ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

செவ்வாய், 3 ஜூலை, 2007

இயேசுவின் வரலாறு - 2 : மறுப்புக் கட்டுரை - 2

இயேசுவின் வரலாறு - 2 : மறுப்புக் கட்டுரை - 2

தமிழ்முஸ்லீம் என்ற வெப்தளத்தில் ஜி. நிஜாமுத்தீன் அவர்கள் ஒரு கட்டுரையை எழுதுயிருந்தார்கள். இயேசுவின் பிறப்பின் விவரங்கள் பைபிளிலும், குர்-ஆனிலும் வேறு வேறுவிதமாக உள்ளது. இவர் குர்-ஆனில் சொன்னவிவரங்கள் தான் சரியானது, பைபிளில் சொன்ன நிகழ்ச்சிகள் சரியானது அல்ல என்று எழுதியுள்ளார்.

அவரின் தொடர் 1ன் மறுப்புக் கட்டுரையை ஏற்கனவே நாம் கண்டோம். அதை இங்கு காணலாம். தொடர் - 1 ன் மறுப்புக்கட்டுரையை இங்கு காணலாம்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதிய தொடர் - 2 இங்கு காணலாம் www.tamilmuslim.com

இங்கும் காணலாம் - idhuthaanislam.blogspot.com

-----------------------------------------------------------

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதிய தொடர் - 2 ன் மறுப்பு

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியதை பச்சை வண்ணத்தில் கொடுக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து என் மறுப்பு தரப்படுகிறது.

இஸ்லாமியர்களின் வேதமாகிய குர்-ஆனில் சொல்லப்பட்ட சில செய்திகள், பைபிளிலிருந்து எடுக்கப்பட்டது என்றுச் சொல்லலாம். அந்த செய்திகளை குர்-ஆன் வேறுவிதமாக மாற்றிச் சொல்கிறது. இயேசுவின் பிறப்பு பற்றி குர்-ஆன் என்ன சொல்கிறது என்று www.tamilmuslim.com தளத்தில் நிஜாமுத்தீன் அவர்கள் கட்டுரை எழுதியுள்ளார். அவர் எழுதும் போது, பைபிளைப் பற்றியும் எழுதுகிறார். இங்கு நாம் அவரின் இரண்டாவது தொடருக்கான மறுப்பை காண்போம்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

வரலாற்றுத் தொடர் 2

இயேசுவுக்கு நேர்ந்ததென்ன...

பரங்கிப்பேட்டை ஜி - நிஜாமுத்தீன்

தொடர் - 2

இயேசுவின் வாழ்க்கையை முழுமையாக தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் அவர் எந்த சமுகத்திற்கு வந்தாரோ அந்த சமுகம் பற்றி ஓரளவு தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதையும் அந்த சமுகம் யார் என்பதையும் முதல் தொடரில் ஓரளவு கண்டோம்.

இயல்பாக அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் பொய்பிக்கப்பட்டு பலர் கொலையும் செய்யப்பட்டதால் கடின சித்தம் படைத்த யூதர்களை நல்வழி படுத்த இயல்புக்கு மாற்றமாக ஒரு அத்தாட்சி மிக்க இறைத்தூதரை அனுப்புவோம் என்ற இறைவனின் ஏற்பாட்டாலும், தன் வயிற்றிலும் சந்ததியிலும் சிறந்த குழந்தை உருவாக வேண்டும் என்ற இயேசுவின் தாய் வழி பாட்டியார் செய்த பிரார்த்தனையாலும் இயேசுவை இறைவன் தேர்ந்தெடுக்கிறான்.

(இயேசுவாகிய) அவர் (நம்முடைய) அடியாரேயன்றி வேறில்லை. அவர்மீது நாம் அருள் புரிந்து இஸ்ராயீலின் மக்களுக்கு அவரை ஓர் உதாரணமாக்கினோம் (அல் குர்ஆன் 43:59) என்ற வசனம் பிரத்யேகமாக யூதர்களுக்கு இறைவன் வழங்கிய அத்தாட்சியை - நமது இரண்டாவது கூற்றை - மெய்ப்பிக்கிறது.

என் மறுப்பு:

நீங்கள் சொல்கிறபடி அல்லது குர்-ஆன் சொல்கிறபடி இயல்பிற்கு மாறாக ஒரு அற்புதமான முறையில் ஒரு குழந்தை பிறந்து, அவர் நல்வழிப்படுத்தினால் யூதர்கள் நல்வழிப்படுவார்கள் என்று அல்லா திட்டமிட்டார் அல்லது நினைத்தார். ஆனால் அல்லாவின் திட்டத்திற்கு எதிராக யூதர்கள் இயேசுவை கொலை செய்ய திட்டமிட்டார்கள். அப்படியானால் அல்லாவின் திட்டம் நடைபெறவில்லை, அப்படித்தானே.

யூதர்கள் இயேசுவிற்கு என்ன செய்வார்கள் என்று அல்லாவிற்கு தெரியவில்லை. பிறப்பு அற்புதமாக இருந்தால், யூதர்கள் நிச்சயமாக இயேசுவை நம்புவார்கள் என்று அல்லா "தவறாக" முடிவு செய்துவிட்டார்.
இயல்புக்கு மாற்றமாக ஒரு அத்தாட்சி மிக்க இறைத்தூதரை அனுப்புவோம் என்ற இறைவனின் "ஏற்பாடு" அல்லது "திட்டம்" யூதர்களால் பொய்யாக்கப்பட்டது இல்லையா?

ஆனால், இயேசுவின் வருகையின் நோக்கத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று பாருங்கள்.

1. ஏதோன் தோட்டத்தில் ஆதாம் பாவம் செய்ததால், தேவனோடுள்ள தன் உறவு முறிந்துவிட்டது.

2. மனிதன் வம்சத்தில் பிறக்கும் ஒரு வித்தினால்( மனிதனால்) உன் தலை நசுக்கப்படும் என்று தேவன் சாத்தனுக்குச் சொல்கிறார்.

3. கன்னியின் வயிற்றில் ஒருவர் பிறந்து, சிலுவையில் உலகத்தின் எல்லாருடைய பாவங்களுக்காக மரிப்பார், பிறகு உயிரோடு எழுந்திருப்பார் என்று தேவன் இயேசுவின் பிறப்பிற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கதரிசிகள் மூலமாகச் சொன்னார்.

4. தேவதிட்டத்தின் படியே இயேசு கன்னியின் வயிற்றில் பிறந்தார், சிலுவையில் மரித்தார், உயிரோடு எழுந்தார்.

யேகோவா தேவனின் திட்டம் அப்படியே நிறைவேறியது, ஆனால் அல்லாவின் திட்டம் நிறைவேறவில்லை.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

இனி வரலாற்றுக்குப் போவோம்.நிச்சயமாக இறைவன் ஆதாமையும், நோவாவையும், ஆப்ரஹாமின் சந்ததியினரையும், இம்ரானுடைய குடும்பத்தினரையும் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்துள்ளான். (அல் குர்ஆன் 3:33)அவர்களில் அனைவரும் முந்தியவர்களின் சந்ததியினர்தான். (அல் குர்ஆன் 3:34)3:33 வது வசனத்தில் ஆதாம், நோவா, இப்ராஹிமுடைய சந்ததி என்றெல்லாம் இறைவன் குறிப்பிடுவதை நாம் அறிவோம். அதன் தொடர்ச்சியாக 'இம்ரானின் குடும்பத்தினர்' என்று இறைவன் கூறுகிறான். இந்த இம்ரான் குடும்பத்தில் ஒருவராகத்தான் இயேசு அவர்கள் பிறக்கிறார்கள்.

இயேசுவின் தாய் வழி பாட்டி - மரியாளின் தாய் - செய்த பிரார்த்தனை இயேசுவின் வருகைக்கு ஒரு முன்னுரையாக அமைந்தது.மரியாளின் தாயார் கர்ப்பம் தரித்திருந்த போது ''இறைவா என் வயிற்றில் உள்ள குழந்தையை உனக்காக நேர்ந்து விட்டேன். அது முழுமையாக உனக்காக அர்ப்;பணிக்கப்படும். இதை என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக. நீயே செவியுறுபவனாகவும் அறிந்தவனாகவும் இருக்கிறாய்'' என்று இம்ரானின் மனைவி பிரார்த்தித்தார். (அல் குர்ஆன் 3:35)அவர் குழந்தையை ஈன்றெடுத்த போது 'இறைவா.. நான் பெண்குழந்தையைப் பெற்று விட்டேனே..' என்றார்.

