ஞாயிறு, 31 மே, 2009

கிறிஸ்தவன் பார்வையின்: "பைபிள் கூறும் பயங்கரவாதம் (3)" கட்டுரைக்கு பதில்: 3.1

கிறிஸ்தவன் பார்வையின்:

"பைபிள் கூறும் பயங்கரவாதம் (3)" கட்டுரைக்கு பதில்: 3.1


முன்னுரை:



கிறிஸ்தவம் பார்வை என்ற இஸ்லாமிய தளம் "பைபிளில் பயங்கரவாதம்" என்ற தலைப்பில் கட்டுரைகளை எழுதிக்கொண்டு வருகிறது. அவர்களின் இந்த தொடர் கட்டுரைகளுக்கு இதுவரை இரண்டு பதில்கள் தரப்பட்டுள்ளது, அவைகளை இங்கு படிக்கவும்: பாகம் 1 மற்றும் பாகம் 2.


இப்போது இவர்களின் மூன்றாம் பாகத்திற்கான பதிலை பார்க்கலாம். முதலில், கிறிஸ்தவம் பார்வை தளத்தின் அபூ அப்திர்ரஹ்மான் அவர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதைக் காண்போம்.


அபூ அப்திர்ரஹ்மான்


பைபிள் கூறும் பயங்கரவாதம் (3)


"நீ ஆடையின்றி நிர்வாணமாக இருந்தாலும் ஆயுதமின்றி மட்டும் இருக்காதே" என்று பைபிள் கட்டளையிடுகிறது. பைபிளின் இவ்வசனப்படி கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் கையில் ஒரு துப்பாக்கியின்றி இருக்கக் கூடாது. இக்கலாச்சாரத்தின் வெளிப்பாடாகத் தான் அமெரிக்காவில் பள்ளி மாணவன் சக மாணவனை துப்பாக்கியால் சுடுவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறதோ? பைபிளின் படி பல கடவுள்களை வணங்குபவர் கொலை செய்யப்படவேண்டும்


அன்பை, அகிம்சையையே பைபிள் போதிக்கிறது என்று மக்களை ஏமாற்றும் கிறிஸ்தவர்கள், "பல தெய்வ வழிபாடு உடையவர்கள் எல்லாம் கொல்லப்பட வேண்டும்" என்ற பைபிளின் உபதேசம் குறித்து மூச்சு விடுவதில்லை. தங்கள் மதப் பிரச்சாரத்தில் அத்தகைய வசனங்களை உட்படுத்துவதும் இல்லை.


நான் விலக்கியிருக்கிற வேறே தேவர்களையாவது சந்திரசூரியர் முதலான வானசேனைகளையாவது சேவித்து, அவைகளை நமஸ்கரிக்கிறதாகக் காணப்பட்டால்,. அது உன் செவிகேட்க உனக்கு அறிவிக்கப்படும் போது, நீ அதை நன்றாய் விசாரிக்கக்கடவாய்; அது மெய் என்றும் அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் கண்டாயானால், அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறியக்கடவாய். (உபாகமம் - 17:2-5)


இஸ்லாம் வாளால் நிர்பந்தத்தால் பிரச்சாரம் செய்யப்பட்டது என்று உண்மைக்குப் புறம்பாக கூப்பாடு போடும் கிறிஸ்தவர்கள், மேற்கண்ட பைபிளின் கட்டளை குறித்து என்ன கூறப் போகிறார்கள்? அது பழைய ஏற்பாடு, அது செல்லாது என்று கூறினால் பழைய ஏற்பாட்டை இன்னும் வைத்துக் கொண்டிருப்பது ஏன்? அதையும் சேர்த்துத் தானே பரிசுத்த வேதாகமம் என்று கூறுகின்றனர்? ஒரு வாதத்துக்காக பழைய ஏற்பாட்டை நாங்கள் நிராகரிக்கிறோம் என்று கூறினால், "நீங்கள் உங்கள் ஆடைகளை விற்றாவது ஒரு ஆயுதத்தை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்" என்று புதிய ஏற்பாட்டில் இயேசுவின் கட்டளையாகக் கூறப்பட்டிருப்பதைக் குறித்து என்ன விளக்கம் கூறுவார்கள்? ….




Source: http://christianpaarvai.blogspot.com/2009/02/3.html


இக்கட்டுரையில் அவர், முதலில் பழைய ஏற்பாட்டின் ஒரு சில வசனங்களை குறிப்பிட்டும், பிறகு புதிய ஏற்பாட்டின் ஒரு சில வசனங்களை குறிப்பிட்டும் எழுதியுள்ளார். இந்த பதிலில், நாம் பழைய ஏற்பாட்டின் வசனம் பற்றிய அவரது விமர்சனத்தை அலசுவோம், அடுத்த கட்டுரையில், புதிய ஏற்பாட்டின் வசனம் பற்றி காண்போம்.


பழைய ஏற்பாட்டிலிருந்து ஒரு சில வசனங்களை எடுத்துக்கொண்டு, தலையும் புரியாமல், காலும் புரியாமல் விரிவுரை கொடுத்துள்ளார், அபூ அப்திர்ரஹ்மான் அவர்கள்.


அவர் வாதத்தில் பொதிந்துள்ள கேள்விகள்


1) பழைய ஏற்பாட்டிலிருந்து சில வசனங்களை எடுத்துக்கொண்டு, இதைப் பற்றி ஏன் கிறிஸ்தவர்கள் மூச்சு விடுவதில்லை? என்று கேட்கிறார்.


2) "அக்கட்டளைகள் இஸ்ரவேல் மக்களுக்கு கொடுக்கப்பட்டது, அவைகள் சரித்திரம்" என்று கிறிஸ்தவர்கள் கூறினால்? பின் ஏன் அதனை இன்னும் படிக்கிறீர்கள்? அந்த பழைய ஏற்பாட்டையும் சேர்த்துத் தானே நீங்கள் "வேதம்" என்று கூறுகிறீர்கள்? என்று கேட்கிறார்? "பின்பற்றாத கட்டளைகளை" ஏன் உங்கள் வேதத்தில் வைத்துள்ளீர்கள் என்று கேட்கிறார்.

3) இவரது அறியாமையின் உச்சகட்டம், புதிய ஏற்பாட்டிலிருந்தும் அவர் பயங்கரவாதம் கட்டளைகளை கண்டுபிடித்து விட்டது தான்! இதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.


சுருக்கமாக சொல்லவேண்டுமானால், பழைய ஏற்பாட்டையும், சரித்திரத்தையும், இஸ்ரவேலுக்கு கொடுத்த கட்டளைகளையும் இன்னும் ஏன் கிறிஸ்தவர்கள் தங்கள் வேதத்தில் வைத்துள்ளார்கள்? என்று கேட்கிறார்.


குர்‍ஆனை நம்பும் முஸ்லீம்கள், ஒவ்வொரு முறை பைபிளைப் பற்றி அறியாமையில் விமர்சிக்கும் போதெல்லாம், பாவம், குர்‍ஆனினால் அவர்கள் அதிக பிரச்சனைக்குள்ளாகிவிடுகிறார்கள், இதற்கு ஒரு சான்று தான் இந்த கட்டுரையும்.


அபூ அப்திர்ரஹ்மான்


அன்பை, அகிம்சையையே பைபிள் போதிக்கிறது என்று மக்களை ஏமாற்றும் கிறிஸ்தவர்கள், "பல தெய்வ வழிபாடு உடையவர்கள் எல்லாம் கொல்லப்பட வேண்டும்" என்ற பைபிளின் உபதேசம் குறித்து மூச்சு விடுவதில்லை. தங்கள் மதப் பிரச்சாரத்தில் அத்தகைய வசனங்களை உட்படுத்துவதும் இல்லை.


இவர் சொல்வதை சரியாக படித்துப்பாருங்கள்,


"பல தெய்வ வழிபாடு உடையவர்கள் எல்லாம் கொல்லப்பட வேண்டும்" என்ற பைபிளின் உபதேசம் குறித்து மூச்சு விடுவதில்லை".


பல தெய்வ வழிப்பாடு செய்யும் அனைவரையும் கொல்லவேண்டுமென்றா பழைய ஏற்பாடு சொல்கிறது? உங்கள் முஹம்மது சும்மா இருந்த பக்கத்து நாட்டு மன்னர்களுக்கு கடிதம் எழுதி "இஸ்லாமை ஏற்றுக்கொள் இல்லையானால், கொல்லப்படுவாய்" என்று சொன்னது போலவா நீங்கள் மேற்கோள் காட்டிய வசனம் உள்ளது?


நீங்கள் மேற்கோள் காட்டிய வசனத்தை மறுபடியும் அப்படியே தருகிறேன்:


நான் விலக்கியிருக்கிற வேறே தேவர்களையாவது சந்திரசூரியர் முதலான வானசேனைகளையாவது சேவித்து, அவைகளை நமஸ்கரிக்கிறதாகக் காணப்பட்டால்,. அது உன் செவிகேட்க உனக்கு அறிவிக்கப்படும் போது, நீ அதை நன்றாய் விசாரிக்கக்கடவாய்; அது மெய் என்றும் அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் கண்டாயானால், அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறியக்கடவாய். (உபாகமம் - 17:2-5)


உலகத்தில் மற்ற நாடுகளில் இருக்கும் பல தெய்வ வழி பாடு செய்யும் நபர்களை கொல்லச் சொல்கிறதா இந்த வசனம்? அபூ அப்திர்ரஹ்மான் அவர்களே கொஞ்சம் நிதானம் இழக்காமல் படித்துப்பாருங்கள்.


