்றாண்டில் முகமதுவிற்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் எல்லாருக்கும், இராமாயணத்தின் கதை என்ன?, மகாபாரதத்தின் கதை என்ன என்பது ஓர் அளவுக்காவது தெரிந்திருப்பது போல, முகமதுவிற்கும் இக்கதை தெரிந்திருக்கும்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

தேவ தூதர் மரியாளுக்கு சுப செய்தி கூறுகிறார். இது எப்படி சாத்தியம் நான் புருஷனைப் பெற்றிருக்கவில்லையே என்கிறார் மரியாள். பரிசுத்த ஆவி உன்மேல் வரும். உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும் என்பது தேவதூதன் மரியாளுக்கு சொன்ன வார்த்தை.
இது லூக்காவின் விபரம். (மற்ற சுவிசேஷங்களில் இது கூட இல்லை)

ஆனால் இதே விபரத்தை குர்ஆன் கூறும் போது மிகுந்த பொருள் பொதிந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி இயேசு பற்றிய அற்புதத்தை உலகிற்கு எடுத்துக் காட்டுகிறது.

என் மறுப்பு:

நான் மேலே சொன்னது போல, ஒவ்வொரு சுவிசேஷம் ஒரு குறிப்பிட்ட சாராருக்கு புரியும்படி எழுதப்பட்டது. மத்தேயு இயேசுவை "தாவிதின் குமாரன், மற்றும் மேசியா என்பதைக்" காட்டுகிறது. மாற்கு சுவிசேஷம் இயேசுவின் மனிதத்தன்மையைப் பற்றி பேசுகிறது. லூக்கா இயேசு "தேவக்குமாரன்" என்று காட்டுகிறது. யோவான் இயேசு "தேவனுடைய வார்த்தையாக, ஜீவத்தண்ணீராக" காட்டுகிறது. எனவே, ஒரு சுவிசேஷத்தில் சொல்லப்பட்ட செய்திகள், மற்ற சுவிசேஷங்களில் சொல்லையிருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

எந்த ஆணும் என்னை தீண்டாமலும், நான் நடத்தைக் கெட்டவளாக இல்லாமலும் இருக்கும் நிலையில் எனக்கு எப்படி குழந்தை உருவாக முடியும்? என்று மரியாள் கேட்கிறார். (அல் குர்ஆன் 19:20)

அது அப்படித்தான். இது எனக்கு எளிதானது. அவரை மக்களுக்கு சான்று மிக்கவராகவும் நம் அருளாகவும் ஆக்குவோம். இது கட்டாயம் நிறைவேறும் கடமையாகும் என்று இறைவன் கூறுவதாக அவர் கூறினார் (அல் குர்ஆன் 19:21)

இது எப்படி சாத்தியமாகும். குழந்தை உருவாக வேண்டுமானால் ஒன்று எனக்கு திருமணம் முடிந்திருக்க வேண்டும். அல்லது நான் தவறி இருக்க வேண்டும். இரண்டும் நடக்காத போது குழந்தை உருவாவது என்பது எப்படி சாத்தியம் என்பது மரியாளின் சந்தேகம்.

பரிசுத்த ஆவி உன்மேல் இறங்கும். தேவனின் பலம் உன்மேல் நிழலிடும் என்று பைபிள் கூறிவிடுகிறது.

குர்ஆன்,

அது அப்படித்தான். இது எனக்கு எளிதானது. அவரை மக்களுக்கு சான்று மிக்கவராகவும் நம் அருளாகவும் ஆக்குவோம். இது கட்டாயம் நிறைவேறும் கடமையாகும் என்று இறைவன் கூறுவதாக அவர் கூறினார் (அல் குர்ஆன் 19:21) என்று கூறுகிறது.

இதில் இயேசுவை 'மக்களுக்கு சான்றாகவும், அருளாகவும்' ஆக்கப்போவதாக கர்த்தர் குறிப்பிடும் வார்த்தை இடம் பெறுகிறது.

மக்களுக்கு சான்றாக அவர் ஆக்கப்பட்டுள்ளார் என்றால் என்ன?