அவர் எத்தகையதை ஈன்றெடுத்தார் என்பதை இறைவன் நன்கறிவான். 'ஆண் பெண்ணைப் போன்றவனல்ல. நான் இவளுக்கு மரியம் (மரியாள்) என்று பெயரிட்டுள்ளேன். சபித்து துரத்தப்பட்ட (தீய சக்தியான) ஷைத்தானை விட்டு இவளுக்கும் இவளின் வழிதோன்றல்களுக்கும் உன் பாதுகாப்பை வேண்டுகிறேன்' என்று அவர் (மரியாளின் தாயார்) கூறினார் (அல் குர்ஆன் 3:36)

இஸ்ரவேலர்களில் விதிவிலக்காக இறைவனை நம்பி - அவனுக்கு எதையும் இணையாக்காமல் கட்டுபட்டு நடக்கும் ஒரு நல்ல பெண்ணாக மரியாளின் தாயார் வாழ்ந்துள்ளார் என்பதை இந்த வசனங்களின் மூலம் விளங்கலாம். இவர் வாழ்ந்த காலகட்டத்தில் அந்த சமூகத்தின் மனப்பான்மை எப்படி இருந்ததது என்பதை 2:87 வசனத்தின் மூலம் முதல் தொடரில் அறிந்தோம்.

இறைத்தூதர்கள் பொய்பிக்கப்பட்டு சிலர் கொலை செய்யப்பட்ட மட்டமான - மோசமான சூழ்நிலை நிலவி வருவதை மரியாளின் தாயார் கண்டு அனுபவிக்கிறார்கள். இந்த கொடுமையை எதிர்க்க தன் புறத்திலிருந்து ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கூட அவர்கள் இப்படி ஒரு பிரார்த்தனையை செய்ய தூண்டி இருக்கலாம்.

என் மறுப்பு:

இயேசுவின் பிறப்பிற்கு முன்பு கிட்டத்தட்ட 400 வருடங்களாக(மல்கிய தீர்க்கதரிசி கி.மு. 400 - முதல் யொவான் ஸ்நானகன் கி.மு. 4 வரை ) ஒரு நபி கூட வரவில்லை. எனவே, மரியாளின் தாய் வாழ்ந்த காலத்தில் எந்த தீர்க்கதரிசியும் இல்லை என்பது தான் உண்மை. மரியாளின் தாய் இப்படி ஜெபித்துயிருக்கிறார்கள் என்று குர்-ஆன் (இஸ்லாமிய ஆதாரங்கள்) தவிர வேறு எந்த ஆதாரமுமில்லை.

மரியாளின் தந்தை இம்ரான் இல்லை, குர்-ஆன் சரித்திரத் தவறு:

இயேசுவும், அவருடைய தீர்க்கதரிசிகளும் எதிர்காலத்தைப்பற்றி விவரமாகச் சொன்னார்கள். அவைகள் அப்படியே நிறைவேறியது. ஆனால், கடந்த கால நிகழ்ச்சிகளை சொல்வதிலும் அல்லா தவறிவிட்டார்.

மரியாளின் தந்தை ஏலி என்பவர்(லூக்கா 3:24). இம்ரான் மரியாளின் தந்தை இல்லை. இம்ரான் என்பது எபிரேயர் பெயர் அல்ல, அது அரபிப் பெயர். பின்னர் ஏன் இம்ரான் என்பவர் மரியாளின் தந்தை என்று குர்-ஆன் சொல்கிறது ? முகமது மிகவும் குழம்பியிருக்கிறார், மோசே, ஆரோன், மற்றும் மிரியாமின் தந்தையின் பெயர் "அம்ராம்" ஆகும் (எண் 26:59, 1 நாளா 6:3. )

எண் 26: 59. அம்ராமுடைய மனைவிக்கு யோகெபேத் என்று பேர்; அவள் எகிப்திலே லேவிக்குப் பிறந்த குமாரத்தி; அவள் அம்ராமுக்கு ஆரோனையும் மோசேயையும் அவர்கள் சகோதரியான மிரியாமையும் பெற்றாள்.

முகமது இயேசுவின் தாயாகிய மரியாளை "ஆரோனின் சகோதரியே" என்று அழைக்கிறார், காரணம் பழைய ஏற்பாட்டு ஆரோனின் சகோதரியாகிய "மிரியாமும்" இயேசுவின் தாய் "மரியாளும்" ஒருவர் என்று அவர் நினைத்துவிட்டார். இது ஒரு சரித்திர தவறாகும். எனவே, மிரியாம் மற்றும் ஆரோனின் தந்தையாகிய "அம்ராமை", மரியாளின் தந்தையாக பாவித்து பேசுகிறார் முகமது. ஆக, குர்-ஆன் இரண்டு சரித்திர தவறை இங்கு செய்துள்ளது. மரியாள் ஆரோனின் சகோதரியில்லை, மற்றும் இம்ரான் ( அரபிப் பெயர் ) என்பவர் மரியாளின் தந்தையில்லை. மரியாளின் தந்தையின் பெயர் ஏலி என்பதாகும்.


இயேசுவின் வம்ச அட்டவணைப் பற்றி ஒரு சிறு குறிப்பு:

இயேசுவின் வம்ச அட்டவணை மத்தேயுவிலும், லூக்காவிலும் உள்ளது. மத்தேயுவில் உள்ளது யோசேப்பு வழியாக வந்த அட்டவணை. லூக்காவில் உள்ளது மரியாளின் வழியில் உள்ள வம்ச அட்டவணை. யோசேப்பின் தந்தையின் பெயர் "யாக்கோபு" ஆகும் (மத்தேயு 1:16). ஆனால், லூக்கா 3:23, "... அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்" என்று வருகிறது.

ஏலி என்பவர் மரியாளின் தந்தை தானே, பின்னர் ஏன், இங்கு யோசேப்பின் தந்தை என்று வருகிறது என்ற கேள்வி எழலாம். யூதர்கள் தங்கள் வம்ச அட்டவணையை பத்திரமாக தேவாலயத்தில் பாதுகாத்து வைத்தனர். இது இவர்களுக்கு செல்வத்தைவிட முக்கியமானது. எனவே தான் நாம் பழைய ஏற்பாட்டில் ஆங்காங்கே வம்ச அட்டவணையை காணமுடிகிறது. யூதர்களிடம் இன்னொரு வழக்கமிருந்தது, ஒரு நபருக்கு மகனில்லாமல் மகள் மட்டுமிருந்தால், தன் மருமகனை தன் மகனாக கருதி, தன் வம்ச அட்டவணையில் சேர்த்துக்கொள்வார்கள் (எண் 36:1-13). எனவே தான் லூக்கா 3:23ல், மரியாளின் வம்ச அட்டவணையில் "யோசேப்பு ஏலியின் குமாரன்" என்று வருகிறது. இந்த அட்டவணைகள் ரோமர்களால் கி.பி. 70ல் தேவாலயம் அழிக்கப்படும் போது அழிந்துவிட்டது.


நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

இங்கு தொடரும் அவலங்கள் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வராது என்பதை உணர்ந்தும், தான் ஒரு பெண் என்பதால் தன்னால் களத்தில் நின்று இந்த கொடுமையாளர்களை எதிர்க்க முடியாது என்பதாலும் தன் வயிற்றில் வளரும் குழந்தை பிறந்து வளர்ந்து இறை வழியில் தன்னை அர்ப்;பணித்து இவர்களுக்கு பாடம் புகட்டட்டும் என்ற சிந்தனையாளும் அவர்கள் இந்த பிரார்த்தனையை வைத்திருக்கலாம்.

என் மறுப்பு:

"பாடம் புகட்டட்டும்" என்று நிஜாமுத்தீன் அவர்கள் சொன்னது, சிறிது விளக்கமாக சொல்லியிருக்கலாம். ஏனென்றால், "இஸ்லாமிய முறையில்" பாடம் புகட்டுவார் என்ற அர்த்தத்தில் சொன்னாரோ, அல்லது யேகோவாவின் நபிகள் ( மோசே, எலியா, எலிஷா இன்னும் பலர்) முறையில் என்ற அர்த்தத்தில் சொன்னாரோ தெரியவில்லை. யேகோவாவின் நபிகள் (தீர்க்கதரிசிகள்), வானத்திலிருந்து அற்புதங்களைச் செய்தார்கள், மரித்தவர்களை உயிரோடு எழுப்பினார்கள். ஆனால் அல்லாவின் நபி (முகமது) எந்த அற்புதமும் செய்யவில்லை. ஆனால் அல்லாவின் பாதையில் போர் செய்து, தன் செய்தியை பரப்பினார்.