நீங்கள் மேற்கோள் காட்டிய வசனத்தில் கீழ் கண்ட‌ இவ்வார்த்தைகள் உள்ளதா? கொஞ்சம் பார்த்துச் சொல்கிறீர்களா?


"அது மெய் என்றும் அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் கண்டாயானால்"


அந்த அருவருப்பு எங்கு நடந்தால், இந்த தண்டனை என்று இவ்வசனம் சொல்கிறது?


"இஸ்ரவேலில் நடந்தால் இஸ்ரவேல் மக்கள் இப்படி செய்தால்", அவர்களுக்கு தண்டனை கொடுக்கவேண்டுமென்று தேவன் சொல்லியுள்ளார். இந்த கட்டளை மற்ற உலக நாடுகளுக்காக தரப்படவில்லை. ஆனால், நீங்கள் ஏன் அதனை அப்படியே "எல்லாருக்கும்" என்று பொதுப்படையாக சொல்லி இப்படி திருத்திச் சொல்கிறீர்கள்? இங்கு வசனத்தின் பொருளை மாற்றிச் சொல்லி, உலக மக்களை ஏமாற்றப் பார்ப்பது அபூ அப்திர்ரஹ்மான் அவர்களா? அல்லது கிறிஸ்தவர்களா?


ஆக, அபூ அப்திர்ரஹ்மான் அவர்களே, உங்கள் முஹம்மது செய்தது போல, பல நாட்டு மன்னர்களுக்கு கடிதம் எழுதி, "அஸ்லிம் தஸ்லம்" என்றுச் சொல்லவில்லை, மற்றவர்களை பயமுறுத்தி, "வன்முறையை" பயன்படுத்தி தன் மார்க்கத்தை பரப்பினாரே முஹம்மது அது போல நடக்கவில்லை. [முஹம்மதுவின் வன்முறை கடிதங்கள் பற்றிய தமிழ் கட்டுரைகளின் தொடுப்புக்கள் இக்கட்டுரையில் கடைசியில் தரப்பட்டுள்ளது, படித்துப்பார்த்து, யார் தன் மார்க்கத்தை பரப்ப வன்முறையை தன் ஆயுதமாக பயன்படுத்தினார் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்].


அப்படியானால், இஸ்லாமை விட்டு வெளியேறுபவனை கொல்லச் சொல்லும் இஸ்லாம் சட்டம் போலத்தானே இந்த பழைய ஏற்பாட்டின் சட்டமும் என்ற கேள்வி எழும்பும்:


மேலே காட்டப்பட்ட வசனம், இஸ்ரவேல் அல்லாத மக்களை கொல்லச் சொல்லவில்லை என்பதை அறிந்துக்கொண்டோம், ஆனால், தன் தேவனை விட்டு வேறு தெய்வங்களை வணங்குபவர்களை கொல்லச் சொல்வது, இஸ்லாமில் உள்ள ஷரியா சட்டத்திற்கு சமம் இல்லையா என்று சிலர் கேட்கலாம். இது இப்படி இருக்கும் போது, "இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களை ஷரியா சட்டம் கொல்வதை மட்டும்" ஏன் பெரிது படுத்தி காட்டுகிறீர்கள் என்று கேட்கலாம்.


மேலோட்டமாக பார்த்தால், இஸ்லாமின் ஷரியா சட்டமும் (வெளியேறுபவனை கொல்லச் சொல்லும் சட்டமும்), இந்த வசனத்தில் சொல்லப்பட்ட விவரமும் ஒன்றாகத்தெரியும், ஆனால், அதன் பின்னணியை கவனித்தல் சில உண்மைகள் புரியும்.

  • எகிப்திலே அடிமைகளாக இருந்தவர்களை, தன் வல்லமையை காண்பித்து, அற்புதங்களோடும், அடையாளங்களோடும் அவர்களை கொண்டு வந்தார் தேவன்.
  • இது மட்டுமல்ல, அக்காலத்தில் இஸ்ரவேலரை சுற்றியிருந்த பல தெய்வ வழிபாடுகள் செய்யும் மக்கள், இன்றுள்ள பல தெய்வ வழிபாடு செய்யும் மக்களைப்போல அல்ல. அக்காலத்தில் அவர்களின் வழிபாடுகளில், "விபச்சாரம்" ஒருபாகமாக இருந்தது. அவர்கள் தங்கள் தெய்வங்களுக்கு தங்கள் பிள்ளைகளை பலியிட்டு வந்தார்கள். இதைப் பற்றிய எச்சரிப்பு வசனங்களை காணவும்:

உன் தேவனாகிய கர்த்தருக்கு அப்படிச் செய்யாயாக; கர்த்தர் வெறுக்கிற அருவருப்பான யாவையும் அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்து, தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தங்கள் தேவர்களுக்கு அக்கினியிலே சுட்டெரித்தார்களே. (உபாகமம் 12:31)


நீ உன் சந்ததியில் யாரையாகிலும் மோளேகுக்கென்று தீக்கடக்கும்படி இடங்கொடாதே; உன் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதே; நான் கர்த்தர். (லேவி 18:21)


கர்த்தர் மோசேயை நோக்கி: பின்னும் நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரரிலும் இஸ்ரவேலில் வாசம்பண்ணுகிற அந்நியர்களிலும் எவனாகிலும் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுத்தால், அவன் கொலைசெய்யப்பட வேண்டும்; தேசத்தின் ஜனங்கள் அவன்மேல் கல்லெறியவேண்டும். (லேவி 20:1-2)


தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் அக்கினியிலே தகனிக்கிறதற்காக, அவர்கள் இன்னோடும் குமாரனின் பள்ளத்தாக்கிலுள்ள தோப்பேத்தின் மேடைகளைக் கட்டினார்கள்; அதை நான் கட்டளையிடவுமில்லை, அது என் மனதில் தோன்றவுமில்லை. (எரேமியா 7:31)


அவர்கள் என்னை விட்டுவிட்டு, இந்த ஸ்தலத்தை அந்நிய ஸ்தலமாக்கி, தாங்களும், தங்கள் பிதாக்களும், யூதாவின் ராஜாக்களும், அறியாதிருந்த அந்நிய தேவர்களுக்கு அதிலே தூபங்காட்டி, இந்த ஸ்தலத்தைக் குற்றமில்லாதவர்களின் இரத்தத்தினாலே நிரப்பினபடியினாலும், தங்கள் பிள்ளைகளைப் பாகாலுக்குத் தகனபலிகளாகத் தகனிக்கும்படி பாகாலின் மேடைகளைக் கட்டினபடியினாலும் இப்படி வரப்பண்ணுவேன்; இவைகளை நான் கற்பித்ததுமில்லை, சொன்னதுமில்லை, இவைகள் என் இருதயத்தில் தோன்றினதுமில்லை. (எரேமியா 19:4-5)
  • இதனால் தான் இப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடக்கக்கூடாது என்று தேவன் விரும்பினார், அந்த மக்களைப் போல நடந்துக்கொள்ளவேண்டாம் என்றார், அவர்களின் பழக்கங்களை பின் பற்றவேண்டாமென்றார்.
  • இந்த கட்டளை இஸ்ரவேல் சமுதாயத்திற்கு தரப்பட்ட கட்டளை. இது புதிய ஏற்பாட்டில் கிறிஸ்தவர்களுக்கு பொருந்தாது.


ஏன் பொருந்தாது? என்று சில இஸ்லாமியர்கள் கேட்பார்கள், இப்படிப்பட்டவர்கள் கீழ்கண்ட வசனங்களை படிக்கவும்.


உதாரணத்திற்கு கீழ்கண்ட கட்டளைகளை கவனிக்கவும், இக்கட்டளைகள் இஸ்ரவேல் மக்களுக்காகவா, கிறிஸ்தவர்களுக்காகவா?


அ) பழைய ஏற்பாட்டு கட்டளை: பலிபீடத்தின் அக்கினி எரிந்துக்கொண்டே இருக்கவேண்டும்:


லேவி 6:12-13 பலிபீடத்தின்மேலிருக்கிற அக்கினி அவியாமல் எரிந்து கொண்டிருக்க வேண்டும்; ஆசாரியன் காலைதோறும் அதின்மேல் எரியும்படி கட்டைகளைப் போட்டு, அதின்மேல் சர்வாங்க தகனபலியை வரிசையாக வைத்து, அதின்மேல் சமாதான பலிகளின் கொழுப்பைப் போட்டுத் தகனிக்கக்கடவன். பலிபீடத்தின்மேல் அக்கினி எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்க வேண்டும்; அது ஒருபொழுதும் அவிந்துபோகலாகாது.


ஆ) பழைய ஏற்பாட்டு கட்டளை: ஆசாரியர்களின் விசேஷித்த உடைகள்: யாத் 28:2-43


யாத் 28:4-5 அவர்கள் உண்டாக்கவேண்டிய வஸ்திரங்களாவன; மார்ப்பதக்கமும், ஏபோத்தும், அங்கியும், விசித்திரமான உள்சட்டையும், பாகையும், இடைக்கச்சையுமே. உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவனுக்கும் அவன் குமாரருக்கும் பரிசுத்த வஸ்திரங்களை உண்டுபண்ணவேண்டும். அவர்கள் பொன்னும் இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் மெல்லிய பஞ்சுநூலும் சேகரிப்பார்களாக. …


மோசேயின் மூலமாக நூற்றுக்கணக்கான கட்டளைகளை தேவன் கொடுத்தார், நாட்டை ஆளும் கட்டளைகள், தேவனுடையை ஆலயம் சம்மந்தப்பட்ட கட்டளைகள், தேவனுடைய ஊழியம் செய்யும் ஆசாரியர்கள் பற்றிய கட்டளைகள் என்று அனேக கட்டளைகளைக் கொடுத்தார்.