தந்தையில்லமல் பிறந்தது, தொட்டில் குழந்தையாக இருக்கும் போது பேசியது (இது பின்னர் வருகிறது) இறந்தவர்களை உயிர்பித்தது உட்பட பல அற்புதங்களை செய்து காட்டியது, இன்றளவும் உயிரோடு வாழ்வது என்று பற்பல அத்தாட்சிகள் அவரிடம் இருக்கின்றன. சமீபத்திய உலகிற்கு கூட அவர் ஒரு அத்தாட்சியாக்கப்பட்டுள்ளார் சிந்திக்கும் போது விளங்கலாம்.

ஆம் குளோனிங் என்ற நகல் உயிரியின் உருவாக்கத்தை மனிதன் நிகழ்த்திக்காட்டி ஆண்டுகள் சில கடந்து விட்டன.

ஆண் உயிரினமும், பெண் உயிரினமும் இணைந்து அவற்றின் உயிரணுவும், சினை முட்டையும் இரண்டற கலப்பதின் வழியாகத்தான் ஒரு புதிய உயிர் உருவாகும் என்பதுதான் 15 ஆண்டுகளுக்கு முன்புவரை மனித வரலாற்றில் நிலைத்திருந்த நம்பிக்கையும் ஆதாரமுமாகும்.

ஆணோடு பெண்ணோ, பெண்ணோடு ஆணோ சேராவிட்டால் ஒரு புதிய உயிர் - புதிய குழந்தை - உருவாகும் என்று கற்பனைக் கூட செய்து பார்த்திராமல் தான் மனிதன் கடந்த காலம் வரை வாழ்ந்து வந்துள்ளான்.

மனிதனின் இந்த சிந்தனையோட்டத்தை மாற்றியமைத்து ஒரு புதிய புரட்சியை உருவாக்கிக் காட்டினார் ஆஸ்த்ரேலிய விஞ்ஞானி.

உயிரணுவும், சினை முட்டையும் இணைவது என்ற நிலையை மாற்றி சினை முட்டையுடன் மரபணுவை இணைத்து ஒரு புதிய உயிரை (டோலி என்ற ஆட்டுக்குட்டியை) உருவாக்கி உலகில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் அந்த ஆஸ்த்ரேலிய விஞ்ஞானி. அதன் மீது கடும் விவாதங்களும் சர்ச்சைகளும் நடந்த வண்ணம் இருந்தாலும் இரண்டு பாலினங்கள் உறவு கொள்ளாமல் - கலக்காமல் - ஒரு பாலினத்திலிருந்தே புதிய உயிரியை உருவாக்கும் பணி உலகில் வேகமாக நடந்துக் கொண்டிருக்கிறது.

அந்த ஆட்டுக்குட்டியை தொடர்ந்து மாடு, குரங்கு, நாய் என்று பல உயிரினங்களை நகல் உயிரியாக மேலை நாட்டவர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த முறையில் புதிதாக மனிதனை உருவக்குவதற்கு கடின எதிர்ப்பு உலகில் நிகழ்ந்தாலும் நகல் மனிதனை உருவாக்கும் முயற்சியில் அமேரிக்கா விஞ்ஞானிகள் ஈடுபட்டார்கள். சமீபத்தில் முதல் பெண் குழந்தை பிறந்துள்ளது.

எப்படி சாத்தியம்?

எந்த ஒரு ஆணாக இருந்தாலும் சரி அவனிடம் நூறு சதவிகிதம் ஆண் தன்மை இருப்பதில்லை. அதே போன்று தான் பெண்ணும். எந்த ஒரு பெண்ணிடமும் நூறு சதவிகிதம் பெண் தன்மை இருப்பதில்iலை. ஆண் பெண் இரண்டற கலந்து புதிய உயிர் உருவாவதால் புதிய உயிருக்கு இரண்டு பாலினங்களின் தாக்கமும் இருக்கவே செய்யும் என்பது இன்றைக்கு சாதாரண உண்மை.