இதில் எந்த அர்த்தத்தில் மரியாளின் தாய் ஜெபித்துயிருப்பார்கள்? நான் நினைக்கிறேன், இவர்கள் யூத தீர்க்கதரிசிகள் என்ற அர்த்தத்தில் தான் ஜெபித்தியிருக்கமுடியும், காரணம். எல்லா பழைய ஏற்பாட்டு நபிகள், தேவனுடைய வசனத்தை சொன்னார்கள், ஆனால், தன் நாட்டு மக்கள் தேவனுடைய வசனத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கையில் வாளை எடுக்கவில்லை.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

'என் வயிற்றில் உள்ளதை உனக்காக அர்ப்பணிக்கிறேன்' என்ற கூற்றை சிந்திக்கும் போது நாம் எழுதியவாறு உள்ள எண்ண ஓட்டங்கள் அந்த தாயின் மனதில் எழுந்திருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது. அவர் ஒரு குழந்தையை பெற்றெடுக்கிறார் அது பெண் குழந்தையாகி விடுகிறது. அவர் எதிர்பார்த்த ஆண் குழந்தை கிடைக்கவில்லை. தன் எண்ணம் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற கவலையில் தான் 'நான் ஒரு பெண் குழந்தையை பெற்று விட்டேனே..' என்கிறார். ஆண் பெண்ணைப் போன்றவனல்ல.. என்ற அந்த தாயின் கூற்றும் 'இறைவனுக்காக தன்னை அர்ப்;பணித்து போராட்ட களம் காணும் தகுதி ஆணுக்கு தான் இருக்க முடியும் ஆனால் பிறந்தது பெண்ணாகி விட்டதே..' என்ற கவலையின் சாயலில் தான் வெளிப்படுகிறது.

என் மறுப்பு:

"களம் காணும்" என்று சொல்வதைப் பார்த்தால், இஸ்லாமிய முறையில் போரிடுவார் என்று அவர் எண்ணியிருப்பர்கள் என்றுத்தோன்றுகிறது. ஆனால், என் அருமை இஸ்லாமிய நண்பர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்.

இறைவன் ஒரு திட்டம் தீட்டினால், அதை நிறைவேற்ற யாரையாவது பயன்படுத்துவார். ஆணோ, பெண்ணோ அவருக்கு ஒரு கணக்கு இல்லை.

பைபிளில் உள்ள பெண் தீர்க்கதரிசிகளைப் பாருங்கள்:

1. ஆரோனின் சகோதரி "மிரியாம்" ஒரு தீர்க்கதரிசி (பார்க்க யாத் 15:20-21, மீகா 6:4 )

2. இராஜ தந்திரி "தெபோராள்" ஒரு தீர்க்கதரிசி. (பார்க்க நியாயாதிபதிகள் 4,5 அதிகாரங்கள்)

3. உல்தாள் ஒரு தீர்க்கதரிசி. (பார்க்க 2 இராஜா 22:14, 2 நாளா 34:22)

இறைவனுடைய திட்டத்தை நிறைவேற்ற, இறைவன் பெண்ணை தெரிந்தெடுத்த பிறகு, அவள் பெண் என்றதால் அது நிறைவேறமுடியாமல் போனால், அது அவள் தவறல்ல, அது இறைவனின் இயலாமையாகும்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

இருந்தும் அவர் தன் நம்பிக்கையை தளர்த்திக் கொள்ளாமல் குழந்தைக்கு மரியம் (மரியாள்) என்று பெயரிட்டு அதை இறைவனின் பாதுகாப்பில் ஒப்படைக்கிறார்கள்.

அவரை (மரியாளை) இறைவன் அழகிய முறையில் எடுத்துக் கொண்டான். அவரை அழகிய முறையில் வளர்த்தான். அவருக்கு ஜகரிய்யாவை பொறுப்பாளியாக்கினான். (அல் குர்ஆன் 3:37)

(உள்ளத் தூய்மையோடும் உயர்ந்த நோக்கத்திற்காகவும் இறைவனிடம் செய்யும் முறையீடுகள் (பிரார்த்தனைகள்) எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று முஸ்லிம்களுக்கு இதில் படிப்பனையுள்ளது.)

பைபிளின் புதிய ஏற்பாட்டின் நான்கு சுவிசேஷ காரர்களான மாற்கு, மத்தேயு, லூக்கா, யோவான் இவர்களில் யாரும் குர்ஆனில் வரும் மரியாளின் தாயார் பற்றிய சம்பவங்களை குறிப்பிடவே இல்லை.

ஜகரிய்யா பொறுப்புதாரியாக்கப்பட்டார் என்பதிலிருந்து மரியாளின் தாயார் மரியாளை பெற்றவுடன் மரணித்து இருக்கக் கூடும் என்பதை யூகிக்கலாம்.

என் மறுப்பு:

பைபிளின் தேவன் எதை எழுதவேண்டுமென்று நினைத்தாரோ, அது மட்டும் தான் பைபிளில் சேர்த்துள்ளார்.

தேவன் எவ்வளவு துள்ளியமாக தன்னுடைய வார்த்தைகளை நமக்கு கொடுத்தார் என்றால், இயேசுவினுடைய வெளிப்புற தோற்றத்தைப்பற்றி ஒரு குறிப்பு கூட சேர்க்கப்படவில்லை. இயேசு இவ்வளவு உயரமாக இருப்பார், இந்த கலரில் (வண்ணம்) இருப்பார், கண்கள் இப்படியிருக்கும் என்றெல்லாம் புதிய ஏற்பாட்டில் வர்ணனை சேர்க்கப்படவில்லை. காரணம், சுவிசேஷம் எழுதிய மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யொவான் போன்ற நல்லடியார்கள் மூலமாக, தேவன் தன் செய்தியையும், இரட்சிப்பையும் தெரியபடுத்த விரும்பினரே தவிர, இலக்கிய நடைக்காகவோ அல்லது வெளிப்புற விவரங்கள் சொல்வதற்காகவோ அல்ல.

மரியாளின் தாய் இப்படி ஜெபித்தார்கள் என்று குர்-ஆன் சொல்கிறதே தவிர, வேறு ஆதாரம் எதுவும் இல்லை. நீங்கள் சொல்வதைப்பார்த்தால், மரியாள் பிறந்தவுடன் தன் தாய் மரித்துயிருந்தால், தன் தாய் இவ்விதமாக ஜெபித்தார்கள் என்ற விவரம் மரியாளுக்கே தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. மற்றும் தேவன் அதை பைபிளில் சேர்க்க விரும்பவில்லை, இப்படியிருக்க எப்படி சுவிசேஷகர்கள் சொந்தமாக கற்பனை செய்துக்கொண்டு எழுத முடியும்.

மரியாள் ஜகரியாவிடம் வளர்க்கப்பட்டாள் என்று பைபிள் சொல்லவில்லை. குர்-ஆன் மட்டும் தான் சொல்கிறது.

மரியாளின் தந்தை என்ன ஆனார்?
அவர் எப்போது மரித்தார் ?

நீங்கள் சொல்கிறடி, மரியாளின் தாயார் மரியாள் பிறந்த சில நாட்களுக்குள் மரித்துயிருந்தால், மரியாளின் தந்தையும் தான் பிறப்பதற்கு முன் மரித்து இருக்கவேண்டும்.

ஏன் நான் மரியாளின் தந்தை மரித்துயிருக்கக்கூடும் என்றுச் சொல்கிறேன் என்றால், நிஜாமுத்தீன் அவர்கள் அல்லது குர்-ஆன் சொல்வது போல, மரியாளை ஜகரியாவிடம் வளர்க்க விடவேண்டுமானால், தாய் தந்தையில்லாமல் இருந்திருக்க வேண்டும். மட்டுமல்ல அல்லா மரியாளின் தந்தைப் பற்றி ஏன் ஒன்றுமே சொல்லவில்லை?

எனவே, தேவன் தேவையில்லாத விவரம் எல்லாம் சேர்க்கமாட்டார். யாருக்குத் தெரியும், இக்கதை கூட முகமதுவின் சொந்தகருத்தாக கூட இருக்கலாம்.

குர்-ஆன் சொல்கின்ற இந்நிகழ்ச்சிகள் உண்மையானால், மரியாளின் தாயைப்போல் ஒரு துர்பாக்கியசாலி யாரும் இருக்கமாட்டார்கள்.

மரியாள் தன் தாயின் வயிற்றில் விழுந்தவுடன் 10 மாதத்திற்குள் அவர் தந்தை மரித்துயிருப்பார். தன் கணவன் மரித்த சோகத்தில் இருக்கும்போது தான் மரியாளை பெற்றுயிருக்கமுடியும், இந்த வேதனையில் ஒரு பெண்மணி தன் நாட்டிற்கு தீர்க்கதரிசி வேண்டுமென்று ஜெபிப்பாளா அல்லது தன் நிலையைப்பற்றி யோசிப்பாளா?