மேலே காட்டப்பட்ட கட்டளைகள், இஸ்ரவேல் மக்களுக்கு முக்கியமாக ஆசாரிய ஊழியம் செய்யும் நபர்களுக்கு கொடுக்கப்பட்டது, அதாவது தேவனுடைய பலிபீடத்தில் அக்கினி எரிந்துக்கொண்டே இருக்கவேண்டும், ஆசாரியர்களுக்கென்று விசேஷித்த உடைகளை தயார்படுத்தி உடுத்தவேண்டும் என்ற கட்டளைகள், இஸ்ரவேல் மக்கள் அனைவருக்கும் அல்ல, முக்கியமாக தேவனின் ஊழியம் செய்பவர்களுக்கு மட்டுமே. இன்று உலகத்தில் எந்த கிறிஸ்தவ சபை இப்படி கட்டைகளை போட்டு காலை முதல் மாலை வரை பலிபீடத்தில் கட்டைகளை எரித்துக்கொண்டு இருக்கிறார்கள்? இயேசுவின் சீடர்கள் இப்படி செய்தார்களா? இல்லையே? ஏன் செய்யவில்லை, காரணம், இது யூத ஆசாரியர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகள், கிறிஸ்தவர்களுக்கு அல்ல.


கிறிஸ்தவ ஊழியர்கள் ஏன் இப்படி பலிபீடத்தின் அக்கினி அவியாமல் பார்த்துக்கொள்வதில்லை, ஏன் கிறிஸ்தவ பாஸ்டர்கள், தேவன் சொல்லியபடி, உடைகளை அணிவதில்லை என்று எந்த ஒரு இஸ்லாமியரும் கேட்பதில்லை. ஆனால், கொலை சம்மந்தப்பட்ட வசனத்தை மட்டும் குறிப்பிட்டு கேள்வி கேட்பார்கள், ஏனென்றால், இஸ்லாமுக்கு இருக்கும் பிரச்சனை எதுவோ, அதில் தான் அவர்கள் கண்ணோட்டம் இருக்கும். இஸ்லாமின் வன்முறையை நியாயப்படுத்த, முஹம்மதுவின் வன்முறையை நியாயப்படுத்த இப்படி செய்வார்கள்.


எனவே, அருமை இஸ்லாமியர்களே, கிறிஸ்தவர்கள் தெளிவாக இருக்கிறார்கள், பழைய ஏற்பாட்டை ஏன் படிக்கிறோம், அவைகளில் எவைகளை நாம் பின்பற்ற வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும்.


இக்கட்டுரையின் தலைப்பிற்கு வருகிறேன், மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல தெய்வ வழிபாடுகளை செய்யும் மக்களிடம் இருந்த பழக்கவழக்கங்கள் போல இப்போது உள்ளதா? இஸ்லாமை விட்டு ஒருவன் வெளியெறினால் அவன் தன் பிள்ளைகளை தெய்வங்களுக்கு பலியிடுகின்றானா? இன்னும் சொல்லப்போனால், அனேக இஸ்லாமிய தீவிரவாதிகள் இஸ்லாமை விட்டு வெளியேறி நல்ல மனிதர்களாக மாறுகிறார்கள். நல்ல மனிதர்கள் கூட இஸ்லாமுக்கு மாறும் போது, சிலர் தீவிரவாதிகளாக மாறி மனிதர்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கிறார்கள். தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட பலபேர், இஸ்லாமுக்கு மாறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது (படிக்கவும்: கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் நான்கு பேர் சிறைச்சாலையில் இஸ்லாமுக்கு மாறி, தீவிரவாதிகளாக மாறியிருக்கிறார்கள், சொந்த நாட்டையே தாக்குகிறார்கள். )


ஆக, அபூ அப்திர்ரஹ்மான் அவர்களே, இஸ்ரவேல் நாட்டிற்கு கொடுக்கப்பட்ட சட்டத்தை கிறிஸ்தவர்கள் பின்பற்றவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள், மற்றும் இஸ்லாமின் வன்முறையை, பயங்கரவாதத்தை நியாயப்படுத்த இந்த யூக்தி உங்களுக்கு வேலை செய்யாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


அப்படியானால், ஏன் பின்பற்றாத விவரங்களை, சரித்திரங்களை வைத்துக்கொண்டு, இன்னும் அதை படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்? என்ற கேள்வி அடுத்தபடியாக இஸ்லாமியர்கள் கேட்பார்கள்.


சரித்திரம் ஏன் படிக்கவேண்டும் சொல்லுங்கள்?


சரித்திரம் எழுதப்படுவது, அதில் உள்ள‌ ஒவ்வொரு வரியையும் பின்பற்றுவதற்காகவா? இல்லை, இல்லவே இல்லை. சரித்திரம் படிப்பது, நம் முன்னோர்களின், அரசர்களின், தலைவர்களின் நல்ல மற்றும் தீய குணங்களை தெரிந்துக்கொண்டு, நல்லவற்றை பின்பற்றவும், தீயவற்றை பின்பற்றாமல் இருக்கவுமேயாகும்.


1) ஆதாமும் ஏவாளும் இறைவனின் கட்டளைக்கு கீழ்படியாமல், கனியை புசித்தார்கள் என்று கிறிஸ்தவத்திலும், இஸ்லாமிலும் படிக்கிறோமே எதற்காக? நாமும் அப்படியே இறைவனுக்கு கீழ்படியாமல் நடக்கவேண்டும் என்பதற்காகவா? இல்லை, நாமும் அவர்களை போல செய்யாமல் இருப்பதற்கு.


2) பார்வோன் இஸ்ரவேல் மக்களை அனுப்பாமல் இருந்ததால், இறைவன் பல அற்புதங்களின் மூலமாக, தன் மக்களை எகிப்திலிருந்து விடுவித்தார் என்று நாம் படிப்பது, நாமும் பார்வோனை போல கீழ்படியாமல் இருக்கவா? "இல்லை", நாமும் பார்வோனைப்போல செய்யாமல் இருப்பதற்காக.


3) உலகத்தில் மிகவும் கொடுமையான அரசர்களின், தலைவர்களின் வாழ்க்கை வரலாறை புத்தகமாக பதித்து, கடைகளில் விற்பது, அதனை மக்கள் படித்து அவர்களைப் போல மக்களும் கொடுமைகளை செய்யவேண்டும் என்பதற்காகவா? இல்லை, அவர்களைப் போல செய்யாமல் நாம் எச்சரிப்பை அடைவதற்காக.


இதனையே பைபிள் இவ்விதமாகச் சொல்கிறது:


வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,


அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. (2 தீமோத்தேயு 3:16-17)


வேதவாக்கியங்கள் இருப்பது,


1) உபதேசம் செய்வதற்கும்,


2) தவறான வழியில் நடக்கும் போது, அவனுக்கு சரித்திரத்தைச் சொல்லி, எடுத்துக்காட்டுச் சொல்லி, கடிந்துக்கொள்வதற்கும்,


3) திருந்தாதவர்களை சீர்திருத்துவதற்கும்,


4) நீதியாகவும், நேர்மையாகவும் நடக்க அறிவுரை சொல்வதற்குமேயாகும்.


எனவே, அருமை இஸ்லாமிய நண்பரே, பழைய ஏற்பாட்டில் கிறிஸ்தவர்கள் படிப்பது, தங்களை சீர்திருத்திக்கொள்ளவும், நீதியை கற்றுக்கொள்ளவும் படிப்பினை பெறுவதற்காகவே தவிர, மற்றவர்களுக்கு சொல்லப்பட்ட அனைத்து கட்டளைகளையும், தனக்கே சொல்லப்பட்டது போல நினைத்துக்கொண்டு வாழ்வதற்காக அல்ல.


நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம், வேதம் என்றுச் சொன்னால், அதில் பின்பற்றப்படாத கட்டளைகள் இருக்கக்கூடாது. மற்றவர்களுக்குச் சொன்ன கட்டளைகள், மற்றவர்களின் சரித்திரம் இருக்கக்கூடாது என்று இஸ்லாமியர்கள் பிடிவாதம் பிடித்தால், கீழ்கண்ட விவரங்களை படியுங்கள்.


குர்‍ஆனும் பழைய ஏற்பாட்டு சரித்திர நிகழ்வுகளும்:


பழைய ஏற்பாட்டு சரித்திரத்தை ஏன் இன்னும் பைபிளில் வைத்து படிக்கிறீர்கள் என்று கிறிஸ்தவர்களுக்கு எதிராக தங்களின் விரல்களை நீட்டும் இஸ்லாமியர்கள், கொஞ்சம் தங்கள் குர்‍ஆனை திருப்பிப்பார்த்தால் நலமாக இருக்கும்.


குர்‍ஆனில் ஆதாமின் சரித்திரம் உண்டு, அவரின் சந்ததிகள் பற்றிய சரித்திரம் உண்டு. மோசேயின் சரித்திரம் உண்டு, அவரிடம் அல்லாஹ் பேசிய வசனங்கள் உண்டு. மோசே இஸ்ரவேல் மக்களிடம் பேசிய வசனங்கள் உண்டு. இன்னும் அனேக பழைய ஏற்பாட்டு உரையாடல்கள், நிகழ்ச்சிகள் குர்‍ஆனில் உண்டு. எனவே, பைபிளில் பழைய ஏற்பாட்டு சரித்திரம் இருக்கக்கூடாது என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள் தங்கள் குர்‍ஆனில் உள்ள பழைய ஏற்பாட்டு சரித்திரத்தை நீக்க தயாராக இருக்கிறீர்களா?


