[இயேசுவின் பிறப்பு சம்மந்தப்பட்ட குர்ஆன் வசனங்களில் உள்ள முரண்பாடுகள், பிழைகள், கட்டுக்கதைகள் போன்றவற்றை, தொடர் கட்டுரைகளாக நாம் இனி காணப்போகின்றோம்.]
பைபிளில் இல்லாத குழந்தை அற்புதம் முகமது "காப்பி" அடித்தது தான்
முன்னுரை: இஸ்லாம் கல்வி தள கட்டுரை சொல்கின்றது, பைபிளைக் கண்டு குர்ஆன் "காப்பி" அடிக்கவில்லை, காரணம், பைபிளில் சொல்லாத பல அற்புதங்கள் குர்ஆனில் உள்ளது, எனவே, முகமது பைபிளிலிருந்து காப்பி அடிக்கவில்லை என்பது தெளிவு என்று எழுதியிருந்தார்கள். இயேசு குழந்தையாக இருக்கும் போது பேசியதாக குர்ஆன் சொல்லும் அற்புதம், இயேசு களிமண்ணினால் பறவை செய்து அதற்கு உயிர் கொடுத்த அற்புதம் இவைகள் பைபிளில் இல்லை, அதனால், பைபிளைக்கொண்டு காப்பி அடித்தது தான் குர்ஆன் என்று எப்படி கேட்கிறார்கள் கிறிஸ்தவர்கள் என்று கேள்வி எழுப்புகின்றது இஸ்லாம் கல்வி தளம்.
இஸ்லாம் கல்வி தளத்தில் கீழ் கண்டவாறு எழுதப்பட்டுள்ளது.
"ஈஸா அலைஹிஸ்ஸலாம் (இயேசு) அவர்களின் பிறப்பு முதல் பைபிளில் காணப்படாத ஏராளமான சம்பவங்களை திருக்குர்ஆன் விவரிக்கின்றது. ........
ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்கள்தொட்டில் குழந்தையாக இருக்கும்போதே நான் அல்லாஹ்வின் தூதராவேன் என்று கூறி மக்களிடம் பேசியதன் மூலம் தன் முதல் அற்புதத்தை வெளிப்படுத்தியமை (19: 29-33) களிமண்ணில் ஒரு பறவையைப் போன்ற உருவத்தைச் செய்து அதில் அவர் ஊதியபோது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு அது உயிருள்ள பறவையாக மாறியது (3:49) போன்ற தகவல்களும் பைபிளில் எங்கும் இல்லை. பைபிளைப் பார்த்து காப்பியடித்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனை உருவாக்கியிருப்பின் பைபிளில் எங்குமே காணக்கிடைக்காத தகவல்களை அவர்கள் எங்கிருந்து பெற்றனர்?
திருக்குர்ஆன் முற்றிலும் இறைவனால் அருளப்பட்டது! அதன் காரணமாகவே பைபிளின் எந்தப் பகுதியிலும் இடம்பெறாத பல உண்மைச் சம்பவங்களும் திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ளன."
Source: http://www.islamkalvi.com/portal/?p=622
பைபிளில் இல்லாத அற்புதங்கள் பற்றிய விவரங்களை முகமது எங்கே இருந்து பெற்றார்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர், நம் சகோதரர்கள். இக்கேள்விக்கு பதில் தான் இக்கட்டுரை.
குர்ஆனின் இந்த குழந்தை அற்புத விவரங்கள், காப்பி அடித்தது தான்:
பைபிளில் தான் இந்த அற்புதம் பற்றி சொல்லப்படவில்லையே பின் எப்படி, காப்பி என்று சொல்கிறீர்கள் என்று கேட்டால், இது பைபிளிலிருந்து காப்பி அடிக்கவில்லை, அதற்கு பதிலாக, முகமது காலத்திற்கு முன்பு இருந்த பல புராணக்கதைகள், கட்டுக்கதைகள் மற்றும் இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பல தள்ளுபடி ஆகமங்களிலிருந்து தான் முகமது இவைகளை சொல்லியுள்ளார். இவைகள் இப்படிப்பட்ட புத்தகங்கள்(Infancy of Gospel Thomas, Arabic Infancy of Gospel etc..)இறைவனின் வெளிப்பாடுகள் அல்ல என்று ஒதுக்கிவிட்ட புத்தகங்களிலிருந்து எடுத்து குர்ஆனில் சேர்த்துவிட்டு, இது தான் அல்லா இறக்கியது என்று சொல்லியுள்ளார் முகமது, அதையும் இஸ்லாமியர்கள் நம்பிவிட்டு, இக்கதைகள் பைபிளில் இல்லை, குர்ஆனில் மட்டுமே உள்ளது என்று பெருமைப்படுகிறார்கள்.