மரியாளின் சில விவரங்கள் இயேசுவின் பிறப்புபற்றி பைபிளில் சேர்த்ததாலேயே, ஒரு கூட்டம் அவர்களை ஒரு தெய்வீகத்தன்மை உள்ளவராக நினைத்து, இயேசுவிடம் சிபாரிசு செய்யும் படி வேண்டிக்கொள்கிறார்கள். இன்னும் அவர்களின் தாய் ஜெபித்தது பற்றி சேர்த்துயிருந்தால், அவர்களையும் தெய்வீக பட்டியலில் சேர்த்துயிருப்பார்கள், இன்னும் விக்கிர ஆராதனை கிறிஸ்தவர்கள் மத்தியில் அதிகமாக வளர்ந்துயிருக்கும். எனவே தான் தேவன் தேவையானது மட்டும் தான் பைபிளில் சேர்த்துள்ளார்.


நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

ஜகரிய்யா அவர்களிடம் வளரும் மரியாளுக்கு அவ்வப்போது சிற்சில அற்புதங்கள் நிகழ்கின்றன.

மரியாள் தங்கிக் கொள்ளும் அறைக்கு ஜகரிய்யா அவர்கள் செல்லும் போதெல்லாம் மரியாளிடம் இருக்கும் உணவு வகைகளை கண்டு 'மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது? என்று கேட்கிறார்கள். அதற்கு மரியாள் இது இறைவன் கொடுக்கிறான். அவன் தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான் என்கிறார்கள். (அல் குர்ஆன் 3:38)

என் மறுப்பு:

இந்த அற்புதம் குர்-ஆனில் உள்ளதே தவிர, பைபிளில் இல்லை. இறைவன் உணவை அற்புதமாக கொடுத்தார் என்று குர்-ஆன் சொல்கிறதே தவிர, ஏன் இந்த அற்புதம் அவசியம் என்றுச் அல்லா சொல்லவில்லை.

1. ஏன் மரியாளுக்கு உணவு இறைவன் அற்புதமாக கொடுக்கவேண்டும்?

2. காரணமில்லாமல் தேவன் எப்போதும் ஒரு அற்புதத்தையும் செய்யமாட்டார் !

3. ஜகரியா அவர்களுக்கு உணவுப்பஞ்சம் இருந்ததா ?

4. இப்படி அற்புதம் நடந்து இருந்தால், இச்செய்தி ஊரெல்லாம் பரவியிருக்கும், மரியாள் மிகவும் புகழ்பெற்ற பெண்மணியாக மாறியிருப்பார்கள்.

5. இதனால், இயேசுவின் அற்புதப்பிறப்பில் எந்தவித சிக்கலும் இருந்திருக்காது.

6. மக்கள் மரியாளை குர்-ஆன் சொல்கிறபடி சந்தேகப்பட்டு இருக்கமாட்டார்கள்.

7. குர்-ஆன் சொல்வது போல இயேசுவை பெற்றெடுக்க மரியாள் அதிகமாக கஷ்டப்பட்டு இருக்கமாட்டார்கள்.

எனவே, குர்-ஆனில் சொல்வது முகமதுவின் கற்பனை என்பது தெளிவாகப்புரியும்.

இப்படி மரியாளுக்கு அற்புதவிதமாக உணவு அளிக்கப்பட்டிருந்தால், இயேசுவின் சீடர்கள் அவைகளை எழுதாமல் இருந்திருக்கமாட்டார்கள்.

இயேசுவின் சீடர்கள் செய்த அற்புதங்களை நாம் அப்போஸ்தலர் நடபடிகளில் (புதிய ஏற்பாட்டின் 5வது புத்தகம்) காணலாம். எனவே மரியாளுக்கு ஜகரியாவின் வீட்டில் நடந்த அற்புதங்கள் என்பது, வெறும் கற்பனையே தவிர வேறுயில்லை. (குறிப்பு: குர்-ஆன் கற்பனையே என்றுச் சொன்னதினால், இஸ்லாமிய நண்பர்கள் கோபப்படவேண்டாம். எப்படி இஸ்லாமியர்கள் பைபிளில் சொல்லப்பட்டது கற்பனை என்றுச் சொல்லி அவர்கள் நம்பிக்கையை முன்வைக்கின்றனரோ, அதே போல் கிறிஸ்தவர்களுக்கும், தங்கள் நம்பிக்கையை (குர்-ஆன் கற்பனை என்றும், முரண்பாடுகள் உள்ளதென்றும் என்றுச் சொல்லி) முன்வைப்பதற்கும் உரிமையுண்டு என்பதை பகுத்தறிவு உள்ளவர்கள் யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்வார்கள்.)

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

இறைவனிடமிருந்து மரியாள் பெற்ற அறிவிப்பு.மரியமே! இறைவன் உம்மை தேர்வு செய்து தூய்மையாக்கி அகிலத்தின் பெண்களை விட உன்னை சிறப்பித்துள்ளான் என்று வானவர்கள் நற்செய்திக் கூறுகிறார்கள். (அல் குர்ஆன் 3:42)

மரியமே! உனது இறைவனுக்கு பணிந்து நடப்பாயாக, அவனுக்காக தலை தாழ்த்தி வணங்குவாயாக. குனிந்து வணங்குவோருடன் குனிந்தும் வணங்குவாயாக என்றும் வானவர்கள் கூறினார்கள். (அல் குர்ஆன் 3:43)இவை மறைவனா செய்திகளாகும். (முஹம்மதே.. இறைவனாகிய) நாமே இதை உமக்கு அறிவிக்கிறோம். மர்யமை யார் பொறுப்பேற்றுக் கொள்வது என்று முடிவு செய்ய அவர்கள் எழுதுகோல்களைப் போட்ட போதும், இது குறித்து அவர்கள் சர்ச்சை செய்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (அல் குர்ஆன் 3:44)

மரியாளை இறைவன் அகிலத்தின் பெண்களை விட தூய்மைப்படுத்தியதாகவும், அவரை இறைவன் தேர்ந்தெடுத்துக் கொண்டதாகவும் இந்த வசனங்களில் கூறப்படுகின்றன. கிறிஸ்துவ பிரச்சாரர்களால் இந்த வசனங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டு வருவதை நாம் பார்க்கிறோம். தேர்ந்தெடுத்து தூய்மைப்டுத்துதல் என்பதை 'தூய்மைப்படுத்தி மனைவியாக தேர்ந்தெடுத்துக் கொண்டான்' என்று வளித்து பொருள் கொண்டு - இறையச்சமின்றியும் பகுத்தறிவு சிந்தனையின்றியும் - விஷமத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

என் மறுப்பு:

இஸ்லாமியர்கள் எவ்வளவு அருமையாக சிந்திக்கிறார்கள் என்றுப்பாருங்கள்.

இயேசு தேவனுடைய குமாரன் என்று சொன்னால், தேவன் கணவனாகவும், மரியாள் மனைவியாகவும், பாவித்து அவ்விருவரால் இயேசு பிறந்தார் என்றுச் சொல்கிறார்கள் பகுத்தறிவாளர்களாகிய இஸ்லாமியர்கள். அருமயான புரிந்துக்கொள்ளுதல்.

பைபிளில் தேவன் "குமாரன்" என்று யார் யாரை அழைக்கிறார்:

பிதா குமாரன் என்பது இவ்விருவருடைய உறவுமுறையை (Relationship) குறிக்கிறது. பைபிளில் குமாரன் என்ற வார்த்தையை இரண்டு வகையில் சொல்லப்படுகிறது.

1. உலக பிரகாரமான தந்தை, குமாரன் உறவுமுறை
2. உவமையாக (Figurative) சொல்லப்படுவது.

1. உலக பிரகாரமான தந்தை, குமாரன் உறவுமுறை:

கணவன் மனைவி முறையில் பிறக்கும் மகன். ஆபிரகாமும், ஈசாக்கும் மற்றும் தாவிதும் சாலமொனும் இந்த வகையில் வருவார்கள். நாம் கூட இம்முறையில் தான் வருகிறோம்.

2. உவமையாக (Figurative) சொல்லப்படுவது.

வேதத்தில் தேவன் உவமைமுறையில் (Figurative) பல நபர்களை தன் குமாரன் என்றுச் சொல்கிறார்.


a) ஆதாம் தேவனின் குமாரன்: -

லூக்கா 3:38தேவன் ஆதமை உருவாக்கி தன் சுவாசத்தை ஊதினார், ஆதாமும், ஏவாளும் ஒரு விசேஷமான உறவுமுறையை தேவனோடு கொண்டிருந்தனர்.லூக்கா

3:38. ஏனோஸ் சேத்தின் குமாரன்; சேத் ஆதாமின் குமாரன்; ஆதாம் தேவனால் உண்டானவன்.

Lk 3:38 Which was the son of Enos, which was the son of Seth, which was the son of Adam, which was the son of God.

b) இராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் தேவனின் குமாரர்கள்: -

சங்கீதம் 2:7
சங்கீதம் 2ம் அதிகாரத்தில், இராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டவர்கள், தேவனுடைய குமாரர்கள் என்றுச்சொல்கிறது.