ஏனென்றால்,


அல்லாஹ் ஆதாமிடம் பேசிய வசனங்கள் உங்களுக்கு எதற்கு?


அல்லாஹ் மோசேயிடம் பேசிய வசனங்களை இன்றுள்ள இஸ்லாமியர்கள் ஏன் படிக்கவேண்டும்?


மோசே இஸ்ரவேல் மக்களிடம் பேசிய சரித்திரம் உங்களுக்கு எதற்கு?


இயேசுவின் நிகழ்ச்சியும், மரியாளின் நிகழ்ச்சியும் சரித்திரம் தானே! அது எதற்கு இப்போது குர்‍ஆனில் இருக்கவேண்டும்?


முஹம்மதுவிடம், சரித்திர நிகழ்வுகளை பயன்படுத்தி, அவருக்குச் சொல்லி, ஏன் அல்லாஹ் மக்களை எச்சரிக்கவேண்டும்? இவைகளில் உங்களுக்கு படிப்பினை உள்ளது என்றுச் சொல்லவேண்டும்?


பைபிளில் சரித்திரம் வேண்டாம் என்று அறிவுரைச் சொல்லும் அறிஞர்கள் தங்கள் குர்‍ஆனில் சரித்திரத்தை நீக்குவார்களா? இஸ்லாமியர்கள் ஆதாம், ஆபிரகாம், மோசே, தாவீது, மற்றும் இயேசுவைப் பற்றிய சரித்திர நிகழ்ச்சிகள் பற்றி வசனங்கள் குர்‍ஆனில் வரும் போது அவைகளை படிக்காமல், அடுத்த பக்கம் திருப்பிவிடுவீர்களா?


இரத்து செய்யப்பட்ட குர்‍ஆன் வசனங்கள்:


சரித்திர நிகழ்ச்சியை விடுங்கள், இரத்து செய்யப்பட்ட குர்‍ஆன் வசனங்கள் ஏன் இன்னும் குர்‍ஆனில் இருக்கிறது?


பல குர்‍ஆன் வசனங்கள் இரத்து செய்யப்பட்டது என்று இஸ்லாமிய அறிஞர்கள் சொல்கிறார்கள்.


காலத்திற்கு ஏற்ப சில சட்டங்களை அல்லாஹ் மாற்றுவார், இதனை இரத்து செய்தல் என்று இஸ்லாமிய அறிஞர்கள் சொல்வார்கள். அப்படியானால், முதன் முதலில் சொல்லப்பட்ட வசனங்களுக்கு பதிலாக புதிய வசனங்கள் வந்துவிட்டதால், பழைய வசனங்களை, பின் பற்றத் தேவையில்லாத வசனங்களை இன்னும் ஏன் இஸ்லாமியர்கள் படித்துக்கொண்டு இருக்கிறார்கள்.


முக்கியமாக, அபூ அப்திர் ரஹ்மான் அவர்களே, குர்‍ஆனை நீங்கள் படிக்கும் போது, இரத்து செய்யப்பட்ட வசனங்கள் வருமிடத்தில், அவைகளை விட்டு வேறு வசனங்களை படிப்பீர்களா? அல்லது அவைகளையும் படிப்பீர்களா?


நான் படிப்பேன் என்றுச் சொல்வீர்கள் என்று எனக்குத் தெரியும், அப்படியானால், பின்பற்ற வேண்டாத வசனங்களை ஏன் படிக்கிறீர்கள்? ஏன் இன்னும் குர்‍ஆனில் அவ்வசனங்களை வைத்திருக்கிறீர்கள்?


ஏன் இன்னும் பழைய ஏற்பாட்டை படிக்கிறீர்கள் என்று கிறிஸ்தவர்களை கேட்கும் இஸலாமியர்களே, ஏன் இன்னும் பழைய ஏற்பாட்டு சரித்திர நிகழ்ச்சிகளை நீங்கள் குர்‍ஆனில் வைத்திருக்கிறீர்கள்? அவைகளைப் பற்றி ஏன் பிரசங்கங்கள் செய்கிறீர்கள்? 3000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த‌ சரித்திரம் உங்களுக்கு எதற்கு?


அபூ அப்திர ரஹ்மான் அவர்களிடம் கேட்கிறேன்: பழைய ஏற்பாடு முதற்கொண்டு, இயேசு கிறிஸ்து வரை அனேக நபிகளின் பெயர்கள், நிகழ்வுகள், உரையாடல்கள் உங்கள் குர்‍ஆனில் உண்டு. அவைகள் சரித்திரங்கள் ஆகும், அவைகளை எப்போது நீக்கப்போகிறீர்கள்? ஏன் இப்படி கேட்கிறேன் என்றால், எங்கள் வேதத்தில் எது இருக்கக்கூடாது என்றுச் சொல்கிறீர்களோ, அதே விவரம் நீங்கள் வேதமாக கருதும் புத்தகத்தில் மட்டும் ஏன் உள்ளது?


பழைய ஏற்பாட்டு அனைத்து விஷயங்களையும் குர்‍ஆனிலிருந்து நீக்கிவிட்டால், எவ்வளவு பக்கங்கள் வசனங்கள், அதிகாரங்கள் மிஞ்சும்? "ஆதாம், ஆபிரகாம், மோசே, தாவீது, ... மரியாள், யோவான் மற்றும் இயேசு" போன்ற பெயர்கள் வரும் அனைத்து வசனங்களையும் நீக்கிவிட்டால் என்ன மிஞ்சும்? அவைகள் பழைய கதைகள் ஆயிற்றே உங்களுக்குத் தேவையில்லை அல்லவா? என்ன முடிவு எடுக்கப்போகிறீர்கள்?


கிறிஸ்தவர்கள் தெளிவாக இருக்கிறார்கள், எங்களுக்கு பழைய ஏற்பாட்டு நபர்களின் வாழ்க்கை வரலாறு தேவை, அவைகள் எங்களுக்கு எச்சரிக்கையாகவும், சில நேரங்களில் சவாலாகவும் இருக்கின்றன. மற்றும் பழைய ஏற்பாடு படிப்பதினால், எங்கள் தேவன் எப்படிப்பட்டவர், அவரின் வல்லமை என்ன? அவர் எப்போது நம்மை தண்டிப்பார், எப்போது உதவி செய்வார், அவருக்கு முன்பாக பரிசுத்தமாக வாழ்ந்தவர்களின் முடிவு என்ன? துன்மார்க்க வாழ்க்கை வாழ்ந்தவர்களின் முடிவு என்ன என்பதை நாங்கள் அறிந்துக்கொண்டு, எங்களை நாங்கள் திருத்திக்கொள்கிறோம்.


எனவே, எங்களுக்கு பழைய ஏற்பாடு தேவை, அதே நேரத்தில் இயேசுவின் போதனையையும் நாங்கள் புதிய ஏற்பாட்டில் கண்டு மகிழ்கிறோம்.


ஆனால், உங்களின் நிலை என்ன? உங்களிடம் இருக்கும் சரித்திரங்கள் உங்களுக்கு எதற்கு உதவுகின்றன? நாங்கள் சொல்லும் இதே காரணத்தை நீங்களும் சொல்லப்போகிறீர்களா?


அதாவது, குர்‍ஆனில் உள்ள பழைய ஏற்பாட்டு நிகழ்ச்சிகளை, உரையாடல்களை படித்து, நாங்கள் எச்சரிக்கை அடைகிறோம், படிப்பினை பெறுகிறோம்., சில நேரங்களில் உற்சாகமடைகிறோம் என்றுச் சொல்லப்போகிறீர்களா? இப்படி நீங்கள் சொல்வதாக இருந்தால், கிறிஸ்தவர்கள் தங்கள் வேதத்தை படித்து ஏன் படிப்பினை பெறக்கூடாது?


முடிவுரை:அருமையான இஸ்லாமிய நண்பர்களே, முதலில் பழைய ஏற்பாட்டில் என்ன உள்ளது? பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? கிறிஸ்தவர்களை கட்டுப்படுத்தும் கட்டளைகள் என்ன? போன்றவற்றை தெரிந்துக்கொண்டு எழுதுங்கள். மோசேயின் மூலமாக தேவன் இஸ்ரவேலருக்கு கொடுத்த நூற்றுக்கணக்கான கட்டளைகளில் எந்த கட்டளைகள் கிறிஸ்தவர்கள் பின் பற்றவேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். முஹம்மது யூதர்களை வெறுத்தாரா? நாமும் வெறுப்போம், அவர் இப்படி செய்தாரா நாமும் இப்படி செய்வோம் என்று இஸ்லாமியர்களில் சிலர் ந‌டந்துக்கொள்வது போல கண்மூடித்தனமாக கிறிஸ்தவர்கள் நடக்கமாட்டார்கள்.


இஸ்லாமியர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, "நீங்கள் எவ்வளவு தான் முயற்சித்தாலும், இஸ்லாமையும் வன்முறையையும் உங்களால் பிரிக்கமுடியாது, உங்கள் நபியின் வாழ்க்கை வரலாறு நம்மிடம் இருக்கும் வரை, குர்‍ஆன் இருக்கும் வரை, ஹதீஸ்கள் இருக்கும் வரை, இஸ்லாம் என்னும் நாணயத்தின் இன்னொரு பக்கத்தில் "வன்முறை" இருந்துக்கொண்டே இருக்கும்".