பெண்களின் உடலில் ஆணினம் சார்ந்த மரபணுக்களும், ஆண்களின் உடலில் பெண்ணினம் சார்ந்த மரபணுக்களும் இருக்கவே செய்கின்றன. பெண்ணிடம் உள்ள ஆண் சார்ந்த மரபணுவை கண்டரிந்து எடுத்து அதே பெண்ணிடம் உள்ள சினை முட்டையுடன் இணைத்தால் என்னவாகும்? மரபணு சார்ந்த ஒரு புதிய குழந்தை உருவாகி விடும். அதாவது ஆணோடு உறவு கொள்ளாமலே மரபணு குழந்தைக்கு ஒரு பெண்ணால் தாயாக முடியும். இதுவே நகல் உயிரி பற்றிய ஆராய்சியின் வளர்ச்சி நிலையாக உள்ளது.

1990களின் இறுதியில் உலகை கலக்கிய ஒரு விஞ்ஞான கண்டுபிடிப்பை 'இது நடந்தே தீரும் ஆனால் நீண்ட காலம் பிடிக்கும் இது நடக்கும் என்பதற்கு இயேசு ஒரு அத்தாட்சியாவார்' என்பது போன்ற பல உண்மைகளை வெளிபடுத்தும் விதமாகவே குர்ஆனில் மரியாளுக்கு சுப செய்தி சொல்லப்பட்ட வாசக அமைப்புகள் அமைந்துள்ளன.

என் மறுப்பு:

குளோனிங் பற்றிய ஒரு நலல பதிவு.நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

'நானும் கெட்டுப்போகாமல் இருக்கும் போது, எனக்கு திருமணமும் நடக்காத நிலையில் எனக்கு எப்படி குழந்தை பிறக்கும்...' என்பது மரியாளின் ஆச்சர்யம் கலந்த வினா.

'அது அப்படித்தான் எனக்கு இது மிக எளிதானது' என்பது கர்த்தரின் பதில்.

மரியாளின் கேள்விக்குரிய சரியான பதில் தானா இது?.

சிலருக்கு சில நேரம் மிக அழுத்தமான கேள்விகள் பிறந்தாலும் அதற்குரிய பதிலை கிரகிக்கக் கூடிய, சொல்லும் பதிலை ஆய்ந்துணரக் கூடிய நிலையில் அவர்கள் இருக்க மாட்டார்கள்.

தாயின் வயிற்றில் வளரும் குழந்தை குறித்து 'இந்த பாப்பா உன் வயிற்றில் எப்படிமா வந்தது' என்று வீட்டில் உள்ள மற்ற சிறுவர்களோ, சிறுமிகளோ கேட்கிறார்கள் என்றால் அவர்களைப் பொருத்தவரையில் அந்த கேள்வி அழுத்தமானக் கேள்விதான். ஆனால் அதற்குரிய பதிலை அவர்களிடம் சொன்னால் அவர்களால் அதை புரிந்துக் கொள்ள முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது.

அந்த சந்தர்பங்களில் 'அது அப்படித்தான் இறைவன் கொடுத்துள்ளான்' என்று தாய் பதில் சொல்லி விடுவாள்.

சொல்லக் கூடிய பதில் கேள்வி கேட்டவருக்கு புரியக் கூடிய நிலை இருந்தால் மட்டுமே பதில் வெளிப்படுவதில் ஒரு அர்த்தம் இருக்கும்.

மரியாளின் கேள்வி ஆழமானதுதான் என்றாலும் உயிரணு என்றால் என்ன, சினை முட்டை என்றால் என்ன, மரபணு என்றால் என்ன என்ற உடலியல் பற்றிய தெளிவெல்லாம் மரியாளுக்கு இருந்திருக்காது.

அதி நவீன விஞ்ஞான யுகமாக கருதப்படும் இந்த காலத்தில் கூட மாதவிடாய் ஏற்படுவதற்கு கருமுட்டையின் சிதைவுதான் காரணம் என்பது ஏராளமான பெண்களுக்கு தெரிவதில்லை. உதிரப் போக்கிற்கும் மாதவிடாய்கும் உள்ள வித்தியாசங்களை - காரணங்களை அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை.

இன்றைக்கே இதுதான் நிலைமை என்றால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நிலமை எப்படி இருந்திருக்கும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

மரியாளின் கேள்வி அழுத்தமானதுதான் என்றாலும் பதிலை புரிந்து கொள்ளும் நிலையில் அவர் இல்லை என்பதால் அவர் புரியும் விதத்தில் பதில் சொல்லப்படவில்லை.