1) The Encyclopedia Britannica(பிரிட்டனிகா என்சைக்லோபீடியா):
பிரிட்டனிகா என்சைக்லோபீடியா சொல்கிறது
The Encyclopedia Britannica comments: "The Gospel was known to him chiefly through apocryphal and heretical sources."
"முகமதுவிற்கு சுவிசேஷம் பற்றிய விவரங்கள், தள்ளுபடி ஆகமங்களிலிருந்து, வேறுபல ஆகமங்களிலிருந்து கிடைத்துயிருக்கும்".
...of Mark, and Gospel of Philip) preserve some legends and myths found in the early Christian centres of Edessa, Alexandria, and Asia Minor. The First Gospel of the Infancy of Jesus (known also as the Arabic Infancy Gospel ), for example, recounts that, one day, Jesus and his playmates were playing on a rooftop and one fell down and...
Source: http://www.britannica.com/eb/topic-208181/First-Gospel-of-the-Infancy-of-Jesus2) Wikipedia Encyclopedia(விக்கிபீடியா கூற்றுப்படி):.
The Infancy Gospel of Thomas is a non-canonical text that was part of a popular genre, aretalogy, of the 2nd and 3rd centuries —
The text describes the life of the child Jesus, with fanciful, and sometimes malevolent, supernatural events, comparable to the trickster nature of the god-child in many a Greek myth. One of the episodes involves Jesus making clay birds, which he then proceeds to bring to life, an act also attributed to Jesus in the Qur'an, thus indicating the text may have had substantial influence on Arabic tradition by the 7th century.
In the Qur'an, Jesus forms birds out of clay,
Quran : " I fashion for you out of clay the likeness of a bird, and I breathe into it and it is a bird [Qur'an [5:110]] "
This parallels an episode in the apocryphal Infancy Gospel of Thomas where he does the same:[24]
Infancy Gospel of Thomas :"
[Jesus] then made soft clay and shaped it into twelve sparrows.[25] "
The Infancy Gospel of Thomas was written, at the earliest,in the second century or, at the latest, in the sixth century.
Source : http://en.wikipedia.org/wiki/Legends_and_the_Qur'an
Quran
" But she pointed to the babe. They said: "How can we talk to one who is a child in the cradle?" He [Jesus] said: "I am indeed a servant of Allah: He hath given me revelation and made me a prophet; And He hath made me blessed wheresoever I be, and hath enjoined on me Prayer and Charity as long as I live; (He) hath made me kind to my mother, and not overbearing or miserable; [Qur'an 19:29] "
Infancy Gospel of Thomas
" Jesus spake when he was in the cradle, and called out to his mother Mary:— "Verily I am Jesus, the Son of God, the Word, whom thou hast given birth to according to the good tidings given thee by the Angel Gabriel, and my Father hath sent me for the Salvation of the World."
Source: http://en.wikipedia.org/wiki/Legends_and_the_Qur'an
இந்த புத்தகத்தின் முதல் 3 வசனங்களிலேயே இயேசு குழந்தையாக இருக்கும் போது தன் தாயாகிய மரியாளிடம் பேசியதாக எழுதப்பட்டுள்ளது. வசனம் 2: இயேசு குழந்தையாக தொட்டிலில் இருக்கும்போதே தன் தாயாரிடம் பேசியதாக, அவர் கூறுகிறார்.
வசனம் 3: மரியாளே, காபிரியேல் தூதன் உனக்கு சொன்னது போல நான் தேவனுடைய குமாரனாகிய இயேசு, உலகத்தின் இரட்சிப்பிற்காக என் பிதா என்னை அனுப்பியுள்ளார்.
2. He relates that Jesus spoke even when he was in the cradle and said to his mother :
3. Mary, I am Jesus the Son of God, that word which you brought forth according to the declaration of the angel Gabriel to you, and my Father has sent me for the salvation of the world.