சங்கீதம் 2: 7. தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி, நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;

Psalm 2:7 I will declare the decree: the LORD hath said unto me, Thou art my Son; this day have I begotten thee.

c) சாலமோனை தேவன் தன் குமாரன் என்றுச் சொல்கிறார். -

2 சாமுவேல் 7:14
2 சாமுவேல் 7:14. நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்; அவன் அக்கிரமம் செய்தால், நான் அவனை மனுஷருடைய மிலாற்றினாலும் மனுபுத்திரருடைய அடிகளினாலும் தண்டிப்பேன்.

2 Sam 7:14 I will be his father, and he shall be my son. If he commit iniquity, I will chasten him with the rod of men, and with the stripes of the children of men:

d) பார்வோன் மகளுக்கு மோசே குமாரன் ஆனான்: - யாத் 2:10

யாத்திராகமம் 2:10.
பிள்ளை பெரிதானபோது, அவள் அதைப் பார்வோனுடைய குமாரத்தியினிடத்தில் கொண்டுபோய் விட்டாள். அவளுக்கு அவன் குமாரனானான். அவள், அவனை ஜலத்தினின்று எடுத்தேன் என்று சொல்லி, அவனுக்கு மோசே என்று பேரிட்டாள்.

Exo 2:10 And the child grew, and she brought him unto Pharaoh's daughter, and he became her son. And she called his name Moses: and she said, Because I drew him out of the water.

e) இஸ்ரவேல் மக்கள் அனைவரும் என் குமாரன் (சேஷ்டபுத்திரன்) என்றுச் சொல்கிறார் - யாத்திராகமம் 4:22-23:

யாத்திராகமம் 4:22. அப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்,இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன்.யாத்திராகமம்

4:23. எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பிவிடு என்று கட்டளையிடுகிறேன்; அவனை விடமாட்டேன் என்பாயாகில் நான் உன்னுடைய குமாரனை, உன் சேஷ்ட புத்திரனைச் சங்கரிப்பேன் என்று கர்த்தர் சொன்னார் என்று சொல் என்றார்.

Exo 4:22 And thou shalt say unto Pharaoh, Thus saith the LORD, Israel is my son, even my firstborn: Exo 4:23 And I say unto thee, Let my son go, that he may serve me: and if thou refuse to let him go, behold, I will slay thy son, even thy firstborn.

f) இயேசு என் நேசகுமாரன் - மத்தேயு 3:16,17 :

மத்தேயு 3:16. இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.

மத்தேயு 3:17. அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

g) கிறிஸ்தவர்கள்(விசுவாசிக்கிறவர்கள்) தேவனுடைய குமாரர்கள் -
கலாத்தியர் 4:6-7, வெளி 21: 7 :

கலாத்தியர் 4:6. மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.

கலாத்தியர் 4:7. ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடை சுதந்தரனாயுமிருக்கிறாய்.

வெளி 21: 7. ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.

Gal 4:6 And because ye are sons, God hath sent forth the Spirit of his Son into your hearts, crying, Abba, Father

அன்பு இஸ்லாமிய நண்பரே, குமாரன் என்று அழைத்தால் எப்போழுதும் கணவன் மனைவி உடலுறவு மூலம் தான் வரும் என்று எப்படி உங்களால் நினைக்கமுடிகிறது?

மேலே சொல்லப்பட்ட 6 எடுத்துக்காட்டிலும், தேவன் மற்றவர்களை குமாரன், சேஷ்டபுத்திரன் என்று அழைக்கிறார். ஏன் அப்படி அழைக்கிறார் என்றால், எவன் ஒருவன் தேவன் சொல்வது போல நடந்துக்கொள்கிறானோ அவனை தேவன் தன் குமாரன் என்றுச் சொல்கிறார். தேவன் எவனை நேசிக்கிறாரோ, அவனை குமாரன் என்றுச் சொல்கிறார். நீங்களும், நானும் தேவனுக்கு குமாரர்கள் இல்லையா?

மேலே சொல்லப்பட்ட ஒவ்வொரு உதாரணத்திலும், தேவன் கணவனாகவும், மற்றவர்களை ( சாலமோனின் தாய், சவுலின் தாய், தாவிதின் தாய் போன்றவர்களையும்) நீங்கள் தேவனின் மனைவியாக சொல்கிறீர்களா? சொல்லமாட்டீர்கள், உங்களுக்கு இயேசுவின் பிறப்பு மட்டும் தான் வேண்டும்.

தேவன் மற்றவர்களை குமாரன் என்றுச் சொன்னால், ஒரு விசேஷித்த உறவு முறை அல்லது நட்பு இவர்கள் இருவர் நடுவில் இருக்குமே தவிர, நீங்கள் நினைப்பது போல் கீழ்தரமான உறவுமுறையில்லை.

தேவனுக்கும், தேவன் "குமாரன்" என்று அழைக்கும் நபர்களுக்கும் உள்ள விசேஷித்த உறவுமுறையை இங்கு காணலாம்.

ஆதாம் - தேவனுடைய சுவாசத்தை உடையவன், தேவன் தினமும் சந்தித்துப்பேசினார்.

இஸ்ரவேல் மக்கள் - தேவனுடைய உடன்படிக்கையை உடையவர்கள். (விருத்தசேதனத்தினால் அந்த உடன்படிக்கையை தங்கள் சரீரங்களில் கொண்டுயிருந்தனர்)

இராஜாக்கள் ( சவுல், தாவிது, சாலமோன் ... ) - தேவனுடைய அபிஷேகம் பெற்றுயிருந்தனர், தேவ ஆவியானவர் அவர்கள் மேல் இருந்தார்.

சாலமோன் - தேவ ஆவியிடையவன், ஞானம் உடையவன், அபிஷேகம் உடையவன்.

இயேசு - தேவனுடைய ஆவியால் பிறந்தவர், ஆதியில் தேவனோடு "வார்த்தையாக" இருந்தார்.

கிறிஸ்தவர்கள் - இயேசுவை விசுவாசித்ததால், அவரின் ஆவி நம்முடைய இதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறது. இயேசுவின் இரத்தத்தால் உண்டான உடன்படிக்கைக்கு சொந்தக்காரர்கள்.

எனவே, கிறிஸ்தவர்கள் இயேசுவை தேவனுடைய குமாரன் என்றுச் சொல்வது, உலகத்தின் சாதாரண முறையில் பிறக்காமல், தேவனுடைய ஆவியால் பிறந்தததால் தான்.

இப்படி நீங்கள் சிந்திப்பதனால், உங்களைச் சொல்லி குற்றமில்லை. உங்கள் வேதம் ( குர்-ஆன் ) அப்படிச் சொல்கிறது.

ஒரு நபரை மகனாக தத்து எடுத்தால், அவனை தன் குமாரன் என்றுச் சொன்னால், எங்கே அவன் மனைவியை திருமணம் செய்ய முடியாமல் போகுமே (அவன் விவாகரத்து செய்தால்) என்று பயந்து, குர்-ஆனில் அதற்காக வசனத்தை சேர்த்தவராயிற்றே உங்கள் நபி அவர்கள்.

குர்-ஆன் சொல்கிறது ஒரு நபரை தத்து எடுத்தால், அவனை "மகன்" என்று அழைக்காதீர்கள், அவனின் உண்மையான தந்தையின் பெயரைச் சொல்லி, "இன்னாருடைய மகனே" என்று அழையுங்கள், அவன் உண்மைத்தந்தையின் பெயர் தெரியாமல் இருந்தால், அவனை " உன் சகோதரன்" என்று அழைத்துக்கொள்ளுங்கள் என்று குர்-ஆன் சொல்கிறது.

குர்-ஆன் 33:5 (எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர் களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்; ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர்; (முன்னர்) இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை; ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்)் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

மத்தேயு: 7: 16. அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?

7: 17. அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்.

7:18. நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

இறைவன் என்பவன் தனித்தவன், பெறப்படாதவன், யாரையும் பெற்று தாயாகவோ தந்தையாகவோ ஆகாதவன், எத்தகைய தேவையும் அற்றவன், அவனுக்கு நிகராக எதுவுமில்லாதவன் என்றெல்லாம் இஸ்லாம் இறைவனுக்கு இருக்க வேண்டிய தனித்தகுதிகளை - இறைவனைத் தவிர பிறருக்கு இருக்கவே முடியாத தகுதிகளை - உலகில் முழங்கி அந்த சத்தியத்தின் பக்கம் மக்களை ஈர்த்து வளர்ந்துக் கொண்டு வருவதை அறியாதவர்களல்ல இவர்கள். இருப்பினும் இவர்களின் 'திரித்துவ' கொள்கையை மக்களிடம் - குறிப்பாக முஸ்லிம்களிடம் - திணிக்க திரித்தல் கலையை கையாண்டு வருகிறார்கள்.