அறிவு முதிர்ச்சிப் பெற்றவர்கள் புரிந்துக் கொள்ளும் விதத்தில் பதில் முன் வைக்கப்பட்டது.

அது அப்படித்தான், எனக்கு இது மிக இலகுவானது என்கிறான் இறைவன்.

என்னால் மட்டுமே முடியும் என்று கூறாமல் எனக்கு இலகுவானது என்று கூறுவதன் வழியாக பிறராலும் செய்ய முடியும் ஆனால் அவ்வளவு சுலபமாக செய்து விட முடியாது நிறைய கால கட்டங்கள் அதற்கு தேவைப்படும் என்பது போன்ற அர்த்தங்கள் எல்லாம் பொதிந்த நிலையில் தான் அந்த வார்த்தையை கர்த்தர் - இறைவன் பயன்படுத்தியுள்ளான் என்பது அறிவாளிகளின் சிந்தனைக்கு எட்டவே செய்யும்.என் மறுப்பு:
//'அது அப்படித்தான் எனக்கு இது மிக எளிதானது' என்பது கர்த்தரின் பதில்.//

இது கர்த்தரின் பதில் இல்லை, அல்லாவின் பதில். பைபிளும், குர்-ஆனும் படிப்பவர்கள், இவர்கள் இருவர் வேறுவேறு என்பதை சுலபமாக புரிந்துக்கொள்வார்கள்.

இறைவன் செய்கின்ற போன்ற அற்புதங்கள் மனிதர்களும் செய்யக்கூடும் என்று இறைவனை அவமானப்படுத்தாதீர்கள். மனிதன் வேண்டுமானால், குளோனிங் மூலமாக மனிதனை உருவாக்கமுடியலாம். ஆனால், மரியாளின் வயிற்றில் "ஒரு ஆபரேஷன்" கூட இல்லாமல் தன் ஆவி மூலமாக ஒரு கருவை உருவாக்கியது போல, குளோகிங்கில் முடியுமா? மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள மிகப்பெரிய ஒரு வித்தியாசம் "இறைவன் இல்லாதவைகளிலிருந்து ஒன்றை உருவாக்குபவர், ஆனால், மனிதனுக்கு ஒன்று செய்ய மற்றொன்று வேண்டும்".


நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

ஆணிண் உயிரணுவின்றி, ஆண் துணையின்றி பெண் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கலாம் என்பதை மனிதன் கண்டறிய இயேசுவிற்கு பிறகு இரண்டாயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது.

'எனக்கு இலகுவானது' என்பதை தொடர்ந்து 'மனிதர்களுக்கு அவரொரு அத்தாட்சியாவார்' என்ற அற்புத செய்தியும் சொல்லப்பட்டுள்ளது.

இயேசுவின் பிறப்புடன் சேர்த்து அவர் மனிதர்களுக்கு சான்றாவார் என்று சொல்லப்பட்டதிலிருந்து அவரை மாடலாக கொண்டு தந்தையின்றி உயிர்களை உருவாக்க முடியும் என்ற உண்மையை இயேசுவின் பிறப்பு வழியாக இறைவன் உலகிற்கு சொல்லி வைத்துள்ளான் என்பதை விளங்கலாம். (குர்ஆன் மட்டுமே இந்தச் செய்தியைச் சொல்கின்றது)

என் மறுப்பு:

தந்தையின்றி ஒரு உயிர் உருவாவாக்கமுடியும் என்பதை ஆதாம், ஏவாள் பிறப்பிலேயே இறைவன் நிருபித்திவிட்டார். தந்தையின்றி மட்டுமில்லை தாயுமில்லாமல் உருவாக்கமுடியும் என்று அப்போதே நிருபனமாகிவிட்டது.