புதிய ஏற்பாட்டு வசனம் பற்றி அபூ அப்திர் ரஹ்மான் அவர்களின் வரிகளுக்கு அடுத்த கட்டுரையில் பதிலைத் தருகிறேன்.


முஹம்மதுவும் வன்முறையும்:


முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்


ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)


இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - அபுமுஹை கட்டுரைகளில்


Muhammad and his personal enemies


Muhammad's excessive cruelty


Torture in the Quran and early Islam - Where is Islamic justice and human rights?

Source: http://sites.google.com/site/isakoran/rebuttals/abunoora/cpaarvai_violence31


ஞாயிறு, 24 மே, 2009

குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்

அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்



To Beat Or Not To Beat

 
குர்‍ஆனின் 4:34ம் வசனம் கீழ் கண்ட விதமாக கூறுகிறது: தமிழிலும்[4], ஆங்கிலத்திலும்[1] மற்றும் அரபியிலும் அவ்வசனத்தை காண்போம்.
 

சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்!அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டுவிட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்.

Men have authority over women because God has made the one superior to the other, and because they spend their wealth to maintain them. Good women are obedient. They guard their unseen parts because God has guarded them. As for those from whom you fear disobedience, admonish them and forsake them in beds apart, and beat them. Then if they obey you, take no further action against them. Surely God is high, supreme.

 
 
அனேக இஸ்லாமியர்களின்[2] கருத்துப்படி, மேலே கண்ட ஆங்கில மொழிப்பெயர்ப்பு (தமிழ் மொழிப்பெயர்ப்பு கூட) சரியான மொழிப்பெயர்ப்பு அல்ல, "அடியுங்கள்" என்ற வார்த்தை சரியான மொழியாக்கம் அல்ல, அந்த வார்த்தையை தமிழில் "லேசாக அடியுங்கள்" என்று எழுதவேண்டும் என்று இவர்கள் கூறுவார்கள். இந்த "அடியுங்கள்" என்ற வார்த்தையை ஆங்கில அரபி அகராதியிலிருந்து எடுத்து கீழே காட்டப்பட்டுள்ளது. இந்த வார்த்தை அரபி வசனத்தில் எந்த இடத்தில் வருகிறது என்பதை கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.
 
 
 

 
 
இந்த வார்த்தையை அகராதியில் பார்க்கும் போது, அரபி வார்த்தையின் சரியான பொருள் "அடியுங்கள்" என்று வருகிறது என்பதை நாம் அறியலாம். நாம் பார்த்த வசனத்தில் வருவதும் இந்த அரபி வார்த்தையேயாகும். இந்த வார்த்தையை வேறு வகையில் (லேசாக அடியுங்கள் என்றுச்) சொல்லும் இஸ்லாமியர்கள், வேண்டுமென்றே தங்களுக்கு தெரிந்தே செய்யும் ஏமாற்றுவேலையாகும். இப்படிப்பட்டவர்கள் தாங்கள் குர்‍ஆனை திருத்த முயற்சிக்கிறார்கள் என்பதை உணர்வார்களா?

 
இஸ்லாமில் மனைவியை அடிப்பது பற்றிய விரிவான கட்டுரைக்கு படியுங்கள்: இஸ்லாமும் மனைவியை அடித்தலும்

 

[1] Translation by N.J.Dawood, The Koran with Parallel Arabic Text, Penguin Books, 1997, ISBN 0-14-044542-0, p. 83
[2] Several conversations during 1999-2000 at Speaker's Corner, London, UK.
[3] The Concise Oxford English-Arabic Dictionary, Oxford University Press, 1982, ISBN 0-19-864321-7, p. 32
[4] பி. ஜைனுல் ஆபிதீன் குர்‍ஆன் தமிழாக்கம்


 
 
ஆங்கில மூலம்: To Beat Or Not To Beat

 

 

குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?

குர்‍ஆன் ஒரு அற்புதமா?



Is The Qur'an Miraculous?

 
சூரா 11:13-16ல் "இப்புத்தகம் இணையற்ற புத்தகம்" என்று குர்‍ஆன் சொல்கிறது, அதனால், குர்‍ஆன் ஒரு அற்புதம் என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். இஸ்லாமியர்கள் தங்கள் நம்பிக்கைப் பற்றி மற்றவர்களுக்கு சவால் விடும்போது, இந்த ஒரு வாதத்தை முன்வைப்பார்கள், மற்றும் இந்த சவாலை யாராலும் எதிர்கொள்ளமுடியாது என்றுச் சொல்வார்கள். இஸ்லாமியர்கள் தங்கள் முழு வாதத்தையும் இதன் மீதே வைத்திருக்கின்றனர், ஆனால், தன் தெய்வீகத் தன்மையை நிருபிக்க குர்‍ஆன் எந்த ஆதாரத்தையும் தருவதில்லை. குர்‍ஆன் இணையற்ற புத்தகம் என்ற கருத்து இஸ்லாமியர்களுக்கு மிகவும் முக்கியமான கருத்தாகும். இயேசுவின் உயிர்த்தெழுதல் எப்படி கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கு அடிப்படையாக உள்ளதோ அது போல, இஸ்லாமிய நம்பிக்கை குர்‍ஆனின் தெய்வீகத்தன்மை மீது ஆதாரப்பட்டுள்ளது. குர்‍ஆன் தன் தனித்தன்மையைப் பற்றி அதிக நம்பிக்கையுடையதாக இருக்கிறது, இதனால் அது மனிதனுக்கும், ஜின்னுக்கும் இப்படிப்பட்ட ஓரு புத்தகத்தை அல்லது ஒரு வசனத்தை கொண்டு வரமுடியுமா? என்று குர்‍ஆன் சவால் விடுகிறது.


எது எப்படியிருந்தாலும், குர்‍ஆன் ஒரு அற்புதமா? என்ற கேள்வியை கேட்கும் போது, இஸ்லாமியர்கள் அனேக பதில்கள் சொல்வதை நான் கேட்டியிருக்கிறேன், அவைகளில் மிகவும் முக்கியமானவைகள் இவைகளாகும்:
 
 
1) குர்‍ஆனின் மொழி மற்றும் இலக்கிய நடை நிகரற்றது (In its literary eloquence)

 
2) குர்‍ஆனின் உள்ளடக்க விவரங்கள் நிகரற்றது (In its subject matter)

 
3) குர்‍ஆன் அனேக நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்டு இருப்பதால், இது நிகரற்றது (In its preservation over the centuries)
 
 
இந்த த‌ற்போதைய‌ க‌ட்டுரையில், மேலே இஸ்லாமிய‌ர்க‌ள் சொல்லும் ப‌தில்க‌ளில் முத‌ல் ப‌திலை ம‌ட்டுமே அல‌ச‌ப்போகிறேன். பிற‌கு என் இத‌ர‌ க‌ட்டுரைக‌ளில் ம‌ற்ற‌ இர‌ண்டு ப‌தில்க‌ளைப் ப‌ற்றி நாம் காண்போம். தற்போதைய க‌ட்டுரை நீண்ட‌தாக‌ இருப்ப‌தால், இந்த‌ ப‌திலை நான் இர‌ண்டு பிரிவுக‌ளாக‌ பிரித்து ப‌தில் அளிக்கிறேன். முத‌ல் பிரிவில் நான் "குர்‍ஆனின் ச‌வாலை" ச‌ந்திப்ப‌த‌ற்கான‌ ப‌திலை த‌ருகிறேன் (தற்போதைய கட்டுரை), இர‌ண்டாவ‌து பிரிவில் "குர்‍ஆனில் இல‌க்கிய‌ ந‌டை நிக‌ர‌ற்ற‌தாக‌ உள்ள‌து (perfect eloquence)" என்ற வாத‌த்திற்கான‌ ம‌றுப்புக்க‌ளை த‌ருகிறேன். இந்த கட்டுரையில் விவரிக்கப்பட்ட விவரங்கள் பெரும்பான்மையாக இதர ஆசிரியர்களின் கருத்துக்களாகும், அப்படி மேற்கோள் காட்டப்பட்ட இடங்களில் எந்த புத்தகத்திலிருந்து, எந்த ஆசிரியரின் கருத்து என்பதை நான் குறிப்பிட்டுள்ளேன். என்னுடைய முக்கிய நோக்கம் இஸ்லாமிய வாசகர்களை துக்கப்படுத்து அல்ல, இதனால் தான் வார்த்தைகளை மிகவும் எச்சரிக்கையாக பயன்படுத்தியுள்ளேன், இதன் மூலமாக இந்த முக்கிய தலைப்பு பற்றி விவாதிக்க இஸ்லாமியர்கள் உற்சாகப்படுத்தப்படுவார்கள். நான் அறியாமையில் ஏதாவது தவறான விவரத்தை எழுதியிருந்தால், வாசகர்கள் இந்த தளத்தின் நிர்வாகிக்கு எழுதினால், அவர்கள் திருத்தம் செய்து சரி செய்வார்கள். இந்த விவரங்களை மனதில் கொண்டு, இந்த கட்டுரையின் முக்கிய விவாதத்திற்குள் கடந்துச் செல்வோம். குர்‍ஆனின் இலக்கிய நடையோடு ஒப்பிடக்கூடிய மூன்று விவரங்களை இப்போது நாம் காண்போம், இந்த ஒப்பீடு கருத்தின் படி உயர்ந்ததாக கருதப்படவில்லையானாலும், எழுத்தின் படி குர்‍ஆனை விட மேன்மையானதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