என் மறுப்பு:

"திரித்தல் கலையை" கிறிஸ்தவர்கள் கையாள்கிறார்கள் என்று நீர் சொல்கிறீர்.

1. பல ஆண்டுகளாக, காபாவில் உள்ள ஒரு விக்கிரத்தை (அல்லாவை) பிடித்துக்கொண்டு, அகிலத்தை படைத்தவன் இவன் தான் என்றுச் சொன்னது யார்?

2. பைபிளில் வரும் நிகழ்ச்சிகளை தன் விருப்பத்திற்கு மாற்றி திரித்திச் சொன்னது யார்?

3. குர்-ஆனின் வசனங்களை தன் விருப்பத்திற்கு ஏற்றார்ப் போல் மாற்றியது யார்? இந்த வசனங்கள் இதற்கு முன்புள்ள வசனங்களை இரத்து (Abrogate) செய்கிறது என்றுச் சொல்லி, புதிய வசனங்களைச் சொன்னது யார்?

4. குர்-ஆனில் விஞ்ஞானம் உள்ளது, அற்புதங்கள் உள்ளது என்றுச் சொல்லிக்கொண்டு குர்-ஆன் வசனங்களையே திரித்துச் சொல்வது யார்?

திரித்தல் வேலையை இஸ்லாமியர்களை விட இன்னும் அதிக திறமையோடு யார் செய்யமுடியும்?

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

தூய்மைப்படுத்துதல் - தேர்ந்தெடுத்தல் என்பதன் பொருள் என்ன?மனைவியாக வருபவளை மட்டும் தான் தூய்மைபடுத்த முடியும். தேர்ந்தெடுக்க முடியும் என்பதுதான் கிறிஸ்துவ உலகின் அளவுகோலா...கிறிஸ்துவத்தை பிரச்சாரம் செய்வதற்காகவே உருவாக்கப்படும் கன்னியாஸ்திரிகள் எப்படிப்பட்டவர்கள்? மத குருக்களால் தேர்ந்தெடுத்து தூய்மைப்படுத்தப்படுபவர்களே கன்னியாஸ்திரிகள் என்ற தகுதியை அடைய முடியும். இப்படி தெர்ந்தெடுக்கப்பட்டவர்களெல்லாம் கர்த்தருக்கு மனைவியாகத்தான் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள் என்று கூறி கிறிஸ்துவ உலகம் கர்த்ததை காமம் நிறைந்தவராகவும் பெண் மோகம் உள்ளவராகவும் சித்தரிக்குமா... அப்படியெல்லாம் இல்லையென்றால், மரியாளுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா...

என் மறுப்பு:

தூய்மைப்படுத்துதல் என்பது "மனைவியாக பாவித்தல்" என்று எந்த கிறிஸ்தவனும் நினைத்ததில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை கிறிஸ்தவத்தின் மீது திணிக்கிறீர்கள்.

கர்த்தரை காமம், பெண்ணாசை உள்ளவராக எப்போதும் எந்த கிறிஸ்தவனும் சொன்னதில்லை, நினைப்பதில்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. அது என்னவென்றால், அல்லா மட்டும் காமம் நிறைந்தவர் என்பதற்கு அதிக சான்றுகள் உள்ளன.

1. இயேசு தன் சீடர்களுக்கு "நீங்கள் உங்கள் அடிமைப்பெண்களோடு திருமணம் செய்துக்கொள்ளாமல் உறவு கொள்ளலாம்" என்றுச் சொல்லவில்லை. ஆனால் அல்லா சொல்லியுள்ளார்.

2. வளர்ப்பு மகனாக இருந்தாலும், அவன் மனைவியை திருமணம் செய்வது (விவாகரத்து ஆனபிறகு) நான் கொடுக்கும் கட்டளை என்று பைபிளில் எங்கும் காணமுடியாது. ஆனால் குர்-ஆனில் காணமுடியும். அதனால் தான் சில இஸ்லாமிய குடும்பங்களில் தன் மனைவி தன் தந்தைக்கு காபி, டீ கூட கொடுக்க சில மகன்கள் அஞ்சுகிறார்கள்.

3. கர்த்தர் தன் பிள்ளைகள் சொர்க்கத்திற்கு வந்தால், அவர்களுக்கு 70 பெண்களை கொடுப்பதாகவும், சம வயதுள்ள இளம்பெண்களை கொடுப்பதாகவும் சொல்லவில்லை.

4. ஆனால், அல்லா சொல்கிறார். மட்டுமில்லை, அவர்கள் கன்னித்தன்மையை ஒவ்வொருமுறையும் புதுப்பிப்பதாகச் சொல்கிறார். என்னே அன்பு தன் பிள்ளைகள் மீது. எங்கள் கர்த்தரும் இருக்கிறாரே.. ஜிவ மரத்தின் கனி கொடுப்பேன், கிரீடம் கொடுப்பேன், என்று மட்டும் தான் சொல்கிறார். பாவம் கிறிஸ்தவர்கள் இங்கே ஒரு மனைவி, சொர்க்கத்தில் அந்த ஒரு மனையுமில்லை.

5. முகமதுவிற்கு கனவிலே தூதன் வந்து, ஆயிஷாவை கையில் ஏந்தியவாறு(சிறு பிள்ளை என்பதால் தான் கையில் ஏந்திக்கொண்டு வந்தார்) "இது உனக்குத்தான் என்றுச் சொன்னார்", ஆனால் கர்த்தரொ, தேவத்தூதர்களைக் கொண்டு கிறிஸ்தவர்களை பாதுகாப்பதாகச் சொல்கிறார். எங்களுக்கு கிடைக்குமா அந்த பாக்கியம்.

6. ஒரு கிறிஸ்தவன் ( கிறிஸ்தவள் ) மரித்தால், சொர்க்கத்தில் அவன் தன் சொந்த துணையைகூட, பரிசுத்த கண்ணோட்டத்தில் தான் பார்ப்பான். ஆனால், ஒரு முஸ்லீமுக்கோ, சொர்க்கத்தில் பூமியில் தனக்கு இருந்த சக்தியை விட அதிக சக்தி தேவைப்படும்.

இப்போதுச் சொல்லுங்கள், யார் உங்கள் பார்வைக்கு அதிக காமம் உள்ளவராக சித்திரிக்கிறார்கள், கிறிஸ்தவர்களா (பைபிளா) அல்லது முஸ்லீம்களா (குர்-ஆனா)? "கர்த்தரின் பரிசுத்தம் பற்றிப்பேச ஒரு தகுதிவேண்டும்" என்பதை நான் மிகத்தாழ்மையோடு தெரிவித்துக்கொள்கிறேன்.


நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

இன்றைய கன்னியாஸ்திரிகள் கர்த்தர் வழியில் தன்னை அர்ப்;பணித்து அவருக்கு ஊழியம் செய்யவே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்தப் பணிக்கு உள்ளத்தூய்மையும் கட்டுப்பாடும் முக்கியம் என்பதால் அதற்கான பயிற்சியின் மூலம் அவர்கள் தூய்மைப்படுத்தப்படுகிறார்கள் என்று கிறிஸ்துவம் பதில் சொன்னால் இந்த வாதம் மரியாளின் விஷயத்தில் மட்டும் பொருந்தாமல் போய்விடுமா...உலக அளவில் கிறிஸ்தவர்களால் நடத்தப்படும் கல்விக் கூடங்கள் இன்னபிற நிறுவனங்கள் இங்கெல்லாம் ஏனோ தானோவென்று ஆட்களை நியமிக்கிறார்களா...அல்லது தகுதிப்படைத்தவர்களை தேர்ந்தெடுத்து நியமிக்கிறார்களா...இங்கெல்லாம் நல்ல ஆண்களை தெர்ந்தெடுக்கும் போது அது அங்குள்ள பெண்களுக்கு கணவர்கள் என்ற அடிப்படையில்தான் என்றும், சிறந்தப் பெண்களை தேர்ந்தெடுக்கும் போது இது அங்குள்ள ஆண்களுக்கான மனைவிகளின் தேர்வுதான் என்றும் பிறர் விளக்கம் சொன்னால் இவர்களால் பொருத்துக் கொள்ள முடியுமா...தேர்ந்தெடுத்தலும் - தூய்மைப்படுத்துதலும் மனைவியாக்கத்தான் என்பது எவ்வளவு கீழ்தரமான வாதம் என்பதை கிறிஸ்துவ சகோதரர்கள் இப்போது உணர்வார்கள் என்று நம்புகிறோம்.