இந்த புத்தகத்தை முழுவதுமாக இங்கு படிக்கலாம்:
http://wesley.nnu.edu/biblical_studies/noncanon/gospels/infgos1.htm
http://www.pseudepigrapha.com/LostBooks/infancy1.htm
http://ministries.tliquest.net/theology/apocryphas/nt/infancy1.htm
இயேசு குழந்தையாக இருக்கும் போது பேசிய நிகழ்ச்சி முதல் முதலில் சொன்னது குர்-ஆன் இல்லை என்பது தான் உண்மை. மற்றும் இயேசு இப்படி பேசினார், என்பதற்கு ஆதாரமே இல்லை. அப்படி பேசியிருந்திருந்தால், இயேசுவின் சீடர்களே, எழுதியிருப்பார்கள். மரியாளும் அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்துள்ளார் என்பதை நாம் மறக்கக்கூடாது. இப்படி இயேசு செய்யாத அற்புதத்தை, மற்ற புத்தகங்களிலிருந்து "காபி" அடித்துவிட்டு, பைபிளில் சொல்லப்படவில்லை என்று பெருமையடித்தால் எப்படி?
இஸ்லாம் கல்வி சகோதரர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்று தான், அதாவது, இயேசுவின் பிறப்பு சம்மந்தப்பட்ட இந்த குழந்தையாக இருக்கும் போது பேசிய அற்புதம், மற்றும் களிமண் பறவையை உயிர் பெறச்செய்த அற்புதம், இவைகள் முகமது பைபிளிலிருந்து காப்பி அடிக்கவில்லை, மாறாக கிறிஸ்தவர்கள், யூதர்கள் எல்லாரும் தள்ளுபடி ஆகமங்கள் என்றும், இவைகள் இறைவனின் வெளிப்படுகள் அல்ல என்றும் ஒதுக்கி தள்ளிவிட்ட புத்தகங்களிலிருந்து அவர் காப்பி அடித்துள்ளார் என்பதை மட்டும் நாங்கள் ஒத்துக்கொள்கிறோம்.
முடிவுரை: இன்னும் இயேசுவின் பிறப்பு பற்றி குர்ஆன் சொல்லும் விவரங்களில் உள்ள முரண்பாடுகளையும், நடைமுறைக்கு ஏற்காத விவரங்களையும் கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த பாகத்தில் காணலாம்.
5 கருத்துகள்:
Jesus said," i am the son of the god,he never proclaimed him as GOD".
In johns chapter, jesus asked john. what people are talking about him. John said,"Rabbai(guru- am i right)people are saying YOU ARE THE SON OF GOD,FOR THAT JESUS IMMEDIATELY SAYS,"NO ALL ARE CHILDRENS OF GOD".
jesus is a GURU like Mohammed.They both told the people to worship GOD. ULTIMATELY JESUS BECAME GOD AND MOHAMMED BECAME A GURU.
...YOU FOOL AND SO CALLED CHRISTIANS WORSHIP GOD NOT THE MAN"
அன்பு சகோதரர் கலியுக சித்தன் அவர்களே,
உங்கள் வருகைக்கு நன்றி.
நீங்கள் பைபிளிலிருந்து ஒரு வசனத்தை சொல்லியுள்ளீர்கள். ஆனால், அதை எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் எழுதியிருந்தீர்கள். அதாவது, இயேசு தன் சீடன் யோவானைப் பார்த்து தன்னை ஜனங்கள் யார் என்று கேட்கிறார்கள்? என்று கெட்டாராம், அதற்கு யோவான் "நீர் தேவ குமாரான்" என்றுச் சொன்னாராம், உடனே இயேசு, அப்படி இல்லை, "எல்லாரும் தேவ குமாரர்கள் தான்" என்றுச் சொன்னாராம்.
அன்பு நண்பரே, இந்த வசனம் யோவான் சுவிசேஷ நூலில் உள்ளது என்றுச் சொல்லியுள்ளீர்கள், ஆனால், எந்த அதிகாரம் எந்த வசனம் என்றுச் சொல்லமுடியுமா?
இன்னொன்றை உங்களுக்குச் சொல்கிறேன், அதாவது,
1) நீங்கள் சொன்ன வசனம் பைபிளில் இல்லை, அதாவது, இரண்டு வெவ்வேறு வசனங்களில் உள்ள பாகங்களை ஒன்றாகச் சேர்த்து, ஒரு வசனமாக சொல்லியுள்ளீர்கள். இது நீங்கள் செய்த முதல் பிழை.
2) இரண்டாவதாக, "தன்னை யார் என்று ஜனங்கள் கேட்கிறார்கள்?" என்ற வசனம், யோவான் தவிர மற்ற மூன்று சுவிசேஷ நூல்களில்(மத்தேயு, மாற்கு, லூக்கா) மட்டும் தான் வருகிறது, யோவான் சுவிசேஷத்தில் வருவதில்லை.