 
விவாதம் 1:

ஒரு மனிதனுக்கு ஒரு விஷயத்தைப் பற்றி சரியான அபிப்பிராயம் தெரிந்துக்கொள்ள வேண்டுமானால், அந்த விஷயத்தில் தேர்ச்சிப் பெற்ற நிபுனர்களிடம் சென்று கேட்கவேண்டும். ஒரு வேளை உங்கள் உடல் நலம் பற்றி தெரிந்துக்கொள்ள, சிகிச்சை பெற விரும்பினால், ஒரு சிறந்த மருத்துவரிடம் நீங்கள் செல்வீர்கள். ஒரு வேளை, எந்த தொழில் ஆரம்பிப்பது அல்லது எந்த வேலையை செய்வது என்று தெரிந்துக்கொள்ள விரும்பினால், இதற்காகவே இருக்கும் "அறிவுரை நிபுனர்களிடம் (Counsellors)" செல்வீர்கள். இந்த பிரபஞ்சம் பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பினால், அதற்குரிய புத்தகங்களை நீங்கள் படிப்பீர்கள். இது போல, ஒரு மொழியைப் பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பினால், கண்டிப்பாக நாம் அம்மொழியில் சிறப்பு வாய்ந்த அறிஞர்களிடம் செல்வோம். குர்‍ஆனின் மொழியைப் பற்றியும், அதன் இலக்கிய நடைப் பற்றியும், அம்மொழியில் சிறப்பு வாய்ந்த அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்:

புகழ்பெற்ற ஈரான் அரபி அறிஞர் அலி தஸ்தி, கீழ் கண்டவாறு கூறுகிறார்:
 
ஆங்கிலம்:

"Neither the Qur'an's eloquence, nor it's moral precepts are miraculous." (Ali Dashti, Twenty Three Years, pg 57)

தமிழாக்கம்:

"குர்‍ஆனின் இலக்கிய நடையோ அல்லது அதன் ஒழுக்க நெறி கட்டளைகளோ அற்புதமானவைகளாக இல்லை"
 
 
அலி த‌ஸ்தி த‌ன் புத்த‌க‌த்தின் ஆர‌ம்ப‌த்தில், இதே க‌ருத்தை கூறுகின்ற இத‌ர‌ அறிஞ‌ர்க‌ளைப் ப‌ற்றி கூறுகிறார். உதாரண‌த்திற்கு, சிரியாவைச் சேர்ந்த‌ க‌ண்பார்வையில்லாத‌ க‌விஞ‌ர் "அபூ அலா அல் மாரி" என்ப‌வ‌ரைப் ப‌ற்றி த‌ஸ்தி கூறும் போது, "…அவ‌ர் ஒரு சிற‌ந்த‌ ம‌ற்றும் ஆழ்ந்த அரபி சிந்தனையுடையவர் - a great and penetrating Arab thinker" (பக்கம் 53) என்றும், "…அவ‌ர் ஒரு சிறந்த மற்றும் உலக மக்கள் நேசிக்கும் கவிஞர், மற்றும் சிந்தனையாளர் - a great and universally admired poet-philosopher" (பக்கம் 94) என்றும் கூறுகிறார். இக்கவிஞர் த‌ன் சொந்த‌ க‌விதைக‌ளை ஒப்பிடும் போது, அவைக‌ள் குர்‍ஆனுக்கு ச‌ம‌மான‌வைக‌ள் என‌ க‌ருதுகிறார். ஒரு வேளை இவ‌ர‌து க‌ருத்து த‌வ‌று என்றுச் சொன்னால், வேறு யார் இப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ரின் க‌விதைக‌ளின் த‌ர‌த்தை நிர்ண‌யிக்க‌முடியும்? இவ‌ரைப் போல‌ நிபுன‌த்துவ‌ம் உள்ள‌வ‌ர்க‌ள் தானே, இப்ப‌டிப்ப‌ட்ட விஷயங்களில் ஒரு முடிவைச் சொல்லமுடியும்! உண்மையாகச் சொல்லவேண்டுமானால், இவர் வாழ்ந்த காலத்தில் இருந்த இதர அறிஞர்கள் கூட "குர்‍ஆன் ஒரு இலக்கிய சிறப்பு மிக்க ஒரு அற்புதம்" என்று கருதவில்லை. இதைப் பற்றி அலி தஸ்தி புத்தகத்திலிருந்து ஒரு மேற்கோளை படியுங்கள்.
 
 
"Among the muslim scholars of the early period, before bigotry and hyperbole prevailed, were some such as Ebrahim on-Nazzim who openly acknowleged that the arrangment and syntax of the Qur'an are not miraculous and that work of equal or greater value could be produced by other God-fearing persons", (emphasis mine, pg 48)

 
"கருத்து சுதந்திரம் பரிக்கப்படுவதற்கு முன்பு, ஆரம்ப காலத்தில் இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில், "இப்ராஹிம் அன் நஜீம்" போன்றவர்கள் அனேகர் இருந்தனர். குர்‍ஆனின் வடிவமைப்பும், அதன் இலக்கிய நயமும் அற்புதமானது அல்ல மற்றும் குர்‍ஆனுக்கு சமமாகவும் அதற்கும் மேலான நயத்துடனும் நூல்களை எழுத இறையச்சம் உள்ளவர்களால் முடியும்" என்று இவர் வெளிப்படையாக அங்கீகரித்தார்.
 
 
 
மேலே சொல்லப்பட்ட விவரமானது, அனேக எடுத்துக்காட்டுக்களில் ஒன்று மட்டுமே. இதே போல தங்கள் கருத்தைச் சொன்னவர்களில் இவர்களும் அடங்குவார்கள்: "இபின் ஹஜம் மற்றும் அல்-கய்யத்....ம‌ற்றும் இத‌ர‌ அறிஞ‌ர்க‌ளான‌வ‌ர்க‌ள் (several other leadering exponents of the Mo' tazzilite school)" (பக்கம் 48). சமீப காலத்தில் கூட அரபி மொழியில் அதிக நிபுனத்துவம் பெற்றவர்கள் ஒன்று சேர்ந்து, ஜெருசலேமில் 16 ஆண்டுகள் உழைத்து, குர்‍ஆனின் மொழி நடையிலேயே பைபிளின் வசனங்களை மொழியாக்கம் செய்தார்கள். இவர்களின் இந்த வெற்றியை புறக்கணித்தால், அவர்களின் ஒட்டு மொத்த நிபுனத்துவத்தையும், மொழி பற்றிய ஆராய்ச்சி அறிவியலையும் நாம் புறக்கணித்ததற்கு சமமாகும்.

 
எனினும், இந்த அறிஞர்கள் வேண்டுமென்றே இப்படிச் சொன்னார்கள், இவர்களின் கூற்றுகளில் உண்மையில்லை என்று இஸ்லாமியர்கள் இவர்கள் மீது குற்றம் சுமத்துவார்கள். அந்த சிரியன் கவிஞர் தன் சொந்த கவிதைகளை புகழுவதற்காக இப்படிச் சொல்லியிருக்கலாம் அல்லவா என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள். இதே போல, ஜெருசலேமில் உழைத்த அந்த அறிஞர்கள் ஒரு பக்கம் சார்ந்து இவ்வேலையைச் செய்தார்கள் ஏனென்றால், அவர்கள் கிறிஸ்தவர்கள் அல்லவா என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள்.

 
நான் உங்களிடம் கேட்க விரும்புவது: " இந்த மனிதர்கள் எல்லாரும் இப்படிப்பட்ட ஒரு தைரியமான சவாலை மக்களின் முன்வைப்பதற்கு, அவர்கள் என்ன முட்டாள்களாக இருந்தார்களா? தங்கள் பெயர் மற்றும் புகழுக்கு இழுக்கு வரும் என்று தெரிந்துமா இப்படிப்பட்ட சவாலை மக்களின் முன் வைக்கமுடியும்?அவர்களின் கூற்றுகளில் உண்மையில்லாமலா இந்த சவாலை அவர்கள் மக்கள் பொதுவில் வைத்திருப்பார்கள்?" இது மட்டுமல்ல, அவர்கள் தங்கள் கருத்துக்களை, கவிதைகளை மக்களின் முன் வைத்தார்கள், யாராவது வந்து இதற்கு மறுப்புக் கூறி நிருபியுங்கள் என்று சவால் விட்டார்கள். அவர்கள் சொல்வதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையானால், அவர்களின் எழுத்துக்களை அலசுங்கள், ஆராய்ச்சி செய்யுங்கள், அவர்களுக்கு மறுப்பு தெரிவியுங்கள், நிருபியுங்கள். உங்களால், இப்படி மறுப்பு தெரிவித்து, நிருபிக்க முடியவில்லையானால், அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்வதே சரியானது.