இதை குர்-ஆன் சொல்வதற்கு முன்பே பைபிள் சொல்லிவிட்டது. இதை குர்-ஆன் மட்டுமே சொல்கிறது என்று சொல்வது, முஸ்லீம்களுக்கு வேண்டுமானால், புதுமையாக இருக்கலாம், ஆனால், கிறிஸ்தவர்களுக்கு இது புதிதல்ல.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

இயேசு குலோனிங் முறையில் தான் பிறந்தார் என்று நாம் அறுதியிட்டு கூறுவதாக யாரும் நினைத்துவிட வேண்டாம். அவர் மரபியல் வழியாகவோ அல்லது இன்னும் அற்புதமான முறையிலோ உருவாகி இருக்கலாம். நாம் சொல்லவருவது என்னவென்றால் உலகம் வியந்து பார்க்கும் ஒரு விஞ்ஞான மாற்றத்திற்கு இயேசுவின் பிறப்பு மிக சரியாக பொருந்தி போகிறது என்பதைதான்.

இயேசுவின் உள்ளே பொதிந்து கிடக்கும் இந்த சான்றுகளை இயேசுவிற்காக எழுதப்பட்டதாக நம்பப்படும் பைபிளின் எந்த பகுதியிலும் பார்க்கவே முடியாது. அவரது பிறப்பு ஒரு அத்தாட்சியாகும் என்ற வார்த்தைக் கூட பைபிளின் புதிய ஏற்பாடுகளில் இடம் பெறவில்லை.

குர்ஆன் மட்டுமே அவரது பிறப்பை உலகிற்கோர் சான்றாக்கி இன்றைய விஞ்ஞான யுகத்தை மெய்சிலிர்க்க வைத்துள்ளது என்பதை அன்பான கிறிஸ்த்துவ சகோதர - சகோதரிகள் உணர வேண்டும்.

இயேசுவின் அத்தாட்சி முடியவில்லை. பைபிளில் சொல்லப்படாத - குர்ஆனில் மட்டுமே சொல்லப்பட்டு உள்ளம் சிலிர்க்க வைக்கும் அவரது குழந்தைப் பருவ அற்புதங்களை அடுத்து பார்ப்போம்.

வளர்ந்துச் செல்லும் இறைவன் நாடட்டும்

குர்-ஆன் அளவில் "புதிய ஏற்பாட்டைவிட சிறியது" இன்னும், அதில் சொல்லப்பட்ட செய்திகளில், பைபிளில் வரும் நபர்களின்(மோசெ,ஆபிரகாம், இயேசு, மரியாள், இன்னும் பலர்) விவரங்களையும், மற்றும் மற்ற புத்தகத்திலிருந்து (நாம் மேலே கண்ட குழந்தை அற்புதம்) எடுத்து சொல்லப்பட்ட செய்திகளும் குர்-ஆனிலிருந்து நீக்கிவிட்டுப் பார்த்தால், குர்-ஆனில் மீதி என்ன இருக்கும் என்பது தான் கேள்வி?

கடைசியாக, மத்தேயு சுவிசேஷத்தில் உள்ள வம்ச பட்டியல் ஒரு சுருக்கப்பட்ட பட்டியல் என்றுக் கண்டோம். யூதர்களின் வழக்கத்திற்கு மாறாக மத்தேயுவின் வம்ச பட்டியலில் பெண்களின் பெயர்கள், அதுவும் வித்தியாசமான வாழ்க்கை பின்னணி கொண்ட பெண்களின் பெயர்களை மட்டுமே, ஆவியானவர், வேண்டுமென்றே சேர்த்துள்ளார் என்பதையும் கண்டோம். இயேசு பாவிகளை இரட்சிக்க வந்தார் என்பதற்கு, அவரின் வம்ச பட்டியலே ஒரு அத்தாட்சி.

பல நூற்றாண்டுகள் கழிந்தாலும், பல நாடுகளில் வாழும் பெண்களுக்கு இன்னும் ஓட்டு உரிமை, கார் ஓட்டும் உரிமை, இன்னும் பல உரிமைகள் மறுக்கப்படுகின்றன. ஆனால் அதற்குள் இந்தியாவின் "கல்பனா சாவ்லா" போன்ற பெண் முத்துக்கள், வானத்தை அளந்து பார்த்து வந்துவிட்டார்கள்.