3) மூன்றாவதாக, "நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து" என்று பேதுரு என்ற சீடன் சொல்லும் போது, அதை இயேசு அங்கீகரித்தார். நீங்கள் சொல்வது போல இயேசு சொல்லவில்லை.
தெரியாமல் தான் கேட்கிறேன், ஏன் உங்களுக்கு இந்த வேண்டாத வேலை. ஏதாவது வசனம் சொல்வதாக இருந்தால், வசன ஆதாரத்தோடு எழுதினால் பதில் தருகிறோம், அதை விட்டுவிட்டு, ஏதோதோ வாய்க்கு வந்தது போல எழுதினால் எப்படி?
கலியுக சித்தன் அவர்கள் எழுதியது:
Jesus said," i am the son of the god,he never proclaimed him as GOD".
In johns chapter, jesus asked john. what people are talking about him. John said,"Rabbai(guru- am i right)people are saying YOU ARE THE SON OF GOD,FOR THAT JESUS IMMEDIATELY SAYS,"NO ALL ARE CHILDRENS OF GOD".
jesus is a GURU like Mohammed.They both told the people to worship GOD. ULTIMATELY JESUS BECAME GOD AND MOHAMMED BECAME A GURU.
...YOU FOOL AND SO CALLED CHRISTIANS WORSHIP GOD NOT THE MAN"
உங்களுக்காக, நீங்கள் சொல்ல வந்த வசனத்தை நான் தருகிறேன், சிறிது படித்துப்பாருங்கள்.
Mat 16:13 பின்பு, இயேசு பிலிப்புச் செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
Mat 16:14 அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
Mat 16:15 அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.
Mat 16:16 சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.
Mat 16:17 இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.
Mar 8:27 பின்பு, இயேசுவும் அவருடைய சீஷர்களும் புறப்பட்டு, பிலிப்புச் செசரியா பட்டணத்தைச் சேர்ந்த கிராமங்களுக்குப் போனார்கள். வழியிலே அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
Mar 8:28 அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறுசிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
Mar 8:29 அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு பிரதியுத்தரமாக: நீர் கிறிஸ்து என்றான்.
Mar 8:30 அப்பொழுது தம்மைக்குறித்து ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு அவர்களுக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார்.
Luk 9:18 பின்பு அவர் தமது சீஷரோடேகூடத் தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், அவர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
Luk 9:19 அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிர்த்தெழுந்தார் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
Luk 9:20 அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு பிரதியுத்தரமாக: நீர் தேவனுடைய கிறிஸ்து என்றான்.
You are really a fool. You r not having knowledge about your bible as well as quran. first u learn abt your own bible and try to make clear the contradictions.
அன்புள்ள சகோதரர் அஸதுல்லா அவர்களே,
இப்படி எல்லாம் "முட்டாள்" என்று எழுதவேண்டாம், எனென்றால், என் கட்டுரையையும் உங்கள் பின்னூட்டத்தையும் படிப்பவர்கள், உங்களை ஒரு மாதிரியாக நினைத்துக்கொள்வார்கள்.
ஏன் இப்படி நான் சொல்கிறேன் என்றால்:
1) இயேசுவின் அற்புதம் பற்றிய நிகழ்ச்சியை முகமது பைபிளிலிருந்து காபி அடிக்கவில்லை, குர்ஆன் மட்டும் தான் அதைச் சொல்கிறது என்றனர்.
2) பைபிளுக்கு அடுத்து, குர்ஆனுக்கு இடைப்பட்ட காலத்தில் பல கட்டுக்கதைகள் நிலவி வந்தன, அதற்கு ஆதாரம் கூட உள்ளது, அதை அப்படியே குர்ஆன் காபி அடித்தது என்றேன்.
நீங்கள் இதற்கு பதில் அளிப்பதாக, என் கருத்தில் எது தவறு என்று சரியாகச் சொல்லவேண்டும், அதை விட்டுவிட்டு என்னை "முட்டாள்" என்றுச் சொன்னால், இதை படிப்பவர்கள் உங்களை "முட்டாள்" என்று நினைக்கும் வாய்ப்பு இருக்கிறது.
எனவே, பதில் சொல்லதெரிந்தால் சொல்லவும், இல்லையானால், சும்மா இருந்துவிடுங்கள். உங்களை இது வேறு வகையில் அடையாளம் காட்டும்.
பைபிளை போட்டோக் கொப்பியடித்து குர்ஆன்?பலமான ஆதாரங்கள் மறுப்பு
http://tuit.in/cp1
கருத்துரையிடுக