நான் மேலே சொன்ன இரண்டு மேற்கோள்களிலும், சந்தேகத்திற்கு இடமுண்டு என்பதை நான் நம்பமாட்டேன். ஆசிரியர் அலி தஸ்தி தன் புத்தகம் முழுவதும் நடுநிலையோடு எழுதியிருப்பதை நாம் காணமுடியும். அவர் வேண்டுமென்றே ஒருபுறம் சார்ந்து எழுதியதாக, இஸ்லாமுக்கு எதிராக எழுதியதாக நாம் அவரது புத்தகத்தில் காணமுடியாது. இந்த புத்தகம் ஒரு பக்கமாக சார்ந்து எழுதப்பட்டதா என்று, இந்த புத்தகத்தை வாங்கி, படித்து பிறகு எனக்குச் சொல்லுங்கள் என்று நான் வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன். அலி தஸ்தி புத்தகத்தை எழுதியதின் முக்கிய நோக்கமே, முஹம்மதுவின் வாழ்க்கைப் பற்றியும், இஸ்லாம் பற்றியும் நடுநிலையோடு எழுதுவதாகும். க‌டைசியாக‌ நாம் பார்த்த‌ விவ‌ர‌த்திலும் கூட‌, இஸ்லாமுக்கு எதிராக‌ வேண்டுமென்றே இவ‌ர்க‌ள் எழுதியிருக்கமாட்டார்கள் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால், இவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள். ஆகையால், இஸ்லாமுக்கு எதிராக வேண்டுமென்றே இவர்கள் சொல்கிறார்கள் என்ற வாதத்திற்கும் இடமில்லை. முடிவாக, நிபுனர்களின் கருத்துப்படி, இஸ்லாமிய நிபுனர்களையும் சேர்த்து, குர்‍ஆனின் சவால் ஏற்கனவே சந்தித்தாகிவிட்டது.
 
 
விவாதம் 2:

சூராக்கள் 1, 113 மற்றும் 114 ஆகிய மூன்று அதிகாரங்கள், மூல குர்‍ஆனின் ஒரு பாகமாக இருக்கவில்லை, அவைகள் பிறகு நுழைக்கப்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. அப்துல்லா இபின் மசூத் என்பவர் குர்‍ஆன் பற்றிய விஷயங்களில் முக்கிய அதிகாரபூர்வமானவர் என்பதை முஹம்மதுவே இவரைப் பற்றி கூறியுள்ளார் (புகாரி). இந்த அதிகாரங்கள் குர்‍ஆனின் ஒரு பாகமல்ல என்று கருதுகிறார். இவரது எழுத்துக்கள் மூலமாக இதனை அறியலாம். 1930களில் சில விமர்சகர்கள் இந்த பிரச்சனையை வேறு கோணத்தில் அலசிப்பார்த்தார்கள், பிறகு இதே முடிவிற்கு வந்தார்கள். இஸ்லாமியர்கள் ஏன் சூரா 1ஐ குர்‍ஆனின் ஒரு பகுதியில்லை என்று கருதுவதற்கு மூன்றாவது காரணமும் இருப்பதாக நான் நம்புகிறேன்.

குர்‍ஆன் இறைவனின் நேரடி வெளிப்பாடு அல்லது வார்த்தைகள் என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். அதாவது, அந்த வார்த்தைகளை பேசுகிறவர், முழுக்க முழுக்க இறைவனாவார். வெளிப்பாடு பற்றிய இஸ்லாமியர்களின் கருத்து இப்படி இருப்பதினால், " இறைவன் நேரடியாக பேசும் வார்த்தைகள் அனைத்தும் தன்னிலையில் (First Person) இருக்கும், இப்படி இல்லாமல், முன்னிலையில் வரும் (Second Person) வார்த்தைகள் இறைவனின் வார்த்தைகள் அல்ல" என்று பொருளாகும். இஸ்லாமியர்கள் இப்படிப்பட்ட நம்பிக்கை கொண்டு இருக்கிறார்கள் என்பதை அறியவேண்டுமானால், இஸ்லாமிய அறிஞர்கள் வாதம் புரிவதை பார்த்தால் தெரிந்துக்கொள்ளலாம். பைபிளில் உள்ள "சங்கீத புத்தகம்" இறைவேதமல்ல ஏனென்றால், அவைகளில் வரும் வார்த்தைகள் அதனை எழுதிய ஆசிரியர் இறைவனை தொழுதுக்கொள்வதாக இருப்பதால், சங்கீதம் இறைவேதமல்ல என்று இஸ்லாமியர்கள் வாதம் புரிவார்கள். இஸ்லாமியர்கள் இப்படி கேட்பார்கள் "இறைவன் தன்னைத் தானே தொழுதுக் கொள்வாரா?"

நான் இஸ்லாமியர்களிடம் கேட்க விரும்புவது, "குர்‍ஆனின் சூரா 1, வழிகாட்டுதலுக்காக இறைவனிடம் அதை எழுதிய ஆசிரியர் எழுதுவதாக இருந்தாலும், இஸ்லாமியர்கள் எப்படி அந்த சூராவை இறைவார்த்தை என்றுச் சொல்கிறார்கள்?" (இந்த சூராவின் ஆரம்பத்தில் "கூறுவீராக" என்ற வார்த்தை இல்லை என்பதால், இது இறைவன் கூறச்சொன்ன வார்த்தைகள் இல்லை). இஸ்லாமியர்களின் வெளிப்பாடு பற்றிய சித்தந்தத்தின்படி, இஸ்லாமியரின் பகுத்தறிவின் படி பார்த்தால், இறைவன் தன்னிடம் தானே துவா கேட்பாரா?" இக்கேள்விக்கு, என் கருத்துப்படி, இஸ்லாமியர்களின் அறிவுடமையான பதில் "இல்லை" என்பதாகத் தான் இருக்கும். இந்த சூரா, குர்‍ஆனில் உள்ள இதர சூராக்களை விட நல்ல நயத்துடன் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்த சூரா இறைவனால் எழுதப்படாமல், ஒரு மனிதனாலோ அல்லது மனிதர்களாலோ எழுதப்பட்டிருக்கிறது மற்றும் இதர சூராக்களை விட நல்ல இலக்கிய நயத்துடன் இருக்கிறது, இன்னுமா குர்‍ஆனின் சவால் சந்திக்கப்படாமல் இருக்கிறது?

முடிவுரை:

மேலே கண்ட விவாதத்திலிருந்து ஒருவர் எந்த முடிவிற்கு வரமுடியும்? குர்‍ஆனின் சவால் சந்திக்கப்பட்டால் என்னவாகும்? ஒருவேளை குர்‍ஆனின் சவால் சந்திக்கப்பட்டால், அதன் பிறகு குர்‍ஆன் ஒரு அற்புதமாக கருதப்படாமல் போகுமா? ஆக, குர்‍ஆனின் தெய்வீகதன்மையை நிருபிக்க பயன்படுத்தப்படும் அந்த ஒரு ஆதாரமும் ஆட்டங்காணுகிறது. இஸ்லாமியர்கள் ஏன் குர்‍ஆன் மீது நம்பிக்கை கொள்கிறார்கள் என்பதற்கான சரியான காரணமில்லாமல் தனிமையில் விட்டுவிடப்படுகிறார்கள். குர்‍ஆனின் சவால் சந்திக்கப்பட்டுள்ளது என்பதை தகுந்த ஆதாரங்களோடு நாம் மேலே கண்டோம். அப்படியானால், உங்களின் தீர்மானம் என்ன?
 
 
இஸ்லாமிய வாசகர்களுக்காக சில வரிகள்:

 
இந்த கட்டுரையில் நாம் சரியான ஆதாரங்களோடு எடுத்த முடிவை ஏற்க பல இஸ்லாமியர்கள் இன்னும் மறுக்கக்கூடும். இப்படிப்பட்டவர்களிடம் கீழ் கண்ட கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன்.

உங்களுடைய முடிவு, உண்மையான விவரங்கள் (Facts) மீது ஆதரப்பட்டு இருக்கிறதா? அல்லது உங்கள் நம்பிக்கையின் (Faith) மீது ஆதாரப்பட்டு இருக்கிறதா? (Is your conclusion based on the facts, or on your faith?)

குர்‍ஆனின் இந்த‌ ச‌வால் ஒருபோதும் ச‌ந்திக்க‌ப்ப‌டாது என்றுச் சொல்லும் ந‌ப‌ராக‌ நீங்க‌ள் இருக்கிறீர்க‌ளா? அப்ப‌டியானால், நீங்க‌ள் எடுத்த‌ முடிவு உங்க‌ளின் ந‌ம்பிக்கையின் மீது ஆதார‌ப்ப‌ட்டு இருக்கிற‌து, பகுத்தறிவின் மீத‌ல்ல‌. நீங்க‌ள் ஏற்க‌ன‌வே முடிவை எடுத்துவிட்ட‌தால், இனி அந்த‌ ச‌வால் ப‌ய‌ன‌ற்ற‌தாக‌ உள்ள‌து. இங்கு நீங்க‌ள் மிக‌வும் ஜாக்கிர‌தையாக‌ இருக்க‌வேண்டும், ஏனென்றால், நீங்க‌ள் மிக‌வும் ஆப‌த்தான‌ நில‌த்தை உழுதுக்கொண்டு இருக்கிறீர்க‌ள். நீங்கள் சவாலை பயனற்றதாக மாற்றுவீர்களானால், உங்கள் நம்பிக்கையின் அடிப்படையும் பயனற்றதாக மாறிவிடும்.

இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதம் என்றுச் சொல்லக்கூடிய, இந்த அற்புதத்தின் மூலமாக, இஸ்லாமியர்கள் முஹம்மதுவின் சுழற்சி வாதத்தை (Circularity of Muhammad's claims) முறித்துவிடுகிறார்கள். நான் சொல்ல வருவது என்ன? ஒரு முஸ்லீமிடம் இப்படி கேட்டுப்பாருங்கள்:

முஹம்மது ஒரு தீர்க்கதரிசி என்று எப்படி உங்களுக்குத் தெரியும்?