என் மறுப்பு:

ஆன்மீக விவரங்களை ஆன்மிகத்தோடு சம்மந்தப்படுத்தி பேசவேண்டும். இதுப்பற்றித் தெரியாதவர்களிடம் என்னத்தைச் சொல்லமுடியும்.கணவன் மனைவி மூலமாக பிறந்த ஒருவன், இறைவனுக்கு கீழ்படியவில்லை என்றுச் சொல்லி, அவன் உன் மகன் இல்லை என்றுச்சொல்ல அல்லாவிற்கு முடியுமானால், தெய்வத்தன்மை உடைய ஒருவரை, இறைவனுடைய ஆவிமூலமாக பிறந்தவரை தேவனின் குமாரன் என்று ஏன் சொல்லக்கூடாது? சிந்திக்கவேண்டும்.

நோவா தன் மகன் தண்ணீரில் அழிந்துவிடுவான் என்று கவலைப்பட்டால், அவன் உன் மகன் இல்லை என்று அல்லா சொல்கிறார்.

11:42 பின்னர் அக்கப்பல், மலைகளைப் போன்ற அலைகளுக்கிடையே அவர்களை சுமந்து கொண்டு செல்லலாயிற்று; (அப்போது தம்மை விட்டு) விலகி நின்ற தம் மகனை நோக்கி 'என்னருமை மகனே! எங்களோடு நீயும் (கப்பலில்) ஏறிக்கொள்; காஃபிர்களுடன் (சேர்ந்து) இராதே!" என்று நுூஹ் அழைத்தார்.

11:45 நுூஹ் தன் இறைவனிடம் 'என் இறைவனே! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவனே; உன் வாக்குறுதி நிச்சயமாக உண்மையானது; நீதி வழங்குவோர்களிலெல்லாம் மேலான நீதிபதியாய் நீ இருக்கிறாய்" எனக் கூறினார்.

11:46 அ(தற்கு இறை)வன் கூறினான்: 'நுூஹே! உண்மையாகவே அவன் உம் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன்; நிச்சயமாக அவன் ஒழுக்கமில்லாச் செயல்களையே செய்து கொண்டிருந்தான்; ஆகவே நீர் அறியாத விஷயத்தைப் பற்றி என்னிடம் கேட்க வேண்டாம்; நீர் அறியாதவர்களில் ஒருவராகி விடவேண்டாம் என்று திடமாக நான் உமக்கு உபதேசம் செய்கிறேன்."

இரத்த சம்மந்தமான மகன் எப்படி தன் மகன் இல்லாமல் போகமுடியும்? மகன் என்பதற்கு இரத்த சம்மந்தம் மட்டும் தான் ஒரு அளவுகோல் என்பது தவறான கருத்து என்பது உங்களுக்கு இப்போதாவது புரிந்ததா?

இந்த நிகழ்ச்சியும் பைபிளில் உள்ளதை திரித்தி சொல்லப்பட்ட செய்திதானே.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

கர்த்தர் மரியாளை தேர்ந்தெடுத்து தூய்மைப்படுத்துகிறார் என்பது உண்மைதான். இறைவனுக்கு மனைவி என்ற மட்டரகமான தகுதிக்காக இந்த தேர்வு நடக்கவில்லை. இந்த தேர்வு மரியாளின் தாயார் செய்த பிரார்த்தனைக்காக நடந்ததாகும்.யூதர்களின் கொடுமையை கண்டு அதை எதிர்க்க தன் பங்களிப்பாக தன் வயிற்றில் வளர்வதை இறைவனுக்கு அர்ப்;பணிக்க முடி செய்து அதை கர்த்தரிடம் அறிவிக்கவும் செய்கிறார். ஆனால் கர்த்தர் கொடுத்ததோ பெண் குழந்தை. 'நான் ஒரு பெண்ணை பெற்றுவிட்டேனே...' என்று அவர் மனம் நொந்துப்போனாலும் கர்த்தரின் திட்டம் வேறு விதமாக இருந்தது. ஆண் பெண்ணைப் போன்றவனல்ல என்று அந்த தாய் நினைத்தாலும் பெண்ணாலும் இறைவழியில் பெரும் தியாகம் செய்ய முடியும் என்பதை உலகிற்கு உணர்த்துவதற்காக மரியாளை தேர்ந்தெடுப்பது இறைவனின் திட்டமாக இருந்தது.

கர்த்தருக்கான அர்ப்பணத்திற்கு ஒரு முன்னுதாரனமாகத்தான் அந்த பெண் தேர்ந்தெடுக்கப்படுகிறாரே தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை.மரியாளின் தாயார் செய்த பிரார்த்தனைக்கு களம் அமைக்கும் விதமாகவே அவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.


என் மறுப்பு:
இறைவனுக்கு மனைவி என்ற மட்டரகமான கருத்து இதுவரையில் எந்த கிறிஸ்தவனும், கிறிஸ்தவளும் நினைத்ததில்லை. முதல் முதலாக இஸ்லாமியர்களே இந்த மட்டரகமாக உறவுமுறையை இறைவனுக்கு கொடுக்கிறார்கள்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

தாயாரின் மறைவுக்கு பிறகு அவரை வளர்ப்பது யார் என்ற பிரச்சனையும் அவர் குறித்த சர்ச்சையும் கிளம்பியதாக இறைவன்

3:44 வசனத்தில் குறிப்பிடுகிறான். இதிலிருந்து அவர் தனித்துவம் வாய்ந்த பெண்ணாக வளர்ந்துள்ளார் என்பதை விளங்கலாம்.பிற்காலத்தில் இறைவனால் ஏற்படப்போகும் ஒரு மகத்தான சோதனைக்கு அவரை மனோவியல் ரீதியில் தயார் படுத்துவதற்காக அவரை வளர்க்கும் பொறுப்பை இறைவன் இறைத்தூதர் ஜகரிய்யா அவர்களிடம் ஒப்படைக்கிறான்.

மரியாளை பொறுப்பேற்று வளர்க்கும் போது ஜகரிய்யா அவர்களுக்கு குழந்தை இல்லை. வயதானாலும் குழந்தைக்காக ஏங்கும் இதயம் மட்டும் அவர்களுக்கு ஓயவில்லை. மரியளை குழந்தைக்கு குழந்தையாக வளர்த்து வணக்க வழிபாட்டின் மூலம் அவர்களை பக்குவப்படுத்திக் கொண்டிக்கும் வேளையில் தான் மரியாளுக்கு இறைவன் புறத்திலிருந்து உணவுகள் வழங்கப்படுவதை ஜகரிய்யா அவர்கள் பார்க்கிறார்கள்.

இது எப்படி உனக்கு கிடைத்தது? என்ற கேள்விக்கு கணக்கின்றி கொடுக்கும் ஆற்றல் உள்ள இறைவன் தான் இதை எனக்கு கொடுக்கிறான் என்று மரியாளிடமிருந்து பதில் வருகிறது.

என் மறுப்பு:

மரியாளை யார் வளர்ப்பது என்பது பற்றி குர்-ஆன் என்ன தவறு செய்கிறது என்றுப் பார்போம். தேவையில்லாத விசயத்தில் மூக்கை நுழைக்காதே என்றுச் சொல்வது குர்-ஆனின் விசயத்தில் சரியாகத் தான் உள்ளது.

ஊரிம் தும்மீம் போட்டுப்பார்த்து முடிவு எடுப்பது யூதர்கள் முறை:

வில் எறிந்து முடிவு எடுப்பது அரேபியர்களின் வழக்கம், யூதர்களின் அல்ல.

யூதர்கள் ஒரு முடிவு எடுக்கவேண்டுமானால், தீர்க்கதரிசிகளிடம் கேட்பார்கள், அல்லது ஆசாரியர்களிடம் உள்ள ஊரீம் தும்மீம் என்ற கற்கலை (like Dise) போட்டு பார்ப்பார்கள். இதன் மூலமாக ஒரு காரியத்தை செய்யலாமா, இல்லையா என்பதை அறிந்துக்கொள்வார்கள்.

இது தான் கர்த்தர் போதித்த விதம். (பார்க்க யாத் 28:30, லேவி 8:8, எண் 27:21, உபா 33:8, 1 சாமு 14:41, 23:9-12, 28:6, எஸ்றா 2:63)

லேவி 8:8 அவனுக்கு மார்ப்பதக்கத்தை அணிந்து, மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளையும் வைத்து,

எஸ்றா 2:63 ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்புமட்டும், இவர்கள் மகா பரிசுத்தமானதிலே புசிக்கத்தகாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.

More on Urim and Thummim : Images 1 Images 2 Wikipedia - Urim and Thummim

வில் எறிந்து முடிவு எடுப்பது அரேபியர்களின் வழக்கம், யூதர்களின் வழக்கமல்ல:

வில் எறிந்து முடிவு எடுப்பது அரபியர்களின் முறையாகும். மரியாளின் வளர்ப்பை யார் பார்க்கவேண்டுமென்று, வில் எறிந்து பார்த்தார்கள் என்றுச் சொல்வதிலிருந்து, குர்-ஆன் இன்னொரு சரித்திர பிழையை செய்துள்ளது.