இயேசுவின் வம்சவரலாறு பட்டியல், ஒரு வித்தியாசமான பட்டியல். யூதர்களின் வழக்கத்திற்கு எதிராக பெண்களின் பெயர்களைச் சேர்த்தது ஒரு புரட்சி என்றுச் சொல்லலாம். அப்படி பெண்களின் பெயர்களைச் சேர்த்தாலும், ஆபிரகாமின் மனைவி சாராளுடைய பெயரோ, ஈசாக்கின் மனைவியின் பெயரோ சேர்த்து இருக்கலாம், ஆனால், அவர்களின் பெயரை விட்டுவிட்டு வித்தியாசமான பெண்களின் பெயர்களை முதல் நூற்றாண்டிலேயே சேர்த்தது ஒரு மாபெரும் புரட்சியே!

பின் குறிப்பு: இந்த பதிவில்(எல்லா கட்டுரைகளிலும் கூட) நான் சேகரித்த விவரங்களில் ஏதாவது பிழை இருக்குமானால், அதை தெரியப்படுத்தினால், அது உண்மையாக இருந்தால், நான் அதை திருத்திக்கொள்கிறேன். நான் பைபிள் கல்லூரியில் படித்தவனோ அல்லது அதிக தகுதியுடையவனோ அல்ல. நான் ஒரு சாதாரண விசுவாசி. பிழை தெரிவித்தால், அதை ஒப்புக்கொண்டு திருத்திக்கொள்கிறேன்.


தேவனுக்கு சித்தமானால், அடுத்த 5வது மறுப்புக்கட்டுரையில் சந்திக்கலாம்.

Regards

David

Website : www.geocities.com/isa_koran

Blog : http://isakoran.blogspot.com/

E-mail : isa.koran@gmail.com


3 கருத்துகள்:

Johnson Victor சொன்னது…

100 மைல் ஓடியவன் போல் மூச்சி வாங்கிற்று. விசுவாசிகளுக்கும் பயனுள்ள மிக சிறப்பான பதிப்பு. கட்டுரையின் இறுதியில் இறையியல் கல்வி கற்கவில்லை, சாதாரண விசுவாசிதான் என்று உங்களைத் தாழ்த்தியிருக்கிறீர்கள். இப்படிப்பட்ட ஞானத்தைத் தேவன் உங்களுக்குக் கொடுக்கிறார் என்றால், அது எனக்கும் வேண்டும் என்று அவரிடம் கேட்கிறேன்.

உண்மையில் வேறொரு மொழிபெயர்ப்புக்காக இணைய தளத்தில் வளம் வரும்போது, இந்தப் பதிப்பு என் கண்களில் அகப்பட்டது. இரவில் நீண்ட நேரம் கண்விழித்து வேலை செய்யும் பழக்கம் சமீபத்தில் இல்லாதிருந்தும் திடீரென்று இன்று மீண்டும் தொடங்ற்று. அதுவும் உங்கள் பதிப்பை வாசித்த பிறகு புதிய உற்சாகம் தென் பட்டு விட்டது.

நேரம் இருந்தால் உங்களுக்கு ஒரு தனி மடல் எழுதுவேன்.

கர்த்தர் உங்களைத் தொடர்ந்து ஆசீர்வதிப்பாராக.

பெயரில்லா சொன்னது…

aamaa karthar ungalai aasirvathipaara...pongada kooru ketta cookergala..
-mishell

Umar சொன்னது…

அருமையான மைஷெல் அவர்களே,

நீங்க ஒரு இஸ்லாமியன் என்பதை நிருபித்துவிட்டீர்கள். அதாவது ஒரு கட்டுரைக்கு பின்னூட்டம் இடும் போது, அந்த கட்டுரையை படித்து, அதற்கான பதிலை கொடுத்தால் மேற்கொண்டு பின்னூட்டமிட உபயோகமாக இருக்கும், மற்றவர்களும் படித்து பயன்பெறுவார்கள். அதை விட்டுவிட்டு, இப்படி திட்டுவதினால் என்ன உபயோகம்? இதிலிருந்து உங்களால் எங்கள் பதிலை சகித்துக்கொள்ளமுடியவில்லை, அல்லது எங்கள் பதில்கள் உங்கள் கேள்விகளுக்கு சரியான அடியாக இருப்பதினால், எதை சொல்வது என்று தெரியாமல், இப்படி திட்டி தீர்க்கிறீர்கள். தொடருங்கள்.. உங்களால் முடிந்தது தானே உங்களால் செய்யமுடியும்...

Umar