இஸ்லாமிய‌ர்க‌ளின் ப‌தில்: அவ‌ர் தீர்க்க‌த‌ரிசி என்று குர்‍ஆன் சொல்கிறது ம‌ற்றும் கு‍ர்‍ஆன் இறைவ‌னின் வேத‌மாக‌ இருக்கிற‌து.

ம‌றுப‌டியும் அவ‌ர்க‌ளிட‌ம் கேளுங்க‌ள்: குர்‍ஆன் இறைவேத‌மென்று உங்க‌ளுக்கு எப்ப‌டி தெரியும்?

இஸ்லாமிய‌ர்க‌ளின் ப‌தில்: குர்‍ஆன் இறைவேத‌மென்று முஹ‌ம்ம‌து சொன்னார்.

இப்படிப்பட்ட சுழற்சியை உடைக்கவேண்டுமானால், கிறிஸ்தவத்திற்கு உள்ளது போல, இந்த இரண்டு பதில்களுக்கு வெளியே ஆதாரங்கள் இருக்கவேண்டும் (ரவி ஜகரியா - இஸ்லாம் செய்திகள்). குர்‍ஆன் தன் அற்புதத்தைப் பற்றி மேன்மை பாராட்டுகிறது, இதற்கு வலுவூட்டும் விதமாக சவாலும் இருக்கிறது என்றுச் சொல்கிறது. ஆக, இந்த சவாலே பயனற்றதாக மாறும்போது, குர்‍ஆனின் அற்புதத்திற்கு எந்த ஆதாரமும் இல்லாமல் போகும், இதனால், இஸ்லாமியர்களின் நம்பிக்கைக்கு பகுத்தறிவான வாதம் இல்லாமல் போகும், இதனால் அவர்களின் நம்பிக்கை ஒரு குருட்டு நம்பிக்கையாக மாறும், ஏனென்றால், அவர்களின் நம்பிக்கைக்கு குர்‍ஆனின் ஒத்துழைப்பும் இல்லாமல் போகிறது. மனிதனின் அறிவு மட்டுமே அவனை எப்போதும் சத்தியத்திற்கு நேரே நடத்தவேண்டும் என்று குர்‍ஆன் வாதம்புரிவதால், இந்த நிலை. இன்னும் நீங்கள் உங்கள் வாதத்திலே அசையால் நிற்கிறீர்களா? அல்லது உங்கள் மனதில் நேர்மையானவர்களாக இருக்க முடிவு செய்யப்போகிறீர்களா?


 
Reference: Ali Dashti, "Twenty Three Years: A Study of the Prophetic Career of Mohammad", Routledge Chapman & Hall, Mazda Pubs, Bibliotheca Iranica: Reprints Ser., Vol. No. 2., 1985, 246p. $15.95, ISBN 1-56859-029-6.

 
 
ஆங்கில மூலம்: Is The Qur'an Miraculous?

 
இதர கட்டுரைகளை படிக்கவும்: குர்‍ஆன் ஒரு அற்புதமா?

 

 

சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்

சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்

 
குர்‍ஆனின் சவாலை ஜின்னும் மனிதனும் எப்படி சந்தித்துள்ளார்கள் என்பதை இந்த கட்டுரை TESTING THE TRUTHFULNESS OF THE Quran - THE CHALLENGE OFFERED BY THE Quran விவரமாக‌ விளக்குகிறது.

நீங்கள் படிப்பதற்காக, குர்‍ஆனின் அல்-ஜின் சூராவின் ஒரு பகுதியை இங்கு கொடுக்கிறோம் (முஹம்மது ஜான் குர்‍ஆன் தமிழாக்கம்). இந்த சூராவில் ஜின் பேசியதாக உள்ள வசனங்களை பச்சை வண்ணத்தில் தருகிறோம்.
 
72:1 நிச்சயமாக, ஜின்களில் சில (திருக் குர்ஆனை) செவிமடுத்து(த் தம் இனத்தாரிடம் கூறினர்) "நிச்சயமாக நாங்கள், மிகவும் ஆச்சரியமான ஒரு குர்ஆனை கேட்டோம்" என்று கூறினர், என எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டதென்று (நபியே!) நீர் கூறுவீராக.

72:2 "அது நேர்மையின் பால் வழிகாட்டுகிறது, ஆகவே அதைக் கொண்டு நாங்கள் ஈமான் கொண்டோம்; அன்றியும் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் நாங்கள் இணையாக்கமாட்டோம்" (என்று அந்த ஜின் கூறலாயிற்று).

72:3 "மேலும் எங்கள் இறைவனுடைய மகிமை நிச்சயமாக மிக்க மேலானது, அவன் (எவரையும் தன்) மனைவியாகவோ மகனாகவோ எடுத்துக் கொள்ளவில்லை.

72:4 "ஆனால் நம்மில் மூடராகிவிட்ட (சிலர்) அல்லாஹ்வின் மீது தகாத வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

72:5 மேலும் "மனிதர்களும் ஜின்களும் அல்லாஹ்வின் மீது பொய் கூறவே மாட்டார்கள்" என்று நிச்சயமாக நாம் எண்ணிக் கொண்டிருந்தோம்.

72:6 "ஆனால், நிச்சயமாக மனிதர்களிலுள்ள ஆடவர்களில் சிலர் ஜின்களிலுள்ள ஆடவர்கள் சிலரிடம் காவல் தேடிக் கொண்டிருந்தனர், இதனால் அவர்கள், (ஜின்களிலுள்ள அவ்வாடவர்களின்) மமதையை பெருக்கிவிட்டனர்.

72:7 "இன்னும், நிச்சயமாக அவர்களும் நீங்கள் எண்ணியதைப் போலவே, அல்லாஹ் ஒருவரையும் (மறுமையில் உயிர்ப்பித்து) எழுப்பமாட்டான் என்று எண்ணிக் கொண்டு இருந்தனர்.

72:8 "நிச்சயமாக நாம் வானத்தைத் தொட்டுப் பார்த்தோம். அது கடுமையான காவலாளிகளாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை, நாங்கள் கண்டோம்.

72:9 "(முன்னர் வானில் பேசப்படுவதைச்) செவிமடுப்பதற்காக (அதற்குள்ள சில) இடங்களில் நாங்கள் அமர்ந்திருப்போம்; ஆனால் இப்பொழுதோ எவன் அவ்வாறு செவிமடுக்க முயல்கிறானோ, அவன் தனக்காகக் காத்திருக்கும் தீப்பந்தத்தையே கண்பான்.

72:10 "அன்றியும், பூமியிலிருப்பவர்களுக்குத் தீங்கு நாடப்பட்டிருக்கிறதா, அல்லது அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு நன்மையை நாடி இருக்கிறானா என்பதையும் நாங்கள் நிச்சயமாக அறிய மாட்டோம்.

72:11 "மேலும், நிச்சயமாக நம்மில் நல்லோரும் இருக்கின்றனர், அப்படியல்லாதவர்களும் நம்மில் இருக்கின்றனர், நாம் பல்வேறு வழிகளையுடையவர்களாகவும் இருந்தோம்.

72:12 "அன்றியும், நிச்சயமாக நாம் பூமியில் அல்லாஹ்வை இயலாமலாக்க முடியாது என்பதையும், அவனை விட்டு ஓடி (ஒளிந்து ) கொள்வதாலும் அவனை (எங்கேயும்) இயலாமலாக்க முடியாதென்பதையும், நாம் அறிந்து கொண்டோம்.

72:13 "இன்னும், நிச்சயமாக நாம் நேர்வழியை (குர்ஆனை) செவிமடுத்த போது, நாம் அதன் மீது ஈமான் கொண்டோம்." எனவே எவன் தன் இறைவன் மீது ஈமான் கொள்கிறானோ, அவன் இழப்பைப் பற்றியும், அநீதியைப் பற்றியும் பயப்படமாட்டான்.

72:14 "இன்னும், நிச்சயமாக, நம்மில் முஸ்லிம்களும் இருக்கின்றனர். நம்மில் அக்கிரமக்காரர்களும் இருக்கின்றனர் - எவர்கள் முஸ்லிம்களாகி (வழிப்பட்டார்களோ) அவர்கள் தாம் நேர்வழியைத் தேடிக் கொண்டனர்.

72:15 "அக்கிரமக்காரர்களோ நரகத்திற்கு எரி விறகாய் விட்டனர்" (என்று அந்த ஜின் கூறிற்று).

72:16 "(மானிடர்களோ, ஜின்களோ) அவர்கள் (நேர்) வழியின் மீது, உறுதியுடன் நிலைத்து நின்றால், நிச்சயமாக நாம் அவர்களுக்கு மிக அதிகமாகத் தண்ணீர் புகட்டுவோம்.
 
 
இந்த அதிகாரத்தில் பதினான்கரை வசனங்களை (1b - 15) ஜின்கள் பேசினார்கள், அதுவும் குர்‍ஆனின் இலக்கிய நடையிலேயே பேசினார்கள். இந்த பேச்சும் குர்‍ஆனின் ஒரு பாகமாக உள்ளது. இந்த சூராவில் உள்ள அரபி இலக்கிய நடைக்கும், இதர சூராவில் உள்ள அரபி இலக்கிய நடைக்கும் ஏதாவது வித்தியாசம் உங்களுக்குத் தெரிகிறதா?

ஆங்கில மூலம்: Surat al-Jinn

இதர கட்டுரைகளை படிக்கவும்: குர்‍ஆன் ஒரு அற்புதமா?