எனவே தான் சில புத்திசாலி அறிஞர்கள், குர்-ஆனை மொழிபெயர்க்கும் போது, "எழுதுகொல் எறிந்து" பார்த்தார்கள் என்று மாற்றி எழுதுகிறார்கள்.

குர்-ஆன் 3:443:44 (நபியே!) இவை(யெல்லாம்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும்; இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்; மேலும், மர்யம் யார் பொருப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை; (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை.

யூசுப் அலி சரியாக மொழிபெயர்த்துள்ளார்.

003.044 YUSUFALI: This is part of the tidings of the things unseen, which We reveal unto thee (O Messenger!) by inspiration: Thou wast not with them when they cast lots with arrows, as to which of them should be charged with the care of Mary: Nor wast thou with them when they disputed (the point).


இஸ்லாமிய சரித்திர நூல்களிலிருந்து ஆதாரம்:

முகமதுவின் தாத்தா முத்தாலிப் ஒரு முறை "ஜம்ஜம்" கிணரை சுத்தம் செய்துக்கொண்டு இருந்தார், அவர் நிறைய கஷ்டத்தை சந்தித்தார், இதனால் ஒரு வேண்டுதல் செய்தார். இந்த வேலை நல்லபடியாக முடிந்தால், தன் 10 மகன்களில் ஒரு மகனை "ஹுபாலுக்கு(காபாவின் ஒரு விக்கிரகம்)" பலியிடுவேன் என்று. அப்படியே வேலை நல்லபடியாக முடிந்தது. ஆனால் தன் மகன்களை இழக்க விருப்பமில்லாமல், மகனுக்கு பதிலாக ஒட்டகங்களை தருவதாக சொல்லி, வில் எறிந்தால் அது முகமதுவின் தந்தையின் பெயரில் விழுந்தது, அவருக்கு பதிலாக ஒட்டகங்களை கொடுத்தார் என்று இஸ்லாமிய சரித்திரம் சொல்கிறது.

Ishaq:66/Tabari VI:2 ?It is alleged, and Allah only knows the truth, that Abdul Muttalib encountered opposition when he was digging Zamzam. He vowed that if given ten sons, to make his labor less arduous and to protect him, he would sacrifice one of them to Allah at the Ka?aba.?

Ishaq:67 ?They used to conduct their affairs according to the decisions of the arrows.?

Ishaq:67 ?When Abdul Muttalib had ten sons grown to maturity and he knew that they would protect him, he told them of his vow, and called on them to keep faith with Allah in this matter. They expressed their obedience, and asked what they should do. He replied, ?Let every one of you take an arrow, write his name on it, and bring it to me.? They did this, and he went into the presence of Hubal in the interior of the Ka?aba. Hubal was the greatest of the idols of Quraysh in Mecca.?

Tabari VI:5 ?They returned to Mecca when they had all agreed on the matter, Abdul Muttalib stood and prayed to Allah inside the Ka?aba beside Hubal. The arrows fell against Abdallah, so they added ten camels, making twenty. With Muttalib standing and praying to Allah they went on this way ten times. Each time the arrows fell against Abdallah.?

Wikipedia about throwing Arrows and Hubal God of Arabiya: "The Quraysh had several idols in and around the Kaaba. The greatest of these was Hubal. It was made, as I was told, of red agate, in the form of a man with the right hand broken off. It came into the possession of the Quraysh in this condition, and they therefore made for it a hand of gold. The first to set it up was Khuzaymah ibn-Mudrikah ibn-al-Ya's' ibn-Mudar. Consequently it used to be called 'Khuzaymah's Hubal'. "It stood inside the Kaaba. In front of it were seven divination arrows. On one of these arrows was written "pure" (sarih), and on another "consociated alien" (mulsag). Whenever the lineage of a new-born was doubted, they would offer a sacrifice to it [Hubal] and then shuffle the arrows and throw them ... It was before [Hubal] that 'Abd-al-Muttalib shuffled the divination arrows [in order to find out which of his ten children he should sacrifice in fulfilment of a vow he had sworn], and the arrows pointed to his son Abdu l-Lah, father of the Prophet. - Wikepedia


வில் எறிவது பற்றிய இந்நிகழ்ச்சியை இஸ்லாமிய தளங்களிலும் காணலாம். பார்க்க : Islamic-Awareness.org

ஆக, முகமது, மக்காவிலுள்ள காபாவின் பழக்கவழக்கங்களை, ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள யூதர்களின் வழக்கமாகச் சொல்லி, மறுமடியும் ஒரு தவறை குர்-ஆனில் சேர்த்துவிட்டார்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

எதற்கும் ஆற்றல் உள்ள இறைவன் தனக்கு ஏன் ஒரு வாரிசை - மகனை கொடுக்க மாட்டான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில், 'இறைவா உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையை கொடுத்தருள்' என்று பிரார்த்திக்கிறார்கள். இறைவன் அதை ஒப்புக் கொள்கிறான். இறைவன் ஒப்புக் கொண்டாலும் ஜகரிய்யா அவர்களால் இதை நம்ப முடியவில்லை ஏனெனில் அவர் தள்ளாத முதுமையை அடைந்து விட்டார்கள். அவர்களின் மனைவியும் குழந்தைப்பேறைப் பெரும் மாதவிடாய் தகுதிகளையெல்லாம் இழந்து மலடு தட்டி விடுகிறார்கள். குழந்தை உருவாவதற்கான இயற்கை விதிகள் கடந்து போயிருந்தாலும் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கின்றது. யஹ்யா என்ற மகனை 'இறைத்தூதரை' ப் பெற்று எடுக்கிறார்கள். இந்த விபரங்கள் அனைத்தும் 3:38 - 39 - 40 வசனங்களிலும் மரியாள்(மரியம்) என்ற 19வது அத்தியாயத்தின் ஆரம்ப ஆறு வசனங்களிலும் கிடைக்கின்றன.


மரியாளை மனோரீதியாக உருவாக்க வேண்டிய நிலையில் ஜகரிய்யா அவர்களின் வழியாக இறைவன் அந்த பாடத்தை போதிக்கிறான்.(வளரும் இன்ஷா அல்லாஹ்)

என் மறுப்பு:

அல்லா மறுபடியும் ஒரு சரித்திர தவறைச் சொல்கிறார். ஜகரியாவோடு அல்லா யொவான் ஸ்நானனைப் பற்றிச் சொல்லும் பொது "இந்த பெயர் கொண்ட" நபரை நாம் இதற்கு முன்பு உருவாக்கவில்லை என்றுச் சொல்கிறார் குர்-ஆன் 19:7.

குர்-ஆன் 19:719:7 'ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை" (என்று இறைவன் கூறினான்).


யோவானுக்கு முன்பு பலர் இப்பெயரைக் கொண்டுயிருந்தனர். பின் ஏன் முகமது இப்படி சொல்லி பிரச்சனையில் மாட்டிக்கொள்ளவேண்டும். காரணம் லூக்கா 1:59,69,61ம் வசனங்கள் தான்.

லூக்கா 1:59. எட்டாம் நாளிலே பிள்ளைக்கு விருத்தசேதனம்பண்ணும்படிக்கு அவர்கள் வந்து, அதின் தகப்பனுடைய நாமத்தின்படி அதற்குச் சகரியா என்று பேரிடப்போனார்கள்.

லூக்கா 1:60. அப்பொழுது அதின் தாய், அப்படியல்ல, அதற்கு யோவான் என்று பேரிடவேண்டும் என்றாள்.

லூக்கா 1:61. அதற்கு அவர்கள், உன் உறவின் முறையாரில் இந்தப் பேருள்ளவன் ஒருவனும் இல்லையே என்று சொல்லி,


"தன் உறவுமுறையில் யாரும் இப்பெயர் கொண்டவர் ஒருவருமில்லை" என்பதை, தவறாக புரிந்துக்கொண்டு, உலத்திலேயே யாருமில்லை என்று சொல்லிவிட்டார் முகமது.

யோவான் ஸ்நானனுக்கு முன்பு வேறு யார் யாருக்கு யோவான் என்ற பெயர் இருந்தது, இதைப்பற்றிய ஒரு கட்டுரையை இங்கு காணலாம்: Isa Koran

இப்படி எவ்விதத்தில் எடுத்துக்கொண்டாலும், குர்-ஆன் பல முரண்பாடுகளை கொண்டுள்ளதை காணமுடியும். ஆனால் நம்முடைய நண்பர் பைபிளைப்பற்றிப் அவதூறாகப் பேசுகிறார்.

தொடர் - 2 மறுப்பு முடிவடைந்தது

Regards
David

கருத்துகள் இல்லை: